Friday, October 18, 2019
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் ஓராண்டில் 56 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் - சிறப்புக் கட்டுரை

ஓராண்டில் 56 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் – சிறப்புக் கட்டுரை

-

சிறப்புக் கட்டுரை: இந்திய கருப்புப் பணம் – அளவும் அதன் முதலீட்டு முறைகளும்

ஜெ.ஜெயரஞ்சன்
ஜெ.ஜெயரஞ்சன்

ருப்புப் பணம் உள்நாட்டில் முதலீடு செய்யப்படுவது மிகவும் சொற்பம். இதுகுறித்து ஆய்வு நடத்திய தேவ்கர் என்ற பொருளாதார வல்லுநர், 2010ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘The Drivers and Dynamics of Illicit Financial Flows’ என்ற நெடிய ஆய்வுக் கட்டுரையில், இந்திய நாட்டில் உருவாகும் கருப்புப் பணத்தில் ஐந்தில் ஒரு பகுதி மட்டுமே உள்நாட்டு சொத்துகளில் முதலீடு செய்யப்படுவதாக நிறுவுகிறார். மீதமுள்ள கருப்புப் பணம் அனைத்தும் வெளிநாடுகளில்தான் முதலீடு செய்யப்படுகிறது. இத்தகைய பணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் பெருமளவில் சென்றடைகின்றன என்பதையும் அவர் பொதுவெளியில் உள்ள புள்ளி விவரங்களைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார். இவ்வாறு வெளியேறும் பணத்தின் அளவின்படி பார்த்தால் இந்தியா, உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது.

மிக முக்கியமாக, அவரது ஆய்வின் வாயிலாக நாம் நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கள்ளப் பணத்தின் (அ) கருப்புப் பணத்தின் அளவில் குறைந்தபட்ச மதிப்பீட்டை தெரிந்துகொள்ள முடிகிறது. அவர், நமது தாய்த் திருநாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளிவிவரங்களை அலசுகிறார். இந்திய நாட்டிலிருந்து ஏற்றுமதியான பொருள்களின் மதிப்பும் அளவும் மற்றும் அதேபோல் இறக்குமதியான பொருள்களின் அளவு மற்றும் மதிப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறார். இந்தப் புள்ளிவிவரத்தை, எந்த நாடுகள் இந்தியாவிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்கின்றனவோ அந்த நாட்டின் ஏற்றுமதி/இறக்குமதி புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்டு அதில் வரும் வேறுபாடுகளை கண்டடைகிறார்.

எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு மின்சாரம் தயாரிக்கத் தேவையான உயர் தொழில்நுட்பக் கருவிகள் வாங்கப்படுவதாகக் கொள்வோம். அதற்கு இந்திய நிறுவனம் பிரான்ஸ் நிறுவனத்துக்கு பணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு பல நிறுவனங்கள் பல நாடுகளிலிருந்து தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்யும். இவை அனைத்தும் வகைப்படுத்தப்பட்டு அந்த ஆண்டு இந்தியா, பிரான்ஸ் நாட்டிலிருந்து இத்தனை இயந்திரங்களை இவ்வளவு விலைக்கு வாங்கியது என்ற தகவல் தொகுப்பு இந்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தால் வெளியிடப்படும். இதே போன்றதொரு தகவல் தொகுப்பை பிரான்ஸ் அரசின் வர்த்தக அமைச்சகமும் வெளியிடும். இந்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரப்படி, 2014ஆம் ஆண்டு ரூ. 5000 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் பிரான்ஸிலிருந்து வாங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கொள்வோம். அதே ஆண்டு பிரான்ஸ் நாடு ரூ 2,000 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதியானதாக தெரிவித்திருப்பதாகக் கொள்வோம். இந்த இரு புள்ளிவிவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ரூ 3,000 கோடி இந்தியாவிலிருந்து வெளியேறி இருப்பதும் (இயந்திரங்கள் வாங்குவது என்ற பெயரில்) ஆனால் அது பிரான்ஸ் நாட்டின் கணக்கில் வராததும் தெரியவரும். இந்த ரூ. 3,000 கோடியும் இந்தியாவிலிருந்து இறக்குமதி என்ற பெயரில் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்ட கள்ளப் பணம் ஆகும். இதைத்தான் ஓவர் இன்வாய்ஸிங், அண்டர் இன்வாஸிங் மற்றும் ரீ-இன்வாய்ஸிங் (over Invoicing/ Under Invoicing மற்றும் Re-Invoicing) என்று அழைக்கிறார்கள்.

Dev kar reportஇந்த தில்லுமுல்லுகளை விரிவாக விளக்க நான் முற்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் துல்லியமாகக்கூட விளக்க முற்படவில்லை. இதுபோன்றெல்லாம் கள்ளப் பணம் வெளியேறுகிறது என்பதை விவரிக்க முயன்றுள்ளேன். இத்தகைய தில்லுமுல்லு பெருமளவில் இந்தியாவில் மட்டுமின்றி, வளரும் நாடுகள் குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பெருமளவில் நடைபெறுகிறது என்பதை கள்ளப் பணம் குறித்த பல ஆய்வுகளும் சுட்டிக் காட்டுகின்றன.

வெளியேறும் கள்ளப் பணத்தின் அளவு:

உங்களுக்கு தலைசுற்றல் ஏற்படும் என்றால் இக்கட்டுரையை மேலும் படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். ஏற்றுமதி/இறக்குமதி என்ற வர்த்தக புள்ளிவிவரத் தரவுகளின் அடிப்படையில், 2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பிழைமதிப்பு (Mispricing) என்று பொதுவாக அழைக்கப்படும் ஓவர் /அண்டர்/ ரீ-இன்வாய்ஸிங் (Over/Under/Re-Invoicing) ஆகிய முறைகளைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வெளியேறிய பணத்தின் அளவை கணக்கிட்ட ஆய்வாளர்கள் மிரண்டுவிட்டனர். இந்த பத்தாண்டுகளில் இவ்வாறு இந்தியாவைவிட்டு வெளியே கொண்டுசெல்லப்பட்ட கள்ளப் பணத்தின் அளவு ஆண்டொன்றுக்கு சராசரியாக ரூ. 34,69,972 கோடிகளாகும். 2004ஆம் ஆண்டில் இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட கள்ளப் பணத்தின் அளவு ரூ 13,60,000 கோடியாகும். பத்தே ஆண்டுகளில் இந்தியாவைவிட்டு வெளியேறிய குறைந்தபட்ச மதிப்பு எத்தனை கோடானகோடிகள் என்பதை புரிந்துகொள்ள மேலும் பல புள்ளிவிவரங்கள் உள்ளன. இத்தகைய மதிப்பீடுகள் குறைந்தபட்ச மதிப்பீடுகள் மட்டுமே. ஏனெனில், பொருள் வர்த்தகத்தில் மட்டுமே இத்தனை தில்லுமுல்லுகள். சேவை வர்த்தகம் இந்தியா போன்ற நாட்டில் மிகப்பெரிய ஒரு துறையாகும். பல ஆயிரம் கோடிகளுக்கு வெளிநாடுகளுக்கு வர்த்தகம் நடைபெறும் ஒரு துறை. Software கம்பெனிகளின் வருமானம் எல்லாம் சேவை வர்த்தகத்திலிருந்து வருவதுதான். இந்தத் துறையின் (சேவை) வாயிலாக வெளியேற்றப்படும் பணமோ அல்லது உள்ளே கொண்டுவரப்படும் பணமோ இதில் அடங்காது. ஆகவேதான் இந்த ரூ. 56 லட்சம் கோடி என்பது குறைந்தபட்ச மதிப்பீடு என அந்த ஆய்வு கூறுகிறது.

ஆக, சராசரியாக ஆண்டுக்கு ரூ.35 லட்சம் கோடி கள்ளப் பணம் பன்னாட்டு வர்த்தகம்வாயிலாக வெளியேறியிருப்பதாகக் கொண்டால், மிகக்குறைந்த அளவாக கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வெளியே கொண்டுசெல்லப்பட்ட கள்ளப் பணத்தின் அளவு ரூ. 350 லட்சம் கோடியாகும். இவ்வாறு பிழைமதிப்பு (Mispricing) வழியாக வெளியே கொண்டு செல்லப்பட்ட கள்ளப் பணம், மொத்த கள்ளப் பணத்தில் ஏறத்தாழ 84 விழுக்காடு ஆகும். இம்முறையின்றி வேறுசில வழிகளும் இருக்கின்றன. அவற்றை நான் இங்கு விவாதிக்கவில்லை.

இவ்வாறு கொண்டு செல்லப்படும் பணம் எங்கு செல்கிறது?

இவ்வாறு கொண்டு செல்லப்படும் கள்ளப் பணத்தில் ஒரு சிறிய அளவு மொரீஷியஸ் மற்றும் சிங்கப்பூர் வழியாக (பாட்டிசிபேட்டரி நோட்) அந்நிய முதலீடு என்ற பெயரில் இங்கு வந்துசேரும். ஆனால் இதுவொரு சிறு துளி. மற்ற பணமெல்லாம் அந்தந்த நாடுகளில் முதலீடு செய்யப்படுகின்றன. அதனால்தான் லண்டன் ஹோட்டல், சிங்கப்பூர் ஹோட்டல் என, பல முதலீடுகள்பற்றி வழக்குகளும் செய்திகளும் வருகின்றன. இவ்வாறு வரும் வழக்குகள் அபூர்வமானவை. இந்த வளர்ந்த நாடுகளை முதலீடுகளுக்குத் தேர்ந்தெடுக்க முக்கியதொரு காரணம், அந்நாடுகளின் பண மதிப்பு குன்றுவதில்லை. சொத்து மதிப்பு உயர்ந்துகொண்டேயிருக்கும். சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு இருக்கும். இந்தியா போன்று ஒருநாள் இரவில், ‘இந்தப் பணம் செல்லாது’ என்று கோமாளி அறிவிப்புகளும் வராது. அதை இங்கிருக்கும் பத்திரிகைகளும் நடுத்தர வர்க்கமும் கைகொட்டி தேசியம் என்ற பெயரால் வரவேற்பது அங்கு நடக்காது. இவை அனைத்தும் கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்குத் தெரிவதால்தான் இவ்வளவு பணம் அங்கு கொண்டுசெல்லப்பட்டு முதலீடு செய்யப்படுகிறது.

இவ்வாறு கொண்டுசெல்லப்படும் பணம் முக்கியமாக இரண்டு துறைகள்வழியாக வெளியேறுகிறது என மற்றுமொரு ஆய்வு கண்டுள்ளது. இரண்டு வருடங்களுக்குமுன்பு, நாட்டிலுள்ள கள்ளப் பணம் குறித்து ஹைதராபாத் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நரசிம்ம ரெட்டி ஓர் ஆய்வை மேற்கொண்டார்.

Prof. Narasiman
பேராசிரியர். நரசிம்ம ரெட்டி

அந்த ஆய்வில் அதிர்ச்சிமிகுந்த கண்டுபிடிப்பை அவர் வந்தடைந்தார். பண்ட ஏற்றுமதி, இறக்குமதியில் அணு உலை மற்றும் மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் ஆலைகளை நிறுவ இறக்குமதி செய்யப்படும் முறையில்தான் 60 விழுக்காடுக்கும் மேலான கள்ளப் பணம் வெளியேறியது என்பதை அந்த ஆய்வு சான்றுகளோடு நிறுவுகிறது. எனவேதான், தமிழக கடற்கரைப் பகுதிகளில் இத்தனை அனல்மின் நிலையங்கள் தனியாரால் தொடங்க அனுமதிக்கப்பட்டு, முதலீடும் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆலைகளின் வாயிலாக எத்தனை லட்சம் கோடி கருப்புப் பணம் வெளியே கொண்டுசெல்லப்பட்டிருக்கும், உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். அதனால்தான் நாம் நமது மின்சாரத்துக்கு இவ்வளவு விலை கொடுக்கிறோம்.

இங்கு முக்கியமான ஒரு கூறையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். இந்திய வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த நிபுணர்களும் மெத்தப்படித்த மேதாவி பத்திரிகையாளர்கள் பலரும் Cashless Economy எனும் மின்னணு வர்த்தகம் அல்லது பணப் பரிமாற்றம் வந்துவிட்டால் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் எனக் கூறிவருகின்றனர். நாட்டின் நிதியமைச்சர் இந்த ‘செல்லாத’ அறிவிப்பை விளக்கிப் பேசும்போது, இந்த ‘செல்லாத’ அறிவிப்பு நாட்டில் மின்னணு வர்த்தகத்தை நோக்கி மக்களைத் தள்ளுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றும் கூறினார். மக்கள், பணத்தை கையாள்வதில்தான் ஊழல் உருவாகிறதாம். வங்கி அட்டைகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் அதற்கு இடம் இருக்காதாம். இதுவும் ஒரு அரசியல் கருத்தாக்கம் என்றுதான் நாம் கொள்ள வேண்டும். அந்த நிலை உருவாவதற்கான தோதுகள் நம்மிடம் இப்போது இல்லை என்பதுபோன்ற நடைமுறைகள்சார்ந்த சிக்கல்கள் எல்லாம் இருக்கின்றன. ஆதார் அட்டையை திணித்ததுபோல அந்த அட்டையையும் திணிக்கமுடியாதா எங்களால் எனவும் வினவுகின்றனர் . நீங்கள் நினைத்தால் எதையும் திணிக்கலாம். ஆனால் நீங்கள் கூறும் பயன்களை நினைத்தால் எப்படிச் சிரிப்பது என்றுதான் புரியவில்லை.

Kudangulam
கூடங்குளம் அணு உலை

இந்தியாவிலிருந்து வர்த்தகம் (Under Invoicing, Over Invoicing, Re – Invoicing) வாயிலாக வருடந்தோறும் வெளியே கொண்டுசெல்லப்படும் பல லட்சம் கோடி கருப்புப் பணம் ஸ்தூல ரூபாய் நோட்டுகளாக கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டவையல்ல. அனைத்தும் மின்னணு பரிமாற்றம் வழியாக நொடிப் பொழுதுகளில் வெளியேறியவைதான். ‘நான் செய்த இறக்குமதிக்காக இத்தனை கோடிகள் அந்த நாட்டுக்கு வழங்குகிறேன்’ எனக்கூறி சென்ற பணம்தானே இவ்வளவும். உண்மை இவ்வாறு இருக்க, மின்னணு பரிமாற்று முறை வந்தால் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என்று கூறுவதும், சத்தியம் செய்வதும் யாரை ஏமாற்ற? அப்படி ஒரு நிலை ஏற்படுமாயின் அதிலும் காசு பார்க்கலாம் என சில முதலாளிகளுக்கு நமது அரசு துணைபோவதெல்லாம் வேறு என்ன? உங்கள் பணம் வங்கியில் உள்ளது. மின் வாரியத்துக்கு நீங்கள் பணம் செலுத்த வங்கிகளின் மின்னணு பரிமாற்று முறையை பயன்படுத்தும்போது, நாம் ஒவ்வொருமுறையும் ஒரு சேவைக் கட்டணத்தையும் கூடுதலாக செலுத்த வேண்டும். இது பரவலாகும்போது அந்த பரிமாற்று முறையை நடத்துபவர்கள் எவ்வளவு பணம் பண்ணலாம் என்பதை எண்ணிப்பாருங்கள். அவர்கள் ஒரு சேவையை வழங்குகிறார்கள். அதற்கு ஒரு கட்டணம் என்ற வாதம் சரி என எடுத்துக் கொள்வோம். அதேசமயத்தில், ஒருவர் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் அதற்கு மாற்றுவழி கண்டிப்பாக இருக்க வேண்டும். உதாரணமாக, வெளிநாடுகளில் கட்டண சாலைகள் இருப்பதுபோல். நீங்கள் விரும்பினால் அதில் பயணிக்கலாம். இல்லையென்றால் கட்டணமில்லா சாலையில் அதற்கு இணையாகவும் பயணிக்கலாம். ஆனால் இங்கோ, கட்டணச் சாலையில் மட்டுமே பயணிக்கும் ஒரு கொள்ளைத் திட்டத்தை அரசே முன்னின்று செயல்படுத்துவது கவனத்தில் கொள்ளத்தக்கது. புதியதொரு அமைப்பு நம் நாட்டில் கொண்டுவரப்பட்டால் அதில் இருக்கும் வாய்ப்புகளை நீக்கிவிட்டு, நம்மை கட்டாயப்படுத்துவது என்பது இந்தியாவுக்கே உரித்தான ஒன்று. அதுதான் ‘Cashless Economy’ என்று கூறுபவர்கள் ‘ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத’ கதையை நமக்கு நினைவூட்டுகிறது.

பாசிச கோமாளி sliderதலைமை அமைச்சரின் கருப்புப் பணத்தின்மீதான போர் என்றும், Surgical Strike என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டு வரவேற்கப்படும் அறிவிப்பு, கள்ளப் பணத்தின் இந்தக் கூறை தொட்டுக்கூட பார்க்க முடியாது. அதனால்தான் வணிகப் பத்திரிகைகளில் கருத்து தெரிவிக்கும் பொருளாதார வல்லுநர்களும் நடுத்தர வர்க்கங்களின் அரைகுறை புரிதலைக்கூட முழுப் புரிதலாக காட்டிக்கொள்ளும் கணக்கர்கள், செய்தியாளர்களும் கூத்தாடி வருகிறார்கள். மக்களின் அவலங்களை சிறிய தியாகம் எனவும் எதிர்காலம் சிறக்கும் எனவும் பம்மாத்துக் கதைகளை கூறி வருகிறார்கள். நமது சமுதாயம் எவ்வாறு சீர்கெட்டுள்ளது என்பதற்கு இந்தப் புரிதலே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இதில் வெற்றிபெற்றவர்கள் யார்? இந்தப் புரிதலை பயன்படுத்திக்கொண்டு பல கோடானகோடி கருப்புப் பணம்பற்றி சிறு துரும்பைக்கூட அசைக்காத ஆளும் நடுவண் அரசு கள்ளப் பணத்துக்கு எதிரான போர் என மார்தட்டிக் கொள்வது எத்தகைய நடிப்பு என்பதை அறிந்துகொள்வோம்.

இந்தியாவிலிருந்து 2014ஆம் ஆண்டு வெளியேறிய கருப்புப் பணத்தின் அளவு ரூ.56.5 லட்சம் கோடி. இந்தியாவில் சுற்றில் உள்ள பணத்தின் அளவு ரூ.16 லட்சம் கோடி. அதில் ஏறத்தாழ ரூ.14 லட்சம் கோடி செல்லாததாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட பணத்தில் கருப்புப் பணம் என்பது நான்கில் ஒரு பங்கு என்று வைத்துக்கொண்டால்கூட ரூ.3.5 லட்சம் கோடி. ஒரு ஆண்டில் வெளியே கொண்டுசெல்லப்பட்ட பணம் ரூ.56.5 லட்சம் கோடி. எவ்வளவு கருப்புப் பணத்தை, நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன்வாயிலாக அழிக்கமுடியும்? உள்நாட்டில் நோட்டுகளாக உள்ள ஒரு சிறு பகுதியைத்தான் அழிக்க முடியும். மிகப்பெரும் பகுதி வெளியே அல்லவா உள்ளது. ஆக, இந்த அறிவிப்பின் உள் அரசியல் என்ன என்பது வெளிச்சம் ஆகிறது அல்லவா? கருப்புப் பணத்தை ஒழிக்காமலேயே, ஒழித்த மாவீரன் என்ற பிம்பம் மற்ற எல்லா தோல்விகளையும் மறைக்க பாஜக-வுக்கு இப்போது தேவை. அதற்கு பலிகடா எப்போதும்போல் சாமானியன். சாமானியனை காவு கொடுக்க கொள்கையளவில் துணைபோவது நடுத்தர வர்க்கம். கள்ளப் பணக்காரன் மோனாலிசா சிரிப்போடு கடந்துபோவது புலனாகிறதா? அவன் பணம்தான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முதலீடு செய்யப்பட்டுவிட்டதே! அவன் தூங்கவில்லை என்பது உண்மையாயின், கவலையால் இருக்காது; அந்த மகிழ்ச்சியால் இருக்கும்.

கட்டுரையாளர் குறிப்பு: ஜெ.ஜெயரஞ்சன் – சென்னை மாற்றுவளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் , புத்தகங்களிலும் வெளிவந்துள்ளன.

நன்றி :

 1. மணிகண்டன் போன்ற மோடியின் ரசிகர்களுக்கு எல்லாம் இந்த கட்டுரையின் சாராம்சம் புரியாதுங்க வினவு. மீண்டும் வந்து வாங்கிய காசுக்கு இந்திய மக்களுக்கு எதிராக அவர்கள் படும் துயரத்தை நியாயப்படுத்திக்கொண்டு கூவுவார்கள் மீண்டும் மீண்டும் ஊளையிடுவார்கள் பாருங்கள் !

 2. மணிகண்டன், கொஞ்சம் இணக்கமாக வாக்குவாதம் இன்றி பேசுவோமா?

  கோவில்களில் அனுமதிக்கப்படும் கருப்பு பணத்தை ஒழிக்க உண்டியல்களை தடை செய்ய வேண்டும் point of sale(POS) பரிவர்த்தனை இயந்திரங்கள் மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்று பொதுநல வழக்கு போட்டால் எடுபடுமா?
  —————————— *—————————–

  மோடி மக்களிடம் கருப்பு பணத்தை ஒழிக்க கோரும் மின்னணு பணபரிவர்த்தனைகளை கோவில்களில் இருந்து தொடங்கினால் என்ன? கருப்பு பணத்தை கண்காணிக்கத்தானே பான் கார்டு உள்ளது. அப்படி எனில் கோவில்களில் பக்தர்கள் உண்டியலில் பணம் போடும் பணப்பரிவர்த்தனைகளில் பான் கார்டு எண் மிக அவசியம் தானே? ஏன் இன்னும் கோவில்களில் பான் கார்டு நம்பரை அரசு கேட்காமல் இருக்கிறது?

  உண்டியல்களை தடை செய்துவிட்டு point of sale(POS) பரிவர்த்தனை இயந்திரங்கள் மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்று உயர் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நாம் வழக்கு தொடுத்தால் அது வெற்றிபெறும் தானே?

  வழக்கறிஞர்கள் யாரேனும் எனக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்க முடியுமா?

  • அது என்ன கோவில்? எல்லா மதக்கோவில் என்றூ தெளிவாக சொல்லலாமே. இந்து அறனிலையத்துறையில் என்னால் ஏகப்பட்ட மாற்று மதத்தினரை காட்டமுடியும், வேறு எந்த மதத்திலாவது அதன் கோவில் அதிகாரத்தில்.. ஒரே ஒரு ஹிந்துவை காட்ட முடியுமா????

   • நண்பரே தமிழ் நாட்டை பொறுத்தவரையில் தமிழ் மொழியில் கோவில் என்பது அல்லா கோவில் ,மாதா கோவில் , சிவன் கோவில் என்று எல்லாவற்றையும் குறிக்கும். எனவே உங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு முன் பொதுவில் கோவில்களில் வந்து விழும் கருப்பு பணத்தை பற்றி தான் நான் பேசுகிறேன். இது தொடர்பாக நிதி அமைசருக்கு கடிதமும் எழுதி உள்ளேன். அந்த கடிதத்தின் சாராம்சம்

    “கோவில்களில் அனுமதிக்கப்படும் கருப்பு பணத்தை ஒழிக்க உண்டியல்களை தடை செய்ய வேண்டும் point of sale(POS) பரிவர்த்தனை இயந்திரங்கள் மட்டுமே பான் கார்டு நம்பருடன் இணைத்து அனுமதிக்கவேண்டும்”

    கோவில் என்றால் அது அனைத்து மதத்தின் கோவில்களையும் தானே குறிக்கும். அப்படி இருக்க என் நடவடிக்கையில் உங்களுக்கு என்ன முரண்பாடு ,கருத்து வேறுபாடு என்று நான் தெரிந்து கொள்ளலாமா?என்று தெரிந்துக்கொள்ளலாமா? அந்த கடிதத்தையும் இங்கு இணைத்து உள்ளேன். படித்து தெளிவு பெறுங்கள்.
    To
    Honorable Finance Minister of India,
    134/North Block,
    New Delhi

    Respected Sir,
    Sub: Requesting for action to eradicate Black Money in temples reg.
    I support the invaluable actions of our Honorable Prime Minister against Black Money. We well know that people afford money in its Piggy bank in Temples without keeping any authentication. To support our prime minister in his plan to eliminate black money in our country, IT department should also eliminate black money in Temples. So kindly take action in Temples for people afford money to God only through any of the government approved digital money transaction systems like Point of Sale (PoS) or online transfer with PAN card number.
    Thanking you Sir,
    Yours Faithfully,

    K.Senthilkumaran

    Copy To :
    1. The Secretary (Revenue), Ministry of Finance, Department of Revenue, 128-A/North Block, New Delhi
    2. The Secretary (Financial Services), Ministry of Finance, Department of Financial services,3rd floor, JeevanDeep ,Building,Sansad Marg, New Delhi-110001

    • தோழா, எனது பதிலின் உட்கருத்து மதம் சார்ந்தது அல்ல. நீங்கள் சொல்வதுபோல், யார் கொடுத்தார்கள் என்பது இங்கு பிரச்சனை அல்ல, யார் வாங்கினார்கள் என்பதே. இந்து அறநிலையத்துறை சார்ந்த அனைத்து கோவில்களிலும் பெறப்படும் காணிக்கை (முடியை விற்றது முதல் சிறப்பு தரிசனம் வரையில்), ஏதாவது ஒரு வங்கியில் வைப்புநிதியாக வரவு வைக்கப்படும். ஆகையால் இந்த கோவில்கள் பெரும்பாலும் கருப்பை வென்மையாக்கும் ஸ்தலங்கலாகவே உள்ளது. ஆனால் இதே முறை மற்ற மத கோவில்களில் பின்பற்ற படுகிறதா???? ஆழ்ந்து சிந்தியுங்கள் நான் சொல்லும் கருத்து புரியும்.

  • காரிய கிறுக்கா இருக்கிங்களே மணிகண்டன்….! கோவில்களில் காணிக்கையாக செலுத்தப்படும் கருப்புப் பணத்தை தடுக்க வழி கூறினால் அதனை பற்றி நீங்கள் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் போனால் நன்றாகவா இருக்கிறது?

  • செந்தில் அவர்களே

   கோவில் உண்டியலில் சேரும் ப்ணம் பெரும்பாலும் மக்களுக்கு தான் பயண் தருகிரது.
   உண்மையில் பண வெறி பிடித்தவர்கள் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் அடுத்தவர்களுக்கு தாணமாக தறமாட்டார்கள்.
   ஊண்ன்டியல் பணம் எதோ ஒரு வகையில் வெள்ளையாக மாறுவதில் உஙளுக்கு ஏன் பொராமை?

 3. இந்த ஊழல் பற்றிய விரிவான கட்டுரையை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

 4. வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 99% கருப்புப் பணத்தைப் பற்றி மூச்சுக் கூட விடாமலிருக்கும் மோடி,ஜெட்லி கும்பல் மக்கள் கையில் இருக்கும் 1% பணத்தை கள்ள,கருப்புப் பணம் என்று சொல்லி பறிக்கிறது.இதை மோடி ஜால்ரா மேதைகளும்,திரை கிழிய விவாதம் நடத்தும் ஊடகங்களும் கள்ள மவுனத்தால் மறைக்கின்றனர்.வலைத் தளத்தில் பதிவிடும் மோடி பஜனை கோஷ்டிகள் சன்னதம் கொண்டு ஆடி உண்மையை மறைக்கின்றனர்.மோடி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துகிறாராம்.எப்படி?வலைத்தளம் வழியாக.92% மக்கள் மோடியின் துணிச்சலை ஆதரிக்கிறார்களாம். 2000 ரூ பணத்துக்காக பேங் வரிசையில் கால்கடுத்து நிற்கும் இந்தியன் மோடியின் துணிச்சலைப் பாராட்டுவதற்காக வரிசையை விட்டு விட்டு ஓடோடி வந்து மோடிக்கு ஓட்டுப் போடுகிறானாக்கும்.பஜனை பாடும் ,பலனடையும் அம்பிகள்தான் பல பெயர்களில் பதிவிடுகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.இதை வைத்துக்கொண்டுதான் பீத்துகிறார்கள்.தன்னைத்தானே மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுக் கொளுக்கட்டை என்று ஒரு பழமொழி மோடி கும்பலுக்குத் தான் கச்சிதமாகப் பொருந்துகிறது.மோடி,தாசர்கள் எடுக்கிற வாந்தியை அமிர்தமாக மாற்றி உண்ணும் ஊடகங்கள் இங்கே நிறையவே உண்டு.மானக்கேட்டையே முதல் மரியாதையாகச் சித்தரிக்கும் மோடி வித்தை என்பது இதுதான்.உண்மையை அறிந்திருப்பவர்களுக்கு இந்த சூழல் நரகலில் நிற்பது போல் அருவெறுக்கிறது.தூ!

  • கூலிப்படைகளும், வன்முறைவாதிகளும், தீவிரவாதிக்கு துணை போகிறவனும், ஒரு கையெழுத்துக்கு சாமனியனின் சட்டை வரை கேட்பவனும் ஸ்விஸ் வங்கியில் அதற்கான கூலியை வறவு வைக்கச்சொல்வதில்லை. இங்கேயே, இப்போதே என்று ரொக்கமாகத்தான் கேட்பான். ஸ்விஸ் வங்கியில் இருந்து கூட ஏதாவது ஒரு வகையில் வரி கட்டாமல் யாராலும் அதை பணமாக இங்கே கொண்டு வரமுடியாது. இங்கே இப்போது ஒழிக்கப்படும் 1%. வெளியில் உள்ள 99% இங்கு வரவே முடியாமல் பார்த்துக்கொள்ளும் அதே போல் சட்டம் ஒழுங்கையும் பார்த்துக்கொள்ளும் (இந்தியா முழுவது வன்முறை, கொலை மற்றும் தீவிரவாதம் குறைந்து வருவதே இதற்கு சான்று). அன்று இங்கிருக்கும் ஊழல் வியாதிகள் வெளியே சென்றால் மட்டுமே திருடிய பணத்தை அனுபவிக்க முடியும். போகட்டும் அப்படியாவது நாடு சுத்தமாகட்டும். ஆகிவிடும்.

   • Wait a little.Let us wait and watch the law and order situation when the daily wage earners lose their wages,when small roadside vendors shut their shops for want of money,when the SME sector close their industries,when workers in factories are laid off.According to a survey by CMIE published in The Hindu yesterday (26-11-2016)-page 15-due to the note-ban operation,wages lost by daily wage earners and factory workers in the 50 day period would be Rs15000 crores,the business enterprises would lose business worth Rs61500 crores,the RBI and the Central govt would spend Rs16800 crore for printing new notes and for distributing them,the banks would incur Rs35100 crore towards overheads for doing extra work.Thus at a cost Rs 1.28 lakh crore,the govt plan to corner black money worth just Rs 4000 crore only. It can be aptly described as MALAYAI KELLI YELIYAI PIDITTHAL.In the process,urban poor unemployment will go up from 7.18% to 7.37%.

  • India has a population of 125 crore.Out of these 125 crore people,only 5 lakhs people participated in the “modi app”.How can we take the support of 92%of 5 lakhs people as the support of entire country to Modi’s plan ?

 5. இந்தியாவில் உள்ள பிற மத கோவில்களுக்கும், பழங்கால தலைனகரங்களில் கட்டப்பட்ட ‘இந்து; கோவில்களுக்கும் வித்தியாசம் உள்ளது! பின்னது ஆளும் அரசனது கொள்ளையில் கட்டப்பட்டு, அரசு செல்வத்தை தங்கமாக பதுக்கி வைக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது ! செல்வந்தர் களிடமிருந்து பார்ப்பன புரோகிதர்களால் பிடுங்கப்பட்ட பணமும் இதில் சேரும்! ஆபத்து காலங்களில் பார்ப்பனருக்கு ஆபத்து காலங்களில், இந்த செல்வத்தை பயன்படுத்தி அரசையே மாற்ற முடியும்! இப்போது பார்ப்பன மடங்களும் அதைத்தான் செய்கின்றன ! கோவில்களும், மடங்களும் வெறும் வழிபாட்டு தலங்கள் அல்ல!

  • சிரிப்பாகத்தான் வருகிறது சகோதரா உங்கள் சரித்திர அறிவை எண்ணி… சிரிக்க வைத்தமைக்கு நன்றி

 6. Mayilvahanan நண்பரே !, கோவில்களில் உண்டியல் பணம் என்று வந்துவிட்டால் எல்லா கோவில்களிலுமே அங்கு வந்து விழும் பணம் கருப்புப் பணம் தானே?அந்த கருப்பு பணத்தை தடுக்க தான் நான் முயலுகின்றேனே தவிர மதம் சார்ந்து ஒரு குறிபிட்ட மதத்தின் பக்தர்களின் கருப்பு பணத்தை மட்டும் தட்டுக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லையே! வேளாங்கண்ணி மாதா கோவில் முதல் நாகூர் தர்க்காவில் இருந்தும் வல்லக்கோட்டை முருகன் கோவில் வரையில் உண்டியல்களில் கருப்பு பணம் விழத்தான் செய்கிறது. அதனை தடுக்க வேண்டும் என்று நிதி அமைச்சரகதுக்கு கடிதம் எழுதி உள்ளேன். அதில் உங்களுக்கு என்ன மாறுபாடு வேறுபாடு முரண்பாடு? என்னுடைய குரலுக்கு இந்திய அரசு செவி சாய்க்காவிட்டால் சென்னை அல்லது மதுரை உயர் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடருவேன்.

  ஆமாம் மோடியின் செல்லா நோட்டு திட்டம் இந்து மக்களுக்கு மட்டும் அல்லவே? அது போன்றது தான் இதுவும்…. உங்களுக்கு மத விவகாரங்களில் வேறு ஏதேனும் முரண்பாடுகள் இருக்குமாயின் மோடிக்கு கடிதம் எழுதுங்கள். பின்பு மத்திய மாநில அரசுகள் மீது வழக்கு தொடருங்கள். நான் மத விவகாரங்களில் உள் நுழைய போவது இல்லை.. காரணம் என் நோக்கம் objective வகைமையில் உள்ளது…,இந்த விசயத்தில் என் நோக்கமும் அதற்கான செயலும் கோவில்களில் கருப்பு பணத்தை ஒழிப்பது மட்டுமே!

  இந்து மத நம்பிக்கைகள் மிக்க உள்ள எனது வழக்கரிஞர் என்ன கூறினார் என்றால் இந்து அர நிலை துறைக்கும் ஒரு கடிதம் எழுதுங்கள் என்று. அவருக்கும் நான் மறுப்பு தெரிவித்து நிதி அமைச்சரக்த்துக்கு மட்டுமே எழுதுவேன் என்று கண்டிப்புடன் கூறிவிட்டேன். காரணம் நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தின் கருப்பு பணத்தை மட்டும் குறி வைக்கவேண்டும் என்று கேள்வி கேட்டேன். அவரும் என்னுடைய எண்ணத்தை சரி என்றே பாராட்டினார். அப்ப நீங்கள் ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க