Thursday, November 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 40

தமிழ்நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடும் பா.ஜ.க.! அதற்கு அடித்தளமிடும் தி.மு.க.!

டந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரையடுத்த கீழ்மிடாலம், மிடாலம், இணையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் 1,144 ஏக்கர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கத்தை அமைக்க ஒன்றிய மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியது. மணவாளக்குறிச்சியில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு (Indian Rare Earths Limited) தேவையான மூலப்பொருட்களை சூறையாடும் நோக்கத்துடனே இந்தச் சுரங்கத்தை அமைக்க பாசிச மோடி அரசு திட்டமிட்டுள்ளது.
அதேபோல், கடந்த நவம்பர் மாதத்தில் கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து தென்மேற்காக 50 நாட்டிக்கல் மைல் தொலைவில் அமைந்துள்ள படுகைக் கரையில் (Wadge Bank) 32,485 சதுர கி.மீ. பரப்பளவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஒன்றிய மோடி அரசு ஏலம் விட்டுள்ளது. சுமார் 200 வகையான மீன்கள் வாழும் இப்பகுதியானது மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதரம் பறிக்கப்படுவதுடன், அங்குள்ள மீன் இனங்கள் முற்றிலும் அழிந்துபோகும்.

எல்லாவற்றிருக்கும் உச்சமாக, நவம்பர் மாதத்தில் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாபட்டியில் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய மோடி அரசு ஏலம் விட்டது. பத்துக்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளை அழிக்கக்கூடிய இந்த நாசகரத் திட்டம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சுட்டுக்கொன்ற கொலைகார வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை அழித்து, மண்ணுக்கடியில் புதைந்திருக்கும் கனிம வளங்களையும், எரிப்பொருட்களையும் அம்பானி-அதானி-அகர்வால் கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கான பாசிச மோடி அரசின் நாசகரத் திட்டங்கள் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து வருகின்றன.
தமிழ்நாட்டை ஆட்சி செய்துவரும் தி.மு.க. அரசானது மதுரை அரிட்டாபட்டியில் வேதாந்தாவின் டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க விடமாட்டோம்; சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்துள்ளது.

ஆனால், அதேசமயம் கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதை தி.மு.க. எதிர்க்கவில்லை. மாறாக, மோடி அரசுடன் சேர்ந்துக் கொண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் அக்டோபர் ஒன்றாம் தேதி மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த முயன்றது. மக்கள் எதிர்ப்பினால் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல், கன்னியாகுமரி படுகைக் கரையில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு தி.மு.க. அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இன்னும் எந்த செய்தியும் வெளியாகவில்லை.

இதன்மூலம் இவ்விரு நாசகரத் திட்டங்களையும் செயல்படுத்த மோடி அரசுக்கு தி.மு.க. துணைநிற்பது அம்பலமாகிறது. டங்ஸ்டன் சுரங்கத்திற்கெதிரான தி.மு.க. அரசின் நடவடிக்கைகளும் கொலைகார வேதாந்தா நிறுவனம் மீதான தமிழ்நாடு மக்களின் எதிர்ப்புணர்வும் மக்கள் போரட்டமும் தங்களுக்கெதிராக திரும்பிடக் கூடாது என்ற அச்சத்தினால்தான் முன்னெடுக்கப்படுகிறது.


படிக்க: சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசு!


தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் பாதிக்கும் மோடி அரசின் நாசகரத் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று பேசிக்கொண்டே தி.மு.க. அரசு அதனை நைச்சியமாக செயல்படுத்தி வருகிறது. மற்றொருபுறம், தனது ஆட்சி அதிகாரத்தின் மூலம் தமிழ்நாட்டை கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிடும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

சான்றாக, ஒருபுறம் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் எண்ணூர் பகுதியில் புதியதாக 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல்மின் நிலையத்தை அமைப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தை டிசம்பர் 20 அன்று அறிவித்துள்ளது தி.மு.க. அரசு. ஏற்கனெவே பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நெருக்கமாக வசிக்கும் இப்பகுதியில் தொழிற்சாலைகளினால் ஏற்படும் காற்று மற்றும் நீர்நிலைகள் மாசுபாட்டிற்கு எதிராக மக்கள் போராடிவரும் நிலையில் அதை துளியும் மதிக்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே தி.மு.க. அரசு நடந்துகொள்கிறது.

2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவது என்று இலக்கு நிர்ணயித்துக்கொண்டு தமிழ்நாட்டின் நீர்வளத்தையும் நிலவளத்தையும் கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கான வேலைகளில் தி.மு.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நாட்டில் உள்ள பிற மாநில அரசுகளுடன் போட்டிபோட்டுக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரியிறைத்து, நாசகர சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழ்நாட்டை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றி வருகிறது.

இந்தப் போக்கை மேலும் துரிதப்படுத்துவதற்காக தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான) சட்டம் 2023-யை அமல்படுத்துவதற்கான சட்டவிதிகளை கடந்த அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி அரசிதழில் தி.மு.க. அரசு வெளியிட்டது.
கார்ப்பரேட் நல திட்டங்களுக்காக மக்களிடமிருந்து விவசாய நிலங்களை அபகரிப்பதற்காகவும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதற்காகவும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட இச்சட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எந்தவொரு விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் அளித்தார்.

இருப்பினும் விவசாயிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பின் காரணமாக ஓர் ஆண்டுகாலமாக சட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்திருந்த தி.மு.க. அரசு, தற்போது நைச்சியமாக அமலுக்கு கொண்டுவந்துள்ளது.

இதேபோல், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நாசகர நடவடிக்கைகளுக்கு எதிராக போராடிவரும் மக்களின் மீதும் தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டுவதற்காக போராடும் சாம்சங் தொழிலாளர்களின் மீதும் கடுமையாக ஒடுக்குமுறை செலுத்துகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் சிப்காட் அமைவதை எதிர்த்து 400 நாட்களுக்கு மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தது தி.மு.க அரசு.அதேபோல், பரந்தூரில் விமான நிலையம் அமைவதை எதிர்த்து 800 நாட்களுக்கு மேலாக பல்வேறு கட்டப் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டை விட்டு வெளியேறப்போவதாக அறிவித்தும் கூட அம்மக்களின் கோரிக்கைக்கு துளியும் தி.மு.க. செவிமடுக்கவில்லை. மாறாக பரந்தூர் கிராமத்திற்குள் யாரையும் அனுமதிக்காமல் அம்மக்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை செலுத்தி வருகிறது.


படிக்க: பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய மறுக்கும் தி.மு.க. அரசு


இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி பகுதியில் மீன்கழிவு ஆலைக்கு எதிராக போராடிவரும் மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்காமல் அவர்கள் மீதும் ஒடுக்குமுறை செலுத்தி வருகிறது.

ஒருபுறம் ஒன்றியத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. கும்பல் தமிழ்நாட்டிலுள்ள கனிமவளங்களை கொள்ளையடிப்பதற்காக பல்வேறு நாசகரத் திட்டங்களை அறிவித்து வருகிறது. மறுபுறம் ஒன்றிய அரசின் திட்டங்களை எதிர்ப்பதாகக் கூறும் தி.மு.க. அரசு மறைமுகமாக அத்திட்டங்களுக்கு துணைநிற்பதும், கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக போராடும் மக்கள், தொழிலாளர்கள் மீது ஒடுக்குமுறைகளை செலுத்திவருகிறது. நில ஒருங்கிணைப்புச் சட்டம் உள்ளிட்டு தி.மு.க. அரசின் இத்தகைய கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள் என்பது பாசிச பா.ஜ.க. தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள சாதகமாகவே அமையும்.

ஏனெனில், பார்ப்பனிய-இந்துத்துவ ஊடுருவல் மட்டுமின்றி மோடி அரசின் கார்ப்பரேட் நாசகரத் திட்டங்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமிப்பதும், அதானிக்கு சேவை செய்வதும் பாசிச ஊடுருவலின் ஓர் அங்கமே. ஆகவே, தமிழ்நாட்டில் பாசிச ஊடுருவலை உறுதியாக எதிர்த்துவரும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் தி.மு.க-வின் இத்தகைய கார்ப்பரேட் ஆதரவு செயல்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். ஏனெனில், தி.மு.க-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதன் மூலம் அல்ல, அதன் காவி-கார்ப்பரேட் சமரச கொள்கை-போக்குகளை கைவிடச்செய்து, மக்கள்நலத் திட்டத்தை ஏற்க வைப்பதன் மூலமே தமிழ்நாட்டில் பாசிசக் கும்பல் வளர்வதை தடுத்துநிறுத்த முடியும்.


சிவராமன்
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



பழங்குடியின மக்கள் போராளி ஸ்டேன் சுவாமி பயங்கரவாதியா?

09.12.2024

பழங்குடியின மக்கள் போராளி ஸ்டேன் சுவாமி பயங்கரவாதியா?
பாசிச பாஜகவின் கருத்தை வாந்தி எடுக்கும் திமுக அரசு!

கண்டன அறிக்கை

பாசிச பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் தனக்கு சொந்தமான தோட்டத்தில் பழங்குடியின மக்களின் போராளி ஸ்டேன் சுவாமி அவர்களின் சிலையை வைக்க முயன்றதை தடுத்துள்ளது தமிழ்நாடு போலீசு.

இதற்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணையின் போது, ஸ்டேன் சுவாமி நக்சல்பாரிகளுடனும் மாவோஸ்டுகளிடமும் தொடர்பு கொண்டவரென்றும் அவர் சிலையை நிறுவினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது .

மேலும் தருமபுரியில் சமீபத்தில் பழங்குடி கிராமங்கள் அரசின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் எதிர்க்கும் சமூக விரோதிகளுக்கான சொர்க்கபுரியாக மாறி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தில் எந்த ஒரு சிலையையும் வைக்க யாருடைய அனுமதியையும் வாங்க தேவையில்லை. அந்த ஒரு சிறிய உரிமையை கூட மறுத்த திமுக அரசு, மேற்கண்ட படி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்படாத ஒருவரை நக்சல் தொடர்பில் இருந்தவர் என்று கூறக்கூடாது என்று தெரிவித்த நீதிமன்றம், சிலை வைப்பதற்கான அனுமதியைக் கொடுத்துள்ளது.

பழங்குடியின மக்களுக்காகப் போராடிய அறிவுஜீவிகளை பொய்யாக பீமா கோரேகான் வழக்கில் கைது செய்து, நடுக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டு தண்ணீரைக்கூட உறிஞ்சிக் குடிக்க முடியாத முதியவரான அவருக்கு பிணைக் கொடுக்காமலே உயிர்ப்பலி வாங்கியது மோடி அரசு .

ஆனந்த் தெல்தும்டே, சுதாபரத்வாஜ் , வரவர ராவ் போன்ற மக்களுக்காக போராடிய அறிவுஜீவிகளை சிறையில் அடைத்து மருத்துவ உதவிகள் எதுவும் வழங்காமல் சித்திரவதை செய்தது பாசிச மோடி அரசு.

இப்பிரச்சனையில், ஸ்டேன் சுவாமியை பயங்கரவாதி என்று முத்திரை குத்தி பிணை கொடுக்க மறுத்த பாசிச பிஜேபியின் அரசுக்கும் ஸ்டேன் சாமியை பயங்கரவாதி என்று நீதிமன்றத்தில் உரைத்த திமுக அரசுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?

ஊழல்வாதிகளுக்கும் மக்கள் விரோதிகளுக்கும் ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கும் சிலை வைக்க அனுமதி மறுக்காத தமிழ்நாடு அரசு ஸ்டேன் சுவாமி சிலைக்கு அனுமதி மறுத்தது என்பது தமிழ்நாட்டின் பாசிச பா.ஜ.கவுக்கு எதிரான உணர்வை சிதைப்பதாகும். மேலும் பாசிச பாஜக அரசுக்கு ஆதரவான செயல்பாடும் ஆகும்.

திமுக அரசின் இந்த நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் ஸ்டேன்சுவாமி போன்ற மக்களுக்காக போராடியவர்களுக்கான உரிய மரியாதையை தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



காசா முதல் மணிப்பூர் வரை தொடரும் மனித உரிமை மீறல்கள் | தோழர் மாறன்

காசா முதல் மணிப்பூர் வரை
தொடரும் மனித உரிமை மீறல்கள்
Dec10 சர்வதேச மனித உரிமைகள் நாள்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2024 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0


இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள்: எதிர்பாராதது என்பது அயோக்கியத்தனம்
  • மகாராஷ்டிரா தேர்தல் முடிவு: ‘எதிர்க்கட்சிகள் முக்த் பாரத்’ ஒரு முன்னோட்டம்
  • ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க-வை தோல்வியுறச் செய்தது எது?
  • பெருகி வரும் இணையக் குற்றங்கள்: தரவுகளைப் பண்டமாக்கும் கார்ப்பரேட் இலாபவெறியே ஆணிவேர்!
  • மதுரை அரிட்டாபட்டி: மோடி – அகர்வால் கும்பலுக்கெதிரான மக்கள் போராட்டம்!
  • தமிழ்நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடும் பா.ஜ.க.! அதற்கு அடித்தளமிடும் தி.மு.க.!
  • அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப் – மஸ்க் கும்பலின் வெற்றியும் விளைவுகளும்!
  • இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு (1925 – 2004) | தியாகங்கள் உரமாகின்றன, சமுதாய மாற்றத்திற்கு வித்திடுகின்றன!
  • போபால் விசவாயு கசிவு: 40 ஆண்டுகளாகியும் மறுக்கப்படும் நீதி
  • விவசாயத் தரவுகள் டிஜிட்டல்மயமாக்கம்: விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்கத் துடிக்கும் மோடி அரசு
  • அமேசான் நிறுவனத்தைத் திணறடித்த “பிளாக் ஃப்ரைடே” வேலை நிறுத்தப் போராட்டங்கள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



யு.ஜி.சி-இன் மாணவர் விரோதமான புதிய விதிமுறைகளை திரும்பப் பெறு!

09.12.2024

யு.ஜி.சி-இன் மாணவர் விரோதமான புதிய விதிமுறைகளை திரும்பப் பெறு! மக்கள் அதிகாரம் கண்டனம்

இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அம்சங்களுக்கு புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (UGC – University Grants Commision) வெளியிட்டுள்ளது.

மருத்துவப் படிப்பை தொடர்ந்து பட்டப்படிப்பில் சேர இனி நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று யு.ஜி.சி. அறிவித்துள்ளது. தகுதி எனும் பெயரில் பல மாணவர்களின் உயிர்களை குடித்துக் கொண்டிருக்கும் நீட் நுழைவுத் தேர்வை தொடர்ந்து பட்டப்படிப்பிலும் நுழைவுத் தேர்வு புகுத்தப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் (05.12.2024) அன்று வெளியிடப்பட்ட யு.ஜி.சி. வரைவு (UGC Draft) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

  1. மாணவர்களுக்கான நெகிழ்வுத் தன்மை (Flexibility for students):

    பன்னிரண்டாம் வகுப்பில் எந்த பாடப்பிரிவை எடுத்தாலும், இளங்கலை செல்லும்போது மாணவர்கள் தாங்கள் விரும்பும் துறையை தேர்வு செய்துகொள்ளலாம். அதே போல் இளங்கலையில் எதைப் படித்திருந்தாலும், முதுகலை மேற்கொள்வதாயின் எந்த ஒரு துறையையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனைக் கேட்டவுடன், மாணவர்கள் தாங்கள் விரும்பும் துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஓர் அரிய வாய்ப்பாக இது அமையும் என்று தோன்றும். ஆனால், கூர்ந்து கவனித்தால் இந்த திட்டத்தின் பின் மறைந்திருக்கும் பேரபாயத்தை நாம் உணரலாம்.

    பல்கலைக்கழக அல்லது தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே உயர்கல்வி பயில முடியும் என்பதே இதன் உள்நோக்கம். எனவே நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் இடம்பெறும் மாணவர்கள் மட்டுமே தங்களுக்கு விருப்பமான எந்த ஒரு துறையையும் எடுத்து படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    தேசிய தேர்வு முகமை (National Testing Agency) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன்மூலம் நுழைவுத் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வரைவு குறிப்படுகிறது. இந்த விதிமுறையானது 14 ஆண்டுகள் பயிலும் பள்ளிக்கல்வியின் மதிப்பைக் குறைத்து, பயிற்சி மையங்கள் (Coaching centres) அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். ஏற்கனவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் ஏழை மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்தால், இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிக்கும், ஏழைகள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், பள்ளிகளைவிட பயிற்சி மையங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த திட்டம் பயிற்சி மையங்களை நடத்தும் கோட்டா நகரத்தில் உள்ளதை போன்ற கார்ப்பரேட்களின் வளர்ச்சிக்கு வித்திடுமே தவிர மாணவர்களின் கற்றலில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதே நிதர்சனம்.

  1. பன்முறை நுழைவு மற்றும் வெளியேறல் வழங்குமுறை (Provision of multiple entry and exit) கல்லூரி மாணவர் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம், எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என்ற திட்டத்தை வரைவு முன்வைக்கிறது. முதலாம் ஆண்டில் தேர்ச்சிப் பெறாவிட்டாலும் இரண்டாம் ஆண்டு படிப்பைத் தொடரலாம் என்பதே தற்போதைய நடைமுறையில் உள்ளது. எனினும் இந்த வரைவு நடைமுறைப்படுத்தப்பட்டால், முதலாம் ஆண்டில் தோல்வியடையும் மாணவர் இரண்டாம் ஆண்டிற்குச் செல்ல தகுதியற்றவராகக் கருதப்பட்டு, முதலாம் ஆண்டு படிப்பிற்கான சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டு வெளியேற்றப்படுவார். அதேபோல் இரண்டாம் ஆண்டில் தேர்ச்சிப் பெறவில்லையெனில் பட்டயப்படிப்பு (Diploma) வழங்கப்பட்டு வெளியேற்றப்படுவார். மேலும் மூன்றாம் ஆண்டில் தோல்வியடைந்தால் பட்டமும் (Degree), நான்காம் ஆண்டில் தேர்ச்சிப் பெறுபவர்களுக்கு ஹானர்ஸ் பட்டமும் (Degree with Honours) வழங்கப்படும் என்று யு.ஜி.சி வெளியிட்டுள்ள வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை-நடுத்தர குடும்பப் பின்னணியிலிருந்து வரும் மாணவன் ஒருவன், இடைநிற்றலை எதிர்க்கொண்டு மீண்டும் படிக்க வருவதில் உள்ள உளவியல், சமூக, பொருளாதார சிக்கல்கள் எவற்றையும் கணக்கில் கொள்ளாமல் திட்டமிட்டே இந்த விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களை பாட சாலைகளிலிருந்து விரட்டியடித்து மீண்டும் குலக்கல்வி முறையை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது பாசிசக் கும்பல்.
  2. ஆண்டுக்கு 2 முறை சேர்க்கை (Biannual admission)

    தற்போது கல்லூரிகளில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அடுத்த கல்வியாண்டிலிருந்து ஆண்டுக்கு இரு முறை, அதாவது ஜூலை /ஆகஸ்ட் மாதங்களில் மற்றும் ஜனவரி / பிப்ரவரி மாதங்களில் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், உயர்கல்வி சேர்க்கை இனி பின்பற்றப்படும் என்றும் வரைவு குறிப்பிடுகிறது.

  1. குறைந்தபட்ச வருகைப் பதிவே போதும் (Minimum attendance requirement)

    புதிய கல்விக் கொள்கையால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு கற்றல் முறைகள் மற்றும் முழுமையான மற்றும் பலதரப்பட்ட கற்றல் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் தன்னாட்சி அமைப்புகளின் ஒப்புதலுடன் வெவ்வேறு திட்டங்களில் மாணவர்களின் குறைந்தபட்ச வருகைத் தேவையை தீர்மானிக்கலாம் என்று யு.ஜி.சி பரிந்துரைத்துள்ளது.

யு.ஜி.சி. வெளியிட்டுள்ள இந்த வரைவு அறிக்கையின் உள்ளடக்கம் வரும் 2025-2026 கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தேசியக் கல்விக் கொள்கை 2019-இன் கூறுகளை பல்வேறு மாநிலங்களிலுள்ள கல்வி நிறுவனங்களில் மறைமுகமாக நடைமுறைப்படுத்திவரும் நிலையில், இந்த அறிவிப்பானது ஒட்டுமொத்த இந்திய கல்வித்துறையையும் சீரழித்து காவி-கார்ப்பரேட் கும்பலிடம் தாரைவார்க்கும் நடவடிக்கையே ஆகும்.

ஏழை-நடுத்தர மாணவர்களை கல்விக்கூடங்களில் இருந்து விரட்டி அடித்து மீண்டும் குலக்கல்வியை கொண்டு வருவதும், பயிற்சி வகுப்புகள் எனும் பெயரில் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கவுமே பாசிச மோடி அரசால் இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது.

கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் பாசிசக் கும்பலின் இந்த திட்டத்தை எதிர்த்து மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும்!

இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பிற்கு பதிலாக பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்னும் மாற்றை முன்வைத்து ஒருங்கிணைந்த போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிசக் கும்பலை வீழ்த்தி மக்களுக்கான அதிகாரத்தை நிலைநாட்ட முடியும்.


தகவல்
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்,
9385353605.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



பொட்டலூரணி கிராம மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய குமுதம் ரிப்போர்ட்டர்

08.12.2024

பொட்டலூரணி கிராம மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகைக்கு கண்டனம்!

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தை சுற்றியுள்ள கழிவு மீன் ஆலைக்கு எதிரான போராட்டத்தையும் போராடும் ஊர் மக்களையும் கொச்சைப்படுத்தி பொய் செய்திகளை பரப்பிய குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையை நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்கு உட்பட்ட பொட்டலூரணி கிராம மக்கள் தங்களுடைய கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள கழிவு மீன் நிறுவனங்களை நிரந்தரமாக அகற்றக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலைக்கூட புறக்கணித்து போராடியிருக்கிறார்கள். அடுத்தக் கட்டமாக எந்த வகையில் போராட்டத்தை எடுத்துச் செல்வது  உட்பட அனைத்து விவகாரங்களும் அந்த ஊர் மக்கள் கூடி போராட்டக் குழு ஒன்று அமைத்து முடிவெடுக்கின்றனர். சாதி, மதம் கடந்து ஊர் மக்கள் அனைவரும் ஒற்றைக் கருத்துடன் திரண்டு கழிவு மீன் ஆலைக்கு எதிராக போராடி வருகின்றனர்.

மீன் எண்ணெய் தயாரிப்பில் ஒரு தொழிற்சாலை பின்பற்ற வேண்டிய குறைந்தபட்ச விதிமுறைகளை கூட (ஆலை பெயர் பட்டியல்) கடைபிடிக்காத கழிவு மீன் ஆலைகள், ஊர் மக்கள் நடத்திவரும் தொடர் போராட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது. இந்த கழிவு மீன் ஆலைக்கு ஆதரவாக அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் ஒருசேர நின்று போராட்டத்தை கடுமையாக ஒடுக்குகின்றனர்.

இந்நிலையில், உண்மையை வெளிஉலகிற்கு கொண்டுவர வேண்டிய பத்திரிகைகள் கழிவு மீன் ஆலைக்கு ஆதரவாக எழுதுவது பொட்டலூரணி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகும்.

இவ்வாறு கொச்சைப்படுத்தும் வேலையைத்தான் குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் செய்துள்ளது. “மீண்டும் போராட்டக் களமாகிறதா தூத்துக்குடி? மீன் எண்ணெய் ஆலைக்கு எதிராக போர் மேகங்கள்!” என்று தலைப்பிட்டு இம்மாத குமுதம்  இதழில் வெளிவந்துள்ள கட்டுரை பொட்டலூரணி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, கழிவு மின் ஆலைக்கு ஆதரவான மனநிலையை உருவாக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இது அம்மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆலைக்கு ஆதரவான நபர்களிடம் கருத்துக்கேட்டு “இந்த அலைகளால் எந்த பாதிப்பும் இல்லை. கழிவு மீன் ஆலைகள் போராட்டத்தை சில வன்முறையாளர்கள் தூண்டுகிறார்கள்” என போராடும் மக்களை இழிவுப்படுத்தி ஆலைக்கு ஆதரவான மனநிலையை ஏற்படுத்தும் விதமாக எழுதியுள்ளது. ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது கொலைகார வேதாந்தா எவ்வாறு அவதூறுகளை பரப்பி கொச்சைப்படுத்தியதோ, அதேபோன்று பொட்டலூரணி கிராம மக்கள் மீதும் பொய் அவதூறுகளை பரப்பும் ஆலை நிர்வாகத்திற்கு ஊதுகுழலாக குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் செயல்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் போராளிகளையும் இழிவுப்படுத்தியுள்ளது.

அதேசமயம், இந்த கட்டுரையில் ஆலைக்கு எதிராக போராடும் மக்களின் உண்மையான பிரச்சினைகளை பற்றியும், போராடும் முன்னணியாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் பற்றியும், தொடர்ச்சியாக அவர்களை அச்சுறுத்தும் மாவட்ட நிர்வாகம் பற்றியும் எந்த செய்தியும் இடம் பெறவில்லை. இந்த ஊர் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு எந்த ஆர்ப்பாட்ட அனுமதியும் அரசு வழங்காததை கண்டித்து ஒரு வரி கூட இல்லை.

உழைக்கும் மக்கள் தங்களுடைய உரிமைக்காக போராடினால் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வக்கற்ற அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் போராடும் மக்களையும் அமைப்புகளையும் அவதூறு செய்வது என்பது ஸ்டெர்லைட் போராட்டம் தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இதற்கு ஆதரவாகவே ஊடகங்களும் செயல்படுகின்றன.

தமிழ்நாடு அரசே
பொட்டலூரணி ஊர் மக்களின் கோரிக்கைக்கு செவி மடு.!

காவல்துறையே
போராடும் மக்கள் மீது பொய் வழக்கு புனையாதே.!

மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையை வன்மையாக கண்டிக்கிறோம்!


தகவல்
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்,
9385353605.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



சென்னை பல்கலைக்கழக மாணவிகளுக்கு மறுக்கப்படும் மகளிர் விடுதிகள்

சென்னை பல்கலைக்கழக மாணவிகளுக்கு மறுக்கப்படும் மகளிர் விடுதிகள்

தோழர் தீரன் | புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



டெல்லி சலோ:வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம்! | தோழர் தீரன்

டெல்லி சலோ: வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம்!
தோழர் தீரன் | புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் டிசம்பர் 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள்: எதிர்பாராதது என்பது அயோக்கியத்தனம்
  • மகாராஷ்டிரா தேர்தல் முடிவு: ‘எதிர்க்கட்சிகள் முக்த் பாரத்’ ஒரு முன்னோட்டம்
  • ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க-வை தோல்வியுறச் செய்தது எது?
  • பெருகி வரும் இணையக் குற்றங்கள்: தரவுகளைப் பண்டமாக்கும் கார்ப்பரேட் இலாபவெறியே ஆணிவேர்!
  • மதுரை அரிட்டாபட்டி: மோடி – அகர்வால் கும்பலுக்கெதிரான மக்கள் போராட்டம்!
  • தமிழ்நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடும் பா.ஜ.க.! அதற்கு அடித்தளமிடும் தி.மு.க.!
  • அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப் – மஸ்க் கும்பலின் வெற்றியும் விளைவுகளும்!
  • இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு (1925 – 2004) | தியாகங்கள் உரமாகின்றன, சமுதாய மாற்றத்திற்கு வித்திடுகின்றன!
  • போபால் விசவாயு கசிவு: 40 ஆண்டுகளாகியும் மறுக்கப்படும் நீதி
  • விவசாயத் தரவுகள் டிஜிட்டல்மயமாக்கம்: விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்கத் துடிக்கும் மோடி அரசு
  • அமேசான் நிறுவனத்தைத் திணறடித்த “பிளாக் ஃப்ரைடே” வேலை நிறுத்தப் போராட்டங்கள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



அம்பேத்கர் மதம் மாறியது ஏன்? | மீள்பதிவு

ம்பேத்கரை அபகரிக்க அன்று முதல் இன்று வரை காவி பயங்கரவாத கும்பல் முயன்று வருகிறது. அவர்களுடைய புரட்டுகளை அம்பலப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள “புதிய கலாச்சாரம்” இதழில் வெளிவந்த கட்டுரையை தற்போது மீள்பதிவு செய்கிறோம்.

***

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 3

அம்பேத்கர் ஏன் புத்த மதத்திற்கு மாறினார்?

 

அம்பேத்கர் மஹர்எனப்படும், சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பிரிவில் பிறந்தார். மஹர்பிரிவு மக்களுக்குச் சிறந்த போர்க்குணங்கள் உண்டு. ஆனால், கல்வியறிவு கிடையாது. அதன் காரணமாகவே அவர்களால் சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்து பெற முடியாமல் இருந்தது.

 

ஒரு தனிமனிதனின் குணங்கள் அவன் வளர்க்கப்படும் சூழ்நிலையிலும், அவனது உணவையும் பொறுத்தே இருக்கிறது என்பதையும் அம்பேத்கர் அறிவார். புலால் உணவை மறுப்பது ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று அவர் ஆராய்ந்தார். பஞ்சமா பாதகங்களைச் செய்யாதேஎன்று உபதேசித்தால், மக்கள் கேட்டுவிடப் போகிறார்களா என்ன? மாறாக அதைச் சொல்லாமல் அந்த நிலைக்கு அவர்களை இயற்கையாகவே இட்டுச் செல்ல வேண்டும். பஞ்சமா பாதகங்களைப் பற்றிக் கவலைப்படாதவை கிறிஸ்தவம், இசுலாம். அப்படியானால் அவர்களை நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல புத்தமதத்தால்தான் இயலும்.

 

புத்த மதத்தில் சேர்ந்த பின்பு அதன் கொள்கைகளை நெறிப்படிக் கடைப்பிடிக்க வைப்பதன் மூம் அவர்களை நல்ல நிலைக்கு முன்னேற்றி, சிந்தித்துச் செயல்படும் திறன் உள்ளவர்களாக மாற்றி, சமுதாயத்தில் சம அந்தஸ்து உடையவர்களாக அவர்களை ஆக்கிவிட முடியும் என்று அவர் நம்பியதாலே இலட்சக்கணக்கான தொண்டர்களுடன் அவர் புத்த மதத்திற்கு மாறினார். அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் அம்பேத்கருக்கு சட்ட அமைப்பு 25-ன் விதிப்படி புத்தமதம் ஹிந்து மதத்துடனே ஒன்றாகவே கருதப்படுகிறது என்பது எப்படி நினைவற்றுப் போகும்? சட்டத்தைத் தொகுத்தது அவரல்லவா? எனவே அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறியதற்கு அதுவே காரணம்.

 

– ‘மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்
இந்து முன்னணி வெளியீடு, பக்கம் 32.

“தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவற்ற மூடர்களாக, அசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்தனர்; இறைச்சி உண்ணும் பழக்கங்கொண்ட அவர்கள் பொய், திருட்டு, பெண்டாளுதல் போன்ற பஞ்சமா பாதகங்கள் செய்யும் போக்கிரிகளாகவும் இருந்தனர்; இவற்றிலிருந்து அவர்களைத் திருத்த நினைத்த அம்பேத்கர் இசுலாம், கிறித்தவம் போன்ற அநாகரீக மதங்களைத் தவிர்த்துவிட்டு இந்து மதத்தின் உட்பிரிவான புத்த மதத்திற்குத் தனது ஆதரவாளர்களோடு மதம் மாறினார்” என்பதே இதன் பொருள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அநாகரீகமானவர்கள், போக்கிரிகள் என்பது பார்ப்பன ‘மேல்’ சாதியினர் இன்று வரையிலும் கொண்டுள்ள வெறுப்புக் கலந்த திமிரான கருத்தாகும். இதற்காகத்தான் அம்மக்களோடு அம்பேத்கர் மதம் மாறினார் என்பது வெறும் பொய்யல்ல; பார்ப்பனக் கொழுப்பும் நரித்தனமும் கலந்த பொய். காரணம், அவர்கள் பார்ப்பன இந்து மதத்தால் தண்டிக்கப்பட்ட வரலாற்று அடிமைகள். அவர்கள் அடிமைகள் என்று உணர்வதைக் கூட அனுமதிக்காத பார்ப்பன இந்துமதம்தான் அநாகரீகமானது என்றார் அம்பேத்கர்.

ஒரு மதம் என்பது பொதுவாக மானுடத்தின் அறவியல், மகிழ்ச்சி, விடுதலையைப் பேசுகின்ற கொள்கைகளைக் கொண்டிருக்கும். ஆனால், இந்து மதம் என்பது கொள்கைகளின் தொகுப்பா அல்லது தண்டனைகளைப் பட்டியலிடும் குற்றவியல் சட்ட விதிகளின் தொகுப்பா? சாதிப்படி நிலையில் சூத்திர – பஞ்சம மக்கள் எப்படி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும் என்பதையே விதிகளாய் வைத்திருக்கும் பார்ப்பனியத்தை ஒரு மதம் என்று அழைக்கமாட்டேன் என்றார் அம்பேத்கர். சமூக நீதிகளைப் பொறுத்தவரை மனு தர்மத்தின் சட்டங்களை விடக் கேவலமான சட்டங்கள் எதுவுமில்லை என்று இந்து மதத்தின் மனித விரோதத் தன்மையைக் கிழித்துக் காட்டினார்.

‘இந்து’ என்ற பெயரே முகமதியர்கள் இட்ட பெயர்தான். அவர்கள் அப்படிப் பெயரிடவில்லை என்றாலும் பிரச்சினை ஏதும் வரப்போவதில்லை. காரணம் நாமெல்லாம் ஒரு நாட்டு மக்கள் என்ற சகோதர சமூக சிந்தனை பார்ப்பனியத்தின் சாதிய சமூகத்தில் இல்லாதபோது ஒரு பொதுவான பெயர் பற்றிய கேள்வியே எழுவதில்லை. இந்து – முசுலீம் சண்டையைத் தவிர்த்துப் பார்த்தால் இங்கே தனித்தனிச் சாதியாக வாழ்வதே முதலும் முடிவுமான குறிக்கோளாக இருக்கிறது. மக்கள் தங்களுக்குள் கலந்து உறவாடுவதாலேயே சமூகமாக வாழ்கின்றனர். ஆனால், இங்கே பிரிந்து வாழ்வதையே சட்டமாக வைத்திருக்கும் ஒரு நாட்டில் சமூகம் எங்கே இருக்கிறது என்று சீறியவர் அம்பேத்கர்.

சாதிய அமைப்பு என்பது தொழில்களை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் ஏற்றத்தாழ்வாக செயற்கையான தனித்தனித் தீவுகளாய்ப் பிரித்து விடுகிறது. பரம்பரை பரம்பரையாய் குலத்தொழில் செய்து வரும் ஒருவன் தன் தொழிலின் நலிவால் வாழ இயலாத போதும் பட்டினி கிடந்து சாவானே ஒழிய வேறு தொழில் செய்ய மாட்டான். அப்படிச் செய்வதை நினைத்தும் பார்க்க முடியாத வாழ்வைத்தான் பார்ப்பன இந்து மதம் விதித்திருக்கிறது என்று வழக்காடினார் அம்பேத்கர்.

இப்படி வாழ்வையும் சிந்தனையையும் மட்டுமல்ல உடற்கூற்றையும் பார்ப்பன இந்துமதத்தின் சாதியம் தனது மீற முடியாத அகமண முறையால் எப்படி நலிவடைய வைத்திருக்கிறது என்றால், இந்திய மக்களில் 100-க்கு 90 பேர் ராணுவத்துக்கு (உடல், எடை, உயரம்) இலாயக்கில்லாதவர்களாக உருவாக்கியிருக்கிறது என்று கேலி செய்தார் அம்பேத்கர். அது மட்டுமா, ஒவ்வொரு சாதிக்கும் விதிக்கப்பட்ட தனித்தனி உடை, உணவுப் பழக்கங்கள் காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வேடிக்கைப் பொருளாக, அருங்காட்சியகமாக இந்தியா இருப்பதை சினத்துடன் எடுத்துக் காட்டினர் அம்பேத்கர்.

கழுத்தில் கலயத்தையும், இடுப்பில் துடைப்பத்தையும் கட்டி தாழ்த்தப்பட்ட மக்களை வீட்டு நாயைவிடக் கேவலமாக நடத்திய இந்துக்கள் தங்களைப் பற்றியும், அதேபோல தம் அருகே வாழும் 130 லட்சம் பழங்குடியினர் (அம்பேத்கர் காலத்தில்) எந்த நாகரீக வளர்ச்சியுமின்றி ‘குற்றப் பரம்பரையாக’ நீடிப்பது பற்றியும் வெட்கமோ, வேதனையோ அடைவதில்லை என்று காறி உமிழ்ந்தார் அம்பேத்கர். இம்மக்களுக்கு கிறித்தவ மிஷனரிகள் செய்யும் சேவையைப் போல் இந்துக்கள் ஒருக்காலும் செய்ய முடியாது என்றும், அத்தகைய சகோதரத்துவ எண்ணமே பார்ப்பனியத்தின் ஆன்மாவில் கிடையாது என்பதையும் விளக்கினார்.

ஆரிய சமாஜத்தின் ‘தாய் மதம்’ திருப்பும் மதமாற்றச் சடங்கை ஒரு மோசடி என நிரூபித்தவர் அம்பேத்கர். ஏனைய மக்கள் ‘தம் கொள்கையால் மட்டுமே விடுதலை பெற முடியும்’ என்று தம் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கான அடிப்படையைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்து மதமோ அத்தகைய வாக்குறுதியைக் கொடுக்க முடியாததோடு, அப்படி ஒரு முயற்சியையும் செய்ய முடியாது. காரணம் இந்து மதத்தில் சேர்க்கப்படும் ஒரு புதியவரை எந்தச் சாதியில் வைப்பது என்ற பிரச்சினை உள்ளது. சாதித் தூய்மையில் இரத்தக் கலப்பை விரும்பாத இந்துச் சமூகம் நெடுங்காலமாய் மதப் பிரச்சாரம் மற்றும் மதமாற்றம் செய்யாததற்கும் இதுவே காரணம் என்றார் அம்பேத்கர்.

“நாங்கள் சாதியை ஏற்கவில்லை, அவை இந்து மதத்தில் நுழைந்த இடைச் செருகல்கள், தொழில்முறை வேலைப் பிரிவினைக்காக ஏற்பட்ட வருண அமைப்பே இந்து மதத்தில் ஏற்படுத்தப்பட்டது” என வருண அமைப்புக்கு ஆதரவாக ஆரிய சமாஜத்தினர் வழக்காடினார்கள். அப்படி என்றால் ஒவ்வொரு தொழிலுக்கும் பிராமணன், சத்ரியன், வைசியன் என்று முத்திரை குத்துவது ஏன், பிறப்பின் அடிப்படையில் மட்டும் தொழில் தீர்மானிக்கப்படுவது ஏன், தொழில் மாறும் உரிமை கொடுக்க மறுப்பது ஏன், அப்படி மாறினால் கடும் தண்டனை வழங்கும் காப்பாளராக இந்து மதம் இருப்பது ஏன் என்று கேட்ட அம்பேத்கர், நான்கு வருணங்கள் –  நான்காயிரம் சாதிகள் எனப் பிரிந்திருக்கிறதே ஒழிய தன்மையில் ஒன்றுதான் என்று அம்பலப்படுத்தினார்.

மேலை நாடுகளைப் போல இந்தியாவில் ஒரு சமூகப் புரட்சி ஏன் நடக்கவில்லை? ஐரோப்பாவில் உள்ள ஒரு தொழிலாளி இராணுவத்தில் சேரும் உரிமையிலிருந்து தனது பௌதீக ஆயுதத்தையும், போராடும் உரிமையிலிருந்து தனது அரசியல் ஆயுதத்தையும் கல்வி கற்கும் உரிமையிலிருந்து தனது தார்மீக ஆயுதத்தையும் பெற்றிருந்தான். அதனால் அங்கே புரட்சிகள் நடந்தன. இங்கே பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி கற்கும் உரிமையும், போராடும் உரிமையும், ஆயுதம் ஏந்தும் உரிமை கிடையாது. தனது கலப்பையோடு பிறந்து மாடு போல உழைத்துச் சாவதற்கு மட்டுமே உரிமை கொண்ட ஒரு சூத்திர – பஞ்சமன் தனது கலப்பைக் கொழுவை ஒருவாளாக மாற்ற அனுமதியில்லை. அதனால்தான் பல்வேறு கொடுமைகளைச் சகித்துக் கொண்டு வாழ்ந்த உழைக்கும் மக்களிடமிருந்து எந்தப் புரட்சியும் தோன்றவில்லை. தோன்றவும் முடியாது என்றார் அம்பேத்கர்.

இத்தகைய சாதிய அமைப்பை ஒழிக்காமல் ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது, வெள்ளையர்களை விரட்டினாலும் தமது அடிமைத்தனத்திலிருந்து மக்கள் விடுதலை அடைய முடியாது என்றார் அம்பேத்கர். ”தீண்டாமைப் பிரச்சினையையும் – மத மாற்றத்தையும் – இந்து மதத்திற்குள்ளேயே பேசித் தீர்த்து விடலாம் – அதை அரசியல் அரங்கிற்குக் கொண்டு வராதீர்கள்” என காந்தி ஒவ்வொரு முறையும் நயவஞ்சகமாக நாடகமாடினார். பேசுவதற்கு முன்னால் உங்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெள்ளைக் குல்லாய் போட வேண்டும், கதராடை உடுத்த வேண்டும், என்று வைத்திருப்பதுபோல சாதி, தீண்டாமை பாராட்டுபவன் உறுப்பினராக முடியாது என்று விதி கொண்டு வர முடியுமா என காந்தியின் கழுத்தைப் பிடித்துக் கேட்டார் அம்பேத்கர்.

ஆங்கிலேயரின் கைக்கூலி, தேசத் துரோகி என்று காங்கிரசு கும்பலும், பத்திரிகைகளும் வசை பாடிய போதும் தனது போராட்டத்தை விட மறுத்தார் அம்பேத்கர்.

1927-ஆம் ஆண்டு மராட்டியத்தில் சவுதாகர் களப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைக்கெதிரான நீரெடுக்கும் போராட்டத்தினைத் துவக்கினார் அம்பேத்கர். அடுத்த நாளே ‘இந்துக்கள்’ 108 பானைகளில் சாணம், பசு மூத்திரம், பால், தயிர் கொட்டி பார்ப்பனர்களின் யாகத்தோடு குளத்திற்குத் தீட்டு கழித்தார்கள். 1930-ஆம் ஆண்டு அம்பேத்கரும் தாழ்த்தப்பட்ட மக்களும் துவக்கிய நாசிக் கோவில் நுழைவுப் போராட்டம் 1935-ஆம் ஆண்டில்தான் வெற்றியடைந்தது.

அம்பேத்கரின் இத்தகைய போராட்டங்கள் வன்முறையற்ற அமைதியான போராட்டங்கள்தான் என்றாலும் இந்துக்கள் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்தார்கள், தாக்கவும் செய்தார்கள். இதனால் இந்த நாட்டில் சாதி – தீண்டாமையை ஒழித்து ஒரு சமூக எழுச்சியைக் கொண்டு வரும் தனது முயற்சியில் இந்துக்களைத் திருத்த முடியவில்லையே என்று வேதனைப்பட்ட அம்பேத்கர் 1935 யேவா மாநாட்டில் ”நான் பிறப்பால் இந்துவாகப் பிறந்து விட்டேன். ஆனால், நிச்சயம் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்” என்று முடிவெடுத்தார்.

இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் 1956-ஆம் ஆண்டு 2 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களோடு புத்த மதம் மாறினார்.

அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
2 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களோடு பௌத்தத்திற்கு மதம் மாறிய அம்பேத்கர்

அத்பேத்கர் புத்த மதம் மாறியதன் காரணம் என்ன?

பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும், விகாரமான சடங்குகளுக்கு எதிராகவும், 25 நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியது புத்த மதம். இந்து மதவெறியர்கள் கூறுவதுபோல பௌத்தம்  இந்து மதத்தின் உட்பிரிவு அல்ல. ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோல்வால்கரே, புத்த மதம் செல்வாக்குடன் இருந்த வடமேற்கு – வடகிழக்குப் பகுதிகளில் வருண – சாதிய அமைப்பு சீர் குலைந்ததாகவும், அதனாலேயே முசுலீம், கிறித்தவ மதமாற்றமும் படையெடுப்பும் நடந்ததாகக் கூறி பௌத்தத்தை அருவெறுப்புடன் பார்க்கிறார். கணிசமான காலம் பார்ப்பனியத்திற்கு மாற்றாக விளங்கிய புத்தமதம் செல்வாக்குடன் திகழ்ந்ததற்கு அசோகர் உள்ளிட்ட மௌரிய மன்னர்கள் அளித்த ஆதரவும் முக்கியக் காரணமாகும்.

கடவுள், சடங்கு, நிரந்தர உலகக் கொள்கையை நிராகரித்த புத்தர், அனுபவ ஆய்வையும்  – அறிவையும் மட்டுமே நம்ப வேண்டுமென்றார். மேலும் அகத்தூய்மை, போதுமென்ற மனம், ஆசையை விட்டொழித்தல், பற்றுக்களை உதறுதல் ஆகியவற்றின் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார். அவர் அமைத்த பிக்குகள், பிக்குணிகள் அடங்கிய சங்கம் எளிமைக்கும், சகோதரத்துவத்திற்கும், சமூக அக்கறைக்கும் சான்றாக விளங்கியது. இப்படி பார்ப்பனியத்திற்கு எதிராகக் கிளம்பிய பௌத்தம் பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் தோல்வியைத் தழுவி, இந்தியாவிலிருந்தே விரட்டப்பட்டது.

புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பும், சமூக நோக்கமும் அம்பேத்கருக்கு மிகவும் பிடித்திருந்தன. மேலும் மனிதனின் அறவியல் விழுமியங்கள் தோன்றி நீடிப்பதற்கு மதம் அவசியம்  என்பதும் அவரது கருத்தாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை ஒரு நல்ல சமூகம் நிலவ வேண்டுமானால் சமூக நீதிகளைக் கொண்ட சட்டத்தை வைத்து மக்களை ஆளும் ஒரு நல்ல அரசு புறநிலையாகவும், மனிதனின் ஆன்மீக மேன்மையை வளர்க்கும் ஒரு மதம் அகநிலையாகவும் தேவை எனக் கருதினார்.

அதேசமயம் 25 நூற்றாண்டுகளுக்கு முந்தைய புத்த மதம் அந்தக் காலத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயன்ற ஒரு மதமே தவிர இன்றைய பிரச்சினைகளுக்கு அது தீர்வாகாது. அதாவது புத்தரின் ‘நிர்வாணநிலை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் போராடும் தேவையை மறுத்து, போதுமென்ற மனநிலையை அளிக்கிறது. இவையெல்லாம் அம்பேத்கருக்குத் தெரியாதா, என்ற கேள்விக்கு அவரது கடைசிக் காலத் தோல்விகளும், மதம் பற்றிய அவரது கருத்தும், சாதி ஒழிப்பிற்கான வழி முறை பற்றிய அவரது சித்தாந்தமும் பதிலாகின்றன.

அடுத்து முசுலீம் – கிறித்தவ மதங்களுக்கு அவர் ஏன் மதம் மாறவில்லை? இந்து மதவெறியர் கூறுவது போல அவை ‘அநாகரீகமான மதங்கள்’ என்பதால் அல்ல. முதலில் அவை பார்ப்பனியத்தை எதிர்த்துப் பிறந்த மதங்கள் அல்ல; இரண்டாவது, இந்த மதங்களும் பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை ஓரளவிற்கு ஏற்றபிறகே இந்தியாவில் நிலைபெற ஆரம்பித்தன.

மேலும் இசுலாமும், கிறித்தவமும் தமது மதக் கொள்கைகளைவிட வலுவான நிறுவன ரீதியான வலைப்பின்னலாலும், அரசு போன்ற கண்காணிப்பு செய்யும் சமூக நெறிப்படுத்தலாலும்தான் நீடிக்கிறது என்பது அவருக்குப் பிடிக்கவில்லை. பௌத்தம் மட்டுமே தனிமனிதனிடம் அறவியல் நல்லொழுக்கங்களை சுதந்திரமான முறையில் வளர்த்தெடுக்கின்றது என்பது அவர் கருத்து. ஆனால், இன்றும் புத்த சமயம் செல்வாக்குடன் வாழும் நாடுகளில் கூட அது நிறுவன ரீதியான மதமாகத்தான் இருக்கின்றது. மேலும் அம்பேத்கரின் புத்தமத மாற்றம் என்பது பார்ப்பன இந்து மதத்தை அசைத்துப் பார்க்கும் அளவு வெற்றியடையவில்லை.

இன்றைய தேவை கருதி அம்பேத்கரைத் திரித்துப் புரட்டும் இந்து மதவெறியர்கள் இன்று வரையிலும் அவரை வன்மத்துடன்தான் பார்க்கிறார்கள். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கோரும் அவரது மசோதாவை ஆத்திரம் கொண்டு எதிர்த்தனர், கலவரம் செய்தனர். சில வருடங்களுக்கு முன் ‘இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்’ என்ற அவரது நூலைத் தடை செய்யக் கோரியும், மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியதை எதிர்த்தும், ஆர்.எஸ்.எஸ். சிவசேனைக் கும்பல் வெறியாட்டம் நடத்தியது; பல தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்; பல சேரிப்பகுதிகள் தீக்கிரையாகின; அம்பேத்கர் கைப்படச் சேகரித்த நூலகம் ஒன்றும் எரித்து அழிக்கப்பட்டது. அதன்பின் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய தாழ்த்தப்பட்ட மக்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டு வங்கியைக் கவரவும், தனது ‘மேல்சாதி’த் தன்மையை மறைக்கவும் அம்பேத்கரைப் புகழ்பாடும் இந்து மத வெறியர்கள் அப்போதுகூட, ‘ஆம் எங்கள் மதத்தின் அழுக்குகளை அநாகரீகங்களைக் களைய முயன்றார் அம்பேத்கர்’ என்று கூறாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் சுத்தமாக வாழ்வதற்கு முயன்றார் என்று கூசாமல் கூறுகின்றனர். கன்சிராம், மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான், திருமாவளவன், கிருஷ்ணசாமி இவர்களையெல்லாம் வென்றெடுத்துவிட்ட நிலையில் இந்து மத வெறியர்கள் இன்னும் ஒருபடி மேலேபோய் அம்பேத்கர் இந்துமத மகான்களில் ஒருவர் என்று கூடக் கூறமுடியும்.

அரசியல் சட்டத்தின் 25வது பிரிவில் முசுலீம், கிறித்தவர்கள் தவிர்த்த புத்த மதத்தினர், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகியோர் இந்துக்கள் என்று கூறப்பட்டிருப்பது உண்மைதான். தான் எதிர்த்த காங்கிரசின் மந்திரி சபையில், அம்பேத்கர் சட்ட மந்திரியாக இருந்தது, அரசியல் சட்ட முன் வரைவுக் குழுத் தலைவராகப் பணியாற்றியது – இவையெல்லாம் அரசு என்ற நிறுவனத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குறைந்தபட்ச உத்தரவாதமும், சலுகைகளும் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகத்தான். இவை சாதி ஒழிப்பின் சிக்கல்கள் நிறைந்த பாதை அம்பேத்கரிடம் ஏற்படுத்திய சமரசங்கள். அதேசமயம் இத்தகைய முயற்சிகளால் அவர் திருப்தியடையவில்லை; அவை தவறு என உணர்ந்தபோது தூக்கி எறியவும் செய்தார்.

”என் விருப்பத்திற்கெதிராக எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யுமாறு பணிக்கப்பட்டேன், அரசியல் சட்டம் எழுத அவர்களுக்குக் கிடைத்த ஒரு சவாரிக் குதிரைதான் நான்” என்று கூறிய அம்பேத்கர் பின்னாளில் ”அரசியல் சட்டத்தை எழுதிய நானே அதை எரிப்பதிலும் முதல் நபராய் இருப்பேன்” என்றார். இந்துப் பெண்களுக்கான சமச் சொத்துரிமை தொடர்பான மசோதாவைத் திருத்தவும், தள்ளி வைக்கவும் முயன்ற நேரு அரசாங்கத்திற்கு எதிராக தன் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் அம்பேத்கர். இவை சமரசத்தின் மூலம் அம்பேத்கர் முடங்க மாட்டார் என்பதைக் காட்டுகின்றன.

சமீபத்தில் சீக்கிய மதம் இந்து மதத்தின் உட்பிரிவுதான் என்ற கூறிய ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக சீக்கியர்கள் போராடினார்கள். அதனால் ஆர்.எஸ்.எஸ் தலைமை சீக்கிய மதம் தனியான மதம்தான் என்று மன்னிப்பு கேட்டு ஒப்புக் கொண்டது. ஆனால், தலித் பிழைப்புவாதிகள் பாரதீய ஜனதா கட்சியில் சங்கமமாயிருக்கும் இக்காலத்தில் பௌத்தத்தையும் அம்பேத்கரையும் இந்துமத வெறியர்கள் மற்றும் தலித் பிழைப்புவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கும் கடமை சாதிய ஒழிப்பில் அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



முறையான அறிவிப்புகள் இன்றி தென்பெண்ணை – சாத்தனூர் அணையைத் திறந்து விட்டதே வெள்ளத்திற்குக் காரணம்

04.12.2024

உரிய முறையான அறிவிப்புகள் இன்றி
தென்பெண்ணை – சாத்தனூர் அணையை திறந்து விட்டதே
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில்
ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணம்!

உரிய அலுவலர்கள் மீது உடனடியாக
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பேரழிவுக்கு தமிழ்நாடு அரசு பொறுப்பு ஏற்று உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும்!

மக்கள் அதிகாரம் கோரிக்கை!

ங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் தாக்குதலால் புதுச்சேரி, கடலூர், விழுப்புரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் உரிய அறிவிப்புகள் இன்றி திடீரென்று ஒரு இலட்சத்து அறுபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன அடி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் உள்ள பல நூற்றுக்கணக்கான கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ 2000 ஆயிரமும் வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழந்திருந்தால் தலா ரூ 4 ஆயிரமும், கோழி இறந்திருந்தால் தலா ரூ 100, மேலும் எருது, பசு இறந்திருந்தால் ரூ 37,500 வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத மழை, இயற்கை சீற்றம், அரசு என்ன செய்ய முடியும்? உதவித்தொகை தான் வழங்க முடியும்! இப்படி எல்லாம் பல கேள்விகளைக் கேட்டு அரசு தப்பித்துக் கொள்வது என்பது ஜெயலலிதா ஆட்சி முதல் மு.க.ஸ்டாலின் ஆட்சி வரை நீடித்து வருகிறது.

இயற்கை பேரழிவுகளில் இருந்து காப்பாற்றுவதற்கு தான் அரசு என்ற கட்டமைப்பு உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை வரிச்சலுகையாக வழங்கும் அரசு, ஒரு குடும்பத்துக்கு 2000 ரூபாய் உதவித்தொகை என்ற அறிவித்திருப்பது மிகக் கேடானதாகும்.

மூன்று மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ஒரு குடும்ப நல அட்டைக்கு ரூபாய் 15,000 வழங்க வேண்டும். மேலும் இறந்து போன ஆடு, மாடு மற்றும் கோழிகளுக்கு உரிய சந்தை விலையில் உதவித்தொகை அளிக்கப்பட வேண்டும்.

மேலும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் அழிந்துபோன நெற்பயிர்களுக்கும் சந்தை விலையில் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும் தென்பெண்ணை ஆற்றில் உரிய முறையான அறிவிப்புகள் இன்றி லட்சக்கணக்கான கன அடி நீரைத் திறந்து விட்ட அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு கிரிமினல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



போபால் டிசம்பர் 2, 1984: மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்… | மீள்பதிவு

டந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் நகரில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைட் இந்தியா நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி செய்யப்படும் இடத்தில் ஏற்பட்டது அந்த கொடூரமான விசவாயு கசிவு. டிசம்பர் 2 (1984) ஆம் தேதி இரவு தொடங்கி, டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் ஒரேநாளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உடல்நல பாதிப்புகளை எதிர்கொண்டனர்.

இந்த சம்பவம் நடந்து 40 ஆண்டுகளாகியும் இன்றுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைட் நிறுவனத்தினர் யாரும் இந்திய அரசால் தண்டிக்கப்படவில்லை. ஏன், மக்களுக்கு உரிய இழப்பீடு கூட இன்னும் வழங்கப்படவில்லை.

மக்கள் இன்றுவரை புற்றுநோய், சிறுநீரக பாதிப்புகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நிலையில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டவ் கெமிக்கல் நிறுவனம் (Dow Chemical Company) இந்தியாவில் செழிப்பாக வளர்ந்து வருகிறது.

இந்த போபால் விசவாயு கசிவு சம்பவத்தின் கோரத்தை நினைவுகூரும் வகையில் ஜூலை 2010 புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.

***

மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…

1984-ஆம் ஆண்டு, டிசம்பர் 2-ஆம் நாள். நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. வரவிருக்கும் ஆபத்தை உணராத மக்கள், டிசம்பர் மாதத்துக் குளிருக்கு அஞ்சி வீட்டிற்குள் அடைபட்டு உறங்கிக் கொண்டிருந்தனர். வீடற்றவர்களோ சாலையோரம் ஒடுங்கிக் கிடந்தனர். போபாலின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையில், திடீரென அபாயச் சங்கு ஒலித்தது. தொழிலாளர்கள் பரபரப்பானார்கள். நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தொழிற்சாலையின் உயரமான புகை போக்கியிலிருந்து கொடிய நச்சு வாயு கசிய ஆரம்பித்தது.

யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் பூச்சி மருந்து தயாரிக்க சேமித்து வைக்கப்பட்ட மெத்தில் ஐசோ சயனேட் (எம்.ஐ.சி) திரவம் தொட்டியைவிட்டு வெளியேறிக் காற்றில் கலக்க ஆரம்பித்து விட்டது. நிறமும், மணமும் இல்லாத இந்தக் கொடிய நஞ்சு கலந்த காற்றை சுவாசிக்கும் சிறிது நேரத்திற்குள் மரணம் நிச்சயம். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள், தமது மேலதிகாரிக்குத் தகவல் தெரிவித்தார்கள். அபாயச் சங்கை முதலில் ஒலிக்க விட்ட போது, நேரம் சரியாக நள்ளிரவு 12:30.

யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து சில அடிகள் தள்ளி வசித்துவந்த எம்.ஏ.கான் எனும் விவசாயி, பக்கத்தில் இருக்கும் பால் பண்ணையில் ஏதோ சத்தம் வருவதை அவதானித்தார். சிறிது நேரத்தில், தனது மாடுகள் கால்களைத் தரையில் ஓங்கி ஓங்கி உதைப்பதை உணர்ந்தார். வெளியே ஓடிவந்து தொழுவத்தில் கட்டியிருந்த தனது பசுமாடுகளைப் பார்த்தார். இரண்டு பசுக்கள் தரையில் செத்துக் கிடந்தன. மூன்றாவது மாடு ஓங்கிக் கத்திக் கொண்டு சாவதை நேரில் பார்க்கிறார். இனம் புரியாம ஒருவித மயக்கம் அவரைச் சுழற்றியது. அவரின் கண்களும் எரியத் தொடங்கின. ஓட ஆரம்பித்தார். அவரது கண்கள் இருளத் துவங்கின. மறுநாள், கண்கள் மூடிய நிலையில் போபாலில் ஹாமில் தியா மருத்துவமனையில் கிடந்தார். அந்தப் பயங்கர இரவில்தான் போபால் படுகொலை தொடங்கியது.


படிக்க: போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்


யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து பரவிய எம்.ஐ.சி. வாயு, வீசிக் கொண்டிருந்த காற்றினால் வழி நடத்தப்பட்டு மக்கள் நெருக்கமாய் வசிக்கும் குடியிருப்புப் பகுதியுனுள் ஊடுருவியது. அது சென்ற திசை யெங்கும் சிறியவர், பெரியவர், ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி, நாய், ஆடு, மாடு, மனிதன் என்ற பாகுபாடின்றி எதிர்ப்பட்ட அனைவரையும், அனைத்தையும் சித்திரவதை செய்து கொன்றொழித்தது.

அந்தத் தொழிற்சாலையை ஒட்டி வசித்த மக்களுக்கு இவ்வாயுகசிய நேரிடுகையில் என்னென்ன செய்ய வேண்டும் என்கிற பயிற்சி ஏதும் அளிக்கப்பட்டிருக்கவில்லை. குறைந்த பட்சம் இவ்வாறு நச்சு இரசாயன வாயு பரவும் போது ஈரத் துணியை முகத்தில் சுற்றிக் கொண்டு தரையில் தவழ்ந்து மெதுவாய் புகை பரவும் திசைக்கு எதிர் திசையில் நகர்ந்து சென்று விட்டாலே, மரணத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளலாம் என்கிற எளிய பயிற்சியைக் கூட அரசோ அல்லது யூனியன் கார்பைடு நிர்வாகமோ அளித்திருக்கவில்லை. தொழிற் சாலையிலிருந்து அபாயச் சங்கு ஒலிப்பதைக் கேட்ட மக்கள், தொழிற்சாலைக்குள் ஏதோ விபத்து என எண்ணி உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்ற தொழிற்சாலையை நோக்கி ஓடி வந்தனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.

நச்சு வாயுவின் தாக்குதலால், தூக்கத்திலிருந்து உலுக்கியெழுப்பப்பட்ட மக்கள் முதலில் மிளகாய்ப் பொடியையை முகர்ந்தது போன்றதொரு உணர்வை அடைந்தனர். கண்ணில் நெருப்பைக் கொட்டியதைப் போன்று எரிந்தது; விழிகள் வெளியே வந்துவிடுவது போலப் பிதுங்கியது. தொடர்ந்து அவர்கள் நுரையீரலெங்கும் மிளகாய்ப் பொடியைக் கொட்டி நிறைத்ததைப் போன்ற நெஞ்செரிச்சல் ஏற்பட்டது. இரத்தமும் கோழையுமாக வாந்தியெடுத்தார்கள்.

அந்தப் படுகொலை நாளில் எப்படியோ உயிர் பிழைத்து, கண்கள் குருடாகிவிட்ட அசீசா சுல்தான், “நள்ளிரவு 12.30 மணி இருக்கும். என் குழந்தை கடுமையாக இருமத் தொடங்கியதை அடுத்து எழுந்து பார்த்தேன். எங்கள் அறை முழுக்க வெள்ளைப் புகை பரவி இருந்தது. வெளியே பல பேர் கத்திக் கொண்டிருப்பதைக் கேட்டேன். ‘ஓடுங்க, ஒடுங்க’ என்றார்கள். எனக்கும் மூச்சு விடும்போதெல்லாம் தீயை சுவாசிப்பது போல இருந்தது. நெஞ்சுக்குலை வெளியே வந்துவிடுவதுபோல இடைவிடாமல் இருமல் என்னைத் தாக்கியது. தீயைக் கொட்டியது போல என் கண்களெல்லாம் எரிந்தது” என்று அந்த நாளின் துயரை நினைவு கூர்கிறார். போபால்வாசிகள் பலர் பார்வையை இழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பிணமானார்கள்.

வெளியே ஓடிக்கொண்டிருப்பவர்களில் பலர் எங்கே ஓடுவது என்று தெரியாமல் இலக்கின்றி ஓடினார்கள். எந்தளவுக்கு வேகமாய் ஓடினார்களோ, அந்தளவுக்கு பிராணவாயுவைக் கோருகிறது நுரையீரல். எந்தளவுக்கு ஆழ்ந்து சுவாசித்தார்களோ, அந்தளவுக்கு அதிகமான எம்.ஐ.சி. வாயு உள்ளே நுழைகிறது. அதிக துடிப்புடன் ஓடியவர்களே முதலில் பலியாயினர். ஓடிக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் நெரிசலில் கீழேவிழுந்து நசுங்கியும் சிலர் மாண்டனர். உயிருக்குப் பயந்து ஓட்ட மெடுக்கும் அம்மக்களில் சிலர் உடுத்தியது உடுத்திய படி, சிலர் உள்ளாடைகளுடன் ஒடிக்கொண்டிருந்தனர். ஆடு, மாடுகளும் தன்னைக் காத்துக்கொள்ள மனிதர்களுடன் சேர்ந்து இலக்கின்றி ஓடின. மாடுகள் மிதித்துக் கீழே விழுந்து நசுங்கினர் சிலர். ஓடமுடியாமல் மூச்சுத் திணறிக் கீழே விழுந்தவர்களை தூக்கி விட்டு சரிந்து விழுந்தனர் சிலர். அவர்கள் மீண்டும் எழவே இல்லை.

வீடற்றுச் சாலையில் உறங்கிக் கொண்டிருந்தவர்களைத்தான் இந்த விசக் காற்று முதலில் தாக்கியது. பின்னர் வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தாக்கியது. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை அணைத்தபடி தெருவில் உறங்கிக் கொண்டிருந்த தாய்மார்களும் குழந்தைகளும் துடி துடிக்க கொல்லப்பட்டனர். நச்சுவாயு மக்களைக் கொன்று கொண்டிருந்த அந்த இரவில் போலீசோ ஒலி பெருக்கி மூலம் “யாரும் பீதி அடைய வேண்டாம். வீட்டுக் கதவுகளை சாத்தியபடி உள்ளேயே இருங்கள்” என அறிவித்து வீட்டுக்குள்ளேயே செத்து விழச் செய்தது.

நச்சுவாயுவின் தாக்குதலால் உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை மனித மூளை இழந்திருந்தது. தன்னுணர்வின்றி ஆடையிலேயே பலர் மூத்திரம் பெய்தனர். பெண்களின் கருவறைக்குள் இருந்த இரண்டு-மூன்று மாத சிசுக்கள் அழிந்து இரத்தமும் சதையுமாக கருச்சிதைவடைந்து தாய்மார்கள் மூர்ச்சையடைந்து விழுந்தனர். அந்த நாளில் வயிற்றில் சிசுக்களைச் சுமந்திருந்த தாய்மார்களில் 50 சதவீதத்தினருக்கு உடனடி கருச்சிதைவு ஏற்பட்டது.

முதலில் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் இந்த நச்சு வாயு, பின்னர் கண் பார்வை நரம்புகளையும், சதைகளை யும் செயலிழக்கச் செய்து விடும். உடனே செத்தவர்கள் பாக்கியவான்கள் என்பதைப் போல, கொஞ்சம் உயிர் உடம்பில் ஒட்டிக்கொண்டிருந்தவர்கள், கண்கள் குருடாகி, என்ன நடக்கிறது என்றே புரியாமல், என்ன செய்வது என்றும் தெரியாமல் பித்துப் பிடித்தது போல ஓடி துடிதுடிக்க உயிரை விட்டனர். ஓடமுடியாமல் விழுந்து விட்டவர்கள் பிணக் குவியலுக்கு நடுவே அசைவற்றுக் கிடந்தனர். சிறிது நேரத்திற்கெல்லாம் தெருவெங்கும் பிணங்கள் குவிந்து கிடந்தன.

போபால் ரயில் நிலையத்தில், நிலைய அதிகாரியான துருவே, சிக்னல்மேனை நள்ளிரவில் வரவிருக்கும் லக்னௌ – மும்பை இரயிலுக்கான தந்தி எந்திர சமிக்ஞையை சரிபார்த்து அனுப்பச் சொல்லிவிட்டு, வெறிச்சோடிக் கிடந்த நடைமேடைக்கு வந்தார். காற்றில் அன்றைக்கு ஏதோ ஒரு மாற்றம் இருந்ததை அவரால் உணர முடிந்தது. தூரத்தில் வெள்ளையாய் மேகம் போல் ஏதோவொன்று கவிந்து வந்ததை பார்த்தார். அருகில் சுருண்டு படுத்திருந்த தெரு நாய் ஊளையிட்டது. அந்த நாயின் கண்களில் மரண பீதியைக் கண்டார். மிளகாய்ப் பொடி நெடியோடு காற்று அடர்ந்து கொண்டிருந்தது. அவரால் சுவாசிக்க முடியவில்லை. நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. துருவே பார்த்துக் கொண்டிருக்கும் போதே நாய் சுருண்டு விழுந்து செத்துப் போனது.

துருவேயின் கண்கள் வெளியே பிதுங்கிக் கொண்டு வந்தது. எதிர் நடைமேடையில், இரவில் வழக்கமாக ஒண்டிக் கொள்ள வரும் பிச்சைக்காரர்கள் சிலரும் இதே போன்ற நிலையில் தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

துருவேயின் உடலெங்கும் வலித்தது. இன்னும் சிறிது நேரத்துக்குள் வந்து சேர்ந்து விடும் லக்னெள – மும்பை விரைவு இரயிலில் வரும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் எனும் உணர்வில் சிக்னல் அறைக்கு ஓடினார். ஆனால் அந்த இரயில், வெகு நேரத்துக்கு முன்பே முந்தைய இரயில் நிலையத்திலிருந்து கிளம்பி விட்டதாகவும், இன்னும் சில நிமிடங்களில் போபாலுக்கு வந்து சேரும் என்பதாகவும் முந்தைய ரயில் நிலையத்திலிருந்து பதில் வந்தது. அடுத்த சில நிமிடத்திற்குள் இரயிலின் தடதடப்பு காதில் விழவே, நடுங்கும் கால்களோடு தள்ளாடி நடை மேடைக்கு விரைந்தார், துருவே. லக்னௌ – மும்பை விரைவு வண்டி போபால் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது. என்ன நடக்கிறது என் பதை அறிந்துகொள்ளவதற்குள்ளாகவே, அவசரமாக இறங்கிய பயணிகளில் சிலர் சுருண்டு விழுந்தனர். அதைக் கண்ட மற்றவர்கள் விபரீதத்தை உணர்ந்து, உடனே அந்த இடத்தை விட்டு ஓடத் துவங்கினர். சிலர் குழந்தைகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு வேகமாய் ஓடித் தப்ப முயன்றனர். கீழே சரிந்த தமது உறவினர்கள் மீது தண்ணீரைத் தெளித்து எழுப்பிக் கொண்டிருந்தனர், சிலர். திரும்பிய திசையெல்லாம் உடல்கள் கிடக்க, உறவினர்களின் ஒப்பாரிச் சத்தம் ரயில் நிலையம் முழுக்க எதிரொலித்தது.

அடுத்த ரயிலுக்காகக் காத்திருந்தவர்களும் இரவில் படுத்துறங்க அங்கு வந்திருந்த பிச்சைக்காரர்களும் சேர்த்து 191 பேர் அநாதைப் பிணங்களாக போபால் இரயில் நிலையத்தில் சிதறிக் கிடந்தனர். நெருங்கி விட்ட தனது மரணத்தை அறிந்த துருவே-வுக்கு மனைவியின் குழந்தைகளின் நினைவும் வந்து போனது. நேரத்தை வீணாக்காது அடுத்தடுத்து வரும் இரயில்களை எப்பாடுபட்டாவது நிறுத்தி விட வேண்டும் எனும் எண்ணத் தோடு அவர் சிக்னல் அறைக்கு விரைந்தார்.

அங்கே சிக்னல் மேன் வாயோரம் இரத்தமும் கோழையுமாக சரிந்திருந்தார். கண்கள், அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியது. கடும் வலியோடும், இருமலோடும் சிக்னல் மேனின் உடலை சுவரோரம் நகர்த்தி வைத்தார், துருவே. நடுங்கும் கரங்களால் தந்தி இயந்திரத்திலிருந்து போபால் இரயில் நிலையத்தோடு இணைந்திருந்த எல்லா இரயில் நிலையங்களுக்கும் செய்தி அனுப்பினார். அந்த இரவு முழுவதும் விழித்திருந்து தொடர்ந்து செய்தியை அனுப்பிக் கொண்டேயிருந்தார்.

அதைத் தொடர்ந்து, அப்பகுதியிலிருந்த எல்லா இரயில் நிலையங்களும் தங்கள் பாதை வழியே எந்த இரயிலும் போபாலுக்குச் செல்லாதவாறு தடுத்து நிறுத்தின. செய்தி கிடைக்காமல் கடந்து வந்துவிட்ட இரயில்களின் சன்னல்களை இழுத்து மூடியபடியே போபாலில் நிறுத்தாமல், வேகமாய்க் கடந்து போகு மாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார், துருவே. கடை நிலை ஊழியர்களைத் திரட்டி பின்னே வேகமாய் வரும் எந்த இரயிலும் ஏற்கெனவே நிற்கும் இரயிலோடு மோதிவிடாமல் தடுக்க, அதன் தண்டவாளத்தைத் திசை மாற்றும்படி கேட்டுக் கொண்டார்.

மறுநாள் காலை இரயில் நிலையத்துக்குள் வந்த போலீசு மீட்புப் படை, சிக்னல் அறையில் சுவரோர மாய் சிக்னல் மேனின் பிணத்தையும், மோர்ஸ் கோட் இயந்திரத்தை ஒரு கையால் விடாமல் இறுகப் பற்றிக் கொண்டு மேசை மேல் கவிழ்ந்தபடியே கிடந்த துருவேயின் உயிரற்ற உடலையும் கண்டனர். இரயில் பாதையை கடைசி நேரத்தில் மாற்ற முயன்ற கடை நிலை ஊழியர்களின் உயிரற்ற உடல்கள் தண்டவாளத்தின் ஓரத்தில் அந்த லீவரைப் பிடித்திருந்த வாக்கிலேயே சரிந்திருந்தன.

இவ்வாறு சாதாரண அரசு ஊழியர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து மக்களைக் காத்தபோது, அதிகாரிகளோ ஊரைவிட்டே ஓடிப் போயிருந்தனர். மக்கள் சொந்த முயற்சியிலேயே இப்பேரிடரை எதிர்கொண்டனர். அன்றைய ம.பி. முதல்வர் அர்ஜுன்சிங் (காங்கிரஸ்) போபால் நகரத்திலிருந்து தப்பித்து 14 கி.மீ. தொலைவில் உள்ள மாளிகையில் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொண்டார்.

மறுநாள் 1000 பேருந்துகளை அரசு இயக்கியது. அதில் எஞ்சி இருந்த மக்களை நகரிலிருந்து வெளியேற்றியது. கிடைத்த வாகனங்களில் ஏறி மக்கள் நகரைக் காலி செய்து கொண்டிருந்தனர். போபால் ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும் ரயில்களில் ஏறித் தப்பிச் செல்ல மக்கள் காத்து நின்றனர். ஆனால், நச்சு வாயுவுக்குப் பயந்து ரயிலுக்குள் இருக்கும் பயணிகள் கதவுகளையும் ஜன்னல்களையும் அவர்களுக்குத் திறக்கவே இல்லை. ஓங்கி ஓங்கிக் கதவைத் தட்டும் போபால் மக்களின் கையறு நிலை கல்லையும் கரைய வைப்பதாக இருந்தது. வலுவானவர்கள் ரயில்களின் கூரைகள் மீதேறி அகதிகளாக ஏதாவதொரு ஊருக்குப் போய்ச் சேர்ந்தனர். இன்னும் சில தொட்டிகளிலும் நச்சு வாயு வெடித்துப் பரவி விட்டது என வதந்திகள் உருவாகி, பல நாட்கள் மக்கள் பீதியில் ஒடுவதும் திரும்புவதுமாக இருந்தனர்.

போபாலின் மருத்துவமனைகள் அனைத்தும் பாதிக் கப்பட்டோரால் நிரம்பி விடவே, அவற்றின் தாழ்வாரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள வெட்டவெளிகளிலும் மக்கள் அடுத்தடுத்துக் கிடத்தப்பட்டனர். இரசாயனப் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க பயிற்றுவிக்கப்பட்டிராத மருத்துவர்கள் தம்மால் முடிந்த வரையில் போராடிக் கொண்டிருந்தனர். மக்களுக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்று வழிகாட்டுதல் தரப்படவில்லை. கண்களுக்கு சொட்டு மருந்தும், இருமல் மருந்தும் கொடுத்து ஆறுதல் கூறினர். நஞ்சை முறிக்க என்ன மருந்து கொடுப்பது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. யூனியன் கார்பைடு நிறுவனமும் சொல்லவே இல்லை. மிகவும் தாமதமாகத்தான் நஞ்சு முறிவுக்கு சோடியம் தயோ சல்பேட் தரப்பட்டது. பிறகு, அதனையும் தரக்கூடாது என்று ம.பி. அரசு கட்டளையிட்டது. மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கொத்துக் கொத்தாகச் செத்துக் கொண்டேயிருந்தனர்.

தப்பியவர்கள், பிரிந்து போன தமது சொந்தங்களை உயிரோடு எஞ்சிய மனிதர்களிடையே தேடிக் கொண்டிருந்தனர். பிணங்களையும் புரட்டிப் பார்த்தனர். மருத்துவமனை முழுக்க ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் பிணங்கள்தான் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பல பிணங்கள் இன்னாருடையதுதான் எனக் கண்டறிய முடியவில்லை.

ஏனென்றால், பல குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக மாண்டுபோயிருந்தன. பிணங்களின் மதங்களைக் கண்டறிய முடியாததால் புதைப்பதா, எரிப்பதா என்று தெரியவில்லை. பிணங்களுக்கு வெறுமனே எண்கள் மட்டும் கொடுக்கப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டன. பல ஏக்கர் பரப்பளவுள்ள பொட்டலில் ஒட்டுமொத்த மாக எரியூட்டப்பட்டன. அல்லது பெரிய குழிகளாய்த் தோண்டி மொத்தமாய்ப் புதைத்தனர். அதற்கும் வாய்ப் பில்லாதவர்கள் தமது உறவினர்களின் சடலங்களை கனக்கும் இதயத்தோடு நர்மதை நதி வெள்ளத்தில் விட்டனர்.

மெத்தில் ஐசோ சயனேட் படிந்ததால் போபால் நகரில் மரங்களின் இலைகள் எல்லாம் பச்சை நிறத்திலிருந்து அடர் மஞ்சள் நிறத்துக்கும் கருநிறத்துக்கும் மாறியிருந்தன. பறவைகளெல்லாம் செத்து விழுந்திருந்தன.


படிக்க: போபால் – இராணிப்பேட்டை : முதலாளித்துவ கொலைகள் !


மக்களோடு கால்நடைகளும் தெருநாய்களும் மாண்டு போய் கவனிப்பாரின்றி சில நாட்களில் சிதைந்து அழுகத் தொடங்கின. தொற்று நோய் பரவிடும் நிலை வந்ததும் கிரேன்கள், புல்டோசர்கள் மூலம் அவற்றை அப்புறப்படுத்தி பிரம்மாண்டமான குழியொன்றில் ஒட்டுமொத்தமாகப் போட்டு அவற்றின் மீது டன் கணக்கிலான பிளீச்சிங் பவுடர் கொட்டி மூடினார்கள்.

இதற்கிடையில் தெருவெங்கும் வெட்டவெளியில் சிதறிக் கிடந்த மனிதர்களின் பிணங்களும் அழுகி நாறத் தொடங்கின. காலரா பரவும் அபாயம் வெகு அருகில் இருந்தது. அழுகிய பிணங்களைக் குதறிக் கொண்டிருந்த எலிகளால் ப்ளேக் நோய் பரவும் அபாயத்தில் போபால் இருந்தது. பல நாட்களாக வல்லூறுகளும் கழுகுகளும் நகரில் பிணங்களைக் குறிவைத்து வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

ஒரே இரவில் பத்தாயிரத்துக்கும் மேல் மரணங்கள். தொடர்ந்த மாதங்களில் முப்பதாயிரத்துக்கும் மேல் மரணங்கள். ஐந்து லட்சம் பேர்கள் வரை பாதிப்புக் குள்ளானதில், ஒன்றரை லட்சம் பேர்கள் பதினைந்து வயதுக்குட்பட்டோர். வெறும் எண்களாகக் கடந்து செல்லப்பார்க்கும் இந்த வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கிடையிலும், எழுத்துகளுக்கிடையிலும் வழிந்தோடும் வேதனையை, துரோகத்தை உங்களால் உணர முடிகிறதா? எத்தனை கனவுகள் கருகியிருக்குமோ? குழந்தைகள், செத்துப்போன தங்கள் பெற்றோரைத் தேடித் தேடி அலைந்து திரிந்த சோகத்தை உங்களால் உணர முடிகிறதா?

தப்பிப் பிழைத்த அந்நகரப் பெண்களின் கருவறையைக் கூட விட்டு வைக்காமல் நஞ்சூட்டியிருக்கும் அந்த கருணையற்ற முதலாளிகளின் இலாபவெறி, இந்த நிமிடம் வரை கேட்பாரில்லாமல் ஆணவமாய் எக்காளமிடுகிறது. இலாபத்தின் கொடூரத்தை விஞ்சுகின்ற துரோகத்தின் கொடூரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


கதிர்

(புதிய ஜனநாயகம் | தொகுதி: 25; இதழ்: 9 | ஜூலை 2010)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள்: எதிர்பாராதது என்பது அயோக்கியத்தனம்

ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 22-ஆம் தேதி உருவான ஃபெஞ்சல் புயல், டிசம்பர் 1-ஆம் தேதி கரையைக் கடந்தாலும், அதன் பின்னரும் தமிழ்நாட்டில் வடக்கு மற்றும் வடமேற்கு உள்மாவட்டங்களில் பெய்துவரும் அதிகனமழையானது தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

கிருஷ்ணகிரி – ஊத்தங்கரை பகுதியில் இதுவரை கண்டிராத அளவிற்கு 10 மணி நேரத்திற்குள் சுமார் 50 செ.மீ. மழை பெய்ததன் விளைவாக பெருவெள்ளம், ஏரியில் உடைப்பு ஏற்பட்டு பேருந்து நிலையமே அடித்துச் செல்லப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக் காரணமாக, சாத்தனூர் அணையிலிருந்து 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதை அடுத்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

ஃபெஞ்சல் புயல் காரணமாக, தற்போதுவரை தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள கோர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்குகிறது. திடீரென வெள்ள நீர் திறந்துவிடப்பட்டதால், நான்கு மாவட்டங்களில் ஆங்காங்கே மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர்; சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கோர சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. புதுச்சேரியிலும் வெள்ளப் பாதிப்புகள் மிக மோசமான அளவில் கிராமங்களைப் பாதித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் வெள்ளப் பாதிப்புகளை “எதிர்பாராதது” என்று தமிழ்நாடு அரசு குறிப்பிடுகிறது. தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, அனைத்து மாநில அரசுகளும் புயல் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் போதெல்லாம், இவ்வாறே குறிப்பிடுகின்றன. இது, அயோக்கியத்தனமாகும். மக்கள் விரோத மனநிலையின் அப்பட்டமான வெளிப்பாடாகும்.

புவி வெப்பமயமாதலின் விளைவாக, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, புயல்களின் தன்மை மாறியுள்ளது; மழை பொழியும் அளவு மிகவும் அதிகரித்துள்ளது; மூன்று நாட்களில் பொழிய வேண்டிய மழை மூன்று மணி நேரத்தில் பொழிகிறது; இவ்வாறு, புயல், வெள்ளம், காற்று மாசு, காட்டுத்தீ, வெப்ப அலை போன்ற அனைத்தின் தன்மைகளையும் ஆய்வு செய்யும் சுற்றுச்சூழலியலாளர்கள், இவற்றை “காலநிலை நெருக்கடி”, “காலநிலை அவசரநிலை” என்று அழைக்கின்றனர்.

இருப்பினும், இந்திய அரசோ, மாநில அரசுகளோ இந்த காலநிலை நெருக்கடியைக் கணக்கில் கொண்டு புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதில்லை; அதற்காக எந்தக் கொள்கைகளையும் இதுவரை வகுத்துக் கொள்ளவில்லை.

இதனால், கேரளா வயநாடு நிலச்சரிவு, மும்பை மழை வெள்ளப் பாதிப்புகள் என எந்த இயற்கைப் பேரழிவுகளிலிருந்தும் இந்திய அரசும் மாநில அரசுகளும் எதையும் கற்றுக்கொள்வதில்லை. இப்போது, ஃபெஞ்சல் புயலிலிருந்தும் எதையும் கற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதையே ஆட்சியாளர்களின் அறிவிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் ‘திராவிட மாடல்’ அரசைப் பொறுத்தவரை, வெள்ள நீர் வடிகால் வசதிகளை மேம்படுத்துவதையே வரலாற்றுச் சாதனையைப் போல பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், வெள்ள நீர் வடிகாலை மேம்படுத்தும் பணியை முழுமையாக செய்யவில்லை என்பதைத்தான், சென்னையில் வெள்ளப் பாதிப்புகள் காட்டுகின்றன.

அதேபோல, புயல் வரப்போகிறது என்று எச்சரிக்கை விடுத்ததைத் தாண்டி, ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இயல்புக்கு மாறானதாக அனைத்து புயல் மழை வெள்ளங்களும் ஏற்படுகின்றன என்பதை உணர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

சாத்தனூர் அணையிலிருந்து முன்னெச்சரிக்கையின்றி இரண்டு லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வழக்கமாக எதிர்ப்பார்க்கும் வகையில், புயலின் வேகம் இல்லை, நின்று நிலைத்து வலுவாக மழை பெய்து வருகிறது என்பதை ஓரிரு நாட்களிலேயே உணர முடிந்தது; இந்நிலையில், முன்கூட்டியே ஏரிகள், ஆற்றோரங்களில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியிருக்க முடியும். இதுபோன்ற முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் எதுவும் அரசு சார்பில் எடுக்கப்படவில்லை.

ஆனால், வெள்ளப் பாதிப்புகள் வந்த பின்னர், பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவது, நிவாரணங்களை அறிவிப்பது என்பதை மட்டுமே ஆட்சியாளர்கள் செய்துவருகின்றனர். அரசு அதிகாரிகளோ பாதிக்கப்பட்ட மக்களை நிர்கதியாக கைவிட்டுவிட்டு, ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். இந்த விசயத்தில், எந்த மாநில அரசுகளும் விதிவிலக்கல்ல. தற்போது தமிழ்நாடு தி.மு.க. அரசும் அவ்வாறே நடந்து கொண்டிருக்கிறது.

பாசிச மோடி அரசோ, மாநில அரசுகள் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதில்லை; வெள்ளப் பாதிப்புகளுக்கு பேரிடர் நிவாரண நிதி அளிப்பதில்லை; அதுவும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் தென்மாநிலங்களையும் திட்டமிட்டே வஞ்சித்து வருகிறது.

இத்துடன், தமிழ்நாடு போன்ற தொழில்வளர்ச்சிப் பெற்ற மாநிலங்களில் இருந்து அதிகபடியான ஜி.எஸ்.டி. வரியைப் பெற்றுக்கொண்டு, அதானி-அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக் கொடுக்கிறது. மாறாக, இந்த மாநில அரசுகளுக்கு மத்திய தொகுப்பு நிதியில் இருந்து அற்பத் தொகையையே ஒதுக்குகிறது. இவ்வாறு, இந்த மாநிலங்களை இந்திய அரசு அப்பட்டமாக கொள்ளையடிப்பதால், இந்த மாநிலங்கள் கடும் நிதி நெருக்கடியைச் சந்திக்கின்றன. இதுவும் மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்வதற்கு தடையாக அமைகின்றன.

ஆகையால், மக்கள்நலனை முற்றாகப் புறக்கணிக்கின்ற, மக்களைக் கொள்ளையடிப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டுள்ள பாசிச பா.ஜ.க. கும்பல் இருக்கும் வரை மக்கள் உரிமைகளை நிலைநாட்ட முடியாது. அக்கும்பலை விரட்டியடிப்பது உழைக்கும் மக்கள் முன்னே உள்ள முதன்மையான கடமையாகும்.

மேலும், பாசிச பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளும் அதற்கெதிரான காங்கிரசு-தி.மு.க-வின் இந்தியா கூட்டணி கட்சிகளும் மக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. இதனால், காலநிலை நெருக்கடி தீவிரமடைவது மட்டுமின்றி, அதன் பாதிப்புகளையும் மக்களே சுமக்க வேண்டியதாகிறது.

ஆகவே, மக்கள் விரோத, சுற்றுச்சூழலை அழிக்கின்ற கார்ப்பரேட் கொள்கைகளை கைவிடுவது; காலநிலை மாற்றத்தால் தீவிரமாகும் இயற்கை பேரழிவுகளிலிருந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அவர்களின் வாழ்விடங்களை மாற்றியமைப்பது; பேரிடர் உணர்திறன் பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான வாழ்விடங்களுக்கு மாற்றுவது போன்ற சூழலியல் நெருக்கடியில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மாற்றுக் கொள்கைகள் இன்று அவசியமானதாக உள்ளது. இந்தக் கொள்கையை முன்வைத்து, இவற்றை நடைமுறைப்படுத்தக் கோரி எதிர்க்கட்சிகளை நிர்பந்தித்து, மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதே இதுபோன்ற பேரிடர்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு தீர்வாகும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



திருவண்ணாமலை நிலச்சரிவு: அரசின் மீது கோபத்தில் மக்கள் | தோழர் அமிர்தா

திருவண்ணாமலை நிலச்சரிவு: அரசின் மீது கோபத்தில் மக்கள்
| தோழர் அமிர்தா | மக்கள் அதிகாரம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



காசாவில் இருந்து! | கவிதை

காசாவில் இருந்து!

ங்களின் கண்ணீரெல்லாம்
கார்மேகமாகி இருந்தால்,
காணாமல் போயிருக்கும் இசுரேல்
கடலுக்குள்…
இதோ,
காசாவெங்கும்
ஆயிரமாயிரம் பிஞ்சுகளின்
பிணக் கடல்…

குண்டுவீச்சுகளில்
சிதைபவை
எங்கள் சிறுவர்களின்
சிரங்களும் கரங்களும் தான்,
சிறகடிக்க விரும்பும்
விடுதலைக் கனவுகள் அல்ல…

சிரசில்லா சிறார்களின்
சிதைந்த உடல்களைச்
சிலுவையாய்ச் சுமக்கிறோம்;
ஈரமில்லா வெறியர்களின்
கொட்டம் அடக்கிட,
மீண்டும் உயிர்த்தெழ
வேண்டியே விதைக்கிறோம்…

உரிமை மட்டுமா
இல்லை என்றார்கள்,
ஒருவேளை உணவும் கூடத்தான்…

பாலுக்கு ஏங்கும்
பிள்ளை கண்டு,
வடித்த கண்ணீர்
வற்றியது கடந்த காலம்;
இது,
பாலூட்டும் அன்னைகளின்
மார்புகளே வற்றும் காலம்!
இனி கொடுப்பதற்கும்
எடுப்பதற்கும் மிஞ்சியிருப்பது
எங்கள் ரத்தமே!
ஆனாலும்,
வற்றாது எஞ்சியிருக்கிறது,
விடுதலை வேட்கை!
ரத்தம் வடியினும்
மண்ணில் புதையினும்
உயிர் மிச்சமுள்ள வரை
ஓயாது எம் குரல்!

எமக்காய்ப் பேசாது
வாயைப் பொத்திக் கொள்வோரே,
முள்ளிவாய்க்காலை விட
முந்நூறு மடங்கு
ரத்தக் கவுச்சி
காற்றில் கலக்கலாம்,
அப்போது
மூக்கையும் பொத்திக் கொள்வீரோ?

எப்போதும்
உறங்கிக் கொண்டிருக்கும்
உங்கள் கடவுளை,
உசுப்பிட முனையும்
வேண்டுதல்களை நிறுத்துங்கள்;
இப்போதேனும்
உம் மனசாட்சியை எழுப்புங்கள்!
கொத்துக்கொத்தாய்க்
கொன்றிடும் யூத வெறியர்கள்
எம்மை மொத்தமாய்க்
கொன்றுவிடும் முன்னே…

நேற்று ஈழம்,
இன்று நாங்கள்,
நாளை நீங்கள்…
இது சத்தியம்!

வடியும் குருதி,
மடியும் மக்கள்
போதும் போதும்
போரை நிறுத்தென
போராடும் மக்களைப் பாருங்கள்,
தோள்சேருங்கள்…
அப்போது
எம் பலம் பெருகும்,
பாலஸ்தீனம் மலரும்…
அது நிச்சயம்!


ஜிப்ஸி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram