privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கட்டுமானத் தொழிலாளர்களை பட்டினியில் தள்ளிய மோடி !

கட்டுமானத் தொழிலாளர்களை பட்டினியில் தள்ளிய மோடி !

-

பண மதிப்பைக் குறைத்தல் விளைவு : அளப்பரிய வேலையிழப்புகளால் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களிடம் பணமோ உணவோ எதுவும் இல்லை

  • “ஒரு ஆண்டு காலமாக நான் வேலை செய்த தனிவீடு மற்றும் அடுக்குமாடி கட்டுமானப் பணி ஒன்று ஞாயிற்றுகிழமையன்று (நவம்பர் 13) நிறுத்தப்பட்டது. ஒப்பந்தக்காரர் எங்கிருக்கிறார் என்று எந்த ஒரு விவரமும் எங்களிடம் இல்லை. கூலியைப் பெறுவதற்காக 300 தொழிலாளர்களுக்கு மேல் காத்திருக்கிறோம்”
    அய்யனார், வயது 42, கொத்தனார்.
  • நான் மூன்று நாட்களாக சரியாக சாப்பிடவில்லை. ஒப்பந்தக்காரரின் செல்பேசியும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் காத்திருக்கிறோம்.
    – நிசாமுதின், வயது 32, கட்டுமானத் தொழிலாளி – சாயம் அடிப்பவர்.
MIGRANT-workers
ஒப்பந்தக்காரர் எங்கிருக்கிறார் என்று எந்த ஒரு விவரமும் எங்களிடம் இல்லை. கூலியைப் பெறுவதற்காக 300 தொழிலாளர்களுக்கு மேல் காத்திருக்கிறோம்

பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூவாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த 11 நாட்களுக்குப் பிறகு, கட்டுமானத் துறையில் வேலையிழப்புக்களைச் சந்திக்கும் தமிழகத்தில் வேலை செய்யும் 5 இலட்சம் புலம் பெயர்ந்த மற்றும் அமைப்புச்சாராத் தொழிலாளர்களில் இருவருடைய குரல் மட்டுமே இவை.

நிபுணர்கள் மற்றும் பல்வேறு முகவர்களைப் பொறுத்தவரையில் கட்டுமானத்துறை இப்பகுதியில் நிலைகுலைந்த நிலைக்கு வந்திருக்கிறது. கட்டுமானத்துறையில் மாநிலத்திலேயே பெரும்பங்கு வகிக்கும் சென்னை, கோவை, திருச்சி மற்றும் ஏனையப் பகுதிகளில் நிலவும் பணத்தாள் தட்டுப்பாடு விரைவில் சரியாகாவிடின் வரும் ஒரு ஆபத்தான சூழ்நிலை வருமென்று சென்னையில் இருந்து வரும் பல்வேறு அறிக்கைகள் எச்சரிக்கின்றன.

கூலி மற்றும் உணவில்லாமல் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருந்ததாக வரும் அறிக்கைகளை ஆமோதிக்கிறார் இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கக் கூட்டமைப்பின்(CREDAI) தமிழகப் பிரிவைச் சேர்ந்த என்.நந்தகுமார். தொழிலாளர்கள் அன்றாட உணவிற்கு அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே ஏற்பாடு செய்யுமாறு CREDAI அமைப்பைச் சேர்ந்த முதலாளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

“சற்றேறக்குறைய எந்த ஒருக் கட்டுமானத் திட்டத்திலும் 100 லிருந்து 200 தொழிலாளர்கள் இருப்பார்கள். சென்னை CREDAI மட்டுமே 130 (முன்னணிக் கட்டுமான மேம்பாட்டாளர்கள்) உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. சூழ்நிலைச் மிகவும் சரியில்லாததினால் உடனடியாக உணவை வழங்க எங்களில் பெரும்பாலோனோர் திட்டமிட்டு உள்ளோம். பட்டினியைத் தவிர்க்கத் தனியார் உணவு வழங்கும் சேவையையும் சிலர் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்” என்று கூறுகிறார்.

இருந்த போதிலும், சென்னையில் உள்ள ஒட்டுமொத்த கட்டுமான மேம்பாட்டாளர்கள் மற்றும் திட்டங்கள் CREDAI அமைப்பின் கீழில்லை. CREDAI அல்லது வேறு எந்த அமைப்பிலும் சார்ந்திராத 500-600 அமைப்புச்சாராக் கட்டுமான மேம்பாட்டாளர்கள் சென்னையில் இருப்பதாகத் தொழிலாளர் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகிறார். “நூற்றுக்கணக்கான  திட்டங்களும் அவற்றில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான மேம்பாட்டாளர்களாலோ அல்லது மாநில அரசினாலோ இந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாது” என்று அவர் கூறினார்.

கடைசி 4 நாட்களில் மட்டும் சென்னை மாநகரம், பழைய மகாபலிபுரம் சாலை, GST சாலைப் பகுதியில் 200-க்கும் அதிகமான கட்டுமானத் திட்டங்கள் ஒன்று நின்று விட்டன அல்லது பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறினார் தொழிலாளர்த் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர். ஆயினும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1000 கட்டுமானத் திட்டங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக CREDAI மற்றும் ஏனைய ஆதாரங்கள் கூறின.

கட்டுமானத் துறையில் 30% லிருந்து 40% வரைக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக நாட்டின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டாளரும் BSCPL நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான பி.சீனைய்யா கூறினார். இவரது BSCPL நிறுவனம் பெரிய நெடுஞ்சாலை மற்றும் நீர்பாசனத் திட்டங்களைத் தீட்டுவதில் நிபுணத்துவம் பெற்றது.

labour1
பண மதிப்பிழப்பு : ஒரு பெரிய எண்ணிக்கையிலானத் தொழிலாளர்கள் வேலையிழப்பைச் சந்திக்கிறார்கள்

“இன்னும் 10 நாட்களில் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும் என்று நம்புகிறோம். கட்டிடத்தை வாங்கியவரிடம் இருந்து பணம் வருவது நின்று விட்டதால் தொழிலாளர்களுக்குக் கூலியைக் கொடுப்பதற்கு ஒப்பந்ததாரர்களிடம் பணம் இல்லை. அரிதாக, ஏதேனும் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கு இருந்தால் அதில் அவர்களது பாக்கி செலுத்தப்படும். இந்த நெருக்கடித் தொடர்ந்தால் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் பாதிக்கப்பட இருப்பதாக” அவர் கூறினார்.

இனி அடுத்தச் சில நாட்களில் மிகவும் மோசமான நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்று கட்டுமானத் துறையை ஆட்டுவிப்பவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளப் போதிலும் தொழிலாளர்கள் அவர்களது உடனடி பிரச்சினையை சமாளிக்கவே போராடுகிறார்கள். தொழிலாளர்கள் பெரும்பாலான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது முகாம்களில் பட்டினியாய் இருக்கிறார்கள் என்று கடந்த ஒரு ஆண்டு காலமாக ஒரு முன்னணி  கட்டிட மேம்பாட்டாளரிடம் கொத்தனாராக வேலை செய்த 42 வயதான ஆர்.அய்யனார் கூறுகிறார்.

ஒரு ஆண்டு காலமாக நான் வேலை செய்த வில்லா மற்றும் அடுக்குமாடி கட்டுமானப் பணி ஒன்று ஞாயிற்றுகிழமையன்று (நவம்பர் 13) நிறுத்தப்பட்டது. ஒப்பந்தக்காரர் எங்கிருக்கிறார் என்று எந்த ஒரு விவரமும் எங்களிடம் இல்லை. கூலியைப் பெறுவதற்காக 300 தொழிலாளர்களுக்கு மேல் காத்திருக்கிறோம்” என்று அவர் கூறினார். பொதுத்துறை வங்கிக்கிளையொன்றில் வரிசையில் காத்திருக்கும் போது, மூன்றுப் பைகள் நிறையப் பணத்துடன் ஒரு வாடிக்கையாளரை நேரடியாக உள்ளேச் செல்ல வங்கி அதிகாரிகள் இசைவளித்தனர் என்றும் அவர் கூறுகிறார்.

“பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்களை பைகளில் இருந்து எடுத்து எண்ணத் தொடங்கினார்கள். பணக்காரர்களை தண்டிக்கப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். யார் இப்பொழுது தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்? பணக்காரர்கள் ஒரு செல்பேசி அழைப்புக் கொடுத்தால் போதும். வங்கி மேலாளர் பணத்துடன் பணியாளர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி விடுவார்” என்று கூறுகிறார் அய்யனார்.

செல்பேசிக்கு ரீசார்ஜ் செய்யக் கூடப் பணம் இல்லாததால் கடந்த மூன்று நாட்களாக தனது குடும்பத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கட்டுமானத் தொழிலாராகவும் சாயம் பூசுபவராகவும் வேலை பார்க்கும் 32 வயதான நிசாமுதின் கூறினார். அவர் கொல்கத்தா அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். “நான் மூன்று நாட்களாக ஒழுங்காக சாப்பிடவில்லை” என்கிறார்.

திங்கள் கிழமைக்கு முன்னதாகவே உணவு அளிப்பதாக ஒப்பந்ததாரரின் நண்பர் ஒருவர் வாக்குறுதி கொடுத்தார் என்றாலும் “ஒப்பந்தக்காரரின் செல்பேசி துண்டிக்கப்பட்டிருக்கிறது. அவரது நண்பரும் செல்பேசி எண்ணைக் கொடுக்க மறுத்துவிட்டார். நாங்கள் காத்திருப்போம்” என்று அவர் கூறினார்.

ஒரு பெரிய எண்ணிக்கையில் இந்த தொழிலாளர்கள் வேலையிழப்பைச் சந்திக்கிறார்கள். பணத்தாள் பற்றாக்குறையால் வாரக் கூலிக் கொடுக்கவியலாமல் ஒப்பந்தக்கரர்களும் கையறு நிலையில் இருப்பதாக மெட்ராஸ் மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் பயிற்றுவிக்கும் பொருளாதார வல்லுனரான எஸ்.ஜானகிராமன் கூறினார்.

“நமது நாட்டின் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையான 64 கோடியில்  90%  முறைசாராத் துறைகளை சார்ந்தவர்கள். ஒட்டுமொத்த GDP யில் அவர்களது பங்கு 50%ஆகும். அவர்களில் விவசாயத் துறையில் இருப்பவர்கள் 50% ஆக இருக்கும் அதே நேரத்தில் கட்டுமானத்துறையில் 30% இருக்கின்றனர். அரசாங்கம் இந்த அடிப்படை உண்மையை நிராகரிக்குமானால் பஞ்சம் உள்ளிட்ட நாசகரமான விளைவை நாங்கள் சந்திக்க நேரிடும்” என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தைப் பாராட்டியதாக கட்டுமானத்துறையின் முன்னணியாளரும், CREDAI ன் நிர்வாகக் குழு உறுப்பினரும் மற்றும் SSPDL குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனருமான பிரகாஷ் சால்லா கூறினார். ஆனால் செயல்படுத்தும் முறைகளைச் “சிறப்பாக திட்டமிட்டு இருக்க வேண்டும்” என்று கூறினார். “அரசாங்கம் உடனடியாக செயல்படவில்லையெனில் விளைவு தீவிரமானதாக இருக்கும்” என்று மேலும் எச்சரித்தார்.

ஆக கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரர்களுக்கும், வீடு கட்டும் உடமையாளர்களுக்கம் கட்டிடம் நின்று போனதைத் தாண்டி வேறு பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் இங்கே வேலை செய்யும் தொழிலாளிகளோ மோடியின் அறிவிப்பு பட்டினியில் தள்ளி விட்டது.

– நன்றி: Indian Express.