நித்தியானந்தனை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்ததில் குமுதத்திற்கு மிக முக்கியமான பங்குண்டு. பல ஆண்டுகளாக இந்த பொறுக்கியின் ஆன்மீக பீலாக்களை விதவிதமான போஸ்களில் அச்சடித்து நடுத்தர வர்க்கத்திடம் கொண்டு சென்ற குமுதம் பத்திரிகை இன்று என்ன சொல்கிறது?
தனது குற்றம் குறித்து கடுகளவும் கவலைப்படாத குமுதம் கூரூப் பத்திரிகைகள் இன்று கூட்டத்தோடு கூட்டமாக நித்தியானந்தனைக் கும்முகின்றன. இந்த அயோக்கியத்தனத்தையும், நித்தியானந்தன் என்ற அயோக்கியனை அறிமுகம் செய்து வளர்த்ததைக் கண்டித்தும் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பெண்கள் விடுதலைமுன்னணியின் சென்னைக் கிளைத் தோழர்கள் குமுதம் அலுவலகம் முன்பு 6.2.2010 சனிக்கிழமையன்று காலையில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதியிலிருந்து அபிராமி திரையங்கு அருகிலிருக்கும் குமுதம் அலுவலகத்தை நோக்கி முழக்க அட்டைகளுடன் ஊர்வலாமய் விண்ணதிர முழக்கங்களுடன் வந்தார்கள். இந்த தீடீர் ஆர்ப்பாட்டத்தை எதிர்பார்த்து போலீசார் தயாராக குமுதம் அலுவலக வாசலில் குழுமியிருந்தனர்.
போலீசின் தடையையும் மீறி சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மக்கள் நித்தியானந்தனையும், அதற்கு ஒத்தூதிய குமுதத்தையும் கண்டிப்பதை ஆதரித்தனர். சாலைப் போக்குவரத்து ஒரு மணிநேரத்திற்கு முடங்கினாலும் மக்கள் அதை இடைஞ்சலாகப் பார்க்காமல் விசயத்தை கேட்டறிந்து உவகை கொண்டனர்.
இறுதியில் போலீசின் தள்ளுமுள்ளுவிற்குப்பிறகு ஏ.சி, டி.சி அதிகாரிகளோடு காரசாரமான விவாதத்திற்குப் பிறகு தோழர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். நித்தியானந்தாவை உருவாக்கியும் இப்போது அம்பலப்பட்ட பிறகு கிசுகிசு மூலமும் காசுபார்க்க்கும் இந்த ஊடக விபச்சாரிகளை மக்களிடம் அடையாளம் காட்டிய இந்த நிகழ்வில் எழுப்பட்ட முழக்கங்கள்:
- மன்னிப்புக் கேள்! மன்னிப்புக் கேள்!
நித்யானந்தனை வளர்த்துவிட்ட
குமுதமே மன்னிப்புக்கேள்! - தடைசெய்! தடைசெய்!
தமிழக அரசே தடைசெய்!
சாமியார்களின் பிரச்சாரத்தை
தடைசெய்! தடைசெய்! - கைதுசெய்! கைதுசெய்!
நித்யானந்தனைக் கைதுசெய்!
பறிமுதல்செய்! பறிமுதல்செய்!
அவன் சொத்துக்களை பறிமுதல்செய்! - விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
சாய்பாபா, பிரேமானந்தா,
சங்கராச்சாரி, தேவநாதன்,
கல்கி, நித்தியானந்தா
கழிசடைகளை விரட்டியடிப்போம்! - அடித்து விரட்டுவோம்! அடித்து விரட்டுவோம்!
காவியுடைக்க கிரிமினல்களை
நாட்டைவிட்டே அடித்து விரட்டுவோம்!
______________________________________
தொடர்புடைய பதிவுகள்
- குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !
- ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!
- சாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்!
- ஆன்மீகச் சந்தை ஒரு முன்னுரை – டாக்டர்.ருத்ரன் !
- சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !
- முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்!
தமிழகம் முழுவதும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்களால் கொண்டு செல்லப்பட்ட சுவரோட்டிகளைக் கீழே பார்க்கலாம்.