Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 510

விழுப்புரம் : சமூகவிரோதிகளுக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை !

1

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில்  உள்ள காரப்பட்டு கிராமத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் கொடிக்கம்பம் இந்த ஆண்டு ஏப்ரல் 22 தோழர் லெனின் பிறந்த நாளன்று நிறுவப்பட்டது.

சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்ட கொடிக்கம்பம்

அந்த கொடிக்கம்பத்தை 20.09.2017 அன்று இரவு சமூக விரோதக் கும்பல் ஒன்று வெட்டி சாய்த்து, அருகில் இருந்த கரும்பு தோட்டத்தில் தூக்கி வீசியுள்ளது. அதைக் கேள்விப்பட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ’மக்கள் அதிகாரம்’ தோழர்கள் கொடிக் கம்பத்தைப் பார்த்து விட்டு, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். கொடிக்கம்பம் சாய்க்கப்பட்ட இடத்தில்  சமுக விரோதக் கும்பலை  அம்பலபடுத்தும் வகையில் தட்டி வைக்கப்பட்டது.

அதன் பிறகு அந்த சமுக விரோதக் கும்பலை அம்பலபடுத்தி, பகுதி முழுவதும் 5 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. தெருமுனைப் பிரச்சாரத்தில் கொடிக்கம்பத்தை  உடைத்தவர்களை கண்டுபிடித்து மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 24.09.2017 அன்று காலை 9:50 மணியளவில் காரப்பட்டு கிராமத்தில் இருந்து தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கொடிக்கம்பம் உள்ள இடம் வரை முழக்கமிட்டப்படி ஊர்வலமாக சென்றனர். பின்னர் மக்கள் அதிகாரம் கிளை ஒருங்கிணைப்பாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மக்கள் அதிகாரம் தோழர் ஏழுமலை கொடியினை ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து மக்கள் அதிகார மண்டல ஒருங்கிணைப்பாளர்  தோழர் கலை  கண்டன உரையாற்றினார். சமுக விரோதக் கும்பலைக் கண்டித்தும்,  கட்டமைப்பு நெருக்கடி குறித்தும் இன்றைய சூழலில் மக்கள்  அதிகாரத்தின் அவசியத்தையும் விளக்கிப் பேசினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம் மண்டலம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

தஞ்சை : வீராங்கனை கௌரி லங்கேஷுக்கு சிவப்பஞ்சலி !

2

க்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சை கிளை சார்பில் பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் -க்கு 18.08.2017 சனிக்கிழமை அன்று தஞ்சை பெசன்ட் அரங்கில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

முதல் நிகழ்ச்சியாகப் பார்ப்பன மதவெறி பாசிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு மலர் அஞ்சலியும், மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கப் பாடலுடன் தொடங்கிய சிவப்பஞ்சலி கூட்டத்திற்கு ம.க.இ.க. தஞ்சை கிளை செயலர் தோழர். இராவணன் தலைமை தாங்கினார். “மரணங்கள் பொதுவாக இரண்டாக வகைப்படுத்திப் பார்க்கப்படுகிறது. ஒன்று சுயநலனில் வாழ்ந்து இறப்பது அடுத்தது பொதுநலனில் அக்கறை செலுத்தி வாழ்ந்து இறப்பது. பொது நலனில் அக்கறை செலுத்தி வாழ்பவர்கள் காலம் கடந்தும் மக்களால் நினைவுகூரப்படுகிறார்கள். மக்கள் நலனில் அக்கறையோடு அநீதிக்கு எதிராகப் போராடி இறப்பவர்களின் பிரிவு மலையைவிட கனமானது” என்று தோழர் மாவோ கூறுவார். அப்படி மலையைவிட கனமான ஓர் பிரிவுதான் கௌரி லங்கேஷ் அவர்களின் இறப்பு.

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. குருசேத்திரப் போர் முடிந்து வெற்றிவாகை சூடி அஸ்தினாபுரத்திற்குள் பஞ்சபாண்டவர்கள் நுழைகிறார்கள். “அநீதியான யுத்தத்தை நடத்திவிட்டு வந்த நீங்கள் அஸ்தினாபுரத்திற்குள் நுழையத் தகுதியற்றவர்கள்” என்று ஒருவன் தடுத்து நிறுத்துவான். சுற்றியுள்ள பார்ப்பனக்கூட்டம் இவன் சாருவாகன் என்று கூறி, அந்த எதிர்ப்பாளனை எரித்துக் கொன்றுவிடுவர். சாருவாகன், சம்புகன், நந்தன், பெத்தான்சாம்பான், தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கௌரிலங்கேஷ் என்று வேதமத சனாதனிகளால் அழித்தொழிக்கப்பட்ட பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “சில தி.க.-காரர்கள் கருப்புச்சட்டை போட்டு நாத்திகம் பேசி வந்தார்கள். தற்போது கருப்புசட்டை போட்டு லட்சக்கணக்கில் சபரிமலை சென்று கொண்டிருக்கிறார்கள்” என்று பெருமைபட்டுக் கொண்டார். நேற்று செப்டம்பர் 17 பெரியாரின் பிறந்தநாள். சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதிலும் பெரியாரை நினைவுகூற மக்கள் திரண்டிருந்ததை நான் பார்த்தேன். கழகங்கள் பெரியார் சிலைக்கு மாலைபோட்டனர் என்ற நிலைமாறி, பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் குறிப்பாக, இளைஞர்கள் பெரியாரை நினைவு கூர்ந்ததைப் பார்க்கும் போது நமக்கு நம்பிக்கை துளிர்விடுகிறது. இது ஒரு தொடக்கம்தான்.

காவி பயங்கரவாதிகள் தங்களது திட்டத்தை அமல்படுத்துகிறார்கள் என்பது ஒருபக்கம். காவி பயங்கரவாதமும், கார்பரேட் பயங்கரவாதமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக உள்ளது. அத்வானி ரதயாத்திரை, பாபர்மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், கோவைக் கலவரம் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னால் கார்ப்பரேட்களின் நலன்களை உள்ளடக்கிய திட்டம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

கோவை கலவரத்தின் போது தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட கோவை ஜவுளித்தொழில் முடக்கப்பட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கோவை கலவரத்தின் காரணமாக, தொழிலாளர் வெளியேற்றம் – கதவடைப்புக்கு எதிராகத் தொழிற்சங்கங்கள் போராட முடியவில்லை, அனுமதிக்கப்படவில்லை.

காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த நாம் இதைப்பற்றி இன்னும் பாரதூரமாகச் சிந்திக்க வேண்டும். பெட்ரோலிய சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுப் போராட்டங்கள் ஒடுக்கப்படுவதும், காவிபயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பல் அதற்கு ஆதரவாக செயல்படுவதையும் நாம் சாதாரணமாகக் கருதக்கூடாது. கௌரி லங்கேஷ்  எதற்காகப் போராடினாரோ அதற்கான போராட்டத்தைத் தொடர்வதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் அஞ்சலி” என்று தலைமையுரையில் குறிப்பிட்டார்.

அடுத்து உரையாற்றிய மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர் சதீஷ்குமார் “கௌரி லங்கேஷ் படுகொலை மூலம் கருத்துச் சுதந்திரம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. காட்டுமிராண்டிகாலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெற்றதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நவீனம், ஜனநாயகம் இவையெல்லாம் தெரியாத காலம் அது. நவீன காலத்தில் இதுபோல நடப்பதுதான் நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. இவர்கள் மட்டுமல்ல நீதிமன்றமே கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இருக்கிறது” என்பதைத் தனது அனுபவங்கள் மூலம் விளக்கிப் படுகொலையைக் கண்டித்து அஞ்சலி செலுத்தினார்.

அடுத்து உரையாற்றிய மன்னர் சரபோஜி அரசினர் கலைக்கல்லூரிப் பேராசிரியர் வி.பாரி;  “கௌரி லங்கேஷ் போன்றவர்கள் அடங்கிப்போகும் சாமான்யர்கள் அல்ல. தீவிரவாதி, நக்சலைட், தேசவிரோதி என்ற அவதூறுகளைக் கிளப்பி அவர்களை ஒடுக்க முடிவதில்லை. அந்த எல்லைகளைக் கடந்து போராடும் போது தீர்த்துக்கட்டுவது என்று செயல்படுகிறார்கள்.

அவன் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படும்போது நாம் என்ன செய்வது. நல்லதைப் பார்க்காதே! நல்லதைக் கேட்காதே! நல்லதைப் பேசாதே! என்று காந்தி குரங்குகளாக நாம் இருக்கமுடியாது. சாரணர் இயக்கத்தேர்தலில் எச்.ராஜா பெற்றிருக்கும் தோல்வி ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி-க்குச் சமீபத்தில் கிடைத்திருக்கும் ஒரு சவுக்கடி.

அனைவரையும் ஒன்றுதிரட்டும் முயற்சியாக நடைபெற்றிருக்கும் இந்த அஞ்சலி நிகழ்ச்சி ஒரு தொடக்கமாக உள்ளது” என்று கூறி பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கெதிராக ஓர் அணியாகத் திரள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அஞ்சலி செலுத்தினார்.

அடுத்து உரையாற்றிய கவிஞர் வல்லம் தாஜுபால். “பெரியாருக்கெதிராக எழுதுவதும், பேசுவதும்தான் கருத்து சுதந்திரம் என்பதுதான் நடைமுறையாக உள்ளது. எதிர்ப்பாளர்களை மிரட்டுவது, அடங்கமறுத்தால் அழித்தொழிப்பது என்பது அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இத்தகைய அநியாயம் தொடர்ந்து அரங்கேறுவதற்கான காரணங்களில் ஒன்று நல்லவர்கள், விவரமறிந்தவர்கள் என்று கருதப்படுபவர்களின் மௌனம்தான். தப்பித்துவிடலாம் என்று கருதிப் பலர் மௌனிகளாக இருக்கிறார்கள். மெளனிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பத்திரிகைகள் சமூகத்தின் மனசாட்சிகள் என்று நம்பப்படுகிறது. சமூகத்தின் மனசாட்சி கொல்லப்பட்டுவிட்டது.

கண்ணாடி மாளிகையில் இருந்துகொண்டு அவர்கள் கல் எறிகிறார்கள். கற்குவியல் அருகில் நாம் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணரவில்லை. உணர்த்த வேண்டும்” என்று கூறி ம.க.இ.க-வின் முன்முயற்சிக்கும், தனக்கு அளித்த வாய்ப்பிற்கும் நன்றி கூறி அஞ்சலி செலுத்தினார்.

அடுத்து பேசிய த.மு.எ.ச மாநில துணைசெயலர் தோழர் களப்பிரன் “கௌரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் படுகொலைகள் ஒரே மாதிரி கொலையாக உள்ளது. கொன்றவர்கள் யார் என்று தெரியவில்லை. குஜராத் படுகொலை குற்றவாளிகள் அதிகாரத்தில் இருக்கும்போது நீதி கிடைக்காது. நேற்று சபாநாயகர் தனபாலின் ஜனநாயகப் படுகொலையைப் பார்த்தோம்.

சாரணர் இயக்கத் தேர்தலில் 52 ஓட்டுகளை எச்.ராஜா பெற்றார். அந்த 52 பேர் எப்படி வந்தார்கள்? சாரணர் இயக்கப் பேரவை கூட்டப்படவில்லை. போலி உறுப்பினர்களைச் சேர்த்து 52  ஓட்டுகளைப் பெற்றுள்ளார். 52 பேர் சாரணர் இயக்கத்தில் எச்.ராஜாவுக்கு ஓட்டு போட்டனர் என்பதை சாதாரணமாக நாம் கருதக்கூடாது. பல்வேறு இடங்களில் ஊடுருவி அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருந்து தொடர்ந்து போராட வேண்டும்” என்று தனது கருத்தைப் பதிவுசெய்தார்.

அடுத்து பேசிய பத்திரிகையாளர் கதிரவன் “ஆர்.எஸ்.எஸ்-க்கு தொங்கு சதை அமைப்புகள் ஏராளம். கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக விளங்கிய மும்பை, பூனே போன்ற பகுதிகள் தற்போது சிவசேனா ஆதிக்கத்தில் உள்ளது. அவர்கள் பெரும்பாலும் பொறுக்கிக் கூட்டத்தைப் பொறுக்கியெடுத்து முன்னிலைப் படுத்துகின்றார்கள். இதனை எச்சரிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் தாக்குதல் நிலையிருக்கிறார்கள், நாம் தற்காப்பு நிலையில் கூட இல்லை என்பதே உண்மை.

இந்தியச் சமூகம் பிற்போக்கான சமூகம் என்று சொல்லப்பட்டாலும், போராட்டங்களின் ஊடாக வளர்ந்து முன்னேறியது. நமது சமூகம், தத்துவப் போராட்டங்களில் உயர்ந்து நின்றுள்ளது. தற்போது எதிர்ப்புகள் சிதறடிக்ககப்பட்டுள்ளன. தத்துவப் போராட்டங்களை நடத்தும் அதே வேளையில் நடைமுறை போராட்டங்களையும் ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டும். அதன் தொடக்கமாக இந்நிகழ்ச்சி உள்ளதாகக் கருதுகிறேன். சமகால எழுத்தாளர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். அவருக்கு அஞ்சலி நிகழ்த்த ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.

பிறகு பேசிய தோழர் காளியப்பன் தனது உரையில் “எள் முனையளவு கூட சமரசமின்றி எழுதிய எழுத்தாளர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு இன்றி இருப்பதுதான் வருத்தத்திற்குரியது. ஊடக அறம் என்பது பின்னடைந்துள்ளது. கார்ப்பரேட் முதலாளிகள் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகம் அப்படித்தான் செயல்படும். ஊடகத்துறையில் முன் உதாரணமான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு கௌரி லங்கேஷ். பெண் இவ்வளவு வேகமாக எழுதுவது கூடாது என்று எச்சரித்தார்கள். கௌரி லங்கேஷ் எழுத்தின் ஆழம் எதிரிகளுக்கு ஆத்திரம் ஊட்டியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறையின் போது களத்தில் நின்று போராடிய போராளி கௌரி லங்கேஷ்.

சமூக ஊடகங்களில் கௌரி லங்கேஷ் பேசுவது போன்ற ஒரு செய்தி வெளிவந்துள்ளது. ‘எனது மரணம் பாதியைச் சாதித்தது. மீதியை நீங்கள் சாதிப்பீர்கள்’ என்று அந்தச் செய்தி கூறுகிறது.

கௌரி லங்கேஷ்-க்கு எதிராகப் பேசுபவர்கள் தரக்குறைவாகவும், கொச்சையாகவும் பேசுகிறார்கள். ‘கடவுளின் ஒரு திட்டம் நிறைவேறியது’ என்று ஒருவன் பேசுகிறான். ஆர்.எஸ்.எஸ் கிரிமினல் கும்பலின் ஆட்சி நடைபெறுகிறது. இதை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. ‘இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல; முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் கொலைவெறி ஆட்சிதான்’ என்கிறது நியூயார்க் டைம்ஸ்.

இஸ்லாமியர்களுக்கும். தலித்துகளுக்கும் எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் கொலை வெறிக்கு நீதிமன்றம் துணைபோகிறது. பெஹ்லுகான் மரணவாக்குமூலம் தெளிவாக இருக்கும் போதும் எதிரிகள் ஆறுபேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். நீதித்துறை பாசிசமயமாகி வருகிறது. மயில் பிரம்மசரியத்தைக் கடைபிடிக்கிறது. அதனால்தான் தேசியப்பறவையாக உள்ளது என்கிறார் ஒரு நீதிபதி. ஆசிரியர்கள் போராட்டத்தில் “நீங்கள் நீதிமன்றத்திற்கு கட்டுப்படவில்லை என்றால் உங்களது கோரிக்கை வழக்குகளை ஏற்கமாட்டேன்” என்று சிறுபிள்ளை போலப் பேசுகிறார் நீதிபதி.

நீதித்துறை இப்படி என்றால் ஊடகத்துறை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு விவாதத்தில் ‘திருப்பதியில் 18 தலித் அர்ச்சகர்கள் இருக்கிறார்கள்’ என்று ஒரு பி.ஜே.பி ஆதரவாளர் பொய் சொல்லுகிறார். மறுத்துப் பேச ஆள் இல்லை.

கௌரிலங்கேஷ் நடத்திய லங்கேஷ் இதழ் ஆர்.எஸ்.எஸ்–ஐ கடுமையாக அம்பலப்படுத்தியது. கௌரி லங்கேஷ்-ன் சகோதரர்  பி.ஜே.பிக்குச் சென்றுவிட்டார். சகோதரரைப் புறக்கணித்து லங்கேஷ் இதழை நடத்தினார் கௌரி லங்கேஷ். விளம்பரம் வெளியிடாத பத்திரிகை என்ற சிறப்பை அவரது பத்திரிகை பெற்றது.

இறுதிக்காலத்தில் தன்னைவிட்டு விவாகரத்து வாங்கிப் பிரிந்து வாழ்ந்த கௌரி லங்கேஷ் பிரிவிற்குப் பிறகும் காட்டிய பரிவை அவரது கணவர் பதிவு செய்திருக்கிறார். எவ்வளவு உயர்ந்த மனிதாபிமானி என்பதை எடுத்துக்காட்டும் எண்ணற்ற சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பெரும் மனிதாபிமானியும், பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிரான போராளியுமான கௌரி லங்கேஷ்-க்கு செலுத்தும் அஞ்சலி என்பது அவர் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வதுதான்” என்றார்.

இறுதியாக நிறைவுரையாற்றிய மூத்தப்பத்திரிகையாளர் அருள் எழிலன் பேசியதாவது,

“பெண் ஒருவர் மீது மோட்டார் வாகனம் மோதி பெண் இறந்துவிடுகிறார். அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனர் ‘மாட்டின் மீது மோதாமல் பெண்மீது மோதினேன். பெண் இறந்தற்காக ஏதாவது தண்டனை கிடைக்கலாம். மாட்டின் மீது மோதியிருந்தால் கொலை செய்யப்பட்ருப்பேன்” என்றார்.

முட்டவரும் மாட்டைக் கல் எறிந்து விரட்டியதற்காகப் பெண்ணை அடித்தார்கள் என்றால் எப்படிப்பட்ட நிலைமை என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.

சக பத்திரிகையாளன் என்ற முறையில் இந்த அபாயத்தை நான் உணர்ந்தே இருக்கிறேன். உயிரைப் பறிப்பார்கள் என்பதை கௌரி லங்கேஷ் உணர்ந்திருக்கவில்லை. மதவெறியர்கள் செயல்பாடுகளை நேரில் சென்று பார்த்தவன் என்ற முறையில் கூடுதலாகவே நான் உணர்ந்திருக்கிறேன். உணர்ந்தே கடமையாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

பார்ப்பனர்களுக்கெதிரான போராட்டம் நடத்தப்பட்ட தமிழகத்தில் மண்டைக்காடு கலவரம் நடந்ததை மறக்கமுடியாது. விவேகானந்தர் பாறைதான் அதன் தொடக்கம். ஒரு தாய் மக்களாகப் பழகிய மீனவர்கள், நாடார்கள் எதிரிகளாகப் பிளவுபட்டு மோதிக்கொண்டார்கள். ஆறு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். கோவை கலவரத்தை நடத்தினார்கள். அது எடுபடவில்லை.

போராட்டச் சூழலில் நடுநிலை என்று ஒன்று இருப்பதாக தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் நடுநிலையானது என்று நான் நினைக்கிறேன்.

ஊடகங்களில் விவாதம் என்ற பெயரில் நான்கு பேரில் ஒருவர் பி.ஜே.பி, மற்றொருவர் மோடி ஆதரவாளர், மூன்றாவது நபர் சமூக ஆர்வலர் என்ற பெயரில் அவரும் பி.ஜே.பி மூன்று பேரும் சேர்ந்து நெறியாளரை மிரட்டுவார்கள். விவாதத்தில் மதிமாறனுக்கு எதிராகப் பேசிய ஆர்.எஸ்.எஸ் நாராயணன் “அதற்கான விலையைக்” கொடுக்க வேண்டும் என்றார். அவர் கூறும் விலை என்பது என்ன? ஜனநாயகமே இல்லாமல் ஜனநாயகவாதியாக நடிப்பதுதான் இன்றைய ஊடகத்தின் நிலை” என தனது உரையில் பேசினார்.

நிறைவாக பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவுற்றது.கொட்டும் மழையிலும் 100 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

-வினவு செய்தியாளர்.

_____________

பார்ப்பனப் பாசிசத்திற்கெதிராக தொடர்ந்து போராடி வரும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

போர்னோ : உங்களுக்காக மலம் சுவைக்கும் நடிகைகள் !

77

போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம் – பாகம் 3

1993-ம் வருடத்தில் போர்னோ உலகில் நுழைந்தேன். இது நாள் வரை ஒரு விபச்சாரியாக, ஆபாச நடன மங்கையாக வாழ்ந்த எனக்கு நடிப்பு மற்றும் வெகு இயல்பாகப் பொய் பேசும் திறமை நன்றாக வளர்ந்திருந்தது. பணத்திற்காக உடல், உடலுக்காகப் பணம்; இதற்காகத் தான் எல்லாமே என்ற புரிதலில் போர்னோ உலகில் நுழைந்தேன்.

முதல் நாள் ஷூட்டிங்கிற்காக நான் தயாராகினேன். தலைமுடிக்கு வர்ணம் பூசி, அழகான குட்டைப் பாவாடை அணிந்து ஒரு ஹாலிவுட் நடிகையைப் போன்று என்னை அலங்கரித்துக் கொண்டு கொஞ்சம் மதுவும் அருந்தி விட்டு அந்த இரகசிய வீட்டிற்குள் சென்றேன். அந்த வீட்டிற்குள் நுழைந்தவுடனே ஒரு கரும்புகை என்னை ஆட்கொண்டது. ஆம் அது சிகரெட் புகை. ஒரு அறையிலிருந்து என்னை ஒரு மனிதன் அழைப்பதை உணர்ந்தேன்; ஆனால் வீடு முழுவதும் புகை படிந்திருந்ததால் அவர் முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

அந்த அறையின் மூலையில் மிகப்பெரிய வீடியோ கேமரா சுவற்றில் பதிக்கப்பட்டிருந்தது. அந்தக் கேமராவின் லென்ஸ் எதிரிலிருந்த ஒரு சோபாவை முழுதாகக் கவர் செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. எனக்கு இப்போது எல்லாமே தவறாகத் தெரிந்தது. நான் தவறான உலகத்திற்குள் நுழைந்து விட்டேனா? எண்ணற்ற கேள்விகள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

ராக்சியின் போர்னோ வாழ்க்கை

நீதான் அந்த சமந்தா சொல்லியனுப்பிய பெண்ணா என்று அந்த ஆண்குரலின் கேள்வி என் சிந்தனைக்குத் தடைபோட்டது. உடனே ஆம் என்றபடி என்னுடைய மருத்துவ சோதனைச் சான்றிதழை அவரிடம் நீட்டினேன். ம்ம்ம்… நீ இந்தத் தொழிலில் சிறந்த பெயரெடுப்பாய் என்று அவர் எனக்கு சான்றிதழ் கொடுத்தார்.

சரி அடுத்த அழைப்பு வருவதற்குள் கொஞ்சம் மது அருந்திவிட்டு வரலாமென்று நினைத்து அங்கிருந்த குளியலறைக்குள் சென்று மது அருந்தினேன். சரி நான் நடிக்கப்போகும் ஆணுடன் என்னை எப்படி அறிமுகம் செய்து கொள்ளப்போகிறேன்?? “ஹாய்! நான் ராக்கி! இன்று நான் உங்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளப் போகிறேன்! “ ம்ம்ம்…இது சரியில்லை “ஹாய்! உங்களை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி; நாம் இருவரும் இன்று நடிக்கப்போகிறோம்!“ . இது நல்ல அறிமுக வார்த்தைகளாகத் தோன்றியது. மறுபடி சில முறை கண்ணாடியைப் பார்த்து சொல்லிக் கொண்டேன்.

திடீரென ஷுட்டிங்-கிற்கு தயாராகுமாறு அந்த டைரக்டரிடமிருந்து அழைப்பு வந்தது. அங்கே சில பெண்கள் உடையில்லாமல் நின்று கொண்டிருந்தனர். சில ஆண்களும் அங்கே இருந்தனர். போர்னோ டைரக்டர் அன்றைய தினம் எடுக்கப்போகும் படம் குறித்துப் பேச ஆரம்பித்தார்.

கதை என்னவென்றால் ஒரு கல்லூரிப் பேராசிரியர் தன்னுடைய குறும்புக்கார மாணவிகளுக்குக் காமவிளையாட்டுக்கள் குறித்து செய்முறை வகுப்புக்கள் நடத்திக் காண்பிப்பதாம். அப்படியென்றால் நான் என்னை அறிமுகம் செய்து கொள்வதற்காகச் கண்ணாடி முன் செய்த தயாரிப்புக்கள்?? என்ன ஒரு முட்டாள்தனம் செய்தேன்; என்னையே நான் நொந்து கொண்டேன் அந்தத் தருணத்தில்.

ஒரு வழியாக நான் கேள்விப்படாத அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கதையை அந்த டைரக்டர் ஸ்பீல்பெர்க் ரேஞ்சுக்கு சொல்லிமுடித்து விட்டு “ஓகே..ஷூட்டிங் ஆரம்பிக்கலாம்” என்று சொன்னார்.

போர்னோ பெண்களைக் கொச்சைப்படுத்துகிறது

“லைட்ஸ், கேமரா, ஆக்‌ஷன்” ஆண்கள் ஒவ்வொருவராக உடைகளைக் கழட்டி எறிந்தனர். என்னுடன் இருந்த சக பெண் ஒருவர் பேராசிரியராக நடிக்கவிருந்த ‘அந்த’ நபரிடம் சென்று எனக்கு நன்றாக வகுப்பு எடுக்க முடியுமா என்று கேட்டு என்னையும் காண்பித்து அவளுக்கும் இது குறித்து ஒன்றும் தெரியாது; எனவே அவளுக்கும் சேர்த்து வகுப்பெடுங்கள் என்று கூற உடனே எனக்குக் கோபம் வந்துவிட்டது.

எத்தனை நபர்களைப் பார்த்திருப்பேன்; சட்டப்பூர்வமற்ற அந்தத் தொழில்களிலேயே சமாளித்தவள் நான்; போர்னோ சட்டப்பூர்வமானது தானே இதில் எனக்கு என்ன கற்றுத்தரவேண்டியுள்ளது. வா! நான் உனக்குக் கற்றுத்தருகிறேன் என்று அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்தேன். உடனே டைரக்டர் “ ராக்சி! உன் நடிப்பு வெகு இயல்பாக உள்ளது! நீ வெகுவிரைவில் போர்னோ உலகின் ராணியாவாய்” என்று உசுப்பி விட்டார்.

போதாக்குறைக்கு ஜாக் டேனியல் வேறு நிறைய உள்ளே சென்றதால் எனக்கு மேலும் சாதிக்க வேண்டும் என்ற அற்ப வெறி அதிகரிக்க அந்தப் பெண்ணால் என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் திடீரென டைரக்டர் குறுக்கிட்டு ஓகே இப்போது இந்தப் படத்தின் முக்கியமான காட்சிக்கு வந்துவிட்டோம்; “ராக்சி, உன் கவர்ச்சியான கண்களைக் காட்டு: கேமராவை ராக்சியின் கண்களை நோக்கித் திருப்புங்கள்” என்று கட்டளையிட்டார்.

சக பெண்ணிடம் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பேராசிரியர் தன் ஆணுறுப்பை வெளியில் எடுத்து விந்தணுவை என் முகத்தின் மீது தெளிக்க விட்டார். பெருத்த அவமானத்துடன் கோபமும், அழுகையும் பீறிட்டு வர மற்றவர்களிடம் காண்பிக்க முடியாமல் அந்த நடவடிக்கையை வரவேற்பது போல நடித்தேன். நடிப்பு எனக்குப் புதிதா என்ன? எல்லாவற்றையும் மீறி சில கண்ணீர்த் துளிகள் வெளிவந்தன.

ஆஹா! என்ன ஒரு அருமையான காட்சி! என்று டைரக்டர் கைதட்டினார். உடனே அருகிலிருந்த ஆண் ஒருவர் என் மீது ஈரக் காகிதங்களை வீசினார். முகம் முழுவதும் தெளிக்க விடப்பட்ட விந்தணுக்களைத் துடைத்த அவமானம் தாங்க முடியாமல் செத்துப் போய்விடலாமா என்று நினைத்தேன். ஆனால் எக்காரணம் கொண்டு என் சோகத்தை வெளியில் யாருக்கும் காண்பிக்கக்கூடாது என்று வைராக்கியத்துடன் இருந்தேன்.

பெண்கள், குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறையின் ஊற்றுக்கண் வேறு எதுவுமல்ல…போர்னோ தான்.

டைரக்டர் என்னைப் புகழ்ந்த கையோடு அடுத்த படத்திற்கான ஆயத்த வேலைகளில் இறங்கியிருந்தார். என் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும் போது டைரக்டர் என்னிடம் அந்த நாளுக்கான பணத்தைக் கொடுத்து கூடவே பிரபல போர்னோ டைரக்டர் பாபி ஹொலாந்தே -யின் விசிட்டிங் கார்டையும் என் கையில் கொடுத்து அவரைப் போய் பார் என்றார்.

கையில் பணம், இரத்த நாளங்களில் மது பானம், மனதில் எல்லையில்லா வெறுப்பு, அடுத்த போர்னோ நட்சத்திரம் ஆக வேண்டுமென்ற வெறியுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறினேன்.

ஆண்கள் மீது ஏற்பட்ட இயல்பான வெறுப்பு மற்றும் போர்னோ உலகில் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறியுடன் தீவிரமாக நடிக்க முடிவெடுத்தேன். லாஸ் ஏஞ்செல்சில் உள்ள வான் நைஸ்-இல் நான் நடித்த படம் போர்னோ உலகின் புகழ்பெற்ற இயக்குனரான பாபி ஹொலாந்தேவை ஈர்த்துவிட்டது போலும்.

என்ன ஒரு அழகான இடை உனக்கு? இது பாபி ஹொலாந்தே. கழுத்தில் ஒரு பட்டைச் செயினுடன் பார்ப்பதற்கு ஒரு ரவுடி போல இருந்தார் அவர். என்னை அழைத்து அவருடைய மடியில் அமர வைத்துத் தடவிக்கொண்டே “நீ மிகவும் அழகாக இருக்கின்றாய். என்னுடைய அடுத்த படத்தில் நீ தான் நடிக்கப்போகிறாய்” என்றார். எனக்கோ ஹாலிவுட் மாடல் ஆக வேண்டும் என்று விருப்பம் என்றேன். போர்னோ படங்களில் நீ சிறப்பாக நடித்தால் ஹாலிவுட் வாய்ப்புக்கள் தானாகத் தேடி வரும் என்று அவர் சொல்லியதை முழுவதுமாக நம்பிவிட்டேன்.

1993 -ல் பாபி ஹொலாந்தேவுக்காக நான் நடித்த அந்தப் படத்தை, நான் நடித்த போர்னோ படங்களிலேயே உண்மையான போர்னோ படம் என்று சொல்லலாம். பிரம்மாண்டமான பண்ணை வீட்டிற்குள் நுழையும் போதே பதற்றத்துடன் தான் நுழைந்தேன். பாபி என்னுடைய பதற்றத்தைப் புரிந்து கொண்டு என்னைத் தோளில் அரவணைத்துக் கொண்டே அங்கிருந்த ஆண்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். இவள் தான் போர்னோ உலகின் அடுத்த இராணி என்ற அளவுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

ஒரு ஹாய் என்ற புன்னகையுடன் தலைகுனிந்து நின்றேன். என்ன தான் போர்னோ தொழில் என்றாலும் பட்டப்பகலில் வெட்டவெளியில் நிர்வாணமாய் நிற்கும் ஆண்களிடம் சென்று எப்படி நான் கைகுலுக்க முடியும்? அதுவும் அறிமுகமே இல்லாத அந்த ஆண்களிடத்தில்?

பாபியிடம் பாத்ரூம் எங்கே இருக்கிறது என்று கேட்டு அங்கே உடனடியாக விரைந்தேன். பையில் வைத்திருந்த வோட்காவை உள்ளே தள்ளி விட்டு, என்னால் இங்கு துளியும் இருக்க முடியாது என்ற மனநிலைக்கு வந்தேன். சில நிமிடங்களில் பாத்ரூம் கதவு தட்டப்பட்டது. யாரென்று கேட்கையில் ஒரு பெண் குரல் “ஏ! பெண்ணே எனிமா உனக்குத் தந்துவிட்டார்களா?” என்று கேட்க எனக்கு ஒன்றும் புரியாமல் “எனக்கெதற்கு எனிமா” என்று திருப்பிக் கேட்டேன். ஓ! அது தெரியாதா உனக்கு? எனிமாவைப் பயன்படுத்தி மலக்குடலைச் சுத்தம் செய்தால் தான் செக்ஸ் பொம்மையைப் உன் மலத்துவாரத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும் என்று அந்தப் பெண் கூறினாள்.

மீதமிருந்த வோட்காவை உள்ளே தள்ளிவிட்டு, என்னிடம் ஆசை வார்த்தைகள் பேசி நல்லது செய்வதாகப் பொய் பேசி நடித்து, என்னைப் படுகுழியில் தள்ளிய அந்த பாபியின் படத்தில் நடித்த அனுபவம் சொல்லி மாளாதது. அதைச் சொல்லும் அளவுக்கு எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் என்னிடம் எனிமா குறித்து கேட்ட அந்தப் பெண் செயற்கை ஆணுறுப்பை என் மலக்குழாயில் திணித்து என்னை வதைத்த கொடுமையை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை.

மறுபடியும் செத்து விடலாமா என்று நினைத்தேன். இனியும் போர்னோ படங்களில் நடிக்கக்கூடாது என்று சபதமெடுத்தேன். உடனடியாக எனக்குத் தெரிந்த ஹாலிவுட் தொடர்புகளிடம் பேசியதில் ஒரு வாய்ப்பு ஒன்று கிடைத்தது. “டான் ஜுவான் டிமார்கோ” என்ற படத்தில் 250 பெண்கள் பழங்காலத்து அரசன் ஒருவனின் அந்தப்புற மாளிகையில் நிர்வாணமாக இருக்கும் காட்சி படமாக்கப்படவேண்டும். அதற்கான தேர்வுக்குச் சென்றபோது பல நூறு பெண்கள் அந்த வாய்ப்பைத் தேடி வந்திருந்தனர். அதில் நான் தேர்வு செய்யப்பட்டேன்.

போர்னோவில் பெண்கள் வெறும் இறைச்சி உணவாக மட்டும்…

ஹாலிவுட் வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையில், பணம் பிரதான தேவையான போது வேறு வழியின்றி மீண்டும் போர்னோ உலகிற்குள் நுழைந்தேன். ஆனால் ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தேன். ஆண் மிருகங்களிடம் சிக்கி வதைபட்டு இறுதியில் எல்லா எச்சங்களையும் முகத்தில் சிந்தவிடும் அந்தக் காட்சிகள் என்னை மிகவும் பாதித்திருந்தபடியால் இனியும் ஆண்களுடன் சேர்ந்து நடிப்பதில்லை என்பதில் தெளிவாக இருந்தேன்.

கொலை மிரட்டல், பண மோசடி, நோய்கள் இப்படி எதுவுமே இங்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது. நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விதித்த நிபந்தனைகள் அத்தனையையும் காற்றில் பறக்கவிட்டனர். எதையெல்லாம் செய்ய முடியாது என்று சொன்னேனோ அவையனைத்தையும் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

கொஞ்சம் கூட பாதுகாப்பில்லாத வகையில் உடலுறவுக் காட்சிகள் படம்பிடிக்கப்படும். ஆபாசப் படங்களில் கண்டிப்பாக ஆணுறை அணிய வேண்டும் என்பது அமெரிக்கச் சட்டம். ஆனால் பார்ப்பதற்கு இயல்பாக இருக்காது என்ற காரணத்தால் ஆணுறை இல்லாமலேயே படம் பிடிக்கப்படும். மொத்தத்தில் ஆபாசப் படத்தொழிலை பாலியல் கடத்தல் தொழில் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

பெரும்பாலும் இரகசிய வீடுகளுக்குள் படம்பிடிக்கப்படுவதால் பெண் என்ற முறையில் எங்கள் குரலை உயர்த்திப் பேசக்கூட அனுமதியில்லை. பல ஆண்கள் ஒன்று சேர்ந்திருக்கையில் எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? கொடுக்கப்படும் போதைப்பொருட்களை உட்கொண்டுவிட்டு அவர்கள் சொல்வதை நிறைவேற்றித்தரவேண்டும்.

ஆபாசப் படம் எடுக்கப்படும் இரகசிய வீடுகள் இயக்குனர்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டில் இருக்கும். சில சமயங்களில் பல ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டி நிர்ப்பந்திப்பார்கள். சில சமயங்களில் வலி தாங்காமல் அழுகை வரும். ஒருவேளை அப்படி அழுதுவிட்டால் முகத்தில் குத்து விழும் அல்லது சம்பளம் கிடைக்காது. வாயும் வயிறும் இருக்கின்ற ஒரே காரணத்தால் வேறு வழியில்லாமல் அத்தனை பேருக்கும் ஈடுகொடுத்தேயாக வேண்டும்.

ஒரு முறை மிக மோசமான காம வெறியன் ஒருவன் என்னுடைய அனுமதியின்றி என்னுடைய மலத்துவாரத்தில் தன்னுடைய ஆணுறுப்பைத் திணித்து உடலுறவு கொண்டான். நரக வேதனையால் துடித்த எனக்கு அழுகையைக் கட்டுப்படுத்த இருந்த ஒரே வழி என்ன தெரியுமா? என் முன்னாலிருந்த நின்று கொண்டிருந்த இன்னொரு ஆணின் பிறப்புறுப்பை வலுக்கட்டாயமாக வாயில் திணித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை. மிகக் கொடூரமான மனித சித்திரவதை அது.

ஆனால் இது போன்ற படங்கள் உங்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டு இணையத்தில் நீங்கள் பார்க்கும் போது பிரமாதமானதாகத் தெரியும்; ஆனால் உண்மையில் அப்படியல்ல… முகம், கண், வாய் தொடங்கி பிறப்புறுப்பு வரை தெளிக்கப்பட்ட மூத்திரம், விந்தணு, இரத்தம் மேலும் மலத்துவாரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆணுறுப்பில் இருந்து வெளிவரும் நாற்றம், அதை வாயில் வேறு வைத்துத் திணிப்பார்கள்; மறுப்பு தெரிவிக்க ஏது வாய்ப்பு; என்ன இருந்தாலும் நான் ஒரு இகழ்ச்சிக்குரிய பெண்ணல்லவா? எனவே இப்படி சகித்துக் கொள்ள முடியாத காட்சிகள் இங்கு மிகவும் சாதாரணம்.

பாத்ரூம்கள் குறித்து சொல்ல வேண்டியதேயில்லை. எனிமா எனப்படும் மலக்குடலைச் சுத்தம் செய்யும் மாத்திரைகள், ஆங்காங்கே வீசியெறியப்பட்ட சேவிங் பிளேடுகள்…அப்பப்பா ஏன் தான் இந்த போர்னோ படங்களை இரகசிய வீடுகளில் வைத்து எடுக்க அனுமதிக்கின்றார்களோ தெரியவில்லை. நடக்கும் வழியெங்கும் எச்சில், இரத்தம்,மூத்திரம், துடைத்தெறியப்பட்ட காகிதங்கள் என சுகாதாரம் கொஞ்சம் கூட இருக்காது. ஆனால் என்னை இந்த உலகத்திற்குள் அழைத்து வரும் முன்னர் அவர்கள் பேசியதில் என்னை வெகுவாக ஈர்த்தது சுகாதாரம் குறித்த அவர்களின் உத்திரவாதம் தான்.

சரி ஆண்களுடன் நடிக்கப்போவதில்லை என்றால் மாற்றுவழி என்ன? பெண்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதுதான். அதில் எனக்கு ஈடுபாடில்லை என்றாலும் முந்தையதுடன் ஒப்பிடுகையில் சக பெண்ணைப் பார்த்தவுடன் காம உணர்ச்சி ததும்பி வழிவது போல் நடிக்க வேண்டும் அவ்வளவுதான். நடிப்பு, பொய், வெற்றுவேடம் இரத்தத்தில் ஊறிப்போய் விட்டது.

இப்படி நடித்துக்கொண்டிருக்கையில் ஒரு லெஸ்பியன் படத்தில் விந்தையான நிகழ்வைச் சந்தித்தேன்; ஆம் படுக்கையறையில் அமெரிக்க தேசியக்கொடியை மெத்தை விரிப்பாகப் பயன்படுத்தியிருந்தனர்.

என் சிறு வயதில் நான் தேசப்பற்றுடன் இருந்த நிகழ்வு இப்போது என்னைச் சூழ்ந்து கொண்டது. 1976-ம் ஆண்டு நடந்த அமெரிக்கப் புரட்சிகரக் கொண்டாட்டங்களின் 200-ம் ஆண்டு நிகழ்வின் போது என் தாய்க்கு அமெரிக்க தேசியக்கொடி பதித்த ஒரு தட்டை வாங்கி பரிசளித்தேன். அந்தச் சிறுமி எப்போதோ இறந்து விட்டாள்.

வாழ்க்கை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது. எனக்கு நன்கு அறிமுகமான போர்னோ டைரக்டர் ஒருவர் என்னை ஒரு நாள் அணுகி “ராக்சி! உன்னுடைய படங்களுக்கு இப்போது மவுசு குறைந்து கொண்டு வருகிறது. எனவே நீ ஏன் ஒரு போர்னோ நடிகையாக விபச்சாரம் செய்யக்கூடாதென்று கேட்டார். விபச்சாரமே வேண்டாமென்று தானே இந்தத் தொழிலுக்கு வந்தேன் என்று பதிலளித்தேன். இது அப்படிப்பட்ட விபச்சாரமல்ல, போர்னோ உலகில் உனக்கு இரசிகர்களாக இருக்கும் பெரிய மனிதர்களிடம் வார இறுதியைச் செலவிட்டால் உனக்கு 2500 அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என்றார்.

ஒரு பணக்கார வக்கீலிடம் 2,500 அமெரிக்க டாலர்களுக்கு விலை போனேன். சென்ற பிறகு தான் தெரிந்தது அந்த ஆள் ஒரு மோசமான போதை வண்டி என்று. என்ன செய்ய, இரண்டு நாட்கள் தானே. தொடர்ச்சியாக மணிக்கணக்கில் அந்த மிருகம் என்னைக் கொடுமைப் படுத்தியது. போதாத குறைக்கு ஆணுறையை வேறு அணியமாட்டேன் என்று ஆணவத்துடன் கூறி என்னைச் சிதைத்தது.

2,500 டாலர்களுடன் வீட்டிற்குத் திரும்பிய நான் இரண்டு நாட்களாகப் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. அப்படி ஒரு உறக்கமும் ஓய்வும் தேவைப்பட்டது. பிறகு மறுபடியும் ஆபாசப் படங்களில் நடிப்பது என்று வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது நான் வெகுவாக மாறிவிட்டேன்.

பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு விபச்சாரத்தால் பாதிக்கப்பட்ட நான் ஒரு கட்டத்தில் மற்றவர்களை அதாவது என்னுடன் படத்தில் நடிப்பவர்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்த ஆரம்பித்து விட்டேன். இது போர்னோ பட இயக்குனர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டிக் கொடுக்க, அவர்கள் மேலும் என்னை இவ்வாறு செய்யத் தூண்டினர். இப்படி என்னுடைய மிருக குணத்தை வைத்து அவர்கள் நல்ல காசு பார்த்தனர்.

ஹெர்பெஸ் நோய்த் தாக்குதலுக்குட்பட்டவரின் உதடுகள்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயங்கி வரும் என்னைப் போன்ற பெண்களுக்கு வரும் நோய்களுக்குப் பஞ்சமா என்ன? ஏறக்குறைய 30 படங்களில் நடித்த பிறகு எனக்கு இரண்டு கொடிய பால்வினை நோய்கள் வந்தது. அதில் ஹெர்பெஸ் (Herpes) எனப்படும் நோய் மிகக் கொடூரமானது. இதைக் குணப்படுத்த மருந்துகளும் இல்லை. ஒரு நாள் காலையில் நான் தூக்கத்திலிருந்து எழுந்த போது 103 டிகிரி அளவுக்குக் காய்ச்சல் அடித்தது. முகமெல்லாம் வெளிறிப்போய் என் முகத்தைக் கண்ணாடியில் கூட பார்க்கத் துணிவின்றி, மருத்துவரிடம் சென்றேன்.

மருத்துவரோ உனக்கு வந்திருக்கும் ஹெர்பெஸ் நோய் இது வரை நான் கண்டிராத மிக மோசமான பாதிப்புக்களை உனக்கு ஏற்படுத்தியுள்ளது என்று அதிர்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் என்னுடைய இரத்த மாதிரிகளை சோதனைக்காக எடுத்துக்கொண்டார். இது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. உலகத்திலிருந்து தனித்து விடப்பட்டதைப் போல உணர்த்தேன்; தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு நல்ல வழி எனக்கு அப்போது தெரியவில்லை; வலி நிவாரணிகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் சாகாமல் பிழைத்தேன்.

என் உடலில் எங்கு பார்த்தாலும் ஹெர்பெஸ் நோயின் தாக்கம் வெளிப்பட்டது. உதடுகள், தொண்டை, பிறப்புறுப்பு, மலத்துவாரம் என எல்லா இடங்களிலும் இந்த நோய் என்னை வாட்டி வதைத்தது. இனியும் போர்னோ உலகத்தில் இருப்பது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்தபின் விபச்சாரத்திற்குள் நுழைவது சரியென்று பட்டது. அது மட்டுமே எனக்கு முன்னிருந்த வாய்ப்பு என்பது வேறு கதை. ஆணுறை அணிந்தால்தான் உறவு என்று நிபந்தனை விதித்து விபச்சாரம் செய்வது சாத்தியம் என்று நினைத்தேன். ஆனால் வாழ்க்கை வேறு வழியில் என்னை அழைத்துச் சென்றது…

(தொடரும்)

-வரதன்

(இக்கட்டுரையின் முந்தைய பாகத்திற்கு செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்)

 _____________

இந்தக் கட்டுரை பிடித்திருக்கிறதா? மக்களின் விழிப்புணர்ச்சிக்கு போராடும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சிக்கியது வெள்ளை ! தப்பியது கருப்பு !! – மோடியின் பணமதிப்பழிப்பு !

0

பணமதிப்பழிப்பு நடவடிக்கை : சிக்கியது வெள்ளை ! தப்பியது கருப்பு !!

”கருப்புப் பணத்தின் மீது தொடுக்கப்பட்ட துல்லிய தாக்குதல்” என மெச்சப்பட்ட நரேந்திர மோடி அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை, சொல்லிக்கொள்ளப்பட்ட அந்த நோக்கத்தில் கடுகளவைக்கூட நிறைவேற்ற முடியாமல், கேவலமான முறையில் படுதோல்வி அடைந்துவிட்டது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2016 – 17 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையின் வழியாக இந்த உண்மை வெளியே வந்திருக்கிறது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட ஒரு வாரம் கழித்து, அதனை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மைய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, ”காஷ்மீரிலும், வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும் தீவிரவாதத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் 4 இலட்சம் கோடி ரூபாய் முதல் 5 இலட்சம் கோடி ரூபாய் வரையிலான கருப்புப் பணம் முடக்கப்பட்டுவிடும்” என ஆணித்தரமாக அறிவித்தார்.

இந்திய அரசு வங்கியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நவம்பர் 23, 2016 அன்று வெளியிட்ட அறிக்கையில், ”2.4 இலட்சம் கோடி ரூபாய் முதல் 4.8 இலட்சம் கோடி ரூபாய் வரையிலான பணம் வங்கிக்குத் திரும்பாது. இந்தப் பணம் முழுவதும் அரசுக்குக் கிடைத்த இலாபமாகக் கருதப்பட்டு, அந்தப் பணம் நாட்டின் அடிக்கட்டுமானப் பணிகள் தொடங்கி பலவற்றிலும் மூலதனமாகப் போடப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

”நாட்டைத் தூய்மைப்படுத்தும் மகாயாகத்தைத் தொடங்கியிருக்கின்றேன். இதில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பங்குபெற வேண்டும். இதனால் ஏற்படும் துன்பங்களை எனக்காக, 50 நாட்களுக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார், மோடி.
ஐம்பது நாட்கள் அல்ல, கடந்த பத்து மாதங்களாகப் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்குக் கிடைத்தது என்ன? சமையல் எரிவாயு மானியம் ரத்து, பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்வு, ரேஷன் அரிசியின் மீது தொங்கவிடப்பட்டிருக்கும் கத்தி, வங்கி சேவைக் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி. வரிக்கொள்ளை ஆகிய பொருளாதாரத் தாக்குதல்கள்தான் பொதுமக்களுக்குக் கிடைத்த சன்மானம்.

சரி, இது போகட்டும், உள்நாட்டில் புழுங்கும் கருப்புப் பணத்தையாவது மோடி அண்ட் கம்பெனி முடக்கியதா என்றால், அதிலும் படுதோல்வி அடைந்துவிட்ட உண்மை இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பாக 15.44 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திலிருந்தன. அதில், 15.28 இலட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வந்துவிட்டதாக ஒப்புக் கொள்கிறது, ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை. வங்கிக்குள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்ட பணம்தான் கருப்புப் பணம் என்ற அளவுகோலின்படி பார்த்தால், வெறும் 16,000 கோடி ரூபாய் பணத்தைத்தான் மோடியின் நடவடிக்கை கருப்புப் பணமாக முடக்கியிருக்கிறது.

மைய அரசின் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரமொன்றில், ”2013 – 14 ஆம் ஆண்டு தொடங்கி, வருமான வரித்துறை ஒவ்வொரு ஆண்டும் 10,000 முதல் 11,000 கோடி ரூபாய் வரையிலான கணக்கில் காட்டப்படாத தொகையைக் கண்டுபிடித்து வருவதாக”க் கூறப்பட்டிருக்கிறது. இதோடு ஒப்பிட்டால், வெறும் 16,000 கோடி ரூபாயைக் கண்டுபிடித்திருக்கும் மோடியின் துல்லிய தாக்குதலை, நமத்துப் போன பட்டாசு என்றுதான் குறிப்பிடமுடியும்.

வங்கிக்கு வராமல் வெளியே இருப்பதாகக் கூறப்படும் இந்த 16,000 கோடி ரூபாயிலும், ஏறத்தாழ 8,000 கோடி ரூபாய் – 1,000 மற்றும் 500 ரூபாய் தாள்களாக இந்தியா வெங்கிலுமுள்ள மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் இருப்பதாகவும், அந்தப் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுவன்றி, இந்தியாவின் அண்டை நாடான நேபாள மத்திய வங்கியிலுள்ள 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களையும் திரும்ப எடுத்துக் கொள்வது தொடர்பாக இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் முடக்கப்பட்ட கருப்புப் பணம் எனச் சொல்லிக்கொள்ள ஒரு பைசாகூடத் தேறாது என்பதே உண்மை.

’மலையைக் கெல்லி எலியைப் பிடித்த’ பழமொழியோடுகூட ஒப்பிடத் தகுதியில்லாதது மோடியின் நடவடிக்கை. மக்களிடமிருந்த சிறுவாடு காசைக்கூட விட்டுவிடாமல் உறிஞ்சிக்கொண்ட மோடியின் நடவடிக்கை, ஒரு சுண்டெலியைக்கூடப் பிடிக்க வக்கின்றித் தோற்றுப்போய் நிற்கிறது. அதேசமயம், அவரது சுயதம்பட்ட நடவடிக்கைக்கு விவசாயிகளும், தொழிலாளர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தமது வாழ்க்கையையே விலையாகக் கொடுக்க வேண்டிய நிலைக்கு அல்லவா தள்ளப்பட்டனர்.

பணவரத்து சுருங்கிப் போனதால், விவசாயிகள், தாம் விளைவித்த தானியங்களை விற்க முடியாமல் தெருவில் கொட்டினார்கள். கூட்டுறவு சங்க கடன்களை நம்பி சாகுபடியைத் தொடங்க எண்ணியிருந்த விவசாயிகள் கந்துவட்டிக் கும்பலை நோக்கித் துரத்தப்பட்டார்கள். கூலிப் பணம் கொடுக்க வழியில்லாததால், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள்.

திருமணத்திற்கும், மருத்துவத்திற்கும் சேர்த்து வைத்திருந்த பணம் செல்லாது போன நிலையில், பலரும் செய்வதறியாது தவித்துப் போனார்கள். ஓய்வூதியப் பணத்தை வங்கியிலிருந்து எடுக்க முடியாத முதியவர்கள், மருந்துக்கும் சாப்பாட்டுக்கும் வழிதேடி அலைந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வங்கி வாசலிலிலேயே உயிரைத் துறந்தார்கள்.

சிறுதொழில்களும், கடைகளும் பணத்தைப் புரட்ட முடியாமல் நசிந்து நின்றன. சிறுதொழில்களும், கட்டிட வேலைகளும் முடங்கியதால், நாடெங்கும் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு சில இலட்சங்களைத் தொட்டது.

பொதுமக்களின் மீது திணிக்கப்பட்ட இத்துணை துன்பங்களை, சித்திரவதைகளை மோடி அரசும், பா.ஜ.க. கும்பலும் அனுதாபத்தோடா எதிர்கொண்டனர். ”தேசத்தின் நலனுக்காக கியூவில் நிற்பதைக்கூடவா பொறுத்துக் கொள்ள முடியாது” என எகிறினார்கள், ”நாட்டின் எல்லைப் பகுதியில் நிற்கும் சிப்பாயின் கஷ்டத்தைவிடவா இதெல்லாம் பெரிது” எனக் கேட்டு அவமானப்படுத்தினார்கள்.

”பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கருப்புப் பணத்தையோ இலஞ்சத்தையோ ஒழித்துவிட முடியாது. காரணம், கருப்புப் பணம் என்பது இந்த அமைப்பு முறையே திரும்பத் திரும்ப உருவாக்கும் பொருளாதார நடவடிக்கை. மேலும், மொத்தக் கருப்புப் பணத்தில் 1 சதவீதம் மட்டும்தான் ரொக்கமாகப் புழக்கத்திலுள்ளது.

மீதமனைத்தும் சொத்துக்களாகவோ, வெளிநாட்டு வங்கி இருப்பாகவோ மாற்றப்பட்டுவிட்டது” எனச் சமூக அக்கறை கொண்ட பொருளாதார நிபுணர்களும், புரட்சிகர, ஜனநாயக அமைப்பைச் சேர்ந்தவர்களும் பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் சொன்னபோது, அதனை அவர்களால் மறுதலித்துப் பேச முடியவில்லை.

எனினும், மோடியின் நடவடிக்கை கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது கருப்புப் பணத்தை வளைத்துப் பிடிக்கும் என அப்பாவித்தனமாக நம்பினார்கள். அந்த நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பது ரிசர்வ் வங்கியின் அறிக்கை வழியாக உறுதியாகியிருக்கிறது.

-செல்வம்

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மியான்மர் அரசால் குதறப்படும் ரோஹிங்கியா முசுலீம்கள் – படக்கட்டுரை

1

ரு பச்சிளம் குழந்தை அதனுடைய தாயின் மடியில் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறது. குழந்தையின் முகம், கைகள் மற்றும் உடல் முழுதும் எரிந்துள்ளது. ஒரு பெண் உடல் முழுவதுமான தீக்காயங்களுடன் ஒரு மூலையில் தனியாக உட்கார்ந்து இருக்கிறார்.

“இராணுவம், என் வீட்டைக் கொளுத்தும் போது  நான் வீட்டிற்குள் இருந்தேன். தப்புவதற்கு வழியேதுமின்றி  தீயினால் சூழப்பட்டேன். மேலும் என் முழு உடலும் எரிந்தது” என்கிறார் 30 வயது ஷாகிதா பேகம். “இந்த வலி தாங்க முடியாதது. இதை விட செத்துப்போவதே மேல்” என்று அவர் கூறுகிறார்.

இராசிடாங் கிராமத்தில் இருக்கும் ஷாகிதாவின் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன் வைக்கப்பட்ட தீயில் அவரது மகன்களில் மூவர் கொல்லப்பட்டனர். “அந்த வாழ்க்கை மீண்டும் ஒருபோதும் திரும்பாது” என்கிறார் அவர்.

தில்தர் பேகம் மற்றும் அவரது 10 வயது மகள் நூர் கொலிமா இருவரும் ஐந்து நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது குடும்பத்தில் தப்பிப்பிழைத்தவர்கள் அவர்கள் மட்டுமே. கணவர், பச்சிளங்குழந்தை மற்றும் மாமியார் என மூவரையும் அவர் வன்முறையில் இழந்திருக்கிறார்.

“எனது குடும்பத்தினர் ஆகஸ்டு 29 ஆம் தேதி தாக்கப்பட்டனர். இராணுவம் கண்மூடித்தனமாக அங்கு துப்பாக்கிச்சூட்டை நடத்தியது” என்று தில்தர் கூறுகிறார்.

“என் மகளும் நானும் தாக்குதலில் இருந்து எப்படியோ தப்பிவிட்டோம். இராணுவத்தோடு இருந்த இரண்டு புத்ததுறவிகள் ஒரு பெரியக் கத்தியைக் கொண்டு எங்களைக் கொல்ல முயன்றனர். நாங்கள் இறந்துவிட்டோம் என்று நினைத்தார்கள். மூன்று நாட்களாக வீட்டில் மறைந்திருந்து பின்னர் நாங்கள் தப்பினோம்.” என்று கூறினார். எல்லையை அடைய நாங்கள் சென்ற அந்த பயணம் திக்கற்றதாக இருந்தது. நான் மிகவும் வேதனையில் இருந்தேன்.” என்று தில்தர் கூறுகிறார்.

மியான்மரில் இருந்து தப்பியோடியபோது கிழே விழுந்ததில் எட்டு வயதான முகம்மது அனஸிற்கு முகத்தில் காயமேற்பட்டது. மருத்துவமனையில் அவரது மாமா சையத் ஆலம் உடன் இருக்கிறார்.

“நாங்கள் மாண்டுவா மாவட்டத்தைச் சேர்ந்த லங்காலி கிராமத்தில் இருந்து வருகிறோம். ஈகைத் திருநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அங்கே தாக்குதல் நடத்தப்பட்டது” என்று சையத் விளக்குகிறார். “அருகிலுள்ள மலைக்கு எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர்கள் தப்பி ஓடிவிட்டோம். ஆனால் எங்களில் ஆறு பேரால் மட்டுமே இங்கு வர முடிந்தது. மற்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது எனக்குத் தெரியவில்லை.” என்கிறார்.

வங்கதேசத்தின் துறைமுக நகரமான காக்ஸின் பஜார் நகரில் இருக்கும் சதார் மருத்துவமனையில் இத்தகையக் காட்சிகள் வழக்கமான ஒன்றாகிவிட்டன. அண்டை நாடான மியான்மரின் ராக்கின் மாநிலத்தில் மியன்மார் இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து உயிர் தப்பியவர்கள் இவர்கள்.

ஆகஸ்ட் 25-ல் இருந்து 4,00,000 ரோஹிங்கிய அகதிகள் வங்கதேசத்திற்கு வந்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளினல் நடைபெற்ற மோசமான அகதி நெருக்கடிகளில் இதுவும் ஒன்று” என்று ஐ.நா. அகதிகள் அமைப்பு கருதுகிறது.

காக்ஸின் பஜார் சதார் மருத்துவமனையில் 30 வயதான ரோஹிங்கிய அகதி முகம்மது உல்லாவிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை முடிந்தவுடன் மருத்துவமனையிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதி முகாமிற்கு நோயாளிகள் அனுப்பப்படுவார்கள்.

முகம்மது அனாஸ் – இச்சிறுவனின் கிராமத்தின் மீது மியான்மர் இராணுவம் நடத்திய தாக்குதலில் தப்பி ஓடும் போது அவனது முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

40 வயதான ஷாகிதா பேகத்தின் உடல் முழுவதிலும் தீக்காயங்கள் இருக்கின்றன.

டாலு ஹுசைனுக்கு 50 வயதாகிறது. மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 39 ரோஹிங்கிய அகதிகளில் அவரும் ஒருவர்.

மியான்மரில் உள்ள டன்ஸெவரா கிராமத்தைச் சேர்ந்த இமான் ஹுசைன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தப்பி ஓடும் போது அவர் எல்லாவற்றையும் இழந்துவிட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னர் எதிர்நோக்கவிருக்கும் நிச்சயமற்றத் தன்மையையும் நம்பிக்கையின்மையையும் கண்டு அச்சப்படுவதாகக் கூறுகிறார்.

இமான் ஹுசைனின் காலில் புதைந்திருக்கும் துப்பாக்கி தோட்டா ஒன்றை ஊடு-கதிர் (X-Ray) படம் காட்டுகிறது.

26 வயதான சலீம் உல்லா அவரது இடது தொடையில் சுடப்பட்டார்.

காயமடைந்த தன்னுடைய 10 வயது மகள் நூர் அருகே தில்தார் பேகம் அமர்ந்திருக்கிறார். அவர்களது குடும்பத்தில் அவர்கள் மட்டுமே உயிர் தப்பியவர்கள்.

சதார் மருத்துவமனையில் கடந்த ஒன்பது மாதமாக 25 வயதான ஷேக்கீபா ஒரு செவிலியராக     பணிபுரிந்து கொண்டிருக்கிறார். ரோஹிங்யா அகதிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஆறு முதல் எட்டு வார்டுகளில் ஒன்றான இந்த வார்டுக்கு நான்கு வாரங்களுக்கு முன்னர் அவர் மாற்றப்பட்டார். “மருத்துவமனையில் தற்போது நோயாளிகளுக்கு போதுமான மருத்துவ வசதிகள் கிடைப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்துகிறது” என்று அவர் கூறுகிறார். “புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பினாலும் (International Organization for Migration) மருந்துகள் வழங்கப்படுகின்றன” என்று மேலும் கூறினார்.

மருத்துவமனையில், ரோஹிங்கியா  அகதிகள் சேர்க்கை எண்ணிக்கையை காட்டும் ஒரு தகவல் பலகை.

கடுமையான தீக்காயங்களினால் துயருறும் பச்சிளம் குழந்தை முகம்மது ஹரிஸ்-ஐ தனது மடியில் கிடத்தியிருக்கிறார் அவனது தாய் குர்ஷீதா பேகம். மியான்மர், புச்சிடோங் மாவட்டத்தின் தாமி பகுதியிலிருந்து வந்தவர்கள் அவர்கள். குர்ஷீதாவின் கணவர் மற்றும் ஐந்து குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். வன்முறையில் இருந்து தப்பி ஓடும் போது அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.

“அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது ஆனால் அவர்கள் உயிருடன் இருப்பதாக நான் வலிமையாக உணர்கிறேன்” என்கிறார் அவர்.

நன்றி : அல்ஜசீரா

_____________

இனவெறி மதவெறி ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து எதிர்க்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

வெள்ளாற்று பாதுகாப்புக் குழுவினர் மீது பொய் வழக்கு !

0

வெள்ளாற்று பாதுகாப்புக் குழுவினர் மீது பொய் வழக்கு !

வெள்ளாற்றை பாதுகாப்போம் ! மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம் !! இனியும் தாமதித்தால் வெள்ளாறு செத்துவிடும் !!! என கடலூர் மாவட்டம் கூடலையத்தூர் பகுதி மற்றும் கருவேப்பிலங்குறிச்சி சுற்றுப் பகுதி விவசாயிகள் மக்கள் அதிகாரம் அமைப்புடன் இணைந்து வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க போராடி வருகின்றனர்.

அதனடிப்படையில் மணல் குவாரியை கடந்த 26.08.2017 அன்று திரளான விவசாயிகள், மாணவர்கள் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என குவாரியை முற்றுகையிட்டு ஆற்றில் இறங்கிப்போராடினர். போராட்டத்தை தடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட போலீசு போராடுபவர்களை மிரட்டிப்பார்த்தது. ஆனால் போரட்டத்தின் வலிமை கண்டு பின்வாங்கியது.

கடந்த மாதம் 26 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது மக்கள் அமைத்த பந்தலைப் பிடுங்கும் போலீசு

பின்னர் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை நம்பி மக்கள் களைந்து சென்றனர். ஆனால் மக்கள் போராட்டங்களை முதுகில் குத்தும்விதமாக காவல்துறையும், அதிகாரிகளும் தற்போது நடந்து வருகின்றனர். போராட்டத்தில் முன்னணியாக இருந்தவர்கள் மீது பொய் வழக்கு பூச்சாண்டி காட்டுகிறது போலீசு.

ஆனால் பொய் வழக்குகளால் போராட்டங்களை ஒடுக்க முடியாது என அடுத்தடுத்த போராட்டங்களுக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதனடிப்படையில் தலைமைச் செயலருக்கு போலீசு மற்றும் அதிகாரிகளின் மிரட்டல் குறித்து கடிதம் அனுப்பியுள்ளனர் வெள்ளாற்று பாதுகாப்புக் குழுவினர். அந்தக் கடிதம் இங்கே தரப்பட்டுள்ளது.

***

அனுப்புதல்

கா.ஆசைத்தம்பி, வயது 45 த/பெ காசிநாதன்,
வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம்,
கூடலையாத்தூர், காவாலக்குடி அஞ்சல்,
திருமுட்டம் வட்டம். கடலூர் மாவட்டம்.

பெறுதல்

உள்துறைச் செயலாளர்   அவர்கள்
தலைமைச் செயலகம்,
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, .சென்னை.

அய்யா வணக்கம்,

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். விவசாய தொழில் செய்கிறேன். வெள்ளாற்றுப்பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பில் கூடலையாத்தூர் கிராம ஒருங்கிணைப்பாளாராக உள்ளேன். வெள்ளாற்றங்கரையில் உள்ள பல்வேறு கிராம மக்கள் இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் உட்கோட்டம், திருமுட்டம், தாலுக்கா கூடலையாத்தூர் வெள்ளாற்றில் கடந்த இரண்டு மாத காலமாக அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது. பொதுப்பணித்துறைதான் நேரடியாக இணையதளம் மற்றும் டி.டி மூலமாக இரண்டு யூனிட் மணலுக்கு 1,080 ரூ என பெற்றுக்கொண்டு  லாரிகளில் ஆற்றிலேயே ஜே.சி.பி மூலம் நிரப்பட்டு கிராம சாலை வழியாக திருமுட்டம், சேத்தியா தோப்பு வழியாக தமிழகத்தின் பல ஊர்களுக்கு செல்கிறது.

கூடலையாத்தூர் வெள்ளாற்றில் அதே இடத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக 2005 முதல் இதற்கு முன்பே மணல் குவாரி அமைக்கப்பட்டு அளவுக்கு அதிகமாக மணல் அள்ளபட்டுவிட்டது. பல இடங்களில் களிமண் தெரிகிறது. இதனால் மழை பெய்தாலும் தண்ணீரை தேக்கி வைக்க இயலாமல் கடலுக்கு சென்று கலக்கிறது. இதனால் 50 அடி இறைத்த போர் இன்று 250 அடி ஆழத்திற்கு நிலத்தடி நீர் மட்டம் கீழே இறங்கி விட்டது. விவசாயம் பெருமளவில் பாதித்து வருகிறது. வெள்ளாற்றங்கரையில் சுமார் 2,500 போர்வெல் உள்ளது. பல போர் வெல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் சுமார் 70 சதவீத போர் செயலிழந்து விட்டது. மேலும் வீராணத்தில் தண்ணீர் இல்லாததால் பல இடங்களில் ஆழ்துளை போர் போட்டு சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. கடலூர் ரசாயண ஆலைகளால் நிலத்தடி நீர் நஞ்சாகி மாறிவருகிறது. நெய்வேலி சுரங்கம் பல ஆண்டுகளாக நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றி வருகிறது. அருகில் கடல் நீர் உள்ளே புகும் அபாயம் என கடலூர் மாவட்ட விசாயிகள் மட்டுமல்ல பொதுமக்களும்  நீராதரத்திற்கு  சுகாதாரமான குடிநீருக்கு பெரும் அபாயத்தில் உள்ளனர்.

கூடலையாத்தூர் மணல் குவாரியால்  மணல் அள்ள வரும் நூற்றுக்கணக்கான லாரிகள் கிராமம் தோறும் ரயில் வண்டி போல் வரிசை கட்டி நிற்கிறது. வெளியூர் லாரி ஓட்டுநர்கள் இரண்டு மூன்று நாள் வரை  தங்குவதால் குடித்துவிட்டு பாட்டிலை உடைத்து போடுவது, தொடர்ந்து லாரி நகர்த்துவதால் சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பது, இதனால் பொது மக்களின் பள்ளி மாணவர்களின், அன்றாட வாழ்க்கை பாதிக்கிறது. பயணிகள் பேருந்துகூட தற்காலிகமாக நிறுத்தபட்ட அவல நிலை. இது குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர், சேத்தியா தோப்பு காவல் துணை கண்காணிப்பாளர் மேலும் மாவட்ட ஆட்சியர், பொது பணித்துறை அதிகாரிகள் என உரிய அதிகாரிகளுக்கு பல முறை நேரிலும் மனுவாகவும் அனுப்பினோம். மக்களின் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை.

மேலும் போலீசாரின் துணையோடு அதிமுகவினர் சிலர் லாரி ஒன்றுக்கு ரூபாய் 500 – 1,000 என மாமுல் கட்டாயப்படுத்தி வசூலிக்கின்றனர். இவ்வாறு வசூலித்த தொகை மட்டும் சுமார் எழுபது லட்சம் இருக்கும். தினம்தோறும் திருமுட்டம் காவல் ஆய்வாளர் திரு. பீர்பாஷாவிற்கு இருபதாயிரம் லஞ்சமாக பணம் கொடுக்கின்றனர். காவல் நிலையத்திற்கும் மாமூல் செல்கிறது. உள்ளுரில் வசூல் செய்வதில் கோஷ்டி பூசல் எற்பட்டு அமைதி குலைகிறது. தாய் போன்ற வெள்ளாறு சிதைக்கப்படுவதற்கு அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர். பர்மிட் இல்லாமல் லாரிகள் மணல் ஏற்றி செல்வது, அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றி செல்வது என தினம்தோறும் தொடர்கிறது.. மாநில சுற்றுசூழல் ஆணையம் வரையறுத்துக் கொடுத்த உத்திரவில் சர்வே எண் 8-ல் 19 ஹெக்டேர் என்பதை தாண்டி கண்ணில் தெரிந்த வரை வெள்ளாற்றில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிட்டது. ஆறும் வறண்டு போய் விட்டது.

ஆற்று மணல் கொள்ளை போவது பற்றியும், இத்தகைய முறைகேடுகள் பற்றியும் பொதுப்பணித்துறை பொறியாளர் திரு. சரவணன் அவர்களிடம் கைபேசி மூலமும், நேரிலும் புகார் தெரிவித்தோம். அது போல் திருமுட்டம் காவல் ஆய்வாளர் திரு. பீர்பாஷா அவர்களிடமும் இவ்வாறே புகார் தெரிவித்தோம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இவர்கள் இவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் லட்சக்கணக்கில் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ஆற்றுமணலை கொள்ளையடிக்க அனுமதித்து வருகின்றனர்.

வெள்ளாற்றை காக்க மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க காவல் துறை மற்றும் உரிய அதிகாரிகளிடம்  தெரிவித்து விட்டு 26-8-2017 அன்று காவாலகுடி, கூடலையாத்தூர், அகர ஆலம்பாடி, பவழங்குடி, ஓட்டி மேடு, பெருந்துரை, கானூர், முடிகண்ட நல்லூர் என பல் வேறு கிராம மக்கள், மற்றும் வெள்ளாற்றுபாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள், பல கட்சி பிரமுகர்கள் என சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆற்றிலிறங்கி அமைதியான முறையில் போராடினர். சுட்டெரிக்கும் வெயிலிலும் பெண்கள், குழந்தைகள் பெரியவர்கள் என கலந்து கொண்டனர்.

திருமுட்டம் ஆய்வாளர் பீர்பாஷா மற்றும் சேத்தியாதோப்பு டி.எஸ்.பி. திரு. அருள் சந்தோஷ்முத்து மக்களுக்கு குடி நீர் கொடுக்க விடாமல் மிரட்டி தடுத்தனர். பெண்கள் தாகத்தில் தவித்தனர். சிதம்பரம் கோட்டாட்சியரிடம் முறையிட்டதும் குடிநீருக்கு அனுமதி அளித்தனர். சிதம்பரம் கோட்டாட்சியர் அவர்கள் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும். ஆற்றில் நடக்கும் முறைகேடுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். மாவட்ட ஆட்சியரிடம் எங்கள் கோரிக்கை குறித்து கோட்டாட்சியர் கைபேசி வழியாக பேசினார். பிறகு இந்த குவாரியை தற்காலிகமாக மூட உத்திரவிடுகிறேன் என பொது மக்களிடம் அறிவித்தார். அனைவரும் அமைதியான முறையில் கலைந்து சென்றோம்.ஆனாலும் வெயில் கொடுமைக்கு கொண்டு வந்த சாமியாணாவையும் போலீசார் பிடுங்கி கொண்டனர். போராட்டம் நடைபெற்ற தினத்தன்று மணல் குவாரி இயக்காமல் நிறுத்தபட்டு இருந்தது.

ஆனால் எந்த முன் அறிவிப்பும் பேச்சுவார்த்தையின்றி 30-8-2017 முதல் மணல் குவாரி மீண்டும் செயல்பட துவங்கியது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி விடக்கூடாது என என் பெயரிலும் மேலும் சிலர் பெயரிலும் பொதுப்பணித்துறை பொறியாளர் திரு சரவணனிடம் பொய் புகார் பெற்று திருமுட்டம் போலீசு ஆய்வாளர் பொய்வழக்கு பதிவு செய்துள்ளார்.

மீண்டும் ஊரில் அதிமுகவினர் லாரிகளுக்கு 1,200 வரை மாமூல் வசூலித்து திருமுட்டம் காவல் ஆய்வாளருக்கு நாள் தோறும் இருபதாயிரம் மாமூல் தருகிறார்கள். பொதுப்பணித்துறை பொறியாளர் சரவணனும் இது போல் மணல் கொள்ளை முறைகேடுகளுக்கு உடந்தையாக உள்ளார். பல லாரிகள் பர்மிட் இல்லாமல் அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றி செல்கிறது என கிராம மக்கள் எங்களிடம் தொடர்ந்து முறையிட்டனர். நாங்களும் அதிகாரிகளுக்கு தெரிவித்து கொண்டே இருந்தோம் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எங்களை அச்சுறுத்தும் வகையில் பேசினர். மணல் முறைகேடு தடுக்கபடவில்லை.

இந்நிலையில் 9-9-2017  அன்று காலை சுமார் 8-30 மணியளவில் கூடலையாத்தூர் குவாரியில் இருந்து அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றி அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மக்கள் அச்சுறுத்தும் வகையில் சென்றது. இது பற்றி திருமுட்டம் காவல் ஆய்வாளர் திரு. பீர்பாஷா அவர்களிடம்  கைபேசியில் தகவல் சொன்னேன். மணல் லாரி மேட்டரில் தலையிடாதே, ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும்  குண்டாசில் உள்ளே தள்ளி விடுவேன், உன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சுறுத்தும் வகையில் பேசினார். பிறகு  பொதுப்பணித்துறை பொறியாளர் திரு. சரவணன் அவர்களிடம் இது பற்றி புகார் தெரிவித்தோம். அவரும் “ஆசைதம்பி ரொம்ப ஓவரா போறீங்க நல்லதல்ல, எல்லாம் தெரிஞ்சுதான் நடக்குது உங்களுக்கு வேணும்னா ஏதாவது வாங்கிங்க எது நடந்தாலும் உங்க மேல் வழக்கு போடுவேன், ஒதுங்கி கொள் என மிரட்டும் வகையில் பேசினார். உடனே மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிதம்பரம் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தோம். அதிகாரிகள் வரும் வரை தாமதமானதால் பல லாரிகள் தப்பித்து சென்று விட்டன. பிறகு 15 லாரிகளை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து மடக்கி பிடித்தோம். பிடிபட்ட லாரிகள் அனைத்திலும் பர்மிட் இல்லை. அளவுக்கு அதிகமாக சுமார் 4 யூனிட் மணல் ஏற்றி யிருந்தது. அனைத்த தொலைகாட்சிக்கு ஊடகங்களுக்கும் தகவல் தெரிவித்து  திருட்டு மணல் லாரிகளை சிறைபிடித்தோம்.

சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் விஜயவேந்தன் வந்தார். உளவு பிரிவு பேலீசார் அன்பரசன் ஏன் நேரிடையாக எஸ்பியிடம் பேசினீர்கள் என்னிடம் சொல்ல வேண்டும் என எங்க கூட இருந்த கிருஷ்ணன ராஜை கடிந்து கோபமாக பேசினார். பிறகு காவல்துறை அதிகாரிகள் திருமுட்டம் காவல் நிலையத்தில் ஆறு வண்டிகள் மீது மட்டும் வழக்கு போட்டு பறிமுதல் செய்தனர். பிற வண்டிகளை அனுப்பி விட்டனர். பர்மிட் இல்லாமல் ஓவர் லோடு லாரி மணல் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் வரை அபராதம் கட்ட வேண்டும்.

அரசு கணக்கில் வராமல் மணல் லாரிகள் செல்ல உடந்தையாக இருந்தது, வெள்ளாற்றில் மணல் கொள்ளைஅடிக்க கனிம வள திருட்டு குற்றங்களுக்கு பொது பணித்துறை பொறியாளர் சரவணன் மற்றும் அதை தடுக்க வேண்டிய காவல் ஆய்வாளர் திரு பீர்பாஷா தடுக்காமல் மணல் கடத்தலுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதித்த குற்றத்திற்கும், திருட்டு மணல் லாரிகளை பிடித்து கொடுத்த ஆசைத்தம்பி மற்றும் கிராம மக்களை அச்சுறுத்தியது ஆகிய செயல்களுக்காக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த சம்பவம் எங்கள் ஊரை சேர்ந்த மற்றும் காவாலகுடியை சேர்ந்த  பொதுமக்கள் பலருக்கும் நேரிடையாக  தெரியும்.

இப்படிக்கு
தேதி – 15-9-2017
உண்மையுடன்

ஆசைத்தம்பி

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மலேரியாவில் இருந்து மக்களை காப்பாற்றிய ரொனால்ட் ரோஸ்

1

ருத்துவத்தின் சாதனைகள் மனிதனை பல கொள்ளை நோய்களில் இருந்து விடுதலையடைய வைத்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அறிவியலின் வளர்ச்சி, மருத்துவர்களின் உழைப்பு! என்னதான் அறிவியலின் முன்னேற்றம் அதிகரித்திருந்தாலும் சில நோய்களை தடுப்பது இன்றும் பெரும் போராட்டமாகவே உள்ளது.

அந்த வகையில் மலேரியா நோய் மனித குலத்தின் அச்சுறுத்தலாகவே உள்ளது. இக்கொடிய நோயை ஒழிக்க  இன்று வரை போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இருப்பினும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே, இந்நோயை ஒழிக்க தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் மருத்துவர் சர் ரொனால்டு ரோஸ்.

மலேரியா நோய் பெரும்பாலும் வெப்பமண்டல நாட்டில் தான் அதிகமாக தோன்றும். பலம் பொருந்திய படைகள்  கூட மலேரியா என்றால் நடுங்கும். அந்த அளவிற்கு கொடியது. ஒருகாலத்தில்  ஐரோப்பா  மற்றும் வட அமெரிக்காவில் மலேரியா நோய்த்தொற்று மிகவும் அதிகமாக காணப்பட்டது. பிறகு இந்தியாவையும் இந்நோய் ஆட்டிப்படைத்தது.

இந்நோய்க்கும், கொசுவிற்கும்  நிறையத் தொடர்புண்டு. கொசுக்கள் நிரம்பிய பகுதிகளில் இருந்து மலேரியா தோன்றும் என்பதை முதலில் கண்டுபிடித்தவர் டேவிட் லிவிங்க்ஸ்டன் .

அசுத்த நீரிலும், நீர் நிலைகளிலும், நதி முகத்துவாரத்திலும் கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகும். பெரும்பாலும் சதுப்பு நிலங்களே கொசுக்களின் பிறப்பிடம் என்பதால் இந்நோயை “சதுப்பு நிலசுரம்” என்றும் கூறுவார்கள். இவை சதுப்பு நில விசக்காற்றின் மூலமும், ஈரக்காற்றின் மூலமும் தான் பரவுகிறது என்றும் கூறுகிறார்கள்.

இந்நோய் தாக்கப்பட்டவரின் உடல் நடுங்கிக் கொண்டிருக்கும், உடலில் சூடுபிடிக்க முடியாது, கொஞ்ச நேரத்தில் காய்ச்சல் தோன்றும், உடல் வெப்பநிலை அளவு அதிகமாக இருக்கும், காய்ச்சல் திடீரென்று மாறி வியர்வை அதிகமாக சுரக்கும், பிறகு காய்ச்சல் நின்றுவிடும், ஆனால் நோய் தணியாது, இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நோய் தோன்றும். இது போன்ற சமயங்களில் ஆள் இறந்து போகக்கூடும்.

இந்நோய் தீர்வது மிக அரிது, இந்நோய்க்குரிய மருந்து “கொய்னா” என்பதாகும். சின்கோனா மரப்பட்டையில் இருந்து இது தயாரிக்கப்படுகிறது. இந்நோய்க்குரிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் நோயின் மூலக்காரணம் முன்னூறு ஆண்டுகளுக்கு மேல் மர்மமாகவே இருந்தது. இந்த மர்மத் திரையை கிழித்து மனிதகுலத்தை பெரும் அபாயத்தில் இருந்து காப்பாற்றியவர். இந்நோய் கொடிய தன்மையும், விரைந்து பரவும் குணமும் கொண்டவை. இந்நோய் தோன்றினால் மனிதன் மறைந்து தான் ஆக வேண்டும் என்ற சரித்திரத்தை மாற்றியவர் ரோஸ்.

1857 -ம் ஆண்டு மே மாதம் 13 -ம் தேதி “அல்மோரா” என்னும் ஊரில் பிறந்தார். இந்தியாவில் முதல் சுதந்திரப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். இவருடைய தந்தை இந்தியாவில் பிரபலமான படைத்தளபதியாக விளங்கியவர். ரோஸ் இங்கிலாந்தில் உள்ள ஆரம்ப பாடசாலையில் பள்ளிப்படிப்பை  முடித்தார். 1874 -ம் ஆண்டு இலண்டனில் உள்ள “செயின்ட் பர்தலோமியஸ்” கல்லூரியில்  இவருடைய தந்தையால் வலுக்கட்டாயமாக மருத்துவப்படிப்பில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவத்தின் மீது நாட்டம் கொண்டிராத ரோஸ் வேறு வழியின்றி தந்தையின் கண்டிப்புக்கு பயந்து மருத்துவ படிப்பில் தனது கவனத்தை செலுத்தினார்.  ஆர்வமும் உற்சாகமும் இல்லாமலேயே மருத்துவராக பட்டமும் பெற்றார்.

மீண்டும் தந்தையின் வற்புறுத்தலால் 1881 -ல் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த ரோஸ் மருத்துவராக பணியாற்றிட முனைந்தார். இருப்பினும் ரோசின் மனவோட்டம் எல்லாம் இசையிலும், புத்தகம் வாசிப்பதிலும் தான் இருந்தது. தன் மனம் போல் நடப்பதற்கு நேரம் ஒதுக்கி, இளவயது விருப்பமான  கவிதைகள் படிப்பதிலும், சங்கீதம் பயில்வதிலும் ஓய்வு  நேரத்தை பயன்படுத்தினார்.

பிரெஞ்ச், ரோமன், இத்தாலி, ஜெர்மன் என்று பல மொழிகளை கற்றுத்தேர்ந்தார்.  இசையிலும் வல்லவரானார். எங்கு சென்றாலும் தன்னுடைய பியானோவையும், நிறைய புத்தகங்களையும் கொண்டு செல்வது அவருக்கு பிடித்தமானது. உடற்பயிற்சி, உளப்பயிற்சி என்று அனைத்திலும் கவனம் செலுத்தினார். மீன் பிடித்தல், வேட்டையாடுதல் என்று பல வழிகளில் நாட்கள் கடந்தது.
ரோஸ் என்றுமே தன் மனசாட்சிக்கு விரோதமாக நடந்ததில்லை. மருத்துவ துறையில் மனமில்லாமல் இருந்தாலும் அதற்கு விரோதமாக நடந்து கொண்டதில்லை.

சிறிதுகாலம் கழித்து மருத்துவத் துறையில் இவரின் ஈடுபாடு அதிகரித்தது. மனித குலத்திற்கு தன்னால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும் என்று எண்ணினார். மனித இனத்திற்கு பெரும் எதிரியானது  நோய். இந்த நோய்களின் காரணத்தை அறிந்து தடை செய்து விட்டால் மனிதனுக்கு நோய் பரவாமல் தடுத்து விடலாம் என்று கருதி முதன் முதலாக மலேரியா நோயின் காரணங்களை அறிய முயற்சித்தார்.

மலேரியா நோய்க்கான ஆராய்ச்சி :

ரோஸின் பங்களாவை சுற்றி நிறைய பூந்தொட்டிகள் உள்ளன. இந்த தொட்டிகளில் நிறைய கொசுக்கள் உற்பத்தி ஆகி இருப்பதை கண்ட ரோஸ் அதனை அப்புறப்படுத்தினார். மனிதனுக்கு தொல்லை கொடுக்கும் கொசுக்கள், பூச்சிகள் அனைத்தையும்  அழித்துதான் தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
முதலில் தனது ஆராய்ச்சியை கொசுக்கள் மேல் திருப்பி அவற்றை ஆராய முயற்சித்தார். கொசுக்கள் எப்படி உருவாகின்றன, அதனால் மனிதனுக்கு என்னென்ன தீங்கு, எத்தனை வகை கொசுக்கள் உள்ளன என்பது குறித்து தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார்.

பல வகையான கொசுக்களை “லார்வா” கொடுத்து வளர்க்கவும் தொடங்கினார். தனது நீண்ட நாள் ஆராய்ச்சியின் பயனாக “கிரேசிலர்” மற்றும் “கடிவாளம்” ஆகிய இரண்டு வகை கொசுக்களை கண்டுபிடித்தார்.

கொல்கத்தா ஆய்வகத்தில் தனது மனைவி மற்றும் உதவியாளர்களுடன் மருத்துவர் சர் ரொனால்டு ரோஸ்.

இந்த ஆராய்ச்சியினூடே மலேரியா நோயின் மர்மத்தையும் ஆராய்ச்சி செய்தார். 1878 -ம் ஆண்டு பிரெஞ்ச் ராணுவ மருத்துவர் “அல்போன் சேலாவன்” என்பவர் மலேரியா தாக்கப்பட்ட மனிதனின் ரத்தத்தில் சில கரும்புள்ளிகள் தென்படுகின்றன என்றும், அக்கரும்புள்ளிகளே மலேரியா நோய்க்கு காரணமென கண்டறிந்து, இந்த கரும்புள்ளிகள் உற்பத்தியாகி உடல் முழுவதும் பரவி மலேரியா என்ற நோயை உருவாக்குகிறது என்பதை கூறினார்.

இந்த கரும்புள்ளிகள் உடலில் எவ்வாறு உருவாகிறது? உணவில், தண்ணீரில், மலேரியா பாதிக்கப்பட்டவரின் சுவாசத்தை சுவாசிப்பதால் உருவாகிறதா, ஏதேனும் பூச்சிக்கடியினால் ரத்தத்தில் உருவாகிறதா என்று தேட ஆரம்பித்தார். இதற்காக ரோஸ் பட்ட சிரமங்கள் அளப்பரியது.

ஒரு நாள் தன் நண்பருடன் ஒரே வீட்டில் உறங்கினார். நண்பர் கொசு வலையின்றியும், ரோஸ் கொசு வலையிலும் தூங்கினார். ஆனால் நண்பருக்கு மட்டும் மலேரியா தாக்கப்பட்டது.  இது ரோஸிற்கு வியப்பை ஏற்படுத்தியது. ஒரே உணவு, ஒரே தண்ணீர் அருந்தினோம். ஆனால் நண்பனுக்கு மட்டும் நோய் எப்படி வந்தது என்று சிந்தித்தார். நண்பர் பாதிக்கப்பட்டதற்கு காரணம் கொசு தான் என்ற முடிவிற்கு வந்தார்.

இதன் பிறகு தனது ஆராய்ச்சியில் தீவிர கவனம் செலுத்தினார். தனது பொழுதுபோக்கு, நண்பர்களிடம் உரையாடுவது  உள்ளிட்ட எல்லாவற்றையும் துறந்து முழு ஆராய்ச்சியில் இறங்கினார்.

1894 -ல் “பாட்ரிக் மான்சன்” என்ற மருத்துவர் ஒருவரின் தொடர்பு கிடைத்தது. அவர் மலேரியா நோய் கொசுவின் மூலம் தான் பரவுகிறது. கொசு உணவுப்பொருளில் தன் நச்சுத் தன்மையை செலுத்துவதால் அது உடலில் சென்றவருக்கு நோய் உண்டாக்கும் என்றார். அதனை அதனை ரோஸ் முழுமையாக நம்பவில்லை.

தொடர்ந்து மலேரியா நோய் தாக்கப்பட்ட ஒருவரை ஆராய்ந்தார். என்ன ஆராய்ந்தாலும் கொசுவினால் பரவுகிறது என்பதை தவிர அவரால் வேறு எதையும் அறிய முடியவில்லை.

கொசுக்கள் எவ்வாறு மலேரியா நோயினைப் பரப்புகிறது என்பதைப் பற்றிய ஆய்வுக் குறிப்பு

மலேரியா பாதித்த ஒருவரின் உடலில் கடித்த கொசுவினை பிடித்து உருப்பெருக்கி கண்ணாடி வழியே ஆராயத் தொடங்கினார். மலேரியா நோய்க்கிருமிகள் அந்த கொசுவின் வயிற்றில் இருப்பதை கண்டறிந்தார். ஆனால்,  நோய் பாதிக்கப்பட்டவரிடமிருந்து இந்நோய் கிருமிகள், நல்ல ஆரோக்கியம் உள்ளவருக்கு எப்படி கொண்டு செல்லப்படுகின்றன என்பது புதிராகவே இருந்தது. இந்த உண்மையை கண்டறிய பல வகையான கொசுக்களை பிடித்து ஆராய்ச்சி செய்தார். இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகினார். இந்த ஆராய்ச்சிக்காக தன் வாழ்வை இந்தியாவிலுள்ள “பேகம் பேட்” என்னும் இடத்தில் இருந்த ஆராய்ச்சி மையத்திலேயே கழித்தார்.

இந்த ஆராய்ச்சி மையத்தில் கொசுக்கள் பறந்து செல்லுகின்ற அழகை ரசிப்பார். கொசுக்கள் பறந்து விடும் என்பதற்காக தன் ஆராய்ச்சி மையத்தில் இருந்த மின் விசிறிகளைப் போடுவதைக்கூட நிறுத்தி விட்டார். கடும் வெயிலில் கூட அதனை போடுவதில்லை. வியர்வை சொட்ட சொட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அனைத்து சிரமங்களையும் பொருட்படுத்தாமல் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

ஒருமுறை ஆழ்ந்த சிந்தையில் இருக்கும் போது புதிய வகை கொசு ஒன்று ஆய்வகத்தில் உட்கார்ந்திருப்பதை கண்ட ரோஸ், அதனை பிடித்து ஆய்வு செய்தார். அதைப்போன்று பல கொசுக்களை ஆய்வு செய்தார்.  இந்த கொசுக்களின் தோற்றம் புது மாதிரியாக இருந்தது. இதன் வால் உயர்ந்து மேல்நோக்கி இருந்தது. இறகில் மூன்று கருப்புக்கோடுகள் இருந்தன. இந்த கொசுக்களுக்கு “அநோபில்ஸ் “ என்றும் பெயர் சூட்டினார்.

மலேரியா நோய் பாதிக்கப்பட்டவரை இக்கொசுக்களை கொண்டு கடிக்க செய்து ஆய்வு செய்தார். இந்த ஆராய்ச்சி தோல்வியே தந்தது. இதனால் நம்பிக்கையிழந்த ரோஸ் ஆராய்ச்சி செய்வதையே கைவிட்டு விட்டார்.

என்ன செய்வது, எப்பொழுதும் ஆராய்ச்சியில் காலம் கழித்த அவருக்கு பொழுது போகவே கஷ்டமாயிருந்தது. மீண்டும் தனது ஆராய்ச்சியின் மூலம் பல கொசுக்களை பிடித்து அதன் வயிற்றினை அறுத்து நுன்பெருக்கி மூலம் ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சியில் கொசுவின் வயிற்றில் பல நுண்ணிய கரும்புள்ளிகள் இருப்பதை கண்டறிந்தார்.  இந்த புள்ளிகள் தான் “மலேரியா நோய்க்கிருமிகள்” என்பதை மருத்துவர் அல்போன் சேலாவன் கூறியிருந்தார்.

இவ்வாராய்ச்சியில் நோயுள்ளவரின் உடலில் இருந்து நோயுற்றவருக்கு “அநேபில்ஸ்” கொசுக்கள் வழி பரவுகிறது என்பதை கண்டறிந்தார். நோயுற்றவரின் உடலில் இருந்து எவ்வாறு அவ்வணுக்கள் செலுத்தப்படுகிறது என்பது மர்மமாகவே இருந்தது. இடைவிடாத தனது ஆராய்ச்சியின் மூலம் இம்மர்மத்தை கிழித்தெறிந்து, கொசு ஒருவரின் இரத்தத்தை உறிஞ்சும் போது தன் உடலில் இருந்து ஒரு வகை திரவத்தை வெளியேற்றுகிறது. பின் இரத்தம் உறிஞ்சப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் தன் உடலில் உள்ள கிருமிகள் அவர் உடலில் செல்லவும் அவர் உடம்பில் உள்ள நோய்க்கிருமிகள் ரத்தத்துடன் கலந்து கொசுவின் உடலில் செல்லவும் செய்கிறது என்ற உண்மையை கண்டறிந்து 1898 -ம் ஆண்டில் மலேரியாவை கொசுக்கள் தான் பரப்புகின்றன என்று இறுதியாக நிரூபித்தார்.

மலேரியாவை ஒழிக்க வேண்டுமென்றால் கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்பதையும் நிறுவினார். அவர் கண்டறிந்த மலேரியா கொசுவின் பெயர் தான் “அநோபில்ஸ்”.  இவருடைய இந்த ஆராய்ச்சிக்காக 1902 -ம் ஆண்டு மருத்துவத்தில் ரோஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ரோஸ் :

தனது கண்டுபிடிப்பிற்கு பிறகு இந்திய மருத்துவத்துறையை விட்டு விலகி இங்கிலாந்து சென்றார். லிவர் பூலில் அப்பொழுது தான் “ ஸ்கூல் டிரோபிக்கல் மெடிசன்ஸ்” என்னும் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அக்கல்லூரியின் முதல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். இக்கல்லூரியில் உள்ள ஆராய்ச்சி கூடத்தில் மலேரியாவை சுலபமான முறையில் குணப்படுத்தும் தடுப்பு முறைகளை கண்டுபிடிக்க முயன்றார். இவருடைய கண்டுபிடிப்பின் மூலம்  வெப்ப நாடுகள் பலவற்றில் மலேரியா தடுத்து நிறுத்தப்பட்டது.

மலேரியா ஒழிப்பை தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக் கொண்ட ரோஸ் பல நாடுகளுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். வெள்ளைக்காரர்களின் சுடுகாடு என்று பெயர் பெற்ற “சீய்ராவியோன்” என்ற நகரத்திற்கு சென்று மலேரியாவால் ஏற்படும்  மரணத்தை தடுத்தார். வெள்ளைக்காரர்களின் சுடுகாடு என்ற பெயர் இவரால் மாற்றப்பட்டது. அந்த மக்களின் அன்பையும் பெற்றார் ரோஸ்.

1900-ல் இஸ்மைலியா என்ற நகரத்தில் வசிக்கும் மக்கள் மூன்றில் ஒரு சதவீதம் பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டனர். அப்பகுதிக்கு விரைந்து சென்ற ரோஸ் கொசு ஒழிப்பின் மூலம் அம்மக்களை மலேரியா நோயிலிருந்து மீட்டெடுத்தார். இதனை தன் கண்டுபிடிப்பிற்கு ஓர் ஆணித்தரமான சான்று என்றும் வருணித்தார் ரோஸ். பின்னாளில் இந்நோய் ஆண்டு முழுவதும் நீடிக்கும் நோய் இல்லை என்ற நிலை இருந்தாலும் நாடு முழுவதும் இன்று வரை ரோஸின் மலேரியா ஒழிப்பு முறையை தான் பின்பற்றி வருகிறார்கள்.

மக்களுக்கு ஆற்றிய தொண்டின் காரணமாக இவருடைய  பெயரில் மக்களால் “ ரோஸ் இன்ஸ்டிடியூட் அன்ட் ஹாஸ்பிட்டல் பார் டிராபிக்கல் டிஸீஸ்” என்ற கல்லூரி 1926 -ல் நிறுவப்பட்டது.  பின்னாளில் இக்கல்லூரி வளர்ந்து “லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜின் அன்ட் டிராபிக்கல் மெடிசன்” என்று மாறியது. மக்களை மலேரியா எனும் கொடிய நோயிலிருந்து விடுவிக்க தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த ரோஸ் 1932  செப்டம்பர் 16 அன்று இறந்தார். அவர் மறைந்தாலும் தனது அறிய கண்டுபிடிப்பால் மக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறார் மருத்துவர் ரோஸ்.

-காவிரிநாடன் எழுதிய “மருத்துவ மன்னர்கள்” என்ற நூலில் இருந்து…

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சிறப்புக் கட்டுரை : ராம் ரகீம் சிங் – வல்லுறவு – ஆண்மை நீக்கம் – ஆன்மிகம் – இந்து ராஷ்டிரம் !

2

மிழ்நாட்டில் கழகங்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் பேசும்போது, கழகங்கள் என்ற சொல்லை அவர்கள் உச்சரிக்கையில் அதில் பல அர்த்தங்கள் தொனிப்பதை நாம் காண முடியும். குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் பார்ப்பன பிரதிநிதிகள் பேசும்போது இதை நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும்.  நாத்திகர்கள், ஊழல் பேர்வழிகள், ஒழுக்கம் கெட்டவர்கள், கீழ் மக்கள் என்று ஒரு பார்ப்பன சாதிவெறியன், சூத்திர – பஞ்சம சாதியினர் மீது வெளிப்படுத்தும் வெறுப்பும் காழ்ப்பும் அதில் பளிச்சென்று வெளிப்படும்.

கேடுகெட்ட நடவடிக்கைகள் அனைத்திலும் ஈடுபட்டுக்கொண்டே, தங்களை மேன்மக்களாகக் காட்டிக் கொள்வதுதான் பார்ப்பனக் கும்பலின் சாமர்த்தியம். ஊழல் ராணியான ஜெயலலிதாவுக்கு ராஜகுருவாக இருந்திருந்தாலும், மிடாஸ் சாராய கம்பெனியின் இயக்குநர் பதவியில் சோ அமர்ந்திருந்தாலும், செத்துப்போன ஊழல் பிராணியின் உடலில் இருந்து புழுத்து நெளியும் கும்பல்களுக்கு திருவாளர் குருமூர்த்தி அரசியல் தரகு வேலை செய்தாலும், அந்த பிராமணோத்தமர்கள் தம்மைக் கறைபடியாதவர்களாக காட்டிக்கொள்வது மட்டுமல்ல, அவ்வாறே கருதியும் கொள்கிறார்கள்.

இரவு முழுதும் விலைமாதுவின் படுக்கையில் கிடந்து விட்டு, காலையில் தெருவில் நின்று தேவுடியா என்று ஏசும் ஆண்மகன், தனது கற்பு நெறி குறித்துக் கொண்டிருக்கும் மனோபாவத்தையும், மோகனாம்பாளை மைனருக்கு செட் அப் செய்ய அரும்பாடுபடும் வைத்தி, தன்னைப் பிறன்மனை நோக்காப் பேராண்மையாளன் என்று கருதி கர்வம் கொள்வதையும் ஒத்ததே இந்த பார்ப்பன அறிவாளிகளின் கர்வம்.

இன்று எடப்பாடி, பன்னீர் கிரிமினல் கும்பலையும், நேற்று கொள்ளைக்காரி ஜெயலலிதாவையும், அதற்குமுன் கொலைகார சங்கராச்சாரியையும் காப்பாற்றுவதற்கு முன்நின்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிஸ்டுகளின் சமீபத்திய லீலை, பொறுக்கி ராம் ரகீம்சிங்குடன் அவர்கள் கொண்டிருந்த உறவு. அதாவது, வல்லுறவுக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்ட பொறுக்கியுடன் சங்க பரிவாரம் கொண்டிருந்த நல்லுறவு.

மாஃபியா நிறுவனமாக மதம்

குர்மீத் ராம் ரகீம் சிங், அரியானா மாநிலம், சிர்சா நகரில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் ஒரு சிறிய நகரம் போல விரிந்து கிடக்கும் தேரா சச்சா சவுதாவின் தலைவர். தேராக்களை ஒரு வகையான ஆதீனங்கள் என்று சொல்லலாம். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் சிறிதும் பெரிதுமாக சில ஆயிரம் தேராக்கள் உள்ளன.

ஜாட் சாதியினரால் ஆதிக்கம் செய்யப்படும் அதிகாரபூர்வ சீக்கிய மதத்தின் மீது வெறுப்பும் அதிருப்தியும் கொண்ட ஒடுக்கப்பட்ட சாதிகள், தமக்கென உருவாக்கிக்கொண்ட தனித்தனி நிறுவனங்களாகவும், சூஃபி வழிபாட்டு முறையும் சீக்கிய நம்பிக்கையும் இணைந்த வழிபாட்டுப் பிரிவுகளாகவும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் மதமாகவும் உருவாகியிருப்பவை இந்த தேராக்கள். கத்தோலிக்க, புரோட்டஸ்டென்ட் மதப்பிரிவுகளுக்கு வெளியே, பாஸ்டர்கள் எனப்படுவோர் சுயேச்சையாக நடத்தும் கிறித்தவ சபைகளைப் போன்றவை இவை.

வளமான விளைநிலங்களையும் சொத்துக்களையும் கொண்டவையாக வளர்ந்திருக்கும் இந்த தேராக்கள் மத நிறுவனங்களுக்குரிய வரிச்சலுகையையும் பெற்றிருக்கின்றன.  சுயநிதிக் கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், கட்டைப்பஞ்சாயத்து, நுகர்பொருள் வியாபாரம் ஆகியவை முதல் அரசாங்க காண்டிராக்டு, வேலைநியமனம், டிரான்ஸ்ஃபர் என்று காரியங்களையும் முடித்துத் தரும் தரகுவேலைகள் வரையிலான அனைத்தையும் செய்து கொடுப்பவர்களே இந்த தேராக்களின் ஆன்மீகத் தலைவர்கள்.

சாதிச் சங்க தலைவன், பிழைப்புவாதக் கட்சித் தலைவன், மாஃபியா கும்பல் தலைவன் ஆகியோருக்குரிய அனைத்துப் பணிகளையும் ஆன்மீகப் போர்வைக்குள்  ஒளிந்து  கொண்டு செய்பவையே இந்த தேராக்கள்.

ஜாட் சாதியில் பிறந்த, திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான குர்மீத், பதவியில் அமர்த்தப்பட்ட ஆண்டு 1990. கடந்த 27 ஆண்டு காலத்தில்தான் சிறியதொரு அமைப்பாக இருந்த இந்த தேரா, பல ஆயிரம் கோடி சொத்து மதிப்பு கொண்ட நிறுவனமாக விரிவடைந்திருக்கிறது.

சீக்கிய மதத்தில் நிலவிய தலித்துகளுக்கு எதிரான கடும் சாதி ஒடுக்குமுறை, அவர்கள் மத்தியில் தோற்றுவித்திருந்த வெறுப்பைப் பயன்படுத்திக் கொண்டு, சீக்கிய மதத்துக்கு வெளியே சுயேச்சையான ஒரு மதக்குழுவாக அம்மக்களைத் தன் பின்னே திரட்டிக் கொண்டான் குர்மீத் சிங்.

சீக்கிய மதச் சீரழிவில் புழுத்த புழு

சாதிவெறி பிடித்த சமூகச் சூழல் என்ற பின்புலத்தில் தேரா சச்சா சவுதாவின் வளாகத்தில் சாதி வேறுபாடின்றி மக்கள் நடத்தப்பட்டதும், தேராவின் சார்பில் நடத்தப்படும் மருத்துவ மனைகளில் வழங்கப்பட்ட மலிவு விலை மருத்துவமும், பள்ளிகளில் கல்வி, தேரா நிறுவனம் நடத்தும் தொழில்கள் மற்றும் விவசாயத்தின் வாயிலாக சுமார் 75,000 பேருக்கு மேல் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பும் ஏராளமான தலித் மக்களை தேராவை நோக்கி ஈர்ப்பதில் பெரும்பங்காற்றின.

மிக முக்கியமாக குடி, போதைப்பழக்கம் கூடாது என்ற ராம் ரகீமின் பிரச்சாரமும் தேராவில் செயல்பட்ட போதை அடிமைகள் மறுவாழ்வு மையமும், பெண்களை ஈர்ப்பதில் பெரும் பங்காற்றியது. தேராவில் ஞானஸ்நானம் பெற்று இணைபவர்கள் மாமிசம் சாப்பிடக்கூடாது என்ற விதியும், அவ்வாறு இணைபவர்களுக்கு அவர்கள் பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப்பட்டத்தை அகற்றி விட்டு, இன்சான் (மனிதன்) என்ற பட்டத்தை சேர்த்ததும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களிடம், ஒருவிதமான மேல்நிலையாக்க மனநிலையைத் தோற்றுவித்தன. ஐயப்ப சீசனில் விரதமிருக்கும் உழைக்கும் வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட சாதிகளையும் சேர்ந்த சாமிகளும் அவர்களது குடும்ப பெண்களும் ஆட்படும் மனநிலையை ஒத்தது இது.

ராம் ரகீமின் மதக்குழு என்பது சீக்கிய மதத்தின் போர்ஜரி வடிவம். பார்ப்பனியத்தையும் சாதியையும் எதிர்த்த குருநானக், தனது மார்க்கத்தில் இணைபவர்கள் ஆணாக இருந்தால் சிங் என்ற அடைமொழியையும், பெண்ணானால் கவுர் என்ற அடைமொழியையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென்றும், ஆண்சாதி பெண்சாதி தவிர, வேறு சாதியில்லை என்றும் விதித்தார். சாதி மறுப்பு, சீக்கியத்தின் முக்கிய கொள்கை.

இருப்பினும், இன்று சாதிக்கு ஒரு குருத்துவாரா என்று சீக்கிய மதம் சீரழிந்து விட்டது. பஞ்சாப் மாநில மக்கட்தொகையில் சுமார் 30%, அரியானாவில் 20% தலித் மக்கள் என்ற போதிலும் அவர்களில் 1% மக்களிடம்கூட நிலம் இல்லை. இந்நிலையில் ஆதிக்க சாதியினரின் நிலவுடமை ஆதிக்கத்தையும் சாதி ஆதிக்கத்தையும் அரசியல் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்காமலேயே, தலித் மக்களின் அதிருப்தியைத் தந்திரமாக  அறுவடை செய்து கொண்டான் ராம் ரகீம். தனது தேராவில் இணைகின்ற மக்களின் பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதிப்பட்டத்தை நீக்கிவிட்டு, அனைவருக்கும் இன்சான் (மனிதன்) என்ற பட்டத்தை வழங்கினான்.

பஞ்சாப் மாநில மக்கட்தொகையில் சுமார் 30%, அரியானாவில் 20% தலித் மக்கள் என்பதால், அவர்களை வாக்கு வங்கியாகத் திரட்டிவைத்துக் கொண்டு, காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் விலைபேசியதுதான் ராம்ரகீமின் சாமர்த்தியம். 2009 – இல் காங்கிரசையும் அதன் பின்னர் 2012 முதல் பா.ஜ.க. வையும் ஆதரித்து, அவர்கள் துணையுடன் ஒரு மாஃபியா சாம்ராச்சியத்தைக் கட்டியமைத்துக் கொண்டான்.

கலவரம் – நீதிபதியை மிரட்டிய பா.ஜ.க.

ராம் ரகீம் சிங்குக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவுடன் அந்த ஊரில் நடைபெற்ற பெருந்திரள் வன்முறையைக் கண்ணுற்ற சில அறிஞர்கள், கொடிய குற்றங்களையும் தாண்டி ராம் ரகீமை மக்கள் நம்புகிறார்கள் என்றால் இதன் சமூக உளவியல் ஆய்வுக்குரியது என்றெல்லாம் இதனைச் சித்தரிக்கிறார்கள்.

குன்ஹா தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் அ.தி.மு.க. காலிகள் அரங்கேற்றிய வன்முறைக்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இங்கே வன்முறையை அரங்கேற்றியவர்கள் அ.தி.மு.க. என்ற அரசியல் மாஃபியாவின் தளபதிகள். அங்கேயும் அந்த ஆன்மீக மாஃபியாவுக்கு எண்ணற்ற தளபதிகளும் அதனை அண்டிப்பிழைக்கும் பரிதாபத்துக்குரிய மக்களும் இருந்தனர். கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி. மீதும், தாதுமணல் கொள்ளையன் வைகுந்தராசன் மீதும் நடவடிக்கை எடுத்தவுடன், அவர்களிடம் வேலை செய்தவர்கள் பொங்கி எழுந்ததற்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

ஜெயலலிதா நல்லவர், எம்.ஜி.ஆர். நல்லவர் என்று நம்புகின்ற, கல்வியறிவும் ஜனநாயக உணர்வும் இல்லாத பெருந்தொகையான மக்கள், அற்ப சலுகைகளுக்காக பிழைப்புவாதிகளாக நடந்து கொள்ள தமிழகத்தில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்களே, அதன் இன்னொரு வடிவமே இது.

ராம் ரகீம் தண்டனைக்கு எதிரான வன்முறையை அரியானா மாநில பா.ஜ.க. அரசு திட்டமிட்டேதான் நடத்தியது. தீர்ப்பு வழங்கப்படும் நாளுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே அங்கு மக்கள் கூட்டம் குவிக்கப்பட்டது. ராம் ரகீமுக்குத் தண்டனை விதித்தால், அதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நீதிபதியையும் சிவில் சமூகத்தையும் மிரட்டுவதே பா.ஜ.க. அரசின் நோக்கமாக இருந்தது.

144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பலரும் கோரியபோது, மத நம்பிக்கைக்கு எதிராக 144 பிறப்பிக்க இயலாது என்று பதிலளித்தார் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர். பிறகு வன்முறை எல்லை மீறிச் சென்றவுடன், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Cr.PC) கீழ் 144 தடை பிறப்பிப்பதற்குப் பதிலாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 144-வது பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது, கூட்டம் கூடத் தடை விதிக்கப்படவில்லை. ஆயுதங்களுடன் கூடுவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. இது குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கு, எழுத்துப்பிழை என்று நக்கலாகப் பதிலளித்தது பா.ஜ.க. மாநில அரசு.

2002 குஜராத் இனப்படுகொலையின்போது உயர் நீதிமன்ற நீதிபதிகளே உயிர் தப்பி ஓட வேண்டிய நிலையை உருவாக்கிய கலவர நாயகன் பிரதமராக அமர்ந்திருக்கும் நாட்டில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி கொல்லப்படாததுதான் அதிசயம். கலவரத்துக்கு அந்த நீதிபதிதான் பொறுப்பு என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார் அமித் ஷா.

தண்டனை விதிக்கப்பட்டதும் ராம்ரகீமைத் தப்பிக்க வைக்கும் சதி திட்டத்திற்கு போலீசாரே உதவியிருக்கின்றனர். தண்டிக்கப்பட்ட அந்தக் குற்றவாளியை அவனது வளர்ப்புமகள் என்று கூறப்படும் ஹனிபிரீத்துடன் தனி ஹெலிகாப்டரில் அனுப்பியதும், அதில் அவர்கள் சாக்லேட் பரிமாறிக் கொண்டதும், போலீசின் விருந்தினர் மாளிகையில் தனியே தங்கவைக்கப்பட்டதும் புகைப்படங்களாக வந்து சந்தி சிரிக்கின்றன. தனக்கு அன்றாடம் மசாஜ் செய்து விடுவதற்கு ஹனிபிரீத் தன்னுடன் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் ராம்ரகீம் மனு செய்திருக்கிறான் என்றால், பா.ஜ.க. அரசில் அவனுடைய அதிகாரம் எப்படி இருந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம்.

தங்களைத் தேர்தலில் ஆதரித்தால் வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவதாக வாக்குறுதி அளித்த பா.ஜ.க. தலைவர்கள், தங்களை முதுகில் குத்தி விட்டதாக வெடித்தார் வளர்ப்பு மகள். மோடி சசிகலாவின் தலையைத் தடவிய கதைதான்.

வல்லுறவு – ஆண்மை நீக்கம் – ஆன்மீகம்

குர்மீத் ராம் ரகீமின் பாலியல் வல்லுறவுக் குற்றத்தை முதன் முதலில் வெளியே கொண்டுவந்தது 2002 -இல் வெளியான ஒரு மொட்டைக் கடிதம். ஆசிரமத்தில் சிஷ்யையாக சேர்க்கப்பட்ட தன்னையும் தன்னைப் போன்ற எண்ணற்ற இளம்பெண்களையும் மிரட்டி வல்லுறவுக்கு உட்படுத்துவதாக வாஜ்பாயி, மனித உரிமைக் கமிசன் முதல் மாநில உயர் நீதிமன்றம் மற்றும் ஊடகங்கள் வரை அனைவருக்கும் அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தாள் அந்தப் பெண். யோக்கியர் வாஜ்பாயி அரசு இதனைக் கண்டு கொள்ளவில்லை. இக்கடிதத்தை தைரியமாகப் பிரசுரித்த பத்திரிகையாளரும், கடிதம் எழுதிய பெண்ணின் சகோதரனும் ராம் ரகீமின் ஆட்களால் கொல்லப்பட்டனர்.

சண்டிகர் உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னரும்,  விசாரணையை நிறுத்துவதற்கு காங்கிரசு அமைச்சர்களும், குறிப்பாக பா.ஜ.க. -வின் பல அமைச்சர்களும் தனக்கு நிர்ப்பந்தம் கொடுத்ததாகச் சொல்கிறார் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி.

பெற்றோரால் மிகுந்த பக்தியுடன் சிஷ்யைகளாக ஒப்படைக்கப்பட்ட, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 -க்கும் மேற்பட்ட இளம்பெண்களை தனது வைப்பாட்டிகளாகப் பயன்படுத்திவிட்டு, பின்னர் தனது சீடர்களுக்கே மணமுடித்து வைத்திருக்கிறான் ராம் ரகீம். அதே போல, சுமார் 400 ஆண் சீடர்களுக்கு ஆண்மை நீக்கமும் செய்திருக்கிறான்.

நான் கடவுளின் அவதாரம். நான் கண்ணனைப் போன்றவன், நீங்கள் கோபியரைப் போன்றவர்கள். உங்கள் உள்ளத்தை எனக்கு ஒப்படைத்திருக்கிறீர்கள். உடலையும் ஒப்படைத்தால், உங்கள் பக்தி முழுமைப்படும் என்று கூறியும், இணங்க மறுத்த பெண்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தும் அனைவரையும் வல்லுறவுக்கு ஆளாக்கியிருக்கிறான் ராம்ரகீம்.

ராம் ரகீமுக்கு எதிராகச் சாட்சி சொன்னால், தம் குடும்பத்தைக் கொன்றுவிடுவான் என்றும், தற்போதைய மணவாழ்க்கையும் நாசமாகிவிடும் என்றும் அஞ்சி, பாதிக்கப்பட்ட பெண்கள் பேசவே மறுத்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் இரண்டே இரண்டு பெண்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கே இரண்டு ஆண்டுகள் அரும்பாடு பட வேண்டியிருந்ததாகவும், பா.ஜ.க. மாநில அரசின் போலீசும், தேராவின் குண்டர்களும் தங்களை நேரடியாகவே அச்சுறுத்தியதாகவும் கூறுகிறார் சி.பி.ஐ. அதிகாரி.

இப்போது ராம்ரகீம் சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்டாலும், தேராவின் உள்ளே நடைபெற்ற குற்றங்கள் குறித்த உண்மை விவரங்கள் முழுமையாக வெளிவருவதை பா.ஜ.க. ஒரு போதும் அனுமதிக்காது. ஏனென்றால், அவர்கள்தான் ராம் ரகீமின் மிக முக்கியமான குற்றக் கூட்டாளிகள்

பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் தொடர்பாக 2008 -ஆம் ஆண்டிலேயே ராம்ரகீமுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டது. மொட்டைக்கடிதம் எழுதிய பெண்ணின் சகோதரன் மற்றும் அதனை வெளியிட்ட பத்திரிகையாளர் ஆகிய இருவரையும் கொலைசெய்த வழக்கும் 2002 -இலேயே பதிவு செய்யப்பட்டுவிட்டன.

விசுவாஸ் குப்தா என்ற பணக்கார பக்தருடைய மனைவியை, தனது மகளாகத் தத்து எடுத்துக் கொள்வதாக விழா நடத்தி அறிவித்து விட்டு, அவளை வைப்பாட்டியாக்கிக் கொண்டான் ராம்ரகீம். அப்பா, மகள் என்று கூறிக்கொள்ளும் இருவரும் படுக்கையில் ஒன்றாக இருப்பதைத் தன் கண்ணாலேயே பார்த்துவிட்டதால், தனது மனைவியை மீட்டுத்தருமாறு 2011-இலேயே வழக்கு போட்டிருக்கிறார் விசுவாஸ் குப்தா.

இவையில்லாமல் 400 ஆண் பக்தர்களுக்கு விரைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கொன்று இருக்கிறது. அதை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. மனைவியுடன் சாமியாரைத் தரிசிக்கச் சென்ற ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு தினக்கூலித் தொழிலாளி, தனது மனைவியை மீட்டுத்தருமாறு கொடுத்த புகாரும் தூங்கிக் கொண்டிருக்கிறது.

ராம்ரகீம் காலடி மண்ணெடுத்து…

இவையெல்லாம் நாடறிந்த, ஊடகங்களில் வெளியாகிச் சந்தி சிரித்த வழக்குகள். இத்தனை வழக்குகளும் இருக்கும்போதுதான் 2012, 2017  சட்டமன்றத் தேர்தல்களிலும் 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் ராம்ரகீமின் ஆதரவுக்காகக் காவடி எடுத்தனர் பா.ஜ.க. வின் யோக்கிய சிகாமணிகள். பா.ஜ.க. வேட்பாளர்கள் 44 பேர் ராம்ரகீமின் காலில் விழுந்தனர்.

பாபா குர்மீத் ராம்ரகீம் சிங்கின் புனிதபூமியான தேரா சச்சா சவுதா மண்ணைக் குனிந்து கும்பிட்டு வணங்குவதாக 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நெக்குருகினார் மோடி. பிறகு தனது சுவச் பாரத் திட்டத்தைச் சிறப்பாக எடுத்துச் செல்வதாக ராம்ரகீமுக்குப் பாராட்டு தெரிவித்தார். அரியானா முதல்வர் கட்டாரும், ராம் ரகீமும் துடைப்பக்கட்டையுடன் போஸ் கொடுத்தனர். பதில் மொய்யாக மாட்டுக்கறி தின்போரை வசை பாடினான் ராம்ரகீம்.

தன்னையே கதாநாயகனாகவும், தனது வளர்ப்பு மகளை இயக்குநராகவும் வைத்து ராம்ரகீம் தயாரித்த, காணச் சகிக்காத அருவெறுப்பான கேலிக்கூத்துப் படங்கள் பல வெளியிடப்பட்டன. அத்துணை படங்களுக்கும் வரிவிலக்கு அளித்து ராம் ரகீமைக் குளிப்பாட்டியது பா.ஜ.க. அரசு. அந்தப் படங்களில் இந்து தேசியம் பேசும் நாயகனாக நடித்து, பா.ஜ.க. வைப் பதிலுக்குக் குளிப்பாட்டினான் ராம்ரகீம்.

வல்லுறவு – கொலை – விரை நீக்கம் –  பிறன்மனை அபகரிப்பு நடவடிக்கைகளுக்கான குற்றவழக்குகள் பூஜ்யஸ்ரீ ராம்ரகீம் பாபாவின் மீது நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில்தான், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மானனீய மோகன்ஜி பகவத் முதல் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வரையிலான எல்லா ‘ஜி’க்களும் ராம்ரகீமின் தேரா சச்சா சவுதாவுக்கு விஜயம் செய்திருக்கின்றனர்.

இப்போது கேட்டால், இந்தத் தீர்ப்பு வருகின்ற வரையில் ராம் ரகீமின் லீலைகளைப் பற்றித் தங்களுக்குத் தெரியவே தெரியாது என்றும், குற்றச்சாட்டு இருக்கிறது என்ற காரணத்தினாலேயே ஒருவரைக் குற்றவாளி என்று கருத வேண்டுமா என்றும் நம்மை மடக்குவார்கள்.

டெல்லியில் நிர்பயா (ஜோதி சிங்) என்ற பெண்ணைச் சில பொறுக்கிகள் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொன்று போட்டபோது, சிறுவன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் அனைவரையும் தூக்கில் போட்டாகவேண்டும் என்று கொந்தளித்தவர்கள் இவர்கள்தான்.

”தன்னுடைய சொந்த சீடர்களையே விட்டுவைக்காத வெறி பிடித்த மிருகம்” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, ராம் ரகீமுக்குத் தண்டனையைக் குறைக்க மறுத்திருக்கிறார் விசாரணை நீதிபதி. யாரோ ஒரு பெண் சொல்வதை நம்பி தண்டனை விதிக்கும் நீதிமன்றம், வீதியில் நிற்கும் இலட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் புறக்கணிப்பது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி மகராஜ். ஹிந்து துறவிகளின் சொத்தை அபகரிக்க சர்வதேச சதி நடப்பதாக எச்சரிக்கிறார் சு.சாமி.

இவையெல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள் அல்ல. ஆர்.எஸ்.எஸ்.-ஐ பொருத்தவரை, ராம் ரகீமின் வாக்குவங்கி தேர்தலுக்கானது மட்டுமல்ல. அதிருப்தியுற்றிருக்கும் தலித் சீக்கியர்களை இந்து மதத்துக்கு கர்வாப்ஸி செய்வது, இவர்களைக் காட்டி, இந்து மதத்துக்குள்ளும் இந்து தேசிய அரசியலுக்குள்ளும் அடங்கிப்போகாமல் தொந்திரவு கொடுக்கும் அகாலி சீக்கியர்களைப் பணிய வைப்பது – என்பன சங்க பரிவாரத்தின் நோக்கங்கள்.

இதற்குத்  தோதான ஏவுதளமாக தேரா சச்சா சவுதா பயன்படும் என்ற காரணத்தினால்தான், ராம் – ரகீம் என்ற போலி மதச்சார்பின்மைப் பெயரை சகித்துக் கொண்டு இத்தனை காலம் அவனுக்கு சலாம் போட்டிருக்கிறது சங்க பரிவாரம். ஸ்ரீமான் சோ அவர்களும் குருமூர்த்தி அவர்களும், தேசத்தின் நலனை உத்தேசித்து, தரம் தாழ்ந்த அ.தி.மு.க. கும்பலை சகித்துக் கொள்கிறார்களே, அது போலத்தான்.

ஜெயலலிதாவும் ராம் ரகீமும்

உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேரா சச்சா சவுதாவில் நடந்து வரும் சோதனையில், உள்ளே ஒரு இரகசிய உல்லாச நகரமே இயங்கி வந்திருப்பது தெரிகிறது. தண்டனை விதிக்கப்பட்ட மறு கணத்திலிருந்து அணிஅணியாக மூடப்பட்ட வாகனங்களில் ஆயுதங்களும் பணமும் ஆவணங்களும் ராஜஸ்தானுக்குச் சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். திருப்பூர் கன்டெயினர் விவகாரத்தை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

தற்போது தேராவில் நடந்து வரும் சோதனையில் ஏ.கே.47 துப்பாக்கித் தோட்டாக்களும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. பஞ்சாப் உளவுத்துறைக்குச் சொந்தமான வாகனம் தேராவின் உள்ளே பிடிபட்டிருக்கிறது. தேரா வளாகத்திலிருந்து தப்பிச் செல்ல 5 கி.மீ. நீள சுரங்கப்பாதை உள்ளது என்பது அடுத்த செய்தி. இசட் பிளஸ் பாதுகாப்புக்கு அப்பால், பஞ்சாப் போலீசின் கமாண்டோக்கள் 9 பேரும் ராம் ரகீமின் பாதுகாப்புக்கு இருந்ததாகவும், அதில் சிலர் ராம் ரகீமைத் தப்ப வைக்க முயன்றதாகவும் அரியானா அரசு குற்றம் சாட்டுகிறது.

இரண்டு மாநில அரசுகள் மற்றும் டெல்லியின் அரசு எந்திரம் முழுவதும் ஒரு கிரிமினலின் கூலிப்படையாகவே செயல்பட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது – தமிழ்நாடு போலீசும் அரசு எந்திரமும் அம்மாவுக்குப் பயன்பட்டதைப் போல.

ராம் ரகீமின் குடும்பத்தினர் பா.ஜ.க. ஆட்சி செய்யும் ராஜஸ்தானுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுவிட்டனர். சிறைக்கு அனுப்பும்வரை ராம்ரகீமுடன் இருந்த ஹனிபிரீத் நேபாளத்துக்கு தப்பியிருக்கக் கூடும் என்று கதையளக்கிறது போலீசு. சங்கரராமன் கொலை கேசில் பெரியவாள் நேபாளத்துக்குத் தப்பிக்க முயன்றதை நினைவுபடுத்திக் கொள்ளவும்.

தேராவின் தலைவர்தான் தண்டிக்கப்பட்டிருக்கிறாரேயன்றி, தேரா தடை செய்யப்படவில்லை என்று பேசியிருக்கிறார் பா.ஜ.க.வின் சுகாதார அமைச்சர். அ.தி.மு.க. -வின் தலைவிதான் தண்டிக்கப்பட்டிருக்கிறார், அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது என்பது போலத்தான்.

ஜெயலலிதா செத்துவிட்டார், சசிகலா சிக்கி விட்டார் என்பது தமிழகத்தின் கதை. ராம் ரகீம் சிக்கிக் கொண்டான், ஹனிபிரீத் தப்பி விட்டாள் என்பது அரியானாவின் கதை.

ரத்த வாரிசுகளை ஆன்மீக வாரிசாக நியமிக்கக்கூடாது என்பது தேராவின் மரபாம். எனவே, ராம் ரகீமின் மகன்தான் தேராவின் சொத்துகளுக்கு வாரிசு என்று அறிவித்திருக்கிறார் ராம் ரகீமின் அம்மா. அங்கேயும் ஏதோவொரு பொதுக்குழுவைக் கூட்டித்தான் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்கள் என்பதுதான் நகைச்சுவை.

சிறையில் இருந்தபடி ராம்ரகீமே தேராவை இயக்குவார் என்று அறிவிப்பு வெளியிட்டார் தேராவின் மேனேஜர். அடுத்த சில நாட்களின் தேராவின் மானேஜர் கைது செய்யப்பட்டுவிட்டார். நடப்புகள் அனைத்தும் ஜெயாவின் அரசியல் வாரிசு, சொத்து வாரிசு சண்டையை அப்படியே பிரதிபலிக்கின்றன.

அ.தி.மு.க.வின் அடுத்த வாரிசு யார் என்பதைத் தீர்மானித்து, அவர்களுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கும் பொறுப்பை ஏற்றுள்ள பிராமணோத்தமர்கள் யார் என்பதை நாம் அறிவோம். தேரா சச்சா சவுதாவின் அடுத்த வாரிசு யார்? அந்த வாரிசை நியமிக்கும் அதிகாரத்தை சங்கபரிவாரம் எந்த பிராமணோத்தமருக்கு வழங்கியிருக்கிறது? என்பதுதான் இப்போதைக்கு நம் அறிவுக்குப் புலப்படாத பிரம்ம ரஹஸ்யம்.

தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு, உயர் குலத்தில் பிறந்த மேன்மக்கள், எத்தகைய ஒழுக்கம் கெட்ட கார்யங்களிலெல்லாம் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது!

– சூரியன்

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

உயிரையும் கல்வி உரிமையையும் பறிக்கும் பார்ப்பனீயம் – மதுரை ம.உ.பா. மையம் அரங்கக் கூட்டம் !

  • பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை : தோட்டக்களால் சிந்தனையை அழிக்க முடியாது ! – கண்டன அரங்கக் கூட்டம்
  • ஏழை மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் நீட் ! – கலந்துரையாடல்

ன்னடப் பத்திரிக்கையாளர்  கௌரி லங்கேஷ்   படுகொலையைக் கண்டித்தும்  ஏழை மக்களின் கல்வி  உரிமையை வேட்டையாடும்  நீட்  தேர்வை எதிர்த்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளை சார்பில் 16.09.2017 அன்று மாலை 6:00 மணி அளவில் கண்டன அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்டத்  தலைவர் பேராசிரியர் சீனிவாசன்  தலைமைதாங்கினார். அவர் தனது தலைமையுரையில் “கர்நாடக மாநிலத்தின்  சமூகப் போராளியும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது முதல்முறை அல்ல. சமூக சீர்திருத்தச் சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோரும்  இதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இன்று வரை குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை. மத்திய, மாநில  அரசின் போக்குகள்  மக்கள் விரோதப் போக்காக இருக்கிறது.

துண்டுப் பிரசுரம் கொடுத்ததற்காக மாணவி வளர்மதி குண்டாஸ் சட்டத்தில் சிறையில் போடப்பட்டார். பேராசிரியர் ஜெயராமன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதி மீது வழக்கு போடப்படுகிறது. டெல்லியில் போராடும் விவசாயிக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் ஆறு வகையான கல்வி முறைகள் உள்ளன. இவற்றில் சமத்துவம் இருக்கிறதா?

சமத்துவம் இல்லாத சூழ்நிலையில் பொதுவான தேர்வு சாத்தியமா என்ற கேள்வியோடு நீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராடினால்  கைது செய்யப்பட்டு சிறைக்கு தள்ளப்படுகின்றனர். மக்களது பிரச்னைகளைப் பற்றி சிந்திக்கக்கூட நேரமில்லாத இந்த அரசு தேவையா? நாம் ஒன்றுபட்டுப் போராடவில்லை என்றால் மிகப்பெரிய தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரமிது” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்  படுகொலை: சிந்தனையைத் தோட்டாக்களால் அழிக்க முடியாது” என்ற தலைப்பில் உரையாற்றிய மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயlலாளர் பேரா. இரா.முரளி தனது உரையில்:

“கௌரி லங்கேஷ் தனது லங்கேஷ் பத்திரிகையில் மதவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து எழுதினார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்னையா குமாரையும் குஜராத்தில் (உனா) தலித் மக்களின் எழுச்சிக்குத் தலைமை ஏற்ற ஜிக்னேஷ் மேவானியையும் தனது வளர்ப்பு மகன்களாக அறிவித்தார். இந்துத்துவவாதிகளைக் கடுமையாகச் சாடியதோடு களப் போராளியாகவும் இருந்தார். இந்துத்துவ அடிப்படைவாதிகளால் தொடர்ந்து கொலை மிரட்டல்களுக்கு உள்ளானார். 10 அடி தூரத்தில் 7 தோட்டாக்களால் சுடப்பட்டிருக்கிறார். கூலிப்படையைப்  பயன்படுத்திச் சுட்டுக் கொன்றுள்ளனர். தபோல்கர், பன்சாரே, கல்புர்கி  வரிசையில் கௌரியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கன்னையா குமார் பெங்களூர் வந்து கௌரி லங்கேஷை சந்தித்தபோது; கிரிஷ்கர்னாடுக்கு அச்சுறுத்தல் வந்ததைப் போலவே தனக்கும் இந்து அடிப்படைவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாகவும் பெங்களூரில் “பண்பாட்டுக் காவலர்கள்” வந்துள்ளதின் விளைவாகப் பலருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தானும் கொலை செய்யப்படலாம் என்று கூறியுள்ளார். சங்கபரிவாரங்களின் கூட்டத்திலே கௌரியைக் கேவலமாகத் திட்டியதோடு தீர்த்துக்கட்டி விடுவதாகவும் முழங்கி உள்ளனர். கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ள இயலாதவர்கள் கொலை செய்கின்றனர்.

இந்துத்துவாதிகள் தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதைத் திசைதிருப்பும் வகையில்  நக்சலைட் தீவிரவாதிகள்  தான் கொலை செய்திருப்பார்கள் என்று வதந்திகள்  பரப்பப்படுகின்றன. குறிப்பாக மாவோயிஸ்டுகள் சிலரை கௌரி ஜனநாயகப் பாதைக்குத் திரும்பச் செய்தது அவர்களுக்குப் பிடிக்காமல் அவரைப் பழிவாங்கும் நோக்கத்துடன்  கொலை செய்துள்ளனர் என்று பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் உண்மை அது அல்ல. கவுரிக்கு கருத்துரீதியான முரண்பாடு இந்து மதவெறியர்களோடுதான்.

2014 – 2015 -ம் ஆண்டின் தேசியக்குற்றப் பதிவின் புள்ளிவிவரப்படி பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக 142 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 24 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில் ம.பி., உ.பி., பீகார் மாநிலங்களே அதிகம். ஆனால் இந்த வழக்குகளில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. நீதிமன்றங்கள் கூட அடிப்படைவாதிகளின் வசமாக இருக்கிறது.

அரசுக்கு எதிராகச் சின்ன அசைவு ஏற்பட்டாலும் கைது, சிறை. இதற்கு நீதிமன்றமும் துணை போகின்றது, அரசுக்கு ஆதரவாகத்  தீர்ப்புச் சொன்னால் பதவி உயர்வு கிடைக்கும் என்று நினைக்கின்றனர். போராளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்; மதுரையில் நீட்டுக்கு எதிராகப் போராடிய 85 மாணவர்கள் மீது பொய்வழக்குகள் போட்டு சிறையிலடைத்து கடுமையான நிபந்தனைகளோடு பிணை வழங்கியுள்ளது நீதிமன்றம். வந்தே மாதரம் பெங்காலியா? சமஸ்கிருதமா? என்று வழக்கு வந்தால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடவேண்டும் என்று தீர்ப்பு சொல்லப்படுகிறது.

நமது போராட்டங்கள் நீதிமன்றங்களை நோக்கித் திரும்ப வேண்டியுள்ளது. துப்பாக்கி கலாச்சாரம் தமிழகத்துக்கும் வந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. எல்லோரும் ஒன்றிணைய  வேண்டும். பல கொள்கைகள் இருந்தாலும் ஒரு புள்ளியில் சேர வேண்டிய தேவை எழுந்துள்ளது” என்று தனது கண்டன உரையில் வலியுறுத்தினார்.

அதன்பின் நீட் தேர்வு பற்றிய விவாதம் நடைபெற்றது. ம.உ.பா. மையத்தின் கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோனிராஜ் விவாதத்தை ஒருங்கிணைத்தார்.

மருத்துவக் கல்வியில் நிலவிவரும் தரக்குறைவு மற்றும் லஞ்ச ஊழல் முறைகேடுகளை களைவதற்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்படுவதாக மோடி அரசு சொல்லியது. ஆனால் நீட் தேர்வு நடைபெற்ற விதம் பணக்காரர்களுக்கும், கல்விக் கொள்ளையர்களுக்கும் மட்டுமே ஆதரவாக நடத்தப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக நிரூபித்துள்ளது.

கார்ப்பரேட்டுகளின் ஆணைப்படி அமெரிக்க நிறுவனமான புரோமெட்ரிக் தான் தேர்வை நடத்தியுள்ளது. உலக நாடுகளில் உள்ள மாணவர்களுக்கெல்லாம் இங்கே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடிகள் வர்த்தகமாகியுள்ளது. பணம் மட்டுமே ஒரே தரம் – தகுதி. பணம் இல்லாதவர்களுக்கு எதற்குக் கல்வி! அவர்களுக்குக் குலக்கல்விதான் என்பதை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது என்று தனது தொடக்க உரையில் கூறினார்.

இளம் தமிழகம் அமைப்பைச் சேர்ந்த பேரா.ரபீக்ராஜா பேசும் போது “நீட்டை எதிர்ப்பது மட்டும்தான் நமது திட்டமா? பா.ஜ.க.கொண்டு வந்துள்ள எந்தத் திட்டமும் நமக்கு வேண்டாம். அனைத்தையும் எதிர்த்துப் போராடுவோம்” என்று கூறினார்.

நாணல் நண்பர்கள் அமைப்பை சார்ந்த திரு சரவணக்குமார் : “கவுரி லங்கேஷ் படுகொலை கருத்துரிமை மீதான இந்து பயங்கரவாதிகளின் தாக்குதல்! அதை நாம் எதிர்த்துப்  போராட  வேண்டும்.  முத்துக்குமார், செங்கொடி, காவிரி விக்னேஷ், அனிதா ஆகியோருடைய உயிர்த் தியாகத்தை நாம் சரியாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை.”

வழக்கறிஞர் பழனியாண்டி : “தமிழ் நாடு அரசு நடத்திவந்த நுழைவுத் தேர்வு ஏன் நிறுத்தப்பட்டது? மதிப்பெண் அடிபடையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது அரசு திட்டமிட்டே கல்வியில் தனியார் ஆதிக்கத்தைக் கொண்டுவந்துள்ளது. அரசு பள்ளிகள் தரம் தாழ்த்தப்பட்டுவிட்டன. கல்வி தனியார் மயத்துக்கும், கொள்ளைக்கும் நீதிமன்றங்கள் துணை போகின்றன.”

சம நீதி வழக்குரைஞர்கள் சங்க வழக்கறிஞர் ராஜேந்திரன் : “நீதிமன்றங்கள் மூலமாக அரசுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஜாக்டோ – ஜியோ சட்டப்படியான போராட்டத்தை நீதிமன்றம் மிரட்டிப் பணியவைக்கிறது. அனிதாவின் மரணத்திற்கும் நீதிமன்றங்கள்தான் முக்கிய காரணம். தரத்தைப் பற்றிப் பேசும்போது பாடத் திட்டத்திற்குள் போய் விவாதிக்க வேண்டும். நீட் தேர்வு முறையால் தமிழ் நாட்டில் சமூக நீதி மறுக்கப்பட்டுவிட்டது.”

வங்கி அதிகாரி, மற்றும் சமூக சேவகர் திரு ராகவன்: “கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும். அரசியல் சட்டத்தை நீதிமன்றங்கள் கடைபிடிக்கவில்லை. சிறந்த பள்ளிகள் மக்களால் உருவாக்கப்பட்டு பேணி வளர்க்கப்படுகின்றன. நீட் தேர்வு இல்லாமலே கல்வித் தரத்தை உயர்த்தலாம்.”

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் திரு அய்யனார் : “மோடி தான் அனைத்துக்கும் காரணம். தமிழ் நாட்டின் மீது அடுக்கு அடுக்காக ஏவிவிடும் நாசகரத் திட்டங்களால் உழைக்கும் மக்களை பழிவாங்கி கொண்டிருக்கிறார். மோடியின் பாசிச அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.”

மத்திய அரசு ஊழியர் திரு குணசீலன் : “தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தற்போது அதிக அளவில் வட நாட்டவர்கள்  நுழைக்கப்படுகின்றனர். இந்தி மொழியும் திணிக்கப்படுகிறது. தமிழ் நாட்டின் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. அப்படித்தான் கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. ஈபிஎஸ்- ஓபிஎஸ் கும்பல் தமிழகத்தின் நலன்களை மோடியிடம் அடகு வைத்து விட்டனர். தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட மக்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டங்களை நடத்த வேண்டும்.”

வழக்கறிஞர் நடராஜன் : “ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்றது போல நீட் பிரச்சினையிலும் மக்களை அணி திரட்டிப் போராடவேண்டும்.”

திரு சங்கையா : “ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரல் அரங்கேற்றப்படுகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் ஒரே பண்பாடு, ஒரே வரி, இந்து மதம், நீட் தேர்வு, பண மதிப்பு நீக்கம், நவோதயா பள்ளி என்று ஒவ்வொன்றாகத் திணிக்கப்படுகிறது.பா.ஜ.க. சொல்வதற்கும் செய்வதற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. காசு இல்லாதவனுக்குக் கல்வி இல்லை என்பதே புதிய மனு நீதி, அதற்குத்தான் நீட் தேர்வு.”

பேராசிரியர் முரளி : “இந்து அடிப்படைவாதிகளின் ஆட்கள் முக்கியமான அதிகார மையங்களில் நுழைக்கப்பட்டுள்ளனர். நீதித் துறையிலும் அவர்களே கோலோச்சுகின்றனர். அரசியல் சட்டத்தை ஓரங்கட்டிவிட்டு தங்களது திட்டத்தை அமல்படுத்துகின்றனர். அனிதாவின் கல்வி உரிமையை மறுத்து அவரை சாவுக்குத் தள்ளியதில் இவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.”

மாணவர் திரு ஆனந்த் : “கல்வி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு அது வியாபாரமயமானது தான் நீட் தேர்வு வந்ததற்கான முதன்மையான காரணமாகும். தற்போது உலகமயத் திட்டத்தின் கீழ் பன்னாட்டு மாணவர்களும் இந்திய மருத்துவத் துறையைப் பங்போட்டுக்கொள்ள நீட் வழி விட்டுள்ளது.”

எஸ்.யு.சி.ஐ அமைப்பை சேர்ந்த  ஹில்டா மேரி : “நமது கல்வி முறை மற்றும் பாடத் திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் அல்லது கல்வியாளர்கள் பாடத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். ஆனால் யாரோ தயாரிக்கிறார்கள். யாரோ முடிவு செய்கிறார்கள். எது தரமான கல்வி என்று யார் முடிவு செய்வது? அரசு நம் மாணவர்களுக்குத் தரமான கல்வியைத் தரவில்லை. இதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.”

இறுதியாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் லயனல் அந்தோனிராஜ் தொகுப்புரையில் : “மருத்துவர் ஆவதைத் தன் வாழ்வின் நோக்கமாக வரித்துக் கொண்டு கடுமையாக உழைத்து உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றும் கபடத்தனமாக வாய்ப்பு தட்டிப்பறிக்கப் பட்டதனாலேயே அனிதா தற்கொலை முடிவுக்குப் போயிருக்கிறார். நீட்டுக்குத் தயாராவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலையை ஏற்றுக்கொள்ள மறுத்தே அனிதா தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

எதிர்த்து நிற்கத் துணியாமல் பணிந்து போவதை ஏற்கமுடியாமல், அனைத்து நிலைகளிலும் தனக்கு நீதி மறுக்கப்பட்டதாலும் அதற்குக் காரணமானவர்களைக் காறித் துப்புகிற வகையிலே தான் அனிதா இந்த முடிவைத் தீர்க்கமாக எடுத்துள்ளார். மோடி அரசு அடுக்கடுக்காகத் தமிழ் நாட்டுக்கு இழைத்து வரும் கேடுகளை ஒட்டு மொத்தமாகத் தொகுத்தும் அதற்குப் பாய் விரித்துப் பல்லிளிக்கும் எடப்பாடி – பன்னீர் கும்பலின் துரோகத்தையும் மக்கள் மத்தியில் வீச்சாகக் கொண்டு செல்வதில் உடன்படுகிறவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்”. என அறைகூவல் விடுத்தார்.

***

கூட்டத்தின் ஊடாகப் பேராசிரியர் மு.ராமசாமி எழுதிய “ஆகாயத் தாமரைகளும் ஆகாத ஊருக்கு வழி கூறும் திசைகாட்டிகளும்” என்ற நூலைப் பேராசிரியர் இரா.முரளி வெளியிட வழக்கறிஞர் ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார். இந்த நூல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தரைத் தெரிவு செய்யும் குழு உறுப்பினராகப்  பேரா.ராமசாமி இருந்த போது, குழுவின்  கூட்டுனர்  முனைவர் முருகதாஸ் முறைகேடுகளில் ஈடுபட்டதை எதிர்த்துப் பதவி விலகியதையும் நடத்திய சட்ட, நடைமுறைப் போராட்டத்தைப் பற்றியும் விவரிக்கிறது.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர் பி.பி.செல்லதுரைக்கு பல்கலைக் கழக மானியக் குழு விதிகளின்படி உரிய தகுதி இல்லை. அவர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது நியமனத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி ம.உ.பா.மையம் சார்பாக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் உள்ளது.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரைக் கிளை. தொடர்புக்கு – 94434 71003.

_____________

செத்தும் கெடுத்த ஜெயா ! – அழுகி நாறும் அதிமுக !

1

செத்தும் கெடுத்த ஜெயா !

புதைக்கப்படாமல் அழுகி நாறும் பிணம் போல முடைநாற்றத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. செத்தும் கெடுத்த ஜெயாவின் சாதனை இது. ஜெயலலிதா அப்போலோவில் கிடந்தபோது உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதையே யாரும் அறிய முடியாமல், செயற்கை சுவாசம் உள்ளிட்ட வழிமுறைகளால் அவரை உயிருடன் வைத்திருந்ததைப் போலவே, இப்போது அ.தி.மு.க. -வை, ஐ.சி.யு. -வில் வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

அ.தி.மு.க. -வின் அழிவு தமிழகத்துக்கு நல்லதல்ல என்று கூறி, மோதிக்கொள்ளும் அ.தி.மு.க. கொள்ளையர்களிடையே பஞ்சாயத்து செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் துக்ளக் குருமூர்த்தி. ஆளுநர், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட எந்த நிறுவனத்தையும் முறைகேடாகப் பயன்படுத்துவதற்கும், மிரட்டுவதற்கும், பொய் வழக்குப் போடுவதற்கும் எள்ளளவும் கூச்சப்படாமல், அதிகார துஷ்பிரயோகத்தை நிர்வாண நடனமாக நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

வெட்கம் மானமோ, சுயமரியாதையோ இல்லாத அ.தி.மு.க. திருடர்கள், விசுவாசம் – துரோகம் என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் எல்லா விவாதங்களையும் அடக்குகிறார்கள். இந்த இழிநிலைக்குத் தமிழக அரசியலைத் தள்ளிய முதன்மைக் குற்றவாளிகளான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரின் அசிங்கம் பிடித்த பாசிச அரசியல் வரலாற்றை அம்பலப்படுத்துவதற்கு இதைவிடப் பொருத்தமான தருணம் வேறில்லை.

அத்தகைய அம்பலப்படுத்தல்தான் அ.தி.மு.க. என்ற அருவெறுக்கத்தக்க கும்பலின் அழிவைத் துரிதப்படுத்தும் என்றபோதிலும் ஊடகங்களும் அறிவுத்துறையினரும் இதற்கு எதிரான திசையில் கருத்துருவாக்கம் செய்கின்றனர். ஜெயா உயிருடன் இருந்தவரை கட்சிக்குள் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டிருந்ததாகவும், ஜெயலலிதாவின் உறுதியான தலைமை இல்லாத காரணத்தினால்தான் தமிழகத்தின் நலன்கள் பலியிடப்படுவதாகவும் கூறி, சர்வாதிகாரத்துக்குத் துதி பாடுகின்றனர்.

எனினும், மக்கள் போராட்டங்கள் இக்கருத்துகளை மறுதலிக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சி மட்டுமல்ல, போலீசு, அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களும் மக்களிடையே மதிப்பிழந்து வருகின்றன. அனிதாவின் தற்கொலையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கிளர்ந்தெழுந்த மாணவர் போராட்டங்கள் இதை நிரூபித்தன.

நீட் தேர்வு வழக்கை முறைகேடாகக் கையாண்டதன் மூலம் போதுமான அளவுக்கு அம்பலப்பட்டிருக்கும் நீதிமன்றங்கள், தமது அதிகார வரம்பை மீறி, வேலை நிறுத்தத்தைக் கைவிடு, வந்தேமாதரம் பாடு, நவோதயா பள்ளியைத் திற, தேசியக்கொடிக்கு சலாம் போடு என்று சர்வாதிகாரம் செலுத்துவது நீதிமன்றங்களின் மீதான மக்களின் வெறுப்பைத்தான் கூட்டியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள் தத்தம் கோரிக்கையை மட்டும் வலியுறுத்தவில்லை. அவை இந்த அரசமைப்பின் வழியாகத் தமது உடனடிக் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்ற நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டவையாகவும், அதே நேரத்தில் அருகதையற்ற இந்த அரசமைப்பின் அதிகாரத்துக்கு கட்டுப்பட விரும்பாதவையாகவும் இருக்கின்றன. இது மக்களின் ஜனநாயக வேட்கை வெளிப்படுகின்ற வடிவம்.

பொதுச்சொத்தைத் திருடுவதும் அரசு சன்மானங்களைப் பங்கு போடுவதும் தவிர, வேறு கொள்கை எதையும் அறியாத கிரிமினல்கள், எம்.எல்.ஏ.- க்களாக அமர்ந்திருக்கும் அரசாங்கம் இது. அடுத்த மூன்றரை ஆண்டுகளில் தாங்கள் சம்பாதிக்கக் கூடிய தொகை, ஒரே தவணையில் தமக்கு இப்போது கிடைக்கக்கூடிய விலை ஆகிய இரண்டில் எது இலாபகரமானது என்ற கணக்குத் தடுமாற்றத்தைத் தவிர, வேறெந்த கொள்கைத் தடுமாற்றமும் இல்லாத இந்தத் திருடர்கள், 114 -க்குப் பதிலாக 117 என்று தமது எண்ணிக்கைப் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் காட்டிவிட்டால்…?

அரசியல் சட்டப்படி ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு விட்டதாக ஆளும் வர்க்க அறிவுத்துறையினர் அமைதியடையலாம். அத்தகைய அமைதி உருவாவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

ஆன்மீக 420 -யும் அரசியல் 420 -யும் ! – செப்டம்பர் 2017 மின்னூல்

5
image description

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

1. செத்தும் கெடுத்த ஜெயா!

புதைக்கப்படாமல் அழுகி நாறும் பிணம் போல முடைநாற்றத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. செத்தும் கெடுத்த ஜெயாவின் சாதனை இது.

2. ராம் ரகீம்சிங் : வல்லுறவு – ஆண்மை நீக்கம் – ஆன்மிகம் – இந்து ராஷ்டிரம்!

சங்க பரிவாரம், அன்று கொலைவழக்கில் சிக்கிய சங்கராச்சாரிக்குத் துணை நின்றது. இன்று வல்லுறவுக் குற்றத்தில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றிருக்கும் ராம் ரகீமுக்குத் துணை நிற்கிறது.

3. ராம் ரகீம்சிங் – நரேந்திர மோடி : ஆன்மீக 420யும், அரசியல் 420யும்

4. பணமதிப்பழிப்பு நடவடிக்கை : சிக்கியது வெள்ளை! தப்பியது கருப்பு!!

மோடி அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மாபெரும் மோசடி என மறுக்கவியலாதபடி நிரூபணமாகிவிட்டது.

5. பணமதிப்பழிப்பு நடவடிக்கை : மீசை வைத்தால் வீரன் ! மீசையை மழித்தால் ஞானி !!

98.8 சதவீதம் செல்லாத நோட்டுகள் வங்கிக்குள் நுழைந்துவிட்டதை கண்டு பாஜக கும்பல் வெட்கப்படவில்லை. மாறாக அதை வெற்றி என கூசாமல் கொண்டாடுகிறார்கள்.

6. பணமதிப்பழிப்பு நடவடிக்கை : மோடி கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி!

7. பணமதிப்பழிப்பு நடவடிக்கை: என்னது… மறுபடியும் முதல்ல இருந்தா…?

கருப்புப் பணத்தையும், இலஞ்சத்தையும், கள்ளப்பணத்தையும், தீவிரவாதத்தையும் ஒழித்துக் கட்டும் மந்திரக் கோலாக முன்நிறுத்தப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை, சொல்லிக் கொள்ளப்பட்ட அதன் அனைத்து நோக்கங்களிலும் தோல்வியடைந்துவிட்டது.

8. பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு: சாதி அரசியலுக்குத் தூண்டில்!

இந்து ஐக்கியம் என்கிற கிழிந்த வேட்டியை அவிழ்த்து எறிந்துள்ள பாரதிய ஜனதா, உட்சாதிப் பிரிவினை மற்றும் இடைநிலைச் சாதிகளை ஒன்றோடு ஒன்று மோதவிடும் சாதி அரசியல் என்கிற நிர்வாண நிலையை எய்தியுள்ளது.

9. நீட் தேர்வு : இன்றைய பலி அனிதா ! நாளைய குறி அரசு மருத்துவமனை !!

நீட் தேர்வை முறைகேடாகத் திணிப்பதன் நோக்கம், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதல்ல; அரசு மருத்துவமனைகள் அனைத்தையும் தனியார்மயமாக்குவதே. அனிதாவுக்கு மருத்துவ சீட் இல்லை, அனிதாவைப் போன்ற ஏழைகளுக்கு இலவச மருத்துவம் இல்லை.

10. கவுரி லங்கேஷ் : பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து நின்ற வீராங்கனை!

11. விவசாயம்: வருமானம் இரட்டிப்பாகவில்லை ! வரி இரட்டிப்பாகிறது !!

விவசாய இடுபொருளுக்கும், உழுபடைக் கருவிகளுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரி, விவசாயிகளின் முதலீட்டுச் செலவை அதிகரித்து, வருமானத்தை குறைத்து, கடன் சுமையைத் தீவிரப்படுத்தும்.

12. குஜராத் மசூதிகள் இடிப்பு : பா.ஜ.க.வை வழிமொழியும் உச்ச நீதிமன்றம்!

2002 இனப்படுகொலையின்போது 567 மசூதிகளை அழித்துவிட்டு, அவற்றுக்கு நிவாரணம் தருவதென்பது மதச்சார்பின்மைக் கொள்கைக்கு எதிரானதாகும் என்று குஜராத் பாஜக அரசு வாதாடியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

 Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

திருப்பூர்: காவிக் கூட்டத்தை பெரியாரின் தடி கொண்டு விரட்டுவோம் !

0

ந்தை பெரியாரின் 139 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு “காவிக் கூட்டத்தை பெரியாரின் தடி கொண்டு விரட்டுவோம்!” என்ற தலைப்பில் திருப்பூர் பகுதி மக்கள் அதிகாரம் தோழர்களால் கடந்த 17.09.2017 அன்று மாலை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

தலைமை :
தோழர். பிரகாஷ்

வரவேற்புரை  :
தோழர். ஆனந்தராஜ்

பேச்சாளர்கள் :

தோழர். பேச்சிமுத்து – கல்வியில் காவி பயங்கரவாதம்
தோழர். முத்தமிழ் செல்வி – பாடல், நீட் பற்றி
தோழர். வசந்தி – கவிதை
தோழர். பிரணவ் (6 வயது சிறுவன்) – கதை
தோழர். பாண்டியன் – பெரியார் ஒரு அறிமுகம்
தோழர். ராஜமாணிக்கம் – பெரியார் ஏன் தேவை
தோழர். தருமர் – எல்லாம் காவிமயம் பெரியார் தடி கொண்டு மக்கள் அதிகாரம் படைப்போம்.

தோழர். பிரகாஷ் அவர்களது தலைமையுரையில் தமிழகம் எப்படி பெரியாரை தவிர்த்து இயங்க முடியாது என்பது பற்றியும், வடமாநிலங்களில் சாமியார்கள் போடும் கிரிமினல் ஆட்டங்கள், சிறை தண்டனை கிடைத்தால் ஏற்படும் கலவரம் பற்றியும் – தமிழகத்தில் சாமியார்கள் கைது நடக்கும் போது மக்கள் அச்சாமியார்களை எள்ளி நகையாடுவதையும் குறிப்பிட்டு பேசினார். தற்போதுள்ள சூழலில் பெரியார் விட்டுச்சென்ற கடவுள் மறுப்பு கொள்கையை அதிகமாக செயல்படுத்த வேண்டியதின் அவசியம் பற்றி பேசினார்.

தோழர். ஆனந்தராஜ் அவரது வரவேற்புரையில் பெரியார் மக்கள் பணியில் 94 வயது வரை எவ்வாறு உணர்வுபூர்வமாக ஈடுபட்டார்  என்பதையும், அதுபோல இளைஞர்கள் வரவேண்டும் என்று அறை கூவி அழைத்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தோழர். பேச்சிமுத்து கல்வியில் காவிமயம் எப்படி நமது கல்வியை தரம்கெட்டுப் போகச் செய்தது என்பது பற்றியும் – குரு உத்சவ், சமஸ்கிருத வார விழா, வந்தேமாதரம், ABVP , உயர்கல்வி நிறுவனங்களிலும், எதிர் கருத்து கூறும் பத்திரிக்கையாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்படுவது, வன்முறைகள் மூலம் கல்வியை அபகரிக்கும் வேலையை எப்படி காவிக்கும்பல் செயல்படுத்துகிறது என்பதை விளக்கினார்.

அவருக்கடுத்தபடியாக பேசிய தோழர். பாண்டியன் பெரியாரின் சிறுவயது, படிப்பு, தொழில், காசி – ரஷ்யா சென்று வந்தது நாத்திகம், திராவிடம், தனித்தமிழ்நாடு கோரிக்கை என தன் வாழ்நாள் முழுவதும் செய்த பணிகளை விளக்கிக் கூறினார்.

அதன் பின்னர் பேசிய தோழர். ராஜமாணிக்கம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் இறைவன் வழிகாட்டுவான், நமது பிறப்பால் உருவான சாதி இழிவு, சமூக ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் கடவுள் சித்தம் என இருக்காமல் கடவுளை மறந்து, பார்ப்பனிய இந்து மதத்தை புறக்கணிக்காமல் மக்களுக்கு விடிவு இல்லை என்பதையும். பிள்ளையார் சிலை உடைப்பு, கருவறை நுழைவுப் போராட்டம், அனைவரும் அர்ச்சகராக வரவேண்டும் என்ற கோரிக்கை என பலவகையான போராட்டங்களையும் நினைவு கூறினார்.

இறுதியாக பேசிய தோழர். தருமர், பெரியார் என்பவர் போர்க்குணமிக்க போராட்டங்கள் மூலம் ஆரிய, பார்பனத் திமிரை அடக்க முடியும் என்பதற்கு கண்கூடாக உள்ள ஆதாரம் எனவும், அதனைப் பின்பற்றாமல் தி.க,  தி.மு.க. – என இன்றைய அரசியல்வாதிகள் பெயரளவிலான போராட்டங்கள் மூலம் தேர்தல் ஓட்டுக்காக சமரசவாதிகளாக மாறிய போக்கையும். அதனைப் பயன்படுத்தி MGR, ஜெயலலிதா போன்ற பாசிஸ்டு கிரிமினல்கள் எப்படி ஆட்சி செய்யமுடிந்தது என்பது பற்றியும், தமிழ் தேசியவாதிகள், தலித் அரசியல் பேசும் அரசியல்வாதிகள் எப்படி பார்ப்பன அடிவருடிகளாக மாறினர் என்பது பற்றியும் பேசினார்.

தற்போதைய சூழலில் பெரியாரை நமக்கு இந்து மதவெறியர்களை எதிர்கொள்ள ஒரு உந்து சக்தியாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதையும். மேலும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் இந்த மோடி அரசினை வீழ்த்தவும் மக்களே அதிகாரத்தை கையிலெடுத்துப் போராட வேண்டும் என அறைகூவும் விதமாக பேசினார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

லாட்டரி மாஃபியா மார்ட்டினுக்கு தமிழக பா.ஜ.க. பாதுகாப்பு !

5
சார்லஸ் மாட்டின்

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 3

வானதியின் சைலாக் ஊழல், கே.டி.ராகவனின் எட்செர்வ் ஊழல் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. தேசிய வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் முறைகேடு செய்து மக்கள் பணத்தை ஆட்டையைப் போடுவது, பங்குச் சந்தையில் முறைகேடுகளின் மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றுவது, கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிக் கொடுப்பது, நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகிகளுக்கு இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தொடர்பு போன்ற ஒற்றுமைகள் தற்செயலானதல்ல.

வெளியான சைலாக் மற்றும் எட்செர்வ் இரண்டும் வகைமாதிரிகள் மட்டுமே. ஒவ்வொரு பா.ஜ.க -பிரமுகருக்குப் பின்னாலும் இதே பின்னணியுள்ள வெளியாகாத முறைகேடுகள் பல இருக்கும் என்பதையே இந்த ஒற்றுமைகள் காட்டுகின்றன.

ஊழல்வாதிகளையும், கருப்புப் பண முதலைகளையும் கட்சியில் இணைத்துக்கொண்டு ஞானஸ்நானம் செய்து வைக்கும் பா.ஜ.க-வின் கதையை இனி பார்ப்போம்.

பாரதீய ஜனதா கட்சி தேசிய அளவிலான தீவிரமான உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் மூலம் பலரையும் கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்து வருகிறது. அ.தி.மு.க ஊழல் மாஃபியாவின் முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், A1- குற்றவாளிக்காக நீதியரசர் குன்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதிரவைத்த வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி ஆகியோர் பா.ஜ.க -விற்கு சமீபத்திய வரவுகள்.

நைனார் நாகேந்திரன்

அப்படி சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களில் ஒருவர்தான் கோவை லாட்டரி மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். இவர் 2015 -ம் ஆண்டு பா.ஜ.க கட்சியில் இணைந்ததைப் பற்றி ஏற்கனவே வினவில் எழுதியிருந்தோம். மார்ட்டின் யாரென்று தெரியாதவர்களுக்காக, அவரைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

சான்டியாகோ மார்ட்டின் கோவையை சேர்ந்த தொழிலதிபர். மியான்மரில் (பர்மாவில்) ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்த மார்ட்டின் இந்தியா திரும்பிய பின், மார்ட்டின் லாட்டரி ஏஜென்சி லிமிடெட் என்ற லாட்டரி கம்பெனியை 1988-ஆம் ஆண்டு திறக்கிறார்.

விற்பனையாகாத லாட்டரிகளை வெற்றி பெற்றதாக அறிவிப்பதில் தொடங்கி, போலி லாட்டரிகளை அச்சடித்து விற்பது, லாட்டரி தடை செய்யப்பட்ட மாநிலங்களில் கள்ளத்தனமாக லாட்டரி விற்பது, இரண்டு இலக்க லாட்டரி, ஆன்லைன் லாட்டரி என்று சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் உழைக்கும் மக்கள் பணத்தை கொள்ளையடித்தார் மார்ட்டின்.

நீதியரசர் குன்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதிரவைத்த வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, பஞ்சாப் என பல மாநிலங்களில் தனது கள்ள லாட்டரி சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் மார்ட்டின். லாட்டரியின் மூலம் ஹவாலா பணத்தையும், கருப்புப் பணத்தையும் வெள்ளையாக மாற்றுவது, வருமானவரி முறைகேடுகள் என்று சகலவிதமான பொருளாதாரக் குற்றங்களிலும் ஈடுபட்டுவந்தார் மார்ட்டின். அதற்காகவே லாட்டரி மட்டுமின்றி ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களையும் தொடங்கி மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தையே கட்டியமைத்து நடத்திவருகிறார். மார்ட்டினின் மனைவி லீமா ரோசின் பெயரில் கோவையில் ஒரு செவிலியர் கல்லூரியும், ஹோமியோபதி கல்லூரியும் இயங்கி வருகின்றன. மார்ட்டின் குழுமங்களின் மொத்த சொத்துமதிப்பு சுமார் ரூ.7,000 கோடியைத் தாண்டும்.

மார்ட்டினின் லாட்டரி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களுக்காக அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. குறிப்பாக கேரளாவில் மட்டும் 32 வழக்குகள் சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, 2000 -ம் ஆண்டு கேரளத்தில் நடந்த லாட்டரி மோசடியின் மூலம் சிக்கிம் மாநில அரசை சுமார் ரூ.4500 கோடி மோசடி செய்து ஏமாற்றியதாக மார்ட்டினின் மீது வழக்கு உள்ளது.

1990 -களில் அ.தி.மு.க. அரசுடன் இணக்கமான உறவைப் பேணி தனது லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலை வெற்றிகரமாக நிலைநாட்டிக் கொண்ட மார்ட்டின், பின்னர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் தனது விசுவாசத்தை இடம் மாற்றிக் கொண்டார். பின்னர் 2001 -ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் பேரம் படியவில்லை. இதையடுத்து தான் 2003 -ம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டது.

லாட்டரி மார்ட்டின் மற்றும் அவரது மனைவி லீமா மார்ட்டின்

கடந்த 2007 -ம் ஆண்டு லாட்டரி விற்பனைக்கு கர்நாடக மாநில அரசு தடை விதித்தது. ஆனாலும், மாநில அரசின் மூத்த அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடந்து வந்தது. இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2011 -ல், நில மோசடி வழக்கு, போலி லாட்டரி விற்பனை செய்தது உட்பட, 13 வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஏழு மாதம் சிறையில் இருந்த பின், ஜாமீனில் வெளியே வந்துள்ளார் மார்ட்டின்.

2007 -ம் ஆண்டு கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிக்கையான தேசாபிமானி இதழுக்கு மார்ட்டின் ரூ. 2 கோடி நன்கொடை அளித்தது வெளியாகியது. தனிநபருக்காக வாங்கவில்லை, கட்சிக்காகத்தான் வாங்கினோம் என்று சப்பைகட்டு கட்டினார்கள் மார்க்சிஸ்டுகள். 2011 -ம் ஆண்டு கருணாநிதி வசனத்தில் உருவான ‘இளைஞன்’ திரைப்படத்தை தயாரித்ததே மார்ட்டின் தான். வசனத்திற்காக கருணாநிதிக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 45 லட்சம். இவ்வாறு தொடக்கம் முதலே தனது கள்ள லாட்டரி தொழிலை நடத்த அரசியல் கட்சிகளுடன் இணக்கமான உறவைப் பேணி வந்தவர் தான் மார்ட்டின்.

இந்த வகையில், தனது கல்வி வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே எஸ்.ஆர்.எம் பச்சமுத்து நடத்தி வரும் இந்திய ஜனநாயக கட்சி என்ற பெயர்ப்பலகை கட்சியில் சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் இணைகிறார். சென்ற 2014 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி தமிழகம் வந்த போது அதே மேடையில் வாளுடன் காட்சியளித்தார் லீமா ரோஸ்.

நடுவில் இருப்பவர் சார்லஸ் மாட்டின்

பாஜகவில் சேர்ந்த மார்ட்டினின் மகனான சார்லசின் சகோதரர் டைசன், தமிழர் விடியல் கட்சி என்ற அமைப்பைத் துவங்கி, மே-17 இயக்கத்துடன் செயல்பட்டுவந்தார். தற்போது திருமுருகன் காந்தியுடன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

அப்பா முன்னர் திராவிட கட்சிகளுடன் உறவாடி தனது கள்ள லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களை நடத்தியவர். அம்மா, கல்விக் கொள்ளையன் பச்சமுத்துவின் கட்சியின் உறுப்பினர். ஒரு மகன் தமிழ் தேசியவாதி, சிறையில் இருக்கிறார். இன்னொரு மகன், பா.ஜ.க உறுப்பினர். என்ன தலை சுற்றுகிறதா?

ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை பா.ஜ.க-வில் இணைத்தது யார்?

இதைப்பற்றி திருச்செந்தூர் பாஜக பிரமுகர் பாலசுப்பிரமணிய ஆதித்யன் சொல்வதைப் பார்ப்போம்.

லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனை பாஜகவில் இணைத்தது யார்?…ஏன்?…

திருமதி வானதி சீனிவாசன் கணவர்
சு.சீனிவாசன் அவர்கள் இப்பொழுது
மத்திய அரசின் வழக்குரைஞர்.

மார்ட்டின் 1,600 கோடி சொத்து
மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையில் வேறு உள்ளது.

லாட்டரி மார்ட்டின் 1,600 கோடி சொத்துக்கு NOC வாங்கி கொடுக்க பேரமானதாக கேள்வி!!.

மத்திய மந்திரி,,வானதி இவர்களின் கடும் முயற்சியால் இந்த இணைப்பு கடந்த ஆண்டு நடைபெற்றது. பலரும் இதை ஒரு சாதாரண நிகழ்வாகவே கருதினாலும் வானதியின் முயற்சியை கண்டு பலர் முகம் சுளித்தனர்.

பாரத பிரதமர் மோடி அவர்கள் அகில இந்திய அளவில் ஊழல்வாதிகளை சாட்டை எடுத்து சுழற்றி வரும் வேளையில் தமிழகத்தையும் இப்பிரச்சனை விடாது போல தெரிகிறது.

சன்மான தொகையில் கோவை பகுதியில் பல கோடியில் வாங்கப்பட்ட பூமிகள் குறித்து விசாரணையும் நடைபெறப் போவதாகவே தகவல்கள். – பாலசுப்பிரமணிய ஆதித்யன்

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.கவில் இணைந்தது குறித்து நியூஸ் மினிட் இணையப் பத்திரிக்கை கேட்டதற்கு, ‘சார்லஸ் மீது வழக்குகள் எதுவும் இல்லை. அதோடு அவர் பாஜகவில் இணைந்து சமுதாயப் பணி செய்ய விரும்புகிறார். எனவே, அவரை கட்சியில் சேர்த்ததில் என்ன தவறு?‘ என்று தமிழிசை சவுந்தர்ராஜன் பதிலளித்திருந்தார்.

2015 -ம் ஆண்டு சார்லஸ் பா.ஜ.கவில் இணைந்த அதே ஜூன் மாதம் கொல்கத்தா மற்றும் சிலிகுரியில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளில் சுமார் ரூ.80 கோடி ஹவாலா (கருப்பு) பணம் கைப்பற்றப்படுகிறது. இந்த ஹவாலா பணப் பரிமாற்றத்தில் தாவூத் இப்ராஹிமிற்கு இருக்கும் தொடர்பைப் பற்றியும் விசாரணைகள் நடந்தது.

இதில் நாகராஜன் என்ற மார்ட்டினின் நெருங்கிய தொழில் கூட்டாளி கைது செய்யப்படுகிறார். நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகத்தின் 2013 -ம் ஆண்டு ஆவணங்களின் படியே நாகராஜனின் டீசெல் (Teasel) நிறுவனம் தனது பங்குகளை, மாட்டினின் மகன்கள் இருவருக்கும் தலா 1000 வீதம் கைமாற்றிக் கொடுத்துள்ளதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியது. மேலும், இன்று வரை சார்லஸ் மார்ட்டின், தனது தந்தையின் தொழில் குழுமங்களின் நிர்வாக இயக்குனராகவும், இயக்குனராகவும் உள்ளார்.

தமிழர் விடியல் கட்சி நடத்தும் டைசன் மார்டின்

அதாவது தனது தந்தையின் சொத்துக்களை மரபுரிமையாகப் பெற்றிருக்கும் ஒருவருக்கு தந்தையின் வழக்குகளில் இருந்து விலக்குரிமை உள்ளது என்கிறனர் பா.ஜ.க-வினர். முறைகேடுகளில் ஈடுபட்டதாக கருதப்படும் நிறுவனங்களின் இயக்குனராக இருப்பவருக்கு அந்த வழக்குகளில் தொடர்பில்லை, அவரை கட்சியில் சேர்த்ததில் என்ன தவறு என்று கேட்கிறார் தமிழிசை. இதே போல லாட்டரி மார்ட்டினின் இன்னொரு புத்திரனான டைசன் (அப்பாவின் கள்ளப்பணத்தை முதலீடாகக் கொண்டு) தமிழ் தேசியவாதியாக போராடுவதில் என்ன தவறு என்று தமிழினவாதிகள் கேட்கலாம்.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தை மீட்கப் போவதாகவும், பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் உள்நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்ப்போம் என சவடாலடித்தனர் பாஜக-வினர். இவர்கள்தான் கருப்பை வெள்ளையாக்குவதற்கு பேரம் பேசி கருப்புப் பண முதலைகளை கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள். அப்படி வானதி அன்-கோவின் மூலம் பேசப்பட்ட பேரம் படிந்ததின் விளைவுதான் சார்லஸ் கட்சியில் இணைக்கப்பட்டது.

ஆடிட்டருடைய வேலை என்ன என்று நமது அண்ணாச்சி கடையிலோ, பாய் கடையிலோ கேட்டால், பணக்காரனுக்கு வரிகட்டாம அரசாங்கத்தை ஏமாத்த சொல்லித்தருவது, அவங்க கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி தருவது என்று சொல்வார்கள். குருமூர்த்தி, ஹெச்.ராஜா போன்ற பெரிய பெரிய ஆடிட்டர்கள் எல்லாம் சேர்ந்து கட்சி நடத்தினால் அந்தக் கட்சியின் வேலை என்னவாக இருக்கும்?

ஆக, எதிர்கோஷ்டியைச் சேர்ந்த வானதியும், பொன்னாரும் தான் சார்லசை டெல்லி வரை கூட்டிச் சென்று பா.ஜ.கவில் இணைத்துள்ளனர். இதற்கு பாலசுப்பிரமணிய ஆதியனின் கோஷ்டியைச் சேர்ந்த தமிழிசையும் உடந்தையாக தான் இருந்திருக்கிறார்.

இது மட்டுமின்றி கடந்த மார்ச், 2017 -ல் கோவையில் நடத்தப்பட்ட ‘தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரை’-யும் மார்ட்டினின் பண உதவியுடன் தான் நடத்தப்பட்டுள்ளது.

தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரையை இயக்க பண உதவியும் மார்டின்தான். பூண்டி பிரிவில் திருமதி.லீமா ரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டார். மார்ட்டின் ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரி மருத்துவ வாகனம் எல்லா நாட்களிலுமே யாத்திரைக்கு கூடவே வலம் வந்தது.  – பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் மக்கள் துயருற்ற போது கருப்புப் பண முதலைகள் தான் அதை எதிர்த்துப் போராடுவதாக தொலைக்காட்சிகளில் பேசிவந்தனர் பா.ஜ.க-வினர். நாடு முழுவதும் தங்கள் கட்சியில் கருப்புப் பண முதலைகளை இணைத்துக் கொண்டதோடு, அந்த மோசடிப் பணத்தின் உதவியால் தான் தமது கட்சி இயக்கங்களையும், பொதுக் கூட்டங்களையும் நடத்திவருகிறார்கள்.

அது வேற வாய், இது நாற வாய்!

தனது எதிர் கோஷ்டியின் ஊழல்களை எல்லாம் அம்பலப்படுத்தும் பாலசுப்பிரமணிய ஆதித்யன், ஒவ்வொரு பதிவிலும் அல்லேலூயா பாணியில் மோடியை மீட்பராக முன்னிருத்துகிறார்.

சொந்த கட்சியானாலும் ஊழல் செய்தால் மண்டையை உடைத்து விடுவேன்டா படவா…ராஸ்கல் என தூள் கிளப்பும் நம் தேச பிரதமர் மோடியை பார்த்து என்ன சொல்லுவீங்களோ என் மௌன பாஜக மாப்பிள்ளைகளா?!… – பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

முன்னர் ஜெயலலிதா ஆட்சியின் போது அவரது திறமையை உச்சிமோர்ந்த பார்ப்பனர்கள், ஊழல் என்றதும் அவை ஜெயாவுக்குத் தெரியாமல் சசிகலாவும் மன்னார்குடி கும்பலும் நடத்தியவை என்பார்கள். அதே போல, ஊழலை ஒழித்து, தேஷ வளர்ச்சியை சாதித்து அதன் மூலம் இந்து ராஷ்டிரத்தை படைப்பதற்கு ஆற்றலும் திறமையுமுள்ள, முக்காலமும் அறிந்த மோடிக்கு பா.ஜ.க-வினரின் ஊழல்கள் தெரியாது. தெரிந்ததும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார் என்கிறார்.

வானதி மற்றும் பொன்னார் மீதான தமது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அமித் ஷாவிடம் கொடுத்துள்ளதாக பதிவிட்டிருந்தார் பாலசுப்பிரமணிய ஆதித்யன். கடந்த செப்டம்பர் 5 அன்று மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது கடும் நடவடிக்கைகள் துவங்கும் என்றும் கூறினார். நிர்மலா சீத்தாராமன், ரோகித் வெமுலா கொலை இழிபுகழ் பண்டாரு தத்தாத்ரேயா போன்றோர் பதவிவிலகிய போது நடவடிக்கையின் துவக்கமாக அதைச் சொன்னார். ஆனால், நிர்மலா சீதாராமனுக்கு கேபினட் அமைச்சர் பதவியளிக்கப்பட்டதும் அருண் ஜெட்லியின் நிர்பந்தம் காரணம் என்றார். பொன்னாருக்கு நிதித்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதையே கடுமையான நடவடிக்கையாக சித்தரிக்கின்றனர் பாலசுப்பிரமணிய ஆதித்யனின் நண்பர்கள்.

எது எப்படியோ இப்படி தங்கள் சொந்த கட்சியினரின் ஊழல்களை வெளியிட்டு வண்டவாளங்களை மக்கள் முன் கொட்டுகிறார்கள் இவர்கள். அதன் காரணம் உட்கட்சி கழுத்தறுப்புக்கள் என்றாலும் மற்ற கட்சிகளை விட கட்சி சார்ந்த ஊழல் இங்கே பிரம்மாண்டமாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெறும் அளவுக்கு கூட இல்லை என்றாலும் மத்தியில் ஆளும் அரசாக இருப்பதால் தமிழக பாஜக முதலைகள் ஊழலில் அடித்து விளையாடுகிறார்கள்.  இப்பேற்பட்ட முதலைகள் தற்போது அதிமுக பெருச்சாளிகளை அடிமையாக்கி வேலை செய்கின்றனர். இதன் விளைவு தமிழகத்தை நாசம் செய்யும் என்பதை விளக்க வேண்டியதில்லை அல்லவா?

மோடியின் ஆஸ்திரேலியப் பயணம் அதானியால் ஸ்பான்சர் செய்யப்பட்டது. லண்டன் வெம்ப்ளே மைதானத்தில் நடந்த மோடியின் கூட்டத்திற்கு டாடா, ஏர்டெல் மற்றும் லைக்கா மொபைல் போன்றவை ஸ்பான்சர் செய்தன. மோடி போன்ற உயர் மட்ட அளவில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகள் ஸ்பான்சர் செய்கிறார்கள் என்றால் இங்கே உள்ளூர், மாநில அளவில் மார்ட்டின் போன்றோர் ஸ்பான்சர் செய்கிறார்கள்.

இதில் ஒருவரை மீட்பராகவும், மற்றொரு தரப்பை ஊழல்வாதிகளாகவும் சித்தரிப்பதற்கு ஒருவர் காரியக் கிறுக்கனாகத் தான் இருக்க வேண்டும். அதாவது, ஒன்று கார்ப்பரேட் சேவைக்கானது, மற்றொன்று எதிர்கோஷ்டியை கழுத்தறுப்பது. அது வேற வாய், இது நாற வாய்! இவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு தான் இவர்கள் ஒரே கட்சியில் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களை ஒருங்கிணைப்பது உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்துத்துவ பாசிசம்.

– முற்றும்.
– வினவு புலனாய்வுக் குழு

முந்தைய பாகத்திற்குச் செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 1 – வானதி சீனிவாசன்

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 2 – வானதி சீனிவாசன்

ஆதாரங்கள் :

_____________

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்தப் புலனாய்வுக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

நீட் தேர்வை ரத்து செய் ! – தமிழகம் தழுவிய பிரச்சாரம் !

1

நீட் தேர்வை ரத்து செய் ! அடக்குமுறைக்கு அஞ்சாது ! இது வேற தமிழ்நாடு ! தமிழகம் தழுவிய பிரச்சாரம் !

ன்பார்ந்த மாணவர்களே,

‘நீட்மாணவி அனிதா மரணம் தற்கொலையல்ல – படுகொலை. நம்பவைத்து கழுத்தறுத்த மோடி – எடப்பாடி அரசுகள்தான் கொலைக் குற்றவாளிகள்! சுமைதூக்கும் தொழிலாளியின் மகளான அனிதா மருத்துவப் படிப்பையே தனது கனவாகக் கொண்டிருந்தார். மோடி  அரசும், அடிமை எடப்பாடி கும்பலும், உச்சநீதிமன்றமும் இணைந்து ‘நீட்’ என்னும் கொள்ளி வைத்து அனிதாவின் கனவைக் கருக்கி விட்டன.

நீட் தேர்வுக்கு எதிராக அனிதா பற்றவைத்த சிறு தீப்பொறி தமிழகமெங்கும் காட்டுத் தீயாக பற்றி எரிகிறது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு வீதியில் இறங்கி, சாலைமறியல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்துகிறார்கள். நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை பள்ளி மாணவிகள் தவிடுபொடியாக்கிவிட்டனர்.

ஜல்லிக்கட்டு – மெரினா  எழுச்சியைப் போல, நீட் திணிப்புக்கு எதிரான போராட்டமும் மத்திய –  மாநில அரசுகளை அச்சுறுத்துகின்றன. பி.ஜே.பி-யின் அடிமையான எடப்பாடி கும்பல், போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது, மாணவர்களை ரவுடி பட்டியலில் சேர்க்கிறது, 150 -க்கும் மேற்பட்டோரை சிறையிலடைத்துள்ளது. இதன் மூலம் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் என மனக்கோட்டை கட்டுகிறது. ஆனால், நீட் தேர்வை விரட்டாமல் மாணவர் போராட்டங்கள் ஒரு போதும் ஓயாது.

நீட் : கோச்சிங் செண்டர்களின் கொள்ளைக்கு வழி!

அகில இந்திய அளவில் மருத்துவக்கல்விக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுதான் நீட். அதாவது, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு. இதற்கான அவசியம் என்ன என்று கேட்டால்? “தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம்” என்கிறது மோடி அரசு. திறமைக்கு இவர்கள் சொல்லும் அளவுகோல் என்ன? 700 மதிப்பெண்களுக்கான ஒரு நுழைவுத்தேர்வு.

அதுவும் சி.பி.எஸ்.இ. எனும் மத்திய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் கொண்ட தேர்வு. +2 வரை படிக்கும்போது சோதிக்க முடியாத தகுதியை ஒரு நுழைவுத்தேர்வில் எப்படி சோதிக்க முடியும்? திறமையான, சீரான மருத்துவக் கல்வி, பயிற்சி மூலம்தான் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியுமே தவிர, ஒரு நுழைவுத் தேர்வில் எப்படி தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும்?

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்குப் பிறகு தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுடன் ஃபிட்ஜீ, ஆலென், பினாக்கிள் போன்ற மிகப்பெரிய நுழைவுத்தேர்வு பயிற்சி நிறுவனங்கள் கூட்டணி அமைத்து நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளன. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு ரூ.1.52 லட்சம் கட்டணம். இதுதான் திறமையை சோதிக்கும் லட்சனம்.

நீட் : நுழைவுத் தேர்வு – தகுதி திறமை என்பதெல்லாம் மோசடி!

நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்று கூறுகிறார்கள். ஆனால் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வு இல்லை. வெவ்வேறு மாநில மொழிகளில் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. நீட் தேர்வு நடத்தி, ரிசல்ட் அறிவிக்கும் வேலை செய்யும் புரோமெட்ரிக் என்ற அமெரிக்க நிறுவனம், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் முறைகேடு செய்துள்ளது.

போட்டித்தேர்வுகளில் நடந்த மிகப்பெரிய ஊழல் பி.ஜே.பி ஆளும் மத்தியப்பிரதேச வியாபம். கள்ளக்குறிச்சியில் எஸ்.வி.எஸ் மருத்துவக்கல்லூரியில் முறைகேடு மட்டுமல்ல, அதை எதிர்த்த மூன்று மாணவிகள் கொல்லப்பட்டனர். சில மாதங்கள் மூடப்பட்ட கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது.

கேதான் தேசாய் MCI சேர்மனாக இருந்தபோது அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க டன் கணக்கில் தங்கமும், வெள்ளியும் லஞ்சம் பெற்று சிறை சென்றார். அவரைத்தான் மோடி அரசு சர்வதேச மருத்துவக்கவுன்சில் தலைவராக்கியுள்ளது.

எஸ்.ஆர்.எம், ராமச்சந்திரா, ஏ.சி.எஸ் போன்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்க விவகாரங்களில் தலையிடும்  அதிகாரம் அரசுக்கே இல்லை. இப்படி, லஞ்சமும் – ஊழலும் புழுத்து நாறும் இந்த கல்வி அமைப்பில் தகுதி, திறமையை கண்டறியத்தான் அகில இந்திய நுழைவுத்தேர்வு என்பதெல்லாம் பித்தலாட்டம்.

நீட் : தரப்படுத்தவில்லை தனியார் கல்விக் கொள்ளையை சட்டபூர்வமாக்குகிறது!

“நீட் தேர்வு தனியார் மருத்துவக்கல்லூரிகள் கட்டணக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அதிக இடம் கிடைத்துள்ளது, கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது’’ என்று அளந்துவிடுகிறார் தமிழினத்தின் எதிரி தழிழிசை. கேரளாவில் நீட் தேர்விற்குப் பிறகு தனியார் கல்லூரிகளில் 5 லட்சம் என்று இருந்த கட்டணம் 11 லட்சமாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் வழக்குப்போட்டால், நீதிமன்றம் முதலில் 11 லட்சத்தை கட்டு என்கிறது.

எஸ்.ஆர்.எம், ராமச்சந்திரா, போன்ற கொள்ளையர்களுக்கு இதைவிட வேறு என்ன அங்கீகாரம் வேண்டும்? தமிழகத்தில் மொத்தமுள்ள 3,534 இடங்களில் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் வெறும் 5 பேருக்கு மட்டுமே நீட் தேர்வின் மூலம் இடம் கிடைத்துள்ளது. மற்றவர்கள் அனைவரும் தனியார்பள்ளியில் படித்தவர்கள். பி.ஜே.பி காரர்கள் வாங்குன காசுக்குமேல் கூவுகிறார்கள்.

 நீட் : சி.பி.எஸ்.இ. எனும் சிலந்திவலையில் சிக்கவைக்கும் தந்திரம்!

“சி.பி.எஸ்.இ. தரத்திற்கு மாநில பாடத்திட்டத்தை உயர்த்த வேண்டும்’’ என்று நீட் ஆதரவாளர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். சி.பி.எஸ்.இ.  என்ன அவ்ளோ அப்பாடக்கர் பாடத்திட்டமா? அறிவியலாளர் அனில் குமார் மற்றும் IIS -இல் பணியாற்றிய டிபாகர் சட்டர்ஜி ஆகியோர் இந்தியாவில் உள்ள சில மாநிலக் கல்வி வாரியங்களை சி.பி.எஸ்.இ. -யோடு ஒப்பிட்டு ஒரு ஆய்வு செய்தனர்.

இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதம் ஆகிய நான்கு அறிவியல் பாடங்களிலும் மேற்கு வங்கக் கல்வி வாரிய மாணவர்களும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் ஆந்திர மாநில மாணவர்களும் சி.பி.எஸ்.இ. மாணவர்களைக் காட்டிலும் சிறப்பாக உள்ளதை நிறுவினர் (ஆதாரம்;Current Science, 2009). சி.பி.எஸ்.இ. யில் படித்த மாணவர்களாக இருந்தாலும் லட்சக்கணக்கில் செலவழித்து பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்காமல் நீட் தேர்வில் தேர்ச்சிபெற முடியாது.

நீட்டுக்கான கேள்விகள் சி.பி.எஸ்.இ. யில் இருந்து கேட்கப்படுவதால் சி.பி.எஸ்.இ.  அடிப்படையிலான தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்றாலே இனி சி.பி.எஸ்.இ.  பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு நவோதயா பள்ளிகளை கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே  மூடப்பட்டு வரும் மாநிலப்பாடத்திட்ட அரசுப்பள்ளிகளை இனி அடியோடு ஒழித்துக்கட்டிவிடுவார்கள்.

நீட் : மாநிலங்களின் உரிமையைப்பறிக்கும் சதி!

தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், 3,534 இடங்கள், 192  உயர் சிறப்பு மருத்துவக் கல்வி இடங்கள் என வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத கட்டுமானம் இங்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தட்டிப்பறிக்கத்தான் நீட்-ல் இருந்து தமிழகத்திற்கு விலக்கில்லை என்பதில் குறியாக உள்ளது மோடி அரசு.

அடுத்து, பிற மருத்துவப் படிப்புகள், பொறியியல், கலை – அறிவியல் என அனைத்து படிப்புகளுக்கும் அகில இந்திய நுழைவுத்தேர்வு வரப்போகிறது. நெருக்கடி நிலை காலத்தில் (1976 –ல்) கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றார்கள். இப்போது ‘ஒரே நாடு ஒரே தேர்வு’ என கல்வியை மையப்பட்டியலுக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டுகிறார்கள்.

ஏற்கனவே ‘ஒரே நாடு ஒரே வரி’ என ஜி.எஸ்.டியை திணித்து மாநிலங்களின் பொருளாதார உரிமையை பறித்துவிட்டார்கள். அடுத்து ‘ஒரே நாடு ஒரே மொழி – கலாச்சாரம்’ என இந்தி – சமஸ்கிருத்தத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள். இதன் மூலம் ஒருபுறம், பல்தேசிய இனங்கள் கொண்ட நாட்டில் அதன் மொழி, கலாச்சாரம், இன அடையாளங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு, ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என ஆர்.எஸ்.எஸ்-ன் நீண்டகால கனவான இந்துராஷ்டிரத்தை நிறுவுவது. மறுபுறம், கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவேட்டைக்காக நாட்டை மறுகாலனியாக்க, மாநிலங்களின் உரிமையைப் பறித்து; அனைத்தையும் மையப்படுத்துகிறது பி.ஜே.பி கும்பல்.

நீட் : மாணவர்களின் பிரச்சனை மட்டுமல்ல மக்களின் சுகாதாரப் பிரச்சனை!

‘நீட்’ தேர்வின் மூலமாக மருத்துவ மாணவர் சேர்க்கை நடப்பதால், அரசு மருத்துவ சேவைக்கான உள் ஒதுக்கீடு ரத்தாகிவிடும். இதனால் அரசு மருத்துவமனைகளில் தன்னை வருத்திக்கொண்டு சேவை செய்ய யாரும் விரும்பமாட்டார்கள். அது மட்டுமல்லாமல், லட்சங்களை செலவழித்து நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்பவர்கள், தாங்கள் போட்ட முதலீட்டை எடுக்க தனியார் மருத்துவமனைக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வார்களே தவிர, அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு சேவை செய்ய வரமாட்டார்கள்.

ஏற்கனவே, மோடி அரசு கையெழுத்திட்டுள்ள காட்ஸ் ஒப்பந்தப்படி பொதுசுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி தங்குத்தடை இல்லாமல் அந்நிய நிதியை அனுமதிக்க வேண்டும். அதற்கு தடையாக உள்ள நமது பொது சுகாதாரத் துறையை கைப்பற்ற வேண்டும். அதற்காகத்தான் தரத்தின் பெயரால் நீட் திணிக்கப்படுகிறது. இது நடந்துவிட்டால், அரசு மருத்துவக் கல்வி மட்டுமல்ல, அரசு மருத்துவ சேவையும் இனி ஏழைகளுக்கு கிடைக்காது. பெருவாரியான மக்கள் நோய், நொடியிலேயே செத்துமடியும் அபாயத்தை உருவாகும்.

இதுவரை வெளிநாட்டினர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாது என்று இருந்தது. இனி அவர்களும் சேரலாம் என்று MCI சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவக்கல்வியை தரப்படுத்துவது இவர்கள் நோக்கம் இல்லை. சிறு கூட்டமான பார்ப்பனர்கள் – பணக்காரர்களில் இருந்து ‘தரமான’ நவீன கொத்தடிமைகளை உருவாக்குவது என்ற கார்ப்பரேட் நலனையும்,  பெருவாரியான ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியை மறுக்கும் பார்ப்பன – புதிய மனுநீதியையும் இணைக்கும் புள்ளிதான் நீட்.

மோடி அரசின் இந்த புதிய மனுநீதிதான் அனிதாவை தூக்கிலேற்றியது. கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட, கிராமப்புற ஏழை மாணவர்களையும் தூக்கிலேற்ற துடிக்கிறது. அரச வன்முறைமூலம் தமிழகத்தை அடிமைப்படுத்த முயற்சிக்கிறது மோடி அரசு. இந்த வன்முறைக்கு அடங்கியாக வேண்டும் என்கிறது அடிமை எடப்பாடி அரசு. அடங்க முடியாது என்று திமிறி எழுகிறது தமிழகம்.  அனிதாவின் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் அனைவரும் ஒன்றிணைவோம்!

அன்று, இந்தி திணிப்பை முறியடித்தோம்!
நேற்று
, ஜல்லிக்கட்டில் வென்றோம்!
இன்று
,எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும்,
எதிர்த்து நின்று நீட் திணிப்பை விரட்டியடிப்போம்!
கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வருவோம்!

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தமிழ்நாடு.
எண்.41,பிள்ளையார் கோவில் தெரு,
மதுரவாயல், சென்னை-95,
தொடர்புக்கு : 94451 12675

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

டாஸ்மாக் போதைக்கு போட்டியாக வரும் ஆன்லைன் ரம்மி !

2

நீங்கள் இணையத்தில் ஏதேனும் பொழுதுபோக்கு வலைத்தளங்களுக்கோ அல்லது விளையாட்டு வலைத்தளங்களுக்கோ சென்றால் உங்களை நடிகர் பிரகாஷ்ராஜும், ’பாகுபலி’ ராணாவும் ரம்மி விளையாட அழைப்பதை விளம்பர வீடியோக்களில் பார்த்திருக்கலாம். அது தவிர ”நான் இணையத்தில் ரம்மி விளையாடி ரூ.2,50,000 ஜெயித்திருக்கிறேன், நீங்களும் ரம்மி விளையாடுங்க”, ”ரம்மி விளையாடி ரூ.1500 போனஸ் தொகையை உடனடியாகப் பெறுங்கள்”, ”ரம்மி சட்டப்பூர்வமானது – உடனடியாக இணையுங்கள்” என்பது போன்ற விளம்பரங்களையும் பார்த்திருக்கலாம்.

இந்த விளம்பரத் தூண்டில்களில் சிக்கி ஆயிரக்கணக்கிலும், இலட்சக்கணக்கில் பணத்தை இழந்து போதை அடிமைகளாகி வருவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு கணமும் அதிகரித்து வருவதை பத்திரிக்கைகளில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாஸ்மாக்கிற்கு நிகராக இளைஞர்களை ஆட்கொள்ளும் இந்த சூதாட்டச் சீரழிவின் பிரம்மாண்டம் பற்றித் தெரிய முதலில் இதன் ஆண்டுச் சந்தை மதிப்பை பார்ப்போம். ஆன்லைன் ரம்மியின் நடப்புச் சந்தை மதிப்பு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ஆகும். இதன் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 50%-ஆக இருக்கிறது.

ரம்மி – சட்டவிரோதமானதல்ல – சுப்ரீம் கோர்ட்டு

இந்த பிரம்மாண்ட சந்தையின் பொருள் என்ன?

”காசு வைத்துச் சூதாடும் ‘ரம்மி’ ஆட்டம் சட்டப்பூர்வமானது தான் என இந்த ரம்மி வலைத்தளங்கள் மட்டுமல்ல, ’மாட்சிமை’ தாங்கிய உச்சநீதிமன்றமும் இது சட்டப்பூர்வமானது என்றே அறிவித்துள்ளது.

”ரம்மி , ஒரு அறிவு சார்ந்த விளையாட்டு;  அது அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டு அல்ல; ஆகவே அதில் பணம் கட்டி விளையாடுவதை சூதாட்டமாகக் கருத முடியாது” எனக் கடந்த 1967-ம் ஆண்டு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இது போதாதென்று, ”இணையதளத்தில் பணம் கட்டி ’ரம்மி’ ஆடுவது சட்டவிரோதமானது அல்ல; அதுவும் சாதாரண விளையாட்டு போன்றது தான்” எனக் கடந்த 2015, ஆகஸ்ட்-13 அன்று ஓர் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தாயக்கட்டை உருட்டி, ஒரு போரையே நடத்திய புண்ணிய ‘பாரதத்தில்’  ‘நீதி’த் துறை ஒரு சூதாட்டத்தை அறிவார்ந்த விளையாட்டாக அங்கீகரித்திருப்பதில் ஆச்சரியமில்லை.

உண்மையில் ரம்மி அறிவார்ந்த விளையாட்டு தானா? ரம்மி ஆட்டத்தின் வெற்றி தோல்விகள் எதனை அடிப்படையாகக் கொண்டது? நிகழ்தகவை (அதிர்ஷ்டத்தை) அடிப்படையாகக் கொண்டதா, அல்லது அறிவை அடிப்படையாகக் கொண்டதா ?

ரம்மி உள்ளிட்ட அனைத்து சீட்டாட்டங்களிலும், யாருக்கு எந்தெந்த சீட்டுக்கள் வரும் என்பது யாருக்கும் தெரியாது (போங்காட்டம் ஆடாத வரை). நமக்கு வாய்க்கப் பெற்றிருக்கும் சீட்டுக்கள், அந்த ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெறுவதற்கு உகந்த சீட்டுக்களா?, இல்லையா? என்பதைப் பொறுத்து தான் நமது வெற்றி தோல்வி பெரும்பாலும் அமைகிறது. இதில் அறிவின் பங்களிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தாக்கம் செலுத்துகிறது. ஆகவே எந்த சீட்டாட்டத்தைப் பொறுத்தவரையிலும் நிகழ்தகவின் (அதிர்ஷ்டத்தின்) அடிப்படையில் தான் நமது வெற்றி, தோல்விகள் அமைகின்றன. வரும் சீட்டுக்களின் ஒரே பூவில் அடுத்தடுத்த வரிசையில் சீட்டுக்கள் வருவதோ இல்லை ஜோக்கர் கார்டுகள் வருவதோ அறிவின் அடிப்படையில் அல்ல.

மற்றவர்கள் போடும் மற்றும் எடுக்கும் சீட்டுக்களை வைத்து அவர்கள் வைத்திருக்கும் சீட்டுக்களை ஓரளவு கணிக்க முடியுமென்றாலும் அதுவும் கூட ஆட்டத்தில் நீடிக்கலாமா, தொடர்ந்து முயலலாமா என்பற்குத்தான் உதவும்.

எதார்த்தம் இப்படி இருக்கையில் உச்சநீதிமன்றமோ, ரம்மி அறிவை அடிப்படையாகக் கொண்டு விளையாடும் விளையாட்டு என்று கூறி அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.இதே ரம்மி சீட்டு போல ஆன்லனை சூதாட்டங்கள் பல நடத்தப்படுகின்றன. கிரிக்கெட்,  கால்பந்து போட்டி முடிவுகள், இன்று தங்கத்தின் விலை உள்ளிட்டு தினுசு தினுசாக பல இருக்கின்றன. இவை அனைத்தும் குருட்டாம் போக்கில் கணிப்புக்களை செய்தால் பணம் வரும் என ஒரு மாய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

சட்டப்பூர்வமானது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி தான் இன்று பல நிறுவனங்கள், ரம்மி விளையாட்டை தங்கள் வலைத்தளங்களில் நடத்துகின்றன. முகம் தெரியாத பல்வேறு பயனர்கள் ஒரே ஆட்டத்திலோ தனித்தனி ஆட்டத்திலோ, பணம் கட்டி கலந்து கொள்ளும் வகையில் இந்த வலைத்தளங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் பணம் கட்டி விளையாடி யார் ஜெயித்தாலும், இந்த இணையதளம் தனக்கான கமிஷனை எடுத்துக் கொண்டு மீதத் தொகையை மட்டும் அவர்களிடம் கொடுக்கும்.

இது தவிர ’டோர்னமெண்டு’கள் (Tournaments), ஊக்கப்பரிசுகள் என பல்வேறு வழிவகைகளில் இணையவாசிகளை இந்த விளையாட்டில் அடிமையாகச் செய்கின்றன இந்த ’இணைய ரம்மி’ வலைத்தளங்கள். இந்நிறுவனங்களின் பெருத்த இலாபத்தைக் கண்டு பல்வேறு பன்னாட்டு நிதி முதலீட்டு நிறுவனங்கள் இவற்றில் தங்கள் முதலீடுகளைக் கொட்டுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் கனடாவைச் சேர்ந்த க்ளைர்வெஸ்ட் (Clairvest) என்ற முதலீட்டு நிறுவனம், ஏஸ்-டூ-த்ரீ(Ace2Three) என்ற இணைய ரம்மி நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை சுமார் 474கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இது போன்று பல்வேறு இணைய ரம்மி நிறுவனங்களின் மொத்த மதிப்பைக் கணக்கில் கொண்டாலே இந்த இணையச் சூதாட்டத் தொழிலின் பரிமாணம் புரியும்.

கெல்லி நீல்ட்- இணைய சூதாட்ட விளையாட்டுக்கள் மூலம் 34இலட்ச ரூபாய் இழந்த இங்கிலாந்துப் பெண்

தமிழகத்தில் மட்டும் இணைய ரம்மி விளையாடுபவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு சுமார் 1 இலட்சம். இத்தகைய வலைத்தளங்களில், தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் செய்யப்படும் புதிய பயனர் பதிவு மட்டும் சராசரியாக 15,000 என ’தி இந்து’ நாளிதழ், ஒரு பிரபல ரம்மி இணையதளம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், ஒரு குறிப்பிட்ட இணைய ரம்மி வலைத்தளத்தில், ஜூலை 2017-இல் மட்டும் சுமார் 4 இலட்சம் முறை ரம்மி விளையாடப்பட்டிருக்கிறது என்றும் இதில் 6% பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ’தி ஹிந்து’ நாளிதழ் தெரிவிக்கிறது.

சூதாட்டம், அதன் இயல்பிலேயே, அதில் ஈடுபடும் நபர்கள் எத்தனை முறை தோற்றாலும், அதிர்ஷ்டத்தின் மீதான அவர்களது நம்பிக்கையின் பெயரில், அவர்களை மீண்டும் மீண்டும் சுண்டி இழுக்கும் தன்மையுடையது. தமிழகத்தில், லாட்டரிச் சீட்டு, சுரண்டல் லாட்டரி, ஒரு நம்பர் லாட்டரி, குதிரை ரேஸ் என காலங்காலமாக சூதாட்டம் பல்வேறு வடிவகளில் மக்களின் தாலியை அறுத்துள்ளது. தற்போது அது இணைய வடிவம் எடுத்துள்ளது.

ஒருமுறை வெற்றி பெற்றுவிட்டால், மீண்டும் ஒரு முறை விளையாடி வெல்ல வேண்டும் என்ற நப்பாசையும், தோல்வியடைந்தால் ஒரு முறையாவது வெற்றி பெற வேண்டும் என்ற தூண்டுதலும் இணையப் பயனர்களை இந்தத் தூண்டிலில் சிக்க வைக்கிறது. இதில் இலட்சக் கணக்கில் பணம் இழந்தவர்கள் ஏராளம். அவர்களுக்கு கடன் தொல்லை உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்சினைகளால் மனச்சிதைவு ஏற்பட்டு, தற்கொலை வரை போக வாய்ப்புகள் உண்டு என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூதாட்டங்களில் சிக்கி பொருளாதார நெருக்கடிகளுக்கும் மனச் சிதைவுகளுக்கும் ஆட்படுவதில் முதலிடம் வகிப்பது ஆஸ்திரேலியர்கள் தான் என்கிறது  ஒரு ஆய்வறிக்கை.

இதன் தாக்கத்தைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநில அரசு, இணைய ரம்மி சூதாட்டத்தை ஒரு அரசாணை வெளியிட்டு தடை செய்துள்ளது. தமிழகத்திலும் இதன் தாக்கம் தொடங்கியிருக்கும் சூழலில், எடப்பாடி – ஓபிஎஸ் கும்பலோ பாஜகவின் அரசியல் சூதாட்டத்தில் தங்கள் தலைகள் வெட்டப்படாமல் தவிர்க்கவே பெருஞ்சிரத்தையோடு போராடிக் கொண்டிருக்கிறது.

ஊருக்கு உபதேசம் சொல்லும் கமலஹாசன் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இணைய ஒளிபரப்பில் கூட இந்த ரம்மி சர்க்கிள் விளம்பரங்கள் காட்டப்படுகின்றன.

லாட்டரி, குட்கா, டாஸ்மாக் ஆகியவற்றின் வரிசையில் தற்போது மக்களைச் சீரழிக்க புதியதாக களத்தில் இறங்கியிருக்கும் இந்த சூதாட்டச் சீரழிவிலிருந்து இந்தத் தலைமுறையை மீட்கவேண்டிய கடமை அரசிற்கே உண்டு. ஆனால் அரசே, சூதாட்டத்தை முன்நின்று நடத்தும் போது நாம் என்ன செய்வது? நாம் குடியிருக்கும் பகுதியில் விபச்சாரத் தொழிலை நடத்தும் ஒரு புரோக்கரை கண்டுபிடித்தால் என்ன செய்வோமோ, அதை அரசிற்கும் செய்வது தானே முறை?

மேலும் படிக்க:

__________________________________

இந்த கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி