privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்திகாரில் கனிமொழி! ராமச்சந்திராவில் ரஜினி! திமிரில் நித்தியானந்தா!

திகாரில் கனிமொழி! ராமச்சந்திராவில் ரஜினி! திமிரில் நித்தியானந்தா!

-

திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!!

திகாரில் கனிமொழி! ராமச்சந்திராவில் ரஜினி! திமிரில் நித்தியானந்தா! -திகார் சிறை எண் 6-இல் அடைக்கப்பட்டிருக்கும் கனிமொழிக்கு மின்விசிறி, தொலைக்காட்சி, தினசரிகள், கட்டில் போன்ற வசதிகளெல்லாம் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதுவே சாதாரண விசாரணைக் கைதிகளென்றால் ஜட்டியுடன் நிற்கவைத்து மிரட்டி உருட்டி அனுப்புவார்கள். பிளாக்கில் நுழைந்த உடனே சீனியர் கைதிகள் என்னென்ன வேலை செய்ய வேண்டுமென்று பட்டியலிடுவார்கள். அதில் செல்லை பெருக்கி துடைப்பதும், கழிப்பறையை சுத்தம் செய்வதும் முதலில் இருக்கும்.

ஆனால் மேன்மக்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை. ரயிலிலோ, விமானத்திலோ, இல்லை சிறை என்றாலும் அவர்களுக்கு முதல் வகுப்புதான். முன்னர் ஒரு முறை சிக்கன நடவடிக்கை என்ற நாடகத்திற்காக அமைச்சர்களெல்லாம் விமானப் பயணத்தில் முதல் வகுப்பை தவிர்ப்பார்கள் என்று அறிவித்தது போல சிறையிலும் சிக்கன நடவடிக்கைக்காக முதல் வகுப்பு இல்லை என்று அறிவித்தால் வரும் அரசியல்வாதி, அதிகாரி, முதலாளிகளுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று புரியவைக்க முடியும்.

கனிமொழி கைதை வைத்து தி.மு.கவை எதிர்க்கும் பலரும் மிகப்பெரும் சாதனையை அடைந்து விட்டது போல துள்ளிக் குதிக்கிறார்கள். ஈழ ஆதரவாளர்கள் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களுக்காக கருணாநிதியை பழிவாங்கிவிட்டதாக திருப்தி அடைகிறார்கள். இந்த சந்தோஷக்காரர்களுக்கு அரசியலின் அரிச்சுவடி கூட தெரியவில்லை என்பதோடு, அவர்கள் கொண்டிருக்கும் ஈழம், தி.மு.க எதிர்ப்பு குறித்தும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. குறிப்பிட்ட பிரச்சினையில் மக்களை அணிதிரட்டி தீர்க்க வேண்டிய பொறுமை வழிமுறைகளெல்லாம் இவர்களுக்கில்லை. ஏதாவது குறுக்கு வழியில் நடக்கும் நிகழ்வுகளை வைத்தே தீர்த்துவிடலாம் என நினைக்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் உச்சநீதிமன்ற ஆணைப்படி விசாரிக்கப்படுகிறது. பாராளுமன்ற கூட்டு விசராணைக் குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ராசா, அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவையெல்லாம் மத்திய அரசின் திட்டப்படி நடந்தவையல்ல. சில தற்செயலான நிகழ்வுகள் சேர்ந்து இந்த ஊழல் விவகாரத்தை இப்போதுள்ளபடி நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இதை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் இந்த விவாகாரத்தை தோண்ட தோண்ட அது ஊழலின் ஊற்று மூலமான முதலாளிகளை நோக்கி பாயும். அதனால் இந்த விவகாரத்தில் இத்தோடு விட்டுவிட்டு எப்படி கழண்டு கொள்ளலாம் என்பதே காங்கிரசு கும்பலின் கணக்கு.

இந்த பிரச்சினை தி.மு.கவிற்கும் தெரியும். மற்றவர்களெல்லாம் இதை வைத்து காங்கிரசு தி.மு.க பிளவு என்று சித்தரிக்க முயலும்போதெல்லாம் சில அப்பாவிகள் அப்படி நடக்குமென்று மகிழ்வுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் தி.மு.கவோ என்ன நடந்தாலும் காங்கிரசை விட்டுப் போகமாட்டோம் என்று பெவிக்கால் போல ஒட்டிக்கொண்டிருப்பதை இவர்கள் அறியவில்லை.

மன்மோகன் அரசாங்கத்தின் இரண்டாண்டு நிறைவு விருந்துக்கு கூட டி.ஆர் பாலு மரியாதையுடன் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த விருந்தில் ஊழலை ஒழிக்கப் போவதாக மன்மோகனும், சோனியாவும் பேசியது நல்ல தமாஷ். ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று காங்கிரசு கூட்டணி அரசின் ஊழல்களெல்லாம் வரிசையாக அணிவகுக்க அந்த அணிவகுப்பின் மரியாதை ஏற்பவர்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகிறார்களாம்.

எனவே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் இதற்குமேல் சூடு பிடிக்காமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பதே அவர்களது பிரச்சினை. அப்படித் தடுக்க முடியாவிட்டால் பல தலைகளோடு, பல அடிப்படை நிலைகளும் கேள்விக்குள்ளாக்கப்படும். ஆகவே இந்த விளையாட்டை பாதுகாப்பாக எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆனாலும் ராஜாத்தி அம்மாள் தனது மகள் சிறையில் சென்றது குறித்து கதறி அழுதாராம். கருணாநிதியும் தள்ளாத வயதில் டெல்லி சென்று சந்திக்கிறாராம். கனிமொழி கைதுக்காக டெல்லி சென்றதைக் கூட அவர் கூடவே ராசா, சரத்குமாரையும் பார்ப்பதற்காக செல்வதாக குறிப்பிட்டார். ராசா சிறைக்கு போய் இத்தனை நாளாகிறது. அப்போது தோன்றாத பாசம் இப்போது தோன்றிருப்பதாக கூறுவது நல்ல காமெடி.

கருணாநிதிக்கு இரண்டு குடும்பங்கள், எண்ணிறந்த வாரிசுகள், தி.மு.கவின் படுதோல்வி, பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துக்கள் இன்னபிற பிரச்சனைகளோடு கனிமொழி கைதும் சேர்ந்துவிட்டது. தயாளு அம்மாளின் வாரிசுகள் சம்பாதித்ததோடு பிடிபடவில்லை என்பதும் ராசாத்தி அம்மாளின் வாரிசு மட்டும் பிடிபட்டது என்றும் குடும்ப பூசல்கள். இதையெல்லாம் பார்த்தால் தமிழக மக்கள் அளித்திருக்கும் ஓய்வு என்பது கருணாநிதிக்கு அமைதியாக இருக்காது என்று தெரிகிறது.

இதில் கனிமொழி இரண்டு கோடி ரூபாய் கொடுத்து கலைஞர் டி.வியில் வலியுறுத்தி சேர்த்தது நான்தான் என்று வேறு உடன்பிறப்புக்கு கடிதம் எழுதுகிறார். ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டவன் என்று நிரூபணம் ஆகிய நிலையிலும் தன்னையும், தன் குடும்பத்தாரையும் எளிமை, அர்ப்பணிப்பு, தியாகம் நிறைந்த ஒழுக்கசீலர்களாக வெட்கம் கெட்டு சித்தரிப்பதற்கு அவர் கூச்சமே படவில்லை. தி.மு.கவின் இன்றைய பிழைப்புவாதத்தில் இத்தகைய அற உணர்ச்சிகளை எதிர்பார்ப்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது போலத்தான்.

கருணாநிதியும், அவரது கட்சியும் கார்ப்பரேட் நலன் விரும்பும் சக்திகள் என்றாகிவிட்ட நிலையிலும் வட இந்திய ஊடகங்கள் தமது தமிழின விரோத வெறுப்பை கைவிடவில்லை. கனிமொழியின் கைதை காட்டிய, விவாதித்த வட இந்திய ஊடகங்கள் எல்லாம் அதை ஜன்மவிரோதத்தோடு சித்தரித்தன. தற்போது இலங்கையின் கஸ்டடியில் இருக்கும் கே.பியை வைத்து தி.மு.வின் பிராமண எதிர்ப்பு கொள்கையே ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு காரணம் என்ற காமடியையெல்லாம் ஒளிபரப்புகின்றன. கருணாநிதியே தான் பழை ஆள் இல்லை என்று கதறி அழுதாலும் இவர்கள் மன்னிப்பதாக இல்லை. திராவிட இயக்கத்தின் மீதான வன்மத்தை அவர்கள் எப்போதும் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

_______________________________________________________

ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை!

திகாரில் கனிமொழி! ராமச்சந்திராவில் ரஜினி! திமிரில் நித்தியானந்தா! -ராணா படத்தில் நடித்துக் கொண்டிருந்த ரஜினிக்கு உடல்நலமில்லை. முதலில் இசபெல்லாவிலும், தற்போது ராமச்சந்திராவிலும் சிகிச்சை பெறுகிறார். இந்தியாவில் பலருக்கும் குறிப்பாக பாமரருக்கு வரும் நிமோனியா காய்ச்சல் அவருக்கு ஒரு விபத்துப் போல வந்திருக்கிறது.

அவ்வளவுதான். ஊடகங்களில் எத்தனை எத்தனை செய்திகள், பிரேக்கிங் நியூஸ்கள், வதந்திகள், கிசுகிசுக்கள்…..? இந்த பியூஸ் போன நபருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

இசபெல்லாவில் இரகசியத்தை பாதுகாக்க முடியவில்லை என்று ராமச்சந்திராவில் ஒப்பந்தம் போட்டு சேர்த்தார்களாம். இரட்டை இலைக்கே ஓட்டுப்போட்டிருந்தாலும், தள்ளாத வயதில் எதிர்கால அரசியல் நலன்கருதி பார்க்க வந்த கருணாநிதியை ரஜினி மகள் பேசி அனுப்பிவிட்டாராம். மோடியையும், சந்திரபாபு நாயுடுவையும் சந்தித்த ரஜினி தன்னை ஏன் சந்திக்கவில்லை என்று கருணாநிதிக்கு கடுப்பாம்.

நாட்டில் காலரா, மலேரியா முதலான தொற்று நோய்கள் வந்து மருந்து மாத்திரைகள் கூட இல்லாமல் சாகும் மக்களைக் கொண்ட நாட்டில் ஒரு நட்சத்திர நடிகனுக்கு அபரிதமான முக்கியத்துவம். ரஜினி இட்டிலி சாப்பிட்டதையும், வாழைத்தண்டு இரசம் குடித்ததையும் தமிழக ஊடகங்கள் கூச்சமே இல்லாமல் பிரைம் டைம் செய்திகளாக்குகின்றன. ரசிகர்கள் யாகம் வளர்த்ததையும், அலகு குத்துவதையும் சொல்லி உசுப்பி விடுகின்றன.

பாபா படத்தின் போது கழுத்தில் போடும் டாலரைக்கூட டிசைன் செய்து அதற்கும் விலை வைத்து, மொத்தமாக சுருட்டலாம் என்று பிளான் போட்ட அக்மார்க் அவாள் மாமி லதா தினசரி வந்து ரஜினி நன்றாக நலமாக இருப்பதால் தமிழகம் எரிமலை போன்று வெடிக்க வேண்டியதில்லை என்று கூறுவதையெல்லாம் எப்படி சகிப்பது?

ரஜினி சற்று குணமான நிலையில் அமெரிக்காவிற்கு மேல்சிகிச்சைக்காக பயணம் செய்யப் போவதாக ஜூனியர் விகடன் குறிப்பிடுகிறது. ரஜினி சுத்தமான தேசபக்தர் என்பதால் இந்திய மருத்துவமனையின் சிகிச்சைகளை உதறிவிட்டு அமெரிக்காவிற்கு செல்வதை யாரும் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் ஒரு நிமோனியாக காய்ச்சலுக்கே அமெரிக்கா என்றால் யூரின் டிரபிள் என்றால் சிங்கப்பூர் செல்வார்களோ?

ரஜினி உடல்நிலை குறித்த வரலாற்று சிறப்புமிக்க செய்திகளை அதாவது இட்லி, வடை சாப்பிட்டது, ரசம் குடித்தது, குடும்பத்தோடு அரட்டை அடித்தது, ஐ.பி.எல் கிரிக்கெட் பார்த்தது எல்லாம் ஊடகங்களில் வரவேண்டுமென்று எந்த தமிழன் அழுதான்? இவை வரவில்லை என்றால் யார் குடியும் முழுகாது என்று தெரிந்தும் ஊடகங்கள் திட்டமிட்டே இதை காயத்ரி மந்திரம் போல வேளா வேளைக்கு ஒதுகின்றன.

தமிழகத்தில் செய்தி ஊடகங்களின் தரம் என்ன என்பதற்கு இந்த ரஜினி அக்கப்போரே சான்று. எனில் மக்களின் வாழ்வாதாரமான செய்திகள் என்றுமே இவற்றில் வரப்போவதில்லை என்பதற்கும் இதுவே ஆதாரம்.

________________________________________________________

அடங்கமாட்டியா நித்தியானந்தா? பார்ட் 2!!

திகாரில் கனிமொழி! ராமச்சந்திராவில் ரஜினி! திமிரில் நித்தியானந்தா! -தே தலைப்பில் முன்னரே எழுயிருந்தோம். இன்னும் எத்தனை தடவை அப்படியே எழுதுவது?

தி.மு.கவின் தோல்வியை தங்களது வெற்றியாக கொண்டாடும் பட்டியலில் பொறுக்கி நித்தியானந்தாவும் சேர்ந்திருக்கிறார். இவரது சாபத்தால்தான் தி.மு.க படுதோல்வி அடைந்திருக்கிறதாம். இந்த உண்மையை தனது பொற்கால ஆட்சிக்காக ஏங்கித்தான் தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று பேசும் புரட்சித் தலைவியின் காதில் யாராவது போட்டு வைத்தால்  அம்பிக்கு சட்னி நிச்சயம்.

திருவண்ணாமலையில் தரிசனம் கொடுத்த இந்த பொறுக்கி இன்னமும் தெனாவெட்டாக பேசியிருக்கிறார். ரஞ்சிதாவுடன் அவர் செய்த நடவடிக்கைகள் எல்லாம் மாஃபிங் செய்யப்பட்டதாம். வீடியோ படத்தில் இருப்பது அவரில்லையாம். அப்படியே இருந்தாலும் அதை கேட்க வேண்டியது நீதிமன்றம்தானாம். இப்படி ஃபுல் மப்பில் பேசக்கூடிய கருத்துக்களை இந்த சாமியார் நிதானமாகவே உதிர்த்திருக்கிறார்.

இத்தனை அம்பலப்பட்ட பிறகும் ஒரு மோசடிக்காரன் தனது காவி சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் எந்தப் பழுதுமில்லாமல் கட்ட முடிகிறது என்பதுதான் நாம் கவலைப்படத்தக்க ஒன்று. நித்தியானந்தாவின் பொறுக்கித்தனத்தை அடக்கப்பட்ட இளைஞனின் காமம் என்று அனுதாபப் பா வாசித்த நமது அண்ணன் சா.தமிழ்ச்செல்வன் இப்போது என்ன பா பாடுவார் என்பது தெரியவில்லை.

ஒரு சதுர இன்ச் கொண்ட பொருளை சக்தியாக்கி 2500 கி.மீட்டர் தொலைவுக்கு அனுப்பும் சாதனையை வரும் ஜூலை 15இல் இந்த அம்பி நடத்தப் போகிறாராம். இப்படி சக்தி உள்ள இந்த அம்பி அந்த பலான வீடியோவை அதுவும் படுக்கை அறைக்குள் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த காமராவை கண்டுபிடிக்க முடியவில்லையே? ஆய் போய்விட்டு கழுவத் தெரியாதவன் சூரியனுக்கு பேன் பார்த்த கதைதான். ஆனாலும் இந்த பொறுக்கி சாமியாருக்கு பணக்கார முட்டாள் பக்தர்கள் இருக்கும் வரையிலும் எந்தக் குறையுமில்லை.

கோயம்பேட்டில் மூட்டை தூக்கினால்தான் மூன்று வேளை சோறு என்று இந்த ஜன்மத்தை விட்டிருந்தால் கொஞ்சமாவது திருந்தியிருக்கும். அதை விடுத்து இன்னமும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாலாட்டு பாடும்போது நித்தியின் திமிர் புடைத்துக் கொண்டுதான் இருக்கும்.

_____________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம்..ரசிகர்களுக்கு அப்பாற்பட்டு அவரின் மீது விருப்பு வைதுள்ள மக்களும் அதிகம்….

 2. 1கனிமொழி – தமிழர்களை கருனானிதி அளவிர்க்கு யாரும் முட்டாளாக நினைத்திருப்பார்களா என்ட்ரால் யாரும் இல்லை…ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது கடற்கரையிளே ஒரு புறம் மனைவீ மருபுரம் துனைவி மட்ரொரு புரம் ஏர் கூலருடன் 2 மணிநேரம் உன்னாவிரதம்..உடனேபோர்நிருத அரிவிப்பு…மாலையிலேயே அனைவரும் கொன்ரு குவிப்பு…அதை மரைக்க உலகத் தமிழ் செம்மொழி மானாடு…அதில் இவர் மன்னாரை போலவும் மந்திரிகள் சிற்றரசர்கள் போலவும் ஒரே அமர்களம்…

  இவ்வாறாக தவறுக்கு மேல் தவறு செய்தும் உத்தமர் போல நடித்துக் கொண்டிருந்த திமுகவுக்கு பாடம் கற்பிக்க தமிழகம் காத்திருந்தது. அதற்கான நேரம் சட்டசபை தேர்தல் வடிவில் வந்தது. மக்களின் இதய ஆவேசம் வாக்குச்சீட்டுக்களாகப் பரிணமித்தது. அதன் விளைவாக இப்போது தமிழக மக்கள் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோக ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்திருக்கின்றனர். ஊழல் ஒரு பொருட்டல்ல என்று விதண்டாவாதம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முகத்திலும் கரியைப் பூசி இருக்கிறார்கள், விழிப்புணர்வுள்ள மக்கள்.

  ஜாதி அரசியலால் வெற்றி பெற்றுவிடலாம் என்று கனவு கண்ட பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள்(0000) இத்தேர்தலில் நல்ல பாடம் கற்றிருக்கின்றன. சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு இளைஞர் பேரவை, ஃபார்வர்டு பிளாக் கட்சிகள் ஜாதி ரீதியாக இயங்கியபோதும், கூட்டணி காரணமாகவே வென்றுள்ளன என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.

  திமுக, அதிமுக கூட்டணிகள் இரண்டிலும் இடம் பெற்ற முஸ்லிம் கட்சிகளும் கூட மதரீதியான வாக்குகளால் சாதிக்கவில்லை. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றதால் மனிதநேய மக்கள் கட்சி வென்றது. முஸ்லிம்லீக் திமுக கூட்டணியில் சேர்ந்ததால் தோற்றது. மக்கள் மதரீதியாகச் சிந்திக்கவில்லை என்பதும் இத்தேர்தல் உணர்த்தும் பாடம்.

  அழகிரி ஆடிய ஆட்டம் என்ன…இப்ப அவன் எஙே..

  ணேற்று வரை கருனானிதி பேசிய பேச்ஷு என்ன..இன்று மகளுக்கு ஒன்று என்ட்ரால் ஆழுகை வருகிரது…ஆனால்நேற்று முதன்முரைய்யாக மஞ்ஞள் துண்டிற்க்குப் பதிலாக வெள்ளைத் துண்டு போட்டிருக்கிரார், ரொம்பநாள் கழித்து மஞ்ஞள் துண்டில் ராசி இல்லி போலும்..

  இந்துக்களை தேவைஇல்லாமல் கின்டல் பன்னுவதில் வினவிற்கே அன்னன் அவர்…

  இந்துக்களை அவமதிப்பதில், தாத்தா எப்போதும் முதலிடத்தில் இருப்பர். நம் முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்துக்களை, “திருடர்கள்’ என, ஒரு முறை சொல்லிவிட்டு, அதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பவே, புதுப் புது அர்த்தங்கள் கற்பித்தது நாம் அறிந்ததே.. ..

 3. ஒரு சதுர இன்ச் கொண்ட பொருளை சக்தியாக்கி 2500 கி.மீட்டர் தொலைவுக்கு அனுப்பும் சாதனையை வரும் ஜூலை 15இல் இந்த அம்பி நடத்தப் போகிறாராம். //////

  சதுரமா நீளமா??? 😉

 4. ஓருவருக்கு ஏதாவது ஒன்று என்ட்ரால் அவருடையா அபிமானிகள்/ணலம் விரும்பிகள் வருந்துவது இயற்க்கை..அவருக்கு உலகம் ம்ழுவதும் ரசிகர்கள் உன்டு…அனால் அனைவரும் மருத்துவமனைக்கு செல்ல இயலாது..அதனால் தொலைக்காட்ஷி செய்திகலையேநம்பியுல்லனர்…

 5. 17 -ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்து மன்னனாக இருந்த முதலாம் சார்லசுக்கும் பாராளுமன்றத்துக்கும் அதிகாரப் போட்டி நிலவியது. ப்ரோட்டஸ்ட்டண்ட்கள் அரசனையும், பியூரிட்டான்கள் பாராளுமன்றத்தையும் ஆதரித்து கடுமையாக மோதிக் கொண்டனர். போரின் இறுதியில் முதலாம் சார்ல்ஸ் தோற்கடிக்கப்பட்டான். கொல்லப்படுவதற்காக அழைத்து செல்லப்படும் போது சார்ல்ஸ் தனது உடல் நடுக்கத்தை மறைக்க இரு சட்டைகள் அணிந்து சென்றானாம். கைது செய்யப்படுவதற்கு முன்னர் வரையிலும் ஒரு பிளாஸ்டிக் புன்னகையை கேமராக்களுக்கு தந்து கொண்டிருந்த கனிமொழி, சி.பி.ஐ. கோர்ட்டின் தீர்ப்பைக் கேட்டு அழுதவுடன் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழியின் கணவர், ராசாவின் துணைவி ஆகியோர் கேமராவின் கண்களுக்கு மறைத்துக் கொண்டனராம். கனிமொழி அரசியலுக்கு வந்த நேரத்தில் ‘உயிர்மை’ பத்திரிகை கனிமொழிக்கு அட்டை படம் போட்டு ஒரு இலக்கியவாதியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்றது. ‘சில சில்லறைகள் சிதறாதா ?’ என்ற ஏக்கத்தில் அந்தக் கட்டுரையை எழுதியவர் பிரபல ‘பப்’ புரட்சியாளர் சாரு நிவேதிதா. ‘ஆரியர்-திராவிடர் பகை இல்லாத ஒன்று என அவர் பழைய ‘நந்தன்’ இதழுக்கு பேட்டி வழங்கியது, பெரியாரை பெண்ணிய நோக்கில் பார்க்கிறேன் என்று பெரியாரை குறைத்து மதிப்பிட்டது; மேலும் அவர் தோள் உரசிக் கொள்ளும் கார்ப்பரேட் தரகர்கள்’ யாவும் கனிமொழி கார்ப்பரேட் தி.மு.க.வின் முகமே தவிர திராவிட இயக்கத்துக்கு சொந்தமானவர் இல்லை என்று நான் எழுதிய கடிதத்தை உயிர்மை பிரசுரிக்கவில்லை.
  சாரு, நித்தியானந்தாவை நம்பி மோசம் போனதாக அறிவித்தார். கனிமொழி குறித்தும் தனது முடிவை அறிவிப்பாரா அல்லது பெற்றுக்கொண்ட சில்லறைகளுக்கு விசுவாசமாக இருப்பாரா ? என்பதை அவரிடமிருந்து அறிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும். சுவாரஸ்யத்தை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியம், தமிழ் இலக்கியாதிகளிடமிருந்து?

 6. பாபா படத்தின் போது கழுத்தில் போடும் டாலரைக்கூட டிசைன் செய்து அதற்கும் விலை வைத்து, மொத்தமாக சுருட்டலாம் என்று பிளான் போட்ட அக்மார்க் அவாள் மாமி லதா தினசரி வந்து ரஜினி நன்றாக நலமாக இருப்பதால் தமிழகம் எரிமலை போன்று வெடிக்க வேண்டியதில்லை என்று கூறுவதையெல்லாம் எப்படி சகிப்பது?//

  எல்லாருமே கூட்டணிதான்..

  ரசிகர்கள் இல்லை வெறியர்கள்..

  லட்சக்கணக்கில் இருந்தும் ஏன் ஒரே ஒரு தற்கொலைன்னு ஆச்சர்யமா இருக்கு?..

  இதுங்கல்லாம் வீட்டுக்கும் , நாட்டுக்குத்தான் பாரம்..

 7. நித்தியானந்தா? — இவன் மட்டும் அல்ல..வேரு எந்த சாமியார் மேலும் எனக்குநம்பிக்கை இல்லை…ஏன் சாய் பாபா மீது கூட எனக்கு சுத்தமாகநம்பிக்கை இல்லை..இவன் மீது எனக்கு ரொம்ப நாளவே சண்தேகம் இருந்தது…ஆனண்த விகடனிலும் குமுதத்திலும் இவனும், ஜிக்கி வசுடேவும் எழுதிய கட்டுரைகள் குழண்தைத்தனமானவை..

  னான் கடவுளை மட்டுமே நம்புபவன்…

  எனக்கு எவனும் கடவுளைக் காட்டவும் வேண்டாம்…

  கடவுள் இல்லை என்ட்ரு விளக்க வெஙாயமும் வேண்டாம்…

 8. அந்த மூணாவது மேட்டர்தான் ரொம்ப டென்ஷனாகுது… அந்த அயோக்கியப்பய என்னா தெனாவெட்டா பேசுரான்…

 9. நாட்டுக்கு பயன்படாத செய்திகளையே ஊடகங்கள் பெரிது படுத்தி ரேடிங்கை அதிகப்படுத்த அதன் மூலம் விளம்பரம் பெற்று பிழைப்பு நடத்துகின்றன.வெட்கக்கேடு.

 10. ராசா ஏன் பிணை கேக்கவில்லை ?அவருக்கு தெரியும் வெளியே வந்தா சாதிக் பாஷா நிலைதான்னு அதான் பொத்திகிட்டு உள்ள இருக்காரு!!

 11. ரஜினிகாந்தெல்லாம் இனிமேல் உயிரோடு இல்லையினா யாருங்க கவலைப்பட போறாங்க..
  ஓவரு பில்டப் கொடுக்கிறாய்ங்க.
  வாங்குற சம்பளத்திற்கும், வருமானத்திற்கும் ஒழுங்க வரி கட்டினாலே. நமக்கு சந்தோஷம் .

  • ரஜினி காந்த் மண்டையை போட்டாலும் கொஞ்சம்நாள் கழிச்சு தான் சொல்லுவாங்க. இல்லயின்னா அந்த மென்ட்டலநம்பி முதலீடு செஞ்சவங்க நாசமா போயிருவானுங்க. வாளுக ரசினி வளருக அன்னாரது புகலு. அன்னாரது மரணத்திற்கு முன்னக்கூட்டியே எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்

 12. என்ன செய்ய..! எல்லாம் அவன் செயல்..!
  என்றுதான் சொல்ல வேண்டும். பின்னே.. இப்படிப்பட்ட மானுட ஜென்மங்கள் இருக்கும் வரை இந்த உலகத்தில் இவ்வாறான மானங்கெட்ட நிகழ்சிகள் நடந்துகொண்டே தான் இருக்கும்..அதாவது சோற்றையும் சாப்பிட்டுக்கொண்டு சேற்றையும் சாப்பிடுபவர்கள்…!

 13. மூன்று கட்டுரைகளிலும் நான் மனதில் வைத்து புழுங்கியதை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் அருமை, ‘ரஜினி சாப்பிட்டது, டாய்லெட் போனது என்று அவசியமில்லாத விசயங்களை மீடியாவில் பார்க்கும் போது ஏன் இவ்வளவு கேவலமாகிவிட்டார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. நித்தியை எல்லாம் வெளியே விட்டது தப்பு இனி சகலப் பாதுகாப்புடன் நடிகைகளுடன் காமக் களியாட்டம் தொடரும். அவன் காலைக் கழுவிக் குடிக்க ஒரு கூட்டம். விந்தையாக இருக்கிறது இந்த மனிதர்களை நினைத்தால்.

 14. மக்களுக்கு இருக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகளில் கனிமொழி கைதானதைப் பார்த்தாவது கொஞ்சம் இளைப்பாறடுமே வினவு.அன்றைய தினம் மட்டும் எத்தனை பேர் பாயாசம் வைத்திருப்பார்கள்?

  ரஜினி விடயத்தில் வினவின் ஆதங்கம் நியாயமானது தான்,ரஜினியைப்பற்றி அங்கலாய்க்கும் வினவு ஏன் பதிவிட வேண்டும்?

  நித்தியானந்தனை பொறுக்கி என்று எழுதும் வினவு இன்னும் ஏன் அவர் இவர் வந்தார் போனார் என்று எழுதுகிறது?நகைப்புக்குரிய முரணாக தெரிகிறது,முடிச்சவிக்கிகளுக்கு ஏகவசனமே போதும்.இனி இவனைப்பற்றி எழுதும் கட்டுரையில் அவன் இவனென்றே குறிப்பிடலாம்.காமெடிபீஸ்.இவன் அம்பி கிடையாது கும்பி

 15. இந்த கனிமொலி வடநாட்டு இருந்தால் .,.,கதை வெரு.,.,.,என்ன இருந்தாலும் தமில்ழ் .,பென்னல்லவாஆஆஆஆஆ???????????????.,.,

 16. ஈழத்திலும்,ஏன் இந்திய அகதி முகாம்களிலும், அடிப்படை வசதி கூட இல்லாமல் தமிழன் அவிதிப்டுகையில்,ஒரு மராத்திய சினிமா நடிகாணுக்கு ‘ஒன்றுக்கு வரவில்லை என்று’ செய்தி ஒலிபரப்பிய ஊடாக நிறுவனகளுக்கும், ரசிக சிகாமணிகளுக்கும் கண்டனம்

 17. இருந்து பாருங்கள் இன்னும் 15 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதல்வர் கனிமொழி. முதுகெலும்பு இல்லா தமிழ்நாட்டு தமிழனை ஆள்வதற்கு அவருக்கு அனைத்து தகுதியும் உண்டு. சிறப்பு தகுதி தான் இந்த திகார் சிறை.

  ——————-
  வினவு என்ன காரணத்திற்காக ரஜினி பற்றி எழுதயுள்ளதோ அதே காரணம் தான் மற்ற ஊடகங்களுக்கும். பரபரப்பு பரபரப்பு பரபரப்பு.

  போய் வேறு வேலையே பாருங்கைய.

 18. சிறையிலும் வர்க்க வேறுபாடுதான் என் அனுபவத்தை சரியாக சொல்லியுள்ளீர்கள்.

  கஞ்சா அடித்து.தண்ணி அடித்து,கூட நடித்த பொம்பளட்டயெல்லாம் படுத்ததையெல்லாம்
  சேர்ந்து வயதான காலத்தில் நோக்காடு வரும் என்பதை இந்த ஊடகங்கள் வசதியாக மறைத்துவிட்டனவே.ரஜினிஎன்ற காரியகிருக்கன் நேற்று மலஜலம் தண்ணியா போச்சா,
  கட்டியா போச்சான்னு எழுதுதாமா விட்டுருச்சே நாலாவது துாண் செய்திஊடகங்கள்

  நித்திக்கு கொழுப்பு ஜாஸ்தி, கொள்ளிகட்டையை எடுத்து அந்த கொழுப்பை ராட்டி விட்டால் எல்லா கொழுப்பும் அடங்கும்

 19. “ரஜினி உடல்நிலை குறித்த வரலாற்று சிறப்புமிக்க செய்திகளை அதாவது இட்லி, வடை சாப்பிட்டது, ரசம் குடித்தது, குடும்பத்தோடு அரட்டை அடித்தது, ஐ.பி.எல் கிரிக்கெட் பார்த்தது எல்லாம் ஊடகங்களில் வரவேண்டுமென்று எந்த தமிழன் அழுதான்? இவை வரவில்லை என்றால் யார் குடியும் முழுகாது என்று தெரிந்தும் ஊடகங்கள் திட்டமிட்டே இதை காயத்ரி மந்திரம் போல வேளா வேளைக்கு ஒதுகின்றன.”
  இந்த செய்தி வரவில்லையென்றால் அவரது தீவிர ரசிகர்கள் 10 பேராவது இறந்திருப்பார்கள்

 20. இந்த நித்தி இருக்கானே அவனைஎல்லாம் நாட்டில விடாம காட்டில விடனும் சார். அப்போ தான் அது இஷ்டதுக்கு தான் தோன்ட்ரியா திரியும்

  • ஐயோ அப்படியெல்லாம் நித்தியை கொண்டு வந்து காட்டில் விட்டு விடாதீர்கள் என்று பெண் மான்கள், பெண் புலிகள், பெண் யானைகள் கதறுகின்றன

 21. எந்த ஒரு மனிதனுடைய உயிரும் சாதாரணமானதல்ல. ஒவ்வொரு உயிருக்கும் இங்கே உகந்த மரியாதை அளிக்க வேண்டும்தான். ஆனால் ரஜினிக்கு ஏன் இவ்வளவு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? அவர் உடல்நிலைசரியில்லாமல் போனது குறித்து ஏன் மீடியாக்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன? அவர் உயிரோடிருந்தால் என்ன செத்தால் என்ன? அவர் என்ன பெரிய மகானா புரட்சியாளரா புண்ணாக்கா? எனக் கேள்வியெழுப்புகிறவர்களை பார்க்கும் போது கோபமும் எரிச்சலும் உச்சத்தை எட்டுகின்றது.

  என்னசார் ரஜினியும் மனிதர்தானே அவருக்கும் மலம் சிறுநீர் எல்லாமே போகும்தானே.. அவருக்கும் மரணம் வரும்தானே.. அவர் உடல்நிலை குன்றியிருந்தால் உங்களுக்கென்ன, அதனால் இங்கே என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது என்று கேட்கிற இன்னொரு கும்பல் அதைவிடவும் அதிக எரிச்சலூட்டுகின்றன. ரஜினியின் குடும்பத்தினர் படவேண்டிய கவலையை ஏன் இவர்கள் படுகிறார்கள்?

  நான் ரஜினி ரசிகன் கிடையாது. எனக்கு ரஜினியை பிடிக்கவும் பிடிக்காது. ஆனால் ரஜினி என்னும் ஆளுமை தமிழகத்தில் ஒரு மிக முக்கியமான சக்தி என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. நான் பத்திரிகையாளனாக இருப்பதால் கடந்த ஒருவாரமாக எனக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நண்பர்களும் உறவினர்களும் ரஜினியின் ரசிகர்களும் எத்தனை போன்கால்கள், தம்பி ரஜினியபத்தி ஏதேதோ சொல்றாங்க என்னப்பா நிலைமை… ரஜினிக்கு இப்போ எப்படியிருக்கு.. ஒன்னும் ஆகாதில்ல.. என பதட்டமும் அழுகையுமாக நான் கேட்கிற குரல்களில் இருப்பது , வெறும் நடிகனுக்கும் ரசிகனுக்குமான சினிமா உறவல்ல.. அளவிடமுடியாத அன்பு மட்டுமே.

  ரஜினி என்னும் தனிமனிதனுக்காக இங்கே தன் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க தயாராயிருக்கிற ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்களை எனக்குத்தெரியும். ரஜினி என்னும் அந்த நடிகரை வெறும் நடிகராக மட்டுமே பார்க்காமல் தங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக மதிக்கிற குடும்பங்களும் உண்டு. அவருக்காக எதையும் செய்யத்தயங்காத ரசிகர்களையும் பார்த்திருக்கிறேன்.

  போயும் போயும் ஒரு நடிகன் பின்னாலதான் போகணுமா? நடிகன்தான் ஆதர்ஷனமாக இருக்கணுமா? என்கிற கேள்விகள் எழலாம். யாருக்குத்தான் இங்கே ஆதர்ஷண நாயகர்கள் இல்லை. இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு நாயகன் தேவைப்படுகிறான். நாயக வழிபாடு இல்லாத ஆளே இருக்க முடியாது. அது பெரியாராகவும் அண்ணாவாகவும் கருணாநிதியாகவும் பிராபகரனாகவும் ஜெயல்லிதாவாகவும் சோராமாசாமியாகவும் ஒசாமாவாகவும் ஒபாமாவாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அது ரஜினியாக இருப்பதால் யாருக்கும் எந்த கேடும் ஏற்படப்போவதில்லை.

  அவர் நடிக்கிறார் சம்பளம் வாங்குகிறார் என்பதெல்லாம் வெற்று கூச்சலே தவிர வேறொன்றுமில்லை. இப்படி கூப்பாடு போடுபவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு அதுகூடவா தெரியாது. இன்று இந்தியாவிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் ரஜிக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியுமா?

  ரஜினியை பார்த்து வாழ்க்கையில் அவரைப்போல முன்னேற வேண்டுமென துடிக்கிற எத்தனையோ பேரே அறிவேன். இந்த இளைஞர்களிடம் எனக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் இது தனக்கான ஆதர்ஷ நாயகனை தேர்ந்தெடுக்கிற உரிமை தொடர்பானது. ஒருவன் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் , யாரை பூஜிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவரவர்க்கு உண்டுதானே! ரஜினியை பின்பற்றுவதால் அவன் நன்றாயிருந்தாலும் நாசமாய் போனாலும் அது அவன் பாடு!

  ஒருவரை நமக்கு பிடித்துப்போகவும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் அவரை நம் ஆதர்ஷ நாயகனாக ஏற்றுக்கொள்ளவும் அவர் போராளியாகவும் புரட்சியாளராகவும்தான் இருக்க வேண்டும் என்றால் மனைவியிடம் கூட அன்பு பாராட்ட முடியாது.
  சாகட்டுமே அதனால் யாருக்கு நஷ்டம் என கேட்பவர்களை பார்க்கும் போது பயம்தான் வருகிறது. ஒரு மனிதனின் உயிர் என்ன அவ்வளவு இளக்காராமா போயிடுச்சா? உலகில் யாருடைய உயிராக இருந்தாலும் அது போனால் என்ன என்கிற அலட்சியம் ஆபத்தானது என்பதை எப்போதுதான் நாம் உணரப்போகிறோம்.

  பத்திரிகைகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன.. பீதியை கிளப்புகின்றன என்று கேட்பவர்களுக்கு ஒரே ஒருபதில்தான். ரஜினியொன்றும் அதிஷாவோ யுவகிருஷ்ணாவோ கிடையாது. முப்பதாண்டுகாலமாக போராடி தென்னிந்திய திரைப்படங்களின் அடையாளமாக இருக்கிற ஒரு ஆளுமை என்பதை யாராவது இங்கே மறுக்க முடியுமா? இந்தியா முழுக்கவே தென்னிந்த சினிமாவின் முகமாக ரஜினிதானே இன்னமும் இருக்கிறார். இதென்ன ஓவர்நைட்டில் நடந்ததா? ரஜினியின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கிறவர்களும் அவருடைய புகழை , ரசிகர்களின் மிகப்பெரிய எண்ணிக்கையை மறுக்கவும் முடியுமா? பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லாத குப்பையோ மண்ணோ கிடையாது ரஜினி!

  அதிலும் ரஜினிகுறித்து பரவலாக பரப்பப்படுகிற வதந்திகளை முறியடிக்க பத்திரிகைகளின் பங்கு மிக முக்கியமானது. ரஜினிமீதான அதீத அன்பின் வெளிப்பாட்டில் தற்கொலை செய்துகொள்ள நேரிடுகிற சம்பவங்களும் தமிழகத்தில் நடைபெறலாம். குறைந்தபட்சம் இச்செய்திகள் சிலருக்காவது ஆறுதல் அளிக்கலாம்.

  அரசியில் ரீதியில் ரஜினி மீது எனக்கும் பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்குமான உறவில் விமர்சனங்களை வைக்கவே முடியாது. ரஜினியே உதைத்தாலும் மீண்டும் அவர்மீது பாய்ந்து விளையாடுகிற குழந்தைகளை போன்றவர்கள் அவருடைய ரசிகர்கள். ரஜினி நிச்சயமாக அசுரன்தான். தமிழகத்தில் இத்தனை கோடி பேரின் பிரார்த்தனைகளை , அன்பை பெற்ற ரஜினி நிச்சயமாக அசுரன்தான். அந்த அசுரன் மீண்டும் அசுர பலத்தோடு உடல்நலந்தேறி மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.

  • ‘நான் ரஜினி ரசிகன் கிடையாது. எனக்கு ரஜினியை பிடிக்கவும் பிடிக்காது”

   ரஜினி நிச்சயமாக அசுரன்தான்,

   சார் கட்ஸி வரைக்கும் ஏன் உங்களுக்கு ரஜினி பிடிக்காதுன்னு சொல்லவேயில்லீயே!

 22. முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த போது, ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,சென்னையில் உள்ள மருத்துவமனையில் 1968 ஜனவரி முதலாந் திகதி ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு கனிமொழி என்ற பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி?என்ற ஒரு சிறிய செய்தியை வெளியிட்டிருந்ததை மறக்க முடியுமா?
  ராசாத்தி என்றழைக்கப்படும் .தர்மாம்பாள் யார் என்றே தனக்கு தெரியாது. தனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’ என்று கூறி முதல்வர் முத்துவேல் கருணாநிதி அறிவித்தார் . நீதிமன்றத்துக்கும் போனார்…பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே கிடையாது என்று முழங்கினார் முதல்வர் கருணாநிதி .
  எந்த பெண் குழந்தை கனிமொழியை தன் மகளே இல்லை என கருணாநிதி மறுத்தாரோ…எந்த பெண் குழந்தை கனிமொழியின் பெயரை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று அனைத்தையும் இழந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி.

  கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று முழுப்பூசணிக்காயை எப்படியாவது சோற்றில் மறைப்பதில் உறுதியாக கருணாநிதி இருக்கிறார்
  செய்யாத குற்றத்துக்காக கருணாநிதியின் குடும்ப சண்டையில் அப்பாவி 3 பேர் தினகரன் ஆபீசில் எரித்துக்கொல்லப் பட்டதை மறக்க முடியுமா….
  கருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் பட்டம் வாங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலை கழக மாணவர் உதயகுமாரை கொன்றுவிட்டு அவன் போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட தந்தையை விட்டு ‘இறந்தது என் மகனே அல்ல ‘ என்று வாக்குமூலம் கொடுக்க பண்ணியதை மறக்க முடியுமா?
  சம்பத், கண்ணதாசனை கட்சியில் இருந்து நீக்க செய்த சதிகளை மறக்க முடியுமா?, சட்ட மன்றத்தில் அனந்தநாயகி பேசும்போது குறுக்கிட்டு பொழிந்த ஆபாச வசைககளை மறக்க முடியுமா?, காமராஜர் மீது கிளப்பிய அவதூறுகளை மறக்க முடியுமா?; நெடுஞ்செழியனை ஓரம் கட்ட செய்த மோசடி முயற்சிகளை மறக்க முடியுமா?, ஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக்கொண்டு முகம்மது பின் துக்ளக் படம் வெளி வராது செய்ய சம்பந்தப்பட்ட கலைஞர்களை மிரட்டியதை மறக்க முடியுமா? கூலிப்படையை கொண்டு திரை அரங்கங்களில் இருக்கைகளை கிழிக்க வைத்து படம் ஓடாது தடுத்ததை மறக்க முடியுமா?; எம்ஜியாரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க முயன்றதை முடியுமா?, எம்ஜியாரை ராமாவரம் பாலத்துக்கு அருகில் தாக்கிட ரௌடிகளை அமர்த்தியதை மறக்க முடியுமா?

  நல்லையா தயாபரன்

 23. //கனிமொழி கைதை வைத்து தி.மு.கவை எதிர்க்கும் பலரும் மிகப்பெரும் சாதனையை அடைந்து விட்டது போல துள்ளிக் குதிக்கிறார்கள். ஈழ ஆதரவாளர்கள் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களுக்காக கருணாநிதியை பழிவாங்கிவிட்டதாக திருப்தி அடைகிறார்கள். இந்த சந்தோஷக்காரர்களுக்கு அரசியலின் அரிச்சுவடி கூட தெரியவில்லை என்பதோடு, அவர்கள் கொண்டிருக்கும் ஈழம், தி.மு.க எதிர்ப்பு குறித்தும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. குறிப்பிட்ட பிரச்சினையில் மக்களை அணிதிரட்டி தீர்க்க வேண்டிய பொறுமை வழிமுறைகளெல்லாம் இவர்களுக்கில்லை. ஏதாவது குறுக்கு வழியில் நடக்கும் நிகழ்வுகளை வைத்தே தீர்த்துவிடலாம் என நினைக்கிறார்கள்.//

  இந்த பாராவை படிக்கும் போது வினவுக்கு ஈழ ஆதரவு இல்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது உண்மையில் திமுக தோல்விக்கு முள்ளிவாய்க்கால் படுகொலையும் ஒரு காரணமே மக்கள் ஓரணியாக திரண்டதால் தான் திமுக தோற்கடிக்கப்பட்டது

  • தவறு, இந்தியர்கள் சுயநல காரர்கள் கருணா குருப் மிச்சம் மிதி வைக்காமல் சுரண்டி விட்டு சின்ன போனஸ் மட்டுமே மக்களுக்கு கொடுத்தது சுய நல மக்கள் தங்கள் வேலையை காட்டிவிட்டார்கள்.இலங்கைக்காக இரக்கப்படலாம் ஓட்டெல்லாம் போட மாட்டோம். நாங்கள் விபரமான சுயநல வாதிகள். கொள்ளையடிப்பதில் பெண்ணின் சம உரிமை நிருபிக்கப்பட்டுள்ளது. வினாவுக்கு பாராட்ட ஒரு சந்தர்ப்பம்.

  • நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும்
   இல்லை . ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால்அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத்தயங்கமாட்டோம்.
   தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க