Saturday, July 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 628

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

5

puthiya-jananayagam-october-2014

புதிய ஜனநாயகம் நவம்பர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் தோழர் சிவா குண்டர் சட்டத்தில் கைது : பன்னாட்டு முதலாளிகளுக்கு வாலாட்டும் தமிழக போலீசு!

2. செயல்படும் அரசும் செயல்படாத எதிர்க்கட்சிகளும் – தலையங்கம்

3.  பார்ப்பன ஜெயா : தமிழ்ச் சமுதாயத்தை சீரழிக்கும் சதிகாரி!
தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான் பொறுக்கி அரசியலின் அம்மாவான பாப்பாத்தி ஜெயலலிதா.

4. குற்றவாளி ஜெயாவிற்கு “விரைவு” பிணை : பணமும் பார்ப்பனியமும் பத்தும் செய்யும்!
சட்டம், நீதிமன்ற நெறிமுறைகளைக் குப்பையைப் போல ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஜெயா – சசி கும்பலுக்குச் சிறப்புச் சலுகைகளோடு பிணை வழங்கியுள்ளது, உச்சநீதி மன்றம்.

5. உச்சநீதி மன்றம் : ஜெயாவின் தலையாட்டி பொம்மை!

6. ஜெயா நிரபராதி ! – ஊடகஙகள் எழுதிய விநோத தீர்ப்பு!
பார்ப்பன ஜெயாவிற்கு நெருக்கமான ஊடகங்கள் குன்ஹாவின் தீர்ப்பைக் குதர்க்கமாக மறுதலித்து ஜெயாவை விடுவிக்கின்றன.

7. அரியானா, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் : மோடி அலை என்ற வெங்காயம் !

8. தூய்மை இந்தியா : துடைப்பத்தோடு போபாலுக்குப் போங்களேன் மோடி!

9. மேக் இன் இந்தியா : புதிய மொந்தை பழைய கள்ளு!
அந்நிய நேரடி முதலீடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியையும் வேலை வாய்ப்பையும் உருவாக்கும் என்ற சாயம் வெளுத்துப் போன பழைய பாட்டை “ரீ மிக்ஸ்” செய்து விற்கிறார் மோடி.

10. கேட்ஸ் பவுண்டேஷன் : மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!
இந்தியா உள்ளிட்ட ஏழை நாட்டு மக்களை, பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக மாற்றும் ஏஜெண்ட்தான் கேட்ஸ் பவுண்டேஷன்.

11. தீவிரமடையும் வன்கொடுமைகள் : ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈறும் பேனும்
தனியார்மயம் – தாராளமயத்தால் ஏற்பட்டுள்ள ‘வளர்ச்சி’யும் வாழ்வியல் மாற்றங்களும் இந்திய சமுதாயத்தை ஜனநாயகமாக்கவில்லை. மாறாக, சாதிய ஆதிக்கத்தைப் புதுப்புது வழிகளில் புதுப்பிக்கிறது.

12. சையது முகமது கொலை : துப்பாக்கியின் ஆட்சி!

13 மோ(ச)டி!

புதிய ஜனநாயகம் நவம்பர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு சுமார் 1.5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

இந்தப் பாவிகளை நொறுக்க ஒரு புரட்சி வாராதா !

12

ரசியப் புரட்சி! செயலின் மகிழ்ச்சி!

விளக்கவே தேவையில்லை
கண்ணைத் திறந்து
வெளி உலகைப் பார்த்தாலே
விளங்கிவிடும் உண்மை,
காண்பவைகள்
சமூக அநீதி மட்டுமல்ல
இந்த சமூக அமைப்பே அநீதி!

ரசியப் புரட்சியின் போது லெனின்
ரசியப் புரட்சியின் போது லெனின்

‘வளர்ச்சியை’ நம்பி
வாழ்க்கையை ஒப்படைத்த
நோக்கியா தொழிலாளிகள்
தெருவில்,

வரி ஏய்ப்பு செய்து
கொள்ளையடித்து
தொழிலாளரின் செல்லையே சிதைத்த
பன்னாட்டு முதலாளி பாதுகாப்பாக
திமிரில்.

ஒரே இரவில்
போபால் மக்களை
அறுத்துக் கொன்றது
அமெரிக்க மூலதனத்தின் நஞ்சு.

காரணமான,
யூனியன் கார்பைடு ஆண்டர்சனுக்கு
அரசாங்க செலவில் விருந்து,
பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டு
அவன் பங்குகள் விற்க அனுமதிக்கப்பட்டு
கடைசி வரை தண்டிக்கப்படாமலேயே
அமெரிக்காவில் (அவன்) இயற்கை மரணம்.

பாதிக்கப்பட்ட இந்தியனுக்கோ
கருக்குலைந்து, முகம் பிதுங்கி
புற்று வைத்து… இன்று வரை தண்டனை,
அன்றாடம் நடை பிணம்!

ஸ்மோல்னி இன்ஸ்டிட்யூட்டுக்கு போகும் புரட்சிப் படையினர்
ஸ்மோல்னி இன்ஸ்டிட்யூட்டுக்கு போகும் புரட்சிப் படையினர்

அரசு அன்றே கொல்லும்
நிதி மூலதனம்
நின்று கொல்லும்,
இரண்டையும் பார்க்கையில்,
உழைக்கும் வர்க்கத்தின்
ஒவ்வொரு அனுபவமும்
இந்தக் கட்டமைப்பையே
நொறுக்கச் சொல்லும்!

முதலாளித்துவ தேள்களின் கொடுக்குக்கு
முழுநீள வாலாக சட்டங்கள்,
சுரண்டலுக்கு தட்டிக் கொடுக்க
நீதிமன்றச் சுத்தியல்கள்.

நீதி தேவதையின்
கண் கட்டை அவிழ்த்தால்
அங்கே
கார்ப்பரேட்டுகளின் திருட்டு முழிகள்!

ராமனுக்கு கோயில் கட்ட
சூலங்கள்!
அந்நிய மூலதனத்துக்கு
தேசத்தையே வாரிக் கொட்ட
துடைப்பங்கள்!
நாட்டையே அமெரிக்கக் குப்பையாக்கி விட்டு
நாடகமாடும் தர்ப்பைகள்!

குளிர்கால அரண்மனை மீது தாக்குதல்
குளிர்கால அரண்மனை மீது தாக்குதல்

இழந்த நீர்ப்பெருக்கின்
உலர்ந்த நம்பிக்கையில்
இன்னும் மிச்சமிருக்கும்
அந்த ஆற்றின் அடிமனம் கேட்டுப்பார்
சுரண்டலுக்கு எதிராக
ஒரு புரட்சி வாராதா
எனுமதன் ஏக்கத்தை
கருமணல் விரித்துக் காட்டும்!

வெடிவைத்து பிளக்கப்படும்
பாறையின் இதயத்தில் பொருந்து,
“இந்தப் பாவிகளை நொறுக்க
ஒரு புரட்சி வாராதா”
என எழும்பும் ஒலி
உனக்கும் கேட்கும்!

பன்னெடுங்காலமாய்
மண் கரு சேர்த்த தாதுக்களை
தனி ஒரு முதலாளி சுரண்டிக் கொழுக்க
தாய்மடி கிழிக்கும் குரூரத்தில்
“இந்தத் தனியார்மயக் கொடுமைக்கெதிராக
ஒரு புரட்சி வாராதா?”
என ஏங்கும் இயற்கையின்
எதிர்பார்ப்பு குரல்
இன்னுமா நீ கேட்கவில்லை…

ரசியப் புரட்சி 2-ம் ஆண்டு நாளில்
ரசியப் புரட்சி 2-ம் ஆண்டு நினைவு நாளில்

முற்றிலும்
முதலாளிகளை காப்பாற்றுவதற்காக மட்டுமே
திணிக்கப்படும் இந்த அரசமைப்பை
ஏற்க எந்த நியாயமும் இல்லை!

எது வளர்ச்சி?
எங்கள் ஊருக்கு தேவை
விவசாயம்,
தண்ணீர், மின்சாரம், இடுபொருள் வசதி
செய்ய வேண்டியது அவசியம்.
இதுக்கில்லாமல் எதுக்கு அரசு?

கார் கம்பெனிகளுக்கு சகல வசதி
கழனியில் பாடுபடும் விவசாயிக்கு
சமாதி!

உலகுக்கே உணவூட்ட
வேளாண்மை இருக்க
எதுக்கு மீத்தேன் திட்டம்?

எங்களுக்கு கடமையாற்றத்தான்
மாவட்ட ஆட்சியரும், தாசில்தாரும்
எதிரி பன்னாட்டுக் கம்பெனிக்கு அடியாளானால்
களைகளோடு சேர்த்து
கலெக்டரையும் புடுங்கி எறி!

எது முன்னேற்றம்?
இயற்கை வழங்கும் தண்ணீருக்கு
எதுக்கு காசு,
குடிக்க தண்ணிகூட தரமுடியாத
நகராட்சிக்கு எதுக்கு ஆபீசு!

LENINஎங்கள் ஊருக்கு
பொதுக்குழாய் தேவை,
எங்கள் மக்களுக்கு
மருத்துவமனை தேவை,
எங்கள் தெருவுக்கு
சாலை வசதி தேவை,

மொத்தத்தையும்
முதலாளிகளுக்கு காசாக்கிவிட்ட
இந்த அரசை புதைக்க
உடனே ஒரு சுடுகாடு தேவை!

எங்கள் பிள்ளைகளுக்குத் தேவை
அரசு பள்ளிக்கூடம்.
டாஸ்மாக் நடத்த ஐ.ஏ.எஸ். உண்டு
பாஸ் மார்க் போட ஆசிரியரில்லையா?
எதுக்கு தனியார் பள்ளிக்கூடம்
இழுத்து மூடு!
எல்லோர்க்கும் தாய்மொழியில்
கல்வி கொடு!
மக்களுக்கான அரசு இல்லையேல்
தூக்கி குப்பையில் போடு!

மனித குலத்தையே
மூலதன அடிமையாக
மரபணு மாற்றம் செய்வதா வளர்ச்சி?
இழி முதலாளித்துவத்தை அழித்தொழித்து
மனித மாண்பை மண்ணில் வளர்க்க
இப்படியெல்லாம் சிந்திப்பதும், செயலாற்றுவதும் தான்
நவம்பர் ஏழு ரசியப் புரட்சி!

– துரை.சண்முகம்

_______________________________________

அனைவருக்கும் 97-வது நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!

காரல் மார்க்ஸும், பிரடெரிக் ஏங்கெல்சும் ஆரம்பித்த கம்யூனிஸ்டு அகிலத்தின் 150-வது ஆண்டு இது. 19-வது நூற்றாண்டில் தொழிலாளி வர்க்கத்தை அரசியல்படுத்தவும், பொதுவுடமை தத்துவத்தை உலகெங்கும் பரப்பவும், தத்துவத்தை நடைமுறைப்படுத்தி வெற்றிகளை ஈட்டவும் இந்த அகிலம் ஆரம்பிக்கப்பட்டது. எல்லா பிரிவினைகளையும் கடந்து தொழிலாளி வர்க்கம் உலகெங்கும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் எனும் உன்னத நோக்கமும் இந்த அகிலத்தின் நோக்கங்களில் ஒன்று.

உலகெங்கும் பொதுவுடமைத் தத்துவம் பரவி சில வெற்றிகளையும், சில பின்னடைவுகளையும்  கண்டிருந்தாலும் பாரிய படிப்பினைகளையும் கம்யூனிச இயக்கம் கற்றிருக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளிலேயே முதலாளித்துவ கட்டுமானங்கள் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் நிகழ்காலம் தொடங்கி வருங்கால வரலாறு வரையிலும் பொதுவுடைமை இயக்கமே மனித குலத்தை மீட்டெடுக்கும். அதை முதலில் சாதித்து, இது கனவல்ல, நிஜம் என்று உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்திய நாள் நவம்பர் 7! ரசியாவில் 1917-ல் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனைதான் இந்த உலகிலேயே மிக முக்கியமான நாள்!

அத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளை அறிவதும், ஏற்பதும், பரப்புவதும் நமது கடமை!

மீண்டும் வாழ்த்துக்கள்!

– வினவு

டில்லி : இந்துமதவெறி சதியை முறியடித்த மக்கள்

0

கிழக்கு டில்லியின் திரிலோக்புரியில் வன்முறை தாண்டவமாடி நூற்றுக்கணக்கான முஸ்லிம் ஆண்களை ஊரிலிருந்து ஓடி ஒளிய வைத்து வெற்றி கண்ட இந்து மதவெறியர்கள் வடமேற்கு டில்லியின் பவானா பகுதியிலும் ஒரு வன்முறையை மொஹரம் தினத்திற்கு திட்டமிட்டனர். இதற்காக ஒரு மகா பஞ்சாயத்தை பவானாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ குகன் சிங் ரங்கா ஏற்பாடு செய்தார். ரங்காவுக்கு பக்கபலமாக நின்றவர் இந்து மதவெறி அரசியலில் பாஜகவிற்கு ஜூனியர் பார்ட்னரான காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் தேவேந்திர குமார். பவானா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 700 பேர் – பெரும்பான்மையானவர்கள் ஜாட்கள் – நவம்பர் 2-ம் தேதியன்று நடந்த மகா பஞ்சாயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கூட்டத்தில் ஜெ.ஜெ காலனி முஸ்லிம்களின் தஸியா ஊர்வலம் பவானாவுக்குள் நுழையக்கூடாது என்று முடிவு எடுத்தனர்.

மகாபஞ்சாயத்துக்கு போகும் வழி
மகாபஞ்சாயத்துக்கு போகும் வழி

மகா பஞ்சாயத்து கூட்டப்படுவதற்கு முன்னரே இந்து மதவெறியர்கள் போலீஸிடம் பவனாவுக்குள் மொஹரம் ஊர்வலம் வரக்கூடாது என்று மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் ஜெ.ஜெ காலனி முஸ்லிம் மக்கள் தங்கள் ஊர்வலம் பவானா செல்லாது என்று அக்டோபர் 28-ம் தேதியன்று போலீஸ் முன்னிலையில் உறுதிமொழி வழங்கினர். இந்த சூழ்நிலையில் மகா பஞ்சாயத்துக்கான அவசியமே இல்லை என்று கருதுகிறார்கள் முஸ்லிம்கள். ஆனால், மகா பஞ்சாயத்தின் நோக்கம் வேறானது. அங்கு மிகத் தெளிவாக வன்முறைக்கு வழிகாட்டப்பட்டது. அங்கு குழுமிய அனைவரிடமிருந்தும் ஒரு டைரியில் மொபைல் தொலைபேசி எண் வாங்கப்பட்டது. என்ன செய்ய வேண்டும் என்பது அவர்கள் வழங்கிய தொலைபேசி எண்ணில் 4-ம் தேதி காலையில் சொல்லப்படும் என்று கூறப்பட்டது. இதற்கான வீடியோ ஆதாரம் ஊடகங்களிடம் இருக்கிறது.

மொஹரம் ஊர்வலத்தை முஸ்லிம்கள் தங்கள் பலத்தை காண்பிக்க நடத்துகிறார்கள் என்றும் இந்த ஊர்வலம் செல்லும் பவானா சந்தையில் இந்துக்களின் வணிகம் அன்று பாதிக்கப்படும் என்று வெளியில் காரணம் கூறினர், இந்து மதவெறியர்கள். மேலும், மொஹரம் அன்று முஸ்லிம்கள் ஏந்தி வரும் ஆயுதங்களால் தாங்கள் அச்சமடைவதாகவும் கூறுகிறார்கள்.

எங்கள் பகுதி வழியாக தஸியா ஊர்வலம் நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது குறித்து நிர்வாகத்துக்கு ஏற்கனவே அறிவித்திருக்கிறோம். ஊர்வலம் நடந்தால், வன்முறை வெடிக்கும். அதற்கு போலீஸ்தான் பொறுப்பு” என்று வெளிப்படையாக மிரட்டியிருக்கிறார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சிங்.

ஜே ஜே காலனியில் ஒரு மொஹரம் ஊர்வலம்
ஜே ஜே காலனியில் ஒரு மொஹரம் ஊர்வலம்

மொஹரம் இசுலாமிய நாள்காட்டியின் முதல் மாதம். மொஹரம் (தஸியா) ஊர்வலம் என்பது முஸ்லிம்களின் தொன்மக் கதையில் வரும் முகமது நபியின் பேரன் ஹுசைன் அலி ஈராக்கில் ஆண்டு கொண்டிருந்த மன்னன் ஜாகித்தின் கெடுபிடிகளுக்கு எதிராக கர்பாலா என்னுமிடத்தில் போரிட்டு மடிந்ததை நினைவுகூரும் ஒரு துக்க ஊர்வலம். தஸியா என்பது ஹுசைனின் சமாதி மாதிரியை ஏந்தி செல்லும் மதச் சடங்கு. உலகம் முழுவதும் ஷியா முஸ்லிம்கள் இதனை பின்பற்றுகிறார்கள். தங்களை தாங்களே அடித்துக் கொள்ளும் சுயவதைக்கு தான் ஆயுதங்களையும், சாட்டையையும் மொஹரம் தினத்தில் ஷியாக்கள் பயன்படுத்துகிறார்கள்.

சன்னி முஸ்லிம்கள் மொஹரம் தினத்தை மோசஸ் எகிப்திய நாட்டின் கொடுங்கோலரசன் பார்வோனை வெற்றி கண்ட நாளாக கருதுகிறார்கள். மொஹரம் ஷியாக்களுக்கு துக்க நாளாகவும், சன்னி முஸ்லிம்களுக்கு கொண்டாட்ட நாளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்த சன்னி முஸ்லிம்கள் ஷியாக்கள் போன்று வெளியே வருவதில்லை. எனவே ஒரு துக்க நாளை நினைவுகூறும் சடங்கிற்கு இந்து மதவெறியர்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு உள்நோக்கம் கொண்டது. இந்துக்களின் வணிகம் பாதிக்கப்படுகிறது என்று இந்து மதவெறியர்கள் கூக்குரலிடுவதிலும் உண்மையில்லை. மொஹரம் தினத்தை ஒட்டி வாங்கப்படும் பொருள்களுக்காக வணிகம் உயர்கிறது. உணவு வகைகள், இனிப்புகள் தயாரிப்பது என்ற வகைகளில் அனைத்து தரப்பு வணிகர்களின் வியாபாரமும் மொஹரத்தை ஒட்டி அதிகரித்து இருப்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறது.

மொஹரம் தினமான 04.11.2014அன்று மக்கள் தங்களின் இயல்பான கூட்டுணர்வாலும், மதநல்லிணக்க உணர்வாலும் ஆர்.எஸ்.எஸ்– பா.ஜ.க.வின் கலவர சதியை முறியடித்தனர். கடுமையான போலீஸ் கண்காணிப்புக்கு உட்பட்டு மொஹரம் ஊர்வலம் திரிலோக்புரி மற்றும் பவானாவில் அமைதியாக நடந்துள்ளது. தங்கள் உடலை புண்ணாக்கி நடந்து வந்த முஸ்லிம்களுக்கு இளைப்பாற சிற்றுண்டி கடைகள் அமைத்து தங்கள் இணக்கத்தை வெளிப்படுத்தினர் இந்துக்கள். தண்ணீர் பந்தல்கள் அமைத்தும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். உழைக்கும் இந்து மக்களான திரிலோக்புரி மக்கள் முஸ்லிம்களுடன் சில தூரங்களுக்கு நடக்கவும் செய்தனர்.

போலீஸ் காவல்
போலீஸ் காவல்

திரிலோக்புரியை அடுத்து உடனடியாக பவானாவை திட்டமிட்டதால் சில ஊடகங்களும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் விழிப்பாக இருந்து இந்து மதவெறியர்களின் சதித்திட்டம் பற்றிய வீடியோ ஆதாரங்களை வெளிக்கொணர்ந்து இந்து மதவெறியர்களை பின்வாங்க செய்தனர். எனினும் இந்து மதவெறியர்களால் இந்த சமூகத்துக்கு ஏற்படும் ஆபத்து என்பது தலை மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருப்பதை மறுக்கவியலாது. பத்தாண்டுகளுக்கு மேலாக பவானாவின் சந்தை பகுதிக்குள் ஊர்வலம் சென்று வந்துள்ளார்கள், ஷியா முஸ்லிம்கள். அப்போதெல்லாம் ஏற்படாத அச்சம் இப்போது எப்படி திடீரென வருகிறது என்று கேட்டதற்கு, ‘முன்பு எங்கள் உணர்வுகளை மதிக்காத அரசாங்கம் இருந்தது; இப்போது அப்படியில்லை’ என்றுள்ளார்கள். இதன் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று மோடியை காட்டிக் கொடுக்க தயங்கவில்லை மோடியின் செல்லக் குட்டிகள்.

என்.டி.டி.வி விவாதத்தில் மகா பஞ்சாயத்தில் வெளிப்படையாக ஒரு மதவெறி கலவரத்துக்கு அழைப்பு விடுத்ததை உடனிருந்து கவனித்த போலீஸ்காரர்களால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று வினவியதற்கு போலீஸ் துறையில் இணை இயக்குநராக இருந்து பணி ஓய்வு பெற்ற மேக்ஸ்வெல் பெரைரா இவ்வாறு குறிப்பிட்டார். ”ஒரு டிராஃபிக்கில் வேகமாக வாகனத்தை ஓட்டிச் செல்லும் நபரை எட்டிப் பிடிக்க முடியாது. வாகன எண்ணை தான் குறித்துக் கொள்ள முடியும். மகா பஞ்சாயத்தில் பேசியவர்களின் வன்முறை பேச்சை கேட்டுக் கொண்டிருந்த போலீஸ்காரர்கள் நிலையும் அது தான்” என்றார். தனது அருவருப்பு மிகுந்த பேருருவால் தன்னை உற்று நோக்கும் அனைவரிடமும் இயலாமையை தோற்றுவித்து அனைத்து அரசு நிறுவனங்களையும் கீழ்ப்படியச் செய்துள்ளது இந்துத்துவம். நம்மை அசுரர்களாக நிரூபித்து எழுந்து நிற்பதன் மூலமே இந்த கொலைகாரர்களை வீழ்த்த முடியும்.

– சம்புகன்.

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு – HRPC ஆர்ப்பாட்டம்

1

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கையில் தூக்கு !

ராஜபக்சே, மோடி, சு.சாமியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

HRPC- thamilaka-meenavarkal

மிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்ததைக் கண்டித்து 3.11.2014 மாலை 4.30 மணி அளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டக் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு HRPC-யின் துணைத் தலைவர் வழக்குரைஞர் தோழர் நடராஜன் தலைமை தாங்க, பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய சமநீதி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்குரைஞர் ராஜேந்திரன் ஆற்றிய உரையின் சுருக்கம்.

தமிழர்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. இதில் இலங்கை நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு நீதிமன்றமும் அரசும் கூட்டு சேர்ந்து சதி செய்துள்ளதாக சந்தேகிக்கிறேன். இதே தூக்குத் தண்டனையை எதிர்த்து, ஆயிரக்கணக்கான ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. 600 மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் அந்த அநியாயத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது வழக்கு. இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் என்ன வேறுபாடு உள்ளது. அனைவரும் சேர்ந்து போராடா விட்டால் தீர்வு கிடைக்காது.

தோழர் குருசாமி, வி.வி.மு. உசிலை

5 மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் ஒரு திட்டமிட்ட சதி இருக்கிறது. போதை மருந்து கடத்தியதாகக் கூறுவது பொய். மீனவர்களை கடலுக்குள் நுழைய விடாமல் தடுக்க இப்படிப்பட்ட பொய்வழக்குகளை கையில் எடுத்துள்ளது, அரசு. மீனவர்களைக் கடலிலிருந்து அப்புறப்படுத்துவதில் இரண்டு அரசுகளும் குறியாகவே இருக்கின்றன. மீன் பிடிப்பதை தடுப்பது, ஆயுதம் கொண்டு தாக்குவது, படகுகளை சேதப்படுத்துவது, படுகொலை செய்வது, பொய்வழக்கு போடுவது என்று இலங்கை அரசின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசு உறுதுணையாகவே இருக்கிறது. சு.சாமியின் செயல்பாடுகள் அதைத் தான் சொல்கிறது. இதில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனும் உள்ளடங்கி இருக்கிறது. இந்தியாவின் ஆதிக்கத்தை இலங்கையில் நிலைநாட்ட தமிழக மீனவர்களைப் பலியிடுகிறது இந்திய அரசு.

வழக்குரைஞர் வாஞ்சிநாதன், உதவிச் செயலர், HRPC

மீனவர்கள் பிரச்சனை என்பது கடந்த 35 ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறது. இதனுடைய உண்மைத் தன்மை பற்றி பேச எந்த அரசியல் கட்சியும் முன் வருவதில்லை. வாக்கு வாங்கி அரசியல் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கு என்பதே ஒரு பொய் வழக்கு. அதை மறைத்து விட்டு, இதற்கு எதிராகப் போராடினால் தவறு என்று சு.சாமி சொல்கிறார்.

இந்தத் தீர்ப்பின் மூலம், மீனவர்களை அச்சுறுத்தப் பார்க்கின்றனர். கடலிலிருந்து அப்புறப்படுத்தப் பார்க்கின்றனர். முன்பு விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டித் தாக்கினர். இன்று மீனவர்களது நிலையைக் காட்டித் தாக்குகின்றனர். ஆனால் இந்தியாவின் நிலையோ வேறாக இருக்கிறது. செங்கல்பட்டிலுள்ள அகதிகளில் ஒரு சிலரைப் பிடித்து, புலிகள் எனக் கூறி பொய் வழக்குப் போட்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை நீட்டிக்கின்றனர்.

தமிழக மீனவர்களை எல்லை தாண்டிய குற்றவாளிகள் போல் சித்தரித்து துன்புறுத்துகின்றனர். ஆனால் பாகிஸ்தான், வங்க தேச மீனவர்கள் எல்லையைத் தாண்டினாலும் நாமும் விடுதலை செய்கிறோம். அவர்களும் இந்திய மீனவர்களை விடுதலை செய்கின்றனர். இலங்கை மட்டும் பொய் வழக்குப் போட்டு தூக்குத் தண்டனை கொடுக்கிறது. இதை ஏன் இந்திய அரசு கேள்வி கேட்பதில்லை.

அதே நேரத்தில் டக்ளஸ் தேவானந்தா, நீதிமன்றத்தில் ஆராகத் தேவையில்லை என்று இந்திய நீதிமன்றம் கூறுகிறது. போபால் விஷவாயுப்படு கொலையின் நாயகன் ஆன்டர்சன்னுக்கும் இப்படியே கூறியது. இங்கே மீனவர்களுக்குப் பதிலாக பார்ப்பனர்கள் கொல்லப்பட்டிருந்தால் இந்த அரசு சும்மா இருந்திருக்குமா? மீனவர்கள் ஏழைகள். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், எனவேதான் அரசு வேடிக்கை பார்க்கிறது. மீனவர்களின் உரிமைகளைக் காக்க நாமே ஒரு போராட்டக் குழு அமைத்துப் போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

கதிரவன், மக்கள் கலை இலக்கியக் கழகம்

மீனவர்கள் போர்க்குணமிக்கப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். போராட்டத்தின் ஊடே அவர்கள் தமிழக முதல்வர் ஓ.பன்னீரைப் பார்க்கின்றனர். தங்களது கோரிக்கைகளைச் சொல்கின்றனர். ஓ.பி.எஸ் ஒரு சிறைக்கைதி. இவர் எப்படி இவர்களது பிரச்சனையைத் தீர்ப்பார். வேண்டுமானால் கருணாநிதி, ஜெயலலிதா போல கடிதம் எழுதுவார். எல்லாக் கடிதங்களும் குப்பைக் கூடைக்குள் போனது போல இதுவும் போகும். அவ்வளவு தான். வைகோ முழங்குகிறார் “மோடி அரசே, நீங்கள் மீனவர் பிரச்சனையைத் தீர்க்கவில்லை என்றால் நீங்கள் அதன் எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்”. என்ன எதிர் விளைவு. கூட்டணியில் சேரமாட்டேன். அவ்வளவு தானே?

கனவுகளில் சஞ்சரிக்கும் இந்த ஓட்டுப் பொறுக்கிகளின் ஒவ்வொரு சொல்லும் செயலும் ஓட்டுப் பொறுக்குவதில் தான் குறியாக இருக்கிறது. அதைத் தாண்டி அவர்களால் சிந்திக்க முடியவில்லை. பா.ஜ.க வின் கொள்கையே அகண்ட பாரதம் தான். அந்த அகண்ட பாரதத்திற்குள் இலங்கையும் வருகிறது. எனவே தான் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கச் சொல்கிறார் சு.சாமி. மோடியும் ராஜபக்சேயும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இருவருமே பாசிஸ்ட்கள். மீனவர்களின் படகுகளை விடாதே என்று சொல்லும் சு.சாமியைக் கண்டிக்காத தமிழிசை தூக்குத் தண்டனைக்கு எதிராக இலங்கையில் சிறந்த வக்கீலை நியமிக்கப் போவதாகச் சொல்கிறார். மீனவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை என்பது தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட மறைமுக யுத்தம் என்பது அவருக்குப் புரியவில்லையா? ஓட்டுப் பொறுக்கிகள் பேசுவார்கள், ஆனால் எதுவும் நடக்காது, நாம் தான் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

லயனல், மாவட்ட செயலர் HRPC

இலங்கையின் சட்டப்படி போதை மருந்து கடத்தலுக்குத் தூக்கு கிடையாது என்று சொல்லப்படுகிறது. ஆனால் பொய் வழக்குப் போட்டதோடு, சட்டத்தை மீறி தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மௌனத்திற்குக் காரணம் இருக்கிறது. இந்தியாவின் மூலதன விரிவாக்கத்திற்கு இலங்கையைப் பயன்படுத்த இந்தியா நினைக்கிறது. சீனாவுக்கு எதிராகத் தெற்கு ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் அமெரிக்காவின் அடியாளாக மோடி அரசு செயல்படுகிறது. இலங்கையில் இந்திய முதலாளிகளின் முதலீடுகளைப் பாதுகாப்பதே மோடி அரசின் முதற் பணி ! எனவே இலங்கை என்ன செய்தாலும் இந்தியா கண்டு கொள்ளாமல் தனது மூலதனத்தை விரிவாக்கம் செய்வதிலேயே கவனமாக இருக்கிறது.

இந்த வழித் தடத்திலிருந்து பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் விலகிச் சொல்லாது. தூக்குத் தண்டனையைப் பொறுத்த அளவில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று ராஜபக்சே கூறுகிறார். மோடியும் அதைத்தான் சொல்கிறார். நாளை இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தண்டனை உறுதிச் செய்யப்பட்டால் அப்பொழுது சட்டம் தன் கடமையைச் செய்தது என்று தான் சொல்வார்கள். இந்தக் கூட்டுச் சதியில் சட்டம் என்ன செய்யும். தமிழிசையையும், பொன்னாரையும், எச்சி ராஜாவையும் பார்த்துப் பசுவதால் என்னபயன் விளையப்போகிறது? எல்லாத் துயரங்களுக்கும், பா.ஜ.கவும் காங்கிரசும் தான் காரணம் என்று இவர்களுக்குத் தெரியாதா?

சு.சாமி என்கிற ஒரு சர்வதேச அரசியல் தரகனை அருகில் வைத்துக் கொண்டு, மீனவர்கள் பிரச்சனையைத் தீர்த்து விடுவேன் என்று தமிழிசை பேசுவது நகைப்புக்குரியது. இது ஒரு அப்பட்டமான ஓட்டுப் பொறுக்கி அரசியல். சு.சாமியும், ராஜபக்சேயும் கை கோர்த்துக் கொண்டு தமிழக மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதை அனுமதிக்கிற பா.ஜ.க. மீனவர்கள் பிரச்சனையைத் தீர்த்து விடுமா?

இலங்கையின் தர்மபாலாவின் 150வது பிறந்த தினத்தன்று, இந்தியா தபால் தலை வெளியிடுகிறது. தர்மபாலா யார்? தமிழர்களை ஒழித்துக்கட்டு என்று போதித்தவர். புத்த மதத்தைத் தவிர வேறு எந்த மதமும் இருக்கக் கூடாது. சிங்கள இனத்தைத் தவிர வேறு இனம் இலங்கையில் இருக்கக்கூடாது என்று கூறிய மதவெறி பிடித்தவர். அந்த மத வெறியருக்குத் தபால்தலை.

தர்மபாலாவை போற்றுகிற இவர்களுக்கு தமிழர்கள் என்றால் கசக்கிறது. ஏன் ஏனென்றால் தமிழ் மரபு என்பது பார்ப்பனிய எதிர்ப்பு மரபு. ஜெயலலிதா ஊழல் குற்றச் சாட்டில் ஜெயிலுக்குப் போனவுடன், ஆயிரக் கணக்கான அடிமைகள் மொட்டை போட்டனர், மண்சோறு சாப்பிட்டனர், உருண்டனர், புரண்டனர், கோயில்களில் எல்லாம் யாகங்கள் நடத்தினர். தமிழ்நாட்டையே சட்டவிரோதப் போராட்டங்களால் காவல்துறை உதவியுடன் ஸ்தம்பிக்கச் செய்தனர், இந்த அரசியல் பொறுக்கிகள். இப்போது அந்தத் தமிழர்கள் எங்கே போனார்கள். தூக்குத் தண்டனைக்கு எதிராக ஏன் போராட வரவில்லை. இந்த வாக்கு வங்கி அரசியல் எந்தத் தீர்வையும் கொண்டுவராது. தமிழர்களாகிய நாம் உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வீதியில் இறங்கிப் போராடுவதின் மூலம் மட்டுமே விடியலைக் கொண்டு வர முடியும்.

நடராஜன் து.தலைவர் HRPC

சர்வதேச அரங்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்த பல நாடுகளில் ஒன்று இலங்கை. ஆனால் ராஜபக்சே என்ற இந்த ரத்தக்காட்டேரி தமிழர்களின் ரத்தம் குடிக்கத் துடிக்கிறது. வீரவசனம் பேசிய அரசியல் கட்சிகள் எல்லாம் இன்று அடக்கி வாசிக்கின்றனர். தமிழக மீனவர்கள் 600 பேரை இலங்கை அரசு சுட்டுக் கொன்ற பின்பும் ஏன் இந்த மௌனம். பாட்டாளி வர்க்கச் சிந்தனையை உயர்த்திப் பிடித்துப் போராடுவதின் மூலமே மோடிக்கும் சு.சாமிக்கும் பாடம் கற்றுத் தர முடியும்.

தினகரன் செய்தி
தினகரன் செய்தி

ஆர்ப்பாட்டம் ! ஆர்ப்பாட்டம் !
அப்பாவி மீனவர்களுக்கு
அநீதியாக விதிக்கப்பட்ட
தூக்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
HRPC ஆர்ப்பாட்டம் !

பொய் வழக்கு ! பொய் வழக்கு !
அப்பாவி மீனவர்கள் மீது
போதைப் பொருள் கடத்தியதாக
பொய் வழக்கு ! பொய் வழக்கு !

பதில் சொல்! பதில் சொல்!
மீனவர் பிரச்சனையை
உடனே தீர்ப்பேன்னென்ற
மோடி அரசே பதில் சொல்!
மக்களுக்கு பதில் சொல் !

தி இந்து செய்திசுட்டுக் கொலை ! சுட்டுக் கொலை !
அறுநூறு மீனவர்கள்
இதுவரை சுட்டுக் கொலை !
சின்ன நாடு இலங்கைக்கு
‘வல்லரசாகும்’ பெரிய நாடு
இந்திய மீனவர்களை
சுட்டுக் கொல்லும் தைரியம்
வந்ததெப்படி? வந்ததெப்படி?

தைரியம் எப்படியென்றால்
ராஜபட்சே அரசுக்கு
இந்திய அரசே துணை நிற்குது!

காங்கிரஸ் அரசோ ! பிஜேபி அரசோ
எல்லாமே ஒன்றுதான் !
தமிழ் மக்கள் விரோதிதான் !

ராஜபட்சேவுக்கு பாரத ரத்னா
கேட்குறார் சு.சாமி
பிஜேபியின் மூத்த தலைவர்
நடிக்குது ! நடிக்குது !
தமிழ் நாடு பிஜேபி
நடிக்குது ! நடிக்குது !

தேர்தலுக்கு முன்னால்
வாய் பிளக்கப் பேசுனாரு
பிரதமர் நரேந்திர மோடி !
ஆனா இப்பப் பேசல !
5 பேர் தூக்கிற்கு வாயே தெறக்கல !
வாயில் என்ன புற்று நோயா !
ஆரிய சிங்கள இனப்பற்றா !

பதில் சொல் ! பதில் சொல் !
மோடியே பதில் சொல் !
பிஜேபியே பதில் சொல் !

குஜராத் முதலாளிக்கு
சோமாலியா கடலிலே
பிரச்சனை வந்தபோது
கடற்படையை அனுப்பின !

ஆஸ்திரேலியா நாட்டிலே
பணக்கார மாணவர்களுக்கு
பிரச்சனை வந்தபோதுமத்திய அரசே துடித்தது !
சுப்ரீம் கோர்ட்டு பதறியது !

ஆனா இப்பப் பேசல !
மத்திய அரசு பேசல !
சுப்ரீம் கோர்ட்டும் பேசல !
மீனவர்கள் ஏழை என்பதால்
எவனுமே பேசல !

தைரியம் இருக்கா?
மோடிக்கு தைரியம் இருக்கா?
இலங்கை உடனான
தூதரக உறவுகளை
துண்டிக்கத் தைரியம் இருக்கா?

பொருளாதாரத் தடை விதிக்க
பிஜேபிக்குத் தைரியம் இருக்கா?
பிஜேபிக்கு ஆதரவாக
பிரச்சாரம் செய்த
வைகோவே – ராமதாசே
விஜயகாந்தே பதில் சொல் !

துணை நிற்போம்! துணை நிற்போம் !
ஏழை மீனவர்களுக்கு
தமிழக மக்கள் துணை நிற்போம் !
நம்ப மாட்டோம் ! நம்ப மாட்டோம் !
ஓட்டுப் பொறுக்கும் கட்சிகளை
நம்ப மாட்டோம் ! நம்ப மாட்டோம் !
கட்டியமைப்போம் ! கட்டியமைப்போம் !
மீனவர்களுக்கு ஆதரவாக
மக்களே போராட்டத்தை
கட்டியமைப்போம் !

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை

பால் முதலாளிகளுக்கு ஜெயாவின் நன்றிக்கடன் – கோவை ஆர்ப்பாட்டம்

0

பால் விலை உயர்வைக் கண்டித்து கோவை தடாகம் ரோடு இடையர்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் தோழர்கள் பெண்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

ndlf-protest-against-milk-price-hike-kovai-01

கோவை மண்டல சங்கத்தின் முருகன் மில் கிளைத் தலைவர் P.இரங்கசாமி முன்னிலை வகித்து முழக்கமெழுப்பினார். ம.க.இ.க மாவட்டச் செயலாளர் தோழர் மணிவண்ணன் தனது தலைமையுரையில் பால் விலையேற்றத்தின் பின்னணி குறித்தும் மக்கள் படும் வேதனைகளையும், அணி திரள வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கமாகப் பேசினார். பின்னர் இடையர்பாளையம் நான்கு வீதிகளும் சிலிர்க்கும்படி தோழர்கள் சிறப்பான முழக்கங்களை எழுப்பினார்கள்.

இறுதியில் கண்டன உரையாற்றிய தோழர் விளவை இராமசாமி, பால் விலையேற்றத்தின் பின்னணியில் சதிகாரி ஜெயலலலிதாவின் சொத்து வழக்கு உள்ளது. ஜாமீன் பெறுவதற்கு பல கோடிக்கணக்கான் ரூபாய் கைமாறி உள்ளது. ராம் ஜெத்மலானி, நாரிமன் என ஏராளமானோர் இதில் உள்ளடங்கி உள்ளனர். இவர்களை உரிய முறையில் உபசரித்தது யார் என்றால் தனியார் பால் நிறுவன முதலாளிகளான் திருமலா, டோட்லா, ஹேரிட்டேஜ், ஜெர்சி போன்றோர். இவர்களுக்கு நன்றி கடன் செலுத்தவே பால் விலை பத்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்றார். அது போல சர்க்கரை விலை 3 ரூபாய் ஏற்றத்தின் பின்னாலும் பாசிச ஜெயாவின் நண்பர்களான ஆந்திர கர்நாடக சர்க்கரை ஆலை முதலாளிகள் உள்ளனர். எனவே இதனை முறியடிக்க வேண்டுமானால் மக்கள் ஓட்டுப்போடுவதால் ஒன்றும் செய்ய முடியாது, கருணாநிதி சொல்வது போல புரட்சி செய்ய வேண்டும். ஆனால் அப்புரட்சி கருணாநிதி உள்பட சகல ஓட்டுப்பொறுக்கி கட்சிகளுக்கும் ஒட்டு மொத்தமாக பால் ஊற்றுவதாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு புரட்சிக்கு வரலாறு காத்திருக்கிறது. அதனை நாம் தோள் கொடுத்து நிறைவேற்ற வேண்டும் என அறைகூவல் கொடுத்து கண்டன உரையை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கோவை
9629730399
8220840468

நவம்பர் 7 – இந்த மண்ணில் ஒரு சொர்க்கம் சாத்தியமா ?

1

ன்பார்ந்த உழைக்கும் மக்களே, மாணவர்களே, இளைஞர்களே,

மனிதனை மனிதன் சுரண்டும் முதலாளித்துவக் கொடுமைக்கு முடிவு கட்டி சாதாரண உழைக்கும் மக்களும் ஆட்சி அதிகாரத்தைப் பெறமுடியும் என்பதை உலகுக்கு முதன்முதலில் நிரூபித்துக் காட்டியது ரசியப் புரட்சி. அந்த நாள்தான் நவம்பர் 7, 1917. அந்த புரட்சிநாள் தான் உழைக்கும் மக்களாகிய நம் அனைவரின் பண்பாட்டு விழாவுமாகும்.

ரசியாவில் சோசலிச அரசு அமைக்கப்படுவதற்கு முன் உழைக்கும் மக்கள் வறுமையில் வாடினார்கள். மாணவர்களுக்கு கல்வியறிவு கிடைக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலையில்லை. தொழிலாளர்களும், விவசாயிகளும் உரிமைகள் ஏதுமின்றி நசுக்கப்பட்டனர். முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் கீழ் ரசிய நாடே சூறையாடப்பட்டுக் கிடந்தது.

ரசிய புரட்சிக்குப்பின் அமைக்கப்பட்ட சோசலிச அரசு தங்கள் குடிமக்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுத்தது. வறுமையை ஒழித்தது; அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்பதை அடிப்படை உரிமையாக்கியது; விளையாட்டுத்துறையை மேம்படுத்தி உலகளவில் பல சாதனைகளை படைத்தது; பெண்ணடிமைத்தனத்தை ஒழித்தது; சாதாரண பால்காரம்மாவை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பி உழைக்கும் மக்களின் ஜனநாயகத்தை நிலைநாட்டியது; விவசாயம், தொழில்துறையை உலகமே வியக்கும் வகையில் வளர்த்தெடுத்தது. மொத்தத்தில் இம்மண்ணில் ஒரு சொர்க்கத்தை படைத்துக் காட்டியது.

நம் நாட்டிலும் இப்படி ஒரு சொர்க்கத்தை படைக்க வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு எழுகிறதா? அதற்கு நம் நாட்டின் இழிநிலையை மாற்றியமைக்க வேண்டும்.

நம் அனைவருக்கும் அரசே இலவசமாக வழங்கவேண்டிய சேவைகளான கல்வியும், மருத்துவமும் தனியார் முதலாளிகள் கையில். இயற்கை நமக்குத் தந்த கொடையான தண்ணீரும் காசு இல்லாமல் கிடைக்காது. நமது வருமானமும், வாழ்க்கைத்தரமும் உயரவில்லை. ஆனால் விலைவாசி உயர்வு மட்டும் நாள்தோறும் வாட்டி வதைக்கிறது.

இதோ ஆவின்பால் விலை உயர்வு நம் தலையில் இடியைப் போல் இறக்கப்பட்டுள்ளது. அடுத்து மின்கட்டணம் நம்மை சுட்டெரிக்கத் தயாராகி வருகிறது.

இதுமட்டுமா, நாட்டு மக்கள் தொகையில் சரிபாதியினரான இளைஞர்களுக்கோ வேலை இல்லை; வேலை தர வக்கற்ற இந்த அரசு இளைஞர்கள் மீது டாஸ்மாக் சாராயத்தையும், நுகர்வுவெறி மோகத்தையும், பாலியல் வக்கிரங்களை பரப்பும் இண்டர்நெட்டையும், மெமெரி கார்டையும் அன்றாடம் திணித்து சீரழிவில் தள்ளி வருகிறது.

வேலை வாய்ப்பை வாரி வழங்கப் போவதாக சொல்லி வந்த நோக்கியா கம்பெனி இழுத்து மூடப்பட்டு விட்டது. வேலையிழந்த தொழிலாளர் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. விவசாய நிலங்களும், மலைகளும், காடுகளும், ஏரி, குளம், ஆறுகளும், கனிம வளங்களும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக அன்றாடம் சூறையாடப்படுகின்றன.

இப்போது சொல்லுங்கள் நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா?

இல்லையே என்கிறீர்களா?

அப்படியென்றால் இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் யார் காரணம்? இதை தெரிந்துகொள்ள வேண்டாமா?

1991 -க்குப் பின் நம் நாட்டில் புகுத்தப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள்தான்.

காங்கிரசு, பா.ஜ.க, அதிமுக, திமுக எந்த ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் நம்மை ஆண்டாளும் இந்த நாசகாரக் கொள்கைகளைத்தான் அவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள். நம் வாழ்க்கையை சூறையாடுகிறார்கள். இது நமக்கான அரசா? இல்லை. இல்லவே இல்லை என்பது இப்போது புரிகிறதா? கார்ப்பரேட் முதலாளிகள் நலன் கொண்ட அரசு இது.

சட்டம், போலீசு, நீதிமன்றம், அதிகாரிகள், அரசின் துறைகள் என அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் சட்டைப் பாக்கெட்டில். இவைகள் அனைத்தும் லஞ்ச – ஊழலில் மலிந்துகிடக்கின்றன. இவர்கள் போடும் சட்டங்களை இவர்களே மதிப்பதில்லை. இவர்கள் சொல்லும் நீதி, நியாயம், ஒழுக்கம் அனைத்தையும் இவர்களே காலில்போட்டு மிதிக்கிறார்கள். ஒட்டுமொத்த அரசே அழுகி நாறிக்கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, மத்தியில் ஆளும் மோடி அரசாகட்டும், தமிழ்நாட்டு கிரிமினல் லேடி ஜெயா வின் பொம்மை அரசாகட்டும் இவைகளின் செயல்பாடுகளைப் பாருங்கள். கிரிமினல்மயமான ஒரு மாஃபியா கும்பலைப் போல் செயல்படுவது தெரியும். மக்கள் சொத்தை கொள்ளையடிக்கிறார்கள், அதையே நியாயம் என்கிறார்கள். கேள்வி கேட்பவர்களை போலீசை ஏவி ஒடுக்குகிறார்கள். ’ஜெயில்’ லலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கும், ஜெயிலும்,பெயிலும், அதிமுக ரவுடிகளின் வன்முறையும் இதற்கு ஒரு உதாரணம் மட்டுமே.

சற்று சிந்தித்துப் பாருங்கள் உழைக்கும் மக்களாகிய நமக்கு இங்கு உரிமைகள் ஏதாவது இருக்கிறதா. துளியளவும் இல்லையே. இப்படிப்பட்ட அரசமைப்புக்குள் நமது பிரச்சனைகளை எப்படி தீர்த்துக்கொள்ள முடியும்.

அப்படி தீர்த்துக்கொள்ள முடியாத, நமக்கு எந்த வகையிலும் பயன்படாத, அழுகி நாறுகின்ற இந்த அரசமைப்பை இன்னும் ஏன் நாம் கட்டிக்கொண்டு அழவேண்டும். தூக்கியெறிவோம் இந்த அரசமைப்பு முறையை.

நம் கையில் அதிகாரம் இருக்கும் வகையில் மாற்று அதிகார அமைப்புகளுக்கான போராட்டக் கமிட்டிகளை கட்டியெழுப்புவோம்.

அதற்கு உழைக்கும் அனைவரும் அமைப்பாக அணிதிரள்வோம். நம் நாட்டிலும் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்,

இம் மண்ணிலும் ஒரு சொர்க்கத்தைப் படைப்போம்.

நவம்பர் – 7

ரசியப்புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்!
நவம்பர் – 2 ல் பு.மா.இ.மு நடத்திய விளையாட்டு விழா!

சென்னையில்  செயல்பட்டு வருகின்ற புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல் / டாக்டர். சந்தோஷ் நகர்,எழும்பூர் ஆகிய இடங்களில் நவம்பர் 7-ம் தேதி ரசியப் புரட்சிநாள் விழாவினை, நமது பண்பாட்டு விழாவினை, உழைக்கும் மக்களாகிய குடும்ப விழாவினை சிறப்பாகக் கொண்டாடியது.

[துண்டறிக்கையை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

குரோம்பேட்டை பு.மா.இ.மு கிளையின் சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பாட்டம் மற்றும் லெமன் ஸ்பூன், தண்ணீர் நிரப்புதல் என சிறார்களை ஈர்க்கும் வகையில் போட்டிகள் திட்டமிடப்பட்டன.

கிளைச் செயலர் தோழர் தம்புராஜ் தொடக்கவுரை நிகழ்த்தி விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். கலந்து கொண்ட மாணவர்கள் நவம்பர் 7 விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தி சென்றுள்ளனர்.


[புகைப்படங்களை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை. 9445112675

படேல் சிலை – மோடியின் நார்சிசமும், பாசிசமும் !

8

2014 பாராளுமன்ற தேர்தல் வரை மோடியின் அடையாளமாக காட்டப்பட்டது என்னவென்று நினைவிருக்கிறதா? வளர்ச்சியைத் தவிர்த்த வேறு எந்த சிந்தனையும் இல்லாதவர் அவர் என்பதாகவே மோடியின் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அடிப்படைவாதத்தால் வளைக்க முடியாத மக்கள் கூட்டத்திடம் மோடியின் வளர்ச்சி முகத்துக்காக எங்கள் மற்ற பாவங்களை மன்னியுங்கள் என்ற தொனியில்கூட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

மோடியின் படேல் சிலை
படேலுக்கு சிலை வைக்கப் போகும் மோடி

ஆனால் இந்த திட்டத்தில் கொஞ்சமும் இணைக்க முடியாத ஒரு செயலாக அவரது படேல் பாசம் இருந்தது. உலகிலேயே பெரிய சிலையை படேலுக்கு வைக்கப்போகிறேன் என்றார், அதற்காக இரும்பு திரட்டப்போகிறேன் என்றார், படேலுக்காக எல்லோரும் மராத்தான் ஓடுங்கள் என்றார். இந்த ஒரு நடவடிக்கை மட்டும் அவரது அமெரிக்க பாணி பிரமோஷனுக்கு சற்றும் தொடர்பற்றதாக இருந்ததை அன்றைக்கு ஓங்கி ஒலித்த விளம்பர ஒலியில் நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். இன்றைக்கு ஒரு தீவிர ஆர்எஸ்எஸ்காரரான மோடி காங்கிரஸ் தலைவரான படேலை ஆராதிப்பதற்கான வரலாற்றுக் காரணங்களை முதலில் பரிசீலனை செய்யலாம்.

நாதுராம் கோட்சே தான் யாரையெல்லாம் சுதந்திரப் போராட்ட வீரர்களாக கருதுகிறேன் என்பதை தனது வாக்குமூலத்தில் இப்படி பட்டியலிடுகிறார். “ திலகர், என்.சி.கேல்கர், சி.ஆர்.தாஸ், மதிப்பிற்குரிய சர்தார் படேலின் சகோதரர் விதல்பாய் படேல், பண்டிட் மாளவியா, பாய் பரமானந்த் மற்றும் கடந்த பத்தாண்டுகளாக முக்கிய இந்துசபா தலைவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதியினருக்கே அதற்கான பெருமை போய்ச்சேர வேண்டும்.” (1993ல் கோபால் கோட்சே வெளியிட்ட நாதுராம் கோட்சேயின் வாக்குமூலமான – நான் ஏன் மகாத்மா காந்தியை கொலை செய்தேன் நூலில் இருந்து). படேலை அவர் குறிப்பிடும் விதத்தை கவனியுங்கள் “மதிப்பிற்குரிய சர்தார் படேல்” ஏனைய நாடறிந்த பெயர் எதையும் அவர் குறிப்பிட்டிருக்கவில்லை. சரி, ஆர்.எஸ்.எஸ்சின் படேல் பாசத்தைப் பார்த்தாயிற்று.

சர்தாரின் ஆர்.எஸ்.எஸ் காதலை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

1947 டிசம்பர் 29-ம் தேதி பிரதமர் நேரு உள்துறை அமைச்சர் படேலுக்கு எழுதுகிறார் “ அஜ்மீரில் இருந்த 50 ஆயிரம் முஸ்லீம்களில் பத்தாயிரம் பேர் வெளியேறிவிட்டதாகவும் வெளியேற்றம் இன்னமும் தொடர்வதாகவும் அறிகிறேன். அங்கும் இதர பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ் தாக்கும் மனோபாவத்தில் உள்ளது. அவர்கள் விடுக்கும் மிரட்டல்கள் பலரையும் பயமுறுத்துகிறது”. இந்த கடிதத்துக்கு படேலிடமிருந்து முறையான பதிலில்லை. ஆகவே நேரு பஞ்சாயத்திற்காக காந்தியிடம் செல்கிறார். 1948 ஜனவரி 6-ம் தேதி காந்திக்கு அவர் குறிப்பொன்றை அனுப்புகிறார், நகல் படேலுக்கும் செல்கிறது. உள்ளடக்கம் இதுதான் “எனக்கும் சர்தாருக்கும் மனோபாவங்களில் வேறுபாடு உள்ளது என்பது மட்டுமல்ல, பொருளாதார மற்றும் மதவெறி விஷயங்களை எப்படி அணுகுவது என்பதிலும் வேறுபாடு உள்ளது.”

இதற்கான படேலில் பதில், ஆமா அதுக்கு என்ன இப்போ எனும் தோரணையில் இருந்தது. ஜனவரி 12-ம் தேதி அவரது பதில் குறிப்பு இப்படியிருந்தது ”மனோபாவம், பொருளாதார விஷயங்கள் மற்றும் இந்து முஸ்லீம் உறவுகளை பாதிக்கும் விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது என்பதில் மறுப்பு ஏதுமில்லை”.

நாதுராம் கோட்சேவுக்கு பத்திரிகை நடத்த ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தவர் சாவர்க்கர். ஜனவரி 20, 1948-ம் தேதி காந்தியைக் கொல்ல முயன்றதற்காக கைது செய்யப்பட்ட மதன்லால் பாவா இரண்டு முக்கியமான தகவல்களை சொல்கிறார். இந்த கொலை முயற்சிக்கு முன்பு தான் சாவர்க்கர் சதனில் சாவர்க்கரை சந்திதத்தாகவும், தன்னுடன் ஆறுபேர் கொண்ட கோஷ்டியும் இச்சதியில் பங்கேற்றதாகவும் அதில் ஒருவர் ராஷ்ட்ரீய அல்லது அக்ரானி மராட்டா எனும் பெயர் கொண்ட மராத்தி பத்திரிக்கையின் ஆசிரியர் எனவும் குறிப்பிடுகிறார். அந்த ஆசிரியர்தான் ஜனவரி 30, 1948-ம் தேதி காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே.

பிப்ரவரி 20ல் (1948) நேரு படேலுக்கு மிக முக்கியமான கடிதமொன்றை எழுதுகிறார். கேரா எனும் அதிகாரியின் குறிப்பை மேற்கோள் காட்டும் அக்கடிதம் இப்படி இருக்கிறது “ ஜனவரி 20-ம் தேதி நடக்காமல் போனதை போலீசின் அலட்சியத்தை பயன்படுத்தி இப்போது நிறைவேற்றிக்கொண்டார்கள். அவர்கள் பற்றிய விவரங்களும் அவர்களது கூட்டாளிகளது பெயர்களும் போலீஸ் வசம் இருந்தன. அவர்கள் 20ம் தேதி மும்பை திரும்பி மீண்டும் 28 அல்லது 29ல் டெல்லி வந்திருக்கிறார்கள். ஒரு சாதாரண சோதனையில்கூட அவர்களை கண்டு பிடித்திருக்க முடியும். இது அலட்சியமல்ல, அரசு அதிகாரத்தைப் பராமரிப்பதில் மோசமான விருப்பமின்மையோடு இருந்திருக்கிறது”.

இதனை இன்னும் தீவிரமான அலட்சியத்தோடு அணுகுகிறார் படேல். இது தீவிர உணர்ச்சி தந்த அழுத்தத்தில் எழுதப்பட்ட குறிப்பு என பதிலளித்து விசயத்தை 21 பிப்ரவரியிலேயே முடிக்கிறார் படேல். காந்தி கொலைச்சதியை தீவிரமாக விசாரிப்பதாக பாவனை செய்யக்கூட அவர் தயாராக இல்லை என்பது படேலின் பதிலில் தெளிவாக வெளிப்படுகிறது.

இவ்விடயத்தை இன்னும் ஒருமுறை படேலுக்கு அதே பிப்ரவரி 26 அன்று நினைவூட்டுகிறார் நேரு. “பாபுவின் படுகொலை குறித்த விசாரணையில் உண்மையை கண்டுபிடிப்பதில் உண்மையான முயற்சி இல்லாததாகப் படுகிறது. இக்கொலை ஒரு தனிப்பட்ட வேலையல்ல, மாறாக பிரதானமாக ஆர்.எஸ்.எஸ் ஆல் நடத்தப்பட்ட ஒரு விரிவான இயக்கத்தின் ஒரு பகுதி என்றே நான் மேலும் மேலும் கருதுகிறேன். டில்லி போலீசாரில் பலர் ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளாக இருப்பது மேலும் ஆபத்தானதாக உள்ளது.”

மோடி - படேல் பாசம்
உலகிலேயே பெரிய சிலையை படேலுக்கு வைக்கப்போகிறேன் என்றார், அதற்காக இரும்பு திரட்டப்போகிறேன் என்றார்

இத்தனை தீவிரமான நினைவூட்டலுக்குப் பிறகும் படேலின் காவி மூளை ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு உடனடி ஊழியம் செய்கிறது. மறுநாளே படேல் இப்படி தீர்ப்பளிக்கிறார் “குற்றவாளிகள் வாக்குமூலத்தில் இருந்து இதில் ஆர்.எஸ்.எஸ் பங்கேற்கவில்லை என தெரிகிறது. பலரும் நினைப்பதுபோல இதன் பின்னால் பெரிய சதி ஏதுமில்லை (27.02.1948 கடிதம்)”.

ஆனால் இவ்வழக்கின் தீர்ப்புக்கு பெரிய ஆதாரமாக கொள்ளப்பட்ட திகம்பர் பட்கே எனும் ஆர்.எஸ்.எஸ்சின் ஆயுத வினியோகஸ்தரின் வாக்குமூலம் கோட்சே சம்பவத்திற்கு முன்பு சாவர்கரிடம் ஆசி பெற்றதாக சொல்கிறது (1948 ஜனவரி 14 மற்றும் 17 தேதிகளில்). இரண்டாம் சந்திப்பில் வெற்றியோடு திரும்பிவாருங்கள் என அவர்கள் தோளில் கைபோட்டுக்கொண்டு ஆசீர்வதித்ததாக குறிப்பிடுகிறார் பட்கே. சாதாரண தையற்காரரான கோட்சேவுக்கு எப்படி ஆயுதம் வாங்கவும் பம்பாய்க்கும் டெல்லிக்கும் விமானத்தில் பறக்கவும் பணம் வந்த்து என்பது பற்றி விசாரணை செய்யப்படவில்லை.

சாவர்கரை தப்பிக்க வைக்க கோட்சே இச்சதியை தான் மட்டுமே செய்ததாக ஒப்புக்கொள்கிறார். மற்ற குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகு, பட்கேயின் வாக்குமூலத்தைக்கொண்டு மட்டும் சாவர்கரை தண்டிக்க முடியாது என சொல்லி அவரை மட்டும் விடுவிக்கிறார் நீதிபதி ஆத்மாசரண். அப்போது நீதிமன்றத்திலேயே சாவர்க்கர் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள் மற்ற குற்றவாளிகள். சதியில் பங்கேற்காதவர் காலில் சதிகாரர்கள் விழுந்திருக்கிறார்கள்.. இந்து தர்மம்தான் எத்தனை மகத்தானது!!! தேசத்தலைவர் என சொல்லப்பட்டவரின் கொலைவழக்கில் பிரதான குற்றவாளியொருவர் விடுவிக்கப்பட்ட பிறகு அரசு அப்பீலுக்கு போகவில்லை. மேலோட்டமான பார்வையிலேயே இவ்வழக்கில் ஆர்.எஸ்.எஸ்சின் பங்கை நம்மால் தெரிந்துகொள்ள முடியும், அதனை மறைப்பதில் படேலுக்கு இருந்த அக்கறையையும் நம்மால் உணர இயலும். படேலின் காவி பாசத்தை இன்னும் நெருக்கமாக பார்க்கவும் ஆதாரமிருக்கிறது.

அவ்வமைப்பை படேல் தடை செய்தார் என்பது உண்மையென்றாலும், அது அதன் தலைவர்களை சிறைவைத்து பாதுகாக்கவே என கருத எல்லா நியாயங்களும் இருக்கிறது. அப்போது மக்கள் இந்து அடிப்படைவாதிகள் மீது கடும்கோபத்தில் இருந்திருக்கிறார்கள். காந்தி கொல்லப்பட்ட அன்று சாவர்கர் வீட்டை தாக்கியவர்கள் 500 பேர். அப்போது படுக்கையறையில் ஒடுங்கி ஒளிந்துகொண்டிருந்தார் ”வீர” சாவர்க்கர். வாய்ப்பிருந்தும் கோட்சேயை முன்பே கைது செய்யாத காவல்துறை இப்போது மட்டும் சரியான நேரத்தில் சாவர்கரை காப்பாற்றியது.

ஆர்.எஸ்.எஸ்சின் மீதான தடையை விலக்கிக்கொள்ளச் சொல்லி கோல்வால்கர் நேருவுக்கு கடிதம் அனுப்புகிறார். கம்யூனிச எதிர்ப்பில் அரசுக்கு உதவுவதாக ஆஃபரும் கொடுக்கிறார். அவர்களை தேசவிரோத அமைப்பென குறிப்பிட்ட நேரு, இதுபற்றி முடிவெடுக்க வேண்டியது படேலின் உள்துறைதான் என பதிலளிக்கிறார். வேண்டுகோள் கடிதம் படேலுக்கு போகிறது. இரும்பு மனிதர் கருணையோடு பதிலளிக்கிறார் “ காங்கிரசில் சேருவதன் மூலம் நீங்கள் உங்களது தேசபக்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் (11.09.1948 தேதியிட்ட கடிதம்)”. பிறகு இன்னொரு ஆலோசனை வழங்குகிறார், ஆர்.எஸ்.எஸ் தமக்கென ஒரு அமைப்புச்சட்டத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதே அது. அந்த கட்டளையை 1949 ஜூனில் நிறைவேற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். அதையே காரணமாக வைத்து அவர்கள் மீதான தடையை விலக்கிக்கொள்கிறார் படேல்.

இந்து மகாசபையின் தலைவராக இருந்த சியாமா பிரசாத் முகர்ஜி மே 4 1948ல் படேலுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் ”அவரது (சாவர்க்கர்) அரசியல் கோட்பாடுகளுக்காகவே அவர் விசாரிக்கப்பட்டார் என்று பின்னாளில் பேச்சு எழும்படி எதுவும் நிகழாதவாறு பார்த்துக்கொள்வீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை”.

இதற்கு மே 6 ல் பதிலளிக்கிறார் படேல் “சாவர்க்கரை குற்றவாளிப் பட்டியலில் சேர்ப்பதைப் பொறுத்தவரை சட்டம் மற்றும் நீதிமுறைமை எனும் கோணத்தில் மட்டுமே பார்க்கவேண்டுமேயொழிய அரசியல் காரணங்களை இதில் இழுக்கக்கூடாது என அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறேன்”.

வல்லபாய் படேலுக்கு இருந்த காவிப்பற்றையும் காவி காலிகள் படேலுக்கு எத்தனை தூரம் நன்றிக்கடன்பட்டவர்கள் என்பதையும் அறிய இருக்கும் எண்ணற்ற ஆதாரங்களில் மிகச்சிறு பாகம்தான் நாம் இதுவரை விவாதித்தது. காவிகளின் இன்றைய அசுர வளர்ச்சிக்காக படேல் ஆற்றிய சேவை அளப்பரியது. அதற்காவே பாஜக அவரைக் கொண்டாடுகிறது.

ஆனால்…

மோடி படேல் சிலையாக
இன்னமும் எம்ஜிஆராக வேடமிடும் சிலரைப்போல.

ஒப்பிட முடியாத ஒரு விளம்பர மோகியான மோடிக்கு படேல் மீது இத்தனை நன்றியுணர்ச்சி வர வாய்ப்பேயில்லை. ஏனெனில் நார்சிசம் என்பது நன்றியுணர்வின் பரம விரோதி. ஆகவே மோடியின் இந்த படேல் பாசத்திற்கு வேறொரு காரணம் இருந்தே ஆகவேண்டும்.

தான் கவனிக்கப்படவேண்டும் எனும் தேவைக்கும் தனது பாத்திரம் என்ன என்பதில் இருக்கும் குழப்பத்துக்கும் இடையேயான முரண்பாடுதான் வளர் இளம்பருவத்தவரின் மனோநிலை என்கிறார்கள் உளவியில் அறிஞர்கள். எப்படியேனும் அடுத்தவர் கவனத்தை பெறவேண்டும் எனும் தணியாத தாகம் இளையோருக்கு இருக்கும். ஆனால் எப்படி அதனை செய்வது என்பது அவர்களுக்கு தெரியாது. தங்களது சரியான பாத்திரம் இச்சமூகத்தில் எது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே தன்னை வசீகரித்த ஒரு ஆளுமையின் நகலாக தன்னை காட்டிக்கொள்வதன் மூலம் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வார்கள். அதனால்தான் ரசிகர் மன்றங்கள் பெரும்பாலும் விடலைப் பையன்களால் நிரம்பியிருக்கின்றன. பெரும்பாலானவர்களுக்கு இந்த சிக்கல் சில காலத்தில் சரியாகிவிடும், ஆனால் சிலருக்கு இது ஆயுளுக்கும் தொடரலாம். இன்னமும் எம்ஜிஆராக வேடமிடும் சிலரைப்போல.

எனினும் இதை ஒரு சமூகவியல் பார்வையிலும் பார்க்க வேண்டியுள்ளது. தனக்கு கீழ் அதிகாரம் செல்லுபடியாகும் சமூக அடிப்படையையும், சித்தாந்தத்தையும் கொண்டிருப்போருக்கு இது சற்று வேறு தளத்திலும் செயல்படுகிறது. குறிப்பிட்ட அதிகாரம் தரும் போதையிலும், திளைப்பிலும் மூழ்கியிருப்போர் தன்னைப் பற்றிய சுய மதிப்பீட்டை மிகையாகவும் செய்து கொள்கிறார்கள். அதன்படி இந்த உலகை உய்விக்க வந்த அதீத மனிதர்களாகவும் கருதிக் கொள்கிறார்கள். இதில் அகநிலை, புறநிலை என்று பிரிக்கமுடியாத படி அவர்களது சமூக அதிகாரத்திற்கான இருப்பு பங்காற்றுகிறது.

மோடிக்கு இருப்பதும் இதையொத்த பிரச்சனைதான். அவருக்கு தான் எப்போது கவனிக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் எனும் விருப்பம் இருக்கிறது. இந்த நார்சிச பண்புடன் மோடியை மீட்பராக முன்னிறுத்தும்ஆளும் வர்க்கத்தின் விளம்பர நடவடிக்கைகளும் கணிசமாக கூட்டிவிடுகின்றது. ஒரு வகையில் ஆளும் வர்க்கத்தின் அடியாள் தன்னை கடவுளாக நினைத்துக் கொண்டாலும் அந்த வர்க்கத்திற்கு கவலை இல்லை. வேலை நடந்தால் சரி என்பதால் அவர்கள் இதை பெரிது படுத்த மாட்டார்கள்.

ஆகவே தன்னைத்தானே மீட்பராக கருதிக் கொள்ளும் மோடியிடம் இவை தொடர்பான சில குழப்பங்கள் இருக்கவே செய்யும். முக்கியமாக அவர் அப்படி குழப்பம் என்று உணர வேண்டியதில்லை. இதை மோடியின் பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக அறியலாம். அவர் அம்மா இன்னமும் ஆட்டோவில் பயணிக்கிறார், இதன்மூலம் அவர் எளிமையானவராகவும் அரசுப் பண விசயத்தில் கறாரானவராகவும் காட்டிக்கொள்ள முற்படுகிறார். ஆனால் ஒரு எளிமையை விரும்புபவன் கனவிலும் செய்யத் தயங்குகிற ஆடைஅலங்காரங்களையும் ஒப்பனையையும் அரசுப்பணத்தில் செய்துகொள்பவராக அவர் இருக்கிறார் (அவரது ஆடைகள், கடிகாரம் ஆகியவை லட்சங்களை விழுங்கியவை. பேனாகூட ஆயிரங்களில் விலை கொண்டது)

ஒரு பட்டிக்காட்டு பெண்ணை மனைவியாக அறிவிக்க மறுக்கும் மோடியின் பற்றற்ற துறவி முகம் அதே போன்ற பட்டிக்காட்டு பெண்மணியான அவரது அம்மாவிடம் பணிவு காட்டும் வீட்டுக்கடங்கிய பையனாக தோற்றம் காட்டுகிறது. ஒரு மேட்டுக்குடி தலைவர் தாயை நிலவுடமை பண்பின் அடிப்படையில் அணுகும் போது தாரத்தை முதலாளித்துவ நோக்கில் அணுகுவார் என்பது இந்தியாவுக்கு உள்ள விசேடமான பண்பு.

வானுக்கு கீழ் உள்ள எல்லா விவகாரத்திற்கும் கருத்து சொல்லும் அறிவாளியாக அவர் தன்னை காட்டிக்கொள்ள மெனக்கெடுகிறார். அதற்காக இருநூறுபேர் கொண்ட குழுவும் அவர் வசம் இருந்தது. குப்பை வாருவது முதல் குளோபல் வார்மிங்வரை சகலத்தையும் மேடையில் பேசுகிறார். ஆனால் தனது பேச்சாற்றலை நிரூபிக்க இன்னொரு வழியான பிரஸ்மீட்டை அறவே ஒதுக்குகிறார்.

பிற நாட்டு தலைவர்களுடன்கூட இந்தியில்தான் பேசுவேன் என அறிவிக்கிறார். அடுத்த சில நாட்களில் இஸ்ரோ நிகழ்ச்சியொன்றில் இருபது நிமிடம் ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்து பேசுகிறார். தனது ஆஃப்பாயில் ஆங்கில ஞானம் பற்றிய தாழ்வு மனோபாவம் ஹிந்தி பற்றாக காட்டப்பட்டது. எப்படியேனும் ஆங்கிலம் பேசிவிடவேண்டுமெனும் ஆர்வம் இஸ்ரோவில் வெளிப்படுகிறது.

படேல் சிலைக்காக மோடி
ஒவ்வொரு விளம்பரப் பிரியனுக்கும் தன்னைப்பற்றி பெருமை பேசுவதற்கான காரணங்களை உருவாக்கும் கடமையிருக்கிறது.

தனது அடையாளம் பற்றிய விருப்பத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையேயான பாரிய வேறுபாடு அவரை அலைகழிக்கிறது. இதை நிரப்ப ஆளும் வர்க்க ஊடகங்கள் எவ்வளவுதான் மெனக்கெட்டாலும் ஒரு கோமாளி பாசிஸ்ட்டின் முகத்தை அப்படி எளிதாக மறைத்து விட முடியாது. அதனால் வெளியில் பார்க்கும் பார்வைகளும் விமரிசனங்களும் மோடியை கிண்டல் செய்வது தெரியாமல் போகாது.

ஆகவே வசீகரமான இன்னொரு ஆளுமையோடு தன்னைப் பொருத்திக் கொள்வதன் வாயிலாக தமக்கொரு நிரந்த அடையாளத்தை உருவாக்கிவிடமுடியும் என அவர் கருதுகிறார். காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற பிரபலங்களோடு அவரைப் பொருத்திக்கொள்ள இயலாது. கருத்து முரண்பாடு ஒருபக்கமென்றாலும் அவர்களுடனான ஒப்பீடு கொஞ்சமும் அடிப்படையற்றது என்பது அரைநாளுக்குள் அம்பலப்பட்டுவிடும். சாவர்க்கர், கோல்வால்கர் போன்றவர்களின் வழித்தோன்றலாக காட்டிக்கொள்ளலாம், அவர்களை பெரும்பாலான பாஜக உறுப்பினர்களுக்குகூட யாரென்று தெரியாது.

இந்த தரவுகளோடு ஒப்பிடுகையில் மோடி தன்னை படேலோடு அடையாளப்படுத்திக்கொள்வது கொஞ்சம் செல்லுபடியாகக்கூடிய உத்தியாக இருக்கிறது. படேலை பெரும்பாலானவர்களுக்கு தெரியும், ஆனால் பெரிதாக எதுவும் தெரியாது. ஆகவே அம்பலப்படுவோமென்ற ஆபத்து இல்லை. இருவருக்கும் கொள்கை வேறுபாடு எதுவுமில்லை. எதற்கென்றே தெரியாமல் அவருக்கு அளிக்கப்பட்ட இரும்பு மனிதர் எனும் பட்டம் மோடியை பெரிதும் வசீகரிக்கிறது, மோடி தன்னைப்பற்றி கட்டமைக்க விரும்புகிற பிம்பத்துக்கு அந்த அடைமொழி மிக நெருக்கமானதாக இருக்கிறது.. மூவாயிரம் கோடியை செலவு செய்வதற்கு இதைவிட வேறு காரணம் தேவையில்லை இல்லையா??

ஒரு உண்மைச் சம்பவம் இதனை புரிந்துகொள்ள உதவலாம். தங்கள் தேவாலயத்துக்கு சேவை செய்ய வந்திருந்த சகோதரிகளின் வழியனுப்பு நிகழ்வில் அந்த ஆலயத்தின் பாதிரியார் இப்படி பேசுகிறார் “கடந்த இருவார காலமாக இந்த சகோதரிகள் ஆற்றிய பணிகள் சிறப்பானது. அவர்கள் பொறுப்புணர்வும் அன்பும் நம் மனதைவிட்டு என்றைக்கும் அகலாது. எனது தனிப்பட்ட முயற்சியின் காரணமாகவே இவர்கள் இங்கே சேவையாற்ற வந்திருக்கிறார்கள். ஆகவே சகோதர சகோதரிகளே நாம் நன்றி சொல்வோம், பிரார்த்திப்போம்…” இதில் நன்றியும் பிரார்த்தனையும் யாருக்கு என உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

மோடி சுதந்திர தேவி சிலை
ஒருவரைப் பற்றிய மிகையான துதிபாடல்களும் மதிப்பீடுகளும் அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் அதே வேளையில் அவருடைய உண்மையான தகுதிகளையும் அவருக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.

இதே கதைதான் படேல் சிலை விவகாரத்திலும் நடக்கிறது. இதுவரை யாரும் படேலை கண்டுகொள்ளவில்லை எனும் மோடியின் செய்தியில் அந்த பெருமைக்கு சொந்தக்காரன் நான் என்னும் சுயபுராணம் இருக்கிறது. படேலுக்கு மூவாயிரம் கோடியில் சிலைவைக்கும் மோடி எனும் பெருமைதான் பேசப்படுமே ஒழிய அங்கே படேலின் பெயர் ஒரு கருவிதான். ஒவ்வொரு விளம்பரப் பிரியனுக்கும் தன்னைப்பற்றி பெருமை பேசுவதற்கான காரணங்களை உருவாக்கும் கடமையிருக்கிறது. ஊரான் வீட்டு காசென்றால் அதற்கான பட்ஜெட் மூவாயிரம் கோடியானால் என்ன முன்னூறானால் என்ன??

மோடிக்கு இப்போதிருக்கும் பிரபல்யம் போதாதா? இன்னும் அவர் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள என்ன தேவையிருக்கிறது என அப்பாவிகள் சிலர் கேட்கலாம். அவர்களுக்காக இந்த தகவலை சொல்ல வேண்டியிருக்கிறது. உங்கள் ஆளுமையை தீர்மானிப்பது நீங்கள் எப்படிப்பட்டவர் எனும் யதார்த்தமல்ல, உங்களை நீங்கள் யாராக உணர்கிறீர்கள் என்பதும், நீங்கள் யாராக உணர வேண்டும் என உங்களை இயக்கும் சமூகச் சூழல் என்னவாக விரும்புகிறது – இரண்டும் சேர்ந்த சிந்தனைதான் உங்கள் ஆளுமையை தீர்மானிக்கிறது. ஒருவரைப் பற்றிய மிகையான துதிபாடல்களும் மதிப்பீடுகளும் அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் அதே வேளையில் அவருடைய உண்மையான தகுதிகளையும் அவருக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.

இத்தகைய முரண்பாட்டிற்குள் சிக்கிக்கொள்ளாத ஒரு பாராட்டை அல்லது அடையாளத்தைப் பெறும் வெறி அவர்களை செலுத்திக் கொண்டே இருக்கும். உலகத்தையே அச்சுறுத்திய ஹிட்லருக்கு தான் ஒரு சைவ உணவுக்காரன் எனும் பெருமிதம் மிக அதீதமாக இருந்தது. காரணம் அது ஒன்றுதான் அவர் முழுமையாக சொந்தம் கொண்டாட முடிந்த தனித்தன்மை. பொருளியல் உலகிலிருந்து வரும் பேட்டரி ரீசார்ஜ்ஜோடு இத்தகைய ஆன்மீக ரீசார்ஜ்ஜுகளும் பாசிஸ்டுகளுக்கு தேவைப்படுகிறது.

அப்படித்தான் மோடி தனது தனித்தன்மையே தேடுகிறார். அதில் அவரது சொந்த விருப்பம் என்ன, சொல்லிக் கொடுக்கப்பட்ட யோசனைகள் என்ன என்று பிரித்து பார்க்க வேண்டியதில்லை. சமயத்தில் இரண்டும் வேறு வேறு தேவைகளைக் கொண்டிருந்தாலும் விளைவு சமூகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பயன்படும் என்பதே. இப்படித்தான் மோடி தனது பிம்பத்தை சேதாரமில்லாமல் உப்ப வைக்க முனைகிறார். அதில் ஒன்றுதான் படேல் சிலை. இதில் காங்கிரசுக்கு மாற்றாக பாஜக நிறுவிக் கொள்ளும் முயற்சியோடு படேலின் இந்துத்துவ சார்பையும் சங்க பரிவாரங்கள் பயன்படுத்திக் கொள்ளும். மோடிக்கு உலகில் மிக உயர்ந்த ‘சிலை’ நிறுவிய தலைவர் எனும் புகழ். அதற்கு நமது பணம் மூவாயிரம் கோடியை எடுத்துக் கொள்கிறார்கள்.  இறுதியில் மோடியின் நோக்கமும், மோடியை முன்னிறுத்திய முதலாளிகளின் நோக்கமும் இதுதானே?

– இசையவன்

நீங்க 10 பெண்கள் டாஸ்மாக்கை மூட முடியுமா ?

7

குடிகெடுக்கும் டாஸ்மாக்கை இழுத்துமூடு பெண்கள் விடுதலை முன்னணியின் தொடர் பிரச்சார இயக்கம்

  • குடிகெடுக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடவேண்டும்
  • லட்சக்கணக்கான மக்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்
  • எதிர்கால சந்ததிகள் குடிவெறிக்கு பலியாவதை தடுக்க வேண்டும்

என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 மாதமாக பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் திருச்சி நகரம் முழுவதும் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. வேன் பிரச்சாரம், வீதி நாடகம், ஆயிரக்கணக்கான மக்களிடம் பிரசுரம் வழங்குதல், கடைவீதி, பேருந்து, குடியிருப்பு, பெண்கள் பணி புரியும் இடங்கள் என பல்வேறு பகுதியிலும் இந்த பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது.

கையெழுத்து இயக்கம்

[படங்களைப் பெரிதாகப்  பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மக்கள் கூடும் பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், கடைவீதி, பள்ளிகள், கல்லூரிகள், ஆட்டோ நிறுத்தங்கள் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் சீர்கேட்டை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு தரப்பிலான மக்களை சந்திக்க முடிந்தது. பெண்கள், ஆண்கள் ஆர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் கையெழுத்திட்டனர்.

சிலர் விவாதமும் செய்தனர்.

“ஏம்மா நீங்க 10 பேர் சேர்ந்து அரசாங்கத்தை முறியடிக்க முடியுமா? இது ஆகிற கதையா? வேறு ஏதாவது வேலையை பாருங்க” என சலித்து கொண்டனர்.

“வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்க வேண்டும் என அரசு முடிவு செய்து IAS , IPS ஆகிய மேதாவிகளுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி வருகிறது. இதனை முறியடிக்க ஊருக்கு 10 நபராவது சேர்ந்து தட்டி கேட்க வேண்டாமா? நமக்கு ஏன் வம்பு, நம்மால் முடியுமா என ஒவ்வொருவரும் விலகி சென்றால் இந்த கொடுமையை யார் தான்” கேட்பது என பதிலளித்ததும் பலரும் கையெழுத்திட்டனர்.

“இந்த சாராய கடையை மூடிட்டா அப்புறம் கஞ்சா, கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும். அப்ப என்ன செய்வீங்க” என்றார் இன்னொரு நபர். (அவர் பாக்கெட்டில் அம்மா படம் பல் இளித்துக் கொண்டிருந்து)

“அடுத்தவன் குடி கெடுப்பான் என தெரிந்தும் அதனை முறியடிக்க முயற்சிக்காமல் தன் குடியை தானே கெடுக்க நினைப்பது புத்திசாலித்தனமாகுமா?” என வினவியதும் பதிலாளிக்காமல் அவசரமாக பேருந்தை பிடிக்க ஓடினார்.

அரசு பேருந்து நடத்துனர் “ஐயோ, டாஸ்மாக் எங்க குலதெய்வம், இதனை மூட நான் ஒத்துக்க மாட்டேன்” என்றார்.

“வருங்கால சந்ததிகளும் இந்த சாராயத்தால அழியணுமா?” என்றதும் “கூடாதம்மா, பிள்ளைங்க குடிக்க கூடாது” என கையெழுத்திட்டார்.

“எங்களையே குடிமகன்கள் என்று விளம்பரம் செய்து விட்டு, எங்களிடமே கையெழுத்து கேட்கிறீங்களா” என ஆவேசப்பட்டார் ஒரு குடிமகன்.

“இல்ல சார், நாம எல்லாருமே இந்த நாட்டின் குடிமக்கள் தான், நமது குடியை கெடுக்கும் இந்த அரசுக்கு எதிராக தான் போராடுகிறோம்” என்றதும் அவரும் சிரித்தபடியே கையெழுத்திட்டார்.

மக்களிடம் சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் உள்ளது. தனது குடும்பம் சீரழிவதும், தமிழகம் முழுவதும் தினந்தோறும் பத்திரிகைகளில் வரும் செய்திகளை பார்க்கும் போதும் வேதனைக்குள்ளாகின்றனர். ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்காக இந்த அரசு உள்ளதே என ஆதங்கப்படுகின்றனர்.

செவிடன் காதில் சங்கு ஊதினால் மட்டும் போதாது தேவைப்பட்டால் அரசின் செவுள் கிழியும் வரை அறைய வேண்டும் என உணரும் போது இந்த அரசை பணிய வைக்க முடியும் என்பதை மக்களிடம் உணர்த்துவது நம்முடைய முக்கிய பணியாக உள்ளது.

மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மாவட்ட ஆட்சியரிடம், மக்களிடம் பெற்ற 2000 கையெழுத்து அடங்கிய மனு பண்டல்களை கொடுப்பது என முடிவு செய்து 27.10.14 அன்று பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணி நடத்தப்பட்டது. அலுவலக வாயிலை அடைந்ததுமே பாதுகாப்பிற்க்கு நின்றிருந்த போலீசார் “குடிகெடுக்கும் அரசுக்கு எதிராக போராடுவோம்!, டாஸ்மாக்கை இழுத்து முடுவோம்! என முழக்கம் போடுறாங்க சார், ஒரு 30 பெண்கள் இருக்காங்க, குழந்தைகளும், சிறுவர்களும் கோசம் போடுறாங்க, என்ன சார் பண்றது?” என செல்போனில் தனது மேலதிகாரிகளுக்கு ரன்னிங் கமன்ட்ரியாக ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்.

மேலதிகாரிகளிடம் பெற்ற ஆலோசனையின் பேரில் நம்மிடம் “பேனரை மறைங்க , முழக்கம் போடாதீங்க , ஊர்வலமாக வராதீங்க” என உத்தரவுகள் போட ஆரம்பித்தனர். நீண்ட நேர பேச்சுவார்தைக்கு பின் 5 தோழர்கள் அலுவலகத்தின் உள்ளே சென்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு பண்டல்களை ஒப்படைக்க முயன்றபோது அருகில் இருந்த டாஸ்மாக் அதிகாரி, “உங்கள் கோரிக்கை திருச்சியில் மட்டுமா?” என்றார். “தமிழகம் முழுக்க டாஸ்மாக்கை இழுத்து மூட வேண்டும்” என்றோம்.

“இத்தோடு உங்கள் போராட்டம் முடிந்ததா?” என்றார் ஆட்சியர்.

“நீங்கள் எடுக்கிற நடவடிக்கையை பொறுத்துதான் முடிவு செய்ய வேண்டும்” என்றோம்.

“அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்” என மனுக்களை பெற்று கொண்டார்.

இது முடிவல்ல என்பது நமக்கு தெரியும். மக்கள் வீதியில் இறங்கி போராடும் போது தான் டாஸ்மாக்கை ஒழிப்பது சாத்தியம் என்பதும் நமக்கு புரியும். மக்களிடம் இத்தகைய பிரச்சாரத்தை கொண்டு செல்வது, அரசினை எதிர்த்து போராடுவது, போராட்டத்தின் மூலம் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவது என்ற அடிப்படையில் தான் நாம் இந்த இயக்கத்தை மேற்கொண்டு வருகிறோம். இந்த இயக்கத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக மரத்தடியில் அமர்ந்து ஆலோசிக்கப்பட்டது. வர கூடிய காலங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வேலைகளை திட்டமிட்டு வருகிறோம்.

குடிமகன்களே! நீங்க தள்ளாடும் வரைதான் இந்த அரசு ஸ்டெடியா இருக்கும் நமது குடிகெடுப்பதே இந்த அரசு என்பதை உணரும் போது உன் வாழ்க்கை வசப்படும்! என்ற நமது டாஸ்மாக் எதிர்ப்பு இயக்க முழக்கமானது மக்கள் முழக்கமாக மாறும் போது இந்த டாஸ்மாக்கை மட்டுமல்ல குடிகெடுக்கும் அரசையும் வீழ்த்த முடியும்.

செய்தி:
பெண்கள் விடுதலை முன்னணி,திருச்சி.
தொடர்புக்கு: 9750374810.

அம்மா மாதாவை பெரியாரோடு ஒப்பிடுவது தர்மமா இந்துவே ?

5

மிழக மக்களின் கண்ணீர் உச்சநீதிமன்றத்தால் துடைக்கப்பட்டு ஆண்டவனின் ஆனந்தக்கண்ணீர் மழையாக பொழிந்த ஒரு நாளில் அந்தக் கட்டுரை இந்து தமிழில் (தி இந்து – ஜெயலலிதா பெரியாரின் வாரிசா?) வெளியானது. காய்கறிகளோடு கருவாடு விற்பதைக்கூட சகித்துக்கொள்ளாத இந்துவா இப்படி செய்தது? தன் அலுவலகத்தில் சைவம் சாப்பிடுவோர் அசைவம் சாப்பிடுவோரைக் கண்டு மனம் கோணக்கூடாது (அல்லது மனம் மாறிவிடக்கூடாது) என தர்மத்தின் வழி நின்று சிந்தித்த இந்துவா இது? தங்கள் கம்பெனி ஓனரையும் அதிகாரிகளையும் விரட்டி விரட்டி கைது செய்ய முயன்றவர் என்றாலும் ஜெயாவை அம்பலப்படுத்தாமல் அமைதிகாத்த இந்துவா இது என தேசபக்தர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஜெயலலிதா பெரியாரின் வாரிசா?
மனின் தலையில் பிறந்தோரால் நடத்தப்படும் இந்துவா இப்படி செய்வது? ஜெயலலிதாவை பெரியாரின் வாரிசு என சொல்ல இவர்களுக்கு எப்படி மனது வந்தது?

நீசர்கள் கூடித்திரியும் பேஸ்புக்கில் இது எழுதப்பட்டிருந்தால்கூட சகித்துக்கொள்ளலாம். பிரம்மனின் தலையில் பிறந்தோரால் நடத்தப்படும் இந்துவா இப்படி செய்வது? ஜெயலலிதாவை பெரியாரின் வாரிசு என சொல்ல இவர்களுக்கு எப்படி மனது வந்தது? சாம்பலை கௌரவிக்க வேண்டுமானால் அதை விபூதி என்று சொல்லித்தான்தான் புனிதப்படுத்த வேண்டும், அதைவிட்டுவிட்டு ஆன்டிபயாடிக் என்று சொன்னால் விவரமானவன் யாராவது அதை சாம்பல் என்று நிரூபித்துவிடமாட்டானா? ஜெயலலிதாவை ஆதரிக்கவும் பெரியாரை அவமானப்படுத்தவும்தான் தினமலர் எனும் பத்திரிகையே செயல்படுகிறது. அவர்கள் இப்படியா நடந்துகொள்கிறார்கள்!!!

வாஸ்து, ஜோதிட, ஜாதக, பெயர்மாற்ற நிபுணர்களை கௌரவித்து வாழ்வளித்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதாவும் அவர் சுற்றத்தாரும் எங்கே, வேறு வேலையே தெரியாத இந்த அப்பாவி நிபுணர்கள் வயிற்றில் அடிக்கும் கொள்கைகளை பரப்பிய பெரியார் எங்கே… இந்த இருவரையுமா ஒப்பிடுவது??

தனக்காக ”செத்தவர்கள்” இருநூற்று சொச்சம்பேருக்கு தலா 3 லட்சம் கொடுத்த வள்ளல் ஜெயலலிதாவை ஒவ்வொரு காசுக்கும் கணக்கு பார்த்து வெட்டித்தனமாக கல்லூரிகள் கட்டிய கருமி பெரியாரோடா ஒப்பிடுவது?

தன் அரசியல் விரோதிகளை சட்டசபையிலேயே தரம் தாழ்ந்து விமர்சிக்கவைக்கும் ஜெயாவின் வீரத்தில் கால்பாகமேனும் பெரியாருக்கு இருந்திருக்குமா? பத்து வயது பையனைக்கூட வா போ என ஒருமையில் கூப்பிடும் தைரியமற்றவரல்லவா பெரியார்!!

பத்து நிமிடம் தன்னைப் பற்றிய துதிபாடலை கேட்கும் பொறுமை இருந்திருக்கிறதா பெரியாருக்கு? ஆனால் பக்கம் பக்கமாக தன்னை புகழ்ந்துரைத்தாலும் அதனை புன்முறுவலோடு ஏற்றுக்கொள்ளும் பொறுமையும் பக்குவமும் ஜெயலலிதாவுக்குத்தானே உண்டு?

ஊரே பஞ்சத்தில் இருந்தாலும் சர்வ அலங்காரத்தோடு காட்சி தந்தவர்கள் நம் இந்து தெய்வங்கள். திரண்ட சொத்துக்கள் இருந்தபோதிலும் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணித்த பாமரர் பெரியார். ஒரு கல்யாணம் காதுகுத்துக்குக்கூட தனி விமானத்தில் வந்துபோகும் ஜெயலலிதாவை கடவுளோடு ஒப்பிடாமல் கடவுள் இல்லையென சொன்ன பெரியாரோடு ஒப்பிட்டது நியாயமா.. பதில் சொல் இந்து பதில்சொல்!!!

ஜெயா அமைச்சர்கள்
காலில் விழுவதும் கால்மேல் கால் போடாமல் இருப்பதுமே இந்துப் பண்பாட்டின் பிரதான விதிகள்

செலவு செய்ய வக்கில்லாவிட்டாலும் ஆடம்பரமாக கல்யாணம் செய்துகொள்ள விரும்பிய பெருமாளுக்கு காசை அள்ளி இறைத்தவன் குபேரன். வாழ்நாளில் வேலையென்று ஒன்றை செய்திராத சுதாகரனின் ஆடம்பரத் திருமண ஆசையை நிறைவேற்றிவைத்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயாவை குபேரனோடு ஒப்பிடாமல் தாலிகூட இல்லாமல் கஞ்சத்தனமாக கல்யாணம் பண்ணிக்கொள்ள சொன்ன பெரியாரோடு ஒப்பிடுவது என்ன நியாயம் இந்துவே?

எதிர்த்துப் பேசிய நக்கீரனுக்கு குஷ்டம் வரவைத்தான் சிவன். வழியை மறித்தான் என்பதற்காக மனைவியின் மகனான பிள்ளையாரின் தலையை வெட்டினான் சிவன். அந்த அதிகார மனம்தான் அவன் பக்தர்களை இன்னமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தன்னுடைய பத்திரிகையிலேயே தனக்கு ஏற்பில்லாத கருத்துக்களை அனுமதித்த தலைமைப் பண்பில்லாதவர் பெரியார். தன்னைக் கேள்வி கேட்கும் பக்தன் ஒருவன்கூட இல்லாத கூட்டத்தின் தலைவர் ஜெயா. அந்தவகையில் சிவனைவிட மேலானவர் ஜெயலலிதா. அவரையா மானிடனான பெரியாரோடு ஒப்பிடுவது?

நாட்டு மக்களிடம் வரிமேல் வரிபோட்டு சுரண்டினாலும், தன்னை துதிபாடி வயிறு வளர்க்கும் புலவர் பெருமக்களுக்கு வாரி வாரி வழங்கியவர்கள் இந்தியாவின் பேரரசர்கள். நம்பிய கோடானுகோடி மக்களை நாதியற்றுப்போகவிட்டாலும்கூட தன் கோயிலில் மணியாட்டியவனையும் தன்னை புகழ்ந்து போற்றியவர்களையும் கௌரவிக்கத் தவறாதவர்கள் நம் தெய்வங்கள். பெரியாரோ துதிபாடுதல் எனும் கலையையே ஒழித்துக்கட்டப் பார்த்தவர். தன் துதிபாடிகளுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக்கொள்ளும் ஜெயலலிதாவை பெரியாரோடு ஒப்பிட கல்நெஞ்சக்காரனாலும் இயலாதே??

காலில் விழுவதும் கால்மேல் கால் போடாமல் இருப்பதுமே இந்துப் பண்பாட்டின் பிரதான விதிகள். அந்த விதிகளை மீட்டெடுத்து காத்தருள்பவர் ஜெயா. பெரியாரோ இத்தகைய ஹிந்துப் பண்பாட்டினை முழுமூச்சோடு எதிர்த்தவர். ஒரு பண்பாட்டுக் காவலரை கலாச்சார விரோதியோடு ஒப்பிடுவது பண்புள்ளவர்கள் செய்யும் காரியமா?

ஜெயா ஸ்ரீரங்கத்தில்
“விதிகளை காற்புள்ளி அரைப் புள்ளிகூட மாறாமல் பின்பற்றும் ஜெயாவை இந்தத் தகுதிகள் எதுவுமில்லாத பெரியாரோடு ஒப்பிட்டு எங்கள் மனங்களை புண்படுத்தாதே இந்துவே”

கிருஷ்ண பரமாத்மா பாஞ்சாலி மானபங்கப்படுத்தப்பட்டபோது சேலை மட்டும்தான் கொடுத்தான். அந்த சம்பவத்தை தடுக்கவும் இல்லை, தடுக்கும் ஆற்றலை சபையோர் யாருக்கும் அருளவும் இல்லை. அந்த தெய்வாம்சத்தின் நீட்சிதான் அம்மா. இருளர் இனப்பெண்கள் போலீசாரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டபோது அவர் 5 லட்சத்தை அள்ளி வழங்கினார், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் விதிக்கிணங்கி அந்த போலீஸ்காரர்களை கைதுகூட செய்யவில்லை. இன்றைக்கு ஷிபான் சேலை மீட்டர் முப்பது ரூபாய்க்குகூட கிடைக்கிறது. ஆகவே இன்றைக்கு யார் நினைத்தாலும் கிருஷ்ண பரமாத்மாவாகிவிட முடியும். ஆனால் யார் நினைத்தாலும் 5 லட்சம் கொடுக்கும் அம்மாவாகிவிடமுடியாது. ஆகவே ஜெயலலிதாவோடு ஒப்பிடும் தகுதியை கிருஷ்ணனுக்கு வேண்டுமானால் கொடுக்கலாமேயன்றி பெரியாருக்கு ஒருக்காலும் தரமுடியாது.

ஊர் மக்களில் பெரும்பாலானவர்கள் குடிசையில் இருந்தாலும் சகல சௌகர்யத்தோடு பெருங்கோயில்களில் வசிப்பதே இந்துக் கடவுள்களின் லட்சணம். பல்லக்கில்லாமல் அவர்கள் எப்போதும் பயணிப்பதில்லை. அவர்கள் யாரை தண்டிப்பார்கள் யாருக்கு பதவி கொடுப்பார்கள் என்பதை யாராலும் யூகிக்க இயலாது. எல்லோரும் என் காலடியில் வீழ்ந்துகிடந்து வாய்ப்புக்காக மன்றாடியபடி இருங்கள் என்பதே அவர்களது தர்மம். அவர்கள் எப்போதும் சாமானிய மக்களை தங்களிடமிருந்து தள்ளியே வைத்திருப்பார்கள்.

அவர்கள் பூஜையை விரும்புபவர்கள், விவாதத்தை அல்ல. அவர்கள் நியாயத்தைப் பேசுபவர்கள் அல்லர், மாறாக அவர்கள் பேசுவதே நியாயமென கொள்ளப்படும். தனக்காக அடுத்தவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வதையும், ஊனமாக்கிக் கொள்வதையும், மொட்டையடிப்பதையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்பவர்கள் கடவுளர்கள்தான். இந்த விதிகளை காற்புள்ளி அரைப் புள்ளிகூட மாறாமல் பின்பற்றும் ஜெயாவை இந்தத் தகுதிகள் எதுவுமில்லாத பெரியாரோடு ஒப்பிட்டு எங்கள் மனங்களை புண்படுத்தாதே இந்துவே என கடுமையாக எச்சரிக்கிறோம்.

இங்ஙனம்,

நாமக்காரவா அசோசியேஷன்.
அசைவ துவேஷ பஜனா மண்டலி.
லெட்டர் டு எடிட்டர் சேவா சங்.
தராதரப் பிரச்சார சபா.
பிரம்ம ஜீவ தர்ம சன்சாத் டிரஸ்ட்.
மீடியா பார்ட்னர் : மேன்மக்கள்மேன்மக்களே.நெட்

– இசையவன்

மீரட் லவ் ஜிகாத் சதி – ஆர்.எஸ்.எஸ்-இன் அண்டப்புளுகு !

3

டந்த ஆகஸ்ட் 3-ம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தின் மீரட் நகருக்குட்பட்ட சாராவா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்,  காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகார் ஒன்று மாபெரும் சூறாவளியை துவக்கியது. இதை அந்தப் பெண்ணே எதிர்பார்த்திருக்க மாட்டார். இருபது வயதே நிரம்பிய இளங்கலை மாணவியான அவர், தற்காலிக பணியாக தனது கிராமத்திலிருந்த மதரசாவில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

லவ் ஜிகாத்ஜூலை 23-ம் தேதி திடீரென்று தனது வீட்டை விட்டு வெளியேறி மாயமான அந்தப் பெண் நான்கு நாட்கள் கழித்து வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அடையாளத்துடன் வீடு திரும்பினார். இது  குறித்து வீட்டார் விசாரித்த போது, தான் கல்லூரி நண்பர்களோடு சுற்றுலா சென்றதாகவும், சென்ற இடத்தில் வயிற்று வலி ஏற்பட்டு அப்பெண்டிசைடிஸ் (குடல்வால்) பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஜூலை 29-ம் தேதி அந்தப் பெண் ‘மாயமான’தாகச் சொல்லும் அவளது குடும்பத்தார், ஆகஸ்ட் 3-ம் தேதி காவல்துறையிடம் புகார் அளிக்கிறார்கள். அதில் அந்த பெண்ணே, தான் சாராவா கிராம மதரஸாவில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்ததாகவும், முசுலீம்கள் சிலர் தன்னைக் கடத்தி கூட்டு வல்லுறவு செய்ததாகவும், கட்டாயமாக இசுலாத்திற்கு மதம் மாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கூட்டு வல்லுறவால் தான் கருவுற்றதாகவும், அந்தக் கருவைக் கலைப்பதற்கே அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது வடநாட்டு ஊடகங்களால் “மீரட் பெண்” என்று குறிப்பிடப்படும் அந்தப் பெண் காவல் துறையிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து சொல்லி வைத்தாற் போல் இந்து இயக்கங்கள் ‘கொந்தளித்து’ எழுந்தன. இசுலாமியர்கள் இந்துப் பெண்களின் மேல் தொடுத்துள்ள ’லவ் ஜிஹாத்’ போரின் ஒரு அங்கமாக இந்த சம்பவத்தை சித்தரித்த காவி கும்பல், உடனடியாக இந்த விவகாரத்தை முன்வைத்து மாநில அளவில் பல போராட்டங்களைத் துவக்கியது.

நடந்து முடிந்த உத்திரபிரதேச இடைத்தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பாரதிய ஜனதாவின் மாநில பொறுப்பாளர் யோகி ஆதித்யநாத், “இசுலாத்திற்கு மதம் மாற்றம் செய்யப்படும் ஒவ்வொரு இந்துப் பெண்ணுக்கும் பதிலாக நூறு இசுலாமிய பெண்களைத் தூக்கி வந்து இந்துக்களாக மதம் மாற்ற வேண்டும்” என்று மதவெறியைக் கக்கியுள்ளார்.

இதற்காகவே காத்திருந்ததைப் போல் ஆர்.எஸ்.எஸ் சார்பில் “இந்து சகோதரிகள், மகள்கள் பாதுகாப்பு இயக்கம்” (Hindu Behen Betti bachao Andholan) “மீரட் பாதுகாப்பு இயக்கம்” (Meerut Bachao Manch) போன்ற புதிய பரிவார திடீர் அமைப்புகள் உண்டாக்கப்பட்டன. இந்த அமைப்புகளின் சார்பில் இந்து பெண்களை முசுலீம் காம கொடூரர்களிடம் இருந்து காப்பாற்றக் கோரி துண்டுப் பிரசுரங்கள் போஸ்டர்கள் மூலம் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பாஜக மகிளா மோர்ச்சா
‘லவ் ஜிகாத்’ – பாஜக மகிளா மோர்ச்சா ஆர்ப்பாட்டம்

சர்வதேசிய இசுலாமிய தீவிரவாத அமைப்புகள் இந்துப் பெண்களை முசுலீம் இளைஞர்களைக் கொண்டு மயக்கி காதலித்து இசுலாத்திற்கு மதம் மாற்றுவதாக இந்துத்துவ கும்பல் வட இந்தியா முழுவதும் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இந்து பார்ப்பன பெண்ணை காதலித்து மயக்க இரண்டு லட்ச ரூபாய்களும், இந்து ரஜபுத்திர அல்லது சத்ரிய பெண்களை காதலித்து மயக்க ஒரு லட்ச ருபாய்களும் இசுலாமிய இளைஞர்களுக்கு தீவிரவாத அமைப்புகள் சம்பளமாக கொடுப்பதாக காவிக் கும்பல் குற்றம்சாட்டியது. அதிலும் தலித்துக்களுக்கு இடமில்லை போலும். தலித்துக்கள் இந்துக்கள் இல்லை என்று இந்துமதவெறியர்கள் நடந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான்.

வட இந்திய ஊடகங்கள் தங்கள் பங்குக்கு ’மீரட் கூட்டு வல்லுறவு” தாக்குதல் பற்றிய தங்களது புலனாய்வு முடிவுகளை வெளியிடத்துவங்கின. மீரட் பெண்ணின் சிறுநீரகத்தை மதரஸாவில் வைத்து அறுத்து எடுத்து விற்று விட்டனர் என்பதில் துவங்கி, எத்தனை முசுலீம்கள் எத்தனை முறை எத்தனை நாட்கள் வல்லுறவு செய்தனர் என்பது வரை விதவிதமான கட்டுரைகளை எழுதி திரைக்கதையில் பல்வேறு “திகிலூட்டும்” திருப்பங்களைச் சேர்த்து வந்தனர்.

காவி கும்பல் போட்ட பிரச்சாரக் கூச்சல் ஒரு பக்கமும் ஊடகங்களின் ‘புலனாய்வுகள்’ இன்னொரு பக்கமும் காதைக் கிழித்துக் கொண்டிருக்கும் போதே இவ்விவகாரத்தின் உண்மை மெல்ல மெல்ல வெளியாகத் துவங்கியது. மீரட் பெண்ணின் சார்பாக அவளது குடும்பத்தார் அளித்த புகாரில் ஜூலை மாதம் 23-ம் தேதி தங்கள் பெண் இசுலாமியர்களால் கடத்தப்பட்டதாகவும் அதே நாளில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் புகாரைப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணை முதல்கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனையில் அப்பெண்ணுக்கு கருக்கலைப்பு நடந்த போது அவள் ஒன்றரை மாத கர்ப்பவதியாக இருந்தது தெரியவந்தது. உடனே புகாரை மாற்றிக் கொண்ட பெண்ணின் குடும்பத்தார், அவள் ஜூன் 29-ம் தேதி வல்லுறவு செய்யப்பட்டாள் என்பதாக திருத்திக் கொண்டனர்.

மௌல்வி அமீருதீன்
சாரவா கிராமத்தின் மதரசா சுல்தானியாவில் – மௌல்வி அமீருதீன்

மேலும் முதலில் அளித்த புகாரில் வல்லுறவு செய்த கும்பலைச் சேர்ந்தவர்களாக சாராவா கிராமத் தலைவர் (சர்பன்ச்) நவாப், மற்றும் உள்ளூர் மதபோதகர் சனாவுல்லா ( விவசாயியான இவருக்கும் மதபோதனைக்கும் சம்பந்தமேயில்லை என்பது காவல்துறையின் விசாரணையில் பின்னர் தெரியவந்தது) மற்றும் இவர்களோடு பெயர் தெரியாத நான்கு பேர்களையும் தங்கள் புகாரில் அப்பெண்ணின் பெற்றோர் குறிப்பிட்டிருந்தனர். இதனடிப்படையில் நவாப் மற்றும் சனாவுல்லா ஆகிய இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த ஒன்பது பேரும் படிப்படியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே மீரட் பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்தபடி முசாஃபர் நகர மருத்துவமனையில் கருக்கலைப்பு நடைபெறவில்லை என்பதையும் மீரட் நகர அரசு மருத்துவமனையில் நடந்துள்ளதையும் போலீசு விசாரணை உறுதிப்படுத்தியது. மேலும், மீரட் பெண்ணின் குடுமபத்தார் அளித்த புகாரில் பெயர் குறிப்பிடப்படாத இரண்டு இளைஞர்கள் (ஒரு முசுலீம் மற்றும் ஒரு இந்து) துணையோடு அந்தப் பெண் மருத்துவமனைக்கு வந்ததையும், அவளுடன் சென்ற கலீம் என்கிற முசுலீம் இளைஞன் அப்பெண்ணின் கணவனாக மருத்துவமனைப் பதிவேடுகளில் பதிவு செய்திருப்பதையும் போலீசார் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

விசாரணைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க அதன் விளைவாக ’மீரட் பெண்ணின்’ குடும்பத்தார் அளித்த புகாரில் இருந்த முரண்பாடுகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் விசாரணைகளின் முடிவுகள் பற்றி அலட்டிக் கொள்ளாத இந்துத்துவ குண்டர்படை, முசுலீம்கள் இந்துப் பெண்களைக் கடத்திச் செல்வதற்கு முலாயமின் போலீசு உதவி செய்வதாக இடைத்தேர்தலை முன்வைத்து மதவெறிப் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த சூழலில் முதல் தகவலறிக்கையை பதிவு செய்யும் போலீசு அதில் கலீமின் பெயரையும் இணைத்து அவரையும் கைது செய்தது.

மாநில இடைத்தேர்தல் காலத்தில் காவி கும்பல் செயற்கையாக ”லவ் ஜிஹாத்” விவகாரத்தை கொளுத்திப் போட்டு குளிர் காயத் துவங்கியிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பாக இந்துப் பெண்களுக்கு ராக்கி கட்டி ‘இசுலாமிய ஆணழகர்களிடம் மயங்கிவிடாதீர்கள்’ என்று கேட்டுக் கொள்ளும் கேலிக்கூத்தான இயக்கம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. சூழலின் இறுக்கம் மீரட் பெண்ணின் உயிருக்கு ஆபத்து எதையும் விளைவித்து விடக்கூடாது என்பதால் அவரது வீடு கடுமையான போலீசு கண்காணிப்பிற்கும் காவலுக்கும் உட்படுத்தப்படுகிறது.

இந்த சூழலில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் காவி கும்பல் எதிர்பார்த்ததற்கு நேர்மாறான முடிவுகள் வெளியாகி – மொத்தமாக கவிழ்த்துப் போட்டது. அக்டோபர் மாத துவக்கத்தில் மீரட் பெண்ணின் குடும்பத்தார் தங்களுக்கு போலீசு காவல் தேவையில்லை என்று தெரிவித்ததன் அடிப்படையில் காவல் விலக்கிக் கொள்ளப்படுகிறது.

லவ் ஜிகாத் பாதிக்கப்பட்டவர்
காவி கும்பலின் பொய் பிரச்சாரத்தால் கைது செய்யப்பட்ட சாரவா கிராமத்தைச் சேர்ந்த அப்பாவிகளில் ஒருவரின் தந்தை

இந்தச் சூழலில் அக்டோபர் 12-ம் தேதி தனது வீட்டிலிருந்து தப்பும் மீரட் பெண் மாஜிஸ்டிரேட் முன் வாக்குமூலம் ஒன்றை அளிக்கிறார். முன்பு கொடுத்த புகாரின் படி யாரும் தன்னை வல்லுறவு செய்யவில்லை என்றும், தன்னை யாரும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கவில்லை என்றும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார் மீரட் பெண். மேலும், தான் கலீம் என்கிற முசுலீம் இளைஞரை காதலித்ததாகவும், அவர் மூலமாகவே கருவுற்றதாகவும், தாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த சூழலில் கர்ப்பத்தில் சிக்கல் ஏற்பட்டதாலேயே அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றிக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், ஜூலை மாத இறுதியில் இருந்து தனது குடும்பத்தின் பிடியில் சிக்கியிருந்ததாகவும், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த அகர்வால் என்பவர் தனது குடும்பத்திற்கு சுமார் 25,000 ரூபாய் கொடுத்ததன் பேரிலேயே அவர்கள் தனது காதலை எதிர்த்ததோடு தன் பெயரில் பொய் புகாரை அளித்ததாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பத்தின் பிடியில் இருந்த சமயத்தில் கலீமைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக இருந்ததால் தன்னை கவுரவக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதாகவும் அதற்காகவே போலீசு காவலை நீக்கிக் கொள்ள கோரியதாகவும், தனது பாதுகாப்பின் பொருட்டு மீண்டும் வீட்டுக்குச் செல்ல அஞ்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மீரட் பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட மாஜிஸ்டிரேட், அந்தப் பெண்ணின் கோரிக்கையின் பேரில் அரசு பெண்கள் காப்பகம் ஒன்றில் தற்போது தங்கவைத்துள்ளது.

காவி கும்பலின் திரைக்கதை ஒட்டு மொத்தமாக நொறுங்கி விழுந்துள்ள நிலையில் குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக தற்போது தாம் பணம் கொடுத்ததை மறுக்க முடியாத நிலையில் அக்குடும்பத்திற்கு ”நல்லெண்ணத்தின் பேரில், ஒரு உதவியாகவே” அந்தப் பணத்தைக் கொடுத்ததாக அசடு வழிந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே அல்ஜசீரா நிருபர் நேகா தீக்சித் அப்பெண்ணைச் சந்தித்துள்ளார்.

மீரட் லவ் ஜிகாத்”பாருங்க என்னோட வாழ்க்கை முடிந்து விட்டது. இனி நான் எங்கே வாழ்ந்தாலும் இந்த மொத்த சம்பவங்களும் என்னைத் துரத்தும். அவர்கள் எனது உடலும் கருப்பையும் அசுத்தமாகி விட்டதாகச் சொல்கிறார்கள். நான் கலீமோடு பேச வேண்டும், அவனுக்கு என்ன விருப்பமென்று தெரிந்து கொள்ள வேண்டும். நீங்க யாரோடயாவது காதலில் இருந்தால் உங்களுக்கும் பாதி பொறுப்பு இருக்கு தானே? நாங்கள் தப்பு செய்திருந்தால் நாங்கள் இரண்டு பேருமே தண்டிக்கப் பட வேண்டும். ஒன்றுமில்லாத விசயத்திற்காக அவன் மட்டும் வாழ்க்கை முழுவதும் துன்பப் பட நான் ஏன் அனுமதிக்க வேண்டும்?” என்று தெரிவித்த மீரட் பெண், ”நான் வீட்டை விட்டு வெளியேறி போலீசிடம் போகாதிருந்தால் அவர்கள் என்னைக் கொன்றிருப்பார்கள்” என்று வீட்டாரின் கவுரவக் கொலைத் திட்டத்தை அம்பலப்படுத்துகிறாள்.

மேலும் கலீமைத் திருமணம் செய்து கொள்ளும் தனது முடிவிலும் அவள் உறுதியாகவே இருக்கிறாள் “ஆமாம் நான் அவனைத் திருமணம் செய்து கொள்வேன். மதம் ஒரு பிரச்சினையே இல்லை. அவனுக்கு நான் கல்யாணத்திற்குப் பின் இந்துவாக தொடர்வதிலோ கோவிலுக்குப் போவதிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை. யாருடைய மதம் தப்பு? யாருடையதும் இல்லை. நாம் தான் மக்களை இந்துக்கள் என்றும் முசுலீம்கள் என்றும் பிரித்துப் பார்க்கிறோம். ஆனால், உண்மையில் நாம் எல்லோருமே ஒன்று தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த இருபது வயது பெண்ணின் எளிமையான வார்த்தைகள் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ பயங்கரவாதிகளின் முகத்தில் காறி உமிழ்வதாய் அமைந்தது தற்செயலானதல்ல. எளிய உழைக்கும் மக்கள் சில சமயங்களில் இந்துத்துவ பிரச்சாரங்களில் மயங்கினாலும், இறுதியில் அவர்களின் மனித தன்மையே வெல்கிறது. அவர்கள் தம்மியல்பில் இந்து மதவெறி பயங்கரவாத கும்பலின் நோக்கங்களுக்கு எதிராகவே இருக்கிறார்கள்.

ஆனால், படித்த அதிகாரவர்க்கம்?

மூத்த காவல்துறை அதிகாரிகளின் இந்துத்துவ சாய்வு
மூத்த காவல்துறை அதிகாரிகளின் இந்துத்துவ சாய்வு (படம் : நன்றி thehindu.com)

யாகூ இணையதளத்தின் விவாதக் குழுமம் ஒன்றான டாப்காப் (TopCop) என்பது பணியில் இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் பணி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் பங்கேற்கும் இணைய விவாதக் குழு. மீரட் பெண் விவகாரத்தை தொடர்ந்து ”லவ் ஜிஹாத்” குறித்து நடந்த விவாதங்களில் சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ்-ன் குரலில் இந்து பயங்கரவாத வன்மத்தைக் கக்கி இருக்கிறார்கள்.

“ஒரு போக்கு என்கிற வகையில் லவ் ஜிஹாத் என்பது உண்மை தான். அது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் குற்றம்” என்று கருத்து தெரிவித்துள்ளார் 2003-ம் ஆண்டுத் வகுப்பைச் சேர்ந்த அதிகாரி . வேறு ஒரு அதிகாரி லவ் ஜிஹாத் என்பதைக் கடந்து “செக்ஸ் ஜிஹாத்” என்பதைக் குறித்து பேசியிருக்கிறார். தெலங்கானா பகுதியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், இசுலாமிய இளைஞர்கள் தீய உள்நோக்கத்தோடு இசுலாமல்லாதவர்களை காதலித்து மதம் மாற்ற யோசிக்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் அப்படி செய்தால் சொர்க்கத்தில் இடம் உண்டு என்பதை நம்புவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அதிகார வர்க்க அடுக்கின் ஒட்டுமொத்த கட்டுமானமும் பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ அடிப்படைகளின் மீதே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு எதார்த்தம். அப்படியிருக்க, நச்சுப் பாம்பின் பல்லில் இருந்து பால் வடிவதற்கு வாய்ப்பில்லை. அதிகார வர்க்கம் தம் இயல்பிலேயே இந்துத்துவ பாசிசத்தின் நெருக்கமான பங்காளி என்பதை “சுதந்திர” இந்தியாவின் வரலாற்றில் பதிவாகியிருக்கும் எண்ணற்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்தவே செய்கின்றன.

பார்ப்பனியச் சாதி அடுக்கை உத்திரவாதப்படுத்தும் மனுநீதி தான் இந்து-இந்தியாவின் இணைப்புக் கயிறு. இந்த விஷ விருட்சத்திலிருந்து நல்ல கனிகளை எதிர்பார்ப்பதே பேதமை. இயல்பாகவே சாதி மேலாதிக்க சிந்தனையும், இந்து பார்ப்பனிய மதவாத சிந்தனையும் கொண்டவர்களால் நிரம்பி வழியும் அதிகார பீடங்களுக்கு வந்து சேரும் சூத்திர பஞ்சமர்களும் கூட அங்கே நிலவும் பொது நீதிக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார்கள். விதிவிலக்குகள் ஓரிரண்டு இருக்கலாம், எனினும் விதிகள் வேறு! எனவே தான் விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்ட திவ்யா இளவரசன் தம்பதியினர் சட்ட விரோதமாகவும் அறமற்ற முறையிலும் சாதி வெறியர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தால் பிரிக்கப்பட்டு திவ்யா அவளது பெற்றோருடன் செல்லும் படி நிர்பந்திக்கப்படுகிறாள் – அவ்வாறு செய்யப்படுவது தான் எதார்த்தமானதென்று இந்துப் பொதுப்புத்திக்குச் சென்று சேர்கிறது.

ஒரு குற்ற விசாரணை அமைப்பில் பணிபுரிகிறோம், எனவே பாரபட்சமற்ற முறையில் சம்பவங்களை அணுக வேண்டும் என்கிற தொழில் முறை கடப்பாட்டுக்கு உட்பட்ட அதிகார வர்க்கம் எந்த கூச்ச நாச்சமும் இன்றி பட்டவர்த்தனமாக இணைய விவாதங்களில் வன்மத்தைக் கக்குகிறது என்றால் காக்கி பேண்டுகளுக்கு உள்ளே இரகசியமாக ஒளிந்திருக்கும் காக்கி டவுசர்களின் உண்மையான எண்ணிக்கை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான இரகசிய காவிக் கோவணங்கள் தகுந்த சமயத்தில் வெளிப்படக் காத்துக் கிடக்கின்றன. அது திவ்யா இளவரசன் தம்பதியினரைப் போல் பார்ப்பன விதிமுறைகளுக்கு அடங்க மறுப்பவர்கள் ஆபத்துக் காலத்தில் காவல் நிலையத்தை நம்பிக்கையோடு நாடிச் செல்லும் சமயமாக கூட இருக்கலாம்.

பாஜக பெருந்தலைகள்
பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் காவி பெருந்தலைகள் – ‘லவ் ஜிகாத்’துக்கு எதிராக

அதிகார வர்க்கத்தின் கூட்டு தமக்குச் சாதகமாக இருக்கும் திமிரில் தற்போது அம்பலப்பட்ட நிலையிலும் “லவ் ஜிஹாத்” என்கிற கற்பனையான குற்றச்சாட்டோடு வட இந்தியாவின் இந்தி பெல்ட் எங்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் காவிப் பொறுக்கிகள். வட மாநில இடைத்தேர்தலில் இந்தப் பிரச்சாரம் எடுபடாத காரணத்தால் தங்கள் முயற்சிகளை அவர்கள் கைவிடுவார்கள் என்று நம்புவதற்கில்லை; ஏனெனில், சமூகம் மத அடிப்படையில் பிளவுபட்டுப் போவதிலேயே அவர்களது பாசிச அரசியலின் இருப்பும் எதிர்காலமும் தொக்கி நிற்பதால் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் இதை முன்னின்று எதிர்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கும்பலின் செயல் வெறுமனே மத அடிப்படையிலான பயங்கரவாதம் மட்டுமில்லை. அது பெண்களின் அடிப்படை ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் காட்டுமிராண்டித்தனமான முயற்சி.

’இந்துப்’ பெண்கள் தமது வாழ்க்கைத் துணையாக யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ் எனும் வன்முறைக் கூட்டமா முடிவு செய்வது?  ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் பாபரி மசூதிக்கு மட்டுமல்ல, ஏமாந்தால் கருவறைக்கும் சொந்தம் கொண்டாடத் தயங்காதவர்கள் என்பதோடு தமது கோரிக்கையை நிலைநாட்ட எந்த எல்லைகளுக்கும் செல்லத் தயங்காத கொலை பாதகர்கள் என்பதை ‘இந்து’ப் பெண்கள் உணர வேண்டும். இசுலாமிய மக்கள் மீதான வெறுப்பு என்பது எத்தகைய சதிகளோடும், மோசடிகளோடும் அரங்கேற்றப்படுகிறது என்பதை பொதுவான வாசகர்கள் சிந்திக்க வேண்டும். இந்த பொதுப்புத்திதான் ஆழ்மனதில் முசுலீம் மக்களை கட்டோடு வெறுப்பதை சாத்தியமாக்குகிறது.

இந்துக்களின் பாரம்பரியத்தை காப்பவர்கள் இந்து ஸ்த்ரீகளே என்று தேனொழுக பேசும் அதே ஆர்.எஸ்.எஸ் காவி பொறுக்கிகள் தான் பாரத மாதாவுக்கு சூடம் கொளுத்தி பூஜை செய்த கையோடு அமெரிக்காவுக்கு கூட்டிக் கொடுத்த மாமாப் பயல்கள் என்கிற உண்மையை தம்மை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வோர் புரிந்து கொண்டு சரியான பதிலடியைக் கொடுக்க வேண்டும்.

– தமிழரசன்.

மேலும் படிக்க

 

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை தோலுரித்த புமாஇமு !

1

சென்னையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கபட நாடகத்தை தோலுரித்த புமாஇமு!

ப்போதும் தமிழக அரசு முதலாளிகளுக்காகத்தான் செயல்படுகின்றது. இதற்கு எத்தனை மேக்கப் போட்டாலும் உழைக்கும் மக்களின் நலனுக்காக செயல்படுவதாக நடிக்கக்கூட முடியாது என்பதை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துக்கேட்பு கூட்டம் நிரூபித்துவிட்டது.

மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள்
சென்னையில் நடந்த மின்சார ஒழுங்குமுறை ஆணைய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் (படம் : இணையத்திலிருந்து)

எல்லா அத்தியாவசியத் தேவைகளின் விலையும் விசம் போல் ஏறிக்கொண்டு இருக்கின்றது. தினம் ஒரு விலைவாசி உயர்வு மக்களை கொன்று குவித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால், மக்கள் என்னவோ தாங்களாகவே விரும்பி இந்த விலைவாசி உயர்வை ஏற்பது போன்ற மாயையை உருவாக்க, ஒவ்வொரு ஊரிலும் மின்கட்டண உயர்வை அதிகரிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டுக் கொண்டு இருக்கின்றது மின்சார ஒழுங்கு முறை ஆணையம்.

31.10.2014 அன்று ஈரோட்டில் இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். அதற்கு முன் கடந்த 24-ம் தேதி சென்னையில் நடந்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நாடக திருவிழாவில் அதன் மேக்கப்பை கொஞ்சம் சுரண்டிப் பார்க்கலாம்.

இடம்: சென்னை , பாரிமுனை – ராஜா அண்ணாமலை மன்றம்

பெயரோ கருத்துக் கேட்பு கூட்டம், ஆனால், மக்கள் எந்தக் கருத்தும் சொல்லக்கூடாது என்பதற்காகவே பெரியளவில் முன்னறிவிப்பு விளம்பரங்களும், மக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தாத ரகசியக் கூட்ட அரங்கமாக இருந்தது. மீறி வருபவர்களும் சுதந்திரமாக கருத்து சொல்லக்கூடாது என்பதற்காகவே குவிக்கப்பட்டிருந்து காக்கிகள் பட்டாளம். (பலத்த போலீசு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது) இதுக்கு பேர்தான் ஜனநாயகபூர்வமான கருத்துக்கேட்புக் கூட்டமாம்.

அரங்கத்தின் முதல் வாயிலில் நின்று காக்கிகள் வரவேற்க, பதப்படுத்தப்பட்டு அட்டைப் பெட்டியில் வைத்த பழங்களை போல் அரங்கத்துக்குள் ஆணையத்தின் உறுப்பினர்கள், அதிகாரிகள், மேடையில் வீற்றிருந்தார்கள்.

தங்களுடைய கருத்துக்களை கூறுவதற்காக மக்கள் அலைகடலென திரண்டு வருவார்கள், அரங்கத்தின் தொள்ளாயிரம் நாற்காலிகளும் நிரம்பி வழியும் என்று எதிர்பார்த்து சென்ற எங்களுக்கு அதிர்ச்சி. ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகள், உறுப்பினர்கள், மின்வாரிய அதிகாரிகளைத் தவிர வந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐக்கூட தாண்டி இருக்காது. அவர்களும் எம்மைப் போன்று ஒரு அமைப்பைச் சார்ந்தவர்கள், சில சங்கங்களைச் சார்ந்தவர்கள். இதுதான் கோடிக்கும் மேற்பட்ட மக்களும், ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்களும் உள்ள மூன்று மாவட்ட மக்களிடம் கருத்துக்கேட்கும் கூட்டமாம்! ஒருவேளை ஒழுங்குமுறை ஆணையத்தின் புள்ளி விவரப்படி, மூன்று மாவட்ட மக்கள் தொகை 100 ஆக இருக்குமோ என்னவோ? என்ற சந்தேகத்தைத்தான் ஏற்படுத்தியது. இது நகைச்சுவைக்காக இல்லை. யாருக்கும் கட்டுப்படாத, ஏன், அரசே கட்டுப்படுத்த முடியாத அதிகாரம் கொண்ட ஒரு சர்வாதிகார அமைப்பு எப்படி நடந்துகொள்ளும் என்பதற்கான ஆதாரம்தான் இது. ’தரம் என்றால் தனியார், அதிகாரிகள்தான் சரியானவர்கள்’ என நம்பச் சொல்லும் மெத்தப் படித்த மேதாவிகள் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்.

கட்டண உயர்வுக்கு ஆதரவாகவும், தனியார்மயத்திற்கும், ஆணையத்துக்கும் ஆதரவாகவும் பேசினால் 20, 30 நிமிடம் வரை கூட பேசலாம். எதிராகப் பேசினால் உடனே முடிக்க வேண்டும். பேசுபவர்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் ஆணையத்திடமிருந்து பதில் இல்லை.

தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் அமைப்பின் தலைவர் சா. காந்தி பேசும்போது, “மின்துறையில் ரூ 24,309 கோடிக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கு காரணம் யார்? நான் அதுபற்றி புகார் கொடுத்தேனே அதை விசாரித்தீர்களா? அதுபற்றி பேசாமல் கட்டணத்தை உயர்த்தினால் எப்படி?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆணையம் பதில் சொல்லமுடியாதாம். இதை அரசிடம்தான் கேட்க வேண்டும் என்றனர் ஆணையத்தின் உறுப்பினர்கள். இதுதான் ஜனநாயக முறைப்படி நடக்கும் கருத்து கேட்கும் கூட்டத்தின் யோக்கியதை. அந்த துறை சார்ந்த இவர் கேட்கும் கேள்விக்கு இப்படி என்றால் மற்றவர்கள் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் என்ன மதிப்பு இருக்கும் என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

40-வது நபராக எங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது. காலையில் இருந்து மதியம் வரை 20 பேர்கள்தான் கருத்துக்களைக் கூறினர். மாலை 5 மணிவரை நடக்கும் கூட்டத்தில் எங்கள் கருத்துக்களை கூறமுடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

பக்கத்தில் இருந்தவரிடம், “ஒரு வேளை இன்று பேசமுடியாதவர்களுக்கு மாற்று ஏற்பாடாக நாளைக்கும் கூட்டம் நடத்துவார்களா?” என்ற கேட்டோம்.

அதற்கு அவர் “நீங்க வேற சார் இன்றோடு கூட்டத்தை முடித்துக்கொள்வார்கள். அனைவரும் கருத்துச் சொல்ல வேண்டுமென்பது அவர்கள் நோக்கமல்ல, ஒரு பேருக்குத்தான் இதை நடத்துகிறார்கள். இதுதான் இதற்குமுன்பும் நடந்தது” என்று கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தும் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒழுங்கைப் பற்றி சுருக்கமாக எடுத்துச் சொன்னார்.

பிறகு உணவு இடைவேளை முடிந்து அரங்கிற்குள் வந்த நம்மை ஒருவர் அழைத்தார். “நீங்க யார்?” என்று கேட்டார்.

நாம்,” பு.மா.இ.மு” என்றவுடன்,

“ம.க.இ.க வைச் சார்ந்தவர்களா? என்றார்.

“ஆமாங்க” என்றதும்

“சிவப்புச் சட்டையைப் பார்க்கும் போதே தெரியுது” என்று சொல்லிவிட்டு ‘’ ஆழமாக பேசுங்க, சார் விடாதீங்க’’ என்று தனது ஆதங்கத்தை நம்மிடம் கொட்டினார்.

ஒரு வழியாக நாற்பதாவது நபராக எங்களை அழைத்துவிட்டார்கள்.

“இங்கு நடப்பது மக்கள் கருத்து கேட்பு கூட்டமா? இல்லை நாடகமா? 3 மாவட்டங்களில் உள்ள மக்கள்தொகை 100 தானா? உண்மையில் கருத்து கேட்க வேண்டும் என்றால் மக்கள் இருக்கும் இடத்தைதேடிச் சென்றுதானே கருத்துகேட்க வேண்டும்? அப்படி ஏன் செய்யவில்லை?

மின்துறையில் ஏற்பட்ட நட்டத்திற்கு யார் காரணம்? தனியாருக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் மின் அளவு எவ்வளவு, அவர்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கட்டணம் எவ்வளவு, அதை செலுத்தினார்களா? இல்லையா?

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது, பன்னாட்டு கம்பெனிக்கு மானியவிலைக்கு மின்சாரம் வழங்குவது, இதனால் ஏற்படும் நட்டத்தை மக்கள் தலையில் கட்டண உயர்வு என்ற பெயரில் திணிப்பது. இதற்கெல்லாம் ஆணையம் பதில் சொல்ல வேண்டும்” என்று கேள்வி எழுப்பினோம்.

அங்கேயே பதில் கேட்டோம். அப்படியெல்லாம் சொல்லமாட்டார்களாம், இந்தக் கருத்துக்களை குறித்து வைத்துக்கொள்வார்களாம். இதைகேட்டவுடன் மீண்டும் தொடர்ந்து பேசினோம்.

“பின் எதற்கு இந்த ஒழுங்குமுறை ஆணையம்? மக்களிடம் செல்லவில்லை, மக்கள் சார்பாக நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை, எதைக்கேட்டாலும் அதற்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது என்றால் இந்த ஆணையம் எதற்காக? இந்த ஆணையத்தை முதலில் கலைக்க வேண்டும். மின்கட்டணத்தை ஒரு பைசாக்கூட உயர்த்தக் கூடாது. மீறி உயர்த்தினால் மின்கட்டணம் கட்ட வேண்டாம் என்று மக்களை தட்டியெழுப்புவோம்” என்று பேசினோம்.

அங்கு கூடி இருந்தவர்களை பார்த்து “இந்த ஒழுங்கு ஆணையங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இவர்கள்தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள். மக்கள் சொத்தை முதலாளிகள் பகிரங்கமாக கொள்ளையடிக்க ஏற்பாடு செய்து கொடுக்கும் ’மாமா ‘ வேலைதான் இந்த ஆணையத்தின் வேலை, இப்போது இல்லை, எப்போதோ நிரூபித்துவிட்டார்கள்.

தொலை தொடர்பு துறையில் மக்களுக்கு சிறந்தளவில் சேவை வழங்கி வந்த, நாடு முழுவதும் பல்லாயிரம் கோடி சொத்துக்களை கொண்ட பி.எஸ்.என்.எல் என்ற பொதுத்துறை நிறுவனத்தை ட்ராய் எனும் தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம்தான் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை கொழுக்க வைக்க ஒழித்துக்கட்டியது. வரலாறு இப்படி இருக்கும் போது, இவர்களிடம் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என சொன்னால் அதை குறைக்கவா போகிறார்கள்? இல்லை, மின் கட்டணத்தை உயர்த்துவது என்று இவர்கள் ஏற்கனவே முடிவு கொண்டு வந்து விட்டனர். அந்த வகையில் இந்தக் கருத்துக் கேட்புக்கூட்டம் என்பது ஒரு நயவஞ்சக நாடகம்.

மின் கட்டணத்தை உயர்த்தாமல் மக்களுக்கு இலவசமாகவும், மின்வாரியத்திற்கு கடன் ஏற்படாமல் இருக்கவும் ஒரேவழி தான் உள்ளது. மின்சாரத்தில் தனியார்மயத்தை ஒழிக்க வேண்டும், பன்னாட்டுகம்பெனிகளுக்கு கொடுக்கும் மானியங்களையும், டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைகளையும், ரத்து செய்து மின்கட்டணத்தை அவர்களிடம் வசூலிக்க வேண்டும். இந்த ஆணையங்களும், தீர்ப்பாயங்களும் பன்னாட்டு, உள்நாட்டு தரகு அதிகாரவர்க்க முதலாளிகளுக்கு சேவை செய்பவைதான். இங்கே எந்த ஜனநாயகமும் கிடைக்காது. இவைகளை அடித்து நொறுக்காமல் தீர்வு இல்லை” என்று பேசி முடித்தவுடன் அங்கே இருந்தவர்கள் கைகளைத் தட்டி வாழ்த்துக்கள் கூறினர்.

நிகழ்ச்சி முடிந்த உடன், “உங்களை சார் பார்த்துப் பேசவேண்டுமாம்” என்று கூறினார், ஒருவர். நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் – மதியம் நம்மை சந்தித்தாரே அவரேதான் – நம்மிடம் “நீங்க பேசியது நல்லா இருந்தது. ஆனால் கொஞ்சம் தடாலடியா பேசிட்டீங்க” என்றார்.

நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படி கேட்டாலும் எதுவுமே நடக்காதது போல் அமைதியாக முகத்தை வைத்துக்கொண்டு பசப்பலாக பேசும் அதிகார வர்க்கத்தின் திமிரை அவர் முகத்தில் பார்க்க முடிந்தது.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

சென்னை
9445112675

31-10-2014 அன்று ஈரோடு நகரில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக நடத்திய கருத்து கேட்பு கூட்டம் என்ற நாடகத்தில் அதனை அம்பலப்படுத்தி பேசப்பட்ட உரைகள்.

கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் விளவை இராமசாமி அவர்கள் பேசிய உரை

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர் ஆன்ந்த் உரை

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த சாருவாகன் பேச்சு

பத்திரிகை செய்தி

TNERC

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை

ஆவின் பாலுக்காக ஆர்ப்பாட்டம் – அதிமுக ரவுடிகள் எதிர்ப்பு

0
  • ஆவின் பால் விலை உயர்வு
  • ஏழை எளிய மக்களின் மீது விழுந்தது இடி!
  • ஆவினுக்கே பால் ஊற்ற அரசு செய்யும் சதி!

என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புத் தோழர்கள் கடந்த 26-ம்  தேதி முதல் சென்னையில் பல்வேறு மக்கள் குடியிருப்புப் பகுதிகள், பேருந்து, ரயில்களில் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டதால் இருக்கும் அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கும் இந்த வேளையில், வழக்கம் போல் ஓட்டுக் கட்சிகள் தங்களுடைய நாடகத்தை கட்டவிழ்த்து விட ஆரம்பித்துவிட்டனர். மக்களின் தவிப்பை, பல பச்சிளம் குழந்தைகளின் பசியை அவர்களுடைய ஓட்டுக்கட்சி அரசியல் ஆதாயமாகப் பயன்படுத்தி வருகின்றனர். தி.மு.க., தேமுதிக, பாஜக, பாமக என மாறி மாறி, ’மாபெரும் போராட்டம்’ நடத்தப் போவதாக விளம்பரம் செய்து கொண்டு இருக்கும் இவர்கள், பால் விலையேற்றத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதை சொல்லவுமில்லை, சொல்லப்போவதும் இல்லை என்பதோடு திட்டமிட்டே மூடி மறைக்கவும் செய்கின்றனர். காரணம், இந்த விலை உயர்வுக்கு அடிப்படையான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை இவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டிருப்பதால் தான்.

தி.மு.க ஆட்சியில் இதைத் தான் செய்தனர். எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று ஒரு பக்கம் கெஞ்சிக் கொண்டிருக்கும் விஜயகாந்த், ராமதாஸ் என யாராக இருந்தாலும், இதைத் தான் செய்வார்கள். மக்களை அரசியலில் இருந்து விலக்கி வெறும் பார்வையாளர்களாக வைத்துவிட்டு இவர்கள் நடத்தும் நாடகத்தை மக்களிடையே தோலுரிக்கும் விதமாகவும், இந்தக் கட்சிக்கு, அந்தக் கட்சிக்கு என மாறி மாறி ஓட்டுப்போட்டு முட்டாளாவதும், ஒரு பக்கம் வரி, கட்டணம், விலை உயர்வு என மக்கள் உழைப்பைச் சுரண்டுவதையும், மறுபக்கம் பொதுத்துறை நிறுவனங்களான மக்கள் சொத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பது மூலமும் கொள்ளையடிக்கும் சட்டமன்றம் – பாராளுமன்றம், அதிகாரிகள் – அரசியால்வாதிகளைக் கொண்ட இந்த அரசமைப்பு முறைக்குள்ளேயே தீர்வை தேடக் கூடாது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட நம்முடைய பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள உழைக்கும் மக்களாகிய நம் கையில் அதிகாரம் இருக்க வேண்டும். இத்தகைய மாற்று அதிகார அமைப்புகளை கட்டியெழுப்புவதற்கான போராட்டக் கமிட்டிகளை உருவாக்க வேண்டும். இத்தகைய சமூக மாற்றத்திற்காக மக்கள் வீதிக்கு வந்து போராட அமைப்பாகத் அணிதிரள வேண்டும் என்ற கருத்துக்களை மக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் செஞ்சட்டை அணிந்த தோழர்கள் மக்களை சந்தித்து பேசி வருகின்றனர்.

தொடர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் இக்குழுத் தோழர்கள் பூந்தமல்லி, கல்லறைத் தோட்டம், மாதவரம், மணலி, ஆவடி, அம்பத்தூர், பாரிமுனை, சென்ட்ரல், நுங்கம்பாக்கம், கிண்டி, பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து வருகின்றனர்.

ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வந்துள்ளோம் என்றதும், 50 வயது மதிக்கத்தக்க ஒரு தாய் “எவனவனோ கொள்ளை அடித்து விட்டுப் போகிறான், அதற்கு தண்டனையை நம்ம தலையில் சுமத்துகிறானுங்க பாவிங்க இத விடக்கூடாதுப்பா” என்றார் அனல் பறக்கும் கோபத்துடன்.

மற்றொரு அம்மா, “எனக்கு 4 குழந்தைகள் இருக்கு, அதில் ஒன்று கைக்குழந்தை, பால் முக்கியமாக கொடுத்தாக வேண்டும், இப்போ விலை ஏறி போச்சி, இனி நான் என்ன செய்வேன். விலையை குறைத்தால் நல்லா இருக்கும். ஆனால் யாரு இத செய்வாங்க” என்கிறார் ஏக்கதோடு.

இன்னொரு பெரியவர் “கொள்ளை அடிச்ச மாதவரம் மூர்த்தி மற்றும் வைத்தியநாதனின் சொத்துக்களை பறிமுதல் செய்தாலே எல்லாம் சரி ஆகிடும்மா” என்றார் தீர்க்கமாக.

மாதவரம் பகுதியில் வயதான முதியவர் ஒருவர், “டீயும் வெற்றிலையும் தான் என் உணவு, இப்ப டீ க்கு வேட்டு வைச்சிட்டானுங்க, இனி வெற்றிலை மட்டும் தான் வேறு வழி இல்லை” என்றார்.

பூந்தமல்லியில் டீ கடைக்காரர் ஒருவரிடம் பேசும் போது, “பால் விலை ஏற்றத்தால் டீ விலையை ஏற்ற எனக்கு இஷ்டம் இல்லை. மக்கள் வயிற்றில் அடிப்பது கஷ்டமாக உள்ளது. இருந்தாலும் இப்படியே போனால் வேறுவழி இல்லை” என்று கூறினார்.

சென்ட்ரலில் ஒருவர், “மாட்டுத் தீவனம் ஊழல் நடந்தபோது, அதற்கு காரணமாக இருந்த லல்லு பிரசாத் யாதவிடம் கேட்கும் போது, மாடு தின்றுவிட்டது என்று ஏளனமாக பதில் சொன்னார், இப்போது ஆவின் பால் ஊழலைப் பற்றி கேட்டால், பாம்பு குடித்துவிட்டது என்று தான் சொல்வாங்க, எவனும் வாய் திறக்க மாட்டான்” என்றார்.

ஆவின் பாலில் கலப்படம் செய்து கொள்ளையடித்த அ.தி.மு.க கொள்ளைக் கூட்டத்தின் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தியின் பகுதியில் தொடர்ந்து கடைகளில் பேசிக் கொண்டே வரும் போது, அருகில் இருந்த வீட்டிலும் பேசலாம் என்று சென்றோம்.

கருணாகரன் MA,.BL,. என்ற பெயர் பலகையைப் பார்த்ததும், ஒரளவு ஜனநாயக கருத்து இருக்க வாய்ப்புள்ளது, என்று நினைத்துச் சென்று பேசினோம். நாம் கொடுத்த பிரசுரத்தை படித்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில், “மூர்த்தி கொள்ளை அடித்தார் – னு உனக்கு தெரியுமா? எங்கடா பார்த்திங்க, நீங்க யார் ஏரியால வந்து யாரைப் பத்தி பேசுறீங்க, எங்கிட்ட வந்து எங்க அண்ணனைப் பத்தியே பேசுறீங்களாடா?” என்று அசிங்கமான வார்த்தைகளைச் சொல்லி பேசினார்.

நாங்கள், “அசிங்கமாக பேசுவதை முதலில் நிறுத்து. ஊரறிந்த கொள்ளையைப் பற்றி எங்க நடந்தது, நீ பாத்தியானு கேக்குறீங்க, தவறான ஆளிடம் வந்து விட்டோம், கொள்ளையடித்தவனிடம், கொள்ளை நடந்துவிட்டது என்று பேசி பயனில்லை. நாங்கள் மக்களிடம் சொல்கிறோம், நீங்களூம் மக்களிடம் சொல்லுங்கள். எது உண்மை என்று மக்கள் சொல்லட்டும்” என்று பதிலளித்துவிட்டு மக்களை சந்திக்கச் சென்றோம்.

நாம் வெளியில் வந்து கொண்டிருக்கும் போதே, “போலீசுக்கு போன் பண்ணி உங்களை என்ன செய்கிறேன் பாருங்கடா, எங்க ஆளுங்களைக் கூப்பிடுறோம் இருங்கடா” என்று பேசிக் கொண்டிருந்தார்(ன்). நாங்கள் இந்த மிரட்டல்களை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அடுத்தடுத்த கடைகளில் பேசிக் கொண்டிருந்தோம்.

சிறிது நேரத்தில் அ.தி.மு.க ரவுடிகள் வந்து ஒன்றும் தெரியாதவர்கள் போல், “என்ன பேசுறீங்க” விசாரித்தனர். சொன்னவுடன், “யார் ஏரியாவில் வந்து, யாரைப் பற்றிடா பேசுறீங்க எங்க அண்ணன்கிட்ட பேசுங்கடா” என்று ஒரு போனை கொடுத்தனர்.

வேறு வழியின்றி வாங்கினால் எதிர்முனையில் மாதவரம் மூர்த்தி, “ஏவ் நீங்க யாருங்கயா எங்க வந்து என்ன பேசுறீங்க?” என்று மிரட்டும் தொனியில் பேச, எமது தோழர், “முதலில் மரியாதையா பேசுங்க” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அதிமுக குண்டர்களில் ஒருவன் கோழைத்தனமாக பின்புறமாக வந்து எமது தோழரை அடித்தான். அருகில் இருந்த போலீசு , அ.தி.மு.க காரனைப் போல் வேடிக்கைப் பார்த்து நின்றது. அரசியல் உறுதிகொண்ட எமது தோழர்கள் அங்கு கூடியிருந்த மக்களிடம் அந்த அ.தி.மு.க காலியை அம்பலப்படுத்தத் தொடங்கியதும், அப்போது தன் கடமையை ( அதிமுக ரவுடிகளை பாதுகாக்கும் கடமையை ) செய்ய ஆரம்பித்து அங்கிருந்து அ.தி.மு.க குண்டர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றது போலிசு.

மக்கள் சொத்தைக் கொள்ளையடிப்பது; பாலில் கலப்படம் செய்வது; பேருந்தைக் கொளுத்துவது; கடைகளை சூறையாடுவது அனைத்தும் சமூக விரோத செயல்கள். ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் இதெல்லாம் ’புனிதமான’ காரியங்கள். அ.தி.மு.க கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருப்பதற்கான முதல் தகுதியே சமூக விரோதியாக இருக்க வேண்டும் என்பது தான். அதிமுக எனும் கொள்ளைக்கூட்டத்தின் தலைவியான ’ஜெயில்’ லலிதா வின் ஆசியோடு எம்.எல்.ஏ, அமைச்சர் பதவிவரை உயர்ந்த மாதவரம் மூர்த்தி வேறு எப்படி இருக்க முடியும்? ஆனால், எமது தோழர்களோ இந்த ரவுடித்தனத்திற்கும் சேர்த்து முடிவுகட்ட வேண்டும் என்ற உத்வேகத்துடன் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

அதிமுக கிரிமினல்கள் ஆவின் பாலில் கலப்படம் செய்து கொள்ளையடித்தது, அதனைத் தொடர்ந்து, கொள்ளையை மூடி மறைத்து விலையேற்றத்தை தங்கள் தலையில் திணிப்பது ஆகிய உண்மையை தெரிந்துகொள்ளும் போது மக்கள் கொதிக்கிறார்கள். ஆனால், இதுகாலம் வரை முதலாளிகள் நலன் கொண்ட இந்த அரசமைப்பு முறையை பாதுகாக்க இந்த அரசு ஏவி வரும் அடக்குமுறைகள் காரணமாகவும், மக்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள், சொரணையற்றவர்கள், கேனையர்கள், காசு கொடுத்தால் எதையும் செய்வார்கள் என்று ஆட்சி அதிகாரம், பதவி சுகம், சொத்து சேர்ப்பது ஆகியவற்றிற்காக ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகள் பிழைப்புவாதமாக – காரியவாதமாக – சந்தர்ப்பவாதமாக நடத்திவரும் கேடுகெட்ட ஓட்டுச்சீட்டு அரசியலால் கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழ பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர்.

இக்கொடுமைகளுக்கெல்லாம் காரணமே இந்த அரசமைப்பு முறைதான், அதை அடித்து நொறுக்கி மாற்று அதிகார அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டும் என்ற உண்மை அவர்களை பற்றிக்கொண்டு வருகிறது. “ஒரு கருத்து மக்களை பற்றிக்கொள்ளுமானால் அது பவுதீக சக்தியாக மாறும்’’ என்ற பாட்டாளி வர்க்க ஆசான் கார்ல் மாக்ஸ் சொன்ன வழியில் எமது பிரச்சார பயணம் தொடர்கிறது.

ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 1, 2014 அன்று காலை 10.30 மணிக்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து தஞ்சையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை.

கமலின் கொண்டாட்டம் – ஜெயமோகன் ‘கவரேஜ்’ !

14

லையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த “த்ரிஷயம்” திரைப்படம் தமிழில் “பாபநாசம்” என தயாராகிறது. கமலஹாசன், கௌதமி மற்றும் பலர் நடிக்கின்றனர். என்னடா, வினவில் ஒரு சினிமா தயாரிப்பிற்காக உருவாக்கப்பட்ட சம்பிரதாய செய்திகளை படிக்கிறோம் என்று அதிர்ச்சியடைகிறீர்களா, பொறுங்கள்!

திரிஷ்யம்
மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த “த்ரிஷயம்” திரைப்படம் தமிழில் “பாபநாசம்” என தயாராகிறது.

தமிழில் ஒரு சினிமா வெளியாகி ஓடும் காலம் மிக குறைவாக இருந்தாலும் இலாபம் மிக அதிகமாக இருக்கிறது. பல்வேறு ஒளிபரப்பு, ஒலிபரப்பு உரிமைகள், விநியோகம், உள்நாடு, வெளிநாடு, தொலைக்காட்சி என்று ஐந்து நாட்கள் ஓடினால் கூட சில மடங்கு இலாபம் அள்ளலாம். முன்னர் அதிக காலம் ஓடினால் மட்டுமே இந்த இலாபம் சாத்தியம். ஆனால் அன்று அந்த படங்களுக்கு வரும் செய்திகள், விளம்பரங்களை விட இன்று மிக அதிகம் வருகிறது.

ஆக, படம் குறைவான நாட்கள் ஓடினாலும், படத்தைப் பற்றி மிக அதிகம் பேர் பேச வேண்டும் என்பதாக மாற்றி விட்டார்கள். வம்படியாக ஒரு பிராண்டை ரசிகனின் மனதில் நிலைநிறுத்தும் இந்த மலிவான தந்திரமும் கூட ஒரு படப்பிடிப்பு போல மிகவும் செலவு மற்றும் சிந்தனையுடன் தயாரித்து விநியோகிக்கப்படுகிறது.

இதன்படி கமலஹாசனின் பாபநாசம் திரைப்படம் குறித்து, “படம் துவங்குகிறது”, “படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டது”, “மோகன்லால் நடித்த மலையாளப்படம் தமிழில்”, “கேரளாவில் கமல் நடிக்கும் படத்தின் படப்படிப்பு”, “பாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்”, “விரைவில் பாபநாசம் திரைக்கு வருகிறது” என்று வழக்கமான செய்திகள் பயங்கரமான விறுவிறுப்பாக காட்டப்பட்டு கொட்டப்படுகின்றன.

இந்த செய்திகள் கவரேஜ் எனும் பெயரில் கவர்கள் மூலம் நடக்கும் கவர் ஸ்டோரிகளின் புழுக்கைகள் எனும் விசயம், பரவலாக அனைவரும் அறிவர். சரி இந்த எழவுக்கு இப்போது என்ன என்கிறீர்களா?

ஐயா, நம்புங்கள், மேற்கண்ட பாபநாசம் கவரேஜ் செய்திகளின் தலைப்பில் ஒரு தலைப்பை (தடித்த எழுத்துக்களில் இருப்பது) கின்னஸ் ரிகார்டில் இடம்பிடிக்க போகும் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கிறார்! “கவரேஜ் மேட்டரில் எழுத்தாளர் இமயமா” என்று இலக்கியம் மட்டுமே அறிந்த சில அப்பாவி கோயிந்துகள் எகிறலாம். அமைதியடையுங்கள் அற்பங்களே, வாழ்க்கை என்பது இலக்கியத்தை விட ஆழமானது, அகலமானது, சதுரமானது, ஆகவே வட்டமானதும் கூட. அதாவது பிழைப்புவாதமே இலட்சியம் – சாத்தியம் – நிச்சயம் எனும் அறம் தழைத்தோங்கும் காலத்தில் எழுத்தாளன் வாழ்க்கையும் எங்கு சுற்றினாலும் இங்கே வரவேண்டுமையா!

ஷூட்டிங் குடைப் பிடிப்பு
பாபநாசம் படப்படிப்பு குறித்து ஜெயமோகன் எழுதிய கவரேஜ்படி குடையில் குளிர்காயும் உலகநாயகனுக்கு கொண்டாட்டம் இருக்கலாம், குடை பிடிப்பவருக்கு ஏதய்யா ஜாலி?

விடுங்கள், இந்த பாபநாசம் படப்படிப்பு குறித்து ஜெயமோகன் எழுதிய கவரேஜ் வரிகளில் சிலவற்றை படியுங்கள்…………

“ஒரு சினிமாப் படப்பிடிப்பு முடிவது நிறைவும் துயரமும் கலந்த அனுபவம், சினிமாப் படப்பிடிப்பில் உள்ள கொண்டாட்டத்தை சினிமாவுக்கு வெளியே உள்ளவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது, சினிமா போல அத்தனை அற்புதமான கூட்டு உழைப்பு இருந்தால் பி.எஸ்.என்.எல் ஊழியர்களில் 70 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்று பலமுறை தோன்றியிருக்கிறது, கலைமனம் கொண்ட இத்தனை பேர் ஒரே இடத்தில் கூடும் இன்னொரு தருணம் நம் கலாச்சாரத்தில் இன்று இல்லை, வெட்டி லௌகீகப் பேச்சுகளை சினிமாச்சூழலில் நான் கண்டதே இல்லை, டீக்கடைக் கிசுகிசுப் பேச்சாளர் முதல் வணிக சினிமாவை கரைத்துக் குடித்து அலசும் அறிவுஜீவி வரை எவருக்கும் தமிழ்சினிமாவைப் பற்றி அனேகமாக ஒன்றுமே தெரியாது, சினிமாக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு உயர்ந்த இலக்கிய ரசனை உண்டு, சிரித்து கண்சிவந்து மூச்சுத்திணறிய அரங்கா மனமுடைந்து ‘இதேமாதிரி வேடிக்கையும் வெளையாட்டுமா வேற ஒரு தொழிலே இல்லியே சார்’ என்றார், அவர்கள் பார்ப்பது நட்சத்திரமான கமலை அல்ல; உற்சாகமே உருவான ஒரு சக சினிமாக்காரரை; அவர்களுக்கு அவர் மேல் இருக்கும் மோகம் அந்த உயிர்த்துடிப்பு காரணமாகவே……..”

ஜெயமோகன் எவ்விடத்திலும் எந்நேரத்திலும் எதனிலும் தன்னையே தான் முடிவு செய்வதையே பார்த்து மகிழும் நார்சிச நானஞான மரபில் உருவானவர். ஆகையால் கமலின் படப்படிப்பில் எந்நேரமும் கொண்டாட்டமும், கும்மாளமும், அறிவும், இலக்கியமும் அனைத்து ரசங்களும் ரசிகமணி டிகேசிக்கு போட்டியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழ் சினிமாவின் ஒரு நாள் படப்படிப்பை ஒதுங்கி நின்று பார்ப்பவர்கள்தான், கொண்டாட்டம் யாருக்கு, திண்டாட்டம் எவருக்கு என்று பிரித்து பார்க்க முடியும்.

எழுத்தாளரின் இந்த கொண்டாட்டத்தை நகலெடுத்து சினிமாவில் தயாரிப்பு உதவியாளர் வேலை செய்யும் ஒரு நண்பரிடம் காட்டி பேசினோம்.

சினிமான்னா ஜாலின்னு எவன் சொன்னான் என்று ஆவேசத்துடன் அவர் கூறியவற்றை நிதானமாக தொகுத்து தருகிறோம்.

வெளிப்புறப் படப்பிடிப்பு ஒன்றில் புரொடக்சன் பாய் எனப்படும் தயாரிப்பு உதவியாளரின் ஒரு நாள் வேலை என்ன?

“சன்ரைஸ்” கால்ஷீட் அல்லது 9 மணி காலஷீட் என்றால் விடியற்காலை 3.30 மணிக்கு எழுந்திருக்கணும். டீ மாஸ்டரை எழுப்பி, முதலில் தங்களுக்கு டீ போட்டு வாங்கி குடித்து விட்டு படப்பிடிப்பு குழுவினருக்கு தேநீர் தயாரிக்க வேண்டும்.

5 ஸ்டார் ஹோட்டல், 3 ஸ்டார் ஹோட்டல், சாதாரண லாட்ஜ், டார்மிட்டரி என தரவாரியாக பிரிக்கப்பட்டு தங்கியிருக்கும் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்கனவே சொல்லப்பட்ட முறையில் டீயை பிளாஸ்குகளில் நிரப்பி வகை பிரித்து அனுப்புவாங்க. ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருப்பவங்களுக்கு அங்கேயே காப்பி கிடைச்சாலும், அதை குடிச்சாலும் குடிக்கலைன்னாலும், இங்கிருந்தும் காபி கொண்டு போய் சேர்க்கணும். கதவைத் தட்டி கொடுத்து விட்டு வர வேண்டும். எழுந்து வரவில்லை என்றாலும், வெளியில் வைத்து விட்டு வர வேண்டும்.

வேக்-அப் கால் வசதி இல்லாத இடங்களில் தங்கியிருப்பவர்களுக்கு டீ எடுத்து வந்திருக்கேன்னு சொல்லி எழுப்பி விடணும்,. அப்படியே வெச்சிட்டு போய்ட்டா, “என்னா திமிராடா, வைச்சிட்டு போயிட்டியா”ன்னு திட்டு விழும்.

இங்கே எல்லாம் முடித்து விட்டு தனக்கு நிகரான லைட் மேன், அசிஸ்டண்ட் கேமராமேன் போன்ற தொழிலாளிங்க தங்கியிருக்கும் இடத்தில்தான் மனசு விட்டு சிரிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த பகடி படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர்களும், நடிகர்களும், எழுத்தாளர்களும் செய்யும் அறுவை கலந்த பகடி பம்மாத்து அல்ல. சினிமாவின் இரட்டை வேடத்தை தோலுரிக்கும் அறமும் கோபமும் கலந்த சமூக நகைச்சுவை அது.

உதாரணமாக, ஜெயமோகன் படப்பிடிப்புக்கு வந்திருப்பது குறித்தும் கிண்டல் செய்வாங்க. “அங்க ஒருத்தன் உட்கார்ந்திருந்தான். எதுக்கு வந்திருக்கான்னே தெரில. இவன கதை எழுதச் சொன்னாங்களா, இங்க வந்து ஆணி புடுங்கச் சொன்னாங்களா? நாமதான் அவனுக்கும் சேர்த்து கேரியர் தூக்க வேண்டியிருக்கு. அது இல்லாது கூட யாரோ ரெண்டு பேரையும் இட்டுகினு வந்துட்டான். அவனுங்க முன்ன பின்ன ஷூட்டிங்கே பார்த்திருக்க மாட்டானுங்க போல. வேல வெட்டியில்லாம கெளம்பி வந்துட்டானுங்க” என்று வைவார்கள்.

சினிமா ஷூட்டிங்
சினிமா ஷூட்டிங் என்பது சுகபோகமும் கொண்டாட்டமும் அல்ல. காட்சிகளை தயாரிப்பதற்காக தொழிலாளிகள் படும் நரகவேதனை (படம் – உதாரணத்துக்காக மட்டும்)

நாகரீகம் கருதி இத்தகை கேலிப்பேச்சை கொஞ்சம் அடக்கிச் சொல்கிறோம். அந்த கிண்டல்களை முழுமையாக நேரில் கேட்டால் சினிமா ஷூட்டிங் என்பது சுகபோகமும் கொண்டாட்டமும் அல்ல. காட்சிகளை தயாரிப்பதற்காக தொழிலாளிகள் படும் நரகவேதனை என்பது புரியும். அந்தத் தொழிலாளி தான் நாள் முழுவதும் படும் உபாதையை, ஒரு நாள் பேட்டாவுக்காக அல்லாடும் வாழ்க்கையின் அவலத்தை இப்படி கேலி செய்வதன் மூலம்தான் தணித்துக் கொள்கிறார். உண்மையில் உலகின் ஆதி பாடல், கவிதை, பாட்டு எல்லாம் இப்படித்தான் தோன்றியது.

அதிகாலை டீ கொடுத்து முடித்த பிறகு டிபன் கொண்டு போக ஏற்பாடு செய்ய வேண்டும். ஷூட்டிங் வேலைக்கு போறாங்களோ இல்லையோ, டிபனை சரியான நேரத்துக்கு கொண்டு போக வேண்டும். அப்படி இல்லைன்னா ஜெயமோகன் விவரிக்கும் அவர்களுடைய கொண்டாட்டம் டரியல் ஆகி விடும்.

அதன் பிறகு, காலையில் டீ கொடுத்த பிளாஸ்க் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி கொண்டு வர வேண்டும். மதியானம் சாப்பாட்டுக்கு யார் யாருக்கு என்னென்ன பிடிக்கும்னு லிஸ்ட் வாங்கணும். கமலஹாசனில் ஆரம்பித்து அல்லக்கையாக வந்து உட்கார்ந்திருப்பவர்கள், வேடிக்கை பார்க்க வந்திருக்கும் வாசகர் வட்ட கூட்டம் எல்லோருக்கும் என்ன பிடிக்கும்னு கேட்டு வாங்கிகிட்டு போய் கிச்சனுக்கு போகணும். ஜெயமோகன் மாதிரி ஆட்கள் ஒவ்வொருத்தரும் தனக்கு என்னென்ன ஒவ்வும், ஒவ்வாது, வேணும் வேணாம்னு ஒரு லிஸ்டோட போயிருப்பாங்க. இந்த லிஸ்ட்ட நிறைவேத்தணும். எல்லாருக்கும் வழக்கமான உணவு வகைகளோடு ஸ்பெஷல் அயிட்டங்களையும் கொண்டு வர வேண்டும்.

மதிய உணவு முடிந்த பிறகு மாலை ஸ்வீட், காரம், காப்பி ஏற்பாடு செய்யணும். ஒவ்வொருத்தருக்கும் டீ பிடிக்குமா, காபி பிடிக்குமா என்று பட்டியல் போட்டு கொண்டு போய் சேர்க்கணும். இதுல டேஸ்ட்டு சரியில்ல, அளவு குறைச்சல், பணிவு இல்லேன்னு மண்டை சைசுக்கு தகுந்த மாதிறி ஆடுவாங்க. அதையெல்லாம் அணைச்சு திருப்பணும்.

இது எல்லாத்துக்கும் மேல, கூப்பிடும் நேரத்தில் காபி, டீ, சிகரெட், தண்ணீ என்று கொடுக்க தயாராக நிக்கணும். எப்போ கூப்பிடுவாங்கன்னு தெரியாது, கூப்பிடுறதை பார்க்கலைன்னா அதுக்கு ஒரு கத்து.  200-300 பேரு இருக்கிற இடத்தில யார் யார் கூப்பிடுறாங்கன்னு அங்கேயே பார்த்துக் கொண்டே இருக்கணும். பார்க்காம ஒரு செகண்டு லேட் ஆயிடிச்சின்னா “என்னா மயிரை புடுங்கிறீங்க” என்று திட்டு விழும். குடிக்கிற தண்ணீர் பக்கத்திலேயே இருந்தாலும் கேப்பாரு. ஓடிப்போய் எடுத்து கையில கொடுக்கணும்.

கேரளாவில் “எந்தா வேணே”ன்னு என்று கேட்ட சர்வர் குறித்து அறச்சீற்றம் கொண்டு எழுத்தில் பொங்கிய ஜெயமோகனையே சம்பளம் கொடுத்து எழுத வேலைக்கு வைத்திருக்கும் இயக்குனர்கள், நட்சத்திர நடிகர்களின் கோபமும், ஆவேசமும் எப்படி இருக்கும்னு கற்பனை செஞ்சு பாத்துக்கோங்க. சொல்லப்போனா தமிழ் சமூகத்தில் உள்ள பண்ணையடிமைத்தனம், அடிமைத்தனம், கௌரவம் அனைத்தும் தமிழ் சினிமாவில்தான் இன்றும் முழுதாக உயிர்வாழ்கிறது.

தொழிலாளர்கள்
கொண்டாட்டமே இது போன்ற தொழிலாளர்களை வதைப்பதுதான். (படம் – உதாரணத்துக்காக மட்டும்)

அந்த நட்சத்திரங்களோட கொண்டாட்டமே இது போன்ற தொழிலாளர்களை வதைப்பதுதான். கிடைக்கும் பேட்டாவுக்காக படப்பிடிப்புக்கு வந்து வேலை செய்யும் அவர்கள், இந்த நட்சத்திரங்கள் மனம் கோணி விடக் கூடாது, அவர்களது கொண்டாட்டம் சுணங்கி விடக் கூடாது என்று வேகமாக ஓடி வருவது, போவது, பதறுவது இதை எல்லாம் கிண்டல் செய்வார்கள். “இவன் எப்பிடி எடுத்து வருவான் தெரியுமா சார், எப்பிடி ஓடுவான் சார்” என்று கிண்டல் செய்து அநாகரிகமாக குத்திக் குத்தி ரசிப்பதுதான் கொண்டாட்டம். அதை அந்த தொழிலாளியும் ரசிக்கணும். பதிலுக்கு அவர் கமலஹாசனையோ, ஜெயமோகனையோ கிண்டல் செய்ய முடியாது. கமல்ஹாசன் நடிப்பதற்கு கை தட்டலாம். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, “நடிப்பது தவறு, நடிக்கவே தெரியல – இவனெல்லாம் உலக நாயகனா – ஊசிப்போன உளுந்த வடையா” என்று யாராவது சொல்ல முடியுமா?

மேக் அப், காஸ்ட்யூம் பாய் இவர்களின் பயத்தையும், அச்சத்தையும் கிண்டல் செய்து சிரிக்கும் இந்த கொண்டாட்ட கோமான்கள், “ஏண்டா இப்படி ஓடிக்கிட்டே இருக்கியே, சாப்பிட்டாயா” என்று கேட்க மாட்டார்கள், அருகிலேயே தண்ணீர் வைத்திருந்தாலும் குரல் கொடுத்து கூப்பிட்டுத்தான் எடுத்து தரச் சொல்லுவார்கள். இப்படி இருந்தா ஏண்டா கொண்டாட்டம் இருக்காது? நாக்கு நனைக்கவும், ஆய் கழுவவும் ஆள் வைச்சிருக்கிறவன் ஆனந்தம் குறித்து நமக்கு வகுப்பு எடுக்கிறான் மக்களே!

பாபாநாசம் படப்பிடிப்பு நடுவில் கமலஹாசனுக்கு நேர்ந்தது போல ஏதாவது உடலுக்கு வந்து விட்டால் அமர்க்களம் செய்து படப்பிடிப்பை நிறுத்தி வைப்பது வரை கூட போய் விடுவார்கள். இங்கே கமலஹாசன் மூக்கில் ஒரு சிறு ரப்பர் துகள் போய்விட்டது என்று அது இன்டர்நேஷனல் நியூசாக, ஜெயமோகன் வாய்சாகவெல்லாம் மாறும். இத்தனைக்கும் கமல் ஒரு தும்மல் போட்ட பிறகு அந்த தூள் வெளிவந்து நார்மல் ஆகியிருப்பார். ஆனால் இதற்கு இவர்கள் செய்த அலப்பறை என்ன? அந்த் பூமாதேவியே சுனாமியில் அழிந்து தொலைந்து விட்டது போல அழுகையும், பிரார்த்தனையும் அடேங்கப்ப்பா!

இதே நேரம் தொழிலாளர்கள் வயிறு சரியில்லை, தலைவலி, காய்ச்சல் என்று வந்து விட்டால் அதையும் சமாளித்துக் கொண்டு வேலை செய்ய வேண்டும். முடியவே முடியாமல் படுத்து விட்டால் அவருக்கு பதிலாக இன்னொருவர் அட்ஜஸ்ட் பண்ணி கொள்வார். “அவன எங்கடா” என்று அதட்டலுக்கு, “இப்ப வந்துடுவான் சார்” என்று திட்டு வாங்கிக் கொண்டு சக தொழிலாளியை பாதுகாப்பார். நேரடியாக உடல்நலப் பிரச்சனை என்று சொன்னால் முதலாளியோ, நடிகனோ ஓய்வு கொடுத்து விடப் போவதில்லை.

ஷூட்டிங்
நட்சத்திர நடிகர் திட்டுனா அது அவரோட போகாது, அவனோட அல்லக்கைங்கள்ல இருந்து, அள்ளிக் கொடுக்கும் முதலாளி அவனோட சகபாடின்னு ஆளாளுக்கு திட்டி தீர்ப்பானுங்க! (படம் – உதாரணத்துக்காக மட்டும்)

மனிதத் தன்மை இல்லாத கும்பலுக்கு வேலை செய்யும் நிலையில் மனதை மரக்க வைக்க பான்பராக் போட்டுக் கொண்டே நாள் முழுவதும் உலாத்துவார்கள்.

மாலையில் ஷூட்டிங் முடிந்து 6 மணிக்கு மேல் தனிப்பட்ட நேரம். ஆனா புரடக்சன் பாய்க்கு அது கூட இல்லை. அவனவன் லாட்ஜூக்கு போய் விட்டா, காலையில் தூக்கிகிட்டு போன மாதிரி கேரியரை தூக்கிக் கிட்டு போய் தண்ணி அடிப்பதற்கு தேவையானது என்னென்ன, நைட்டு என்ன கொடுக்கணும்னு புரொடக்சனில் சொன்னதை எல்லாம் நிறைவேத்தலைன்னா, தண்ணில இருந்தாலும், தெளிவா இருந்தாலும் தூக்கத்தில இருந்தாலும் திட்டு என்பது நிரந்தரம். அதுவும் நட்சத்திர நடிகர் திட்டுனா அது அவரோட போகாது, அவனோட அல்லக்கைங்கள்ல இருந்து, அள்ளிக் கொடுக்கும் முதலாளி அவனோட சகபாடின்னு ஆளாளுக்கு திட்டி தீர்ப்பானுங்க! இதுதான் ஜெயமோகன் அண்ணாத்தேவுக்கு கேரவான்ல சங்கீதமாக கேட்டுருக்கு போல! காத டாக்டர்கிட்ட காமிய்யா வெண்ணை!

8 மணிக்கே சோறு வரலையான்னு ஒருத்தன் கேட்பான். 11 மணி வரை கூட ஒருத்தன் கூட சாப்பிடாம இருப்பான். 8 மணியா, 11 மணியா என்று தெரியாமல் ஒருத்தன் திட்டுவான். 9 மணிக்கே வாசலில் கொண்டு வைத்து விட்டதை பார்க்காமல் ஏன் சாப்பாடு வரலைன்னு 11 மணிக்கு ஒருவன் திட்டுவான்.

இது எல்லாம் முடிஞ்சி, எச்சில் கேரியர் எல்லாம் தூக்கி கொண்டு போட்ட பிறகு சராசரியாக 11 மணிக்கு மேல் ஆகி விடும். இவ்வளவு வசவுகளையும் வாங்கிக் கொண்டு ஓஞ்சு போய், நாள் முழுவதும் ஓடிய ஓட்டத்துக்குப் பிறகு தூக்க கலக்கத்தில் ஒழுங்காக சாப்பிடக் கூட முடியாது. ரசம் இருக்குதா, மோரு இருக்கா என்று திரும்பவும் 3 மணிக்கு எழுந்திருக்கும்படியா மிதமா சாப்பிட்டு விட்டு படுக்க போகணும்.

அங்கு படுக்கிற இடம் இவர்களோட கேரவானோ, 5 ஸ்டார் ஹோட்டலோ கிடையாது. அது ஒரு வேர்வைக் கூடம் (sweat shop). படுத்தா எழுந்திருக்க முடியாம போயிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு தரையிலும், அரைகுறையா டக் என்று விழித்து விடுவது போல அங்கேயே படுத்துக் கொள்வார்கள். வீட்டில் கூட நல்லா தூங்கியிருப்பான். இங்க வந்து அப்படி தூங்க முடியாது.

செட் அசிஸ்ட்ன்ட்
“தூக்கு செட் அசிஸ்டெண்ட, புடுங்க வந்தயா, சினிமாவுக்கு வந்தயா, பேட்டா வாங்கற இல்ல. வந்தா வக்கணையா இங்க வந்து கேக்கறீங்க இல்ல” – இதுதான் படப்படிப்பு நடக்கும் போது படைப்பாளிகளின் கொண்டாட்டம்!

திரும்பவும் 3 மணிக்கு எழுந்து இதே ஓட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இந்த கொண்டாட்டத்தை ரசிப்பதற்கு ஒன்று விகாரமான சாடிஸ்ட்டாக இருக்க வேண்டும், அல்லது இலக்கியவாதியாக இருக்கணும்.

இது போல நடிகருக்கான எல்லா பொருட்களையும் – கொண்டு வர வேண்டிய பொறுப்பு காஸ்ட்யூம் அசிஸ்டெண்டுக்கு. கமலஹாசனின் செருப்பை துடைச்சு வைக்கல, 2 டஜன் செருப்பில் 3-வது செருப்பை விட்டு விட்டு வந்து விட்டான், கைக்குட்டை, ஸ்கார்ஃப் இல்லை என்று வரிசையாக கேள்வி வந்து கொண்டே இருக்கும். ஏதாவது பிரச்சனைன்னா வேறு யாரும் பொறுப்பு எடுத்து கொள்ள மாட்டார்கள். “தூக்கு செட் அசிஸ்டெண்ட, புடுங்க வந்தயா, சினிமாவுக்கு வந்தயா, பேட்டா வாங்கற இல்ல. வந்தா வக்கணையா இங்க வந்து கேக்கறீங்க இல்ல” என்று வைவார்கள். இது நாகரீகமான வசவு, முழு வசவையும் கேட்பதற்கு ஆயிரம் காது பத்தாது.

தொடுபுழாவில் போடப்பட்ட செட் கனவு போல கலைந்திருக்கும் என்று உருகுகிறார் ஜெயமோகன். ஆனால், அந்த செட்டை உருவாக்கியவர்களுக்கு அது கலைந்து போயிருக்காது. பேக் ரவுண்டில் ஒரு பூச்செடி, பூத்தொட்டி அல்லது ஒரு அலாரம் கடிகாரம், கூஜா, பூச்சட்டி திரும்பவும் வைக்க மறந்து விட்டால் ‘நான்கு பேருக்கு மத்தியில் 20 வருட சர்வீஸ் உடைய என்னை திட்டிட்டான்’ என்ற காயம் அங்க அடையாளம் போல துன்ப அடையாளங்களாக அவர்களது மனதில் பதிந்து போயிருக்கும்.

மேக்-அப் உதவியாளர், நடிகர் எப்போது கண்ணாடி கேட்டாலும் காட்டுவதற்கு தயாராக இருக்க வேண்டும். 24 மணி நேரத்தில் ஒரு நிமிசம் கவனிக்காமல் இருந்து விட்டால் கூட போச்சு. அவன் மூஞ்சியை தவிர இவன் கண்ணில் எதுவும் தெரியக் கூடாது. கண்ணாடி நடிகரின் மூஞ்சியை காட்டுவது போல, இவர் நடிகரை தன் கண்ணில் பிரதிபலித்துக் கொண்டு நிற்க வேண்டும். முகத்தை துடைப்பதற்கு பேன் கேக்கைக் கூட கையிலேயே விரல்களின் நீட்சியாக தயாராக வைத்திருக்க வேண்டும். பையை திறந்து எடுக்கும் நேர தாமதத்தைக் கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

மேக்அப்
முகத்தை துடைப்பதற்கு பேன் கேக்கைக் கூட கையிலேயே விரல்களின் நீட்சியாக தயாராக வைத்திருக்க வேண்டும். (படம் : உதாரணத்துக்காக மட்டும்)

இது போல சண்டை நடிகர்கள், நடன உதவியாளர்கள், ஸ்பெஷல் எஃபெக்ட் உதவியாளர்கள் என 25 துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமை இதுதான்.

துணை இயக்குநர்கள், துணை ஒளிப்பதிவாளர்கள் என்று அடுத்த நிலையில் இருப்பவர்களின் கொண்டாட்டமும் அதோ கதிதான். முதல் இரண்டு துணை இயக்குனர்கள் உட்பட ஒரு 6 பேரின் கொண்டாட்டத்தை மட்டும்தான் ஜெயமோகன் பார்த்திருக்கிறார். மற்ற துணை இயக்குனர்கள் எல்லோரும் கண் மறைவாகத்தான் இருக்க வேண்டும். பவ்யமாக இருக்க வேண்டும். ஒரு அசையா பொருள் போல இருக்க வேண்டும். முகத்தில் உணர்ச்சி இருக்கக் கூடாது. பணக்கார வீடுகளில் வேலை செய்பவர்கள் போல எந்திரம் போல காதில் விழும் உரையாடல்களுக்கு எதிர்வினை புரியாமல் இயங்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஏற்றுக் கொள்வார்கள்.

வெளியூர் போனாலும் பேட்டாவைக் கூட மதிப்பாக கொடுக்க மாட்டார்கள். வேலை முடிந்த உடன் கேட்டால் திட்டி கேவலப்படுத்துவார்கள். காத்திருந்து கொடுக்கும் போதுதான் வாங்கிக் கொள்ள வேண்டும். மாலையில் பேட்டா வாங்க வரிசையில் நிற்கும் போது அவர்களிடம் கொண்டாட்ட மனநிலையை கேட்க வேண்டும். அந்த நேரத்தில் இழக்கும் சுயமரியாதையை பற்றி ஜெயமோகன் கேட்டிருப்பாரா. அந்த வசவு தரும் துயரங்களின் இறுக்கத்தைத்தான் உணர்ந்திருப்பாரா?

சினிமா கிண்டலில் தமிழ்ப் பண்பாடு குறைவாகவே காணப்படும் என்று சொல்கிறார் ஜெயமோகன். அப்படி அவர் சொல்லும் குறைவான பண்பாடு பற்றிய உரையாடல்களை அவர் எழுத முடியுமா? படப்பிடிப்பில் இப்படித்தானே பேசிக் கொள்கிறார்கள் என்று யாராவது சொல்லி விடக் கூடாது என்பதற்காக இப்படி ஒரு முன்ஜாமீன் வாங்கிக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.

தமிழ் சினிமா பண்பாடு
அசிங்கமாக பேசுவதுதான் படைப்பாளிகள் கொண்டாடும் அந்தப் பண்பாடு. (படம் கற்பனை)

அதாவது அசிங்கமாக பேசுவதுதான் அந்தப் பண்பாடு. உழைக்கும் மக்கள் அசிங்கம் என்று காறித்துப்பும் மொழியில்தான் அவர்கள் பேசிக் கொள்வார்கள். ஹீரோயினாக நடிக்கும் பெண்ணின் அங்கங்களை பற்றி ஆபாசமாக பேசுவது. காதல் வயப்பட்ட பெண்ணின் நடத்தையைப் பற்றி இழிவாக பேசுவது. ஷூட்டிங்குக்கு அம்மாவோடு வருகிறவரை பற்றி கேவலமாக பேசுவது. இது போன்று இழிவாக பேசுவதைத்தான் இவர் கொண்டாட்டம் என்று சொல்கிறார். பேச்சிலேயே போர்னோ காட்டி சுகம் காணுவார்கள். அதை விட்டால் கீழ் மட்ட ஊழியர்களின் வேதனை, கிண்டலில் சுகம் காணுவார்கள். இதுதான் ஆரம்பல கால தமிழ் மன்னர்கள், பண்ணையார்கள் தொட்டு இப்போதைய அரசியல்வாதிகள், நடிகர்கள், சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் வரை தொடரும் ஒரே பண்பாடு!

படப்பிடிப்பு முடிவது நிறைவும் துயரமும் கலந்த அனுபவம் என்று சொல்கிறார் ஜெயமோகன் 200 பேர் கலந்து கொண்ட படப்பிடிப்பில் 150 தொழிலாளிகள் எப்படா வேலை முடிஞ்சி இங்கிருந்து போகப் போறோம் என்று துடித்துக் கொண்டிருப்பார்கள். 40 நாள் படப்பிடிப்பில் இது போல நாயாக வேலை செய்வதற்கு சில ஆயிரங்கள் ரூபாய் பேட்டா கிடைக்கும். அதுதான் அவர்களை இயக்குகிறது. இந்த அடிமைத்தனத்தை, திட்டுக்களை, சோகங்களை அனைத்தையும் சகித்துக் கொள்ள வைக்கிறது.

திரும்பிப் போன பிறகு மீண்டும் வாழ்க்கை துரத்த, வேறு அடுத்த ஷூட்டிங் தேடி ஓட வேண்டும். அடுத்த வாய்ப்பு கிடைக்கும் போது இதே போல நாய் பிழைப்பு பிழைக்க வேண்டும்.

இத்தகைய தொழிலாளிகள் நூற்றுக்கணக்கில் இருந்தாலும் அவர்கள் கண்ணில் படாத போதையில் இருந்திருக்கிறார் ஜெயமோகன். அந்த போதை சினிமா போதை, கமல் போதை என்பதன்றி வேறென்ன?

அங்கங்களை இழந்த ஸ்டண்ட் கலைஞர்கள், தீரா நோய்களை வாங்கிய கலைஞர்கள். உழைப்பின் அழுத்தம் தாங்க முடியாமல் முடக்கு வாதம் வந்த உதவியாளர்கள், கால், கை உடல் உறுப்புகளை இழந்த சண்டைக் கலைஞர்கள், உயிரை இழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் என 20-30 ஆண்டு காலம் உழைத்து 1000 ரூபாய் பென்சனுக்காக சங்கத்தில் வரிசையில் நிற்கும் அவலத்தை உருவாக்கிய தமிழ்  சினிமாவில் எதுடா கொண்டாட்டம்?

அல்லக்கைகள் போட்டோ
உலக நாயகனுடன் உத்தம எழுத்தாளனின் லைஃப்டைம் அல்லக்கைகள்!

இதே சினிமாவில் கோடிகளில் சம்பளமும், இலட்சங்களில் தினசரி வசதிகளையும் பெறும் மேன்மக்களின் சிரிப்பை வைத்து முழு சினிமாவும் வெடிச்சிரிப்பு என்று வாய்பிளக்கிறார் ஜெயமோகன். அது ஆணவச் சிரிப்புடா வெங்காயம் என்று எப்படி உணர வைப்பது?

4 நாள் ஷூட்டிங்கில் கமலஹாசனோடு உட்கார்ந்ததோடு, அரங்கசாமி போன்ற லைஃப் டைம் அல்லக்கைகளை கூப்பிட்டு போட்டோ எடுக்க வைத்து அதையே வெட்கம் கெட்டு வெளியிட்டு மகிழும் அல்பங்களுக்கு கொண்டாட்டமும் கும்மாளமும் தெரிவதில் வியப்பில்லை.

தமிழ் சினிமாக்காரர்களுக்கு நல்ல சினிமாவும் தெரியுமாம். ஆனால், சராசரியான ரசனையை தொடுவதே அவர்களுடைய சவாலாம். ஏன்யா அறிவு கெட்ட முண்டம், உயர்ந்த ரசனை உள்ளவன் அதை சினிமாவுல காட்ட தெரியாம சராசரியா எடுக்குறானா அவனுக்கு எங்கடா ரசனையும், தரமும் இருக்கும்? சில நூறு சினிமாகாரர்களை விட 9 கோடி தமிழ் மக்கள் ரசனை அற்ற முட்டாள்கள். வேறு வழியில்லாமல் அவர்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து படையல் போடுகிறார்களாம் என்று இந்த அயோக்கியர்களுக்கு முட்டுக் கொடுக்கிறார் ஜெயமோகன்.

அதாவது உலகநாயகனெல்லாம் மிகவும் மண்டை வீங்கிய ரசனை, இலக்கிய நுண்ணுணர்வு உள்ளவர், அவர் போய் விசுவரூபம் போன்ற குப்பைகளை எடுக்கிறார் என்றால் மக்கள் எப்படி மோசமாக இருக்கிறார்கள் என்கிறார் ஜெயமோகன். அதனால்தான் அவர்கள் எடுக்கும் வணிக சினிமாவை அவர்களே கிண்டல் செய்து கொள்கிறார்களாம். அவர்கள் எடுக்கும் வாந்தியை அவர்களே முழுங்குவதையே ஜெயமோகன் கொண்டாட்டமாக கருதுகிறார் என்றால் அவர்கள் கழித்ததை வழித்து நக்குவதை எப்படி பூரிப்பார் தெரியவில்லை.

உலக நாயகன் கமலஹாசன் ஆளவந்தான் படம் எடுத்து கலைப்புலி தாணுவை நோகடித்த கதை எல்லோருக்கும் தெரியும். அமெரிக்காவில் இருந்து மேக்அப் மேன் வரவழைத்தது, படப்பிடிப்பு காலம் முழுவதற்கு தாஜ் ஹோட்டலில் ரூம் போட்டது, அதுக்கு எக்ஸ்பர்ட், இதுக்கு இம்போர்ட் என்று அவரை ஓட்டாண்டியாக்கியது இவை தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டிகளை வாசகர்களே தேடிப் படித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். எனினும் தாணு போன்றவர்களே இப்படிப்பட்ட கோமாளிகளை வைத்துத்தான் கோடிசுவர்களாக ஆனாவர்கள். ஆகவே இந்த உள்குத்து அவர்களுக்கு ஒரு பிரச்சினை இல்லை.

ஜெமோ - காஷ்மீர்
200-300 பேர் கொண்ட ஒரு சினிமா படப்பிடிப்பில் நடப்பதை கவனித்து அறிய முடியாத இந்த மனம்தான் இலக்கிய மனமாம்.

மேக் அப் கலைக்கறதுக்கு முகம் கழுவ பிஸ்லரி வாட்டர், குடிக்க இளநீர், ஆரஞ்சு ஜூஸ், சாப்பிட எண்ணெய் இல்லாம பொரிச்ச கிரில்ட் சிக்கன், தண்ணி அடிக்கிறதுன்னா மினிமம் 3 ஆயிரம் ரூபாய் பாட்டில், பாட்டிலே வெல்வெட் துணி சுத்தியிருக்கும். இந்த மாதிரி வாழ்க்கையில் இருப்பவனுங்க சராசரி சிந்தனையில் இருக்க மாட்டான் என்பது உண்மைதான். ரேசன் அரிசி சோறு சாப்பிட்டு விட்டு கட்டாந்தரையில் தூங்கிற மக்களைக் கொண்ட நாட்டில், உள்ளே போட்டிருக்கிற ஜட்டியிலிருந்து தலையில தடவுற எண்ணெய் வரைக்கும் இம்போர்டட்தான். அதையும் சினிமா செலவில் வாங்கி விட்டு அதை தூக்கிக் கொண்டு போறவன்தான் இந்த சினிமா நடிகருங்க! இதத்தான் என்சாய் மச்சி தத்துவம் என்கிறார் ஜெயமோகன்!

ஜெயமோகன் பாபநாசம் படத்துக்கான மலிவான பிரமோசனாக இந்தப் பதிவை எழுதியிருக்கிறார். கவர் வாங்கிக் கொண்டு கவர் செய்யும் பத்திரிகையாளர்களை விட கேவலமான மொழியில் எழுதியிருக்கிறார். அவர்களாவது கமலஹாசனையும், நட்சத்திரங்களையும் வெளிப்படையாக புகழுவாங்க. இவரோ கமலஹாசனை புகழ்வது வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக படப்பிடிப்பே கொண்டாட்டம் என்று சீன் காட்டுகிறார். அதாவது பெருச்சாளியைக் கொல்ல வீட்டைக் கொளுத்துவது போல கமலை போற்ற அவர் துறை கூவத்தையே போற்றுகிறார் இந்த அறிஞர்.

இதுவே ஜெயமோகனது தகுதியை பதம் பார்க்கும் ஒரு சோறு. இதுதான் இவருடைய இலக்கிய ஆன்மா. 200-300 பேர் கொண்ட ஒரு சினிமா படப்பிடிப்பில் நடப்பதை கவனித்து அறிய முடியாத இந்த மனம்தான் இலக்கிய மனமாம், இந்திய ஆன்மாவை தரிசிக்கும் ஞானமரபின் இருப்பிடமாம். இதே தகுதியுடன்தான் காஷ்மீருக்கு சில நாட்கள் இன்பச் சுற்றுலா போய் விட்டு வந்து காஷ்மீரில் போராட்டமே இல்லை என்று அடித்து விட்டார்.

சினிமாத் துறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சினிமாவின் மீது பெருங்காதல் இல்லை, அதன் மூலம் கிடைக்கும் பாட்டாவுக்காக (சம்பளத் தொகையின்) மட்டுமே அவர்கள் வாழ்கிறார்கள். அதற்காகத்தான் அவ்வளவு அசிங்கப்படுகிறார்கள். சுயமரியாதையை வம்படியாக அடித்து பிடுங்கும் தமிழ் சினிமாவில் கொண்டாட்டம் இருக்கிறது என்று சொல்பவன் ஹிட்லர் தூங்குவதற்கு இரவுக் கதை சொல்லும் தகுதி கொண்டவன்.

ஜெயமோகன் எழுதும் மகாபாராத நாவல் வெளியீட்டு விழாவில் கமலஹாசன் கலந்து கொள்கிறார். பதிலுக்கு கமல் படப்படிப்பு குறித்து ஜெயமோகன் எழுதுகிறார். பரஸ்பர மொய் விருந்து. இதற்கு மேல் கொண்டாட்டம், ரசனை, கும்மாளம் என்று எழுதினால் அது நிச்சயம் கவரேஜ் வகையினுள்ளே வருகிறது. விவரமிருப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

டீ பரிமாறுபவர் சார்பாக படப்பிடிப்பில் என்ன நடக்கிறது என்று நாங்கள் சொல்லிட்டோம். தமிழ்நாட்டில் யாருக்குமே சினிமா உலகத்தைப் பற்றி தெரியாது என்று ஜெயமோகனால் செருப்பால் அடிக்கப்பட்ட பத்திரிகையாளர்களும், தமிழ் சினிமா பற்றி எழுதும் அறிவுஜீவிகளும் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.

–    சினிமா தொழிலாளி உதவியுடன் அப்துல்

ஜெயமோகனின் கவரேஜ் – பாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்

உருளைக்கிழங்கு இறக்குமதி வளர்ச்சியா வீழ்ச்சியா ?

2
punjab potato 2
உலக உருளைக்கிழங்கு உற்பத்தியில் இந்தியா 3-ம் இடத்தில் இருந்தாலும் விவசாயிகள் அழிக்கப்படுவது ஏன்?
punjab potato 1
உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சியடைந்த நேரத்தில் உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படுவது விவசாயிகளை அழிக்கவா?

ந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயம் இந்த நாட்டின் முதுகெலும்பாகும்.  கண்டிப்பாக பள்ளியில் சமூக அறிவியல் பாடத்தில் குடிமையியல் பகுதியில் உங்களுக்கு இப்படி சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் இன்றைய நிலையில் இந்திய அரசாங்கம், விவசாயிகளின் குரல்வளையை நசுக்குவதில் பன்னாட்டு நிறுவனங்களின் பேராதரவுடன் களமிறங்கியுள்ளது.  கீழே சொல்லப்படும் விடயம் பல்வேறு பரிமாணங்களில் உங்களுக்கு வந்தடைந்திருப்பினும், இந்த பொருளாதார மேதாவித்தனம், விவசாயத்தை அழிப்பதில் நேரடிப்பங்கு வகிக்கிறது.

உங்களின் கவனத்திற்காக இந்த இரு செய்திகளை நினைவு கூர்கிறேன். முதல் செய்தி பஞ்சாபில் உருளைக்கிழங்கின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, வாங்கவும் ஆளில்லாமல், விளைபொருட்களை என்ன செய்வதென அறியாத விவசாயிகள் அவற்றை சாலையோரம் வீசிச்சென்றனர்.  இரண்டாவது செய்தி: இந்திய அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய அனுமதி அளித்திருப்பது.  இதற்கு அரசின் தரப்பில் சொல்லப்பட்ட காரணம், உள்நாட்டின் தேவையை சமாளிப்பதற்கும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த இறக்குமதி உதவும் என்பது.  இவை ஒருபுறம் இருக்க, இந்த ஆண்டிற்கான உருளைக்கிழங்கின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்குகையில் சொற்பமான அளவில் 2.3% சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.

மத்திய விவசாயத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் நவம்பர் மாத இறுதிக்குள் தேவையான அளவு உருளைக்கிழங்கினை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் பணிகள் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.  இதே காலத்தில் பஞ்சாபின் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உருளைக்கிழங்கு, நவம்பர் மாத மத்தியில் சந்தைப்படுத்த தயாராகியிருக்கும்.  சாமானியனும் புரிந்துகொள்ளும் செய்தி என்னவெனில், நவம்பர் மாதத்தில் உருளைக்கிழங்கின் விலை பாதாளத்தில் வீழ்ச்சியடைந்து, அதனைப் பயிர் செய்த விவசாயிகள் போட்ட மூலதனத்தை மீட்டெடுக்க வழியின்றி வறுமையில் தள்ளப்படுவர்.

இந்த வணிகத்திற்குப் பின்னான ரகசியத்தை அறிவதும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. கோடைப்பருவத்திற்கான உருளைக்கிழங்கு விளைச்சல் சராசரியாய் இருப்பதன் பொருட்டு, குளிர்கால விளைச்சல் எதிர்பார்த்த மகசூல் கொடுக்குமென நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் விவசாயிகள்.  உருளைக்கிழங்கின் உற்பத்தியைப் பொறுத்தவரையில் உலகளவில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக மூன்றாமிடத்தில் இந்தியா உள்ளது.

punjab potato 2
உலக உருளைக்கிழங்கு உற்பத்தியில் இந்தியா 3-ம் இடத்தில் இருந்தாலும் விவசாயிகள் அழிக்கப்படுவது ஏன்?

ஆனால் மத்தியில் அமர்ந்துகொண்டு லாபி செய்யும் இந்த மெத்தப் படித்த பொருளாதார மேதாவிகள், உணவிற்கான பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறிக்கொண்டு நமது உள்நாட்டு சந்தையை பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதியை அதிகரிப்பதன் மூலம் மேல்நாட்டு வர்த்தகம் செழிக்க பயன்படுத்துகின்றனர். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய யூனியனின் கோரிக்கையும் இதுவேயாகும்.

உள்நாட்டு உருளைக்கிழங்கு வணிகர்கள் (சிப்ஸ், அதன் மூலம் பெறப்படும் மற்ற பதப்படுத்தப்பட்ட பொருட்கள் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள்), வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் விலையை கட்டுக்குள் கொண்டுவர,  அதன் மீதான இறக்குமதி வரி 30% சதவிகிதத்தை நீக்குமாறு, அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.  கடந்த ஆண்டு, இந்தியா பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ததைப் போலல்லாது, இந்த ஆண்டு அங்கு மகசூல் குறைந்ததன் காரணமாக அவர்கள் இந்தியாவிலிருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறார்கள். தினமும் வாகா எல்லை வழியாக மூன்றாயிரம் லாரிகள் மூலம் உருளைக்கிழங்கினை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் பற்றாக்குறையினை பூர்த்தி செய்ய ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவின் இந்த முறையற்ற ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளால் பாதிக்கப்பட்டது உருளைக்கிழங்கு விவசாயிகள் மட்டுமல்ல. சில மாதங்களுக்கு முன் உணவிற்கான பணவீக்கம் உச்சத்தில் இருந்த போது, இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப் ஹரியானா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தக்காளி பயிரிட்ட விவசாயிகள், ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்றாலும் அவற்றை வாங்குவதற்கு ஆளின்றி, நெடுஞ்சாலையோரங்களில் வீசிச்சென்ற அதே நேரத்தில் ஹரியானாவிலுள்ள ஒரு உணவு பதப்படுத்தும் நிறுவனம், சீனாவிலிருந்து கணிசமான அளவிற்கு தக்காளியிலிருந்து பெறப்படும் பதப்படுத்தப்பட்ட Pureeஐ இறக்குமதி செய்துகொண்டிருந்தது.

இதன் பின்னர், ஒரே மாதத்தில், அதாவது ஆகஸ்டு 28, 2014 முதல் செப்டம்பர் 28, 2014 வரையிலான காலகட்டத்தில் இந்தியா 3,76,009 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான தக்காளி மற்றும் அதிலிருந்து பெறப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை சீனாவிடமிருந்தும், 94,057 மற்றும் 44,160 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை முறையே நேபாளம், நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. உங்களில் பலருக்கும், நாம் சாப்பிடும் தக்காளி சாஸ், ப்யூரீ எனப்படும் பேஸ்ட், கெட்ச்அப் போன்றவை உள்நாட்டில் விளையும் தக்காளியிலிருந்து தயாரிக்கப்படுவதில்லை என்பதும் அவை சீனா, நேபாளம், இத்தாலி, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தக்காளியிலிருந்து தயாரிக்கப்படுவன என்பதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தகைய வகையில், இந்த பொருட்களை பயன்படுத்துவதன் வழி, நாமே நமது தக்காளி பயிர்செயும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியதாக்குகிறோம்.

சமையல் எண்ணை இறக்குமதி வரைபடம்
சமையல் எண்ணை இறக்குமதி வரைபடம்

பாஸ்தா எனப்படும் இத்தாலிய உணவினை எடுத்துக் கொள்வோம்.  இந்தியாவின் உணவுக் கிடங்குகளில் டன் கணக்கில்லாமல் கோதுமை வீணாகிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் பாஸ்தா இறக்குமதியோ வரலாறு காணாத வகையில் வருடத்திற்கு 39 சதவிகிதம் என்னும் வகையில் வளர்கிறது. பாஸ்தா கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் அதே வேளையில், இறக்குமதியைக் கைவிட்டு, இந்தியாவில் வீணாகும் கோதுமையில் பாஸ்தா தயாரிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படுவதில்லை, ஏன்?

இந்தியாவின் பாஸ்தாவிற்கான சந்தையோ கடந்த பத்து வருடங்களுக்கு முன்னால் (2003-2004 சுமார்) 300 கோடி ரூபாயிலிருந்து, இந்த ஆண்டு (2013-2014) 1,700 கோடி ரூபாய் அளவுக்கு  வளர்ந்து நிற்கிறது. பாஸ்தாவிற்கான இறக்குமதி வரி தற்போதுள்ள 40% சதவிகிதத்தில் இருந்து, மேற்சொன்ன இந்தியா-ஐரோப்பா இடையிலான இருதரப்பு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அமலாகும் வேளையில் 20 சதவிகிதமாக குறையும்.

முறையற்ற உணவு இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தியாளர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம், இந்திய அரசு எவ்வாறு சமையல் எண்ணெய் இறக்குமதியை ஊக்குவிக்கிறது என்பது.  இந்தியாவின் வறண்ட நிலப்பகுதிகளில் வாழும் விவசாயிகளுக்கு எண்ணெய்வித்துக்கள் பணப்பயிராக இருந்த காலம் மலையேறிப்போய், அவர்களது வாழ்வாதாரமாக மாறிவிட்டது. அதுவும் இப்போது இந்தோனேசிய, மலேசிய, பிரேசில், மற்றும் அமெரிக்க சமையல் எண்ணெய் முதலாளிகளின் நலனுக்காக காவு வாங்கப்பட்டுவிட்டது. கடந்த முப்பதாண்டு காலத்தில், இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.

edible oil imports 1
பன்னாட்டு சமையல் எண்ணெய் முதலாளிகளுக்காக இந்திய எண்ணெய் வித்து விவசாயிகள் அழிக்கப்படுகிறார்கள்!

கடந்த நவம்பர் 2011 முதல் அக்டோபர் 2012 இறுதி வரையிலான ஆண்டில், இந்தியா 56,295 கோடி ரூபாய் மதிப்பிலான 9.01 மில்லியன் டன் சமையல் எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்துள்ளது.  2006-07 மற்றும் 2011-12 க்கு இடையிலான எழாண்டுக் காலத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி 380% சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

இங்கு எல்லோரும் மறந்துவிட்ட மற்றொரு செய்தி எதுவெனில், 1994-95-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா எண்ணெய்வித்துக்கள் உற்பத்தியில்  கிட்டத்தட்ட தன்னிறைவு நிலையை அடைந்தது (மொத்த தேவையில் 3% மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது). அதன் பிறகு 300 சதவிகிதமாக இருந்த எண்ணெய் வித்துக்கள் மீதான இறக்குமதி வரி படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு விட்டது.  தற்போதைய நிலையில் உள்நாட்டு தேவையில் 50% சதவிகித எண்ணெய் தேவை இறக்குமதியின் மூலமே நிறைவேற்றப்படுகிறது. இந்தியாவின் “மஞ்சள் புரட்சி”யை கொன்றுவிட்ட பெருமிதத்தில், இந்த மெத்தப் படித்த பொருளாதார மேதாவிகள், தற்போது, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாமாயில் (Palm Oil) எனப்படும் எண்ணெய் வித்துப் பயிரை ஊக்குவிக்கின்றனர்.

Monoculture எனப்படும் ஒற்றைப்பயிர் விவசாய முறையில் இந்த பாமாயில் பயிரை பயிரிடுவதால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொள்ளாத விவசாயத்துறை அமைச்சகமோ, 1.03 மில்லியன் ஹெக்டர் பரப்பிலான காடுகளை அழித்து அவற்றில் இந்த Palm Oil விவசாயத்தை ஊக்குவிக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது.  இவை முறையே, மிசோரம், திரிபுரா, அஸ்ஸாம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம்  ஆகிய பகுதிகளில் விரைந்து செயல்படுத்தப்படுமாம். இதற்குப் பின்னால் உள்ள சூட்சுமம் உங்களுக்கு புரிகிறதா?

முதலில் நாட்டில் இருந்த எண்ணெய்வித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிட்டு, பின்னர் உள்நாட்டு தேவையை ஈடு செய்ய காடுகளை அழித்து, எண்ணெய் வித்துக்களை பயிரிட்டும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தும் அந்நிய செலாவணியை வீணடித்து மேல்நாட்டு வர்த்தகத்தை   ஊக்குவிப்பதுமேயாகும்.

என்னே ஒரு ராஜ தந்திரம்…! என்னே அரசியல்..!. என்னே வளர்ச்சி…!

கட்டுரை மூலம்: தேவேந்திர ஷர்மா

Importing food when there is no shortfall in production. It only destroys farm livelihoods.

தமிழாக்கம்: ஜானகிராமன்.