Sunday, August 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 612

ஆம் ஆத்மி வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள் !

9

டந்த மே, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மோடியின் பா.ஜ.க ‘வரலாறு காணாத’ ‘மகத்தான’ வெற்றியை சாதித்ததாக ஊடகங்கள் வியந்தன. இப்போது நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஊடகங்களின் வியப்பு ஆம் ஆத்மிக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. கூடவே பா.ஜ.க மற்றும் மோடியை கழுவி ஊற்றாதவர்கள் பாக்கி இல்லை.

ஆம் ஆத்மி வெற்றியைக் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்
மும்பையில் ஆம் ஆத்மி வெற்றியைக் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்

“ஆம் ஆத்மி கட்சிதான் வெற்றிபெறும்” என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும், தேர்தலன்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளும் தெரிவித்தன. ஆனால் மொத்தமுள்ள 70 இடங்களில் 67-ல் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதும், பதிவான வாக்குகளில் 54.3% அக்கட்சிக்கு விழுந்ததையும் யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் வெறுத்தனர். முதலாளிகளோ சிங்கின் வேகம் பத்தாது என்பதோடு அவர் மக்களிடம் பெயரிழந்துவிட்டார் என்று மோடியை அழைத்து வந்தனர். சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பதிவான வாக்குகளில் 46.63%-ஐ பெற்று டெல்லியின் 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது பா.ஜ.க. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் வாக்குவீதம் 14.4 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 32.20% ஆகக் குறைந்திருக்கிறது. 2014 தேர்தலுக்காக கட்டியமைக்கப்பட்ட மோடி அலை என்ற பிம்பம் புஸ்வாணமானதை இந்த டெல்லி தேர்தல் முடிவுகள் இன்னும் தெளிவாக காட்டுகின்றன.

மோடி அலை என்ற பிம்பம்
சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பதிவான வாக்குகளில் 46.63%-ஐ பெற்று டெல்லியின் 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது பா.ஜ.க. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் வாக்குவீதம் 14.4 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 32.20% ஆக குறைந்திருக்கிறது.

தலைநகர் டெல்லியில் வசிக்கும் மக்கள் நாட்டை ஆளும் வர்க்கங்களின் அதிகாரக் கூத்துகளை அணுக்கமாக பார்ப்பவர்கள் என்ற முறையிலும், பெருநகர வாழ்க்கையில், கவனத்தை திசை திருப்பும் சாதி, மத அரசியலுக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன என்ற முறையிலும் மன்மோகன் சிங்கின் அடியொற்றி கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் மோடியின் பொருளாதார கொள்கைகளுக்கான முதல் அடி டெல்லியில் விழுந்திருப்பதில் வியப்பில்லை.

ஏழை உழைக்கும் மக்களுக்கான அரசுப் பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும் புறக்கணிக்கப்பட்டு சீர்குலைந்து, நொறுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவற்றுக்கு அருகிலேயே கண்ணாடியாலும், உலோகத்தாலும் பளபளக்கும் தனியார் பள்ளிகளும் மருத்துவமனைகளும் பணம் படைத்த வர்க்கத்தினருக்கு சேவை செய்து கொண்டிருந்தன.

மேட்டுக்குடி அதிகாரவர்க்கத்தினர் வசிக்கும் புது டெல்லியின் தெருக்கள் மாசு மருவற்று ஜொலிக்கும் போது, பழைய டெல்லியின் குடியிருப்புப் பகுதிகள் குப்பைக் கிடங்குகளாக மாற்றப்பட்டு வந்தன. மின்சாரம் மற்றும் தண்ணீர் வினியோகம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்பதற்கு ரூ 10 லட்சம் விலையில் தனது பெயர் பொறித்த சூட்டை தைத்து போட்டுக் கொண்ட மோடியின் அற்பத்தனம் டெல்லி மக்களின் பொறுமையை முறித்த கடைசி ஊசி என்று வைத்துக் கொள்ளலாம். ரூ 13,500-க்கும் குறைவான மாத வருமானத்தில் காலந்தள்ளும் டெல்லியின் 60% மக்களைப் பொறுத்தவரை மோடியின் 10 லட்ச ரூபாய் சூட்டின் மதிப்பு, போராட்டம் நிரம்பிய அவர்களது 6 வருட உழைப்புக்கு நிகர்.

மோடி
ரூ 13,500-க்கும் குறைவான மாத வருமானத்தில் காலந்தள்ளும் டெல்லியின் 60% மக்களைப் பொறுத்தவரை மோடியின் 10 லட்ச ரூபாய் சூட்டின் மதிப்பு, போராட்டம் நிரம்பிய அவர்களது 6 வருட உழைப்புக்கு நிகர்.

தனியார்மய, தாராள மய பொருளாதாரக் கொள்கைகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏகாதிபத்திய சிந்தனை குழாம்கள் வகுத்துக் கொடுத்த கையேட்டின்படி வேலை செய்து அவர்களது எதிர்ப்பை திரட்டியது ஆம் ஆத்மி கட்சி.

இந்தத் தேர்தல் முடிவு தொடர்பான அலசல்களில் ஆம் ஆத்மியின் வெற்றியின் அடிப்படை டெல்லியின் ஏழை உழைக்கும் மக்கள் என்பதும் பா.ஜ.க மேட்டுக்குடி, ஆதிக்கசாதியினரின் வாக்குகளை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பதும் தெளிவாகின்றன. அடுத்தடுத்து 3 முறை தேர்தல்களில் வெற்றி பெற்று, டெல்லியை 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் இந்தத் தேர்தலில் 8%-க்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது; நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகு வைத்த காங்கிரஸ் டெல்லியிலிருந்தும் துடைத்து எறியப்படுவது உறுதியாகியிருக்கிறது.

மேலும், மோடி பரிவாரத்தின் இந்துமதவெறி அமைப்புகள் சிறுபான்மையினர் மீது தொடுத்த தாக்குதல்கள் பா.ஜ.கவை தோற்கடித்தே தீர வேண்டும் என்ற நிலைக்கு சிறுபான்மை மக்களை தள்ளின. வெற்றி பெறும் குதிரையாக உருவாகி வந்த ஆம் ஆத்மி கட்சிக்கு அந்த வாக்குகள் இயல்பாகவே திரும்பியிருந்தன.

காப் பஞ்சாயத்துகள், லவ் ஜிகாத் மூலம் சாதி, மதவெறி தாக்குதல்கள், கர் வாபசி என்ற பெயரில் சிறுபான்மையினரை கட்டாய மதமாற்றம் செய்யும் நாடகங்கள், சமஸ்கிருதத் திணிப்பு, தேவாலயங்கள் மீது தாக்குதல், ராமனை நம்பாதவர்கள் விபச்சாரிகளுக்கு பிறந்தவர்கள் என்று மத்திய அமைச்சரின் திருவாக்கு, இந்தியா இந்து ராஷ்டிரம் என்று அமைச்சர்கள் அறிவிப்பது என்று அடுத்தடுத்த இந்துத்துவ அரசியல் சவடால்கள் கணிசமான நடுத்தர வர்க்க மக்களை பா.ஜ.கவிடமிருந்து தனிமைப்படுத்தின.

மோடியின் ஆடை அணிகலன்கள் குறித்து நக்கல் அடித்த கையோடு, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் இந்துத்துவ திருவிளையாடல்கள் குறித்தும் அமெரிக்க அதிபர் ஒபாமா வெளிப்படையாகவே எச்சரித்தார். நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் “மோடியின் அபாயகரமான மௌனம்” என்று தலையங்கம் எழுதி மோடி மீதான அமெரிக்காவின் அதிருப்தியை வெளிப்படுத்தியது. அமெரிக்க அணு உலைகளை இந்தியாவின் தலையில் கட்ட ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது நிறைவேறிவிட்டது. ஆனால் உலகமயமாக்கத்தின் நடைமுறை வேகத்திற்கு இந்துத்துவத் தாக்குதல்கள் பின்னடைவு ஏற்படுத்தும் என்ற வகையிலும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு மோடியை செல்லமாகக் கண்டிக்கிறது. அதன் பின்னணியில்தான் ஆம் ஆத்மியின் இருப்பு முன்வைக்கப்படுகிறது.

அரவிந்த் கேஜ்ரிவால்
ஆம் ஆத்மி பதவி ஏற்பு விழாவில் ரூ 15-க்கு மலிவு விலை AAP கோலா.

ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலும் மன்மோகன் சிங் பின்பற்றிய, மோடி பின்பற்றும் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கவில்லை. பன்னாட்டு நிறுவனங்களை எதிர்க்கப் போவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கின்றனர்.

மின்சார, குடிநீர் கட்டண கட்டண உயர்வுகள் “தனியார்மயத்தின் விளைவு” என்று அம்பலப்படுத்தாமல், “ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டின் விளைவு” என்று சித்தரித்து, ஒரு குடும்பத்துக்கு மாதம் 20,000 லிட்டர் வரை தண்ணீருக்குக் கட்டணம் இல்லை, மின் கட்டணத்தை பாதியாகக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்றிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்ற அன்று 20,000 பாட்டில்கள் AAP கோலா இலவசமாக வினியோகிக்கப்பட்டன. “குடிசையில் வசிக்கும் ஒரு டெல்லி குடிமகன் ரூ 35 கொடுத்து கோலா குடிக்க முடியாத நிலை இருக்கிறது. எனவே சாதாரண மக்களுக்கு சேவை செய்ய ரூ 15-க்கு 400 மிலி கோலா என்ற விலையில் AAP கோலாவை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்” என்கிறார் AAP கோலா நிறுவன முதலாளி ஜிதேந்தர் கேஸ்வானி.

AAP Cola
ஆம் ஆத்மி கட்சி முன் வைக்கும் பொருளாதார தீர்வுகளும் கேஸ்வானி அளிக்கும் ரூ 15-க்கான AAP கோலா போன்றவைதான்.

AAP கோலாவின் விளம்பர வாசகம், “குடித்து விட்டு உங்கள் உரிமைக்காக போராடுங்கள்” என்பது. ஆம் ஆத்மி கட்சி முன் வைக்கும் பொருளாதாரத் தீர்வுகளும் கேஸ்வானி அளிக்கும் ரூ 15-க்கான AAP கோலா போன்றவைதான்.

அரவிந்த் கேஜ்ரிவால் வழங்கும் மாதம் ஒரு குடும்பத்துக்கு 20,000 லிட்டர் வரை இலவசம் என்ற AAP தண்ணீர், குழாய் இணைப்பு இல்லாத சுமார் டெல்லியின் 3-ல் 1 பங்கு ஏழைக் குடும்பங்களுக்குக் கிடைக்காது. AAP தண்ணீர் திட்டத்திற்கு தகுதி உடைய குடும்பங்களும் 20,000 லிட்டருக்கு ஒரு சொட்டு அதிகமாக பயன்படுத்தினாலும் முழுக் கட்டணத்தையும் கட்ட வேண்டியிருக்கும். தண்ணீருக்கு விலை வைத்து விற்று தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதை கேள்விக்குள்ளாக்காமல், அதற்குள் இலவசத் திட்டம் அறிவிப்பது என்ற “அம்மா” பாணி அரசியலை பார்க்கும் தமிழகத்துக்கு அரவிந்த் கேஜ்ரிவால் புதுசில்லைதான்.

மின்கட்டணத்தை 50% குறைக்க வேண்டும் என்ற அரவிந்த் கேஜ்ரிவால் அரசின் உத்தரவை டெல்லியின் மின்வினியோக நிறுவனங்களான டாடா பவர் மற்றும் அனில் அம்பானிக்குச் சொந்தமான பி.இ.சி.எஸ் யமுனா, பி.இ.சி.எஸ் ராஜ்தானி ஆகியவை எதிர்த்திருக்கின்றன. 2002-ம் ஆண்டிலிருந்து மின் கட்டணங்கள் 70 சதவீதம் அதிகரித்திருக்கும் அதே வேளையில், மின் உற்பத்தியாளரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி வினியோகிக்கும் செலவு 300 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் அதை ஈடுகட்ட மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தாங்கள் கோருவதாக கூறியிருக்கின்றனர்.

அரவிந்த் கேஜ்ரிவால் சித்தாந்தம்
ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலும் மன்மோகன் சிங் பின்பற்றிய, மோடி பின்பற்றும் மறுகாலனியாக்க பொருளாதார கொள்கைகளை எதிர்க்கவில்லை.

கேஜ்ரிவால் அரசு அளிக்கவிருக்கும் மின் கட்டண சலுகைக்கான செலவை அரசே தங்களிடம் கொடுத்து விடும்படி கோருகின்றனர். அதாவது, கேஜ்ரிவால் அறிவித்துள்ள மின்கட்டணக் குறைப்பு என்பதன் பொருள் மக்களின் வரிப்பணத்தை மக்கள் நலன் எனும் பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுப்பதாகும். டெல்லி அரசு, இந்த செலவுகளை சேவை வரி, விற்பனை வரி, மதிப்புக்கூட்டு வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலம் மக்களிடமிருந்தே வசூலித்துக் கொள்ளும். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மக்கள் பணத்தை பிடுங்கி, அதிலிருந்து இலவசப் பொருட்களை வாரி வழங்குவதைப் போல மக்கள் விரலை வெட்டி மக்களுக்கு சூப்பு வைத்துக் கொடுக்கும் வித்தையைத்தான் அரவிந்த் கேஜ்ரிவால் செய்யவிருக்கிறார்.

உதாரணமாக, பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்தி செலவு 2 ரூபாய்க்கும் குறைவு என்றால் தனியார் அனல் மின் நிலையங்கள் யூனிட்டுக்கு ரூ 6.50 முதல் ரூ 18 வரை விலை வைத்து விற்கின்றன. கேஜ்ரிவால் கூறும் தீர்வு தனியார் மின்சாரம் ரூ 12-க்கு விற்கப்படுவதை பேச்சுவார்த்தை நடத்தி யூனிட்டுக்கு ரூ 10 ஆக குறைப்போம் என்றும் யூனிட்டுக்கு ரூ 10-ஐ அரசே தனியார் நிறுவனத்திடம் கொடுத்து விடும் என்பதும்தான்.

திறன் குறைந்த, கொள்ளை விலை வைத்து வசூலிக்கும் தனியார் மயத்தை ஒழித்துக் கட்டி பொதுத்துறை மின் உற்பத்தியை தொடங்கினால்தான் மின் கட்டணத்தை குறைக்க முடியும். அதைச் செய்ய அரவிந்த் கேஜ்ரிவால் தயாராக இல்லை என்பதோடு அப்படி செய்யவும் முடியாது.

கேஜ்ரிவாலின் சித்தாந்தம்
“நாங்கள் எந்த சித்தாந்தத்துக்கும் தாலி கட்டிக் கொள்ளவில்லை.”

“நாங்கள் எந்த சித்தாந்தத்துக்கும் தாலி கட்டிக் கொள்ளவில்லை. தொழில்துறையில் அரசாங்கத்துக்கு வேலை இல்லை. கார்ப்பரேட் துறை நாட்டில் மிகப்பெரும் பாத்திரத்தை ஆற்ற வேண்டும். சில பேரைத் தவிர, பெரும்பாலான தொழிலதிபர்கள் ஊழலுக்குப் பலியானவர்கள்தான். அவர்கள் ஊழலை ஊக்குவிப்பவர்கள் அல்ல” என்று ஆம் ஆத்மி கட்சியின் சித்தாந்ததை ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறார் அரவிந்த கேஜ்ரிவால்.

எந்தத் தனியார்மயக் கொள்கைகள் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தண்ணீர் கட்டணம் மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட எல்லா வகையான கொள்ளைகளுக்கும் வழிவகுத்திருக்கிறதோ, அந்தத் தனியார்மயம் எளிய மனிதனின் நலனைக் காக்க முடியும் என்கிறது ஆம் ஆத்மி கட்சி.

இதைத்தான் “மின் உற்பத்தியே செய்யாத டெல்லி எப்படி மின் கட்டணத்தை குறைக்க முடியும்” என்று நரேந்திர மோடி, கேஜ்ரிவாலை குத்திக் காட்டியிருகிறார்.

“பாரத் மாதா கீ ஜெய்” என்று முழங்குவதிலும், வாரணாசி தேர்தலின் போது கங்கையில் முழுக்கு போட்டு இந்துக்களின் மனம் கவர் கள்வனாக மாற முயற்சித்ததும், காங்கிரஸ் பாணியிலான மிதவாத இந்துத்துவம்தான் அரவிந்த் கேஜ்ரிவாலின் மதச்சார்பின்மை என்பதைக் காட்டுகின்றன. அரவிந்த் கேஜ்ரிவால் பதவி ஏற்கும் போது கடவுளின் ஆசீர்வாதத்தை வேண்டியதோடு மேலே இருப்பவனுக்கு நன்றியும் சொன்னது, அப்படி கடவுளை நம்பும் பெரும்பான்மை மக்களுக்கு தன்னை ஏற்புடையதாகக செய்யும் முயற்சிதான் என்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளரான ஆதித்ய நிகம்.

கடவுளை நம்பும் கோடிக்கணக்கான மக்களை மத நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கும்படி சொல்ல வேண்டுமானால், தான் கடவுளை நம்புவதாக காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார் அவர். அதே அடிப்படையில்தான் டெல்லி திரிலோக்புரியில் முஸ்லீம்களுக்கு எதிராக இந்துத்துவ கும்பல் நடத்திய வன்முறையின் போது அந்தப் பகுதியின் ஆம் ஆத்மி கட்சி சட்ட மன்ற உறுப்பினரோ, கட்சித் தொண்டர்களோ சிறுபான்மை மக்களின் பக்கம் நிற்பதாக காட்டிக் கொள்ள முடியாத நிலை இருந்தது. அப்படிக் காட்டிக் கொண்டால் பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவை இழந்து விடுவோம் என்ற பயம்தான் ஆம் ஆத்மியின் இந்துத்துவ எதிர்ப்பின் நிலைமை. அரவிந்த் கேஜ்ரிவாலின் கொள்கையற்ற அரசியலின் ஒரு பகுதியாக சாதி அடிப்படையிலான காப் பஞ்சாயத்துகளின் அதிகாரத்தை அங்கீகரிக்கிறார்.

காஷ்மீர் மக்களின் போராட்ட உரிமையை அங்கீகரிக்காமல் இந்திய அரசை ஆதரித்து, இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பை வெளிப்படையாகவே ஆதரித்தவர் கேஜ்ரிவால். தலித் மக்கள் மீதான அடக்குமுறை, இந்து மதவெறி, பாக். எதிர்ப்பு அரசியல் என்பன போன்று, ஒரு கொள்கை நிலை எடுத்துத் தெளிவாகப் பேசவேண்டிய பிரச்சினைகளில் கருத்தே கூறாமல் மவுனம் சாதிப்பது அல்லது நெருக்கிக் கேட்டால் இந்துத்துவத்தின் செல்வாக்கை கணக்கில் கொண்டு பேசுவதுதான் ஆம் ஆத்மியின் உத்தி.

ak.cartoonஆம் ஆத்மியின் அரசியல் வர்க்கப் போராட்டம் இல்லாத வர்க்க அரசியல் என்கிறார் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ்.

டெல்லி சோட்டா நகர் பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு வழங்குவதற்காக குடிசைகளை இடித்து தரைமட்டமாக்கி, பெண்களையும் குழந்தைகளையும் போலீசார் தாக்கினர். ஆம் ஆத்மி கட்சியினரும், போலீசார் நடவடிக்கைக்கு ஒத்துழைத்திருக்கின்றனர். அரசுக்கு சொந்தமான நிலம், வேறு ஒரு பணிக்காக தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு சிலர் குடிசைகளை அமைக்க முயற்சித்தபோது, அந்த நிறுவனத்துக்கு சொந்தமானவர்கள் அவற்றை அகற்றினர். பாதுகாப்பு பணிக்காக மட்டுமே போலீசார் சென்றனர்.” என்று கூறியிருக்கிறது, ஆம் ஆத்மி கட்சி. தனியார் நிறுவனத்துக்காக தமது குடிசைகள் இடிக்கப்பட்டால், போராடக் கூடாது என்பதுதான் யோகேந்திர யாதவின் வர்க்கப் போராட்டம் அற்ற வர்க்க அரசியல். டெல்லியில் வீடுகளை இடிப்பதை தற்காலிகமாக தடை செய்துள்ள கேஜ்ரிவால் அரசு, நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்படப் போகும் வீடுகளுக்கு இந்தத் தடை பொருந்தாது என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஆம் ஆத்மி பிரச்சாரம்
“ஆம் ஆத்மிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிய இலவச குடிநீர் பிரச்சாரம் செல்லாது” என்று தீர்ப்பு எழுதுகின்றனர் முன்னாள் உலக வங்கி இயக்குனர்கள்.

உண்மையில் அர்னாப் கோஸ்வாமியின் டைம்ஸ் நவ் அல்லது முகேஷ் அம்பானியின் சி.என்.என் ஐ.பி.என் போன்ற ஊடகங்கள் கட்சி ஆரம்பித்து ஆட்சி நடத்தினால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட கட்சிதான் ஆம் ஆத்மி கட்சி. “நீங்கள் தேசத்துக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்” என்று அர்னாப் தினசரி எட்டுகட்டையில் முழங்குவதுதான் ஆம் ஆத்மியின் முழக்கமும் கூட. இதில் லஞ்ச எதிர்ப்பு மட்டும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

ஜெயலலிதா போன்று அரசு திட்டங்களை தனியார் மயமாக்கிக் கொண்டே ஒரு பக்கம் ஏழைகளுக்கு பிச்சையாக இலவசங்களை அறிவிக்கும் வேலையையோ அல்லது அதை விட புதுமையான திட்டங்களையோ ஆம் ஆத்மி செயல்படுத்தலாம். ஆனால், அதைக் கூட செய்வதற்கு அவர்களின் மேற்கத்திய நிதி உதவியாளர்கள் அனுமதிக்கப் போவதில்லை. உலக வங்கியின் முன்னாள் இயக்குனர்கள் ஜே சிவகுமார் மற்றும் இந்தர் சூத் ஆகியோர் ஹிந்து நாளிதழில் எழுதிய கட்டுரையில், “தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை எல்லாம் மறந்து விட்டு ‘நடைமுறை’ அரசியலை உணர்ந்து ஆம் ஆத்மி கட்சி செயல்பட வேண்டும்” என்றும் “டெல்லியில் ஏழைகளுக்கு இலவச குடிநீர் தேவையில்லை, கட்டுப்படியாகும் விலையிலான குடிநீர்தான் தேவை” என்று டெல்லியில் வாக்களித்த மக்களின் சார்பாக சிந்தித்து அவர்களது தேவையை கணித்து கூறியிருக்கின்றனர்.

மொத்தத்தில், “இந்தியாவை ஒளிர”ச் செய்த 7 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு வாஜ்பாயி குப்பைக் கூடைக்கு அனுப்பபட்டார். அடுத்த 10 ஆண்டுகள் அன்னிய முதலீட்டின் உதவியால் இந்தியாவை வல்லரசாக்க முயற்சித்த மன்மோகன் சிங் வெறுக்கத்தக்க கோமாளியாக விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார். “வளர்ச்சி நாயகனாக” முன் நிறுத்தப்பட்ட மோடி இப்போது மக்களின் கோபமான கிண்டலுக்கும் பரிகாசத்துக்கும் நாயகனாகியிருக்கிறார்.

அவர்களின் இடத்தில் இப்போது நிறுத்தப்பட்டிருப்பவர் அரவிந்த் கேஜ்ரிவால். அதனால்தான் மேற்கத்திய ஊடகங்கள் ஆம் ஆத்மியின் வெற்றியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்கின்றன. இந்தியாவிலும் மோடியின் வெற்றிக்கு சியர்ஸ் சொன்ன கைகள் இன்று ஆம்ஆத்மிக்கு ஜே சொல்கின்றன.

அன்றாடம் பெருகிவரும் வாழ்க்கைப் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, கல்வி வணிகமயம், மருத்துவம் மக்களுக்கு கிடைக்காமல் போவது என்று மறுகாலனியாக்கத்தின் நெரிப்பில் மூச்சுத் திணறும் மக்களின் கோபம்தான் மோடிக்கு கிடைத்த செருப்படி. அதனால் வெற்றிபெற்ற கேஜ்ரிவால் தனியார் மயம் எனும் ஊழலை ஆதரித்துக் கொண்டே கலெக்டர் ஆபிஸ் சிப்பந்தியின் லஞ்சத்தை முறியடிக்க முழங்குகிறார்.

மாறி மாறி ஓட்டுப் போட்டு, இருக்கும் சனியன்களில் ஏதோ ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் எனும் மூடநம்பிக்கையின் படிதான் ஆம் ஆத்மி வெற்றி பெற்றிருக்கிறது. மாறி வரும் காலத்தில் இந்த மூடநம்பிக்கை நிரந்தரம் இல்லை.

–    பண்பரசு

தொடர்புடைய சுட்டிகள்

ஆம் ஆத்மி தொடர்பான முந்தைய வினவு பதிவுகள்

ஆம் ஆத்மி பிறப்பு ரகசியம் – தொடர்

  1. ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் !
  2. சிந்தனைக் குழாம் – புரட்சி வேடத்தில் புல்லுருவி அறிஞர் படை
  3. அரசாங்கத்தில் கார்ப்பரேட்டுகள் – தரகர்களாக என்.ஜி.வோக்கள்
  4.  நூல் அறிமுகம் : ஆம் ஆத்மி கட்சி பிறப்பும் வளர்ப்பும்

பா.ஜ.க – அகாலிதளக் கூட்டணி: அருவருப்பான அதிகார போதை!

0

ஞ்சாபின் அகாலி தள அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா-வுக்கும் போதை மருந்து குற்றக் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதாக அண்மையில் மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, பஞ்சாபில் போதை மருந்து பெருக்கத்துக்கும், அதில் ஆட்சியாளர்களின் பங்கு குறித்தும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு, ஓட்டுக்கட்சிகள் நடத்திய போராட்டங்களும் பேரணிகளும் இன்னுமொரு கேலிக்கூத்தாகவே முடிந்துள்ளன.

பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதலுடன் பா.ஜ.க.வின் மைய அமைச்சர் நிதின் கட்காரி
பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதலுடன் பா.ஜ.க.வின் மைய அமைச்சர் நிதின் கட்காரி

பஞ்சாபில் ஓட்டுக்கட்சிப் பிரமுகர்கள் மட்டுமின்றி, அதிகார வர்க்கம், போலீசு, எல்லைப் பாதுகாப்புப்படை  அடங்கிய ஒட்டுமொத்த அரசு எந்திரமே போதை மருந்து குற்றக் கும்பலின் கூட்டாளியாக உள்ளது. பிரபல பாடகர் மக்கான், குத்துச் சண்டைவீரர் விஜேந்தர் சிங், முன்னாள் டி.எஸ்.பி. ஜெக்திஷ்சிங் போலா முதலானோரும் போதை மருந்து கடத்தில் ஈடுபட்ட கனடாவைச் சேர்ந்த சில சீக்கியர்களும் ஏற்கெனவே கைதாகியிருப்பதும், ஓட்டுக்கட்சிப் பிரமுகர்களும் போலீசு அதிகாரிகளும் அவர்களின் கள்ளக் கூட்டாளிகளாக இருப்பதும் நாடெங்கும் நாறிப்போயுள்ளது.

பஞ்சாபைச் சீரழிக்கும் மிகப் பெரிய சமூக பிரச்சினையாக வளர்ந்துள்ள போதை மருந்து பழக்கத்துக்கு எதிராக நிற்பதாக நாடகமாடும் காங்கிரசு, அகாலி தளம், பா.ஜ.க. ஆகிய கட்சிகளோ போதை மருந்து இரகசிய உலகப் பேர்வழிகளின் திரைமறைவுக் கூட்டாளிகளாகவே உள்ளனர். போதை மருந்தால் வரும் கள்ளப் பணத்தைத் தேர்தலில் வாரியிறைக்கின்றனர். தேசியம், தேசிய ஒருமைப்பாடு, பயங்கரவாத எதிர்ப்பு என்று கூப்பாடு போட்டுக்கொண்டு, பஞ்சாப் இளைஞர்களின் வாழ்வையே சீரழித்துள்ளனர்.

இப்போது மீண்டும் போதை மருந்து விவகாரத்தில் அகாலிதள அமைச்சரின் தொடர்பு அம்பலமானதும்,  அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகளான காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் போராட்டங்களை நடத்தின. அதேசமயம், போதை மருந்துகளற்ற பஞ்சாபை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் அமைச்சர் பிக்ரம் சிங் பதவி விலக வேண்டுமென்று  கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வும் போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்தி, தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொள்ள முயற்சித்தது.

அதைத் தொடர்ந்து, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான ம.பி. மற்றும் ராஜஸ்தானில் ஓபியம் எனப்படும் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலைத் தடுத்தால்தான், பஞ்சாபிலும் தடுக்க முடியும் என்று அகாலிதளக் கட்சி எதிர்ப்போராட்டத்தில் இறங்கி பா.ஜ.க.வைச் சாடியது. சீக்கிய இனப் பெருமைக்கு இழிவுதரும் வகையில் சீக்கியர்களைத் தீவிரவாதிகளாகவும் போதைமருந்து கடத்தல்காரர்களாகவும் இழிவுபடுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிலிருந்து கடத்திவரப்படும் போதை மருந்துகளைத்  தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படை தவறிவிட்டது என்று கூறி எல்லைப் பகுதிகளில் அகாலிதளக் கட்சி ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அதை எதிர்க்கக் கிளம்பிய பா.ஜ.க.வோ, எல்லைப் பாதுகாப்புப்படை மீது வீண்பழி போடுவதாகவும், இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரான செயல் என்றும் எதிர்க்குற்றம் சாட்டி தேசபக்த வேடம் போட்டு பேரணிகளை நடத்தியது. போதை மருந்து குற்றக் கும்பலின் கூட்டாளிகளான போலீசாரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் போதை மருந்துகளைக் கைப்பற்றி எரிப்பதாக புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டுத் தம்மை யோக்கிய சிகாமணிகளாகக் காட்டிக் கொள்ளும் கேலிக்கூத்தும் அரங்கேறியது.

பஞ்சாப் போதை மருந்துபஞ்சாப் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் போதைப் பொருள் உற்பத்தி நடக்கிறது என்றும், பாகிஸ்தான், ஆப்கானிலிருந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை எல்லைப் பாதுகாப்புப் படை தடுக்கத் தவறிவிட்டது என்றும் அகாலிதளம் கட்சி கூறுவது உண்மைதான். அதேபோல, போதை மருந்து குற்றக் கும்பலுடன் அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா தொடர்பு கொண்டிருப்பதும் உண்மைதான். போதை மருந்து விவகாரத்தில் ஆட்சியாளர்களின் கள்ள உறவு அம்பலமாகியிருப்பது இப்போது முதன்முறையல்ல என்பதும் உண்மைதான். ஆனாலும், போதைமருந்து விவகாரத்தில் ஓட்டுக்கட்சி பிரமுகர்களின் தொடர்பு அம்பலமாகும்போது ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு அரசியல் ஆதாயம் தேடும் நாச்சண்டை மட்டும்தான்  தொடர்கிறதேயன்றி, பஞ்சாபைக் கவ்வியுள்ள போதை மருந்துப் பழக்கத்தைத் தடுக்க எந்த ஓட்டுக்கட்சியிடமும் உருப்படியான திட்டமோ, நடவடிக்கையோ இல்லை.

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அமைச்சரவையில் அவரது மகன் சுக்பீர் சிங் பாதல் துணை முதல்வராகவும் அகாலி தளக் கட்சியின் தலைவருமாகக் கோலோச்சுகிறார். சுக்பீர் சிங் பாதலின் மனைவியான ஹர்சிம்ரத் கவுல் மத்திய அமைச்சராக உள்ளார். அவரது தம்பியும், சுக்பீர் சிங் பாதலின் மைத்துனரும்தான் பிக்ரம் சிங் மஜிதியா. ஏற்கெனவே பஞ்சாபில் பாதல் குடும்ப ஆட்சியின் ஆதிக்கத்தாலும் ஊழல் – அதிகார முறைகேடுகளாலும் அக்கட்சியும் ஆட்சியும் அம்பலப்பட்டுப் போயுள்ள நிலையில், போதை மருந்து  விவகாரத்தை வைத்து அகாலி தளத்தைத் தனிமைப்படுத்தி தங்களைத் தூய்மையான, ஊழல் கறை படியாத மாற்றுத் தலைமையாகக் காட்டி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சித்தது. இதற்காகவே பா.ஜ.க. தலைவரான அமித்ஷா, பஞ்சாபில் போதை மருந்து எதிர்ப்புப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார்.

கடந்த சில மாதங்களாக அகாலி தளத்துக்கு எதிரான போக்கைக் கடைபிடித்த பா.ஜ.க. இப்போது திடீர் பல்டி அடித்துக் கூட்டணி உறவைத் தொடர்வதாக அறிவித்துள்ளது. பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு மோடி அரசு “பத்ம விபூஷண்” பட்டம் அளிக்கிறது. பஞ்சாபில் போதை மருந்துக்கு எதிரான அமித் ஷாவின் பிரச்சாரப் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அகாலி தளத்துக்கும் பா.ஜ.க.வுக்குமிடையிலான கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என்று மைய அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்காரி பஞ்சாபுக்குப் பறந்து சென்று  அறிவிக்கிறார். பஞ்சாபின் அடிக்கட்டுமானத் துறை வளர்ச்சிக்கென்று ரூ. 18,000 கோடி மதிப்பில் திட்டங்களை அறிவித்து, பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங்குடன் கைகோர்த்துக் கொண்டு செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கிறார். பா.ஜ.க.வின் இந்தத் திடீர் பல்டிக்குக் காரணம் டெல்லி சட்டமன்றத் தேர்தல்தான்.

பஞ்சாபில் போதை மருந்து குற்றக் கும்பலுடன் தொடர்புடைய அகாலி தள அமைச்சர் பதவி விலக வேண்டுமென பிரச்சாரம் செய்யும் ஆம்ஆத்மி கட்சியும் காங்கிரசும், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் இதை வைத்து தங்களைத் தனிமைப்படுத்திவிடும் என்ற அச்சத்தாலும், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரத்துக்குக் கிடைத்துவரும் ஆதரவைக் கண்டும் பா.ஜ.க. அரண்டு போயுள்ளது. இதனாலேயே அகாலிதளத்துக்கு எதிராக முறுக்கிக் கொண்டிருந்த பா.ஜ.க. இப்போது வெட்கமின்றி கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டிருக்கிறது.

காங்கிரசும் ஆம் ஆத்மியும் டெல்லியிலோ அல்லது பஞ்சாபிலோ ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே அகாலி தளமும் பா.ஜ.க.வும் செயல்படுகின்றனவே தவிர, மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்து பஞ்சாபைப் பீடித்துள்ள போதை மருந்து பழக்கத்தை ஒழிக்க உருப்படியாக எந்த நடவடிக்கையும் அக்கட்சிகளிடம் இல்லை.

அகாலிதளம் பேசும் சீக்கிய இனப் பெருமையும், பா.ஜ.க. பேசும் தேசபக்தியும் சீக்கிய இன நலனுக்கானதல்ல; தேசிய நலன்களுக்கானதும் அல்ல. இருப்பினும் சீக்கிய இனப்பெருமையையும், தேசியம் – தேசபக்தியையும் காட்டி போதை மருந்து விவகாரத்தில் ஆட்சியாளர்களின் பங்கை மூடிமறைத்து, ஓட்டுக்கட்சிகளுக்கிடையிலான நாய்ச்சண்டையாக மாற்றி சீக்கியர்களை ஏய்ப்பதென்பது அகாலி தளத்துக்கும் பா.ஜ.க.வும் வசதியாக உள்ளது. ஆனால், பஞ்சாப் மாநிலமோ போதை மருந்தாலும், மறுகாலனியத் தாக்குதலாலும் மூர்க்கமாகச் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

– குமார்.
________________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
________________________________________

செய்யாறு டாஸ்மாக் கடை உடைப்பு: தோழர்கள் மக்கள் போர்க்கோலம்

8
  • செய்யாறு அழிவிடைதாங்கி மக்களின் – புமாஇமு தோழர்களின் டாஸ்மாக் சாராயக் கடை உடைப்பு போராட்டத்தை உயர்த்திப்பிடிப்போம் !
அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
செய்யாறு அழிவிடைதாங்கி மக்களின் – புமாஇமு தோழர்களின் டாஸ்மாக் சாராயக் கடை உடைப்பு போராட்டத்தை உயர்த்திப்பிடிப்போம் !

பூரண மதுவிலக்கு என்பது இப்போது பேஷனான வார்த்தையாகி விட்டது. அதைப் பேசாத கட்சிகள் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் போட்டி போட்டுக்கொண்டு கலர் கலராக இயக்கம் எடுக்கிறார்கள்.

  • காந்தியவாதி சசிபெருமாள் காலில் விழுகிறார், கண்ணீர் விட்டு கதறுகிறார்.
  • சட்டக்கல்லூரி மாணவி உண்ணாவிரதம் இருக்கிறார்.
  • வைகோ கல்லூரி மாணவர்களை வைத்துக்கொண்டு மரத்தான் போட்டி வைக்கிறார், கண்ணீர் வடிக்கிறார்.
  • திமுக, மதிமுக, காங்கிரசு, பாஜக, பாமக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுமே “பூரண மதுவிலக்கா, ஆமாம் சாமி” என்கின்றன.

ஆனால் இந்தக் கட்சிக்காரர்கள்தான் பார்களை வைத்து நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதை எல்லாம் விட பெரிய கூத்து என்ன வென்றால் சரக்கை எப்படியெல்லாம் விதம் விதமாக கலந்து குடிக்கலாம் என்ற வேதங்களை சட்டமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி, பார்ப்பன கும்பல் கூட பூரண மதுவிலக்கு என்ற பெயரில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
போலீசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம் என எல்லாமே மக்களுக்கு எதிரானவையாக மாறிப்போன இந்தச் சூழலில் அரசை எதிர்க்காமல் பூரணமதுவிலக்கு எப்படி சாத்தியம்?

லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட எந்த ஒரு கட்சியாலும் இதை நடைமுறைப்படுத்த முடிகிறதா என்ன? முடியாது என்பது தான் தான் பதில்.

போலீசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம் என எல்லாமே மக்களுக்கு எதிரானவையாக மாறிப்போன இந்தச் சூழலில் அரசை எதிர்க்காமல் பூரணமதுவிலக்கு எப்படி சாத்தியம்?

அதிகாரத்தை கையில் எடுக்காமல் பூரணமதுவிலக்கு எப்படி சாத்தியம்?

அரசாங்க கஜானா காலியானால் அதை நிரப்ப எந்த வேலையையும் செய்யலாம் என்று சொன்ன சாணக்கியனின் வாரிசான பார்ப்பன ஜெயாவின் ஆட்சியில் இப்படிப்பட்ட மொக்கைத்தனமான போராட்டங்கள் ஜெயிக்குமா என்ன?

எப்படிப்பட்ட போராட்டத்தை மேற்கொண்டால் டாஸ்மாக்கை ஒழிக்க முடியும் என்பதற்கு தமிழகத்துக்கே முன்மாதிரியாக அமைந்து இருக்கிறது செய்யாறு அழிவிடைதாங்கி மக்களின்- புமாஇமு தோழர்களின் டாஸ்மாக் சாராயக் கடை உடைப்புப் போராட்டம்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
எப்படிப்பட்ட போராட்டத்தை மேற்கொண்டால் டாஸ்மாக்கை ஒழிக்க முடியும் என்பதற்கு தமிழகத்துக்கே முன்மாதிரி.

செய்யாறு வட்டத்தில் உள்ள அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடையை திறந்தது முதல் வெங்களத்தூர், குத்தனூர், அழிவிடைதாங்கி உள்ளிட்ட சுற்றுவட்டார ஏழு கிராம மக்களுக்கும் பிரச்சினைதான்.

பெண் பிள்ளைகள் யாரும் அச்சமில்லாமல் பள்ளிக்கு செல்லமுடியவில்லை, தினமும் குடிகாரர்கள் தங்கள் பிள்ளைகளை கேலி செய்வதை கண்டு பொறுக்க முடியாமல் இருந்தனர், அம்மக்கள்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
வெடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. காத்திருந்தார்கள் மக்கள் தீப்பொறிக்கு.

தங்கள் வீட்டுப் பிள்ளைகளே குடிகாரர்களாக சீரழிந்து வருவதைக் கண்டு குமுறிக்கொண்டு இருந்தார்கள்.

டாஸ்மாக் கடையை இழுத்து மூட வேண்டும் என்று இரண்டு வருடங்களாக மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். 3 முறை டாஸ்மாக் கடையை முற்றுகைப் போராட்டமும் நடத்தியாயிற்று, இனி அடுத்து என்ன?

வெடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. காத்திருந்தார்கள் மக்கள் தீப்பொறிக்கு.

அப்பகுதியில் உள்ள புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மூலமாக அந்த டாஸ்மாக் சாராயக்கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று அனைத்து கிராமங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தங்களின் உணர்வுகளுக்கு சாணை பிடிக்க வந்த புமாஇமுவின் இளந்தோழர்களை வாரி அணைத்துக்கொண்டார்கள் கிராம மக்கள்.

குறித்த நாளான பிப்ரவர் 15-ம் வந்தது, ஏழு கிராம மக்களும் திரண்டனர். பறைமுழங்க, முழக்கங்கள் வெடிக்க வெடிகுண்டுகளாய் டாஸ்மாக் கடையை முற்றுகை இட்டனர், உழைக்கும் மக்கள்.

பாதுகாப்பிற்கு வந்து இருந்த பிரம்ம தேசம் காவல் நிலையத்தின் ஒரு எஸ்.ஐ உள்ளிட்ட மூன்று போலீசும் “எப்பவும் போல கத்திட்டு போயிடுவானுங்க” என்று ஏளனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. டாஸ்மாக் அதிகாரிகளோ, இல்லை அரசின் அதிகார வர்க்கமோ யாரும் வரவில்லை,

முக்கால் மணி நேரமாக நடந்த முற்றுகையை சூரியன் மேலும் சூடேற்ற, இனி அடுத்து என்ன செய்வது?

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
“எப்பவும் போல கத்திட்டு போயிடுவானுங்க” என்று ஏளனமாய் வேடிக்கை.

புமாஇமுவின் மாநகர செயற்குழு உறுப்பினர்களான தோழர்கள் ராஜாவும் சாரதியும் மக்களைப் பார்த்து “இப்போது என்ன செய்வது? வழக்கம் போல வாயை மூடிக்கொண்டு போவதா? இல்லை நமது வாழ்க்கையை அழித்துக்கொண்டு இருக்கும் டாஸ்மாக் கடையை அழிக்கப்போகிறோமா?………………..” என்று கேட்டனர்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
“வழக்கம் போல வாயை மூடிக்கொண்டு போவதா? இல்லை நமது வாழ்க்கையை அழித்துக்கொண்டு இருக்கும் டாஸ்மாக் கடையை அழிக்கப்போகிறோமா?………………..”

பேசிக்கொண்டு இருக்கும் போதே ஒருவர் உள்ளே போய் சாராய பாட்டில்கள் கொண்ட ஒரு கேசை தூக்கிப் போட்டு உடைக்க, அவ்வளவுதான் மொத்த மக்களும் சாராயக்கடைக்குள் புகுந்து அனைத்து பாட்டில்களையும் உடைக்க ஆரம்பிக்க, இருந்த சிறுவர்களோ கால்களில் சாராய பாட்டிகள் குத்தி ரத்தம் வந்த போதிலும் தங்கள் பங்கிற்கு கடைக்குள் புகுந்து துவம்சம் செய்தனர். எல்லாம் முடிந்து விட்டது, சற்று நேரத்தில்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
சாராயக்கடைக்குள் புகுந்து அனைத்து பாட்டில்களையும் உடைக்க ஆரம்பிக்க, இருந்த சிறுவர்களோ கால்களில் சாராய பாட்டிகள் குத்தி ரத்தம் வந்த போதிலும் தங்கள் பங்கிற்கு கடைக்குள் புகுந்து துவம்சம் செய்தனர்.

ஒரே வெற்றிமுழக்கம், எப்போது இது நடக்கும் என்று மக்கள் நினைத்துக்கொண்டு இருந்த விசயம் இன்று நடந்தே விட்டது.

பாட்டில்களை உடைத்தவர்களால் நம்மை உடைக்க எவ்வளவு நேரமாகும் என்று யோசித்து தங்கள் படையை வரவழைத்தது, போலீசு.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
பாட்டில்களை உடைத்தவர்களால் நம்மை உடைக்க எவ்வளவு நேரமாகும்.

வெற்றிப்பறை முழங்க பேரணி தொடங்கியது ஊரில், ஆரவாரமாக.

இடைமறித்த போலீசு தோழர்களை கைது செய்ய முயல, அதை பொதுமக்கள் தடுக்க அந்த இடமே களேபரமானது.

“அந்தப் பசங்களை மட்டும் கைது பண்ணாதீங்க, கைதுன்னா எங்க எல்லாத்தையும் பண்ணுங்க” என்று போலீசை முற்றுகையிட்டது மக்கள் கூட்டம்.

‘கொஞ்சம் கூட மதிக்கவே மாட்டேங்குறாங்களே’ என்று என்ன செய்வதென்று முழித்தது போலீசு.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்ஒரு கட்டத்தில் தோழர்கள் ராஜா, சாரதி இருவரையும் போலீசு வேனில் ஏற்ற போலீசை முற்றுகையிட்டனர் மக்கள். அதட்டல் , மிரட்டல், கெஞ்சல் என எப்படி சொன்னாலும் மக்கள் கேட்பதாக இல்லை. “அவங்களை இறக்கிவிடாம போக மாட்டோம்” ஒருமித்த குரல் இடியாய் இறங்க, வேனில் ஏற்றிய தோழர்களை விடுவித்து

“இதெல்லாம் சரியில்ல, உங்களை எப்படி கவனிக்கணுமோ அப்படி கவனிக்குறோம், இப்போ கிளம்புறோம்” என்று கிளம்புவது போல நடித்து கொஞ்ச நேரம் கழித்து திரும்பி வந்தது போலீசு.

தோழர்களை விடுவித்த மக்கள் தங்கள் வீடுகளில் அழைத்து உணவு ஏற்பாடு செய்ய கலைந்து சென்றனர்.

நேரம் பார்த்த போலீசு பெண்தோழர்கள் 4 பேர்கள் மற்றும் ஆண்தோழர்கள் 5 பேர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தது. இதைக்கண்ட கிராமமக்கள் எதிர்த்து நிற்க அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தது. தங்கள் மீது அடிவிழுந்த போதும் “நமக்காக வந்த புள்ளைகளை விடக்கூடாது” என்று தாய்மார்கள் சண்டையிட்டனர்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்அவர்களை மிருகத்தனமாகத் தாக்கி சந்திரா என்ற தாயை கைது செய்தது, போலீசு.

பிரம்ம தேசம் காவல் நிலையத்திற்கு சென்றால் ஊர்மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்பதால் 14 கிமீ தொலைவில் உள்ள சாராயப் புகழ் தூசி காவல் நிலையத்திற்கு கைது செய்யப்பட்டவர்களை கொண்டு சென்றது.

இரண்டு மணி நேரம் கழித்து போலீசு பாதுகாப்புடன் டாஸ்மாக் திறக்கப்பட்டது, மீண்டும். கைது செய்த பின்னர் அழிவிடைதாங்கியில் படையைக் குவித்து டாஸ்மாக் கடையை திறந்தது போலீசு.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
கைது செய்த பின்னர் அழிவிடைதாங்கியில் படையைக் குவித்து டாஸ்மாக் கடையை திறந்தது போலீசு.

என்னடா இது அநியாயம். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்கிறான், அவனே சாராயக்கடையையும் திறந்து வைக்கிறான் , மக்கள் போராடினால் அவர்களை அடித்துவிட்டு போலீசைப் போட்டு டாஸ்மாக்கை திறக்கிறான் எனில் அரசு எப்படிப்பட்ட எதிர் சக்தியாக மாறிவிட்டது?

காவல் நிலையத்தில் ஏகப்பட்ட கெடுபிடிகள், வழக்கறிஞர்கள் உட்பட யாரையுமே தோழர்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை. வக்கிர புத்தியுடன் தோழர்களை போட்டோ எடுப்பது, செல்போன்களை பறித்துக் கொள்வது போன்ற தங்களுக்கே உரிய இழி செயல்களை செம்மையாகச் செய்தது போலீசு.

“டாஸ்மாக் பிரான்ச் மேனேஜர் வரட்டும்”, “எஸ்.பி வரட்டும்” என்று மதியம் முதல் இரவு வரை இழுத்தடித்து ரிமாண்ட் என்றது. தெரிந்த விசயம் தான் எனினும் போட்ட பிரிவுகள்தான் விசித்திரமானவை. “பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, கொடும் காயம் விளைவித்தது, அவதூறு…. ” இப்படி ஏராளம்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
சாராயம் பொதுச் சொத்து என்று அறிவித்திருக்கின்றன போலீசும், அரசும்.

எது பொதுச் சொத்து ? சாராயம் பொதுச் சொத்து என்று அறிவித்திருக்கின்றன போலீசும், அரசும்.

வந்தவாசியில் உள்ள நடுவரின் இல்லத்தில் தோழர்கள் 9 பேரும், அந்த வீரத்தாயும் நடுவர் முன் நிறுத்தப்பட்டனர், இரவு 11.30 மணிக்கு.

போலீசு தண்ணீரோ உணவோ தராமல் கொடுமைப்படுத்துவதையும் தங்களை தாக்கியதையும் நள்ளிரவிலும் நடுவரிடம் வெளிப்படுத்தினார்கள் தோழர்கள்.

அடிமைகளையே பார்த்து பழக்கப்பட்ட நீதிபதியால் நமது தோழர் சிவரஞ்சனி கேட்ட “டாஸ்மாக் கடையை எதிர்த்துப் பேசினால் என்ன தப்பு?” என்ற கேள்விக்கு பதில் கூறமுடியவில்லை.  “சாராயம் பொதுச் சொத்தா” என்று போலீசிடம் கேள்வி கேட்கவும் முடியவில்லை.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
“டாஸ்மாக் கடையை எதிர்த்துப் பேசினால் என்ன தப்பு?”

இரவு ஒரு மணிக்கு தோழர்களை வேலூர் சிறைக்குச் செல்ல பணித்தார்கள். உறங்கும் நேரம் கடந்தாலும் களைப்பு கண்களை மறைத்தாலும் “டாஸ்மாக் கடைகளை உறங்க வைக்காமல் நமக்கு உறக்கமேது” என்ற வகையில் முழக்கமிட்டுக் கொண்டே சென்றார்கள்.

இந்த நாட்டில் நீதி நேர்மை நியாயத்தை யார் பேசினாலும் தண்டனைதான் இதுதான் அரசின் நீதி.  “வாழ்வை அழிக்கும் சாரயத்தைப் பற்றி பேசக்கூடாது” என்கிறது போலீசு அது தேசத்துரோகமாம்.

பிரசுரத்தை மாங்கு மாங்கென்று அனைத்து அதிகாரிகளும் படித்து அதில் அவதூறு இருப்பதாக வழக்கும் போடுகின்றனர்.

பூரண மதுவிலக்கை இந்த அரசு முறைக்குள் நின்று சாதிக்க முடியுமா? இல்லை அழிவிடைதாங்கி உழைக்கும் மக்களின் புமாஇமு தோழர்களின் வழியிலான போர்க்குணமான போராட்டங்களின் மூலம் இதை சாதிக்க முடியுமா?

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
பூரண மதுவிலக்கை இந்த அரசு முறைக்குள் நின்று சாதிக்க முடியுமா? இல்லை அழிவிடைதாங்கி உழைக்கும் மக்களின் புமாஇமு தோழர்களின் வழியிலான போர்க்குணமான போராட்டங்களின் மூலம் இதை சாதிக்க முடியுமா?

நேற்று முதலே அனைத்து தொலைக்காட்சிகளிலும் இன்று காலை முதல் அனைத்து நாளிதழ்களிலும் முக்கியச்செய்தியாக “பொது மக்கள் டாஸ்மாக் கடை சூறை” என்று இச்செய்தி வந்திருந்தது.

டாஸ்மாக்கை அழிக்க அவதாரம் எடுத்த அழிவிடைதாங்கியில் போலீசு குவிக்கப்பட்டு இருக்கிறது. போராடிய மக்களும் தோழர்களும் சிறையில் இருக்கிறார்கள். டாஸ்மாக் போலீசு பாதுகாப்புடன் திறக்கப்பட்டு இருக்கின்றது.

முடிவல்ல இது, தொடக்கம், அழிவினை இடை மறித்து தாங்கிய அழிவிடைதாங்கியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அழிக்கப்படுவது உறுதி.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
முடிவல்ல இது, தொடக்கம், அழிவினை இடை மறித்து தாங்கிய அழிவிடைதாங்கியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அழிக்கப்படுவது உறுதி.

இது ஒரு தேசவிடுதலைப் போராட்டம். ஆம், இளைஞர்களை மாணவர்களை உழைக்கும் மக்களை சிந்திக்க விடாமல் நாட்டின் மீது அக்கறையற்றவர்களாக மாற்றும் போதைக்கு எதிரான போராட்டம்.

சீனாவின் தேசவிடுதலைக்கு மாணவர்கள், இளைஞர்கள் திரளக்கூடாது என்பதற்காக பிரிட்டிஷ் அரசு கப்பலில் டன் டன் ஆக அபினைக் கொண்டு வந்து கொட்டியது. அதற்கு எதிராக தொடங்கியதுதான் அபினி யுத்தம் . அந்த யுத்தத்தில் வெற்றியும் பெற்றார்கள் சீன மக்கள்.

இதோ இந்த தேச விடுதலைப் போருக்கு மாணவர்கள், இளைஞர்களே உங்களை அறைகூவி அழைக்கின்றோம். எம்மோடு புமாஇமுவில் இணையுங்கள், தேச விடுதலைப்போரில் பங்கு கொள்ளுங்கள்.

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
புமாஇமுவில் இணையுங்கள், தேச விடுதலைப்போரில் பங்கு கொள்ளுங்கள்.

உழைக்கும் மக்களே, ஜனநாய சக்திகளே!

அழிவிடைதாங்கி உழைக்கும் மக்களின் – புமாஇமுவின் முன்னுதாரணமிக்க போராட்டத்தை பின்பற்ற வேண்டிய நேரம் இது.

பள்ளிகள் கல்லூரிகள், குடியிருப்புப் பகுதிகளில் டாஸ்மாக் கடையை வைக்கக்கூடாது என்ற விதி இருந்தும் மீறி வைக்கும் இந்த அரசாங்கத்தை, மக்களின் குடி கெடுக்கும் டாஸ்மாக்கை அடித்து உடைக்காமல் தீர்வு இல்லை.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்றிடுவோம், அழிவிடைதாங்கி உழைக்கும் மக்கள் மீதான போலீசு அராஜகத்துக்கு எதிராக குரல் கொடுப்போம்!

அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்கள்

தொடர்புக்கு : 9445112675

கிரானைட் கொள்ளை : கிராமப்புறங்களின் மீது நடத்தப்படும் போர்!

1

மிழகத்தில் நடந்துள்ள/நடந்துவரும் கிரானைட் கொள்ளை பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கெனவே பத்திரிகைகள் வாயிலாக வெளிக் கொணர்ந்துள்ளனர்.  குறிப்பாக, தமிழகத்தில் இயங்கிவரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டப் பகுதிகளில் அதிகார வர்க்கத்தின் துணையோடு நடந்துள்ள கிரானைட் கொள்ளை, முறைகேடு பற்றி ஒரு முழுமையான வீடியோ படமொன்றை வெளியிட்டிருக்கிறது.

கிரானைட் மெகா கூட்டணிகிரானைட் கற்களை வெட்டியெடுத்து, பாலிஷ் செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ‘தொழில்’ தமிழகத்தில் 20 மாவட்டங்களில் நடந்துவருகிறது. இதில் மதுரை மாவட்டத்திலுள்ள கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, செம்மினிபட்டி ஆகிய நான்கு பகுதிகளில் மட்டும் 83 கிரானைட் குவாரிகள் முறைகேடாக நடந்து வந்ததையும் அக்குவாரிகளில் இருந்து 39,30,431 கன மீட்டர் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்டதால், தமிழக அரசுக்கு 16,338 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதையும் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் அரசுக்கு அறிக்கையாக அளித்தார்.  அந்த அறிக்கையிலேயே, “அறிவியல்பூர்வமான நவீனகாலத் தொழில்நுட்ப உதவியோடு ஆய்வு செய்தால் இந்த நிதியிழப்பு இன்னும் ஒரு மடங்கு கூடுதலாக இருக்க வாய்ப்புண்டு” என்றும் குறிப்பிட்டுள்ளார், அவர்.

இதோடு மற்ற மாவட்டங்களில் நடந்துள்ள கிரானைட் கொள்ளையை, அக்கற்களின் சந்தை மதிப்பின்படி கணக்கிட்டுப் பார்த்தால் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு தோராயமாக பத்து இலட்சம் கோடி ரூபாயைத் தொடக்கூடும் என்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.  பண வடிவிலான இந்த இழப்பு ஒருபுறமிருக்க, கிரானைட் கொள்ளையால் சாதாரண மக்கள் சந்தித்துள்ள பாதிப்புகளும், அவலங்களும், இயற்கை நாசப்படுத்தப்பட்டிருப்பதும் மீள் உருவாக்கம் செய்ய முடியாத பேரழிவாக எழுந்து நிற்கின்றன. இந்தக் கொள்ளையும், நாசமும், பேரழிவும் அரசுக்குத் தெரியாமல், தலையாரி தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரையிலான அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பின்றி நடந்துவிடவில்லை என்பதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் பொதுமக்கள் அளித்துள்ள புகார்களும், கூறு போடப்பட்ட மலைகளும், சிதைக்கப்பட்ட புராதனச் சின்னங்களும், நாசமாக்கப்பட்ட கண்மாய்களும், ஓடைகளும், வயல்வெளிகளும், தரைமட்டமாக்கப்பட்டு அழிக்கப்பட்ட  கிராமங்களும் சாட்சியங்களாக உள்ளன.

கிராமங்களின் அழிவு

பொக்கிஷ மலை
கிரானைட் கொள்ளையின் வீச்சையும் கொடூரத்தையும் எடுத்துக் காட்டும் கீழவளவு பகுதியில் அமைந்துள்ள பொக்கிஷ மலை என்ற சர்க்கரை பீர் மலை.

கிரானைட் கொள்ளையைக் கிராமப்புறங்களின் மீது நடத்தப்பட்ட போர் என்றே குறிப்பிடலாம்.  சாகுபடி நிலங்களையும் மேய்ச்சல் பூமியையும் விழுங்கி, கண்மாய்களையும் ஓடைகளையும் குளங்களையும் பாசன வாய்க்கால்களையும் ஆக்கிரமித்துக் கிராமப்புற பொருளாதாரத்தைச் சீர்குலைத்ததோடு, பல கிராமங்களை இருந்த சுவடே தெரியாமல் அழித்திருக்கிறது, கிரானைட் மாஃபியா கும்பல்.  புது தாமரைபட்டி, ரெங்கசாமிபுரம், டி.குண்டங்கால், சிவலிங்கம் என்ற ஊர்களெல்லாம் ஆள் அரவமற்று கிரானைட் கழிவுகள் கொட்டப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாறிக்கிடப்பதை அக்கிராம மக்கள் சகாயத்திடம் சாட்சியமாகப் பதிவு செய்துள்ளனர்.

புது தாமரைபட்டி கிராமத்தை பி.ஆர்.பி. நிறுவனம் ஆக்கிரமித்த கதை வேதனையும் வக்கிரமும் நிறைந்தது.  “கிராமத்தைச் சுற்றி கிரானைட் தோண்டுவதற்கு பி.ஆர்.பி. கம்பெனி வைத்த வெடிகளால், வீடுகள் பிளந்து இடிந்து விழுந்தன. இது பற்றி புகார் சொன்னதால், அங்கு வேலைபார்க்கும் நபர்கள் எங்கள் தெருவில் உள்ள அடிபம்பில் வந்து ஜட்டியுடன் குளித்தார்கள். சிலசமயம் ஜட்டியுங்கூட இருக்காது. இதனால பொம்பளைங்க பயந்துகிட்டு தண்ணீர் எடுக்கப் போக மாட்டாங்க. ஒருநாள் தனியா போன ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை தந்தாங்க. அந்தக் காலியைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்தோம். பி.ஆர்.பி. மைத்துனர் வந்து அவனை மீட்டார். அதற்குப் பிறகு அவர்கள் தினமும் தொல்லை தந்தாங்க. ஐந்து தலைமுறைகளாக புது தாமரைபட்டியில் வாழ்ந்து வந்த நாங்கள், அதன் பிறகு மானத்தை அடகுவைத்து குடியிருக்க முடியாம வேறு இடம் போவிட்டோம்” என சகாயத்திடம் கதறி அழுதபடியே சாட்சியம் அளித்திருக்கிறார், அக்கிராமத்தைச் சேர்ந்த முருகன்.

கீழையூர் அருகேயுள்ள ரெங்கசாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயிகளை மிரட்டி நிலங்களைப் பறித்துகொண்டும், மிரட்டலுக்குப் பயப்படாத விவசாயிகளின் நிலங்களில் கிரானைட் கழிவுகளைக் கொட்டியும், வாய்க்கால் மற்றும் பாசனக் கிணறுகளை மண்ணைப் போட்டு மூடியும் அக்கிராமத்தைத் தடம் தெரியாமல் அழித்திருக்கிறது, கிரானைட் கொள்ளைக் கும்பல்.

மேலூர் அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள சூரியனேந்தல் கண்மாய் ஏறத்தாழ 85 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 83 ஏக்கரில் கிரானைட் கழிவுகளைக் கொட்டி, இந்தக் கண்மாயை வெறும் 2 ஏக்கராகக் குறுக்கிச் சீரழித்துவிட்டது, கிரானைட் கொள்ளைக் கும்பல்.  இக்கண்மாய்யில் 80 அடி ஆழம் வரை தோண்டி கிரானைட் கற்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. அப்பகுதி மக்கள் அளித்த புகாரை ஆதாரமாகக் கொண்டு இக்கண்மாயை சகாயம் ஆய்வு செய்தபொழுது, இக்கண்மாய் வெறும் 2 ஏக்கர் பரப்பளவு கொண்டதென்றும், 1.27 ஹெக்டேர் நிலத்திற்கு மட்டுமே பாசன வசதி அளிப்பதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூசாமல் புளுகினர்.

சூரியனேந்தல் கண்மாய்
85 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்த சூரியனேந்தல் கண்மாய், வெறும் இரண்டு ஏக்கராக குறுகிப்போன அவலத்தை ஆய்வு செய்யும் சகாயம்.

கீழவளவு பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 47 ஏக்கர் பரப்பு கொண்ட சிறுமாணிக்கம் கண்மாயை பல்லவா கிரானைட் என்ற நிறுவனம் ஆக்கிரமித்து, கிரானைட் கழிவுகளைக் கொட்டி அழித்துள்ளது. இதே பகுதியில் அமைந்துள்ள 1.44 ஏக்கர் பரப்புள்ள பழுதூர் ஊரணி, 9 ஹெக்டேர் பரப்புள்ள வேப்பங்குளம் கண்மாய் ஆகியவற்றைக் கழிவுகளைக் கொட்டி மேடாக்கி, அதன் மீது தனது ஷெட்டுகளை அமைத்திருக்கிறது, பி.ஆர்.பி. நிறுவனம். செட்டிகுளம் கண்மாயில் 76 அடி ஆழம் வரை தோண்டி கிரானைட் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டதால், அக்கண்மாயின் தோற்றமே மாறிப்போவிட்டது.

இவை தவிர, பாறைக்குளம் கண்மாய், மேலப்பட்டி குளம், மேடங்குளம், கொல்லங்குண்டு கண்மாய், கீழையூர் சிசி கண்மாய், எரிச்சியூர் மணியன் கண்மாய், பிள்ளையார் கண்மாய், கொணப்பகோன் கண்மாய், இடையன் கண்மாய் – என கீழவளவு பகுதியில் மட்டும் காணாமல் போவிட்ட 42 கண்மாய்களை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார், சகாயம். “கிணற்றைக் காணோம்” என்ற வடிவேலுவின் காமெடி சீன், மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் நிஜமாகவும் குரூரமாகவும் அரங்கேறியிருக்கிறது. இக்கண்மாய்களின் அழிவு என்பது அவற்றைப் பாசனத்திற்கு நம்பியிருந்த கிராமங்களின் அழிவு என விளங்கிக் கொள்வதற்கு பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை.

கண்மாய்கள் மட்டுமல்ல, மதுரை மாவட்டத்தில் கிரானைட் வெட்டியெடுக்கப்பட்ட 80 சதவீத இடங்கள் அரசு மற்றும் பொதுமக்களுக்குச் சொந்தமானவைதான்.  மதுரை மாவட்டத்தில் கிரானைட் ‘தொழில்’ செய்துவரும் நிறுவனங்களுள் ஒன்றிடம் மட்டும் 20,000 ஏக்கருக்கும் மேற்பட்ட சாகுபடி நிலங்கள் சட்டவிரோதமாகக் குவிந்திருப்பதாகவும், அதனை மீட்கக் கோரியும்  மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பாலகிருஷ்ணன் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார்.

கிரானைட் கொள்ளையர்கள் எந்தளவிற்குச் சட்டவிரோதமாகவும் கொடூரமாகவும் கிராமப்புற விவசாயிகளைச் சூறையாடி நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை திருதாவூரும் புதுத் தாமரைப்பட்டியும் எடுத்துக்காட்டுகின்றன. திருவாதவூரில் 1,245 ஏக்கர் விளைநிலங்களை பி.ஆர்.பி. நிறுவனம் ஆக்கிரமித்துக் கொண்டதாக அவ்வூரைச் சேர்ந்த செல்வராஜ் என்ற விவசாயி சகாயத்திடம் புகார் அளித்திருக்கிறார்.  அவ்வூரிலுள்ள மொத்த சாகுபடி பரப்பே 1,300 ஏக்கர்தான் என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுதுதான் இந்த ஆக்கிரமிப்பின் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள முடியும்.  மேலும், அவ்வூரிலுள்ள 1,500 ஏக்கர் அரசு நிலங்களையும் அந்நிறுவனம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

கிரானைட் மாஃபியா
மதுரை அருகேயுள்ள குண்டங்கால் பகுதியில் வாழ்ந்துவந்த 83 குடும்பங்கள் கிரானைட் மாஃபியா கும்பலால் துரத்தியடிக்கப்பட்டதை சாட்சியமாக அளிக்கும் விவசாயி.

புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்த பாசுவதம் என்ற 62 வயது மூதாட்டி, “10 வருடங்களுக்கு முன்பு ஐ.ஆர்.8 என்ற நெல், ஏக்கருக்கு 110 மூட்டைகள் வீதம் விளைந்து விருது வாங்கின பூமி இது. கிரானைட் இருக்குனு தெரிந்ததும் எங்களை மிரட்டியும், தராதவர்களை அடித்தும் வாங்கினார்கள். இப்போ எல்லா நிலங்களும் போய் கட்டிட வேலைக்கும் போறோம்.  நெல், தானியம்னு பொன்விளைந்த பூமி இப்போ சுடுகாடா கிடக்கு” என சகாயத்திடம் கண்கலங்கி சாட்சியம் அளித்திருக்கிறார்.

அதே ஊரைச் சேர்ந்த பூமா என்ற இன்னொரு மூதாட்டி, “என் நான்கு ஏக்கர் நிலத்தை மிரட்டிக் கேட்டும் தரலை.  அதனால என் நிலத்துக்குப் போகவிடாமல் வேலி போட்டு அடைத்துவிட்டனர். அறுவடை செய்யக்கூட முடியல. ஒத்த பொம்மனாட்டியா இவங்ககூட மோதிக்கிட்டு இருக்கேன்” என சகாயத்திடம் கூறி, தனது வயலைக் காண்பித்திருக்கிறார்.

பாசனக் கண்மாய்களையும், இரு போகம் விளையக்கூடிய நிலங்களையும் ஆக்கிரமித்து, அவற்றைக் குப்பைத் தொட்டிகளாகச் சீரழித்த பிறகு, எந்த கிராமமாவது உயிர்த்துடிப்போடு இருக்குமா?

மலை விழுங்கி மகாதேவன்கள்

திருவாதவூர் அருகேயுள்ள ஓவா மலை, கீழவளவு பகுதியிலுள்ள பொக்கிஷ மலை என்ற சர்க்கரை பீர் மலை, அரிட்டாபட்டியில் உள்ள பெருமாள் மலை உள்ளிட்ட ஏழு மலைகள், கீழையூர், கீழவளவு கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள பஞ்சபாண்டவர் மலை, இ.மலம்பட்டியிலுள்ள புறாக்கூண்டு மலை மற்றும் இம்மலைகளில் இருந்த சுனைகள், புராதனச் சின்னங்கள், மலைகளைச் சுற்றியிருந்த கண்மாய்கள் அனைத்தையும் பி.ஆர்.பி., ஒலிம்பஸ், பி.கே.எஸ்., சிந்து உள்ளிட்ட நிறுவனங்கள் தமக்குள் கூறுபோட்டுக் கொண்டு சிதைத்துள்ளன.

வாச்சாம்பட்டி அய்யங்காளை
கிரானைட் கொள்ளை பற்றி சாட்சியம் அளித்ததால், போலீசார் தன்னைக் கடத்திக் கொண்டு போய் மிரட்டியதை சகாயத்தின் காலில் விழுந்து சொல்லும் வாச்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யங்காளை.

“பொக்கிஷ மலையை, நடுப்பகுதி எனக்கு, வால் பகுதி உனக்கு, சைடு பகுதி அவருக்கு – என துண்டுதுண்டாக அறுத்து பங்குபோட்டுக் கொண்டன பி.ஆர்.பி., பி.கே.எஸ்., ஒலிம்பஸ் நிறுவனங்கள். இந்த மலையைக் காப்பாற்ற நாங்கள் சட்டப்படி எல்லா இடங்களுக்கும் சென்று முறையிட்டும் மலையைக் காப்பாற்ற முடியவில்லை” என சகாயத்திடம் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பொக்கிஷ மலை களவாடப்பட்டதை விளக்கியிருக்கிறார், அப்பகுதி ஜமாஅத் தலைவர் முகமது காசிம்.

இந்து, முசுலீம் மதங்களைச் சேர்ந்தவர்கள் யார் திருமணம் செய்தாலும் பொக்கிஷ மலை என்ற சர்க்கரை பீர் மலைக்கு வந்து வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என மக்களிடம் வழிவழியாக நம்பிக்கை இருந்துவரும் அளவிற்கு இம்மலை அப்பகுதியில் மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக விளங்கியிருக்கிறது.  அப்படிபட்ட புராதன மலை இன்று அலோங்கோலமாகிக் கிடக்கிறது.

92 அடி உயரம், 200 அடி நீளத்தில் 21 ஏக்கரில் அமைந்திருந்த புறாக்கூண்டு மலை இன்று அரசு ஆவணங்களில் மட்டுமே உள்ளது. 2006-ல் இம்மலையை டாமின் நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்த பி.ஆர்.பி. நிறுவனம், அம்மலையில் புதைந்திருந்த காஷ்மீர் ஒயிட் என்ற விலையுயர்ந்த கிரானைட் கற்களை வெட்டியெடுப்பதற்காக மூன்றே மாதத்தில் பரந்து விரிந்திருந்த இம்மலையை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டது.

திருதாவூரில் அமைந்துள்ள ஓவா மலை 3,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட புராதன மலையாகும் என்பதோடு, தமிழ் மக்களின் கலாச்சார, வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்ந்துள்ளது. 2,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுதிப் படிக்கும் பண்பாட்டைப் பெற்றிருந்ததற்கு ஆதாரமாக இம்மலையில் கல்வெட்டுகள் இருந்துள்ளன.  இம்மலை குகையில் 10 சமணர் படுகைகள் இருந்துள்ளன. இம்மலைக்கு மேலுள்ள சிவன் கோவிலுக்கு மாணிக்கவாசகர் வந்து சென்றிருக்கிறார்.  இவை அனைத்தும் பி.ஆர்.பி. மற்றும் சிந்து கிரானைட் கொள்ளைக் கும்பலால் சேதப்படுத்தப்பட்டுவிட்டன. புராதனச் சின்னங்கள் அமைவிடத்திலிருந்து 300 மீட்டர் சுற்றளவு பாதுகாக்கப்பட்ட பகுதி என்ற சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டு, அவை சேதப்படுத்தப்பட்டுள்ளன.

ஓவா மலையில் அமைந்திருப்பதைப் போலவே அரிட்டாபட்டியில் உள்ள மலைகளிலும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும், சமணர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் உள்ளன.  தேசிய புராதனச் சின்னங்களாக இவை அறிவிக்கப்பட்டிருப்பினும், அதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் இம்மலையில் சமணர் பள்ளியைக் குடைந்து கிரானைட் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளன.  இம்மலையில் பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட 365 ஏக்கர் பரப்பளவு கொண்ட சமுத்திரம் நீர்த் தேக்கமும் கிரானைட் கொள்ளையால் அழிந்து போனது.

நரபலி உள்ளிட்ட கிரிமினல் குற்றங்கள்

கிரானைட் குவாரிகளில் புதிய பொக்லைன், புதிய கிரேன் இயந்திரங்களை இயக்குவதற்கு முன்பு நரபலி கொடுப்பது வாடிக்கையாக நடந்துள்ளது.  குறிப்பாக, பி.ஆர்.பி. நிறுவனத்தில் நரபலி கொடுப்பது கோழியை அறுத்துப் பலி கொடுப்பது போல சர்வசாதாரணமாக நடந்திருப்பதை அந்நிறுவனத்தில் வேலைபார்த்து, பின்னர் வெளியேறிவிட்ட சேவற்கொடியான், பழனிவேல் ஆகிய இருவரும் சகாயத்திடம் மனுவாகவே எழுதிக் கொடுத்துள்ளனர்.

இ.மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி
குவாரிக்குத் தனது நிலத்தைத் தர மறுத்ததால், கிரானைட் மாஃபியா கும்பலால் தனது கை வெட்டப்பட்டதை சகாயத்திடம் சாட்சியமாக அளிக்கும் இ.மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா.

சேவற்கொடியோன் பி.ஆர்.பி. நிறுவனத்தில் 1998 முதல் 2003 வரை ஓட்டுநராகப் பணிபுரிந்துள்ளார். அந்தச் சமயத்தில் ஆந்திரா, பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்த பல ஏழைத் தொழிலாளர்களை நரபலி கொடுத்துவிட்டு, அவர்கள் விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறி இப்படுகொலைகளை மூடிமறைத்துவிடுவார்கள் என்றும்; மதுரை, கரூர், புதுக்கோட்டை பகுதிகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பிடித்து வந்து நரபலி கொடுத்திருப்பதையும் சேவற்கொடியோன் தனது மனுவில் தகுந்த விவரங்களோடு குறிப்பிட்டுள்ளார்.  குறிப்பாக, மதுரை நகரில் சுற்றித்திரிந்த இரண்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நரபலி கொடுப்பதற்காக மனோகரன் என்பவர் கூட்டிவந்தபோது, நான்தான் காரை ஓட்டி வந்தேன் என்று தனது மனுவில் சேவற்கொடியோன் கூறியிருக்கிறார்.

முன்னாள் இராணுவச் சிப்பாயான பழனிவேல் 1998 முதல் 2008 வரை பி.ஆர்.பி. நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றியிருக்கிறார்.  கள்ளுதின்னி சேகர், ஜோதிபாசு, பழனி, சுப்பிரமணி ஆகிய நால்வரும் ஒரு மந்திரவாதியோடு சேர்ந்துகொண்டு 25 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரைப் பொக்கிஷ மலைக்கு அருகேயுள்ள பல்லவா கிரானைட் குவாரியில் நரபலி கொடுத்ததை நான் நேரடியாகவே பார்த்தேன் என்று மனு கொடுத்திருக்கிறார், அவர்.

புதுத்தாமரைப்பட்டி உஷா
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது மூன்று வயது குழந்தை கோபிகா, பி.கே.எஸ் குவாரியில் நரபலியாகக் கொடுக்கப்பட்டதைச் சாட்சியமாக அளித்துள்ள புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்த உஷா.

தாமரைப்பட்டி கிராமத்திலுள்ள பி.கே.எஸ். குவாரியில் கோபிகா என்ற மூன்று வயது சிறுமி 2008-ம் ஆண்டில் நரபலி கொடுக்கப்பட்டார்.  இப்படுகொலை தொடர்பான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி பொதுமக்கள் போராடியதையடுத்து லாரி டிரைவர் ரவியை போலீசார் கைது செய்தனர்.  இந்த வழக்கில் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, லாரி டிரைவர் ரவி, “போலீஸ் தன் மீது பொய்வழக்கு போட்டிருப்பதாக”  சகாயத்திடம் மனு கொடுத்திருக்கிறார்.

இக்கிரிமினல் குற்றங்கள் தவிர, ஆட்களைக் கடத்திக் காணாமல் போகச் செய்வது, கொலைவெறியோடு தாக்கி முடமாக்குவது என்பதெல்லாம் வரைமுறையின்றி நடந்துள்ளன. இ.மலம்பட்டியைச் சேர்ந்த ராஜா தனது நிலத்தைத் தர மறுத்ததற்காகத் தாக்கப்பட்டதில், அவர் தனது இடது கையை இழந்து முடமாகிப் போனார்.  திருமங்கலத்தைச் சேர்ந்த ஹேமத்தா என்ற பெண், கிரானைட் பிரச்சினை தொடர்பாக சிலரால் அழைத்துச் செல்லப்பட்ட தனது கணவர் சுரேஷ்குமார் அதன்பின் வீடு திரும்பவில்லை என சகாயத்திடம் மனு அளித்திருக்கிறார். பஞ்சபாண்டவர் மலையில் கிரானைட் வெட்டியெடுப்பதைத் தடுக்கும் தீர்மானம் போட்டதற்காகத் தன்னை வெட்ட முயன்றார்கள், இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்தார்கள் என அம்பலப்படுத்தியிருக்கிறார், கீழையூர் ஊராட்சி மன்றத் தலைவர் தர்மலிங்கம்.

தீர்வு, எந்தப் பாதையில்?

பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான மக்களின் சொத்துக்களான கிரானைட் கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.  இதற்கும் மேலாக, பல கிராமங்கள் அழிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் நாசமாக்கப்பட்டு, அவர்கள் அகதிகளாக, கையேந்திகளாகத் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். கண்மாய்கள், ஓடைகள், கால்வாய்கள், பழமை வாய்ந்த மலைகள் உள்ளிட்ட இயற்கையும், தமிழ் மக்களின் வரலாற்று ஆதாரங்களான புராதனச் சின்னங்களும் மீள் உருவாக்கம் செய்ய முடியாதவாறு அழிக்கப்பட்டுள்ளன.

பி.ஆர்.பி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சேவற்கொடியோன்
பி.ஆர்.பி கும்பலால் பல்லவா குவாரியில் 25 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் நரபலி கொடுக்கப்பட்டதைச் சாட்சியமாக அளித்துள்ள பி.ஆர்.பி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சேவற்கொடியோன்

இவையெல்லாம் அரசுக்குத் தெரியாமல் நடந்து விட வில்லை.  புராதனச் சின்னங்கள் அமைந்துள்ள மலைகளை “தீர்வையற்ற தரிசு, பயனற்ற குளம்” என வருவாய்த் துறையினரே போலி ஆவணம் தயாரித்துக் கொடுத்து கிரானைட் கொள்ளைக்குத் துணை போயுள்ளனர். பஞ்சபாண்டவர் மலையை, குளம் என அரசு ஆவணங்களில் பதிவு செய்து, கிரானைட் மாஃபியாக்களிடம் ஒப்படைத்திருக்கிறது, அதிகார வர்க்கம். தலையாரிக்கு ரூ.1,000, வி.ஏ.ஓ.வுக்கு ரூ.5,000, வட்டாட்சியர், கோட்டாட்சியருக்கு ரூ.50,000 என இலஞ்சப் பணம் மேலிருந்து கீழ்வரை பாய்ந்திருக்கிறது. ஓய்வுபெற்ற அதிகாரிகள் கிரானைட் மாஃபியாக்களிடமே வேலைக்குச் சேர்ந்து பொதுச் சொத்துக்களை சுலபமாகவும் மொத்தமாகவும் கொள்ளையடிப்பதற்குத் திட்டம் போட்டுக் கொடுத்து வருகிறார்கள்.

அதேசமயம், இக்கொள்ளையைத் தடுப்பதற்கும், புராதனச் சின்னங்களைக் காப்பதற்கும் பகுதி மக்கள் நடத்திய போராட்டங்கள் கிரானைட் மாஃபியா கும்பலாலும், போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்தாலும் கொடூரமாக நசுக்கப்பட்டிருக்கிறது. கிரானைட் கொள்ளை மற்றும் அட்டூழியங்கள் குறித்து சகாயத்திடம் புகார் மனு அளிக்கும் பொதுமக்கள் உளவுத்துறையால் கண்காணிக்கப்படுகின்றனர். சகாயத்திடம் பி.ஆர்.பி. நிறுவனம் மீது புகார் மனு அளித்த ஒரே காரணத்திற்காக வாச்சம்பட்டியைச் சேர்ந்த அய்யங்காளை என்பவரை போலீசார் கடத்திச் சென்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதோடு, அவர் குடும்பத்தினர் மீது பொய்வழக்கும் போட்டுள்ளனர்.

இப்படிபட்ட நிலையில் என்ன செய்வது என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. சென்னை உயர்நீதி மன்றமும் சகாயம் கமிசனும் கிரானைட் மாஃபியா கும்பலைக் கவனித்துக் கொள்ளும் என ஏமாளித்தனமாக நம்பி கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க போகிறோமா? அல்லது தமிழகத்தின் செல்வ வளங்களைக் காப்பதை, அதனைச் சுரண்டிக் கொழுத்த மாஃபியா கும்பலைத் தண்டிப்பதை நம் கரங்களில் எடுத்துக் கொள்ளும் போராட்டங்களை நடத்தப் போகிறோமா என்பதைத் தமிழக மக்கள் தீர்மானிக்க வேண்டிய தருணமிது.

– குப்பன்
_____________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
________________________________________

போலீசின் தனியுரிமைகளையும் அதிகாரங்களையும் ரத்து செய் !

1

த்துணை முறை கையும்களவுமாக மாட்டிக் கொண்டாலும், அம்பலப்பட்டு அவமானப்பட்டாலும் அதையெல்லாம் துடைத்துப்போட்டு விட்டு, திரும்பத் திரும்ப நானாவிதமான குற்றங்களைச் செய்ய போலீசு துணிவது ஏன்? பொதுமக்களை அடக்கி ஒடுக்கிடும் அதிகாரம் அதனிடம் குவிந்திருப்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அக்குற்றங்களை மூடிமறைத்து, நியாயப்படுத்தி, குற்றமிழைத்த கிரிமினல் போலீசைச் சட்டப்படியே தப்பவைக்கும் அயோக்கியத்தனம், போலீசு உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் தொடங்கி நீதிமன்றங்கள் வரையிலான இந்த அமைப்பு முறையிலேயே பொதிந்திருப்பதுதான் இதற்கு அடிப்படையாக உள்ளது. இது மிகைப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பு அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக இரண்டு வக்கிரமான மனித உரிமை மீறல்கள் சமீபத்தில் தமிழகத்தில் நடந்துள்ளன.

போலீஸ் பாலியல் குற்றம்
போலீசாரால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாடோடிப் பெண்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தமது குடும்பத்தோடு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிக்குக் குடிபெயர்ந்து வந்து, அப்பகுதியில் அலங்காரப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் சாமான்களை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களுள் இரண்டு பெண்களும் ஒரு சிறுமியும் கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதியன்று ஓசூர் பேருந்து நிலையத்தில் தமது பொருட்களைப் பயணிகளிடம் விற்றுக் கொண்டிருந்த சமயத்தில், அங்கு சுற்றிக் கொண்டிருந்த போலீசு ஏட்டு வடிவேல், அப்பெண்களையும் சிறுமியையும் மிரட்டிப் பேருந்து நிலையத்திலிருந்த போலீசு கட்டுப்பாட்டு அறைக்கு இழுத்துக் கொண்டு போய், அவர்களைப் பாலியல் பலாத்காரப்படுத்தித் துரத்தியடித்து விட்டான்.

பாதிக்கப்பட்ட அப்பெண்களுக்கு ஆதரவாகத் தலையிட்ட இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இப்பாலியல் வன்கொடுமை பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கக் கோரியும் உரிய நட்ட ஈடு வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதி மன்றம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நட்ட ஈட்டை உடனடியாக வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளி வைத்திருக்கிறது.

இச்சம்பவம் போலீசு கட்டுப்பாட்டு அறையிலேயே நடந்திருப்பதும், இரண்டு பெண்களும் ஒரு சிறுமியும் பாதிக்கப்பட்டிருப்பதும் நிரூபணமான பின்னும் இக்குற்றத்தில் போலீசு ஏட்டு வடிவேலு மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதாக வழக்கு தொடரப்பட்டிருப்பது மோசடியானது. குறிப்பாக, அப்போலீசு கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் என்பவருக்கு இந்தச் சம்பவம் தெரிந்திருக்கிறது. எனினும், இக்குற்றத்தில் அவருக்குத் தொடர்பில்லை எனக் கூறப்பட்டு, நடந்த சம்பவத்தை தனது மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்கத் தவறியதுதான் அவர் செய்த தவறு என விசாரணை முடிக்கப்பட்டு, அவருக்குப் பணியிட மாறுதல் என்ற ‘தண்டனை’ வழங்கப்பட்டு, குற்ற வழக்கிலிருந்து தப்ப வைக்கப்பட்டுள்ளார்.

இந்த ஓசூர் சம்பவத்திற்கு இணையான பாலியல் வக்கிரம் சென்னை- மாம்பலம் போலீசு நிலையத்தில் கடந்த மாதம் நடந்திருக்கிறது. இரவு சினிமா காட்சி பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்த சதீஷ்குமார், பசுபதி, கார்த்திக் ஆகிய மூன்று பேரையும் வழிமறித்த போலீசார், அவர்களைச் சட்டவிரோதமாக மாம்பலம் போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றதோடு, அங்கு அந்த மூன்று அப்பாவிகளையும் – இந்த மூன்று பேரில் சதீஷ்குமார் தவிர மற்ற இருவரும் சிறுவர்கள் – செல்போன் திருடியதாக ஒத்துக்கொண்டு கையெழுத்துப் போடும்படி அடித்துச் சித்திரவதை செய்தனர். மேலும், அந்த மூவருக்கும் யுவராஜ் என்றொரு நெருங்கிய நண்பன் இருப்பதையும் சித்திரவதையினூடாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அன்றிரவே யுவராஜின் வீடு புகுந்து, தூங்கிக் கொண் டிருந்த யுவராஜை போலீஸ் நிலையத்திற்குத் தூக்கி வந்து, அச்சிறுவனையும் திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி சித்திரவதை செய்துள்ளனர்.

இதன் பிறகும் அவர்கள் நால்வரும் திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுக்கவே, அவர்களை நிர்வாணமாக்கி, கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுச் செய்து, அதனை அப்போலீசு நிலையத்தின் உதவி ஆய்வாளர் முரளி மற்றும் சீனிவாசன், சேது என்ற இரண்டு போலீசார் ஆகிய மூவரும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு ரசித்துப் பார்த்தனர். சதீஷ்குமாரின் ஆணுறுப்பிலிருந்து இரத்தம் கொட்டி, அவர் மயங்கிச் சரியும் வரை இந்த வக்கிரமான சித்திரவதை நடந்திருக்கிறது. அதன் பிறகு அவர்கள் மீது செல்போன் திருட்டு மற்றும் செயின் பறிப்பு வழக்குகளைப் பதிவு செய்து சதீஷ்குமாரை புழல் சிறையிலும், மற்ற மூன்று சிறுவர்களைச் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்துள்ளனர்.

போலீஸ் வன்முறை

புழல் சிறையில் அடைக்கப்பட்ட சதீஷ்குமாருக்கு வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டு மயங்கி விழுந்ததையடுத்து, சிறை மருத்துவர் அவரைப் பரிசோதித்தபோதுதான் மாம்பலம் போலீசு நிலையத்தில் அவரும் அவரது நண்பர்களும் கீழ்த்தரமான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட வக்கிரம் அம்பலமானது. சிறை மருத்துவர் இந்த வக்கிரச் சித்திரவதை குறித்து போலீசு கமிசனருக்கும், டி.ஜி.பி.க்கும் கடிதம் மூலம் புகாராகத் தெரிவித்த பின், இந்தச் சம்பவத்தை இனியும் மூடி மறைத்துவிட முடியாது என்ற நிலையில்தான், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அச்சிறை மருத்துவர் மனிதாபிமான எண்ணத்தோடு கடிதம் எழுதவில்லையென்றால், இப்பாலியல் வக்கிரமும் பொய் வழக்கும் அம்பலத்திற்கே வந்திருக்காது.

இந்த வழக்கை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி போலீசு பிரிவு, இரண்டு போலீசார் மீது மட்டும்தான் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. அக்குற்றத்தில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது வழக்கு ஏன் பதிவு செய்யவில்லை எனக் கேள்விகள் எழுந்தவுடன், இது குறித்து அவரைத் தனியாக விசாரித்து வருவதாக மழுப்பலான பதிலை அளித்தது. இது உதவி ஆய்வாளரைக் காப்பாற்றி, வழக்கிலிருந்து தப்பவைக்கும் மோசடி தவிர வேறில்லை. மேலும், இச்சம்பவங்கள் இரண்டிலும் பாலியல் வன்முறை குறித்துதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர, போலீசாரின் பிற குற்றங்கள் – சாலையில் நடந்துசென்றவர்களைச் சட்டவிரோதமாக இழுத்துப் போனது, வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுவனைக் கடத்தி வந்தது, பொய்வழக்கு போட்டது உள்ளிட்டவை கண்டுகொள்ளப்படவில்லை என்பது கவனம் கொள்ளத்தக்க ஒன்றாகும்.

இவ்விரண்டு சம்பவங்களில் மட்டுமின்றி, தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்து விசாரணைக்கு வந்துள்ள பல்வேறு மனித உரிமை மீறல் வழக்குகளிலும், குற்றங்களைத் தடுப்பதற்காகவே கடமையாற்றி வருவதாகக் கூறப்படும் போலீசே கொடிய குற்றங்களை இழைத்திருப்பதும்; அத்துறைக்கு வெளியே இருப்பவர்களால் இந்தச் சம்பவங்கள் அம்பலமாக்கப்பட்ட பிறகுதான் வழக்கு, விசாரணை தொடங்கியிருப்பதும்; அதிலும்கூட, குற்றமிழைத்த போலீசாரில் ஒன்றிரண்டு பேரின் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துவிட்டு, மற்றவர்களைத் தப்பவைப்பது திட்டமிட்ட முறையில் நடந்தேறியிருப்பதும்; நீதிமன்றங்களும் போலீசால் பாதிக்கப்படுவோருக்கு நட்ட ஈடு வழங்க உத்திரவிடுவதைத் தாண்டி, அவ்வழக்குகளை விரைவாக முடிக்கவும் போலீசுக்கு அளிக்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்க மறுப்பதும் ஒரு பொதுப்போக்காக இருப்பதை நாம் காணலாம்.

இவையனைத்துமே போலீசிடமிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்ற கேள்வியைத்தான் மையமாக எழுப்புகின்றன. போலீசின் ஒவ்வொரு அத்துமீறல்களும் அக்கிரமங்களும், அவ்வமைப்பு பொதுமக்களுக்கு எதிரானது என்பதைத்தான் நிரூபித்து வருவதால், குற்றமிழைத்த போலீசாரைத் தண்டிக்கக் கோருவதையும் தாண்டி, அதற்கு வழங்கப்பட்டுள்ள தனியுரிமைகளையும் அதிகாரங்களையும் ரத்து செய்யக் கோருவதும் அவசியமாகிறது. ஆனால், முதலாளித்துவ அறிவுஜீவிகளோ இந்த அறிவுபூர்வமான தீர்வுக்கு மாறாக, போலீசு நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்களைப் பொருத்தி, போலீசாரின் அத்துமீறல்களைக் குறைத்துவிட முடியும் என்ற நகைக்கத்தக்க தீர்வை முன்வைக்கிறார்கள்.

– அழகு
___________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
___________________________________

கொரியன் ஏர் ‘ரைட் ராயல்’ சீமாட்டிக்கு ஒராண்டு சிறை

5
பொது இடத்தில் மன்னிப்பு கேட்கும் சோ இந்த வழக்கில் தப்பிக்க நிறைய சதிகள் செய்தார்.
பொது இடத்தில் மன்னிப்பு கேட்கும் சோ இந்த வழக்கில் தப்பிக்க நிறைய சதிகள் செய்தார்.

ந்த செய்தி பின்னணியை அறிய இதன் முதல் பாகமான “பருப்பு பாக்கெட்டும் கொரிய மேட்டுக்குடி திமிரும்” படித்து விட்டு வாருங்கள்.

 “nut rage” – பருப்பு வன்முறை என்று ஊடகங்களில் பிரலமான கொரிய சீமாட்டி சோ ஹைனுக்கு நீதிமன்றம் 12.02.15 அன்று ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கொரியன் ஏர் விமான நிறுவனத்தின் தலைவரின் மகளான சோ சென்ற வருடம் டிசம்பர் 5-ம் தேதி விமான நிறுவன ஊழியரை இழிவுபடுத்தியதிலிருந்து உலகம் முழுக்க இழி புகழ் பெற்றுவிட்டார்.

மேகடாமியா பருப்பை பாக்கெட்டோடு தட்டில் வைத்து விட்டார் என்று உணவு பறிமாறும் ஊழியர்களின் தலைவரை இழிவுபடுத்தி, விமானத்தில் இருந்து இறக்கி விட்டு, பரிமாறிய தொழிலாளியை மண்டியிட வைத்து, தள்ளி விட்டு எல்லாம் ஆடினார் இந்த கொரிய மேட்டுக்குடி சீமாட்டி.

இந்தக் குற்றங்களோடு விமான பைலட்டின் பணிகளை இடையூறு செய்ததற்கும் சேர்த்து சியோல் மாவட்ட நீதிமன்றம் 40 வயது சோ-வை தண்டித்திருக்கிறது. எனினும் இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்காக சோ தரப்பு போக்குவரத்து அமைச்சகத்தோடு தொடர்பு கொண்டதில் அம்மையாருக்கு மட்டும் தொடர்பில்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இப்படி நடந்ததற்கு முகாந்திரம் உள்ளதை பின்னர் பார்ப்போம்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சோ-வுக்கு மூன்றாண்டு தண்டனையும், சோ- தரப்பு தாங்கள் குற்றமே செய்யவில்லை என்றும் கோரினார்கள். பின்னர் இந்த அம்மா முன்னர் எதற்காக மன்னிப்பு கோரினார்? டிசம்பரிலிருந்து சிறையிலிருக்கும் சோ இன்னும் எட்டு மாதங்கள் சிறையிலிருக்க வேண்டும்.

கொரியாவின் பணக்கார பெண்களில் ஒருவரான சோ, நீதிபதிக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தில் சிறையில் அடிப்படை வசதிகள் இல்லையென்றாலும் சகித்துக் கொண்டு வாழ்ந்ததை குறிப்பிடுகிறார். தன்னுடைய தவறுகளை அறிவதாகவும், அதனால் மன்னிக்குமாறும் கூறியிருக்கிறார். அதாவது சட்டப்படி குற்றம் செய்யவில்லை என்று வழக்கறிஞர் மூலம் டெக்னிக்லாக வாதிட்டுவிட்டு பின்னர் தண்டனை உறுதி என்றதும் சென்டிமெண்டை போட்டு தண்டனையை குறைப்பது பொதுவாக பரப்பன அக்ரஹாரம் முதல் தென் கொரியை வரை நிலவும் குற்றவாளிகளின் உத்தி.

இந்த விவகாரம் கொரியாவில் மிகவும் முக்கியத்துவம் பெற்று மக்களிடையே ஒரு பொதுக்கருத்து உருவானதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறது. தென்கொரியாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் அனைத்தும் பாரம்பரிய பணக்கார குடும்பகளுக்கு சொந்தமானவை.  “Chaebol” என்று கொரிய மொழியில் அழைக்கப்படும் இவர்கள் பல்வேறு தொழில்களை தமது குடும்ப வலைப்பின்னலால் ஆக்கிரமித்திருக்கின்றனர். தாய் நிறுவனத்தில் தலைவராக இக்குடும்பத்தின் தலைவர் இருப்பார். அவருக்கே அனைத்து வானளாவிய அதிகாரங்கள் இருக்கும். ஏனைய குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் குடும்ப இடத்தின் வலிமைக்கேற்ப நிறுவனங்களின் நிர்வாகிகளாக இருப்பார்கள்.

கொரியாவை கையில் வைத்திருக்கும் பணக்கார குடும்பங்கள்
கொரியாவை கையில் வைத்திருக்கும் பணக்கார குடும்பங்கள்

அப்பட்டமான மன்னராட்சி முறையில் செயல்படும் இக்கொரிய மேட்டுக்குடி குடும்பத்தில் ஒரு ஆணோ, பெண்ணோ எந்த தகுதியும், அடிப்படையும் இன்றி உயர்பதவிகளுக்கு வந்துவிடுவார்கள். எப்போதும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதாகவே இவர்கள் நடந்து கொள்வார்கள். இதனாலேயே தொழிலாளிகளையும், ஊழியர்களையும் பிச்சைக்காரர்களைப் போல இழிவாக நடத்துவார்கள். அடிமைகளைப் போல தண்டிப்பார்கள். இத்தகைய குடும்ப தலைவர்கள் ஏதாவது ஊழல் வழக்கில் பிடிபட்டால் மேல் முறையீட்டில் நீதிமன்றம் விடுவித்துவிடும். கொரியாவை முன்னேற்றிய தியாகிகள் என்று பாராட்டு பத்திரம் வாசிக்கப்பட்டு இக்குற்றவாளிகள் புன்னகையுடன் விடுதலையாகி வருவார்கள்.

இப்பேற்பட்ட் பின்னணியில் சோ எனும் சீமாட்டி தண்டிக்கப்பட்டார் என்றால் எந்த அளவு கொரிய மக்கள், தொழிலாளிகள் இவர்கள் மேல் வெறுப்போடு இருப்பார்கள் என்பதை அறியலாம். இக்குடும்பங்களின் 2 அல்லது 3-ம் தலைமுறை வாரிசுகள் தம்மை ராயல் கோமகன்களாகவும், சிறப்பு சலுகை கொண்ட ஆளும் வர்க்கமாகவும் கருதிக் கொள்வார்கள் என்று யோன்சி பல்கலை உளவியல் பேராசிரியர் வாங் சங் மின் குறிப்பிடுகிறார்.

1999-ம் ஆண்டில் தாத்தா ஆரம்பித்த கொரியன் ஏர் நிறுவனத்தில் சேர்ந்த பேத்தி சோ, 2006-ல் 32 வயதில் துணை தலைவராகிறார். அவரது இரு இளைய உடன் பிறப்புகளும் இப்படித்தான் நிர்வாகிகளாக திணிக்கப்பட்டனர்.

டாய்லட் பேப்பர், சோப், உள்ளாடை மட்டுமே வழங்கப்பட்டாலும் சக சிறைவாசிகள் இதர குளியல் மற்றும் அலங்கார பொருட்களை வழங்கியதாக நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் சோ குறிப்பிடுகிறார். இந்த உதவி செய்த எவரும் இந்த வழக்கு குறித்து தன்னிடம் ஏதும் பேசவில்லை என்கிறார் சோ. இறுதியில் நாகரிகம் என்பது சிறையில் இருக்கும் சாதாரண மக்களிடம்தான் இருக்கும் என்பதை ‘நாகரிக’ உலகம் நமக்கே சொந்தமென்று கருதும் அம்மணி புரிந்து கொண்டிருப்பார்.

இந்த சிறை அனுபவம் மற்றவர்களை புரிந்து கொள்ள தனக்கு உதவியதாகவும் குறிப்பிடுகிறார். கம்யூனிச நாடுகளில் உழைப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் குற்றவாளிகள் குறித்து கண்ணீர் விடும் கோமகன்கள் இந்த வரிகளை தினசரி சொல்லி பார்க்கட்டும். இறுதியில் ஒரு முதலாளித்துவ நாட்டின் மேட்டுக்குடி குற்றவாளியைக் கூட கம்யூனிச ‘பாணி’யில் சிறையில் இருக்கும் ‘கிரிமினல்கள்’தான் திருத்த வேண்டியிருக்கிறது.

மற்றவர்களை பற்றி யோசித்திருந்தால், வேலை செய்யும் தொழிலாளிகளை அடிமைகள் போல நடத்தாதிருந்தால், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியிருந்தால் இந்த வழக்கு நடந்திருக்காது என்று நீதிபதி குறிப்பிடுகிறார். விமானத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது, ஊழியர்கள் வார்த்தைகளாலும், உடல்ரீதியாகவும் தாக்கப்பட்டது, இன்னும் அவர்கள் வேலை திரும்ப முடியாத சூழல், உலகெங்கும் தென் கொரியாவின் மானம் கப்பலேறியது என்று இந்த வழக்கின் மூலத்தையும் நீதிபதி சுட்டிக் காட்டுகிறார்.

கூடவே சொ வருத்தம் தெரிவித்ததையும், பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கொரியன் ஏர் உதவ முயற்சித்ததையும் நீதிமன்றம் கணக்கில் கொண்டிருப்பதாகவும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஒருவேளை மேல்முறையீட்டில் இவ்வார்த்தைகளை வைத்து அம்மணி விடுதலையும் செய்யப்படலாம்.

“ஒரு ஆரம்ப பள்ளியில் இருக்கும் பணக்கார குழந்தை ஒரு ஏழை குழந்தையை எப்படி மட்டமாக பார்க்குமோ அது போல இந்த பருப்பு வன்முறை இருக்கிறது” என்கிறார் சாங் சபின் எனும் பள்ளி ஆசிரியர். கூடவே சோ அறிவுப்பூர்வமான முதிர்ச்சி பெற கட்டாய சமூக சேவை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

Chaebolஎனினும் சோ தரப்பு இந்த வழக்கை நீர்த்துப் போக கடைசி வரை தனது ராயல் குடும்ப உரிமைகளை வைத்து முயன்றது. அதில் ஒன்று கொரியன் ஏரைச் சேர்ந்த யூ வூன் ஜின் எனும் நிர்வாக அதிகாரி, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பொய் சாட்சி சொல்லுமாறு நிர்ப்பந்தித்தது. இது நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்பட்டு இந்த சீமானுக்கு எட்டு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

அதே போல அரசின் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரியான கிம் வூன் என்பவர் அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து நடத்திய விசாரணை தகவல்களை கொரியன் ஏர் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறார். இவருக்கும் ஆறுமாதம் சிறை தண்டனையும், ஒரு வருட பணி நிறுத்தமும் வழங்கப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? இன்னமும் கொரிய கோமான்கள் ரைட் ராயல் பாசிஸ்டுகளாகத்தான் உலா வருகிறார்கள். சியோலிலே இதுதான் நிலைமை என்றால் ஸ்ரீபெரும்புதூரில் இவர்கள் நமது தொழிலாளிகளை எப்படி நடத்துவார்கள் என்பதை யோசித்து பாருங்கள். இது ஏதோ கொரியாவுக்கு மட்டுமல்ல நம்மூர் அம்பானி, அதானிகளுக்கும் கச்சிதமாகவே பொருந்தும்.

கொரிய தொழிலாளி வர்க்கம் இத்தகைய ராயல் குடும்பங்களிடமிருந்து அனைத்தையும் மீட்டால்தான் தமது சுயமரியாதையையும் மீட்க முடியும். அதற்கு ஒரு துவக்கமாக இந்த பருப்பு வன்முறை இருக்கிறது. இல்லையென்றால் ஒரு இளவரசி இரண்டு மாதம் சிறையில் இருப்பதெல்லாம் நடக்குமா என்ன?

–    வேல்ராசன்.

படங்கள், செய்திகள் பல்வேறு உலக செய்தி இணையத்தளங்களில் இருப்பவை.

இந்திய முதலாளிகளின் சுவிஸ் வங்கி ரகசியங்கள்

4

ங்களுக்கு மாதச் செலவுக்கு மேல் அதிகமாக பணம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம் வங்கிக் கணக்கில் கணிசமான தொகை கையிருப்பில் இருக்கிறது அது மாதா மாதம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

எச்.எஸ்.பி.சி தனியார் வங்கி
இத்தகைய அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் HNI – உயர் நிகரமதிப்பு நபர் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

வங்கியிலிருந்து உங்களை தொலைபேசியில் அழைப்பார்கள்.

“சார், நீங்க பணத்தை ஃபிக்சட் டெபாசிட்டில் போடலாமே, அதுக்கு இத்தனை சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.” என்பார்கள். “ம்யூச்சுவல் ஃபண்டில் போட்டால் இத்தனை ஆண்டில் இத்தனை மடங்கு அதிகமாகி விடும்” என்பார்கள். “காப்பீடு” என்பார்கள், “முதலீட்டு வாய்ப்புகள்” என்பார்கள், “வரிச் சலுகை” என்பார்கள். “சேமிப்பு” என்பார்கள்.

இத்தகைய அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் HNI – உயர் நிகரமதிப்பு நபர் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

இதற்கெல்லாம் மேல் அதிஉயர் நிகரமதிப்பு கொண்ட நபர்களில் சிலரைப் பற்றிய ஒரு பட்டியல் சென்ற வாரம் (ஞாயிற்றுக் கிழமை – பிப்ரவரி 8, 2015 அன்று) வெளியாகியிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் எச்.எஸ்.பி.சி வங்கியின் சுவிட்சர்லாந்து கிளையில் கணக்கு வைத்திருந்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவர்களில் 1,195 பேர் இந்தியர்கள்.

எச்.எஸ்.பி.சி வங்கி
தனது அதிஉயர் பணக்கார வாடிக்கையாளர்கள் தமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள அனைத்து விதமான சட்டபூர்வ மற்றும் சட்டத்துக்கு புறம்பான சேவைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்த பன்னா……….ஆஆஆ….ட்டு வங்கி

அந்த வங்கி சாதாரண லோக்கல் பொதுத்துறை ஸ்டேட் வங்கி இல்லை. இன்னும் ‘திறமை’யாக செயல்படும் தனியார் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கூட இல்லை. தனது அதிஉயர் பணக்கார வாடிக்கையாளர்கள் தமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள அனைத்து விதமான சட்டபூர்வ மற்றும் சட்டத்துக்கு புறம்பான சேவைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்த பன்னா……….ஆஆஆ….ட்டு வங்கி அது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கியான எச்.எஸ்.பி.சி, இந்நபர்களுக்கு பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு, பணச் சலவை  (கருப்பை வெள்ளையாக்குதல்) மையமாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள்தான் இப்போது வெளியாகியிருக்கின்றன.

அந்த ஸ்விஸ் வங்கிக் கிளையில் இரகசிய எண் அடிப்படையிலான கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று உங்கள் நாட்டில் கருப்புப் பணம், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்படும் பணம் பற்றிய விவாதங்கள் கிளம்பி அரசியல்வாதிகளும், அண்ணா ஹசாரேக்களும் சவடால் அடிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனால், எதுவும் நடந்து விடப் போவதில்லை என்றாலும் எதுக்கு ரிஸ்க் என்று உங்களுக்கு தோன்றுகிறது.

எச்.எஸ்.பி.சி ஸ்விஸ் கிளை
எச்.எஸ்.பி.சியின் ஸ்விஸ் கிளை உங்களுக்கான திட்டத்தை உருவாக்கி அதை நிறைவேற்றும் சேவையையும் தானே செய்து விடுவதாக முன்வருகிறது.

அதை உணர்ந்து, சிறந்த ஒரு தனியார் நிறுவனமாக, வாடிக்கையாளரின் விருப்பத்தை நிறைவேற்றும் முகமாக, எச்.எஸ்.பி.சியின் ஸ்விஸ் கிளை உங்களுக்கான திட்டத்தை உருவாக்கி அதை நிறைவேற்றும் சேவையையும் தானே செய்து விடுவதாக முன்வருகிறது.

“சார், நீங்க பேசாம ஸ்விஸ் குடியுரிமை வாங்கிடுங்க, அப்புறம் யாரும் உங்கள தொட முடியாது. உங்க பணத்தை ஸ்விஸ்ல வச்சிகிட்டு மொரீஷியஸ் மூலமா இந்தியாவில் ரியல் எஸ்டேட் முதலீடு செய்யலாம். நினைச்சபடி வெளிநாட்டில செலவழிக்கலாம்.” என்று அதற்கான நடைமுறைகளை விளக்குவார் வங்கி பிரதிநிதி. அதை ஏற்றுக் கொண்டால், நீங்கள் ஸ்விஸ் குடிமகன், ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டும் அந்த நாட்டில் தங்கி இருந்தால் போதும், இந்தியாவில் உங்கள் (கொள்ளை) தொழிலை வழக்கம் போல தொடரலாம்.

நாட்டுப் பற்றோ அல்லது தொழிலின் கட்டாயங்களோ உங்களை குடியுரிமை மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் செய்தால், அடுத்த வழியை வங்கி பிரதிநிதி முன் வைப்பார்.

ஸ்விஸ் கணக்கு பட்டியல்
உலகளாவிய பத்திரிகையாளர் கூட்டமைப்பு வங்கிக் கணக்கு விபரங்களில் குறிப்பிட்டிருந்த நபர்களை தொடர்பு கொண்டு, முகவரிகளை சரிபார்த்து முழுப் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

“சரி சார், இந்திய குடிமகனாகவே இருந்துக்கோங்க. ஆனா, வருசத்துக்கு 6 மாசத்துக்கு மேல் வெளிநாட்டில இருக்கிறதா திட்டம் போட்டுக்கோங்க. அப்போ நம்ம கணக்கில நீங்க போடற பணம் எதுக்கும் இந்தியால வரி கட்ட வேண்டாம்” இது உங்களுக்கு ஒப்புதலாக இருந்தால், வங்கியே அதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்து, கட்டணத்தை வாங்கிக் கொள்ளும்.

கருப்புப் பணம்
சூட்கேஸ் நிறைய கரன்சி நோட்டாக பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு போக விரும்பினால் (தேர்தலில் வினியோகம் செய்ய உங்களுக்கு அது தேவைப்பட்டிருக்கலாம்) அதற்கும் ஏற்பாடு செய்து தந்திருக்கிறது அவ்வங்கிக் கிளை

“நம்ம தொழிலுக்கு 6 மாசம் வெளிநாட்டில் இருப்பதெல்லாம் சரிப்படாது” என்றோ, “வயசான காலத்தில இப்படி அல்லாட முடியாது” என்றோ நீங்கள் கருதினால், அதற்கும் ஒரு வழி வைத்திருந்தார்கள்.

“சரி உங்கள பணத்தை எல்லாம் இன்னொரு கணக்குக்கு மாற்றி விடுவோம். அந்தக் கணக்கு ஒரு கம்பெனி பெயரில் இருக்கும், அந்த கம்பெனி ஒரு டிரஸ்டுக்கு சொந்தமா இருக்கும், அந்த டிரஸ்டு உங்களுக்கு நிதி உதவி செய்றதா இருக்கும். இப்போ உங்களை யாரும் தொட முடியாது. எப்ப வேணுமோ அப்ப, அந்த கம்பெனி கணக்கில இருந்து உங்க இந்திய கம்பெனிக்கு பணத்தை கடனாகவோ, முதலீட்டாகவோ கொடுத்துக்கலாம். எந்தத் தலைவலியும் கிடையாது. கம்பெனி எந்த நாட்டில எப்படி பதிவு செய்றது, அறக்கட்டளையை எப்படி உருவாக்குவது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.” என்று அதையும் செய்து தருவார்கள்.

இதற்கெல்லாம் மேலும் நீங்கள் விடாப்பிடியாக, சூட்கேஸ் நிறைய கரன்சி நோட்டாக பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு போக விரும்பினால் (தேர்தலில் வினியோகம் செய்ய உங்களுக்கு அது தேவைப்பட்டிருக்கலாம்) அதற்கும் ஏற்பாடு செய்து தந்திருக்கிறது அவ்வங்கிக் கிளை, “இது இல்லீகல் சார், கவனமா கொண்டு போங்க, பிடிபட்டா சிக்கல்” என்ற எச்சரிக்கையுடன். இதைத் தவிர மேலே சொன்ன மற்ற நடவடிக்கைகள் எல்லாமே “லீகல்” என்று அழைக்கப்படும் சட்டத்துக்குட்பட்டவைதான்.

அம்பானி சகோதரர்கள்
அப்பா அம்பானி செத்த பிறகு சொத்து பிரிப்பில் அம்மா அம்பானி தனது இரண்டு புதல்வர்களுக்கும் பிரித்துக் கொடுத்த ஸ்விஸ் கணக்கின் பிரிவினையாகக் கூட இது இருக்கலாம்.

உதாரணமாக, பிரிட்டிஷ் தொழிலதிபர் ரிச்சர்ட் கேரிங் வங்கிக் கிளையிலிருந்து $50 லட்சம் (சுமார் ரூ 33 கோடி) ஸ்விஸ் பிராங்கு மதிப்பிலான கரன்சி நோட்டுகளை வாங்கி சென்றிருக்கிறார். அவர் தனது கணக்கிலிருந்து அமெரிக்க அதிபர் பில், ஹில்லாரி மற்றும் அவர்களது மகள் செல்சீ கிளின்டன் பெயரிலான அறக்கட்டளைக்கு $10 லட்சம் நன்கொடை அளித்திருக்கிறார். எச்.எஸ்.பி.சி தனது வாடிக்கையாளர்களுக்காக நடத்திய திருவிளையாடல்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கார்டியன் நாளிதழின் கட்டுரைகளைப் பாருங்கள்.

இத்தகைய ‘நேர்மை’யான சேவைகளை வழங்கிய வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்களின் பட்டியலில் இந்திய வாடிக்கையாளர்களில் முதன்மையானவர்கள் முகேஷ், அனில் அம்பானி சகோதரர்கள். 2006-ம் ஆண்டு இருவரது கணக்கிலும் ஒரே அளவில் ரூ 165 கோடி இருந்திருக்கிறது. அப்பா அம்பானி செத்த பிறகு சொத்து பிரிப்பில் அம்மா அம்பானி தனது இரண்டு புதல்வர்களுக்கும் பிரித்துக் கொடுத்த ஸ்விஸ் கணக்கின் பிரிவினையாகக் கூட இது இருக்கலாம்.

ஸ்விஸ் வங்கிக் கணக்கு பட்டியல்
“இந்தக் கணக்கெல்லாம் சட்ட பூர்வமானவைதான்.” “நான் பல ஆண்டுகளாகவே என்.ஆர்.ஐ-ஆக இருக்கிறேன்,” “நான் பல ஆண்டுகளாகவே வெளிநாட்டுக் குடிமகன்”

திருபாய் அம்பானியின் மகள் நீத்தா அம்பானி இப்போது கோத்தாரி குடும்ப மருமகள். அவர்களது கணக்கில் ரூ 195 கோடி இருந்திருக்கிறது. இந்தியாவில் தனியார் விமான சேவை ஆரம்பித்து, ‘திறமை’ காட்டிய ஜெட் ஏர்வேஸ் முதலாளி நரேஷ் கோயலின் கணக்கில் ரூ 116 கோடி இருந்திருக்கிறது.

தொழிலதிபர் மனு சாப்ரியா குடும்பத்தினர் கணக்கில் ரூ 874 கோடி ரூபாய், வீட்டு அலங்கார பொருட்கள் இறக்குமதி செய்து விற்கும் மகேஷ் தரானி கணக்கில் ரூ 251 கோடியும், ரியல் எஸ்டேட் செய்யும் ஷ்ராவன் குப்தா, ஷில்பி குப்தா கணக்கில் ரூ 209 கோடியும் இருந்திருக்கின்றன. உள்ளூரில் மைனர் செயினும், ஸ்கார்பியோ காரும் என்று சுற்றும் ரியல் எஸ்டேட் கட்ட பஞ்சாயத்து ரவுடிகள் கவனிக்க.

இந்தப் பட்டியலில் உள்ள அரசியல்வாதிகளில் முன்னாள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர் பிரணீத் கவுர், முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அன்னு தாண்டன், முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் நாராயண் ரானேவின் மனைவி நீலம் ரானே, மகள் நிலேஷ் ரானே, முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் வசந்த் சாத்தேவின் குடும்பத்தினர், மற்றும் பால் தாக்கரேவின் மருமகள் ஸ்மிதா தாக்கரே ஆகியோரும் அடங்குவார்கள்.

முழுப்பட்டியலை தெரிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் பட்டியலைப் பாருங்கள்.

எச்.எஸ்.பி.சி ஸ்விஸ் விபரங்கள் வெளியானதும்

“இந்தக் கணக்கெல்லாம் சட்ட பூர்வமானவைதான்.”
“நான் பல ஆண்டுகளாகவே என்.ஆர்.ஐ-ஆக இருக்கிறேன்,”
“நான் பல ஆண்டுகளாகவே வெளிநாட்டுக் குடிமகன்”

என்று டிசைன் டிசைனாக விளக்கமளித்து சுவிஸ் வங்கி அளித்து சேவைகளை முழுமையாக தாம் பயன்படுத்தியிருப்பதை உறுதி செய்கிறார்கள், இந்த யோக்கியர்கள்.

ர்வே ஃபல்சியானி
எச்.எஸ்.பி.சி பட்டியலை வெளிக் கொண்டு வந்த எர்வே ஃபல்சியானி என்ற பிரெஞ்சு-இத்தாலிய கணினி பொறியாளர்

இத்தகைய நபர்கள் இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் படித்து, இந்தியாவில் தொழில் செய்து பணத்தை குவித்தாலும் இந்தியாவில் வசிக்காத இந்தியர் என்ற அந்தஸ்தில் தமது வருமானத்தை வெளிநாட்டில் வைத்துக் கொண்டு நாட்டுக்கு பட்டை நாமம் போட்டிருக்கின்றனர். அதற்கு எச்.எஸ்.பி.சி போன்ற ‘உத்தம’ வங்கியின் சேவையை பயன்படுத்தியிருக்கின்றனர்.

எச்.எஸ்.பி.சி வங்கியின் ஜெனீவா கிளை 2006-ம் ஆண்டு எர்வே ஃபல்சியானி என்ற பிரெஞ்சு-இத்தாலிய கணினி பொறியாளருக்கு தனது தரவுத்தளத்தை சீர்செய்யும்படி பணி கொடுத்திருக்கிறது. தரவுத் தளத்தை பார்த்த பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். உலகெங்கிலும் உள்ள தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், ஆயுதத் தரகர்கள், வைர வியாபாரிகள், போதை மருந்து கடத்தல்காரர்களின் கணக்கு விபரங்களையும், அவை தொடர்பாக நடந்திருந்த திருவிளையாடல்களையும் பார்த்த அவர் அந்த விபரங்களை நகல் எடுத்திருக்கிறார். கிரிமினல் மாஃபியா கும்பலுக்கும், கார்ப்பரேட் வங்கி, தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடு எங்கு தொடங்குகிறது என்று சொல்ல முடியாதுதான்.

இந்தப் பட்டியலின்படி 2006-07ம் ஆண்டில் இந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருந்த உலகப் பணக்காரர்களின் வங்கிக் கையிருப்பின் மதிப்பு $13,000 கோடி (இன்றைய நாணய மதிப்பில் சுமார் ரூ 8 லட்சம் கோடி).

அம்பானி - மோடி
“முகேஷ் அம்பானியோ, ரிலையன்ஸ் நிறுவனமோ தனது தனியார் வங்கி பிரிவில் கணக்கு வைத்திருக்கவில்லை” என்று எச்.எஸ்.பி.சி உறுதிபட கூறியிருந்தது.

எர்வே 2009-ம் ஆண்டு இந்த கிரிமினல் வங்கிக் கணக்கு விபரங்களை பிரெஞ்சு போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார். பிரெஞ்சு அரசு அதை பல்வேறு நாட்டு அரசுகளுக்கு தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் 2011-ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசுக்கு 600-க்கும் அதிகமான இந்தியர்களின் பெயர் தெரிய வந்திருக்கிறது. ஆனால், அந்தப் பட்டியலை வெளிப்படையாக வெளியிடவோ, கணக்கு வைத்திருந்த முதலாளிகள் மீதோ, அவர்களுக்கு உதவி செய்த எச்.எஸ்.பி.சி அதிகாரிகள் மீதோ எந்த நடடிக்கையும எடுக்கவோ செய்யாமல் மூடி மறைத்தனர், இந்திய அரசும் உச்சநீதிமன்றமும். இந்தப் பணத்துக்கு முறையாக வரி கட்டியிருக்கிறார்களா என்று விசாரணை செய்யப் போவதாக சவடால் விட்டு, எதிர் முகாமைச் சேர்ந்த பணக்காரர்கள் மீது சோதனை நடத்துவதற்கு அதை பயன்படுத்திக் கொண்டனர்.

ஜனவரி 2012-ல் முகேஷ் அம்பானியை வருமான வரி விசாரணையில் மாட்டி விட்டதற்காக எச்.எஸ்.பி.சி வங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டதாக எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த நேரத்தில் “முகேஷ் அம்பானியோ, ரிலையன்ஸ் நிறுவனமோ தனது தனியார் வங்கி பிரிவில் கணக்கு வைத்திருக்கவில்லை” என்று எச்.எஸ்.பி.சி உறுதிபட கூறியிருந்தது.

பன்னாட்டு வங்கி முறைகேடுகள்
பன்னாட்டு வங்கி முறைகேடுகள்

கிரேக்க நாடு தொடர்பான 2,000 பேர்களின் விபரங்கள் அந்நாட்டு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருக்கின்றன. தனது நாட்டு பண முதலைகளின் பட்டியலை பிரெஞ்சு அரசிடமிருந்து பெற்றுக் கொண்ட அமெரிக்க அரசோ, எச்.எஸ்.பி.சி வங்கியின் மீது நடவடிக்கை எடுக்காமல் சிறு அபராதத் தொகை விதித்து வழக்கை முடித்துக் கொண்டது. அதே நேரம், எர்வே ஃபால்சியானி மீது ஸ்விட்சர்லாந்து வங்கி ரகசிய சட்டங்களை மீறியதற்காகவும் தொழில்துறை உளவு செய்ததற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு நாட்டு அரசுகளும் தாம் யாருக்காக செயல்படுகின்றன என்பதை தெளிவுபடுத்திக் கொண்டிருந்தன.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லா மோண்ட என்ற பத்திரிகையின் வசம் 1.3 லட்சம் பெயர்களைக் கொண்ட இந்த முழுப்பட்டியலும் வந்து சேர்ந்தது. அப்பத்திரிகை இங்கிலாந்தின் கார்டியன், இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட உலகளாவிய பத்திரிகையாளர் கூட்டமைப்புடன் சேர்ந்து வங்கிக் கணக்கு விபரங்களில் குறிப்பிட்டிருந்த முகவரிகளை சரிபார்த்து சென்ற வாரம் முழுப் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 1,688 இந்தியர்களின் விபரங்களை முறையாக சரிபார்த்து, 1,195 பேர் வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொண்டிருந்ததாக அடையாளம் கண்டிருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களிலும் பாக்வாரா, கோட்டயம், ஸ்ரீநகர், லூதியானா, சிம்லா போன்ற சிறு நகரங்களிலும் ஆய்வு செய்து இந்தப் பணியை முடித்திருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்
இந்தியர்களின் கணக்கு விபரங்களை சரிபார்த்து வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ்

எச்.எஸ்.பி.சி ஸ்விஸ் கிளையில் கணக்கு வைத்திருந்த இந்திய வாடிக்கையாளர்களின் கையிருப்பு 2006-ம் ஆண்டில் மொத்தம் ரூ 25,000 கோடி. இந்த விபரங்கள் ஒரே ஒரு ஸ்விஸ் வங்கி தொடர்பானவை மட்டுமே. ஸ்விட்சர்லாந்தின் சுமார் 300 தனியார் வங்கிகளில் மொத்தம் $2 லட்சம் கோடிக்கும் (சுமார் ரூ 120 லட்சம் கோடி) அதிகமான உலகப் பணக்காரர்களின் பணம் கையாளப்படுகிறது என்பதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவற்றில் இந்திய முதலாளிகள் வைத்திருந்த கணக்குகளையும் சேர்த்தால்தான் வெளிநாட்டில் புழங்கும் இந்திய பணத்தின் முழு பரிமாணமும் தெரியவரும்.

மேலும், இந்தியாவின் கருப்புப் பணத்தின் அளவை ஸ்விஸ் கணக்குகளின் கையிருப்பு மட்டும் தீர்மானிக்கவில்லை.

அன்னிய நேரடி முதலீடு
மொரீஷியஸ் போன்ற வரியில்லா சொர்க்கங்கள் வழியாக அன்னிய நேரடி முதலீடு.

இந்திய முதலாளிகள் வெளிநாட்டு வங்கிகளில் போடும் பணத்தை மொரீஷியஸ் போன்ற வரியில்லா சொர்க்கங்கள் வழியாக அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் நாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2012 வரை இந்தியாவுக்குள் வந்த அன்னிய நேரடி முதலீட்டில் 38% குட்டித் தீவான மொரீஷியஸ் நாட்டிலிருந்து வந்திருக்கிறது. 2012-13ல் மொத்த அன்னிய நேரடி முதலீடான $1800 கோடி (சுமார் ரூ 1.1 லட்சம் கோடி)யில் $805 கோடி (சுமார் ரூ 49,000 கோடி) மொரீஷியசிலிருந்து வந்திருக்கிறது.

இந்தப் பணத்தில் பெரும்பகுதி இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறைக்கு போயிருக்கிறது. 2005-ம் ஆண்டுக்கும் 2010-க்கும் இடையே ரியல் எஸ்டேட்டில் அன்னிய முதலீடு 80 மடங்கு அதிகரித்து 2010-ல் அதன் மதிப்பு $570 கோடி (ரூ 35,000 கோடி) ஆக இருந்தது. ஒரு தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி 2012-ல் ரியல் எஸ்டேட் பரிமாற்றங்களில் 30% வரை கருப்புப் பணமாக இருந்தது.

மும்பையில் சராசரி தனிநபர் வருமானத்தை ஈட்டும் ஒரு சாதாரண குடிமகன் 800 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றை சொந்தமாக வாங்குவதற்கு 100 ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்ற அளவுக்கு இந்த வெளிநாட்டுப் பண சுனாமி சராசரி இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் குமிழி
மும்பையில் சராசரி தனிநபர் வருமானத்தை ஈட்டும் ஒரு சாதாரண குடிமகன் வீடு ஒன்றை சொந்தமாக வாங்குவதற்கு 100 ஆண்டுகள் உழைக்க வேண்டும்

வேலை வாய்ப்பு, வளர்ச்சியை உருவாக்குபவர்கள் என்ற பெயரில் மலிவு விலையில் நிலம், சலுகை விலையில் மின்சாரம், தண்ணீர், இயற்களை வளங்களை அள்ளிக் கொள்ள காடுகள், மலைகள், கடற்கரைகளுக்கு குத்தகை, வரிச் சலுகைகள் என்று குளிப்பாட்டப்படுகின்றனர் இந்த முதலாளிகள். அவர்களுக்கு கொடுக்கும் சலுகைகளுக்கான செலவுகளை ஈடுகட்ட கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் போன்ற குடிமக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மேலும், தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து முறையான ஊதியம் வழங்காமல், ஒப்பந்த முறையில் குறைந்த கூலி கொடுத்து சுரண்டுவதன் மூலமாகவும் கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர் இந்தப் பண முதலைகள்.

அவர்கள் தமது பணத்தை இது போன்ற வரியில்லா சொர்க்கங்களில் பதுக்கி வைக்கிறார்கள் என்ற உண்மை ஊடகங்கள் மத்தியிலும், முதலாளித்துவ அறிவுஜீவிகள் மத்தியிலும் பெரிய அளவு சலசலப்பை ஏற்படுத்தி விடவில்லை.

இத்தகைய முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தம், வங்கிக் கடன்களை வழங்க முன்னுரிமை, விவசாய நிலங்களை மலிவு நிலையில் கைப்பற்றி கொடுத்தல், உற்பத்தி வரி, வருமான வரிச் சலுகை என்று அவர்களுக்கு சேவை செய்கின்றன மத்திய, மாநில அரசுகள். இவர்கள் நடவடிக்கைகள் தொடர்பாக வரி வசூலிக்க வேண்டிய வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் அரசியல் நோக்கங்களுக்காக பழி வாங்க மட்டும் பயன்படுத்தப்படுகின்றன. வருமான வரித்துறை அப்படி நடவடிக்கை எடுத்தாலும் வோடபோன் வழக்கில் செய்தது போல உயர், உச்சநீதி மன்றங்கள் அதை ரத்து செய்து விடுகின்றன.

ஊடகங்களோ, இத்தகைய பணப் பாய்ச்சலும் அது உருவாக்கும் வளர்ச்சி என்ற குமிழிகளும்தான் நாட்டை முன்னேற்றும் என்று பிரச்சாரம் செய்கின்றன.

இந்த சூழலில் எச்.எஸ்.பி.சி ஆவணங்கள் வெளிப்படுத்தியிருக்கும் உலகு தழுவிய நிதிக் கும்பலின் கொள்ளையையும், சட்ட விரோத செயல்களையும் தடுத்து நிறுத்த முடியாதபடி இந்த அரசு அமைப்புகள் சீரழிந்து போய் விட்டன என்பதை மறுக்க முடியுமா?

தொடர்புடைய சுட்டிகள்

கரகாட்டம் கறிவிருந்து காட்டு தர்பார் – ஸ்ரீரங்கம் நேரடி ரிப்போர்ட்

9

ழல் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய சாட்டையடித் தீர்ப்பினால் முதுகுத்தோல் உரிந்து போன ஜெயலலிதாவுக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய கூட்டாளிகள் விசிறியால் ஒருபுறம் விசிறி அமைதிப்படுத்தி கொண்டிருந்த போது பிரம்மஸ்ரீ ஜெயாவுக்கு இழைக்கப்பட்ட ‘அநீதி’ கண்டு ஆர்த்தெழுந்த நீதியரசர்கள் ஜாமீன் வழங்கி மயில் இறகால் மருந்து தடவினர். சட்டத்தையும் நீதியையும் தாங்கள் விரும்பியபோதெல்லாம் வளைத்து பார்ப்பானுக்கு தனி நீதி என்பதையே இவர்கள் நிலைநிறுத்தி வந்திருக்கிறார்கள். முதல் முறையாக ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தண்டனைக்குள்ளாகி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதவி இழக்கும் முதல் முதல்வர் என்ற சிறப்பு தகுதியை ஜெயலலிதா அடைந்ததன் விளைவாக நடைபெற்றதே திருச்சி – திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்.

ஊழல் குற்றவாளி ஜெயலலிதா
ஊழல் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய சாட்டையடித் தீர்ப்பினால் முதுகுத்தோல் உரிந்து போன ஜெயலலிதா பதவி இழந்ததால் நடக்கும் இடைத்தேர்தல்

“ஸ்ரீரங்கம் என் தாய் மண், என் சொந்த வீடு, தலைமுறை தலைமுறையாக என் முன்னோர் வாழந்து வந்த புண்ணிய பூமி. எனவே தான் என் இதயத்துடிப்போடு கலந்துவிட்ட உறவு திருவரங்கத்துக்கு உண்டு” என்றெல்லாம் பிதற்றும் அளவுக்கு ஜெயலலிதாவுக்கு பித்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த இடைத்தேர்தல். இடைத்தேர்தல் என்றாலே அரசு எந்திரத்தின் ஆதரவுடன் ஆளுங்கட்சியே வெற்றிபெறும் என்பது ஊரறிந்த ஒன்று. எனினும், தமது ஓட்டு வங்கியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நெருக்கடியில் இருந்த பிரதான கட்சியான தி.மு.க தனது வேட்பாளரை அறிவித்த கையோடு பணப்பட்டுவாடா செய்ததிலும் முந்திக்கொண்டது.

பக்கம் பக்கமாக அறிக்கை விட்டாலும் பணபலமும், சாதிபலமும் அதிகார வர்க்கத்தின் ஆசியும் இல்லாவிட்டால் தேர்தலில் மண்ணை கவ்வ வேண்டியிருக்கும் என்பது ஓட்டுக் கட்சிகள் அனைவருக்கும் பொதுவானது. தலித் மக்கள் வாழும் கிராமங்களில் தனிசுடுகாடு, தனிபாதை, ஊருக்குள் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது போன்ற சாதிக் கட்டுப்பாடுகளை வன்மமான முறையில் அமல்படுத்துவதும், எதிர்த்து கேட்டால் கலவரம் செய்வதும் என சாதிவெறியாட்டம் போடும் முத்தரையர் சாதியின் ஆதிக்கம் நிறைந்த கிராமங்கள் திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிகம் என்பதால், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் முத்தரையர் சாதியைச் சேர்ந்தவர்களையே தமது வேட்பாளர்களாக அறிவித்தன.

மக்களின் அடிப்படை பிரச்சனைகள் ஆயிரக்கணக்கில் அணிவகுத்து நிற்கும் போது அ.தி.மு.க வின் 27 எம்.எல்.ஏ க்கள் திருவரங்கத்தில் முகாமிட்டுக் கொண்டு தங்களின் ஜனநாயக கடமையாற்றினர். சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தது துவங்கி, பிரச்சாரத்தின் இறுதிநாள் வரை சகலவிதமான முறைகேடுகளிலும் அ.தி.மு.க ஈடுபட்டது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
புரட்சிகர அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை விரிவாக மேற்கொண்டனர்.

தி.மு.க தரப்பில் ஓட்டுக்கு 500 ரூ, அ.தி.மு.க தரப்பில் முதல் முறையாக ஓட்டு போடுபவர்களுக்கு ரூ 5,000, பிறருக்கு ரூ 2,000 என கட்டுக்கட்டாய் கரன்சிகளை அள்ளிவிட்டனர். ஆட்சியில் இருக்கும் வரை கோடிகோடியாய் கொள்ளையடித்து சொத்து சேர்த்து கொள்வது, தங்களது தொழில் சாம்ராஜ்யங்களை விரிவுபடுத்திக் கொள்வது, பின் தேர்தல் நேரத்தில் கரன்சிகளை அள்ளிவீசி ஓட்டுக்களை பொறுக்குவது என்பது எல்லா இடைத்தேர்தல்களைப் போலவும் திருவரங்கத்திலும் நடைபெற்றது.

மக்களிடம் தங்கள் கட்சியின் கொள்கைகளை பேசி ஓட்டுவாங்குவது என்கிற அடிப்படை ஏற்கனவே தகர்த்தெறியப்பட்டுவிட்டது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற புதிய பொருளாதார கொள்கைகளை சர்வகட்சிகளும் ஏற்றுக்கொண்டுவிட்டன. உலகவங்கியின் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகள் வரை ஊடுறுவி விட்ட நிலையில் அவர்களின் உத்தரவுகளுக்கு நாய் ஆடினால் என்ன? நரி ஆடினால் என்ன?

எனவே, “போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசை கட்டியெழுப்புவோம்!” என்ற அடிப்படையில் மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை விரிவாக மேற்கொண்டனர்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்கருத்துரிமை, பேச்சுரிமை பற்றி நீட்டி முழக்கும் ஆளும் வர்க்கங்கள் மாற்று அரசியலை முன்வைக்கும் இயக்கங்களுக்கு வாய்ப்பூட்டு போடும் விதத்தில் ‘நடுநிலை’யாளரான தேர்தல் கமிசன் மூலம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தினர். கடந்த காலங்களில் தேர்தல் புறக்கணிப்பு குறித்த தெருமுனைக்கூட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க இழுத்தடித்து காலம் கடத்துவதும், பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின் அனுமதி கிடைத்தாலும் கூட அதற்குள் கணிசமான காலம் விரையமாவதும் நடந்தது.  இம்முறை பிரச்சார இயக்கம் குறித்த நடவடிக்கைகள் எதற்கும் அனுமதி பெற கூடாது என முடிவெடுத்து பிரச்சாரங்களை துவங்கினோம். திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு ஊர்களுக்கும் செல்லும் பேருந்துகளில் ஏறி துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. மற்றொரு குழுவினர் கிராமப்புற பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு ஊர்களுக்கும் செல்லும் பேருந்துகளில் ஏறி துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. மற்றொரு குழுவினர் கிராமப்புற பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களின் எண்ணிக்கையை விட அங்கு வந்து இறங்கியிருந்த அ.தி.மு.க காரர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. திருவரங்கம் நகரம் முழுவதிலும் ஆளும் கட்சியினரின் ஆக்கிரமிப்புகளால் திணறியதை தினகரன் உள்ளிட்ட நாளிதழ்கள் அம்பலப்படுத்தியும், அரசு எந்திரத்தின் ஒத்துழைப்புடன் அ.தி.மு.க போட்ட ஆட்டம் அடங்கவில்லை. அ.தி.மு.க சார்பாக கிராமம், நகரம் வாரியாக 30 வாக்காளர்களுக்கு 20 பேர் என ஒதுக்கி ஓட்டுக்கள் விழுவதை உத்திரவாதப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
செஞ்சட்டை, பறையிசை, செங்கொடிகள் என குழுமணி, கீழமூலங்குடி, பணையபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் வழியாக பெ.வி.மு தோழர்கள் தலைமையில் ம.க.இ.க உள்ளிட்ட தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரங்கள் மேற்கொண்டனர்.

தென்னந்தோப்புகளில் கரகாட்டம், கறிவிருந்து என அ.தி.மு.க வுக்கு போட்டியாக தி.மு.க வும் ஈடுகொடுத்தது. செஞ்சட்டை, பறையிசை, செங்கொடிகள் என குழுமணி, கீழமூலங்குடி, பணையபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் வழியாக பெ.வி.மு தோழர்கள் தலைமையில் ம.க.இ.க உள்ளிட்ட தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரங்கள் மேற்கொண்டனர். வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் மக்களைத் திரட்டி தெருமுனைக்கூட்டங்கள், இரவு நேர கிராமக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ம.க.இ.க மைய கலைக்குழு தோழர்களின் பாடல்கள் மக்களை ‘உறக்கம்’ கலைய செய்தன.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் மக்களைத் திரட்டி தெருமுனைக்கூட்டங்கள், இரவு நேர கிராமக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

முதலில் துண்டு பிரசுரம் கொடுத்து பேசச் சென்ற தோழர்களிடம், ‘நீங்க ஓட்டுக்கு எவ்வளவு தருவீங்க’ என மக்கள் கேள்வி எழுப்பினர். பிரசுரத்தை படித்த மறுகணமே சிரிப்பதும், சிலர் வளைந்து நெளிந்து விளக்கம் கொடுப்பதும் என நடந்து கொண்டனர். அந்த பிரசுரத்தில் இருந்த வாசகங்கள் இவையே…

திருச்சி – திருவரங்கம் இடைத்தேர்தல்!
உங்கள் சூடு, சொரணை என்ன விலை?
கட்டுக்கட்டாய் கரன்சிமழை!
கரைபுரண்டு ஓடுது டாஸ்மாக்!
தென்னந்தோப்புகளில் கரகாட்டம், கறிவிருந்து!
காற்றில் பறக்குது தேர்தல் விதிகள்!
ஓட்டுப்பொறுக்கிகளின் காட்டுதர்பார்!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
உலக வங்கியின் அதிகாரம் ஊராட்சி மன்றம் வரை தலைவிரித்து ஆடும் போது வாக்குரிமை பற்றிய வாய்ச்சவடால் எதற்கு?

அத்தியாவசியப் பொருட்கள் முதல்
அத்தனையும் விலை உயர்வு!
மக்களின் ஆத்திரத்தை மடைமாற்ற
இலவசங்களால் வாய் அடைப்பு!
எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும்
மண்டை உடைப்பு!

உலக வங்கியின் அதிகாரம்
ஊராட்சி மன்றம் வரை
தலைவிரித்து ஆடும் போது
வாக்குரிமை பற்றிய வாய்ச்சவடால் எதற்கு?

பெட்ரோல், தொலைபேசி, மின்கட்டணம்
என சர்வத்தையும் தீர்மானிப்பது
ஓழுங்குமுறை ஆணையங்கள் எனும்போது
பாராளுமன்றமும் சட்டமன்றமும் எதற்கு
பன்னி மேய்ப்பதற்கா?

சின்னத்தை மாற்றி பயனில்லை…
சிந்திக்கும் முறையை மாற்று!
போலி ஜனநாயகத் தேர்தலைப்
புறக்கணி! மக்கள் அதிகாரத்திற்கான
கமிட்டிகளை கட்டி எழுப்பு!

“நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் இதெல்லாம் எப்படி சாத்தியமாகும்” என தயங்கிய மக்களுக்கு நம்பிக்கையூட்டி பேசினர் தோழர்கள்.

தோழர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட சில இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து பேசினர்.

“நாங்களெல்லாம் இப்போது தான் முதல் முறையாக ஓட்டுப் போட போகிறோம். யாருக்கு போடுவது என்று குழப்பமாக இருந்தது. நீங்களோ ஓட்டே போட வேண்டாம் என்று கூறுகிறீர்கள். அப்படியென்றால் வேறு என்ன செய்ய வேண்டும்” என விவாதிக்கத் துவங்கினர். மாற்று அரசியல் குறித்த எமது தோழர்களின் பிரச்சாரம் புதிய கிராமங்களில் இளைய தலைமுறையினர் மத்தியில் நம்பிக்கை விதைகளை விதைத்திருக்கிறது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
மாற்று அரசியல் குறித்த எமது தோழர்களின் பிரச்சாரம் புதிய கிராமங்களில் இளைய தலைமுறையினர் மத்தியில் நம்பிக்கை விதைகளை விதைத்திருக்கிறது.

இப்பிரச்சார நடவடிக்கைகளின் போது குழுமணிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தோழர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அங்கே வந்த அ.தி.மு.க வினர் “என்ன தோழர் எங்களுக்கெல்லாம் நோட்டீசு இல்லையா” என்று கேட்டு வாங்கிச் சென்று படித்தனர். “நீங்க நடப்பதைத் தான் சொல்றீங்க” என்று சொல்லி சென்றனர்.

தேர்தல் தேதி நெருங்க நெருங்க சில இடங்களில் தி.மு.க வோடு அ.தி.மு.க வுக்கு ஏற்பட்ட சலசலப்பு, அடிதடி – மோதல்கள் என வீரியம் பெற்றது. அதற்கேற்ப போலீசு, துணை ராணுவப் படையின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
ம.க.இ.க மைய கலைக்குழு தோழர்களின் பாடல்கள் மக்களை ‘உறக்கம்’ கலைய செய்தன.

இந்நிலையில் பி.ஜே.பி யின் ‘ஊழல் ஒழிப்பு’ வேட்பாளர் சுப்ரமணியனை ஆதரித்து தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்டோர் சூறாவளியாய் சுழன்று பிரச்சாரம் செய்தாலும் எதிரில் இருப்பவர்கள் எண்ணிக்கையோ காற்று வாங்கியது. தி.மு.க வே அடிதடியில் இறங்கினால் தான் பிரச்சாரம் செய்ய முடியும் என்கிற நிலை இருந்ததை கணக்கில் கொள்ளாமல், சுப்ரமணியன் உள்ளிட்ட இந்து உணர்வாளர்கள் ஓட்டு கேட்கப் போன இடங்களில் அ.தி.மு.க காலிகள் ஓட ஓட அடித்து விரட்டினர். அடிவாங்கியது கூட பரவாயில்லை மண்டை உடைபட்ட தனது அடிப்பொடிகளுடன் சேர்த்து தன்மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்பதை சுப்ரமணியனே கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

திருவரங்கத்தில் நான்குமுனைப் போட்டி என சொல்லிக் கொண்டாலும் இடது சாரிகளின் நிலையோ அந்தோ பரிதாபம். “முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறோம், இது எங்கள் ஜனநாயக உரிமை” என்றெல்லாம் சி.பி.எம் கத்திக் கூப்பாடு போட்டாலும் காதில் வாங்கிக் கொள்ளதான் ஆள் இல்லை. ஆங்காங்கே விழுந்த அடிகளின் ரணம் தாங்காமல், காந்திவழி கம்யூனிஸ்டு தோழர். ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட வேண்டியதாயிற்று. சட்டமன்ற, பாராளுமன்ற ஜனநாயம் குறித்தும் அதன் மாண்புகள் குறித்தும் வாய்கிழிய வகுப்புகள் எடுக்கும் இடதுசாரிகள் தான் அவர்கள் வாங்கிய அடிகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி தேர்தலில் மோடி மண்ணைக் கவ்வியதும் ஆம்ஆத்மி வெற்றி பெற்றதும், “மோடி அலை, சுனாமி என்பதெல்லாம் பம்மாத்து” “இந்து மதவெறியர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு மக்களின் எதிர்வினை” என்கிற முறையில் பி.ஜே.பி க்கு கிடைத்த செருப்படியாக அமைந்தது. இதனை அம்பலப்படுத்தியும் சுவரொட்டி இயக்கம் மேற்கொள்ளபட்டது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்கூடுதலாக பி.ஜே.பி யின் ஊழல் ஒழிப்பு வேட்பாளர், செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவின் கணக்கப்பிள்ளை, கல்வி (கொள்ளையன்) தந்தை என பல்வேறு முகங்களுடைய கரட்டாம்பட்டியான் சுப்ரமணியணின் யோக்கியதையை வினவு இணையதளம் தக்க ஆதாரங்களுடன் தோலுரித்ததை விரிவாக மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு பிரசுரங்கள் அச்சிட்டோம்.

குறிப்பாக, சுப்ரமணியனுக்கு சொந்தமான ஆக்ஸ்போர்டு இன்ஜினியரிங் கல்லூரி, துறையூர் ஜெயராமன் கல்லூரி, அங்காளம்மன் கல்லூரியிலும் கூடுதலாக திருவரங்கம் ஆண்டவர் கலைக் கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரி, இந்திரா காந்தி கலைக்கல்லூரி, எஸ்.ஆர்.சி கல்லூரி ஆகியவற்றிலும் பி.ஜே.பி யின் ஊழல் ஒழிப்பு வாய்சவடாலை அம்பலப்படுத்தி மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம். கல்லூரி மாணவர்களில் கணிசமானோர் முதல் தலைமுறை வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்தனக்கென ஒரு வாக்கு வங்கி உருவாவதற்கு முன்பே அது தகர்க்கப்படுவதும், அதுவும் தனது கல்லூரியின் வாசலிலேயே நிகழ்வதையும் காண சகிக்காமல் தனது அடியாட்களை விட்டு பிரசுரம் விநியோகித்த தோழர்களிடம் தகராறு செய்தார் சுப்ரமணியன். அன்று மாலையே புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வந்த செய்தி என்னவெனில்… ‘ திருவரங்கம் – மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் மீது வழக்கு பதிவு, இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக சுவரொட்டி ஒட்டியதாக இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு‘.

இந்து முன்னணியின் கிருஷ்ணன் என்பவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் 153(ய), 41 சிறப்பு சட்டம் (பிணையில் வெளிவர முடியாத) பிரிவுகளில் போலீசு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்து மக்கள் கட்சி சார்பாக மாரியப்பன் என்பவரும், இந்து மகா சபையினரும் புகார் அளித்துள்ளனராம்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணி! மக்கள் அதிகாரத்திற்கான கமிட்டிகளை கட்டி எழுப்பு!

இப்படி இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக வானத்துக்கும், பூமிக்கும் இவர்கள் குதித்துக் கொண்டிருக்க சுப்ரமணியனுக்கு சொந்தமான கல்லூரிகளில் படிக்கும் பொறியியல் மாணவர்கள் பலர்… “எங்களுடைய காலேஜ் சேர்மன் பற்றி காலையில நோட்டீசு கொடுத்தப்பவே வாங்கி படிச்சோம். உங்க வெப்சைட்ல சொல்லியிருக்க விசயம்லா சரியானது தான். இந்த ஆதாரம் எல்லாம் எங்க இருந்து எடுத்தீங்க” என்று ஆச்சர்யமாக கேட்டனர். சில மாணவர்கள் சூப்பர் என்று கூறுவதும், கல்லூரியில் தாங்கள் அனுபவிக்கும் அடக்கு முறைகளை கொட்டித் தீர்ப்பது எனவும் ஆதங்கப்பட்டனர். இன்னொரு மாணவர், “இக்கல்லூரியில் நடக்கிற பிரச்சனைகள் பற்றி எங்கு பேச கூப்பிட்டாலும் நாங்கள் வருகிறோம்” என கல்விக் கொள்ளையன் கரட்டாம்பட்டி சுப்ரமணியனுக்கு எதிராக துணிச்சலோடு பேசினர்.

இவர்களில் யாரும் தங்களது இந்து உணர்வை புண்படுத்தியதாக எங்களிடம் கூறவில்லை. வாங்கிய அனைவரும் சிரித்துக் கொண்டு தான் சென்றனர். அன்று திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருந்த ரங்கநாதனை கோவில் கருவறைக்குள்ளேயே நுழைந்து தீண்டியபோது பதறிய இதே இந்து முன்னணி கும்பல் ஆர்.எஸ்.எஸ் ன் புரவலரும், பி.ஜே.பி யின் ‘ஊழல் ஒழிப்பு’ வேட்பாளரான சுப்ரமணியனை அவரது கல்லூரி வாயிலிலேயே சென்று தீண்டும் போது, அதே பரபரப்போடு அலறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பாக பார்த்தால், ஓட்டுப் பொறுக்கிகளின் அடாவடித்தனம் அதிகார வர்க்கத்தின் துணையோடு கொட்டமடிப்பதை திருவரங்கத்தின் எந்தவொரு தெருவிற்குள் நுழைந்தாலும் காணமுடியும். ஆனால், மக்கள் ஜனநாயக பூர்வமாக தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையாக வாக்குரிமை இருப்பதாக ஆளும் வர்க்கங்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
மக்கள் ஜனநாயக பூர்வமாக தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையாக வாக்குரிமை இருப்பதாக ஆளும் வர்க்கங்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்கின்றனர்.

புழுத்து நாறும் போலி ஜனநாயக அரசியலக்கு வெளியேதான் உண்மையான ஜனநாயகத்தை தேடமுடியும். தேர்தல் ஜனநாயகத்தின் மேண்மைகள், மாண்புகள் குறித்து சண்டமாருதம் செய்வோருக்கு முகத்தில் அறைந்தாற் போல் உண்மைகள் உடைத்திருக்கிறது திருவரங்கம் இடைத்தேர்தல்.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
திருச்சி.
தொடர்புக்கு :- 9943176246

அமெரிக்காவில் முசுலீம்களை கொல்வது பயங்கரவாதமல்ல

28
north carolina shooting (1)
கொல்லப்பட்ட Shaddy Barakat, 23, his wife, Yusor Mohammad Abu-Salha, 21, and her sister, Razan Mohammad Abu-Salha, 19.

மெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில், சிரியாவை பூர்வகுடியாக கொண்ட மூன்று அமெரிக்க முசுலீம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 23 வயது தே ஷாடி பராகத், அவரது மனைவி யூசர் மொகமத் அபு சல்ஹா, யூசரின் சகோதரி ராசான் மொகமத் அபு சல்ஹா மூவரும், தலையை துளைத்த இரக்கமற்ற தோட்டாக்களால் மரித்தனர். கொலையாளியின் பெயர் கிரெய் ஸ்டீபன் ஹிக்ஸ், வயது 46, வெள்ளையின அமெரிக்கர்.

கொலை செய்த Craig Stephen Hicks
கொலை செய்த Craig Stephen Hicks

வடக்கு கரோலினா பல்கலைக் கழக நகரமான சாப்பல் ஹில்லில், 10.02.2014 செவ்வாய் மாலையன்று இந்த பயங்கரம் நடந்திருக்கிறது. கொலையாளியும், கொல்லப்பட்டவர்களும் அண்டை வீட்டுக்காரர்கள். ஆகவே “இது ஏற்கனவே இருந்த கார் நிறுத்த ‘பார்க்கிங்’ பிரச்சினை” என்று போலிசு முதல் தகவலாக தெரிவித்து விட்டது.

கார்ப்பரேட் ஊடகங்களும் இதை வழிமொழிந்து மற்றுமொரு குற்றச் செய்தியாக மூலையில் போட்டு கடந்து போக நினைத்தன. ஆனால் சமூக வலைத்தள நண்பர்கள் அதை கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கின்றனர். #MuslimLivesMatter #ChapelHillShooting எனும் ஹேஷ் டேக் மூலம் இந்த அநீதி குறித்த பல்வேறு செய்திகள் வெளியே வந்திருக்கின்றன.

அதன் பிறகே இந்த சம்பவத்தில் மத வெறுப்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரிப்பதாக போலீசு தெரிவித்திருக்கிறது. இறப்பதற்கு முன்னர் “யூதர்களைக் கொல்வோம், பாலஸ்தீனர்களைக் கொல்வோம் என்று சொல்வது எதையும் தீர்க்காது” என மத நல்லிணக்கம் வேண்டி தே பாரகத் டிவிட்டரில் கடைசியாக எழுதியிருந்தார். இந்தக் கருத்து முற்றிலும் நிறைவேறும் வரை அவரைப் போன்றவர்கள் உயிரை பறிகொடுக்கத்தான் வேண்டும் போலும்?

இஸ்லாம் மீதான வெறுப்பிற்கும் மற்ற மதங்களின் மீதான வெறுப்பிற்கும் பாரிய வேறுபாடு உண்டு. மற்ற மதங்களை பொதுவான நாத்திக பார்வையில் பார்க்கும் ‘முற்போக்கு’கள் கூட இசுலாம் என்றால் அந்த வெறுப்பில் அறிவியல் பார்வையைக் கழித்து விட்டு துவேசத்தை இட்டு நிரப்பிக் கொள்வர். காரணம் உலகமெங்கும் மேற்குலக ஊடகங்களால் அப்படித்தான் பொதுப்புத்தி இங்கே கட்டியமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே ஒரு முசுலீமை தாடி, லுங்கி, புர்கா, தீவிரமான மதவாதி என்று ஆரம்பித்து இயல்பிலேயே வெறியர்கள், கொலைகாரர்கள், காட்டுமிராண்டிகள் என்று அந்த கற்பிதம் ஆழமான வெறுப்பின் வேரை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

north carolina shooting 10பாரிசில் நடந்த சார்லி ஹெப்டோ மீதான படுகொலை, நைஜீரியாவில் போகோ ஹாரம் கடத்தல், பாரசீகத்தில் ஐ.எஸ்-சின் நரபலிகள் என்று ‘ஆழ்ந்த மனித நேயத்துடன்’ பேசிய இதே உலகு, வடக்கு கரோலினா பயங்கரத்தை பேசவில்லை.

ஒரு விசயத்தில் என்ன நடந்தது என்பதை இணையத்தில் செல்வாக்கு மிக்க ஆளும் வர்க்க ஊடக நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இணைப்புகளைக் கொண்டு விதண்டாவாதம் செய்பவர்களுக்கு அதிலும் முசுலீம்களை வெறுப்பவர்களுக்கு ‘ஆதாரம்’ கிடைக்காமலா போய்விடும்?

இது வெறுமனே ‘கார் பாரக்கிங்’ பிரச்சினை, இதற்கு மத முலாம் பூசக்கூடாது என்று அந்த ஆதாரக்காரர்கள் வாதிடலாம். கூடுதலாக கொலை செய்த ஹிக்ஸ் ஒரு நாத்திகர் என்பதை நாமே முதலில் சொல்லிவிடுவோம். மதங்களை விமரிசித்து அவர் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவுகளை போட்டு வந்தார் என்றும் அதை எளிமைப்படுத்தி வாதிடலாம். இங்கே நாத்திகர் என்பதற்கு என்ன பொருள்?

north carolina shooting (8)“இசுலாம்ஃபோபியா”வும் கிறித்தவ பெரும்பான்மையும் உள்ள நாட்டில் நாத்திகம் என்பது அதிகாரத்தில் உள்ள மதத்தை அம்பலப்படுத்துவதையும், சிறுபான்மையாக உள்ள மதத்தினரின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதையும் செய்ய வேண்டும். அனைவரையும் ஒரு சேர விமரிசிப்பது என்பது சரி என்றாலும் அதற்கும் இடம் காலம் பொருள் உண்டு.

ஹிக்ஸ் வெறுமனே கார் பார்க்கிங் பிரச்சினைக்காக கொலை செய்தார் என்றால் அது இன்னும் மோசம். கார் கண்டுபிடித்த ஆண்டுகளை விட அல்லாவை கண்டுபிடித்த காலம் அதிகமல்லவா, அதற்கு அதிகம் உணர்ச்சி உண்டு என்று வாதிடலாமா? காரின் உணர்ச்சியை விட கடவுளின் உணர்ச்சி பலம் வாய்ந்தது என்று ஒரு மதவாதி சொன்னால் நுகர்வு கலாச்சார மதவாதிகள் என்ன சொல்வார்கள்?

இதுதான் பிரச்சினை என்றால் அதிலும் இனவாதமும், முசுலீம் வெறுப்பும் இணைந்தே இருக்கின்றது. அமெரிக்காவில் இருக்கும் நாகரீக கனவான்கள் ஏழை நாடுகளின் மக்களை வெறுமனே மதம் சார்ந்து மட்டும் வெறுப்பதில்லை. நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகள் என்றே அடிப்படையில் கருதுகிறார்கள். இதே கார் பார்க்கிங் பிரச்சினையில் வேறு ஒரு அமெரிக்க வெள்ளையர் முசுலீம் வீட்டுக்காரர் இடத்தில் இருந்தால் இப்படி துப்பாக்கி வெடிக்காது. ஒரு வேளை வெடித்த துப்பாக்கிகளும் அமெரிக்காவின் முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் போட்டி போறாமை நிறைந்த தனிநபர்வாதம் காரணமாகவே சக அமெரிக்கர்களை கொன்றிருக்கின்றன.

அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசிக்கும் மூன்றாம் உலக நாட்டு மக்களில் படிப்பு, மாத சம்பள வேலை என்று கொஞ்சம் வசதியாக வாழும் பலர் உண்மையில் வெள்ளையின கனவான்களிடம் பெயர் வாங்கும் விருப்பமும் நடைமுறையும் கொண்டவர்கள்தான். இருப்பினும் இவர்களை சீமான்களின் உலகத்தில் ஏற்றுக் கொள்வதற்கு சராசரியான அமெரிக்கர்கள் தயக்குவார்கள். அப்துல் கலாமே ஆனாலும், ஷாருக்கானே வந்தாலும் அமெரிக்க அதிகாரிகள் முழுவதும் அவிழ்த்துப்பார்த்து சோதித்தே அனுப்புகிறார்கள். இதற்கு அரசியல், வர்க்க பார்வையைத் தாண்டி கலாச்சாரம், பழக்க வழக்கம் என்ற காரணங்களும் இருக்கின்றன.

ஆகவே புர்கா போட்ட சிரிய அமெரிக்கர்கள் வெள்ளையின அமெரிக்கர்களின் உள்ளத்தில் நுழைவது கடினம். நாத்திகரான ஹிக்ஸ் இவர்களை வெறுப்பது மேற்கண்ட கலாச்சார காரணங்களையும் உள்ளடக்கித்தான். ஆகவே “இவர்களுக்கு நாகரீக உலகில் வாழத்தெரியாது, பல்கலையில் கூட புர்கா போட்டு தமது தனித்துவத்தை நிலைநாட்டுவார்கள், ஒரு காரை கூட அண்டை வீட்டுக்காரருக்கு இடையூறு செய்யாமல் நிறுத்த தெரியாது” என்றெல்லாம் ஹிக்ஸ் மனதில் இயல்பாகவே தலையெடுத்திருக்கும்.

north carolina shooting (2)இது ஏதோ ஒரு சில வெள்ளையின வெறியர்களின் நிலை மட்டுமா? கனவான்களின் ஊடகங்களான சிஎன்என் மற்றும் ஃபாக்ஸ் நியூஸுக்கு, பாரிஸ் தாக்குதல் மட்டும் பயங்கரவாதம். வடக்கு கரோலினா தாக்குதலோ ஒரு பெட்டி கிரைம். இந்த மனநிலையின் கொதிப்புதான் ஹிக்ஸ் போன்றோரின் பயங்கரங்கம். ஒரு முசுலீம் மூன்று நாத்திகர்களை கொல்வதும், ஒரு கிறித்தவ நாத்திகர் மூன்று முசுலீம்களை கொல்வதும் இதே ஊடகங்களுக்கு வேறாகத் தெரிகின்றன.

கொன்றவன் முசுலீம் என்றால் அவனை பயங்கரவாதி என்று அழைக்கும் உதடுகள் அதே பயங்கரத்தை ஒரு வெள்ளை கிறித்தவன் செய்தால் அவனை வெறும் மனிதன் என்று உச்சரிக்கின்றன. இது உதடுகளின் பிரச்சினையா இல்லை வெறுப்பில் விளைந்த உள்ளத்தின் காழ்ப்புணர்வா?

போலீசும், ஊடகங்களும் இதை கார் பார்க்கிங் பிரச்சினையாக முன்வைத்தாலும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் இதை மறுத்திருக்கின்றனர். கொல்லப்பட்ட பெண்களின் தந்தையான டாக்டர் முகமது அபு சல்ஹா, “இது கார் பார்க்கிங் பிரச்சியினை அல்ல. இதற்கு முன்னரே அந்த மனிதன் எனது மகள்கள், மருமகனை துப்பாக்கியால் பலமுறை மிரட்டியிருக்கிறான். அவனோடு இணக்கமாக வாழமுடியாது என்றாலும் இந்த அளவுக்கு அவன் போவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை” என்கிறார். மகள்களில் ஒருவர் அவனை வெறுப்போடு அலையும் அண்டை வீட்டுக்காரன் என்று ஒரு வாரம் முன்னர் சொன்னதாகவும் கூறியிருக்கிறார். அந்த வெறுப்பு அவர்கள் முசுலீம் என்பதாலும், புர்கா தோற்றத்தினாலும் உருவாகிய ஒன்று என்றும் அதெ மகள் கூறியிருக்கிறார்.

கொல்லப்பட்ட தே பராகத்தின் மூத்த சகோதரி சுசானி பராகத் இந்த கொலையை வெறுப்பினால் செய்யப்பட்ட ஒன்றா என்று புலனாய்வு செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஹிக்சின் மனைவி கரேன், இந்த கொலை இஸ்லாம்ஃபோபியாவால் நடக்கவில்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் வெறுமனே கார் பார்க்கிங் பிரச்சினைக்காக ஒரு துப்பாக்கியை எடுத்து மூன்று தலைகளை துளைத்து கொல்லுமளவு வன்மம் ஒரு மனிதனிடம் உருவானது ஏன் என்று அவர் விளக்குவாரா?

north carolina shooting 11இல்லை கடந்த காலங்களில் அம்மையாரின் கணவர் துப்பாக்கி பெல்ட்டை காண்பித்து அந்த பெண்களை மிரட்டியதெல்லாம் சாதாரணமான ஒன்று என்று கருதுவாரா? கொல்லப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கும் இவர், கொலையாளி குறித்தும் அதே அனுதாபத்தை கொண்டிருப்பது சரியா?

கரேனும், அரசு வழக்கறிஞரும் ஹிக்சின் மன நல நோய் ஒரு காரணம் என்று கூறியிருக்கின்றனர். எனில் அதே மனநலக் குன்றல் சொந்த குடும்பத்தினரையோ இல்லை வேறு எவரையோ குறி வைக்காமல் குறிப்பிட்ட மதத்தை சார்ந்த அண்டை வீட்டுக்காரர்களை கொன்றொழித்தது ஏன்?

பராகத்தும் அவரது மனைவியும் வடக்கு கரோலினா பல்கலையில் பல் மருத்துவத்தில் பயின்று வரும் மாணவர்கள். சென்ற டிசம்பரில்தான் மணமுடித்திருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்குள் அவர்களது மணவாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. தே பராகத் அங்கே சிரியா மக்களுக்கும், வீடற்ற அமெரிக்கர்களுக்கும் உதவி செய்யும் தன்னார்வல வேலைகளை செய்து வந்தார்.

வீடற்றவர்களின் புன்னகை என்ற அந்த ஹேஷ் டேக்கை போட்டு எழுதியவரின் புன்னகையை மேற்கத்திய சமூகம் உருவாக்கிய பயங்கரம் அழித்துவிட்டது.

“நாங்களும் சார்லிதான்” என்று இசுரேல் உள்ளிட்ட மேற்கத்திய ‘காந்திகள்’ ஊர்வலம் நடத்தியது போல வடக்கு கரோலினாவுக்காக “நாங்களும் முசுலீம்தான், நாங்களும் புர்கா அணிவோம்” என்று தலைவர்களை விடுங்கள் யாரேனும் வார்டு கவுன்சிலர்களாவது அணி திரள்வார்களா?

சார்லி ஹெப்டோ குறித்த வினவின் கட்டுரையை மறுக்கும் நண்பர்கள், அந்த பிரெஞ்சு பத்திரிகையை ஒரு முற்போக்கு பத்திரிகை என்று மல்லுக்கட்டி வாதாடினார்கள். அதே போல இங்கும் ஹியூஸ் ஒரு நாத்திகவாதி, இது வெறும் கார் பார்க்கிங் பிரச்சினை என்று வாதிடுவார்களா?

கொலை செய்த ஹிக்சின் மனைவி கரேன்.
கொலை செய்த ஹிக்சின் மனைவி கரேன்.

மேற்கத்திய நாட்டில் வாழும் முற்போக்கு என்பது அங்குள்ள சிறுபான்மை மக்களின் நலன்களோடு இணைந்தது. அனைத்தையும் ஒரே தட்டில் பார்க்கும் முற்போக்கு உண்மையில் பிற்போக்கான ஒன்றே. ஏனெனில் அங்கே வாழும் வெள்ளை நிறவெறிக்கு அரசியல், பொருளாதார, வரலாற்று அடிப்படை உண்டு. அதாவது இந்த இனவெறிக்கு அதிகாரம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

ஆனால் அதே பாரிசில் அல்லாவின் ராஜ்ஜியத்திற்காக ஒரு முல்லா பேசினால் அது ஒரு லூசின் உளறலாக மட்டுமே பார்க்க வேண்டும். அந்தப் பிதற்றலுக்கு சமூக நடப்பில் மதிப்பில்லை. மேலாக மேற்கத்திய நாடுகள் அனைத்தும் இதெ முல்லாக்களை ஆதரித்து ஷேக்குகளை ஆள வைத்து வளைகுடா நாடுகளில் ஜனநாயகத்தை கொன்றொழித்தவர்கள்.

ஆகவே மேற்கத்திய நாடுகளில் நடக்கும் இசுலாமிய பயங்கரவாதமும், வல்லரசு நாடுகளின் பயங்கரவாதமும் அடிப்படையில் ஒரே தன்மை கொண்டவை அல்ல. முன்னது பின்னது உருவாக்கிய விளைவு மட்டுமே. இந்தியாவில் இந்துமதவெறியர்களை தட்டிக் கேட்க முடியாது எனும் நிலைமை அதிகரிப்பதற்கேற்ப இங்கே இசுலாமிய இளைஞர்கள் தீவிரவாதத்தின் பக்கம் போவதை அதிகப்படுத்தும். ஆதலால் நோயை தீர்க்காமல் வலியை மட்டும் நிறுத்த முடியாது.

வடக்கு கரோலினாவில் இதுவரை முசுலீம் மக்களை எதிர்த்து எந்த மத துவேசமும் இல்லை என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர் கூறுகிறார். இது காமராசர் காலத்தில் சாதிக் கலவரம் இல்லை எனும் கூற்றுக்கு ஒப்பானது. காமராசர் காலத்தில் ஆதிக்க சாதியினர் வைத்த சட்டங்களை மீறாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்தே ஆகவேண்டும். பிறகு 90களில் இந்த சார்பு நிலை கொஞ்சம் மாறியதும் அடிமைத்தனத்தை எதிர்த்து அதே மக்கள் போராடுகிறார்கள். விளைவு ‘கலவரங்கள்’. ஆகவே அமைதி என்பதன் பொருள் ஆதிக்கமோ இல்லை வெறுப்புணர்வோ இல்லை என்றாகிவிடாது. அதை எதிர்த்துக் கேட்கும் குரல் இல்லை என்பதால் இந்த அமைதி ஆள்வோர் போட்ட அடக்குமுறையின் அமைதி.

டிசம்பர் 2014-ல் திருமணம். பிப்ரவரி 2015-ல் மரணம்
டிசம்பர் 2014-ல் திருமணம். பிப்ரவரி 2015-ல் மரணம்

அதே அமைதிதான் வடக்கு கரோலினா பயங்கரவாதத்தை வெறும் குற்ற நடவடிக்கையாக கடந்து போக வைக்கிறது. எல்லா வெள்ளையர்களும் இனவெறியர்கள் அல்ல. ஆனால் எல்லா வெள்ளையர்களும் ஒரு இனவெறி, மதவெறி நடவடிக்கையை கண்டிக்காமல் அமைதி காத்தால் அதை அமைதி முலாம் பூசிய பயங்கரவாதம் என்று அழைக்கலாமா?

எல்லா முசுலீம்களும் பயங்கரவாதிகளல்ல, ஆனால் எல்லா பயங்கரவாதிளும் முசுலீம்கள்தான் என்று பழமொழி உருவாக்கி விளம்பரம் செய்த நெஞ்சங்கள் மேற்கண்ட் புதுமொழியையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

வடக்கு கரோலினா படுகொலையை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விசாரிக்காமல் நீதி கூறமுடியாது என்று இறுதியாக ஒரு சப்பைக் கட்டு கட்டப்படலாம். நல்லது. எனில் சிஎன்என், ஃபாக்ஸ் நியூஸ் தலைமை தாங்கும் மேலாதிக்க கனவான்கள் ஆரம்பத்திலேயே இதை கார் பார்க்கிங் பிரச்சினையாக அறுதியிட்டு கூற காரணம் என்ன?

ஒருவேளை இருமதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமான இந்த பயங்கரத்தை வெறுமனே பெட்டி கிரைமாக மாற்றிவிட்டார்களோ?

அப்படியும் சில கருத்துக் கந்தசாமிகளும், கருத்து காயத்ரிக்களும் வாதிடலாம்.

இதற்கு ஏன் இவ்வளவு சிரமப் படவேண்டும். எல்லா பயங்கரவாதிகளும் முசுலீம்கள் என்பதால் எல்லா முசுலீம்களையும் அழித்து விட்டால் பயங்கரவாதமே இருக்காதே?

பாசிசத்தின் மொழி அழித்தொழிப்புதான், அமைதியல்ல!

தே பராகத்தின் கடைசி டிவிட்டுகளில் ஒன்று
தே பராகத்தின் கடைசி டிவிட்டுகளில் ஒன்று

– வேல்ராசன்.

செய்தி, படங்கள் நன்றி: rt.com

இலங்கைத் தேர்தல்: இனவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

9

லங்கை அதிபர் தேர்தலில், சிங்கள இனவெறிப் போர்க் குற்றவாளிகளான இராஜபக்சேக்களின் வீழ்ச்சி மோடி, சோனியா போன்ற பாசிசக் கூட்டாளிகளுக்கும், இந்து ராம், சோ, சு.சாமி முதலிய கைக்கூலிகளுக்கும் அதிர்ச்சிகரமாகவும்; எஞ்சியுள்ள புலிகள், புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களுக்கும் இங்குள்ள தமிழினவாதிகளுக்கும் எதிர்பாராததாகவும் அமைந்தது. இலங்கை அரசியலில் இவ்வாறானதொரு மாற்றம் நிகழும் என்பது அவர்கள் அனைவரும் கனவிலும் எண்ணிப்பாராதது.

மைத்ரிபாலா சிறீசேனா
இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா

பிரபாகரனின் தற்கொலைப் போர்ப் பாதையைச் சாதகமாகக் கொண்ட சிங்கள இனவெறி பாசிச இராணுவம் விடுதலைப்புலிகளோடு இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை இனப்படுகொலை புரிந்து ஈழப்போரில் அடைந்த வெற்றியின் கவர்ச்சி மங்கிப்போவதற்கு முன்பு, பலனை மேலும் அறுவடை செய்ய்துகொள்வது மற்றும் சோதிடர்களின் ஆரூடங்களையும் வைத்து அரசியல் கணக்குப்போட்டார், இராஜபக்சே.

அவரது பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் இரண்டாண்டுகள் இருந்தபோதும், அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட முடியாது என்றாலும், சட்டத்தைத் திருத்தி தேர்தலை எதிர்கொண்டார். சிங்கள இனவெறி புத்தச் சாமியார்களின் உருமயக் கட்சி, ஜே.வி.பி. உள்ளிட்ட போலி கம்யூனிஸ்ட் குழுக்கள், தமிழின – இசுலாமியத் துரோகிகளின் குழுக்களுக்கு அதிகார, பதவி எச்சிலையை வீசி, வளைத்துப்போட்டு சிறுபான்மையாக இருந்த அவரது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியைப் பெரும்பான்மையாக உருவாக்கிக் கொண்ட இந்த சிங்கள இனவெறி பாசிச இராஜபக்சே கும்பல், இலங்கையில் அசைக்க முடியாத சக்தியாகத் தன்னைக் கருதிக் கொண்டது.

ஆனால், இராஜபக்சே கும்பல் மூன்றாவது முறை அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டிருந்தால் ஈழத்தமிழர்கள்-இசுலாமியர் ஆகிய சிறுபான்மையினருக்கும் சிங்கள சமூகத்துக்கும் பேரழிவை விளைவித்திருக்கும். அக்கும்பல்  நடத்தி வந்த ஜனநாயக விரோத, சட்டவிரோத, மக்கள் விரோத வெள்ளைவேன் ஆள்கடத்தல் – பாசிசக் கொலைவெறியும் இலஞ்ச-ஊழலும் அதிகார முறைகேடுகளும் நிரம்பி வழியும் இராஜபக்சேக்களின் குடும்ப அதிகாரத்தைக் கண்டு, இனங்களைக் கடந்து இலங்கை மக்களில் பெரும்பான்மையினர் அதற்கெதிராகக் குமுறிக் கொண்டிருந்தனர். இதனால்தான் முற்றிலும் எதிர்பாராத வகையில், மக்கள் ஆதரவு பெற்ற  எதிர்த்தரப்பை அக்கும்பல் திடீரென்று தேர்தல் அரசியல் களத்தில் கண்டது.

இராஜபக்சே கும்பலின் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபாலா சிறீசேனா வெளியேறினார். அவரோடு  வெளியேறிய போட்டி சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரும் முதன்மை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டுச் சேர்ந்து புதிய ஜனநாயக முன்னணியை அமைத்தனர். அதன் பொது வேட்பாளரான மைத்திரிபாலா சிறீசேனா, ஜாதிகா ஹெல உருமயா, ஜே.வி.பி. போன்ற சிங்கள இனவெறி அமைப்புகள், தமிழ் மற்றும் இசுலாமிய மக்கள் ஆதரவைப் பெற்று அதிபராகியுள்ளார். கொடுங்கோலன், போர்குற்றவாளி இராஜபக்சே கும்பல் வீழ்ந்தது. இலங்கையில் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டப்போவதாக வாக்குறுதியளித்த கட்சிகளின் கூட்டணி அரசு ஏற்பட்டுவிட்டது.

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே

இதனால், இலங்கையின், ஈழத் தமிழர்களின் இனச் சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டுவிடும் என்று மிகை நம்பிக்கை கொள்ள முடியாது. என்றாலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றங்கள் சிங்களவருக்கும் இசுலாமியருக்கும் சில உண்மைகளைச் சொல்லுகின்றன. ஈழத்தமிழர்கள் மற்றும் இசுலாமியர்களின் வாழ்வுரிமைகளை அங்கீகரிக்கும்படி சிங்கள சமூகம் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர்கள் மற்றும் இசுலாமியர்களின் ஆதரவில்லாமல், சிங்கள இனவெறி பாசிச சக்திகளின் கோரப்பிடியிலிருந்து விடுபடவும் தமது ஜனநாயக உரிமைகளைப் பெறவும் முடியாது. அதேசமயம், இலங்கையில் ஒரு ஜனநாயக ஆட்சியில்லாமல், சிங்கள மக்கள் மத்தியில் கணிசமான ஆதரவைப் பெறாமல் ஈழத் தமிழர்களும் இசுலாமியர்களும் தமது வாழ்வுரிமைகளைப் பெறவும் முடியாது.

ஈழத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான முரண்பாடு எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாதது; அவர்கள் எந்தவொரு புள்ளியிலும் ஒரு பொதுநோக்கில் ஒரே அணிவரிசையில் நிற்க முடியாது; சிங்கள மக்கள் அனைவரும் தங்களுக்குள் முரண்பாடுகளின்றி, வெவ்வேறு பிரிவுகளின்றி, எவ்வித மாறுதலுமின்றி முக்காலத்திலும் ஒரே வார்ப்பாக ஈழத் தமிழர்களுக்கு ஒரு பகை இனம்; அவர்களிடையே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நட்புப் பாராட்டக்கூடிய சக்திகள் எவரும் கிடையாது – இவ்வாறான பார்வையையே மார்க்சியம் கற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தியாகு, மணியரசன் போன்ற தமிழினவாதிகளும் கொண்டிருக்கிறார்கள்.

எனவேதான், புலிகளின் போர் வெற்றி மட்டுமே ஈழச் சிக்கலுக்கான ஒரே தீர்வு என்று நம்பச் சொன்னார்கள். புலிகளின் அழிவுகளுக்குப் பிறகு ஏகாதிபத்தியமும் மற்றும் சர்வதேச சமூகமும்தான் ஈழத் தமிழர்களுக்கும் புலி ஆதரவாளர்களுக்கும் கதியென்று வழி சொன்னார்கள். இராஜபக்சேக்களின் அரசியல் வீழ்ச்சியும் ஈழத்தமிழர்களின் சில கோரிக்கைகளையேனும் ஏற்கும் சிறீசேனா-ரணில் அரசு அமைந்திருப்பதும், ஈழச் சிக்கலுக்கான தீர்வுகளை மாறாநிலையியல் பார்வையில் அணுகக்கூடாது என்பதை அவர்களுக்கு இடித்துரைக்கிறது. இந்த உண்மையை  புதிய ஜனநாயகம் சொன்னபோதெல்லாம், தமிழினவாதிகள் எல்லோரும் நாம் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று அவதூறு செய்ய்தார்கள்.

இராஜபக்சே
கனவு நொறுங்கிப் போன அதிர்ச்சியில் சிங்கள இனவெறி பாசிச போர்க்குற்றவாளி இராஜபக்சே.

2013 டிசம்பர் புதிய ஜனநாயகம் இதழில் பின்வருமாறு எழுதினோம் : தமிழினவாதிகள் தங்கள் இலட்சியமாகச் சொல்லிக்கொள்ளும் தமிழீழத் தனியரசு மீது அவர்களுக்கு உண்மையில் நம்பிக்கையோ, அக்கறையோ துளியும் கிடையாது. அதனால்தான் அதை அடையும் பாதையைப் பற்றியும், அதை அடைந்தாலும் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதைப் பற்றியும் பேச மறுக்கிறார்கள்.

ஒன்று, சிங்களப் பேரினத்துக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தின் மூலம் பாசிச சிங்கள இராணுவத்தையும் அரசையும் வீழ்த்தி, தமிழீழத் தனியரசைப் பிரகடனம் செய்ய வேண்டும். பிரகடனம் செய்தால் மட்டும் போதாது; சர்வதேச சமூகம் இல்லையானாலும், பிற ஒரு சில நாடுகளாவது அதை அங்கீகரிக்க வேண்டும். இதற்காகத்தான் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முப்பது ஆண்டுகளாக நடந்தது. அதன் முடிவும் அனுபவமும் என்னவென்று அனைவரும் அறிவோம். மீண்டும் ஒரு படை கட்டி தமிழீழத் தனியரசுக்கான போர் கனவிலும் நடைபெறாது என்று சொல்லத் தேவையில்லை. (புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் புளுகித் திரிவது போல,  தப்பித்துத் தலைமறைவாக உள்ள பிரபாகரனும் பிற புலிகளும் ஒருவேளை திரும்பி வந்து மீண்டும்  ஈழ விடுதலைப் போர் தொடுக்கலாமோ என்னவோ).

இரண்டு, புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் திராவிடக் கட்சிகளும் முயற்சிக்கும் வகையில் இவர்கள் நடத்தும் போராட்டங்கள், விண்ணப்பங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து இந்திய அரசோ அல்லது இவர்களில் ஒரு பிரிவினர் நம்புவது போன்று மோடி பிரதமராகியோ இந்திய ஆட்சியாளர்களிடம் ஈழ ஆதரவு நிலை உருவாகி அல்லது அமெரிக்கத் தலைமையிலுள்ள சர்வதேச சமூகம் ஈழத் தமிழர்களின்துயரம் கண்டு நெக்குருகி பொதுவாக்கெடுப்புக்கான, அதாவது ஈழத் தமிழருக்குத் தன்னுரிமைக்கான வாய்ப்புக் கிட்டலாம்; அதாவது,  இவர்கள் நடத்தும் வேட்டையில் கொம்புடன் கூடிய முயலைப் பிடிக்கலாம் என்கிறார்கள்.

இலங்கைத் தேர்தல்: இனவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!மூன்று, சிங்களப் பேரினவாத, பௌத்த மதவெறி பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்து இலங்கையில் ஒரு ஜனநாயக அரசு அமைந்து, அது ஈழத் தமிழர்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை ஏற்க வேண்டும். இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளும் வர்க்க முரண்பாடுகளும் மிகவேகமாக முற்றி வரும் சூழலில் புலிப் பூச்சாண்டியைக் காட்டியே சிங்களப் பேரினவாத, பௌத்த மதவெறியில் சிங்கள மக்களை நீண்ட காலத்துக்கு பாசிச இராஜபக்சே கும்பல் தனது அதிகார ஆதிக்கத்தில் இருத்தி வைத்திருக்க முடியாது என்பதையே அங்குள்ள நிலைமைகள் தெளிவாகக் காட்டுகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் வீரர்களையும் துருப்பிடித்த ஆயுதங்களையும் கொண்டிருந்த சிங்கள இராணுவம் இன்று நான்கு இலட்சம்  வீரர்களையும் அதிநவீன ஆயுதங்களையும் கொண்ட முப்படைகளையும் பெற்று, உலகின் பெரிய இராணுவங்களில் ஒன்றாகி விட்டது. சிங்கள இராணுவம் மட்டுமல்ல, இலங்கை அரசின் எல்லா உறுப்புகளிலும் பாசிச இராஜபக்சே குடும்பக் கும்பலின் ஆதிக்கம் நிறைந்து விட்டது. அதற்கு எதிராகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அம்மக்கள் எவ்வளவு பெரிய மக்கள் சக்தியைத் திரட்டினாலும் ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் இசுலாமிய மக்கள் ஆதரவின்றி பாசிச இராஜபக்சே கும்பலின் அதிகார ஆதிக்கத்தை வீழ்த்த முடியாது. அதேபோல, சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவின்றி ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இசுலாமியர்களும் என்னதான் போராடினாலும்  தமது உரிமைகளைப் பெறவும் முடியாது. இது யாருடைய விருப்பங்களுக்கும்  அப்பாற்பட்ட புறநிலை எதார்த்தம். நாம் கூறுவது, ஆளும் வர்க்கங்கள் சொல்லுவதைப் போல சுரண்டலுக்கான, அம்மக்களை ஒடுக்கி வைப்பதற்கான சமனற்ற கட்டாய ஒற்றுமையல்ல. சம உரிமை அடிப்படையிலான, ஜனநாயக முறையிலான ஒற்றுமை. பாசிச இராஜபக்சே குடும்பக் கும்பல் ஆதிக்கத்தைத் தூக்கியெறிவதற்கான போராட்டத்தில் பங்குபற்றியதற்கு ஈடாகவும் முன்நிபந்தனையாகவும் ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இசுலாமியர்களும் தமது உரிமைகளாகக் கோர முடியும். இதைத்தான் ஈழத் தமிழர்கள் உட்பட இலங்கையின் அனைத்து முற்போக்கு, ஜனநாயக சக்திகள் (அவை சிறியவையானாலும்) தமது பாதையாகத் தெரிந்தெடுத்துக் கொண்டு, இயக்கங்களைக் கட்டமைத்து வருகிறார்கள். இவ்வாறான பாதையைத்தான்  ம.க.இ.க.-வினர் ஆதரிக்கின்றனர்.

ஆனால், இதெல்லாம் நடைமுறை சாத்தியமற்றவை, சிங்களவருக்குச் சாதகமானவை, தமிழீழத் தனியரசை நிராகரிப்பதற்குச் சொல்லப்படும் சாக்குப்போக்குகள் என்று தமிழினவாதிகள் வாதிடுகின்றனர். இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தனைக்கும் பிறகு, சிங்கள அரசு ஈழத் தமிழர்களின்  உரிமைகளைச் சிறிதும் ஏற்க மறுக்கும் நிலையில், எஞ்சிய பல்லாயிரம் ஈழத் தமிழர்களும் முள்வேலி முகாமுக்குள், இராணுவக் கொடுங்கோன்மையின் கீழ் வதைபடும் நிலையில் தமிழீழத் தனியரசுக்கும் குறைவான எதையும் பேசுவது துரோகம் என்று குதிக்கிறார்கள்.

தமிழினவாதிகள் மேலே தொகுத்துச் சொல்லும் இதே நிலைமைகளின் காரணமாகத்தான், பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து வீழ்த்தாமல் ஈழச் சிக்கலில் ஒரு அடி கூட முன்வைக்க முடியாது; அதைத் தூக்கி எறிந்து, சிங்கள-ஈழத் தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பது; அதை நிறைவேற்றுவதன் மூலம் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுவது என்ற பாதையைச் சரியானதென்று முன்வைக்கப்படுவதை ம.க.இ.க. வினர்  ஏற்கின்றனர்.

இவ்வாறு தெளிவாகச் சொன்ன பிறகும் ம.க.இ.க. வினர்  ஈழத்துக்கு எதிரானவர்கள் என்று தமது அவதூறுகளைத் தமிழினவாதிகள் தொடர்ந்தனர். ஆனால், இப்போதைய இலங்கையின் அரசியல் மாற்றங்களைச் சாக்குவைத்து, தேசிய சுயநிர்ணய உரிமையைக்கூட கைவிட்டு அதிகாரப் பகிர்வு, 13-வது சட்டத்திருத்தம் ஆகியவற்றுக்குள் சுருங்கிக் கொள்கிறார்கள். இனியாவது பகுத்தறிவுக்குப் பொருந்தாத தீர்வுகளையும் குறுகிய இனவாதங்களையும் கைவிட்டு, எதார்த்த அரசியல் நிலைமைகளையும் எதிரிகளையும் நட்பு சக்திகளையும் சரியாக மதிப்பிட்டு, ஈழத்மிழினத்துக்கான தன்னுரிமையுடன் கூடிய புதிய ஜனநாயகத்துக்கான இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும்.

– ஆர்.கே.
________________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
________________________________________

Appraisal in IT sector – a critique

2

Dear IT friends,

"performance review is so one-sided, giving all power to the boss"
“performance review is so one-sided, giving all power to the boss”

Appraisal process for this year is underway in many IT companies. Every year we look forward to this phase with expectations, dreams, excitement and a lot of apprehension. Have we ever enjoyed the outcome of this appraisal cycle? Obviously, No.

That’s because performance review is so one-sided, giving all power to the boss. The boss thinks himself or herself as evaluator, and doesn’t engage with subordinates to measure team performance. It isn’t, “How did we work together as a team?” It’s, “How are you performing for me?” Our joint team performance is not considered, rather individual employee’s performance is evaluated.

The main reason is rating (or) band or whatever is given, is always based on expectations of the company in terms of profit for coming years and how employees can be made to work towards it.

So these evaluations are not actually for analyzing past performance of a team. Reviews and ratings are also used to avoid lawsuits when a particular employee has to be fired. This was made evident in the recent TCS layoff saga.

DilbertPerformanceReview
Performance reviews hardly impact pay raises, bonuses, or promotions, because management always places wage negotiation in the context of overall company performance

Performance reviews hardly impact pay raises, bonuses, or promotions, because management always places wage negotiation in the context of overall company performance. So you could be a great employee blowing the doors off your goals, but if the company overall is not doing well, your bonus/raise/promotion may suffer or get delayed. That is, we perform together as teams, but are rated as individuals, which is meaningless.

Peformance Review
Performance review is simply a place where boss comes up with a story to justify the pre-decided pay.

People and politics of individualism are not the only forces which negate the positive potential of performance appraisal system. Pay is primarily determined by market forces, and individual hikes are decided by the boss, and boss’s boss, largely influenced by corporate budget. Performance review is simply a place where boss comes up with a story to justify the pre-decided pay. If raise is lower than what subordinate expects, boss will say, “We can work to get it higher in future, and here are things you need to do to get to that level.”

Then they use this as a ruse to brand employees as non-performers and fire them. We’re sick and tired of hearing about subordinates who fail and get fired, while bosses, whose job was to ensure subordinates’ effectiveness, get promoted and receive raises.

Performance Review
Distribution of higher and lower ratings is set according to a pre-set formula.

Distribution of higher and lower ratings is set according to a pre-set formula. In a performance appraisal system that measures on a five-point scale, not everyone can receive a five. This is a restraint to manager, a “can’t do.” At the same time, number of employees assigned to lower rating should also fit with the formula. This is a constraint, a “must do.” Rating numbers must be adjusted to meet various restraints and constraints: language and tone of appraisals must in turn be adjusted to be consistent with numbers. From this follows an inescapable conclusion: honest, fair, valid, and objective assessment of all employees in the current appraisal system is literally impossible.

If hike serves as a compensation for cost-of-living increase, a hedge against inflation, this can be done on a flat-rate basis without the need for a performance appraisal system. If pay increases are warranted for other reasons, it is unlikely that they require a performance appraisal system to administer. Bonuses or other special increases can and should be tied to very specific, very visible, very measurable results, and this should be applicable to the whole team, as only teams achieve results.

Performance Review
“If we didn’t have a performance appraisal system, how would people find out what is expected of them?”

The structure, restraints, and constraints of the system do not permit such methods. It is clear that, appraisal system is unscientific and illogical. Performance appraisal systems could be eliminated with no harm done and with great economic and emotional benefit to the employees and organization.

Some may ask, “If we didn’t have a performance appraisal system, how would people find out what is expected of them?”

Job requirements related discussions between bosses and subordinates do not require a formal, full-blown, annual performance appraisal system. Real coaching and counseling sessions that shape and improve employee performance occur informally, daily, outside performance appraisal systems.

  • Scrap unscientific, illogical performance appraisal system
  • Ban illegal NASCOM blacklist.
  • To achieve these goals, let us unite as a Union under NDLF IT Employees Wing.

For contact, please ring  90031 98576 or email combatlayoff@gmail.com

Visit: https://www.facebook.com/NDLFITEmployeesWing

Karpaga Vinayagam,
New Democratic Labour Front – IT Employees Wing

Performance Review
Performance appraisal systems could be eliminated with no harm done and with great economic and emotional benefit to the employees and organization.

Cartoons taken from the web

அதிகாரிகள் ஊழலை எதிர்த்து பென்னாகரம் வி.வி.மு சமர்

3

ஊழல், லஞ்சம் பெறும் அதிகாரிகள் குறித்த புகார்களை எங்களிடத்தில் தெரிவிக்கவும் – வி.வி.மு அறிவிப்பு

பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்
பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்

ழல் செய்வது, லஞ்சம் பெறுவது என்பது சர்வசாதாரணமாகி விட்டது. கிராம அலுவலர் தொடங்கி, மாவட்ட ஆட்சியர்கள் வரையில் தகுதிக்கு தகுந்தவாறு லஞ்சமும், ஊழல் செய்வதும் நடந்தேறுகிறது. அரசு துறைகள் அனைத்திலும் இதே நிலைதான் நீடித்து நிற்கிறது.

அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகளுக்கும், சான்றிதழ் பெறுவதற்கும் இருக்கின்ற தாலுகா அலுவலகம்,  வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ) அலுவலகத்தில் நடைபெறும் லஞ்ச, ஊழல்களை பற்றி சொல்லவே தேவையில்லை.  வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதற்கு காசில்லாமல் மனுக்கள் நகருவதில்லை. ஆதரவற்றவர்களும், முதியோரும் உதவித் தொகையை நிறுத்தி விட்டதாக தினம் தோறும் அலுவலகம் முன்பு காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உதவித் தொகைக்கு கூட காசு இல்லாமல் செய்வதில்லை. லஞ்சமே அறிவிக்கப்படாத சட்டமாகி விட்டது.

மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஆதங்கத்தோடு இருக்கின்றனர். அரசு அலுவலகங்கள் மக்களுக்கு எதிரானதாக மாறி இருக்கின்றன. எந்த புது சட்டம் வந்தாலும் இதனை தடுக்க முடியவில்லை. லஞ்சம் பெறுவது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பது போல காட்டிக் கொள்கின்றனரே தவிர லஞ்சம் வாங்குபவர்களுக்கு கூட்டாளியாகவும் முன்கூட்டியே தகவல் கொடுத்து விட்டு சோதனை செய்யும் கீழ்த்தரமான வேலை செய்பவர்களாகவும் உள்ளனர்.

பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்
மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஆதங்கத்தோடு இருக்கின்றனர். அரசு அலுவலகங்கள் மக்களுக்கு எதிரானதாக மாறி இருக்கின்றன.

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கட்டிடம் கட்டி விட்டதாகவும், சாலைகள் போடப்பட்டதாகவும், தெருவிளக்கு சரி செய்யப்பட்டதாகவும், குடிநீர் வழங்கப்பட்டதாகவும் பொய்யைக் கூறி பெரும் ஊழலில் ஈடுபடுகின்றனர். அதிகாரிகளும், கரை வேட்டிகளும் கூட்டாக நடத்தும் ஊழல்கள் திறமையாக மறைக்கப்படுகின்றன.

“இந்தப் பிரச்சனைக்கு போலீசு, நீதிமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம், நாடாளுமன்றம் அடங்கிய இந்தக் கட்டமைப்புக்குள் என்ன தீர்வு இருக்கிறது? ஊழல், லஞ்சம் பெறும் அதிகாரிகளை நாம்தான் எதிர்கொண்டு சரி செய்ய வேண்டும். அவர்களைப் பற்றிய புகார்களை எங்களிடத்தில் தெரிவியுங்கள். லஞ்சம், ஊழலை முறியடிக்க களத்தில் இறங்கி போராடுவோம்.”

என்று பென்னாகரத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

10-2-2015 செவ்வாய்கிழமை அன்று மூன்று தோழர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெரிய தட்டி ஒன்றை பிடித்துக் கொண்டு துண்டு பிரசுரங்கள் கொடுத்து பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தனர்.

பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெரிய தட்டி ஒன்றை பிடித்துக் கொண்டு துண்டு பிரசுரங்கள் கொடுத்து பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தனர்.

சிறிது நேரத்தில் போலீசு படை பரிவாரங்களோடு வந்தது. போலீசை பார்த்ததும் மக்கள் திரளாக சூழ்ந்து கொண்டனர். உடனே தட்டியை அகற்ற வேண்டும் என்றும் அனுமதி இல்லை என்றும் சட்டம் பேசியது போலீசு.

உடனே சுற்றியிருந்த மக்கள் மத்தியில் நின்றிருந்து தோழர்கள், “என்ன தவறாக தட்டி வைத்துள்ளனர். லஞ்சம் வாங்குவது தவறு என்றுதானே சொல்றாங்க. இதற்கு எதற்கு அனுமதி” என்று வாக்குவாதம் செய்தனர். பொதுமக்களில் ஒருவர், “நானே,இரண்டு நாளா வந்து போறேங்க” என்று ஆதங்கப்பட்டார்.

போலீசோ, “லஞ்சம், ஊழல் இல்லை என்று சொல்லவில்லை. அதை எதிர்ப்பதை அனுமதி பெற்று செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம்” என்றனர்.

பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்
“லஞ்சம், ஊழல் இல்லை என்று சொல்லவில்லை. அதை எதிர்ப்பதை அனுமதி பெற்று செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம்”

“ஒரு தனிநபர் தட்டியை வைத்துக் கொள்வது சட்டத்தை மீறிய செயலா? பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 52 புரோக்கர்கள் உள்ளனர். லஞ்சம் பெறுவதற்கே அவர்களை அதிகாரிகள் வைத்துள்ளனர்.” என்று பேசிய உடனே போலீசு கீழே இறங்கி மன்றாட தொடங்கியது. “கலைந்து செல்லுங்கள்” என்று பணிவாக பேசினார்கள்.

“மோடி ஊழல் ஒழிப்பு என்று சொன்னால் சரி, நாங்கள் சொன்னால் கலைந்து போக வேண்டுமா. இல்லை, எங்களை கைது செய்யுங்கள்” என்று தோழர்கள் பேச,

“இல்லை, கைது செய்ய முடியாதுப்பா” என்று குழைந்தது போலீசு.

“லஞ்சம் வாங்குவது குறித்து புகார் கொடுக்கிறோம். நடவடிக்கை எடுங்க” என்று வாதத்தில் இறங்கினோம்.

கைதும் செய்ய முடியாமல், மிரட்டவும் முடியாமல் திகைத்து நின்றது போலீசு.

“லஞ்சம் வாங்குவது தவறு என்று போராடினால் உளவுத் துறை படம் பிடிக்கிறது. அலுவலகத்துக்குள் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து போய் படம் பிடியுங்கள்” என்று தோழர்கள் பேச படம் பிடிப்பதை நிறுத்திக் கொண்டது உளவுத் துறை போலீசு.

பென்னாகரத்தில் வி.வி.மு பிரச்சாரம்
“லஞ்சம் வாங்குவது குறித்து புகார் கொடுக்கிறோம். நடவடிக்கை எடுங்க”

பல பெண்கள் உட்பட மக்கள் பிரசுரத்தை வாங்கிக் கொண்டு, “எங்கள் பிரச்சனையை தீர்க்க இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாமா” என்று கேட்டுச் சென்றனர். “நீங்கள் செய்வது சரியானது, தொடர்ந்து செய்யுங்கள்” என்றனர்.

ஒன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அங்கிருந்து சென்று பேருந்து நிலையம், மக்கள் கூடம் இடங்களில் பிரச்சாரம் செய்தோம். ஊழல், லஞ்சத்திற்கு எதிராக மக்கள் மனக் குமுறலோடு இருப்பதை காண முடிந்தது.

லஞ்சத்தையும், ஊழலையும் போலீசு, அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத் துறை, நீதிமன்றம், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் அடங்கிய இந்தக் கட்டமைப்புக்குள் ஒழிக்க முடியாது. இதனை அடியோடு ஒழித்துக் கட்ட அரசையும், அதிகாரிகளையும் நாமே தட்டிக் கேட்கும் வகையில் மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும். அதுதான் தீர்வாக இருக்கும்.

விவசாயிகள் விடுதலை முன்னணி,
பென்னாகரம்
9943312467

ஐ.டி அப்ரைசல் ஒரு ஊழியரின் பார்வையிலிருந்து – வீடியோ

1

வ்வொரு ஆண்டும் ஊழியர்களின் பணித்திறனை கணக்கிட்டு சம்பள உயர்வு/குறைவு அளிப்பதாக கூறி ஐ.டி நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி வருவது தான் அப்ரைசல் என்ற மோசடி.

அப்ரைசல்
கடந்த ஆண்டு செய்த வேலைகளுக்கு பட்டை நாமமும், வரும் ஆண்டுகளில் வேலை செய்ய வைப்பதற்கான கேரட்டும் இங்கு கிடைக்கும்.

இந்தியாவில் பல ஐ.டி நிறுவனங்களில் பணித்திறன் அளவீட்டை (appraisal) இம்மாதம் ஆரம்பித்திருப்பார்கள். அதன்படி, ஊழியர்கள் கடந்த ஆண்டு செய்த வேலைகளையும் அதற்கான மதிப்பீட்டு புள்ளிகளையும் பரிசீலிக்கும் சடங்கு ஒன்று நடைபெறும். இதற்கு அப்ரைசல் மீட்டிங் என்று பெயர். கடந்த ஆண்டு செய்த வேலைகளுக்கு பட்டை நாமமும், வரும் ஆண்டுகளில் வேலை செய்ய வைப்பதற்கான கேரட்டும் இங்கு கிடைக்கும்.

அப்ரைசல் மீட்டிங் வைபவத்தின் முடிவு யாவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் ஆரம்ப நிலை ஊழியர்கள் ஒரு சில வருடங்கள் கழித்தே இதை புரிந்து கொள்கிறார்கள். அப்படி என்ன தான் அப்ரைசல் மீட்டிங்கில் நடக்கும் என்பதைப்பற்றிய தெலுங்கு குறும்படம் ஒன்று யூடியூபில் காணக்கிடைக்கிறது.

அப்ரைசல் முறை ஊழியர்களை பிளவுபடுத்தி, ஒருவரை மற்றொருவரின் போட்டியாளராக்கி அதன் மூலம் அவர்களை மேன்மேலும் சுரண்டுகிறது என்பன போன்ற அரசியல் விசயங்கள் படத்தில் பேசப்படவில்லை; ஆயினும் அப்ரைசல் முறை மோசடியானது என்பதை சாதாரண ஊழியரின் பார்வையிலிருந்து அம்பலப்படுத்துகிறது; அதிக ரேட்டிங் வாங்க வேண்டி ஊழியர்கள் எவ்வளவு அடிமைகளாக நடந்து கொள்கிறார்கள் என்பதை படம் பிடித்து காட்டுகிறது.

புரியாத மேனேஜ்மன்ட் வார்த்தைகளை கூறி ரேட்டிங்கை குறைக்கும் மானேஜர்களின் பொதுப்புத்தியை அழகாக சித்தரிக்கிறது இந்த படம்.  ஆண்டு முழுவதும் மாடாக உழைத்த ஊழியரிடம் ‘எதிர்பார்ப்புக்கு மேல் உழைக்கவில்லை’ என்று கூறி ரேட்டிங்கை குறைப்பது ஐ.டி நிறுவனங்களின் வழக்கம். இதற்கு சில மானேஜ்மென்ட் பாணி கதைகளை வேறு உதாரணமாக கூறுவார்கள். அதையும் கிண்டல் செய்கிறது இந்தபடம். “குழ்ந்தை தவழ்வது என்பது இயல்பானது தான். அதே குழந்தை எழுந்து நடப்பது தான் எதிர்பார்ப்பை தாண்டுவது” என்று குட்டிக்கதை சொல்கிறார் மானேஜர்.

ரெய்ஸ் த பார்
ஆண்டு முழுவதும் மாடாக உழைத்த ஊழியரிடம் ‘எதிர்பார்ப்புக்கு மேல் உழைக்கவில்லை’ என்று கூறி ரேட்டிங்கை குறைப்பது ஐ.டி நிறுவனங்களின் வழக்கம்.

முதலாம் ஆண்டு ரேட்டிங்கின் போது, கொடுக்கப்பட்ட வேலைகளை எல்லாம் சிறப்பாக செய்திருந்தாலும் சக ஊழியர்களுடன் பழகுவதில் பிரச்சனை இருப்பதாக கூறி குறைவான மதிப்பீட்டை அளிக்கிறார் மேலாளர். அடுத்த ஆண்டு முழுவதும் சக ஊழியர்களின் வேலையையும் சேர்த்து செய்கிறார் ஊழியர்.

அடுத்த ஆண்டு அப்ரைசலில் வழக்கம் போல புரியாத மேனேஜ்மென்ட் வார்த்தைகளைக் கூறி “அது போன வருசம் இது இந்த வருசம்” என விளக்கி  மீண்டும்  குறைந்த புள்ளிகளையே அளிக்கிறார்.

குட் இனஃப்
ஊழியரால் நிறுவனத்துக்கு என்ன மதிப்பு கூடுதல் (value add) என்று கேட்டு விட்டு ஆவணப்படுத்தும் (documentation) வேலையை செய்திருக்க வேண்டும் என்கிறார்.

ஊழியரால் நிறுவனத்துக்கு என்ன மதிப்பு கூடுதல் (value add) என்று கேட்டு விட்டு ஆவணப்படுத்தும் (documentation) வேலையை செய்திருக்க வேண்டும் என்கிறார். விரக்தியில் வெளியேறும் ஊழியர் தான் அந்த வேலையை செய்ய போவதில்லை என்று சக ஊழியரிடம் கெத்தாக கூறிவிட்டு அடுத்த நிமிடமே அடுத்த ஆண்டு ரேட்டிங்கிற்காக உழைக்க ஆரம்பிக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டு ரேட்டிங்கின் போதும் அடுத்த சில நாட்களுக்கு ரகசியமாக மேலாளரை திட்டுவதும், “இனி கூடுதல் வேலை செய்ய மாட்டேன்” என்று சவடால் விடுவதும் அனைத்து ஐ.டி அலுவலகங்களிலும் நடக்கும் ஒன்று. சில நாட்களுக்குள் அடுத்த ஆண்டு ரேட்டிங்கிற்காகன வேலையை ஆரம்பித்திருப்பார்கள். இதைத் தாண்டி சிந்திப்பதில்லை.

படத்தில் வரும் ஐ.டி ஊழியருக்கு மேலாளரை அடித்து உதைக்கலாம் என்று தோன்றினாலும், கிடைக்காது என்று உறுதியாக தெரிந்தும் அடுத்த ஆண்டுக்கான ரேட்டிங்கிற்கு உழைக்க செல்கிறார். அதற்கும் பலனில்லை என்று அதற்கும் அடுத்த ஆண்டு தெரிந்த பிறகு, அதிகபட்சமாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிடுகிறார். அப்படி ஓடுவதையே வீரமானதாக இப்படம் சித்தரிக்கிறது.

அப்ரைசல் என்ற மோசடி குறித்த அரசியல் பார்வை இந்த படத்தில் சொல்லப்படவில்லை. படத்தின் நாயகனான ஐ.டி ஊழியரும் பின்னொரு சமயத்தில் மானேஜராகி தகிடுதத்தம் செய்வது போல முடிக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் இது சாத்தியமில்லை என்பதைத் தான் கூம்பு வடிவ நிறுவன அமைப்பும், ஐ.டி வேலை பறிப்புகளும் நமக்கு கூறுகின்றன. ஆனாலும் அப்ரைசல், ரேட்டிங், அப்ரைசல் மீட்டிங், மேலாளர்களின் மொழி முதலியவற்றை புரிந்துகொள்ள இப்படத்தை பார்க்கலாம்.

ndlf-it-wing-meeting-2

தொடர்பு எண்  9003198576
மின்னஞ்சல் combatlayoff@gmail.com

கற்பக விநாயகம்
அமைப்பாளர்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர் பிரிவு.

ஊசிப்போன சாம்பாரை அமிர்தமாக்கும் வைரமுத்து

7

புதிதாக வெள்ளை அடித்த சுவருக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் இன்னொரு ஜென்மம் வைரமுத்து.

வைரமுத்து சிறுகதைகள்
சிட்டுக்குருவி லேகிய போஸ்டர்களை விஞ்சும்படி குட்டிச்சுவரெங்கும் வைரமுத்து சிறுகதைகள் என்ற விளம்பரத்தை இறக்கிவிட்டது குமுதம்.

சிட்டுக்குருவி லேகிய போஸ்டர்களை விஞ்சும்படி குட்டிச்சுவரெங்கும் வைரமுத்து சிறுகதைகள் என்ற விளம்பரத்தை இறக்கிவிட்டது குமுதம். பதிலுக்கு வைரமுத்து “குமுதம் கோட்டைக்குள் ஒரு ஊழியன் நுழைவதற்குப் பெருந்தகுதி வேண்டும்” என்று குமுதம் குடும்பவிழாவில் தனது தகுதியை காண்பித்தார். நடுப்பக்கத்தில் ஏதாவது ஒரு நடிகையின் தொப்புளைக்காட்டி காசு சம்பாதிக்கும் பயலுக்கு என்னடா தகுதி? என்று வாசலில் நிற்கும் வாட்ச்மேன் கேட்கவா போகிறார்! தமிழ் ‘சொரியும்’ வைரமுத்து தாராளமாய் அவிழ்த்து விடலாம்தான்!

இந்த இலக்கிய வைரஸ் இத்தோடு முடியவில்லை. “பிராமணப் பின்னணியில் பிராமண மொழியில் கவிப்பேரரசு எழுதிய முதல் சிறுகதை” என்ற அதிரடி விளம்பரம் அடுத்தடுத்து! ஏற்கனவே குமுதத்தில் “காயத்ரி மந்திரம்” என்று மடிசார் மாமிகள் மாடலிங் படங்களைப் போட்டு அலமு சொன்னாளா! சாஸ்த்திரோத்தமான குடும்பம் என்று வடித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் தேவிபாலாவுக்கே திடுக்கிட்டிருக்கும் நம்ம மடப்பள்ளியில் இது ஏதுடா புது பெருச்சாளின்னு!

இலக்கிய உலகின் பாப்பாரத்தனம் ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே அக்கிரகாரத்து பெருங்காயத்தில் கரைந்துபோன வாயுக்கள் நிறைய உண்டு, இதில் புதுசு கண்ணா புதுசு இந்தப் பேரரசு! பார்ப்பன பின்னணியைக் கையாண்டு, பார்ப்பன மொழியைக் கையாண்டு அதன் பஞ்சமாபாதகங்களை அடையாளப்படுத்தியிருந்தால் வைரமுத்துவை நாமும் வரவேற்கலாம். “வேதங்கள் சொல்லாதது” என்று குமுதத்தில் அவர் எழுதியிருக்கும் கதையில் நடேசய்யர் என்ற கதாபாத்திரத்தின் வழி பார்ப்பன சாதி பிடிமானத்தை, சாதி ஆச்சாரத்தை இடித்துரைப்பதுபோல கதையைப் பின்னிக்கொண்டே போய் கடைசியில் சாதிவெறிக்கென்றே உருவான சங்கரமடத்தின் மகா சாதிவெறியரை மகா பெரியவா நல்லவா என்றொரு மகா பொய்யை இன்றைய தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டுவது பார்ப்பன நரித்தனம், பச்சை பொய்யும் கூட.

கதையை நீங்களே படித்துப்பாருங்கள், கதையின் சுருக்கம் இதுதான்:

“பிறப்பு முதல் இறப்பு வரை நான் பிராமணன் என்று உள்ளும், புறமும் உறுதிபட வாழும் உடும்புப் பிராமணர் வகையைச் சேர்ந்த நடேச அய்யர் என்பவர் மூன்று தலைமுறையாய் வைத்திருந்த தென்னந்தோப்பை ஒரு சூத்திரர் வாங்குகிறார், (வண்டு முருகன் கதை சொல்வது போல இருப்பதால் அநேகமாக அதை வாங்குபவர் வைரமுத்து உருவில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை) விற்கும் அய்யரின் நிபந்தனை, அந்த தோப்புக்குள் பாதயாத்திரையின் போது பரமாச்சாரியார் தங்கிப் போன ஒரு சிறு காரை வீட்டை தெய்வ சன்னிதியாக அவர் வழிபடுவதால், அதை கோயிலா பாதுகாக்கணும், பரமாச்சாரியாருக்கு விரோதமான எதுவும் பொழங்கக் கூடாது!” என்பது.

சங்கராச்சாரி
“லோகமே அழியப் போறது ஓய்! அழியப் போறது… ஸ்த்ரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுத்தா என்ன ஆகும்? இஷ்ட்டப்பட்டவா கூட ஸ்திரிகள் ஓடிப்போவா, அபாண்டமா, அபச்சாரமா போயிடும்! K

தோப்பை பராமரிக்க கூலிக்கு குடிவைக்கப்படும், (குடிசையில்தான்! பாப்பார நிபந்தனைக்கு கட்டுப்படும் அருவா மீச ஜாதி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு தான் வச்சதுதான் சட்டம், தான் கை காட்டுன ஓலதான் வீடு!) தாழ்த்தப்பட்ட கணவனும் மனைவியும், பூஜைக்கு வைத்த குருக்கள் ஊருக்குப் போனதால் தாமே பரமாச்சாரியார் சன்னதிக்கு விளக்குப்போட, “அபச்சாரம்” என நடேச அய்யர் கத்துகிறார், “மிலேச்சர்களை உள்ளே விட்டது தப்பு!” என்று அய்யர் கத்தி தீர்க்க, அவரது மனுதர்மம், மனுச தர்மம் பற்றி வாதாடி விளக்கம் தரும் தோப்புக்காரர், பின் வாக்கு மீறிவிட்டேனோ என்று தனக்குத்தானே சங்கராச்சாரி, அத்வைதத்தை துணைக்கு அழைத்து மனதுக்குள் சரிபார்த்துக் கொள்கிறார் (நடேச அய்யருக்கு எதிராக முற்போக்காக பேசிவிட்டு, தோப்புக்காரரை விறைப்பாக விட்டால், வைரமுத்து கதை என்னாவது? பயப்படாதிங்க நான் உங்க ஆள் தான் என்று பம்மிக்காட்டுவதற்காக அடுத்த நொடியே ஆச்சாரியார், அத்வைதம் இதெல்லாம் என் பார்வைக்கு விரோதமில்லை என்று தோப்புக்கரணம்!)

இந்தச் சூழலில் சூறைக்காற்று வந்து தோப்பில் தாழ்த்தப்பட்ட இருளாயி, காளியப்பா ஓலை வீடு பிய்த்துக் கொண்டுபோக நள்ளிரவில் நடுங்கித் தவித்து அழைக்க, சாமி சன்னிதியான காரை வீட்டில் போய் குடியிருங்க என்கிறார் தோப்புக்காரர். அட கதை புரட்சிகரமான முடிவா இருக்கே என்று, அடுத்த வரியைப் பார்த்தால், வைரமுத்து தோப்புக்காரராகி மட்டைக்கு ரெண்டாய் இப்படி கிழிக்கிறார். “என் முடிவை மகா பெரியவர் ஏற்றுக்கொள்வார்! நடேச அய்யர் போகப்போக புரிந்து கொள்வார்!” இதுதான் கதை.

பரமாச்சாரியார் படுத்து எழுந்த இடத்தில் பண்ணையாள் புழங்கியது அபச்சாரம் என்று புழுங்கியது நடேச அய்யரின் சாதி வெறி என்றால், பண்ணையாள்கள் புழங்குமிடத்தை காரை வீட்டு சன்னிதானத்திற்கு எதிராக ஒரு காற்றுக்கு பிய்த்துக்கொண்டு போகும் அளவுக்கு அவர்களை ஒரு ஓலை குடிசையில் தள்ளிய (வைரமுத்து) பண்ணையாரின் தன்மை என்ன வெறி? இப்படி பண்ணையாரின் கண்ணியமான உருவம் தென்படும் இடமெங்கும் கதைக்களன் எழுப்பும் கேள்விகள் பல உண்டு.

கதைப்படி இதையெல்லாம் கேட்ககூடாது? என்றால் சங்கராச்சாரிக்கு மட்டும் என்ன சலுகை வேண்டி கிடக்கு? பண்ணையாட்களின் அதாவது, தாழ்த்தப்பட்டவர்களின் நடத்தையை வாழ்க்கையில் இருந்து விவரிக்கும் கதை பரமாச்சாரியாரின் யோக்கியதையை மட்டும் தத்துவ வழியில் விளக்குவது என்ன இலக்கிய நியாயம்? பார்ப்பன சாதி வெறியை எதிர்ப்பது போலவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் பரமாச்சாரியாரை எதிர்க்கவில்லை என்பதையும் காட்டவேண்டும். இன்னும் விளக்கமாகச் சொன்னால் அடக்கப்பட்டவர்களின் உணர்ச்சியையும் அறுவடை செய்ய வேண்டும், அவர்களை அடக்கியவர்களின் ஆதரவையும் பெறவேண்டும் என்பது இலக்கியமா? அயோக்கியத்தனமா? எழுதப்பட்டதை விட மறைக்கப்பட்டதில் இருக்கிறது கதையின் கரு. இதைப் புரிந்துகொள்ள வாசகனுக்கு வெறும் வாசிப்பு அனுபவம் மட்டும் போதாது, சமூக வாழ்க்கையின் அனுபவங்களும் வேண்டும்.

 "அழுக்கு சட்டிக்கு பொன் குளியலா?!"
“அழுக்கு சட்டிக்கு பொன் குளியலா?!”

“பரமாச்சாரியார் சொல்லாதது” என்று தலைப்பு வைக்க வேண்டிய கதையை பார்ப்பனியத்திற்கு ஏற்றமாதிரி “வேதங்கள் சொல்லாதது” என்று உடும்புப் பார்ப்பனர்களை சிந்திக்க வைக்கிறாராம்! வைரமுத்து உடும்பு பிடிப்பதைப் பற்றி நமக்கு கவலையில்லை, கதைக் களன் படியும், பார்ப்பன சாதிவெறியை, அதன் பயங்கரத்தை விண்டு வைப்பதை விடவும், தனது ‘சூத்திர’ அடக்கத்தை, அவாள் ஆத்திரம் கொள்ளாத அளவுக்கு, அவாள் வேதம், ஆச்சார்யாள் படியே தான் பேச நேர்ந்தது என்று தன்னிலை விளக்கமாகவே கதையின் ‘ஆன்மா’ ஒலிப்பதை சகித்துக் கொண்டாலும், மத்தவாதான் சாதி பாக்குறவா, மகா பெரியவா நல்லவா, என்பது மாதிரி கதை விடுவதுதான் சகிக்கமுடியாத துர்நாற்றம்!

தருண் விஜய்க்கு பாராட்டு விழா நடத்தி தன்னை விலை பேசிக்கொண்டவர், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரி சாமிகளை கதாநாயகராக காட்டுவதன் மூலம் மோடியின் கையால் ஒரு விருது வாங்க முத்தமிழையும் ‘நூலில்’ கட்டி இழுக்க ஆழ்வார் வைரமுத்து அணியமாகிவிட்டார்.

பிராமணப் பின்னணியையும், பிராமண மொழி நடையையும் ஒரு பிராண்ட் வேல்யூவாகவே ஊடகங்கள் உருவாக்கி இருக்கின்றன. சூத்திர சூரியன் எஃப்.எம் கூட கிட்டு மாமா சுசி மாமியைத்தான் ஏவி விடுகிறது. பார்ப்பனியத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும், அய்க்கியப்படுத்திக் கொள்ளவும் நாலுகாசு பார்த்தவுடன் நாயாய் அலையும் கருப்பு பார்ப்பனர்களின் கேவல மனநிலை, இயல், இசை, இலக்கியம் அனைத்திலும் விசமாய் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த விசத்தில் ஒன்றுதான் வைரமுத்துவின் குமுதம் கதை.

திருவரங்கத்தில் கோயில் நுழைவு போராட்டம் நடத்திய மக்கள் மீது மிளகாய் பொடி தூவி கண்களை எரிய வைத்த அக்கிரகாரத்து மாமிகளை போலீசு விசாரித்ததற்காக “என்னவால்லாம் நம்மவா கஷ்ட்டப்படுறா என்று கண்ணீர் சிந்திய” (ஆதாரம்: அக்னி கோத்திரம் தாத்தாச்சாரியாரின் இந்துமதம் எங்கே போகிறது!) பெரியவா, சாதி சமத்துவத்தை ஏற்கும் மகா பெரியவராம் வைரமுத்துவுக்கு! பெரிய சங்கராச்சாரியின் சாதி, மத, ஆணாதிக்க வெறியைத் தெரிந்துகொள்ள மஞ்சை வசந்தனின் “தெய்வத்தின் குரலா? தில்லுமுல்லு பேச்சா!” நூலைப் பார்த்தால் உண்மை முகம் தெரியும். பழைய புதிய கலாச்சாரம் இதழின் “அழுக்கு சட்டிக்கு பொன் குளியலா?!” என்ற சங்கராச்சாரியாரின் கனகாபிஷேகம் பற்றிய கட்டுரையை படித்தால் மகா பெரியவாளின் மகா கேடுகள் விளங்கும்.

வைரமுத்து
பல் எல்லாம் தெரியக்காட்டி, பைந்தமிழ் தெரியக்காட்டி பார்ப்பனியத்திற்கு ஆள்பிடிக்கும் தமிழக இலக்கியவாதிகள் வரிசை புதிதல்ல

அவாளாகப் பிறந்தாலும் அவாளுக்கே சவாலாக சில உண்மைகளை அக்னிகோத்திரம் போட்டு உடைக்கிறார், ஆழ்வார் வைரமுத்துவோ பெரிய சங்கராச்சாரியார் பித்தலாட்டங்களை மறைக்கிறார். அக்னிகோத்திரம் அடையாளம் காட்டும் சந்திரசேகர சாமிகளின் யோக்கியதையைப் பாருங்கள்.

பெண்களுக்கு சொத்துரிமை என்ற செய்தி வந்தவுடனேயே மகா பெரியவர், “லோகமே அழியப் போறது ஓய்! அழியப் போறது… ஸ்த்ரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுத்தா என்ன ஆகும்? இஷ்ட்டப்பட்டவா கூட ஸ்திரிகள் ஓடிப்போவா, அபாண்டமா, அபச்சாரமா போயிடும்! ஸ்திரிகளுக்கு பாத்யமோ, சம்பாத்யமோ இருக்கப்படாதுன்னு, மனுஸ்மிருதி சொல்லிருக்கு! ஸ்த்ரீ தர்மத்தை பாதுகாக்க இந்த ‘பில்லை’ எதிர்த்து ஊரெல்லாம் கூட்டம் போடணும், இதுக்கு நிறைய ஸ்த்ரீகளை திரட்டனும்…” என்றெல்லாம் அவசர ஆணைகளை பிறப்பித்தார் மகா பெரியவர் (இந்துமதம் எங்கே போகிறது நூல் பக். 108-109).

இந்த மகா வில்லன்தான் வைரமுத்துவுக்கு மகா கதாநாயகர். ஊசிப்போன சாம்பாரை ஆகா! அமிழ்தம் என்று வைரமுத்து அருந்துவது அவரது தனிப்பட்ட அடிமை உரிமை, அதை ஊர் தலையில் கட்டுவதைத்தான் நாம் விமர்சிக்கிறோம், கண்டிக்கிறோம்.

நாட்டுக்கோட்டையைச் சேர்ந்த அருணாச்சலம் ஒருமுறை பெரியவாளைப் பார்க்க மடத்துக்கு வர, ‘மடி’ யாய் இருந்த நேரம் அதாவது ஆச்சாரமான நேரத்தில் அவரிடம் தமிழில் பேசினால் தீட்டாகிவிடும் என்று, பார்க்காமலேயே அவரை அனுப்பி ‘தமிழை நீச மொழி’ என்று இழிவுபடுத்திய இந்த சாதி, சமஸ்கிருத வெறியர்தான் குமுதம் செட்டியாருக்கும், தேவர் வைரமுத்துவுக்கும் குலத்தையே இழிவுபடுத்தினாலும் குல தெய்வமாம். சமத்துவம் ஏற்கும் சான்றோராம்!

இப்படி ஒன்று இரண்டல்ல, விதவைகளை இழிவுபடுத்தியது, தாழ்த்தப்பட்டவர்களை இழிவுபடுத்துவது என்ற மகா அயோக்கியத்தனங்களை எல்லாம் இந்து தர்மமாக இஞ்சு பிசகாமல் கடைபிடித்த மகா சாதிவெறியரை கருணையின் வடிவாக கதை விடுவதும், சமஸ்கிருத மொழி வெறி, சனாதன குல வெறியை பரப்பும் பார்ப்பன – பா.ஜ.க. தருண்விஜயை தமிழை வாழவைக்க வந்தவராக பசை தடவுவதும் வைரமுத்து வயிறு வளர்க்கும் கேவலங்கள்! இதற்காகத்தானே ஆசைப்படுகிறாய் வைரமுத்து என்று ஆர்.எஸ்.எஸ். கும்பலே ரத்தம் வர சொரிவது தாங்காமல் அவசரமாக மோடி கையால் ஒரு புத்தம் புது விருதை வழங்கும்படி விரிகிறது வைரமுத்துவின் கலைச்சேவை.

“ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! என்று மடத்தை கழுவிவிட்டு, அக்கிரஹாரமே தொட்டு கண்ணில் ஒத்திக்கொள்ளும் படி புனிதப் பசுவாய் திரிந்தார் ஜெயகாந்தன், மகா பெரியவாளையே மடக்கியதன் மூலம் மாமாங்குள திவசப் பார்ப்பனர்களையே திடுக்கிட வைத்துவிட்டார் வைரமுத்து!

பெரியார்
பெரியவாளுக்கு மாற்று முகம் கற்பிக்கும் – பிழைக்கப்பார்க்கும் வைரமுத்து போன்ற ஆரிய அடிமைகளை அன்றே அடையாளம் காட்டினார் பெரியார்

பெரியவாளுக்கு மாற்று முகம் கற்பிக்கும் – பிழைக்கப்பார்க்கும் வைரமுத்து போன்ற ஆரிய அடிமைகளை அன்றே அடையாளம் காட்டினார் பெரியார்: “நமது புலவர்கள் படித்துப்போட்டு அளப்பார்கள் தோழர்களே! சாதாரணமாகப் படிக்காதவரிடமாவது பகுத்தறிவு வாசனையினைக் காணலாம், இந்தப் புராணக் குப்பைகளைப் படித்து அதனை தமது வாழ்வுக்கு கருவியாக அமைத்துக் கொண்டவர்களிடம் மருந்துக்கும் கூட பகுத்தறிவு தோன்றாது…. மிருகங்கள் மட்டும்தான் தாம் பிழைப்பதற்காக மட்டும் வாழ்கின்றன. மனிதன் அப்படியல்ல பிறருக்காக வாழவேண்டும். நம் இனத்திற்கு மரியாதை உண்டாக்க வேண்டும்…” (திருச்சி பெரியார் பயிற்சி பள்ளி இலக்கியமன்ற திறப்புவிழா, சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆகியவற்றில் பெரியார் ஆற்றிய உரை, 23-8-1963 & 30-10-1967).

“மேலோட்டமாகப் பார்த்தால் முற்போக்கு உள்ளே கிளறினால் பாப்பார சீக்கு!” என்ற போலிப் புலவர்களை சரியாகவே தோலுரித்தார் பெரியார். பெரியவாளை தூக்கிக் கொண்டு பரப்புரை செய்ய வந்தால், கட்டாயம் பெரியார் எதிரே வருவார்!

பல் எல்லாம் தெரியக்காட்டி, பைந்தமிழ் தெரியக்காட்டி பார்ப்பனியத்திற்கு ஆள்பிடிக்கும் தமிழக இலக்கியவாதிகள் வரிசை புதிதல்ல, இருந்தாலும் இந்த செய் நேர்த்திக்கு வைரமுத்து தென்னந்தோப்பு பக்கம் போனதுக்கு, ஜெயமோகன் பக்கம் போயிருக்கலாம். பார்ப்பனியத்திற்கான ‘ஹோம் ஒர்க்’ செலவு மிச்சமாகியிருக்கும், மதிப்பீடு தவறுதான் பார்ப்பனியமே ஹோம் ஆனவர்களுக்கு தனியே ஒர்க் என்ன வேண்டிகிடக்கு!

உலகமயத்தின் புதுப்பார்ப்பனர்கள் ‘குந்த ஒரு குச்சி வாங்கி’ அவாளை வைத்து கணபதி ஹோமம் பண்ணுவதும், வைரமுத்து குமுதத்தில் அவாளை வைத்து ஒரு கதை எழுதுவதும் வேறுவேறு அல்ல! பார்ப்பன மயமாக்கலின் பரிணாமங்கள்தான். என்னங்க, கதையப் பாத்தா மனிதாபிமானம், சாதி ஒழிப்பு, சமத்துவம், பார்ப்பன எதிர்ப்பு எல்லாம் கொட்டிக்கிடக்குற மாதிரி இருக்கு இப்படி சொல்றீங்களே என்பவரா நீங்கள்? மீண்டும் கதைக்கு வெளியே வந்து ‘மகா பெரியவாளின்’ நடத்தையை பாருங்கள்! இப்போது, வைரமுத்துவின் விசமத்தனத்திற்கு நடேச அய்யரின் விசமே மேல் என்பீர்கள்!

– துரை.சண்முகம்

தடையற்ற கார்ப்பரேட் கொள்ளைக்கு மோடியின் சேவை

0

மோடி அரசின் அவசரச் சட்டங்கள் : கார்ப்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கான ஏற்பாடுகள்!

இந்தியாவில் தயாரிப்போம்” (Make in India) என்ற திட்டத்தை மோடி அறிவித்தவுடனேயே, இப்படிப்பட்ட ஒன்றை எதிர்பார்த்துதான் பன்னாட்டு நிறுவனங்களும் உள்நாட்டு தரகு முதலாளிகளும் காத்துக்கொண்டு இருந்தது போலவும், இனி அந்நிய முதலீடு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டப்போவது போலவும்” கார்ப்பரேட் பத்திரிகைகள் வலிந்துவலிந்து எழுதித் தள்ளின. ஆனால், நடப்பதோ அதற்கு நேர்எதிராக உள்ளது. “முதலில் அரசாங்க காசைப் போட்டு அடிக்கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுங்கள், குறைந்த வட்டியில் எங்களுக்குக் கடன் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்; மற்றதை பிறகு பார்க்கலாம்” எனப் பன்னாட்டு நிறுவனங்களும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளும் பச்சையாகக் கூறிக் கையை விரித்துவிட்டார்கள்.

பிரதமர் மோடியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனும் அரசுக்கு அளித்துள்ள  2014-ம் ஆண்டிற்கான அரையாண்டு பொருளாதார அறிக்கையில், “பொது முதலீடுதான் தனியார் முதலீட்டை ஈடு செய்வதோடு, அதனைக் கவர்ந்திழுக்கும்” என நயத்தகு முறையில் குறிப்பிட்டு, கார்ப்பரேட் முதலாளிகளின் கருத்துக்கு ஒத்தூதியிருக்கிறார்.

அதானி - மோடி - ஸ்டேட் வங்கி
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தை அதானி குழுமத்திற்கு வாங்கிக் கொடுக்க நடந்த பேச்சுவார்த்தையில், அதற்காக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 6,200 கோடி ரூபாய் கடனாக அளிக்க ஒப்புக் கொண்டது. (கோப்புப் படம்).

தனியார்மயத்தின் மிகத் தீவிரமான ரசிகனான இந்தியா டுடே ஏடு, “பொது முதலீட்டுக்கு மறுவாழ்வு தருவதை முற்போக்கு வளர்ச்சிக்கான முக்கியக் காரணியாக்க வேண்டும். அதற்குப் பதில் வேறு முதலீடு இருக்க வேண்டும் என்பதல்ல. அதற்கு மறுவாழ்வு தந்து ஆதரவு தரப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களிடம் வீணாகத் தேங்கிக் கிடக்கும் ‘தூங்கும் முதலீடான’ இரண்டு இலட்சம் கோடி ரூபாயைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு உயிர் கொடுக்கப் பயன்படுத்தலாம்” என அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது. கேட்பது பிச்சை என்றாலும், கார்ப்பரேட் விசுவாசிகளின் பந்தா மட்டும் குறையவில்லை.

நிதிப் பற்றாக்குறையால் தள்ளாடிக் கொண்டிருக்கும் மைய அரசால் எப்படி முதலீடுகளைச் செய்ய முடியும் என்ற கேள்வியை அலசும் இந்து நாளிதழ், “அலைக்கற்றை ஏல விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தைப் பயன்படுத்தலாம். பெட்ரோல்-டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் உற்பத்தி வரியின் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தலாம்” என மோடிக்கு வழிகாட்டுகிறது. பொதுமக்களின் கையை வெட்டி முதலாளிகளுக்கு சூப் வையுங்கள் என்பதுதான் இந்த ஆலோசனையின் வக்கிரமான பொருள்.

கார்ப்பரேட் கும்பல் எள் என்றால் எண்ணெயாக நிற்கக் கூடியவரல்லவா நமது பிரதமர். அதனால் அரசாங்க கஜானாவை மட்டுமல்ல, அடித்தட்டு மக்களின் அற்ப உடமைகளையும் கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் நிறுத்திவிட்டார், அவர்.  காப்பீடு துறையில் 49 சதவீதம் அளவிற்கு அந்நிய முதலீடை அனுமதிக்கும் சட்டத் திருத்தம், நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம், தொழில் பழகுநர் சட்டத் திருத்தம், நிலக்கரிச் சுரங்கங்களையும், இரும்பு, பாக்சைடு போன்ற அரிய வகை தாதுப் பொருட்களையும் ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் சட்டத் திருத்தம் – என அடுத்தடுத்து அவசரச் சட்டங்களை அறிவித்து, அதன் வழியாக நமது நாட்டின் கனிம வளங்களை, விவசாய நிலங்களை, பொது மக்களின் சேமிப்பை, தொழிலாளர்களின் உழைப்பை ஏகாதிபத்திய நிறுவனங்களும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளும் கூட்டாகச் சேர்ந்துகொண்டு தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி வைத்துவிட்டது மோடி அரசு.

ஜப்பான் உதவியோடு காசியில் நவீன நகரம்
ஜப்பானின் கூட்டோடு, உ.பி. மாநிலத்திலுள்ள காசியை நவீன நகராக உருவாக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் நரேந்திர மோடியோடு கலந்து கொண்ட ஜப்பானின் பிரதமர் ஷின்ஸோ அபே (வலது ஓரம்).

காங்கிரசு கூட்டணி அரசு 2013-ம் ஆண்டில் நிறைவேற்றிய புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், அரசு மற்றும் தனியார் இணைந்து செய்யல்படுத்தும் திட்டங்கள் என்றால், அத்தனியார் நிறுவனங்கள் 70 சதவீத நில உரிமையாளர்களின் சம்மதத்தைப் பெற வேண்டும். தனியார் திட்டங்கள் என்றால் 80 சதவீத நில உரிமையாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்; விவசாயிகளை நிலத்திலிருந்து அப்புறப்படுத்தும் விளைவால் ஏற்படக்கூடிய சமூகத் தாக்கங்களை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்; நகர்ப்புற நிலமாக இருந்தால் அரசு வழிகாட்டி மதிப்பீட்டுக்கு மேல் 2 மடங்கும், கிராமப்புறமாக இருந்தால் 4 மடங்கும் விலையாக நிர்ணயித்து வழங்க வேண்டும் என்றவாறு சில கவர்ச்சிகரமான (populist) சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தன.  எனினும், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், அணுசக்தி திட்டங்கள், இராணுவப் பயன்பாடு உள்ளிட்ட 13 வகையான அரசின் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டால், நில உரிமையாளர்களின் சம்மதத்தையும் பெற வேண்டியதில்லை, சமூக தாக்கம் பற்றிய மதிப்பீடையும் செய்ய வேண்டியதில்லை என்றவாறு விதிவிலக்குகளையும் அச்சட்டத்திலேயே வைத்திருந்தது.

விவசாயிகளின் சம்மதத்தைப் பெறுவதும், சமூகத் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரிப்பதும்தான் காங்கிரசு அரசு கொண்டுவந்த சட்டத்தின் உயிர்நாடியாகக் கூறப்பட்டது. அந்த உயிர்நாடியைத் திருத்தங்களின் மூலம் ஒழித்துக்கட்டிவிட்டது, மோடி அரசு.  பாதுகாப்பு, பெருந்தொழிற்பேட்டைகள், வீட்டுவசதித் திட்டங்கள், கிராமப்புற அடிக்கட்டுமானத் திட்டங்கள், சமூக அடிக்கட்டுமானத் திட்டங்கள் என்ற இந்த ஐந்து பிரிவுகளின்கீழ் வரும் திட்டங்களுக்கு அது அரசுத் திட்டமாக இருந்தாலும், முழுக்க முழுக்கத் தனியார் திட்டமாக இருந்தாலும், நில உரிமையாளர்களின் சம்மதத்தைப் பெற வேண்டிய அவசியமும் இல்லை, சமூகத் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கைத் தயாரிக்க வேண்டிய தேவையும் இல்லை என மோடி அரசு கொண்டுவந்திருக்கும் அவசரச் சட்டம் வரையறுக்கிறது. எந்தவொரு திட்டத்தையும் இந்த ஐந்து பிரிவுக்குள் அடக்கிவிட முடியும் என்பதால், இனி நிலங்களை அபகரிப்பது ஆற்று மணல் கொள்ளை போல நடக்கக்கூடும்.

இனி தனியார்கள் கட்டும் கக்கூஸைக்கூட சமூக அடிக்கட்டுமானத் திட்டம் என வரையறைத்துவிட முடியும் என்பதால், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலக்கொள்ளையை விவசாயிகளால் சட்டப்படி தடுத்து நிறுத்த முடியாது.  பெரிய செலவு எதுவும் இல்லாமல், எதிர்ப்பும் இல்லாமல் சிறுவிவசாயிகளை அப்புறப்படுத்தி, அவர்களது நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பட்டா போட்டுக் கொடுக்கும் அடியாளாக அவதாரமெடுத்திருக்கிறது, மோடி அரசு.

கோல் இந்தியா
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை எதிர்த்து கோல் இந்தியா நிறுவனத்தின் தொழிலாளர்களும் ஊழியர்களும் கொல்கத்தாவில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டம்

கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலக்கரிச் சுரங்கங்களை வணிகரீதியான பயன்பாட்டுக்கு ஏலம் எடுப்பதையும்; அப்படி ஏலம் எடுத்த சுரங்கங்களை மற்றொருவருக்கு கைமாற்றிவிடுவதையும் அனுமதிக்கும் விதத்தில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு சட்டத்தில்  திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை, மன்மோகன் சிங் ஆட்சியில் நடந்த நிலக்கரி ஊழலைவிட, மிகப்பெரும் ஊழலைப் பிரசவிக்கும் அடிப்படையைத்தான் கொண்டுள்ளன.  குறிப்பாக, 2-ஜி அலைக்கற்றைகளை ஏலம் எடுத்த நிறுவனங்கள் அவற்றை வேறொரு நிறுவனங்களுக்கு கைமாற்றிவிட்டுக் கொள்ளை இலாபம் அடைந்ததைப் போன்ற முறைகேடுகள் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடில் இனி அடிக்கடி நிகழும்.  ஆனால், 2-ஜி விவகாரத்தைப் போல அதனை யாரும் ஊழல் என்றோ, முறைகேடு என்றோ குற்றஞ்சுமத்த முடியாது. ஏனென்றால், சுரங்கங்களைக் கைமாற்றிவிடுவதைச் சட்டபூர்வமாக்கிவிட்டார், யோக்கியவான் மோடி.

நிலம், நிலக்கரி உள்ளிட்ட நாட்டின் பொதுச் சொத்தான இயற்கை வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் இந்த அவசரச் சட்டங்களுக்கு அப்பால், “பொது முதலீட்டை அதிகரிப்பதற்குச் சில சிறப்பான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்” என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தரகு முதலாளிகளிடம் உறுதியளித்திருக்கிறார். அச்சிறப்பான நடவடிக்கைகள் வரி விதிப்பு என்ற பெயரில் மக்களைக் கொள்ளையடிப்பதும், அரசு வசமுள்ள மக்களின் சேமிப்புகளை முதலாளிகளுக்குப் படையல் போடுவதும்தான்.

இதன் தொடக்கமாக, தொழிலாளர் வைப்பு நிதியில் கைவைக்கத் துணிந்திருக்கிறது, மோடி அரசு.  அந்நிதியிலிருந்து 7 இலட்சம் கோடி ரூபாயை எடுத்து, அதன் மூலம் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கப் போவதாக, கேழ்வரகில் நெய் வடியும் திட்டமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் ஏழைகளுக்கு வீடு கிடைக்கிறதோ இல்லையோ, ரியல் எஸ்டேட் கம்பெனிகள், இரும்பு, சிமெண்ட் நிறுவனங்கள் கொழுத்த இலாபம் அடைவது உறுதி செய்யப்படும்.

எதிர்வரும் மார்ச்சுக்குள் 43,500 கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று நிதி திரட்டும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது ஒரே கல்லில் இரண்டு மாங்காகளை அடித்து – இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது மற்றும் அதில் கிடைக்கும் பணத்தைப் பொது முதலீட்டுக்குத் திருப்பி விடுவது – முதலாளிகளின் மடியில் விழச் செய்யும் தந்திரம் நிறைந்தது.

ஏழையின் கண்ணில் சுண்ணாம்பையும் பணக்காரனின் கண்ணில் வெண்ணெயையும் வைக்கும் பாரபட்சமான அரசுதான் இது என்பதை பெட்ரோல் விலையைக் கொண்டே விளங்கிக் கொள்ளலாம். அதன் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரி கடந்த சில மாதங்களில் நான்குமுறை அடுத்தடுத்து கூட்டப்பட்டதால், 2012-ம் ஆண்டில் ரூ 9.48 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான உற்பத்தி வரி, இப்பொழுது ரூ 16.95 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த வரி உயர்வின் மூலம் மட்டும் மைய அரசிற்குக் கிடைக்கவுள்ள கூடுதல் வருமானம் 18,000 கோடி ரூபாயாகும்.

எனினும், இந்தக் கூடுதல் வரி விதிப்பால் இந்திய மேல்தட்டு வர்க்கம் பெரும் பாதிப்பு அடைந்துவிடக் கூடாது என்ற பாரபட்ச நோக்கோடு, அவர்கள் பயணிக்கும் விமானத்திற்கான பெட்ரோல் மீது கூடுதல் வரி விதிக்காமல் தவிர்த்துவிட்டது, மோடி அரசு.  இதனால் பொதுமக்கள் பயன்படுத்தும் பெட்ரோல் ரூ 58.91-க்கு விற்கப்படும்பொழுது, விமான பெட்ரோல் ரூ 52.42 என மலிவு விலையில் விற்கப்படுகிறது. மேன்மக்களுக்கு காட்டப்பட்ட இப்படிபட்ட சலுகைகள் எதையும் ரயில் பயணிகளுக்குத் தரப் போவதில்லை என்பதையும் அகங்காரத்தோடு அறிவித்துவிட்டது, மோடி அரசு.

இது மட்டுமின்றி, ஏழைகளின் அரை வயிற்றுக் கஞ்சியிலும் மண்ணை அள்ளிப் போடவும் இந்த அரசு தயங்காது என்பதை சாந்தகுமார் அறிக்கை எடுத்துக் காட்டியிருக்கிறது. உணவு மானியத்தைக் குறைக்கும் வழிகளை ஆராய்வதற்காக  மோடி அரசால் நியமிக்கப்பட்ட அக்குழு, “இந்திய உணவுக் கழகத்தை முற்றிலும் மாற்றியமைத்து, நாட்டின் 67 சதவீத மக்களுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி உணவுப் பொருட்களை வழங்குவதற்குப் பதிலாக, 40 சதவீத பேருக்கு மட்டும் உணவுப் பொருட்களை வழங்கி உணவு மானியத்தை வெகுவாகக் குறைத்துவிடலாம்” என இரக்கமின்றி அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது. மானிய வெட்டுகள், பல்வேறு வரி விதிப்புகளின் மூலம் ஏழைகளைச் சுரண்டி கஜானாவை நிரப்பிக் கொள்ளும் மோடி அரசு, பொது முதலீடு, வரிச் சலுகைகள் என்ற பெயரில் அப்பொதுப் பணத்தைத் தின்று கொழுக்கும் உரிமையைப் பணக்கார வர்க்கத்திற்கு அளிக்கிறது.

தனியார் துறை முதலீடைக் கவருவது என்ற பெயரில் அரசின் கஜானாவைத் திறந்துவைப்பதொன்றும் இதற்கு முன் நடவாத புதிய விசயமல்ல. கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் வங்கிக் கடன்களாகவும், வரிச் சலுகைகளாகவும் பொது முதலீடு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட பலன் என்ன?  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன்களால் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் பெருகி, அவை திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. கடந்த ஆட்சியில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகளால் அரசின் பற்றாக்குறை அதிகரித்ததேயொழிய, நாட்டிற்கோ, மக்களுக்கோ அதனால் எந்தப் பலனும் கிட்டவில்லை.  வரிச் சலுகைகளைப் பெற்ற நோக்கியா, வோடாஃபோன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வரி மோசடியிலும் ஈடுபட்டுப் பொதுப்பணத்தைச் சுருட்டிக் கொண்டதைத்தான் கண்டோம். பொது நலன் கருதிதான் அலைக்கற்றைகளையும் நிலக்கரிச் சுரங்கங்களையும் குறைந்த விலைக்கு ஏலம் விட்டதாக காங்கிரசு கட்சி கூறியது.  அப்பொது நலன் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்குத்தான் வழியைத் திறந்துவிட்டது. இப்படிப்பட்ட ஊழலும் மோசடியும் கார்ப்பரேட் பகற்கொள்ளையும் இல்லாமல், மோடி தனியார் முதலீட்டை அள்ளி வருவார் என நம்புவதற்கு காதில் பூதான் முடிந்திருக்க வேண்டும்.

– செல்வம்
________________________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2015
________________________________________