Wednesday, May 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 633

குடந்தை வழக்கில் மக்கள் எழுச்சியே நீதி பெறும் வழி !

1

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி நெருப்புக்குத் தம் பிள்ளைகளைச் சாகக் கொடுத்த பெற்றோரின் மனம் இன்னொருமுறை வெந்து துடிக்கும்படி வந்திருக்கிறது நீதிமன்றத் தீர்ப்பு. மாவட்டக் கல்வி அதிகாரி முதல் தொடக்கக் கல்வி அதிகாரி வரையிலான அதிகாரிகள், பள்ளி ஆசிரியைகள், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 11 பேர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். பள்ளி நிறுவனருக்கு மட்டும் ஆயுள் தண்டனை, நிறுவனரின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை, சத்துணவு அமைப்பாளர், சத்துணவு உதவியாளர், கல்வித்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள், கட்டிடப் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் என்று தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் பெற்றோர்
தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் பெற்றோர் (படம் : நன்றி http://www.justknow.in/Tiruvarur/News/kudanthaipallivazhakkilthiirppu/ )

அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகளை ஒரே கட்டிடத்தில் நடத்த அனுமதி கொடுத்ததும், தப்பிக்க வழியில்லாத ஆபத்தான அந்தக் கூரைக் கட்டிடத்திற்குள் பன்றிகளைப் போல பிள்ளைகளை அடைத்து வைத்திருந்ததும் இலஞ்சப் பேகளான அதிகாரிகளின் உதவியோடுதான் நடந்திருக்கிறது என்பது உலகுக்கே தெரியும். அவ்வாறிருக்க கீழ்நிலை ஊழியர்களைத் தண்டித்திருக்கும் நீதிமன்றம், அதிகாரிகளை விடுவித்திருக்கிறது. எனவே, இத்தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யவேண்டுமென்று கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கோரியிருக்கின்றனர்.

இந்தக் கோரிக்கை, பெற்றோரின் கோபத்திலிருந்தும் ஆதங்கத்திலிருந்தும் பிறக்கிறது. எனினும், மூலமுதல் குற்றவாளியும், குற்றவாளிகளின் காவலனும் அரசுதான் எனும்போது, நீதி வேண்டி அரசிடம் மன்றாடுவதில் என்ன பயன் இருக்கிறது? 2004-ல் நடந்த இந்தப் படுகொலை 2007-ல்தான் நீதிமன்றத்திற்கே வந்திருக்கிறது. பிறகு குற்றம் சாட்டப்பட்ட 24 பேரும் தங்களை இக்குற்றத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென்று மனுச்செய்திருக்கின்றனர். “முடியாது” என்று கூறுவதற்கு நீதிமன்றம் 3 ஆண்டுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. பிறகு 2012-ல்தான் குற்றச்சாட்டு பதியப்பட்டிருக்கிறது. 2014 வரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கின்றனர். தி.மு.க. அரசு 3 அதிகாரிகளை குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறது. கூடுதல் இழப்பீடு கோரிய பெற்றோரின் மனுவை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று, “கூடுதல் இழப்பீடு தரமுடியாது” என்று நெஞ்சில் ஈரமின்றி வாதாடுகிறது ஜெ அரசு.

ஆகவே, தற்போதைய தீர்ப்பு மட்டுமின்றி, கடந்த பத்து ஆண்டுகளில் அதிகாரிகள், போலீசு, ஆளும் கட்சிகள், நீதிபதிகள் ஆகிய அனைவருமே குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வேலையைத்தான் செய்திருக்கின்றனர். தப்பிக்க வழி தெரியாமல், தீயில் வெந்து கருகிய அந்த 94 குழந்தைகளின் துடிப்பையோ, பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரின் உள்ளக் குமுறலையோ அவர்கள் கடுகளவும் பொருட்படுத்தவில்லை. “சட்டம் சரியாக இருக்கிறது, அமல் படுத்துபவர்கள்தான் சரியில்லை” என்ற கருத்து ஒவ்வொரு அநீதி நிகழும்போதும் நமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால், கும்பகோணம் வழக்கு விசாரணையின் காலதாமதத்தில் தொடங்கி, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது வரையிலான அனைத்தும் சட்டப்படிதான் நடந்திருக்கின்றன. எந்தத் தனியார் கல்விக் கொள்ளையின் ரத்த சாட்சியமாக 94 குழந்தைகள் வெந்து மடிந்தார்களோ, அதே தனியார் கல்விக் கொள்ளை அரசு ஆதரவுடன், நீதித்துறை அங்கீகாரத்துடன் இன்று கொடி கட்டிப் பறக்கிறது.

“ஏமாற்றம் பழகிப்போச்சு, ஆனா விடமாட்டோம்” என்கிறார் இந்த தீர்ப்பைக் கேட்டுக் கதறியழுத ஒரு தாய். அது இந்த தீர்ப்புக்கெதிரான குரல் மட்டுமல்ல; வாழ்வின் எல்லாத் திசைகளிலும் இந்த அரசியல் சமூக அமைப்பினால் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் உள்ளக் குமுறல்! இம்மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வல்லது மேல்முறையீடல்ல, இவ்வரசமைப்புக்கு எதிரானதோர் மக்கள் எழுச்சி!
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

காசாவின் கண்ணீர் – ஆவணப்படம் – வீடியோ !

16

பாலஸ்தீனத்தின் காசா பகுதியின் மீது மீண்டும் மீண்டும் பயங்கரவாத தாக்குதலைத் தொடுத்து இன அழிப்பு போரை நடத்திவருகிறது இசுரேல் யூத இனவெறி அரசு. கடந்த ஜூலை 8-ம் தேதி தொடங்கிய தாக்குதலில் இதுவரை 2,100-க்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். கொல்லப்பட்டவர்களில், நானூற்றுக்கும் கூடுதலான குழந்தைகள் உள்ளிட்டு, 80 சதவீதத்திற்கும் (1,700க்கும்) மேற்பட்டோர் அப்பாவி பொதுமக்களாவர்.

காசாவின் உண்மை நிலை பற்றி அறியத்தருகிறது காசாவின் அழுகுரல் (Tears of Gaza) எனும் ஆவணப்படம்.

காசாவின் அழுகுரல்
காசாவின் அழுகுரல்

2008-09-ல் 22 நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட தாக்குதலில் 1,387 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில் 257 குழந்தைகளை உள்ளிட்டு 773 பேர் அப்பாவி பொதுமக்கள்.

2008-ம் ஆண்டு காசாவின் மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதல் குறித்து அறிந்த வைபக் லாக்பெர்க் (Vibeke Løkkeberg) என்ற நார்வே நாட்டை சேர்ந்த பெண் இயக்குனர் நடப்பவற்றை உலகுக்கு அறியத்தர காசா பகுதிக்கு செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் அச்சமயத்தில் சர்வதேச ஊடகவியலாளர்கள் காசா பகுதிக்குள் செல்ல இஸ்ரேல் தடை விதித்திருந்தது. பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு ஒளிப்பதிவாளருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர் எடுத்த காட்சிகளை பெற்றுத் தொகுத்து இப்படத்தை இயக்கியுள்ளார் லாக்பெர்க்.

இப்படம் தன் மீதான திட்டமிட்ட அவதூறு என்றும் பாலஸ்தீன சார்பு பிரச்சாரப் படம் என்றும் இஸ்ரேல் முத்திரை குத்தியுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு போரினால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களின் பார்வையில் இருந்து துவங்கும் இப்படம் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நேரடி காட்சிகளாக பதிவு செய்துள்ளது. இதன் உண்மையும், நம்பகத்தன்மையும் அதற்கு பல சர்வதேச விருதுகளை ஈட்டித் தந்துள்ளது. ஒருவேளை இசுரேலை அடக்க விரும்பாத ‘சர்வதேச நாடுகள்’ இப்படி விருது கொடுத்து காட்டிக் கொள்கின்றதோ? எனினும் அதே வல்லரசு உலகை கேள்வி எழுப்ப இப்படம் கண்ணீருடன் உங்களை தொட்டு எழுப்பும்.

காசாவின் அழுகுரல்ஆவணப்படத்தில் பேசும் சிறுவர்கள், இசுரேலின் ஆக்கிரமிப்புப் போரினால் தொடர்ந்து அச்சுறுத்தப்படும சூழலில் வளர்ந்தவர்கள்.

14 வயதான அமிரா படித்து பெரியவளாகி வழக்குரைஞர் ஆக விரும்புவதாகவும், அதன் மூலம் இஸ்ரேலிய கொடுங்கோலர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுக்கப் போவதாகவும் கூறுகிறாள்.

12 வயதான யாஹ்யா டாக்டராக வேண்டுமென கனவு காண்கிறான், அதன் மூலம் இஸ்ரேலிய தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்யமுடியும் என்கிறான்.

11 வயதான ரஸ்மியா இங்கு வாழ்க்கை மிகக் கடினமாகத்தானிருக்கிறது என்று வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் பேசுகிறாள். இந்தக் குழந்தைகள் அனைவரும் போராட்டச் சூழலில் இழப்புகளும், துயரங்களும் சூழ வாழ்பவர்கள். அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்!

விசில் அடிப்பது போன்ற சத்தத்தை அடுத்து ஒரு ஏவுகணை ஒரு அடுக்குமாடி குடியிருப்பை  தாக்குகிறது. பாஸ்பரஸ் குண்டினால் ஒரு நிமிடத்தில் அக்கட்டிடம் எரிந்து சாம்பலாகிறது.

சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ள பாஸ்பரஸ் கொத்து குண்டுகள் இலக்கிற்கு அருகில் வந்தபின் வெடித்து சிதறுவதால் அப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிகிறது.

மற்றொரு தாக்குதலில் காதை செவிடாக்கும் ஒலியுடன் ஒரு குடியிருப்பு நொறுங்கிச் சிதைகிறது. ஒளிப்பதிவாளர் அக்குடியிருப்பை நோக்கி ஓடுகிறார். அங்கே பலர் உடைந்த கட்டிட சிதறல்களுக்கிடையே இறந்தவர்களின் உடல்களை மீட்கின்றனர். கான்கிரீட் சிதிலங்களை அகற்ற அகற்ற பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் மீட்க்கப்படுகின்றன. கூட்டம் பெருங்குரலெடுத்து அலறுகிறது, ‘அல்லாஹூ அக்பர்’. ஆயினும் இறைவன் அரபு நாடுகளின் ஷேக்குகளின் பிடியில் இருக்கிறானோ என்னமோ! ஏனென்றால் இதே அரபுலகின் ஆளும் வர்க்கம் அமெரிக்காவின் தயவில் தனது சொகுசு வாழ்வை கழிக்கிறது.

ஐ.நா அமைத்துள்ள மருத்துவமனைக்கு காயமுற்றவர்களை தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். அம்மருத்துவமனை அடுத்த தாக்குதல் இலக்காகிறது. மிக அருகிலிருந்து இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தைகளின் உடல்களை பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படம்.

காசாவின் அழுகுரல்சிறுமி ரஸ்யாவின் வீடு ஏவுகணை தாக்குதலுக்குள்ளானதையடுத்து அவர்கள் பாதுகாப்பிற்காக ஐ.நா வின் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர். அப்பள்ளியும் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. அன்று இரவு வெளியில் சென்ற தனது உறவினர் மற்றும் அவரது குழந்தைகள் கொல்லப்பட்டு அவர்களது உடல் தெருவில் சிதறிக்கிடந்ததை பார்த்திருக்கிறாள். கடைசியாக ஐ.நா அகதி முகாமில் இருக்கும் அவள் கூறுவது இதை தான் – “இங்கு வாழ்க்கை மோசமாக இருக்கிறது, மிக மோசமாக…”

இது மட்டுமின்றி திட்டமிட்டும் குறிபார்த்தும் அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொல்வதை சிறுமி அமிராவின் கதையைக் கொண்டு அம்பலப்படுத்துகிறது இப்படம். தாக்குதலில் காயமுற்ற அமிராவின் வீட்டில், குண்டு வெடிக்கிறது, அவரும் அவரது சகோதரர்களும் வெளியில் சென்று பார்த்த போது அவரது தந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உதவி கேட்பதற்காக வெளியில் சென்ற சகோதரர்கள் இன்று வரை திரும்பவில்லை. மற்றொரு குண்டு வெடித்ததில் அமிராவின் காலில் அடிபட்டு நினைவிழந்து விடுகிறார். நினைவு திரும்பி நகர முயற்சித்த வேளையில் மற்றொரு ராக்கெட் வீட்டில் அவர் இருந்த பகுதியை தாக்கியுள்ளது. அதாவது தனது தாக்குதல் இலக்கில் யாராவது உயிருடன் நகர்வது தெரிந்தால் உடனடியாக குறிபார்த்து தாக்குகிறது இஸ்ரேல் ராணுவம்.

தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் கொத்து குண்டுகளை வீசும், குடியிருப்புகளின் மீதும் ஐ.நாவின் மருத்துவ முகாம்கள், பள்ளிகளையும் கூட விட்டுவைக்காமல் தாக்கும், அப்பாவி பொதுமக்களை குறிபார்த்து சுட்டுக்கொல்லும் இஸ்ரேலை உலகெங்கிலும் உள்ள பாசிஸ்டுகள் ஆதரிக்கின்றனர். நமது நாட்டிலும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இனவெறி பாசிஸ்டுகள் தாங்கள் இஸ்ரேலின் பக்கம் இருப்பதாக அப்பட்டமாகவும், வெளிப்படையாகவும் அறிவித்தனர். மோடி அரசும் கூட தாங்கள் யார் பக்கம் என்பதை அறிவித்துக் கொண்டது. பாசிஸ்டுகள் ஒரே மாதிரியாக சிந்திப்பதில் வியப்பில்லை.

ஆனால், ஜனநாயகவாதிகளும், மனிதத் தன்மை கொண்டோரும் இஸ்ரேலை மட்டுமல்ல, நமது நாட்டில் இஸ்ரேலின் பக்கம் நிற்கும் ஆர்.எஸ்.எஸ் வகை பாசிஸ்டுகளையும் எதிர்த்து போராடுவதன் மூலம் மட்டுமே காசாவின் மக்களுக்கு நமது தார்மீக ஆதரவை அளிக்க முடியும், அளிக்க வேண்டும்.

மாணவர் உயிரை காவு வாங்கும் தனியார் பள்ளிகள் – தொகுப்பு

0
லாரல் பள்ளி
லாரல் பள்ளி

னியார் கல்வி நிறுவனங்கள் வரைமுறையற்ற கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் கொள்ளைக் கூடாரங்களாக மட்டுமல்ல; மாணவர்களின் உயிரையும் காவு வாங்கும் கொலைக்கூடங்களாகவும் மாறிவருகின்றன என்பதைத்தான் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களின் மர்ம மரணங்களும் தற்கொலைச் சாவுகளும் உணர்த்துகின்றன.

நமது கவனத்திற்கு வந்த சில சம்பவங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறோம். பெட்டிச் செய்தி அளவிற்குக்கூட, இடம்பெறாமல் மூடி மறைக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் இரு மடங்குக்கும் அதிகமாக இருக்கக்கூடும்.

மாணவர்களை அவமானப்படுத்துவது அவர்களிடம் அடாவடித்தனமாக நடந்து கொண்டதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள்:

பூஜா, மணலி
பூஜா, மணலி

எம்.அருண்ராஜ், 12ஆம் வகுப்பு
லாரல் மேநிலைப்பள்ளி,
குரும்பகாடு, புதுக்கோட்டை

கல்வி கட்டணம்20,000 கட்ட தாமதமானதால் அவமானப்படுத்தப்பட்டதன் விளைவாக விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
(தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், 04.02.2014)

பூஜா, எட்டாம் வகுப்பு.
SRFவித்யாலயா பள்ளி,
சி.பி.எல். நகர், மணலி, சென்னை.

கல்வி கட்டணம் கட்டாததால் வகுப்பு வெளியே நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதால் தூக்கில் தொங்கினார். (தினகரன், 23.03.2014)

தமிழரசன், கூடுவாஞ்சேரி
தமிழரசன், கூடுவாஞ்சேரி

தமிழரசன், எட்டாம் வகுப்பு.
தனியார் மெட்ரிக் பள்ளி, கூடுவாஞ்சேரி.

மதிப்பெண் குறைந்ததால் வேறுபள்ளியில் சேர்க்க சொல்லி கட்டாயப்படுத்தியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
(தி இந்து, 02.05.2014)

திவ்யா, பொறியியல் மாணவி.
வேல்டெக் பொறியியல் கல்லூரி, ஆவடி, சென்னை.

விடுதியில் கைப்பேசி பயன்படுத்தியதாகக் குற்றஞ்சுமத்தி விடுதிக்காப்பாளர் மாணவிகள் மத்தியில் தரக்குறைவாக பேசியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஹேமலதா, பொறியியல் – 4ஆம் ஆண்டு மாணவி
சத்யபாமா பல்கலைக் கழகம், சென்னை.

திவ்யா, வேல்டெக்
திவ்யா, வேல்டெக்

விடைத்தாளில் தேர்ச்சிக்கான மதிப்பெண் வழங்குமாறு எழுதியதற்காக சக மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்தப்பட்டார். பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு மன்னிப்புக் கோரினர். பின்னரும், ஒருநாள் முழுவதும் முதல்வர் வளாகத்தில் நிற்கவைத்து அவமானப்படுத்தியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அருண்குமார், 12ஆம் வகுப்பு.
எஸ்.ஆர்.வி. மேநிலைப்பள்ளி,
ராசிபுரம், நாமக்கல்.

தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்றார் என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டார். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வெங்கடேசன், 12ஆம் வகுப்பு.
குறிஞ்சி மேநிலைப்பள்ளி, நாமக்கல்.

ஆசிரியைக்கு ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தற்காக ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டதோடு, பள்ளியைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் மேற்கொண்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
(ஜன-4, 2014)

ஹேமலதா, சத்யபாமா
ஹேமலதா, சத்யபாமா

வினோதினி, பி.டெக்.முதலாமாண்டு.
தனியார் பொறியியல் கல்லூரி, மதகப்பட்டி, புதுச்சேரி.

பேராசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார்.

பிரபாகரன், பாலிடெக்னிக் மாணவர்.
ஏழுமலை பாலிடெக்னிக், விழுப்புரம்.

பாடம் நடத்தும் பொழுது ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்பதற்காக ஆசிரியரால் அடித்தே கொல்லப்பட்டார்.

சுஜீத், பத்தாம் வகுப்பு.
வீராநல்லூர், திருநெல்வேலி.

பள்ளியில் அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
(தி இந்து, 28.08.2012)

வினோதினி, புதுச்சேரி
வினோதினி, புதுச்சேரி

தட்சிணாமூர்த்தி, 12ஆம் வகுப்பு.
விருதகிரி எஜூகேசனல் டிரஸ்ட் மேநிலைப்பள்ளி,விருத்தாசலம்.

பாடச்சுமை கொடுமையின் காரணமாக பள்ளி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
(தினத்தந்தி, 28.06.2012)

எம்.ராகுல், 10ஆம் வகுப்பு.
இ.எல்.எம். பள்ளி, புரசைவாக்கம், சென்னை.

பள்ளியில் சட்டையை கழட்டி ஆசிரியர் அடித்து அவமானப்படுத்தியதால் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
(தினமலர், 3.09.2011)

வைஷ்ணவி, எட்டாம் வகுப்பு.
சிறீ சங்கரவித்யாலயா கேந்த்ரா மெட்ரிக் பள்ளி,
திருவொற்றியூர், சென்னை.

காலையில் பள்ளிக்குச் சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை; இரவு 7.30 மணியளவில் பள்ளியின் ஒவ்வொரு அறையாக பெற்றோர்கள் தேடிக்கொண்டிருக்கும் பொழுதே, மர்மமான முறையில் மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்து தம் பெற்றோர்கள் கண்ணெதிரிலேயே துடிதுடித்து இறந்துபோனார்.

கொலையென்று சந்தேகிக்கத் தக்க வகையில் நிகழ்ந்துள்ள மர்ம மரணங்கள்:

வைஷ்ணவி, திருவொற்றியூர்
வைஷ்ணவி, திருவொற்றியூர்

போஸ், ஆல்வின் ஜோஸ், பரதன், மற்றும் ராம்குமார்.
செயின்ட் ஜோசப் கலை அறிவியல் கல்லூரி, கடலூர்.

கடந்த ஓராண்டு காலத்தில் அடுத்தடுத்து, கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

வினோத்,
குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.

தண்ணீர்த் தொட்டிக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதற்கு முன்னர் இதே பள்ளியில் 4 மாணவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

மோகன்குமார், 11-ஆம் வகுப்பு
நாமக்கல் குறிஞ்சி மேநிலைப்பள்ளி

விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
(செப்.14,-2013)

ராகுல் சென்னை
ராகுல் சென்னை

பரணிதரன், 12ஆம் வகுப்பு.
எம்.ஏ.எம்., மேல்நிலைபள்ளி, மேட்டூர்.

பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக நிகழ்ந்த மரணங்கள்:

சந்தியா
வித்யாலயா மெட்ரிக் பள்ளி,
தொட்டகாஜனூர், தளவாடி.

பள்ளி மைதானத்தில் நிர்வாகிகள் ஜீப் ஓட்டி பழகியபோது ஜீப் மோதி பலியானாள்.
(தினகரன், 8.01.2013)

தீபக், 9-ஆம் வகுப்பு.
சென்னை

பள்ளி பேருந்து கவிழ்ந்து மரணமடைந்தான்.
(தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், 27.06.13)

தமிழரசன், கூடுவாஞ்சேரி
தமிழரசன் தற்கொலை, கூடுவாஞ்சேரி

இரண்டாம் வகுப்பு மாணவன்.
புனித மிக்கேல் ஆர்.சி. தொடக்கப்பள்ளி, டி.அத்திப்பாக்கம், திருக்கோவிலூர்.

பள்ளி வளாக தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து பலியானான்.
(தினமலர், 25.06.2013)

ரஞ்சன், நான்காம் வகுப்பு.
சென்னை கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளி

நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்துபோனான்.
(தினகரன், 18.08.2012)

சுருதி, இரண்டாம் வகுப்பு.
சென்னை சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்து இறந்து போனாள்.
(தினத்தந்தி, 26.07.2012)

பிரபாகரன் கொலையைத் தொடர்ந்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
பிரபாகரன் தற்கொலையை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

கார்த்திக்கேயன், எல்.கே.ஜி.
தனியார் பள்ளி,
பெருமூளை ரோடு, திட்டக்குடி.

தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து போனான். (தினகரன், 22.06.2011)

கிஷோர், 2ஆம் வகுப்பு.
புனித அந்தோணியார் மெட்ரிக் பள்ளி,
கங்கணாங்குப்பன், கடலூர்.

பள்ளி சுவர் இடிந்து விழுந்து மரணம்.
(தினமணி, 08.10.2011)

வ்வித உரிமைகளுமற்ற கொத்தடிமைகளைப் போல மாணவர்களை நடத்துவது; மாணவர்கள் இழைக்கும் சிறு தவறுகளைக் கூட பெரிய கிரிமினல் குற்றம் போல சித்தரித்து அவமானப்படுத்துவது; மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துது, நூறு சதவிகித தேர்ச்சியைக் காட்ட வேண்டும் என்பதற்காக மாணவர்களை கசக்கிப்பிழிவது கடும் மன உளைச்சலுக்குள்ளாக்குவது போன்ற தனியார் கல்வி முதலாளிகளின் வக்கிரமான நடவடிக்கைகள்தானே மாணவர்களின் உயிரைப்பறித்திருக்கின்றன.

“புள்ள இங்கிலீஸ் படிக்கட்டுமே” என்றுதான் தனியார் பள்ளிகள் மீதான மயக்கத்தில் தம் பிள்ளைகளை அனுப்பிவைத்தனர் குடந்தை குழந்தைகளின் பெற்றோர்கள். “இலட்சமாக இலட்சமாக கொட்டியது; உன் பிணத்தைப் பார்ப்பதற்குத்தானா?” என்று அழுது புலம்புகிறார், சத்யபாமா பல்கலைக் கழக மாணவி ஹேமலதாவின் தாய்.

தற்கொலை செய்து கொண்ட நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இவ்வளவுக்குப் பின்னரும், தனியார் பள்ளியின் மீதான மோகம் குறையவில்லையென்றால், இன்னும் எத்தனை பிணங்களைப் பார்த்த பின்னர் கலையும்? சொந்தப் பிள்ளைகளை இழந்தால்தான் புத்திவருமென்றால், சொல்வதற்கொன்றுமில்லை!

தொகுப்பு.

திரு வெ வெங்கடேசன், மாவட்ட தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்.
9345067646

தி இந்து-வை லந்து செய்யும் ஃபேஸ்புக் கருவாட்டுக் கவிதைகள்!

26

ஃபேஸ்புக் கருவாட்டுக் கவிதைகள்

தமிழச்சி பேஸ்புக்கில்

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் விதிகளை மீறி கருவாடு விற்பனை நடப்பதாகவும் சைவம் சாப்பிடுகிறவர்கள் மார்க்கெட்டுக்கு வரும்போது கருவாடு நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றும் பார்ப்பன பத்திரிகை ‘தி இந்து’ செய்தி வெளியிட்டதை முன்னிட்டு போலிஸ் கோயம்பேடு காய்கறி சந்தையில் திடீரென ரெய்டு நடத்தி 18 கடைகளில் கருவாடு விற்றதை கண்டுபிடித்து பறிமுதல் செய்திருக்கிறது.

சைவமும் அசைவமும் மேற்கத்திய நாடுகளில் தனிமனிதனின் விருப்பு / வெறுப்பு சார்ந்தவை. ஆனால் இந்திய சமூகத்தில் அரசியல் குறியீடுகள். சைவம் சாப்பிடும் சிறுபான்மையினர் அசைவம் சாப்பிடும் பெரும்பான்மையினரை அருவெறுப்பாக பார்த்து தங்கள் ஆச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனீய மைய அதிகாரத்தை ஓர் பத்திரிகை வெளிப்படுத்துகிறது.

செம்மீன்‘மொழி’ திரைப்படத்தில் ஓர் காட்சிவரும். தெரு பாடகன் ஆர்மோனிய பெட்டியை தட்டி அவர் பிழைப்புக்கு ஏதோ பாடிக் கொண்டிருப்பார். ஹீரோ, ‘டாய் ஒழுங்கா சுதி போடுடா’ என்று அடித்து அடித்து இசை ஞானத்தை வெளிப்படுத்துவார்.

உழைக்கும் எளிய மக்களிடம் அதிகாரம் இப்படித்தான் அதட்டிப் பேசும். ‘தி இந்து’வின் கருவாட்டு சமாச்சாரமும் இப்படித்தான்.

– தமிழச்சி

21/08/2014

கருத்துக்கள்

Krishna Kumar Appu

அடங்கப்பா!! டேய் பக்கிகளா!! கோயம்பேடு மார்கெட்ல அழுகிப்போன காய்கறில வராத நாத்தமாய்யா கருவாட்டால வந்துட போகுது.. மார்கெட்டுகுள்ள நுழைந்ததும் எந்த நாத்தம் முதல்ல அடிக்கும்.. காய்கறி நாத்தமா? கருவாட்டு நாத்தமா? அங்க கருவாட்டுக் கடை எல்லாம் இருக்கும்னு இந்த இஸ்யூ வந்த அப்புறம் தான்யா எனகெல்லாம் தெரியும். நிறைய பேரோட அறச்சீற்றம் இதுல எங்க ஜாதி வந்துச்சுன்னு தான்? இங்க லைக் போட்டுருக்க எத்தன பேர் நான் வெஜ் சாப்டுவிங்க? எத்தன பேர் சாப்ட மாட்டிங்க? பெரும்பாலானவங்க சாப்டுறவங்க தான். அங்க காய்கறி வாங்க போற பெரும்பான்மையானவங்க நான் வெஜிடேரியன்தான். ஆனா நடவடிக்கை எடுத்தது பிராமணர்கள் சொன்னதால. வெறும் சொற்ப அளவில் இருக்க அவங்க சொல்லி நம்மாளுங்க கடைய காலி பண்றாங்கன்னா, இங்க அதிகாரம் யாருகிட்ட இருக்கு? யார் சொன்னா உடனே நடக்குது? கொஞ்சம் யோசிங்க மக்களே!! நாம எங்க எந்த கடைய வைக்கனும்னு அவன் அதிகாரம் பண்றான் நாமளும் சாரி நீங்களும் அதுக்கு ஒத்து ஊதுங்க.. நமக்கு அடிமைகளா இருந்து தானே பழக்கம்.

Neyveli Shajahan

முதலில், இந்தியாவில் ஒருவரும் சைவம் கிடையாது, நீங்கள் சைவம் என்றால் பால் கூட குடிக்கக்கூடாது, பால் என்பது பசுவின், ஆட்டின், ஒட்டகத்தின் ரத்தத்தில் ஒரு பாதி. பால் என்பது ரத்தம், நீங்கள் ரத்தத்தை குடித்து கொண்டு சைவம் பேசக்கூடாது, நீங்கள் சைவம் என்றால் எந்த சைவக் குழந்தையும் தாய்ப்பாலைக் கூட குடிக்கக்கூடாது

இரண்டாவது, தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது, நீங்கள் சைவம் என்றால் எந்த தாவரத்தையும் சாப்பிடக்கூடாது

மூன்றாவது, வானத்தையும் பூமியையும் படைத்த இறைவன் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளையும், பறவைகளையும், மீன்களையும், தாவரங்களையும் மனிதன் சாப்பிடுவதற்கு அனுமதி அளித்து உள்ளான். இறைவன் சைவம் அசைவம் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் மனிதனின் பற்களை கோர பற்களையும் கடைவாய்ப் பற்களையும் படைத்து உள்ளான். உலகில் வாழும் மனிதனுக்கு இதில் எந்த உணவு கிடைக்கிறதோ எந்த உணவு உடலுக்கு ஏற்கிறதோ அந்த உணவை அவன் தாராளமாக சாப்பிடலாம், இறைவன் அனுமதி கொடுத்ததை தானாக தடுத்து கொள்ள எவருக்கும் உரிமை இல்லை.

நான்காவது, சைவம் எங்கிருந்து வந்தது என்றால் மனிதர்களாகவே புதிதாக இயற்க்கைக்கு மாற்றமாக தானாக உருவாக்கி கொண்டார்கள், இதனால் தாங்கள் மட்டும் அவதிப்படுவதும் மட்டுமல்லாமல், பிற மக்களுக்கும் தொல்லை கொடுப்பதை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. இவர்கள் செயல் தொடர்ந்தால் இவர்களை சமுதாயத்தை விட்டே துரத்த வேண்டி இருக்கும்

ஐந்தாவது, இறைவனின் எந்த வேதமும் சைவம் மட்டும் சாப்பிட சொல்லவில்லை, அசைவம் சாப்பிடுவதை பாவம் என்று சொல்லவில்லை. இறைவனின் பார்வையில் சைவம் சாப்பிடுபவனும் அசைவம் சாப்பிடுபவனும் சமம் தான். இறைவன், பைபிள் மற்றும் குரானில் பன்றியை மட்டும் சாப்பிடக்கூடாது என்று சொல்லி உள்ளான். இந்த பிராமினர்களும் மாட்டை சாப்பிட்டவர்கள் தான் நினைவில் கொள்ளுங்கள்,

Krishna Kumar Appu

ஒரு கிலோ திருக்கைக் கருவாட்டுல 158 மில்லிகிராம் Copper இருக்கு, 1469 மில்லிகிராம் Zync இருக்கு, 2303 மில்லிகிராம் Arsenic இருக்கு, 151 மில்லிகிராம் Selenium இருக்கு, இதுல இருக்குற Peptides ரத்தத்துல சர்க்கரை அளவ கட்டுப்படுத்துது, ரத்த உயர் அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிற மாரடைப்பைத் தடுக்கிற ஏகப்பட்ட அமினோ அமிலங்களின் அற்புத உணவு கருவாடு. அவன் ரெண்டு நாள் உருட்டி தின்ற தயிர் சோத்த விட ஒரு வேளை நாம சாப்டுற கருவாட்டுல சத்து அதிகம் தான்.

Cuddalore Port Mohammed Ghouse

மீன் விற்ற காசு நாறாது என ஓர் பொன்மொழி அறிந்திருக்கிறோம். காய்ந்து சருகாய் கிடக்கும் கருவாட்டினால் மற்றும் அதன் நெடியினால் சுகாதாரக்கேடு எதுவுமே இல்லை. எலி செத்த துர்நாற்றம் அல்ல… இயற்கையாய் வீசும் கருவாட்டு வாசம்! சமையல் வாயுவின் வாசனையுங்கூட பெரும்பான்மையோர்க்கு பிடிப்பதில்லை! பொதுவிடங்களில் புகை பிடிக்கக்கூடாதென கூறுவதில் கட்டளை இடுவதில் சுகாதார நுணுக்கம் அடங்கியிருக்கிறது. வயிற்றைக் குமட்டும் சாராயவாடையில்லா வீதிகளாய் தமிழகத்தை மாற்றவேண்டும் என எவருக்கும் தோன்றவில்லை!

Parthiban Sa

கருவாடுகளை வீதியில் விற்காமல் வேறு எங்கு விற்பது? நாற்றம் அடிக்கிறது என்றால் சந்தைக்கு வரக்கூடாது , அப்படி நாற்றம் அடிக்கிறது என்பவர்கள் கழிவறையில் மலம் கழிக்கும் போது நற்றம் எடுக்கிறது என்று அவர்கள் போகவே கூடாது இதுபோன்று சிறு சிறு தொழிலாளிகளை இப்படி தொழில் நடத்தவிடாமல் தடுத்து மோர், போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு கேட்டை திறந்து சலாம் போடும் வேலைதான் இது

தூ…

Play On Movies

புகார் கொடுத்தவன் அப்படி டாஸ்மாக் எடுக்கக் சொல்லட்டும் அத போலிஸ் வந்து எடுக்கட்டும் பாப்போம் …..அவனுக்கு சூ…. கிழிஞ்சிடும் ..இதெல்லாம் சும்மா வெளி வேஷம்

Mohamed Farook Sikkandar

உணவுகளில் எல்லோரும் அவர்களுக்கு விருப்பம் உள்ளதை உண்கிறார்கள் சைவம்தான் சாப்பிடவேண்டும், அசைவம்தான் சாப்பிடவேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. அசைவம் உண்போருக்கு சில வகை அதிலே பிடிப்பதில்லை, அதே போல சைவம் உண்பவர்களும்.

ஒரு முறை நபிகள் நாயகத்திற்க்கு விருந்தில் உடும்பு இறைச்சி வழங்கப்பட்டது. ஆனால் அதை அவர்கள் சாப்பிடவில்லை. அதைக்கண்ட தோழர்கள் சாப்பிடாமல் தவிர்த்தனர். உடனே, நபிகள் நாயகம் எனக்கு அது விருப்பம் இல்லை, நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள் எனக்கூறினார்கள்

Prince Blessy Clement

சைவம் சாப்பிடும் சிறுபான்மையினர் அசைவம் சாப்பிடும் பெரும்பான்மையினரை அருவெறுப்பாக பார்த்து தங்கள் ஆச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனீய மைய அதிகாரத்தை ஓர் பத்திரிகை வெளிப்படுத்துகிறது.

Tamil Selvan
நான்வெஜ் பிரியர்களுக்கு அது துர்நாற்றமாகத் தெரியாது, ஆனால் வெஜ் பிரியர்களுக்கு கண்டிப்பாக அது அப்படித்தான் இருக்கும். காய்கறிகளின் வாசனை யாரையும் முகம் சுளிக்கவைக்கப் போவதில்லை. ஆனால் மீன், கருவாடு, பிற மாமிச வகைகள் அப்படி அல்ல. இருந்தாலும் பொது இடங்களில் சில சவுகரியங்களும் அசவுகரியங்களும் இருக்கத்தான் செய்யும். அதை சகித்துக்கொண்டுதான் ஆகவேண்டும், வேறுவழியில்லை. ஒரு சாராருக்காக அதை மாற்ற முற்படுவது முறையில்லைதான்!

Hemanathan Kumar
பழ மார்கெட்டில் கூட துர்நாற்றம் வருகிறது. பிரச்சனை துர்நாற்றமா , கருவாடா ??? துர்நாற்றம் என்றால் காய்கனி கழிவுகளாலும் வரும்.

Bhagavathsingh Gurusamy

ஏன் எங்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முட்டை போண்டா விற்பதை நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் தடுத்து எச்சரித்தார்.

Dhanush Nippa
இல்லாதவன அடிக்கனும்னும்னா வந்துருவாங்களே வரிஞ்சி கெட்டிக்குட்டு..

Ajai Akilan
இந்த லட்சணத்துல கருவாடுகாரர்களின் நகரத்துக்கு 375 வது ஆண்டு விழாவாம்

Mahavishnu Chandrasekaran
சந்தைக்கு வந்த காய்கள் அந்த கருவாடு சாப்பிட்டவனுடைய வியர்வையில் வந்தை மறந்துட்டாங்களே!

Abdul Hakkim
அனைத்து உணவுப்பொருட்களும் கிடைக்க்கூடிய இடம் தான் சந்தை அங்கு வரும் வாசம் நமக்கு பிடிக்கவில்லை என்றால் மூடிக்கொண்டு செல்ல வேண்டியதுதான் மூக்கை. அடுத்த மனிதனின் பொழப்பில் மண்னை அள்ளி போடக்கூடாது.

Parthiban Sa
இவர்கள் சொல்வதை பார்த்தால் கருவாடு நாற்றம் அடிக்கும் பொருள்தான். நாற்றம் அடிக்கு கையில் பயணிக்கும் ரூபாய் நோட்டுகளை தொட மாட்டார்களா,? இவர்களுக்குத் தனியாக ரூபாய் நோட்டுகளை அடிக்க சொல்வார்கள் போல இருக்கே ,

முகவை சதாம்
நாத்தமடிச்ச மூக்க முடிக்கிட்டு போய் காய்கறி வாங்க வேன்டியது தானே…? சென்னை உள்ள கூவத்தை விடவா கருவாடு நாறுது..?

Shan Shanmuga Sundaram
பெரியார் இல்லாத இவனுகளுக்கு அதப்பு ஏறிபோச்சு

Veera Vel
இந்திய நாட்டில் வியாபாரம் செய்வது இந்தியர்களின் அடிப்படை உரிமை. கருவாடு விற்கக்கூடாது என்று ஒரு சட்டமும் இல்லை . மீனவர்களும் மனிதர்கள்தான் . பார்ப்பனர் மட்டும் மனிதன் இல்லை

Lyakath Durai
ரிலையன்ஸ் மோர் போன்ற சூப்பர் மார்க்கெட்டுக்குள்ளே மீன் கோழி இன்னும் பல பிரிட்ஜிக்குள் வைத்து விற்பதை பார்த்து இருக்கிறேன்.

Zakir Upt
மேல் சாதியோ..கீழ் சாதியோ…,மனிதன் இறந்தால் ஒரு நாளைக்கு மேல் வீட்டில் வைத்திருக்க முடியாது….! மனிதனின் வாடையை விட, கருவாட்டின் வாடை பெரிதல்ல..!

Vrforu Kumar
இந்திய நாடு சுதந்திர நாடு.இந்துவும் முசல்மனும், கிரிஸ்துவும் இணைந்து வாழும் நாடு..கருவாட்டை வைத்து பிரிவினை விதைக்காதே நீ ஓடு..

பரிமளராசன் பேஸ்புக்கில்

கோயம்பேடு சந்தை

”கருவாடு நமக்கு சொல்லும் பாடம்”

கோயம்பேட்டுல காய்கறி வாங்கறதுலயே 98 பேர் எங்காளு, 2 பேர்தான் அவாளு ! அப்புறம் என்ன நொன்னைக்குடா அங்க கருவாடு விக்ககூடாதுன்னு 2 பேர், 98 பேருக்கு உத்தரவு போடறீங்க? உத்தரவு போட எப்படி முடியுது?

அடேய் அம்பிகளா, நீங்க கோயம்பேடு மார்கெட்டுல ஏதாவது கடைவெச்சு வியாபாரம் செய்யறீங்களா? ஒரே ஒரு காய்கறி கடைய ஒரு பூணூல் வெச்சிருப்பானா? ஒரே ஒரு கருவாட்டு கடைய ஒரு பூணூல் வெச்சிருப்பானா? கடையும் உங்களுது இல்ல. வாங்கறதுலயும் நீங்க 100க்கு 2 பேர்தான்.

ஆனா ஒட்டு மொத்த கோயம்பேட்டுக்கும் அத்தாரிட்டி போல எப்படி பேச முடியுது?98 பேர் விரும்பும் கருவாட்டு கடையை 2 பேரால் எப்படி தூக்க முடிகிறது?

அதிகார வர்கம்,ஆளும் வர்கம்,ஊடகம்,நீதி பரிபாலனம் அணைத்தும் பூணூலுக்கு ஆதரவாகவும்,98 பேருக்கு எதிராகவும் இருக்கிறது என்கிற உண்மையை கருவாடு நமக்கு உணர்த்துகிறது.

கருத்துக்கள்

Mohamed Sulthan

எலெக்‌ஷன் கமிஷன், அசைவம் கொண்டுவந்தால் அசவுகரியமாக இருக்கும், அதனால் அதற்கு தடை என்று ஆணையிட்டபோதே சரியான முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். எனக்கு பருப்பும், நெய்யும் அழற்சி என்பதால் பருப்புக்கும் நெய்யுக்கும் தடை போடலாமா? அசைவத்தை விரும்பாதவர்கள் வெகு சிலர், அவர்களுக்காக அசைவம் உண்பவர்களை தடுப்பது தனிமனித சுதந்திரத்தை நேரடியாக பாதிக்கக்கூடிய ஒன்று. இது சமூகத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

Parameshwaran Sivananainthan

இப்படித்தான் உத்தரவு போட்டு போ்டடு…சாமானிய மக்களை போராடத்தூண்டுகிறார்கள்…புரட்சி்பபாதைக்கு தள்ளுகிறார்கள்…உழைக்கும் மக்கள் மீது அவர்களுக்கு அவ்வளவு வெறுப்பு. கருவாடுக்கு கூப்பாடு போடுபவர்கள் தெருவுக்கு தெரு மது ஆறாக ஓடுகிறதே…அதற்கு உத்தரவு போடுவார்களா?

Vel Tharma

ஒரு இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றிய ஒரு பாகிஸ்தானியன் சொன்னான், இந்திய மக்களாட்சி என்பது பார்ப்பன மக்களின் ஆட்சி என்று இது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை?

Thatha Peer Mohamed

கருவாட்டில் இவ்வளவு தத்துவங்களா? நாளைக்கு எங்க வீட்ல கருவாட்டு குழம்புதான். இப்பவே நாக்கு ஊருது

பேஸ்புக்கில் வலையுலகம் ஹைதர் அலி

இரமேஸ்வரம் பாம்பன் பாலம் போயிருந்தபோது உழைக்கும் மீனவ மக்கள் கருவாடு காயப் போட்டு இருந்ததை எனது மகன் படம் பிடித்தது. ஆஹா வாசனை அப்படி தூக்கியது பக்கத்தில் நிற்கும்போது

கருவாடு

பாம்பன் பாலத்தை கடக்கிற சைவ பிரியர்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என அங்கும் தடை விதிக்க முயற்சி பண்ணினாலும் பண்ணுவாய்ங்க !

பேஸ்புக்கில் கி. நடராசன்
இதெல்லாம் ரொம்ப ஓவர்… நாற்றம் குடலை பிடுக்கும் பன்னி பீயை எருவாக போட்டுத்தான் கத்தரி, மிளகாய், பூசணி, தக்காளி , துளசி எல்லாம் நல்லா விளையும்… இதெல்லாம் ஒரு பிரச்சனை என்று எழுதிரானுங்க… மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிகாய், வாழைப்பழங்கள் சட்ட விரோதமாய் விற்கப்படுகிறது.. இந்த அதிகாரிகள் என்ன கழட்டினார்கள் …. இது சைவம்..அசைவம் பிரச்சனை அல்ல…சாதி கொழுப்பெடுத்த அவாள் திமிர்…

பேஸ்புக்கில் டான் அசோக் Don Ashok ‏

அசைவ உணவு சாப்பிடுகிறவனுக்கு வீடு கொடுக்க மாட்டீர்கள். அலுவலகத்தில் அசைவ உணவு சாப்பிடுகின்றவனுக்கு உண்ண இடம் கொடுக்க மாட்டீர்கள். பொது இடத்தில் கருவாடு விற்பனைக்கு இடம் கொடுக்க மாட்டீர்கள். 4% மக்களுக்காக 96% மக்களின் உரிமை பறிக்கப்படும் நாடு அநேகமாக உலகிலேயே இதுவாகத்தான் இருக்கும்.

கருத்துக்கள்:

வேல்குமார் வா

கருவாட்டை சந்தைல விக்காம பின்ன லலிதா ஜுவல்லரிலயா விப்பாங்க

UmamaheshVaran Lao Tsu

இதை எல்லாம் சொன்னபோது அந்த 96%சேர்ந்த சில அரைவேக்காட்டு ஆசாமிகள் “பார்ப்பனீயம் இருக்கிறது என்பது பொய்யான ஒரு கூச்சல் “என்றார்கள். அவர்களுக்கு மவுண்ட் ரோடு மகா விஷ்ணு செருப்பால் அடித்து ஆமாம்யா பார்ப்பனீயம் இன்னும் இருக்கு என்று புரியவைத்திருப்பார் என்று நம்புகிறேன் .

கருவாடு karuvadu_en

கோட்டையில் ரஜினி : லிங்கா – பாஜக – ஊடக சதி !

8
ரஜினி மோடி கார்ட்டூன்
லிங்காவும் பாஜகவும் எழுச்சி பெற வேறு வழி?
ரஜினி மோடி கார்ட்டூன்
லிங்காவும் பாஜகவும் எழுச்சி பெற வேறு வழி?

பாரதிய ஜனதாவை வெறும் அகோரி, சங்கர மட, ஆதீனங்களின் கட்சியாக மட்டும் சுருக்குவது தவறு. கஞ்சா, நெய் பொங்கல், புளியோதரையால் வரும் சக்தியையோ இல்லை சதியையோ ஒரு ஊட்டி தேநீரை அருந்தியபடியே நாம் எதிர்கொண்டு விடலாம். ஆனால் அமேசான் காட்டின் ‘மூலிகை திரவ’த்தை ஆம்வேயால் அருந்திக் கொண்டு, மெக்டனோல்டு, பர்கரோடு புல்லட் புரூஃப் இறுமாப்பில் மௌரியா ஷெர்ட்டனில் கதைக்கும் கனவான்களை அப்படி எதிர்கொள்வது சிரமம்.

அமெரிக்கா முதல் அம்பானி வரை, விகடன் துவங்கி குமுதம் வரை, சோ தொட்டு சுப்ரமணியசாமி இட்டு ஒரு பெரும் அறிஞர் கூட்டமே ராப்பகலாய் பாஜகவின் எதிர்கால அதிகார மென்பொருட்களை வன்நபர்களால் வடிவமைத்து வருகிறது. இந்த சிந்தனைக் குழாம் ஒன்று விடாமல் சர்வசாத்திய வஸ்துக்களையும் குலுக்கி போட்டு தாமரையை மலர வைக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறது.

இவர்களின் எண்ணங்களோ, எதிர்பார்ப்புகளோ பல்வேறு வண்ணபாதைகளை காட்டினாலும் பாதைகள் சேருமிடம் காவிக்கரைதான். பாஜகவின் புதிய தமிழகத் தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜனின் நியமனத்தை பெண்ணுரிமையின் வெற்றியாக கொண்டாடுகிறார்கள். வானம் பார்த்த சோகத்திலிருக்கும் வானதி சீனிவாசனும் கூட ஒரு பெண்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். பாஜகவின் ப்ரியத்திற்குரிய வட இந்திய வணிக வர்க்க கூட்டணியை இங்கேயும் நட்டு வைப்போமென பாடுபடும் நாடார் பெருவணிகர்கள் தங்களது வெற்றியாக அகமகிழ்கிறார்கள். தமிழிசை ஒரு நாடார் அல்லவா!

தொலைக்காட்சியில் எட்டுக்கட்டையில், ஒளி விளக்குகளே பயந்து ஃபியூசாகும் அளவுக்கு கத்திப் குதறிப் பேசியதை வைத்தே தலைவர் ஆனவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே அளவுக்கு கத்தியும் கொத்தியும் பேசினாலும் மாநிலத் தலைவர் பதவி பறிபோனதில் எரிச்சலைடையாமல் இருக்க ஹெச்.ராஜா முதல் பச் கூஜா வரை பலருக்கும் தேசிய செயலாளர் ஆரம்பித்து செய்தித் தொடர்பாளர் வரையிலும் பல பதவிகள்.

பாஜக கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறவேண்டும் என்று கருத்துக் கணிப்பு ஜோசியம் பார்த்த ஜூ.விகடன் திருமாவேலன் இன்று கமலாலயத்தில் அதிமுக கூட்டணிக்கான பேச்சுக்கள் கிசுகிசுக்கப்படுகின்றன என்று புலம்புகிறார். திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக பாரத இயக்கம் தனித்து வரவேண்டாமா என்பது அவர் ஆதங்கம். அம்மாவை விடமுடியாது என்றாலும் மோடியையும் விடமுடியாத குமுதம் இருவரது நலனையும் மனதில் கொண்டு வார்த்தைகளை உருவாக்குகிறது.

அமித் ஷா கார்ட்டூன்
வேவுபார்ப்பது, பின்தொடர்வது, என்கவுண்டர் செய்வது, சாதி-மத வெறி டிஆர்பி ரேட்டிங்கை எகிறச் செய்வது எல்லாவற்றிலும் அமித்ஷா வல்லவர்.

அமித் ஷா தலைவரானதும் கட்சி பலவீனமாயிருக்கும் மாநிலங்களில் பட்டயைக் கிளப்புவார் என்று இதே ஊடகங்கள் சத்தியம் செய்து சாமியாடின. பார்ப்பதற்கு ஐந்து காசு கந்து வட்டி சேட்டு போல இருந்தாலும் வேவுபார்ப்பது, பின்தொடர்வது, என்கவுண்டர் செய்வது, சாதி-மத வெறி டிஆர்பி ரேட்டிங்கை எகிறச் செய்வது எல்லாவற்றிலும் அமித்ஷா வல்லவர். காய்ந்திருந்த உத்திரப்பிரதேச மாநிலத்தில் அவர் பாய்ச்சிய சகுனி-சாணக்கியத் திட்டங்களே பாஜக-வை பெரும் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்தில் அமரச் செய்தது. விளைவு பலர் முனகினாலும் மோடி சொன்னதும் எதிர்ப்பே இல்லை, அமித் ஷாவை தலைவராக்கியதற்கு.

சரி தமிழகத்தில் என்ன திட்டம்?

ஆதிக்க சாதி கட்சிகள், குழுக்களை அணிதிரட்டும் தந்திரம் வழக்கம் போல நடைபெறும். 2014 பாராளுமன்ற தேர்தலில் 5% வாக்குகள் பெற்று மூன்றாவது பெரிய கட்சியானதும், 2016 தேர்தலில் ஒரு பாய்ச்சல் பெற வேண்டாமா? அம்மாவுடன் நேசமென்றாலும் பதவி என்று வந்துவிட்டால் சும்மா இருந்து விட முடியாது.  தருமபுரியில் பாமக சாதிவெறியும், குமரியில் இந்துமதவெறியும் சாதித்த வெற்றியை தமிழகம் முழுவதும் செய்வதற்கு ஏதாவது மாஜிக் வேண்டும்.

இதன் முன்னாட்டமாகவே சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது மோடி வெட்கங்கெட்ட முறையில் ரஜினி வீட்டிற்கு சென்றார். கோச்சடையான் எடுக்கப்பட்ட விதத்தை அறிந்தார். தேநீர் சாப்பிட விரும்பியவரை எப்படி மறுக்க முடியும் என்பதாக ரஜினி மானத்தை வாங்கினாலும், கோவை விமானநிலையத்தில் விஜயையும் பார்த்தார் மோடி. அவரும் அவ்வாறே மானம் வாங்கினாலும் இவைகளின் பின்னே இருப்பது தன்மானமால்ல, அம்மா மேலுள்ள பயமே! ஆனால் அம்மாவும், அய்யா மோடியும் காவிக் கொள்கைகளில் நட்பு சக்திகள் என்றாலும் வாயும் வயிறும் வேறல்லவா? அம்மா அய்யாவை பாரட்டலாமே அன்றி சூப்பர், இளைய ஸ்டார்கள் பாராட்டினால் நட்சத்திரங்களின் ஒளிர்தலுக்கு மின்சாரம் லேது.

இருந்தாலும் ரஜினி – விஜய் ரசிகர்கள் கண்ணை மூடிக் கொண்டு வாக்குகளை குத்துவார்கள் என்றே கமலாலயமும், ஊடக காரியாலயங்களும் கதை பரப்பின. கதை சிதைந்தாலும் மத்தியிலே தமிழகத்தின் உதவியின்றியே பாஜக ஆட்சியை பிடித்தது. இங்கே தாமரை பூக்கவில்லை என்றாலும் தில்லியில் நச்சு மரமாக காலூன்றியது. பதவியேற்பு விழாவுக்கு ரஜினி அழைக்கப்பட்டு லதா ரஜினிகாந்த் சென்றார். வரும் வராது என்ற நகைச்சுவையின் பொருளை ரஜினி தில்லிக்கு சென்றார் செல்லவில்லை என்று புரிந்து கொள்வது சிரிக்கத் தெரிந்தவர்களின் சாமர்த்தியம்.

ரஜினி மோடி சந்திப்பு
தேநீர் சாப்பிட விரும்பியவரை எப்படி மறுக்க முடியும் என்பதாக ரஜினி மானத்தை வாங்கினாலும், கோவை விமானநிலையத்தில் விஜயையும் பார்த்தார் மோடி.

பிறகு ரஜினி “லிங்கா” படப்படிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். மங்களூரில் படப்படிப்பின் போது செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார். பொதுவில் புதுமுக நடிகரின் படங்களுக்கே ஏகப்பட்ட பில்டப்பில் படத்தின் விளம்பரம் பல்வேறு உத்திகளோடு கடை விரிக்கப்படும் போது ரஜினி படத்திற்கு அவர் ஊடகங்களை சந்தித்து ஏதாவது இலை மறையாக பேசினாலே போதும். அப்படித்தான் அவர் சந்தித்தார் என்றாலும் ஊடகங்கள் அதற்கு மறைபொருள் விளக்கத்தை அளிக்கின்றன.

ரஜினியின் காதலிக்கு அப்பாவாக நடிக்கும் ராதாரவி போன்ற ஓய்வு பெற்றவர்களெல்லாம் கூட “லிங்காவில்” நடிக்கிறார்கள் என்பதால் நேர்காணல்களில் இடம் பெறுகிறார்கள். விக்கு போட்ட ராதாரவிக்குத்தான் வேடங்கள் எவ்வளவு கச்சிதமாக பொருந்துகின்றன என்று ரஜினி சாதாவாக கூறியதை மாபெரும் ஸ்பெசல் இலக்கியமாக ஊடகங்கள் பொறித்திருக்கின்றது. “கோச்சடையான்” எனும் பொம்மை படம் ஊற்றிக் கொண்ட நிலையில் “லிங்கா”-வை ‘எழுச்சியுறச்’ செய்வதற்கு இத்தகைய அழுகுணி ஆட்டங்கள் அவசியம்தான். உண்மையில் ஆண்மைக்குறைவுக்கு சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் செய்யும் எழுச்சி விளம்பரங்களை ‘லிங்கா’ குழுவினர் செய்யக் கூடாதா என்ன?

90-களில் ஒரு போக்குவரத்து நெரிசலில் ரஜினியின் கார் சிக்கிக் கொண்டதும், அந்த நெரிசலுக்கு காரணம் ‘அம்மாவின்’ முதல்வர் பவனி கார் வரிசையே என்பதே சூப்பர் ஸ்டாரின் சமூக, அரசியல் ஓப்பனிங்கின் இரகசியம். இதை வைத்து போயஸ் தோட்டத்தால் வாழ்விழந்த ஆர்.எம்.வீரப்பன், பார்ப்பனியத்தின் மயிலாப்பூர் சாணக்கியர் சோ, தஞ்சாவூர் பண்ணையார் மூப்பனார், பார்ப்பனிய ஊடகங்கள் அனைவரும் ரஜினிக்கு காற்றடித்து ஊதிப் பெருக்கினார். என்றாலும் சுறுசுறுப்பான நடிப்பிற்கு பெயர் பெற்ற ரஜினி நிஜத்தில் பயந்து ஒதுங்கினார்.

அவ்வப்போது ‘குத்து’ வசனங்களில் அரசியல் மாதிரி சில அபத்தங்களை பேசினாலும் காலப் போக்கில் எல்லாம் ஆண்டவன் செயல் என்று தப்பித்து வந்தார். எனினும் அதே ஆண்டவன் ‘பாபா’-வில் கைவிட்டது வேறு கதை. ரஜினியை நம்பி காசு செலவழித்த மாவட்ட ரசிகர் தளபதிகள் பிறகு அரசியல் முதலீட்டை எடுக்க முடியாது என்றதும் அடக்கி வாசித்தனர். ஆனால் பார்ப்பனிய சாணக்கிய சகுனிகள் மட்டும் முடங்கி விடவில்லை.

தற்போது கர்நாடகாவில் ‘லிங்கா’ படத்தில் நடித்து வரும் செய்தியாளர்கள் ரஜினியை சந்தித்த போது, அரசியலுக்கு வருவீர்களா, நீங்கள்தான் அடுத்த முதலமைச்சரா என்ற வழக்கமான டிஎம்ஸ் குரலில் அறுந்து போன முருகன் பாடல் வரிகளை கேட்டார்கள். எல்லாம் ஆண்டவன் செயல் என்று அதே முருகன் பாடலை ஒலிக்கும் துருப்பிடித்த ஒலிக்குழாய் போல ரஜினி சொல்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் துருவில் கொஞ்சம் பாலிஷ் போட்டு “மக்கள் மனது வைத்தால்” நடக்கும் என்றாராம் ரஜினி. ஆண்டவன் இடத்தில் மக்கள் வந்ததற்கு என்ன காரணம்?

அதுதான் அமித்ஷா அடிக்கடி தொலைபேசியில் ரஜினியுடன் பேசி அவரது மனதைக் கரைத்து வருவதன் வெளிப்பாடாம். 2014 தேர்தலில் மாநிலத்தில் ஒரு தொகுதியில் வென்றாலும் கூட்டணி ஆரோக்கியம் சீர்கெட்டு வருகிறது. மோடியின் பதவியேற்பு வைபவத்திற்கு முன் வரிசையில் அமருவதற்கு கூட “பாஸ்” கிடைக்காமல் புறக்கணிப்பு செய்த விஜயகாந்த், உடல் நலம், கட்சி நலம் குன்றி வாடி வருகிறார். இப்போதுதான் பிறந்த நாள் வாழ்த்துக்களை தமிழக பாஜக தலைவர்கள் சொன்னதால் அவர் மகிழ்ச்சியில் இருப்பதாக தேமுதிக வட்டாரங்கள் ஊடகங்களுக்கு செய்திகளை வீசி வருகின்றன. முன்வரிசை கிடைக்காவிட்டாலும் கடைசி வரிசையிலாவது விட்டால் கேட்டுக்கு பின்னால் எட்டிப்பார்க்கக் கூட கேப்டன் தயாராகிவிட்டார். ஆனால் மக்கள் கைவிட்டுவிட்டார்கள். வைகோவுக்கு வேறு போக்கிடம் இல்லையென்றாலும் எதிர்காலமும் இல்லை. பச்சமுத்துவிடமிருந்து பணம் வரலாமே அன்றி மக்கள் செல்வாக்கு பலம் ஓட்டுக்களாய் வராது.

ரஜினி கார்ட்டூன்
அரசியல் வாழ்க்கையில் ஃகிராபிக்ஸ் சாகசம் பயன்படாது.

இந்நிலையில்தான் ரஜினியை தமிழக முதல்வர் வேட்பாளராக்கி ஏதாவது செய்யலாம் என்று அமித்ஷா தீவிரமாக யோசித்து செயலிலும் இறங்கி விட்டாராம். இதை குதூகலத்துடன் வெளியிட்டிருக்கும் தினமலர், இதன் ஆதாரங்களை கமலாலாய வட்டாரங்களுடன் உறுதி செய்திருக்கிறது. குமுதமோ இன்னும் கொஞ்சம் சென்டிமெண்டாக ரஜினியின் மகள்கள் படம் எடுப்பதாக ஏற்படுத்திய நட்டம், லதா ரஜினிகாந்த் வியாபாரத்தில் ஈடுபட்டு உருவாக்கிய நட்டம், தனுஷ் – மகள் சண்டை காரணமாக நிம்மதியிழந்து அரசியல் ஆன்மீகத்தில் செட்டிலாக விரும்புவதாக அடித்து விட்டிருக்கிறது. ரஜினியின் இமேஜை உயர்த்துவதற்கு கூட டிவி சீரியல் போல வறுமை, மருமகன் சண்டை என்று லோக்கலாகத்தான் இவர்கள் புனைகிறார்கள்.

ஐந்து சதவீத வாக்கு வாங்கினாலும் தமிழகத்தில் பூஜ்ஜயமாக இருக்கும் பாரதிய ஜனதா, ரஜினி வந்தால் ராஜ்ஜியத்தை கைப்பற்றலாம் என்று மனப்பால் குடிக்கிறது. மோடிக்கு கொடி பிடித்த பார்ப்பனிய ஊடகங்களோ ரஜினியை வைத்து தாமரையை மலரச் செய்யலாம் என்று கனவு காண்கின்றன. ‘லிங்கா’ குழுவினரோ இந்த அமர்க்களத்தை வைத்து படத்தை வெற்றிகரமாக ரிலீஸ் செய்யலாம் என்று விளம்பரங்களை உத்வேகத்துடன் வடிவமைக்கிறார்கள். எல்லாம் சரிதான்!

ரஜினி என்ன செய்யப் போகிறார்?

அவர் என்ன செய்வார், என்ன செய்ய வேண்டுமென்பதை அம்மா இருக்கும் வரை ஆண்டவன் கூட முடிவு செய்ய முடியாது. அயோத்திக்கு ராமர் கோவில் கட்டுவதை பகிரங்கமாக கூறும் பாஜக கூட அம்மாவிற்கு போட்டியாக பாட்சாவை முன்னிறுத்த முடியாது.

வேண்டுமானால் இப்படி நடக்கலாம். அம்மா + பாஜக கூட்டணிக்கு சூப்பர் ஸ்டார் சுமாராகவாவது பிரச்சாரம் செய்யலாம்.

அதே நேரம் அமித்ஷா மற்றும் சாணக்கியர்களின் திட்டம் வேறாக இருந்தால்? அப்போதும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். ஏனெனில் அரசியல் வாழ்க்கையில் ஃகிராபிக்ஸ் சாகசம் பயன்படாது.

நீதி வளையுமா ?

3

“இந்த நாட்டில போலீசு, கோர்ட்டு, அதிகாரிகள் யாரும மக்களுக்காக வேலை செய்றது கெடையாது. சாதாரண குடிமகன் ஏதாவது ஒரு பிரச்சனைன்னு போலீஸ் ஸ்டேசனுக்குப் போனா, இழுத்தடிப்பானுங்க, லஞ்சம் கேட்பானுங்க. நீதிமன்றங்களைப் பத்தி சொல்லவே வேண்டாம். நம்ம கேச விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே பல மாதங்கள் பிடிக்கும். அதற்கு பிறகும் வாய்தா வாங்கி இழுத்தடிப்பாங்க. அதனால, எந்த வம்புதும்புலையும் மாட்டிக்காம, நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு போக வேண்டியதுதான்.”

ஜனநாயகம்
ஏய், அவரு மட்டும் ஐடி கார்டு காட்ட மாட்டாரா? ஐயா அவரு ஓட்டு போட போகல, வாங்க போறாரு!

இதுதான் நாட்டின் பெரும்பான்மை குடிமக்களின் நிலைமை. ஆனால், இத்தகைய பிரச்சனை இல்லாத குடிமக்களும் உள்ளனர். நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்று அரசியல் சட்டம் சொன்னாலும், இந்த குடிமக்கள் மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதல் சமமானவர்கள்.

உதாரணமாக, பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியைச் சேர்ந்த ராதா ராஜன் திருவண்ணாமலை கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்த பசுக்கள் உயிரிழந்தது தொடர்பான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தாராம். தமிழ்நாடு முழுவதும் கோயில்களின் பராமரிப்பில் உள்ள பசுக்கள் மற்றும் கன்றுகளின் மிக மோசமான நிலையை உணர்த்துவதாக இந்த சம்பவம் இருந்ததாம்.

சாதாரண குடிமகனாக இருந்தால் தனது குறைகளை பகவான் மீது போட்டு மனபாரத்தை இறக்கிக் கொள்ள வேண்டியதுதான் என்பது மனுநீதி. ஆனால், ராதா ராஜன், தமிழகக் கோயில்களில் உரிய பராமரிப்பின்றி உள்ள பசுக்களைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை உருவாக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்தத் திட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிக்க ஒரு குழுவை அமைத்திட வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக சிந்திக்கும் குடிமக்களின் துயர் துடைப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டு இயங்கும் நீதித்துறை, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பிற நூற்றுக்கணக்கான வழக்குகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு ராதா ராஜனின் அதிர்ச்சியை போக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. தமிழகமெங்கும் கோசாலைகளின் நிலை குறித்து ஆராய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அது தொடர்பான அறிக்கையை 2 மாதத்துக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

நீதித்துறை
இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக சிந்திக்கும் குடிமக்களின் துயர் துடைப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டு இயங்கும் நீதித்துறை.

சமச்சீர் கல்வி வழக்கிலோ, தில்லை கோயிலை தீட்சிதர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் வழக்கிலோ தப்பித் தவறி ஆளும் வர்க்கத்திற்கு எதிரான தீர்ப்புகள் வந்து விட்டால் அவற்றை எதிர்த்து எங்கெல்லாம் மேல்முறையீடு செய்வது, மேல் முறையீட்டிலும் மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்து விட்டால் அதை அமல்படுத்தாமல் எப்படியெல்லாம் அலட்சியம் செய்வது, என்று ஜனநாயகத்தை தூக்கிப் பிடிக்கும் ஜெயா அரசு கோசாலை தொடர்பான வழக்கில் மேல் முறையீடு செய்து, அல்லது சீராய்வு மனு தாக்கல் செய்து, மனுதாரர் ராதா ராஜனை அலைக்கழித்திருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.

கோசாலை பாதுகாப்புக்காக, அரசுத் தரப்பு கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் அனந்த பத்மநாபனையும், இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் கால்நடை மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர்.சுமதியையும் உறுப்பினர்களாக நியமனம் செய்து விட்டனர். மூன்றாவது உறுப்பினராக மனுதாரரே இருக்கலாம் என்று நீதிமன்றமே முடிவு செய்து விட்டது.

இதே கோமாதா தொடர்பான இன்னொரு நிகழ்வு இந்தியாவை வல்லரசாக்கியே தீருவது என்று உறுதி பூண்டுள்ள சில குடிமக்கள் பற்றி அறியத் தருகிறது. கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியைச் சேர்ந்த அமீன் என்ற 27 வயது இளைஞர் ஈரோடு மாவட்டத்தில் இருந்து லாரிகளில் மாடுகளை ஏற்றிக் கொண்டு ஒசூர் வழியாக சென்று கொண்டிருந்தாராம். இந்த தகவல் அறிந்த விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சாந்தகுமார், பஜ்ரங்தள மாவட்ட அமைப்பாளர் தேவராஜ், பசுமை பாதுகாப்பு படை நிர்வாகிகள் சேதுமாதவன், கிரண்குமார் ஆகியோர் மாடுகளை ஏற்றிவந்த லாரிகளை சிறைபிடித்திருக்கின்றனர்.

11 லாரிகளில் ஏற்றப்பட்டிருந்த 196 மாடுகளையும், லாரிகளுடன் சிப்காட் காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். சிப்காட் காவல்துறையினரும் அமீன் உட்பட 12 பேரை கைது செய்து விசாரணை நடத்த ஆரம்பித்திருக்கின்றனர்.

முதலாளிகளின் சேவையில் அரசு
முதலாளிகளுக்காக L போல வளையும் அரசு.

மணல் கொள்ளையர்கள் ஆற்று மணலை அள்ளிச் செல்லும் போதோ, தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனின் லாரிகளையோ யாராவது தடுக்க முயற்சித்தால், அவ்வாறு, முதலாளிகளுக்கு எதிராக சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டவர்கள் மீது போலீஸ் பாய்ந்து குதறியிருக்கும். ஆனால், கோமாதா விவகாரத்தில் இந்துத்துவ குண்டர்களின் அடாவடியை அங்கீகரித்து, 196 மாடுகளையும் போலீஸ் ஸ்டேஷனில் கட்டிப் போட்டு தீனி போடும் அவஸ்தையோடு வழக்கு பதிவு செய்திருக்கின்றனர் போலீஸ்.

இங்ஙனம், 196 மாடுகளை பறிமுதல் செய்து இந்தியாவின் வல்லரசு பாதையை செப்பனிட்டிருக்கின்றனர் விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற சங்கபரிவார அமைப்பினர்.

உயர்நீதிமன்றத்தின் அக்கறை கோசாலை பசுக்களோடு நின்று விடுவதில்லை. தனியார் கல்விநிறுவனங்கள் நடத்தும் முதலாளிகளின் தேவைகளும் அவர்களால் ஜரூராக நிறைவேற்றி வைக்கப்படுகின்றன.

புதிய மனுதர்மம்

கல்லூரிக் கல்வி இயக்குநரக இணையதளத்தில் சுயநிதி கல்லூரிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. பி.ஏ. படிப்புக்கு ரூ.1,350, பி.எஸ்சி. பயில ரூ.2,850 என எல்லா படிப்புகளுக்கும் மிகக் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்துள்ளனராம். இதன் அடிப்படையில் மாணவர்களும் பெற்றோரும் குறைந்த கட்டணத்தில் படித்து தம்மை ஏமாற்றி விடுவதாக கல்வி வியாபாரிகள் மனம் குமுறியிருக்கின்றனர்.

எனவே, பெரியார் பல்கலைக் கழகத்துடன் இணைப்பு பெற்ற சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகங்கள் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவின் பேரில், அவர்களது துயர் துடைக்க, போதுமான அளவு அதிகக் கட்டணத்தை நிர்ணயித்து தருவதற்கான குழு ஒன்றை நியமிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுத் தரப்பு, நீதிமன்றம் மற்றும் கல்வி முதலாளிகளின் கோரிக்கையை மறுக்கா விட்டாலும், இத்தகைய குழு அமைக்க 6 மாத அவகாசம் வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். ஆனால், நீதிபதி வி. ராமசுப்பிரமணியனோ 3 மாதங்களுக்குள் குழுவை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, சுயநிதி அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி முதலாளிகளின் கண்ணீரை உடனடியாக துடைக்க ஆவன செய்துள்ளார்.

ஆனால், நீதிமன்றம் நாட்டு குடிமக்கள் சிலர் மீது கருணையுடன் செயல்படும் என்பது மதுரையில் நிரூபணமாகியிருக்கிறது. சென்ற வாரம் மதுரை அதிமுகவினர் அக்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கின்றனர். அதை ஒட்டி நகரெங்கும் 500-க்கும் மேற்பட்ட பிளெக்ஸ் போர்டுகள், டிஜிட்டல் போர்டுகள் மற்றும் பேனர்களை அமைத்துள்ளனர்.

இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று வழக்கறிஞர் ஏ பழனிச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அரசு தரப்பிலோ, அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள், டிஜிட்டல் போர்டுகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்றுவதற்கு அரசாணையின் அடிப்படையிலும், சட்டப்படியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசே ‘மனம் திருந்தி’ நடவடிக்கை எடுப்பதாக சொல்லி விட்டதால் இந்த மனு மீது வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை என்று ஜெயலலிதா என்ற குடிமகனுக்கு உறுதுணையாக நின்றிருக்கின்றனர்.

இந்த 4 செய்திகளையும் வெளியிட்ட தி இந்து நாளிதழ், “மிகக் குறைந்த கட்டணத்தை உயர் கல்வித் துறையினர் தன்னிச்சையாக நிர்ணயம் செய்துள்ளனர். இதனால், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.” என்று தனியார் கல்வி முதலாளிகளுக்கும், “கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் பசுக் களை விற்பனை செய்யக் கூடாது; கோசாலைகளில் உள்ள மாடுகளுக்கு தேவையான மருத்துவ சேவை அளிக்கப்பட வேண்டும்; கோசாலைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும்” என்று ராதா ராஜனுக்கும், “மாடுகளைக் கொண்டு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும், அதை மீறி லாரிகளில் அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் பல மாடுகள் நெரிசலில் சிக்கி வழியிலேயே இறக்கும் நிலை உள்ளது.” என்று இந்துத்துவ மாடுகளுக்கும் பரிந்து பேசியுள்ளது.

கோயம்பேடு மளிகைக் கடைகளில் ஓரத்தில் தொங்கும் கருவாட்டு பேக்குகளுக்கு எதிராக கர்ஜனை புரிந்த மகாவிஷ்ணுவிடமிருந்து, மதுரை வீதிகளை ஆக்கிரமித்த அம்மாவின் போர்டுகளை எதிர்த்து ஒரு முனகல் கூட வெளியாகவில்லை.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், நீதிமன்றம், போலீஸ் அல்லது அரசு அதிகாரிகளிடம் உங்கள் வேலையை சாதித்துக் கொள்ள வேண்டுமானால், அதற்கு தி இந்துவின் ஆதரவும் வேண்டுமானால்.

1. நீங்கள் ஒரு பார்ப்பனராக இருக்க வேண்டும். அல்லது பார்ப்பனர்களுக்கு கவலை அளிக்கும் கோசாலை போன்ற விஷயத்தை கையில் எடுத்திருக்க வேண்டும். (அல்லது)

2. நீங்கள் தனியார் கல்வி முதலாளி போன்று மக்களிடம் கொள்ளை அடித்து லாபம் சம்பாதிக்கத் துடிப்பவராக இருக்க வேண்டும். (அல்லது)

3. நீங்கள் இந்துத்துவ அமைப்புகளில் ஏதாவது ஒன்றில் சேர்ந்திருக்க வேண்டும்.

உங்கள் கோரிக்கை கோமாதா, அகண்ட பாரதம், வேதத்தின் புனிதம் போன்ற இந்துத்துவ புனிதப் பசுக்களில் ஒன்றாகவோ, வைகுண்டராஜனின் நலவாழ்வு, மிடாஸின் ஆரோக்கியம், ஜெயலலிதாவின் வறுமை போன்ற முதலாளிகளின் நலனுக்கானதாகவோ இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

– செழியன்.

மேலும் படிக்க

ராம்கோ ராஜாவுக்கு அடியாளாக போலிக் கம்யூனிஸ்டு தளபதிகள் !

7

தொழிலாளர்களை பண்ணையாட்களாக நடத்தி இரக்கமில்லாமல் சுரண்டும் இராஜபாளையம் ராம்கோ முதலாளியைப் பாதுகாக்க வெட்கங்கெட்ட பிரச்சாரம் செய்யும் போலி கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள இராஜபாளையம் ராம்கோ குழும பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியது. இங்கு தொழிற்சாலை சட்டங்களெல்லாம் செல்லுபடியாகாது. ராம்கோ சேர்மன் வைத்தது தான் சட்டம்.

பஞ்சாலைகளில் மட்டுமல்ல, இராஜபாளையம் வட்டாரம் முழுவதுமே இவர்கள் வைத்தது தான் சட்டம். இங்கு எல்லா அரசுத்துறை அதிகாரிகளும், போலீசும், கோர்ட்டும் இவர்கள் கையில். இப்படி இருக்கும் போது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை.

இங்குள்ள தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி எந்த தொழிற்சங்கமும், கட்சிகளும் பேசாத நிலையில், புதிய  ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகள் பற்றி அவர்களிடையே விளக்கிப் பிரச்சாரம் செய்து வருகிறது. தொழிளார்களை போராட்டத்திற்கு ஒன்றுதிரட்டி வருகிறது. அடியாட்களை ஏவி விடுவது, எடுபிடிகளை வைத்து மிரட்டுவது, போலீசை ஏவி பொய் வழக்கு போடுவது போன்ற ராம்கோ முதலாளியின் எதிர் நடவடிக்கைகளை எல்லாம் எதிர்த்து முறியடித்து பு.ஜ.தொ.மு வின் பிரச்சாரம் முன்னேறி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் விழிப்படைந்து வருகின்றனர். பு.ஜ.தொ.மு விற்கான ஆதரவு பெருகி வருகிறது.

புஜதொமு பிரச்சாரம்
புஜதொமு பிரச்சாரம் (கோப்புப்படம்)

இதனைக்கண்டு கலக்கமடைந்த ராம்கோ முதலாளி வேறு வழியில்லாமல் பு.ஜ.தொ.மு வின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ராம்கோ பஞ்சாலைகளின் வாயில்களில், “ராம்கோ பஞ்சாலைகளப் பற்றி அவதூறுகளைப் பரப்பி வரும் அநாமதேயங்களின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடியுங்கள்” என்ற தலைப்பிலுள்ள பிரசுரம் ஒன்று தொழிலாளர்களிடம் வினியோகிக்கப்பட்டது. பிரசுரத்தை வாங்கி தலைப்பைப் பார்த்துவிட்டு நம் முதலாளியே வெளியிட்டிருக்கிறார் என நினைத்த தொழிலாளர்கள் ஏமாந்து போனார்கள். பிரசுரத்தின் கீழ் “இவண், AITUC, HMS, INTUC” என்றிருந்தது. ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டிருக்கும் இந்த எடுபிடிகள் முதலாளியின் உத்திரவின் பேரில் இணைந்து நின்று முதலாளிக்கு ஆதரவான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர் என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொண்டார்கள்.

போலி கம்யூனிஸ்டுகளின் நோட்டிஸ்

aituc-notice-1 aituc-notice-2

போலி கம்யூனிஸ்டு AITUC சங்கம் தொழிலாளர்களுக்காக போராடுவதைப்போல நடித்து, முதலாளிகளுக்கு சேவை செய்து, தொழிலாளர்களுக்கு துரோகமிழைப்பதை பல இடங்களில் பார்த்துள்ளோம். ஆனால் இங்கு அதையும் தாண்டி ‘எகிறிக்குதித்து’ முன்னேறி விட்டனர். “எங்க முதலாளி நல்ல முதலாளி” என்று பாட்டுப்பாடி ஆட்டம் போடாத குறையாக ராம்கோ முதலாளியை ஆகா ஓகோ வெனப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

சும்மாவா! ராம்கோ முதலாளி கட்சியின் முக்கியப் புரவலராயிற்றே! கட்சியின் நகரக்குழு அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுக்கட்டாக பணமும் கொடுத்தவரல்லவா முதலாளி! அவ்வளவு ஏன்? கட்சியின் மாநிலக்குழு கூட்டமே ராம்கோ முதலாளி நடத்தும் பள்ளியில் தான் நடந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அவ்வளவு நெருக்கம்! தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி சேர்த்த பணத்தில் முதலாளியிடம் விருந்து சாப்பிடுகிறார்கள். சி.பி.ஐ யின் மாவட்டக் குழு உறுப்பினரும், ராஜபாளையம் மில் AITUC தொழிற்சங்க தலைவருமான பி.எம்.ராமசாமியோ கோடிகளில் புரள்கிறார்.

பி.எம்.ராமசாமி
சி.பி.ஐ யின் மாவட்டக் குழு உறுப்பினரும், ராஜபாளையம் மில் AITUC தொழிற்சங்க தலைவருமான பி.எம்.ராமசாமியோ கோடிகளில் புரள்கிறார்.

இந்த எடுபிடிகள் பெயரில் வெளியிட்ட பிரசுரத்தில் என்ன கூறியுள்ளனர்?

எவ்வித சட்ட உரிமையும், பாதுகாப்பும் இல்லாத தொழிற்சாலைகளிலெல்லாம் இவர்களது தொழிற்சங்கம் போராடி வருகிறதாம்! ஆனால், ராம்கோவில் அப்படி இல்லையாம்!

உண்மையில் இந்த எடுபிடிகளை தொழிலாளர்கள் குப்பையாக ஒதுக்கித் தள்ளி விட்டார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும் மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்பட்டதால் குமுறிக் கொண்டிருந்த இராஜபாளையம் மில்ஸ் சி யூனிட் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டம் செய்து சம்பள உயர்வைப் பெற்றனர். சி யூனிட் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது போராட்டத்தின் வீரியத்தை மட்டுப்படுத்த வந்த எடுபிடி சங்கங்களை தொழிலாளர்கள் புறக்கணித்து விரட்டியதை இவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த லட்சணத்தில் சட்டத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறார் ராம்கோ முதலாளி என்கிறார்கள் இந்த எடுபிடிகள்.

ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அடிபட்டாலோ, உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டாலோ அதை விபத்தாக பதிவு செய்யக் கூடாது, அதை வெளியில் சொல்லக் கூடாது. கேசுவல் லீவு தான் தரப்படுமேயொழிய மருத்துவ விடுப்பு கிடைக்காது. அதுமட்டுமல்லாமல், “தொழிலாளர்களாகிய எங்கள் கவனக் குறைவினால் தான் விபத்துகள் நடக்கும், எனவே நாங்கள் கவனத்துடன் வேலை செய்வோம்” என்று மாதம் ஒரு முறை வெயிலில் நிற்க வைத்து உறுதி மொழி வாங்குகிறார்கள். இந்த சித்திரவதையை தொழிலாளிகள் அனுபவிக்க வைத்து விபத்தில்லா ஆலை என ஒவ்வொரு ஆண்டும் விருது வாங்கி வைக்கின்றனர்.

சட்டத்திற்கு அப்பாற்பட்டு தொழிலாளர்களை காப்பதாக இந்த எடுபிடிகள் கூறுகிறார்களே, அதே ஆலையில் தான் 15 ஆண்டுகள் வேலை செய்த பின்பும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமா, 15 ஆண்டுகள் வேலை செய்த பின்பு அற்ப காரணத்தைக் கூறி வாய்மொழியாக வேலை நீக்கம் செய்கிறார்கள். நிரந்தரத் தொழிலாளர்களைக் கூட காரணமே இல்லாமல் பணி மாறுதல் செய்கிறார்கள். தொழிலாளர்களின் நலனுக்காக பல ஆலோசனைகளைக் கூறி நிர்வாகமும் அதை செயல்படுத்துவதாக பிரசுரத்தில் கூறியிருக்கும் இந்த எடுபிடிகள் இந்த பணி நிரந்தர பிரச்சனைக்காக ஏன் எந்த ஆலோசனையும் நிர்வாகத்திடம் கூறவில்லை என்று குத்தலாக கேட்கும் தொழிலாளர்களிடம் பதில் கூற முடியாமல் திணறி கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் எந்த ஆலையிலும் இல்லாத கொடுமையாக ஓவர்டைம் வேலை செய்தால் ஆலையிலிருந்து வெளியேறி விட்டதாக டைம் மிசினில் ரேகை பதிவு செய்து விட்டுத்தான் (வேலை செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல்) ஓவர்டைம் வேலை செய்ய வேண்டும் என்று நிர்வாகம் கூறியிருப்பது, சம்பளம் கொடுக்கும் போது ஓவர்டைம் சம்பளம் என்று குறிப்பிடாமல் “புரடக்‌ஷன் இண்சென்டிவ்” என்று எழுதி திருட்டுத்தனம் செய்வது இந்த எடுபிடிகளின் ஆலோசனையினால் தானா என்று தொழிலாளிகள் கேட்கிறார்கள்.

வாரவிடுப்புக்கு சம்பளம் இதுவரை ராம்கோ குழும பஞ்சாலையில் கொடுக்கப்பட்டதாக வரலாறே இல்லை. இது தான் சட்டத்திற்கு மேலும் தொழிலாளிக்கு வாரி வாரி வழங்கும் வள்ளலான ‘குருபக்தமணி’யின் லட்சணமா? என்று தொழிலாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் ஆளில்லை.

கக்கூசில் தண்ணீர் இல்லாமல் போட்டுவிட்டு புல்வெளிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறார்களே; சாப்பிடும் இடத்திற்கு பத்து நிமிடம் நடக்க வேண்டியதிருக்கும் நிலையில் 30 நிமிடம் மட்டுமே உணவு இடைவேளை கொடுக்கிறார்களே; சாப்பிட்டு விட்டு வருவதற்கு ஒரு நிமிடம் லேட் ஆனாலும் சம்பளத்தில் பிடித்தம் செய்கிறார்களே இதெல்லாம் இந்த எடுபிடி தொழிற்சங்கங்களின் ஆலோசனையினால் தானா? என்று தொழிலாளர்கள் குமுறுகிறார்கள்.

தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்க பல லட்ச ரூபாய்கள் நிதி உதவி, தொழிலாளர்களுக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் சொந்த பணத்தில் நிலம் வாங்கி அதனை குறைந்த விலையில் தொழிலாளிகளுக்கு கொடுத்தது, தொழிலாளர்களின் சுபநிகழ்ச்சிகளுக்காக திருமண மண்டபம் கட்டியது, பள்ளி, கல்லூரிகளை உருவாக்கியது என்று கோயபல்சுகளே வெட்கப்படும் அளவுக்கு இந்த போலி கம்யூனிச எடுபிடி தொழிற்சங்கங்கள் முதலாளிக்கு கூஜா தூக்கியிருக்கின்றன. ஆனால் உண்மை நிலை என்ன?

ராம்கோ பிரசுரம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராம்கோ முதலாளி பிறந்தநாள் கொண்டாங்களை எதிர்த்து தன்னிச்சையாக தொழிலாளர்கள் ஒட்டிய சுவரொட்டி

முதலாளி பி.ஏ.சி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கே தொழிலாளிகளின் சம்பளத்தில் கட்டாய வசூல் செய்த ஆலை நிர்வாகமா தொழிலாளிகளின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளி கல்லூரிகளும், தொழிலாளர்களுக்காக வீடும் கொடுக்கப்போகிறது? கல்லூரியில் இடம் வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டும். இராஜபாளையம் பகுதியில் புறம்போக்கு நிலங்களும், குளங்களும் ராம்கோவால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதும், இதற்காக யார் சட்டமன்ற உறுப்பினராக வந்தாலும் அவர்களுக்கு கார் பரிசளிப்பதும் வாடிக்கை என்று தொழிலாளர்கள் மட்டுமல்ல, இராஜபாளையம் மக்களே பேசுகிறார்கள். இப்படி எடுக்கப்பட்ட நிலங்களைத்தான் செண்டுக்கு ரூ 4,000 எனும் விலையில் தொழிலாளர்கள் தலையில் கட்டி கொள்ளை லாபம் சம்பாதித்தது ஆலை நிர்வாகம்.

போலி கம்யூனிஸ்டுகள் பன்னாட்டு நிறுவனங்களை தொழில் தொடங்க அழைத்து விட்டு அதை மனித முகம் கொண்ட முன்னேற்றம் என்கிறார்கள். இவர்களோ ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரனை வள்ளல் என்கிறார்கள். வேண்டுமானால் இந்த எடுபிடிகள் இன்னொரு நோட்டீஸ் போட்டு அதில் என்ன செலவில் எவ்வளவு நிலம் பெறப்பட்டது? எத்தனை தொழிலாளிக்கு நிலம் கொடுத்தார்கள்? அதற்காக பெறப்பட்ட தொகை எவ்வளவு? போன்ற விபரங்களை வெளியிடட்டும்.

தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் செய்து அந்தப் பணத்தைக் கொண்டு திருமண மண்டபம் கட்டி தன் பெயரில் பதிவு செய்து கொண்டிருக்கிறார் ராம்கோ முதலாளி. இந்த மண்டபத்தில் எந்த தொழிலாளியின் சுபநிகழ்ச்சிக்காவது இலவசமாகக் கூட வேண்டாம் குறைந்த வாடகையிலாவது கொடுத்ததிருக்கிறார்களா? ஆனால் வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும் தொழிலாளியின் வீட்டு வைபவம் என்றால் முன்னுரிமை கொடுப்பார்களாம். என்ன பித்தலாட்டம் இது! ஆனால் தற்சமயம் முன்னுரிமை கூட கொடுப்பதில்லை என்பது தான் உண்மை.

ராம்கோ முதலாளி நிதி உதவியுடன் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி அலுவலகம் கம் திருமண மண்டபம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இப்படி ஒரு பிரசுரம் வெளியிட்டு எடுபிடி சங்கங்கள் தங்களைத் தாங்களே மேலும் அம்பலப்படுத்திக் கொண்டாலும், தொழிலாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சட்டப்படியான உரிமைகள் எதுவும் கிடைத்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் பணி நிரந்தரம், வாரவிடுப்பு சம்பளம், ஓவர்டைமுக்கு இரட்டிப்பு சம்பளம் போன்ற சட்டப்படியான உரிமைகள் இருக்கின்றன என்பதையே பு.ஜ.தொ.மு பிரச்சாரத்திற்குப் பிறகு தான் தொழிலாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆலையில் ஒரு இரகசிய தேர்தலை இன்று நடத்தினாலும் கூட இந்த சங்கங்கள் ஒற்றை ஒரு வாக்கைக் கூற பெற முடியாது என்பது தான் தொழிலாளர்கள் கூறும் உண்மை.

தொழிற்சங்கம் என்பது, தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி பிழைக்கும், முதலாளி வர்க்கத்தை முறியடித்து, உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய, அதிகாரத்தை வென்றெடுக்கப் போராடும் அமைப்பாகும். இதனையே புரட்சிகர கம்யூனிஸ்டுகள் தங்களின் வரலாற்றுக் கடமையாகக் கருதுகிறார்கள். ஆனால் போலி கம்யூனிஸ்டுகளோ தொழிலாளி வர்க்கத்தின் சுயமரியாதையை முதலாளியிடம் அடகுவைக்கும், பிழைப்புவாதிகளாகளாக சீரழிந்து விட்டார்கள் என்பதையே மீண்டும் மீண்டும் தங்கள் செயல்களின் மூலம் நிரூபிக்கிறார்கள்.

நேர்மையான, ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத, காவல்துறை போன்ற ஏவல்துறைகளின் கெடுபிடிகளை எதிர்கொண்டு நிற்கக் கூடிய, எதற்கும் விலை போகாத தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு வின் செங்கொடிகளை ராம்கோ தொழிலாளர்கள் வெளிப்படையாக ஏந்தி வலம் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

இவண்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ராஜபாளையம்

காவிமயமாகும் நீதித்துறை – HRPC கண்டன ஆர்ப்பாட்டம்

6

மோடி அரசின் நீதித்துறை ஆணைய மசோதா ! நீதித்துறையை காவி மயமாக்கும் சதி !

தேசிய நீதித்துறை ஆணைய மசோதாவும், அதை அங்கீகரிக்கும் அரசியல் சட்டத்திருத்த மசோதாவும் மக்களவை, மாநிலங்களவையில் கடந்த 13, 14.08.14–ம் தேதிகளில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. மோடி அரசு முன் மொழிந்த மசோதாவை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. நீதித்துறை ஊழலைப் பேசுவது போல மார்க்கண்டேய கட்ஜூ மூலம் விவாதத்தைத் தொடங்கி, ஊடகங்கள் மூலம் ஒரு மாத கால தொடர் பிரச்சாரம் செய்து, ஊழலை ஒழிக்கும் நோக்கத்துக்காகவே இம்மசோதா கொண்டுவரப்படுவது போல ஒரு கருத்தை உருவாக்கி, இந்த மசோதா மிக அவசரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

யோக்கிய சிகாமணி மார்க்கண்டேய கட்ஜூவின் நாடகம்!

கட்ஜூ சொன்ன நீதித்துறை ஊழல் தொடர்பான விசயங்கள் புதியவையல்ல. முன்சீப் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை ஊழலால் அழுகி நாறுவது மக்களும், வழக்கறிஞர்களும் நன்கு அறிந்ததுதான். பல்வேறு வழக்குரைஞர்களும், மனித உரிமை அமைப்புகளும், புரட்சிகர அமைப்புகளும்இதனை ஏற்கெனவே அம்பலப்படுத்தியுள்ளனர். இன்று வாய் கிழியப் பேசும் கட்ஜூ காங்கிரஸ் ஆட்சியில் நீதித்துறை ஆணைய மசோதா கொண்டுவரப்பட்ட போது வாய் திறக்கவில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளில் எட்டு பேர் ஊழல் பேர்வழிகள் என்ற பிரசாந்த் பூசனின் மனுக் குறித்து எதுவும் பேசியதில்லை. உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்ற ஊழல் நீதிபதிகள் மீது நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் கொண்டுவந்தாலன்றி நடவடிக்கையே எடுக்க முடியாது என்ற அயோக்கியத்தனமான சட்டப்பாதுகாப்பு பற்றி எதுவும் பேசியதில்லை. “ஜெயலலிதா நீதித்துறையின் மாண்புகளை மதித்தார்” “ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று ஆனந்த விகடன் பேட்டியில் அவர் சொல்லியிருப்பதிலிருந்தே அவருடைய யோக்கியதையையும் நோக்கத்தையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

நீதித்துறையை விழுங்குவதே ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி.யின் நோக்கம்!

பன்னாட்டு நிறுவனங்கள், அம்பானி, அதானி, மிட்டல், டாடா, கலாநிதி மாறன் போன்ற முதலாளிகளின் சொத்துக்களை பல மடங்கு உயரச் செய்த தனியார்மயக் கொள்கையையும், பார்ப்பன மேலாதிக்கத்திற்கான வருணாசிரமக் கொள்கையையும் தங்கு தடையின்றி நிறைவேற்றவே பா.ஜ.க. இன்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. உளவுத்துறை அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், அரசு செயலர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் எனப் பல மட்டங்களில் தங்களின் ஆட்களை நியமித்து வரும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி-யினரின் அடுத்த இலக்கு நீதித்துறையைக் கைப்பற்றுவதாகும். பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய பெரு முதலாளிகளுக்கு பொதுச்சொத்துகளையும் பொதுத்துறையையும் விரைவாக வாரிக்கொடுப்பதற்கு ஏற்ற விதத்தில் நீதித் துறையின் அதிகாரங்களைக் குறைத்து, டிராய், பசுமைத் தீர்ப்பாயங்கள், மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் அமைக்கப்பட்டு முதலாளிகளுக்கு ஆதரவான நபர்கள் அங்கெல்லாம் பதவியில் அமர்த்தப்பட்டு விட்டனர். இதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிறது மோடி அரசு.

கடந்த மே 6, 2014 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான நீதிபதிகள் குழுவால் (கொலீஜியம்) பரிந்துரைக்கப்பட்ட முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தின் நியமனத்தை மோடி அரசு நிராகரித்தது. இதைத் தொடர்ந்து ஜூன் 25-ம் தேதி கோபால் சுப்பிரமணியம் நீதிபதி நியமனத்துக்கான தனது ஒப்புதலை திரும்பப் பெற்றுக் கொண்டார். சோராபுதீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் தான் நீதிமன்றத்தின் நண்பராக செயல்பட்டதால்தான் மோடி அரசாங்கம் தன் மீது களங்கம் கற்பித்து, அவதூறு பரப்பும்படி உளவுத்துறையை மோடி அரசு பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். அதன் பின்னர் கோபால் சுப்பிரமணியன் இடத்தில் மோடியின் வழக்கறிஞர் உதய் லலித் உச்சநீதிமன்ற நீதிபதியாக்கப்பட்டுள்ளார். குஜராத் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கும், மோடி அரசுக்கும் ஆதரவாக ஆஜரான வழக்குரைஞர்களே சொலிசிட்டர் ஜெனரல், அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கன்றனர். இதற்கெல்லாம் வழக்குரைஞர்கள் மத்தியிலிருந்து எந்த எதிர்ப்பும் வராததை சாதகமாக்கிக் கொண்டு, அடுத்த தாக்குதலை தொடுத்திருக்கிறது மோடி அரசு.

நேற்று அன்னா ஹசாரே, இன்று கட்ஜு !

நீதித்துறை ஊழல் பற்றி கட்ஜூ அரங்கேற்றியிருக்கும் நாடகத்துக்கும் அலைக்கற்றை ஊழல் விவகாரத்தின் பின்புலத்தில் அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு நாடகத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அன்னாவின் பின்புலத்தில் ஆர்.எஸ்.எஸ் இருந்தது. அன்று மோடிக்கு நற்சான்று கொடுத்தார் ஹசாரே. இன்று ஜெயலலிதாவுக்கு நற்சான்று கொடுக்கிறார் கட்ஜு. தமிழ்நாடுதான் ஊழலின் உறைவிடம் என்பது போலவும், வட இந்திய, ஆதிக்க சாதி நீதிபதிகளெல்லாம் யோக்கிய சிகாமணிகள் போலவும் ஒரு தோற்றம் இந்த விவாதத்தின் மூலம் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது.

தனியார்மயம், தாராளமயம் என்ற மக்கள் விரோத கொள்கையின் மூலம் மக்களின் வாழ்வாதாரங்களையும் பொதுச்சொத்துகளையும் கார்ப்பரேட் முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் பகற்கொள்ளையடிக்கும் பிரச்சினையை பின்னுக்கு தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழல் மட்டும்தான் ஒரே தேசியப் பிரச்சினை என்று சித்தரித்தார் அன்னா ஹசாரே. மூலமுதல் திருடர்களான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சொந்தமான ஊடகங்கள் அன்னா ஹசாரேயை விளம்பரப்படுத்தின. தற்போது கட்ஜு விசயத்தில் நடப்பதும் அதுதான்.

ஊழல், மதவெறித் தாக்குதல்கள், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறைகள், பாலியல் குற்றங்கள், போலீசின் அத்துமீறல்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தினரின் மெகா ஊழல்கள், தனியார்மயக் கொள்கையின் விளைவாக நடக்கும் இயற்கை வளக்கொள்ளைகள் போன்ற பல பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளில் நீதித்துறை செய்திருப்பதென்ன? கொத்து கொத்தாக தலித் மக்கள் கொல்லப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகள் மொத்தமாக விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். வோடபோன் நிறுவனத்தின் பல்லாயிரம் கோடி வரி ஏய்ப்பு நீதிமன்றத்தால் நியாயப்படுத்தப் பட்டிருக்கிறது. நர்மதை அணைக்காக பல இலட்சம் பழங்குடி மக்கள் மாற்று இடம் கூடத் தரப்படாமல் துரத்தப்படுவதை உச்ச நீதிமன்றம்தான் சாத்தியமாக்கியது. பல ஊழல் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் விடுவித்தது மட்டுமல்ல, தற்போது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை இத்தனை ஆண்டு காலம் இழுப்பதற்கு உச்சநீதிமன்றம்தான் துணை நின்றிருக்கிறது. சிதம்பரம் கோயிலை தீட்சிதர் வசம் ஒப்படைத்ததும், தகுதி வாய்ந்த பார்ப்பனரல்லாத அரச்சகர்க மாணவர்களை தெருவில் நிறுத்தியிருப்பதும், பாபர் மசூதிதான் இராமன் பிறந்த இடம் என்று தீர்ப்பளித்திருப்பதும் இந்த நீதித்துறைதான். அநீதியான இந்த தீர்ப்புகள் அனைத்தும் சட்டப்படிதான் வழங்கப்பட்டிருக்கின்றன. அவ்வளவு ஏன், பிரேம்குமார் எஸ்.பி தனக்கு இழைத்த வன்கொடுமைக்கு எதிராக நல்லகாமன் என்ற இராணுவ வீரர் 25 ஆண்டு வழக்கு நடத்தி மதுரை உயர்நீதிமன்றத்தில் பெற்ற நீதியை, எவ்வித விசாரணையும் இன்றி இரண்டே நிமிடத்தில் ரத்து செய்தவர் ஊழலற்ற உத்தமர் என்று பீற்றிக் கொள்ளும் இதே கட்ஜுதான்.

இந்த நீதித்துறை அமைப்பு மக்களுக்கு நீதி வழங்கவில்லை என்ற மையமான உண்மையை கட்ஜு வேண்டுமென்றே திசை திருப்புகிறார். நீதித்துறையில் புறையோடியிருக்கும் ஊழலை ஒழிப்பது பற்றிக்கூட யோக்கியமான முறையில் அவர் பேசவில்லை. மாறாக சில ஊழல் நீதிபதிகள் மட்டும்தான் பிரச்சினை போலவும், அவர்களால்தான் நீதித்துறை கெட்டுவிட்டது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி மோடி அரசு நீதித்துறையை கைப்பற்றிக் கொள்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறார்.

இந்த மசோதா நிறைவேறினால் ?

1993-ம் ஆண்டு மூன்று நீதிபதிகள் வழக்கில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிபதிகள் நியமனத்தில் “கொலீஜியம் முறை” கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நியமன முறையில் நீதிபதிகளின் மீதான மக்களின் கண்காணிப்பு என்பதற்கான வாய்ப்பு அறவே கிடையாது. ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகார வர்க்கத்தைப் போல மக்கள் மீது திணிக்கப்படுபவர்களாகவே நீதிபதிகளும் இருக்கிறார்கள். இதிலும் ஏராளமான ஊழல்கள் ! ஆளும் கட்சித் தலையீடு, சாதி, பணம் என்று எல்லா முறைகேடுகளும் நீதிபதிகள் நியமனத்தில் நிரம்பியிருப்பது நாம் அறியாததல்ல. இதில் நீதித்துறையும் அரசும் கூட்டுத்தான். நீதித்துறை சுதந்திரம் என்று சொல்லப்படுவதன் உண்மை நிலை என்ன என்பது வழக்குரைஞர்கள் அறியாததல்ல.

தற்போது மோடி அரசு கொண்டு வந்திருக்கும் மசோதாவின்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவருடன் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் இருவர், மத்திய சட்ட அமைச்சர் மற்றும் இரு தகுதிவாய்ந்த நபர்கள் என ஆறு நபர்கள் ஆணையத்தில் பதவி வகிப்பார்கள். தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் தகுதி வாய்ந்த நபர்களைத் (EMINENT PERSONS) தோ்ந்தெடுப்பர். உதாரணமாக தகுதிவாய்ந்த நபர்களாக சுப்பிரமணியசாமியும், சோ.ராமசாமியும் நியமிக்கப்படலாம். எந்தவொரு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதியின் நியமன உத்தரவையும் தகுதி வாய்ந்த இரு உறுப்பினர்கள் எதிர்த்தால் நியமனம் செய்ய இயலாது என இச்சட்டம் கூறுகிறது. தலைமை நீதிபதி பணி மூப்பின் வாயிலாக நியமிக்கப்படுவதையும் இச்சட்டம் மாற்றுகிறது. மத்திய அரசு நீதிபதிகளின் நியமன அதிகாரம் கொண்ட அமைப்பாக இச்சட்டம் மூலம் மாறுகிறது.

ஆளும் கட்சியின் கொள்கையை எதிர்ப்பவர்கள் கூட இனி நீதிபதியாக முடியாது. நீதிபதி நியமனத்துக்கு உளவுத்துறை அறிக்கை ஒரு அடிப்படையாக இருக்கிறது. ஏற்கனவே ஐ.பி.யில் 50 சதவீதம் பேர் பார்ப்பனர்களாகவும், ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களாகவுமே உள்ளதால் என்ன நடக்கும் என்பதை எளிதில் நாம் யூகிக்கலாம். மேலும் மாநில அளவிலான நீதித்துறை ஆணையங்கள் அமைவதும் மறுக்கப்பட்டுள்ளது. தற்போது 275 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் மேற்படி இடங்களில் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி ஆட்கள் விரைந்து நியமிக்கப்படுவர். இந்த சட்டம் அமலானால், இன்னும் 20 வருடங்களுக்கு மோடி அரசால் நியமிக்கப்படும் நீதிபதிகளே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவும், தலைமை நீதிபதியாகவும் வருவார்கள். ஏட்டளவில் இருக்கும் மதச்சார்பின்மையும் இத்தகைய நீதிபதிகளின் தீர்ப்புகளால் ரத்து செய்யப்பட்டு, எல்லா துறைகளிலும் இந்து ராஷ்டிரம் சட்டபூர்வமானதாக்கப்பட்டுவிடும்.

குஜராத் படுகொலை தொடர்பான வழக்குகள் ஒரு சிலவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கும் நிலையைக் கூட இனி எதிர்பார்க்க முடியாது. சாதி ஒடுக்குமுறை தொடர்பான வழக்குகளுக்கும் இதே கதிதான் ஏற்படும். இந்த மசோதா நிறைவேறினால், ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் சொல்லி வருவதுபோல் 25 ஆண்டுகளுக்கு அவர்கள் ஆட்சிதான் நடக்கும். அது சர்வாதிகாரமாகத்தான் இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போதே இணைய தளங்களில் மோடிக்கு எதிராக எழுதுவோர் கைதுசெய்யப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள். ஜனநாயகம், உரிமை பேசுவோர் ஒடுக்கப்படுகிறார்கள். பெயரளவில் இருக்கும் கருத்துரிமை கூட இனி இல்லாமல் போய்விடும்.

ஏற்கெனவே இந்தித் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, பாடத்திட்டங்களில் வரலாற்றுப் புரட்டு என்று மோடி அரசின் பார்ப்பன இந்து மதவெறி நடவடிக்கைகள் முழு வீச்சில் தொடங்கி விட்டன. அதன் தொடர்ச்சிதான் இந்த மசோதா. இதனை எதிர்த்து முறியடிப்பதற்கான முதல் குரல் தமிழகத்திலிருந்து எழும்ப வேண்டும். ஜனநாயகத்தை நேசிக்கும் எல்லோரும் இதில் பங்கேற்க வேண்டும்.

இவ்வகையில், பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டு நரேந்திர மோடியின் நீதித்துறை நியமன மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் 25.08.2014 அன்று காலை 10.00 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் முன்பு நடைபெற்றது. வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

நீதித்துறையை காவிமயமாக்கும் மோடி அரசின் ஆர்.எஸ்.எஸ் உடனான கூட்டுசதியை அம்பலப்படுத்தும் வகையில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சுமார் 40 வழக்கறிஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மோடி அரசின் நீதித்துறை மீதான தாக்குதலைக் கண்டித்து வழக்கறிஞர்கள் பலர் உரையாற்றினர்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞருமான மு.திருநாவுக்கரசு அவர்கள் பேசும்போது, “நீதித்துறையின் மீதுதான் மக்களுக்கு ஓரளவு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையையும் மோடி அரசின் நீதித்துறை ஆணைய மசோதா பறிக்கிறது. இதன்மூலம் இந்தியா முழுவதிலுமுள்ள உயர்நீதிமன்றங்களில் 275 நீதிபதி பதவிகளுக்கான காலியிடங்களை ஆர்.எஸ்.எஸ் காரர்களால் நிரப்பி நீதித்துறையை காவிமயமாக்க முயற்சிக்கின்றனர். “நெருங்குதடா! இருள் நெருங்குதடா! காவிஇருள் நெருங்குதடா!” என்ற ம.க.இ.க.வின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. இதை நாம் அனுமதித்தோமேயானால் இன்னும் 20 ஆண்டுகள் வரை நீதித்துறை மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கும. எனவே இச்சதியை முறியடிக்க வழக்கறிஞர்கள் நாடுமுழுவதும் அணி திரண்டு போராட வேண்டும். மதுரையில் பற்றியிருக்கும் இந்தத் தீப்பொறி நாடுமுழுவதும் பரவவேண்டும்” என்று தனது கருத்தை பதிவு செய்தார்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும், வழக்கறிஞருமான பீட்டர் ரமேஷ்குமார் அவர்கள் பேசும்போது, “இந்திய பாராளுமன்றத்தில் 33% கிரிமினல்கள் உள்ளனர். இந்தக் கிரிமினல்களால் தேர்வு செய்யப்படும் நீதிபதிகளின் யோக்கியதை எப்படி இருக்கும் என்பதை விளக்கித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. இந்த மசோதாவிற்கு எதிராக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறுமானால் அது உயர்குடிப்பிறப்பாளர்கள் என்று சொல்லிக் கொண்டு திரியும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்” என்று விளக்கிப் பேசினார்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இக்பால் அவர்கள் பேசும் போது, “நீதித்துறை ஊழல் நிறைந்ததாக மாறிவிட்டது. ஊழலுக்கு எதிராக போராட வேண்டியது நமது கடமை. இந்த சட்டம் ஊழலை ஒழித்து விடுமா? இவர்களால் தேர்வுசெய்யப்படும் நீதிபதிகள் எப்படி செயல்படுவார்கள் என்பது தெரியாதா? அரசியல்வாதிகள் தங்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகளிலிருந்து தப்பிக்கவே இந்த சட்டம் பயன்படும். அதனால் தான் இந்த மசோதாவை ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் யாரும் எதிர்க்கவில்லை. இந்தப்போராட்டம் ஒரு ஆரம்பம் தான், இந்த மசோதா வாபஸ் பெறப்படும்வரை இப்போராட்டம் தொடரும்” என்று குறிப்பிட்டார்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வின்சென்ட் அவர்கள் பேசும் போது, “பா.ஜ.கவிற்கு தேவையான ஆட்களை ஆர்.எஸ்.எஸ் தேர்வு செய்து அனுப்பிக் கொண்டிருக்கிறது. அதேபோல பா.ஜ.க வுக்கு தேவையான உத்தரவுகளை வழங்குவதற்கு தேவையான நீதிபதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புதற்கே இந்த ஆணையம் அமைக்கப்படவுள்ளது. மக்கள் இலவசங்களைக் கண்டு ஏமாறுகிறார்கள். இந்தநிலை மாற போராட வேண்டும். மோடி அரசின் இந்த நீதித்துறை ஆணைய மசோதாவை எதிர்த்துப் போராடியதின் மூலம் நாம் இன்று ஒரு மிகப்பெரிய எதிர்ப்பை பதிவுசெய்திருக்கிறோம்” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.

சமநீதிவழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினரும், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான திரு.ராஜேந்திரன் அவர்கள் பேசும் போது, “இந்தவருடம் நீதித்துறை ஆணைய மசோதா, அடுத்த வருடம் ராமர் கோயில் எல்லாமே ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டப்படி நடக்கிறது. இந்த மசோதா நிறைவேறினால் இனிமேல் ஆர்.எஸ்.எஸ் வக்கீல்கள் மட்டுமே நீதிபதிகளாக முடியும்.” என்று மோடி அரசின் எதிர்கால மக்கள் விரோத போக்கு எவ்வாறிருக்கும் என்பதைப் பற்றி விளக்கிப்பேசினார்.

சமநீதிவழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினரும், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான திரு.கதிர்வேல் அவர்கள் பேசும் போது, “குஜராத் படுகொலையை முன்னின்று நடத்தியவரான மோடி போன்ற ஒருவர் பிரதமராவது என்பது இந்தியாவில் மட்டும் தான் நடக்கும். எனவே ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளுக்கு எதிராக முன்பை விட அதிகஅளவில் போராட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது” என்று நமது நாட்டின் தற்போதைய நிலைமையையும் மக்களுக்கு இருக்கும் கடமையையும் பற்றி விளக்கிப்பேசினார்.

மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.ரத்தினம் அவர்கள் பேசும் போது, “எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் அதிகமாக இருக்கிறது. எல்லா அலுவலகங்களிலும், நீதிபதிகளின் அறைகளிலும் பல்வேறு சாமி படங்களை வைத்து பூஜை நடைபெறுகிறது. மேல்மருவத்தூர், திருப்பதி கோவில்களுக்கு சென்று ஊழலில் சேர்த்த பணத்தை காணிக்கையாக போட்டு விடுகின்றனர். அம்பேத்கர் சமஸ்கிருதம் படித்தார். அதனால் தான் அவரால் பார்ப்பனர்களின் யோக்கியதையை அம்பலப்படுத்தமுடிந்தது. நாம் அம்பேத்கரின் நூல்களைப் படிக்காமல் இருப்பதை நினைத்து வெட்கப்படவேண்டும்.

காந்தி பிறந்தமண் என்பதால் குஜராத்தில் மட்டும் மதுவிலக்கு இருக்கிறது. இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொணடு வரமுடியுமா. நாம் அறிவை ஆயுதமாக்கி ஒருபடையாக எழுவோம், நம்மால் முடியும். ஒரு புதிய சமூகத்தை கட்டமைக்க முடியும். அம்பேத்கரும், இடதுசாரிகளும் அதைத்தான் செய்தார்கள். இந்த சமூகம் வேகமாக சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதை மாற்ற நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு பிறருக்கு கற்பிப்பதற்கும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த பாசிசக் கும்பலுக்கு எதிராக போராட நாம் நமது அறிவை ஆயுதமாக்குவோம்” என்ற அனுபவப்பூர்வமான பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க பொறுப்பாளரான வழக்கறிஞர் அப்பாஸ் அவர்கள் பேசும் போது, “பா.ஜ.க சிறுபான்மை இனத்தைச் சர்ந்த மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து இந்து சமூக மக்களுக்கும் எதிரி. ஆனால் அது எப்போதும் பார்ப்பானுக்கு கீழே மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களை வைத்திருக்கிறது. இதைத்தான் மனுதர்மம் என்று கூறுகின்றனர். விரைவில் பா.ஜ.க தலைவர்கள் அக்கட்சியை ஆதரிக்கும் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக இதே கொடுமையை திணிக்கும்.” என்று குறிப்பிட்டார்.

ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்டத் துணைச்செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசும் போது, “இது நீதித்துறை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல இது மக்கள் பிரச்சனையும் கூட கட்ஜூ சொன்ன, நீதித்துறை ஊழல் புதியது அல்ல. ஆனால் இவர் உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதோ காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலோ இப்பிரச்சனை தொடர்பாக பேசியதே இல்லை. ஆனால் தற்போது மோடியுடன் சேர்ந்து கொண்டு இப்போது திடீரென பேசுகிறார். அதுவும் தமிழகம் மட்டுமே நீதித்துறையில் தலையிட்டதாகவும் மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் எல்லாம் யோக்கியமாக இருந்து வந்ததைப்போலவும் பேசியுள்ளது மற்றும் ஜெயலலிதா நீதித்துறையை மதித்து நடப்பவர் என்று நற்சான்றிதழ் வழங்கியுள்ளது உள்ளிட்ட செயல்கள் கட்ஜுவின் யோக்கியதையை வெளிச்சம் போட்டுகாட்டுகிறது. மேலும் இதுபோன்று திடீர் விவாதத்தை திட்டமிட்டு ஊடகங்களில் ஒளிபரப்பச்செய்து உடனடியாக அவசரஅவசரமாக இந்த மசோதாவைத் தாக்கல் செய்வதில் இருந்தே இது நீதித்துறையை காவி மயமாக்கும் முயற்சி என்பது பட்டவர்த்தனமாகியுள்ளது. இதை எதிர்த்துப் பெரியார் பிறந்த மண்ணிலிருந்து போராட்டத்தை தொடங்குவோம்” என்று நீதித்துறை ஆணைய மசோதா தாக்கல் செய்துள்ளதன் பின் ஒளிந்திருக்கும் உண்மைகளை விளக்கினார்.

இறுதியாக ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்ட துணைத் தலைவரும் மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான பா.நடராஜன் அவர்கள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனிதஉரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக்கிளையின் வழக்கறிஞர்கள் பா.வெங்கடேசன், எஸ்.லூயிஸ், எஸ்.ராஜசேகர், சி.ராஜசேகர், டீ.அஸ்வின், எம்.பாசில், சு.கருணாநிதி, பினயகாஸ், பி.சரணவச்செல்வி, சி.மன்மதன் ஆகியோர் உள்ளடங்கிய சுமார் 40 வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 75 பேர் கலந்து கொண்டனர். இப்போராட்டம் வழக்கறிஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
————————————————————–

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக்கிளை.
தொடர்புக்கு – 9865348163, 9443471003.

மைக்கேல் பிரௌன் – அமெரிக்க சொர்க்கத்தின் நரபலி !

4

மைக்கேல் ப்ரௌன் 18 வயதே ஆன அமெரிக்க கருப்பின இளைஞன். அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்திற்கு உட்பட்ட செயின்ட் லூயிஸ் பகுதியில் அமைந்துள்ள பெர்குசன் நகரத்தைச் சேர்ந்தவர். மைக்கேல் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி இரவு தன் பாட்டி வீட்டிற்கு நண்பன் டோரியன் ஜோன்சனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த டேரன் வில்சன் என்கிற வெள்ளையின போலீசு அதிகாரி, இந்த இளைஞர்களைத் தடுத்து நிறுத்துகிறார்.

பெர்குசன் போலீஸ்
மைக்கேல் பிரவுன் கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை தாக்கும் பெர்குசன் போலீஸ்

கருப்பர்கள், வெள்ளை போலீசு அதிகாரிகளால் சோதனை என்கிற பெயரில் துன்புறுத்தப்படுவது அமெரிக்காவில் வழமையானது தான். தெருவில் நடமாடாமல் உடனடியாக ஓடிப் போகுமாறு ஆத்திரமாக கூச்சலிடுகிறார் டேரன் வில்சன். அவருக்கு பதிலளித்த மைக்கேல், தாங்கள் செல்லும் இடம் அருகில் தான் இருப்பதாகவும், சீக்கிரம் சென்று விடுவோம் என்றும் பதில் அளித்துள்ளார்.

தனது உத்தரவிற்கு கீழ்ப்படியாமல் ஒரு கருப்பினத்தவன் எதிர்வாதம் புரிந்து கொண்டிருப்பதைக் கண்டு ஆத்திரமுற்ற போலீசு அதிகாரி, அவரது ரோந்து காரின் முன்பக்க ஜன்னலின் வழியே மைக்கேலின் சட்டையைப் பிடித்து இழுத்துள்ளார். அவரிடமிருந்து போராடி விடுவித்துக் கொண்ட மைக்கேல் உடனடியாக தனது நண்பனை அழைத்துக் கொண்டு ஓடியிருக்கிறார். ஆத்திரம் தலைக்கேறிய டேரன் வில்சன் காரில் இருந்து வேகமாக இறங்கி, முன்னே பத்து மீட்டர் தொலைவில் ஓடிக் கொண்டிருந்த மைக்கேலை தனது பிஸ்டலால் இரண்டு ரவுண்டுகள் சுடுகிறார்.

குண்டடிபட்ட மைக்கேல் கைகளை உயர்த்தியவாறே தன்னிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். மைக்கேலின் கதறல்களைக் காதில் போட்டுக் கொள்ளாத வில்சன், நிராயுதபாணியாக நின்று கொண்டிருந்த அந்த இளைஞனை நோக்கி மேலும் நான்கு முறை துப்பாக்கியால் துளைக்கிறார். ஆறு குண்டுகளை உடலில் தாங்கி கீழே சரியும் மைக்கேல் ப்ரௌன் அதே இடத்தில், அடுத்த மூன்று நிமிடங்களில் உயிர் துறக்கிறார்.

மைக்கேலின் மரணம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. பெர்குசன் பகுதி கருப்பின மக்கள் அடர்த்தியாக வாழும் கெட்டோ (Ghetto) எனப்படும் சேரியைக் கொண்டதாகும். அவர்களில் அனேகர் வெள்ளை இனவெறியால் கல்வி, வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட ஏழைகள். மைக்கின் குடும்பமும் ஒரு ஏழைக் குடும்பம் தான். மைக் அப்பொழுது தான் பள்ளிக் கல்வியை  முடித்துவிட்டு, குளிர்சாதனங்கள் பழுது பார்க்கும் தொழில்நுட்பத்தை கற்று வந்தார்.

ஆர்ப்பாட்டம்
“எனது கருப்பு நிறம் ஒரு ஆயுதமல்ல”

மிசௌரி மாகாணம் வெள்ளை இனவெறிக்குப் பெயர் போன பகுதிகளில் ஒன்று. 1860-களில் தீவிரமடைந்திருந்த அமெரிக்க உள்நாட்டுப்போர் காலத்தில் கருப்பின அடிமை முறையை தக்க வைத்துக் கொள்ள போர் புரிந்த தென்மாநிலங்களில் ஒன்று மிசௌரி.  பின்னர் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தின் வெள்ளை இனவெறி பயங்கரவாதக் குழுவான கூ க்ளக்ஸ் கிளான் செல்வாக்கு இந்தப் பகுதியில் மிகுந்திருந்தது. நியோ நாஜிகளின் வெளிப்படையான செயல்பாடுகள் மிகுந்த இப்பகுதியில் தற்போது கன்சர்வேட்டிவ் சிட்டிசன் கவுன்சில் என்கிற கவுரவமான பெயரில் பழைய கூ கிளக்ஸ் கிளான் மற்றும் நியோ நாஜிகள் வெளிப்படையாக வெள்ளை இனவெறி பேசி வருகிறார்கள்.

இந்தியாவில் பார்ப்பனியத்தின் பிடியில் தலித்துகள் – பழங்குடி மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு சற்றும் குறையாத சித்திரவதைகளை அமெரிக்க கருப்பினத்தவர்கள் வெள்ளை இனவெறியின் கீழ் அனுபவித்து வருகிறார்கள்.

வரலாற்று ரீதியில் கருப்பின மக்கள் அனுபவித்து வந்த இனவெறிக் கொடுங்கோன்மை அவர்களிடையே கோபாவேச உணர்வைத் தோற்றுவித்திருந்தது. மைக்கின் மரணம் காய்ந்து கிடந்த சருகுகளின் மேல் மின்னல் போல பாய்ந்ததற்கு ஒப்பான விளைவை உடனடியாகவே ஏற்படுத்தியது. கருப்பின மக்கள் இந்த முறை தனித்து விடப்படவில்லை; அவர்களோடு  ஜனநாயகவாதிகளும், நிறவெறி எதிர்ப்பாளர்களும் கைகோர்த்தனர். அவற்றில் வெள்ளையின மக்களும் அடக்கம். ஃபெர்குசன் பகுதி மக்கள் ஒன்று கூடி மைக்கின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிப் பேரணி ஒன்றை  நடத்தினார்கள்.

ஆனால் போலிஸ் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் இந்தக் கொலையை எப்படி மூடி மறைப்பது என்பதில் கவனமாக இருந்தார்கள். நடந்த படுகொலை பற்றி முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாமல், சாட்சிகளை விசாரிக்காமல் பாராமுகம் காட்டிய போலீசு நிர்வாகம், ஊடகங்களில் மாறுபாடான குழப்பமான செய்திகள் வெளியாகுமாறு பார்த்துக் கொண்டது. முக்கியமாக மைக்கை கொன்ற போலிஸ்காரன் யார் என்ற தகவலைக் கூட தெரிவிக்காமல் மறைத்து கொலைகாரனைக் கைது செய்யாமல் பாதுகாத்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்பவரை கைது செய்யும் போலீஸ்
ஆர்ப்பாட்டம் செய்பவரை அடித்துக் கைது செய்யும் போலீஸ்

போலீசின் அதிகாரத்துவ திமிர் மக்களிடையே ஆத்திரத்தை உண்டாக்குகிறது; மெல்ல மெல்ல போராட்டங்கள் வலுத்து சில நூற்றுக்கணக்கில் கூடிய போராட்டக் கூட்டம், சில ஆயிரங்களாக வளர்ந்தது. போராட்டம் பெரிதாகப் பெரிதாக மைக்கின் அநியாய மரணம் குறித்த செய்திகள் பிற பகுதிகளுக்கும் பரவுகிறது. உடனடியாக போராட்டத்தை அடக்கி, விவகாரத்தை அமுக்கி விட எத்தனித்த போலீசு, போராட்டம் நடந்த இடங்களில் கூடியிருந்த மக்களை அடித்து துவைத்தனர்.

ந்த நிலையில் தான் ஆகஸ்ட் 17-ம் தேதி இரவு, மைக்கின் மரணத்திற்க்கு நீதி கேட்டு ஒரு அமைதியான ஊர்வலம் பெர்குசன் நகரில் நடந்தது. ஆரம்பத்தில் இருந்தே போலிசார் பல கெடுபிடிகளை செய்ய தொடங்கினார்கள். குறிப்பாக ஊடகங்கள் மூலம் விவகாரம் நாட்டின் பிற பகுதிகளுக்கு உண்மை சென்று சேர்வதைத் தடுக்க பத்திரிகையாளர்களைக் குறிவைத்தனர்.

பேரணியின் நடுவே செய்தி சேகரித்துக் கொண்டிருந்த கார்க் ஆக்ஸ் ரேடியோவின் நிருபர் முஸ்தபா உசைனை பார்த்து போலிஸ்காரர் ஒருவர், “கேமரா விளக்குகளை அணைத்து விட்டு  வெளியே போ, இல்லையென்றால் கொன்று விடுவேன்” என மிரட்டியுள்ளார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வெளிவந்து பரபரப்பு தொற்றிக் கொண்டது, மெல்ல பிற நிருபர்களும் அந்த இடத்தில் தாங்கள் போலிஸாரால் மிரட்டப் பட்ட விடயத்தை பகிர ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்காவில் புகழ் பெற்ற எம்எஸ்என்பிசி செய்திச் சேனலின் முக்கிய செய்தியாளரான கிறிஸ்டபர் ஹேயிஸ் போரட்டங்களை பற்றி தகவல் சேகரிக்கச் சென்ற போது, போலிசாரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் இன்னொரு பிரபல பத்திரிகையான பைனான்ஸியல் டைம்ஸ் நிருபர் நீல் முன்ஷி, தன்னை போலிசார் மிரட்டியதாகவும் கைது செய்து பின்னர் விடுவித்ததாகவும்,  டிவிட்டரில்  பகிர்ந்துள்ளார்.

ராணுவமா, போலீசா?
ராணுவமா, போலீசா?

அதே போல் செய்தி சேகரிக்கச் சென்ற வாஷிங்டன் போஸ்ட்  நிருபர் வைஸ்லே லோவ்ரி மற்றும் ஹஃபிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபர் ரேயன் ரேய்லியை உணவகம் ஒன்றில் சாப்பிட்டு கொண்டிருந்த போதே மடக்கிய போலிசார், கைது செய்து பின்னர் விடுவித்தனர். பல பத்திரிகையாளர்கள் போராட்டம் நடந்த இடங்களுக்குச் செல்லவோ, செய்தி சேகரிக்கவோ முடியாதபடி காவல் துறையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். விஷயம் தேசிய அளவில் வெளிச்சத்திற்கு வந்த பின் பவிசான ஜனநாயக முகமூடிக்குள் ஒளிந்திருந்த அமெரிக்க வெள்ளை இனவெறியின் உண்மை மூஞ்சி அம்பலத்திற்கு வந்தது.

இவ்வளவிற்கும் இந்த ஊடகங்கள் அமெரிக்க வல்லரசின் ஊதுகுழல்களாகத்தான் இயங்கி வருகின்றன. எனினும் அங்கே அமெரிக்க வல்லரசின் பண்பாட்டு முகமான வெள்ளை நிறவெறிக்கு எதிராகவும், போலீசை அம்பலப்படுத்தியும் செய்தி வருவது கூட சாத்தியமற்ற நிலை இருக்கிறது. இங்கே இந்துமதவெறியர்களால் மிரட்டப்படும், தாக்கப்படும் முசுலீம் மக்கள் குறித்த செய்திகளுக்கும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.

வேறு வழி இல்லாத போலிஸ், கொலை செய்த  காவலரை கைது செய்துவிட்டதாகவும், அவரின் பாதுகாப்பு கருதி அவர் பெயரை வெளியிட மாட்டோம் எனவும் கூறியது. இதற்குள் ஃபெர்குசனில் பற்றிய நெருப்பின் புகை அமெரிக்காவின் பிற பகுதிகளுக்கும் பரவி, ஜனநாயகவாதிகளும் சில ஊடகங்களும் போலீசாரைக் கடுமையாக விமர்சிக்கத் துவங்கினர்.

இதற்கிடையே கைதான காவலர் “வில்சன்” பற்றிய மேல் விவரங்களும் ஊடகங்களில் கசியத் துவங்கியது. அவர் ஒரு இன வெறியர், கொடுமைக்காரர் என்று அவரை பற்றிய தகவல்கள் அவர் நண்பர்கள், உடன் வேலை செய்தவர்களிடமிருந்து வெளியே வர, நிலைமை பதட்டமாகியது. மக்களின் எதிர்ப்பலை குரல்வளையை நெறிக்கத் துவங்கி இதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாது என்கிற நிலை ஏற்பட்ட பின் தாமதமாக வாய் திறந்த அமெரிக அதிபர் ஒபாமா, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்படும் என அறிவித்துள்ளார். ஒரு கருப்பரே அதிபர் ஆனாலும் அங்கே வெள்ளை நிறவெறிதான் கோலோச்சுகிறது, கோலோச்ச முடியும் என்பதை இப்போதாவது ஒபாமாவை ஆதரித்த அசடர்கள் புரிந்து கொள்வார்களா?

கைது செய்யப்பட்ட பெண்
பாதையை மறித்ததற்காக கைது செய்யப்பட்டு அழைத்துப் போகப்படும் பெண்.

இன்னொரு பக்கம் பெர்குசன் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நகர் முழுவதும் தீவிரவாத முறியடிப்பு உத்திகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற தேசிய காவல் படையினரைக் குவித்துள்ளார்.

ல பத்தாண்டு கால தூக்கத்தில் இருந்து இப்போது தான் விழித்துக் கொண்டது போல் நடிக்கும் அமெரிக்க ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகள் ”அய்யோ பாசிசம் வந்து விட்டதோ” என்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றன. பத்திரிகையாளர் ஒருவர் “அமெரிக்க போலீசு போர்க்கோலம் பூண்டு மக்களை எதிர்த்து நின்ற காட்சி இராணுவத்தை நினைவூட்டுகிறது” என்று புலம்புகிறார்.  இதே அமெரிக்க இராணுவம் ஈராக்கிலும், ஆப்கானிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் கொன்ற கணக்கும், கொடூரமும் இவர்களுக்கு எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அது தேசபக்தி என்றால் இதையும் அதே தேசபக்தியை காவல்துறை காட்டாதா என்ன?

ஒரு பரபரப்புச் செய்தி என்கிற அளவில் ஃபெர்குசன் சம்பவத்தை வைத்து 24/7 திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட திரைக்கதைகளை அவிழ்த்து விட்டு டி.ஆர்.பியை எகிற வைத்துக் கல்லா கட்டலாம் என்று நாக்கில் எச்சில் வடிய ஓடி வந்த அமெரிக்க கார்ப்பரேட் ஊடகங்கள், இனவெறித் தீயை விட்டு பாதுகாப்பான தொலைவில் இருந்தால் தான் கதகதப்பாக இருக்கும் என்பதையும், கிட்டே நெருங்கித் தீண்டினால் தன்னையும் சுடும் என்பதை அதிர்ச்சிகரமாக உணர்ந்துள்ளது. இருந்தாலும் ஒரு பிளான் B ஆக, தான் அடிவாங்கியதை ஒட்டி இனவுரிமைக்காக குரல் கொடுத்து ஃபெர்குசன் போலீசை விமர்சித்து எழுதி வருவதன் மூலம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு கல்லாவை நிரப்பி வருகின்றது.

கருப்பின மக்களோ, ஊடகங்களின் ஆதரவிற்காகவோ அதன் வெளிச்சத்திற்காகவோ ஏங்கி நிற்கவில்லை. அவர்கள் இன்றும் போராடி வருகிறார்கள். ஏற்கனவே வேலை இல்லை, விலைவாசி உயர்வு, பசி பட்டினி, என்று இருந்த ஏழை கறுப்பின மக்கள் தங்களுக்கு நீதியும் இல்லை என்றவுடன் வெடித்தெழுந்துள்ளனர். இது அரசுக்கும் நன்றாகவே தெரியும்.

எதிர்ப்பு பேரணி
எதிர்ப்பு பேரணி

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு சிறிய துப்பாக்கி சூடு, லண்டன் நகரில் கிளப்பிய போராட்டங்களை அமெரிக்கா நினைவில் வைத்துள்ளது. இந்த முறை பெர்குசன் நகரில் அப்படி எதுவும் நடந்து விடக் கூடாது என்பதில் குறிப்பாக உள்ளது; எனவே, போராடும் மக்களைக் கடுமையாக தாக்குவதன் மூலம் நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைக்கத் துடிக்கிறது. எரியும் காட்டுத் தீயை வைக்கோல் போரால் மூடி அணைக்க எத்தனிக்கிறது அமெரிக்கா.

ஓரளவுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்ட அமெரிக்க அறிவுத் துறையினர் சிலர் “அமெரிக்க அரசு தோற்றுவிட்டது. இனவெறியையோ, சமுக ஏற்றத் தாழ்வையோ அது கட்டுப்படுத்தவில்லை, அதன் விளைவாகத் தான் இந்த சம்பவம் மக்களை கிளர்ந்தெழச் செய்துள்ளது” என்கிறார்கள்.

ஊர்ப் பெண்களையெல்லாம் கையைப் பிடித்திழுக்கும் காமவெறி கொண்ட மைனர், தன் வீட்டுப் பெண்களை எப்படி மதிப்பான்? தனது முதலாளிகளின் நலனுக்காக ஈராக், ஆப்கான் துவங்கி மத்திய கிழக்கெங்கும் வெறியாட்டம் போடும் அமெரிக்கா, தனது குடிமக்களை – அதுவும் ஏழைகளை – மட்டும் கவுரவமாகவா நடத்தப் போகிறது?

நீதியைத் தேடும் அமெரிக்கர்கள் டாம்ஹாக் எரிகணைகளுக்கும், ட்ரோன் தாக்குதல்களுக்கும், அமெரிக்க துவக்குகளுக்கும் இலக்காகி மடிந்த மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்கான போராட்டமும் தங்கள் சொந்த நாட்டைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்கான போராட்டமும் வேறு வேறல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் புரிந்து கொள்ளும் போதுதான் மைக்கேல் ப்ரௌனின் கொலைக்கான நீதியையும் ஈராக்கிய ஆப்கானியக் குழந்தைகளின் கொலைகளுக்கான நீதியையும் சேர்த்து வென்றெடுக்க முடியும்.

–    ஆதவன்.

மேலும் படிக்க

மெட்ரிக் கொலைக்கூடங்கள்!

2

குடந்தை பள்ளித் தீயில் தனது பிள்ளையைப் பறிகொடுத்த ஒரு தாய், நீதிமன்ற வளாகத்தில் தன்னைத்தானே நொந்து புலம்பிக் கொண்டிருந்தாள். குடந்தை கிருஷ்ணா பள்ளி உரிமையாளரின் மனைவி, ஆங்கில வழிக்கல்வி, தரமான கல்வி என்ற ஆசை காட்டியதையும், அதற்கு மயங்கி தன் பிள்ளையை அங்கு சேர்த்து நெருப்புக்கு பலி கொடுத்து விட்டதையும் நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தாள் அந்தத் தாய்.

அருண்ராஜ்
தனியார் கல்விக்கொள்ளைக்கு பலியான இளந்தளிர்கள் – புதுக்கோட்டை குரும்பக்காடு, லாரல் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவன். அருண்ராஜ்

பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. அன்று குடந்தைப் பள்ளிக்கு தேடிச்சென்று ஆள் பிடித்தார்கள் என்றால், இன்றைக்கு பெற்றோர் தனியார் மெட்ரிக் பள்ளிகளைத் தேடிச் சென்று தமது பிள்ளைகளை விட்டில் பூச்சிகளா கருகக் கொடுக்கிறார்கள். மாணவர் தற்கொலை அல்லது மர்ம மரணம் என்ற செய்தி இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது.

கடந்த ஜூலை-9 அன்று, கடலூர் செயிண்ட் ஜோசப் கல்வி குழுமத்தின் தனியார் கலை – அறிவியல் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு பயின்றுவந்த மாணவர் ராம்குமார், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதே கல்லூரியில் போஸ், ஆல்வின் ஜோஸ், பரதன் ஆகிய மாணவர்களின் மர்ம மரணத்தை தொடர்ந்து இது அடுத்த மரணம். நிர்வாகம், இது தற்கொலை என்றது. புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் பொதுமக்களை அணிதிரட்டிச் சென்று சம்பவம் நடந்த அறையின் பூட்டை உடைத்தனர். பூட்டிய அறைக்குள் இருந்த இரத்தச் சிதறல்களும், சுவர்களில் படிந்திருந்த இரத்தக் கறைகளும் ராம்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதை உறுதிப்படுத்தின. போலீசு வழக்கு பதிவு செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என்று போராடிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டு, 6 தோழர்கள் சிறை வைக்கப்பட்டனர். ஆனால், நிர்வாகத்தினர் யாரும் கைது செய்யப்படவில்லை.

ஜூன் 27 அன்று, சென்னை, திருவொற்றியூரில் ஸ்ரீ சங்கர வித்யாலயா கேந்திரா மெட்ரிக் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி வைஷ்ணவி மாலை வீடு திரும்பவில்லை; பள்ளியில் தன் பிள்ளை இருக்கிறதா என்று தேடவும் பெற்றோர்கள் அனுமதிக்கப்படவில்லை. இரவு 7.30 மணிக்கு பள்ளியின் ஒவ்வொரு அறையாக பெற்றோர் தேடிக்கொண்டிருக்கும்பொழுதே, மர்மமான முறையில் மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்து தம் பெற்றோர்கள் கண்ணெதிரிலேயே துடிதுடித்து இறந்துபோனாள் வைஷ்ணவி. இங்கும் பு.மா.இ.மு தோழர்கள் தலையிட்டு போராட்டம் நடத்திய பின்னர்தான் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நிர்வாகத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை.

ராம்குமார்
தனியார் கல்விக்கொள்ளைக்கு பலியான இளந்தளிர்கள் – கடலூர் செயின்ட் ஜோசப் கலை – அறிவியல் கல்லூரி மாணவர் ராம்குமார்.

புதுக்கோட்டை குரும்பக்காடு, லாரல் மேநிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவன் அருண்ராஜ், சென்னை மணலி – சி.பி.எல். நகர் தனியார் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி பூஜா ஆகியோர் உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக பள்ளி நிர்வாகத்தால் அவமானப்படுத்தப்பட்டு, அதன் விளைவாகத் தற்கொலை செய்து கொண்டனர்.

நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் அருண்குமாரும்; கூடுவாஞ்சேரியிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் தமிழரசனும்; திருச்சி காட்டூர் மான்போர்டு பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டனர். காரணம், தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்றதால், மாற்றுச்சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்குச் செல்லுமாறு நிர்வாகம் அளித்த மிரட்டல்.

இவை மட்டுமல்ல, கடந்த சில மாதங்களில் மட்டுமே இன்னும் பல மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அத்தனையும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எந்தவொரு சம்பவத்திலும் இத்தகைய அநியாய மரணம் குறித்து பள்ளி நிர்வாகங்கள் வருத்தமோ அதிர்ச்சியோ அடையவில்லை. பெற்றோர் வந்து கதறினாலும் இவர்களது கல்மனம் கரைவதில்லை.

நாமக்கல் ராசிபுரம் வட்டாரத்தில், ஊருக்கு வெளியே பொட்டல் காட்டில், பல நூறு ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ள பிராய்லர் பள்ளிகளில் மாணவர்களின் மர்ம மரணங்கள் மிகவும் சகஜமாகிவிட்டன. மாணவனின் உடலை மருத்துவமனையில் கொண்டு வந்து போட்டு, சவப்பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்துவிட்டுத்தான், பெற்றோருக்கு சாவுச்செய்தியையே தெரிவிக்கின்றன பள்ளி நிர்வாகங்கள். பெற்றோர் குமுறினாலும் கொந்தளித்தாலும் அனைத்தும் மருத்துவமனை வளாகத்தில்தான். அதிகபட்சம் அங்கேயே சாலை மறியல் செய்யலாம். போலீசு வந்து அப்புறப்படுத்தும் வரை கத்திவிட்டு பிறகு ஓய்ந்து போவதைத் தவிர பெற்றோருக்கு வேறு வழி கிடையாது. சம்பந்தப்பட்ட பள்ளிகளோ எதுவுமே நடக்காதது போல இயங்கிக் கொண்டிருக்கும். இது மிகையான கூற்று அல்ல.

ஹேமலதா
தனியார் கல்விக்கொள்ளைக்கு பலியான இளந்தளிர்கள் – சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவி ஹேமலதா

ஜூலை, 16, 2007 அன்று திருச்செங்கோடு வித்ய விகாஷ் பள்ளியின் +1 மாணவி திவ்யா, இரவு நேர வகுப்புக்கு வரவில்லை என்பதற்காக விடுதி வார்டனால் அடிக்கப்பட்டு இறந்திருக்கிறாள். போலீசு கொடுத்த அறிக்கையை சம்மந்தப்பட்ட நீதிபதிக்கு அனுப்பவேண்டுமென்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும் கடந்த 7 ஆண்டுகளாக எதுவும் நடக்கவில்லை. திவ்யாவின் தந்தை நித்தியானந்தனின் விடாமுயற்சியின் விளைவாக, ஜூலை3, 2014 அன்று சென்னை உயர்நீதி மன்றம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

டிச, 21, 1999 அன்று சின்னசேலம் செயின்ட் லிட்டில் பிளவர் மழலையர் பள்ளியில் படித்து வந்த தனது 5 வயது மகன் சுரேஷை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக அன்று மாலை பள்ளிக்குச் சென்றபோது, பிள்ளையைக் காணவில்லை. பள்ளி நிர்வாகம் தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டது. இரண்டு நாட்களுக்குப் பின் பள்ளியிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள கிணற்றில் அந்தச் சிறுவனின் உடலை உறவினர்கள் கண்டெடுத்தனர். பள்ளியில் உள்ள பாதுகாப்பற்ற தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த சிறுவனின் உடலை நிர்வாகம் கிணற்றில் வீசியிருப்பது தெரியவந்தது. ஆத்திரமுற்ற மக்கள் பள்ளிக்கு எதிராகப் போராடினர். சிறுவனின் தந்தை 2003-ல் உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்தார். போலீசோ, கல்வித்துறை அதிகாரிகளோ நீதிமன்றத்துக்கும் பதிலளிக்கவில்லை. தங்கள் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளே இல்லையென்றும், அந்த மாணவன் தங்கள் பள்ளியில் படிக்கவே இல்லையென்றும் நீதிமன்றத்தில் வாதாடியது பள்ளி நிர்வாகம். அது பொய்யென்று அம்பலமானதால், அம்மாவட்ட போலீசு சூப்பிரெண்டு வழக்கை விசாரிக்கவேண்டுமென்றும், அலட்சியம் காட்டிய தமிழக அரசு 3.75 லட்சம் நிவாரணம் தரவேண்டுமென்றும், அக்குழந்தை செத்து 15 ஆண்டுகளுக்குப் பின் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

“மாணவர் மரணங்கள் போலீசு நிலையத்தில் நிகழும் கொட்டடிக் கொலைகளுக்கு ஒப்பானவை. பள்ளி – கல்லூரி நிர்வாகத்தை நம்பித்தான் பெற்றோர் தமது பிள்ளையை ஒப்படைக்கின்றனர். கொட்டடிக் கொலைகளுக்கு எப்படி போலீசைப் பொறுப்பாக்குகிறோமோ அதுபோல, பள்ளி தாளாளர்களையும், கல்லூரி முதல்வர்களையும்தான் இந்த மரணங்களுக்குப் பொறுப்பாக்கி சிறையிலடைக்க வேண்டும்.” என்கிறார் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜு.

தட்சிணாமூர்த்தி
விருத்தாச்சலம், விருதகிரி எஜுகேஷனல் டிரஸ்ட் மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையிலேயே தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட அப்பள்ளியின் +2 மாணவன் தட்சிணாமூர்த்தி.

கைதிகளை போலீசார் வளைத்துப் பிடித்துச் செல்கின்றனர். பிள்ளைகளைப் பெற்றோர்களே விரும்பி ஒப்படைக்கின்றனர் என்ற வேறுபாட்டைத் தவிர, போலீசு நிலையத்துக்கும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. குற்றவாளிகளிடமிருந்து எத்தகைய கொடூரமான வழிமுறைகளைக் கையாண்டாவது, தாங்கள் விரும்பும் வகையில் உண்மையை வரவழைக்க போலீசு முயற்சிப்பதைப் போலத்தான், மாணவர்களிடமிருந்து மதிப்பெண்களை வரவழைக்க முயற்சிக்கின்றன இத்தகைய பள்ளிகள். இந்த முயற்சியில் மாணவன் அடிபட்டு செத்தாலும் சரி, அல்லது உளவியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டாலும் சரி, அதுபற்றி பள்ளி நிர்வாகங்கள் கவலைப்படுவதில்லை.

சிறையிலிருக்கும் தூக்கு தண்டனைக் கைதியைக் கூட மனுப்போட்டு பார்த்துவிடலாம் நாமக்கல் உறைவிடப்பள்ளியில் படிக்கும் சொந்தப் பிள்ளையைக்கூட பெற்றோரால் அவ்வளவு எளிதில் பார்த்து விடமுடியாது. இருந்த போதிலும், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமென்ற தங்களது இலட்சியத்தைப் பிள்ளை நிறைவேற்ற வேண்டுமானால், இத்தகைய கட்டுப்பாடுகளைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமென்று பல முட்டாள் பெற்றோர்கள் நினைக்கின்றனர்.

நாமக்கல் சாலை மறியல்
நாமக்கல் பிராய்லர் பள்ளியொன்றில் 9-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் இறந்து போனதையடுத்து நாமக்கல் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடத்திய சாலைமறியல் போராட்டம்.

மாட்டுக்கு ஊசி போட்டு பால் கறப்பதைப் போல, கறிக்கோழிக்கு எடை கூட்டுவதைப் போல, எப்படியாவது மாணவர்களின் மதிப்பெண்ணைக் கூட்டவேண்டும். அதை நாளேடுகளில் விளம்பரம் செய்து, அடுத்த ஆண்டுக்கான கட்டணக் கொள்ளையை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே தனியார்பள்ளிகளின் நோக்கம். அரசுப்பள்ளிகளில் தேர்வின் போது சில மாணவர்கள்தான் பிட் அடிப்பார்கள் என்றால், இப்பள்ளிகளில் நிர்வாகமே அதற்கு ஏற்பாடு செய்து தருகின்றது. லஞ்சம் கொடுத்து தேர்வுக்கு வருகின்ற கண்காணிப்பாளர்களைச் சரிக்கட்டுகிறது.

கொள்ளை இலாபத்துக்காக உணவுப்பொருளில் கலப்படம் செய்யும் வியாபாரியைப் போல, பொதுச்சொத்தைத் திருடுவதற்காக ஆவணங்களை போர்ஜரி செய்யும் கிரிமினலைப் போலத்தான் மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் நடந்து கொள்கின்றன. இவர்கள் நேர்மையானவர்களாக இருக்க முடியாது. ஆற்றுமணல் கொள்ளையன் ஆறுமுகசாமி, கனிம மணல் கொள்ளையன் வைகுண்டராசன், கிரானைட் கொள்ளையன் பழனிச்சாமி ஆகியோரைப் போல இவர்கள் கல்விக்கொள்ளையர்கள். அந்தத் தொழில்களைப் போலவே இவற்றிலும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதலீடு செய்திருக்கிறார்கள். அல்லது முதலீடு செய்தவர்கள் அதனைப் பாதுகாத்து வளர்ப்பதற்காக அரசியல்வாதியாகவும் ஆகிவிடுகிறார்கள்

இலஞ்சம், ஊழல், போர்ஜரி, கள்ளக்கணக்கு, கொலை உள்ளிட்ட அனைத்தும் இந்தத் தொழிலின் அங்க லட்சணங்கள். ஆற்று மணலாவது அள்ள அள்ளக் குறையும். கல்வித்தொழில் என்பது அள்ள அள்ளப் பணம் ஊறும் கேணி. வேலைவாப்பின்மையால் போட்டியும், எதிர்காலம் குறித்த அச்சமும் மாணவர்களிடம் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு இவர்களின் கொள்ளையும் அதிகரிக்கிறது.

மெட்ரிக் கொலைக் கூடங்கள்

நாடு முழுதும் ஆண்டொன்றுக்கு 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் உருவாகின்றனர். இது சீனாவிலும் அமெரிக்காவிலும் சேர்த்து ஒரு ஆண்டில் உருவாகும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையை விட அதிகம். இந்தியாவில் ஆண்டுக்கு அதிகபட்சம் 1.5 லட்சம் பொறியியல் வேலைவாய்ப்புகள்தான் உருவாக்கப்படுகின்றன. உண்மைநிலை இவ்வாறு இருந்தும் காம்பஸ் இன்டர்வியூ, பிளேஸ்மென்ட் உறுதி என்று தொலைக்காட்சியில் மோசடியாக விளம்பரம் கொடுக்கின்றன பொறியியல் கல்லூரிகள். பொறியியல் கல்லூரியில் இடம் பிடிக்க வேண்டுமானால், எங்கள் பள்ளியில் சேருங்கள் என்று கடை விரிக்கின்றன மெட்ரிக் பள்ளிகள். ஒரு மாணவனைச் சேர்த்து விட்டால் இத்தனை ஆயிரம் கமிசன் என்று அலைகிறார்கள் தரகர்கள்.

தனியார் கல்வி என்று கவுரவமாக அழைக்கப்படும் இந்தத் தொழிலின் யோக்கியதை இதுதான். அப்பட்டமான பகற்கொள்ளை என்று தெரிந்தும் அரசு இதனை ஊக்குவிக்கிறது. காரணம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்திலும் தனியார்மயம், தாராளமயம் என்பதே அரசின் கொள்கை. அதனால்தான், மாணவர்களின் தற்கொலைகள், மர்ம மரணங்கள் நாள்தோறும் நடந்தாலும், அரசு அவர்களுடைய குற்றங்களை மூடி மறைக்கிறது. பெயரளவில் கூட நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. தனியார்மயத்தால் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதைப் போலவே, மனித வளமான இளைய தலைமுறையும் சூறையாடப்படுகிறது.

கல்வியை வணிகமாக நடத்தும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும் ஒழிப்பதும், கல்வி வழங்குவது அரசின் கடமை என்பதை நிலைநாட்டுவதும்தான் மாணவச் செல்வங்களை மரணத்திலிருந்து காப்பாற்றும்.

________________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
________________________________

திருச்சி கால்டுவெல் நினைவு கருத்தரங்க நிகழ்வு – படங்கள்

1

மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பு தேசிய இன அடையாளங்களை அழிக்கும் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு” என்ற தலைப்பில் திருச்சியில் மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரையும் அழைக்கும் விதமாக புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக (22-8-2014) அன்று காலை பல்வேறு கல்லூரிகளில் பிரசுர விநியோகம் செய்யப்பட்டது. கல்லூரி பேராசிரியர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

மோடி அரசு அகண்ட பாரத கனவோடு, இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துத்துவா கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வண்ணம் இந்தித் திணிப்பு, சமஸ்கிருத மீட்பு நடவடிக்கைகள், தேசிய இன அடையாளங்களை அழிக்கும் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு, தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபு இவை குறித்து விளக்கி பேசி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

குறிப்பாக, பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபை விளக்கி திருச்சியில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் பெரியார் போல் வேடமணிந்து மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் பிரசுர விநியோகம் செய்து கருத்தரங்கிற்கு பிரச்சாரம் செய்யப்பட்டது. பார்ப்பனிய மரபுக்கு எதிராக தந்தை பெரியாரே நேரில் வந்து பிரச்சாரம் செய்தது போல் உணரப்பட்டது. பெரியார் வேடமணிந்தவர் கல்லூரிக்கு வரும் மாணவர்களை அழைத்து, “பார்ப்பனிய மரபுக்கு எதிராகவும், சமஸ்கிருதத்திற்கு எதிராகவும், தமிழ்மொழியை மீட்கவும் நாம் போராட வேண்டும்” என்று பேசியது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கல்லூரிக்கு வரும் பேராசிரியர்களும் பெரியார் வேடமணிந்ததைப் பார்த்து அவரிடம் கைகுலுக்கி, கருத்தரங்கிற்கு வாழ்த்து தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர். இதே போல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் பெரியாரே நேரில் வந்து பிரசுரம் கொடுத்தது போல் உணர்ந்து மரியாதையுடனும் வாங்கிக் கொண்டனர். பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழ் மரபு மீட்பு என்ற தந்தை பெரியாரை நினைவு கூறும் வண்ணம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அன்று மாலை நடந்த (22-08-2014) கருத்தரங்கத்தின் முதல் நிகழ்ச்சியாக ம.க.இ.க தோழர். ஜீவா வரவேற்புரையாற்றினார்.

2.jeeva

பேராசிரியர். கருணாநிதி (UDC கல்லூரி) இவர் வைத்ததிருந்த நூல்கள் அனைத்தையும் நமது அமைப்பிற்கு அன்பளிப்பாக கொடுத்தார்.

4.karunanithi

அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர் பேசுகையில், “ம.க.இ.கவை 30 ஆண்டுகளாக எனக்கு தெரியும். இவர்களது பிரச்சாரம், கலைநிகழ்ச்சி, பத்திரிக்கை அனைத்தையும் பார்க்கிறேன். இன்றைக்கு தமிழகத்தில் உணர்வுப்பூர்வமாக போராடக் கூடியவர்கள் இவர்கள் தான். நான் செய்தது உதவியல்ல (நூல்கள்), ஒவ்வொரு போராளிகளுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை” என்று கூறினார்.

தலைமை உரை : தோழர்.காளியப்பன்

3.kaliyappan

”யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதெங்கும் காணோம்” என்று பாரதி பாடினார். இன்னும் பல பேர் தமிழ் மொழியைப் பற்றிப் பாடினார்கள். இவற்றையெல்லாம் அறிமுகப் படுத்தியவர் கால்டுவெல். இதுவரைக்கும் சமஸ்கிருதம் தான் அனைத்து மொழிகளுக்கும் மூலம் என்று பேசி வந்ததை முறியடித்து, அருமையான மொழி தமிழ் மொழிதான் என்ற உண்மையை எழுதினார். சமஸ்கிருதமே தமிழில் இருந்து கடன் வாங்கப்பட்டது. இந்தியாவிலேயே நாம் முற்போக்கு சிந்தனையுடன் இருக்கிறோம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் கால்டுவெல்.

இந்த உண்மைகளை அழித்து அறிவியல் ரீதியில் எந்த ஒரு விசயத்தையும் பார்க்க கூடாது என்று மூர்க்கத்தனமாக எதிர்ப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள். சாதி அமைப்பு முறை சரியானது என்பது இவர்களது கொள்கை. சாதி, மத மோதலை உருவாக்குவது அதன் மூலம் ஆட்சியைப் பிடிப்பது, அகண்ட பாரதம் என்கின்ற கோட்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டு்ம் என்று துடிக்கிறார்கள். இந்த தருணத்தில் கால்டுவெல் நமக்கு கொடுத்த செல்வத்தை பயன்படுத்தி இந்துத்துவ கருத்திற்கு எதிராக போராட வேண்டும் என்றார்.

கருத்துரை : பேரா. அரசு

6.arasu

ம.க.இ.க தோழர்களை பல ஆண்டுகளாக போராட்டம், பிரச்சாரம், ஒலிப்பேழை, கலைநிகழ்ச்சி, பத்திரிக்கை இவற்றின் மூலம் நன்கு அறிவேன். கால்டுவெல்லுக்கு கருத்தரங்கம் நடத்துவதில் பெருமைப்படுகிறேன். கால்டுவெல்லின் பின்புலத்தை நாம் அறிந்து கொள்வது அவசியம். கி.மு 2-ம் நூற்றாண்டில் கிரேக்க வரலாற்றில் சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், அறிவியல் அறிஞர்கள் கிடைத்தார்கள். பிறகு உலகம் முழுவதும் காலனிய ஆதிக்கத்தை 16-ம் நூற்றாண்டில் இருந்து காலனியவாதிகள் கொண்டுவந்தார்கள். அந்த காலகட்டத்தில் பல்வேறு அறிவியல் நிகழ்வு ஏற்பட்டன. பண்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பா நாடுகளில் மொழி பற்றிய ஆய்வை கையில் எடுத்திருக்கிறார்கள். மனிதர்கள் பேசும் மொழிகள் பற்றி ஆராய்ச்சி செய்தனர். இந்த சூழ்நிலையில் தான் கால்டுவெல் வளா்ந்தார்.

ஐரோப்பிய காலனிய ஆட்சி உருவான பிறகு 1784-ல் வில்லியம் ஜோன்ஸ் மொழி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இந்தியாவும் சமஸ்கிருதம் வேதம் பற்றிய இந்தியவியல் ஆராய்ச்சி செய்தது. இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்குகிறார்கள். இதற்கு வேதம், இராமாயணம், சமஸ்கிருதம் அடிப்படை என்று கூறினார்கள். அயோத்தியில் இராமன் பிறந்தான் என்று உச்ச நீதி மன்றம் சொல்வது என்றால் இதை விட கேவலம் எதுவும் இல்லை. பார்ப்பனிய கருத்தைதான் இந்துத்துவ கருத்து என்கிறார்கள்.

இந்த வரலாற்றுச் சூழலில் கால்டுவெல்லின் பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் உணர வேண்டும். மொழி பற்றிய ஆய்வில் கால்டுவெல்லின் பங்களிப்பை நாம் மறக்க முடியாது. 1830-ல் தொடங்கி பழங்குடி மக்கள் பேசக் கூடிய மொழி எவை. அவை பழமையான மொழியா என்று ஆய்வு செய்தார் கால்டுவெல். 24 திராவிட மொழிகள் பேசியதை கண்டு பிடித்தார். ஏறக்குறைய 37 திராவிட மொழிகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 75 சதவீதம் பேர் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள், 25 சதவீதம் ஆரிய மொழி பேசக் கூடியவர்கள் என்றும் அவர் கண்டுபிடித்தார்.

ஒடுக்கப்பட்ட பள்ளர், பறையர், சக்கிலியர் போல அதே முறையில் சாணார்களும், இதர சூத்திர மக்களும் ஒடுக்கப்பட்டனர். 200 ஆண்டுகளில் தான் மாற்றம் ஏற்றப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களை ஆரியர்கள் அடிமையாக்கி வைத்துள்ளனர். இவர்களையும் சேர்த்து விடுதலை பெற செய்ய வேண்டும் எழுதினார் கால்டுவெல்.

19-ம் நூற்றாண்டின் இறுதியில் அயோத்திதாசர் சூத்திரர் பற்றி எழுதுகிறார். ஆனால் கால்டுவெல் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. அயோத்திதாசர் சொல்லும் திராவிட மொழி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம். பார்ப்பனிய சார்ந்த கருத்துக்களை இந்து மதத்தை ஒழிப்பதன் மூலம் தான் தமிழ் விடுதலை பெறும் என்று எந்த சமரசமும் இன்றி எழுதினார். கால்டுவெல், அயோத்திதாசர், பெரியார் பேசிய திராவிட கருத்துக்கள் எல்லாம் பார்ப்பனிய எதிர்ப்பு கருத்துக்கள். எனவே, நாமும் பார்ப்பனிய கருத்துக்களை எதிர்த்து போராட வேண்டும் என்று பேசினார்.

புலவர். பொ. வேலுசாமி

8.velusamy

கால்டுவெல்லை பற்றி தமிழ் வரலாற்றில் அதிகமாக பேசப்படவில்லை. 17,18 நூற்றாண்டில் வடமொழி தான் தமிழுக்கு அடிப்படை என்று எழுதினர். இதை திருத்தி தமிழ் மொழி தான் அனைத்திற்கும் அடிப்படை என்று நிரூபித்தார் கால்டுவெல்.

ராஜராஜன் காலத்திலேயே தமிழ் மொழியில் படித்தார்களா என்று சான்றுகள் இல்லை. ஆனால் வடமொழியில் படித்ததற்கான சான்றுகள் உள்ளன. ராஜராஜ சோழனுடைய குருவாக பார்ப்பனர்கள் இருந்தனர். இதனால் தமிழ் படிப்பவர்கள் இல்லாமல் போனதால் ஓலைச்சுவடிகள் கேட்பாரற்று போனது.

1888-ல் உ.வே. சாமிநாதர் ஐயர் தமிழர்களுக்கு தனி அடையாளம் பிறந்தது என்று கூறினார். நமது கலாச்சார பண்பாடு வாயிலாகத்தான் நமது அடையாளம் கண்டறியப்படும். மொழி ஒரு இனத்திற்கு அடையாளம் என தத்துவார்த்த ரீதியாக நிலை நிறுத்தியவர் கால்டுவெல். தமிழுக்காக போராடிய மாவீரனை நினைவு கூா்வது தேவையா இல்லையா என்று முடிவு செய்யுங்கள் என்று பேசினார்.

பாராளுமன்றத்திலேயே இந்துத்துவா தான் இந்துவின் அடையாளம் என பகிரங்கமாக பேசுகிறார்கள். மறுபுறம் தமிழினவாதம் பேசுகிறவர்கள். பெரியாரை கொச்சைப்படுத்தி பேசும் போக்கு உள்ளது. சீமான், இராமதாசு போன்ற தமிழ் பற்றி பேசக்கூடியவர்கள் சாதிக் கட்சிகளுக்கு அங்கீகாரம் தருவது,சாதி பெருமையை பேசுவது, சாதி நிலை புதுப்பிப்பது என்பது தான் உள்ளது. இவா்களுடன் இன்று ஒன்று சேர்வது தான் பார்ப்பனிய கொள்கை.

நாம் வேதமறுப்பு, சமஸ்கிருத மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு என போராட வேண்டும் என்று இறுதியாக தோழர். காளியப்பன் பேசினார்.

மேலும் இக்கருத்தரங்கத்தை சிறப்பிக்கும் வண்ணம் கல்லூரி மாணவர் பு.மா.இ.மு உறுப்பினர் தோழர். ராஜா, தமிழ் மொழியின் சிறப்பு பற்றி கவிதை வாசித்தார்.

9.raja

இக்கருத்தரங்கத்திற்கு மாணவர்கள், பேராசிரியர்கள், பொது மக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இறுதியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் திருச்சி மாவட்ட செயலர் தோழர் சரவணன் நன்றியுரையாற்றினார்.

10.saravanan

இவண்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
திருச்சி
9095604008

ஃபேஸ்புக்கில் இந்தித் திணிப்பு – சிக்கியது மோடி அரசு

10

மோடி அரசு பதவி ஏற்ற அடுத்த நாள், அனைத்து அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும், பொதுத் துறை நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் டுவிட்டர், பேஸ்புக், கூகிள், யூடியூப், வலைப்பதிவுகள் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகார பூர்வ கணக்குகளில் இந்திக்கு முன்னுரிமை கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அகண்ட பாரதத்தை அமைப்பதற்கு முன், சிக்கிய இந்தியாவில் இந்தியைத் திணிக்கும் இந்துமதவெறியர்களின் இயல்பான முயற்சிக்கு நாடு முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்தது.

இதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாட்டின் அனைத்து மொழிகளையும் பரப்புவதற்கு அமைச்சகம் கடமைப்பட்டுள்ளது” என்று டுவீட் செய்தார். உள்துறை இணை அமைச்சர் கிரண் ராஜூ, அனைத்து துறைகளிலும், பொது வாழ்க்கையிலும் ஹிந்தியை முன்னிறுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்றாலும் அது மற்ற மொழிகளை பின்தள்ளுவதாக அமையாது என்று உறுதியளித்தார். வஞ்சப் புகழ்ச்சி போல இது சமத்துவத்தின் பெயரில் நடைபெறும் நாடகம் என்பதை எத்தனை பேர் அறிவர்?

இந்த சுற்றறிக்கை தொடர்பாக உள்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில் “அலுவல் மொழிக்கான துறை 1963 அலுவல் மொழி சட்டத்தின்படியும் 1976 அலுவல் மொழிகள் விதிமுறைகளின் படியும் அவ்வப்போது அலுவல் மொழிக் கொள்கையை அமல்படுத்த சுற்றறிக்கைகள் அனுப்பி வருகிறது. அதன்படி சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பிய சுற்றறிக்கையின் தொடர்ச்சியாக, மார்ச் மாதம் 10-ம் தேதி அனைத்து அமைச்சகங்கள், துறைகள், துணை அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஹிந்தி அல்லது ஹிந்தி-ஆங்கிலத்தை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி உள்துறை அமைச்சகம் மே 27 தேதியிட்ட சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது.” என்று விளக்கம் சொல்லியிருந்தது.

இந்த சுற்றறிக்கை இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும்தான் பொருந்தும், இந்தி பேசாத மாநிலங்களுக்கு பொருந்தாது என்றும் கூறினார்கள்.

நேஷனல் புக் டிரஸ்ட்
இந்தி மயமாகும் நேஷனல் புக் டிரஸ்ட் பேஸபுக் பக்கம்

உண்மையில் நடைமுறை மாறியிருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய இந்தி பேசும், மற்றும் இந்தி பேசாதா மாநிலங்கள் அனைத்துக்கும் பொதுவான மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் (மனித வளத் துறை) கீழ் இயங்கும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் பேஸ்புக் கணக்கை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். இந்த நிறுவனம்தான் இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட இதர தேசிய மொழிகளில் பல்வேறு நூல்களை வெளியிடும் மிகப்பெரும் மத்திய அரசு நிறுவனம்.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இன்று வரையிலான 100 நிலைத்தகவல்களை எடுத்து அவை எந்த மொழியில் இடப்பட்டுள்ளன என்று ஆய்வு செய்தோம்.

இந்தி மொழி பயன்பாடு துலக்கமாக அதிகரித்த ஜூலை இறுதி வரையிலான கால கட்டத்துக்கு முன்னும் பின்னும் என இந்த நிலைத்தகவல்களை பிரித்துக் கொண்டால்,

ஜனவரி 27 முதல் ஜூலை 24 வரை (சுமார் 6 மாதங்களில்)

ஆங்கிலம்

53

72%

இந்தி

15

20%

மற்றவை

6

8%

மொத்தம்

74

ஜூலை 24 முதல் இன்று வரை (சுமார் 1 மாதம்) பேஸ்புக் நிலைத்தகவல்களின் நிலவரம்

ஹிந்தி

20

77%

ஆங்கிலம்

5

19%

மற்றவை

1

4%

மொத்தம்

26

அதாவது, மோடி நிர்வாகம் தனது முடிவுகளை செயல்படுத்த ஆரம்பித்த கால கட்டத்திலிருந்து பார்க்கும் போது அது வரை ஆங்கிலம் முதன்மையான மொழியாக (70%) இருந்த நிலை மாறி இந்தி முதன்மையான மொழியாக மாற்றப்பட்டு (77%), ஆங்கிலம் இரண்டாம் நிலைக்கு (19%) தள்ளப்பட்டுள்ளது.

நேஷனல் புக் டிரஸ்ட் இந்தித் திணிப்புஜூலை மாதத்துக்கு முன்பு இந்தி நூல்கள் பற்றிய நிலைத்தகவல்கள் இந்தியிலும், மற்ற நிலைத்தகவல்கள் ஆங்கிலத்திலும் இருந்தன. கடந்த ஒரு மாதத்தில் பொதுவான நிலைத்தகவல்கள் இந்தியிலும், ஆங்கில நூல்கள் பற்றிய நிலைத்தகவல்கள் மட்டும் ஆங்கிலத்திலும் என்று மாறியிருக்கிறது.

மோடி அரசு பதவி ஏற்ற நாளிலிருந்தே பார்த்தாலும், இந்தி, ஆங்கிலத்துக்கு நிகராக பாதிக்குப் பாதி இடத்தை பிடித்திருக்கிறது.

இந்த கால கட்டம் முழுவதிலும் தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளுக்கு நேஷனல் புக் டிரஸ்டின் சமூக வலைத்தள தகவல் பரிமாற்றத்தில் இடமே இல்லை.

இந்த 100 நிலைத்தகவல்களில் பல ஆங்கில, இந்தி நூல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. ஒரு உருது மொழி புத்தகம் பற்றிய நிலைத்தகவல் உள்ளது. மற்ற எந்த இந்திய மொழி பற்றியும் எந்தத் தகவலும் இல்லை.

சரி, 2012-13 ஆண்டு மத்திய அரசிடமிருந்து (நாடு முழுவதும் வாழும் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணத்திலிருந்து) சுமார் ரூ 44 கோடி நிதி உதவி பெற்ற இந்நிறுவனம்  வெளியிடும் புத்தகங்கள் பற்றிய விபரங்களை ஆய்வு செய்தோம்.

2012-13ம் ஆண்டு வெளியிடப்பட்ட மொத்தம் 1,553 புத்தகங்களில் 25% மக்கள் பேசும் இந்தி (511), மராத்தி (460) மொழிகளுக்கு 63% இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. (இந்தி மொழி பேசுபவர்களில் ராஜஸ்தானி, போஜ்பூரி, அவதி, சத்திஸ்கரி மொழி பேசுபவர்களை சேர்க்காமல்).

மூன்றாவது இடத்தில் ஆங்கிலம் (244) சுமார் 16% பங்கை பெற்றிருக்கிறது.

ஆங்கிலம் - இந்தி
ஆங்கில தகவலுக்கு இந்தியில் பதில்.

26 கோடி மக்கள் (17% மக்கள் தொகை) பேசும் வங்க மொழி (83), பஞ்சாபி (56), அசாமிய மொழி (48), உருது (45), குஜராத்தி (34) ஆகிய மொழிகளிலான புத்தகங்கள் சுமார் 17% இடத்தை மட்டும் பிடித்திருக்கின்றன.

ஒடியா (19), தெலுங்கு (16), மலையாளம் (10), தமிழ் (9), கன்னடம் (9), ஆகிய மொத்தம் 24 கோடி மக்கள் (20% மக்கள் தொகை) பேசும் பெரிய தேசிய மொழிகளுக்கு மொத்தம் 63 புத்தகங்கள் (4%) என ஏதோ போகிற போக்கில் பங்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, தென்னிந்திய மொழிகளை புறக்கணித்து இந்தி, மராத்தி மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்தி, ஆங்கில மொழி புத்தகங்களைத் தவிர பிற மொழி புத்தகங்கள் குறித்து நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் பேஸ்புக்கில் பேசவே இல்லை என்பது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 100 நிலைத்தகவல்களில் தெரிய வருகிறது.

அனைத்தையும் இந்தி மயமாக்குவதற்கான உதாரணமாக நிலைத்தகவல் ஒன்றை குறிப்பிடலாம். சென்ற மாதம், லூதியானாவிலிருந்து நேஷனல் புக் டிரஸ்ட்டின் நகரும் புத்தகக் கண்காட்சியை புகைப்படங்கள் எடுத்து, ஆங்கில தகவலுடன் அனுப்பி வைத்திருக்கிறார் ஜிதேந்தர் சிங் நேகி என்பவர். ஆனால், பேஸ்புக்கில் அதை பகிர்ந்து கொண்ட நேஷனல் புக் டிரஸ்ட் அதற்கான பதிலை இந்தியில் எழுதியிருக்கிறது.

இதிலிருந்து இந்து-இந்தி-இந்தியா என்ற கொள்கையை பின்பற்றும் மோடி அரசு பதவி ஏற்ற பிறகு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய நாட்டில், பெரும்பான்மை மக்களின் தேசிய மொழிகள் ஏற்கனவே புறக்கணிக்கப்பட்டு வரும் நிலை தொடர்வதோடு, இந்தித் திணிப்பு இன்னும் தீவிரமாக்கப்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

இந்த தமிழ் விரோத, ஜனநாயக விரோத இந்துமதவெறி அரசைத்தான் திராவிடத்தை தனது கட்சி பெயரில் தக்க வைத்திருக்கும் வைகோ என்ற சந்தர்ப்பவாதி ஆதரித்தார், ஆதரிக்கிறார். இந்த பாஜகவைத்தான் விகடன், தினமலர், குமுதம், தினமணி, தி இந்து உள்ளிட்ட ஊடகங்கள் தலையில் வைத்து கொண்டாடுகின்றன. இன்னொரு புறம் இதே ஊடகங்கள்தான் தமிழுக்காக கவலைப்படுவதாக வேறு நடிக்கின்றன.

பாஜக அரசு இந்தியை திணிக்கவில்லை என்றெல்லாம் பல்வேறு அறிஞர் பெருமக்கள் சத்தியமடிக்காத குறையாக சாதித்தார்கள். ஆனால் உண்மை நிலை என்ன என்பது இந்த கட்டுரையை படிக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.

“இந்து ராஷ்டிரம்” என்பதற்கான முன்னறிவிப்புதான் இந்த இந்தித் திணிப்பு. இதை தமிழக மக்கள், தமிழார்வலர்கள், ஜனநாயக அமைப்புகள் அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

பாஜக மற்றும் அதற்கு பல்லக்கு தூக்கும் துரோகிகளை இனம் காண வேண்டும்.

இணைப்பில் உள்ள சுவரொட்டிகளை பரவலாக பகிருமாறும், நேஷனல் புக் ட்ரஸ்ட் ஃபேஸ் புக் பக்கத்திற்கு சென்று கருத்து பதிவு செய்யுமாறும் கோருகிறோம்.

மோடி இந்தித் திணிப்பு மோடி இந்தித் திணிப்பு

மேலும் படிக்க

அரசாங்கத்தில் கார்ப்பரேட்டுகள் – தரகர்களாக என்.ஜி.வோக்கள்

1

ஆம் ஆத்மி : பிறப்பு இரகசியம் 3

டந்த ஏப்ரல் (2014) புதிய ஜனநாயகம் இதழில் இடம் பெற்றிருந்த “ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம்” என்ற கட்டுரையில் சிந்தனைக் குழாம்கள் மற்றும் குடிமைச் சமூகங்கள் ஆகிய இரு புதிய விஷயங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம். அவற்றின் தொடர்ச்சியாக, கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களின் கூட்டணிகள் மற்றும் அவற்றின் அரசியல் முன்னெடுப்புகள் என்ற மேலுமொரு புதிய விஷயத்தை த் தமிழ் வாசகர்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டியதை – இங்கே வலியுறுத்துகிறோம். இம்மூன்று விஷயங்களின் தொகுப்பில் ஆம் ஆத்மி கட்சியின் பிறப்பு இரகசியம் பொதிந்திருக்கிறது.

ஹெரிடேஜ் பவுண்டேசன்
பிரிட்டிஷ் பிரதமர் வழிநடத்திய ஹெரிடேஜ் பவுண்டேசன் எனும் சிந்தனைக் குழாமின் அடையாளச் சின்னம்.

மேலைநாடுகளில் இருந்து நிதிபெற்று இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பதாக அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் மீது முன்பு காங்கிரசும், இப்போது பா.ஜ.க.வுக்காக ஐ.பி. என்ற இந்திய உளவு நிறுவனமும் குற்றஞ்சாட்டின. அணுஉலை எதிர்ப்பு மக்கள் போராட்டக் குழுவின் உதயகுமாரன், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் கெஜரிவால் போன்ற பலர் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறார்கள். மேலைநாடுகளில் இருந்து நிதி பெற்றதாகத் தனது அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டைக் கடுமையாக எதிர்க்கும் உதயகுமாரன், அமெரிக்க ஆய்வாளர் ஒருவருக்காகத் தான் செய்த ஆய்வு வேலைக்கான ஊதியம் பெற்றதாக ஒப்புக்கொள்கிறார். அது என்ன ஆய்வு வேலை என்பதை மட்டும் சொல்லவில்லை. ஆனால், தன் மீது குற்றஞ்சாட்டியவர்களின் வாயடைக்கும் வகையிலான வழமையான கேள்வியொன்றை உதயகுமாரன் வீசியிருக்கிறார். “மேலைநாடுகளில் இருந்து நிதிபெற்று இந்திய அரசுக்கு எதிராக அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் வேலைசெய்வது உண்மையானால் இந்திய அரசு ஏன் அதைத் தடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை?” இதற்கு இந்தியா அரசு பதில் கூறவில்லைதான்.

அதனாலேயே அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மேலைநாடுகளில் இருந்து நிதி பெறவில்லை என்பது உண்மையாகிவிடுமா? இந்திய ரிசர்வ் வங்கி அறியவும் சட்டப்படியேயும் மேலைநாடுகளிருந்து அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் நிதி பெறுகின்றன. அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்குக் காரணம் அவற்றின் செயல்பாடுகளில் இந்திய அரசுக்கு சில அதிருப்தியிருந்தாலும், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்கள் தடையின்றிப் பாதுகாப்பாகச் செயல்படுவதற்காக இந்திய அரசு தனது எஜமானர்களான மேலைநாடுகளுக்கு உத்திரவாதமளித்துள்ளதோடு, அதற்குரிய ஐ.நா. ஒப்பந்தத்திலும் கைச்சாத்தளித்திருக்கிறது.

ஆகவே, மேலைநாடுகளில் இருந்து நிதிபெறும் உண்மையைவிட நமது அக்கறைக்குரியது, அமெரிக்க மேல்நிலை வல்லரசின் வல்லாதிக்கத்தின் கீழ் தேசங்கடந்த, பன்னாட்டுக் கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களின் கூட்டணிகளுடைய உலகச் செயற்திட்டத்தின் கைக்கைூலிகளாக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்கள் செயல்படுகின்றன என்பதுதான்!

11-captionகூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் வேலைஅளிப்பு (production and employment) விவகாரங்களில் எப்போதும் நேரடிச் செல்வாக்குச் செலுத்தி வந்ததை அனைவரும் அறிவர். ஆனால், அளவிலும் எண்ணிக்கையிலும் அவை வளர்ந்தபிறகு, பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அரசியலிலும் நேரடிச் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன; இதைப் பலரும் கண்டுகொள்வதில்லை. தனியொரு கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனம் தனது நேரடி, உடனடி நலனுக்காகவும் வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்வதற்காகவும் நன்கொடை, ஆள்பிடிப்பு மூலமாக அடிக்கடி அரசியல் தலையீடு செய்வதையும் அரசு, பொதுத் துறை ஆகியவற்றில் தனக்குச் சாதகமான செயல் திட்டங்களை வகுப்பதையும் முன்தள்ளுவதையும் அனைவரும் அறிவர்.

ஆனால் இப்போது, தனிப்பட்ட முறையில் பொருளாதாரத்திலும் அரசியலிலும் செல்வாக்குச் செலுத்துவதோடு கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்கள் நிறைவு கொள்வதில்லை. இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து அவை ஒட்டு மொத்தமாகத் தமது அதிகாரச் சக்தியை அதிகரிக்கவும் தமக்குச் சாதகமாக முடிவுகளெடுக்குமாறு அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்ளவும் சதிகளில் ஈடுபட்டு வருகின்றன. 1970-களில் வியத்நாம் உட்பட இந்தோ-சீன நாடுகளில் அமெரிக்காவுக்கு நேர்ந்த பின்னடைவோடு, கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களின் இலாப விகிதங்கள் வீழ்ச்சி கண்டன. உலகமெங்கும் அமெரிக்க ஆதிக்கத்தையும் கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களையும் எதிர்க்கும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களும் பரவின. அதனால், தொழிற்கழகங்களின் அதிகாரத்தைத் தட்டிக்கேட்டதோடு அவற்றின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு அரசாங்கங்களும் நிர்பந்திக்கப்பட்டன. 1967-1977 ஆகிய பத்தாண்டுகளில் அமெரிக்காவில் எடுக்கப்பட்டதொரு கருத்துக் கணிப்பின்படி பெரும் தொழிற்கழகங்களின் மீதான நம்பிக்கை 55 சதவிகிதத்தில் இருந்து 16 சதவிகிதமாகச் சரிந்தது.

தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் தொழிற்கழகங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பெருமளவு சுற்றுச்சூழலைப் பாதிப்பது, மாசுபடச் செய்வது, நுகர்வோர் ஏமாற்றப்படுவது, மக்கள் கொள்ளையிடப்படுவது, தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவது – ஆகியவற்றுக்கு எதிரான இயக்கங்கள் பெருகின. இப்பிரச்சினைகளில் கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களுக்கு எதிராக உலகின் பல நாட்டு அரசுகள் சட்டங்கள் இயற்றித் தடைகளும் கட்டுப்பாடுகளும் விதித்தன. “உலகமெங்கும் ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனத்தின் அதிகாரத்துக்குச் சவால் விடப்படுகிறது. அதன் அதிகார உரிமை நொறுங்கிப்போகிறது” என்று அமெரிக்காவின் பெரிய கார்ப்பரேட் நிறுவன இயக்குநர் புலம்பினார். நமது பொருளாதார சுதந்திரத்தை அரசாங்கம் கைப்பற்றிக்கொள்வதற்கெதிரான சண்டையில் நாம் தோற்றுக் கொண்டிருக் கிறோம்” என்றார், அமெரிக்க தேசிய சுயதொழிற்கழகங்களின் தேசிய கூட்டமைப்பின் தலைவர்.

இந்நிலைமைக்கு எதிர் வினையாற்றும் முகமாக அரசியல் ஆதரவைத் திரட்டிக் கொள்ளவும் தமது ஆதிக்கத்தை மறுவுறுதி செய்து கொள்ளவும் அமெரிக்கா மற்றும் மேலைநாடுகளின் தலைவர்கள் தொழிற்கழகங்களின் வலைப்பின்னல்களை உருவாக்கினார்கள். அவை உலகின் பல நாடுகளிலுள்ள அரசாங்கங்களை வசியம் செய்வதில் இறங்கின. இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டணிகளும் அவற்றின் துணை அமைப்புகளும் அரசாங்கங்களிடமிருந்து அதிகாரத்தைக் கைமாற்றம் செய்யும் வழிவகைகளையும் திசைவழிகளையும் வகுக்குமாறு சிந்தனைக் குழாம்களின் வலைப் பின்னல்களிடம் ஏராளமான டாலர்களைக் கொண்டு போய்க்கொட்டின.

11-thinktanksஅமெரிக்காவில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தொழிற்பேரவை, தேசிய உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகிய பழைய அமைப்புகளோடு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தொழில் வட்டமேசை, சிறு தொழில்களுக்காக சிறு தொழில்கள் சட்டப் பேரவைகள் ஆகியன உருவாக்கப்பட்டன. பிரிட்டனில், பிரிட்டிஷ் உற்பத்தியாளர்கள் தேசிய சங்கம், பிரிட்டிஷ் தொழில்கள் மற்றும் பிரிட்டிஷ் தொழிலதிபர்கள் கூட்டுப்பேரவை ஆகியவற்றோடு இணைந்து பிரிட்டிஷ் தொழில்கள் கூட்டுப்பேரவை உருவாகியது. தனது கருத்துக்களைக் கேட்டுத்தான் உயர்மட்ட அளவில் பிரிட்டிஷ் அரசாங்கம் சட்ட திட்டங்களை வகுத்துக்கொண்டதாக பிரிட்டிஷ் தொழில்கள் கூட்டுப்பேரவை கூறிக்கொண்டது. வேறு எந்தத் தொழில் நிறுவனத்தையும்விட அதிக அளவு பிரிட்டிஷ் தொழில்கள் கூட்டுப்பேரவை பிரிட்டிஷ் அரசாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், கருத்துருவாக்கம் செய்பவர்கள், ஊடகங்கள் ஆகியவர்களோடு தொடர்புகளின் வலைப்பின்னலை பெற்றிருந்தது.

அமெரிக்க, பிரிட்டிஷ் கார்ப்பரேட் தொழிற் கூட்டமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு ஐரோப்பாவிலும் ஆஸ்திரியாவிலும்கூட முறையே ஐரோப்பிய தொழிலதிபர்களின் வட்டமேசை மற்றும் ஆஸ்திரிய தொழில்கள் கூட்டுப்பேரவை ஆகியன நிறுவப்பட்டன. நாட்டின் பொதுமக்களுக்கு மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தெரியாமல் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள், அமைச்சரவைக் குழுக்கள், உயர்மட்ட அதிகாரவர்க்கக் கமிட்டிகள் கூடி கார்ப்பரேட் தொழிற் கூட்டமைப்புகளின் ஆலோசனைகள், கருத்துக்களைக்கேட்டு அரசின் பொருளாதார, தொழிற்கொள்கைகள் மீது முடிவெடுக்கத் தொடங்கின.

அப்போதிருந்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கங்களிடமிருந்து உரிமையுடன் கேட்டுப் பெறுவது, தலையீடு செய்வது என்ற ‘தற்காப்பு’ நிலையிலிருந்து, அதாவது தமது பொருளாதார சுதந்திரத்தைக் காத்துகொள்வது என்ற தற்காப்பு நிலையிலிருந்து, தமது அரசியல் மற்றும் பிற நலன்களுக்காகப் ‘பேராடுவது’ என்ற தாக்குதல் நிலைக்கு மாறின. இப்போது அவை தமது அதிகாரத்தை, ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொடுக்கும்படியும் தொழிற்சங்கங்களை அழித்து ஒழித்துவிடும்படியும் கோருகின்றன. அரசாங்கத்தின் கேந்திரமான கொள்கை வகுப்பு மற்றும் பிற சேவை வாய்ப்புகளையும் கைப்பற்றிக்கொண்டுவிட்டன. மேலும் மேலும் இதைச் சாதிப்பதன் மூலம், “ஜனநாயக அமைப்புகளின்” அதிகாரம் கீழறுக்கப்பட்டு சீர்குலைக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசியல் அதிகாரம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

11-2-captionகார்ப்பரேட் நிறுவனங்களின் மேல்நிலைப் பதவி வகிக்கும் தலைமை நிர்வாகிகளும், தலைவர்களும், இயக்குநர்களும் மேலைநாடுகளில் ஏகாதிபத்திய, ஏகபோக முதலாளிய வர்க்கத்தன்மை கொண்டவர்களாக உள்ளனர். கீழை நாடுகளில் தரகு, தேசங் கடந்த முதலாளிய வர்க்கத் தன்மைகொண்டவர்களாக உள்ளனர். அவர்கள் இப்போது வழமையான குறிப்பிட்ட தொழிற்கழகங்களின் வட்டார நலன்களையும் தாண்டி பொதுவான, உலக அளவிலான செயல் திட்டங்களை முன்வைத்துச் செயல்படுகிறார்கள். இவர்கள் உலக அரசியல் அரங்கங்களில் ஏகாதிபத்திய, பன்னாட்டு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூடுதலான அதிகாரத்துக்காக வாதிடுகிறார்கள். இத்தகைய நோக்கங்களுக்காக ஒவ்வொரு நாட்டிலும், உலக அளவிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தேசங்கடந்த பன்னாட்டு தொழிற் கழகங்கள் அடங்கிய கூட்டணிகள் கட்டமைக்கப்படுகின்றன.

1970-களில் தொழிற்துறையை வீழ்த்திவிடும் அளவுக்கான ஆபத்து, தாக்குதல் வருவதாக அவர்கள் சித்தரித்துக் கொண்டவை கடந்த கால வரலாறாகிப்போன அதேசமயம், பெரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியலில் தலையிட்டு செல்வாக்கைத் திரட்டிக்கொள்வது வேகம் பிடித்தது. தமது மூர்க்கமான, நேரடி அரசியல் அதிகாரத் தலையீடுகள் பிரச்சனைகளைக் கிளப்பும் என்று பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அஞ்சவில்லை. இவ்வகையான வெற்றி, முதலாளியச் சந்தைப் பொருளாதாரமே சிறந்தது என்ற சித்தாந்தத்தை உலகம் முழுவதும் நிலைகொள்ளச் செய்தது. விளைவாக, தொழிற்சங்கங்கள், தொழிற்சட்டங்கள், அரசு தொழில்களை நெறிப்படுத்துவது போன்றவற்றை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முற்றாக நிராகரித்தன.

11-us-protest1980-கள் மற்றும் 1990-களில் கொழுத்த நிதி ஆதரவு பெற்ற சிந்தனைக் குழாம்கள் மற்றும் அதிகாரத் தரகு-தொடர்பு நிறுவனங்களின் அணிவரிசையைக் கொண்ட பெரும் கார்ப்பரேட் தொழிற் கூட்டமைப்புகளும் குழுக்களும் பெருகின. அவை முந்தைய கால அதிகாரத் தரகு-தொடர்புப் பணிகளை மட்டும் கவனிக்கவில்லை. அதிகரிக்கும் கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களின் அதிகாரங்களையும் சுயேச்சைத் தன்மையையும் அரசுக் கொள்கை உறுதிசெய்யும்படி கொள்கை உருவாக்கம் செய்பவர்களை நிர்ப்பந்திக்கின்றன. இந்தக் கூட்டணிகள் பலவற்றின் வீச்சு இப்போது நவீனக் கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களின் தேசங்கடந்த தன்மைக்கேற்ப உலக அளவினதாகி விட்டன. இதன் காரணமாக அவை இப்போது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான திறந்த வாய்ப்புகளைக் கொண்ட கொள்கைகளைக் கடைப் பிடிக்கும்படி உலகம் முழுவதுமுள்ள அரசாங்கங்களை நிர்பந்திக்கின்றன.

“ஜனநாயக” அரசாங்கங்களின் இடத்தைத் தாம் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியை கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள் தொடங்கினர். வடஅமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்னாள் – இன்னாள் – தலைவர்கள் மத்தியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட மேட்டுக்குடியினர்களைக் கொண்டதுதான் சர்வதேசக் கொள்கை உருவாக்க உயர் மட்ட முத்தரப்பு ஆணையம். அதன் நிறுவனரும் தலைவருமான டேவிட் ராக்ஃபெல்லர் “நிர்வாகத்தில் அரசாங்கத்தின் பங்கு குறைக்கப்பட வேண்டும் என்று தொழிற் துறையினர் கூறுகையில் அரசாங்கத்தின் இடத்தை வேறுசிலர் எடுத்துக்கொள்ள வேண்டும்; அதைச் செய்வதற்கானவர்கள் தர்க்க நியாயப்படி தொழிற்துறையினர்தாம்” என்று எழுதினார். அதாவது, அரசாங்க அதிகாரத்தைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.

தற்போதைய “ஜனநாயக அரசமைப்பு முறை’’க்கு மாற்றாக அரசாங்கத் தலைவர்கள், அதிகாரிகளை உள்ளடக்கிய தொழிற்துறையினரின் வலைப் பின்னலைக் கட்டமைப்பதற்கு இந்த முத்தரப்பு ஆணையம் ஒரு உதாரணம். 1975-ல் இந்த முத்தரப்பு ஆணையம், ஒரு நூலைப் பதிப்பித்தது. “நிர்வாகத்தின் சில பிரச்சனைகள் அதிகமான ஜனநாயகத்தினால் விளைபவை. அதற்குப் பதிலாக, ஜனநாயகத்தை ஓரளவு மிதமாக்குவதுதான் தேவையானது” என்கிறது, “ஜனநாயகத்தின் நெருக்கடி” என்னும் அந்நூல்.

கடந்த நூற்றாண்டில் கலப்புப் பொருளாதாரமும் மக்கள் நலத் திட்டங்களும் அவற்றில் உறுதியான அரசாங்கமும் ஓரளவு மக்கள் சேவைகளில் ஈடுபட்டு வந்தன. முதலாளியத்தின் தொட்டிலான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில்கூட பல மக்கள்நலத் திட்டங்களும் அரசுப் பொதுத்துறை செயல்பாடுகளும் இருந்து வந்தன. புதிய தாராளமயக் கொள்கை புகுத்தப்பட்டதோடு, மக்கள்நலத் திட்டப் பொறுப்புகளைக் கைகழுவிவிட்டு, மிகக் குறைவான பங்கேற்பையே அரசாங்கத்திடம் கார்ப்பரேட் முதலாளிகள் வலியுறுத்துகின்றனர்.

முதலாளியத்துக்கு எப்போதும் சந்தை விரிவாக்கமும் பொருளாதார வளர்ச்சியும் தேவை. ஆனால், தற்போதைய சந்தை சுருங்கிவிட்டதால் கார்ப்பரேட் முதலாளிகள் தனிப்பட்ட தேசங்களில் இருந்து உலக அளவில் விரிவாக்கிக் கொள்ள விழைகிறார்கள். இதற்கு முன்பு சந்தைப் பொருளாக இல்லாத தனிப்பட்ட வாழ்க்கை, சமூக உறவுகள் மட்டுமல்ல; வழமையாகச் சந்தைக்கு வெளியிலுள்ளதாகக் கருதப்பட்ட அரசாங்க நடவடிக்கைகள், பொறுப்புகள், கடமைகள்கூட விற்பனைச் சரக்குகளாக, இலாபமீட்டும் சந்தைப் பொருட்களாக மாற்றப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிதண்ணீர், அடிப்படைக் கல்வி, பொதுசுகாதாரம், பொதுப் பாதுகாப்பு, சாலைப்போக்குவரத்து, முன்னேறிய வேலை நிலைமைகள் போன்றவைகூட சேவைச் சரக்குகளாக, வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டன. பொதுநலன்களுக்காகத் தனிமனிதத் திறமையையும் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தையும் நெறிப்படுத்துவதுதான் ஜனநாயகம் என்பதுபோய், கார்ப்பரேட் முதலாளிகளின் தொழில், சந்தை வியாபார நலன்களுக்காக அரசாங்கக் கட்டுமானங்களையும், சமூகத்தையும் சட்டதிட்டங்களையும் நெறிப்படுத்துவதாக மாற்றப்படுகின்றன.

இந்த மாற்றங்களைக் கொண்டுவரும் கார்ப்பரேட் (கூட்டுப்பங்கு)நிறுவனங்களின் சதியில் சிந்தனைக் குழாம்களும் குடிமைச் சமூகங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பாக, நமது நாட்டில் நடந்து முடிந்த 14-வது நாடாளுமன்றத் தேர்தல்களிலும், அதன் பிறகும், மோடியின் அரசியல் சதிகள் மூலமாகவும், ஆம் ஆத்மிக் கட்சியின் அறிமுகம் மூலமாகவும் முன்னுக்கு வந்திருக்கும் சிந்தனைக் குழாம்களையும் குடிமைச் சமூகங்களையும் பற்றிப் பேசாமலிருப்பது புரட்சிகர அரசியலுக்கேகூட குறையாகவே இருக்கும்.

(தொடரும்)

ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் ! – 1
ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் ! – 2
______________________________

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்

163

பாராளுமன்ற தேர்தலை ஒட்டி  நடந்த நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய சீமான், தேர்தலுக்கு பிறகு புலிபாய்ச்சல் என்ற வேலைத் திட்டத்தை வைத்து சீறிப்பாயப் போவதாக அறிவித்திருந்தார். புலிக்குட்டி எதுவும் சீறிப்பாய்வது போல தெரியவில்லை. ஆனால், சீமானை பற்றி பல பூனைக்குட்டிகள் தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

புலிப்பார்வை என்ற திரைப்பட வெளியீட்டு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பச்சமுத்துவுடன் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசிய சீமான், ‘பெருமகனார் – பெருந்தமிழர்’ பச்சமுத்துவின் வள்ளல் தன்மையை விதந்தோதி புகழ்ந்துள்ளார். பச்சமுத்து ஏழை மாணவர்களை படிக்க வைக்கிறாராம்.

உலகமே காறி துப்பும் ஒரு கல்விக் கொள்ளையனான பச்சமுத்துவை பற்றி எஸ்.ஆர்.எம் மாணவர்களிடமோ இல்லை பணம் கட்டிய பெற்றோர்களிடமோ கேட்டால் வண்டிவண்டியாக சொல்வார்கள். ஆனால் கூச்சமே இல்லாமல் ஒரு கல்விக் கொள்ளையனை போற்றி புகழ்கிறார் சீமான்.

ஒரு வேளை பச்சமுத்து புலி ஆதரவளாரக இருப்பாரோ என்று நீங்கள் எண்ணினால் இந்த வீடியோவை பார்ப்பது அவசியம்.

புலிகளையும் பிரபாகரனையும் வண்டி வண்டியாக கழுவி கழுவி ஊற்றுகிறார் பச்சமுத்து. ‘என் அண்ணன் பிரபாகரன்’ என்றும் ‘இடப்புறத்தில் விழுந்த உணவைக் கூட சாப்பிடாத மானப் புலி பரம்பரை நாங்கள்’ என்றும் பேசித்திரியும சீமான் இதைக் கேட்டபிறகு என்ன செய்திருக்கவேண்டும். நரம்புகள் புடைக்க, ரத்தம் சூடேறி வாங்கடா தம்பிகளா என்று கூறி புதிய தலைமுறையையும், எஸ்.ஆர்.எமையும் முற்றுகையிட்டு மன்னிப்பு கேள் என்று போராடியிருக்க வேண்டும்.

சீமான், பொன்னார், பச்சமுத்து
புலிப்பார்வை என்ற திரைப்பட வெளியீட்டு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பச்சமுத்துவுடன் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசிய சீமான், ‘பெருமகனார் – பெருந்தமிழர்’ பச்சமுத்துவின் வள்ளல் தன்மையை விதந்தோதி புகழ்ந்துள்ளார்.

சீமான் கேட்காமல் இருந்திருக்க மாட்டார். “ஏன்யா, என் தலைவனைப் பழித்துப் பேசினாயாமே” என்று கோபப்பட்டு சீறியிருப்பார். பிறகு, பாரிவேந்தர் பேசிய பஞ்சாயத்து டீல் சீமானுக்குப் பிடிச்சுப் போயிருக்க கூடும். யார் கண்டது?

ஏன் பாரிவேந்தரை எதிர்க்கவில்லை என்று நாம் கேட்டால், “நான் ஈழம் சென்றபோது…” என்று ஆரம்பித்து,  “அங்கு மறைவிடத்தில் அண்ணன் எனக்கு பயிற்சியளித்தபோது…” என்று நீட்டி “தம்பி நன்றாக கேட்டுக்கொள், பச்சமுத்து நம்ம அண்ணன் அவரை கண்ணீர் வராமல் நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்று தலைவர் சொன்னார் என்று எதையாவது அடித்து விடுவார்.

பிரபாகரனை பற்றி அவர் கூறி வரும் கதைகளை நம்பும் ஆக்சன் திரைப்பட ரசிகர்கள் கூட்டம் இருக்கும் வரை இதுபோன்ற கதைகளுக்கு பஞ்சமிருக்காது. பிராபகரனை தான் சந்தித்த போது நடந்தாக கூறும் கதைகளை தம்பிமார்கள்
யாராவது தொகுத்து புத்தகமாக போட்டால் காந்தி தொகுதிகளைவிட அதிகமான தொகுப்புகளை பெறமுடியும் என்பது மட்டும் நிச்சயம்.

“வணக்கத்திற்குரிய ஐயா பெருந்தமிழர் பாரிவேந்தர்” என்ற அடைமொழியுடன் கூழைக் கும்பிடு போட்டு மண்டியிடுகிறார் இந்த மண்டியிடாத மானத்துக்கு சொந்தக்காரர். சுற்றுலா வந்த புத்த பிக்குகளை தாக்கிய ‘வீரம்’ பச்சமுத்துவின் முன்னால் இருக்கும் இடம் தெரியாமல் ஒளிந்துகொண்டது ஏன் என்று எந்த தம்பியும் சீமானிடம் கேள்வி எழுப்பவில்லை.

பாரிவேந்தர்  கல்வியை விற்பனை சரக்காக்கும் ஒரு கல்வி கொள்ளையன். தமிழ் மாணவர்களை சுரண்டுபவர். நரவேட்டை மோடியை ஆதரித்தவர். இத்தனைக்கும் மேலாக சீமான் தன் தலைவராக கூறும் “பிரபாகரன் தான் ஈழ இன அழிப்புக்கு முக்கிய காரணம். பிரபாகரன்தான் ஈழத்தை பற்றி பேசுகிறார். மக்கள் பேசவில்லை. மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினார்” என்று பேசியிருப்பவர். ‘இத்தகையவரின் கூட்டத்திற்கு செல்கிறோமே, நாலு பேரு காறி துப்புவானே’ என்ற அச்சம் கூட இல்லாமல் போகிறார் என்றால், வலுவான காரணம் எதுவும் இல்லாமல் அண்ணன் இதைச் செய்வதற்கு வாய்ப்பே இல்லை.

“இலங்கையுடன்யாரும் அன்னந்தண்ணி புழங்கக்கூடாது” என்று மற்றவர்களுக்கு செய்த நாட்டாமையை, இவர்கள் யாரும் பெருந்தமிழர் பெருமகனாருக்கு செய்யவில்லை. தமிழகத்திலிருந்து சினிமா துணை நடிகர்கள் யாரும் இலங்கைக்கு செல்கிறார்களா என்று விமான நிலையங்களில் ஸ்லீப்பர் செல் போட்டு இவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்த காலத்தில் “எஸ்.ஆர்.எம் லங்கா” என்று இலங்கை அரசுடன் இணைந்து பல்கலைக்கழகம் அமைத்துக் கொண்டிருந்தார் பச்சமுத்து.

வழக்கமாக ஓலைப்பாயில் நாய் மூத்திரம் போனதை போல சத்தம் நிக்காமல் பேசும் திறமை வாய்ந்த வீரர்கள் யாரும் அப்போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

வைகோ, சீமான், நெடுமாறன்சீமானை மட்டும் நாம் குறை சொல்லமுடியாது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆரம்பித்து இன்று வரை பச்சமுத்துவுடன் கூட்டணியில் இருக்கிறார் தன்மான சிங்கம் வை.கோ. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிரேக்கத்தில் நடந்தது எல்லாம் நினைவில் வைத்திருக்கும் வை.கோவுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபாகரன் மீது பாரிவேந்தர் காறிதுப்பியது மறந்து விட்டது.

சீமான் அப்படிப்பட்ட ஞாபக மறதிக்காரர் அல்ல. “பெருமதிப்புக்குரிய ஐயா பாரிவேந்தர் அவர்கள் நம்முடைய நட்பு சக்தி, அன்னார் அவர்களை எதிர்த்து களமாட போவதில்லை” என்று கட்சி செயற்குழுவில் அறிவித்தார். சீமானைப்போல அதிகமான நட்புசக்திகளை கொண்டவர்களை இந்த பூலோகத்தில் எவரும் பார்க்க முடியாது.

காடுவெட்டி குரு இவருக்கு நட்புசக்தி, பா.ம.க தூண்டி விட்ட சாதி வெறியால் கொல்லப்பட்ட இளவரசனின் நத்தம் காலனி மக்களும் நட்புசக்தி, பெருமகனார் பால்தாக்கரே நட்புசக்தி, யாசின்மாலிக்கும் நட்புசக்தி, குஜராத்தின் கடனை அடைத்து மிச்ச பணத்தை உலக வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் மோடி நட்புசக்தி, இலை மலர்ந்தால் ஈழத்தை மலரவைக்கும் அம்மாவும் நட்புசக்தி, இடிந்தகரை மக்களும் நண்பர்கள், வைகுண்டராஜனும் நண்பன், கத்தி லைக்காவும் நண்பன், ‘நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பனே’ என்ற சசிகுமார் தத்துவப்படி ராஜப்க்சேவும் நண்பன்.

அப்போ யாருதான்யா எதிரி என்று கேட்கிறீர்களா?

தம்பிமார்கள் முகநூல் வாயிலாகவே யூரின் டெஸ்ட் செய்து யார் யார் மலையாளி, தெலுங்கன் என்று கண்டுபிடித்து முத்திரை குத்தி  வைத்திருக்கிறார்கள். ஆகவே, நமக்கு எதிரிகளே இல்லையே என்று தமிழினம் கவலை கொள்ளத் தேவையில்லை.

இதுநாள் வரை பச்சமுத்துக்கு தமிழினவாதிகள் ஆதரவளித்து வந்தது புதிய தலைமுறையில் முகம் காட்டத்தான் என்று பாமரத்தனமாக எண்ணியிருந்தோம். ஆனால், மேற்கண்ட நிகழ்ச்சியில் பேசிய சீமான் தனக்கும் பச்சமுத்துவுக்குமான டீல் என்ன என்பதை இலைமறைகாயாக வெளியிட்டார். அதாகப்பட்டது எம்பெருமான் பச்சமுத்து தன் கல்லூரி நிகழ்ச்சிக்கு சீமானை அழைத்திருக்கிறார். இருவரும் அருகருகே அமர்ந்து அளவளாவிக் கொண்டிக்கும் போது, யாருக்கும் கேட்காமல் சீமானின் காதருகே வந்திருக்கிறார் பச்சமுத்து.

வந்து, “நீங்கள் (ஏழை) மாணவர்களை அனுப்பி வையுங்கள் நான் படிக்க வைக்கிறேன்” என்றாராம். அன்றிலிருந்து இவரும் அனுப்பி வைக்க வைக்க அவரும் படிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். எத்தனை சீட், என்ன என்று எந்த விவரமும் கூறவில்லை. பெருந்தமிழர் என்பதால் பெரிய எண்ணிக்கையில்தான் இருக்கும் என்று ஊகிக்கலாம்.

இதே போலத்தான் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் இல்ல திருமண விழாவிற்கு சென்று  சிறப்பித்து வந்தார். ராஜபக்சேவின் நண்பர்களான லைக்கா குழுமம் தயாரித்திருக்கும் கத்தி படத்தையும் ஆதரிக்கிறார். இது குறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் “எதிர்க்க முடியாது, என்னான்ற? படத்தை தடுத்துப்பார் என்று நான் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்துவிடமுடியும் உங்களால்?“ என்று கத்தி பட முதலாளிகளின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் போல சீறுகிறார் சீமான்.

seeman-puli

அடுத்து இவர் முன்வைக்கும் வாதம் தான் நகைச்சுவையின் உச்சம். இந்தக் காட்சியில்தான்  உண்மையிலேயே ஹீரோ என்ட்ரி ஆகிறார். “நானும் விஜயும் சண்டை போட வேண்டும். இது தான் இவர்களின் நோக்கம். ஈழ ஆதரவாளர்களை விட விஜய் ரசிகர்கள் அதிகம். படத்தை நிறுத்தணும் என்று சொன்னால் அவன் ரசிகர்கள் எதிரிகளாகி விடுவார்கள். தேவையற்ற சிக்கல் ஏற்படும்” என்கிறார். இந்த டீலுக்கான பின்புலம் மற்றுமொரு தருணத்தில் வெளியாகலாம்.

அடுத்ததாக அவர் கூறுவது  “கருத்தைத்தான் பார்க்கணும், யார் எடுத்தார்கள் என்று பார்க்கக்கூடாது”  இதுதான் முக்கியமான லா பாயின்ட். பணப்பற்றாளரும், சாதிப் பற்றாளரும், ஆர்.எஸ்.எஸ் பற்றாளரும், சமஸ்கிருதப் பற்றாளரும், தமிழ்ப்பற்றாளருமான பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு விருதளித்து கொண்டாடியவர் நெடுமாறன். அப்புறம் விளார் நடராசன் (சசிகலா) சேர்த்து வைத்திருந்த தமிழ் மக்களின் பணத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டியவர். இதையெல்லாம் ஏனென்று கேட்காத தமிழ் கூறும் நல்லுலகம் தன்னை மட்டும் வறுப்பது ஏன் என்பது சீமானின் ஆதங்கம்.

சீமானை முகநூல் மூத்திரச்சந்துகளில் பலரும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சந்தடி சாக்கில், வை.கோவின் தம்பிகளும்  முக்காடு போட்டுக் கொண்டு சேர்ந்து அடிக்கிறார்கள். இந்த அநீதியை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

கத்தி விவகாரத்தில் அண்ணன் நெடுமாறனைக் கலந்தாலோசித்து விட்டுத்தான் முடிவெடுத்ததாக பண்பலை வானொலிப் பேட்டியில் ஒரு “பிட்”டைப் போட்டிருக்கிறார் சீமான். அன்று இதே போன்ற ஒரு சூழ்நிலையில் சிவகாசி ஜெயலட்சுமி பொங்கி எழுந்ததன் விளைவாகத்தானே “ஏட்டு முதல் எஸ்.பி வரை” என்ற இலக்கியம் வெளியானது!

ஆகவே, இது தனக்கு மட்டுமே நேர்ந்த அவலம் என்று சீமான் வருந்தத் தேவையில்லை. ‘பெருந்தமிழர்’ தமிழுக்காக விருது வழங்கும் விழாவில் வைகோ கலந்து கொள்ளப் போகிறார். பல அறிஞர்களுக்கு விருது கொடுக்கப்போகிறார் பாரி வேந்தர். நாளைக்கு இதெல்லாம் வரலாற்று பாடத்துல வரும். மாணவர்கள் எல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க.

பாரிவேந்தர் ஈந்த கார்களின் மீது படரும் முல்லைக்கொடிகளின் எண்ணிக்கை போகப்போக, கூடும். அப்புறம் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று ஆகிவிடும்.

அறத்துக்கு அத்தாரிட்டியான ஜெயமோகனே வேந்தர் ஈந்த காரின் மீது படர்ந்திருக்கும் போது, சீமானை மட்டும் தாக்குகிறார்களே!

கவுண்டமணி சொன்னதுபோல, சத்திய சோதனை தான்!

– ரவி

‘தி இந்துவுக்கு’ கண்டனம், கருவாடுக்கு வந்தனம் – சீறும் பேஸ்புக்

28

கோயம்பேடு சந்தையில், கடைகளில் கருவாடு விற்பதை நிறுத்திய மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ‘தி இந்து’வை கண்டித்து சமூகவலைத்தளங்களில் நண்பர்கள் எழுதிய கருத்துக்களின் தொகுப்பு.

அதிஷா

கருவாட்டு நாற்றம்

karuvadu-9கோயம்பேடு காய்கனி சந்தையில் விதவிதமான கருவாடுகள் மிக அதிக அளவில் விற்கப்படுவதாகவும் இதனால் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மிகவும் அஷௌகர்யம் உண்டாவதாகவும் சில நாட்களுக்கு முன்பு ஒரு தின பத்திரிகை குமட்டிக்கொண்டே செய்தி வெளியிட்டது.

1996-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஷட்டப்படி காய்கறிச் சந்தையில் காய்கறி மட்டும்தான் விற்கப்படவேண்டும் என்பதை மீறி இப்படி ஷைவ உணவு ஷாப்பிடுபவர்களுக்கு ஷங்கடம் வரும்படி கருவாடு விற்பது முறையா என்று அந்த செய்தி நீண்டிருந்தது. இதையடுத்து நேற்று மாநகராட்சியினர் கோயம்பேடு மார்க்கெட்டில் புகுந்து பல லட்சரூபாய்.. மன்னிக்கவும் ரூபாய் இருபதாயிரம் மதிப்புள்ள பல ஆயிரம் டன் கருவாடுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து ஷைவ உணவு ஷாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளாக நானும் என்னுடைய குடும்பத்தினரும் கருவாட்டினை விரும்பி உண்டு வருகிறோம். எனக்கெல்லாம் கருவாடு என்பது என்னோடே வளர்ந்த ஒரு தம்பி மாதிரி. தினமும் என்னோடு இருந்திருக்கிறான். ஒரு சட்டி பழைய சோற்றை கூட ஒரு துண்டு கருவாடிருந்தால் உற்சாகமாக சாப்பிட்டுவிட முடியும். காலை ப்ரேக்ஃபாஸ்ட் அப்படித்தான் நமக்கெல்லாம் இருந்திருக்கிறது. கறிசோறு தராத ருசியை கருவாட்டுக் குழம்பு தந்துவிடும்.

karuvadu-1கோவையில் உக்கடம் பகுதியில் கருவாடுக்கென்றே பிரத்யேகமான சந்தை உண்டு. அங்கு போனால் உலகின் எவ்வகை கருவாடும் சல்லிசு ரேட்டில் கிடைக்கும். அம்மாவுக்கு நங்கு கருவாடு, எனக்கு நெத்திலி, தங்கைக்கு துண்டு கருவாடு , வவ்வா, கொடுவா அவா இவா என கருவாடுகளில் நிறைய வெரைட்டி உண்டு.

சென்னைக்கு புலம்பெயர்ந்துவிட்ட பின் இந்த கருவாடு சந்தையை ரொம்பவே இழந்திருந்தோம். அண்ணாச்சி கடையில் கூட பாக்கெட் கருவாடு கிடைக்கும். தக்னியூண்டு துண்டு, வெரி சுமால் கருவாடு இரண்டு பீஸ் ஐந்து ரூபாய் என்று  விற்றார்கள். அதை வாங்கி குழம்பு வைக்கவும் முடியாது. சுட்டு திங்கவும் முடியாது. நல்ல ஃப்ரஷ்ஷான நெத்திலி கருவாடு கிடைக்காது. நங்கு கருவாடு கிடைக்காது. அம்மாவுக்கு தினமும் சாப்பாட்டோடு ஒரு சின்ன துண்டு கருவாடு இல்லையென்றால் ஒருவாய் கூட உருப்படியாக இறங்காது. அம்மாவின் வருத்தம் அதிகமான ஒருநாளில் பக்கத்துவிட்டு ஆன்ட்டி ஒருவரது தகவலின்பேரில் கி.பி.2007 தொடங்கி கோயம்பேடு சந்தையில் கருவாடு வாங்கத் தொடங்கினோம்.

கோயம்பேடு காய்கனி சந்தையில் இருக்கிற நூற்றுக்கணக்கான கடைகளில் வெறும் பத்து பதினைஞ்சு கடைகளில்தான் கருவாடு விற்கப்படும். மிக குறைந்த அளவிலேயே விற்கப்படும். அதுவும் மளிகை கடைகாரர்களுக்கு விற்க பாக்கெட்டில் அடைத்துவைத்த கருவாடுகளே கிடைக்கும். ஊரில் விற்பதுபோல நன்றாக குவித்து வைத்து பரப்பியெல்லாம் மணக்க மணக்க விற்கமாட்டார்கள். கருவாடுக்கென்று இருக்கிற கொஞ்சநஞ்ச மரியாதையையும் உறிஞ்சிவிட்டுத்தான் இங்கே விற்கிறார்கள். கருவாட்டின் மணம் பார்க்காமல் எப்படி வாங்குவது. இருந்தாலும் கோயம்பேடுதான் கடைசி வாய்ப்பு என்பதால் அங்குதான் மொத்தமாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது நம்முடைய வழக்கம்.

karuvadu-4இந்த கருவாட்டுக் கடைகளில் வாசனை சுத்தமாக இருக்காது. இதனால் யாருக்கும் எந்த பிரச்சனையுமே இருந்து நான் கண்டதில்லை. அதே பகுதியில் அழுகின காய்கனிகளின் நாற்றம்தான் குடலை கிழித்துக்கொண்டு குமட்டும்! அந்த உச்சபட்ச துர்நாற்றத்தை பொருத்துக் கொள்கிற ஒருவரால் உலகின் எந்த நாற்றத்தையும் புன்னகையோடு ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் என்னமோ இந்த நாலுபாக்கெட் கருவாட்டினால்தான் நாட்டுக்கு தீங்கு விளைந்துவிட்டது போல… அதைதான் இப்போது துப்பறிந்து கண்டறிந்து செய்தி வெளியிட்டு ஷூத்தப்படுத்தியிருக்கிறார்கள். கருவாட்டை விற்று விதிமுறைகளை மீறிவிட்டார்களாம்?

என்னிடம் இப்போது தொக்கி நிற்கிற முதற்கேள்வி ‘இனி நானும் என் தாயும் கருவாட்டுக்கு என்ன செய்வோம்? எங்க போவோம்…?’ என்பதுதான். நாளை முதல் மீண்டும் அந்த அண்ணாச்சி கருவாடு விற்றால் (அவரும் கோயம்பேட்டில் கொள்முதல் பண்றவர்தான்) ஒரு துண்டோ இரண்டு துண்டோ வாங்கி நக்கிக்கொள்ள வேண்டியதுதான்.

ஒருவேளை இனி ஷூத்த பத்தமாக கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி சாப்பிடப்போகிற ஷைவ பட்சிணிகள் ஒன்று சேர்ந்து முகப்பேர் பக்கம் என்னை போன்ற ஏழை கருவாட்டு ப்ரியர்களுக்காக ப்ரத்யேக சந்தை கட்டிக்கொடுப்பார்களா என்பதை தெரிந்துகொள்ளவும் ஆர்வமாக இருக்கிறது.

கருத்துக்கள்:

விநாயக முருகன் எனக்கு ஒரு சந்தேகம்.. அவங்க வளர்க்குற நாய்க்குக் கூட தயிர்சாதம்தான் ஊட்டி விடுவாங்களா?

அதிஷா அதிஷா – விநாயக முருகன் நிஜமாகவே தயிர்சாதம் மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த நாய்களை நான் அச்சத்தோடு சந்தித்திருக்கிறேன்.

karuvadu-7கவிதா சொர்ணவல்லி  ஏது விட்டா….இனி நம்ம கழுத்துல எல்லாம் “கறி கருவாடு சாப்பிட மாட்டேன்”னு எழுதி டேக் கட்டிக்கிட்டு தான் அலையணும் போல !

Nagarajan Nathamuni சமஸ் மீனவர் படும்பாடு பத்தி உருக்கமா எழுதி ஒரு வாரம் முடியல அதுக்குள்ளே….. ஆப்பு

Sunil Kumar எல்லாம் அவாளோட சிறுவாட்டுத்தனம் தான் வோய் ..

Puthiya Parithi ஏன்டா அங்க கருவாடு விக்க விடமாட்டுறிங்கன்னு கேக்காம,, அங்க கிடைக்கும் இங்க கிடைக்கும் என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளும் வரை லட்ச அதிஷாக்கள் அம்மாவுடன் இந்த பெருநகரத்தில் கருவாடு தேடி அலையவேண்டியதுதான்..

கவிதா சொர்ணவல்லி Puthiya Parithi & கோயம்பேடு என்ன அவா வசிக்கிற இடமா என்ன ???? இவா தொல்லை எல்லாம் இடங்களுக்கும் தொடருதே. கருவாடு நாறும். குளிக்க தண்ணி இல்லாதவங்க நாருவாங்க. SLUM நாறும். எல்லாத்துக்கும் மாற்று இடம் பாத்து, திருவண்ணாமலை பக்கம் கொண்டு விட்டுருவாங்க. சென்னைனு சொல்லி. இதுக்குதான் அதிகாரத்தை கை நம்ம கைல வச்சுக்கணும். படிக்கணும்னு. பெரியவங்க எல்லாம் சொல்லிருக்காங்க.

karuvadu-2Puthiya Parithi இந்த உலகமே அவாவுக்காக படைக்கப்பட்டது அவாவுக்கு வேலை செய்ய படைக்கப்பட்ட அற்ப மானிடப் பதர்கள்தானே நாமெல்லாம்…

கவிதா சொர்ணவல்லி நம்மள மாதிரி தெருவுல இறங்கி கூச்சல் போடுரவளா அவா எல்லாம். உக்காருற இடத்துல இருந்தே அதிகாரத்தை அசைக்கிறவா தான ???? விடுங்க பாஸ். எல்லாரும் வெஜ் ஆகி, அவா வீட்டுக்கு சாப்பிட போயிடலாம் ! உக்கார வச்சு அவாளோட FAMOUS அக்கார வடிசல் சமைச்சு போடுராளா பாக்கலாம் !

Jeyamahesan Chandrakanthan அரிசி பருப்பு எண்ணெய் போன்ற பொருட்களும் விற்க கூடாது என செய்தியில் உள்ளதே.

அதிஷா அதிஷா Jeyamahesan Chandrakanthan இருக்கு ஆனா பறிமுதல் செஞ்சது வெறும் கருவாடுதான்றதுதான் காமெடியே

karuvadu-8வினோத் குமார் சேகர் மேற்கு வங்கத்துல மீன் எல்லாம் சைவத்துல தான் வருது… அவா எல்லாம் மீன் சாப்டுவா….குஜராத்ல முட்டை கூட கிடைக்காது….என்ன பண்றது…இங்க நம்ம விரும்பினத கூட நம்மால சாப்ட முடியல…ஹோட்டல் போனா அடுத்தவன் தட்ட பாத்து ஆர்டர் பண்ற ஆளுங்க தான் அதிகம்….ஆதம்பாக்கதுல வீடு சும்மா இருந்தாலும் இருக்கும்.. மத்தவாளுக்கு வாடகைக்கு தர மாட்டேன்றா…இப்டி போனா திருவண்ணாமலை இல்ல….இமய மலைக்கே கூட அனுபிடுவாங்க….

Mahendhiran Kilumathur இந்த கருவாட்டு சிக்கல் இவாள்களால் மட்டும் இல்லை, வீகன், கீகன் என்று தங்களை தாங்களே அழைத்துக்கொண்டு, நாங்க பால் கூட குடிக்க மாட்டோம் எனச் சொல்லும் நவீன அவாள்களும் கூட இப்படி ஒரு சில ஹோட்டல்களில் ரசம், குழம்பு என்று கலந்து கட்டி அடிக்கும் போது பக்கத்தில் யாராவது அப்பாவி ஒரு சிக்கன் தந்தூரியை சுவைத்துக் கொண்டிருந்தால் அழுகிய முட்டையை முகர்ந்தது போல் முகத்தை வைத்துக் கொண்டு கூட வந்திருக்கும் பாகன்களோடும் மோகன்களோடும் கண்ணைக் கண்ணை காட்டிக் கொண்டு பேசும் பக்கிகள் வாயில் அப்படியே ஒரு முழு துண்டு கோழியை தினிக்கும் ஆத்திரம் வரும். கோழியின் விலை கருதி அதைச் செய்வதில்லை. கருவாடென்றால் கேட்கவா வேண்டும். இவர்கள் ஏன் அவாள்களுக்கென்று ஒரு தனிச் சந்தையை உண்டாக்கிக் கொள்ளக் கூடாது?, அவாள்களே விவசாயம் செய்து அவாள்களே விற்று வாங்கி உண்டு கிடக்கலாமே? # மை ஃபூட்

masi-sambalகவிதா சொர்ணவல்லி ஷைவம் ஷாபிடும் மக்கள் எல்லாம், ஏன் கறி சாப்பிடும் மக்கள் உண்டாக்கும் காய்கறிகளை புறக்கணித்து, தங்களுக்கென்று ஒரு சொந்த மார்கெட்டை உண்டாக்கி காய் கனி வாசனைகளில் மிதக்கக் கூடாது?

கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ் செய்தி என்னவோ கருவாடு என்பதை விட காலகாலமாக நாம் உண்ணும் ஒரு பொருள் அதை பெரும்பான்மையான நுகர்வோர் வந்து பெற்றுச் செல்லும் சந்தையில் விற்க மறுக்கப்பட்டதே… இந்த நிலைத்தகவல் சகோதரர் அதிஷா அவர்களின் பிற நிலைத்தகவல் போல மேம்போக்காக நக்கலுக்கான கமெண்டுகளை பெரும் தகவல் அல்ல. அவர் உணர்ச்சிக்கொந்தளிப்பில் இங்கு பதிந்துள்ளார் அதை உள்வாங்கி பின்னூட்டம் வந்த மாதிரி தெரியவில்லை. அவரது எண்ணத்தை எழுத்தாகியுள்ளார். அவரைக் காட்டிலும் அப்பொருள் அதிகம் தேவைப்படுவோரால் இவ்வளவு சரியான வீரியமான நிலைத்தகவலை வெளியிட இயலாது. மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு சந்தை தனது மக்களுக்கு ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளை தர மறுக்கிறது என்பது மிக கேவலமான ஒரு சுதந்திர நாட்டின் மட்ட ரக மறைமுக தாக்குதல் அரசியல். இது துவக்கமாயின் இதுபோல அராஜக அத்துமீறல் வட மாநிலங்களுக்கு வேண்டுமாயின் சரிவரலாம். இங்கே மிகவும் கடுமையான விளைவை இந்த தடுப்புக்கு காரணமான அரசியல் கட்சிகள் சந்திக்கும். தமிழகம் அதன் இயல்பு நிலையில் தான் இனியும் இருக்கும். மாற்றம் கொண்டுவர எண்ணுபவர்கள் எப்பவுமே மாயமாகி விடுகின்றனர்.

karuvadu-3வினோத் குமார் சேகர் அறந்தாங்கி பகுதியில் கல்யாணத்துல கறி சோறு போடதும் ஆடி மாசம் அம்மனுக்கு கூழோட கருவாடு படைக்கறதும் என்னவாம். சேகர் மக்களின் தேவைக்கேற்ப அடகுகடையில் ரீசார்ஜ், பெட்ரோல் பங்கில் சூப்பர் மார்க்கெட், மெடிக்கல் ஷாப்ல பேஸ்ட் பிரஷ் சோப் போன்ற புரவிஷன் கிடைக்கதான செய்யுது

Mahendhiran Kilumathur கடற்கரை எப்போதும் மீனவனுக்குத்தான் சொந்தமாய் இருந்தது நம்மைப் போல பொது மக்கள் போய்தான் தாங்கொனாக் குப்பைகளையும், பிளாஸ்டிக்குகளையும் வேடிக்கை பார்க்கிறோம் பேர்வழி என்று கருவாடு காயவைக்கக் கூட மீனவனுக்கு லாயக்கில்லாத இடமாய் மாற்றி வைத்திருக்கிறோம், முதலில் மீனவர்களால் கடற்கரை காப்பாற்றப் பட்டு வந்தது. இன்று ரிசார்ட்டுகளாலும், கடல் பார்க்கும் வசதிகளோடும் வீடுகளையும் கட்டிடங்களை எழுப்பி கடற்கரையினை மாசு படுத்திக் கொண்டிருப்பது நாம் தான். கடற்கரை என்பதை மீனவனுக்குச் சொந்தம் இல்லை எனபது போல ஆக்கி இன்று வாழ்வாதாரம் இல்லாத ஒரு சமூகத்தை உண்டாக்கி வைத்திருப்பதும் நாம்தான். நீங்கள் சொல்வது போல கபாலீஸ்வரர்களுக்கும் பெருமாள் கோவில்களுக்கும் வேண்டுமானால் கருவாடு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களைப் போல கருவாட்டின் வாசனை பிடிக்கும் சாமிகளுக்கெல்லாம் கருவாடு படைத்துக் கொண்டும் சமைத்துக் கொண்டும்தான் இருக்கிறோம். யாரையும் யாரும் வற்புறுத்தி வாங்கவோ, சமைத்து சாப்பிடவோ சொல்லவில்லை. ஆனால் இப்போது கருவாட்டுக்கு கண்டனம் தெரிவிக்காவிட்டால் நாளையே முனியாண்டி விலாசில் மாட்டுக் கறியும், ஆட்டுக் கறியும் கிடைக்காமல் போகலாம், சைவ உணவுக் காரனை அசைவம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்பதற்கும், அசைவம் சாப்பிடும் ஒருவனை அசைவம் சாப்பிடாதே என்பத்ற்கும் ஒரு வித்யாசமும் இல்லை. கடற்கரை மாசுபாடுகள் எல்லாம் பற்றிப் பேசும் நீங்கள் கடற்கரையை சுத்தம் செய்தால் மீனவன் எங்கே போவான் என்பது பற்றியோ மீனவத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு சமூகம் என்ன ஆகும் என்பது பற்றியோ கருவாடு விற்கும் வாங்கும் சமூகம் என்ன ஆகும் என்பது பற்றியோ கவலை கொள்ளாதது வருத்தமளிக்கிறது

karuvadu-6எம்.ஏ. காதர் கருவாட்டோடு உங்களுக்கு உள்ள உறவு ! அப்பப்பா அருமை. நீங்க கருவாட்டு “மனம்” என்றே தலைப்பிட்டு இருக்கலாம். நாமதான் 6 மாதம் வீட்டு தேவைக்கான கருவாட்டை மாலத்தீவில் இருந்து கொண்டு போய்விடுகிறோமே! என்று சும்மா இருக்க முடியலே. கோயம்பேடு சந்தையில் தொடங்கிய கருவாட்டு கடைகளின் அடைப்பு தமிழகம் முழுவதும் தொடர வாய்ப்புள்ளது. அப்படி தொடர்ந்தால்,எங்க ஊர் ‘செங்கோட்டை” சந்தையில் உள்ள இரண்டு கடைகளையும் அடைத்தால், என் சொந்தங்கள் இதை வைத்து நீ தரும் கருவாடு இனி பத்தாது அதிகம் கொண்டு வா என்று மிரட்டுவார்களோ என்று பயமாக இருக்கிறது. எனவே இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

Ilangovan Balakrishnan அசைவக்காரர்கள் சைவக்காரர்களை கீழ்த்தரமாய் நடத்துவதோ, ஏளனப்படுத்துவதோ, ஒதுக்கி வைப்பதோ, விரட்டி விடுவதோ இல்லை. ஆனால் சைவக்காரர்கள் அசைவக்காரர்களை அப்படி செய்யும் குரூர புத்தியுடன் இருக்கிறார்கள். விலங்கு, தாவரம் இரண்டுக்கும் உயிரும் உண்டு, உணர்ச்சியும் உண்டு. விலங்குகளைக் கொல்வது மட்டும் உயிர்க்கொலை என்றும், தாவரத்தைக் கொல்வது உயிர்க்கொலை ஆகாது என்ற வாதம் மூன்று நூற்றாண்டுக்கு முந்தைய முட்டாள்த்தனம்.

karuvadu-5அசைவ உணவு சாப்பிடும் ஐரோப்பிய- அமெரிக்கர்கள் அறிவுத்துறையில் வியத்தகு சாதனைகள் சாதிக்கிறார்கள். அசைவ உணவு சாப்பிடும் ஆப்பிரிக்க- சீன, ஜப்பானியர் உடல் உழைப்பிலும் உடல் உறுதியிலும் உலகளாவிய சாதனையை படைக்கின்றனர். அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியும், வாழ் நாளும் இந்திய சைவக்காரர்களை விட கூடுதலாக இருக்கின்றது.

ஆக, யாரேனும் அசைவம் வேண்டாம் என்றால் அது அவன்/அவள் தலை எழுத்து. அதற்காக அடுத்தவர்களை டார்ச்சர் பண்ணுவது குசும்பு.

ஹோமோசெபியன்ஸ் எனப்படும் மனித குலம் இயல்பாக மாமிச பட்சிணியே. இந்த மண்ணின் முதுகுடி யாவரும் இரண்டரை லட்சம் ஆண்டுகளாய் மாமிசம் சாப்பிட்டு வளர்ந்தவர்களே. இன்று சைவம் உபதேசிக்கும் பார்ப்பனர்கள் கூட, வேதகாலத்தில் அவிர்பாகமாய் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்த குறிப்புகளும் வேதங்களில் இருக்கிறது. சமண- பௌத்த சமயத்தினரின் புகழைக் கண்டு பொறுக்காமல் வைதீக சமயத்தினர் அவர்களிடமிருந்து காப்பி அடித்துக் கொண்ட தப்பான காரியம்தான் இந்த சைவப்பழக்கம்.

அந்த முட்டாள்த்தனத்தை உயர்வான சங்கதியாகவும் இயல்பான உணவுப்பழக்கத்தைக் கொண்ட அசைவர்களை தாழ்வானவார்களாகவும் கருதுவதும் வக்கிரப்பார்வை. ருசி, மணம் என்பவை பயிற்சியின் விளைவாய் வருபவை.மேட்டிமைத்தனத்துடன், சகஜீவன்களை வெறுக்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே கருவாடு ” வீச்சம்” என்ற கருத்துருவாக்கமும், வன்மப்பயிற்சியும்.

சக மனிதர்களை, ருசியை, மணத்தை வெறுப்பின் அடிப்படையில் அணுகப் பயிற்சி செய்து கொண்டிருப்பவர்கள் தனது கெட்ட புத்திக்காக தாம்தான் அந்த இடத்தை விட்டு ஓடிப் போகவேண்டுமே ஒழிய எந்தப் பாவமும் அறியாத அந்த எளியவர்களை விரட்டி விட அந்த வன்மக் காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

பேஸ்புக்கில் நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் August 19

காய்கறி விக்குற கோயம்பேடு மார்கெட்டுல கருவாடு விக்க கூடாதாம்…. கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை…

கருத்துக்கள்

Anthony Fernando அவனுங்க அலுவலகத்தில் மாமிச உணவுகளை சாப்பிட அனுமதி கிடையாது என்று சொன்ன போதே நம்மாளுங்க உள்ளே புகுந்து பாடம் கற்ப்பித்து இருந்தால் இன்றைக்கு நாம நம்ம வீட்டில என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிட கூடாது என்று சண்டித்தனம் பண்ணுகிற அளவிற்கு அவனுங்க வந்திருக்க மாட்டார்கள் …
இனியாவது நம்மவர்கள் விழித்து கொண்டால் நல்லது

M Mohamed Rafiq என்ன மாதிரி ஆளுங்க இவனுங்க..கருவாடு வாசத்த முன்ன பின்ன அனுபவிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்…

பேஸ்புக்கில் பரிமள ராசன்

நாற்றம் புடிச்ச மாட்டோட ‘கக்கா’,மூத்திரம் இதையெல்லாம் கரைச்சு ‘பஞ்சகவ்யம்’னு குடிக்கிறியே?
அதவிட கருவாடு என்ன நாறுதாடா உங்களுக்கு?
கருவாடு மணக்கும்டா !
ஒரு தடவ கருவாட்ட தின்னுபாரு அப்புறம் கருவாட்ட உடமாட்ட !
நினைச்சாலே நாக்குல எச்ச ஊரும் அற்புதமான சுவைகொண்ட உணவு கருவாடு.
கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் கருவாடு விற்கக்கூடாது என எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் !
i support ‘KARUVADU’

கருத்து

Abu Aafreen I support karuvaadu, karuvaadu thingaadhavan kazudhaiyaadhaan iruppaan

பேஸ்புக்கில் திருமுருகன் காந்தி

கோயம்பேட்டில கருவாடு வித்தா உங்களுக்கு என்னடா?…

மீனவன இலங்கைக்காரன் கொன்னா, அதுக்கு “மீனவன் எல்லைதாண்டுறான்”னு கட்டுரை போட்டு நியாயப்படுத்துறான். ஏழைகளும்-உழைப்பாளிகளும் எளிய சத்துமிகுந்த உணவு வித்தா அதுக்கு கட்டம் கட்டி கட்டுரை போடுறான்.

தி இந்து அலுவலகத்துக்கு பக்கத்துல கையேந்தி பவன் நடத்துன தோழரோட கடைய அடிச்சு , பிரிச்சு உடைக்க வைச்சான். செய்து வைத்த மதிய உணவினை ரோட்டுல போட்டானுக இந்த பத்திரிக்கை அலுவலர்கள் .

தீண்டாமையை தொடர்ந்து தூக்கிப் பிடிக்கிற ‘தி இந்து’வுக்கு 2009 இனப்படுகொலை முடிந்த பொழுதே இழுத்து மூடவைத்திருக்க வேண்டும். ஒன்றரை லட்சம் தமிழர்களைகொலை செஞ்சதை நியாயப்படுத்துன பத்திரிக்கை தமிழர்களால் புறக்கணிக்கப்படாமல் இருப்பது அவமானகரமானது.

கோயம்பேட்டில் கருவாடு மட்டுமல்ல, ஆடு-கோழி-மாட்டுக்கறியும் , பன்றிக் கறியும் விற்பதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். சிக்கன் கறி திருவிழா என்று ’தி இந்து’ இதழில் விளம்பரம் போட்டு காசு பார்ப்பதற்கு எந்த சனதானமும் இவனுகள தடுக்கவில்லை…உழைப்பாளிகள், ஏழைகளின் வணிகத்தில் கைவைப்பதே இவனுகளுக்கு தொழில். தி இந்துவை இழுத்து மூடுவோம்.

கருத்துக்கள்

Abdul Khader சென்னையில கஞ்சா விற்றால் கண்டுகொள்ள மாட்டான் ….கருவாடு விற்றால் தடையா ? அரசும் அரசு நிர்வாகமும் அதுக்கு சொம்பு தூக்கும் முற்போக்கு பாப்பானின் பத்திரிகையும் …..நல்லா இருக்கு ….

Vanna Serr ஹிந்து ராம் எதை எதையெல்லாம் சிங்கள அரசுக்கு வித்தும், கொடுத்தும் வயிறுகழுவும் பொழுது, அப்பாவிகள் வயிற்றுப்பிழைப்புக்கு கருவாடு விற்றால் என்னவாம்??!!

Fisher Folk மீன் வெட்டிபோட்டு (நாம காட்டுற மீன கண் முன்னாடியே வெட்டுவானுங்க), நண்டு, இறால், கருவாடு பாக்கெட் போட்டு விக்கிற H Mart-ல தான் (அமெரிக்காவில்) ஐயர் எல்லாரும் பழம், காய்கறி எல்லாம் வாங்கிறான். இத்தனைக்கும் H Mart ஒரே கடை. கோயம்பேடு மார்கெட்ல தனித் தனி கடை.

அப்புறம் ஏன் பார்ப்பானுக்கு இவ்வளவு நடிப்பு!. இந்திய ஐயர் வேற! அமெரிக்க ஐயர் வேறயா!. PS: H mart-famous south korean large one hall super market chain in US with variety of fruits, vegetables, and fish, crap etc. Vegetables, fruits மலிவாகவும், தரமாகவும் கிடைக்கும் என்பதால் அவ்வளவு பார்பனர்களையும் அங்கு பார்க்கலாம். ஹிந்து பத்திரிகைக்கு ஏழைகளின் வணிகத்தில் கைவைப்பதே தொழில்

Thambi Prabha கருவாடு விக்கிற பகுதியில இந்து பத்தரிக்கை விற்கலாம்! ஆனால் மார்கெட்டில் மட்டும் கருவாடு விற்க கூடாதா? இந்து பத்திரிக்கை கருவாடு மடிச்சு கொடுக்கத்தான் பயன்படுது!

Thiru Rajan கழுதைகளுக்கு தெரியுமா கருவாட்டு வாசனை…முழுக்க ப்ரஷர் வந்தவனுங்க…பார்ப்பான் கட்டம் கட்டி போட்டுட்டான்னா உடனே சட்டம் பாய்ஞ்சிடுது…ஏழைதமிழனுக்கு பிரச்சினைன்னா மட்டும் ஒடுக்குது..

Subash Chandra Bose தனக்கு ஒவ்வாதவற்றை தடை செய்வது பார்ப்பனிய சிந்தனை. அதைத்தான் பார்ப்பான் இந்து ராம் செய்துள்ளான். கடவுள் மறுப்பு என்பது விஞ்ஞானம். அதை மக்கள் தளத்திற்கு கொண்டு சென்றது பெரியார் அவ்வளவுதான்.

பேஸ்புக்கில் Pichaikaaran Sgl

எங்க ஏரியாவில் கருவாட்டுக்கடை பக்கத்தில் காய்கறி கடைகள் உள்ளன.. காய்கறி வாசம் எனக்கு பிடிக்கவில்லை.. அவற்றை அகற்ற மாண்புமிகு அம்மா அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்.

பேஸ்புக்கில் Aazhi Aazhi Aazhi வினவு கட்டுரையை பகிர்ந்திருந்தார்

கருத்துக்கள்

Nambi Arulnambi அந்த ………………………மனது உள்ளே முழுவதும் துர்நாற்றம் வீசும். அதை முதலில் அவா கழுவட்டும். அவா க்கு என்ன தெரியும் அருமையான நெத்திலி கருவாடு வறுவல் சுவை பற்றி.  என் தமிழன் ரசம் வைத்து , நெத்திலி பொடி வறுவலுடன் பழைய அமுது உண்டு விட்டு ஒரு நாள் முழுவதும் நான் உற்சாகமாக வேலை பார்ப்பேன் …….அவாக்கு வேணும்னா காய்கறி, அரிசி, பருப்பு, மிளகாய், மல்லி எல்லாம் அவா அடுப்படில நட்டு வளர்த்து அதுலயே சமைச்சிக்க சொல்லுங்க ……………கடுப்புகள கிளப்பிட்டு. உள்ள விட்டதே தப்பு இதுல நம்ம மீதே வழக்கா ????

கருவாடு karuvadu_en