விதியே என்று வாழ்பவர்களே ! வீதிக்கு வாருங்கள் !! அழைக்கிறார் மோடி !!!
உண்மையில் இது கருப்புப்பணத்தை,கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையா? இல்லவே இல்லை. யாரெல்லாம் கருப்புப்பணத்தின் ஊற்றுக்கண்களாக இருக்கிறார்களோ அவர்களுக்காக மோடி அரசு மக்கள் மீது நடத்தும் மாபெரும் தாக்குதல் தான் இந்தச் செல்லா நோட்டு நடவடிக்கை.
கருப்புப் பணம் = ரஜினி – ஷங்கர் – ஜெயமோகன் – லைக்கா
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா மொபைல் எனும் திருட்டுக் கம்பெனி குறித்தும், அந்த திருட்டுக் கம்பெனியிடம் காசு வாங்கிய எழுத்தாளர் ஜெயமோகனையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் வினவின் நீண்ட ஆய்வுக் கட்டுரை!
கட்டுமானத் தொழிலாளர்களை பட்டினியில் தள்ளிய மோடி !
பண மதிப்பைக் குறைத்தல் விளைவு : அளப்பரிய வேலையிழப்புகளால் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களிடம் பணமோ உணவோ எதுவும் இல்லை
மோடியை ஆதரிக்கும் வைகோ – கேலிச்சித்திரம்
மோடியை ஆதரித்து வைகோ பேச்சு ! - மக்களோட கொலவெறி தெரியாம வசனம் பேசாதீங்க வைகோ... அப்புறம் பிரிச்சி மேஞ்சிற போறாங்க !
BJP கே.டி. ராகவன் மறைக்கும் கருப்புப் பண ஊழல் – ஆதாரங்கள்
எஸ்.வி. சேகரின் அம்பலப்படுத்தலுக்கு முன்தினம் வரையிலும் சீனிவாசனின் ஃபேஸ்புக் சுயவிவரத்தில் கூட ‘எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் இயக்குனர்’ என்பது குறிப்பிடப்பட்டிருந்ததையும், அதன் பின்னர் அது நீக்கப்பட்டதையும் எஸ்.வி. சேகர் அதே ஃபேஸ்புக் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
கேடி பில்லா கில்லாடி ரங்கானா அது நீங்கதான் மோடி அண்ணே !
ஒரு ஊர்ல ரெம்ப கெட்டவன் ஒருத்தன் இருந்தானாம். அவனோட மகனுக்கு, ‘நம்ம அப்பாவைவிட பெரிய ஆளா வரணும்’னு ஆசை! அதனால ஊரே குடிக்குற தண்ணீர் தொட்டியில பீயைக் கரைச்சு ஊத்திவிட்டானாம்! அதுமாதிரி நான் காங்கிரச விட கெட்டிக்காரன்னு காட்டுறதுக்கு இந்தக் கூத்து பண்றீங்களோனு தோணுது!
பணத்தை எடுப்போம் ! வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம்
பன்னிரெண்டு லட்சம் கோடி ரூபாய் அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளின் வராக்கடனால் வங்கிகள் திவாலாக வேண்டிய அபாயத்தை, முட்டுக்கொடுக்கவே கோடிக்கணக்கான மக்களுடைய சேமிப்புப்பணத்தை, சம்பளப்பணத்தை பலவந்தமாக வழிப்பறி செய்கிறது மோடி அரசு.
செல்லாத பிரதமரை மாற்றுவோம் !
செல்பி நாயகனின் அதிரடி அறிவிப்புக்கு, அடிப்படை இல்லாமல் இல்லை !
ராமனை வைத்து அரசியல் செய்தவன், ராமாயணத்தை வைத்து வித்தை காட்டினான் ! பின்பு மாட்டை வைத்து மடக்கினான் ! அதன் மூத்திரத்தை வைத்து முழங்கினான் !
மோடியின் நண்பர்கள் முன்பே பணத்தை மாற்றிவிட்டனர் – யாதின் ஓசா
குஜராத் அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் பா.ஜ.க கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நவம்பர் 8 இரவு 9 மணியிலிருந்து நவம்பர் 9 அதிகாலை 5 மணி வரை இந்த வங்கிகள் ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்களுக்கு குறைந்த மதிப்புடைய நோட்டுகளை மாற்றிக் கொடுத்திருக்கின்றன.
மோடியின் கபட நாடகத்திற்கு ரெட்டி திருமணமே சாட்சி – வீடியோ
உண்மையில் அதை திருமணம் என்று சொல்வது நமக்கு வேறு வார்த்தைகள் இல்லை என்பதால்தான். இயக்குநர் ஷங்கரின் சினிமா நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்குமோ அதையும் தாண்டுகிறது ரெட்டியின் விழா.
ஓராண்டில் 56 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் – சிறப்புக் கட்டுரை
இந்தியாவிலிருந்து 2014ஆம் ஆண்டு வெளியேறிய கருப்புப் பணத்தின் அளவு ரூ.56.5 லட்சம் கோடி. இந்தியாவில் சுற்றில் உள்ள பணத்தின் அளவு ரூ.16 லட்சம் கோடி. அதில் ஏறத்தாழ ரூ.14 லட்சம் கோடி செல்லாததாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
மோடியின் முடிவை காறி உமிழும் வெளிநாட்டு பத்திரிக்கைகள் !
வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்ற வடிவேலு தத்துவத்தின்படிதான் சங்க பரிவாரத்தினர் மோடிக்கு சர்வதேச ஆதரவு வெளுத்துக் கட்டுகிறது என்று கதையளந்தனர். ஆனால் உண்மை அப்படியில்லை
உங்களது இரக்கமின்மையை நியாயப்படுத்த முடியாது
ஒரு வேளை நாளையும் இன்னொரு தாயிடம் அவரது குழந்தையின் சிகிச்சைக்குப் போதுமான பணம் கொடுக்க முடியாது என்று சொல்லும் நிலை வந்தால் நான் உடைந்து போவேன் என்கிறார் அந்த வங்கி ஊழியர்.
மோடி வரட்டும் பாத்துக்குறோம் – வீடியோ
ஆட்டோ ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளிகள், பெண்கள் அனைவரும் பேசுகிறார்கள். கோபப்படுகிறார்கள். மோடியை நேரில் பார்த்தால் சும்மா விடமாட்டார்கள் இந்த மக்கள்! பாருங்கள் – பகிருங்கள்!
கருப்புப் பணம் – மோடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் !
இந்த மோசமான அறிவிப்பால் பல திருமணங்கள் நின்று போயுள்ள சூழலில் கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க-வின் பாசப் பிள்ளைகளான ரெட்டி சகோதரர்கள் குடும்பத் திருமணம் 650 கோடியில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.