Monday, December 29, 2025
நாள்: டிசம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை; காலை 10 மணி | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை. | அனைவரும் வாரீர்!
நாள்: டிசம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை; காலை 10 மணி | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை. | அனைவரும் வாரீர்!
சாதி ஒழிப்புப் போராட்டத்தில் சாதி மறுப்பு மணங்களின் பங்களிப்பையும், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களை முன்னிறுத்த வேண்டிய தேவையையும் இந்நூல் வலியுறுத்துகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆதிக்கச் சாதி வெறியாட்டங்கள், சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரித்துவரும் இவ்வேளையில் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான மாற்றுப் பண்பாட்டை நிறுவ வேண்டிய அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது.
டிசம்பர் 28 அன்று மதுரையில் நடைபெற உள்ள தோழர்கள் ராதிகா - ரவி சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவில், மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக இந்நூல் வெளியிடப்பட உள்ளது.
டிசம்பர் 28 அன்று மதுரையில் நடைபெற உள்ள தோழர்கள் ராதிகா - ரவி சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவில், புதிய ஜனநாயகம் பதிப்பகம் சார்பாக இந்நூல் வெளியிடப்பட உள்ளது.
“சாதி-மதம் கடந்து காதலிக்க, மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்கிற முழக்கத்தின் கீழ் டிசம்பர் 28 அன்று நடைபெறவுள்ள தோழர்கள் ராதிகா, ரவி ஆகியோரின் புரட்சிகர மணவிழா பேனர்கள் உயர் தெளிவுத் திறனுடன் (ஹை ரெசொலூஷன் – High Resolution) கீழ்க்கண்ட இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படத்திற்கும் கீழே உள்ள இணைப்புகளை சொடுக்கி படங்களை தரவிறக்கம் செய்து...
“பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடைதான் வழங்கப்படுகிறது. அதனையும் சாதிக்கு ஏற்றாற்போல் வழங்க வேண்டியதுதானே? அருந்ததியர் சமூகத்தில் பிறந்தது தீண்டாமையா?” என்று பணிநீக்கம் செய்யப்பட்ட நிரோஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான நமது போராட்டமென்பது, “சாதி-மதம் கடந்து காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தின் கீழ், பண்பாட்டுப் போராட்டமாக அமையட்டும். சாதி ஒழிப்புப் போராட்டத்தை இத்திசையில் தொடங்கி முன்னெடுப்போம்! இந்தப் பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுகமாக தோழர்கள் ராதிகா - ரவி மணவிழாவை அமைத்துள்ளோம்.
பள்ளிக் கட்டடங்கள் நல்ல நிலையில்தான் உள்ளனவா என்பது முறையாகச் சோதிக்கப்படவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் சேதமடைந்த கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. முன்பே ஆய்வு செய்து இவற்றை புனரமைத்திருந்தால், மாணவனின் உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும்.
கேரள சர்வதேச திரைப்பட விழா (IFFK): 19 திரைப்படங்களுக்குத் தடை விதித்த பாசிச கும்பல் https://youtu.be/B3x0orXyNVs காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இந்த மணவிழாவிற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அனைவரும் பங்கேற்குமாறு மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக அழைக்கிறோம்.
திரையிடாமல் நிறுத்தப்பட்ட 19 திரைப்படங்களில் பாலஸ்தீனம் தொடர்பான நான்கு திரைப்படங்கள், ரசிய புரட்சி பற்றிய படமான போர்க்கப்பல் பொதம்கின், ஸ்பானிஸ் படமான பீப் ஆகியன மிகவும் முக்கியமானவை. ஒன்றிய மோடி அரசு தனது பாசிச நடவடிக்கைகளின் மூலம் ஜனநாயக வெளி முழுவதையும் ஒழித்துக் கட்டும் வேலையில் மும்மரமாக இறங்கியுள்ளது.
வழக்கமான குல தெய்வங்களைப் போல், குலத்திற்கான குறியீடுகளாகவோ குலப் பெருமைக்கான அடையாளங்களாகவோ ஆணவப்படுகொலைக்கு பலியானவர்கள் இங்கு முன்னிறுத்தப்படவில்லை. மாறாக, பார்ப்பனிய – சாதிய எதிர்ப்பின் குறியீடுகளாக அடையாளங்களாக இவர்களை முன்னிறுத்துகிறோம்.
நான்கரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருடம் மருத்துவப் பயிற்சியை முடிக்கும் எம்.பி.பி.எஸ். மற்றும் ஆயுஷ் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களாக பணியாற்றவோ, மருத்துவராகப் பதிவு செய்யவோ வேண்டுமானால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற அநீதியான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
15 பேருடன் வந்த பெண்ணின் உறவினர்கள், விடுதிக்குள் புகுந்து கொலைவெறியுடன் ராகுலை வெட்டியுள்ளனர். தடுக்க வந்த அவரது அம்மா, அப்பா, மாமா ஆகியோரரையும் கொடூரமாக வெட்டிவிட்டு, அப்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அண்மை பதிவுகள்