யுகோ ஒபுச்சி - மூன்று வருடங்களாக கட்சிக்காரர்களுக்கு இலவச சினிமா காட்டினார், . அதிமுகவில் ரிக்கார்டு டான்ஸ் - ஜப்பானில் மல்டிபிளக்ஸ் சினிமா!
ஊழல் என்றால் இந்தியா போன்ற ஏழை நாடுகளில் தான் இருக்கும். வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் ஊழலோ முறைகேடுகளோ நடைபெற வாய்ப்பே இல்லை என முதலாளித்துவ அறிஞர்கள் வாய்ப்பந்தல் போடுவார்கள். அவர்களது முகத்தில் மீண்டுமொரு முறை கரி பூசியிருக்கிறது ஜப்பானில் சமீபத்தில் வெளியான தேர்தல் நிதி முறைகேட்டு ஊழல். இது தொடர்பாக இரு ஜப்பானிய பெண் அமைச்சர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
யுகோ ஒபுச்சி – மூன்று வருடங்களாக கட்சிக்காரர்களுக்கு இலவச சினிமா காட்டினார், . அதிமுகவில் ரிக்கார்டு டான்ஸ் – ஜப்பானில் மல்டிபிளக்ஸ் சினிமா!
சொர்க்கம் என்பது அமெரிக்காவில் நிலவுவதாக நம்புவது போல உழைப்பு, சுறுசுறுப்பு, சட்டப்படி நடப்பது, வேலை நடத்தம் நடக்காத நாடு என ஜப்பானை காட்டுவார்கள். ஒரு வகையான அடிமைத்தனத்தையே இது சுட்டுகிறது என்றாலும் ஜப்பானை எல்லாவற்றுக்குமான சிட்டுக்குருவி லேகியமாக அதியமான் தொட்டு இறையன்பு ஐஏஎஸ் வரையிலான முதலாளித்துவ வகையறாக்கள் ஓதுவதும் வழக்கம்தான். இந்த நம்பிக்கைகளில் பல யாரும் கேட்டோ பார்த்தும் இராத கர்ண பரம்பரைக் கதைகள்தான்.
நம் ஊரில் தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை பெரிய ஊழலாகவும், ஏதோ உலகத்திலேயே இந்தியாவில் தான் அரசியல் கட்சி மோசடிகள் நடப்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன. இதை நாம் மறுக்க வேண்டியதில்லை. ஜப்பான் எனும் முன்னேறிய நாடே மறுத்திருக்கிறது.
பதவி விலகியிருக்கும் வர்த்தக மற்றும் நிதித்துறை அமைச்சர் யுகோ ஒபுச்சியின் வங்கிக் கணக்கில் 2012 தேர்தலுக்கு முன், 4,24,000 டாலர்கள் வித்தியாசம் இருந்தது. என்ன என்று விசாரித்த எதிர்க்கட்சிகள் அவரது ஆதரவாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு திரையரங்குகளுக்கு சென்று வர இலவச டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி கொடுத்திருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள். இதுபோக 35,000 டாலர் பெறுமான பொருட்களை அவரது சகோதரியின் கணவரது கடையில் இருந்தும் கொடுத்திருக்கிறார்.
இதெல்லாம் கடந்த வாரம் வெளியான உடன் அதுவரை ஜப்பானின் முதல் பெண் பிரதமராக வர வாய்ப்பிருப்பதாக கருதப்பட்ட இவர் கண்ணீர் மல்க தன் மீது எந்த குற்றமும் இல்லை என்றும், ஆனால் தன் ஆதரவாளர்கள் செலவழித்த காரணத்தால் பதவி விலகுவதாக குறிப்பிட்டார். வளர்ப்பு மகன் திருமணத்திற்கு தான் செலவு செய்யவில்லை, மற்றவர்கள்தான் என ஜெயா சொன்னது போன்ற அதே வாக்குமூலம்.
மட்சுஷிமா – வாக்காளர்களுக்கு இலவச கூப்பன் – இதுதானே அழகிரி ஃபார்முலா?
முன்னாள் பிரதமர் கெய்சோ ஒபுச்சி (1998-2000) இளைய மகளான இவர் தான் புகுசிமா அணுஉலை விபத்தின் மீட்பு பணிகளுக்கான பொறுப்பிலும் இருந்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஜப்பானில் பெண்கள் வேலைக்கு செல்வது கணிசமாக குறைந்து வருவதால் அதனை ஊக்குவிக்கும் பொருட்டு அபே அபேனாமிக்ஸ் என்ற தனது கொள்கையின் ஒரு பகுதியாக ஐந்து பெண் அமைச்சர்களை நியமித்தார். இதனை உமனாமிக்ஸ் என்றும் பெயரிட்டு அழைக்கின்றன ஊடகங்கள். அதில் திறமையாக செயல்படுவதாக கூறிதான் இவரை கடந்த மாதம் காபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டிருந்தார்.
பெண்கள் தங்களது திறமையை காட்ட கிடைத்த சந்தர்ப்பத்தில் தன்னால் ஒளிர முடியவில்லை என கண்ணீர் மல்க டிவிக்கு பேட்டி கொடுத்து விட்டு பதவி விலகியிருக்கிறார் ஒபுச்சி. ஜெயாவும் கூட தமிழக மக்களுக்கு சேவை செய்வதையே தன் மீதான வழக்கில் கூறியிருக்கிறார்.
இவரை அடுத்து நீதித்துறை அமைச்சர் மிடோரி மிட்சூஷிமா பதவி விலகினார். வசந்த கால விழாவின் போது தேர்தல் சமயத்தில் மக்களுக்கு இலவசமாக விசிறிகள், அழகு சாதன பொருட்களை விநியோகித்திருக்கிறார் இந்த சீமாட்டி. கூடுதலாக இவர் முன்னாள் பத்திரிகையாளர் வேறு.
இப்போது யுகோ ஒபுச்சியின் பொறுப்பை ஏற்றுள்ள புதிய யோய்ச்சி மியாசவாவும் அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். 2010-ல் பாலியல் தொழில் நடக்கும் கிளப்பில் செலவு செய்த தொகையை அவரது அலுவலக அதிகாரி நிர்வாக கணக்கில் இருந்து கொடுத்திருக்கிறார். இவரும் பழைய பிரதமர் ஒருவரின் மருமகன் தான். ஹார்வேர்டில் படித்த பட்டதாரி வேறு. 2012க்கு முந்தைய அபேவின் ஆட்சியில் பல ஊழல் புகார்கள் வெளியாகின. ஒரு அமைச்சர் தற்கொலையே செய்து கொண்டார்.
இன்னும் இரண்டுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் சிக்குவார்கள் என்கிறார் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த யூகியோ இடானோ. யுகோ ஒபுச்சி காலத்தில் எப்படியாவது மூடிக் கிடக்கும் 38 அணு உலைகளையும் இயங்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார்கள். பாதுகாப்பு அம்சங்களை வலியுறுத்தி பலத்த எதிர்ப்பு ஏற்கெனவே அங்கு இருந்து வந்தது. நாட்டின் 25 சதவீத மின்னுற்பத்திக்கும் மேல் இதன் மூலமாகத்தான் முன்னர் கிடைத்து வந்த்து.
யூகோ ஓபுச்சியின் தந்தை பிரதமராக இருந்த போது தான் ஜப்பான் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. அவர் அப்போது மக்களை சம்பளத்திற்கு பதிலாக கூப்பன்களை பெற கட்டாயமாக்கினார். அதன் மூலம் நுகர்வு கலாச்சாரத்தை சட்டபூர்வமாக நிரந்தரமாக்கினார். கடன் அட்டைகள் அதிகரித்தன. இன்னமும் அந்த நெருக்கடியில் இருந்து ஜப்பான் மீளவில்லை. இப்போது ஓபுச்சியை வைத்து வைத்து நுகரும் பொருட்களின் மீதான வரியை 2% லிருந்து 10% ஆக உயர்த்த திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அதற்குள் ஊழலில் சிக்கிக் கொண்டார். இப்போதைக்கு ஜப்பானிய மக்களின் கழுத்துக்கருகில் தொங்கும் கத்தியை எந்த ஆடு வெட்டி வந்து வெட்ட துவங்குவது என்பது தான் பிரச்சினை போல ஆகி விட்டது.
யாய்சி மியாஸ்வா – அலுவலக கணலிருந்து பாலியல் கிளப் செலவு !
இதுபோக பாதுகாப்பு துறை அமைச்சர் அகினோரி ஈடோவின் தேர்தல் நிதி குறித்தும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். விற்பனை வரியும் கடந்த ஏப்ரலில் 8% ஆக உயர்த்தப்பட்டது. அடுத்த ஆண்டு அக்டோபரில் அதனை பத்தாக உயர்த்த முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் எல்லாம் 2009 பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீளாது என்கிறார்கள். குறிப்பாக மூன்றில் இரண்டு பங்கினர் இரண்டாவது உயர்வை எதிர்த்து வருகின்றனர்.
இதற்கு எதிராக போராடுவதற்கு அங்குள்ள தொழிலாளி வர்க்கம் கூட தயாராக இல்லை. ஆனால் சூழல் அவர்களை அப்படி தள்ளிவிடக் கூடாது என்பதற்காக தேசிய வெறியை கிளப்பும் போர் ஆதரவு கட்சிகளின் கூட்டங்களில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி தலைவர்களும், உள்துறை அமைச்சரும் கலந்து கொண்டு கொரியா மற்றும் சீனாவுக்கு எதிராக மக்களை கொம்பு சீவி விடுகின்றனர்.
முதலாளித்துவ பொருளாதாரம் ஜப்பானில் ஒரு புரட்சியின் மூலமாக வரவில்லை. அமைதியான வழிகள் மூலமாகவே வந்ததால் சமூகத்தில் நிலவுடமை சமூகத்தின் பிற்போக்குத்தனங்கள் பல்வேறு அளவுகளில் நிலவுகின்றன. ரஜினி படங்கள் கூட அங்கே ரசிக்கப்படுவதற்கு இப்படி ஒரு அடிப்படை இருக்கிறது. தொழிற்சங்கமோ, வேலைநிறுத்தமோ அங்கே நடைபெறாததற்கும் இதுவே காரணம். முத்து போன்ற பண்ணையார் வகை படங்கள் மொழியே தெரியாமல் தமிழ்நாட்டை விட நன்றாக அங்கு ஓடியதற்கும் அதே நிலபிரபுத்துவ பண்பாட்டு பின்னணிதான் காரணம். இப்போது சிக்கியிருப்பவர்களும் அத்தகைய உயர் குடும்ப பின்னணி கொண்ட நபர்கள் தான். அவர்கள் தான் இரண்டு கட்சியிலும் இருக்கிறார்கள் என்பது வேறு விசயம்.
போபர்ஸ் ஊழல் வெளி வந்தபோது எப்பேர்ப்பட்ட ராஜகுடும்பம், அவங்களாவது ஊழலாவது என்று கேட்டார்கள். எங்க அம்மாவுக்கு மைசூர் மகாராஜா கொடுத்த தங்க ஒட்டியானம் என்று விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவுக்கு விளக்கம் சொன்னார் புரட்சித் தலைவி. நான் தப்பு செய்யவில்லை, என் ஆதரவாளர்கள் செய்த தவறுக்கு பொறுப்பேற்கிறேன் என்று விடைபெறுகிறார் ஒபுச்சி. அரங்கம்தான் வேறே தவிர, லைட்டும் மாறவில்லை, செட்டும் மாறவில்லை. நாடகத்தின் கதை மட்டும் எப்படி மாறும்?
தனது குற்றங்களை அம்பலப்படுத்திய மற்றொரு பார்ப்பனனைக் கோரமாகப் படுகொலை செய்துவிட்டு எந்தத் தண்டனையுமில்லாமல் விடுவிக்கப்பட்டு, தனது பஞ்சமாபாதகங்களைத் தொடரும் காஞ்சி சங்கராச்சாரி, தன்னை ஒரு “லோக குரு” என்று சொல்லிக் கொண்டு நாடு முழுவதும் சுற்றித்திரிகிறார்.
நாடறிந்த அரசியல் தரகனாகவும், அரசியல் விபச்சாரியாகவும், அந்நிய நாடுகளின் உளவாளி – கைக்கூலியாகவும் ஊழியம் செய்து பிழைக்கும் பார்ப்பன அரசியல் சதிகாரன் சுப்பிரமணிய சுவாமி, “நான் ஒரு பார்ப்பனன்; யாரிடம் வேண்டுமானாலும் உஞ்ச விருத்தி கேட்டு, யாசகம் பெற்று எப்படியும் ஜீவிப்பேன்” என்று நரித்தனமாகப் பேசுகிறார்.
“ஆம், நான் ஒரு பாப்பாத்திதான். என்னை யாரும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது” என்று சட்டப்பேரவையில் பகிரங்கமாகவே அறிவித்தார், ஜெயலலிதா. இதே திமிர்த்தனத்தோடு பல்வேறு கிரிமினல் குற்றங்கள் செய்துவிட்டு, கையுங்களவுமாகப் பிடிபட்ட பின்னரும், 18 ஆண்டுகள் ஜாரினியாகவும் ரஸ்புதீனுமாகவும் அரசபோகத்தில் மூழ்கித் திழைத்தார்கள், ஜெயலலிதாவும் சசிகலாவும். கடைசியில் அவர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிவிட்டார், ஜெயா-சசி கும்பலின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நடுவர் ஜான் மைக்கேல் குன்ஹா. “நீதித்துறையில் ஒரு மாவீரன்” என்று நேர்மையான சட்ட நிபுணர்கள் போற்றும் வகையில், பார்ப்பன அதிகாரப் பரிவாரங்களின் குறுக்கீடுகள், நிர்பந்தங்களையும் மீறி, ஜெயா – சசி கும்பலின் மிக மோசமான சீண்டல்கள், குரூரமான ஆத்திரமூட்டல்களைச் சகித்துக்கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் கடுமையாக உழைத்து, குற்றவாளிகள் தப்பிவிடமுடியாதவாறு சட்டநுட்பங்களை ஆய்ந்து, இதுவரையிலான எல்லா சட்ட-நீதிகளிலும் விதிவிலக்கான ஒரு தீர்ப்பை, ஜான் மைக்கேல் குன்ஹா வழங்கி இருக்கிறார்.
மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலின் ஆட்சியும் மாநிலத்தில் பொறுக்கி-கழிசடை அரசியல் மூலமாக ஜெயா-சசி கும்பலின் ஏகபோக ஆதிக்கமும் நிலைநாட்டப்பட்டு, இனித் தம்மை யாரும் ஆட்டவும் அசைக்கவும் முடியாது என்று பார்ப்பன – பாசிச சக்திகள் ஆணவமாகப் பேசியும் எழுதியும் வந்தார்கள். அந்த நிலையில் ஜெயா-சசி கும்பலை அரசியல் விளிம்பு நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது, நடுவர் ஜான் மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பு. அந்த பார்ப்பன – பாசிச சக்திகள் என்ன சொல்லிக்கொண்டார்கள்? “பார்ப்பன சமூகம்தான் இயல்பாகவே திறமையும் தகுதியும் வாய்ந்தது. நாட்டில் சமூக நீதி, இடஒதுக்கீடு மூலமாகத் திறமையும் தகுதியும் வாய்ந்தவர்கள் பொறுப்புக்கு வரமுடியாமல் போகிறார்கள்; இதனால்தான் நாடே பின்தங்கிப்போயுள்ளது.” இப்படிப் பீற்றிக்கொள்ளும் பார்ப்பன சமூகம் தனது பிரதிநிதிகளாக சுப்பிரமணிய சுவாமி, காஞ்சி சங்கராச்சாரி ஜெயலலிதா போன்றவர்களைத்தான் முன்நிறுத்தியிருக்கிறது. இவர்களுக்கு மாறாக ‘திறமையும் தகுதியும் இல்லாத’ சமூகமாக, பார்ப்பனியத்தால் தள்ளிவைக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜான் மைக்கேல் குன்ஹா, சகாயம், உமாசங்கர் போன்றவர்கள்தாம் திறமையும் தகுதியும் மட்டுமல்ல, நேர்மையும் உறுதியும் வாய்ந்தவர்கள்.
ஜெயா-சசி கும்பலுக்குத் தண்டனையும் அபராதமும் வழங்கப்பட்டதோடு நின்றுவிட முடியாது. அக்கும்பல் 1996 வரையில் அடித்த கொள்ளையின் ஒரு பகுதிக்காகத்தான் தண்டிக்கப்பட்டிருக்கிறது. 1996- க்குப்பிறகு அது யோக்கியமானதாக மாறிவிட்டதா? அப்போதும் அதன் பிறகும் அடித்த கொள்ளையையும் செய்த கிரிமினல் குற்றங்களையும் கணக்கில் கொண்டுவந்து தண்டிக்க வேண்டியதில்லையா? இந்தத் தீர்ப்பை ஏற்று ஜெயா-சசி கும்பல் திருந்திவிட்டதா? இன்னும் தன்னை நிரபராதி என்று சொல்லிக்கொள்ளும் அக்கும்பல், தான் குவித்து வைத்திருக்கும் கள்ளப் பணம்-கருப்புப்பணத்தைக் கொண்டு இந்தத் தண்டனையிலிருந்தும் விடுபடவும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும் தானே எத்தனிக்கும்? எனவே, ஜெயா-சசி கும்பல் குவித்து வைத்திருக்கும் கள்ளப் பணம்-கருப்புப் பணத்தையும் முழுவதுமாகப் பறிமுதல் செய்யவேண்டும். அப்போதுதான் அதன் கிரிமினல் குற்றங்கள் தொடர்வது தடுக்கப்படும். அதற்காகத் தமிழ் மக்கள் போராடவேண்டும். தண்டிக்கப்பட்ட கிரிமினல் குற்றவாளிகள் மீது அநீதியிழைக்கப்பட்ட நிரபராதியைப் போன்ற அனுதாபம் தோற்றுவிக்கப்படுவதையும் முறியடிக்கவேண்டும்.
காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க காலிகளால் எரிக்கப்பட்ட அரசுப் பேருந்து
ஜெயா-சசி கும்பலின் முகத்தில் அறைந்தாற்போன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பார்ப்பனப் பரிவாரங்களும், ஜெயா-சசி கும்பல் வீசியெறிந்த எலும்புத் துண்டுகளைக் கவ்விக்கொண்டுள்ள எடுபிடிகளும் விசுவாசிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கெனவே, ஜெயா-சசி கும்பல் தன் மீதான வேறு பல கிரிமினல் குற்றவழக்குகளில் இருந்து ஏதேதோ தில்லுமுல்லுகள் செய்து, விடுதலையாகி வந்து, மீண்டும் முதலமைச்சரானதைப்போல நடந்துவிடும் என்று தமிழக மக்களை நம்பவைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள். இதுவொன்றும் ஜெயா-சசி கும்பலும் அதன் பார்ப்பன பாசிசப் பங்காளிகளும் சாதிக்கவே முடியாத நம்பிக்கையல்ல என்பதுதான் உண்மை.
இந்த உண்மையை, ஜெயா-சசி கும்பல் தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கைப் பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடித்து, தண்டனையில் இருந்து தப்பித்துக்கொண்டு வந்தது, அதற்காக உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதியரசர்களையும் விலைக்கு வாங்கியது உட்பட அக்கும்பலின் சட்டத்துக்குப் புறம்பான எல்லாக் கிரிமினல் தனங்களையும் நினைவில் வைத்துள்ள எவரும் மறுக்க மாட்டார்கள்.
ஜெயா-சசி கும்பல் அ.இ.அ.தி.மு.க.வுக்குள் புகுந்து அதன் தலைமையையும் ஆட்சியையும் கைப்பற்றியதில் இருந்து, கடந்த மாதம் உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் தனது சகபாடிகளான பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்டு கட்சிகளுக்கும் “அல்வா” கொடுத்தது வரை 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக அரசியலில் மோசடிகள், பச்சைப் புளுகு – பித்தலாட்டங்கள் பலவும் செய்துள்ளது. 13 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் மீதான கொடூரமான ஒடுக்குமுறை, பகற்கொள்ளை புரிந்துள்ளது. இவற்றோடு கட்சியின் அடிமட்ட எடுபிடிகள் முதற்கொண்டு உயர்ந்த மட்டத்திலுள்ள ஜெயா-சசி கும்பல் வரை இலஞ்ச-ஊழல், அதிகாரமுறைகேடுகளையும், (கறி-சாராய விருந்து, கள்ளவோட்டு-போலி அடையாள அட்டை, பணப்பட்டுவாடாவில் நிபுணத்துவம் என்று) கைதேர்ந்த தேர்தல் தில்லுமுல்லுகளையும் செய்து நாட்டிலேயே ஒரு பெரும் கிரிமினல், கழிசடை-பொறுக்கி அரசியல் குற்றக் கும்பலாகவே அ.இ.அ.தி.மு.க. உள்ளது.
அதோடு முக்கியமாக, பெரும் கார்ப்பரேட் முதலாளிகள், போலி கம்யூனிஸ்டுகள் உட்பட எல்லா தேசிய, பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள், நிழல் மனிதர்கள், கருப்புப்பண-கள்ளச்சந்தை முதலைகள், கிரானைட் பி.ஆர்.பி., மணற்கொள்ளை வைகுண்டராஜன், சாராய முதலாளிகள் கர்நாடக மல்லையா மற்றும் ஆந்திர சுப்பாரெட்டி, ஏகபோக கரும்பு ஆலை அதிபர் சரத்பவார், உச்ச நீதிமன்ற நீதியரசர்களாகவும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளாகவும் உள்ள டெல்லி பார்ப்பனப் புள்ளிகள் ஆகியவர்களோடு “தனிப்பட்ட நட்பு” வைத்துக்கொண்டு சட்டத்துக்குப் புறம்பான அதிகாரமையமாக ஜெயா-சசி கும்பல் இவ்வளவு காலமும் தலைவிரித்தாடுகிறது.
இலஞ்ச-ஊழல், அதிகாரமுறைகேடுகளுக்காக இவ்வளவு காலத்துக்குப் பிறகாவது சட்டப்படி தண்டிக்கப்பட்ட கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், அவை எதிர்த்தரப்பின் சூழ்ச்சி காரணமாக, அரசியல் பழிவாங்கும் நோக்கோடு போடப்பட்ட பொய் வழக்குதானென்றும் கோயபல்சுத் தனமாகப் புளுகுப் பிரச்சாரம் செய்வதும், அவர் விடுதலையாகி, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார் என்று மக்களிடையே நம்பிக்கையூட்டுவதும் அதற்கு ஆதரவு திரட்டும் வகையில் மக்களை “பிளாக் மெயில்” செய்யும் வகையில் ஒரு குற்றக்கும்பல் அராஜகமான “போராட்டங்கள்” நடத்துவதும் நாட்டில் பரவிவரும் கிரிமினல், கழிசடை-பொறுக்கி அரசியல் கலாச்சாரத்தை மேலும் வலுவாக்குவதுதான். கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் பிரமுகர்கள் எல்லோருமே “தனக்கு எதிரான சூழ்ச்சி-சதி” என்று சொல்லித்தான் தப்பித்துக்கொள்ள எத்தனிக்கிறார்கள்.
நியாயமான கோரிக்கைகளுக்காக முன்னரே அறிவித்து “பந்த்-கடையடைப்புகள்,” வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவதை எதிர்த்து ஆத்திரமடையும் நீதியரசர்களும் அரசு நிர்வாகமும் “பயங்கரவாதம், துப்பாக்கிக் கலாச்சாரம்” என்றெல்லாம் பீதிகிளப்பும் பார்ப்பனிய நியாயவான்களும், அறிவுஜீவிகளும், ஊடகங்களும் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதும், ஜெயா-சசி கும்பலின் தலைமையிலான கிரிமினல், கழிசடை-பொறுக்கி அரசியல் படைக்கு உடந்தையான செயலாகவே உள்ளது.
இவற்றைத் தனித்துப் பார்க்கக்கூடாது. இப்போது நாட்டின் அனைத்து சமூக,பொருளாதார, அரசுக் கட்டுமானங்களும் ஒட்டுமொத்தக் கட்டமைப்புமே கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் தேர்தல் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், தேர்தல் அரசியல் கட்டுமானங்களும் சீரழிந்து போயுள்ளதையும் காணவேண்டும். ஏற்கெனவே உள்ள அரசும் ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும் ஆளமுடியாமல் போனதையும், ஆளும் நியாயவுரிமையை இழந்துவிட்டதையும், ஆளத்தகுதியிழந்து போயுள்ளதையும் வலியுறுத்த வேண்டும்.
__________________________________________________ புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014 – தலையங்கம்
__________________________________________________
‘கோயம்பேடு சந்தையில் விதிமுறைகளை மீறி கருவாடு விற்கப்படுகிறது, அது அங்கு காய்கறி வாங்கப் போகும் சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது’ என்று தி இந்து நாளிதழ் ஆகஸ்ட் 17-ம் தேதி செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து 19-ம் தேதி, கோயம்பேடு சந்தையில் விதிமீறி விற்கப்பட்டுக் கொண்டிருந்த ரூ 20,000 மதிப்புள்ள கருவாடு பாக்கெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர், இந்து செய்தி எதிரொலி என்றுவெற்றி அறிவிப்பு வெளியிட்டது அந்நாளிதழ்.
இந்துவின் அசைவ உணவு மீதான வன்மம் தொடர்பான இந்த பார்ப்பன ஆதிக்கத் திமிரைக் கண்டித்து வினவில் வெளியான பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டது. வினவிலும் பின்னூட்டங்களில் விவாதங்கள் நடைபெற்றன. இந்துவைக் கண்டித்து பேஸ்புக்கில் பலர் ஸ்டேட்டஸ் போட்டனர்.
பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த எதிர்வினைகளை தொகுத்து வினவில்பதிவுகளாக வெளியிட்டோம், அவை வாசகர்களிடையே மேலும் விவாதத்தை கிளப்பின.
இந்த விவாதங்களில் வெளியான கருத்துக்கள், கேள்விகளை பொதுவாக பார்ப்பனர்கள் முன்வைக்கும் அசைவ உணவு மீதான தீண்டாமை கருத்துக்களை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை பதிவு செய்யும் விதமாக கோயம்பேடு வியாபாரிகள், அங்கு கருவாடு சப்ளை செய்யும் வணிகர்கள், அங்கிருந்து கருவாடு வாங்கிச் செல்லும் கடைக்காரர்கள், சுமை தூக்கும் தொழிலாளிகள், காய்கறிக் கடைக்காரர்கள், தரைக்கடை வணிகர்கள் ஆகியோரிடம் பேசினோம்.
இந்தப் பதிவுகளை ஒரு ஆவணப்படமாக தொகுத்திருக்கிறோம்.
இதன் டிவிடி விற்பனை, திரையிடலைத் தொடர்ந்து தற்போது இணையத்தில் முழுமையாக வெளியிடுகிறோம். நண்பர்கள் பாருங்கள், பரப்புங்கள், கருத்து தெரிவியுங்கள்….
ஆவணப்படத்துக்கு தொழில்நுட்ப ரீதியில் முடிந்த அளவு சிறப்பான வடிவம் அளிக்க ஆன பொருட்செலவை ஈடு கட்டவும் பல்வேறு இடங்களில் திரையிடுவதற்கான செலவுகளுக்கும் வாசகர்கள் நன்கொடை அளித்து ஆதரிக்குமாறு கோருகிறோம்.
நன்கொடை அனுப்ப வேண்டிய விபரங்களை அறிய இந்த சுட்டியில் பார்க்கவும்.
2. ஹரின் பேகம், வயது 40, பார்ப்பனர் வீட்டில் சமையல் வேலை, அருகில் அவரது குடும்ப நண்பர் கஸ்தூரி, வயது 58, துணை நடிகை: பேகம் – “அவங்க கொடுத்தா நாங்களும், நாங்க கொடுத்தா அவங்களும் சாப்பிடுறோம். அன்பா தர்றாங்க சார். எல்லாரையும் போல நானும் புள்ளக்கு மாச மாசம் சீட்டுப் கட்டி 1000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கி கொடுத்தேன். அல்லாரும் வெடிக்கைல எம் புள்ள மட்டும் மூஞ்சிய பாத்துக்கிட்டிருக்க வேணாம்னுதான். சாமிக்கு படைச்சதையே தந்தா சாப்பிட கூடாது தான். ஆனா பிஸ்மில்லா னு சொல்லிட்டு சாப்பிடலாம். தப்பில்லை.”
மற்ற மதத்தவர்களை விட முசுலீம்கள் மட்டும் தமது மதத்தை அதி தீவிரமாக கடைபிடிப்பவர்கள் என்ற கருத்து பொதுவில் வலுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுவே இந்துமதவெறியர்களது மூலதனமாகவும் செயலாற்றுகிறது. இசுலாமிய கடுங்கோட்பாட்டு அடிப்படைவாத இயக்கங்களும் இத்தகைய கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவே செயல்படுபகின்றன. மற்றவரது பண்பாடு, வழிபாடு, பண்டிகைகளை முசுலீம்கள் வெறுக்கிறார்கள் என்பதாக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்கிறது.
இவை உண்மையல்ல என்பதை நடைமுறை மூலம் நிரூபிக்க விரும்பினோம். தீபாவளி அதற்கு பொருத்தமான நேரம். இதோ சென்னை வாழ் இசுலாமிய மக்கள் பேசுவதைப் பாருங்கள். இடையே ஓரிரு கிறித்தவ, ‘இந்து’க்களும் கூட உண்டு. உழைக்கும் மக்களிடையே மதவெறிக்கும், மதவாதத்திற்கும் வேலை இல்லை என்பதை அவர்கள் வாயாலேயே கேளுங்கள்!
ஆனால் வாடகை வீடுகள் முசுலீம்களுக்கு இல்லை என்று உறுதியாக இருக்கும் பார்ப்பன – ஆதிக்க சாதி இந்துக்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்றால் மதவெறியும், மதவேறுபாடும் யாரிடம் இருக்கிறது?
– வினவு
அலிப் உசேன், வயது 14: “லச்சுமி பட்டாசு வெடிச்சேன். ஈஸ்வரி ஆண்டி ஜாங்கிரி, பொங்கல், பழமெல்லாம் கொடுத்தாங்க. அவங்க செஞ்சா நமக்கு, நம்ம செஞ்சா அவங்களுக்கு….”சாதிக், வயது 45, பூஜை பொருட்களை விற்பவர்: “பிரண்ட்ஷிப்தான் சார் முக்கியம். மனசு தான் காரணம். மத்தபடி தீபாவளி பலகாரம் சாப்டறதுல பிரச்சினையில்லை. இந்த தொழில் செய்றதுல என்ன தப்பு சார்? நான் திருடுறனா இல்ல பொய் சொல்றனா? இந்த தொழில்ல முதலீடு கம்மி. ஜமாத்துல கூட கற்பூரம், குங்குமம், திருஷ்டிக் கயிறு விற்க கூடாதுங்குறாங்க. வெறுமன தேங்காயும், வெத்தலையும் வித்தா யாரு வருவாங்க? பக்கத்துல பூஜை கடை வைச்சிருக்குறவரும் டிஎன்டிஜேவுல இருக்குறவரோட தம்பிதான். போரூருக்கு பக்கத்துல அந்த டிஎன்டிஜே பாயும் இதே மாதிரி கடை வெச்சிருக்கார். நமக்கு ஒரு சட்டம், அவங்களுக்கு ஒரு சட்டம்.”
ரியாஸ், வயது 34, ஆட்டோ டிரைவர்: “அண்ணன் தம்பியா பழகுறோம். அதனால தீபாவளி, கிறிஸ்மஸ் எல்லாம் வாங்குவோம் சார். தர்காவுக்கு நான் போக மாட்டேன், போறவங்கள தடுக்க மாட்டேன்.”முஜீப், வயது 32, அல் அமீன் மட்டன் ஸ்டால்: “நாங்க கொடுத்தா அவங்களும், அவங்க கொடுத்தா நாங்களும் சாப்பிடுறது காலங்காலமா நடக்குது. இது ஒரு சந்தோசமான நாள் சார். இப்பத்தான் பக்கத்து வீட்ல கறி வாங்கிட்டு போனாங்க. அங்க இருந்து எங்க வீட்டுக்கு பணியாரம் வந்திருக்கும். அத சாப்பிட்டா ஹரம்னு சொன்னா அதான் தப்பு. இப்போ நானே பிரியாணி தர்றேன். ருசியே இல்லாட்டி கூட பாய் நம்ம மதிச்சு தர்றாருனு வாங்கி சாப்பிடுவீங்க. இது பரஸ்பரம் இருக்கணும்.”
ஆர். கலாவதி, வயது 45, வருமான வரித்துறையில் வேலை, இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மதம் மாறியவர்: “மனசுதான் சார் காரணம். எல்லோருக்கு ரத்தம் செவப்புதானே? நான் இங்கயே பொறந்து வளந்தவ. வேண்டாம் வேண்டாம்னாலும் கூப்பிட்டு கொடுப்பாங்க. நாங்களும் கிறிஸ்துமசு அப்போ கேக்கும், பிரியாணியும் கொடுப்போம். சாமிக்கு படைக்கறதுக்கு முன்னாலயே தனியா எடுத்ததுன்னு சொல்லித் தருவாங்க. உறவுதான முக்கியம்?”பார்த்திபன், வயது 25, ஏர்செல் மார்க்கெட்டிங் வேலை: “அப்பா இறந்துட்டாரு. ஆனா அவரோட பிரண்டு சுல்தான் டெய்லர் அண்ணனுக்கு காலைல ஸ்வீட்ஸ் பாக்ஸ் கொடுத்தேன். என்னோட பெஸ்டு பிரண்டு முகமது யாக்கோப். அவங்க வீட்டு கிச்சன் வரை போய் வருவேன். மாமா, மச்சானுதான் பேசிக்குவோம். அவனுக்கு நாங்க வச்சிருக்க பேரு கெளவி” ஜாஃபர் நிசா, வயது 50, பூ வியாபாரம்: “நம்ம கஸ்டமரு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாக்சு தந்தாங்க. ஆனா கற்பூரம் ஏத்தி பூஜ பண்ணிருந்தா சாப்பிட மாட்டோம். அவங்களும் அப்படி தர மாட்டாங்க இல்லியா”ஜாஹிர் உசேன், 21, மெக்கானிக்கல் டிப்ளமோ: “போன வருசம் தந்தாங்க. இந்த வருசம் வரல. ஏன்னா ஊருக்கு போயிட்டாங்க. போன வருசம் லட்டு, அதிரசம், சுண்டல் எல்லாம் வந்துச்சு. வெடியெல்லாம் சின்ன வயசுல போட்டேன். இப்போ இன்ட்ரஸ்டு இல்லை. எனக்கு திக் பிரண்டு சக்தி சரவணன், மாமா மச்சானுதான் கூப்பிட்டுக்குவோம். மத்த மத பண்டிகை பலகாரங்கள சாப்பிடுறதெல்லாம் ஹரமில்லை சார். நாங்க கொடுத்தா அவங்க சாமிய வேண்டிட்டு சாப்பிட போறாங்க. அவங்க கொடுத்தா எங்க சாமிய வேண்டிட்டு சாப்பிடுவோம். அவ்ளோதான்.”
ஹரின் பேகம், வயது 40, பார்ப்பனர் வீட்டில் சமையல் வேலை, அருகில் அவரது குடும்ப நண்பர் கஸ்தூரி, வயது 58, துணை நடிகை: பேகம் – “அவங்க கொடுத்தா நாங்களும், நாங்க கொடுத்தா அவங்களும் சாப்பிடுறோம். அன்பா தர்றாங்க சார். எல்லாரையும் போல நானும் புள்ளக்கு மாச மாசம் சீட்டுப் கட்டி 1000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கி கொடுத்தேன். அல்லாரும் வெடிக்கைல எம் புள்ள மட்டும் மூஞ்சிய பாத்துக்கிட்டிருக்க வேணாம்னுதான். சாமிக்கு படைச்சதையே தந்தா சாப்பிட கூடாது தான். ஆனா பிஸ்மில்லா னு சொல்லிட்டு சாப்பிடலாம். தப்பில்லை.”
முகமது இப்ராஹிம், வயது 50, லிப்ட் டெக்னீசியன், ஹீரின் பேகத்தின் கணவர்: “சாப்பாட்டுல என்ன சார் இருக்கு? வந்தா விடக் கூடாது. அநியாயமா சம்பாதிக்கிறதுதான் தப்பு”
ஜீனத், வயது 40: “நாங்க முசுலீம்தான். என்னோட வூட்டல இருக்குற சரசாகிட்ட இருந்து அதிரசம், முறுக்கு வந்துச்சு. மதிங்கிற குடும்ப நண்பர் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தாரு. பூசை பண்ணி சாப்பிட கூடாது தான். ஆனா எம்மதமும் சம்மதம்னு இருந்தா சாப்பிடலாம். நான் சாப்பிடுவேன். அப்பிடி பாத்தா என் வீட்ட இந்துக்களுக்கு வாடகைக்கே விடக் கூடாது. அதெல்லாம் முடியுமா. சின்ன விசயத்த பெரிசாக்குறாங்க. எல்லாத்துக்குமே மனசு தான் காரணம்.”
பஷீர் அகமது, வயது 52, மளிகைக்கடை 5 வருசத்துக்கு முன்னாடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துல சேந்தேன். பக்கத்து வீட்டுக்காரங்க கொடுக்கும் தீபாவளி பலகாரங்களை நான் சாப்பிடறதில்லை. கற்பூரம் காட்டியதை நான் தொடமாட்டேன். ஆனா முன்ன இந்து பிரன்ட்ஸ்ங்கக்கூட ஒரே கிளாஸுலதான் குடிப்பேன். நாகூர் தர்க்காவுக்கு முன்ன போனேன். இப்ப இல்ல. ஆனா என் பொண்ட்டாட்டி கூப்புட்டதால…. இப்ப போனேன். ஊர்ல்ல இருந்து தம்பிங்க வந்தா அவங்ககூட.. தர்க்காவுக்கு போவேன், இல்லனா அவங்க கோவிச்சுக்குவாங்க. தவ்ஹீத் ஜமாத்துல சேந்தாலும் நான் சூனியத்தை நம்புறேன். அவருக்கு (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர்) யார்னா சூன்யம் வைச்சா..அப்ப.. தெரியும்! தவ்ஹீத் ஜமாத் ஐ நிர்வாகிங்க கூட வரதட்சணைக் கொடுத்துதான் கல்யாணம் பண்ணாங்க!
“ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் உலகத்தைப் பற்றி நாம் பேசுகிறோம்; ஆனால், நாம்தான் மேலும் ஐக்கியப்பட்டு விட்டோமே? G-7, G-5, G20 என்று வித விதமான G-க்களின் கீழ் இந்தியாவும் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் நாம் ஏன் G-ALL என்பதன் கீழ் ஏன் நாம் ஒன்று சேரக் கூடாது”
மோடியிடம் இருந்து சுற்றுச்சூழல் குறித்து வந்து விழும் சில தெறிப்புகளைக் கேட்டு பிற நாட்டுத் தலைவர்கள் தெறித்து ஓடிக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கமுக்கமாக சிரித்துக் கொண்டிருக்கின்றன
இது மோடி சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. வளர்ந்த (Developed) நாடுகள், வளரும் நாடுகள் (Developing) என்றெல்லாம் இருப்பதற்கு பதில் ஒரேயடியாக எல்லா நாடுகளுக்குமான ஒரு தளம் வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் மோடி. தப்பில்லை. ஆனால், அது தான் ஐக்கிய நாடுகள் சபை என்கிற பேரில் ஏற்கனவே ஒரு கந்தாயம் இருக்கிறதே என்று மண்டையைச் சொரிந்திருக்கிறார்கள் பிற நாட்டுத் தலைவர்களும் பிரதிநிதிகளும்.
மோடியிடம் இருந்து சுற்றுச்சூழல் குறித்து வந்து விழும் சில தெறிப்புகளைக் கேட்டு பிற நாட்டுத் தலைவர்கள் தெறித்து ஓடிக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கமுக்கமாக சிரித்துக் கொண்டிருக்கின்றன. சில உதாரணங்களைப் பாருங்கள்:
”புவி வெப்பமயமாதல், அதனால் பருவநிலை மாற்றம்…. இப்படிச் சொல்வது சரிதானா? உண்மை என்னவென்றால், நம்ம கிராமத்தில் வயதானவர்கள் போகப் போக குளிர் அதிகம் என்கிறார்கள். உண்மையில், வயதாக ஆக அவர்களிடம்தான் குளிரைத் தாங்கிக் கொள்ளும் திறம் குறைந்திருக்கிறது. இது சூழல் மாற்றம் தானா, இல்லை நாம்தான் மாறியிருக்கிறோமா? என்கிற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும்” – டோக்கியோவின் தூய இருதய பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டெம்பர் 2-ம் தேதி ஆற்றிய உரையில் இருந்து.
”பருவநிலை மாறவில்லை. நாம் தான் மாறிவிட்டோம். நதியை தாயாகவும், நிலாவை மாமாவாகவும், சூரியனை தாத்தாவாகவும் போற்றுவதை மறந்ததால்தான் பிரச்சனை” – செப்டெம்பர் 5-ம் தேதி குழந்தைகளோடு பேசும் போது தெறித்த தெறிப்பு இது.
“பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதற்கு காரணம் ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்கிற அவர்களது அழகுணர்ச்சி தான்” என்று சொல்லி ஊட்டச்சத்து நிபுணர்களை பீதியாக்கிய வரலாறு கொண்டவர் மோடி.
உலகெங்கும் வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் வரை சுற்றுச்சூழல் மாசடைந்து வருவது குறித்தும், அதையொட்டி உற்பத்தித் துறைத் தொழில்களில் மாற்றம் கொண்டு வருவது குறித்தும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் போது நமது ‘தல’ உலகத்தின் உச்சி மண்டையில் கடப்பாறையை சொருகுகிறார். ஒருபடி மேலே போய் யோகாசனம் செய்தால் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து உலகை காப்பாற்றலாம் என்று சமீபத்தில் சொல்லி விஞ்ஞானிகளை “ஙே” என்று விழிக்க விட்டுள்ளார்.
“பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதற்கு காரணம் ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்கிற அவர்களது அழகுணர்ச்சி தான்” என்று சொல்லி ஊட்டச்சத்து நிபுணர்களை பீதியாக்கிய வரலாறு கொண்டவர் மோடி. பூடானுக்குச் சென்றவர் அங்கே ஆற்றிய உரையில் அந்த நாட்டை நேபாள் என்று மூன்று முறை குறிப்பிட்டு புவியியல் விஞ்ஞானிகளை திகிலில் உறைய வைத்தார்.
கடந்தாண்டு அக்டோபரில் பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, தக்ஷசீலம் பீகாரில் இருந்ததாகவும், போரஸ் கங்கைக் கரையில் நடந்த போரில் தோல்வியுற்றதாகவும், மௌரிய வம்சத்தைச் சேர்ந்த சந்திரகுப்தரை குப்த வம்சத்தைச் சேர்ந்தவராகவும் பேசி ஒரே நேரத்தில் வரலாற்று அறிஞர்களையும் சமூக ஆய்வாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
“கவலைப்படாதே அமெரிக்கா….” “மனிதர்களும் மீன்களும் அமைதியாக சேர்ந்து வாழ முடியும்னு எனக்குத் தெரியும்”
இவற்றை வெறுமனே விவரப் பிழைகள் அல்லது மறதி என்று கடந்து செல்ல முடியாது. ஜார்ஜ் புஷ்ஷை நாம் அறிந்திருப்போம். உலக வரலாறே கண்டிராத மாபெரும் கோமாளி! அவரது கோமாளித்தனங்கள் புஷ்ஷிசம் என்ற பெயரில் இணையத்தில் மிகப் பிரபலம். ஆனால், கோமாளி புஷ்ஷின் தனிப்பட்ட செயல்பாடுகள் நகைப்புக்குரியதாக இருந்த அதே சமயத்தில் அமெரிக்க அதிபர் எனும் வகையில் அவர் முன்னெடுத்த அரசியல் செயல்பாடுகள் ஒரே நேரத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்களை சொல்லொணாத் துயருக்கு உள்ளாக்கின.
அன்று புஷ் துவங்கி வைத்த நிகழ்வுகளின் தொடர்ச்சி தான் இன்றும் உலகெங்கும் பல லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகமேலாதிக்க திட்டத்தின் மிகக் கேந்திரமான செயல்பாடுகளைத் துவக்கி வைத்த பாசிஸ்ட் என்கிற கோணத்தில் அல்லாமல், உள்நாட்டு அமெரிக்கர்கள் அவரது கோமாளித்தனங்களை கேலி செய்வதில் திளைத்துக் கிடந்தனர். அவரது புவியியல் முட்டாள்தனம், பொருளாதார கோட்பாடுகள் குறித்த அறியாமை பற்றி அமெரிக்க முதலாளித்துவ ஊடகங்கள் கேலி கிண்டல்களை அவ்வப்போது வெளியிட, சாமானிய அமெரிக்கர்கள் இணையத்தில் அவற்றை மேலும் மெருகேற்றி பலவாறான நகைச்சுவைத் துணுக்குகளை உற்பத்தி செய்து திருப்திப்பட்டுக் கொண்டனர்.
மோடியோ, ஜார்ஜ் புஷ்ஷோ கோமாளிகளாக இருப்பதில் வியப்பில்லை.
தற்போது மோடியின் தேர்தல் கால உத்திரவாதங்களும், அவர் மேல் மக்கள் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளும் தகர்ந்து வரும் நேரம். மெல்ல முதலாளித்துவ ஊடகங்கள் அவரது உளறல்கள் மெல்லிய நகைச்சுவையாக முன்வைத்து கிச்சுகிச்சு மூட்டத் துவங்கியுள்ளன. இணையவாசிகள் மோடித்துவா என்ற பெயரில் கிண்டலடித்து சுயமகிழ்ச்சியில் திளைக்கத் துவங்கியுள்ளனர்.
மோடியோ, ஜார்ஜ் புஷ்ஷோ கோமாளிகளாக இருப்பதில் வியப்பில்லை. பாசிஸ்டுகள் எப்போதும் உள்ளுக்குள் கோழைகளாகவும் கோமாளிகளாகவுமே இருப்பார்கள் – விதிவிலக்கின்றி. எனினும் அவர்களது முட்டாள்தனங்களை பகடி செய்யும் அதே நேரம் அவர்களிடமிருந்து வெளிப்படும் கேனத்தனமான கருத்துக்களின் அடிப்படை எங்கே இருக்கிறது என்பதையும், அதன் பொருளாதாய விளைவுகள் (Material effect) என்னவென்பதையும் புரிந்து கொள்ளவது அவசியம்.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் இழிவைக் குறித்து தனது ’கர்மயோகம்’ என்ற நூலில் இவ்வாறாகச் சொல்கிறார் மோடி –
”நான் அவர்கள் தங்களது வருமானத்திற்காக இந்த வேலையைச் செய்கிறார்கள் என்பதை நம்பவில்லை. அப்படியிருந்தால் இது போன்ற வேலையை தலைமுறை தலைமுறையாக அவர்கள் செய்யமாட்டார்கள். ஏதோவொரு சந்தர்பத்தில் யாரோ ஒருவருக்கு அது (மலமள்ளுவது) ஒட்டுமொத்த சமூகத்தின் மகிழ்ச்சிக்காகவும் கடவுளுக்காகவும் தாங்கள் செய்ய வேண்டிய கடமை என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். இது கடவுளால் தமக்கு அளிக்கப்பட்ட வேலை என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். மலமள்ளும் வேலை என்பது உள்ளார்ந்த ஆன்மீக அனுபவம் என்பதை உணர்ந்தே அவர்கள் நூற்றாண்டுகளாக செய்து வருகிறார்கள். இது தலைமுறை தலைமுறையாக இவ்வாறே தொடர்ந்திருக்க வேண்டும்…”
இது வெறும் கோமாளித்தனமல்ல. சமூகத்தின் கீழ் அடுக்கில் அழுத்தப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இழிந்த காரியங்கள் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தின் மேல் பார்ப்பனிய இந்துப் பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் வன்மத்திலிருந்தே இப்படி ஒரு கருத்து உதிக்க முடியும். ஆர்.எஸ்.எஸ் கோரும் இந்து ஒற்றுமை என்பதன் திருத்தமான விளக்கம் இது – அந்தந்த வர்ணத்தவர்கள் தங்களுக்கு ‘விதிக்கப்பட்ட’ கடமைகளை ஆற்றுவதன் மூலம் வீடுபேறை அடைய முடியும் என்பதுதான் பார்ப்பன இந்துமதம் போதிக்கிறது. இந்த தத்துவத்தின் நடைமுறை அர்த்தம் பார்ப்பான் மணியாட்டுவதும் தலித்துகள் பீயள்ளுவதும் தான்.
காலமாற்றத்திற்கு உட்பட்டு பார்ப்பனியம் தனது படிநிலைச் சாதி ஒடுக்குமுறையை முன்பைப் போல் அதே விகாரமான வடிவத்தில் முன் தள்ளுவதில்லை. சுப்பிரமணிய சுவாமி வரும் போது இரண்டு நாற்காலிகளையும் சூத்திர பொன்னார் வரும் போது ஒரே நாற்காலியையும் போட்டு சூத்திரனைக் கீழே உட்காரச் சொல்லாமல் சொல்லி “நாசூக்காக” நடந்து கொள்ளும் சங்கர மடத்தைப் போல பார்ப்பனிய மேலாதிக்கம் நாசூக்கான முறையில் தான் தற்போது தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது.
சுப்பிரமணிய சுவாமி வரும் போது இரண்டு நாற்காலிகளையும்
சூத்திர பொன்னார் வரும் போது ஒரே நாற்காலியையும்
சங்கராச்சாரியே மௌனக் குசு விடும் காலத்தில் இத்தனைப் பட்டவர்த்தனமான வார்த்தைகளில் நாறடிக்கும் மோடியின் வார்த்தைகளை வெறும் கிறுக்குத்தனமான உளரல்கள் என்று நாம் நகைக்க முடியுமா?
பாசிஸ்டுகள் கோமாளிகள் மட்டுமல்ல, கொலைகாரர்களும் கூடத்தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர்களது கோமாளித்தனத்தின் சமூகபாத்திரமல்ல; கொலைகாரத்தனத்தின் சமூகபாத்திரமே நமது அக்கறைக்கும் கவலைக்கும் உரியது. தற்போது மோடியைச் சுற்றிப் பின்னப்பட்ட மாயைகள் ஒவ்வொன்றாக அகலத் துவங்கியுள்ளன. இந்தத் தருணத்தில் அவரைச் சுற்றி அவ்வாறான மாயைகளைப் பின்ன கைக்கருவிகளாகச் செயல்பட்ட முதலாளித்துவ ஊடகங்கள் மெல்ல மெல்ல, மோடியின் உண்மையான முகத்தை நகைப்புக்குரிய ஒன்றாக சித்தரிக்க முயன்று வருகின்றன.
நாம் விழிப்போடிருந்து அந்த முகத்தின் உண்மையான பண்பான கொலைகாரத்துவத்தை இனங்கண்டு கொள்வதோடு அம்பலப்படுத்தவும், எதிர்த்து முறியடிக்கவும் முன்வர வேண்டும்.
ஊழல் குற்றவாளி பாசிச ஜெயா கைது நடவடிக்கைக்குப்பின் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை போல் ஆட்டம் போட்டது தமிழக காவல்துறை!
அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் துவாக்குடி ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் அ.தி.மு.கவின் அடியாள் படையாகவே செயல்பட்டு அம்பலப்பட்டு போயுள்ளனர்.
திருச்சி மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில், மத்திய தொழிலாளர் நலச்சட்டத்தை திருத்த முயலும் பா.ஜ.க அரசின் சதித்செயலை கண்டித்து அக்டோபர் 30.09.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக அனுமதி பெற்று இருந்தனர். இதற்கிடையே ஜெயாவை குற்றவாளி என அறிவித்து சிறையில் அடைத்தது பெங்களுரு நீதிமன்றம். கைதை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் நடத்தபோவதாகவும், எனவே, பு.ஜ.தொ.முவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியை ரத்து செய்வதாகவும் கூறினார், அமைச்சர் கோகுல இந்திராவின் கொழுந்தனாரும் திருவெறும்பூர் ஆய்வாளருமான பாஸ்கர்.
எனவே, பு.ஜ.தொ.மு தோழர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர் தண்டபாணி ஆகியோர் காவல் ஆய்வாளர் பாஸ்கரை நேரில் சந்தித்து, திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்த தங்களுக்கு அனுமதியளிக்கவேண்டும், கொடுத்த அனுமதியை மறுப்பது ஜனநாயக விரோதமானது என எடுத்துக்கூறினர்.
அதிமுக ஆய்வாளர் பாஸ்கர், “என்னய்யா ரொம்ப அறிவாளித்தனமா பேசுற, உங்க தலைவர உள்ளபுடிச்சி போட்டா சும்மா இருப்பியா, அம்மா வெளியவரவரைக்கும் யாருக்கும் அனுமதி கிடையாது. அரசாங்கம், போலீசோட அனுசரிச்சு போங்கயா” என கூறினார்.
தோழர் தண்டபாணி, “மரியாதையா பேசுங்க, எங்கள் தலைவர்கள் மக்கள் சொத்த கொள்ளையடிக்கிற சமூகவிரோத செயல செய்யமாட்டாங்க! மக்களுக்கு பொறுப்பான அதிகாரி நீங்க, அத மறந்துட்டு பேசாதீங்க, கோடிக்கணக்கான தொழிலாளர் பிரச்சனைக்காக நாங்க மாலை நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முறையான அனுமதி பெற்றுள்ளதை தடுப்பது நியாயமில்லை. தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிங்க” என்றார்.
ஆத்திரமான அந்த ஆய்வாளர், “நான்யார் தெரியுமுல்ல, என் படிப்பு, உத்யோகம், சர்வீஸ் தெரிஞ்சு பேசுடா, அமைச்சர் கோகுல இந்திரா கொழுந்தன்னா டிப்பார்ட்மென்ட்டே யோசிக்கும். இந்த சட்டையபோட்டுதான் சம்பாரிக்குனுமுன்னு அவசியமில்லடா. பெரிய மசுரு மாதிரி என்கிட்டயே பேசுர, கைய, கால ஒடைச்சி உள்ள தள்ளிடுவேன்” என எகிறினார்.
இவர் செயலை கண்டித்து திருச்சி நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி அம்பலப்படுத்தினர் மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்கள். பதறிப்போன அந்த அதிகாரவர்க்க சூரப்புலி பாஸ்கர் எரிச்சலடைந்தார்.
ஆய்வாளரை கண்டித்து HRPC போஸ்டர்
அடுத்த நாள் காலையிலேயே போலீசை வீட்டுக்கனுப்பி தோழர் தண்டபாணியை கைது செய்து மாலை வரை திருவெறும்பூர் காவல்நிலையம் கொண்டுவராமல் உறவினர் வீடு, போலீசு வாகனம் என சட்டவிரோதமாக அடைத்து வைத்து…”ஏன்டா என்னோட பவரைபத்தி தெரியாம மோதுர, என் பேரு, என் குடும்பத்தையே போட்டு போஸ்டர் ஒட்டியிருக்கயா, யாரெல்லாம் சேர்ந்து எனக்கெதிரா போஸ்டர் ஒட்னீங்க… உன்னை போட்டுதள்ள ஒரு குண்டு போதும், எனக்கு ஒரு என்கொயரிதான்… மனித உரிமை, மயிறு உரிமைன்னு இனியும் பேசுனா கொன்னுடுவேன்” என மிரட்டினார்.
மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் இந்த பாஸ்கரை தொடர்பு கொண்டு பேசிய போதெல்லாம் தாங்கள் கைது செய்யவில்லையென்றும் இரவு ரோந்து சென்றதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் கூசாமல் பொய் பேசினார்.
இவரது சட்டவிரோத நடவடிக்கையை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து கண்டித்தனர் வழக்குரைஞர்கள். ‘ “ஆமாம் கைது செய்திருக்கிறார்கள், கோர்ட்டுக்கு கொண்டுவருவார், அங்கே பாருங்கள்” என நழுவிகொண்டார் திருவெறும்பூர் காவல் துணை கண்காணிப்பாளர். இதைச் சொல்ல அவருக்கு பல மணி நேரம் தேவைப்பட்டுள்ளது.
இறுதியாக, தனக்கெதிராக போஸ்டர் ஒட்டியது என்று வழக்கு போடாமல் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் விதமாக அ.தி.மு.கவை விமர்சித்து போஸ்டர் ஒட்டியதாக கொஞ்சமும் நேர்மையே இல்லாமல் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
இந்த சுவரொட்டிக்குத்தான் அதிமுக அடிமைகளை வைத்து புகார் பெற்றுக் கொண்டு வழக்கு போட்டார் அந்த அமைச்சர் கொழுந்தன்.அதிமுக ரவுடிகளைக் கண்டித்து மகஇக போஸ்டர்
இதற்கேற்ப தனது கூட்டாளியும், கட்டப்பஞ்சாயத்து புதுபணக்கார ரவுடியுமான கிருஷ்ணா சமுத்திரம் அ.தி.மு.க பஞ்சாயத்துத் தலைவர் சிவாஜி என்பவரிடம் பொய் புகார் பெற்றுக்கொண்டார். இப்படி அ.தி.மு.க காலிகளும், திருவெறும்பூர் காவல் ஆய்வாளரும் யாருக்கு யார் எடுபிடி என்று தெரியாத வண்ணம் ஒன்றுக்குள் ஒன்றாக கலந்து போயுள்ளனர். மேலும் தனது நண்பரான துவாக்குடி அ.தி.மு.க நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், மற்றும் துவாக்குடி ஆய்வாளர் மூலமாக பொய்புகாரின் அடிப்படையில் பகுதி தோழர்கள் சாகுல் என்பவரை இதே பொய் வழக்கு போட்டு சிறையிலடைத்தது. தாஸ் என்ற தோழரை கைது செய்ய தேடியபோது அவர் இல்லாததால் அவர் தம்பிகள் இருவரை கைது செய்து, ‘ தாஸை ஒப்படைச்சிட்டு இவன்களை கூட்டி போ ‘ என சட்டவிரோதமாக பிணை கைதி போல அடைத்து வைத்தார் துவாக்குடி ஆய்வாளர் ரமேஷ்குமார். அப்பகுதி மக்களை திரட்டி தோழர்கள் ஆய்வாளரின் இச்செயலை கண்டித்த பின்பே அவர்களை விடுவித்தனர். மேலும் சிலரை நள்ளிரவில் வீடு புகுந்து தேடியுள்ளது. பெண்கள், குடும்பத்தினரை அவமானப்படுத்தி துன்புறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் சட்டவிரோதமாக கடத்தி, கொலை மிரட்டல் விடுத்த ஆய்வாளரின் அராஜகத்தை கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் தோழமை அமைப்பினருடன் மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்கள் மாவட்ட கண்காணிப்பாளரை மறுநாள் சந்தித்து முறையிட்டனர்.
மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக முற்றுகை -:
படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்
“உங்கள் புகாரினை விசாரிக்கிறேன், சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்கிறேன். உங்கள் தோழர்களை பிணையில் விட எதிர்க்க மாட்டோம்” என உறுதியளித்த பின்பே தோழர்கள் கலைந்து சென்றனர். பத்திரிக்கை-ஊடகங்கள் மூலமாகவும் நமது தொடர்ச்சியான நடவடிக்கைகளை கண்டும் அரண்டுபோன அந்த சூரப்புலி அவசர அவசரமாக தானே செலவு செய்து திருவெறும்பூர், துவாக்குடி ஆய்வாளர்கள் மீது பொய் புகார் கொடுத்த ம.க.இ.கவினரை கண்டிக்கிறோம் என பொது மக்கள் பேரில் போஸ்டர் ஒட்டி மேலும் அம்பலப்பட்டுபோனார்.
போலீஸ் போஸ்டர்
மக்களோ… “ம.க.இ.க காரன் பேரு, போன் நம்பர் போட்டு தில்லா ஒட்டுவான், இந்த லஞ்சபேர்வழிக்கு எந்த பொதுமக்கள் போஸ்டர் ஒட்டுவான்” என காரி உமிழ்ந்தனர்.
சி.பி.எம், விடுதலைச் சிறுத்தைகள். த.மு.மு.க மற்றும் மாற்றுக் கட்சியினர் பலரும், “நாங்களும் இவனை எப்படி கண்டிக்கிறதுன்னு யோசிச்சிக்கிட்டுருந்தோம். வகையா ம.க.இ.க கிட்ட மாட்டிகிட்டான், விடாதீங்க” என தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
அ.தி.மு.க ஆய்வாளர் பாஸ்கர், மட்டுமல்ல காவல்துறையே சமூகவிரோத கும்பலாக சீரழிந்து கிடப்பதையும், இதனை ஒழிக்காமல் உழைக்கும் மக்களுக்கு விடிவில்லை என்பதை விளக்கியும் திருவெறும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஆயத்தமாகி வருகிறது மனித உரிமை பாதுகாப்பு மையம்.
அம்மா போலீஸ் – படம் : ஓவியர் முகிலன்
செய்தி மனித உரிமை பாதுகாப்பு மையம்,
திருச்சி. தொலைபேசி: 9487515406
கோயமுத்தூர் சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது சிஆர்ஐ பம்ப்ஸ் நிறுவனத்தின் ஒரு கிளை அமைந்துள்ளது. இதில் சுமார் 150 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மேற்படி நிறுவனத்திற்கு சின்னவேடம்பட்டி உள்பட ஆறு கிளைகள் கோவையில் மட்டும் இவை போக சீனா வில் ஒரு கிளை என மிகப்பெரிய நிறுவனமாக இருக்கிறது. கோவையில் பம்ப் உற்பத்தியில் தன்னிகரற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்த பிரமாண்டமான வளர்ச்சிக்கு சின்னவேடம்பட்டி கிளைத் தொழிலாளர்களே அடித்தளமாக உள்ளனர்.
டிவி விளம்பரங்களில் பல நாடுகளை சேர்ந்த நபர்கள் “சிஆர்ஐ பம்ப்ஸ்” எனப் பெருமிதமாக அறிவித்து கம்பீரம் காட்டுவார்கள். ஆனால் இத்துணை பெருமைகளையும் உணர்வோடு உழைத்து உயிரால் இழைத்து இந்நிறுவனத்தை வளர்த்தெடுத்த கொணர்ந்த தொழிலாளர்களுக்கு முறையான சீருடை இல்லை. பாதுகாப்பு காலணிகள் இல்லை, நியாயமான சம்பளம் இல்லை. 480 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரம் இல்லை. இதனால் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால் கோபம் கொண்ட முதலாளி சௌந்திரராஜன் கம்பெனி பக்கமே கடந்த 2½ வருடங்களாக வருவதே இல்லை. சங்கத்தை அங்கீகரிக்கவும் இல்லை. கம்பெனியின் முன்னால் தொழிற் சங்க கொடி மரமும், பெயர்ப்பலகையும் வைப்பதற்கு சரவணம்பட்டி காவல்துறை மூலம் தடுத்து விட்டார். சிஆர்ஐ பம்ப்ஸ் என்பது ஒரே நிறுவனம். ஒரே பதிவு எண்ணில் செயல்படுகிறது. ஆனால் போனசை பொறுத்த மட்டில் இதர ஆறு கிளை நிறுவனங்களுக்கும் 30% போனஸ் வழங்கப்படும். உரிமை கேட்ட சின்னவேடம்பட்டி கிளைக்கு மட்டும் நட்டக் கணக்கு காட்டி 8.33% போனஸ் கொடுப்பார்கள்.
நாம் தொழிலாளர் துறையில் சமரச அதிகாரி முன்பு தொடர்ந்து கம்பெனியின் வரவு செலவு அறிக்கை கேட்டோம். நிர்வாகத்தின் பிரதிநிதி வெள்ளைத் தாளில் ஒரு பக்கம் கையால் எழுதி இதுதான் பேலன்ஸ் ஷீட் என தாக்கல் செய்து நட்டக் கணக்கு காட்டினார். உலகம் முழுவதும் வியாபாரம் செய்கிற கார்ப்பரேட் நிறுவனம் குறைந்தபட்ச உரிமைகளான சீருடை காலணி கேட்டதற்கு வெள்ளைத்தாளில் தனது வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்த செயல் குறித்து துளி கூட கேவலப்படவே இல்லை. உடனே சங்கத்தின் சார்பில் சிஆர்ஐ நிறுவனத்தின் பேலன்ஸ்ஷீட் விவரங்களை எடுத்து தாக்கல் செய்தோம். உடனே நிர்வாகம் எரிச்சல் அடைந்து மழுப்பியது. தங்கள் நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது என அவர்கள் தணிக்கை அறிக்கையின் மூலமே நிறுவினோம். ஆனாலும் கூடுதல் போனஸ் தர முடியாது என்றனர்.இரண்டு முறை சமரச அதிகாரி முன்பு மீறிவு அறிக்கை பெறப்பட்டு சென்னைத் தீர்ப்பாயத்தின் முன் வழக்கு நிலுவையில் உள்ளது.
மூன்றாவது முறையாக இந்த வருடமும் 2013-2014 சின்ன வேடம்பட்டி கிளைக்கு மட்டும் 8.33% போனஸ் அறிவித்து இதர கிளைகளுக்கு 30% மேல் போனஸ் வழங்கினர். சங்கத்தை கலைத்து விட்டு வாருங்கள் மொத்தமாக எல்லா போனசையும் வழங்குகிறோம் என நிர்வாகம் தனது அல்லகைகள் மூலம் பிரச்சாரம் செய்து வருகிறது.
மூன்றாவது முறையும் நிர்வாகம் குறைந்த போனசை வழங்கி தொழிலாளர்கள் வயிற்றில் அடித்து ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி செய்தமைக்கு பதிலடி கொடுக்க சங்கம் முடிவு செய்தது.
கொடிக்கம்பம், அறிவிப்பு பலகை வைக்க தடையாக இருக்கும் மாநகராட்சி, சரவணம்பட்டி காவல்துறை, நிர்வாகம் என அனைவரையும் எதிர்த்து நிற்பது எனவும் மீறுவது எனவும் முடிவு செய்தோம்.
21-10-2014 அன்று காலை 8 மணிக்கு கம்பெனி முன்பு புஜதொமு பெயற்பலகையும், அரிவாள் சுத்தியல் பொறித்த செங்கொடியை ஏற்றி பறக்க விட்டு வயிற்றில் அடித்த முதலாளிக்கு நெற்றியில் அடித்து பதில் சொன்னோம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி கொடியேற்றினார். மாவட்டத் தலைவர் தோழர் இராஜன் பெயர்பலகை திறந்து வைத்தார். மாவட்டக் குழு தோழர்கள் கோபிநாத், சத்தியநாராயணன் முன்னிலை வகித்தனர். சிஆர்ஐ கிளைச் செயலாளர் தோழர் குமாரவேல், கிளைத்தலைவர் தோழர் மூர்த்தி மற்றும் தோழர்கள் ரமேஷ், நாகராஜ் எனத் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.
22-10-2014 தினகரனில் வந்த செய்தி
கோவையின் SRI கிளையில் தமிழகத்திலேயே அதிகமான போனசாக 60% பெற்று கொடுத்து புஜதொமு வல்லமை பெற்று திகழும் அதே கோவையில் இன்னொரு நிறுவனமான் சிஆர்ஐ கிளையில் மிகக் குறைந்த போனசை மூன்று வருடங்களாக பெற்று முதலாளித்துவத்தின் கொடுந்தாக்குதலுக்கு ஆட்பட்டும் ஒற்றுமை குலையாமல் உறுதியாக உயர்ந்து நிற்கிறது. முதலாளிகளின் லாப வெறிக்கு வரைமுறையோ எல்லைகளோ இல்லை. லாபம் சம்பாதிக்க லாபத்தின் அளவை அதிகர்க்கவும் எந்த ஒரு இழி செயலைச் செய்யவும் முதலாளிகள் தயங்குவதில்லை. சமூக மாற்றமெனும் உன்னத லட்சியத்தில் ஊன்றி நிற்கும் நம் சங்கம் முதலாளிகளை எதிர்த்த போராட்டங்களை அதன் முடிவு வரை நிச்சயம் கொண்டு செல்லும்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த மஹிசாசுரன் வீரமரண நினைவேந்தல் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியினர் கலவரம் செய்து விழாவை சீர்குலைத்துள்ளனர். மஹிசாசுரனை நாயகனாக சித்தரித்து வெளிவந்த “பார்வர்ட் பிரஸ்” ( Forward Press) என்ற பத்திரிகை அலுவலகத்தை போலீசை கொண்டு அடித்து நொறுக்கியுள்ளனர்.
மஹிசாசுர நாளில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஏ.பி.வி.பி கலவரம்.
ஆரிய பார்ப்பனர்கள் இந்த மண்ணின் பூர்வகுடி மக்களை, பழங்குடிகளை இனப்படுகொலை செய்ததை கொண்டாடும் பல்வேறு பார்ப்பன பண்டிகைளில் ஒன்று துர்காபூஜை என்ற மஹிசாசுரன் படுகொலை கொண்டாட்டம். அதே சமயத்தில் மஹிசாசுரனை தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – பழங்குடி மக்களின் நாயகனாக முன்னிறுத்தும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபும் இங்கு இருந்து வருகிறது.
அம்பேத்கர், பெரியார் போன்ற சீர்திருத்தவாதிகள் இது போன்ற விழாக்களை ஊக்குவித்துள்ளனர். தலித் மக்கள் ஆங்கிலேயர் படையில் சேர்ந்து, பார்ப்பன மன்னனை கொன்றோழித்த தினத்தை அம்பேதக்ர் கொண்டாட வலியுறுத்தியிருக்கிறார். தமிழகத்தில் இராவண லீலா நிகழ்வுகளை திராவிட இயக்கம் நடத்தியிருக்கிறது. மக்கள் கலை இலக்கியக் கழகம் அசுர கானம் என்ற பெயரில் பாடல் ஒலிப்பேழை வெளியிட்டுள்ளது: தமிழ் மக்கள் இசை விழாவையும் பல ஆண்டுகளாக நடத்தியிருக்கிறது.
அந்த வகையில் பார்ப்பனிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கும் வரலாற்றை பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட-பழங்குடி மக்களின் பார்வையிலிருந்து மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, “வீரமரணமடைந்த மஹிசாசுரனுக்கு நினைவேந்தல் நிகழ்வு” என்று ஒரு நிகழ்வை அக்டோபர் 9-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தது, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கம். நேரு பல்கலைக்கழக மாணவர் விடுதியின் காவேரி மெஸ்சில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது அங்கு திரண்டு வந்த ஏ.பி.வி.பி குண்டர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கம் மற்றும் கலந்துகொண்ட மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். விடுதி உணவகத்தின் கதவுகள் மற்றும் கண்ணாடிகளை உடைத்து தங்கள் வெறியை காட்டியுள்ளனர். தங்களின் வன்முறை மூலம் நிகழ்ச்சியை நடக்கவிடாமல் தடை செய்துள்ளனர்.
மகிசாசுரன் நினைவு நாள்
இதே போல கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் அசுரர்கள் வாரம் கொண்டாட ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது ஏ.பி.வி.பியினரின் தூண்டுதலின் பேரில் பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது குறித்து ஏற்கனவே எழுதியிருந்தோம்.
ஏபிவிபி யின் இந்த அடாவடி செயலை செயலை கண்டித்து ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் சங்கம் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளது.
நிகழ்வில் கல்ந்துகொண்ட ஒரு மாணவர் இது குறித்து கூறும்போது “ஏபிவிபி யினரும் இதே காவேரி மெஸ்சில் தான் தங்களின் துர்கா பூஜைக்கான சிலைகளை வைத்து வழிபட்டனர்.அப்போது யாரும் இதை எதிர்க்கவில்லை ஆனால் இன்று தலித்துகள் தங்களின் நாயகன் மஹிசாசுரன் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் போது ஏபிவிபியினர், அந்தப் பகுதி குண்டர்களின் துணையுடன் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்” என்று கூறி தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நேரு பல்கலைகழக மாணவர் தேர்தலின் அனைத்து பதவிகளிலும் சி.பி.எம்.எல் (லிபரேசன்)-ன் மாணவர் அமைப்பான AISA-விடம் படுதோல்வியடைந்த ஏ.பி.வி.பி தனது கோபத்தை இந்த வன்முறை மூலம் தீர்த்துக் கொண்டுள்ளது. AISA-வின் வெற்றியைவிட “நக்சல்பாரி ஜிந்தாபாத்” “லால் சலாம்” போன்ற முழக்கங்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகங்களில் எதிரொலிப்பது ஆளும்வர்க்க எடுபிடிகளான ஏபிவிபி-யினருக்கு எரிச்சலூட்டியிருக்கிறது.
“மஹிசாசுரன் சிறப்பிதழாக” வெளிவந்த தலித்-பிற்படுத்தப்பட்ட மாத இதழான பார்வர்ட்பிரஸ்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை வெறியாட்டத்தை தொடர்ந்து, இந்துத்துவவாதிகளின் தூண்டுதலில் பேரில் அதே நாள் இரவில் “மஹிசாசுரன் சிறப்பிதழாக” வெளிவந்த தலித்-பிற்படுத்தப்பட்ட மாத இதழான பார்வர்ட்பிரஸ் பத்திரிகை அலுவலகம் டெல்லி போலீசாரால் சூறையாடப்பட்டது. அதன் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டதோடில்லாமல் அதன் நான்கு ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்வர்ட் பிரஸ் பத்திரிகை “நீதிமன்ற உத்தரவோ அல்லது வேறு எந்த ஆணையும் இல்லாமல் போலீசார் பத்திரிகை அலுவலகத்தை அடித்து நொறுக்கி ஊழியர்களை கைதுசெய்ததோடில்லாமல் நகரின் பல இடங்களிலிருந்தும் எங்கள் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றி வருகிறார்கள். பகுஜன் – சிரமன கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட அக்டோபர் மாத இதழில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் அறிவுஜீவிகள், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் மஹிசாசுரன்-துர்கா கதையை பிற்படுத்தப்பட்ட மக்களின் பார்வையிலிருந்து மறுவாசிப்பு செய்து கட்டுரைகள், படங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
யாரையும் புண்படுத்துவது நோக்கம் எங்களுக்கு இல்லை. பகுஜன் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் அடையாளங்களை கண்டுபிடிப்பதும், அதை மீட்டுருவாக்கம் செய்வதும் தான் எங்கள் நோக்கம். சொல்லப்படும் புனித நூல்களை பகுஜன் பார்வையிலிருந்து மறுவாசிப்பு செய்யும் மரபு நீண்ட நெடியது. எங்களுக்கு முன்பே அது ஜோதிராவ் பூலேவிலிருந்து ஆரம்பித்து அம்பேத்கர், பெரியார் என்று நீள்கிறது.
இது கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல். பார்பனிய பா.ஜ.க சக்திகளின் உத்தரவின் பேரில்தான் இது நிகழ்த்தப்பட்டுள்ளது. தலித்-பிற்படுத்தப்பட்ட-பழங்குடி மக்களின் இதழான எங்களை இந்த பார்ப்பன சக்திகள் எப்போது அருவெறுப்பகத்தான் பார்த்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு பல முறை எங்களை தாக்கியிருக்கிறார்கள். இந்த தாக்குதல்கள் எங்களை மேலும் பலமாக்கியிருக்கிறதே ஒழிய வேறு எதையும் சாதிக்கவில்லை. இந்த பிரச்சனையிலிருந்தும் நாங்கள் மீண்டு வருவோம்” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதோடு பிரேம்குமார் மணி என்பவரது கட்டுரையின் சில பகுதிகளையும் தங்கள் கண்டன அறிக்கையில் பதிவு செய்துள்ளனர். அவை முன்வைக்கும் கேள்விகள் முக்கியமானவை.
“பழங்குடிகளின் நாயகர்களான அசுரர்கள் கொல்லப்பட்டது எப்படி கொண்டாடத்தக்க விழாவானது? கொலையை கொண்டாடும் இந்த மனநிலை எதைக் குறிக்கிறது? இதே போன்று குஜராத் படுகொலைகளையோ இல்லை பீகாரின் தலித் படுகொலைகளையோ கொண்டாடினால் அதை நாம் எப்படி பார்ப்போம். ஆம் அசுரர்கள் தோற்றுவிட்டார்கள்தான். அதற்காக ஆண்டுதோறும் அதை ஏன் கொண்டாட வேண்டும். இதைக் கொண்டாடுவதன் மூலம் நீங்கள் தான் மக்களை அவமதிக்கிறீர்கள்” என்று பார்ப்பன கொண்டாட்டங்களை கேள்விக்குள்ளாக்குகிறது அந்த கண்டன அறிக்கை.
மாறாக, “மஹிசாசுரன் வீரமரணமடைந்த நாளை நினைவுகூறுவதன் மூலம் நாங்கள் யாரையும் புணபடுத்தவில்லை. நாம் ஏன் தோற்றோம் என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம். கடந்த காலத்தை கற்றுக்கொள்வதன் மூலம் தான் நிகழ்காலத்தில் எங்களை உயர்த்திக்கொள்ள முடியும். எங்களின் எல்லா சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. கிடைக்கும் சில தரவுகளின் மூலம் தான் எங்கள் ஏகலைவன் அர்ஜூனனைவிட திறமையாளன் என்பதை அறியமுடிகிறது. ஆனால் அரசு, திறமை குறைந்த அர்ஜுனன் பெயரில்தான் விருதுகள் தருகிறது. வரலாற்றிலிருந்து எங்கள் நாயகர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். எங்கள் குறியீடுகள் அவமதிக்கப்பட்டுள்ளன. எங்கள் நாயகர்களின் கட்டைவிரல்கள், தலைகளை வெட்டிய மரபை நாங்ள் கேள்வி கேட்க விரும்புகிறோம். அவர்களின் அவமானம் எங்களின் அவமானம்.” என்று பார்ப்பன கலாச்சாரத்தை கேள்விக்குள்ளாக்கும் தமது நடவடிக்கைகளின் நோக்கத்தை விளக்குகின்றனர்.
இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க எந்த ஆர்.எஸ்.எஸ் காரனும் தயாராக இல்லை. அவர்களின் ஒரே பதில் வன்முறை. அரச அதிகாரம் மூலம் கேள்வி கேட்பவனின் குரல்வளையை நெறிப்பது. இதைதான் நந்தன் காலம் முதல் இன்று வரை செய்து வருகிறார்கள்.
இத்தகைய பாசிஸ்டுகள் தங்களை ஜனநாயகவாதிகள் போல காட்டிக்கொள்ள தவறுவதில்லை. அதில் ஒன்றுதான் இந்துத்துவம என்பது அனைத்து வழிபாடுகளையும் அங்கீகரிக்கரிப்பது, அதில் நாத்திகம் உள்ளிட்டு ‘பாரத’ கலாச்சாரத்தின் அனைத்தும் அடக்கம் என்று சில கபடதாரிகள் பசப்புகிறார்கள்.
இது உண்மை எனில், ‘மாபெரும் பாரத கலாச்சாரத்தின்’ சில புதல்வர்கள் அதே பாரதத்தின் கொல்லப்பட்ட புதல்வரான மகிசாசுரனுக்கு நினைவுநாள் நடத்துவது ஆர்.எஸ்.எஸ் அம்பிகளுக்கு பதற்றத்தையும், நடுக்கத்தையும் உண்டாக்குவது ஏன்? மஹிசாசுரன் என்ன ஐரோப்பிய மையவாத சிந்தனை கொண்டவரா? இல்லை பாபருக்கு பக்கத் துணையாக வந்தவரா? இல்லையே பார்ப்பனர்கள் வருவதற்கு முன்னரே ‘பாரதத்தில்’ இருந்தவர்கள் தானே. பின்னே ஏன் நடுக்கம் பதற்றம் எல்லாம்.
உண்மையில் இந்து மதம் என்றழைக்கப்படும் பார்ப்பனியம் சற்றும் சகிப்புத் தன்மை அற்றது. அதை எதிர் கொண்டு தமது உரிமைகளை நிலைநாட்டியது இங்கேயிருக்கும் உழைக்கும் மக்களின் போராட்டமே அன்றி அது இந்து மதத்தின் பொறுமை அல்ல. மாறாக பார்ப்பனியத்தின் வேரே, ஆரிய-பார்ப்பன-சமஸ்கிருத கலாச்சார மேலாதிக்கம்தான்.
குமரித்தாய் வழிபாட்டிற்கு கத்தோலிக்கம் தடை விதிப்பதாகவும், இந்துத்துவம் தான் பன்முகத்தன்மை கொண்டது என்றும் நாமெல்லாம் மாபெரும் பாரத கலாச்சாரத்தின் புதல்வர்கள் என்றும் கூறி குமரித்தாயின் ஜனநாயக உரிமைக்கு போர்க்கொடிதூக்கும் ஜோ.டி.குரூஸ் போன்றவரகள் அதே மாபெரும் பாரத கலாச்சாரத்தின் புதல்வர்களான அசுரர்களுக்கு நினைவேந்தலை தடை செய்யும் இந்த்துத்துவம் பற்றி என்ன கருதுகிறார்கள்? பேய்க்கு வாழ்க்கைப்பட்ட பிறகு இம்சைதானே நீதி?
இந்துத்துவத்தின் சாதிய வர்ணாசிரம ஜீன்களிலேயே பன்முகத்தன்மைக்கோ சமத்துவத்திற்கோ இடமில்லை. ஆதிக்க ஆரிய-பார்ப்பன-சமஸ்கிருத மொழி வழி கலாச்சாரத்தின் பாதுகாவலர்கள் தான் இந்த்துவம். அதில் அசுர-திராவிட-தேசிய இன மொழிவழிபட்ட கலாச்சாரத்திற்கு என்றைக்குமே இடமில்லை. அதை இழிவுபடுத்துவது தான் இந்துத்துவம். மாற்று கருத்துக்களை இடமளிக்காத பாசிஸ்டுகள்தான் பார்ப்பன இந்துத்துவவாதிகள் எனபதை மீண்டும் ஒரு முறை இந்த நிகழ்வின் மூலம் உணர்த்தியுள்ளனர்.
அடுத்தாக ஐரோப்பிய பார்வையில் இந்திய வரலாறு எழுதப்பட்டிருப்பதாகவும் அதை இந்தியப் பார்வையில் மாற்றி எழுத வேண்டும் என்று சமீப காலமாக கதைத்து வருகிறார்கள் இந்த்துவவாதிகள். அதே இந்துத்துவவாதிகள் தான் சூத்திர இந்தியனின் பார்வையில் வேத, புராண வரலாறை மறுவாசிப்பு செய்தால் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். எனில் இவர்கள் கூறும் இந்தியப் பார்வை என்பது என்ன? அது ஆதிக்க ஆரிய-பார்ப்பன-சமஸ்கிருத பார்வை மட்டுமே என்பது தெளிவாகிறது. ஆக இவர்கள் கூறும் தேசியம் என்பது பார்ப்பன தேசியம்.
நாமெல்லாம் இந்துக்கள் என்று கூறினால் யார் இந்து? ஏன் என் முன்னோரை கொன்றாய் என்று கேளுங்கள்!
பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்ல காத்திருக்கும் நடுத்தர வர்க்க மக்களை இதுவரை தனியார் ஆம்னி பேருந்துகள் மட்டுமே கொள்ளையடித்து வந்தன. கடந்த அக்டோபர் 1 முதல் மத்திய அரசின் ரயில்வே துறையும் சிறப்பு அதிவேக ரயில்கள் (ப்ரீமியர் ரயில்) என்ற பெயரில் அந்த கொள்ளையை சட்டபூர்வமாக செய்ய ஆரம்பித்து விட்டன. அவ்வப்போது மாறும் கட்டணம் (டைனமிக் கட்டணம்) என்ற பெயரில் பயணிகளின் தலையை தடவும் இந்த வேலையானது சாமான்ய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மலிவு விலை பயணமாக இருந்த ரயில் பயணத்தை அவர்களிடமிருந்து பிரிக்க ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம்.
தேவைக்கேற்ப அவ்வப்போது மாறும் கட்டண முறை.
மோடி அரசு வந்த பிறகு புல்லட் ரயில், சதாப்தி என ரயில்கள் புதிதாக அறிவிக்கப்பட்டன. ரயில் கட்டணமும் சரக்கு கட்டணமும் 20 முதல் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. மெட்ரோ ரயில்களில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. சீசன் டிக்கெட்டின் விலையும் உயர்த்தப்பட்டது. சில ரயில்பெட்டி தயாரிப்பு நிலையங்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளை இனி தயாரிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டதுடன், சில ரயில்களில் இரண்டாம் வகுப்பினை ரத்து செய்யவும் ஆரம்பித்தார்கள். அதற்கு பதிலாக குளிர்சாதனப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தார்கள்.
கேட்டதற்கு அருண் ஜேட்லி ‘நமக்கு உலகத் தரத்தில் ரயில் பயணம் வேண்டாமா?’ என்று கோபமாக கேட்டார். ஆக மோடியின் வளர்ச்சி அல்லது உலகத் தரம் என்பது ஏழைகளை விரட்டியடிப்பது, வாழ்வின் கடைக்கோடிக்கு தள்ளுவது என்பது தெளிவான பிறகும் இன்னமும் குஜராத் மாதிரி வளர்ச்சி மீது நம்பிக்கை கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களை என்ன சொல்வது?
அக்டோபர் 1 முதல் இந்தியா முழுவதும் மொத்தமாக ப்ரீமியம் ரயில்கள் 808 அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரலில் இதன் எண்ணிக்கை 133. முதலில் மும்பைக்கும் புனேவுக்கும் இடையில் சோதனை முறையில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகை ரயில்கள் எல்லா ரயில் நிறுத்தங்களிலும் நிற்காது. உதாரணமாக பொதிகை சிறப்பு வண்டியானது திருச்சி, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை போன்ற இடங்களில் மாத்திரம் நிற்கும்.
மேலும் இதற்கான முன்பதிவை கணினி மூலமாக மாத்திரம்தான் செய்ய இயலும். எனவே இணையதள மையங்களை மக்கள் மொய்க்கிறார்கள். ஆனாலும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு கணினி முகவரி மூலமாக இரண்டு பயணச்சீட்டுக்களை மட்டுமே பெற முடியும் என்பதால் பெரும்பாலும் சொந்தமாக இணையம், கணிணி வைத்திருப்பவர்களால்தான் எளிதில் பயணச்சீட்டைப் பெற முடியும். இதில் முதியோர்களுக்கு எந்த கட்டண சலுகையும் கிடையாது. பயணச்சீட்டை ரத்து செய்தால் கட்டணம் எதுவும் திரும்ப தரப்பட மாட்டாது.
குளிர்சாதன பெட்டிகளின் ப்ரீமியர் ரயில் கட்டணம் விமான கட்டணத்தை விட அதிகமாக இருக்கிறது.
இதையெல்லாம் விட முக்கியமானது அதன் அவ்வப்போது மாறும் கட்டண முறைதான். சாதாரணமாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு தத்கல் முறையில் பயணச்சீட்டை வாங்கினால் ரூ 385 தான் ஆகும். இது முதல் 50 சதவீத இடங்களுக்கு பொருந்தும். அடுத்து எடுக்கப்படும் பயணச்சீட்டுகளுக்கு முதல் பத்து சதவீதம் சீட்டுகள் பத்து சதவீத கட்டண உயர்வோடும், அடுத்த பத்து சதவீதம் இருபது சதவீத கட்டண உயர்வோடும், அடுத்த பத்து சதவீதம் நாற்பது சதவீத கட்டண உயர்வோடும், அடுத்து எண்பது சதவீதம் என்றும் கட்டணம் கூடிக் கொண்டே போகும். விமான பயணங்களுக்கு பின்பற்றப்படும் இதே முறை இப்போது சாமான்ய நடுத்தர மக்கள் பயணிக்கும் ரயிலுக்கும் வந்து விட்டது. தற்போது இரண்டாம் வகுப்பில் தூத்துக்குடிக்கான கட்டணம் ரூ 2000 வரை வந்துள்ளது. இது ஆம்னி பேருந்தின் கொள்ளையை விட அதிகம் என்கிறார்கள் பயணிகள்.
கோவைக்கு ஏசி மூன்றடுக்கு கட்டணம் தத்கல் முறையில் ரூ 1065. ப்ரீமியம் முறையில் ரூ 3010. சில இடங்களில் கட்டணம் ஐந்து மடங்கு வரை அதிகரித்துள்ளது. இதுபோக இணையதள மையங்களின் சேவைக் கட்டணமாக ரூ 100 வரை வசூலிக்கப்படுகிறது. ஏலம் விடுவது போல நடக்கும் இந்த கட்டண கொள்ளையால் யாரால் அதிகம் பணம் கொடுத்து பயணிக்க சாத்தியமோ அவர்கள் மட்டும் தான் இனி ரயிலை பயன்படுத்த முடியும் என்று ஆகி விட்டது.
குளிர்சாதன பெட்டிகளின் ப்ரீமியர் ரயில் கட்டணம் விமான கட்டணத்தை விட அதிகமாக இருக்கிறது. சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் செல்ல 50 நிமிடங்கள்தான், கட்டணம் ரூ 4,000 தான். ஆனால் 7 மணி நேரம் பயணிக்கும் ப்ரீமியர் ரயிலில் (கோரமண்டல் எக்ஸ்பிரஸ்) குளிர்சாதன பெட்டியில் ரூ 4,170 கட்டணம். தூத்துக்குடிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தால் ரூ 3,500 க்கு விமான பயணம் சாத்தியம். இப்போது ப்ரீமியர் ரயிலில் குளிர்சாதன முதல் வகுப்பில் கட்டணம் ரூ 4,800 ஐ தாண்டி விட்டது.
மோடியின் வளர்ச்சி என்பது வாழ்க்கையை மக்களிடமிருந்து பறிப்பது.
இனி இதனைக் காட்டியே விமான கட்டண உயர்வு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் பெட்ரோல், மின்சாரம், கேஸ் போன்றவற்றின் விலை எல்லாம் இனி டைனமிக் முறையில் இருக்கும் என்றும், இதனை தீர்மானிக்க தனி ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அமைப்பதன் மூலம் ஏற்கெனவே காங்கிரசு வழிபோட்டுக் கொடுத்த தனியார்மய வழிமுறையைத்தான் மோடியும் பின்பற்றுகிறார். மன்மோகனுக்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டதை மோடி பத்து மாதம் கூட இடம் தராமல் செய்து முடிக்கிறார். அந்த வகையில் கார்ப்பரேட்டுகளின் செல்லப் பிள்ளைகளில் முதலிடத்தில் நிற்கிறார்.
ஏப்ரல் முதல் தெற்கு ரயில்வேயில் ப்ரீமியம் ரயிலாக இயக்கப்பட்ட 46 வழித்தடம் மூலமாக மாத்திரம் ரூ 4.5 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது நிர்வாகம். இதன்மூலம் மானியமாக தரப்படும் ரூ 26 ஆயிரம் கோடியை ஈடுகட்டி விடுவோம் என்கிறார் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா. ஆனாலும் ஆசியாவின் மிகப்பெரிய பொதுத்துறையான இந்திய ரயில்வேயில் நேரடி அந்நிய முதலீட்டை நூறு சதவீதமாக உயர்த்த இன்னொரு புறம் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
மோடியின் வளர்ச்சி என்பது வாழ்க்கையை மக்களிடமிருந்து பறிப்பது என்பது தான் இதன்மூலம் தெரிய வருகிறது. அதனால் தான் தற்போது தென்மாவட்டங்களுக்கு போகும் ப்ரீமியர் ரயிலில் பதிவு முழுவதும் கடைசி நாள் வரை நிரம்பாமல் இருக்கிறது. மக்கள் தனியார் ஆம்னி கொள்ளைக்காரனிடம் சிக்குவதா, அரசு ப்ரீமியம் ரயில் கொள்ளைக்காரனிடம் சிக்குவதா என்ற கணக்கில் எது தங்களுக்கு சரிப்பட்டு வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மை மக்கள் ஒற்றைக்காலில் மூன்றாம் வகுப்பில் பயணிக்க தயாரிக்க தயாராகி விட்டார்கள். ரங்கநாதன் தெருவிலும், பட்சண கடைகளிலும் கொட்டிய பணத்தால் கையிருப்பு தீர்ந்து போனவர்களோ தீபாவளியை இங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்று சென்னையிலேயே தங்கி விட்டார்கள்.
மோடியின் இந்தியா இந்த தீபாவளிக்கு ஊருக்கு போவதற்கு அளித்திருக்கும் போனஸ்தான் இந்த பகல் கொள்ளை!
சமீபத்தில் பணி நிமித்தமாக சென்னை வந்திருந்த பழைய நண்பன் பாலுவைக் காணச் சென்றிருந்தேன். அவன் கல்லூரிக் காலத்திலிருந்தே கடுமையான சந்தேகவாதி. யாரையும் அத்தனை சுலபத்தில் நம்பக் கூடியவன் இல்லை. அதிலும் காசு விசயத்தில் படு உசார். பேச்சுவாக்கில் தான் பெங்களூருவில் வீடு வாங்க அலைந்த கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான்.
இவனும் இவன் மனைவியுமாக வேலை செய்து கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ஐம்பது லட்சம் சேர்த்துள்ளனர். வாடகையாக பெரும் தொகையை மாதா மாதம் அழ வேண்டியிருக்கிறதே என்பதை யோசித்து தனி வீடு ஒன்றை கட்டலாம் என்று முடிவு செய்துள்ளனர். கையில் இருப்பது போக தேவைப்பட்டால் வீட்டுக் கடன் வாங்கிக் கொள்வது, வாடகையாக கொடுப்பதை கடன் தவணையாக கொடுத்து விட்டால் பத்து வருடத்தில் கடன் பிடியில் இருந்து வெளியேறி விடலாம் என்று தீர்மானித்து நிலம் தேடத் துவங்கியுள்ளனர்.
சுமார் ஓராண்டு காலம் தினமும் சாயந்திரம் அலுவலகம் முடிந்ததும் கணவனும் மனைவியுமாக நில வேட்டைக்கான நகர்வலத்தை நடத்தியிருக்கிறார்கள். பெங்களூர் நகரத்தின் உள்ளே சந்து பொந்து இண்டு இடுக்குகள் அனைத்திலும் புகுந்து புறப்பட்டு அலசி ஆராய்ந்து பீராய்ந்ததில் நண்பன் பாதி சோர்ந்து போயிருக்கிறான். ஏன் என்று கேட்டேன்.
“டேய்… பாதி பெங்களூரு, ரெட்டிங்க கைல தாண்டா இருக்கு. அவனுங்க காட்டின நிலத்தோட ரிக்கார்ட்டெல்லாம் நோண்டிப் பாத்தா ஒவ்வொரு சொத்துலயும் டிசைன் டிசைனா வில்லங்கத்தை கூட்டி வச்சிருக்கானுங்க. அண்ணன் தம்பிக்கு பவர் குடுத்துருக்கான், தம்பி வித்துட்டு கம்பிய நீட்டிட்டான். அண்ணன் கோர்ட்ல ஸ்டே வாங்கிட்டு புதுசா நம்ப கிட்ட வந்து நீ வாங்கிக்கன்னு நிக்கிறான்… இது மாதிரி ஒவ்வொன்னுலயும் ஒரு பிரச்சினை. பத்தாததுக்கு அம்புட்டு பேரும் பி.ஜே.பில அவனைத் தெரியும், இவனைத் தெரியும் நீ ஒன்னும் பயப்படாதேங்கறான்… அதைக் கேட்டாலே பீதியாகுது”
நகரத்துக்குள்ளே தேடுவதை வேறு வழியின்றி நிறுத்திக் கொண்டு நகரத்திற்கு சற்று வெளியே தேட முடிவு செய்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களை அணுகியிருக்கிறார்கள். அவர்களோ பெங்களூருவுக்கு ரொம்ப பக்கம் என்று சொல்லி மைசூருக்கும், சிக்க திருப்பதிக்கும், ஓசூருக்கும் இடையே அல்லாட விட்டிருக்கிறார்கள் (அங்கேயுமா!?). ஒரு வழியாக பெங்களூருவுக்கு ஓரளவுக்கு நெருக்கமாக ஒரு இடத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று காட்டியிருக்கிறது.
”சரி அதையாவது வாங்கினியா இல்லையா?”
”அட நீ வேற… என்னைக் கூட்டிப் போன ஏஜெண்டு, பாஸ் இந்த பத்து ப்ளாட் மட்டும் தான் புக்காகாமெ இருக்கு. அதுவும் நீங்க ஆறு மாசமா பேசிட்டு இருக்கறதாலெ ப்ளாக் பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரம் புக் பண்ணிடுங்க அப்படின்னு சொன்னான். எனக்கு லேசா டவுட் வந்திச்சி… நம்ப சீனி இருக்கான்லே அவனை தனியா விட்டு அதே ரியல் எஸ்டேட் காரன் கிட்டே புதுசா என்கொயர் பன்றாப்ல பேசிப் பார்க்கச் சொன்னேன். அவனைக் கூட்டிப் போய், இன்னொரு பத்து ப்ளாட்டை காட்டி இது மட்டும் தான் இருக்குன்னு சொல்லிருக்கான்.. என்னோட டவுட் கன்பார்ம் ஆயிடிச்சி”
”சரி என்ன தாண்டா செய்தே?”
”அவந்தான் புத்திசாலியா.. எங்கப்புச்சி மட்டும் எனக்கு பன்னிப் பாலையா ஊட்டி வளத்தா.. நான் அடுத்து நம்ம சேகரையும், பிரகாசையும் செட்டப் பண்ணி தனித்தனியா அனுப்பிப் பார்த்தேன். கடேசில பாத்தா ங்கொய்யாலெ அவங்கிட்ட ஒரு சைட்டு கூட விக்கலை.. அதுக்கே ஏகப்பட்ட பில்டப் குடுத்து ஊர்பட்ட வெலை சொல்லிட்டு இருந்திருக்கான். போடான்னு வந்திட்டேன்”
“அப்ப வீடு கட்ற ப்ளானு?”
“அடப்போடா.. நீ வேற கடுப்பை கிளப்பிட்டு… பாடுபட்டு சேத்த காசை சும்மா வைக்க வேண்டாமேன்னு தமிழ்நாட்டுல தேடிப் பாத்தேன். சும்மா ஒரு இன்வெஸ்ட்மெண்டா இருக்கட்டுமேன்னு தான். கர்நாடகா ரெட்டி திருடன்னா இவனுக ஜெகத்திருடனுகளா இருக்கானுக. இங்க வாங்கிப் போடுங்க ஒரே வருசத்துல நீங்க கோடீசுவரன்னு சொல்லி ஒரு இடத்தை காட்டுனானுக. இந்தப்பக்கம் அம்பது கிலோமீட்டருக்கு மனுச நடமாட்டமே இல்ல அந்தப்பக்கம் அம்பது கிலோமிட்டருக்கு நடமாட்டமே இல்ல. அந்தாளு கிட்ட, ‘ஏங்க இங்க வாங்கிப் போட்டுட்டு தனியா வந்தா எனக்கே வழி தெரியாதுங்களேன்னு கேட்டேன்.. அது பிரச்சினையில்லை சார் கூகுள் மேப்ல நம்ப சைட்டு சூப்பரா தெரியுங்கறான்”
சென்னையை சுற்றியுள்ள சில பகுதிகளில் ரவுண்டு அடித்து தற்போது ஓய்ந்துள்ளான்.
நண்பனிடம் பேசியதில் ஒன்று புரிந்தது. “ஒரு இன்வெஸ்ட்மென்டாக இருக்கட்டுமே” என்று வாங்கிப் போட்ட யாருமே மேற்படி ’முதலீடு’ எனப்படுவதன் அர்த்தம் என்ன, அது எப்போது, எப்படி, எவ்வளவுக்கு வளரும் என்பதையெல்லாம் ஊடக மற்றும் ரியல் எஸ்டேட் முதலாளிகளின் ஊதிப்பெருக்கப்பட்ட மதிப்பீடுகளோடு கணக்கு போடுகின்றனர். ஏதோ நல்லது நடக்குமென்ற நம்பிக்கையும், கொஞ்சம் பணமும் இருந்தால் ஏமாறுவதற்கு இவர்களும் ஏமாற்றுவதற்கு அவர்களும் தயார்.
நண்பனிடம் பேசிவிட்டு கிளம்பினேன்.
பின்னர் வேறு வேலைகளுக்கு இடையில் நேரம் கிடைத்த போது ரியல் எஸ்டேட் முதலீட்டைப் பற்றி விவரம் தெரிந்தவர்களிடம் விசாரித்தேன்.
அமெரிக்காவை குப்புறத்தள்ளிக் கவிழ்த்துப் போட்ட ரியல் எஸ்டேட் பூதம் தற்போது இந்தியாவிலும் தலைதூக்கத் துவங்கியிருக்கிறது. கோடிக்கணக்கானவர்கள் வசிக்கும், கோடிக்கணக்கானவர்கள் தினசரி வந்து செல்லும் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் இன்றைய தேதியில் சுமார் ஐந்து லட்சம் அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்க ஆளில்லாமல் ஈயாடித்துக் கொண்டிருக்கிறார்கள். கோவாவில் புதிதாக கட்டப்பட்ட சுமார் 1.2 லட்சம் வீடுகள் வெறுமனே பூட்டிக்கிடப்பதாக மாநில முதல்வரே புலம்பியிருக்கிறார்.
தமிழகத்திற்கான ரியல் எஸ்டேட் முதலீடு வருடாந்திரம் 75% அளவுக்கு குறைந்து வருவதாக தெரிவிக்கிறது அசோசெம். 2011-12 கால கட்டத்தில் ரூ 13,600 கோடியாக இருந்த கட்டுமானத்துறை முதலீடு ஒரே ஆண்டில் தலைகீழ் வீழ்ச்சியை சந்தித்து 2012-13 காலகட்டத்தில் வெறும் ரூ 3,300 கோடியாக சுருங்கியுள்ளது. பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அவ்வப் போது பணச் சந்தையில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து நுழைப்பதானது பண மதிப்பை குறையச் செய்து பொருட்களின் விலைகளை தொடர்ச்சியாக அதிகரித்து வந்திருக்கிறது.
நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகரித்த ரூபாய் நோட்டுப் புழக்கத்தை பயன்படுத்திக் கொண்ட ரியல் எஸ்டேட் முதலைகள், அவற்றை ’முதலீடுகளாக’ ஈர்க்கத் துவங்கினர். இந்தப் போக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே இருந்தாலும், கடந்த ஏழாண்டுகளில் தீவிரத்தன்மையை அடைந்துள்ளது. இதன் விளைவாக இந்திய வங்கிகள் தனிநபர்களுக்கு வழங்கிய கடன்களில் சரிபாதி அளவு ரியல் எஸ்டேட் முதலீடாக மாறியிருக்கிறது. இந்தியாவின் முதல் பத்து வங்கிகள் வழங்கியுள்ள வீட்டுக்கடன்களின் மதிப்பு மட்டும் சுமார் 9000 கோடி டாலர் (ரூபாய் ஐந்து லட்சத்து நாற்பதாயிரம் கோடி). இது தவிர ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கார்ப்பரேட் கடன்களின் அளவும் மதிப்பும் நம்மிடம் இல்லை.
இத்தனை கோடிகளும் வெறும் காகித மதிப்பு கொண்ட நிலங்களில் பாய்ந்துள்ளது என்பதே கவனிக்க வேண்டியது. ஆக முதல் ஓரிரண்டு சுழற்சிகளில் ஊகங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் ‘முதலீட்டை’ இலக்காக கொண்டு கைமாறிய நிலங்கள் தற்போது வாங்குவார் இன்றி காத்தாடிக் கொண்டிருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் கடந்த மாதம் வெளியிட்ட தகவல் ஒன்றின் படி இந்தியாவின் ரியல் எஸ்டேட் மதிப்புகள் சுமார் 9.1 சதவீதம் குறைந்துள்ளது. 52 நாடுகளின் ரியல் எஸ்டேட் சந்தைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்ததாக ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.
நடுத்தர வர்க்க மக்களின் ஆரம்பகட்ட உற்சாகத்தை மேலும் வளர்த்தெடுக்கலாம் என்ற பேராசையில் பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டி வீட்டு மனைத் திட்டங்களைப் போட்டு வைத்துள்ள ரியல் எஸ்டேட் முதலைகள் தற்போது ஏமாந்த நுகர்வோரை விஜய், வசந்த், தமிழன் மற்றும் உள்ளூர் டி.வி சேனல்களில் டில்லி கணேசை முன்னிறுத்தி ஆள்பிடிக்க அலைந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் அளிக்கும் “ஆஃபர்களின்” பொருள் – வாங்க ஆள் வரவில்லை என்பது தான்.
இந்த எளிய உண்மை மெல்ல மெல்ல மக்களிடையே பரவி ஏற்கனவே சரிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த ரியல் எஸ்டேட் குமிழியின் மேல் குண்டூசியைப் பாய்ச்ச தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
கோவை ஸ்ரீரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் அறுபது சதவீதம் போனஸ்…!
சாதனை படைத்த தொழிலாளி வர்க்கம்..!
கோயமுத்தூர் தடாகம் ரோடு கேஎன்ஜி புதூர் பிரிவில் அமைந்துள்ளது ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்நிறுவனத்தில் சுமார் 600 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ்
புதிய ஜனநாயத் தொழிலாளர் முன்னணி சங்கத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிறுவனத்தில் 2013-14 ஆம் ஆண்டிற்கான போனசை சங்கம் பேசி முடித்துள்ளது. அதன்படி 20 சதவீதம் போனசும் 40 சதவீதம் உற்பத்திக்கான ஊக்கத் தொகையும் தொழிலாளி வர்க்கம் பேசி முடித்து வெற்றி கண்டுள்ளது. தொழிலாளர்கள் தங்களது சர்வீசுக்கு ஏற்ப குறைந்த பட்சம் 40 ஆயிரம் ரூபாயும் அதிகபட்சமாக லட்சம் ரூபாய்க்கு மேலும் பெற்றுள்ளனர். சென்ற இரண்டு ஆண்டுகளிலும் இதே போல் அறுபது சதவீதம் போனசை புஜதொமு வழிகாட்டுதலோடு தொழிலாளர்கள் பெற்றுள்ளனர்.
2010ஆம் ஆண்டில் நிறுவனத்தில் நமது சங்கம் மட்டும் ஒரே சங்கமாக இருந்த நிலையில் 76 சதவீதம் போனஸ் பெற்றது. அதன் பிறகு சிஐடியு சங்கம் முளைத்தது. புஜதொமு சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தால் அடிக்கடி சிறைக்கு போக வேண்டி வரும் புதிய ஜனநாயகம் படி படி என்கிறார்கள். மார்க்ஸ் புத்தகம் படி லெனின் புத்தகம் படி என வற்புறுத்துவார்கள் போஸ்டர் ஒட்டு பிரச்சாரத்துக்கு வா என கூப்பிட்டு நச்சரிப்பார்கள் சீரழிவுகளை சுட்டிக்காட்டி கண்டிப்பார்கள் என்று சில தொழிலாளர்களின் பின்தங்கிய உணர்வை சாதகமாக்கி அவர்களின் பின்தங்கிய உணர்வை தாங்கிப் பிடித்து அதற்கேட்ப தங்களை தகவமைத்து சிஐடியு சங்கத்தை கட்டினார்கள். (இது ஏதோ போலிகளை பழிக்க கூறும் வார்த்தைகள் அல்ல அப்பட்டமான உண்மை) அதனால்தான் 76% எனும் நிலை மாறி 60% ஆகியது.
இந்த 60% போனஸ் என்பது தமிழக வரலாற்றில் இத்துணை எம்எல்ஏ எம்பி வைத்திருக்கும் எந்த ஓட்டுக்கட்சி சங்கமும் சாதிக்கவில்லை.
இதற்கு SRI தொழிலாளர்கள் கடும் போராட்டங்களை நடத்தினார்கள். 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோவைச் சிறையையும் சேலம் சிறையையும் அலங்கரித்தனர். சங்க முன்னணியாளர்கள் பலமுறை கோவைச் சிறையில் அடைபட்டு போராடினர். அடிதடி வழக்கு முதல் அனைத்து வழக்குகளுக்கும் நீதி மன்றத்துக்கு இன்று வரை மாதந்தோறும் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த 60% போனசுக்கு பின்னால் மிகப்பெரிய தியாக வரலாறு உள்ளது. ஆனால் சிஐடியு வினர் மீது இது வரை எந்த வழக்கும் இல்லை.அத்துணை பாதுகாப்பாகவும் திறமையாகவும்(!) போலிகள் சங்கம் நடத்தி வருகின்றனர்.
தில்லைக் கோயில் போராட்டத்தில் தமிழ் மொழி உரிமைக்கான போராட்டத்தில் இன்றும் SRI தொழிலாளர்கள் 25 பேர் மீது வழக்கு உள்ளது. இதில் சிறைக்கு போன தொழிலாளர்கள் மீது SRI நிர்வாகம் உள்துறை விசாரணை நடத்தி இரண்டாம் காரணம் கோரும் நோட்டீஸ் கொடுத்துள்ளது. அது மட்டுமல்ல புஜதொமு தலைமை அறிவிக்கின்ற தமிழகம் தழுவிய அனைத்து போராட்டங்களிலும் SRI தொழிலாளர்கள் கலந்து கொண்டு போராடுகிறார்கள்.
இது போல தொழிலாளர்கள் புஜதொமு தலைமையின் வழிகாட்டுதலில் ஒற்றுமையோடு இருப்பதால்தான் இந்த பொருளாதார ரீதியான வெற்றி கிடைத்துள்ளது. “சுமக்கிறது ஆனையாம் முக்கறது நரியாம்” எனும் முதுமொழிக்கேற்ப யானை தன் முதுகில் பெரும் பாரத்தை சுமந்து கொண்டு அமைதியாக நடந்ததாம். கூடவே சுமையின்றி நடந்த நரி “ஐயோ அம்மா… தாங்க முடியலையே” என முக்கி கொண்டே நடந்த கதையாகத்தான் இங்கு சிஐடியு சங்கம் உள்ளது.
“நவீன தொழிலாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் உழைப்பை விற்பதன் மூலமே உயிர்வாழ முடியும்; மூலதனத்தை இவர்கள் உழைப்பின் மூலம் அதிகரிக்க முடிகிற வரையில் தான் இவர்களுக்கு வேலை கிடைக்கும்” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை விளக்குகிறது. இதனை SRI தொழிலாளர்கள் உணர்ந்தே உள்ளார்கள்.
உடனடி நோக்கங்களைப் பெறுவதற்காக தொழிலாளி வர்க்கத்தின் தற்காலிக நலன்களை காப்பாற்றுவதற்காக கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்கள். ஆனால் இந்த நிகழ் காலத்தின் இயக்கத்திலேயே வருங்கால இயக்கத்தையும் அவர்கள் பிரதிபலிக்கிறார்கள்; பாதுகாக்கிறார்கள்.
தங்களுக்கான போனசை சம்பளத்தை சிறப்பாக போராடி பெறுவது மட்டுமல்ல; தங்களை அடிமையாக்கி வைத்துள்ள கூலி அடிமை சமூகத்தையே இல்லாமல் செய்வதுதான் நமது சங்கத்தின் இலட்சியம்.
டி. கஜேந்திரன் (வயது 54) – ஆட்டோ ஓட்டுநர் – பெரம்பூர்: “எனக்கு ரெண்டு பொண்ணுங்க சார். யாருக்கும் டிரஸ் எடுக்கல. ஐநூறு ரூபாக்கு கூட ஓட மாட்டேங்குது. வண்டிக்கு வாடக கொடுப்பேனா, வீட்டுக்கு வாடக கொடுப்பேனா. இதுல எங்க போறது தீபாவளிக்கு?தமிழ்மணி, பெட்ரோல் பங்க் ஊழியர்: “4 பேர் கொண்ட்டாட்டம் போடனும்னா, குறைஞ்சது 400 பேர் உழைக்கனும்! ‘லைப் இஸ் பியூட்டிப்ஃபுல் பட், கன்ட்டீஷன் அப்ளை சார்!’”வந்தவாசி அரசுப் பேருந்து ஓட்டுநர் அதியமான் மற்றும் நடத்துநர் முருகன்: “தீபாவளிய உங்க கூட கொண்டாடிக்கிட்டிருக்ம்ல.. தெரியல. தொழில்தான் சார் நமக்கு முக்கியம். வருசத்துக்கு ஒரு வாட்டி வர மாட்டியானு என்னோட அப்பா அம்மா கேட்கிறாங்க. ரெண்டு நாள் கூட லீவ் இல்லாமா ஓட்டுறேன். கண்ணப் பாருங்க தண்ணியடிச்சவன் கண்ணு மாரி இருக்கும். (கண்கள் நன்றாக சிவந்து தூக்க கலக்கத்துடன் இருக்கிறது).கேரளாவைச் சேர்ந்த டீ மாஸ்டர் சந்திரன், வயது 50, கோயம்பேடு அருகில்: “கேரளாவில் தீபாவளி கிடையாது. தீபாவளியே மார்வாடிங்க கொண்டாட்டம் தான். அதப் பாத்து இங்கே ஈ அடிக்கிறாங்க.”குமாரசாமி, வயது 70, பரோடா வங்கி பாதுகாவலர், சகோதரி வீட்டில் வசிக்கிறார். 12 மணி நேர ஷிப்ட்டிற்கு ஐந்தாயிரம் சம்பளம்: “வருமானம் ஜாஸ்தியா இருந்தா தீபாவளி. கம்மியா இருந்தா கெடையாது”பேருந்துக்கு காத்திருக்கும் பூ கட்டி விற்கும் பெண்கள், மொழுகம்மாள் (50 வயது), லட்சுமி (62 வயது): இன்னாது தீபாவளியா,அதான் பாக்குறீயே ? இதக் கட்டி வித்தா தான் பொழப்பு, இதுல எங்கேர்ந்து தீபாவளி! அஞ்சு பசங்க இருக்காங்க. கலியாணம் கட்டிகிணு தொரத்தி வுட்டுட்டாங்க.விஜயகுமார்,வயது 34, சலூன் கடை தொழிலாளி, சொந்த ஊர் காரைக்குடி,திருமணமானவர்: “12 மணிக்கு ஓனர் வந்த பிறகு ஒரு இரண்டாயிரம் போனசு கிடைக்கும். அதுக்கு பிறகுதான் தீபாவளி. ஊரில் இருந்து கொண்டாடலங்கிற ஏக்கம் இல்லாமலா இருக்கும்? என்ன செய்றது?”ஆர்.வி.பெருமாள், வயது 40, தள்ளுவண்டி பழ விற்பனை, தூத்துக்குடியைச் சேர்ந்தவர்: “பழைய சரக்கு இது. நேற்று காய் இன்று பழமாகி விட்டது. தீர்ந்தவுடன் தீபாவளி கொண்டாட வீட்டுக்கு போவேன்.ராஜேஸ்வரி, வயது 45, சொந்த ஊர் கடலூர், சாலையோர இளநீர் வியாபாரி: “நைட்டுக்கு உலை வைக்க வேணாமா? காலைல சாப்பாடு பண்ணி வச்சுட்டு வந்துட்டேன். நைட்டுக்கு இத வித்தாதான் சாப்பாடு. -வீட்டுகாரர் சரியா இருந்தா நான் ஏங்க இந்த தொழிலுக்கு வரப் போறேன். எங்க அப்பாவும் தண்ணியா அடிச்சுதான் செத்துப் போனாரு. இவரும் தண்ணி அடிச்சு எங்கயாவது விழுந்து கெடப்பாரு. மூணும் பொண்ணுங்க. மூவாயிரம் டிரசுக்கு ஆச்சு. ஆயிரம் ரூபா கடனா வாங்கிதான் வாங்கிக் கொடுத்தேன். எனக்கு இருக்கது போதும். ஆனாலும் எனக்கு ஏதும் கெடையாதானு அவரு கேக்காரு. சரின்னு இன்னொரு ஆயிரம் கடனா வாங்கி லுங்கி எடுத்தாந்து கொடுத்து சாமி கும்பிட்டு தொழிலுக்கு வந்துட்டேன். இந்தப் பிறவிய எனக்கு ஏந்தான் ஆண்டவன் கொடுத்தான்னு இருக்கு (கண்ணீர் விட்டு அழுகிறார்).ராஜேந்திரன், வயது 45, பைக் மெக்கானிக்: “பசங்களுக்கு உடம்புக்கு சரியில்ல. இப்போதான் ஆசுபத்திரில இருந்து வீட்டுக்கு இட்டாந்தேன். அங்கே அவங்க மொகத்த பார்த்து பார்த்து கஷ்டமாயிருக்குமேனு, வெறுத்துப் போய்தான் கடைக்கு வந்தேன். ஆனா பசங்களுக்கு டிரெசெல்லாம் எடுத்துக் கொடுத்திட்டுதான் வந்தேன்.”தனசேகரன், சிறிய காய்கறிக் கடை, தூத்துக்குடியை சேர்ந்தவர்: “தொழில்தான் எங்களுக்கு தெய்வம். அதற்கு பிறகுதான் தீபாவளி எல்லாம்.”ஜெயலட்சுமி, வயது 38, தள்ளுவண்டியில் தக்காளி, வாழையிலை வியாபாரம்: “பொழப்பு இதுதான். தீபாவளின்னு போனா எப்படி பொழைக்கறது. இன்னைக்கு ஒரு நாள வச்சுத்தான் எங்க பொழப்பே. -(புதுத்துணி ஏன் உடுத்தவில்லை எனக் கேட்டதற்கு) ரெண்டு பொண்ணுங்கள கட்டிக் கொடுத்திருக்கேன். அவங்களுக்கு பாக்குறதா? எனக்கு பாக்குறதா?”எத்திராஜ், தையல் தொழிலாளி: “தீபாவளின்னா என்னா? …..ஆம்பளைன்னா தண்ணி…அடிக்கிறது..! …பொம்பளைன்னா…டிவி பாக்கிறது..இங்க, நான்..விதிய நெனச்சி…வேலை செய்யிறேன்..!ஆர். கோவிந்தராஜன், பர்னிச்சர் & டூல்ஸ் வாடகைக்கு விடும் கடைக்காரர்: “மூணு மணி நேரந்தான் சார் தீபாவளி. வீட்டோட சேந்தாப்ல கடைங்கிறதால தொறந்து வச்சுட்டேன். நான் பில்டிங் டூல்ஸ் கொடுத்தா ஒர்க்கர் எடுத்துட்டு போனா இன்னிக்கு கொஞ்சம் பணம் கெடைக்கும். அதான் திறந்திருக்கேன்.கே. வெரிக்கோலப்பா, ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர், குப்பை சேகரிப்பவர்: “தீபாவளிக்கு லீவு போட்டா சேர்ர குப்பைங்கள நாளைக்கு யாரு அள்றது?”குப்பை பொறுக்கும் தொழிலாளி: “தீபாவளியா..? தெருவும் சருகுமா இருக்குறவனுக்கு குடும்பமும் கெடையாது, கொண்டாட்டமும் கெடையாது!பாஸ்கர் மாரி தம்பதியினர், சாலையோரத்தில் வசிப்பவர்கள்: “ இன்னைக்கு சாப்பாடு பண்ணலை. யாருக்கும் துணி இல்லை. ஒரு வருமானமும் இல்லை. எடுப்பு சாப்பாடுதான்.”
மோடி அலை என்பது ஆளும் வர்க்க ஊடகங்களால் திட்டமிட்டே உருவாக்கப்பட்ட ஒரு மாயைதான் என்பதை சமீபத்திய உ.பி., இராஜஸ்தான், குஜராத் மாநில இடைத்தேர்தல் முடிவுகள் முகத்திலறைந்தாற்போல நிரூபித்திருக்கின்றன. உ.பி. மாநிலத்தில் பதினொரு தொகுதிகளில் ஒன்பதில் சமாஜ்வாதி கட்சியும், இராஜஸ்தானில் நான்கில் மூன்று தொகுதிகளில் காங்கிரசும், குஜராத்தில் ஒன்பதில் மூன்று தொகுதிகளில் காங்கிரசும் வெற்றி பெற்றிருக்கின்றன.
உ.பி மாநிலத்திலுள்ள கோராக்பூரில் கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்து மதவெறியர்களின் பேரணியில் கலந்து கொண்ட நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் (கோப்புப் படம்)
பா.ஜ.க. நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் உ.பி யில் 10%, ராஜஸ்தானில் 11%, குஜராத்தில் 11.5% வாக்குகள் குறைந்திருக்கின்றன. மோடியின் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரோகானியா தொகுதியில், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் இரு மடங்கு வாக்குகளை சமாஜ்வாதி பெற்றிருக்கிறது. அதேபோல, மோடி வெற்றி பெற்ற குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் பா.ஜ.க.வின் வாக்குகள் கணிசமாக வீழ்ச்சி அடைந்திருக்கின்றன.
இது மட்டுமல்ல, கடந்த மே மாதம் மோடி பதவியேற்றவுடனேயே உத்தர்கண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் காங்கிரசு வெற்றி பெற்றிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பிகாரில் நடைபெற்ற இரண்டாவது சுற்று இடைத்தேர்தலில் 10-இல் 6 தொகுதிகளை லாலு-நிதிஷ் கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு முற்றுரிமை கொண்டாடிய மோடியும் அமித் ஷாவும் அடுக்கடுக்கான இந்த தோல்விகள் ஏன் என்பதற்குப் பதிலளிக்கவில்லை.
உ.பி.யில் இந்து மதவெறியைத் தூண்டுவதன் மூலம் மட்டும்தான் ஓட்டுக்களை அறுவடை செய்ய முடியும் என்ற திட்டத்தின் அடிப்படையில்தான், மதவெறிப் பேச்சுக்குப் புகழ் பெற்ற தாக்கூர் சாதித் தலைவனான யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அமித் ஷாவினால் களமிறக்கப்பட்டார். ஆதித்யநாத் தாக்கூர் சாதித்தலைவன் என்பதால், பார்ப்பன – தாக்கூர் சாதிகளுக்கு இடையிலான முரண்பாடு காரணமாக, பத்து சதவீதம் பார்ப்பனர்களின் வாக்குகளை இழந்து விடுவோம் என்று பா.ஜ.க. அஞ்சியது. எனவே, முஸ்லிம்களுக்கு எதிராகப் பார்ப்பனர்களின் சாதி உணர்வைத் தூண்டி விட்டு அவர்களுக்கு “இந்து மத உணர்வை” வரவழைத்தது. முஸ்லிம் இளைஞர்கள் பிராமணப் பெண்களைத் திட்டமிட்டே காதலிப்பதாகவும், புரோகித வர்க்கத்தை அழித்துவிட்டால், இந்து மதத்தை வேரோடு அழித்துவிட முடியும் என்ற திட்டத்துடன்தான் முஸ்லிம் அமைப்புகளால் இந்த லவ் ஜிகாத் நடத்தப்படுகிறது என்றும் “இந்து ஜன் ஜாக்ருதி சமிதி” என்ற அமைப்பு பிரச்சாரம் செய்தது. எவ்வளவு கீழ்த்தரமான கிரிமினல் முறைகளைக் கையாள்வதற்கும் பாரதிய ஜனதா தயங்காது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.
இன்னொருபுறம் பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில் போட்டியிடாததைப் பயன்படுத்திக் கொண்டு, அதன் வாக்குகளைத் தன் பக்கம் இழுப்பதற்கும், மாயாவதியை ஆதரிக்காத தலித் உட்சாதியினரைக் கவர்வதற்கும் பாரதிய ஜனதா முயற்சி மேற்கொண்டது. அனைத்துக்கும் மேலாக, “இந்து சமூகத்தைப் பிளவுபடுத்தும் சதியே இட ஒதுக்கீடு” என்று கூறி இட ஒதுக்கீடு கொள்கையைத் தீவிரமாக எதிர்த்து வந்த ஆர்.எஸ்.எஸ்.இன் தலைவர் மோகன் பகவத், உ.பி.க்குச் சென்று சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைத் தாங்கள் ஆதரிப்பதாக வலிந்து அறிவித்தார். இத்தனை தகிடுதத்தங்களுக்குப் பிறகும் உ.பி.யில் பாரதிய ஜனதாவால் வெற்றி பெற முடியவில்லை.
முஸ்லீம்களுக்கு எதிராகப் பொய்யும் புனைசுருட்டும் கலந்து ஆர்.எஸ்.எஸ் கும்பலால் பிரச்சாரம் செய்யப்படும் “லவ் ஜிஹாத்” என்ற இந்து மதவெறித் திட்டத்தின் ஒரு பகுதியாக, உ.பி. மாநிலத்தின் முசாஃபர் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தும் பஜ்ரங் தள் கும்பல்.
உ.பி. மாநிலத் தோல்வி மட்டுமல்ல, ஒட்டு மொத்தமாக கடந்த 3 இடைத்தேர்தல்களிலும் வெவ்வேறு வட இந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா அடைந்திருக்கும் தோல்விகள் இரண்டு விசயங்களை நிரூபிக்கின்றன. முதலாவதாக, மோடியின் வளர்ச்சிப் பாதை பற்றிய ஊதி உப்பவைக்கப்பட்ட பிம்பத்திற்கு நாடாளுமன்றத் தேர்தலோடு காற்று இறங்கிவிட்டது. இரண்டாவதாக, ரயில் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கை அடிப்படையிலான நடவடிக்கைகள், “நல்ல காலம் பொறக்குது” என்று உடுக்கடித்து வந்த மோடியின் குடுகுடுப்பைக்காரன் வேசத்தையும் கலைத்துவிட்டன. எனவே, தனது மதவெறி முகத்தை மறைத்துக் கொண்டு நல்லாட்சி என்று பேசி ஓட்டு வாங்குவது இயலாத காரியம் என்று ஆகிவிட்டதோடு, கூச்சநாச்சமற்ற கீழ்த்தரமான முறைகளில் மதவெறியைப் பயன்படுத்தித்தான் தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்பதை பா.ஜ.க. ஒப்புக் கொண்டிருப்பதையும் அதன் இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் நிரூபிக்கின்றன.
அதே நேரத்தில், மதவெறியையும்கூட வயாக்ராவைப் போலப் பயன்படுத்தி, தேர்தல் நேரத்திலெல்லாம் இந்து எழுச்சியை உருவாக்கிக் கொள்ள முடியாது என்பதையும் இத்தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன. புறக்கணித்து ஒதுக்கப்பட்டு பரிதாபத்துக்குரிய கிழவனைப் போல, 22 ஆண்டுகளாக கோயிலை எதிர்பார்த்து அயோத்தியில் காத்து நிற்கும் “குழந்தை இராமன்” இதற்கொரு சாட்சியமாக நிற்கிறார்.
இந்த இடைத்தேர்தல் தோல்விகளுக்கு, மோடியின் பிம்பத்தைக் காப்பாற்றுவதில் முனைந்து நிற்கும் கார்ப்பரேட் ஊடகங்களும், துக்ளக் உள்ளிட்ட பார்ப்பன பத்திரிகைகளும் வேறொரு கோணத்தில் பொழிப்புரை எழுதுகின்றன. நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கு மோடி தீவிரமாக முயன்று கொண்டிருக்கும்போது, மோடிக்குத் தெரியாமலும் மோடிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதத்திலும், உதிரியான சில இந்து அமைப்புகள் மதவெறி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மோடியின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் குலைத்து தோல்வியைத் தேடித்தந்து விட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
அதாவது, மதவெறியைத் தூண்டுவதற்கு ஆதித்யநாத்தை இறக்கிவிட்டது மோடிக்கே தெரியாது போலவும், அதற்கு அமித் ஷா மட்டுமே பொறுப்பு போலவும் சித்தரித்து, அமித் ஷாவின் ஞானகுருவான மோடியைத் தோல்விக்கான பொறுப்பிலிருந்து விடுவிக்கின்றனர். ஊழல்களுக்கு சசிகலாவைப் பொறுப்பாக்கிவிட்டு, ஜெயலலிதாவைப் பரிதாபத்துக்குரிய பிணையக்கைதியாகச் சித்தரிக்கும் அதே பார்ப்பனக் குயுக்திதான் இதுவும்.
தோல்விக்கான காரணம் “தேவையில்லாத” மதவெறி நடவடிக்கைகள் தானேயன்றி, ரயில் கட்டண உயர்வு, டீசல் உயர்வு போன்ற “தேவையான” மறுகாலனியாக்க நடவடிக்கைகள் அல்ல என்று கார்ப்பரேட் ஊடகங்கள் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற கதையாக வலிந்து ஆஜராகி விளக்கமளிக்கின்றன. எனவே, மக்கள் அளித்திருக்கும் பேராதரவுக்கு மதிப்பளித்து பா.ஜ.க. வினர் மதவெறியைக் கைவிட வேண்டும் அல்லது மோடி அத்தகைய சக்திகளை அடக்கி வைக்க வேண்டும் என்று இவைகள் பரிந்துரைக்கின்றனர்.
இடைத்தேர்தல் தோல்வி காரணமாக சங்கப் பரிவாரம் மதவெறியைக் கைவிட்டு விடுமா? அல்லது முதலாளித்துவ ஊடகங்கள் சிபாரிசு செய்வதைப் போல வளர்ச்சியைச் சாதிக்கும் பொருட்டு மோடி அவர்களை தற்காலிகமாகவேனும் “ஸ்விட்ச் ஆஃப்” செய்து வைப்பாரா? இரண்டும் நடக்கப் போவதில்லை. ஏனென்றால், இந்து மதவெறி என்பது சங்கப் பரிவாரத்தின் அடிப்படைக் கொள்கையாக இருக்கின்ற அதே நேரத்தில், மோடி அரசின் தனியார்மய, தாராளமயத் தாக்குதல்கள் தோற்றுவிக்கின்ற வெகுசனக் கோபத்தைத் திசைதிருப்பி இந்த அரசைப் பாதுகாக்கும் கவசமாகவும் இருக்கின்றன.
தலைநகர் டெல்லியிலுள்ள பிரகதி திடலில் நடந்துவந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கண்காட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இந்து மதவெறிக் கும்பல்.
“பத்தாண்டுகளுக்கு மதக்கலவரங்களை நிறுத்தி வையுங்கள்” என்று சுதந்திர தின உரையில் விடுக்கப்பட்ட கோரிக்கையாக இருக்கட்டும், “இந்திய முஸ்லீம்கள் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கக் கூடியவர்கள்” என்ற மோடியின் பாராட்டாக இருக்கட்டும், இவை மத நல்லிணக்கத்தை விரும்புகின்ற ஒரு இலட்சியவாதியின் குரல் போல ஒலித்தாலும், அந்தச் சொற்களின் பொருள் அதுவல்ல. முஸ்லிம் வாக்குகளின் தயவில்லாமல், இந்து வாக்குகளின் துணையோடு தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்திருப்பவரான, “ஹிந்து ஹ்ருதய சாம்ராட்” மோடி, வெற்றி அளிக்கக் கூடிய ஆணவம் சிறிதும் இல்லாமல், மதவெறியைத் தமது சுபாவமாகக் கொண்டிருக்கும் முஸ்லிம்களைத் திருந்தி வாழுமாறு பெருந்தன்மையாக கேட்டுக் கொள்கிறார்” என்பதுதான் மோடி உச்சரித்திருக்கும் சொற்களின் பொருள். “முஸ்லிம்கள் தங்களது நாட்டுப்பற்றுக்கு இந்து வெறியர்களிடம் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்பது அதில் தொக்கி நிற்கும் பொருள். 2002 இனப்படுகொலை என்பது மோடியின் கைமீறி நடந்து விட்ட ஒரு விபத்து, இப்போது செங்கோட்டையில் நின்று பேசும் மோடிதான் உண்மையான மோடி என்ற மயக்கத்தை பா.ஜ.க. எதிர்ப்பாளர்களிடம் விதைப்பதற்காகவும், அமெரிக்காவுக்குப்புனித யாத்திரை செல்லும் தருணத்தில் அதற்குப் பொருத்தமான சர்வதேச அரங்குக்குப் பொருத்தமான, பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவும் திட்டமிட்டே அரங்கேற்றப்படும் நாடகத்தின் வசனங்களே இவை.
மதவெறி என்ற துருப்புச் சீட்டைப் பொருத்தவரை, குறிப்பிட்ட ஒரு தேர்தலில் அதனைப் பயன்படுத்துவது வேண்டுமா, வேண்டாமா என்று மதிப்பிடுவதில் பா.ஜ.க. தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். அவை செயல் உத்திகள் தொடர்பான கருத்து வேற்றுமைகள் அல்லது பதவி நோக்கத்திலான கோஷ்டித் தகராறுகள் மட்டுமே. பா.ஜ.க. விற்குள் நிலவும் இத்தகைய முரண்பாடுகளைக் காட்டித்தான் வாஜ்பாயி மிதவாதி, அத்வானி தீவிரவாதி என்ற மயக்கம் மக்கள் மத்தியில் திட்டமிட்டே தோற்றுவிக்கப்பட்டது. பதவி நாற்காலிகளில் அமரும் நபர்களுக்கு, மன்னனுக்கு வழங்கப்படும் நடுநிலைச் செங்கோலைப் போல, மிதவாத முகமூடியை பார்ப்பனப் பாசிசக் கும்பலே அணிவித்து விடுகிறது. இன்னொரு புறம், பிரதமர் பதவி எனும் விக்கிரமாதித்தன் நாற்காலி (அல்லது நமது அரசியல் சட்டம்) எப்பேர்ப்பட்ட தீவிரவாதியையும் மிதவாதியாக்கி விடும் என்கிறார்கள் முதலாளித்துவ அறிவுத்துறையினர்.
ஆனால், மிதவாத முகமூடி அணிந்த இந்த நபர்கள் எப்போதும் இந்துத்துவ தீவிரவாதத்தை நோக்கிச் செல்வதற்கான படிக்கட்டாகவே இருந்து வருகின்றனர். வாஜ்பாயி ஆட்சியில் குறைந்தபட்ச செயல்திட்டம் என்று கூட்டணிக் கட்சிகள் விதித்த “கட்டுப்பாடு”, அணுகுண்டு வெடிப்பையோ, கார்கில் போரையோ, ஸ்டேன்ஸ் பாதிரியார் எரிப்பையோ, குஜராத் படுகொலையையோ, பாடத்திட்ட மாற்றத்தையோ தடுத்து நிறுத்தி விடவில்லை. பாரதிய ஜனதாவின் ஆட்சிக்காலம் ஒவ்வொன்றிலும் அரசியலும் சமூகமும் மென்மேலும் இந்துத்துவமயமாக்கப் படுவதுதான் நடந்தேறியிருக்கிறது. இப்போதும் அதுதான் நடந்து வருகிறது.
இந்தித் திணிப்பு, சமஸ்கிருத ஆதிக்கம், குரு உத்சவ், பாடத்திட்ட மாற்றம், அதிகார வர்க்கத்தில் சங்கப் பரிவாரத்தினரைத் திணிப்பது என்பன போன்ற காவிமயமாக்க நடவடிக்கைகள் மேலிருந்து அமல்படுத்தப்படுகின்றன. இன்னொருபுறம், பல்வேறு பெயர்களில் நூற்றுக்கணக்கில் உருவாக்கப்படும் இந்துவெறி அமைப்புகள் பசுவதைத் தடுப்பு, விநாயகர் ஊர்வலம் தொடங்கி அன்றாடப் பிரச்சினைகள் பலவற்றிலும் புகுந்து அதன் வழியே மதவெறியைத் தூண்டுகின்றன. அதிகாரத்தில் இந்து பாசிசம் அமர்ந்திருப்பதால், நேரடி வன்முறை தேவைப்படாமல், வன்முறை குறித்த அச்சுறுத்தல் மூலமாகவே தங்களது அரசியல் – சமூக மேலாதிக்கத்தை இந்து வெறியர்கள் நிலைநாட்டிக் கொள்ள முடிகிறது.
தமிழகத்தில் ஊருக்குப் பத்து விநாயகர் சிலைகள் என்று தொடங்கி இப்போது தெருவுக்குப் பத்து என்ற அளவுக்கு பாசிஸ்டுகளின் “மத உரிமை” வளர்ந்து விட்டது. இவ்வாறு ஒருமுறை நிலைநாட்டப்படும் பாசிசத்தின் உரிமை, மிக விரைவிலேயே அதன் அதிகாரமாக சமூகரீதியில் நிலைபெற்று விடுகிறது. “இந்து பகுதிகளில் முஸ்லிம்கள் சொத்து வாங்கக் கூடாது, குடியிருக்க கூடாது, இந்து – ஜைன பண்டிகைகளின் போது கறிக்கடை திறக்கக் கூடாது” என்பன போன்ற பாசிச அதிகாரங்கள், அனைவரும் கட்டுப்பட வேண்டிய தொன்று தொட்டு நிலவும் சமூக நியதிகள் போல மாற்றப்பட்டு விடுகின்றன.
தமிழகத்தில் விஷக்கிருமி போலப் பரவி வரும் இந்து மதவெறிக் கும்பலின் விநாயகர் ஊர்வலம்.
நவராத்திரி பண்டிகையின் போது நடைபெறும் கர்பா நடன நிகழ்ச்சிகளில் புகுந்து லவ் ஜிகாத் மூலம் இந்து பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் கவர்ந்து விடுவதால், இந்த முறை எங்கேயும் முஸ்லிம்களை அனுமதிக்கக் கூடாது என்ற புதிய “பத்வா”, இந்து மதவெறியர்களால் இப்போது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய மிரட்டல்களால் பயந்து போன முஸ்லிம்கள் சிலர் விநாயகர் ஊர்வலம் என்ற காலித்தனத்துக்கு மரியாதை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அடுத்து அவ்வாறு மரியாதை செய்யாத முஸ்லிம்கள் தேச விரோதிகள் என்று மிரட்டப்படுவார்கள்.
இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. ஆகவே, பாசிசத்தின் தேர்தல் தோல்விகளல்ல, மேற்கூறிய வெற்றிகளே நம் கவனத்துக்குரியவை. ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது. சாத்தியமான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, பார்ப்பன பாசிசக் கும்பல் அதனை முன்தள்ளுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
தற்போதைய இடைத்தேர்தல் தோல்வியை வைத்தும், நாடாளுமன்றத் தேர்தலில் வளர்ச்சி, நல்லாட்சி ஆகிய முழக்கங்களை வைத்துத்தான் மோடி வெற்றி பெற முடிந்தது என்பதை வைத்தும், இந்திய சமூகம் தன் இயல்பில் மத நல்லிணக்கத்தையும் பன்மைத்துவத்தையும் அங்கீகரிப்பதாக உள்ளதால்தான், மதவெறியர்கள் வேறு வழியின்றி பின்வாங்க வேண்டியிருக்கிறது என்ற மதிப்பீட்டுக்குச் சிலர் வருகின்றனர். இது இந்துத்துவத்துக்கு எதிரான அரசியல் மெத்தனத்தைத் தோற்றுவிக்கின்ற தவறான கருத்து. எதார்த்த நிலையை நாம் வேறு விதமாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
பொதுவிலேயே மக்கள் சமூக கொந்தளிப்பையும், பதற்றத்தையும் விரும்புவதில்லை. கடந்த 25 ஆண்டுகளில் பாரதிய ஜனதாவின் பார்ப்பன பாசிச அரசியல் வட இந்தியாவில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதோ அந்த அளவுக்கு அம்பலப்பட்டும் இருக்கிறது. லவ் ஜிகாத் என்பன போன்ற மிகைப்படுத்தப்பட்ட அவதூறுகள் தற்காலிக தலைப்புச் செய்திகளாக ஒரு பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதன் தாக்கம் நீடித்திருப்பதில்லை. அவை தேர்தல் துருப்புச் சீட்டுகள் என்பதை மக்கள் தம் அனுபவத்தில் புரிந்து கொண்டு விடுகிறார்கள்.
மேலும், சிறுபான்மை எதிர்ப்பை முதன்மைப்படுத்தி, சாதிகள் கடந்த இந்து உணர்வை உருவாக்க சங்கப் பரிவாரம் எவ்வளவுதான் முயன்றாலும், சமூக வாழ்க்கையில் நிலவும் சாதி ஆதிக்கமும், சாதிகளுக்கிடையிலான பாரம்பரிய முரண்பாடுகளும் இந்து உணர்வை அடியறுத்து விடுகின்றன. இந்து மத உணர்வை உருவாக்கி வாக்குகளை அறுவடை செய்ய இயலாத நிலையில், குறுகிய காலப் பயிராக, ஜாட் சாதி உணர்வை முஸ்லிம் எதிர்ப்பு இந்து வெறியாக மாற்றி, வாக்குகளை அறுவடை செய்யும் குறுக்கு வழி முசாபர்பூரில் அமித் ஷாவால் பயன்படுத்தப் பட்டது. அந்த தந்திரம் இந்த இடைத்தேர்தலில் செல்லுபடியாகவில்லை என்று தெரிந்து விட்டதால், இனி புதியதொரு உத்தியை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்.
சாதி அடிப்படையில் திரட்டப்பட்ட பிழைப்புவாதக் கட்சிகள் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடித்துவிட்டன என்பதில் நாம் மகிழ்வதற்கு ஒன்றுமில்லை. பார்ப்பன பாசிசம் சாதி என்ற நிறுவனத்தையும் உணர்வையும் பராமரிக்கவே விரும்புகிறது. ஏனென்றால், சாதிக்கட்சிகள் மட்டுமல்ல, சாதி உணர்வு என்பதும் தன் இயல்பிலேயே நெறியற்றது. “கமண்டலை மண்டல் வென்றுவிடும்” என்ற 90-களின் சவடால்கள் 90-களின் இறுதியிலேயே வெளுத்துப்போனதையும், தி.மு.க. முதல் பகுஜன் சமாஜ் வரையிலான கட்சிகள் பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்ததையும் நாம் ஏற்கெனவே பார்த்து விட்டோம். பார்ப்பன – பனியா கட்சி என்று ஒதுக்கப்பட்டிருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் பின்னால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் திரண்டு நிற்பதையும், கலவரத்தில் களமிறங்குவதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பார்ப்பன பாசிசம் இப்போது இருப்பதை விடச் சாதகமான சூழலில் முன் எப்போதும் இருந்ததில்லை. காங்கிரசு படுதோல்வியடைந்திருப்பது மட்டுமல்ல, மாநிலக் கட்சிகள் முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான அனைவரும் மக்களிடம் மதிப்பிழந்திருக்கின்றனர். ஊழல் வழக்குகளில் சிக்காதவரில்லை. கோஷ்டிப் பூசலால் பிளவுபடாத கட்சியும் இல்லை.
சமீபத்திய இடைத்தேர்தலில், மேற்கு வங்கத்தில் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மார்க்சிஸ்டு கட்சி டெபாசிட்டை இழந்திருக்கிறது. சாரதா சிட்பண்டு ஊழலில் சிக்கியிருக்கும் மம்தாவுக்கு மாற்றாக பா.ஜ.க. மிகவேகமாக மே.வங்கத்தில் பரவி வருகிறது. சாரதா சிட்பண்டு ஊழல் பணமும் மாமிச ஏற்றுமதிப் பணமும் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாகக் கூறி வங்கத்தில் இந்து வெறியைப் பரப்புகிறது பாரதிய ஜனதா. கேரளத்தில் அயன்காளி பிறந்தநாள் விழாவுக்கு மோடியைச் சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்கிறது புலையர் மகாசபா. தமிழகத்தில் இந்தித் திணிப்பு மட்டுமின்றி, ஈழப்பிரச்சினை, மீனவர் பிரச்சினை முதலானவற்றில் காங்கிரசை விடக் கொடிய நச்சுப்பாம்பே மோடி அரசு என்று தெரிந்த பின்னரும், பா.ஜ.க.வை அம்பலப்படுத்தி போராட்டம் நடத்தும் துணிவற்ற கோழைகளாக மட்டுமின்றி ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு கொடுத்துப் பல்லிளிக்கும் வீடணர்களாகவும் பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் கூச்சமே இல்லாமல் தம்மை இனம் காட்டிக் கொண்டிருக்கின்றன.
பார்ப்பன எதிர்ப்பு, திராவிடம், சோசலிசம் போன்ற கொள்கைகளைப் பேசிய கட்சிகள் மக்கள் மத்தியில் மதிப்பிழந்திருப்பது மட்டுமல்ல, கொள்கை என்று பேசுவதே மதிக்கத்தக்கதல்ல என்று கருதும் அரசியலற்ற போக்கும், மறுகாலனியாக்க கொள்கைகளை முன்னேற்றம் என்று மயங்கும் போக்கும் கடந்த 20 ஆண்டுகளில் இளைய தலைமுறையினர் மத்தியில் பரவியிருக்கிறது. இந்த போக்கினை அறுவடை செய்யும் விதத்தில், மோடி ஒரு அரசியல்வாதி இல்லையென்றும், வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்ட செயல்வீரன் என்றும் சித்தரிப்பதில் வெற்றி பெற்ற ஆர்.எஸ்.எஸ். கும்பல், இப்போது மோடி ரசிகர்களை இந்துத்துவத்துக்கு “மதமாற்றம்” செய்து வருகிறது. நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சாகாக்கள் அதிகரித்து வருகின்றன.
இன்னொருபுறம், மறுகாலனியாக்கத்தால் திணிக்கப்படும் நகரமயமாக்கம், வேர்ப்பிடிப்பு இல்லாமல் மிதக்கும் உதிரி வர்க்கங்களுக்கு, இந்து அடையாளத்தை வழங்கி, தன் பின்னால் திரட்டிக் கொள்வதற்கான வாய்ப்பையும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு கொள்ளை நோய் போலத் திடீரென்று பரவிய விநாயகர் சிலைகளும், அவற்றைச் சுற்றித் திரட்டப்பட்ட கூட்டமும் இதனை மெப்பிக்கின்றன. பொறுக்கித்தின்னும் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த எல்லாவிதமான பிழைப்புவாதிகளும் கிரிமினல்களும், ஒரு குங்குமத் தீற்றை நெற்றியில் நெடுக்காக இழுத்து விட்டுக் கொண்டு களத்தில் குதித்திருக்கிறார்கள்.
காற்றில் பரவும் துர்நாற்றத்தைப் போல அரசியலிலும் சமூகத்திலும் வெகு வேகமாகப் பரவி வருகிறது இந்துத்துவம். தடுத்து நிறுத்தாமல் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும், சமூகத்தின் நாசி மெல்ல மெல்ல இந்தத் துர்நாற்றத்தை முகம் சுளிக்காமல் சுவாசிக்கப் பழகுகிறது. உயிருடன் கொளுத்தப்பட்ட முஸ்லிம்களின் பிணவாடையைச் சுவாசிப்பதற்குக் கூட, குஜராத் இந்து சமூகத்தின் நாசி இப்படித்தான் மெல்ல மெல்லப் பழகியிருக்கக் கூடும்.