உழைக்கும் மக்களின் போராட்டங்களால் ஐரோப்பா கண்டத்திலுள்ள கிரீஸ் நாடு மீண்டும் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளது. கிரேக்க நாட்டில் கடந்த பிப்ரவரி 12 அன்று நாடாளுமன்றத்தின் முன் நடந்த போராட்டத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பங்கேற்று அரசின் சமூகச் செலவினக் குறைப்புத் திட்டத்துக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியுள்ளனர்.
தீராத நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலையில் இருந்த கிரீஸ் நாட்டின் நெருக்கடிக்கு, நலத்திட்டங்கள் மானிய வெட்டு முதலான பொருளாதாரத் தாக்குதல்களையே ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) ஆகிய மும்மூர்த்திகள் தீர்வாக முன்வைக்கின்றனர். இதனைச் செயல்படுத்தாவிட்டால் நாடு திவாலாகி பொருளாதாரப் பேரழிவு ஏற்படும் என்று நிர்ப்பந்தமாக இதனைத் திணித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திணிக்கப்பட்ட இத்தகைய நெருக்கடிக்கான தீர்வுத் திட்டங்கள் அனைத்தும் மிகப்பெரிய மோசடி என்பதையும், வறுமையும் வேலையின்மையும் துயரமும் தீவிரமாகிவிட்டதையும் தற்போதையை நிலைமேகளே நிரூபித்துக் காட்டுகின்றன. தனியார் துறையில் 20 சதவீத அளவிற்கும், பொதுத்துறையில் 50 சதவீத அளவிற்கும் ஊதியங்கள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டில் பொருளாதாரம் 7 சதவீத அளவுக்கும், தொழிற்துறை உற்பத்தி 16 சதவீத அளவுக்கும் வீழ்ச்சியடைந்துள்ளது. மதிப்புக் கூட்டு வரி உயர்வால் ஒரு லட்சம் சிறு மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் திவாலாகிவிட்டன.
இத்தனையும் போதாதென்று, கடந்த பிப்ரவரியில் கொண்டுவரப்பட்ட புதிய சமூகச் செலவின வெட்டுத் திட்டத்தின்படி, 2015இல் இன்னும் கூடுதலாக ஒன்றரை லட்சம் அரசுத்துறை தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்படவுள்ளனர். “ஒரு முழம் கயிறா, அல்லது ஒரு துளி விஷமா என்கிற வெவ்வேறு வடிவிலான மரணத்துக்கு இடையில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்குமாறு ஆட்சியாளர்கள் எங்களைத் தள்ளுகின்றனர்; இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று இத்தாக்குதலை எதிர்த்து கிரீஸ் மக்கள் தொடர்ந்து போராடுகின்றனர்.
கிரீஸ் நாட்டு உழைக்கும் மக்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால், அது ஐரோப்பாவிலுள்ள பிற நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துவிடும் என்று இந்த ஒன்றியத்தின் செல்வாக்கு மிக்க நாடுகளான ஜெர்மனியும் பிரான்சும் அஞ்சுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான யூரோவின் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, விரைவாக கிரீசை நெருக்கடியிலிருந்து மீட்பது என்ற பெயரில் மானியவெட்டுகளைத் தீவிரமாக்குமாறு நிர்பந்தித்து, கிரீசை தங்களது மேலாதிக்கத் திட்டங்களுக்கான சோதனைக் கூடமாகப் பயன்படுத்தி வருகின்றன.
26 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்க நாடு மட்டும்தான் நெருக்கடியில் சிக்கி திவாலாகும் விளிம்பில் இருப்பதாகவும், அதனைத் தீர்க்க ஐரோப்பிய ஒன்றியம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் முதலாளித்துவ உலகம் சித்தரித்து வந்தது. ஆனால், இன்று பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கிரீசின் கதியை அடைந்து குடிமுழுகிக் கொண்டிருக்கின்றன என்பதை முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே வேறுவழியின்றி இப்போது ஒப்புக் கொள்கின்றனர். தான் பட்டகடனைத் திருப்பிக் கொடுக்கும் ஆற்றலில் “ஏஏஏ” என்ற மிக உயர் தரத்தில் இருந்த உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா, கடந்த 2011 ஆகஸ்டில் அத்தகுதியை இழந்து விட்டது என்று ஸ்டாண்டர்டு அண்டு புவர் என்ற தர மதிப்பீடு நிறுவனம் அறிவித்தது. மற்றொரு பொருளாதார வல்லரசான ஜப்பானும் அத்தகுதியை இழந்து நீண்டகாலமாகிவிட்டது. எஞ்சியிருந்த ஐரோப்பிய ஒன்றியமும் இன்று அந்த நிலைக்குத் தள்ளப்பட்டு முழுகிக் கொண்டிருக்கிறது.
ஸ்டாண்டர்டு அண்டு புவர் என்ற தர மதிப்பீட்டு நிறுவனம் கடந்த கடந்த ஜனவரி 12 இல் பிரான்ஸ், ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 9 நாடுகள் கடனைத் திருப்பிச் செலுத்தும் ஆற்றலை இழந்துவிட்டன என்றும், தற்போதைய நிலையில் ஜெர்மனி, லக்சம்பர்க், பின்லாந்து, நெதர்லாந்து ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே ஓரளவுக்கு தமது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளதாகவும், இந்நாடுகள் உதவினால்தான் ஐரோப்பிய பொருளாதாரத்தையும் யூரோ நாணயத்தையும் காப்பாற்ற முடியும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தங்களது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆற்றலை 9 நாடுகள் இழந்துவிட்டதால், “ஏஏஏ” தரத்தில் நீடித்து வந்த “ஐரோப்பிய நிதிச் சீரமைப்பு ஏற்பாடு’’ (EFSF) என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் திவாலான நாடுகளை மீட்பதற்கான நிதியமைப்பும் இப்போது அதன் தரத்தை இழக்கத் தொடங்கியுள்ளது என்று அடுத்த நான்கு நாட்களில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நெருக்கடியில் சிக்கியுள்ள நாடுகள் மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் மக்களின் நுகர்வு குறைந்துள்ளதோடு, அரசின் வரிவருவாயும் குறைந்துவிட்டது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளில் உண்மைப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
ஏற்கெனவே அயர்லாந்தில் ஏற்றுமதி உபரி மூலம் நெருக்கடியைச் சமாளித்துவிட்டதாக ஏகாதிபத்தியவாதிகள் சித்தரித்தனர். ஆனால் நெருக்கடிக்கு முன்பிருந்த வேலையில்லாத் திண்டாட்டத்தை விட, இப்போது அந்நாட்டில் வேலையின்மை தீவிரமாகிவிட்டது. இதர நாடுகள் இறக்குமதி செய்தால்தான் அந்நாடு தனது நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க முடியும் என்ற நிலையில் இருப்பதால், அது எந்நேரமும் திவாலாகும் நிலையில் உள்ளது. கிரீசும் அயர்லாந்தும் இரட்டை இலக்க பணவீக்கத்தால் தவிக்கின்றன. ஸ்பெயின் நாடு 23 சதவீத வேலையின்மையால் தத்தளிக்கிறது.
ஏறத்தாழ அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசாங்கக் கடன் பத்திரங்களும் இன்று மதிப்பிழந்து போய்விட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்வாக்கு மிக்க இன்னொரு நாடான பிரிட்டன், 1930களில் நிலவிய பெருமந்த நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பிரிட்டனில், 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு 2011ஆம் ஆண்டில்தான் மிக அதிகமாக 20.64 லட்சம் பேர் வேலையின்றித் தவிப்பதாகவும், இது 2012இல் 30 லட்சமாக உயரும் என்றும் அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.
கூடுதல் விலைக்கு கடன்களை வாங்கி, தமது நாடுகளின் திவாலாகும் நிலையிலுள்ள வங்கிகளை மீட்குமாறு நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலையிலுள்ள நாடுகளிடம் ஜெர்மனியும் பிரான்சும் நிர்ப்பந்திக்கின்றன. இதன் விளைவாக, நிதித்துறையில் கடுமையான சிக்கனத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும்; இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து அரசின் வரி வருவாயும் குறையும் என்பதால் என்ன செய்வது என்று புரியாமல் இந்நாடுகளின் வங்கிகள் தடுமாறுகின்றன.
மொத்தத்தில் அமெரிக்கா, ஜப்பான் மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியமும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் யூரோ நாணயத்தைக் காப்பாற்றுவதற்காக கடந்த டிசம்பர் 9 அன்று பிரஸ்ஸெல்ஸ் நகரில் நடத்திய உச்சி மாநாடும் தோல்வியில் முடிந்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியமே சிதைந்து சின்னாபின்னமாகிப் போகும் சூழல்தான் நிலவுகிறது. பெருகிவரும் நெருக்கடிகள் மீண்டுமொரு உலகப் பொருளாதார நெருக்கடி முற்றுவதற்கான அறிகுறிகளைத்தான் காட்டுகிறதேயொழிய, தீர்வதற்கான வாய்ப்புகளோ வழிகளோ தென்படவேயில்லை.
___________________________________________
– புதிய ஜனநாயகம், மார்ச் – 2012
___________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
- மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!
- ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !!
- இலண்டன்: ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும்!
- ஐக்கிய ஐரோப்பிய குடியரசு, முடிவல்ல ஆரம்பம்
- பொருளாதார நெருக்கடி, கிரேக்கத் தலைநகரம் எரிகின்றது!
- எங்களால் முடியும்! தொழிலாளர் நிர்வாகத்தில் பத்திரிகை நிறுவனம்
- கிரேக்க பொருளாதாரம் திவாலானது எப்படி? – ஆவணப்படம்
- கிறீஸ் மக்களைத் தாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்
இதைத்தான் சொந்தச்செலவில் சூன்யம் வைப்பது என்று சொல்வார்கள்..
we request mr. k.r. adhiyaman to be on the diaz… :))
விரிவாக பல முறை விளக்கினாலும் மீண்டும் மீண்டும் கேட்டால் என்ன செய்வது ? யுரோ கரன்சியை உருவாக்கிய முட்டாளதனம் ; அதனால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் தான் இன்று என்பதையும் விளக்கியாச்சு. Monetary union without fiscal (taxes and budgets) union is crazy and will lead to this kind of mess. N.Europe is healthy while nations on the fringe of EU are sick. if there was no Euro, individual nations would have to manage their economies and politics as before and no need for ECB or IMF, etc.
சரி, 1991இல் சோவியத் யூனியன் வீழ்ச்சியை கம்யூனிசத்தின் வீழ்ச்சி என்று சொன்னால் ஒத்துக்கொள்ளாமல், அது உண்மையான கம்யூனிசம் கிடையாது, சமூக ஏகாதிபத்தியம், திரிபுவாதிகள் சதி, etc, etc என்று ‘விளக்கம்’ சொல்கிறீர்கள். அதே பாணியில் சொன்னால் :
போலி முதலாளித்துவாதிகள் மற்றும் திரிபுவாத முதலாளித்துவாதிகளின் செயல்களால் தான் இந்த குழப்பங்கள், மந்தங்கள், திவால்கள். உண்மையான தூய முதலாளித்தவத்தில், currency union, central bank fixing of interest rates, exporting nations manipulating their currency values artificially, aid thru IMF, WB, govt subsidies to housing loans, huge military spending and invasions இருக்காது.
Fiat Money and the Euro Crisis
http://mises.org/daily/5700
Debt Rules and Fiat Currency
When the euro was first introduced, people were aware of this very danger. That’s why the Maastricht Treaty contained rules on countries wishing to join the euro currency union. Specifically, government budget deficits were not to exceed 3 percent of GDP, and total government debt was not to exceed 60 percent of GDP.
Obviously the Maastricht Treaty’s rules were as binding as the Bill of Rights in the United States. Partly aided by shenanigans involving currency swaps designed by Goldman Sachs, the Greek government flouted the limits of deficits for years. Thus here we are, in the very nightmare scenario about which some economists (such as Milton Friedman) warned at the euro’s inception.
Lost in all the analysis of the theory of “optimal currency area,” the possibilities for a structured default, the consequences of a collapse of the euro, etc., are two simple questions: Why does the behavior of the Greek government have anything to do with taxpayers in Germany? Why did the original Maastricht Treaty have rules about fiscal policy as part of the criteria for monetary union?
The answer is that the euro is a fiat currency, and as such it will always provide rulers with the temptation to monetize fiscal deficits. That’s why the citizens of traditionally hawkish Germany — who grew up with horror stories of hyperinflation — would be very wary of joining a currency union with people who elect spendthrift governments and have central bankers who are doves on inflation.
so your all the things// currency union, central bank fixing of interest rates, exporting nations manipulating their currency values artificially, aid thru IMF, WB, govt subsidies to housing loans, huge military spending and invasions//
should be stopped .what is your idea to stop this evil capitalism and bring your type of capitalism
Plain monetary Union without Fiscal unity is useless,or just go for a Custom Union like Mercosur in South America.That ll give labour mobility but with different currencies.
actually i asked a way to stop the evil capitalism and bring utopian capitalism to Mr.adhiyamaan .if he can’t answer ,any right wing or an Rss right wing can answer
Nagaraj,
I did not bother to reply to your oversimplified view point because you (and most people here) view this world as black and white and do not see the shades of grey in many issues, esp economic issues.
‘evil’ and ‘good’ are mere words and doesn’t suit here. try to read thru that link i had quoted. also my blog posts regarding this crisis.
and by the way, even though i can be called a ‘right winger’, it doesn’t mean that I am an RSS supporter or religious fanatic. Libertarianism (that i propose) is branded as right wing. again this categorisation is over simplistic and confuses. பார்க்கவும் :
இடதுசாரிகளும், வலதுசாரிகளும்
http://nellikkani.blogspot.in/2009/09/blog-post.html
capitalism and communism or any other ism are all just paper theories,goodness in anything comes from good heart.
It is like Gambling,u stop when a guy loses his cash,u shud not continue till he loses his wife.
முதலியம் மனிதனை சோதிக்கும்…ஆனா கைவிடாது! பொதுவுடைமை (சோஷலிசம் – கம்யூனிஸம்) அள்ளிக் கொடுக்கும்(?)…ஆனா ஒரேயடியா கைவிட்டுடும்!
முதலியம் + ஜனநாயகம் தான் செயல்படக்கூடிய சாத்தியமுள்ள ஒரே சிஸ்டம். ஜனநாயகத்தில் சிற்சில குறைகள் இருக்கலாம்; குறைந்த பட்சம் செயல்படாத அரசுகளை 5 வருடத்தில் வீட்டுக்கு அனுப்ப முடிகிறதே. அந்த எண்ணெய்ச்சட்டிக்குப் பயந்து எரிகிற கொள்ளியான கம்யூனிசம்= சோஷலிசத்தைச் சரனடைய முடியாது!
சரவணா! ஆதாரமில்லாமல் உளரல்
socialism is a comedy,this is a classic case of the oppressed choosing a system to screw themselves whereas in the previous system individuals screwed,now the system screws them.
ஐயா சோசியலிசம் என்பது ஒரே கட்சி ஆள்வது அல்ல அதுவும் பல கட்சி அட்சியுள்ள ஜனநாயகம் தான் …பொருளாதார கொள்கையாக தனியாரை சாராமல் மக்களை ஒன்று சேர்த்து வளர்வது….
பெண்கள் தினத்தை முண்ணிட்டு சிறப்பு கட்டுரை இல்லாமல் ஏமாற்றி விட்டிர்கள்.
செத்துப்போன சித்தாந்தமான கம்யூனிசத்தை வைத்துக்கொண்டு திறமையாக எழுத கற்றுக்கொண்டீர்கள்!! இன்றைய சீனாவில் அமெரிக்கவை காட்டிலும் அதிக அளவில் முதலாளித்துவம் வளர்ந்து உள்ளது. கம்யுனிசம் கோலோச்சிய காலத்தில் ஏராளமான மக்கள் செத்து மடிந்தார்கள்!! அவர்களை இப்போது உயிர்ப்பிக்க முடியுமா? அதனால்தான் இப்போதைய சீனா கம்யூனிசத்தை கைவிட்டு விட்டு முதலாளித்துவத்தை ஏற்றுக்கொண்டு செயல் பட்டு வளர்சியடைகிறது. அங்கே எதிர் கட்சிகள் என்பது இல்லை! அரசை எதிர்த்து இதுபோல் பத்திரிக்கை நடத்த முடியாது.
communism means laziness,where nobody takes an initiative.it is just organized structural hierarchial exploitation.One person ll do 90% of the work,the only guy who cares and receive the same salary as the rest of the lazy guys.It is a justification for the guys who dont want to do anything in life to suggest such extremes.
////Plain monetary Union without Fiscal unity is useless,or just go for a Custom Union like Mercosur in South America.That ll give labour mobility but with different currencies.//// i can’s understand these lines can you elaberate
USA is a fiscal union,means budget is central and state budgets are included in the central budget,central government borrows at the minimum rate and state govt borrows at incrementally higher rates.
Monteray union is Europe where fiscal elements(i.e. budget,borrowing,bonds etc) are different for different countries but the currency/monetary policy is the same,which means the european central bank decides the rate of interest of each country which is the same but then individual countries can spend as they want in their own ways.
Custom Union means no monetary/fiscal constraints but we have people who can move across countries easily and work easily.This is the system in South America and it helps people move across easily.It is also helped by the common language of spanish/potuguese.