Saturday, July 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 708

முதலாளித்துவ பயங்கரவாதம் – புஜதொமு கருத்தரங்கம் !

4

தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கத்தான் ஆலைகளைத் துவக்குவதாக பசப்புகின்றனர், முதலாளிகள். ஆனால், உண்மை அதுவல்ல. தொழிலாளர்களாகிய நம்முடைய உழைப்பை சுரண்டுவது மூலம் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டிக் கொள்வதற்காகத்தான் தொழில்களைத் துவக்குகின்றனர்.

தொழிலாளர்லாப வெறியுடன் அலைகின்ற முதலாளித்துவமானது, தனது லாபத்தை அதிகப்படுத்தி, தன்னுடைய மூலதனத்தை மேலும், மேலும் பெருக்கிக் கொள்வதற்கு பல்வேறு சுரண்டல் முறைகளைக் கையாளுகின்றது. ஒரே வேலையைச் செய்கின்ற நம்மை டிரெய்னிங், கேசுவல், கான்ட்ராக்ட் என்ற பெயரில் பிளவுபடுத்தி, பல வருடங்கள் நிரந்தரம் செய்யாமல் வைத்துள்ளனர். மேலும், குறைவான சம்பளம் கொடுத்து ஒட்ட, ஒட்டச் சுரண்டுகின்றனர், முதலாளிகள். 10-12 மணி நேரத்துக்கு வேலை நேரத்தை அதிகப்படுத்துவது, விடுமுறை நாட்களில் வேலைக்கு வருமாறு கட்டாயப்படுத்துவது, நவீன கருவிகளைப் புகுத்துவது போன்ற எண்ணற்ற வழிகளில் நம்முடைய உழைப்புச் சக்தியை துளிகூட விடாமல் உறிஞ்சிக் கொள்கின்றனர். நெஞ்சைப் பிளக்கும் வேலைச் சுமையை சுமத்தி நம்மை சக்கையாகப் பிழிந்து கொள்வதோடு, ஓய்வு-உறக்கத்தையும் பறித்துக் கொள்கின்றனர்.

சிறு வயதிலேயே, அதாவது 17 முதல் 24 வயதுக்குள்ளாகவே, ஆற்றல் முழுவதையும் உறிஞ்சி எடுத்துவிட்டு, தேவையற்றவர்களாக வீதியில் வீசி எறிகின்றனர். வேலை நிரந்தரம் மறுப்பது, லீவு மறுப்பது, பாதுகாப்பான வேலை நிலைமைகளை மறுப்பது போன்ற எண்ணற்ற வழிகளில் நாம் அடக்கு முறைக்கு ஆளாகின்றோம். வெறிகொண்டு அடிப்பதும், ஆபாசமாக திட்டுவதும் கூட நடக்கிறது. பெண் தொழிலாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதும், ஆண் தொழிலாளர்களுக்கு இணையாக வேலை செய்கின்ற இடத்தில் சமமான ஊதியம் மறுக்கப்படுவதும் நடக்கிறது. இக்கொடுமைகளில் இருந்து விடுதலை பெறவும், நியாயமான உரிமைகளை அடையவும் சங்கம் துவங்க முயற்சி செய்தால் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, சங்க முன்னணியாளர்களைப் பணியவைக்க முயலுகின்றனர், முதலாளிகள். அற்ப காரணங்களைக் கூறி சஸ்பெண்ட் செய்வது, தொலைதூரத்துக்கு கட்டாய இடமாற்றம் செய்வது, போலீசை வைத்து மிரட்டுவது, வீட்டிற்கு போய் பெற்றோர் அல்லது மனைவியிடம் அச்சுறுத்தும் வகையில் பேசுவது என தினம் தினம் துன்புறுத்துகின்றனர். இதற்கும் பணியாவிட்டால் வேலையை விட்டே துரத்துகின்றனர்.

சங்கம் துவங்க நாம் செய்கின்ற முயற்சிகளை முறியடிக்க, தொழிலாளர்களில் ஒரு சிலரை அச்சுறுத்தியோ, ஆசை காட்டியோ கருங்காலிகளாக மாற்றுகின்றனர், முதலாளிகள். இந்த ஒருசிலரைப் பயன்படுத்தி “ஒர்க்கர்ஸ் கமிட்டி” என்ற பெயரில், முதலாளிகளது உத்திரவுக்குத் தலையாட்டும் கமிட்டியை உருவாக்குகின்றனர். இந்த கமிட்டிக்கு பெயரளவில் அங்கீகாரம் கொடுத்து, தொழிற்சங்கம் கட்டும் முயற்சிக்கு வேட்டு வைக்கின்றனர்.

அதிகாரிகளுக்கு சங்கம் வைக்க சட்டப்படி உரிமை இல்லை. இதையே கேடாகப் பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு சூப்பர்வைசர், டீம் லீடர், கேப்டன் என்று பெயர் வைத்து, பெயரளவில் அதிகாரிகளாக அறிவிக்கின்றனர். சங்கம் அமைக்கின்ற முயற்சியை கருவிலேயே அழிக்கின்றனர்.

கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணிக்கின்றனர். போதாக்குறைக்கு நம்முடைய சக தொழிலாளியுடன் பேசவும், பழகவும் விடாமல் எந்திரத்தோடு எந்திரமாக வாழ்கின்ற நிலைக்கு தள்ளி உள்ளனர். நம்மை, சக தொழிலாளியுடன் ஒட்டுறவுகள் ஏதுமில்லாத உழைப்புப் பிண்டங்களாக்கி, ஒட்டு மொத்த தொழிற்சாலையையே சித்திரவதை கூடமாக்கி வருகின்றனர்.

உழைப்புச் சுரண்டல், அடக்குமுறை, உயிருக்கும், உடல் உறுப்புகளுக்கும் பாதுகாப்பு இல்லாத வேலை நிலைமை ஆகியவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக வேலை செய்கிறோம். குறைவான கூலியில் குடும்பத்தை நடத்த போராடுகிறோம். ரேசன் அரிசி, இலவச மருத்துவம், இலவச கல்வி, இலவச குடிநீர், பென்சன் போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்புகளை அரசு கொடுத்து வந்தது. இவை அனைத்தும் அரை குறையாக தரப்பட்ட போதிலும், பற்றாக்குறையிலிருந்து மீள்வதற்குப் பயன்பட்டது. ஆனால், இப்போது இவை அனைத்துக்கும் அரசே வேட்டு வைத்து வருகிறது.

தொழிலாளர்உணவுப்பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து, ரேசன் கடைகளை மூடி, மலிவு விலையில் கிடைத்த உணவுப் பொருட்களுக்கும் உலை வைக்கப் போகிறது. ரேசன் பொருட்கள் அனைத்தும் மார்கெட் விலைக்கு வாங்கினால், பெருமளவு சம்பளத்தை இழக்க நேரிடும்; கூடுதலாகவும் உழைக்க வேண்டியிருக்கும். மேலும், தினசரி ஏறிவரும் விலைவாசி நமது கழுத்தையே நெரிக்கும்.

தனியார்மயமானது, குடிநீரை காசாக்கி, தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாமல் செய்து விட்டது. கல்வியிலும் தனியார்பள்ளி – கல்லூரிகளை பெருக்கி இலவச கல்வியே இல்லை என்ற நிலையை உருவாக்கி வருகிறது, அரசு.

நாம் அனுபவித்து வருகின்ற ஈ.எஸ்.ஐ திட்டமானது, மருத்துவ வசதியோடு – விபத்துக்கான காப்பீட்டையும் கொடுத்து வந்தது. ஊதிய உச்சவரம்பு காரணமாக பலருக்கு ஈ.எஸ்.ஐ இல்லாமல் போய்விட்டது. ஈ.எஸ்.ஐ வசதி இல்லாத போது, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவம் கிடைத்தது. மருத்துவ சேவையில் தனியார்மயத்தைப் புகுத்தி இலவச மருத்துவத்தையும் இல்லாமல் செய்து வருகிறது, அரசு.

பிள்ளைகளின் மேற்படிப்பு – திருமணம் போன்றவற்றுக்கு நாம் இதுவரை சேர்த்து வைத்த பி.எஃப் பணம்தான் கைகொடுத்தது. இதை பன்னாட்டு – உள்நாட்டு நிதியாதிக்கக் கும்பலிடம், அரசு ஒப்படைத்துள்ளது. இந்த சூதாட்டக் கும்பலிடம் சிக்கியுள்ள நமது சேமிப்பு பணம் திரும்ப கிடைப்பதற்கு எவ்விதமான உத்திரவாதமும் இல்லை. மேலும், புதிய பென்சன் திட்டத்தின் மூலம் ஏற்கனவே கிடைத்து வந்த ஓய்வு ஊதியத்திற்கும் உலை வைத்துவிட்டது.

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்கிற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் காரணமாக புதிய ஆளெடுப்பு நின்று விட்டது. இதன் விளைவாக வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது.

நம்முடைய வேலைப்பாதுகாப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம், 8 மணிநேர வேலை, சங்கம் அமைக்கிற உரிமை, கவுரவமான-பாதுகாப்பான வாழ்க்கை ஆகிய அனைத்தையும் முதலாளித்துவம் பறித்து விட்டது. அரைகுறை உதவியாக இருந்த சமூகப்பாதுகாப்பு திட்டங்களையும் அரசு பறித்து வருகிறது.

நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தையும் பன்னாட்டு முதலாளிகளும், இந்தியத் தரகு முதலாளிகளும் வரம்பின்றி சூறையாடுகின்றனர். சமூகத்துக்குச் சொந்தமான கடல்வளம், கனிமவளம், காட்டுவளம், நீர்வளம் ஆகிய அனைத்தும் முதலாளிகளின் சொத்தாகி வருகின்றன. இயற்கைக்கு மாறான வகையில், வரம்புக்கு மீறி இயற்கைச் செல்வங்கள் சுரண்டப்பட்டதால் காற்று, நீர் ஆகிய அனைத்தும் மாசுபட்டு விட்டன. இதனால் பல்வேறு விதமான நோய்களும், சிக்கல்களும் ஏற்பட்டு மக்கள் அவதியுறுகின்றனர்.

தினசரி பெருகி வரும் ஊழல்கள், கலாச்சாரச் சீரழிவுகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஆகிய அனைத்துக்கும் தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளே காரணம். இந்தக் கொள்கைகளால் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமை மட்டுமின்றி, விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறுவணிகர்கள், சிறு-குறுந் தொழில் செய்வோர் ஆகிய அனைத்து ஒடுக்கப்படும் வர்க்கங்களின் வாழ்வுரிமையையும் பறித்து வருகிறது. பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டு தரகு முதலாளிகளும் வைத்ததே நாட்டின் சட்டமாகி விட்டது. இதனைத் தான் மறுகாலனியாக்கம் என்கிறோம்.

மறுகாலனியாக்கக் கொள்கையால் வாழ்விழந்துள்ள பல தரப்பு மக்களும் போராடத் துவங்கி உள்ளனர். எதிர்காலத்தில் இத்தகைய போராட்டங்கள் தீவிரமடையாமல் தடுப்பதற்காகவே, ஆதார் அடையாள அட்டை என்கிற ஆள்காட்டி அட்டை தரப்படுகிறது. இந்த அட்டையில் பதியப்படும் விபரங்களை வைத்து, ஒருவரது நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவரது செல்பேசி உரையாடலை ஒட்டுக்கேட்டு பதிவு செய்யவும் முடியும். இதன் மூலமாக போராடும் மக்களையும், புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளையும் கண்காணித்து அடக்க முடியும். இதன்மூலம் முதலாளிகளின் அடியாள் தான் அரசு என்பதை மேலும், மேலும் நடைமுறையில் அப்பட்டமாக நிருபித்துக் கொண்டு வருகிறது.

இத்தனை சுரண்டல்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றை இனியும் சகித்துக் கொண்டு வாழ முடியாது. இதுவரை தொழிலாளி வர்க்கம் பெற்ற உரிமைகள் அனைத்தையும் போராடித்தான் பெற்று இருக்கிறது. தொழிலாளி வர்க்கம் தன்னுடைய உரிமைக்காக மட்டுமின்றி, ஏனைய ஒடுக்கப்படும் வர்க்கங்களின் உரிமைகளுக்காகவும் போராட வேண்டும். அதற்கான தகுதியும், ஆற்றலும் தொழிலாளி வர்க்கத்துக்கு மட்டுமே உள்ளது.

அனைத்து ஒடுக்கப்படும் வர்க்கங்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்தையும், நம்மை அச்சுறுத்திப் பணிய வைக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராடுவதைத் தவிர,வேறு குறுக்கு வழி எதுவும் இல்லை. இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி பெற, முதலாளிகள் நம்மிடையே உருவாக்கி உள்ள நிரந்தரத் தொழிலாளி – ஒப்பந்தத் தொழிலாளி-கேசுவல் தொழிலாளி போன்ற பிரிவினைகளைத் தகர்ப்போம். தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம். புரட்சிகர அரசியலைக் கொண்டுள்ள தொழிற்சங்கத்தைக் கட்டியமைப்போம். முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்.

மத்திய – மாநில அரசுகளே,

  • பணிநிரந்தரச் சட்டம், காண்டிராக்ட் முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமல்படுத்து!
  • தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு!
  • புதிய தொழிற்சங்கம் துவங்க விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பதிவு செய்! முதலாளிகள் கையாளுகின்ற “ஒர்க்கர்ஸ் கமிட்டி” என்கிற சதியினை தடை செய்!
  • எல்லாத் தொழில்களிலும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15,000 நிர்ணயம் செய்!
  • பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், ஊதிய சமத்துவமும் வழங்கு!
  • தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மக்கள் விரோத, மறுகாலனியாக்கக் கொள்கைகளை கைவிடு!
  • மக்களை உளவு பார்க்கும் ஆதார் அடையாள அட்டையை ரத்து செய்!

தோழர் அ.முகுந்தன்
110/63, மாநகராட்சி வணிக வளாகம், என்.எஸ்.கே. சாலை
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
தொ.பே: 94448 34519

பிரச்சார இயக்கம்தமிழ்நாடு முழுவதும் நடக்கவிருக்கும் கருத்தரங்கங்கள் விபரம்

05.07.2013 சிவகங்கை
சி.வெற்றிவேல்செழியன, அமைப்புச் செயலாளர், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு
காளியப்பன், இணைச் செயலாளர்,  ம.க.இ.க. – தமிழ்நாடு

06.07.2013 புதுச்சேரி
சுப.தங்கராசு, பொதுச் செயலாளர்,  பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு.
அசோக் ராவ் தலைவர், தேசிய அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (NCOA), புதுதில்லி

06.07.2013 அம்பத்தூர்
மா.சி.சுதேஷ் குமார், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு
மாருதி சுசுகி தொழிலாளர் சங்க இணைச் செயலாளர் நிர்வாகிகளில் ஒருவர்

07.07.2013 கோவை
பா.விஜயகுமார்,  பொருளாளர், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு
வழக்குரைஞர் பாலன், கர்நாடகா உயர்நீதிமன்றம்

07.07.2013 மதுரை
சி.வெற்றிவேல்செழியன், அமைப்புச் செயலாளர், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு
வழக்குரைஞர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

07.07.2013 திருச்சி
சுப.தங்கராசு, பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு
அசோக் ராவ், தலைவர், தேசிய அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (NCOA), புதுதில்லி

13.07.13 கும்மிடிப்பூண்டி
சுப.தங்கராசு, பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு
பிரதீப், பொதுச் செயலாளர், இந்திய தொழிலாளர்கள் கூட்டமைப்பு , (IFTU), ஐதராபாத்

14.07.13 ஓசூர்
மா.சி.சுதேஷ் குமார், இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு.
வழக்குரைஞர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

14.07.13 கோத்தகிரி
அ.முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு

16.07.13 ஆம்பூர்
அ.முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு
காளியப்பன், இணைச் செயலாளர், ம.க.இ.க. – தமிழ்நாடு

தகவல் :
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

வேதாந்தாவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தின் சந்தர்ப்பவாதம் !

6

டகங்களும் எதிர்க்கட்சிகளும் நீதிமன்றமும் அரசியல் உள்நோக்கத்தோடும், தி.மு.க.வைப் பலியிட வேண்டும் என்ற மறைமுகத் திட்டத்தோடும்தான் 2ஜி ஊழல் வழக்கை அணுகி வருகின்றன என்பதை ஏற்கெனவே பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து நாம் அம்பலப்படுத்தி இருக்கிறோம். இந்நிலையில் கெய்ர்ன் இந்தியா என்ற கார்ப்பரேட் நிறுவனம் தனது 60 சதவீதப் பங்குகளை வேதாந்தா நிறுவனத்திற்கு விற்றது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அளித்துள்ள தீர்ப்பு, பொதுச் சொத்துக்களைத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அரசு பட்டா போட்டுக் கொடுப்பதை உச்ச நீதிமன்றம் பாரபட்சமாகவும் ஆளுக்குத தக்கப்படியும்தான் அணுகி வருகிறது என்பதை இன்னும் துலக்கமாக எடுத்துக்காட்டியிருக்கிறது.

மைய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் இராசஸ்தான் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வயல்களிலிருந்து கச்சா எண்ணெய் எடுத்து விற்கும் உரிமத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிற்கழகமான கெய்ர்ன் நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது. இந்த உரிமத்தின் 70 சதவீதப் பங்குகளை கெர்ன் இந்தியா நிறுவனமும் 30 சதவீதப் பங்குகளை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமும் உடைமையாகக் கொண்டிருந்தன.

கெய்ர்ன் இந்தியா எண்ணெய் வயல் உரிமத்தைப் பெற்ற சில நாட்களிலேயே தனது வசமிருந்த 70 சதவீதப் பங்குகளில் 60 சதவீதப் பங்குகளை இங்கிலாந்தைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகமான வேதாந்தா நிறுவனத்திற்கு (தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளருக்கு) 42,500 கோடி ரூபாய்க்கு விற்றது. இதனை ஆய்வு செய்த தணிக்கைத் துறை, கெய்ர்ன் இந்தியா நிறுவனத்திற்கு எண்ணெய் வயல்களை ஒதுக்கீடு செய்திருப்பதில் சட்டத்திற்குப் புறம்பாகப் பல்வேறு விதமான சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், பங்கு விற்பனையால் அரசிற்கு ஏறத்தாழ ஒரு இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மதிப்பிட்டு அறிக்கை அளித்தது.

கெய்ர்ன் - மன்மோகன் சிங்
கெய்ர்ன் நிறுவனம் குத்தகை உரிமம் பெற்ற இராசஸ்தான் எண்ணெய் வயலின் உற்பத்தியைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மன்மோகன் சிங். (கோப்புப் படம்)

இதன் அடிப்படையில் பெங்களூருவைச் சேர்ந்த அனில் குமார் அகர்வால் என்ற வழக்குரைஞர் இந்த விற்பனை ஒப்பந்தத்தை ரத்துசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார். இத்தனியார்மய நடவடிக்கையில் மோசடியும் ஊழலும் பின்னிப் பிணைந்திருப்பது கண்கூடாகத் தெரிந்தபோதும், பங்குகள் விற்கப்பட்டதை அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

2ஜி ஒதுக்கீடில் அரசிற்கு 1.76 இலட்சம் கோடி ரூபாய் உத்தேச இழப்பு ஏற்பட்டதாகக் கூறிய தணிக்கைத் துறையின் அறிக்கையை உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடி வரும் உச்ச நீதிமன்றம், இவ்வழக்கிலோ தணிக்கைத் துறையின் அறிக்கைக்கு ஒரு காகிதக் கட்டு என்பதற்கு மேல் எந்தவிதமான மதிப்பையும் தர மறுத்துவிட்டது.

“தணிக்கைத் துறை சுயேச்சையான, மதிப்புக்குரிய அரசு அமைப்பு என்றபோதும், அதனின் அறிக்கையை ஆண்டவனின் வேதவாக்கைப் போலக் கருத வேண்டியதில்லை” எனத் தமது தீர்ப்பில் உபதேசித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “தணிக்கைத் துறையின் அறிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகம் தெரிவிக்கும் கருத்துக்களைப் பரிசீலனை செய வேண்டும்; நாடாளுமன்றத்தால் அமைக்கப்படும் பொது கணக்குக் கமிட்டிக்கு தணிக்கைத் துறையின் அறிக்கையை நிராகரிக்கும் உரிமையுண்டு; தணிக்கைத் துறையின் அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்” என்றெல்லாம் வாதங்களை அடுக்கி, தணிக்கைத் துறையின் மதிப்பீடை இறுதியானதாகவோ, முடிவானதாகவோ எடுத்துக்கொள்ளத் தேவையில்லை எனக் கூறிவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த வாதங்களை 2ஜி ஒதுக்கீடு குறித்த தணிக்கைத் துறையின் அறிக்கைக்குப் பொருத்தினால், அது குப்பைக்கூடையில் போடுவதற்கு மட்டுமே தகுதியுடையதாக ஆகிவிடும். ஏனென்றால், 2ஜி ஒதுக்கீடில் 1.76 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உத்தேச இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற தணிக்கைத் துறையின் மதிப்பீடைத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்ளவில்லை. தணிக்கைத் துறை அறிக்கையைப் பரிசீலனை செய்த நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ஆ.ராசாவையும், மன்மோகன் சிங்கையும் அந்த ஊழலுக்குப் பொறுப்பாக்கித் தயாரித்த வரைவு அறிக்கையை, அக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டனர்.

அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் ஆ.ராசா விதிமுறைகளை மீறி, சில நிறுவனங்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டார் எனக் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ அதேபோன்ற விதிமுறை மீறல்தான் கெய்ர்ன் இந்தியா பங்கு விற்பனையிலும் நடந்துள்ளது. இராசஸ்தான் எண்ணெய் வயல் ஒப்பந்த விதிகளின்படி, கெய்ர்ன் இந்தியா தனது பங்குகளை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திடம்தான் விற்க முடியும்; இயற்கை எரிவாயுக் கழகம் அப்பங்குகளை வாங்க மறுத்தால்தான் வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்க முடியும். தனியொரு பன்னாட்டு நிறுவனத்திற்குச் சாதகமாக இந்த ஒப்பந்த விதி மீறப்பட்டுள்ளது என்பதுதான் இந்த வழக்கின் மையமான குற்றச்சாட்டு.

அலைக்கற்றைகள் முன்பின் அனுபவமில்லாத நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதைப் போலவே, எண்ணெய் வயல் பங்குகள் எண்ணெய் துரப்பணவுத் தொழிலில் முன்பின் அனுபவமில்லாத வேதாந்தா நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளன. அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் “லாபியிங்” நடந்ததைப் போலவே, கெய்ர்ன் நிறுவனத்தின் பங்குகள் வேதாந்தாவிற்கு விற்கப்படுவதை உடனடியாக அனுமதிக்கும்படி பிரிட்டன் நாட்டு பிரதமர் கேமரூன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நிர்பந்தம் கொடுத்திருக்கிறார். 42,500 கோடி ரூபாய்க்கு இப்பங்குகளை வாங்கியுள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு, போட்ட மூலதனத்திற்கு மேல் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு இலாபம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

650 கோடி பேரல்கள் இருப்பு கொண்ட எண்ணெய் வயல்கள் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்குத் தூக்கிக் கொடுக்கப்பட்டிருப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் அறச்சீற்றம் கொள்ளவில்லை. மாறாக, “பொது நல நோக்கத்தின் காரணமாகவே கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் வேதாந்தா நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளன” என விளக்கமளித்து, இந்த விற்பனையை அங்கீகரித்தது. “பொது நல நோக்கத்தின் காரணமாகவே அலைக்கற்றைகளைக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்தேன்” என்ற ஆ.ராசாவின் வாதத்தை 2ஜி வழக்கில் ஒதுக்கித் தள்ளிய உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் அதற்கு நேர்எதிராக, வெளிப்படையாகவே பாரபட்சமான முறையில் தீர்ப்பளித்திருக்கிறது.

12-sc-32ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய ஆ.ராசா வழங்கிய 122 உரிமங்களை அடியோடு ரத்து செய்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கிலோ, “அரசின் பொருளாதார முடிவுகள் பரிசோதனையின் அடிப்படையில்தான் எடுக்கப்படுகின்றன. எடுக்கப்பட்ட முடிவு அரசிற்கு இழப்பீடைக்கூட ஏற்படுத்தலாம். அம்முடிவு சட்டத்திற்குப் புறம்பாகவும் உள்நோக்கத்தோடும் எடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிடுமே தவிர, அரசு எடுக்கும் ஒவ்வொரு பொருளாதார முடிவு குறித்தும் நாங்கள் தீர்ப்பு அளிக்க முடியாது” எனக் கூறி இந்த விற்பனையையும், அதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள ஒரு இலட்சம் கோடி ரூபாய் இழப்பையும் நியாயப்படுத்தியிருக்கிறது.

தனியார்மயம் என்பதே பொதுச் சோத்துக்களை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு வழங்கப்படும் லைசென்சுதான் எனும்பொழுது, அதில் முறைகேடுகள் நடந்துள்ளதா, இல்லையா என ஆராய்ச்சி நடத்துவதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது. பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பட்டா கொடுப்பதில் ஆளுக்குத்தக்கபடி நடந்து கொள்வதற்காகவே, நீதிபதிகளும் பத்திரிகைகளும் அப்படிபட்ட வேறுபாடு இருப்பதாக ஒரு கற்பிதத்தை வலிந்து உருவாக்கி வருகின்றன. இராசஸ்தான் எண்ணெய் வயல்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் வயல்கள் அம்பானிக்கும், நிலக்கரி வயல்கள் பல்வேறு தரகு முதலாளிகளுக்கும் பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டிருப்பதை நீதிமன்றமும் பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் அணுகும் விதமே இவற்றின் இரட்டை வேடத்தையும், இவை ஆ.ராசா விசயத்தில் உள்நோக்கத்தோடு நடந்துவருவதையும் அம்பலப்படுத்திக் காட்டுகின்றன.

– ரஹீம்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________

அடைக்கலம் தேடி ஹாங்காங்கிலிருந்து வெளியேறினார் ஸ்னோடன் !

7

ரண்டு வாரங்களுக்கு முன்பு வினவு தளத்தில் எட்வர்ட் ஸ்னோடன் பற்றிய பதிவு இப்படி ஆரம்பித்திருந்தது “திரு எட்வர்ட் ஜோசப் ஸ்னோடன். அமெரிக்கரான இவர் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சர்வதேச கவனம் பெறுவார். விரைவில் அமெரிக்காவின் மிக முக்கிய எதிரி என அறிவிக்கப்படுவார். பின் லாடனை விட மோசமான தீவிரவாதியாகவும், அமெரிக்க மக்களின் உயிர் பறிக்கும் அரக்கனாகவோ அல்லது பெண் பித்தர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் குற்றம் சாட்டப்படலாம்.”

இப்போது அது நடந்து கொண்டிருக்கிறது.

உலக மக்களுக்கு எதிரான அமெரிக்க அரசின் கிரிமினல் உளவு நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன் ஞாயிற்றுக் கிழமை ஹாங்காங்கிலிருந்து மாஸ்கோவுக்கு பயணமானார்.

ஸ்னோடன்
ஸ்னோடன் – படம் : நன்றி சவுத் சைனா மார்னிங் போஸ்ட்

அரசு சொத்துக்களை திருடியது, தேசிய பாதுகாப்பு தகவல்களை அனுமதியின்றி அனுப்பியது, ரகசிய உளவுத் தகவல்களை அனுமதி வழங்கப்படாத நபர்களுக்கு தெரிவித்தது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் ஸ்னோடன் மீது அமெரிக்க அரசு வழக்கு பதிவு செய்த தகவல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த வழக்கு ரகசியமாக ஜூன் 14-ம் தேதியே தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வெளிப்படைத் தன்மைக்கு ‘பேர் போன’ அமெரிக்க அரசு, ஹாங்காங் அரசிடம் ஸ்னோடனை ஒப்படைக்கும்படி கேட்பதற்காக இரண்டு வாரங்களுக்கு பிறகு வேறு வழியில்லாமல் தகவலை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஹாங்காங் நிர்வாகத்திடம் ஸ்னோடனை கைது செய்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தும்படி வேண்டுகோள் அனுப்பியது; சனிக் கிழமை ஸ்னோடனின் பாஸ்போர்டை ரத்து செய்தது.

இங்கிலாந்து அரசோ ஹாங்காங்கிலிருந்து கிளம்பும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும், ஸ்னோடனை ஏற்றிக் கொண்டு இலண்டனுக்கு வரக்கூடாது என்று சுற்றறிக்கையே அனுப்பியிருக்கிறது. தற்போதைய செய்தியின் படி அமெரிக்க என்.எஸ்.ஏவுக்கு போட்டியாக இங்கிலாந்து உளவுத்துறையும் உளவு பார்த்த செய்திகள் கார்டியன் பத்திரிக்கையில் வந்திருக்கின்றது. ஜேம்ஸ்பாண்ட் நாட்டின் அரசு மக்களுக்கு அளித்திருக்கும் பேச்சுரிமையின் இலட்சணம் இதுதான்.

இதற்கிடையில் ஹாங்காங்கிலிருந்து வெளியாகும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழுக்கு ஸ்னோடன் வெளியிட்ட தகவல்களின் படி :

  1. ஹாங்காங்கில் செயல்படும் பேக்நெட் என்ற பைபர் ஆப்டிக் நெட்வொர்கை அமெரிக்க அரசு சட்ட விரோதமாக உடைத்து உளவு பார்த்திருக்கிறது. பேக்நெட் ஆசிய பசிபிக் வட்டாரத்தின் முக்கியமான இணைய இணைப்பு தடங்களை இந்த நிறுவனம் நிர்வகித்து வருகிறது
  2. சீனாவின் பெருமை வாய்ந்த சிங்ஹூவா பல்கலைக் கழகத்தின் பிரதான கணினிகளை உடைத்து அவற்றில் உள்ள தகவல்களை அமெரிக்க உளவுத் துறை வேவு பார்த்திருக்கிறது.
  3. சீனாவின் மொபைல் நிறுவனங்களின் கணினிகளுக்குள் புகுந்து சீன மக்கள் தங்களுக்குள் அனுப்பிக் கொள்ளும் குறுஞ்செய்திகளை அமெரிக்க உளவுத் துறை திரட்டியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை சீனாவின் அதிகார பூர்வ ஷின்ஹூவா செய்தி நிறுவனம் இது குறித்து அமெரிக்க அரசு சீனாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது. சீனா தனது கணினிகளை தாக்கி வருவதாக நீலிக் கண்ணீர் வடித்த அமெரிக்காதான் இத்தனை ஆண்டுகளாக உலகின் அத்தனை நாடுகள் மீதும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியிருக்கிறது என்பதை அது சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஸ்னோடன்இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை ஸ்னோடன் மாஸ்கோவுக்குச் செல்லும் ஏரோஃப்ளோட் எஸ்யு 23 விமானத்தில் ஏறி விட்டதாக செய்தி வந்தது. அவர் புறப்பட்ட 1 மணி நேரத்துக்குப் பிறகு, “ஸ்னோடன் வழக்கமான, சட்டபூர்வமான வழியில் தனது பயண ஏற்பாடுகளை நிறைவு செய்து மாஸ்கோவுக்கு கிளம்பி விட்டதாக” ஹாங்காங் அரசு அறிவித்தது. அமெரிக்க அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் முழுமையாக இல்லாததால் அவற்றின் அடிப்படையில் ஸ்னோடனை தடுக்க முடியாது என்று தெரிவித்தது. கூடவே, ஹாங்காங்கில் உள்ள கணினிகளை உடைத்து புகுந்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு அமெரிக்க அரசிடம் கேட்டிருக்கிறது. ஹாங்காங் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாப்பதற்கு இதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் சொல்லியிருக்கிறது.

அமெரிக்க அரசோ தாங்கள் ஸ்னோடனின் பாஸ்போர்ட்டை ரத்து செய்து விட்ட நிலையில் அவரை பயணம் செய்ய அனுமதித்து அழுகுணி ஆட்டம் என்று கண்ணைக் கசக்குகிறது. தான் 54 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான இஸ்லாமியர்களை எந்த ஆவணங்களும் இல்லாமல், எந்த சட்டங்களையும் பொருட்படுத்தாமல் கடத்துவதையும் சித்திரவதை செய்வதையும் நடத்தியது என்பதை உலக மக்கள் மறந்திருப்பார்கள் என்று அமெரிக்க அரசு நினைத்திருக்கலாம்.

விக்கிலீக்ஸ் அறக்கட்டளையின் ஊழியர் சாரா ஹேரிசன் ஸ்னோடனுடன் பயணம் செய்திருக்கிறார். ஸ்னோடனுக்கு ஒரு பாதுகாப்பான நாட்டில் புகலிடம் பெற உதவப் போவதாக விக்கிலீக்ஸ் அறிவித்தது. விக்கிலீக்சை உருவாக்கிய ஜூலியன் அசாஞ்சே அவரை ஸ்வீடனுக்கு நாடு கடத்த முயலும் யுகே அரசின் முயற்சிகளுக்கு முறியடித்து லண்டனில் உள்ள ஈக்வேடார் தூதரகத்தில் கடந்த ஒரு ஆண்டாக தங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கிலீக்சுக்கு தகவல்களைக் கொடுத்ததாகக் குற்றம் சுமத்தி, பிராட்லி மேனிங் என்ற இளம் இராணுவ வீரரை அமெரிக்க அரசு பேச்சுரிமைக்கு வாய்ப்பூட்டு போடும் வகையில் சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. அமெரிக்க பயங்கரவாத அரசின் மனித விரோதச் செயல்களை அம்பலப்படுத்தும் ஸ்னோடன், அசாஞ்சே போன்ற ஜனநாயகத்துக்கான போராடுபவர்கள் அமெரிக்காவிடம் அகப்பட்டால், அவர்களது நிலை பிராட்லியைவிட மோசமாகும் என்பது உறுதி.

ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர், டிமிட்ரி பெஸ்கோவ், ஸ்னோடன் மாஸ்கோவில் தங்கப் போவதாகவோ, ரஷ்ய அரசிடம் புகலிடம் கேட்டதாகவோ தன்னிடம் தகவல் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவின் நாடாளுமன்றமான டூமாவின் அயலுறவு விவகாரங்களுக்கான குழுவின் தலைவர் அலக்செய் புஷ்கோவும், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ஷ்லேகலும் ஸ்னோடனுக்கு ரஷ்யா புகலிடம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் அமெரிக்க அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், உளவுத் துறை இயக்குனர், ஃபாக்ஸ் நியூஸ் போன்ற செய்தி ஊடகங்கள் ஸ்னோடன் உலகின் எந்த மூலைக்குப் போனாலும் அவரை விட மாட்டோம் என்று மார் தட்டுகின்றனர். சீனா, ரஷ்யா, வெனிசுவேலா, கியூபா போன்ற நாடுகளிடம், அவருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.

ஈக்வடார் தூதர் மாஸ்கோ விமான நிலையத்தில்
ஈக்வடார் தூதர் மாஸ்கோ விமான நிலையத்தில்

நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் கிங் “இந்த ஆள் ஒரு துரோகி என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்வது முக்கியமானது. அவர் எதிரியின் கையாள், ஒரு ஹீரோ இல்லை என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலவை உறுப்பினர் ராண்ட் பால் அவரை அமெரிக்க ராணுவ ஹீரோ ஜெனரல் கிளாப்பருடன் ஒப்பிட்டதாக அறிகிறேன். இது மிகவும் கேவலமானது” என்று வாயில் நுரை ததும்ப பொங்கியிருக்கிறார்.

ஞாயிற்றுக் கிழமை மாலை மாஸ்கோ விமான நிலையத்தில் இறங்கிய ஸ்னோடன், அவரிடம் ரஷ்யா விசா இல்லாததால் விமான நிலையத்திலேயே தங்கியிருக்கிறார். அவரை சந்திப்பதற்கு ஈக்வேடார் நாட்டு தூதர் விமான நிலையத்துக்கு வந்திருக்கிறார். ஸ்னோடன் ஈக்வேடார் நாட்டில் தஞ்சம் கேட்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை இப்போது அறிவித்திருக்கிறது. ஸ்னோடன் மாஸ்கோவிலிருந்து ஹவானாவுக்கு போகும் விமானத்தில் பயணிக்கவிருக்கிறார்.

நியூயார்க்கில் செப்டம்பர் 2001-ல் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, ‘நீங்கள் எங்கள் பக்கம் அல்லது எதிரிகளின் பக்கம்’ என்று உலக நாடுகளை அச்சுறுத்தி ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் என்று தொடர்ந்து உலகெங்கும் தனது சட்ட விரோத, பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்தி வருகிறது அமெரிக்க அரசு. ஆனால், அவை ஒவ்வொன்றாக வெளி வந்து அது உலக மக்கள் முன்பு அம்பலப்பட்டு நிற்கிறது.

அமெரிக்காவிலேயே ஒரு சில அரசியல்வாதிகளும், மக்களில் பெரும்பான்மையினரும் மக்களது அரசியல் உரிமைகளை பறித்து, ஒரு போலீஸ் அரசாக மாறிக் கொண்டிருக்கும் அமெரிக்க அரசை கண்டிக்கின்றனர். ஜனநாயகம், குடிமக்கள் உரிமை, பேச்சுரிமை, தனிநபர் சுதந்திரம் என்று பசப்பி வந்த அமெரிக்க அரசின் போலித்தனத்தை எதிர்த்து உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகள் போராட வேண்டும்.

– அப்துல்

மேலும் படிக்க

1.57 லட்சம் கோடி ரூபாயை அமுக்கியது யார்?

4
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்

சென்ற வியாழக்கிழமை (20.6.2013) அன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 526 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,719 என்ற அளவில் நிலைத்தது. 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-இல் ஏற்பட்ட 704 புள்ளி வீழ்ச்சிக்குப் பிறகு இந்த வீழ்ச்சியே மிகப் பெரிது என்றும் 1,650 நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் விற்பனை ஆகின என்றும் முதலீட்டாளர்களுக்கு ரூ. 1.57 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ரூ 1.57 லட்சம் கோடி யாருக்கு இழப்பு?

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் என்பது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 நிறுவனங்களின் பங்கு விலைகளை குறித்த வீதத்தில் சேர்த்து கணக்கிடப்படும் எண். அந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தால் குறியீட்டு எண் உயரும், குறைந்தால் குறியீட்டு எண்ணும் வீழ்ச்சியடையும். குறியீட்டு எண் 526 புள்ளிகள் வீழ்ச்சியடைந்ததோடு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு ரூ 1.5 லட்சம் கோடி குறைந்திருக்கிறது.

இந்த வீழ்ச்சிக்கு காரணம் வாஷிங்டனில் அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கியின் சேர்மன் பென் பெர்னான்கே, அமெரிக்க பொருளாதாரம் வளர ஆரம்பித்துள்ளதாக கருதுவதாகவும், அதனால் சந்தையில் வெளியிடும் டாலர்களின் அளவு 2014 முதல் குறைக்கப்படலாம் என்றும் தெரிவித்ததுதான் என்று முதலாளித்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். அதைத் தொடர்ந்து அமெரிக்கச் சந்தையில் டாலரின் மதிப்பு அதிகமாகப் போவதால், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய சந்தையில் தாம் வாங்கியிருந்த பங்குகளை பெருமளவில் விற்று டாலராக மாற்றிக் கொண்டன என்றும் அதனால் பங்குகளின் விலையும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

அன்னிய நிதி நிறுவனங்கள் எப்போது இந்த பங்குகளை வாங்கின?

2008-ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அமெரிக்காவை மீட்பதற்காக ஒவ்வொரு மாதமும் நிதிச் சந்தையில் $85 பில்லியன் (இன்றைய மதிப்பில் சுமார் ரூ 5 லட்சம் கோடி) மதிப்பிலான கடன் பத்திரங்களை வாங்கிக் கொண்டு டாலர்களை வெளியிட்டது அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி. இதனால் நிதி நிறுவனங்களுக்கு கிட்டத்த 0 முதல் 0.25 சதவீத வட்டியில் கடன் வாங்கும் வசதி கிடைத்தது. அதன் விளைவாக ‘அமெரிக்க நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் பெருமளவு டாலர்கள் கிடைக்கும்; அவற்றை வைத்து தொழில்களில் முதலீடு செய்து அமெரிக்க பொருளாதாரத்துக்கு அவர்கள் புத்துயிர் கொடுப்பார்கள்;’ என்பது ரிசர்வ் வங்கி நிர்வாகிகளின் திட்டம்.

பென் பெர்னான்கே
அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி சேர்மன் பென் பெர்னான்கே.

ஆனால், இலவசமாகக் கிடைக்கும் டாலர்களை தொழில்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதை விட பங்குச் சந்தைகளில் போடுவது லாபகரமானது என்று அமெரிக்க நிதி நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளின் பங்குச் சந்தைகளில் டாலர்களை கொண்டு வந்து கொட்டின. அதாவது, நம் நாட்டுக்கு எந்தப் பொருட்களையும், சேவைகளையும் கொண்டு வராமலேயே அமெரிக்க அரசு செயற்கையாக உருவாக்கிய டாலர்களை கொண்டு வந்து பங்குகளை வாங்குகின்றன. பொருத்தமான நேரத்தில் பங்குகளை விற்று லாபத்தை திரும்ப எடுத்துச் செல்கின்றன. இது 2009-ம் ஆண்டு முதல் நடந்தது. இந்த கால கட்டத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 9,700 அளவிலிருந்து 20,000 வரை ஊசலாடியது டாலர்களின் பாய்ச்சலுக்கு ஏற்றபடி நடந்தது என்று சொல்லலாம்.

இப்போது, அமெரிக்காவில் கிடைக்கவிருக்கும் மலிவான டாலரின் அளவு குறையப் போவதால், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குகளை விற்று டாலராக மாற்றிக் கொள்கின்றன. இது நாள் வரை இந்திய ரூபாயில் இந்திய நிறுவனங்களின் பங்குகளாக இருந்த அன்னிய நிறுவனங்களின் மூலதனம் டாலராக மாற்றப்பட்டுள்ளது.

அதிகமான ரூபாய்கள் சந்தையில் டாலராக மாற்றப்பட்டதால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் விலை அதிகமாகும். உதாரணமாக, இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகும். சமையல் எண்ணெய், செல்போன்கள், தொலைக்காட்சி பெட்டிகள், கணினிகள் போன்றவற்றின் விலையும் உயரும்.

இதனால் இறக்குமதிகளின் மதிப்பு உயர்ந்து அதற்கு ஈடாக ஏற்றுமதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களை வெளிநாடுகளில் மலிவான விலையில் விற்பது சாத்தியமாகும். அதனால் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களும் கனிம வளங்களும் , மதிப்பு குறைந்த இந்திய ரூபாயில் சம்பளம் வாங்கிக் கொண்டு இந்தியர்கள் தயாரிக்கும் பொருட்களும் வெளிநாடுகளுக்கு பெருமளவு இந்திய முதலாளிகளால் ஏற்றுமதி செயயப்பட்டு அவர்கள் லாபம் சம்பாதிக்க வாய்ப்பு ஏற்படும்.

இந்திய ரூபாய்
அடித்துச் செல்லப்படும் இந்திய ரூபாய்

இந்திய நிறுவனங்களின் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்ததால், தமக்குத் தேவையான மூலதனத்துக்காக இந்திய முதலாளிகள் நிதிச் சந்தையில் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டி வரலாம். அதனால் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களின் விலைகளை உயர்த்தி அந்த செலவை சரிக்கட்டிக் கொள்வார்கள். மக்களுக்கு விலைவாசி அதிகமாகும்.

இந்த பங்குச் சந்தை வீழ்ச்சியின் மூலம் ஆதாயம் ஈட்டியது வெற்று டாலர்களை போட்டு சூதாட்டம் நடத்திய அன்னிய நிதி நிறுவனங்கள். இந்த இழப்பை மறைமுகமாக ஏற்கப்போவது இந்திய மக்கள்தான். பணத்தின் மதிப்பு குறைவால் தேசிய முதலாளிகள் நட்டம் அடைவார்கள். தரகு முதலாளிகளோ விலை உயர்வு, ஏற்றுமதி-இறக்குமதியை மாற்றிப் போட்டு இலாபத்தை தொடருவார்கள்.

1990-களில் ‘இந்தியாவிலிருந்து ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருக்கிறது; அதனால் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை உள்ளது; இதை சரிக்கட்ட, வெளிநாட்டு முதலீட்டாளர்களை நமது பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும்;’ என்று மும்பை பங்குச் சந்தையை அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்ய திறந்து விட்டார் அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங்.

“அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் டாலர்களை ரூபாயாக மாற்றி பங்குகளை வாங்குவதால், இந்தியாவில் டாலர்கள் கிடைப்பது அதிகமாகும். இந்திய முதலாளிகள் நேரடியாக அமெரிக்க சந்தைகளில் தமது பங்குகளையும் கடன் பத்திரங்களையும் விற்று டாலர் நிதி திரட்டுவதற்கும் வழி ஏற்படும்.” என்பதுதான் மன்மோகன் சிங் தலைமையிலானவர்களின் பொருளாதாரக் கொள்கை.

ஆனால், இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்ட மூலதனம் தரகு முதலாளிகளை மட்டுமே வளப்படுத்தியிருக்கின்றன. அம்பானி ஆண்டிலியா மாளிகை கட்டியிருக்கிறார், விஜய் மல்லையா கிங் ஃபிஷர் காலண்டர் படப்பிடிப்பு நடத்துகிறார், சீனிவாசன் ஐபிஎல் போட்டிகளில் சூதாடுகிறார்.

இந்திய ரூபாயின் மதிப்பு மூன்றரை மடங்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது (1 டாலர் வாங்க ரூ 17 கொடுத்த நிலை மாறி 1 டாலருக்கு ரூ 60 கொடுக்க வேண்டியிருக்கிறது). 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நிதி அமைச்சராக இருக்கும் ப சிதம்பரம் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் இருப்பதால் அன்னிய முதலீட்டை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று 1990-களில் மன்மோகன் பாடிய அதே பல்லவியை பாடுகிறார் என்பதுதான் இந்த கொள்கைகளின் மோசடித்தனத்தை நிரூபிக்கிறது.

மேலும் படிக்க

மணிப்பூர் : 64 ஆண்டுகளாகத் தொடரும் ஆக்கிரமிப்பு !

2

ணிப்பூரில் இந்திய இராணுவம் நடத்திவரும் போலி மோதல் கொலைகளை, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள ஒரு பொதுநல வழக்கு அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது. நீதிக்குப் புறம்பாகக் கொல்லப்பட்டவர்களது குடும்பத்தினர் சங்கம் என்ற மணிப்பூரைச் சேர்ந்த அமைப்பு தாக்கல் செய்துள்ள இம்மனு, 2007 முதல் 2012 வரையிலான 5 ஆண்டுகளில் சுமார் 1500 பேருக்கும் மேற்பட்டவர்கள் போலி மோதலில் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும், இது குறித்து ஒரு சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூரிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

ஐரோம் ஷர்மிளா, தங்ஜம் மனோரமா
மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி பத்தாண்டுகளுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஐரோம் ஷர்மிளா (இடது); அசாம் துப்பாக்கிப் படைப்பிரிவால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட தங்ஜம் மனோரமா (வலது படம்) வழக்கு, இன்னும் விசாரணை நிலையைக் கூட எட்டவில்லை.

இந்த வழக்கில் தனது தரப்பை அறிக்கையாகத் தாக்கல் செய்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், மேற்குறிப்பிட்ட 5 ஆண்டுகளில் மணிப்பூரிலிருந்து மொத்தம் 1671 போலி மோதல் கொலைப் புகார்கள் தங்களிடம் வந்துள்ளதாகவும், அவற்றில் 191 புகார்களை விசாரித்ததில், அனைத்தும் போலி மோதல் கொலைகளே என்று தெரியவந்ததால், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 10.5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மீதமுள்ள வழக்குகளை விசாரிக்கவிடாமல் தடுக்க அம்மாநில அரசு, பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டுவருவதாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

இப்பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றமும் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான அந்தக் குழு, தன்னிடம் விசாரணைக்கு வந்த 7 கொலைகளும் போலி மோதல் கொலைகளே என்று கூறியிருப்பதுடன், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறது.

இத்தகையதொரு கொடூரமான இராணுவ ஒடுக்குமுறையை மணிப்பூரில் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது இந்திய அரசு. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று நவம்பர் 2000 முதல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரும் ஐரோம் சர்மிளா மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செயப்பட்டுள்ளதேயன்றி, அச்சட்டம் விலக்கிக் கொள்ளப்படவில்லை. ஜுலை 2004- இல் தங்ஜம் மனோரமா என்ற பெண்ணை அசாம் ரைபிள்ஸ் படையினர் வல்லுறவு செய்து கொன்றதை எதிர்த்து, “இந்திய இராணுவமே எங்களையும் வல்லுறவு செய்” என்று இம்பாலில் உள்ள அசாம் ரைபிள்ஸ் தலைமையகத்தின் முன் நிர்வாணமாக நின்று போராடினார்கள் மணிப்பூர் தாய்மார்கள். அவர்கள் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைவைக்கப் பட்டனர்.

மக்கள் போராட்டம் காரணமாக அசாம் ரைபிள்ஸ் குற்றவாளிகள் மீது மாநில போலீசு வழக்கு பதிவு செய்த போதிலும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் படி, இராணுவத்தின் மீது வழக்கு பதிவு செய்யும் அதிகாரம் மாநில போலீசுக்கு இல்லை என்று கூறி, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி மறுத்து வருகின்றது மத்திய அரசு.

பிரிவினைவாத இயக்கங்களை ஒடுக்குவது என்ற பெயரில் மணிப்பூரில் படுகொலைகளையும் பாலியல் வன்முறைகளையும் அரங்கேற்றுவது மட்டுமின்றி, மணிப்பூர் இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கிச் சீரழிப்பதையும் இந்திய இராணுவம் திட்டமிட்டே செய்கிறது. சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்துகளைக் கடத்த முயன்ற லெப்டினென்ட் கர்னல் அஜய் சவுத்திரி என்ற இந்திய இராணுவ கர்னல் பர்மா எல்லைக்கு அருகே சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் சிறப்பு அதிகார சட்டம், இந்த இராணுவ அதிகாரியையும் காப்பாற்றிவிடும்.

ஜந்தர் மந்தர் ஆர்ப்பாட்டம்
இராணுவமும் துணை இராணுவப் படைகளும் மணிப்பூரில் கண்மண் தெரியாமல் நடத்திவரும் போலி மோதல் கொலைகளைத் தடுத்து, விசாரணை நடத்தக் கோரி மணிப்பூரி மாணவர்களும், மக்களும் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய முழக்க ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் என்பது முதன்முதலாக 1958 – ஆம் ஆண்டில் ஒரு அவசரச் சட்டமாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்றுவரை அந்தச் சட்டம் மணிப்பூரில் அமலில் இருக்கிறது. ஒரு பகுதி கலவரப்பகுதியாக தொடர்ந்து நீடிக்கிறதா, அங்கே ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் தொடர்வது அவசியமா என்று ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்தி, உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே இதனை நீட்டிக்க வேண்டும் என்று 14 ஆண்டுகளுக்கு முன்னரே மணிப்பூர் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. போலி மோதல் கொலை குறித்த புகார்கள் வந்தால், அவற்றைக் கையாள வேண்டிய முறை குறித்தும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இருக்கின்றன. எனினும் இவை எதையும் அரசோ, இராணுவமோ குப்பைக் காகிதத்துக்குச் சமமாகக் கூட மதித்ததில்லை.

சுமார் 20 இலட்சம் மக்கள் தொகை கொண்ட மணிப்பூரில் இதுவரை சுமார் 20,000 பேருக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இராணுவத்தினால் பாதிக்கப்படாத குடும்பம் மணிப்பூரில் இல்லை. ஐம்பது பேருக்கு ஒரு சிப்பாய் வீதம் இராணுவம் அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறது. 1958 முதல் அங்கே இந்திய இராணுவம் நிரந்தரமாகக் குடியிருக்கிறது. காரணம் – மணிப்பூரை இந்தியா ஆக்கிரமித்திருக்கிறது என்பதுதான்.

1891-இல் மணிப்பூர் மன்னனைப் போரில் வென்று மணிப்பூரைத் தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தது பிரிட்டிஷ் அரசு. 1947 வரை பிரிட்டிஷ் இந்தியாவுடன் மணிப்பூர் இணைக்கப்படவில்லை. அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் 1948 -இல், (இந்திய அரசியல் சாசனம் நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே) மணிப்பூர் என்ற நாடு தனது முதல் தேர்தலை நடத்தியது. தேர்தலுக்குப் பின் ‘பிரஜா சாந்தி’ என்ற கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 1949 அக்டோபரில், அந்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மணிப்பூர் இந்தியாவுடன் பலவந்தமாக இணைக்கப்பட்டது. மணிப்பூரின் ராஜா புத்த சந்திராவை பேச்சுவார்த்தை என்று சொல்லி அழைத்து, ஷில்லாங்கில் வீட்டுக் காவலில் அடைத்த இந்திய அரசு, இராணுவத்தைக் குவித்து அவரை மிரட்டி, மணிப்பூரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், மந்திரி சபையும் கலைக்கப்பட்டன. இதுதான் மணிப்பூரை இந்தியா ஆக்கிரமித்ததன் சுருக்கமான வரலாறு. இதனை எதிர்த்து மணிப்பூர் மக்கள் அமைதி வழியில்தான் போராடத் தொடங்கினார்கள். எனினும், அங்கே இந்திய இராணுவம் குவிக்கப்பட்டது. பின்னர் பல ஆயுதக் குழுக்கள் தோன்றின. அவற்றை ஒடுக்குவது என்ற பேரில் இராணுவத்தின் ஆட்சி அங்கே நிரந்தரமாக்கப்பட்டு விட்டது.

“ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் வல்லுறவுக் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு தரக்கூடாது” என்று வர்மா கமிசன் கூறியது. போலி மோதல் கொலைகளை விசாரிக்குமாறு ஏராளமான உச்ச நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. இருப்பினும் இந்திய அரசு ஆக்கிரமிப்பு என்ற பெருங்குற்றத்தை நியாயப்படுத்துவதற்காகத்தான் ஆயுதப்(ஆக்கிரமிப்பு) படைகள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றி வைத்திருக்கிறது.

மணிப்பூரை மட்டுமல்ல, சுய நிர்ணய உரிமை கோரிப் போராடிவரும் காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய தேசிய இனங்கள் அனைத்தையும் தனது இராணுவ வலிமையைப் பயன்படுத்தித்தான் இந்திய அரசு நசுக்கி வருகிறது. நேரு காலத்திலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புகளையும் இன ஒடுக்குமுறைகளையும் போலி கம்யூனிஸ்டுகள், திராவிடக் கட்சிகள் உள்ளிட்ட எல்லா ஓட்டுப் பொறுக்கிகளும் ஆதரிக்கின்றனர். இந்த வெட்கங்கெட்ட ஆக்கிரமிப்பை தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகச் சித்தரிக்கின்றனர். அதனைக் கொண்டாடும்படி மக்களைப் பயிற்றுவித்திருக்கின்றனர்.

இத்தகைய அயோக்கியர்களான ஓட்டுப் பொறுக்கிகளும் இனவாதிகளும் ஊடகங்களும்தான், இன்று ஈழத்தமிழர்களுக்காகக் கண்ணீர் விடுகின்றனர். ஈழத்தை இந்திராகாந்தி வாங்கித் தந்திருப்பார், ஜெயலலிதா வாங்கித் தருவார் என்றெல்லாம் கதையளக்கின்றனர்.

– அஜித்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________

சிறுகதை : காதல் !

38

தோ அந்த மூலையில் மேசை அருகே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களே, அந்தத் தம்பதிகளை ஒரு முறை பாருங்கள். நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கே வசதிப்படாது, ஆனால் அப்புறம் என் வீட்டில் அவர்களைப் பற்றிச் சுவையான கதை உங்களுக்குச் சொல்கிறேன்.”

பரீஸ் பொலிவோய்
பரீஸ் பொலிவோய்

எங்கள் நிர்மாண வட்டாரத்தின் கட்சி ஸ்தாபனத் தலைவர் இவான் ஃபியோதரவிச் குஸ்மிச்சோவ் ஆட்களை மோப்பங் காண்பதில் ஆச்சரியகரமான திறமை வாய்ந்தவர். ஒவ்வொருவரிடத்திலும், அவர் எவ்வளவு தான் சாதாரணமானவராகத் தோன்றினாலும், ஏதாவது ருசிகரமான விஷயத்தைக் கண்டறிவது அவருக்கு முடியும். அவருடைய இந்தத் திறமையை நான் அறிந்திருந்தபடியால் அவர் காட்டிய ஆணையும் பெண்ணையும் மெதுவாக நோட்டமிட்டேன்.

அவன் ஒற்றை நாடி தேகத்தினன். அடர்ந்து, சுருண்டு நரையோடிய கரிய கேசம். கூரிய பக்கத் தோற்றம். எடுப்பான, ஓரளவு பருமனான மோவாய். துருத்திய கன்ன எலும்புகள். இதழ்க் கோடிகளில் ஆழ்ந்த ரேகைகள். ஏதோ காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டிருப்பது போலக் கத்தியையும் முள்ளையும் லாகவமாகச் செலுத்தி அவன் மௌனமாக உணவருந்திக் கொண்டிருந்தான். அவள் பொன் நிறத்தினள். வாட்டசாட்டமான, ஆனால் பொருத்தமுள்ள அங்க அமைப்பு வாய்ந்த மேனி. பரந்த முகம். இணைந்த கரும் புருவங்கள் அதற்குக் கடுமையும் ஊக்கமும் நிறைந்த தோற்றத்தை அளித்தன. அவள் அணிந்திருந்த நீண்ட அங்கியைத் தவிர அவளது தோற்றத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவுமில்லை.

ஆனால் அவள் நடந்துகொண்ட மாதிரியில், அதிலும் தன் கூட்டாளிக்கு அவள் கடுகு மசியலையும், முள்ளங்கியையும், மிளகுப்பொடியையும் பார்த்துப் பார்த்து எடுத்துக் கொடுத்த விதத்தில், பேணும் தன்மை, தாய்மை மிளிர்த்தது. நிர்மாணத் தொழிலாளிகள் நிறைந்திருந்த இந்த உணவு விடுதியில் இப்பெண் தானே சொந்தக்காரி போல நடந்துகொண்டாள்.

இங்குள்ளவர்கள் எல்லாரும் இந்தப் பெண்ணுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள் என்பதும், அவள் இதற்குப் பழக்கப்பட்டவள் என்பதும் தெளிவாகத் தெரிந்தன.

அன்று மாலை குஸ்மிச்சோவும் நானும் கட்சிச் செயலகம் அறையில் சந்தித்தோம். நிர்மாண என்ஜினியர் செயலகம் போலக் காணப்பட்ட அந்த அறை பெரியதன்று. மேசை மீதும், புத்தக அலமாரிகளிலும், சன்னல் குறடு மேலும், இரும்புப் பெட்டியின் உச்சியிலும், எங்கும் சிமெண்டு ஜாடிகளும், மண்ணின் மாதிரிகளும், பலவகைக் கருவிகளின் மாடல்களும் நிறைந்திருந்தன.

செயற்கைத் தோல் சோபாவில் என்னை அமர்த்திவிட்டு, குஸ்மிச்சோவ் தானும் சிறுவர்களைப் போல் கால்களை மடக்கிக்கொண்டு என் அருகே அமர்ந்து என் பக்கமாக முகம் முழுவதையும் திருப்பினார். அதில் புன்னகை தவழ்ந்தது. குறும்புத்தனமான அந்தப் புன்னகை, அவரது உதட்டோரங்கிளிலும் கண்களிலும் மட்டுமல்ல, அவரது இளமை குன்றிய முகத்தின் ஒவ்வொரு ரேகையிலும் பளிச்சிட்டது. ஏற்கெனவே வாக்களித்திருந்தபடி அவர் கதையைத் தொடங்கினார்:

“கவர்ச்சிகரமான தம்பதிகள், அல்லவா? ரொம்ப சரி. இப்போது கதையைக் கேட்கத் தயாராகுங்கள். இது அசாதாரணமான கதை என்பதை எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுகிறேன். அந்த மனிதனைப் பற்றி நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நமது உழைப்பு வீரர்களைப் பற்றிப் பேசுகையில் இவன் பெயரையும் நான் குறிப்பிட்டேன். அவன் தான் யெகோர் உஸ்த்தீனோவ், கொத்தர் குழுத் தலைவன். அவளைப் பற்றியும் நீங்கள் அவசியம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவள் தான் ல்யூபோவ் சாபான். எங்களது முதிய கொத்து மேஸ்திரி ஒருவன் குறிப்பிட்டது போல, அவள் “பெருங்குரல் பெண்மணி”. அவளும் ஒரு கொத்தர் குழுவின் தலைவி. அந்தந்த மாதம் எல்லாரிலும் நன்றாக வேலை செய்யும் குழுவிடம் கொடுத்து வைக்கப்படும் வெற்றிக் கொடியை அவளது குழு சென்ற மாதந்தான் யெகோரின் குழுவிடமிருந்து பறித்துக் கொண்டது. இருவரும் கம்யூனிஸ்டுகள்.”

கதைஞர் திருப்தியுடன் உள்ளங்கைகளை ஒன்றோடொன்று தேய்த்துக்கொண்டார்.

love“ஆகா, உங்களுக்குக் கதையில் சுவை பிறந்துவிட்டது அல்லவா? நான்தான் சொன்னேனே, எங்களிடமுள்ள சிலரைப் பற்றிப் பேசப் பேச, கேட்கக் கேட்கத் தெவிட்டாது என்று…. நல்லது, இப்போது இவ்விருவர் கதைக்குத் திரும்புவோம். யெகோர் உஸ்த்தீனோவ் முதலாவது கொத்தர் கூட்டத்துடன் இங்கே வந்தான்; நேரே தினீப்பரிலிருந்து. தினீப்பர் நீர் மின்நிலையம் கட்டுவதில் உழைத்தான், புகழ் அடைந்தான், விருது பெற்றான், தினீப்பர் வேலை முற்றுப் பெற்றதும் நேரே எங்களிடம் வந்துவிட்டான். கொத்து வேலை தொடங்கி வைக்கும் கௌரவத்தை நாங்கள் அவனுக்கு அளித்தோம். அணையின் வானக்கிடங்கில் முதல் கனமீட்டர் காங்கிரீட் போட்டவன் அவன்தான். ஒரு சஞ்சிகையின் முகப்புப் பக்கத்தில் உஸ்த்தீனோவின் புகைப்படம் வெளியாயிற்று. இந்தப் படத்திலிருந்து தான் எல்லாம் ஆரம்பித்தது என்று சொல்லலாம். அதுதான் இந்தக் கதை முழுவதற்கும் வித்து.

“மேற்படி சஞ்சிகை வெளியான இரண்டொரு வாரத்திற்கெல்லாம் இங்கே, கட்சிச் செயலகத்தில் என்னைப் பார்க்க வந்தாள் ஒரு பெண். அவளை எனக்கு முன்பின் தெரியாது. பெயர் ல்யூபோவ் சாபான், கட்சி உறுப்பினர், இங்குள்ள மருத்துவ நிலையத்தில் தாதியாக வேலை செய்ய அனுப்பப்பட்டிருக்கிறாள் என்று பரிந்துரைக் கடிதத்தில் கண்டிருந்தது.

“அவளோடு பேச்சுக் கொடுத்தேன். அவள் நல்ல கம்யூனிஸ்டு என்று எல்லா வகையிலும் விளங்கியது. பள்ளிப் படிப்பையும் மருத்துவப் பயிற்சியையும் முடித்த பின்பு போரில் தொண்டு புரிந்தாளாம். காயமடைந்தாளாம், கௌரவ விருது பெற்றாளாம். போர்முனையில்தான் கட்சியில் சேர்ந்தாளாம். போருக்குப் பின்பு இராணுவச் சேவையிலிருந்து விடுபட்டுத் தன் சொந்த இடமான உக்ரையினுக்குத் திரும்பினாளாம். ஒரே வார்த்தையில், உண்மையிலேயே ரொம்ப நல்ல பெண், திறமைசாலி என்று எனக்குப் பட்டது. அவளோடு பேசிக் கொண்டிருக்கும் போதே, சிசு பராமரிப்பு நிலையம் பற்றி நிர்மாண வட்டாரத் தலைவருடன் உரையாடியது என் நினைவுக்கு வந்தது. அப்போது எங்கள் சிசு பராமரிப்பு நிலையத்தில் வேலைகள் ஒழுங்காக நடைபெறவில்லை. அதைச் சரிவர மேற்பார்க்கத் தகுந்த ஆள் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

“சிசு பராமரிப்பு நிலையத்தில் வேலை பார்க்கச் சம்மதந்தானா என்று ல்யூபோவ் சாபானைக் கேட்டேன். ‘இதென்ன கேள்வி? தேவையாயிருந்தால் குழந்தைகள் இல்லத்தில் வேலை பார்க்கிறேன். நான் இங்கே இளைப்பாறுவதற்காக வரவில்லையே. எங்கே வேண்டுமோ வேலை கொடுங்கள். என் உடம்பில் வலுவென்னவோ வேண்டியது இருக்கிறது. திறமையும் அவ்வளவு இருந்தால் நன்றாயிருக்கும்’ என்றால் அவள். அவளுடைய பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விடை பெற்றுக் கொண்டு கதவுப் பக்கம் போனவள் சடக்கென்று திரும்பி, ‘உஸ்த்தீனோவ் என்பவர் இங்கே வேலை செய்கிறாரா என்று சொல்ல முடியுமா? முழுப்பெயர் யெகோர் உஸ்த்தீனோவ். அவருடைய புகைப்படம் கூடச் சமீபத்தில் சஞ்சிகையில் வெளியாயிற்றே’ என்று கேட்டாள்.

“உஸ்த்தீனோவ் இங்கே தான் வேலை செய்கிறார். கட்சியின் எங்கள் கிளைச் செயலகத்தில் அவர் பெயர் பதிவாகியிருக்கிறது” என்று பதில் சொன்னேன்.

“இதைக் கேட்டதும் அவள் புருவங்களைச் சற்றே உயர்த்தி (அவளுடைய இந்த வழக்கத்தை இன்று நீங்கள் கவனித்திருக்கலாம்) மிகமிகத் தணிந்த குரலில் (இம்மாதிரி ஆட்கள் தணிந்த குரலில் பேசினால் விந்தையாயிருக்கிறது), ‘ஆமாம், இந்த உஸ்த்தீனோவ் மணமானவரா என்ன?’ என்று கேட்டாள். அவளுடைய கேள்வி என்னைத் திகைக்க வைத்து விட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ‘அவர் உங்களுக்கு என்ன வேண்டும்? சொந்தக்காரரா?’ என்று வினவினேன். ‘இல்லை. ரொம்பக் காலத்துக்கு முந்திப் பழக்கமுண்டு. இப்போது அவர் என்னை மறந்துகூடப் போயிருக்கலாம்.’ இப்படிச் சொன்னதும் அவள் முகமெல்லாம் ஜிவு ஜிவென்று சிவப்பேறி, மூக்கந்தண்டில் வியர்வை அரும்பியது.

“எனக்கு நினைவிருக்கிறபடி உஸ்த்தீனோவ் விதுரன் என்றும், வேண்டுமானால் ஒரே நொடியில் நிச்சயமான தகவலை விசாரித்துச் சொல்ல முடியும் என்றும் கூறினேன். ஆனால் அவள் அதைக் கேட்கக் காத்திராமல் எறிந்த பந்து போல விருட்டென்று அறைக்கு வெளியே போய்விட்டாள். இதென்னடா இப்படி? ஒருவேளை இவள் அவனுடைய முன்னாள் மனைவியாயிருப்பாளோ என்று நினைத்தவனாய் உஸ்த்தீனோவ் பூர்த்தி செய்திருந்த பத்திரத்தை எடுத்துப் பார்த்தேன். இல்லை, அவன் விதுரன், அவனுக்கு மூன்று குழந்தைகள் என்று அதில் தெளிவாகக் குறித்திருந்தது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது உஸ்த்தீனோவிடமே சாபானைப் பற்றிக் கேட்டுவிடுவது என்று தீர்மானித்தேன். அச்சமயம் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை.

“நல்லது. ல்யூபோவ் சாபான் தன்னுடைய வேலைத் திறமையை உடனே காட்டிவிட்டாள். சிசு பராமரிப்பு நிலையத்தில் காரியங்கள் எல்லாம் மளமளவென்று சீர்பட்டன. ஒரு மாதத்துக்குக் கொஞ்சம் அதிகமாகியிருக்கும், அவ்வளவுதான், அதற்குள் – நான் பெருமை அடித்துக்கொள்ளவில்லை – எங்கள் சிசு பராமரிப்பு நிலையம் இந்த மாவட்டம் முழுவதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கலாயிற்று.

“ஒன்று மட்டும் உங்களிடம் ஒப்புக்கொள்ள வேண்டும். சாபான் வேலை தொடங்கிய முதல் இரண்டொரு வாரங்கள் எங்களில் ஒவ்வொருவருக்கும் அவளிடமிருந்து பிழைப்பது பெரும்பாடாகி விட்டது. அவள் ஒழுங்குபடுத்த ஆரம்பித்த பின் அவளுடைய அவசரக் கோரிக்கைகளுக்கு இணங்கி, குழந்தைகளின் தேவைகளைக் கவனிப்பதற்காக ஒரு குழு நியமித்தனர்; விநியோக நிர்வாகிகளோ, ஒரேயடியாகக் கிலி பிடித்துப் போனார்கள்; அவள் குரல் காதில் விழ வேண்டியதுதான், எடுப்பார்கள் ஓட்டம். ஆனால் வெகு தூரமல்ல. அவளிடமிருந்து தப்புவதெங்கே? மறுகணமே அவள் கோழிக் குஞ்சின் மேல் கழுகு பாய்வது போலப் பாய்ந்து பற்றிக் கொள்வாள். தனக்கு வேண்டியதை எல்லாம் கக்க வைத்த பிறகுதான் அவர்களை விடுவாள்.

“ஒரு தடவை எங்களைப் பார்வையிட அமைச்சர் வந்தார். நிர்மாண வேலையாட்களின் தேவைகள் விஷயத்தில் அவர் ரொம்பக் கண்டிப்பானவர் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். முதலாவதாக வேலையைப் பார்வையிடுவார், பின்பு இருப்பிட வசதிகளைக் காட்டச் சொல்லுவார். அவரை மட்டும் ஏய்க்க முடியாது! இந்த முறையும் அப்படித்தான். ஒவ்வொரு குழாயிலிருந்தும் தண்ணீரைத் தாமே ருசி பார்த்தார். பின்பு உணவு விடுதியில் நேரே சமையலறைக்குப் போய் ஒவ்வொரு பாத்திரத்திலிருந்தும் ஒரு கரண்டி எடுத்து மாதிரி பார்த்தார். அப்புறம் இருப்பறைக்கு வருகை. அன்றோ இருப்பறையில் நல்ல ரேடியோ செட்களோ மோட்டார் சைக்கிள்களோ இல்லை. பின்பு கேட்பானேன்! எங்கள் விநியோக முகவர்களுக்குச் சரியான படிப்பினை கிடைத்தது. கடைசியில் அமைச்சசர் சிசு பராமரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டார். அங்கே போனதும் நாங்கள் எல்லாரும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டோம். எதைப் பார்த்தாலும் பளிச்சென்று துப்புரவாக மின்னியது. குழந்தைகள் தளதளவென்றிருந்தார்கள். அவர்களது ரோஜாக் கன்னங்கள் ஆப்பிள் பழங்களைப் போல உருண்டையாயிருந்தன. அமைச்சர் புன்முறுவலுடன் ல்யூபோவ் சாபான் பக்கம் திரும்பி, ‘நன்றி. இங்கே உங்கள் விடுதியில் எல்லாம் நன்றாயிருக்கின்றன’ என்றார். அதற்கு அவள் என்ன சொன்னாள் என்று நினைக்கிறீர்கள்? ‘தோழர் அமைச்சர் அவர்களே, நீங்கள் எங்களிடம் எதிர்பார்ப்பது மிகமிகக் குறைவு’ என்று வெட்டொன்று துண்டிரண்டாகப் பேச ஆரம்பித்தாளே பார்க்க வேண்டும்! ‘இதைப் போய் நன்றாயிருக்கிறது என்று சொல்கிறீர்களே. திட்டப்படி எங்கள் குழந்தைகளுக்கு இரட்டை மாடி வீடு கிடைத்திருக்க வேண்டும். அது எங்கே? இந்தத் தோட்டத்தை நாங்கள் சொந்த உழைப்பைக் கொண்டு போட்டோம். ஆனால் இதற்கு வேலி எங்கே? எங்கள் பெண்கள் இந்தக் கன்றுகளை எல்லாம் தங்கள் கையினால் நட்டது ஆடுகளுக்குச் சுவையான உண்டி அளிப்பதற்கு என்று நினைக்கிறீர்களா?’ இப்படி ஒன்றுக்குப் பின் ஒன்றாகப் பொழிந்து தள்ளிவிட்டாள். ‘இது ஒரு பெரிய நிர்மாண தலம். இங்கே உள்ள ஒவ்வொன்றும் எல்லாவற்றிலும் நல்லதாக, அழகானதாக இருக்க வேண்டும்…’ என்றாள். எங்களில் சிலர் அமைச்சரை அச்சத்துடன் ஓரக் கண்ணால் பார்த்தோம். ஒன்றுமில்லை, கேட்டுக் கொண்டிருந்தார், ஆனால் கண்களில் மட்டும் சிரிப்பு மின்னிட்டது. ‘நீங்கள் சொல்வது சரி, ரொம்ப சரி’ என்றார் அவர். அத்தோடு அவள் விட்டுவிட்டாள் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. ‘சொல்வது சரி என்பது எனக்கே தெரியும். நான் சொன்னவை எல்லாம் குழந்தைகளுக்குக் கிடைக்குமா இல்லையா? அதைச் சொல்லுங்கள் முன்னே’ என்று கேட்டாள். ‘கிடைக்கும், திட்டத்தில் குறிப்பிட்டிருப்பவை எல்லாம் கட்டாயமாகக் கிடைக்கும்’ என்று அமைச்சர் பதிலளித்தார்.

“அப்படிப்பட்டவள் இந்த ல்யூபோவ் சாபான். எங்கள் பெண்கள் எல்லாரும் அவளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். எங்களுக்கும் ஒரே மகிழ்ச்சி. குழந்தைகள் இல்லத்தை மேல் பார்ப்பதற்கு அவளை விடத் தகுந்தவள் தேடினாலும் கிடைத்திருக்க மாட்டாள் அல்லவா?

“ஒரு நாள் மாலை நான் இந்தச் செயலகத்தில் தன்னந்தனியாக உட்கார்ந்து ஓர் அறிக்கை தயாரிப்பதற்காகப் படித்துக்கொண்டும் விவரங்கள் சேகரித்துக்கொண்டும் இருந்தேன். திடீரென்று கதவைத் தட்டிய சத்தம் கேட்டது. பார்த்தால், ல்யூபோவ் சாபான் வந்து நிற்கிறாள். ‘இவ்வளவு நேரங் கழித்து வந்ததற்கு மன்னிக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டு, என்னைத் தனிமையில் பார்க்க விரும்பியதாகக் கூறினாள். இப்போது நீங்களும் நானும் உட்கார்ந்திருக்கிறோமே, அதே சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.

” ‘இதே பாருங்கள், ஒரு விஷயம் முன்னதாகவே பேசித் தீர்த்துக்கொள்வோம். நான் சொல்லப் போவது எல்லாம் வெறும் வெட்டிப் பேச்சல்ல. எல்லாவற்றையும் முன்னதாகவே நன்றாக யோசித்து முடிவு செய்திருக்கிறேன்’ என்று பீடிகை போட்டாள்.

” ‘புரிகிறது. விஷயமென்ன?’ என்றேன்.

” ‘விஷயம் இதுதான்: சிசு பராமரிப்பு நிலையத்து வேலையிலிருந்து எனக்கு விடுதலை அளியுங்கள். அதோடு கொத்து வேலைப் பயிற்சிப் பள்ளியில் நான் சேருவதற்கு உதவி செய்யுங்கள். அங்கே பெண்களை விருப்பத்துடன் சேர்த்துக் கொள்வதில்லையாம். அதனால்தான் கேட்கிறேன்.’

“நான் அவள் மனத்தை மாற்ற முயன்றேன், ஆனால் அவள் மசியவில்லை.

” ‘என்ன நேர்ந்தது? யாராவது தவறாக நடந்து கொண்டார்களா? குழந்தைகளோடு பாடுபடுவது சலித்துப் போயிற்றா? இல்லை, ஒரு வேளை களைத்துப் போய்விட்டீர்களா? விடுமுறை வேண்டுமா? ஏதாவது ஓய்வு விடுதிக்குப் போக விரும்புகிறீர்களா?’ என்று கேட்டேன்.

“அவள் வேண்டாம் என்று தலையை அசைத்தாள்.

” ‘என்னிடம் தவறாக நடந்து கொள்வதற்கு யார் இருக்கிறார்கள்? குழந்தைகளோ, எனக்கு உயிர். களைப்படைய என்னால் முடியவே முடியாது. அப்படியெல்லாம் ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. நான் கொத்து வேலை கற்றுக்கொள்வதற்கு அநுமதி கொடுங்கள்’ என்றாள். அதோடு கூடவே, ‘குழந்தைகள் இல்லத்தில் வேலைகள் ஒழுங்காக நடந்து வருகின்றன. வேலையாட்கள் தேர்ச்சி பெற்று விட்டார்கள். மேல்பார்வைக்கும் ஓர் ஆளைக் குறிப்பிடுகிறேன். அவளை விடத் தகுந்தவர் கிடைப்பது அரிது’ என்று மிகவும் அறிவுப் பொருத்தமாக விளங்கினாள். தன் வேலைக்கு ஓர் என்ஜினியரின் மனைவி பெயரைச் சிபாரிசு செய்தாள். அந்தப் பெண் அற்புதமான அறிவுள்ளவள்.

“அப்புறம் நான் என்ன சொல்ல முடியும்? ‘அப்படியானால், சரி. பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு ஒருவர் இருக்கிறார், உங்களுக்கும் கொத்து வேலைப் பயிற்சி பெறுவதற்கு மனப்பூர்வமான ஆர்வம் இருக்கிறது. ஆகவே நிர்மாண வேலைத் தலைவரிடம் உங்களைப் பற்றிச் சிபாரிசு செய்கிறேன்’ என்று சொன்னேன்.

“அவள் எனக்கு நன்றி தெரிவித்தாளே தவிர வெளியே போகவில்லை.

” ‘இன்னும் ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டேன்.

“’ஆம் இருக்கிறது. உங்கள் யெகோர் உஸ்த்தீனோவ் இன்னும் பொது விடுதியிலே தனியாயிருக்கிறார். அவருடைய மூன்று குழந்தைகளும் காலூகாவில்அவருடைய கிழ அத்தையுடன் இருக்கறார்கள். இது சரியல்ல. நமது புதிய வீடுகள் ஒன்றில் அவருக்குத் தனி இருப்பிடம் அளிக்கப்பட வேண்டும். குழந்தைகளைப் பிரிந்திருப்பது தகப்பனுக்கு எளிதென்று நினைக்கிறீர்களா?’

” ‘அவள் ஏன் ஒருபோதும் இதைப்பற்றி என்னிடம் சொல்லவில்லை?’

” ‘அது அவரது சுபாவம். வேலைக்காக என்றால் தொண்டை கிழியக் கத்துவார். தனக்காக என்றால் குளிர்காலத்தில் பனிக்கட்டித் துண்டு கேட்பதற்குக் கூடக் குரல் எழும்பாது. இத்தகைய விஷயங்களை ஒருவர் கேட்கும் வரை காத்திராமல் நீங்களே முடிவு செய்திருக்க வேண்டும்.’

“மறு நாள் நான் யெகோருடன் பேசினேன். அவனுடைய சொந்த விஷயங்களைப் பற்றி ல்யூபோவ் கூறியதெல்லாம் சரி என்று அறிந்து எனக்கு வெட்கம் உண்டாயிற்று. ல்யூபோவைப் பற்றி உஸ்த்தீனோவிடம் விசாரிப்பதற்கு இப்போது தான் முதல் முறையாக எனக்குத் தருணம் வாய்த்தது. ஆகவே துருவித் துருவிக் கேட்டேன். சாதாரணமாகவே அவன் கமுக்கமான பேர்வழி. இப்போது ல்யூபோவ் பெயரைக் கேட்டதுமே வாயை இறுக்க மூடிக்கொண்டுவிட்டான். எங்கள் பேச்சின் பொழுது தரையையே குத்திட்டுப் பார்த்தவண்ணமாய் இருந்தான். அவனிடமிருந்து ஒவ்வொரு வார்த்தையையும் நான் நெம்பு கோல் போட்டு எடுக்க வேண்டியதாயிற்று.

” ‘இந்த ல்யூபோவ் சாபான் இருக்கிறாளே, நல்ல மாதிரி’ என்றேன்.

” ‘மோசமில்லை’ என்றான்.

” ‘ரொம்ப காலமாகப் பழக்கமுண்டோ?’

” ‘எட்டு ஆண்டுகளாக.’

” ‘ஒரே ஊர்க்காரர்களா?’

” ‘இல்லை. சண்டை நாள்களில் இரண்டு பேரும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம்.”

” ‘உங்களுக்குள் காதல் – கீதல் ஏதாவது?’

“அவன் வறட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

” ‘அப்போது என் மனைவி உயிரோடு இருந்தாள். தவிர மருத்துவமனையிலே காதல் எப்படி? நிறைய பேசிக்கொண்டோம் என்பது உண்மைதான், ஆனால் போர் வீரர்களின் முறையிலே, வாழ்க்கையைப் பற்றியும் மற்ற விஷயங்களைப் பற்றியும்.’

” ‘நல்லது, இப்போது?’

” ‘இப்போது ஒருவரையொருவர் பார்க்கும்போது ‘வணக்கம்’, ‘போய் வருகிறேன்’ என்று பொதுவாகச் சொல்லிக்கொள்கிறோம். கட்சிக் கூட்டங்களில் சந்திக்கிறோம். அவள் தான் இப்போது எப்படி ஆகிவிட்டாள் பாருங்களேன்! இந்த வட்டாரம் முழுவதற்கும் அவள் தான் எல்லாரிலும் முதல். இல்லையா?’

” ‘அவளுக்குக் கொத்து வேலை கற்றுக்கொள்ள வேண்டுமாம். உன் கருத்து என்ன? அநுமதிக்கலாமா?’

soviet-workers“இந்தக் கேள்வி அவனைத் திடீரென்று தட்டி எழுப்பியது போலத் தென்பட்டது. ஆனால் கண நேரத்திற்குத் தான். மறு கணமே அவன் முன்போலவே பட்டும் படாததுமாக, ‘இது உங்கள் விவகாரம். அவள் கொத்து வேலையில் நல்ல தேர்ச்சி பெறுவாள் என்பது எனக்குத் தெரியும். எப்போதுமே அவள் எதில் முனைந்தாலும் அதை அடைந்தே நீருவாள். அவள் மாதிரியே அப்படி… ஆமாம், வேறு ஏதாவது என்னிடம் கேட்க வேண்டுமா உங்களுக்கு?’ என்றான்.

“யெகோர் உஸ்த்தீனோவ் சொன்னது சரியாயிற்று. அரை ஆண்டுக்குள்ளேயே ல்யூபோவ் சாபான் கொத்து வேலைக்காரி ஆகிவிட்டாள். அதுவும் எப்படிப்பட்ட வேலைக்காரி! கஞ்சி போட்டு இஸ்திரி செய்த கௌனும் வெள்ளை வெளேரென்ற தலைக்குட்டையுமாகவே அவளைப் பார்த்து எங்களுக்கெல்லாம் வழக்கமாகிவிட்டது. ஆகவே பயிற்சி முடிந்த பின் கித்தான் உடையும் முரட்டுக்கையுறைகளும் கனத்த ரப்பர் காலணிகளுமாக அவளை எதிரே கண்டபோது விசித்திரமாயிருந்தது. ஆனால் புதிய வேலையும் நொடிப்பொழுதில் அவளுடைய இயல்பான திறமைகள் ஆகியவற்றுடன் கூட, அவளுடைய அறிவு வேட்கை, தன் வேலையில் ஒவ்வொரு புது விஷயத்தையும் கற்றுக் கொண்டு தீர வேண்டும் என்ற உண்மையிலேயே அடக்க முடியாத ஆசை, அவளுடைய முன்னேற்றத்துக்கு உதவுகிறது என்று நான் நினைக்கிறேன். எங்கள் கட்சி உறுப்பினர்களின் அரசியல் பயிற்சி பற்றி ஒரு முறை அறிக்கை தயாரித்தபோது அவர்களுடைய நூலகப் பதிவுச் சீட்டுக்களைப் பார்வையிட்டேன். அடேயப்பா, அந்த ஓர் ஆண்டில் ல்யூபோவ் சாபான் படிக்காத புத்தகமே கிடையாது என்று தோன்றியது! அவ்வளவு புத்தகங்கள் அவள் சீட்டில்!

“புதிய வேலையின் நெளிவு சுளிவுகளைத தெரிந்து கொண்டபின்பு ல்யூபோவ் சாபான் தயக்கமின்றி மளமளவென்று முன்னேறினாள். சில மாதங்களில் அவள் குழுத்தலைவி பதவிக்கு உயர்த்தப்பட்டாள். அது முதல்தான் யெகோர் உஸ்த்தீனோவுடன் அவளுடைய தகராறுகள் ஆரம்பமாயின.

“நிர்மாணம் பற்றி விவாதிக்கும் பொருட்டு எப்போது கூட்டம் கூடினாலும் ல்யூபோவ் மேடை மீது ஏறி, ஒருவர் பாக்கியில்லாமல் சலித்து எடுத்து விடுவாள். அதிலும் யெகோர் உஸ்த்தீனோவை எல்லாரையும் விடக் கடுமையாக. அவளுடைய வார்த்தைகளை உதறித் தள்ளுவதோ, பதில் பேசாமல் அலட்சியமாக விட்டு விடுவதோ நடவாது. அவள் தான் வெற்றுச் சொல் பேசுவதே கிடையாதே. ஒவ்வொரு சொல்லும் காரியார்த்தமானது. யெகோரால் போனால் போகிறதென்று விடவே முடியாது. அதனால்தான் இரண்டு பேர்க்கும் மோதல்கள் ஏற்படும். அவன் நல்ல வேலையாளி, புது வழிகளைக் கண்டுபிடிப்பவன். தினீப்பர் நீர்மின் நிலையத்தில் பல ஆண்டுகள் வேலை செய்து அநுபவம் பெற்றவன். அவன்கீழ் வேலை செய்த குழுவினரும் எல்லா வகையிலும் அவனுக்கு ஏற்றவர்கள். அவனுடைய சொல்லுக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பார்கள், அது அவனுக்குப் பழக்கமாகி விட்டது. ல்யூபோவ் இப்படி எடுத்தெறிந்து பேசுவதைக் கேட்டு அவனுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வரும்.

” ‘அநுபவம் என்னவோ உன்னிடம் ஏராளமாக இருக்கிறது, யெகோர் உஸ்த்தீனோவ், ஆனால் அதை மற்றவர்களுக்கு முழுதும் வழங்க உனக்கு மனம் வருவதில்லை. ஒரு சில தந்திரங்களை உள்ளுக்குள்ளே பதுக்கி வைத்துக் கொள்வதும் இந்த உபரி யுக்திகளால் சுளுவாக முதலிடத்தைத் தட்டிக்கொண்டு போவதும் உனக்கு வழக்கமாகிவிட்டன’ என்பாள்.

“அவன் அநுபவ அறிவைக் கொண்டு அவளைத் தாக்கப் பார்ப்பான். அவளோ, வீச்சான அறிவால் அவனை மடக்கி விடுவாள். பெரிய ஆள் அவள். சொந்த யோசனையின் பேரில் அவளாகவே சிமெண்ட் ஆராய்ச்சி நிலையத்துடனும் லெனின்கிராட் என்ஜினீயரிங் நிலையத்துடனும் கடிதப் போக்கு வரத்து தொடங்கினாள். புதுப்புது தகவல்கள் எல்லாம் அங்கிருந்து அவளுக்குக் கிடைக்கின்றன.

“ஆரம்பத்தில் புது முறைகள் பற்றிய அறிவைமட்டும் கொண்டு அவள் யெகோரைத் தாக்கிவந்தாள். ஆனால் பின்போ, வேலையில் அதிக உற்பத்தித் திறனால் அவனைத் திக்கு முக்காடச் செய்துவிட்டாள். அதற்கு முன்பு யெகோருடன் ஒப்பிடுவதற்கு எவரும் இல்லை. அவனுக்கு ஈடு இணை ஒருவருமே கிடையாது. திட்டத்தில் குறித்த அளவுக்கு இரண்டு மடங்கு நிறைவேற்றிவிடுவார்கள். இதற்காக அவனை எல்லாரும் பாராட்டுவார்கள். இப்போது என்னவென்றால் ல்யூபோவும் அவள் குழுவினரும் அவனை நெருங்கிவந்து விட்டார்கள்; அவன் குதிகாலில் இடறத் தொடங்கிவிட்டார்கள். அவன் ஒரு துளி தளர்ந்தானோ, போச்சு, அவர்கள் கட்டாயமாக முந்திவிடுவார்கள். முந்தியும் விட்டார்கள். போங்களேன். இப்போது வெற்றிச் செங்கொடி ல்யூபோவ் சாபானின் குழு வசம் இருக்கிறது.

“உஸ்த்தீனோவுக்கு இதெல்லாம் வேம்பாய்க் கசப்பதாகவும் ல்யூபோவின் பெயரைக் கேட்கவே அவனுக்கு வெறுப்பாயிருப்பதாகவும் கட்சி உறுப்பினர்களான கொத்தர்கள் என்னிடம் சொன்னார்கள். உஸ்த்தீனோவ் இப்போது முன்னிலும் அதிகமாக மௌனம் சாதிக்கலானான். கடப்பாரை கொண்டு கெல்லினால் கூட அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வரவழைக்க முடியவில்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! கடைசியில் நிலைமை எந்த அளவுக்குப் போய்விட்டதென்றால் அவள் அறைக்குள் நுழைவதும் உஸ்த்தீனோவ் அறையிலிருந்து வெளியேறுவதும் ஒன்றாய் நடக்கும். இந்தத் தகராறு சொந்த விவகாரத்தின் வரம்பை மீறிப் போகிறது என்று கண்டு நாங்கள் கட்சிக் குழுவைக் கூட்டி அவர்கள் இருவரையும் அழைத்தோம். ‘நீங்கள் இருவரும் கட்சி உறுப்பினர்கள். கட்சியைச் சேராதவர்களுக்கு எத்தகைய உதாரணம் நீங்கள் காட்டுகிறீர்கள்…’ என்று குத்திக்காட்டி அவர்களை வழிக்குக் கொண்டுவர முயன்றோம். அவர்கள் வாயே திறக்கவில்லை. ‘நமது இரண்டு தலை சிறந்த கொத்தர் குழுக்களின் தலைவர்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டாமா?’ என்று சொன்னோம். இருவருக்கும் முகம் சிவந்துவிட்டது. குரல் எழும்பவில்லை. நாங்கள் சொன்ன இடித்துரைகளை எல்லாம் தரையில் வைத்த கண் நிமிர்த்தாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கலே தவிர இருவரில் ஒருவராவது வாய்திறக்கவில்லை.

” ‘உங்கள் சண்டைக்குக் காரணம் என்ன என்று கட்சிக் குழுவுக்கு விளக்கும்படி கோருகிறோம்’ என்றோம்.

“இதைக் கேட்டதும் உஸ்த்தீனோவ் கடகடவென்று சிரித்து, ‘அவளே சொல்லட்டும். நம்மில் எல்லாருக்கும் கற்றுக்கொடுக்கிறாள் அல்லவா?’ என்று சொன்னான்.

“ல்யூபோவ் அவனை ஏறெடுத்துப் பார்க்காமலே, ‘இல்லை, அவரே விளக்கட்டும். அவரிடம் அபாரமான அநுபவம் இருக்கிறது. இந்த அநுபவக் களஞ்சியம், புதுமையானது எதையும் பார்க்க விடாதபடி அவர் கண்களை மறைக்கிறது’ என்றாள்.

“ஆக இருவருக்கும் இன்னொரு சொற் போர் தொடங்கிவிட்டது. அவர்களுடைய இந்தப் போக்கு காரணமாகக் கட்சிக் குழு அவர்களைக் கண்டிப்பது அவசியமாகிவிட்டது.

“அவர்களை வழிக்குக் கொண்டு வருவதில் அன்றைக்கு எங்களால் ஒன்றும் முடியவில்லை என்று ஒப்புக்கொள்கிறேன். சம்பிரதாயப்படி பார்த்தால் எல்லாம் சரிவரத்தான் நடந்தேறியது. தங்கள் காரியத் தொடர்புகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதாக இருவரும் வாக்களித்தார்கள். இனிமேல் கம்யூனிஸ்டுக்கு உரிய முறையில் மற்றவர்களின் குறைகூறலைக் காது கொடுத்துக் கேட்டு அவற்றுக்கிணங்க நடப்பதாக உஸ்த்தீனோவ் உறுதி மொழிந்தான். அதெல்லாம் கச்சிதமாகத் தான் முடிந்தது. இருந்தாலும் எனக்கென்னவோ சாராம்சத்தில் ஒரு சிக்கலும் தீரவில்லை, அவர்களுடைய பிணக்குக்குக் காரணம் என்ன என்று தெளிவாகவில்லை, எனவே அது அகற்றப்படவில்லை என்று பட்டது. நான் ஏதோ சாக்குச் சொல்லி உஸ்த்தீனோவை நிறுத்திக்கொண்டேன். அவன் புதிய வீட்டுக்குக் குடியேறியது முதல் நாங்கள் இருவரும் அநேகமாக அண்டை வீட்டுக்காரர்கள் ஆகிவிட்டோம். ஆகையால், கட்சிச் செயலகத்திலிருந்து ஒன்றாகவே புறப்பட்டோம். இருவரும் தனியே வழி நடக்கையில் அவனை எப்படியாவது மனத்தைத் திறந்து பேச வைத்துவிடலாம் என்று எண்ணினேன். அது ஆகிற காரியமா? முள்ளம்பன்றி முட்களைத் துருத்திக்கொண்டு பந்து போல் சுருண்டு விடுமே, அப்படிக் கெட்டியாகச் சுருண்டுவிட்டான் அவன். பல்லைக் கடித்துக் கொண்டு ஒவ்வொரு வார்த்தையையும் துப்புவதுபோலப் பேசினான்.

” ‘தெரியாமல் ஒருவர் மனத்தை ஒருவர் புண்படுத்தி விட்டீர்களோ ஒருவேளை?’

” ‘இல்லை.’

” ‘ஏதாவது பழைய தகராறோ?’

” ‘எங்கிருந்து?’

” ‘அப்படியானால் ஒருவேளை உங்களுக்குள் பொறாமையா என்ன, உங்களைச் சைத்தான் வாரிக் கொண்டு போக?’

“இதற்கு அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. பற்களை மட்டும் முன்னிலும் இறுக்கக் கடித்துக்கொண்டான். கன்னத்துத் தசைநார்களெல்லாம் விறைத்து நின்றன. ஒருவேளை இந்த ஆள் அந்தப் பெண் ல்யூபோவ் சாபான் மேல் கண் தலை தெரியாமல் காதல் கொண்டுவிட்டானோ என்று அப்போதுதான் என் மூளையில் உதித்தது. அந்த நிலைமையில் இப்படித் தோன்றியது விசித்திரந்தான் என்று நினைக்கிறீர்களல்லவா? அது சரியே, இருந்தாலும் வாழ்க்கையிலே எதுதான் நடப்பதில்லை?…

“ஏதோ போகிற போக்கில் சொல்லது போல, ல்யூபோவ் சாபான் இங்கே முதல் தடவை வந்ததுமே அவனைப் பற்றி விசாரித்தது, அவனுக்குத் தனி வீடு கொடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தது, அவன் குழந்தைகளைப் பற்றிக் கவலை காட்டியது எல்லாவற்றையும் நான் அவனிடம் சொன்னேன். என் வார்த்தைகளையெல்லாம் அவன் மௌனமாக, ரொம்பக் கவனிக்காதது போலக் கேட்டுக்கொண்டிருந்தான். ஆனாலும் அவனுக்குள் விறைப்பும் வேதனை தரும் இறுக்கமும் உண்டாவது போல எனக்குப் பட்டது. திடுமென அவன் நின்றான்.

” ‘என்னிடம் எதற்காக நீங்கள் பிரச்சாரம் செய்கிறீர்கள்? அவள் எப்பேர்ப்பட்டவள் என்பதைத் தான் மருத்துவமனையில் பார்த்த போது முதலே அறிவேனே. உலகமெல்லாம் தேடினாலும் அவளைப் போல இன்னொருத்தி கிடைப்பாளோ என்னவோ. அவள் மட்டும், ஓ…’ அவன் கோபத்தோடு கையை உதறிவிட்டு, ‘போய்வருகிறேன்’ என்று மரியாதைக்குக் கூடச் சொல்லாமல், எதிர்ப்பட்ட முதல் சந்துக்குள் திரும்பி விரைந்து நடந்துவிட்டான்.

“எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, உஸ்த்தீனோவுடன் இந்தப் பேச்சு நடந்தது வியாழக் கிழமையன்று. அடுத்த திங்கள் கிழமை நிர்மாண தலத்தை நான் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது ஓர் ஆள் மூச்சுத் திணற என்னிடம் ஓடிவந்து, ‘அணையில் விபத்து! சிமெண்டு பிளாக்கு கொக்கியிலிருந்து நழுவி விட்டது, உஸ்த்தீனோவுக்குப் பலத்த காயம்’ என்று கத்தினான்.

“அணை அருகாமையில் தான் இருந்தது. எனவே நான் விபத்து நடந்த இடத்திற்கு ஒரே ஓட்டமாகப் போய்ச் சேர்ந்தேன்.

“யெகோர் உஸ்த்தீனோவ் கித்தான் விரிப்பில் படுத்திருந்தான். இரத்தம் எங்கும் தென்படவில்லை. மூச்சு இழைந்து கொண்டிருந்தது. கண்கள் மூடியிருந்தன. மெழுகு பொம்மை போல அசையாமல் கிடந்தான். அவன் அருகே மருத்துவரும் தாதியும் மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் எப்போதும் நடப்பது போலவே, காயமடைந்தவனைச் சுற்றி ஒரு கும்பல் கூடியிருந்தது. இருந்தாலும் அங்கே நிலவிய மௌனத்தில் யெகோர் மிகக் கஷ்டத்துடன் கர் கர் என்று விட்ட மூச்சுக் கூடக் கேட்டது.

“திடீரென்று ஒரு பெருங் கூச்சல், நெஞ்சைப் பிளக்கும் பெண் குரல் கேட்டு எங்கள் உடம்பெல்லாம் புல்லரித்தது. ஆடையும் தலையும் ஒரே அலங்கோலமாய், அழுது புலம்பிக் கொண்டு வந்த ஒரு பெண் எல்லாரையும் இடித்து விலக்கி, உஸ்த்தீனோவ் கிடந்த இடத்துக்குச் சென்று, வெட்டுண்ட மரம் போலத் தடாலென்று அவன் அருகே விழுந்தாள்.

” ‘யெகோர், என் கண்ணே, என்ன நேர்ந்தது? என் கட்டிக் கரும்பே, கண்ணைத் திறந்து பாரேன்!’ என்று அழுதாள், பாருங்கள், நெஞ்சு வெடித்து விடும் போல அழுதாள். இதைக் கேட்டதும் உஸ்த்தீனோவ் கண்களைத் திறந்தான். அந்தப் பெண் பிள்ளையை ஒரே ஆச்சரியத்துடன் பார்த்தான். தன் மீது அவனுக்கு நம்பிக்கை உண்டாகவில்லை போல் இருந்தது. தான் காண்பது உண்மைதானா, இல்லை சுர வேகத்தில் தோன்றும் மயக்கமா என்று நிச்சயப்படுத்திக் கொள்பவன் போல வெறித்து நோக்கினான். திடீரென்று அவன் கண்கள் பளிச்சிட்டன. அந்தக் காட்சி என் மனத்தில் மிகமிகத் தெளிவாகப் பதிந்தது. படுகாயமடைந்து இப்போதுதான் உணர்வு பெற ஆரம்பித்திருந்த இந்த மனிதனின் கண்களில் ஒளி விட்டது. தூய்மையான இன்பம். வெளியானாகிய நான் அதைக் காண்பது முறையாகாது என்று எனக்குப் பட்டது. பின்பு அந்தப் பெண் அவனை மார்போடு தழுவிக்கொண்டு அவன் தலைமயிரை வருடியவாறே, ‘நீ பிழைத்திருக்கிறாய், உயிரோடிருக்கிறாய், என் அன்பே, என் செல்வமே, எத்தனை ஆண்டுகளாக உன்னை நெஞ்சிலே வைத்துப் பேணிவந்தேன்!’ என்று மெல்லிய குரலில் மொழிந்தாள். அவள் கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் அவன் முகத்தின் மேல் முத்து முத்தாகச் சிந்தியது.

“தலைவிரிகோலமாய், சீர்குலைந்து, கண்ணீரும் கம்பலையுமாக விளங்கிய இந்தப் பெண் வேறு எவருமில்லை, ல்யூபோவ் சாபான் தான் என்பது அப்போதுதான் என் அறிவுக்கு எட்டியது. எனக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது. ஆம், அது அவளேதான். எனக்கோ நம்புவதே கஷ்டமாயிருந்தது. நம்மை அறியாமலே பிறருடைய இரகசியத்தில் குறுக்கிட்டுவிட்டோமே என்ற எண்ணத்தால் எனக்கு ஓரே கூச்சமாய்ப் போய் விட்டது. அங்கிருந்த மற்றவர்களும் இதே உணர்ச்சியினால் மறு புறம் திரும்பிக் கொண்டு மெதுவாக நழுவத் தொடங்கினார்கள். மருத்துவர் தமது கருவிகளைத் தோல் பைக்குள் வைப்பதில் முனைந்திருந்தார். நிலைமை என்ன என்று அவரைக் கேட்டேன்.

” ‘மோசமில்லை. எலும்புகள் எல்லாம் உருப்படியாக இருக்கின்றன. இவ்வளவு லேசாகத் தப்பியது அவன் அதிர்ஷ்டம் தான்’ என்று சொல்லிவிட்டு ல்யூபோவ் சாபான் பக்கம் திரும்பி, ‘இந்தா அம்மா, அவனை அலட்டாதே. அவனுக்கு இப்போது அமைதி வேண்டும். தழுவுவதெல்லாம் அப்புறம் வீட்டிலே செயது கொள்ளலாம்’ என்றார்.

” ‘வீட்டிலே’ என்ற சொல் கேட்டதுமே ல்யூபோவ் சாபான் சட்டென்று நிமிர்ந்து, எழுந்து நின்று, கலைந்த தலைமயிரை முற்றாகக் கட்டிக்கொண்டாள். அவள் முகத்தில் எப்போதும் போன்ற கடுகடுப்பு வந்துவிட்டது. சற்று முன்பு சாதாரணப் பெண் பிள்ளை போலக் கண்ணீர் விட்டுக் கதறி அழுதவள் இவளல்ல என்னும்படியாயிருந்தது அந்த உருமாற்றம். யெகோர் முனகினான். ல்யூபோவ் சட்டென்று அவனைப் பார்த்தாள். அவள் கண்களின் மீண்டும் மென்மை வந்துவிட்டது. பெண்மைப் புன்முறுவல் இந்த உதடுகளிலிருந்து இனி நீங்காது, கருநாவல் கனிகள் போன்ற இந்தக் கண்களில் ஒளிரும் காதல் சுடர் இனி என்றும் மங்காது என்று நான் அறிந்து கொண்டேன்.

“ல்யூபோவ் சாபானும் உஸ்த்தீனோவும் தங்கள் உள்ளங்களின் உறவைப் புரிந்துகொள்வதற்கு இந்த விபத்துத்தான் உதவியது.

“இந்த விபத்து நடக்காவிட்டால் என்ன நேர்ந்திருக்குமோ, யார் கண்டது? அவர்களுடைய ஆழ்ந்த செருக்கும், எங்களுடைய குறுகிய பார்வையும் சேர்ந்து அவர்களை ஒருவரையொருவர் நெருங்கவொட்டாமல் தனிமைப்படுத்தியிருக்கும். ஒரு வார்த்தைகூடச் சொல்லிக் கொள்ளாமல் இருவரும் பிரிந்து போயிருப்பார்கள்.

“இப்போது உள்ளத்தைச் சொல்லுங்கள், கதை எப்படி, சுவையானதா இல்லையா? சந்தேகமில்லாமல் சுவையானது. கட்சி வேலையில் ஈடுபட்டிருக்கும் என் போன்றவர்களுக்கு இதனால் ஒரு படிப்பினையும் கிடைக்கிறது. மக்களை ஆழ்ந்து அறிந்துகொள்ள வேண்டும், உரிய தருணத்தில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் அந்தப் படிப்பினை.

“மேலே சொல்வதற்கு என்ன இருக்கிறது? இரண்டு பேரும் மணம் செய்து கொண்டார்கள். அவன் குழந்தைகளுக்கு அவள் ஆதர்சத் தாயாக விளங்குகிறாள். நிர்மாண சம்பந்தமான கூட்டங்களில் தொண்டை கிழிய விவாதிப்பது மட்டும் இன்னும் நடந்துவருகிறது. ஆனால் ஒன்று. யெகோர் இப்போது தன் தவறுகளை ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருக்கிறான். திருமணம் பதிவான போது அவள் அவனுடைய குலப் பெயரைத் தனதாக்கிக் கொண்டாள். இந்த ஆறுமாதமாக அவளுடைய பாஸ்போர்ட்டில் ல்யூபோவ் உஸ்த்தீனோவா என்ற பெயரே காணப்படுகிறது. ஆனால் நாங்கள் எல்லாரும் – அவள் கணவன் உள்பட – ல்யூபோவ் சாபான் என்றே அவளை அழைக்கிறோம்.

“இவ்வளவு தான் கதை. ஆர்வமூட்டுவது என்று தோன்றினால் நீங்கள் பிரசுரித்துக்கொள்ளலாம்.”

– பரீஸ் பொலிவோய்
(ரஷ்ய அமர இலக்கிய வரிசை – சோவியத் இலக்கிய வரிசை என்ற நூலிலிருந்து)

மோடி கடையில் துண்டு போடும் குமுதம் !

26

ரு நாட்டின் யோக்கியதை என்ன, அரசியலின் தரம் என்ன என்பதை கவித்துவமாக அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அந்த நாட்டின் புலவர்கள் உண்டிக்கு யாரைச் சார்ந்து இருக்கிறார்கள், அவர்கள் புனையும் பாட்டில் உள்ள ஜால்ரா இரைச்சலின் டெசிபல் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள்.

குமுதம்ந்த வகையில் குமுதம் வெளிவரும் காலத்தில் நமது தமிழகத்தின் யோக்கியதையை பரிசீலிப்பதே பெரிய மானக்கேடு.

ஜெயலலிதாவின் ஊடக ஏஜெண்டாக ஜெயா டிவியையே மிஞ்சி வேலை பார்க்கிறது குமுதம். எத்தகைய அரசியல் நடவடிக்கைகளையும் அதிமுக அடிமைகளே யோசித்திராத வகையில் ‘அம்மா’வுக்கு ஆதரவாக கதை புனைந்து எழுதுகிறது இந்த மாமா கும்பல். அந்த வகையில் இவர்கள் தினமணி வைத்தியையெல்லாம் விட பல படிகள் மேலே இருக்கிறார்கள். ஒரு காலத்தில் செட்டியார் + ஐயங்கார் காம்பினேஷனில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பத்திரிகை தற்போது ஐயங்கார் கம்பெனியால் மட்டும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் ஆள்வோருக்கு ஜால்ரா அடிப்பதில் குமுதத்தின் ராகத்தை எப்போதும் யாராலும் விஞ்ச முடியாது.

மாநில அரசியலில் காக்காய் பிடிப்பதில் செட்டிலாகிவிட்ட குமுதம் இப்போது மத்தியிலும் முயற்சியை ஆரம்பித்திருக்கிறது. அடுத்த வருடம் வேறு பாராளுமன்றத் தேர்தல் வந்து புதிய அரசு பதவியேற்க இருக்கிறதல்லவா. தேசிய ஊடகங்களும், கார்ப்பரேட் முதலாளிகளும் குஜராத்தின் மோடியை முழுவீச்சாக சந்தைப்படுத்தும் போது குமுதத்திற்கும் வேர்த்து வடிகிறது. மேலும் மோடியின் கிச்சன் கேபினட்டில் இருக்கும் சோ வேறு குமுதத்தில் தொடர் எழுதுகிறார். அவரது துக்ளக் பத்திரிகை விநியோகமும் இப்போது குமுதம் வசம். ஆக காவி மோடியிடம் கவி பாடி இப்போதே தனக்கான இடத்தை துண்டு போட்டு முன்பதிவு செய்ய குமுதம் துடிக்கிறது.

உடனே குஜராத்திற்கு குமுதம் படை பறக்கிறது. சரி, ஏதோ நிருபர்கள் ரெண்டு பேர் காந்தி நகர் சென்று எழுதியிருப்பார்கள் என்று சாமானியமாக நினைத்து விடாதீர்கள். வருங்கால பிரதமரை காமா சோமா நிருபர்கள் பார்த்தால் மதிப்பு என்ன? ரிடர்ன் என்ன? எனவே குமுதத்தின் உரிமையாளரான வரதராஜ ஐயங்காரும், குமுதம் குழும ஆசிரியருமான கோசல்ராமும் செல்கிறார்கள். 26.6.2013 தேதியிட்ட குமுதம் இதழில் எக்ஸ்குளூசிவ் என்று குறிப்பிட்டு மோடி பேட்டியை போட்டிருக்கிறார்கள். படத்தில் குமுதம் ஓனர் கோட்டு சூட்டு கெட்டப்பில் மோடியுடன் கை குலுக்குகிறார். கோசல்ராம் படத்தில் இல்லை. என்ன இருந்தாலும் பின்பாட்டு பாடுபவர்களுக்கு கேமரா வெளிச்சம் அவ்வளவாக இல்லை அல்லவா! முக்கியமாக வர்து பாய் ஏதோ நீலநிற பரிசுத்தாள் மூடிய ஒரு அன்பளிப்பை மோடியிடம் கொடுத்திருக்கிறார். அது என்னவென்று தெரியவில்லை.

“யூத் என் வழிகாட்டிகள் – குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஸ்பெஷல் பேட்டி” என்ற தலைப்பில் இந்த கருமம் மேற்படி தேதியிட்ட குமுதத்தில் வந்திருக்கிறது. குளிர்பானம் குடிக்க விரும்புவோர் இந்த கட்டுரையின் பக்கங்கள் இடம்பெற்றிருக்கும் தாள்களை கலந்து குடித்தால் அவ்வளவு ஜில் என்று இருக்கும். ஐஸ்ஸூனா ஐஸ், அப்பேற்ப்பட்ட ஐஸ்!

நரேந்திர மோடிமோடியின் அலுலகத்திற்குள் நுழைந்ததும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் அறைக்குள் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாம் இந்தப் பரதேசிகளுக்கு. அதாவது மோடியின் குகை சங்கர மடம் மாதிரி காவி நிறத்தில் இல்லை, கார்ப்பரேட் பாணியில் பணத்தால் மின்னுகிறது என்று நடுத்தர வர்க்கத்தை உசுப்பி விடுகிறார்களாம். இவரைப் போய் மதத்தோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள் என்று தெளிவுபடுத்துகிறது குமுதம் மாமா படை.

ஆனால் மோடியின் அலுவலகத்தில் காவி வாசனையே இல்லை என்பதைக் கேட்டால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் கொஞ்சம் வருத்தப்படுவார்கள். அவர்களைத் தேற்றும் விதமாக மோடியின் மேசை டிராயரில் ஹெட்கேவார் படம் இருக்கிறது, மோடி அதை ரகசியமாக பார்ப்பார் என்றாவது குமுதம் எழுதியிருக்கலாம்.

மோடி வணக்கம் என்று தமிழில் வரவேற்றாராம். ஏன் பெரியார் வாழ்க என்று சொன்னாதாகக் கூட சொல்லுங்களேன்! அவ்வளவு தீவிர தமிழ் வேண்டாம் என்றால் எங்களுடன் மசாலா தோசையை விரும்பிச் சாப்பிட்டார், நாங்கள் கொண்டு சென்ற வெள்ளைப் பணியாரத்தை கேட்டு வாங்கிச் சாப்பிட்டார் என்றெல்லாம் சொல்லி அவரை தமிழுக்கு நெருக்கமாக காட்டுங்களேன். அல்லது ராமாராஜ் மினிஸ்டர் காட்டன் வேட்டியை தட்டாமல் பெற்று கட்டிக் கொண்டார் என்று ஒரு ஃபோட்டோ போட்டால் மயிலாப்பூரும், திருவல்லிக்கேணியும் கிளர்ந்து எழுமல்லவா?

அவரோட குரலும், தோற்றமும் இவர்களை ஈர்த்தாம். அவருடன் பேசும் போதே உற்சாகம் தொற்றிக் கொள்கிறதாம். இத்தகைய ரசனையை காலஞ்சென்ற எஸ்ஏபி செட்டியாரிடமும் பார்க்கலாம். அதாவது தினசரி குமுதம் அலுவலகம் வரும் செட்டியார் அனைவரையும் கூட்டி பகவத் கீதை படித்து விளக்கம் சொல்லி பிரார்த்தனை செய்வாராம். பிறகு டேபிளுக்கு போய் எந்த நடிகைகளின் உடல் எடுப்பாக இருக்கிறது என்று கவர்ச்சி படங்களை ஆய்வு செய்து அட்டைப் படத்திற்கு தெரிவு செய்வாராம். ஆக பகவத் கீதையும் பலான படங்களும் குமுதத்தின் இரு பக்கங்கள் எனும் போது இங்கு காவிப்படைத் தலைவரை குமுதம் உருகி உருகி ரசித்தது ஆச்சரியமல்ல.

மோடியும் இவர்களது பாட்டில் மயங்கி அவசர அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு சுமார் 1.5மணி நேரம் மனம் திறந்து பேசினாராம். சரி என்னவென்று மனம் திறந்திருப்பார்? ஆம், நான்தான் குஜராத் கலவரத்தை உத்தரவு போட்டு நடத்தினேன், இந்துக்களின் மானம் காக்க போலீசு, சங்க குண்டர்களை வைத்து முசுலீம்களைக் கொன்றேன் என்றா பேசியிருப்பார்? இதன்றி மனம் திறத்தல் என்பது என்ன?

அடுத்து மோடியின் நிர்வாகத்தை பலரும் வியந்து பேசுகிறார்களே, அது எப்படி சாத்தியமானது என்று கேட்கிறது குமுதம். மற்றவர்கள் வியந்து பேச வேண்டுமென்றால் பெய்ட் ஜர்னலிசம் இருக்கிறது. அம்பானிக்கும், டாடாவுக்கும் ஆயிரத்தெட்டு சலுகைகள் கொடுத்தால் அவர்களது ஊடக கம்பெனிகளில் கவரேஜ் இயல்பாகவே வருமே! இருந்தும் இந்த சேவை உணர்வு எங்கிருந்து வந்தது என்று மோடியிடம் கேட்கிறார்கள்.

சோ ராமசாமி
சோ ராமசாமி

முதலமைச்சர் பணியெல்லாம் சேவை என்றால் பத்திரிகை பணியெல்லாம் பக்தியா? மோடியும் சீனா போருக்கு சென்ற வீரர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்தேன், பாரத் மாதா கி ஜெய் கோஷம் போட்டேன், பிறகு ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்ந்து சேவை உணர்வைக் கற்றேன் என்கிறார். நாட்டுக்காக ஆண்டைகளால் அனுப்பப்பட்டு சண்டை போட்டு சாகும் ஏழை வீரனெல்லாம் சேவை லிஸ்ட்டில் இல்லை. அந்த வீரனுக்கு தண்ணி அதிகம் கலந்து டீ கொடுத்தவனெல்லாம் சேவைக்காரன் என்றால், சந்தானத்தையும் நாம் மாபெரும் தத்துவஞானி என்று கொண்டாட வேண்டும்.

விவேகானந்தர்தான் மோடிக்கு ரோல் மாடலாம். ஆர்.எஸ்.எஸ் பயிற்சிதான் அடிப்படையாம். பின்னே 2002-ல் திட்டமிட்டு அறிவியல் பூர்வமாக முசுலீம்களை கொல்வதெல்லாம் சாதாரண விசயமா என்ன? இல்லை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மக்கள் சொத்தைக் கொட்டிக் கொடுத்து ஆதரவை விலைக்கு வாங்குவதும் சாதாரண மனிதர்கள் செய்யக்கூடியதா என்ன? இப்படி ஐஸ் ரம்பமாக போகிறது பேட்டி.

மோடியும் நமக்கு வாய்த்த தமிழக ஊடக அடிமைகள் ஜால்ரா அடிப்பதில் திறமையானவர்கள் என்று தொடையை தட்டியிருப்பார். மற்றபடி இவரை உண்மையாக நேர்காணல் செய்ய முயன்றால் கரண் தாப்பர் கேட்ட ஒரு கேளவிக்கே குட்பை சொல்லிவிட்டு கோபமாக எழுந்து சென்றது போலத்தான் நடக்கும். இதிலிருந்தே குமுதம் ஜந்துக்கள் எவ்வளவு திறமையாக பேசியிருப்பார்கள், அல்லது பாடியிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இதனால் குமுதத்தின் நோக்கம் என்ன? நாளைக்கே குமுதம் டிவி, குமுதம் சினிமா, குமுதம் தினசரி என்று வியாபாரத்தை விரிவுபடுத்தினால் ஒரு பிரதமரின் நேரடி ஆதரவு பல வகைகளில் அவசியமில்லையா? அதுவும் மோடியின் தென்னிந்திய குரு சோ, குமுதத்தோடு நெருக்கமான வணிக தொடர்பில் வந்த பிறகு இது ஒரு பெரிய வாய்ப்பில்லையா?

இதனால் என்ன நடக்கும்?

இனி மோடிக்கு ஆதரவாக அரசியல் நடவடிக்கைகளை விமரிசிப்பது என்ற பெயரில் மர்மக் கதைகளை எழுதி தள்ளுவார்கள். அவையெல்லாம் சோ வழியாக மோடிக்கும் போகலாம். குமுதத்திற்கும் பலனளிக்கலாம். ஆர்.எஸ்.எஸ் அம்பிகளோ யாருக்கும் தெரியாத விஜயபாரதம் பத்திரிகையை விட இளமைத்துடிப்புள்ள குமுதம் சங்கத்தின் கருத்துக்களை பேசுகிறது என்று வாய் பிளக்கலாம். ஷாகாக்களிலும் குமுதத்தின் கட்டுரைகள் விவாதிக்கப் படலாம்.

சீ…நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு!

ஏசுவின் மகிமை கருணையிலா கடப்பாரையிலா ?

162

தினசரிகளின் வெள்ளிக்கிழமை மலர்கள் ஆன்மீகத்திற்கும், ஜோசியத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்டிருப்பவை. நேரம் கிடைக்கும் போது இவற்றை கொஞ்சம் சிந்தனையுடன் புரட்டினால் உங்கள் இறை நம்பிக்கை தள்ளாடுவது உறுதி.

இத்தகைய ஆன்மீக மலர்களில் இந்து மதத்திற்கு 90 சதவீதமும், மீதியில் இஸ்லாம், கிறித்தவத்திற்கும் இட ஒதுக்கீடு செய்யப்படும். இதையே நாத்திகத்திற்கும் பின்பற்றினால், ஏன் இந்து மதத்தை மட்டும் அதிகம் விமரிசிக்கிறீர்கள் என்று கேட்பார்கள் நமது அம்பிகள். ஆனால் கடவுள் நம்பிக்கையை கேள்வி கேட்பதில் மத அடையாளங்களுக்கு முக்கியமில்லை. சாரத்தில் எல்லா மதங்களும் இறைவனின் பெயரால் மக்களை தவறாக வழிநடத்துகின்றன.

தினமணி, வெள்ளி மணியில் வி ரூஃபஸ் என்பவர் கடவுளின் சொல் என்ற பகுதியில் ஒரு கதையைச் சொல்கிறார்.

கடவுளின் கோபம்
கடவுளின் கோபம்

பாவங்கள் எப்படிப் பெருகுகின்றன? “தங்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருப்பதால் மன்னர்கள் மக்களை வாட்டி வதைத்தும் கொடுமைகள் செய்தும் தங்கள் நெறிகளில் பிறழ்ந்தும் போகின்றபோது பாவங்கள் பெருகுகின்றன.” என்கிறார் ரூஃபஸ். ஒரு மன்னரின் கொடுமைகளுக்கு அவனிடம் மட்டும்தானே பாவம் பெருக வேண்டும், மக்களிடையே பாவங்கள் பெருக வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஏழை பாவம் செய்தால் அதன் விளைவு அவனோடு மட்டும் போகையில் ஒரு ராஜா செய்தால் மட்டும் அவன் பாவங்களை முழுச் சமூகமும் சுமப்பதில் என்ன அறம் உள்ளது?

பரவாயில்லை, இப்படி பாவங்கள் பெருகும் போது இறைவன் சும்மாயிருக்கவில்லை. உதவி செய்யவே விரும்புகிறான். அதன்படி இறையடியார்களை தேர்வு செய்து அவர்களை இறைவாக்கினர்களாக பதவி உயர்வு கொடுக்கிறான். இறையடியார்களை கடவுளின் ஏஜெண்டுகள் என்றால் இறைவாக்கினரை அந்த ஏஜெண்டுகளின் மெசேஜை சந்தைப்படுத்தும் விளம்பரக் கம்பெனிகளாக அழைக்கலாம். அல்லது இறையடியார்கள் ரிலீசாகப் போகும் திரைப்படம் என்றால் வாக்கினர்களை டீஸர் என்று புரிந்து கொள்ளலாம்.

சரி, இந்த இறைவாக்கினர்களின் பணி என்ன? அவர்கள் பாவம் செய்யும் மன்னனையும், மக்களையும் எச்சரிப்பார்களாம். வேலை வெட்டி இல்லாமல் அந்தப்புரத்தில் குடியிருக்கும் மன்னனையும், ஓடி உழைத்து தேய்ந்து திருவோடாக இருக்கும் மக்களையும் இந்த இறைவாக்கினர்கள் ஒரே மாதிரி எச்சரிப்பதை என்னவென்று சொல்வது? இவ்வளவிற்கும் எந்த நாட்டு மன்ன்னும் மக்களால் ஓட்டு போட்டு தேர்வு செய்யப்படுவதில்லை. அதனால்தான் மன்னராட்சிக்கும், ஜனநாயகம் என்றழைக்கப்படும் மக்களாட்சிக்கும் பாரிய வேறுபாடு உண்டு. இந்த அறிவு கூட இறைவனுக்கு இல்லை என்றால் என்ன செய்வது? மக்களின் விருப்பு-வெறுப்புக்கு அப்பாற்பட்டு ஆயுத வலிமையால் மன்னனாக இருப்பவன் செய்யும் பாவத்திற்கு அந்த பரிதாபத்திற்குரிய மக்கள் என்ன செய்வார்கள? இல்லை மன்னன் பாவம் செய்தால் மக்கள் அனைவரும் தற்கொலை செய்ய வேண்டுமா?

இயேசுவுக்கு டீஸர் வேலை பார்த்தவர்களில் எலியா என்பவர் முக்கியமானவராம். அவருக்கு என்ன முக்கியத்துவம் என்று தெரியவில்லை. ஒருவேளை ஏசு திரைப்படத்தின் டிரெய்லரை ஹெச் டி தொழில் நுட்பத்தில் ஒளிபரப்பியவராக இருக்குமோ? இஸ்ரயேல் மன்னனாக ஆகாபு ஆட்சி செய்த காலத்தில்தான் இந்த எலியா வாழ்ந்தாராம்.

எலியா
இறைவாக்கினர் எலியா

ஆகாபு தீமைகளோடு ஆட்சி செய்த படியால், சினம் கொண்ட எலியா, “நான் பணிபுரியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர் மேல் ஆணை. என் வாக்கினாலன்றி வரும் ஆண்டுகளில் பனியோ, மழையோ பெய்யாது” என்று சாபம் விடுகிறார். இந்த சாபத்தையும் கொஞ்சம் கட்டுடைத்துப் பார்ப்போம். நமது புராணங்களில் உள்ள பார்ப்பன முனிவர்களானாலும் சரி, இஸ்ரவேலின் இறைவாக்கினர்களாக இருந்தாலும் சரி இவர்கள் ஏன் மழை பெய்யக் கூடாது என்று மட்டும் சாபம் விடுகிறார்கள்? உங்கள் நாட்டில் இரண்டு மாதத்திற்கு வெயிலே அடிக்காது, வெறும் இருட்டுதான் என்று ஏன் சாபம் இடவில்லை?

இப்படி சாத்தியமில்லாதவற்றை சாபம் விட்டால் சடுதியில் கடவுளின் இடம் காலியாகி ஏஜெண்டுகளுக்கும் கமிஷன் வராது. எல்லா நாடுகளில் ஏதாவது சில காலங்களிலோ இல்லையோ தொடர்ச்சியாக சில ஆண்டுகளோ மழை பெய்யாமல் இருப்பதும், வறட்சி ஏற்படுவதும் வழக்கம். ஆக இயற்கையாக நடக்கும் இந்த மாற்றங்களைத்தான் ஏஜெண்டுகள் தமது அல்லது இறைவனின் பவர் போல காண்பித்து மக்களை மிரட்டுகிறார்கள்.

இயற்கைக்கு மாறானவற்றை ஏன் இவர்கள் கூறவில்லை? பசித்தவன் உண்பான், உண்டால் மலம் கழியும். இவர்களோ பசித்தவனிடம் அவனுக்கு எதுவும் கிடைக்காது என்பதை உறுதி செய்து விட்டு அவன் மலம் கழிக்க மாட்டான் என்று சாபம் விடுவார்கள். மாறாக இதே சாபத்தை மூன்று வேளை முக்குபவனிடம் விடுவார்களா? மாட்டார்கள். தென்னை மரத்திலிருந்து தேங்காய் கீழேதான் விழும், மேலே போகாது என்ற உண்மைகளை சாபமாக மடை மாற்றி விடுவதற்கெல்லாம் ஒரு ஆண்டிப் பண்டாரம் ஆக்ஸ்ஃபோர்டில் படிக்க வேண்டிய அவசியம் இல்லையே?

நாம் கதைக்கு திரும்புவோம். சாபத்தைக் கேட்ட ஆகாபு சினம் கொண்டு எலியாவைக் கொல்லத் திட்டம் தீட்டினான். இதற்கு திட்டமெல்லாம் எதற்கு என்று தெரியவில்லை. செக்யூரிட்டியிடம் சொன்னால் சடுதியில் சீவி விடுவார். சரி, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல கடவுள் கதைகளிலும் லாஜிக் பார்க்க கூடாது, விட்டுத் தொலைப்போம்.

ஆண்டவனின் கருணையினால் தப்பிய எலியா பயணம் செய்து யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகே தங்கினாராம். அங்கே ஆண்டவன் காகங்களிடம் உணவு கொடுத்து எலியாவைப் பசியாற்றினாராம். கற்பனை செய்யும் புலவர்கள் கொஞ்சம் காஸ்ட்லியாக யோசிக்கக் கூடாதா? இறகு முளைத்த பெரிய யானை பறந்து வந்து பிரியாணியை சப்ளை செய்தது என்று எழுதினால் என்ன பிரச்சினை வந்து விடும்? ஒரு வேளை பாலைவன ஜோர்டானில் காகங்களைத் தவிர வேறு எதையும் இந்தக் கதை எழுதியவர் பார்க்காதிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

பிறகு அந்த கெரீத்து ஓடை வற்றிப் போனதாம். எலியாவுக்கு அடைக்கலம் கொடுத்த இந்த ஓடை ஏன் வற்றிப் போகவேண்டும்? ஒருவேளை எலியா எதாவது சைடு கேப்பில் பாவம் செய்துவிட்டாரா? அப்படி இருக்காது. ஏற்கனவே எலியா விட்ட சாபத்தில் ஆகாபு ஆளும் பகுதிகளெல்லாம் பஞ்சத்தில் இருக்கும் போது அதில் ஏதோ ஒரு பகுதியாக இந்த ஓடை இருக்கலாம். பாருங்கள், இறையடியார்களுக்கு லாஜிக் மீறல் வந்தால் நாமும் உதவி செய்வோம் என்பதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வற்றிப் போன ஓடையில் கவலையுடன் இருந்த எலியாவிடம் ஆண்டவர், “நீ புறப்பட்டுச் சீதோன் பகுதியிலிருக்கும் சாரிபாத்துக்குப் போய் அங்கே தங்கியிரு. அங்கு உணவு அளிக்குமாறு ஒரு கைம்பெண்ணுக்கு கட்டளையிட்டிருக்கிறேன்” என்று கூறினாராம். கைம்பெண் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது எனும் கொடிய வழக்கம் ஏசுவின் காலத்தில் இருந்திருப்பதால்தான் இங்கே கருணைப் பிச்சைக்குரியவராக ஒரு கைம்பெண் வருகிறார்.

கடவுளின் கருணை
கடவுளின் கருணை

எலியாவும் அங்கே போய் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்த அந்த ஏழைப் பெண்ணிடம் தண்ணீரும், அப்பமும் கேட்டிருக்கிறார். தண்ணீர் தருவதற்கு தயாராக இருந்த அந்தப் பெண், “உம் ஆண்டவர் மேல் ஆணை. என்னிடம் அப்பம் ஏதும் இல்லை. பானையில் சிறிதளவு மாவும், கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே உள்ளன. இதோ இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு நானும் என் மகளும் உண்போம். பிறகு உண்பதற்கு வழியில்லாததால் நாங்கள் சாகத்தான் வேண்டும் ” என்று நொந்து போய் சொன்னாராம்.

இங்கே ஒன்றைக் கவனியுங்கள். அந்த பெண் உம் ஆண்டவர் என்றுதான் சொல்லுகிறார், எம் அல்ல. இதிலிருந்தே ஏஜெண்டுகள் தொல்லை தாங்காமல்தான் பாமர மக்கள் கடவுளுக்கு வாழ்வு கொடுக்கிறார்களே அன்றி சொந்த முறையில் அல்ல.

எனினும் எலியா அந்தப் பெண்ணிடம் தனக்கு அப்பம் கொண்டு வந்தால் அவளது ஆப்பச்சட்டியில் மாவு தீரவே தீராது, எண்ணையும் குறையாது என்று ஆசை காட்டுகிறார். அந்தப் பெண்ணும் அப்படியே செய்தபடியால் அடுத்த மழை பெய்யும் வரை அப்பத்திற்கு குறைவில்லாமல் அவரது குடும்பம் உண்டு வாழ்ந்ததாம்.

சரி, அப்பச் சட்டிக்குள், அப்ப மாவுதான் இருக்க வேண்டுமா? பர்கரோ, இறால் பிரியாணியோ, இல்லை சிக்கன் செட்டி நாடோ வைப்பதில் கடவுளுக்கு என்ன செலவு? கொடுத்ததெல்லாம் கொடுத்தவன் கொஞ்சம் காஸ்ட்டிலியான செட்டி நாட்டு ஓட்டலிலிருந்து கொடுக்காமல் அம்மா உணவகத்திலிருந்தா பார்சல் வாங்கி வர வேண்டும்?

சரி, இந்தக் கதையில் இருந்து பெறும் நீதி என்ன?

“என் வார்த்தைக்கு அஞ்சி நடப்போரை நான் கண்ணோக்கிப் பார்ப்பேன் (எசா 66:2) என்ற உறுதிமொழியின்படி மனம் மாறிய அக்கைம்பெண்ணுக்கு ஆண்டவரின் ஆசீர்வாதம் எலியா வழியாகக் கிடைத்தது. அதனால் பஞ்சத்திலிருந்து தப்பித்தனர். ஆனால் எலியாவின் பேச்சை ஆண்டவரின் வாக்காக ஏற்க மறுத்து மனம் திருந்தாத ஆகாபு அரசனும் மக்களும் பஞ்சத்தில் வாடினர். கவலையில் மூழ்கினர்.”

இந்த கைம்பெண்ணைப் போன்றவர்கள்தானே ஆகாபு ஆட்சி செய்த நாட்டில் வாழ்ந்த மக்களும். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள், ரூஃபஸ் அவர்களே? ஒரு மன்னனோடு தனிப்பட்ட வாய்க்கால் வரப்பு, வட்டி, குட்டி பிரச்சினை இருந்தால் அதை வைத்து ஒரு சமூகத்தை தண்டிப்பது எப்படி சரியாகும்?

மேலும் எனக்கு ஒரு அப்பம் கொடுத்தால் உழைக்காமல் உங்கள் வீட்டுப் பானையில் அப்ப மாவு கிடைத்துக் கொண்டிருக்கும் என்று சொல்லுவதை எந்த உழைப்பாளி கேட்பான்? எலியா கேட்டால் பஞ்சை பராரிகள் கூட ஏதாவது தங்களால் இயன்ற தானம் கொடுப்பார்கள். ஆனால் அந்த தானத்தை வைத்து அவர்களை தனவந்தன் ஆக்குவேன் என்று எம்எல்எம் ஆட்கள் போல ஏமாற்றுவது பெரும் மோசடியில்லையா?

முக்கியமாக இந்தக் கதையின் நீதி என்னவென்றால் “என் வார்த்தைக்கு அஞ்சி நடப்போரை நான் கண்ணோக்கி பார்ப்பேன், இல்லையேல் காலால் மிதிப்பேன்” என்பதுதான். இதைத்தான் கடப்பாரை மகிமை என்கிறோம். கடவுள் தன்னிடமுள்ள கருணையினால் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கவில்லை. ஒரு தேர்ந்த பாசிஸ்டைப் போல கடப்பாரையைக் கொண்டு அச்சுறுத்தியே பக்தியை ஏற்கச் செய்கிறான். அப்படி தன் வார்த்தையைக் கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்று பொய்யான வார்த்தைகள் சொல்லி ஊழல்படுத்தவும் செய்கிறான்.

ஆக ஊழல், பாசிசம் எனும் இரண்டு பக்கங்கள்தான் கடவுள் எனும் நாணயத்தின் ஒளியை பரவச் செய்கின்றன. கண்ணைக் குருடாக்கும் இந்த ஒளியினை மதியால் அழிப்பதுதான் வாழ்க்கைப் பிரச்சினைகளை புரிந்து கொண்டு போராடுவதற்கு வழி ஏற்படுத்தும். பக்தர்கள் யோசிப்பார்களா?

பொறியியல் படித்த அப்பாவிகளின் கவனத்திற்கு !

11

சோக், எனது நண்பரின் மகன் இந்த ஆண்டு பிஈ கம்ப்யூட்டர் சைன்ஸ் முடித்திருக்கிறான்.

கல்லூரியில் வளாக நேர்முகத்துக்கு (கேம்பஸ் இன்டர்வியூ) எந்த நிறுவனமும் வரவில்லையாம். அதனால் வெளியில் வேலை தேடிக் கொண்டிருக்கிறான். “அப்பாவுக்கு தெரிந்த ஒரு பிபிஓ கம்பெனியில் திங்கள் கிழமை வரச் சொல்லியிருக்காங்க.” என்றான். “ஏற்கனவே நான் ராத்திரி எல்லாம் கேம்ஸ் விளையாடி விட்டு காலையில் 3 மணி, 4 மணிக்குத்தான் தூங்கப் போறேன். இந்த கம்பெனியில வேலை கெடைச்சா, சாயங்காலம் 6 மணிக்கு வேலைக்கு போயிட்டு காலையில 6 மணிக்கு வீட்டுக்கு வரலாம். அதுக்கப்புறம் தூங்கி எழுந்து ஏதாவது சாப்ட்வேர் வேலை தேடப் போகலாம். வீட்டு வாசல்லையே வண்டில ஏத்திட்டுப் போய் திரும்பி கொண்டு விட்டுடுவாங்களாம்”

வேலைக்கு காத்திருக்கும் பட்டதாரிகள்
வேலைக்கு காத்திருக்கும் பட்டதாரிகள்

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெறும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காகியிருக்கிறது. 2006-07ம் ஆண்டு இந்தியா முழுவதும் 1,511 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 5.5 லட்சம் எஞ்சினியர்கள் பட்டம் பெற்று வெளி வந்தார்கள். $110 பில்லியன் (ரூ 6 லட்சம் கோடி) மதிப்பிலான ஐடி துறைக்கு லட்சோப லட்சம் எஞ்சினியர்கள் தேவை என்ற நோக்கத்தில் கல்லூரிகள் புற்றீசலாக பெருகியதைத் தொடர்ந்து இந்த ஆண்டு 3000-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவந்திருக்கிறார்கள்.

உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு ஐடி துறையிலும் உற்பத்தித் துறையிலும் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும் சில ஆயிரக்கணக்கான இடங்களுக்கு பல லட்சம் பட்டதாரிகள் போட்டி போடுகின்றனர்.

வளாக நேர்முகங்கள் (கேம்பஸ் இன்டர்வியூ) பெருமளவு குறைந்திருக்கின்றன. வழக்கமாக 100-க்கு 100 மாணவர்களுக்கு வேலை கிடைத்து விடும் ஐஐடி போன்ற முன்னணி நிறுவனங்களிலேயே பல மாணவர்கள் வேலை இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியேறுகிறார்கள். 2012-13 கல்வி ஆண்டில் மும்பை ஐஐடியில் கல்லூரி வளாக நேர்முகத்தில் கலந்து கொண்ட 1,501 மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு வேலை கிடைக்கவில்லை. சென்ற ஆண்டு நான்கில் ஒரு பகுதியினருக்கு வேலை கிடைக்கவில்லை.

ஐடி நிறுவனங்கள், ஊழியர்களின் எண்ணிக்கையை காட்டி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த போது, பொறியியலில் எந்த பிரிவாயிருந்தாலும் மாணவர்களை ஆயிரக்கணக்கில் வேலைக்கு எடுத்துக் கொண்டு போனார்கள். அந்த நிலை மாறி, இப்போது பல கல்லூரிகளில் வடிகட்டும் தேர்வுகளை நடத்தி அதில் தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு மட்டும்தான் நேர்முகத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. மொத்த மாணவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அமிட்டி கல்லூரியின் டில்லி வளாகத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு எண்ணிக்கையில் 40 சதவீதம் ஆக குறைந்திருக்கிறது. வேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாக குறைந்தது.

சேரும் தேதி கேட்டு போராட்டம்
சேரும் தேதி கேட்டு போராட்டம்

கூடவே, கேம்பஸ் இன்டர்வியூவில் வேலைக்கு எடுப்பதாக வாக்கு கொடுக்கும் மாணவர்கள் சேரும் தேதியை நிறுவனங்கள் தாமதப்படுத்துகின்றன. சேரும் தேதிகள் நிறுவனத்தின் தேவையைப் பொறுத்து 6 மாதம் முதல் ஆண்டு கணக்கில் கூட தள்ளிப் போடப்படுகின்றன.

டெல்லி மகாராஜா சூரத்மால் கல்லூரியில் மின்னணுவியல் பிரிவில் பட்டம் பெற்ற 23 வயதாகும் லவீன் பக்ஷிக்கு இந்தியாவின் நான்காவது பெரிய மென்பொருள் நிறுவனமான எச்சிஎல் நிறுவனத்திடமிருந்து வேலை உத்தரவு பெற்ற போது இருந்த மகிழ்ச்சி, சேரும் தேதிக்காக 2 ஆண்டுகள் காத்திருந்த பிறகு இப்போது சோர்வாகவும், மன அழுத்தமாகவும், கோபமாகவும் மாறியுள்ளது. அவரைப் போலவே 6,000 மாணவர்கள் இப்போது எச்.சி.எல் மற்றும் பிற ஐடி நிறுவனங்களில் சேருவதற்கான அழைப்பு வராமல் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் முன்னணி ஐடி நிறுவனங்கள், தமது வளர்ச்சி மற்றும் லாப வீதத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஊழியர்களில் பலரை திறமை சரியில்லை, சரியாக வேலை செய்வதில்லை என்று பொய்யான காரணம் காட்டி வேலையை விட்டு நீக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு காக்னிசன்ட் நிறுவனம் 2000 ஊழியர்களை நீக்கப் போகிறது.

புதிதாக வரும் பட்டதாரிகளோடு, கடந்த ஆண்டுகளில் வேலை கிடைக்காதவர்கள், நிறுவனங்களிலிருந்து கழற்றி விடப்படுபவர்கள் என்று லட்சக்கணக்கான ஐடி ஊழியர்கள் வேலைக்காக நிறுவனங்களை மொய்க்கிறார்கள்.

வேலை வாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, மென்பொருள் ஊழியர்களின் சமூக அந்தஸ்தை பாதித்திருக்கிறது. உதாரணமாக திருமண பொருத்தம் பார்க்கும் இணைய தளத்தில் ஐடி ஊழியர்கள் மீதான ஆர்வம் குறைந்திருக்கிறது. “ஐடி துறையில் வேலை செய்யும் வெளிநாட்டு இந்தியர்கள், அல்லது வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கூடுதல் மதிப்பு பெருமளவு குறைந்திருக்கிறது” என்கிறார் பாரத் மேட்ரிமோனி டாட் காம் தளத்தின் தலைமை நிர்வாக அலுவலர் முருகவேல் ஜானகிராமன்.

ஒன்றரை ஆண்டுகளில் திருமணச் சந்தையில் தங்கச் சுரங்கமாக இருந்த வடக்கு பெங்களூரைச் சேர்ந்த 30 வயதான விஷ்ணுவின் புரொபைல் இப்போது ஒதுக்கப்படுவதாக ஆகியிருக்கிறது. 2011 தொடக்கத்தில் ஆன்-சைட் ஒப்பந்தத்தில் அவர் ஜெர்மனிக்கு போவதற்கு முன்பு வந்த பல திருமண சம்பந்தங்களை அவரது அம்மா லலிதா ஐயர் நிராகரித்தார். இப்போது ஜெர்மனியிலிருந்து திரும்பிய பிறகு, அமெரிக்கா போவதற்கான H-1பி விசா நிராகரிக்கப்பட்ட பிறகு, அவரது சம்பள உயர்வு முடக்கப்பட்ட பிறகு விஷ்ணு முட்டுச்சந்தில் நிற்கிறார்.

jobபல மாணவர்கள் பிற துறைகளிலும், அரசு வேலைகளிலும் சேருவதற்கு திட்டமிடுகிறார்கள். கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் நான்காவது பருவத்தில் படிக்கும் பிரஷஷ்தி பிரபாகர் என்ற மாணவி மென்பொருள் துறையில் சேருவதற்கான ஆர்வம் வடிந்து விட்டதாக சொல்கிறார். பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி அரசு பணியில் சேர முயற்சிக்கப் போகிறாராம்.

வேலை கிடைக்காமல், கடன் சுமையை சமாளிக்க முடியாமல் ஒரு சிலர் கிரிமினல் வேலைகளில் இறங்குகின்றனர். மும்பையின் தானே புறநகர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் ரெட்டி என்ற சிவில் எஞ்சினியர் தனது குடும்ப செலவுகளை சமாளிக்க செயின் அறுத்தலில் இறங்கியிருக்கிறார் என்ற செய்தி ஊடகங்களில் வந்திருக்கிறது. அதே போல, அவுரங்காபாதைச் சேர்ந்த இன்னொரு எஞ்சினியர் கார் திருடுதல் மூலம் பணம் ஈட்ட முயற்சித்திருக்கிறார்.

முதலாளித்துவ நிபுணர்கள் ‘பட்டதாரிகளின் எண்ணிக்கைதான் அதிகம், தரம் சரியில்லை, சந்தைக்கு தேவைப்படும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், மேல் படிப்பு படிக்க வேண்டும்’ என்று இதற்கு தீர்வுகள் சொல்கிறார்கள். “இந்த துறையில் நுழைய விரும்பும் ஊழியர்கள் தங்களது திறமைகளை பல மடங்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலை வாய்ப்புகள் இருக்கும், ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான பேர்தான் தேவை” என்கிறார் முன்னாள் ஜென்பேக்ட் நிறுவனத்தின் தலைவர் பாசின்.

அதாவது, ஏற்கனவே நிலத்தை விற்றோ, நகையை அடமானம் வைத்தோ, வங்கிக் கடன் மூலமோ சில லட்சங்கள் செலவழித்து பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்கள் இன்னும் சில லட்சங்களை தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொடுக்க தயாராகிக் கொள்ள வேண்டுமாம். அதற்குப் பிறகும் குறைவான எண்ணிக்கையில்தான் ஆள் எடுப்பார்களாம்.

இந்தியாவின் சுய பொருளாதாரத்திற்கு, என்ன படிப்பு தேவை, எத்தனை எஞ்சினியர்கள் தேவை, எத்தனை மேலாண்மை ஊழியர்கள் தேவை என்று திட்டமிடாமல், முதலாளித்துவ சந்தைக்கு தேவையான கல்வி, கல்லூரிகளை புற்றீசல் போல ஆரம்பித்து, மந்தைகளைப் போல மாணவர்களை உபரியாக இறக்கி, வேலையற்ற பட்டாளத்தை வைத்துக் கொண்டு மலிவான ஊதியத்தில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கிறது தனியார் மயம். தங்களது இலாபம், சுரண்டலுக்கேற்ற வகையிலேயே நாட்டில் கல்வி, பொருளாதாரம், அரசு அனைத்தையும் வடிவமைக்க வேண்டும் என்று கல்வித் துறையை தனியார் மய சீரழிவுக்கு ஆளாக்கியவர்கள் இதே முதலாளித்துவ நிபுணர்கள்தான். முதலாளிகளின் ஆள் தேவைகளுக்கு உபரி ஊழியர் பட்டாளத்தை உருவாக்கி அவர்களுக்கான நரகத்தை படைத்திருக்கிறது, தாராள மய, தனியார் மய, உலக மய கல்விக் கொள்கை.

– அப்துல்

மேலும் படிக்க

வங்கதேசம் : உலகமயம் நிகழ்த்திய படுகொலை !

1

டந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி, வங்கதேச தொழிலாளி வர்க்கம் ஒரு மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதலை – முதலாளித்துவ பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டது. அன்றுதான், டாக்கா நகரில் 8 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஆயிரத்துக்கும் அதிகமான இளம் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்; 300-க்கும் அதிகமானவர்கள் கை-கால்களை இழந்தனர்.

பங்களேதேஷ்
ஏழை நாட்டுத் தொழிலாளர்களைப் பலிகொள்ளும் அமெரிக்க டாலரின் கொடூரம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி மாண்டு போன இளம் தொழிலாளர்கள்.

வங்கதேசத் தலைநகர் டாக்காவின் புறநகர்ப் பகுதியில், வணிக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடும் “ஷாப்பிங் மாலு”க்காகக் கட்டப்பட்ட ‘ராணா பிளாசா’ என்ற கட்டிடம், ஆயத்த ஆடை உற்பத்தித் தொழிலகமாக மாற்றப்பட்டுச் செயல்பட்டு வந்தது. 5,000-த்திற்கும் அதிகமான தொழிலாளர்கள், அந்தக் கட்டிடத்தில் வேலை செய்து வந்தனர். நெகிழ்வான நிலத்தில் கட்டப்பட்ட அந்தக் கட்டிடம், ஒவ்வொரு தளத்திலும் மிகப்பெரும் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இயங்கி வந்தது.

ஏப்ரல் 23-ஆம் தேதியன்று அந்தக் கட்டிடத்தின் மூன்றாவது தளம் பிளந்து தொங்கிவிட, போலீசார் கட்டிடத்திற்கு சீல் வைத்தனர். ஆனால், மறுநாளே அதே கட்டிடத்தில் வேலை செய்யும்படி தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். மறுத்தால், அந்த மாதம் முழுவதும் வேலை செய்ததற்கான சம்பளம் கிடைக்காது என நிர்வாகம் மிரட்டியதால், வேறுவழியின்றித் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். காலை நேரத்தில் மின்தடை ஏற்பட, ஜெனரேட்டரை பயன்படுத்தியுள்ளனர். அதன் அதிர்ச்சியைத் தொடர்ந்து ஒரு சில நிமிடங்களில் மொத்தக் கட்டிடமுமே இடிந்து விழுந்துள்ளது.

நொறுங்கிய கட்டிடம்
ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைப் பலிகொண்ட முதலாளித்துவப் பயங்கரவாதத்தின் கோரம் : சீட்டுக்கட்டு சரிந்ததைப் போல கற்குவியலாக நொறுங்கிப் போன 8 மாடிக் கட்டிடம்.

இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களின் கூக்குரல் கேட்டு, அக்கம் பக்கத்துக் கட்டிடங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் ஓடி வந்தபோது, அவர்களை வெளியே செல்ல விடாமல் அந்தந்த நிறுவனங்கள் தடுத்து நிறுத்தின. அதையும் மீறித்தான் தொழிலாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சாவகாசமாக இராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அதற்குள் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட, அவர்களது பிணங்களைத் தோண்டியெடுக்க இராணுவம் 20 நாட்களுக்கும் மேல் எடுத்துக் கொண்டது.

ஆயத்த ஆடை ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் வங்கதேசம், அந்தத் தொழிற்கூடங்களில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையிலும் முன்னணியில் இருக்கிறது. தற்போதைய இந்த விபத்து ஏற்படுவதற்குச் சில மாதங்கள் முன்புதான் ‘தஸ் ரீன்’ என்ற நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 317 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு முன்னரும் பலமுறை தீவிபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் இதுவரை ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொருமுறை விபத்து ஏற்படும்போதும் வங்கதேச அரசு சில நிறுவனங்களை மூடி சீல் வைக்கும் சடங்கை நடத்தும். தற்போதுகூட அந்நாட்டு அரசு ஒன்பது நிறுவனங்களை மூடி சீல் வைத்துள்ளது.

அங்கே தொடர்ந்து நடைபெற்றுவரும் விபத்துகளுக்கு, உலக ஆயத்த ஆடை தொழிலைக் கட்டுப்படுத்தும் வால்மார்ட், டெஸ்கோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் இலாப வெறிதான் காரணமாக இருக்கிறது. இந்த ஏகபோக நிறுவனங்களின் இலாப இலக்குகள் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அவர்களது லாப இலக்கை அடைய அவர்கள் மேற்கொள்ளும் ஒரே வழிமுறை, உற்பத்திச் செலவுகளைக் குறைக்கும்படி அவர்களுக்குத் துணிகளை ஏற்றுமதி செய்யும் ஏழைநாட்டு முதலாளிகளை நிர்பந்திப்பதுதான்.

தொழிலாளர் போராட்டம்
விரிசல் விழுந்த கட்டிடங்களில் பாதுகாப்பு ஏதுமின்றிப் பணிபுரிய நிர்ப்பந்திக்கும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை எதிர்த்து டாக்கா அருகே அஷூலியாவில் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் திரண்டு நடத்தும் சாலை மறியல் – ஆர்ப்பாட்டம்.

இதன் காரணமாக வங்கதேசத்து முதலாளிகள் தொழிலாளர்களது கூலியைக் குறைப்பது, வேலை நேரத்தை அதிகரிப்பது, அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தர மறுப்பது, தொழிலாளர்களது பாதுகாப்புக்கான நிதியைக் குறைப்பது போன்றவற்றின் மூலம் உற்பத்திச் செலவுகளைக் குறைத்து தங்களது ஒப்பந்தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். அது மட்டுமன்றி, ஆண் தொழிலாளர்களை விட பெண் தொழிலாளர்களுக்குக் கூலி குறைவு என்பதால், ஆயத்த ஆடை உற்பத்தி முழுவதிலும் பெண்களையே அதிகமாக ஈடுபடுத்தி வருகின்றனர்.

இத்தனையையும் செய்து ஓராண்டுக்கு துணிகளை ஏற்றுமதி செய்தாலும், அடுத்த ஆண்டுக்கான ஒப்பந்தங்களை இந்த முதலாளிகள் எளிதில் பெற்றுவிட முடியாது. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டின் இலாப விகிதத்தை விடப் பல மடங்கு அதிக இலாப விகிதத்தை எதிர்பார்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள், உற்பத்திச் செலவுகளை மேலும் மேலும் குறைக்கக் கோருகின்றன. இதற்குமேல் உற்பத்திச் செலவுகளைக் குறைக்க முடியாது எனும் நிலை வரும்போது, வங்கதேசத்தைவிடக் கீழான வாழ்க்கை நிலைமைகளைக் கொண்ட ஏழை நாடுகளைத் தேடிச் சென்று விடுகின்றனர்.

தற்போது இடிந்து விழுந்த கட்டிடத்தில் ஐந்து ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வந்தன. அவற்றில் உற்பத்தியான ஆடைகள் டெஸ்கோ, வால்மார்ட் உள்ளிட்ட பிரபல பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே இந்த விபத்தில் பலியானவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இப்பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள்தான் இழப்பீடு தரவேண்டும் என வங்கதேசத்து தொழிற்சங்கங்கள் கோருகின்றன. ஆனால், ஆடை தயாரித்துத் தரும் வங்கதேச நிறுவனங்கள் வேறு, தாங்கள் வேறு என்று சட்டவாதம் பேசி, கிஞ்சித்தும் மனிதாபிமானமின்றி நடந்து கொள்ளும் இப்பன்னாட்டு நிறுவனங்கள், இழப்பீடு தர மறுத்து வருகின்றன.

பன்னாட்டு நிறுவனங்களின் இந்தப் பகற்கொள்ளைக்கு ஏழை நாடுகளின் அரசுகளும் துணை போகின்றன. ஒட்டுண்ணியைப் போல நாட்டின் இயற்கை வளத்தையும், தொழிலாளர்களின் இரத்தத்தையும் உறிஞ்சிக் கொழுக்கும் இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களை அடித்து விரட்டுவதன் மூலம்தான் அவற்றின் கோரப்பிடியிலிருந்து ஏழை நாடுகளின் தொழிலாளி வர்க்கம் தப்பிக்க முடியும்; இதுபோன்ற விபத்துக்களையும் உயிரிழப்புகளையும் தடுக்கவும் முடியும்.

– அன்பு
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________

ஏதிலி என்பது எங்கள் குற்றமா ?

4

09-uravu-1கதிகள் மனச்சுமை
தாங்கிடு நிலமே! – எங்கள்
தலைமுறைக் கண்ணீர்
தாங்கிடு கடலே…

எங்கள் சோகத்தின் ஆழம்
சுரந்திடு ஊற்றே!
ஈழ அகதிகள் வேலியை
முறித்திடு காற்றே…

முடங்கிய வாழ்வின்
வதைபடு வெம்மையில்
கதிரே நீயும் கருகாதே…
ஏதிலி என்பது
எங்கள் குற்றமா?
ஏன் முகாமிற்குள் அடைபட்டோம்?
நின்று பதில் சொல்!
நிலவே நீயும் நழுவாதே…

கூடு திரும்பும்
பறவைக்கூட்டம் பார்க்கும் போதெலாம்
நாடு திரும்பும் ஏக்கம்
எங்களை வாட்டும்!

சிறகின் ஆசை
வானை அளக்கும்…
சின்ன விதையின் ஆசை
மண்ணில் முளைக்கும்…
நீரின் ஆசை
நிலத்தின் தாகம் சேரும்…
வேரின் ஆசை
இலை, தழையாய் மாறும்…
எங்கள் வாழ்வின் ஆசை
என்று தாய்மண் சேரும்?

புகலிடம் என்றுதான்
பிழைத்து வந்தோம்
இது எம்மை
இகழிடம் எனத் தெரிந்திருந்தால்,
இப்படி…
இந்திய நடைபிணமாய் சாவதற்கு
ஈழப்பிணமாய் வீழ்ந்திருப்போம்…
தாழப் பறக்கும்
தட்டானுக்கும்
வாழ ஆசை…
ஈழ அகதிகள்
எங்களுக்குக் கூடாதா?

நாங்கள் குடியிருப்பது
கூரையில்…
கொன்று போடும் சவக்கிடங்கு…
எங்களைத் தகிக்க வைப்பது
கொளுத்தும் கோடை  அல்ல,
குற்றவாளியாக்கி — எந்நேரமும்
எம்மீது குறுகுறுக்கும்
போலீசின் சுடுபார்வை!

அரசே சந்தேகித்தால்
யார் தருவார் வேலை?
அத்துக் கூலியாய்
அலையும் நாங்கள்
ஆறு மணிக்குள் அடைபட வேண்டுமாம்
கேம்ப்புக்குள்!
கொடிய பாம்புக்கும் உண்டோ
இப்படியொரு வாழ்நிலை!

பாம்புக் கடிக்கோ,
பாழும் நோய்க்கோ
மருத்துவம் இல்லை…
இறந்தவர் பெயரை
எழுதிப் பழகும்
எம் பிள்ளைகள்
மேற்படிப்புக்கு கல்வி உரிமையுமில்லை.

ஒரு இழவுக்குப் போகவும்
அனுமதி வாங்க
ஆயிரம் தொல்லை…
ஈழமே சுடுகாடு
எதற்குத் தனியே? என
எங்களைப் புதைக்க
போதிய இடமுமில்லை…

09-uravu-2நாளை நாளை என்று
நாடு போக நம்பியிருந்தோம்.
அதையும் கெடுத்தது இந்தியா
என்பது அனுபவமானதனால்,
அஞ்சுகிறோம்.
ராஜபக்சேவை விடவும் கொடியவர்கள்
நடமாடும் அரசு இது.
உரிமையில்லா வாழ்வு
சாவினும் கொடியதால்,
உயிர் பற்றிக் கவலையின்றி
ஓடுகிறோம் தப்பித்து கடலுக்கு.

ஈழப்பிணங்களை வைத்து
அரசியல் வாழும்
ஈழம் வாங்குவதாய்
தேர்தல் அணிகள் சேரும்.
மாவீரர்களே…
முதலில்
முகாமிலிருந்து எங்களை மீட்க
முடியுமா உங்களால்?

சனத்தோடு சேர்ந்து வாழ
சம்மதிக்காத
உங்கள் சட்டங்களால்
இனத்தை மீட்கப் போவதாய்
இன்னுமா கழுத்தறுப்பது?
எங்கள் முழு நிலத்தையும்
பங்கு போட
அங்கு சேர்ந்து கொள்ளும்
முதலாளிகள்…
இங்கே
கணவன், மனைவி, பிள்ளைகளும்
கலந்து வாழ மறுக்கும்
முள்வேலி முகாம்கள்…

எங்கள் உரிமை நிலத்தில்
எம்.ஆர்.எஃப், டி.வி.எஸ் டயரின்
வக்கிரப்பதிவுகள்..
சகலத்தையும் பிடுங்கிக்கொண்டு
சந்தேகக் கேசுகளாய்
எஞ்சியிருக்கும் எங்களிடம்
கைரேகைப்பதிவுகள்…

எங்கள் மூச்சுக்காற்றில்
உங்கள் ரிலையன்ஸ்,
ஏர்டெல்லின் ஆக்கிரமிப்புகள்…
இங்கே முள்வேலிக்குள்
நாங்கள் மூச்சு விடவும்
விதிமுறைகள்!

எம் வயல்வெளிக் காற்றின்
வாசம் இழந்து…
பனை மர நிழலின்
பாசம் இழந்து…
கண்காணாத தூரத்தில்
எங்கள் காந்தள் மலரின்
நிறமிழந்து…
புல் இழந்து… பூ இழந்து
புழங்கும் உறவுகளின்
சொல் இழந்து…
கல் என இறுகிய
இதயம் சூழவோ
கடைசியில் இங்கு வந்தோம்!

முள்வேலி மேல்
காய்ந்து துடிப்பது பழந்துணியல்ல,
கந்தலாண
எங்கள் இதயம்.

உழைக்கும் உறவுகளே…
ரத்தத்தின் நிறம் மட்டுமல்ல
நம் வர்க்கத்தின் நிறமும்
சிவப்புதான்
புலமிழந்து… நிலமிழந்து
வளமிழந்தது
ஈழ அகதிகள் மட்டுமா?
உலகமயத்தின்
கொத்துக்குண்டுகளால்…
புலமிழந்து நீங்களும் கூட
அகதிகளாக தேசமெங்கும்.

நாட்டை முன்னேற்றுவதாய்
நடக்கும் போரில்
நிலங்களை இழந்து
ஏதிலிகளாய்…
அடைபட்டுக் கிடப்பது
நாம் அனைவரும் தான்.

வன்பறிப்புக்குள்ளான
வன்னி நிலமும்…
அன்னியக் கம்பெனியால்
ஆக்கிரமிக்கப்பட்ட
சென்னை நிலமும்…
வடிவத்தில் வேறு…
வர்க்கத்தில் ஒன்று!

பேரினவாதத்தால் பறிக்கப்பட்ட
எம் பிள்ளைகள் கல்வியும்,
தனியார்மயத்தால்
பறிக்கப்பட்ட
உங்கள் பிள்ளைகள் கல்வியும்,
பாடத்திட்டத்தால் வேறு
பறிக்கப்பட்டதில் ஒன்று!

ராணுவத்தால் குதறப்படும்
எம் பெண்களின் தசையும்,
மூலதனத்தால் கழிக்கப்படும்
உங்கள் பெண்களின் தசையும்,
கருவிகளால் வேறு,
ஒடுக்கம் வர்க்கத்தால் ஒன்று.

எத்தனையோ பேச
எங்களுக்கும் ஆசை…
இடையில்
முள்வேலி முறிந்தால்
இணையலாம்
வர்க்கமாய்ப் பேச!

– துரை. சண்முகம்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________

7 கோடி ரூபாயை மறைக்கும் புதிய தலைமுறை டிவி !

22

டந்த 18-ம் தேதி சென்னை, திருச்சி, டெல்லி, காசியாபாத், சோனேபேட் (அரியானா), பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள எஸ்ஆர்எம் குழும அலுவலகங்கள், கல்லூரிகள், ஊடக, திரைப்பட நிறுவனங்கள் மற்றும் பச்சமுத்து குடும்பத்தினரின் வீடுகளில் 250 வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்ற சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பச்சமுத்து
பச்சமுத்து

இந்த நடவடிக்கைகளின்போது, ரூ.6.45 கோடி ரொக்க பணமும் நன்கொடை வாங்கிய ஆவணங்கள், செலவு அதிகரித்து காட்டப்பட்ட பதிவுகள், அறக்கட்டளை பணத்தை வேறு இனங்களுக்கு திருப்பிவிடப்பட்ட ஆவணங்கள் சிக்கின. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் எஸ்ஆர்எம் பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து, ரூ 6.45 கோடி பணம் வேந்தர் மூவீஸ் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டது. அந்த நிறுவனம் அவரது கட்சிக்காரர்களால் அவர் பெயரில் நடத்தப்படுவது, அவருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

தன் மகளுக்கு எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்குவதற்கு ரூ 30 லட்சம் நன்கொடை கொடுத்ததாக ஒரு தந்தை கொடுத்த புகார் மீது மத்திய புலனாய்வு ஆணையம் கடந்த மார்ச் மாதம் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து, ‘இப்படி கணக்கில் காட்டாமல் நன்கொடை வாங்கினால் அதற்கு வருமான வரி கட்டியிருக்க மாட்டார்களே’ என்று நான்கு மாதங்கள் கழித்து புரிந்து கொண்ட வருமான வரித் துறை இவ்வளவு ‘வேகமான’ இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

சாதாரண பள்ளி ஆசிரியராக இருந்த பச்சமுத்து தனது குடும்ப உறுப்பினர்களை அறங்காவலர்களாக கொண்ட அறக்கட்டளை மூலம் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமாக 5 வளாகங்களில் செயல்படும் 21 கல்லூரிகளையும், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி பத்திரிகைகளையும், புதிய தலைமுறை தொலைக்காட்சியையும், வேந்தர் மூவீஸ் திரைப்பட நிறுவனத்தையும் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக இதைப் பற்றி விசாரணை நடத்தவோ, தேடுதல் நடவடிக்கை எடுக்கவோ வருமான வரித்துறையின் ஆய்வாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தோன்றவில்லை.

எஸ்ஆர்எம் வடபழனி வளாகம்
எஸ்ஆர்எம் வடபழனி வளாகம்

1969-ம் ஆண்டு சென்னை, மாம்பலத்தில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிரைமரி ஸ்கூல் மூலம் கல்விச் சேவையை ஆரம்பித்தார் பள்ளி ஆசிரியராக இருந்த பச்சமுத்து. இன்றைக்கு காட்டாங்கொளத்தூர் ஏரியை ஆக்கிரமித்து உருவாகிய 300 ஏக்கர் வளாகம், ராமாபுரம் ஏரியை ஆக்கிரமித்து உருவாக்கிய 25 ஏக்கர் வளாகம், வடபழனியின் மையப்பகுதியில் அமைந்துள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வளாகம், 2008-ம் ஆண்டு திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள இருங்களூரில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, டெல்லி-மீரட் நெடுஞ்சாலையில் மோதி நகர் வளாகம் ஆகியவை எஸ்ஆர்எம் கல்விக் குழுமத்துக்கு சொந்தமாக உள்ளன.

எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் 80% மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிறது அதன் இணையதளம். நிகர் நிலைப் பல்கலைக் கழகமான எஸ்ஆர்எம் தனது கல்லூரிகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான நுழைவுத் தேர்வை தானே நடத்துகிறது. அதில் அவர்களே ‘உருவாக்கும்’ தர வரிசைப்படி மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

‘தர’ வரிசை எண்ணைப் பொறுத்து நன்கொடை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. கல்விக் கட்டணம், பேருந்து கட்டணம், தங்கும் விடுதி கட்டணம் போன்றவற்றுக்கு கட்டண பட்டியல் இருந்தாலும் எந்த படிப்புக்கு எவ்வளவு நன்கொடை என்று அதிகாரபூர்வ பட்டியல் இல்லை. மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக நன்கொடை வாங்குவது சட்ட விரோதமானது. இருந்தாலும் ஒரு பொறியியல் சீட்டுக்கு ரூ 20 லட்சம் வரை, மெடிக்கல் சீட்டுக்கு ரூ 80 லட்சம் வரை, எம்.பி.ஏ. சீட்டுக்கு ரூ 15 லட்சம் வரை என்று சீட்டுகள் ஏலம் விடப்படுகின்றன. யாரிடம் எவ்வளவு நன்கொடை வாங்குவது என்பதை பச்சமுத்து குடும்பத்தினர் மட்டுமே தீர்மானிக்கின்றனர். எஸ்ஆர்எம்மில் குறைந்த செலவில் இடம் வாங்கித் தருவதாக வாக்களிக்கும் ஏஜென்டுகள் பல வட இந்திய நகரங்களில் முளைத்திருக்கின்றனர்.

நாடெங்கிலும் உள்ள உயர் நடுத்தர, நடுத்தர வர்க்கத்தினர் சொத்துக்களை விற்று, நகையை அடமானம் வைத்து பணத்தை கொண்டு கொடுத்து, பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ஒரு துண்டுச் சீட்டை வாங்கிக் கொண்டு தமது குழந்தைகளை படிக்க சேர்க்கிறார்கள். நன்கொடைக்கு மேல் கட்ட வேண்டிய கல்விக் கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும் நான்கு வருடத்திற்கு கல்விக் கட்டணமும் மற்ற செலவுகளும் சேர்த்து ரூ 4 முதல் ரூ 6 லட்சம் முதலீடாக போட வேண்டியிருக்கிறது. மருத்துவக் கல்லூரியிலோ இதனை விடவும் லட்சங்களின் எண்ணிக்கை கூடுகிறது.

புதிய தலைமுறை தொலைக்காட்சிஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,000 மாணவர்களை பல்வேறு படிப்புகளில் சேர்த்துக் கொள்ளும் எஸ்ஆர்எம் குழுமம் சேர்க்கை காலங்களில் மட்டும் சராசரியாக குறைந்தது ரூ 200 கோடி கருப்பு பணத்தை கையாளுகிறது என்று மதிப்பிடலாம். இந்தப் பணத்தை திரட்டிக் கொண்டு வரும் பெற்றோர்களும் சரி, அதை வாங்கி பத்திரிகை, தொலைக்காட்சி, அரசியல் கட்சி, நில ஆக்கிரமிப்பு என்று திருப்பி விடும் பச்சமுத்துவும் சரி வருமான வரிச் சட்டங்களை கழிப்பறை காகிதம் போல வேண்டுமானால் மதித்திருப்பார்கள். அதனால்தான் வருமான வரித் துறை அதிகாரிகளும், பல டஜன் அரசுத் துறை கண்காணிப்பாளர்களும் இது வரை விழித்துக் கொள்ளவில்லை.

இதைத் தவிர ஆண்டு முழுவதும் 33,000 மாணவர்களின் கல்விக் கட்டணம், பேருந்து கட்டணம், தங்குமிட கட்டணம் என்று ரூ 300 கோடிக்கு மேல் புழங்கும் இந்த நிறுவனத்தை தனி ஆளாக கட்டுப்படுத்துகிறார் பாரி வேந்தர் பச்சமுத்து.

கடந்த ஜனவரி மாதம் பல் மருத்துவக் கல்லூரிக்கு இந்திய பல் மருத்துவக் கழகத்திடமிருந்து அங்கீகாரம் பெறுவதற்காக முருகேசன் என்பவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது பிடிபட்ட மேல்மருவத்தூர் அம்மா குடும்பம் போன்ற மிடில் லெவல் கிரிமினல்களுக்கும் சரி, இப்போது ரெய்டு நடத்தப்பட்ட பச்சமுத்து குடும்பம் போன்ற பெரிய லெவல் கிரிமினல்களுக்கும் சரி சட்டங்களால் தண்டிக்கப்பட முடியாதவர்கள் என்பது வருமான வரித் துறை அதிகாரிகளுக்கும் தெரியும், மத்திய புலனாய்வுத் துறைக்கும் தெரியும்.

அதனால்தானோ என்னவோ, உண்மைகளை உடனக்குடன் தரும், முக்கிய நிகழ்வுகளை ஹெலிகாப்டர் அனுப்பி கவர் செய்யும் புதிய தலைமுறை தொலைக்காட்சி தனது தொலைக்காட்சி அலுவலகம் உட்பட குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் கல்வி முறைகேடு தொடர்பாகவும், நன்கொடை என்ற பெயரில் பெற்ற கருப்பு பணம் தொடர்பாகவும், திரைப்படத் தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்ட கருப்புப் பண பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் வருமானவரித்துறையினர் நடத்திய ரெய்டு பற்றிய விபரங்களை தனது கேமராக்களில் பதிவு செய்யவில்லை.

இனி இந்தத் தொழில்முறைத் திருடர்கள் ஆளும் கட்சிக்கான மாமூல்களையும், ஜால்ரா செய்திகளையும் தவறாமல் நிறைவேற்றுவார்கள்!

பாரதிராஜா – தமிழ் சினிமாவின் ஜெயமோகன் !

13

தை ஜெயமோகன் – இலக்கியத்தின் பாரதிராஜா என்றும் அழைக்கலாம். இந்த ஒப்பீடு ஏன் என்பதை ‘தேர்ந்த’ வாசகர்கள் கூர்ந்து யோசித்தால் புரிந்து கொள்ளலாம். எந்த ஒரு பிரச்சினை, விசயம், ரசனை குறித்தும் வெளியே ஏகப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவையே போதுமான புரிதலை, ரசனையை தருவதாக இருந்தாலும் ஜெயமோகன் அடங்கமாட்டார். அதில் தன்னுடைய சிந்தனை என்று ஒன்றை – அநேகமாக அது முன்னொரு காலத்தில் சொல்லப்பட்டவையாகவே இருக்கும் – உருவாக்காமல் தூங்க மாட்டார்.

பாரதி ராஜா - ஜெயமோகன்சான்றாக, அண்ணா ஹசாரே பத்திரிகையாளர் சந்திப்பில் சொதப்புகிறாரே, ஒரு வாக்கியம் கூட பேசத் தெரியாதவராக இருக்கிறாரே என்றால், “அண்ணா ஹசாரே ஒரு காந்தியவாதி, கிராமத்து மனிதர், இத்தகையவர்கள் ராஜதந்திரத்துடனும், சாணக்கியத்தனத்துடனும் பேசத் தெரியாதவர்கள்” என்றார் ஜெயமோகன். இப்படி ஒரு பாராட்டை அண்ணா ஹசாரேவோ அவரை மார்கெட் பண்ணியவர்களோ கூட யோசித்திருக்க மாட்டார்கள்.

ஆனாலும் அரவிந்த் கேஜ்ரிவால் தனிக் கம்பெனி ஆரம்பித்ததும், இந்த காந்தியவாதி என்னென்ன ராஜதந்திரத்துடன் சொதப்பினார் என்பதை நாடே அறியும். போகட்டும். ரிலையன்ஸ் கம்பெனி அனைத்து பொருட்களையும், சேவைகளையும் தயாரிப்பதில் போட்டி போடுவது போல ஜெயமோகன் அனைத்திலும் தன்னைக் கண்டுபிடித்து எழுதி வருகிறார். எனினும் இங்கு நாம் பேசப்போவது ஜெயமோகனைப் பற்றியல்ல, பாரதி ராஜாவைப் பற்றி!

பாரதிராஜாவிடம் எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கேட்டீர்கள் என்றால் பதிலாக பாரதிராஜா புராணம்தான் வரும். இத்தனை வருடங்கள் ஆகியும் இதற்கு மட்டும் அவர் சலித்ததே இல்லை. இந்த வார ஆனந்த விகடனில் வாசகர் கேள்விகளுக்கு பாரதிராஜா அளித்திருக்கும் பதில்களைப் பாருங்கள்!

முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசனை இயக்கிய அனுபவத்தை ஒருவர் கேட்டிருந்தார்.

அதற்கு பாரதிராஜா, சிவாஜியிடம் “அண்ணே… உங்களுக்கு இந்தப் படத்துல விக் கிடையாது, மேக்கப் கிடையாது. நீங்க எதுவுமே பண்ண வேணாம். நடிக்கக்கூட வேணாம்..” என்று வேலை வாங்கியதைக் கூறுகிறார். பிறகு ஒரு முறை சிவாஜி கேட்டு இவர் நடித்துக் காண்பித்தாராம். அதற்கு சிவாஜி,” இவன் நடிக்கிறதுல பத்து பெர்சன்ட் நடிச்சாக்கூடப் போதும்…ஜெயிச்சுரலாம்டி பொண்ணே” என்று நடிகை ராதாவிடம் சொல்கிறாராம். அதற்கு பாரதிராஜா, மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து சிவாஜியை சினிமாவுல கவிழ்க்கணும்னுதான் வந்தேன் என்று நைசாகச் சொன்னாரம்.

பாரதிராஜாஇறுதியில் படம் முடிந்து பிரிவ்யூ பார்த்துவிட்டு இது இண்டர்னேஷனல் கிளாசிக் என்று சிவாஜி உருகினாராம். பதிலுக்கு சிவாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்த போது பிரம்மாண்டமான விழவை பாரதிராஜா எடுத்தாராம். போகட்டும். பாரதிராஜா சிவாஜியின் வாயாலேயே தன்னைப் பாராட்டிக் கொள்வதை உண்மை என்று சொல்ல சிவாஜி இல்லை என்பதால் பாரதிராஜாவுக்கு பிரச்சினை இல்லை.

ஆனால் நடிகர் திலகம் என்று கமலஹாசன் உட்பட பல ஜாம்பவான்களும் தூக்கிச் சுமக்கும் ஒரு ஆளுமையை பாரதிராஜா இங்கே கேலி செய்யவில்லை. மாறாக அந்த ஆளுமையை விட பாரதிராஜாவின் ஆளுமை  எவ்வளவு மகத்தானது என்பதை புரியவைக்கிறார். இங்கே எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘ஆளுமை’யை அவர் இறந்த பிறகு ஜெயமோகன் காலி செய்து எழுதிய காவியத்தை நினைத்துப் பார்க்கவும்.

அடுத்ததாக காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழம் எல்லாப் பிரச்சினையிலும் பாதியிலேயே பாரதிராஜா ஓடுவது ஏன் என்று ஒருவர் கேட்கிறார்.

தமிழனுக்காக சிரமப்பட்டு பாரதிராஜா போராடும் இடத்திலெல்லாம் யாரோ ஒருவர் கட்சிக் கொடியை நட்டு விடுகிறாராம். இப்படித்தான் இவரோட ஆதரவை சிலர் சுயநலமா அறுவடை செய்கிறார்களாம். அதனாலதான் மனம் வெறுத்து ஒதுங்கி தமிழன் செத்தால் சாகட்டும் என்று தற்போது அமைதியாக இருக்கிறாராம். மற்றபடி பயமெல்லாம் இல்லையாம்.

திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் இவர் பயந்து போய் முறையே கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு சொம்பு தூக்கியதை நாடே அறியும். ஆனால் அவருக்கு இந்த தலைவர்களால் சின்னப் பிரச்சினை கூட வந்ததில்லை என்று இப்போதும் அவர்களைப் புகழ்கிறார் பாரதிராஜா. இந்த விசயத்தில் ஜெயமோகனும் கூட அண்ணா ஹசாரே, காந்தி, இந்துத்துவம் என்று பாதுகாப்புடன் இந்திய ஆளும் வர்க்கம் தூக்கிப்பிடிக்கிற கருத்து, இயக்கங்களில் மட்டும் கருத்தளவில் கலந்து கொள்கிறார். மற்றபடி புரட்சிகரக் கருத்துக்கள் எல்லாம் இந்திய ஞானமரபுக்கு விரோதமானது என்று ஒதுக்கி வைவார்.

அடுத்த வாசகர் பாக்யராஜ் குறித்து பேசுகிறார். மணிவண்ணன் மறைவிற்குப் பிறகு உசராக இருக்கும் பாரதிராஜா, தன்னிடம் வேலைக்கு சேர்ந்த அப்பாவி இளைஞன் பாக்யராஜ் குறித்து முக்கியமாக அவருக்கு வாழ்வு கொடுத்ததை நினைவு கூர்கிறார். இறுதியாக, “இப்பவும் அவனைப் பலமுறை, பல மேடைகளில் கோபமாத் திட்டியிருக்கேன். ஆனா, ஒரு தடவைகூட, ஒரு இடத்தில்கூட என்னை அவன் விட்டுக் கொடுத்துப் பேசினதே இல்லை. யார் கிட்ட எப்போ என்னைப் பத்திப் பேசினாலும் ‘எங்க டைரக்டர்’னு உண்மையான பாசத்தோட பேசுவான். ஸ்வீட் ராஸ்கல்!” என்கிறார். அவரைத் திட்டியும் அவர் இவரை விட்டுக்கொடுக்கமாட்டார் என்பது இவருக்கு பெருமை என்று பாரதிராஜா நினைக்கிறார். ஆனானப்பட்ட பாக்யராஜையும் நான் எப்பவும் திட்டிக் கொண்டேதான் இருப்பேன் என்கிறார்.

ஜெயமோகனைப் பொறுத்தவரை இந்த லிஸ்ட்டில் ஏராளம் சீடர்களை வைத்திருக்கிறார். ஆனால் அவர்கள் அனைவரும் தூக்கத்தின் போதும் ஜெயமோகனது புராண பெருமை பேசுவதால் அவர்களைத் திட்டும் வாய்ப்பு இதுவரை ஜெயமோகனுக்கு வரவில்லை. மற்றபடி அவர்களாகவே தாங்கள் முட்டாள்கள், குருவிடம்தான் ஞானம் கற்று வருகிறோம் என்று அடிக்கடி ஜெபிப்பதன் படி பார்த்தாலும் அவர்களைத் திட்டும் பாக்கியம் ஜெயமோகனுக்கு வரவில்லை.

ஜெயமோகன்அடுத்த கேள்வியில் 16 வயதினிலே திரைப்படத்திற்கு விகடன் 62.5 மதிப்பெண் கொடுத்தது இன்று வரை ரிக்கார்டு, யாரும் முறியடிக்கவில்லை என்பதை எப்படி நினைக்கிறீர்கள் என்பதை ஒருவர் கேட்கிறார்.

ஸ்டூடியோவுக்குள் இருந்த சினிமாவை கிராமங்களுக்கு கூட்டிச் சென்றதால் அந்த மதிப்பெண் விகடனால் அளிக்கப்பட்டிருக்கிறது என்று பணிவாக பேசும் பாரதிராஜா தற்போது அதை இன்றைய இளம் இயக்குநர்கள் முறியடிப்பார்கள் என்கிறார். ஆனால் அப்படி யாராவது முறியடித்தால் உடனே படம் எடுத்து அதை இவர் முறியடிப்பாராம். என்ன ஒரு ஸ்போர்ட்டிவான சிந்தனை!

இந்த விசயத்தில் ஜெயமோகன் தன்னை விஞ்சும் படைப்பாளிகள் இக்கணம் வரை தமிழ்நாட்டில் யாருமில்லை என்றுதான் எழுதியிருக்கிறார். ஒருவேளை விஞ்சினாலும் அவரது கீ போர்டு அதை அனுமதிக்காது என்பதால் இங்கும் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல்தான் இருக்கிறார்கள்.

இறுதியாக ”உங்களைக் குருநாதர்னு கொண்டாட சினிமாவில் ஒரு பட்டாளமே இருக்கு. ஆனா, உங்க குருநாதர் பத்திப் பெருசா தகவல் எதுவும் கேள்விப்பட்டதில்லையே..?” என்ற கேள்விக்கு பாரதிராஜா என்ன பதிலளித்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

பெற்றோர்கள், பல்வேறு பழைய இயக்குநர்களிடமிருந்தெல்லாம் கற்றுக் கொண்டேன் என்று சொல்லுபவர் இறுதியாக, “இதுல யார்னு ஒருத்தரை மட்டும் என் குருநாதரா குறிப்பிட்டுச் சொல்ல முடியும்? எனக்குத் தனியா ‘குரு’னு யாரும் கிடையாது. அடமா யாரையாவது சொல்லுங்கனு கேட்டா, இந்த இயக்குநர் பாரதி ராஜாவின் குருவா, அந்த ஹெல்த் இன்ஸ்பெக்டர் சின்னச்சாமியைச் சொல்லலாம்!” என்கிறார்.

இதற்கு விளக்கம் தேவையா?

அந்த ஹெல்த் இன்ஸ்பெக்டர் யார் என்று தெரியாதவர்களுக்காக அது பாரதிராஜாதான் என்று தெரிவிக்கிறோம்.

ஜெயமோகனைப் பொறுத்தவரை பெற்றோர்களின் ஆளுமையில் வளர்ந்திருப்பதோடு ஊட்டியில் ஒரு குருவையும் வைத்திருந்தார். ஆனால் அந்த குருவை விஞ்சிய சீடன் என்று யாராவது சொல்ல மாட்டார்களா என்று ஆவலுடன் காத்திருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் ஜெயமோகன் – பாரதிராஜாவை யாரும் பிரிக்க முடியாது என்பதை சவாலாகவே தெரிவிக்கிறோம்.

பீட்சா வர்க்கம் நாசமாக்கும் உணவுச் செல்வம் !

8

மெரிக்காவில் 50% அளவிற்கு விரயமாகும் உணவு, திடக்கழிவுக்கு முக்கிய காரணமாகி நிலத்தின் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. இயற்கை வளங்கள் பாதுகாப்பு கவுன்சிலின்படி நான்கு நபர்களை கொண்ட சராசரி அமெரிக்க குடும்பம் வருடத்திற்கு 2,275 டாலர்களை (அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,32,000 ரூபாய்கள்) உணவுப் பொருட்களுக்காக செலவழிக்கின்றது.

பிரிட்டனைப் பொறுத்தவரையில் வருடத்திற்கு 7 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் வீடுகளில் இருந்து தூக்கியெறியப்படுகின்றன. சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் வருடத்திற்கு £480 அதாவது 44,000 ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்களை வீணடித்து வீசுகிறது. வாழ்நாள் முழுவதும் அதன் மதிப்பினை கணக்கிட்டால் £15,000- £ 24,000 அதாவது 13 லட்சம் முதல் 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவு குப்பைத்தொட்டியில் இடப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால் ஒரு பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் (சுமார் ரூ 9,000 கோடி) மதிப்பிலான உணவுப் பொருட்கள் பயன்படுத்தும் தேதி முடிவதற்கு முன்னும், சாப்பிடுவதற்கு நல்ல தரத்துடன் இருக்கும் போதே வீசப்படுகின்றன.

இவ்வாறான உணவு விரயத்தை தடுத்து நிறுத்த, நுகர்வு ஊக்கத்திற்காக வழங்கப்படும் ஒன் பிளஸ் ஒன் சலுகைகளை தடை செய்யும் திட்டம் ஒன்றை அமலாக்க பரிசீலித்து வருகிறது ஐரோப்பிய ஒன்றியம். வால்மார்ட் போன்ற பேரங்காடிகள் தங்களது பேக்கேஜ் நிர்ணயத்துக்கு ஏற்றதாகவும், காட்சிப் பொருளாக வைக்க கவர்ச்சியாகவும் தரம், வடிவம், நிறம் மற்றும் அளவு போன்ற ஒப்பனை அளவுகோல் மூலம் சுமார் 30% உணவுப்பொருட்களை நிராகரித்து விரயமாக்குகின்றன.

supermarket-4இத்தகைய ‘உயர்ந்த’ அமெரிக்க, ஐரோப்பிய வாழ்க்கையை நகலெடுப்பதையே மேன்மையாக கருதும் இந்திய மேட்டுக்குடியினர் உணவுப் பொருட்களின் நுகர்வையும் விரயத்தையும் அதிகரித்து வருவதோடு மட்டுமில்லாமல் கழிவுப் பிரச்சினையையும் இந்தியாவிற்கு கொண்டு வந்திருக்கின்றனர். இந்தியாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் குடும்பங்கள், ஒரு நபருக்கு தலா 100 கிலோ உணவு பொருட்களை வீணாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நவீன வாழ்க்கை முறையும், கையிருப்பில் இருக்கும் பொருட்கள் மீது நிலவும் கவனமற்ற போக்கும் தான் இந்த விரயங்களுக்கான அடிப்படை காரணங்கள்

”ஒரு லிட்டர் பால், நார்த்தங்காய் இலைகள் கொண்ட பாக்கெட் ஒன்று, 2-3 எலுமிச்சம் பழங்கள், ஒரு மாங்காய் மற்றும் கொஞ்சம் கத்திரிக்காய்கள்”……….ஏதோ கடையில் வாங்குவதற்கான பொருட்களின் பட்டியல் என்று நினைத்துவிடாதீர்கள். இது புது டில்லியில் உள்ள மயூர் விஹாரில் வசிக்கும் ராதிகா என்ற பெண் பத்திரிகையாளர், திங்களன்று குப்பையில் எறிந்துள்ள பொருட்களின் பட்டியல். இதற்கு முதல் நாள், கெட்டுப்போன குழம்பு, ஒர் பெரிய துண்டு பன்னீர் (பாலாடைக்கட்டி) மற்றும் பாதி ரொட்டிப் பாக்கெட்டை குப்பைத் தொட்டிக்கு சொந்தமாக்கியிருக்கிறார்.

“முதல் நாளன்று இரவு வாங்கி வந்த பாலை ஃபிரிட்ஜில் வைக்க மறந்து விட்டேன். தாய்லாந்து உணவு வகையை சமைப்பதற்காக வாங்கி வந்த நார்த்தங்காய் இலைகளை மீதம் வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. எலுமிச்சையும், கத்திரிக்காயும் பிரிட்ஜில் அடித்தளத்தில் நிறைய நாள் இருந்து வாடிவிட்டன, அதனால் அவற்றை எறியவேண்டியதுதான்” என்று தான் குப்பையில் போட்ட பொருட்களைப் பற்றி விவரிக்கிறார் ராதிகா. இவற்றைத் தாண்டி, சமையல் அறை அலமாரியில் கிலோ கணக்கில் மாவு வகைகள் கெட்டுப் போன நிலையில் வைத்திருப்பதாகவும், ஒர் புட்டிநிறைய ஆலிவ் எண்ணெயும் உள்ளது என்று சர்வ சாதாரணமாக குறிப்பிடுகிறார் ராதிகா.

அவர் வசிக்கும் மயூர் விகார் பகுதியிலிருக்கும் பிற குடும்பங்களும் ஏறத்தாழ இதே அளவிற்கு உணவுகளை குப்பைத் தொட்டிக்கு ஊட்டியுள்ளன. பிளாஸ்டிக் மலைகளுக்கு மத்தியில், பாக்கெட்களில் நூடுல்ஸ்கள், நொறுக்குத் தீனிகள், பெரிய பாக்கெட்களில் வகை வகையான மாவுகள், ஐஸ்கீரிம் டப்புகள், கிலோ கணக்கில் அழுகிப் போன காய்கறிகள், பழங்கள், பழத்தோல்கள், ஒரு பாதி தர்பூஸ் பழம், ஒரு அன்னாசிப் பழம் மற்றும் சப்பாத்திகள் என்று சகல உணவுப் பொருட்களும் கேட்பார் அற்று குப்பைத் தொட்டிகளில் நாறிக் கொண்டிருக்கின்றன.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், பல விதங்களில் தள்ளுபடி, 20% எக்ஸ்ட்ரா இலவசம், செய்தித் தாளின் விளம்பரப் பகுதியை வெட்டி எடுத்து வந்து இலவசமாக வாங்கிச் செல்லுங்கள், காலி பாக்கெட்டுகளை சேர்த்து இலவசத்தினை பெற்றிடுங்கள், இத்தனை ரூபாய்க்கு மேல் வாங்கினால் இலவச பரிசுகள், கடன் அட்டையில் வாங்கினால் ரிவார்டு பாயிண்டுகள் மற்றும் கேஷ் பேக், சுற்றுலா பரிசு, கார் பரிசு, பம்பர் பரிசு போன்ற பரிசுகளும், சூதாட்டங்களும் விளம்பரங்களில் வலம் வந்து நுகர்வோரைத் தாக்கி, தேவைக்கு மீறிய நுகர்தலை ஊக்குவிக்கின்றன, இங்கேயே உறுத்தலின்றி அதை வீணாக்கும் பண்பும் துவங்குகின்றது.

“ஆமாம் நானும் அனேகமாக சிறிது கூடுதலாக வாங்கும் பழக்கத்தை பின்பற்றி வருகிறேன். எப்போதாவது வரும் விருந்தினருக்காக பொருட்களை வாங்கி வைக்கிறேன், பின்னர் அதை உபயோகிக்க வழியில்லாமல் வீணாக்கி குப்பைக்கு சொந்தமாக்குகிறேன்” என்று தான் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்கிறார் ராதிகா.

supermarket-3குர்கானை சேர்ந்த நிக்கில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒரு மக்கள் தொடர்பு அதிகாரி, அவருடைய பெற்றோர்கள் திடீரென வருகை தந்த போது, அவர் இரு நபர்களுக்கு எப்போதும் வாங்கும் காய்கறி மற்றும் மளிகை சாமான்களின் அளவே, நான்கு பேருக்கும் நிறைவாக இருந்தது என்பதை உணர்ந்ததாகவும், இதுவரை அவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து, ஒன்று அதிகப்படியாக சாப்பிட்டோ, அல்லது அதிகமாக விரயம் செய்ததோ வாழ்ந்திருக்கிறோம் என்பது தனக்கு அப்போதுதான் விளங்கியது என்று கூறுகிறார்.

கணவன், மனைவிக்கு பெரும்பாலும் அவர்களுக்கு சமைக்க வேண்டிய உணவின் அளவு, அவர்கள் மால்களில் வாங்கி வந்து குவித்துள்ள மளிகை மற்றும் உணவு பொருட்களின் அளவு, பயன்பாடு பற்றிய கவனமும், அக்கறையும் இருப்பதே இல்லை.

“வாரத்துக்கு ஒரு நாள் ஷாப்பிங் செய்வோம், பிறகு வார இறுதியில் பிர்ட்ஜை காலி செய்துவிட்டு மீண்டும் அடுத்த வாரத்திற்கு மளிகை, காய்கறி, பழம், இதர உணவுப்பொருட்கள் வாங்கி நிரப்புவோம்” என்கிறார் நிக்கில்.

ரேஷனில் மணிக்கணக்கில் நின்று பொருட்கள் வாங்க வழியில்லாமல் தவிக்கும் மக்கள் இருக்கும் இதே நாட்டில்தான், மால்களிலும், சூப்பர் மார்க்கெட்டிலும், கூடைகள் பிதுங்கும் அளவிற்கு தேவைக்கு அதிகமாக வாங்கும் மேட்டுக்குடியினரும் உள்ளனர்.

ஐ.டி.துறை ஊழியர்களுக்கு, சம்பளத்தில் ஒரு பகுதி கூப்பன்கள் அல்லது கார்டுகளாக தரப்படுகிறது. இவை மூலம் சாதாரண அண்ணாச்சி கடைகளில் ஏதும் வாங்க முடியாது, சூப்பர் மார்க்கேட், மால்கள், உயர் தர ஓட்டல்களுக்கு சென்றால் தான் அவற்றை பயன்படுத்த முடியும். கைக்காசை எண்ணி வைப்பதில் உள்ள ‘சிரமங்களை’ இது ஒரேயடியாக தீர்த்து வைப்பதினால், திட்டமிடாத ‘இம்பல்ஸ் பர்சேஸ்’ (தோன்றியதை தோன்றியவுடன் திடுமென வாங்குவது) அதிகரிக்கின்றது. தானாக பேரங்காடிக்கோ மால்களுக்கோ போகாதவரைக் கூட அங்கு தள்ளி விடுவதன் விளைவாக இலக்கற்ற நுகர்வும் தடையில்லாத கழிவும் என நச்சுச்சூழல் நிலை கொள்கிறது

வெளிநாட்டு உணவு வகைகளை வீட்டில் தயாரிக்க முயல்வது மேட்டுக்குடியினர் மத்தியில் பரவி வருவதால், அவற்றின் தயாரிப்புக்கு பிரத்தியேகமாக தேவைப்படும் ஏகப்பட்ட பொருட்களை வாங்குவதும், பின்னர் அவைகளின் பயன்பாடு இல்லாதபோது அவற்றை வீசியெறிவதும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.

wasteஆலிவ் எண்ணெய் இத்தாலியின் தட்டப வெப்ப சூழலுக்கு அம்மக்களின் வாழ்வுடன் ஒன்றாக கலந்துள்ளது. ஹெல்தியான எண்ணெய் என்று விளம்பரப்படுத்தப்படும் ஒரே காரணத்திற்காக விலை பல மடங்கு அதிகமாகவும், நம் ஊர் உணவில் சேர்க்க முடியாமல், சுவையில் முன்னும் பின்னுமாக இருக்கும் அந்த ஆலிவ் எண்ணெயை வாங்கித் தள்ளுகின்றனர். சில நாட்கள் பொம்மை போல அது சமையற்கட்டில் குடியிருக்கும், பின்னர் தூக்கியெறியப்படும்.

ஆலிவ் எண்ணெயை போல், பிட்சா தயாரிப்புக்கு தேவைப்படும் பொருட்களும், பாஸ்தா, நூடுல்ஸ், சோயா சாஸ், மயொனிஸ் சாஸ், ஆரிகனோ என்ற மசாலா பொருள், நட்டெல்லா என்ற சாக்லேட் ஸ்ப்ரெட் என்று பல தரப்பட்ட உணவு பொருட்களுக்கும் இதுதான் கதி. ‘டயட் உணவு, ஆர்கானிக் உணவு’ என்று முத்திரை குத்தப்பட்டால் உடனே அதன் தேவை அறியாமலேயே வாங்கி வீணாக்குவது தனிக்கதை.

இலக்கற்ற நுகர்வு அதிகமாக அதிகமாக அதை சேமித்து வைக்கும் ஃபிரிட்ஜ்களும் 2 டோர், 3 டோர் என பெரிதாகி தற்போது கோட்ரெஜ் அலமாரி அளவுக்கெல்லாம் பல அடுக்குகளுடன் வாங்கக் கிடைக்கின்றன. இதுபோன்ற ராட்சத அளவிலான பிரிட்ஜூகளையும், பல அறைகள் கொண்ட அதி நவீன மாடுலர் சமையலறைகளையும் நிரப்புவதற்கே வரம்பற்ற நுகர்வு பயன்படுகிறது.

குறைந்த அளவில் உணவுப் பொருட்கள் தேவையிருக்கும் வீடுகளில் இந்நிலையென்றால், அதிக அளவில் தேவைகள் இருக்கும் திருமணங்கள், ஓட்டல்கள் பற்றி கேட்கவேண்டிய அவசியமே இல்லை.

restaurantஆடம்பர வக்கிரங்கள் நிறைந்த இந்தியத் திருமணங்களில் பஃபே முறையில் பல விதமான உணவு வகைகளை விருந்து வைத்து வீணாக்குவது முதல் பிளேட் ரூ 1000 – ரூ 2000 என விற்கும் ஓட்டல்கள் வரை இதுதான் கதி. ஏழை மாநிலமான ஒடிசாவில் வளர்ந்து வரும் நகரமான புவனேஸ்வரில் கூட வருடத்திற்கு 26,000 டன் உணவுப் பொருட்கள் ஓட்டல், உணவு அங்காடிகள், பார்ட்டிகள் மற்றும் கேளிக்கைகளில் வீணாக்கப்படுகின்றன. அதாவது ஒரு நாளுக்கு 70 டன் உணவு பொருட்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன. இதிலிருந்து ஒவ்வொருவருக்கு குறைந்தபட்சமாக 275 கிராம் என்ற விதத்தில் பாங்காக உணவு வழங்கினாலும் 95,000 மக்களுக்கு உணவளிக்க முடியும். உதாரணமாக மும்பையில் நடந்த ஓரு திருமண பார்ட்டி ஒன்றில் மிதமான உணவுகளை சேகரித்த ஒரு தொண்டு நிறுவனம், அதைக்கொண்டு 70 – 80 பேருக்கு உணவு வழங்கியுள்ளது.

இந்தியாவின் 110 கோடி மக்கள் தொகையில், பெரும்பான்மை மக்கள் ஒரு பொழுது உண்டும், கிட்டத்தட்ட 25% மக்கள் முழுப் பட்டினியின் பிடியில், பரிதவித்து, பசியிலேயே உறங்கி, கண் விழித்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இப்பேற்பட்ட உலகின் பட்டினியின் தலைநகரமான இந்தியாவில்தான் இத்தனை உணவு விரயமும் நடக்கின்றது. மிச்ச மீதியை வீட்டுச் செல்ல பிராணிகளுக்கு கூட போடாமல், அவற்றுக்கு உலக பிராண்ட் உணவு வழங்குவதுதான் ஸ்டேட்டஸ் என்று கருதும் மேட்டுக்குடியினருக்கு வீணாக்குவதைப் பற்றி துளியும் குற்ற உணர்ச்சியில்லை.

அண்ணாச்சிக்கடை போன்ற சில்லறை வணிகத்தில்தான் விரயம் அதிகம், வால்மார்ட் போன்ற பேரங்காடிகள் வந்தால் உணவு விரயம் குறைந்து விடும் என்று பிரச்சாரம் செய்கின்றனர் உலகமய ஆதரவாளர்கள். ஆனால், சூப்பர் மார்க்கெட் சந்தைப்படுத்தலும், கொள்முதலும்தான் பெருமளவு உணவுப் பொருட்களை வீணாக்குகின்றன என்பதும், இந்தியாவின் உணவுப் பொருட்கள் வினியோக மேம்பாட்டுக்கு ஊதாரித்தனத்தை ஊக்குவிக்கும் இந்த லாப கொள்ளையர்கள் எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை என்பதும் அமெரிக்க, ஐரோப்பிய உதாரணங்களிலிருந்து தெரிய வருகிறது.

ஆனால், இல்லாதவர்கள் பட்டினியால் சாகட்டும், இருப்பவர்கள் கையில் பொருட்களை குவித்து விரயமாக்குவோம் என்பதுதான் உலக முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் நச்சு சூழலின் சாதனை !

____________________________________
– ஜென்னி

_________________________________________

மேலும் படிக்க

வர்க்கம் !

6

தோ ஒரு பிரபலமான வெளிநாட்டு கம்பெனிக்கு உடல்தானம் செய்தவன் போலிருந்தது அவனது தோற்றம். சட்டைப் பை, காலர், டீ சர்ட்டின் முன் பக்கம், பின் பக்கம் ஏன் மூச்சுக்காற்றைக் கூட கம்பெனி விளம்பரத்துக்கு இழுத்து விட்டவன் போல, ஒரு தினுசாக சுற்றுப்புறத்தை அருவெறுத்தவன் போல முகத்தைச் சுழித்துக்கொண்டு மூச்சு விட்டான்.வேறு வழியில்லாமல் இந்தப் பேருந்தில் ஏறியவன் போல. பேருந்துக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து கொண்டிருந்தார்கள் மக்கள். வெயிலுக்குத் தொப்பி, காலுக்கு கவர்ச்சியான ஷீ, நெஞ்சுப் பகுதியில் உள்ள டீ சர்ட் பட்டனில் ஸ்டைலாக தூளியாடிய கூலிங் கிளாஸ் என அனைத்து அம்சத்திலும் அவன், அந்த சிறு நகரப் பயணிகளிடம் வேறுபட்டுத் தெரிந்தான். மற்றவர்களைப் போலல்லாமல் நடை, உடை, உடல் மொழியில் மாறுபட்டு இருப்பதனாலேயே ஒரு விதத் தனித்துவமான பெருமிதமும் அவன் பார்வையில் மிதந்தது. அடித்துப் பிடித்து ஏறிய பயணிகளை நாகரிகமற்றவர்கள் போல் வெறித்துப் பார்த்து விட்டு, தனக்கான தனியிடத்தை இந்த உலகம் விட்டு வைத்திருக்கிறதா என்பது போல பேருந்துக்குள் நோட்டமிட்டான்.

பள்ளிப் பிள்ளைகள் அவனது தோற்றத்தையும், அவனது விலையுயர்ந்த தோள் பையையும் உற்றுப் பார்க்க, அவனது தசைக்கோளங்களில் பெருமிதம் ஏறியது. பேருந்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி, ஒன்றில் மட்டும் ஜன்னலோரம் ஒரு முதியவரும், பக்கத்தில் நரைத்த தலை, கலைந்த தாடியுடன் பழுப்பு வேட்டியை மடித்துக் கட்டிய வண்ணம், வாயைக் குதப்பிக் கொண்டு வெற்றிலை மணத்துடன் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் பக்கத்தில் மட்டும் ஒரு இடம் காலியாக இருந்தது. இதையும் விட்டால் தனது பெருமிதத்தின் சுமையை ஒன்றரை மணி நேரம் தாங்கிக்கொண்டு நிற்க முடியாது என்பதால், இருக்கிற இடத்தில் பக்கத்தில் உள்ள பெரியவருடன் ரொம்பவும் ஒட்டிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் மடியில் பையை வைத்துக் கொண்டு பக்குவமாக அமர்ந்து கொண்டான். “சே! வேட்டிய அவிழ்த்து விட்டுட்டாவது உக்காரலாம். அழுக்கு பிடிச்ச காலோட அப்படியே உட்காந்திருக்காரு” என்று மனதில் எண்ணங்கள் ஓட அவரை ஒரு ஸ்கேன் பார்வை பார்த்துவிட்டு உடலைக் குறுக்கிக் கொண்டான்.

07-class-elder“தம்பி நல்லா உக்காருங்க! ” வாய் வழிய வாஞ்சையுடன் அவர் கொஞ்சம் தள்ளி இடம் கொடுத்தாலும், இந்த வெத்தல பாக்கு எச்சி தெறிக்குறதுக்கு பேசாமலே இருந்திருக்கலாம்! என்ற முகச்சுழிப்புடன் “ஓ.கே! ஓ.கே! ” என்று வெடுக்கென தலையாட்டிக் கொண்டான். பெரியவர் திரும்பவும் பேசுவதற்கான முகக்குறிப்பைப் பார்த்து விட்டவன், வேண்டுமென்றே வேறு பக்கம் முகத்தைத் திருப்பி நோட்டமிட்டான். திடீரென ஒரு சுவிங்கத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சூழலை மென்று விழுங்குவது போல பற்களை அழுந்த அசைத்து சுவிங்கத்தைப் புரட்டி எடுத்தான். அவன் சுவிங்கத்தை எடுத்ததும், அதன் மேல் லாவகத்தையும் பக்கத்திலிருந்த பெரியவர் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். வெற்றிலை மெல்லும் பெரியவரின் வாயை யாரும் விசேசமாக வேடிக்கை பார்க்காமல், இடது பக்கத்தில் நின்றிருந்தவர் சுவிங்கம் மெல்லும் தன் வாயைப் பார்த்தது, உலகமே தன்னை உற்றுப் பார்ப்பது போல அவனுக்கு ‘கெத்து’ கொடுத்தது. மேலும் வெற்றிலைக்காக அசையும் வாயை விட சுவிங்கத்துக்காக அசையும் தனது வாய் நாகரிகத்தின் நுழைவாயில் என்பது போல கர்வம் பிறந்தது போலவும், சுவிங்கத்தை மென்றுகொண்டே சுற்றிலும் இருப்பவர்களை ஒரு மேல் பார்வை பார்த்துக்கொண்டான்.

பையின் சைடு ஜிப்பைத் திறந்து திடீரென கை அகலப் பொருளை எடுக்க, ஏதோ மந்திரவாதி திடீரென பைக்குள்ளிருந்து மண்டை ஓட்டை எடுத்தது மாதிரி திடுக்கிட்டும், ஆர்வத்துடனும் பக்கத்திலிருந்த பெரியவர் முதல் நின்றிருந்தவர்கள் வரை அதையே நோட்டமிட்டனர். கை அகல செல்போனின் டச் ஸ்கிரீனில் அவனது நுனிவிரல் விந்தை புரிய, “ஏய்! இங்க பார்ரா. என்னமோ வெத்தலைக்கு சுண்ணாம்பு தடவற மாதிரி இப்படி இப்படிங்குறாரு, என்னமா நிறம் மாறுது…” இவ்வளவு மாடர்னான செல் போனை ஒரு வெற்றிலையோடு உவமானம் சொல்ல, பக்கத்தில் வாய்திறந்தவரை ஒரு ‘மாதிரியாக’ பார்த்து விட்டு மேற்கொண்டு டச் ஸ்கிரீனை அலை அலையாக எழுப்பிக் கொண்டிருந்தான். “யா! ஆம் சங்கர். ஸாரி பார் த டிலே. நெக்ஸ் வீக், ஐ வில் அரேன்ஞ்ச். ஸ்யூர், யா யா! பை! தாங்க் யூ!” இந்த முறை டச் ஸ்கிரீனுக்கு பதில் பக்கத்தில் உள்ளவர்கள் அவனது ‘டச்’ உதடுகளை வேடிக்கைப் பார்த்தனர். பெரிய எடத்துப் புள்ள போல இருக்கு! என்றுபொல பொலவென்றுஆங்கிலம் உதிர்த்த அவனது வேகத்தைப் பார்த்து, “தம்பி! காரக்குடிங்களா? இல்ல வெளி நாட்லேந்து வாறிங்களா?” கேட்டது பெருமையாக இருந்தாலும், கேட்டவரின் தோற்றம் திருப்தியளிக்காதது போல, “நோ! ஜஸ்ட் எ விசிட்!” என்று இயல்பு போல பேசியவன், பிறகு உங்களுக்கு புரியாதில்ல என்பது போல பாவனை செய்தவன், “சும்மா, வேற வேலையா!” என்று நறுக்கென முடித்துக்கொண்டான்.

பேச்சும் புரியல, ஜாடையும் புரியல என்பது போல அவன் பார்க்காத போது அவனை சைடாக பார்த்துக் கொண்ட பெரியவர், நமக்கேன் வம்பு என்பது போல பேச முற்படாமல் வேறு பக்கம் பார்க்கலானார்.

07-class“எம்மாம் நெணல் கெடக்கும், ரோட்ல ஒரு மரம் தெரியுதா பாரு! வெக்க காத்து மூஞ்ச உரிக்குது!” பெரியவர் ஊரைப் பார்த்து பேச, “ஆமா ரோட்டோர வய வரப்பல்லாம், பிளாட்ட போட்டு புட்டானுவ, இருக்கற மரத்தயும் ரோட்ட அகலப்படுத்துறேன்னு வெட்டி சாய்ச்சிபுட்டானுவ. என்னா புல்லு, பூண்டு கெடக்கு? மொதல்ல வீடு மொழுவ மாடு சாணி போடுதா, சொல்லு? காலம் கெட்டுப்போயி, எல்லாம் ‘ஸ்பீடா’ போறானுவளாம், ஸ்பீடா! ” ஜன்னலோரப் பெரியவர் பதிலுக்கு விண்டு வைக்க, பெரிசு எதையோ குத்திக்காட்டுவது போல் உள்ளது என்று அவன் அதுவரை ஏறிடாத அவரை எட்டி ஒரு பார்வை பார்த்துக்கொண்டான்.

சிறிது நேரத்தில் அவனை வேடிக்கைப் பார்த்தவர்கள், ஆளாளுக்கு தனக்குள் செட்டு சேர்ந்து கொண்டது போல, தங்களுக்குள் பேசிக்கொண்டே வந்தார்கள். சாதாரண கிராமத்து மனிதர்களிடம் சகஜமாகப் பழகுவதற்கு அவனுக்கு மனதளவில் விருப்பம் இல்லாவிடினும், சிறிது நேரத்திற்கு அவனை யாருமே சட்டை செய்யாதது, தனிமைப்பட்டது போல் இருந்தது. அவனே உற்றுப் பார்த்தாலும், பக்கத்திலிருந்தவர்கள் அவர்கள் பாட்டுக்கு தமக்குள் பேசிக்கொண்டே, ஊர், வயல், தண்ணீர், விவசாயம், மழை என்று தேவையான விசயங்களை அலசி விவாதித்து வர, அதற்குள் கலந்து

பேசவும், விவரம் தெரியாமல் அந்நியப்பட்டது போல இருந்தது அவனது மனநிலை.

“தோ… தோ… இத பாரு! ஊரு வந்திருச்சி… அழாத… இந்தா மம்மு! சாப்புடு! தோ… பாப்பா பாரு… தோ…” என்னென்னவோ சொல்லி சமாதானப்படுத்தினாலும் அந்தக் குழந்தை பெரிய குரலெடுத்து அழ ஆரம்பித்தது. ”தோடு பாரும்மா… அய்… பஸ்சு… ட்ரூ… வேகமாக போவுது பாரு! தோ… பழம்! சாப்பிடுறீ… தங்கம்! ” எதைக் கொடுத்தாலும் தூக்கிக் கடாசுவது போல கையை வீசி, காலை உதைத்து ஆ..ங்.. ஆங்… என்று ஊரைக்கூட்டியது குழந்தை. முன்னிருக்கையில் குழந்தை வீறிட்டு அழ, இந்தச் சந்தர்பத்தில் தானும் சக பயணிகளிடம் கலந்துகொள்வது போல, தானும் முயற்சியெடுத்தான் அவன், “ஹாய்… அழக் கூடாது… ந்தா செல் போன்… டச் ஸ்கிரீன் படம் பாரு…” அவன் மீண்டும் முயற்சித்து “இங்கவா!” எனக் கையை வேறு நீட்ட, அது முன்பைவிட இன்னும் பயந்து அலறியது போல கத்த, திடீரென பக்கத்திலிருந்த பெறியவர், “ஏன் ஆயி! எங்க செல்லம்ல, தங்க சம்பால்ல ரோ… ரோ… ரோ… அழக் கூடாது, ஏம்மா பிள்ளய இப்படி காத்தோரம் கொடு” என்றுவெற்றிலை பாக்கு மணக்க! எழுந்து இரு கரம் நீட்ட… அதுவரை குமுறி அழுத குழந்தை வெடுக்கென பெரியவர் கைக்கு அழுதுகொண்டே தாவியது, நரைத்த தாடியில் முகம் சேர்க்க, “அய்யய்யோ தங்கம்… அழுது முகமெல்லாம் வேர்த்திடுச்சே…” என்று அழுக்குத் துண்டில் குழந்தையைத் துடைக்க, அது செருமிக் கொண்டே, அவர் முகத்தை உற்றுப்பார்த்து சந்தேகத்துக்கிடமின்றி சேர்ந்து கொண்டது. பெரியவர் தாடியை விரல்களால் நீவிக்கொண்டே, அவனது மனம் வீசும், மழ மழவென்ற சேவிங் செய்த முகத்தையும், கைகளில் உள்ள காஸ்ட்லி பொருட்களையும் ஒருவித ஆராய்ச்சியுடன் குழந்தை உற்று நோக்கியது. பளிச்சென, பந்தாவான லைஃப் ஸ்டைல் உள்ள தன்னிடம் வராத குழந்தை, அந்த அழுக்கான பெரியவரிடம் தாவியதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானவன் போல் அவனும் குழந்தையையே உற்று நோக்கி யோசிக்க ஆரம்பித்தான்.

-சுடர்விழி
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________