இந்த ஆண்டு (2013-14) மின்கட்டண உயர்வுக்கான மனுவினை மின்வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. இந்த மனுவின் மீதான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் கடந்த மே மாதத்தில் நடத்தப்பட்டன. குடிசை இணைப்புகளுக்கும் விவசாயத்துக்கும் மட்டும் தமிழக மின்வாரியம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனையும் மானியமாகத் தந்துவிடப் போவதாக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள கட்டண உயர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கடனாகிய ரூ. 19,571 கோடியில், ஒரு குறிப்பிட்ட பகுதியை கட்டண உயர்வாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியின் வெற்றி பாதிக்கப்படும் என்பதால் பெயரளவில் ஒரு கட்டண உயர்வை அறிவித்து – அதாவது ரூ. 973 கோடி – அதனை அரசு மானியமாக நேர்செய்வதுமாக இந்தக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் இந்த கட்டண உயர்வை அறிவிக்காமல் இருந்திருந்தால், மின்சாரத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி ஆணையமே தனது சுய அதிகாரத்தின் மூலம் கட்டண உயர்வை அறிவித்திருக்கும்.
மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக திருச்சியில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில், கட்டண உயர்வின் பின்னேயுள்ள தனியார்மயக் கொள்ளையை அம்பலப்படுத்துகிறார், திருச்சி மாவட்ட ம.க.இ.க. செயலர் தோழர் சீனிவாசன்.
கடந்த 2012-13-ம் ஆண்டிற்கு தமிழகத்துக்கு 7078 கோடி யூனிட்டுகள் தேவை என்று ஆணையம் மதிப்பிட்டது. இதில் விற்றுவரவாக 5886 கோடி யூனிட்டும், இழப்பாக – அதாவது, நட்டமாக 7874 கோடி யூனிட்டும் இருக்குமென்றும் கூறி, இதை ஈடு செய்யவே கடந்த ஆண்டு கட்டண உயர்வை ஆணையம் அறிவித்தது. ஆனால் மின்வாரியமோ, 2012-13-ஆம் ஆண்டில் மொத்தத்தில் ரூ. 17,593 நட்டமாகியுள்ளதாகவும், நடப்பாண்டாகிய 2013-14-இல் இது மேலும் ரூ. 10,334 கோடி அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கிறது. மொத்தத்தில் கடந்த 2010 நவம்பர் முதல் நடப்பாண்டில் ஏற்படும் நட்டம் உள்ளிட்டு மொத்த நட்டம் ஏறத்தாழ ரூ.39,744 கோடி ஆகும். இதனை அடுத்த ஆண்டு(2014-15) முதலாக மக்கள் தலையில் சுமத்த வேண்டும் என்கிறது மின்வாரியத்தின் கட்டண உயர்வுக்கான மனு.
தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கியதால்தான் மின்வாரியத்துக்கு இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் ஜி.எம்.ஆர்., சாமல்பட்டி, பி.பி.என்., மதுரை ஆகிய தனியார் நிறுவனங்களிடமிருந்து 271.4 கோடி யூனிட்டுகளை ரூ. 2962 கோடிக்கு மின்வாரியம் வாங்கியுள்ளது. ஆனால் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இப்படி தனியாரிடமிருந்து வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்திய போதிலும் அதை மீறி வாங்கியுள்ளது. ஒரு யூனிட்டின் சராசரி விலை ரூ. 10.91 ஆகும். இந்த மின்சாரத்தின் விலையானது சாதாரணப் பயனீட்டாளர் முனைக்கு வரும்போது ரூ. 18.78 ஆகிறது. கம்பி இழப்பு போக இதனை விற்று வருகின்ற வரவு யூனிட்டுக்கு ரூ. 5 என்ற கணக்கில் ரூ. 1058 கோடிகளாகும். ஆக ரூ. 2962 கோடிக்கான கொள்முதலில் நட்டம் என்பது ரூ. 1904 கோடிகளாகும்.
மின்சார வாரியத்தின் வல்லூர் மின்நிலையம் உற்பத்தியைத் தொடங்கியிருந்தால் 225 கோடி யூனிட் கிடைத்திருக்கும். குத்தாலம், வழுதூர்1, வழுதூர் 2 ஆகிய மூன்று எரிவாயு நிலையங்களை முறையாகப் பராமரித்திருந்தால் ஏறத்தாழ 140 கோடி யூனிட் கிடைத்திருக்கும். ஆனால் ஏற்கெனவே உள்ள உற்பத்தியையும், புதிய உற்பத்தியையும் முடக்கி வைத்து விட்டுத் தனியார் மின் உற்பத்தியாளருக்குச் சாதகமாகவே மின்வாரியம் செயல்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி, தனியார் காற்றாலை நிறுவனங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் பற்றிய கணக்கெடுப்பில் தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக கணக்கியல் துறை ஊழலிலும் மோசடியிலும் ஈடுபடுகின்றது. இத்துறையின் மோசடியால் மின்வாரியத்துக்கு ஏறத்தாழ ரூ. 4000 கோடிக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த உண்மைகளை விளக்கி, பொறியாளர் சா.காந்தியைத் தலைவராகக் கொண்ட தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் (2013-14) ஏற்படும் ரூ. 10,344 கோடி நட்டத்தில், அரசு ஏற்கும் கட்டண உயர்வு மானியமான ரூ. 973 கோடி போக எஞ்சிய ரூ. 9371 கோடியை எதிர்கால கட்டண உயர்வுக்கான கடனாக அடுத்துவரும் நிதியாண்டிலிருந்து(2014-15) மக்கள் தலையில் சுமத்தப்படும் என்பது நிச்சயமாகிவிட்டது. இதற்காகவே, மின் கட்டண உயர்வுக்காக ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் சமர்ப்பித்துள்ள மனு மீதான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் கடந்த மே மாதம் 3,8,10,17 ஆகிய தேதிகளில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.
ஒருபுறம் மின்வெட்டு; மறுபுறம் கட்டண உயர்வு என்ற இரட்டைச் சுமையைக் கண்டித்து சேலம் மாவட்டத்திலுள்ள வீரமனூர் பகுதி விசைத்தறி உற்பத்தியாளர்கள் நடத்திய சாலைமறியல். (கோப்புப் படம்)
8.5.2013 அன்று திருச்சியில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தபோது, கணக்கு காட்டுவதற்காகவும் மின் கட்டண உயர்வை நியாயப்படுத்திப் பேசுவதற்காகவும் மின்வாரிய ஊழியர்களைப் பொதுமக்கள் போல கொண்டுவந்து மண்டபத்தை நிரப்பியிருந்தனர். சுற்றிலும் போலீசையும் நிறுத்தியிருந்தனர். மின் கட்டண உயர்வுக்கான இக்கருத்துக் கேட்பு கூட்டத்தைத் தனியார்மய எதிர்ப்புக் கண்டனக் கூட்டமாக மாற்றின புரட்சிகர அமைப்புகள்.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் மின்கட்டண உயர்வைத் தீர்மானிக்கிறது; மாநில அரசுக்குக்கூட அந்த அதிகாரம் இல்லை; இதில் மின்வாரியத்தின் பங்கு என்ன? எதற்காக இந்த கருத்துக்கேட்பு நாடகம்? – என்று கேள்வி எழுப்பிய ம.க.இ.க, பு.மா.இ.மு, பெ.வி.மு. மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர்கள், 2003 வரையில் இலாபகரமாக இயங்கிவந்த மின்வாரியம், இன்று நட்டம் ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் தனியார்மயம்தான் என்பதைப் புள்ளிவிவர ஆதாரங்களுடன் விளக்கினர்.
அரசு மின் உற்பத்தி நிலையங்களை இயக்காமல் முடக்கிவிட்டு, தனியார் மின் நிறுவனங்களிடம் கூடுதல் விலைக்கு அதிகமாக மின்சாரம் வாங்குவதன் மர்மம் என்ன? மின்சார ஒழுங்கு முறை ஆணையமே, தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள போதிலும், அதை மின்வாரியம் மீறுவது ஏன்? பிள்ளை பெருமாள் நல்லூரிலுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குச் சொந்தமான தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து மின்சாரமே வாங்காமல் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் சுமார் ஒரு வருட காலத்திற்கு நிலைக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதே, அது ஏன்? மின்வெட்டால் தமிழக மக்கள் இருளில் தத்தளிக்கும்போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மலிவு விலையில் தடையின்றி மின்சாரம் வழங்குவது ஏன்? – என்று பலமுனைகளிலிருந்தும் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர். அதிகாரிகளோ இவற்றுக்கு விளக்கமளிக்க முடியாமல் திணறி மழுப்பினர்.
தனியார்மய – தாராளமயத்தை எதிர்த்தும், தனியார் முதலாளிகளின் கொள்ளைக்கு மின்வாரிய அதிகாரிகள் துணை நிற்பதையும் அம்பலப்படுத்திய தோழர்கள், தனியார் மின்னுற்பத்தி நிலையங்களை அரசு கையகப்படுத்த வேண்டும்; பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பதைத் தீர்வாக முன்வைத்தனர். திரண்டிருந்த உழைக்கும் மக்கள் உண்மைகளைப் புரிந்து கொண்டு ஆரவாரத்துடன் வரவேற்ற இக்கூட்டம், தனியார்மயக் கொள்ளைக்கும் ஊழலுக்கும் எதிரான பிரச்சாரக் கூட்டமாக அமைந்தது.
– பு.ஜ.செய்தியாளர்கள்
________________________________________________________________________________ புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________
ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுகிறது நியூயார்க்கிலிருந்து வெளியாகும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை. நம்மூர் கோவில் கொடை முடிந்து நடக்கும் ஆலமரத்தடி பஞ்சாயத்து கூட்டத்தில் புரவலர்கள் பெயர் வாசிப்பது போன்றது இந்த பத்திரிகையின் பட்டியல். இதில் இடம் பிடிக்கவில்லை என்றாலும், இல்லை கடந்த ஆண்டை விட ரேங்க் பட்டியல் இறங்கினாலும் அந்த பணக்காரர்களுக்கு தூக்கம் மட்டுமல்ல, கௌரவமும் போய்விடும்.
சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலால்
உலகெங்கும் பல கோடி மக்கள் ஏழையினும் ஏழையாய் வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருக்கும் காலத்தில் அந்த ஏழ்மையை உருவாக்கிய இந்த ஏகாம்பரர்கள் தமது சொத்துக் கணக்கை வைத்து கவுரவம் பார்ப்பது ஆபாசமானது.
இந்த ஆண்டு மார்ச் 4-ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் தன் சொத்து மதிப்பு $20 பில்லியன் (ரூ 1.16 லட்சம் கோடி) என்று குறிப்பிட்டிருப்பது தவறானது, வேண்டுமென்றே மத்திய கிழக்கில் உள்ள செல்வந்தர்களின் சொத்து மதிப்பை ஃபோர்ப்ஸ் குறைத்து மதிப்பிட்டுள்ளது என்று மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார் சவுதி அரேபிய இளவரசர் அல்வாலீத் பின் தலால். அவர் மன்னர் அப்துல்லாவின் மருமகனும் சவுதி அரச பரம்பரையை உருவாக்கியவரின் பேரனும் ஆவார்.
நம்மூரில் சொத்துக்களையும் வருமானத்தையும் குறைத்துக் காண்பித்து கருப்புப் பணம் மூலம் வருமான வரியிலிருந்து தப்பி வரும் முதலாளிகளோடு இதை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். நமது நாடு போலி ஜனநாயகம் என்பதால் இங்கே மன்னராட்சி என்பது திருட்டுத்தனமாகவே நடைபெறும். மாறாக சவுதி என்பது அப்பட்டமான சர்வாதிகார மன்னராட்சி என்பதால் அங்கே சொத்துக் கணக்கு என்பதுதான் அதிகாரத்தின் அளவு கோல். அந்தக் காலத்தில் ஆண்டான்கள் அடிமைகளின் எண்ணிக்கையை வைத்து பெருமை பேசியது போல ஷேக்குகள் பில்லியன் கணக்கில் டாலரை முன்வைத்து பெருமையை பேச வைக்கிறார்கள்.
ஃபோர்ப்ஸ் கணக்கிட்டதை விட தனது சொத்து மதிப்பு $9.6 பில்லியன் (ரூ 58,000 கோடி) அதிகம் என்கிறார் இளவரசர். உலகப் பணக்காரர்கள் வரிசையில் அவரை 26-வது இடத்தில் வரிசைப்படுத்தியது மோசடியானது என்கிறார். அவருக்கு வங்கி-நிதி நிறுவனம் சிட்டி குரூப், ஊடக முதலாளி முர்டோச்சின் நியூஸ் கார்ப், ஐ போன் புகழ் ஆப்பிள் ஆகியவற்றில் பெரும் அளவிலான பங்குகள் உள்ளனவாம். நியூயார்க்கில் உள்ள பிளாசா ஹோட்டல், லண்டனில் உள்ள சவாய் ஹோட்டல், பாரிசில் உள்ள ஜார்ஜ் V ஹோட்டல் ஆகியவற்றிலும் அவருக்கு சொத்துரிமை இருக்கிறதாம்.
கிறித்தவ அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இவ்வளவு பணத்தை முதலீடு செய்வதற்கு அல்லா குர் ஆனின் எந்த அத்தியாயத்தில் அனுமதி தந்திருக்கிறார்? ஈராக்கிலும், ஆஃப்கானிலும், பாக்கிலும் அப்பாவி முசுலீம்களை கொன்று குவிக்கும் ஏகாதிபத்தியங்களின் நிறுவனங்களில்தான் சவுதி ஷேக்குகள் முதலீடு செய்து வட்டி பெறுகிறார்கள். அவையெல்லாம் ஏழை முசுலீம்களைக் கொன்று வரும் இரத்தப்பணம் என்பது ஷேக்குகளுக்கு பொருந்தாது போலும். ஒருவேளை மெக்காவில் இருக்கும் அல்லாவே சவுதி ஷேக்குகள் கட்டுப்பாட்டில்தான் கைதியாக இருக்கிறாரோ என்னமோ?
சவுதியில் வேலை செய்யும் தெற்காசிய தொழிலாளர்கள்
பாசிசமும், கோமாளித்தனமும், ஆடம்பரமும் கலந்து உருவான இந்த சவுதி இளவரசர் போட்ட வழக்கை சென்சேஷனாக மாற்றி ஆதாயம் பார்க்கிறதுஃபோர்ப்ஸ் பத்திரிகை. அதன் பொருட்டும், தனது மதிப்பீடு எப்போதும் தவறானதில்லை, கணக்கு சரிதான் என்று சாதிக்கிறது. சவுதி அரேபிய அரச பரம்பரையினரின் சொத்து விபரங்கள் குழப்படியாக இருப்பதாக மார்ச் 25 தேதியிட்ட இதழில் சிறப்புக் கட்டுரை எழுதியிருக்கிறது. உலகெங்கும் சொத்துக்களை குவித்துள்ள சவுதி ஷேக்குகள் தமது சொத்து விவரங்களை சரியாக வைத்திருக்கவில்லையோ என்னவோ! இத்தகைய பணக்காரர்களின் ஆசை நாயகிகளுக்கும் கணக்கில்லை, அடுக்கு மாளிகைகளுக்கும் கணக்கில்லை என்றால் ஃபோர்ப்ஸ் பத்திரிகை என்ன செய்யும்?
மார்பிளால் இழைக்கப்பட்ட ரியாதில் உள்ள 420 அறைகள் கொண்ட இளவரசர் அல்வாலீத் பின்தலாலின் மாளிகை, அவருக்குச் சொந்தமான அரியணை பொருத்தப்பட்ட போயிங் 747 ஜெட் விமானம், ரியாதுக்கு அருகில் 5 வீடுகள், 5 செயற்கை ஏரிகள், ஒரு மினி கிராண்ட் கேன்யன் இவற்றைக் கொண்ட 120 ஏக்கர் பரப்பிலான சொகுசு வாசஸ்தலம் போன்ற இளவரசர் கவலைப்படாத வஸ்துக்களையெல்லாம் கணக்கில் கொண்டுதான் சொத்துக் கணக்கைப் பற்றி விவரித்திருப்பதாக முன்மொழிகிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. இதே சவுதி அரேபியாவில் பாலைவன வெயிலில் உழைத்தும், பரிதாபமான கூடாரங்களில் மந்தைகளைப் போல வாழ்ந்தும் காலம் தள்ளும் தெற்காசிய தொழிலாளிகளும் முசுலீம், சவுதி இளவரசரும் முசுலீம் என்றால் நாம் ஏன் அல்லாவை நம்ப வேண்டும்?
ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆசிரியர் ராண்டால் லேன், கட்டுரையை எழுதிய கெர்ரி டோலன், கட்டுரைக்கு கூடுதல் விபரங்கள் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்த பிரான்சின் மெக்கென்னா ஆகியோர் மீது அல்வாலீத் பின்தலால் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை நியூயார்க்கில் இருந்து வெளியானாலும், லண்டன் உயர் நீதிமன்றத்தில் உயர் ‘புத்திசாலி’த்தனமாக வழக்கு தொடர்ந்திருக்கிறார் சவுதி இளவரசர். அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தால், தகவல் தவறானது என்றும் தவறு என்று தெரிந்தே அவதூறு செய்வதற்காக வெளியிடப்பட்டது என்றும் குற்றம் சாட்டுபவர் நிரூபிக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து சட்டப்படி தகவல் மானநஷ்டம் ஏற்படுத்தும்படியானது என்று மட்டும் நிரூபித்தால் போதும், குற்றம் சாட்டப்பட்டவர்தான் தனக்கு தவறான நோக்கம் இல்லை என்று நிரூபிக்க வேண்டும்.
ஹாலிவுட் படங்களில் காமடி பணக்காரர்களாக வரும் சவுதி ஷேக்குகள் இப்படியெல்லாம் யோசித்து அமெரிக்காவை விட்டு இங்கிலாந்தில் வழக்கு போடுமளவு அறிவாளிகளோ, இல்லை ஆவரேஜான பேர்வழிகளோ இல்லை. ஒரு வேளை தான் யோசிப்பதற்கு கூட ஏதாவது இந்திய அம்பிகளை வாடகைக்கு அமர்த்தி வைலைக்கு வைத்திருக்கிறாரோ சவுதி இளவரசர்?
தனது சொத்து மதிப்பை குறைத்து மதிப்பிட்டதால் மானம் போய் விட்டதாக புலம்பும் இந்த ஷேக்கின் அரசுதான் சவுதி அரேபிய குடும்பங்களில் வீட்டு வேலை செய்யப் போகும் இந்தியப் பெண்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கி சுரண்டுவதற்கு ஏற்பாடு செய்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலை செய்யப் போகும் பெண்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் கொடுக்க வேண்டும், பாதுகாப்புக்காக தூதரகத்தில் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளை இந்திய அரசு விதித்தது. அதை அடுத்து சவுதி அரேபிய குடும்பங்கள் இந்தியப் பெண்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்தி விட்டன. இப்போது இந்திய தொழிலாளர் நல அமைச்சகம் சவுதி ஷேக்குகளின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டதால் இந்திய பெண்களை மீண்டும் வேலைக்கு எடுக்க ஆரம்பித்திருக்கிறது சவுதி அரேபியா. வீட்டு வேலை செய்ய பெண் பணியாளர்களை அனுப்பும் மற்ற மூன்று நாடுகளுடனும் இதே போன்ற ஒப்பந்தங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் போடப்படும் என்கிறது சவுதி அரசு.
அப்படி வரும் ரிசானா போன்ற சிறுமிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியும், இல்லை வேலை சரியாக செய்யவில்லை என்று கொலையும் செய்வது இந்த அமெரிக்க அடிமை ஷேக்குகளின் வாடிக்கை.
தம் நாட்டு குடும்பங்களுக்காக உழைக்கும் பெண்களுக்கு நியாயமான ஊதியத்தையும் உரிமைகளையும் மறுப்பது சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலாலுக்கு மான நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் இஸ்லாமிய, எண்ணெய் வளத்தில் மிதக்கும் ஷேக்குகளின் ஆபாசமான நியாயம்.
இத்தகைய ஷேக்குகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அவர்களை அரேபிய பாலைவனத்தில் குடையில்லாமல் ஒட்டகம் மேய்க்கச் செய்து நல்வழிப்படுத்தும் வேலையினை அல்லா செய்ய மாட்டார். தொழிலாளிகள் செய்வார்கள். அதுவரையிலும் ஷேக்குகள் ஆட்டம் போடலாம்.
_________________________________________
– அப்துல்
_________________________________________
அந்த ஒரு சீட்டின் கணக்குகள் கணிதவியலின் பரிமாணத்திற்குள் அடங்காத ஒன்று. உங்கள் குழந்தைகளுக்கு கணக்கு வரவில்லை என்று கவலைப்படுகிறீர்களா? பரவாயில்லை, ராஜ்ய சபா தேர்தலின் பொருட்டு தமிழகத்தில் கட்சிகள் போட்டு வரும் மனக்கணக்கு, பணக்கணக்கு, அரசியல் கணக்குகளை வைத்து அந்த ஆறாவது உறுப்பினர் யார் என்பதை கண்டு பிடிக்கச் சொல்லுங்கள்! உங்கள் குழந்தை கணிதத்தில் நிபுணத்துவம் பெற்று விடும்.
அந்த ஒரு சீட்டு திமுகவிற்கோ, தேமுதிகவிற்கோ போய்விடக்கூடாது என்று மற்றவரை விட அதிகம் கவலைப்பட்டவர் ‘புரட்சித் தலைவி’. சட்டசபையில் மிருக பல பெரும்பான்மை இருந்தும், பாராளுமன்ற மேலவையின் நான்கு உறுப்பினர்களை எளிதாக தெரிவு செய்யும் பலமிருந்தும், ‘அம்மா’ சும்மா இருக்கவில்லை. 5, 6-வது உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதனாலேயே ஐந்தாவது வேட்பாளரையும் அறிவித்தார். கனிமொழி வேட்பு மனுவைத் தொடர்ந்து தேமுதிகவும் களமிறங்கியதும் அம்மா மனமிறங்கி ஐந்தாவதை வலது கம்யூனிஸ்ட்டுகளுக்கு விட்டுக் கொடுத்தார். அந்த ஒரு சீட்டுக்காக அவர்கள் அடித்துக் கொள்ளட்டும் என்பது ‘அம்மா’வின் நேயர் விருப்பம்
அந்த ஒரு சீட்டு அதாவது ஆறாவது சீட்டு அம்மாவின் கடைக்கண் பார்வை பெறுவோரே பெற முடியும் என்று குதூகலிக்கிறது தினமணி. அதிருப்தி தேமுதிக உறுப்பினர்கள் வாக்கு ஏழு, மற்றும் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் அம்மாவின் ஆணைக்கு காத்திருப்பதாக சாமரம் வீசுகிறது தினமணி. அம்மாவைப் பொறுத்த வரை தேமுதிக, திமுக இரண்டும் வெற்றி பெறக் கூடாது. அல்லது வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் எதிர்க்கட்சி கூட்டணி ஆயத்தங்களை உடைக்குமளவாவது காய்களை நகர்த்த வேண்டும்.
அம்மாவுக்கு மட்டுமல்ல அம்மா டேபிளுக்கும் சேர்த்து விழும் மைத்ரேயன்!
அந்த ஒரு சீட்டிற்காக அம்மா அறிவித்ததும் மயிலாப்பூர் மருத்துவர் மைத்ரேயன் அம்மா காலடியில் விழுந்து சேவித்த புகைப்படம் பார்த்தீர்களா? என்ன இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவில் இருக்கும் போது இதே மைத்ரேயன் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன் காலில் விழுந்தவர் அல்லவா? ஒரு ஸ்வயம் சேவக் எந்தக் கட்சியிலும் இருந்தாலும் இப்படி பெரியோரை மதிக்கும் ஒழுக்கம் கொண்டவனாக இருப்பான் என்பதற்கு வாழும் எடுத்துக் காட்டு மைத்ரேயன். வந்தே மாதரம்! அம்மாவே சரணம்!
அந்த ஒரு சீட்டிற்காக தூத்துக்குடி சரவண பெருமாளை அறிவித்தாரே ‘அம்மா’, அந்தக் கதை நினைவிருக்கிறதா? அதிமுகவின் மாணவரணி செயலாளராக இருக்கும் 50 வயது சரவண பெருமாள் இரண்டு முறை கடத்தல் வழக்குகளில் பிடிபட்டு சிறை சென்ற சாதனையாளர். இத்தகைய கிரிமினல்கள் கூட ‘அம்மா’வின் கடைக்கண் பட்டு சாகாவரம் பெறுகிறார்கள். என்ன இருந்தாலும் ஒரு கிரிமினலின் மனது இன்னொரு கிரிமினலுக்குத்தானே தெரியும். பிறகு ஊடகங்களில் ஐயாவின் சாதனைகள் நாறியதால் கமுக்கமாக வேட்பாளரை மாற்றிவிட்டார் ‘அம்மா’.
அந்த ஒரு சீட்டிற்காக வெட்கம், மானம், சூடு, சுரணை இன்னபிற சுயமரியாதை சமாச்சாரங்களை கடாசி விட்டு, கறிக்கடையை சுற்றி வரும் நாலு கால் ஜீவன் போல அலைகிறது திமுக. இத்தகைய சுயமரியாதை எல்லாம் திமுவிற்கு இதற்கு முன்பே கிடையாதே என்று நீங்கள் வியக்கலாம். எனினும் நடப்பிலுள்ள மரியாதைக்குரிய தமிழ் வார்த்தைகளை வைத்துத்தானே திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை புரிந்து கொள்ள முடியும்? 23 உறுப்பினர்களுடன் இன்னுமொரு 11 உறுப்பினர்களை வாங்கி விடலாம் என்று பல்வேறு தேர்தல் விளையாட்டுக்களை சந்தித்த திமுக முடிவு செய்தது. ஆனாலும் வேட்பாளர் யாரென்று சண்டையெல்லாம் நடக்கவில்லை. கருணாநிதி குடும்பத்திற்கு போகத்தான் பதவிகளோ, பணியாரமோ மற்றவர்களுக்கு பங்கிடப்படும் என்ற விதி அமலில் இருப்பதால் ராஜாத்தி அம்மாளின் நெருக்குதலில் கனிமொழி ஏகமனதாக வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.
“புதுதில்லியில் அட்ரஸ் வேணும்”
அந்த ஒரு சீட்டிற்காக திமுக நடத்தியிருப்பது கிட்டத்தட்ட பிச்சை எடுப்பது போன்ற பரிதாபம்தான். திராவிடக் கட்சிகளை ஒழிப்பேன் என்று சபதம் எடுத்து புழல் சிறைக்கும், அப்பல்லோவிற்கும் விஜயம் செய்த ராமதாஸிடம் பல்லை இளித்துக் கொண்டு ஆதரவு கேட்டது திமுக. அதை நோட்டம் பார்க்கவே அப்பல்லோவில் துரை முருகனைப் பார்க்கச் செல்லும் சாக்கில் அன்புமணியைச் சந்தித்தார்கள் கருணாநிதியின் வாரிசுகள். தனது அரசியல் வாழ்வில் விஜயகாந்தால் அதிகம் கண்டிக்கப்பட்ட திமுகதான் எப்படியாவது கேப்டன் மனமிறங்கி அருள்பாலிக்க மாட்டாரா என்று தவம் இருக்கிறது. இல்லையென்றால் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அம்மா போல மற்றுமொரு ஏழு விக்கெட்டுகளை விலைக்கு வாங்கலாமா என்று ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடுகிறது. துரத்தி விட்ட காங்கிரசிடம் தூது போகிறது. அறுத்துக் கொண்டு போன மார்க்சிஸ்டுகளிடம் நோட்டம் பார்க்கிறது. எல்லாம் எதற்காம்? 2 ஜி வழக்கின் வாய்தாக்களை கனிமொழி எதிர்கொள்வதற்கு புது தில்லியில் ஒரு தங்குமிடமும், அடையாள அட்டையும் வேண்டுமாம்.
அந்த ஒரு சீட்டு கேப்டனை அலைக்கழித்த விதம் அலாதியானது. அறுவர் சஸ்பெண்ட், அறுவரிலிருந்து எழுவரான ஓடுகாலிகள் என்று துக்கத்தில் இருந்த கேப்டன் தனது கட்சி அலுவலகத்தில் மெயின் கேட்டை எப்போதும் மூடியே வைத்திருக்கிறாம். அவரே தலையில் முக்காடு போட்ட துண்டுடன் சிறிய கேட் வழியாகவே அலுவலகம் செல்கிறாராம். ஆக திமுக தொலைநோக்கோடு கல்யாண மண்டபத்தின் போர்ட்டிகோவை இடித்தது சரி என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது. திமுகவை திட்டியிருக்கிறோம், அதிமுகவை பகைத்துக் கொள்ள முடியாது என்று திரிசங்கு நரகத்தில் இருந்த கேப்டன் இந்த தேர்தலை கசப்பு மருந்தாக கடந்து விடவே எண்ணினார்.
அந்த ஒரு சீட்டில் போட்டியிடவா, புறக்கணிக்கவா என்பதிலேயே நாட்கள் கடந்து விட்டன. மச்சான் சதீஷை வேட்பாளராக நியமிக்கச் சொல்லி மனைவி பிரேமலதா நெருக்கடி கொடுக்க, எதிர்கால அபாயங்களை எண்ணி நிகழ்கால தேர்தல் குறித்து யோசித்தே தலைமுடி டையையும் மீறி நரைத்துப் போனது. திமுகவை ஆதரித்தால் இத்தனை நாட்கள் கிடைத்து வந்த திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் போய் இன்னுமொரு மதிமுக போல அரசியல் அனாதையாக மாறிவிடுவீர்கள் என்று சோ, தினமலர், தினமணி அம்பி வகையறாக்கள் ஓதி வந்தன. அப்படி ஒரு அனாதையாக்கத்தான் அம்மாவும் தீவிரமாக முயன்று வருகிறார் என்பதை அம்பிகள் மறைத்து விட்டு இந்த வஞ்சப் புகழ்ச்சி அணியை விடாது பாடினர். இறுதியில் வேறு வழியின்றி கட்சியின் பொருளாளர் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து விட்டு நடப்பது நடக்கட்டும் என்று ஒதுங்கிக் கொண்டார் விஜயகாந்த்.
அதிமுகவின் கம்யூனிஸ்ட் பிரிவு செயலர் தா பாண்டியன் ‘அம்மா’வுடன்
அந்த ஒரு சீட்டு குறித்து மார்க்சிஸ்டுகள் வெகுவாக அலட்டிக் கொள்ளவில்லை. துரத்தி விட்ட அதிமுகவை ஆதரிக்க முடியாது. விட்டுவிட்டு வந்த திமுகவையும் ஆதரிக்க முடியாது. கேப்டனோ சண்டை போடுமளவு பலமில்லை. இறுதியல் கம்யூனிசம் என்ற பெயருக்காக வலதுகளை மட்டும்தான் ஆதரிக்க முடியும். வலது வெற்றி பெறுவது தாபாவின் கையில் என்பதால் மார்க்சிஸ்டுகள் வேடிக்கை பார்ப்பவரின் மனநிலையில் இருந்தார்கள். இந்திய அளவில் மூன்றாவது அணியின் ஹோல் சேல் வியாபாரிகளாக இருந்த மார்க்சிஸ்டுகளை மம்தாவும், நிதீஷ்குமாரும், நவீன்பட்நாயக்கும், ஏன் ஜெயலலிதாவும் கூட ஓரங்கட்டி விட்டதால் மேட்ச் பிக்சிங் செய்யப்பட்ட போட்டிக்கு கூட நடுவராக இருக்க முடியவில்லையே என்று தோழர்கள் அழுது கொண்டே சிரிக்கையில் இந்த தேர்தலெல்லாம் ஒரு பிரச்சினையா என்ன?
அந்த ஒரு சீட்டுக்காக அதிமுகவின் கம்யூனிஸ்ட் பிரிவு செயலரும், ஜெயலலிதாவின் பாணபத்திர ஓணாண்டியுமான தா. பாண்டியன் வெகு நாட்களாக ஒற்றைக் காலில் தவம் செய்கிறார். புதுக்கோட்டை முத்துராமன் இறந்த பிறகு கூட தாபா எளிமை புகழ் நல்லக்கண்ணுவை அழைத்துக் கொண்டு கோட்டைக்குச் சென்று அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க அலைந்தார். அவரது பிறந்தநாளுக்கு கூட அம்மா வந்து ஹேப்பி பர்த் டே சொன்னது மற்ற அடிமைகளுக்கெல்லாம் கிடைக்காத அங்கீகாரம். தாபா வேட்பாளர் என்றால் அம்மா சும்மாவே ஆதரவு கொடுப்பார் என்ற உண்மை வதந்தியை அவர் சொல்லாமலேயே ஊடகங்கள் அவ்வப்போது நினைவுபடுத்தி வந்தன. இரவுக் கனவுகளில் அந்த நினைவுபடுத்தல்கள் இனிய ஜாங்கிரிகளாக தாபாவை உமிழ்நீர் பொங்க அலைக்கழித்திருக்கும்.
அந்த ஒரு சீட்டுக்காக வலது கம்யூனிஸ்டு தலைவர்கள் பரதன், சுதாகர் ரெட்டி சென்னை வந்து காத்திருந்தார்கள். அம்மன் தரிசனம் கிடைக்கவில்லை. கூடவே அதிமுக அறிவித்த ஐந்து வேட்பாளர் என்ற எண்ணிக்கை வலதுகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது. தன்னை மறுத்து டி.ராஜாதான் வேட்பாளர் என்றால் அம்மா இப்படித்தான செய்வார் என்று தாபா உள்ளுக்குள் குதூகலித்ததை அவரது சக தோழர்கள் உணராமலில்லை. சென்னையில் மறுத்த அம்மனை அவர்கள் தில்லி வரை துரத்தி சந்தித்தார்கள். அம்மா இடம் கொடுத்து பேசவில்லை. ஆகட்டும் பார்க்கலாம் என்று விடை கொடுத்தார். இறுதியில் திமுகவும், தேமுதிகவும் மோதுகிறது என்பது உறுதியான பிறகே அவர் வலது வேட்பாளர் டி.ராஜாவை ஆதரிப்பதாக அறிவித்தார். எதிரிகளுக்கு கிடைக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் வலது அடிமைகளுக்கு ஒரு சீட் கிடைத்திருக்கிறது. இனி வலது கட்சி என்ன செய்ய வேண்டும் என்பதை தாபா மூலம் அம்மா சொல்வதை ஆயுள் முழுக்க செய்வார்கள் வலது அடிமைகள். நமக்கு வாய்த்த அடிமை இத்தனை சீப்பா என்று தாபாவிடம் அம்மா ஆச்சரியப்படலாம்.
அந்த ஒரு சீட்டை கனவு காணுமளவுக்கு உறுப்பினர்கள் இல்லையே என்பது காங்கிரசின் இல்லையில்லை காங்கிரஸ் கோஷ்டிகளின் கவலை. தேமுதிகவும், திமுகவும் தூது அனுப்பியிருக்கிறார்கள். ஐந்து உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் யாரை ஆதரிக்கும் என்பதை சோனியா முடிவு செய்வார் என்று ஞானதேசிகன் சொல்லியிருக்கிறார். அந்த ஞானசூனியம் இதன்றி வேறு என்ன சொல்லியிருப்பார், இதையெல்லாம் ஒரு செய்தியாக ஏன் எழுதுகிறீர்கள் என்று நீங்கள் கோபப்படுகிறது தெரிகிறது. அடிமைகள் அன்னையிடம் கேட்டுத்தான் கனைப்பார்கள் என்றாலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தை எப்படியாவது ஏமாற்றி சில பல தொகுதிகளை பெறுவது என்ற யோசனையில் இருக்கும் ராகுல் காந்தி என்ன முடிவெடுப்பார் என்பதைப் பொறுத்தும் அந்த ஒரு சீட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படலாம்.
அந்த ஒரு சீட்டுக்காக அனைத்துக் கட்சிகளும் அலைந்து திரிந்து குனிந்து தொழுது வாங்கி விற்று வரும் இந்த சூழலை வைத்து பத்திரிகைகள் ஒரு மாதமாக கிசுகிசு அக்கப்போர்களை மாபெரும் போர் போல எழுதி குவித்துவிட்டன. அந்த ஒரு சீட்டுக்கான ஓட்டுக் கட்சிகளின் இந்த கவிதை வார்த்தைகளுக்கு இடையே ஒளிந்து கொண்டிருக்கும் மறை பொருள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
இந்திய – ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் : பகற்கொள்ளைக்குப் பச்சைக்கொடி !
காட் ஒப்பந்தம் உருவான பின்னர், உலக நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்திடும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் உலக வர்த்தகக் கழகம். ஏற்கெனவே உலக வர்த்தகக் கழகத்தின் விதிகளால் திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தின் காரணமாக ஏழை நாடுகளின் உள்நாட்டு சிறுதொழில்களும் விவசாயமும் நசியத் தொடங்கிப் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழுத்த ஆதாயமடைந்தன. இதனால் உலக வர்த்தகக் கழகத்தில் ஏழை நாடுகளுக்கும் வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகளுக்குமிடையே முரண்பாடுகள் முற்றின.
இந்திய- ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்காக டெல்லியில் கடந்த பிப்ரவரியில் நடந்த மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஹெர்மன் வான் ரோம்புய் (இடது), ஐரோப்பிய ஒன்றியக் கமிசனின் தலைவர் ஜோஸ் பர்ரோசா (வலது) ஆகியோரை வரவேற்கும் மன்மோகன் சிங்.
மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளில் மானியம் அளித்து உற்பத்தி செய்யப்படும் விவசாய விளைபொருட்கள் சர்வதேச சந்தைக்கு வரும்போது, அவற்றின் விலை ஒப்பீட்டு ரீதியில் குறைவாக இருப்பதால், ஏழை நாடுகளின் பொருட்களுக்கு அதிக விலையின் காரணமாகப் போதுமான சந்தை கிடைக்காத நிலை ஏற்படுகிறது என்றும்; இதனால் தமது நாட்டின் வர்த்தகம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதாகவும் வாதிடும் ஏழை நாடுகள், மேலைநாடுகள் தமது நாட்டு விவசாயத்துக்கு அளிக்கும் மானியத்தைக் குறைக்க வேண்டுமென்று கோருகின்றன. கடந்த 2001-இல் இதையொட்டியும், வர்த்தகம் தொடர்பான இதர விதிகள் பற்றியும் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில், உலக நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. 2005-க்குள் நிறைவடைய வேண்டுமெனத் தீர்மானித்திருந்த போதிலும் இப்பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவடையவில்லை. நாடுகளுக்கு இடையிலான பொது உலக வர்த்தக விதிகள் மற்றும் நிபந்தனைகளை உருவாக்கவும் முடியவில்லை.
இதனால், தமது வர்த்தகமும் ஆதிக்கமும் கொள்ளையும் பாதிக்கப்படுவதாலும், ஏற்கெனவே பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிப்பதாலும், ஏகாதிபத்திய நாடுகள் ஒரு புதிய தந்திரத்தை மேற்கொள்ளத் தொடங்கின. அதுதான் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம். இது, இரு நாடுகளுக்கிடையிலானதாக அல்லது பன்னாடுகளுக்கிடையிலானதாக இருக்கும். தோஹாவில் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வருவதற்கு முன்னரே, கொல்லைப்புறமாக இப்படியொரு ஏற்பாட்டை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் உலக வர்த்தகக் கழகத்தின் விதிகள் மற்றும் நிபந்தனைகளைவிடக் கடுமையாக இருப்பதால் – அதாவது, ஏகாதிபத்திய நாடுகளுக்குக் கூடுதலாகச் சலுகைகள் தரப்படுவதால், இதனை “உலக வர்த்தகக் கழகம் பிளஸ்” என்றும் குறிப்பிடுகின்றனர். தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கான வர்த்தக அமைச்சர்களின் மாநாடுகள் மற்றும் கூட்டங்களில், நாட்டின் நலனுக்காக நிற்பதைப் போலவும், ஏகாதிபத்தியங்களை எதிர்ப்பதாகவும் சவடால் அடிக்கும் இந்திய அமைச்சர்கள், இத்தகைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை இரகசியமாகப் போட்டுக் கொண்டு நாட்டை மேலும் அடிமையாக்குவதில் குறியாக இருக்கின்றனர்.
இலங்கை, தாய்லாந்து மற்றும் தெற்காசிய நாடுகளுடன் ஏற்கெனவே சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டுள்ள இந்தியா, 2005-இல் முதன் முதலாக சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. 27 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்துடன் தற்போது பிரஸ்செல்ஸ் நகரில் இந்திய- ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் இரகசியமாக நடந்து வருகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிட்டு முற்றாக ஐரோப்பிய ஒன்றிய கார்ப்பரேட் நிறுனங்களுக்கு நாட்டைத் திறந்துவிடுவதுதான் இந்திய-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் சாரம். இது ஏதோ வழக்கமானதொரு வர்த்தக ஒப்பந்தம் அல்ல; இது, நாட்டின் அரைகுறை இறையாண்மையையும் முற்றாக துடைத்தெறிந்துவிட்டு, கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்களை வீதிகளில் வீசியெறியும் ஒரு பேரழிவுக்கான தயாரிப்பு.
இந்திய – ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி மணிப்பூர் மாநில வர்த்தகர்களும் உழைக்கும் மக்களும் இணைந்து கடந்த பிப்ரவரியில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி.
ஐரோப்பிய கார்ப்பரேட் நிறுவனங்களை இந்திய முதலீட்டாளர்களைப் போலச் சமமாக நடத்த வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான விதியாகும். அதாவது, இந்திய முதலீட்டாளருக்கு அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் ஐரோப்பிய கார்ப்பரேட் முதலீட்டாளருக்கும் சமமாக வழங்கப்படும். இந்திய முதலீட்டாளர்கள் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி வீட்டுமனையாக்குவதைப் போல, ஐரோப்பிய கார்ப்பரேட் முதலீட்டு நிறுவனமும் இந்தியாவில் விவசாய நிலங்களை வாங்கலாம், தேவையானதைப் பயிரிட்டு ஏற்றுமதி செய்யலாம் அல்லது வீட்டு மனையாக்கலாம்; அதற்கு எவ்விதத் தடையோ, கட்டுப்பாடுகளோ இருக்கக் கூடாது என்கிறது, இந்த ஒப்பந்தம்.
இதன் விளைவாக, பயிரிடப்படும் நிலங்களை ஐரோப்பிய முதலீட்டாளர்கள் மொத்தமாகக் கைப்பற்றி, அவற்றைத் தமது ஏற்றுமதிக்கும் கொள்ளை லாபம் தரக்கூடிய பணப்பயிர் உற்பத்திக்கானதாகவும் மாற்றிக் கொள்ள முடியும். இதனால், இந்தியாவில் உணவு உற்பத்தி நாசமாக்கப்பட்டு, இனி உணவுக்கு ஐரோப்பிய எஜமானர்களின் தயவை எதிர் நோக்கியிருக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படும்.
ஒரு ஐரோப்பிய கார்ப்பரேட் நிறுவனம் ஒரு ஊரில் விவசாய நிலங்களை கணிசமான அளவுக்கு வாங்கி, அதில் மிகப் பெரிய பண்ணையை நிறுவி அதற்காக ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து வரைமுறையின்றி நீரை உறிஞ்சி விவசாயம் செய்யலாம். இதனால், அருகிலுள்ள சிறு விவசாயிகளின் பாரம்பரியமான கிணறுகள் வற்றிப்போனால், அந்த விவசாயி அருகிலுள்ள ஐரோப்பிய கார்ப்பரேட் நிறுவனத்தின் அடாவடித்தனத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. அவர் அந்த நிலத்தை அடிமாட்டு விலைக்கு ஐரோப்பிய நிறுவனத்துக்கு விற்று விட்டு, தனது நிலத்திலேயே ஐரோப்பிய பண்ணையின் கூலியாக வேலைக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போகும்.
ஐரோப்பிய நாடுகளில் விவசாயம் மற்றும் பால் உற்பத்திக்கு அரசின் மானியம் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அளிக்கப்படுகிறது. இதனால், ஐரோப்பிய விவசாய மற்றும் பால் பொருட்கள் சர்வதேசச் சந்தையில் ஒப்பீட்டு ரீதியில் விலை மலிவானதாகவும், இந்திய விவசாய மற்றும் பால் பொருட்களின் விலை அதிகமானதாகவும் இருக்கிறது. மேலும், இந்த ஒப்பந்தப்படி இறக்குமதித் தீர்வை 90 சதவீதம் அளவுக்கு 7 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதால், இந்தத் தாராளச் சலுகையின் காரணமாக ஐரோப்பிய கார்ப்பரேட் நிறுவனங்களின் மலிவான விவசாய மற்றும் பால் பொருட்களும், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களும். குளிர்பானங்களும் இந்தியாவில் மலை போலக் குவியும். இதனால், மலிவான ஐரோப்பிய உணவுப் பொருட்களின் விலைக்கு உள்நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை விற்க முடியாமல், உள்நாட்டு விவசாயமும் பால் உற்பத்தியும் நாசமாக்கப்பட்டு, இவற்றில் ஈடுபட்டுள்ள கோடானு கோடி விவசாயிகளும், சிறுவீத உற்பத்தியாளர்களும் ஓட்டாண்டிகளாகிப் போவார்கள்.
இறக்குமதித் தீர்வை பெருமளவில் குறைக்கப்படுவதால், ஐரோப்பிய தானியங்கி வாகன உற்பத்தியாளர்கள் உதிரிப் பாகங்களை இந்தியாவுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்வார்கள். இந்தியாவில் சிறுதொழில் உற்பத்தியாகத் தயாராகும் உதிரிப் பாகங்களை விட, அவை ஒப்பீட்டு ரீதியில் மலிவானதாக இருக்கும் என்பதால், உள்நாட்டு உதிரிப் பாக உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் பொருளுற்பத்தித் துறையும், வேலை வாய்ப்பும் நாசமாகும்.
மேலும், இந்திய உற்பத்திப் பொருட்களின் தரத்தை ஏற்காமல் நிராகரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு முழு உரிமை உண்டு என்று என்று இந்த ஒப்பந்தத்தில் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு இந்திய நிறுவனம் இந்தியாவில் விளையும் மாம்பழத்தையோ,வாழைப்பழத்தையோ ஏற்றுமதி செய்தால், அது தரமானதல்ல என்று ஐரோப்பிய நாடுகள் நிராகரிக்கலாம். இதை ஏன் என்று இந்தியா கேட்கக் கூடாது. இதுதான் இந்த ஒப்பந்தத்தின் மகிமை.
இந்த ஒப்பந்தப்படி ஐரோப்பிய உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கூடுதல் சலுகைகள் தரப்படும். இதன்படி, ஐரோப்பிய நிறுவனங்கள் தனது தானிய விதைகளை இந்திய விவசாயிகளிடம் விற்கலாம். அதற்குரிய ராயல்டியும் பெறலாம். இதன் விளைவாக, இந்திய விவசாயிகள் தங்களது பாரம்பரிய விதைகளைச் சேமித்து வைக்கவோ, பரிமாறிக் கொள்ளவோ முடியாமல் போகும். ஏற்கெனவே பி.டி. பருத்தி விதைகளால் பாரம்பரிய பருத்தி விவசாயம் நாசமாகி, இந்திய விவசாயிகள் பல்லாயிரக் கணக்கில் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இப்போது அதே பாதையில் ஐரோப்பிய எஜமானர்களுக்குக் கதவை அகலத் திறந்துவிட்டுள்ளது, ஆளும் கும்பல்.
இவை தவிர, விவசாயப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஏகபோகமாக உள்ள கேர்ஃபோர், டெஸ்கோ போன்ற நிறுவனங்கள் இனி தாராளமாக உள்ளே நுழைய ஏற்பாடாகியுள்ளது. கொள்முதல் செய்வதிலிருந்து விற்பனை வரை அனைத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் இந்நிறுவனங்கள் கொண்டு வந்து விடும் என்பதால், இதன் விளைவாக இலட்சக்கணக்கான சில்லறை வணிகர்கள் வாழ்விழப்பார்கள்.
உலகளாவிய நிதி நெருக்கடியால், உள்நாட்டில் பெற்ற ஆதாயத்தைவிட இந்தியாவில் அதிக ஆதாயத்தை ஐரோப்பிய வங்கிகள் அடைந்துள்ளதால், அவை மேலும் விரிவடையும் வகையிலும், நிதித்துறை சேவை நிறுவனங்களிலும் வங்கித்துறையிலும் ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் தாராளமாக நுழைய இந்த ஒப்பந்தத்தில் ஏற்பாடாகியுள்ளது. ஐரோப்பிய வங்கித்துறையை ஒப்பிடும்போது, இந்திய வங்கித்துறையானது அதைவிட வலுவானதாக உள்ள நிலையில், இந்த ஒப்பந்தப்படி மேலும் தாராளமயமாக்கப்பட்டால், ஒட்டுமொத்த வங்கித்துறையும் சிதைந்து நாசமாக்கப்படும். இது தவிர அந்நிய நேரடி முதலீடுகள், பங்குகள், டிபென்சர்கள், கடன்கள், வட்டிகள், வர்த்தகச் சலுகைகள், அசையும் மற்றும் அசையாச் சோத்துகள் முதலான அனைத்திலும் ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் தாராளமாக நுழைய அனுமதிக்கப்படுவதால், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் உலக நிதிமூலதனத்தின் இரும்புப் பிடியில் சிக்கிவிடும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஒப்பந்தம் பற்றி நாட்டு மக்களிடம் தெரிவிக்காமல், நாடாளுமன்றத்திலோ அல்லது அரசியல் கட்சிகளிடமோ தெரிவிக்காமல், மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் அனைத்தையும் திரைமறைவில் இரகசியமாகவே செயல்படுத்தி வருகிறது ஆளும் கும்பல். “சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிரான முன்னணி” என்ற விவசாயிகள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பானது, இக்கொடிய ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி நூற்றுக்கணக்கான கடிதங்களை அரசுக்கும் அரசுத்துறை நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளபோதிலும்; இந்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறியுமாறு அனைத்திந்திய வர்த்தகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ள போதிலும்; வர்த்தகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு இந்த ஒப்பந்தம் பற்றிய தனது பரிசீலனை அறிக்கையை இன்னமும் இறுதியாக்காத போதிலும்; இவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில்தான் கைக்கூலி மன்மோகன் அரசு குறியாக இருக்கிறது. இந்த ஒப்பந்தம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோருவதற்கு மேலாக வேறெதையும் செய்யத் திராணியற்ற போலி கம்யூனிஸ்டுகளைத் தவிர, வேறெந்த ஓட்டுக் கட்சியும் இந்த அடிமைச் சாசனத்துக்கு எதிராக வாய் திறக்காமல், கள்ள மவுனம் சாதித்துக் கொண்டிருக்கின்றன.
ஏற்கெனவே தாராளமய-உலகமயத் தாக்குதலால் நாடு அடிமையாக்கப்பட்டு, நாட்டு மக்கள் மரணப் படுகுழியில் வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், ‘அந்நிய மூலதனத்தைக் கவர்ந்திழுப்பது; வளர்ச்சியைச் சாதிப்பது’ என்ற பெயரில் இத்துரோக ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டு நாட்டையும் மக்களையும் பேரழிவுக்குள் வேகமாகத் தள்ளிவிடத் துடிக்கிறது, ஆளும் கும்பல். இந்தக் கொடூரத்துக்குப் பெயர்தான் மறுகாலனியாதிக்கம். இதனை முறியடிக்கத் தேவைப்படுவது முன்னிலும் வீரியமிக்க விடுதலைப் போராட்டம்.
– பாலன்
_______________________________________________________________________________ புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
_______________________________________________________________________________
தனியார் பள்ளிகளின் இட நிர்ணய கருத்துக் கேட்பு கூட்டம்
கல்வி அதிகாரிகளும் தனியார் பள்ளி முதலாளிகளும் கூட்டுச்சதி !
தனியார் பள்ளிகளின் இடவசதி நிர்ணயம் செய்வது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் திருச்சியில் 14.6.2013 காலை நடைபெறும் என்றும் இதில் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள், தாளாளர்கள், பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் பள்ளிக் கல்வித் துறை சார்பாக தினசரி நாளிதழில் 12.6.2013 அன்று செய்தி வெளியானது.
அதனடிப்படையில் 14.6.2013 அன்று திருச்சி தெப்பக்குளம் பிசப் மேல்நிலைப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கான குறைந்த பட்ச இட நிர்ணய வல்லுநர் குழு கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க மேற்படி நிகழ்ச்சி காலை 10 மணிக்கெல்லாம் சென்றோம். கூட்டம் காலை சுமார் 11 மணியளவில் தொடங்கியது.
கூட்டத்தை துவங்கி வைத்து பள்ளி கல்வி இயக்குனர் தேவராஜன் பேசும் போது “2004-ல் அரசு விதித்த கல்விச் சட்டம் 48-ன் படி நிபந்தனைகளை அமுல் படுத்துவதில் உள்ள சிக்கல் பற்றி மட்டுமே பேச வேண்டும். வேறு எதைப் பற்றியும் பேசி நேரத்தை வீணாக்கக் கூடாது” என அறிவுறுத்தி, தனியார் பள்ளி நிர்வாகிகளையும், தன்னார்வலர்களையும் வரவேற்று அமர்ந்தார். பெற்றோர்களையும், மாணவர்களையும் பெயரளவில் கூட வரவேற்று பேசவில்லை. கூட்டத்தில் தாளாளர், பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோரில் தெரிவு செய்யப்பட்ட 5 பேரை மட்டும் பேச அனுமதித்தனர்.
இதில் பள்ளி தாளாளர் ஒருவர் பேசும் போது “எங்கள் குறைகளை தேவனாகிய ராஜனிடம்(கடவுள்) தெரிவிப்போம் அதனாலோ என்னவோ தேவராஜனே எங்களது குறைகளை கேட்க வந்துள்ளார்” என ஆரம்பித்தார். “நாங்கள் சேவை செய்யவே கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தோம். ஆனால் இடவசதி சம்பந்தமான பிரச்சனையால் எங்களின் இந்த சேவையை வழங்க முடியாமல் போய் விடுமோ என பயமாக உள்ளது. இந்த சேவையை வழங்காமல் போனால் நாங்கள் உயிர் வாழவே தகுதியில்லாதவர்களாகி விடுவோம்” எனக் கூறி இட வசதி தொடர்பான ஆணையை தளர்த்திக் கொள்ள மன்றாடினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக அவர்களே தெரிவு செய்த ஒருவர் பேசினார். ‘கம்பர் மரத்தடில தான் படிச்சாரு, அர்ஜூனன் மரத்தடியில் தான் வில்வித்தை கத்துகிட்டாரு, அண்ணா திண்ணையில் தான் உக்காந்து படிச்சாரு அதனால் படிப்பவர்களுக்கு இடம் ஒரு பிரச்சனையில்லை. எனவே இந்த விசயத்தில் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்” என தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக ஜால்ரா அடித்தார். மற்றொரு பள்ளி தாளாளர் ‘ஐயா, நாங்கள் புலி வாலை புடிச்ச மாரி இருக்கோம் அதனால இந்த ஆணையை தளர்த்தி எங்களை காப்பாத்தணும்” என சாமியே சரணம் என்று காலில் விழுந்தார்.
இதைத்தொடர்ந்து பெற்றோர் தரப்பில் பேசுவதற்கு பெயர் கொடுத்தவர்கள் யாரையும் பேச அனுமதிக்காமல் நன்றியுரையை ஆரம்பித்தனர். உடனே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தை சேர்ந்த தோழர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். “வரவேற்புரையிலும் சரி, கருத்துக் கேட்பதிலும் சரி பெற்றோர்களையும், மாணவர்களையும் உங்க நிகழ்சி நிரல்ல சேக்கவே இல்ல. இது தனியார் பள்ளி நிர்வாகிகளும் அரசும் சேர்ந்து நடத்தும் சதித் திட்டம்” என தோழர்கள் வந்திருந்த அனைவரின் முன்பும் அம்பலப்படுத்தி பேசினர்.
உடனே தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி பொதுச் செயலாளர் நந்தகுமார் அடாவடியாக மேடைக்கு வந்து தோழர்களை பார்த்து “இப்ப நீங்க பேசணும் அவ்வளவுதானே” என்று கூறி ஒருவரை மட்டும் பேச அனுமதித்தனர்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் தோழர் காவிரி நாடன் பேசினார். “அதிகாரிகளுக்கு இந்த அறையில் ஏ.சி இல்லாத குறையை தனியார் பள்ளி நிர்வாகிகள் பேசியே தீர்த்து வைத்தனர். இந்த கூட்டம் குறித்து எந்த வித விளம்பரமும் முன்கூட்டியே செய்யாமல் இருப்பதையும், பெற்றோர்களுக்கு பேச அனுமதி அளிக்காதது பற்றியும் கண்டித்து கேள்வி எழுப்பினார். உடனே தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி செயலாளர் நந்தகுமார் “இந்த கூட்டம் எங்களுக்கானது நீங்க கருத்து சொல்லணும்னு அவசியமே இல்ல” எனக் கூறி அடாவடித்தனமாக ஒருமையில் பேசினார். அதற்கு இடம் கொடுக்காமல் தோழர் பேசினார்.
“இந்த கூட்டத்தை நடத்துவது பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள். எங்களை பேசக்கூடாது என மேடை ஏறி மிரட்டுவதற்கு தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி செயலாளர் நந்தகுமாருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது” என கேள்வி எழுப்பினார். “இந்தக் கூட்டத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவர்கள் பொது நல அமைப்புகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாம் என பத்திரிக்கைகளில் அறிவித்திருந்தும் எங்களை பேச அனுமதி மறுத்தது ஏன்?” என்று பேசும் போது கூட்டத்தில் சலசலப்பும் பதட்டமும் நிலவியது.
[சில பத்திரிகை செய்திகள். படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
அதிகாரிகளுக்கு சாதகமாகவே அனைவரும் பேசும் போது, அமைதியாக இருந்து விட்டு உண்மை நிலையை எடுத்துரைத்த போது அவற்றை ஜீரணிக்க முடியாத அதிகாரிகளும், தனியார் பள்ளி முதலாளிகளும், நிர்வாகிகளும் தோழர்களை மிரட்ட ஆரம்பித்தனர். “நீங்க சத்தமா பேசுனா, நாங்க சத்தமா பேச வேண்டிவரும்” என நந்தகுமார் மிரட்ட, “ஒரு கட்டத்தில் பேசாதே, வெளியே போ, கீழே இறங்கு” என தனியார் பள்ளி நிர்வாகிகள் விரட்ட ஆரம்பித்தனர். மறுபுறம் அதிகாரிகள் பேச விடாமல் ஒலிபெருக்கியை நிறுத்தி விட்டு “நீங்கள் பேசுவதை கேட்க முடியாது, இது இடவசதி சம்பந்தமான கூட்டம் தான். நீங்கள் அவுட் ஆஃப் த சப்ஜக்டில் பேசுவதை அனுமதிக்க முடியாது” என்று கூறினர்.
பிறகு தோழர்கள் “கருத்துக் கேட்பு கூட்டம் என்று ஏய்க்காதே! நாடகமாடாதே!” என்று கோஷமிட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினார்கள். பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் ஓடி விட்டனர். இது தனியார் பள்ளி முதலாளிகளும், அதிகாரிகளும் சேர்ந்து நடத்திய சதித்திட்டம், நாடகம் என்பதை அம்பலப்படுத்தி முற்றுகையிடச் சென்றோம். வழக்கம் போலவே காவல்துறை பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். நம்மிடம் கோரிக்கைகளை கேட்டுக் கொண்டு ஒளிந்துகொண்ட தேவராஜனையும், அதிகாரிகளையும் பார்க்கச் சென்றனர். ஆனால் யாரையும் பார்க்க முடியாது என அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
2004 கல்விச்சட்டம் 48-ன் கீழ் தமிழக அரசு விதித்த நிபந்தனைகளை 10 ஆண்டுகளாகியும் அமுல் படுத்த மறுக்கின்றன தனியார் பள்ளிகள். தொடர்ந்து கருத்துக் கேட்பு என்ற பெயரில் அரசும், கல்வி அதிகாரிகளும், தனியார் பள்ளிகளும் சேர்ந்து சதி செய்கின்றன. இதன் விளைவாக அடிப்படை வசதிகள் ஏதுமற்ற தனியார் பள்ளிகள் பெட்டிக்கடைகள் போல் பெருகி விட்டன. இதுதான் கும்பகோணம் சம்பவத்திற்கு அடிப்படை. அரசு விதிகளை தனியார் பள்ளிகள் ஏற்க மறுக்கின்றன. அவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வக்கில்லாத அரசு கருத்துக் கேட்பு கூட்டம் என்ற பெயரில் மக்களை ஏய்க்கிறது.
7 மாவட்டங்களில் நடத்த வேண்டிய கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒரு மண்டலமாக்கி அவசர கதியில் அறிவித்து தனியார் பள்ளி முதலாளிகளின் இலாபவெறிக்கு பள்ளி மாணவர்களை கொலை செய்யும் கூடாரமாக அங்கீகரித்து செயல்பட கல்வி இயக்குனரகம் இந்த சதித் திட்டத்தை அரங்கேற்றியுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனராக மட்டுமின்றி இந்த கபட நாடகத்திற்கும் இயக்குனராகவும் செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. அந்த வகையில் விதிமுறைகளை மீறிய 800-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பொதுமக்களை திரட்டி போராடுவதே தீர்வாக முடியும் என்பதை பறைசாற்றும் விதமாக அமைந்தது.
[புகைப்படங்கள் : படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் : புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி (தொடர்புக்கு: 9943176246)
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (தொடர்புக்கு: 9360107317)
திருச்சி
ஒட்டு கேட்கும் அமெரிக்க அரசைப் பற்றிய அனிமேஷன் வீடியோ :
வீடியோவில் பேசப்படும் வாக்கியங்களின் தமிழாக்கம் :
பொம்மை குரலில் பாடல் : நான் பயமுறுத்த மாட்டேன், நான் உங்களை பாதுகாக்கும் பத்திரமான கரடி
ஹாய் அமெரிக்கா, நான் திரும்ப வந்துட்டேன்!
சில வாரங்களுக்கு முன்னால் சில நூறு பத்திரிகையாளர்களை ஒட்டுக் கேட்பது பிரச்சனையில்லை என்று விளக்கினேன். இப்போ என்ன விளக்கப் போறேன் தெரியுமா, “ஒட்டுக் கேட்பதே தவறு இல்லை, உங்கள் எல்லோரையும் ஒட்டுக் கேட்பது தவறே இல்லை” என்று. ஹா! ஹா! ஹா!
என் எஜமான்கள் சொல்வதை நம்புங்க!. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை, பயங்கரவாதியாகவோ அல்லது அரசு ரகசியங்களை அம்பலப்படுத்தும் தேசத் துரோகியாகவோ அல்லது ஹா! ஹா! குடிமக்களின் உரிமைகளின் ஆவணத்தை போற்றுபவராகவோ இருந்தால் ஒழிய.
பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படுபவர்களையும் அவர்களோடு பேசுபவர்களை மட்டும்தான் ஒட்டுக் கேட்கிறோம் என்று நாங்க சொல்லியிருந்தாலும், அதைச் செய்வதற்கு எல்லோரையுமே ஒட்டுக் கேட்க வேண்டியிருக்கிறது என்பது இப்போதுதான் தெரிகிறது.
ஆனால் கவலைப்படாதீங்க. நம்ம ஜனாதிபதி சொன்னது போல, இந்த ஒட்டுக் கேட்டலை அரசின் 3 பிரிவுகளும் கண்காணிக்கின்றன. ஒரு பிரிவு இன்னொரு பிரிவிடம் பொய் சொன்னதையும், மூன்றாவது பிரிவு முதல் பிரிவு வேண்டுவதை 99.97% ஏற்றுக் கொள்கிறது என்பதையும் கண்டுக்காதீங்க. உங்களை பத்திரமாகவும் , பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்றால், சில தியாகங்களை செய்யத்தான் வேண்டும்.
உங்க மெட்டா தகவல்களை மட்டும்தான் நாங்க சேகரிக்கிறோம். அதாவது, உங்க தொலைபேசி எண், யாரை அழைத்தீர்கள், எப்போது அழைத்தீர்கள், அழைக்கும் போது எங்கு நின்று கொண்டிருந்தீர்கள், எவ்வளவு நேரம் பேசினீர்கள், என்ன வகையான தொலைபேசியில் பேசினீர்கள், யாரை திரும்பவும் கூப்பிட்டீர்கள், யார் திரும்ப அழைத்தார்கள், இவ்வளவுதான்.
அதனால் கவலைப்படாதீங்க, நீங்க என்ன பேசினீங்க என்பதை நாங்க பதிவு செய்வதில்லை (ஹா! ஹா! ஹா!)
ஒருவேளை நீங்கள் இணையத்தை பயன்படுத்தினா, உங்க மின்னஞ்சல்கள், வீடியோக்கள், சாட் உரையாடல்கள், தேடல் சொற்கள், புகைப்படங்கள் எல்லாவற்றையும் சேகரிக்க தயாரா நாங்க அங்கேயும் இருப்போம். எல்லாமே உங்களை பத்திரமாகவும் பாதுகாப்பாவும் வைத்திருக்கத்தான்.
இது எல்லாமே சட்டபூர்வமானதுதான். காங்கிரசுக்கே பதில் சொல்லாத ரகசிய நீதிமன்றத்தை வேணும் என்றால் கேட்டுப் பாருங்க.
அல்லது தேசிய உளவுத் துறையின் இயக்குனரை கேளுங்க. முடிந்த அளவு பொய் சொல்லாத வகையில் வாக்குமூலம் அளிக்க முயற்சிப்பவர் அவர்.
“எனவே, எனக்கு மிகவும் உண்மையாக பட்ட, மிகக் குறைவான பொய்யாக பட்ட வகையில் பதில் சொல்ல முயற்சித்தேன். அதனால் ‘இல்லை’ என்று சொன்னேன்” – ஜேம்ஸ் கிளாப்பர், தேசிய உளவுத் துறையின் இயக்குநர்
அல்லது இதைப் பற்றி எச்சரித்த ஜனாதிபதி ஒபாமாவை கேட்கலாம்
“நாம் போற்றும் சுதந்திரங்களுக்கும், நாம் வழங்கும் பாதுகாப்புக்கும் இடையேயான பொய் தேர்வு…” – ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா 2007
ஓஹோ, தப்பான மேற்கோள்,
“100% பாதுகாப்பும் வேண்டும் 100% அந்தரங்கமும் வேண்டும் என்பது சாத்தியமில்லை” – ஜனாதிபதி ஒபாமா 2013
சேகர் குப்தா என்பவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் தலைமை ஆசிரியர். அவர் என்டிடிவி தொலைக்காட்சிக்காக “வாக் த டாக்” (பிரபலங்களுடன் நடந்து கொண்டே பேசும் நிகழ்ச்சி) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நாட்டில் ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் பெரிய மனிதர்களுடன் பேச்சு கொடுத்து அவர்களுடைய கருத்துக்களை மக்களிடம் திணிப்பதுதான் அவரது பணி.
சுவாமிநாதன் அங்கேஷ்வர் அய்யர் என்று ஒரு பத்தி எழுத்தாளர் இருக்கிறார். பொருளாதாரம் படித்து ‘தேர்ந்த’ அவர் ஒவ்வொரு பத்திக்கும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு இருண்டு போன முதலாளித்துவ உலகிற்கு ஒளிவட்டம் போட்டுக் காட்டும் திருப்பணியைச் செய்து வருகிறார்.
ப. சிதம்பரம் என்ற செட்டிநாட்டு கோமான் இருக்கிறார். இந்தியாவையும் இந்திய மக்களையும் எவ்வளவு குறைந்த விலைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க முடியும் என்பதை தீர்மானித்து செயல்படுத்துவதற்கு கடந்த 30 ஆண்டுகளாக அல்லும் பகலும் பாடு பாட்டு வருபவர்.
டாடா குழுமம் என்று ஒன்று இருக்கிறது 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு கஞ்சா வியாபாரம் செய்வதில் ஆரம்பித்து, மகாராணி மில்ஸ் என்று பேரரசி விக்டோரியாவுக்கு விசுவாசமாக துணித் தொழிலில் இறங்கி, அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களுடன் தம்மை இணைத்துக் கொண்டு எஃகு முதல் மென்பொருள் வரை வளர்த்துக் கொண்ட பெருமகன்கள் அவர்கள்.
இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கோஷ்டி கானம் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். “சாதியை ஒழிப்பதில் மார்க்சையும் மாயாவதியையும் விட மார்க்கெட்தான் சிறப்பாக செயல்படுகிறது’. மனுவின் எதிரியாகவும், ஆடம் ஸ்மித்தின் நண்பராகவும் மான்டேக் சிங் அலுவாலியா இருப்பதால் அவர்தான் தலித் மக்களின் உற்ற நண்பன்” என்பது அந்த பாட்டின் பல்லவி.
சுவாமிநாதன் அங்கலேஷ்வர் அய்யர்
தலித் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரி (இந்திய தலித் வர்த்தக, தொழில் கூட்டமைப்பு) என்ற தலித் முதலாளிகளின் கூட்டமைப்பு ஒன்றை மிலிந்த் காம்ப்ளே என்பவர் உருவாக்கியிருக்கிறார். சுமார் 3,000 தலித் முதலாளிகள் அதில் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம். இந்தியாவின் சிறு-குறு-நடுத்தர நிறுவனங்களில் 10 சதவீதம் தலித் முதலாளிகளால் நடத்தப்படுபவையாம். அதாவது சுமார் 1.64 லட்சம் தலித் முதலாளிகள் நாடு முழுவதும் இருக்கிறார்களாம். அவர்களை எல்லாம் திரட்டி தலித் முதலாளிகள் சங்கத்தை வலுப்படுத்துவதும், ரூ 500 கோடி முதலீட்டு நிதியம் மூலமாக தலித் மக்களின் தொழில் முனைவை ஊக்குவிப்பதும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மிலிந்த் காம்ப்ளேவின் திட்டம். இந்த முதலாளிகள் சங்கத்திற்கு ஆலோசகராக இருப்பவர் உத்தர பிரதேசம் அசம்கரைச் சேர்ந்த சந்த்ர பான் பிரசாத் என்ற எழுத்தாளர்.
இந்த நிதியத்துக்கு ப சிதம்பரத்தின் தூண்டுதலின் பேரில் இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) ரூ 10 கோடி முதல் முதலீட்டை வழங்கியிருக்கிறது. இன்னும் பொதுத் துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களை இந்த நிதியத்தில் பணம் போடும்படி வலியுறுத்தப் போவதாக ப சிதம்பரம் உறுதி அளித்திருக்கிறார். இந்த நிதியத்தில் முதலீடு செய்யும் முதலாளிகளுக்கு 25% லாபம் கிடைக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுமாம். இந்த நிதியத்திலிருந்து தலித் மற்றும் பழங்குடி தொழில் முனைவோருக்கு தொழில் நடத்த நிதி வழங்கப்படுமாம்.
ரூ 5.5 லட்சம் கோடி மதிப்புடைய டாடா குழுமத்தின் 21-ம் நூற்றாண்டின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள சைரஸ் மிஸ்திரி சந்தன் & சந்தன் இண்டஸ்ட்ரீஸ் என்ற தொழிற்சாலை தலைக் கவசம் (industrial helmet) உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் 33.3% பங்குகளை வாங்கியிருக்கிறாராம். அந்த நிறுவனத்தின் முதலாளி நந்த் கிஷோர் சந்தன் எஞ்சிய 66.6% பங்குகளை வைத்திருப்பார். முக்கியமான இந்த முதலாளி சந்தன் ஒரு தலித். சந்தன் தொழிற்சாலையிலிருந்து டாடா குழும தொழிற்சாலைகளுக்கு தேவையான தலைக்கவசங்களை வாங்க ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். டாடா குழும நிறுவனங்கள் இன்னும் பல தலித் நிறுவனங்களில் முதலீடு செய்யப் போவதாக திட்டமிட்டுள்ளன.
சைரஸ் மிஸ்திரி
இந்த நிகழ்வுகள் இந்திய தலித் வரலாற்றில் ஒரு மைல் கல் என்று கொண்டாடுகிறார்கள் ஷேகர் குப்தாவும், ஸ்வாமிநாதன் அங்கலேஷ்வர் அய்யரும். ‘மார்க்சையும், மாயாவதியையும் மார்க்கெட் தோற்கடித்து விட்டது’. ‘அம்பேத்கர் தன் வாழ்நாளில் சாதிக்க முடியாததை முதலாளித்துவ சந்தை சாதித்து வருகிறது’ என்று பஜனை பாடுகிறார்கள். ‘அமெரிக்காவில் கருப்பின முதலாளித்துவத்தைப் போல இந்தியாவில் தலித் முதலாளித்துவம் தழைக்க வேண்டும்’. ‘கருப்பின மக்கள் அமெரிக்க வால் வீதியில் நுழைந்ததன் மூலம் ஒபாமா அமெரிக்க அதிபர் ஆனது போல, இந்திய தலித் மக்களை தலால் வீதியில் நுழைய வைத்து சமூக அடிமைத்தனங்களிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று திட்டம் வகுத்துக் கொடுக்கிறார்கள்.
முதலாளிகளின் கூட்டம் தம் பணப்பையோடு ஒரு இடத்துக்கு வந்து பையை திறந்து, கரன்சியை எடுத்து விட ஆரம்பித்தால் அதற்குப் பின்னால் நீண்ட திட்டமிடலும், ஆழமான தயாரிப்பும் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்குள் வர்த்தகர்களாக வந்த ஆங்கிலேய முதலாளிகள், கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினார்கள். 100 ஆண்டுகளுக்கு மேல் நாடு முழுவதையும் தம் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். அவர்களது முதலாளித்துவமும் சந்தையும் தீண்டாமையை ஒழித்து தாழ்த்தப்பட்ட மக்களை ஏன் விடுவிக்க முடியவில்லை?
ஆயிரக் கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும், அஸ்ஸாமுக்கும், இலங்கைக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகவும், தென் ஆப்பிரிக்கா, பிஜி தீவுகளுக்கும் கொத்தடிமைகளாக அழைத்துப் போனதுதான் ஆங்கிலேய முதலாளித்துவத்தின் சாதி ஒழிப்பு சாதனை. கொள்ளை நோய்களுக்கும், அடி உதைகளுக்கும் பலியான தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கைதான் சாதியை ஒழிப்பதில் ஆங்கிலேய முதலாளிகளுக்கு இருந்த ஆர்வத்தை பதிவு செய்து வைத்திருக்கிறது. பழங்குடி மக்களை வேரோடு அழித்து அவர்களது நிலங்களை கைப்பற்றிக் கொண்டதும் காலனிய முதலாளித்துவத்தின் சாதனைதான்.
முதலாளித்துவம் உருவாக்கிய காலனிய அடிமைகள்
ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பு இன மக்களை கடத்திச் சென்று அடிமைகளாக அமெரிக்காவிலும், மேற்கு இந்திய தீவுகளிலும் விற்றதும் ஐரோப்பிய அடிமை வர்த்தக முதலாளிகள்தான். 200 ஆண்டுகளுக்கு மேல் அவர்களை அடிமைகளாக வேலை வாங்கி, சுரண்டி, கொள்ளை லாபம் சம்பாதித்தனர் 19-ம் நூற்றாண்டில் அடிமை முறையை ஒழித்த பிறகு, பல தலைமுறைகளாக சுரண்டப்பட்ட கருப்பின மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்காமல், சுமார் 4 கோடி கறுப்பு இன மக்களை சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக வைத்து சுரண்டி வருகின்றனர். இன்று கருப்பு இன முதலாளித்துவம் தளைக்கிறது என்று இந்த பாணபத்திர ஓணாண்டிகள் சொல்லும் அமெரிக்காவில் 25% கருப்பு இன மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவிலும் ஜிம்பாப்வேயிலும் கருப்பின மக்களை அடிமைப்படுத்தி நிறவெறி அரசுகளை ஏற்படுத்தி நிறத்தின் அடிப்படையிலான நவீன சாதியத்தை ஏற்படுத்தியது ‘சமூக நீதி’ போராளிகளான ஐரோப்பிய முதலாளிகள். தற்போதும் இதே ஐரோப்பா, அமெரிக்காவில் கருப்பின மக்கள் ஏழைகளாகத்தான் காலம் தள்ளுகிறார்கள்.
இதுதான் முதலாளித்துவமும் சந்தையும் ஒடுக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்டு சுரண்டப்பட்ட மக்களை விடுவிக்க செய்த சாதனைகள்.
சமூக பொறுப்புணர்வுடன் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நிறுவனங்களில் முதலீடு செய்யப் போவதாகச் சொல்லும் இதே முதலாளிகள் அவர்களது நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை முழு மூச்சுடன் எதிர்த்தார்கள். ‘தனியார் நிறுவனங்களில் சாதி பார்க்க முடியாது, எல்லாமே மெரிட்தான்’ என்று சாதித்தார்கள். இப்போதும் தமது நிறுவன ஊழியர்களில் அரசு பதவிகளைப் போல அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 20% தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு ஒதுக்குவதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை இவர்கள்.
தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் தொழிற்சங்கம் அமைத்து தமது உரிமைகளுக்காக கூட்டாக பேரம் பேசுவதை பயங்கரவாதமாக சித்தரித்து அரசு எந்திரத்தை ஏவி விடுபவர்களும் இதே முதலாளித்துவ ‘சமூக நீதி போராளிகள்தான்’.
ஆனால், தமக்கு லாபம் சம்பாதித்துத் தர, தமது நேரடி ஈடுபாடு இல்லாமல் குறைந்த செலவில் பொருட்களை உற்பத்தி செய்து தர படித்த, நடுத்தர வர்க்க தலித் மக்களை கங்காணிகளாக ஆக்க முயல்கிறார்கள்.
தலித் முதலாளிகள் சங்கமும் மிலிந்த் காம்ப்ளேவும்
தலித் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (தலித் முதலாளிகளின் கூட்டமைப்பு) தலைவர் மிலிந்த் காம்ப்ளே கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளாராம்.
“மகாராஷ்டிராவில் உங்களது குடும்பப் பெயர் உங்கள் சாதியை காட்டிக் கொடுத்து விடுகிறது. என் பெயரைப் பாருங்கள் : மிலிந்த் காம்ப்ளே. காம்ப்ளே என்பது அனைவருக்கும் தெரிந்த தலித் குடும்பப் பெயர். நான் ஈடுபட்டுள்ள கட்டுமானத் துறையில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடியினர். அந்த வேலையில் கடும் உழைப்பு தேவைப்படுகிறது. அது எங்களால் மட்டுமே முடியும். அதனால் என்னுடைய தொழிலில் சாதீய பாகுபாடு காரணமாக ஒதுக்கப்படுவது இல்லை”.
இன்னும் டாடா நேனோ காருக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் கமானி டியூப்ஸ் நிறுவன முதலாளி கல்பனா சரோஜ், தொழில் முனைவர், ஹீரோ பைக்குக்கு ஸ்டேண்ட் தயாரிக்கும் காசியாபாத்தைச் சேர்ந்த சுசில் குமார், டாடா இண்டிகோ காருக்கு பாகங்கள் தயாரிக்கும் கோகுல் கெய்க்வாட் என்று தமது உழைப்பையும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பையும், சிறிதளவு மூலதனத்தையும் பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்கு வழங்கும் சுமார் 3,000 தலித் முதலாளிகள் தொழில் செய்கின்றனர்.
பெரு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யாமல், தொழிலாளர் நலத் திட்டங்களை செயல்படுத்தாமல், மலிவான விலையில் சிறு நிறுவனங்களிடமிருந்து தமக்குத் தேவையான பொருட்களை வாங்க ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். இதன் மூலம் 100 தலித் கோடீஸ்வரர்களை உருவாக்கப் போகிறார்களாம். எல்ஐசி, சிட்பி போன்ற பொதுத் துறை நிறுவனங்களின் முதலீடுகளை தலித் முதலாளிகள் பயன்படுத்துவார்களாம். பிறகு இந்த தலித் முதலாளிகள் டாடா முதலான கார்ப்பரேட்டுகளுடன் வர்த்தகம் புரிந்து கோடிஸ்வரராக மாறுவார்களாம். அதாவது டாடா போன்ற பெரு நிறுவனங்கள் இந்த தலித் முதலாளிகளை வைத்து 1,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதன் மூலம் 100 தலித் முதலாளிகளை கோடீஸ்வரர்கள் ஆக்கப் போகிறார்களாம். இதுதான் சமூக நீதி சூத்திரம்.
இப்போது இந்த சூத்திரத்தின் அடிப்படையில் தலித் சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்ற பெயரில் திடீரென்று பணப்பைகள் திறக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, பொதுத்துறை நிறுவனங்கள், அரசு துறைகள் தமது தேவைகளில் 4% தாழ்த்தப்பட்ட சாதி/பழங்குடி தொழில் முனைவோர் நடத்தும் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பழங்குடி மக்களின் நிலங்களை கைப்பற்றி, அவர்களை விரட்டி விட்டு, இயற்கை வளங்களை கைப்பற்றுவதில் பன்னாட்டு, இன்னாட்டு பெருமுதலாளிகள் தற்காலிகமாக பின்னடைவு கண்டுள்ளனர். அரசு எந்திரம், சல்வா ஜூடும் போன்ற கூலிப்படை உத்திகள் மக்கள் படையின் முன்பு தோல்வியடைந்து முட்டுச் சந்தில் நிற்கின்றனர்.
எனவே தலித் தொழில் முனைவர்கள் மூலம் தலித் மக்களின் உழைப்பையும், பழங்குடி தொழில் முனைவர்கள் மூலம் இயற்கை வளங்களையும் சுரண்டி லாபம் சம்பாதிக்க திட்டமிடுகின்றனர். தேயிலைத் தோட்டங்களுக்கு கொத்தடிமை உழைப்பாளிகளாக பிடித்துச் சென்ற தலித் மக்களை திரட்டுவதற்கு தலித் கங்காணிகளை பயன்படுத்தியது போல இன்றைய இந்தியாவின் உழைக்கும் மக்களை திரட்டித் தருவதற்கு தலித் தொழில் முனைவோர் என்ற கவர்ச்சியை முன் வைக்கின்றனர். கங்காணிகளுக்கு முன்பணம் கொடுக்க நிதி அளித்தது போல, கோடிக்கணக்கான உழைக்கும் தலித்/பழங்குடி மக்களின் உழைப்பையும், பழங்குடி மக்களின் நிலங்களையும் கைப்பற்றி பெருநிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்கான டிரோஜன் குதிரைதான் இந்த தலித் தொழில் முனைவு நிதியம்.
இப்போது புரிகிறதா சோழியன் குடுமி ஏன் ஆடுகிறது என்று?
இந்தியாவின் தலித் மக்களுக்கு முதலாளித்துவம் தருவது நவீன அடிமைத்தனம்.
இதன் மூலம் இந்தியாவின் 20 கோடி தலித் மக்களுக்கும், 10 கோடி பழங்குடி மக்களுக்கும் என்ன கிடைக்கும்? 200 ஆண்டுகள் முதலாளித்துவ ஆட்சிக்குப் பிறகு இந்தியாவின் 20 கோடி தலித் மக்களுக்கு சொந்த நிலமில்லை, தலித் குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைவால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு மாறாக, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மையான மக்கள் விடுதலைக்கு மார்க்சியம் சாதித்ததை பார்ப்போம்.
1917 நவம்பர் புரட்சிக்குப் பிந்தைய ரஷ்யாவில் பண்ணை அடிமை முறையை கட்டோடு ஒழித்துக் கட்டியது சோசலிசம். இன்றைய ரஷ்யாவிலும் முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளிலும் பண்டைக்கால பண்ணையாரின் நிலத்தில் கட்டாய வேலை செய்ய பணிப்பது, பெண் அடிமைத்தனம், மதகுருக்களின் ஆதிக்கம், போன்ற நிலப்பிரபுத்துவ சாதீய கூறுகள் சுவடே இல்லாமல் துடைத்து எறியப்பட்டுள்ளன. அரை நிலப்பிரபுத்துவ நாடாக விளங்கிய சீனாவில் 1949 புரட்சிக்குப் பிந்தைய 30 ஆண்டுகளில் கிராமப்புற ஜமீன்தார்களும், நிலப்பிரபுக்களும் அடக்கப்பட்டு கூலி விவசாயிகளும், அடிமைகளும் நிலவுடமையாளர்கள் ஆக்கப்பட்டார்கள். சோசலிசத்தின் பின்னடைவுக்குப் பிறகு முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் புகுத்தப்பட்ட பிறகும் கூட பிற்போக்கான நிலவுடமை சமூகத்தின் சுவடுகள் துளிர்க்க முடியாமல் அவை துடைத்தொழிக்கப்பட்டுள்ளன.
ஆனால், முதலாளித்துவ பொருளாதாரம் நவீன தீண்டத்தகாதவர்களையும் கொத்தடிமைகளையும் உருவாக்கி நகர்ப்புற சேரிகளிலும், தொழிற்சாலைகளிலும் குவித்துள்ளது.
காரல் மார்க்ஸ்
ஒரு திறமையான இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் போல சந்தையின் செயல்பாட்டையும், முதலாளித்துவத்தையும் அறுத்து, ஆராய்ந்து அதன் கொடூரங்களை அம்பலப்படுத்தியவர் மார்க்ஸ். நிலப்பிரபுத்துவ சாதீய அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிக்கும் பாத்திரத்தை முதலாளிகள் இழந்து விட்டார்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகள் மூலம் நிரூபித்துக் காட்டியவர் லெனின். ஒடுக்கப்படும், சுரண்டப்படும் அனைத்து மக்களின் விடுதலையும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான அரசில்தான் சாத்தியமாகும் என்பதை அறிவியல் ரீதியாக மார்க்சிய ஆசான்கள் நிருபித்திருக்கின்றனர்.
மார்க்சியம் சாதித்ததை, சாதிக்கவிருப்பதை தனி நபர் லாபத்தின் அடிப்படையிலான, தனி நபர் சொத்துரிமை அடிப்படையிலான முதலாளித்துவம் ஒரு போதும் நெருங்கக் கூட முடியாது என்பதுதான் நிதர்சனம்.
இந்நிலையில் தலித் முதலாளிகள் எனும் இந்த இந்திய அரசு, தரகு முதலாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவன அறிவாளிகளின் திட்டம் தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை ஒரு துரோகத் திட்டமாகும். நிலமற்ற விவசாயிகளாக கிராமத்திலும், உதிரிப்பாட்டாளிகளாக நகரத்திலும் இருக்கும் தலித் மக்களின் விடுதலை என்பது உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் முழக்கத்திலும், உழைப்பவனுக்கே அதிகாரம் எனும் முழக்கத்திலும் மட்டும்தான் அடைய முடியும்.
இதன்றி முதலாளிகள் போன்ற சுய முன்னேற்றத் திட்டங்கள் சாதியின் பெயரில் தலித் மக்களை மேலும் சுரண்டுவதற்கே பயன்படும். நாட்டில் உள்ள 20 கோடி தலித் மக்களில் 200 பேரை முதலாளிகளாக்கினால் அது தலித்துக்களை விடுதலை செய்ததாக ஆகும் என்பது மோசடியில்லையா? தலித் முதலாளிகள் என்ற சாதிய அடையாளத்தை முன்வைத்து தலித் முதலாளிகளும், அரசும், தரகு முதலாளிகளும் தலித் மக்களைத்தான் மேலும் சுரண்ட இருக்கிறார்கள். இது ஆதிக்க சாதி முதலாளியை விட தலித் முதலாளியை வைத்து சுரண்டுவது சுலபம் என்ற தந்திரமே ஆகும்.
படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தலித் மக்களை இப்படி அரசியல் ரீதியாக காயடிப்பதற்குத்தான் இந்த தலித் முதலாளி திட்டம் பயன்படும். ஏற்கனவே இட ஒதுக்கீடு மற்றும் உரிமைகளால் முன்னுக்கு வந்த தலித் நடுத்தர வர்க்கம் தனது உயர்வை வைத்து கீழே இருக்கும் தலித் மக்களுக்காக அரசியல், சமூக ரீதியாக போராட முன்வருவதில்லை. இவர்கள் தலித்துகளுக்குள் ஒரு மேட்டுக்குடி வர்க்கமாக மாறுகிறார்கள். இவர்களே தலித் கட்சிகளின் தலைமைகளாகவும் இருக்கிறார்கள். சுருக்கமாக ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக தங்களை ஒப்படைத்துக் கொள்கிறார்கள்.
தேஜஸ்வினி திட்டத்தின் மூலம் பழங்குடி பெண்களை போராளிகளாக மாற்றினோம் என்று கதை விட்ட டாடா நிறுவனம் இப்போது தலித்துக்களை விடுவிப்பதற்காக இந்தத் திட்டத்தை ஆதரிக்கிறது. தலித் மக்களும், தலித் விடுதலை பேசுவோரும் இந்த சதிகளை எதிர்க்க வேண்டும். புரட்சிகர அமைப்புகளோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். கீழிருந்து, பார்ப்பனிய நிலவுடமை சமூக அமைப்பிலிருந்து தலித் மக்களை விடுவிப்பதற்க்கான பார்வையையும், நடைமுறையையும் மாக்சிய லெனினிய அமைப்புகள் மட்டுமே கொண்டிருக்கின்றன. மாறாக தலித் அமைப்புகளும், தலித் முதலாளியமும் அத்தகைய விடுதலைப் போராட்டத்திற்கான தடையாக, தீர்வைத் தடுக்கும் சமரச சக்திகளாக, சமயத்தில் ஆளும் வர்க்கங்களின் கேடான நோக்கங்களுக்கும் பயன்படுகின்றன.
21-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அரச பரம்பரை பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணி எலிசபெத் II பிரிட்டன், வட அயர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, போன்ற நாடுகளைத் தவிர இன்னும் 13 குட்டி நாடுகளுக்கு மட்டும் மகாராணியாக விளங்குகிறார். இந்தக் காலத்தில் இவ்வளவு செலவழித்து (ஆண்டுக்கு சுமார் 20 கோடி பவுண்டுகள் = சுமார் ரூ 1800 கோடி) அரச பரம்பரையை காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று இங்கிலாந்து மக்களில் பலர் விமர்சிக்கிறார்கள். அடுத்து அரியணை ஏறவிருக்கும் இளவரசர் சார்லஸ் போன்ற ஒரு மொக்கையை நமது மகாராஜாவாக ஏற்றுக் கொள்வதா என்று ஆஸ்திரேலியாவை முழுமையான (பெயரளவிலான மன்னராட்சியை ரத்து செய்து விட்டு) குடியரசாக மாற்ற முயற்சி செய்யும் அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
மகாராணி இரண்டாம் எலிசபெத்
பிரிட்டனின் வடபகுதியான ஸ்காட்லாந்து தனக்கென தனியாக நாடாளுமன்றத்தை ஏற்படுத்திக் கொண்டு சுதந்திர அரசாக பிரிந்து போக முயற்சி செய்கிறது. பிற பகுதிகளான வேல்சும், வட அயர்லாந்தும் பிரிட்டிஷ் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கின்றன.
இவற்றை எல்லாம் எதிர் கொண்டு சாம்ராஜ்யத்தை கட்டிக் காப்பதற்காக 87 வயதான மகாராணி இரண்டாம் எலிசபத், சுமார் 45 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கும் 65 வயதான மகன் இளவரசர் சார்லஸூக்கு வழி விடாமல் நாற்காலியை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறார். அம்மா போனால்தான் திண்ணை காலியாகும் என்று வெகு காலம் முன்பே விரக்தியில் செட்டில் ஆகி விட்டிருக்கிறார் சார்லஸ். இருப்பினும் தனது முன்னாள் காதலி பமீலா பார்க்கர் பவுல்சை சட்டப்படி திருமணம் செய்து கொண்டு ராஜ வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். சார்லஸ் முதலில் திருமணம் செய்து கொண்ட டயானாவுக்கும் சார்லஸூக்கும் பிறந்த மூத்த மகன் வில்லியம், சார்லஸூக்கு அடுத்து அரியணை ஏறுவதற்கு வரிசையில் நிற்பவர்.
20-ம் நூற்றாண்டிலேயே ஆட்டம் கண்டு இந்த நூற்றாண்டில் துருப்பிடிக்க ஆரம்பித்திருக்கும் பிரிட்டிஷ் அரியணையின் இமேஜை உயர்த்துவதற்கு இப்போது அவசர தேவை இருக்கிறது.
இந்தச் சூழலில் வில்லியம் குறித்து ஒரு பரபரப்பூட்டும் தகவல் வெளியாகியிருக்கிறது. “பிரிட்டன்ஸ் டிஎன்ஏ” என்ற நிறுவனம் ஒரு அமவுண்ட் கொடுத்தால் ஒருவரது மரபணுவை ஆராய்ந்து அவரது மூதாதையர்கள் பற்றிய விபரங்களை ஆய்வு மூலம் திரட்டிக் கொடுக்கிறது. எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பணி புரியும் ஜிம் வில்சன் என்ற மரபணு நிபுணருடன் இணைந்து வில்லியமின் தாய் (டயானா) வழி உறவினர்களின் உமிழ்நீரை ஆய்வு செய்து இளவரசன் வில்லியமின் உடலில் இந்திய மரபணு கலந்திருப்பதாக அறிவித்திருக்கிறது “பிரிட்டன்ஸ் டிஎன்ஏ”.
(காலம் சென்ற) சீமாட்டி டயானா மகன்கள் ஹேரி மற்றும் வில்லியம் உடன் (கோப்பு படம்)
வேல்ஸ் இளவரசி சீமாட்டி டயானாவின் எள்ளுப்பாட்டியின் பாட்டி எலிசா கேவார்க் என்பவர் கிழக்கிந்திய கம்பெனியில் பணி புரிந்த தியோடர் போர்ப்ஸ் என்ற ஸ்காட்லாந்து வணிகரின் மாளிகையில் வீட்டு பராமரிப்பாளராக இருந்திருக்கிறார். எலிசாவின் தந்தை ஆர்மீனியாவைச் சேர்ந்தவர் என்றும் தாய் இந்திய வம்சாவளியினர் என்றும் “பிரிட்டன்ஸ் டிஎன்ஏ” கண்டறிந்துள்ளது.
குஜராத்தின் சூரத் நகரில் வசித்து வந்த தியோடர் போர்ப்ஸ், எலிசாவை திடீரென்று கை விட்டு விட்டு அவர்களுக்குப் பிறந்த கேத்தரீன் என்ற மகளை 6 வயதில் பிரிட்டனுக்கு அனுப்பியிருக்கிறார். எலிசாவிடமிருந்து கேத்தரீன் வழியாக அவர்களது பெண் சந்ததியினருக்கு இந்த மைட்டோகாண்ட்ரியா மரபணு கடத்தப்பட்டு டயானாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. டயானாவின் மகனான, அடுத்ததற்கு அடுத்ததாக பிரிட்டிஷ் மகாராஜா ஆகப் போகிற வில்லியமுக்கு இந்திய அடையாளம் இருப்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.
17-ம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ அதிகாரங்களை விட்டுக் கொடுக்க மறுத்து முரண்டு பிடித்த மன்னர் முதலாம் சார்லஸின் கழுத்தை வெட்டி முதலாளிகளின் அதிகாரத்தை நிலைநாட்டியவர் முதலாளித்துவ புரட்சியாளர் ஆலிவர் குரோம்வெல். அன்று ராஜ பரம்பரைக்கு இழைத்த துன்பத்துக்கு பரிகாரமாக இன்று முதலாளித்துவ நிறுவனம் ஒன்று வில்லியம்ஸூக்கு இருக்கும் இந்தியத் தொடர்பை நிரூபித்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு சேவை செய்திருக்கிறது. கூடவே தனது மரபணு பரிசோதனை சேவைக்கான சந்தைப்படுத்தலையும் செய்திருக்கிறது “பிரிட்டன்ஸ் டிஎன்ஏ” நிறுவனம்.
1983-ல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை ஜெயித்த பிறகு இந்தியாவில் கிரிக்கெட் டேக் ஆப் ஆனது போல, 1994-ல் உலக அழகியாக ஐஸ்வர்யா ராய் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்தியாவில் அழகு தொழில் பிக் அப் ஆனது போல, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் எதிர்கால அரசர் வில்லியமின் உடலில் இந்திய மரபணு இருக்கிறது என்ற தகவல் இந்திய கனவான்களின் நெஞ்சில் ராஜ விசுவாசத்தை மூளச் செய்யாது என்று எப்படி சொல்ல முடியும்!
அவரது குழந்தை பிறந்தவுடன் அடுத்த மாதம் அரசு முறை சுற்றுப் பயணமாக முதல்முறையாக இந்தியா போவதற்கு வில்லியம் ஊக்குவிக்கப்படுகிறார். அதற்கு முன்பு பிரிட்டிஷ் அரச குடும்பத்தை இந்தியர்களுக்கு சந்தைப்படுத்தும் விதமாக வில்லியமுக்கு இந்தியாவுடன் இருக்கும் கனெக்சன்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடப்படும்.
இந்திய பாரம்பரியம் உறுதியாகியுள்ள வில்லியமுக்கு நந்தன் நீலகேணி ஆதார் அட்டை வழங்கி ஆதார் திட்டத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம்.
இளவரசர் வில்லியம் தன் மனைவி கேத்தரீனுடன் – இங்கிலாந்து சர்ச்சின் ஆர்ச் பிஷப்பை சந்தித்தல்
வில்லியமின் மூதாதையரான எலிசா கேவார்க்கும், தியோடர் போர்ப்ஸூம் வாழ்ந்தது குஜராத்தில் உள்ள துறைமுக நகரான சூரத் என்பதையும் கவனிக்க வேண்டும். குஜராத்தின் பெருமையான நரேந்திர மோடி, வல்லபாய் பட்டேலுக்கு சர்தார் சரோவர் அணைக்கு அருகில் சிலை வைப்பது போல, 300 ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்திலிருந்து இங்கிலாந்து சென்ற வம்சத்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் அரியணை ஏறவிருக்கும் வில்லியமுக்கும் சிலை வைக்க முடிவு செய்யலாம்.
இந்திய மண்ணின் மைந்தன், குஜராத்தின் பேரன் வில்லியமின் தலைமையை ஏற்றுக் கொண்டு இந்தியாவையும் பிரிட்டிஷ் குடைக்குள் கொண்டு வருவதையும் சங்க பரிவாரங்கள் பரிசீலிக்கலாம்.
இன்னும் 100 ஆண்டுகள் கழித்து உத்தர பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், ஆந்திர பிரதேசம் என்று நாடு முழுவதும் டிஎன்ஏ வழங்கியவரான என் டி திவாரியின் வாரிசுகளை ஆய்வு செய்யவிருக்கிற மரபணு ஆய்வாளர்களை நினைத்தால்தான் கதி கலங்குகிறது.
போகட்டும், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்தியிருக்கிறார்கள். இதன்படி லண்டனில் இருக்கும் வெள்ளையர்கள் அனைவரையும் பரிசோதனை செய்தாலும் அதில் இந்திய மரபணு மட்டுமல்ல, இலங்கை, பாகிஸ்தான், பர்மா, சீனா மற்றும் ஆப்பிரிக்க மரபணுக்களும் இருக்கும். காலனிய ஆட்சியாளர்கள் ஏழை நாடுகளின் சொத்துக்களை மட்டுமல்ல மரபணுக்களையும்தான் கொண்டு சென்றிருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க இதையெல்லாம் சர்வதேச செய்திகள் என்று வெளியிடுகிறார்களே முட்டாள் ஊடகங்கள், அவர்களை கவனிக்க வேண்டும்.
எனினும் இந்த மரபணு விசயத்தில் ஒரு அம்சத்தை நமது சாதியவாதிகளுக்கு நினைவூட்ட வேண்டும். தனது சாதி புனிதமானது, வேறு சாதி ரத்தம் கலக்காதது என்று நம்பிக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இத்தகைய சோதனையை மேற்கொண்டால் நிறைய கலவரங்கள் பிறப்பது உறுதி. ஏனெனில் வன்னியர் உடலில் பறையர் மரபணு, தேவர் உடலில் அருந்ததியர் மரபணு, பார்ப்பனர் மரபணுவில் பழங்குடிகள் என்று முழு இந்தியாவும் கலந்திருப்பது தெரியவரும். அப்போது நமது சாதிய பரிசுத்தவான்கள் என்ன சொல்வார்கள்?
கடந்த பிப்ரவரி மாதம் முதலாக ஒடிசா மாநிலம், ஜெகத்சிங்பூர் மாவட்டத்தின் தின்கியா பஞ்சாயத்தைச் சேர்ந்த கிராம மக்கள், தென்கொரியாவின் ஏகபோக எஃகு நிறுவனமான போஸ்கோவின் நில ஆக்கிரமிப்புக்கும் போலீசின் அடக்குமுறைக்கும் எதிராக “எங்கள் நிலத்தை ஆக்கிரமிக்காதே!” எனும் முழக்கத்தோடு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஒடிசாவின் ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் தென் கொரிய எஃகு நிறுவனமான போஸ்கோவின் ஒருங்கிணைந்த எஃகு ஆலையை நிறுவுவதற்காக கடந்த 2005-ஆம் ஆண்டில் ஒடிசா அரசுக்கும் போஸ்கோ நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி போஸ்கோ நிறுவனம், சுமார் 52,000 கோடி ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு 12 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யும் ஆலையையும், அதற்கென ஒரு தனிப்பட்ட மின் உற்பத்தி நிலையம் மற்றும் தனிப்பட்ட துறைமுகம் ஒன்றையும் அமைத்துக் கொள்ளும். இந்த திட்டத்திற்காக ஒடிசா அரசு, 2010-ஆம் ஆண்டுக்குள் தின்கியா, கடகுஜங்கா, நுவாகோன் ஆகிய கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட 4000 ஏக்கர் விளைநிலத்தை போஸ்கோ நிறுவனத்திற்கு அபகரித்துக் கொடுக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. போஸ்கோ திட்டத்தால் தங்களது எதிர்கால வாழ்வு நாசமாக்கப்படுவதை எதிர்த்து இப்பகுதிவாழ் விவசாயிகள் கடந்த எட்டாண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 31, 2011 அன்று போஸ்கோ திட்டத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அளித்துள்ள ஒப்புதல் செல்லாது என்று 2012 மார்ச் 30 அன்று அதை ரத்து செய்துள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். மேலும், விதிப்படி உள்ளூர் பஞ்சாயத்தின் ஒப்புதலும் இத்திட்டத்துக்கு அளிக்கப்படவில்லை. கடந்த 2005-ஆம் ஆண்டு போடப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2010-இல் காலாவதியாகி விட்டது. இது தவிர போஸ்கோவிற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இருப்பினும், மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டம் என்று கூறி பிரதமர் அலுவலகமே நேரடியாகத் தலையிட்டுச் செயல்படுத்துவதால், இரட்டிப்பு வெறியோடு நில அபகரிப்பையும் அடக்குமுறைகளையும் கேள்வி முறையின்றி ஏவி வருகிறது, ஒடிசா மாநில அரசு.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளும் பழங்குடியின மக்களும் போராடிய நிலையில், குறிப்பாக சிங்கூர் – நந்திகிராமத்தில் விவசாயிகளின் எழுச்சி பரவிய நிலையில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் செய்து புதிய சட்டத் திருத்த மசோதாவையும், மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கான புதிய சட்ட மசோதாவையும் மைய அரசு கொண்டு வந்தது. இவை நாடாளுமன்றத்தில் நிறைவேறும் முன்னரே ஒடிசாவின் தின்கியா பஞ்சாயத்திலுள்ள கிராமங்களில் பழைய சட்டத்தின் வழியிலேயே – அதே சிங்கூர் பாணி ஆக்கிரமிப்பை கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதியிலிருந்து போலீசையும் புல்டோசர்களையும் கொண்டு நடத்தி வருகிறது ஒடிசா அரசு. போராடும் இம்மக்களின் வாழ்வாதாரமான வெற்றிலைக் கொடிக்கால்களை வேரோடு பிடுங்கி எறிந்து வெறியாட்டம் போட்டுள்ள போலீசு, இக்கிராமங்களின் மக்களை நடமாடக்கூட விடாமல் முடக்கி வைத்துள்ளதோடு, இம்மக்கள் மீது நூற்றுக்கணக்கான பொய்வழக்குகளைப் போட்டு வதைத்து வருகிறது.
இத்தனையும் போதாதென்று, அமைதிவழியில் போராடிவரும் இம்மக்களை வன்முறையாளர்களாகவும், தீவிரவாதிகளாகவும் காட்டி அடக்குமுறையை நியாயப்படுத்தும் நோக்கில் அரசும் போலீசும் ஒரு சதியை அரங்கேற்றின. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி அன்று மாலையில், நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்ற நரகரிசாகு, தருண்மண்டல், மனஸ்ஜெனா மற்றும் லக்ஷ்மன் ப்ரமரிக் ஆகிய செயல்வீரர்கள், அடுத்தகட்டப் பணிகள் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கையில் போஸ்கோ நிறுவனத்தின் கூலிப்படையினர் வெடிகுண்டுகளை அவர்கள் மீது வீசினர். இச்சம்பவத்தில் லக்ஷ்மன் ப்ரமரிக் மட்டும் படுகாயங்களோடு உயிர் தப்பினார். மற்ற மூவரும் சம்பவ இடத்திலேயே கோரமாகக் கொல்லப்பட்டனர்.
இக்கொடுஞ்செயலை எதிர்த்து இப்பகுதிவாழ் மக்கள் குமுறிக் கொண்டிருந்த நிலையில், “வெடிகுண்டு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில்தான் அவர்கள் 3 பேரும் இறந்தனர்” என்று எழுதப்பட்ட ஒரு வாக்குமூலக் கடிதத்தில் கையெழுத்திட்டுத் தருமாறு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நள்ளிரவில் வந்து மிரட்டியுள்ளது போலீசு. உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து கையெழுத்திட மறுத்திருக்கின்றனர். மறுநாள் – மார்ச் 3 அன்று இக்கொலைவெறியாட்டத்தைப் பற்றி புகார் கொடுக்கச் சென்ற நரகரி சாகுவின் உறவினரிடமிருந்து புகாரை வாங்க மறுத்து திருப்பி அனுப்பியிருக்கிறது போலீசு. போஸ்கோவின் கைக்கூலி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மார்ச் 4-ஆம் தேதியன்றுதான் முதல் தகவல் அறிக்கையையே போலீசு பதிவு செய்துள்ளது. ஆட்சியாளர்களோ, போலீசு உருவாக்கிய கதையின்படி, போராட்டக் குழுவினர் வெடிகுண்டு தயாரித்த போது நடந்த விபத்தில்தான் மூவரும் இறந்தனர் என்று கூசாமல் புளுகினர். தொடர் போராட்டங்களின் மூலம் இப்பகுதிவாழ் மக்கள் இந்த அபாண்டமான பொய்யை அம்பலப்படுத்தியுள்ளதோடு, பல்வேறு மனித உரிமை-ஜனநாயக அமைப்புகளும் அரசின் அண்டப்புளுகையும்அடக்குமுறைகளையும், போஸ்கோவும் அரசும் கூட்டுச் சேர்ந்து நடத்தியுள்ள சதிகளையும் அம்பலப்படுத்தியுள்ளன.
தொடரும் போலீசின் தாக்குதல்களை எதிர்த்து வெகுண்டெழுந்த இக்கிராமங்களின் பெண்கள், தின்கியா பஞ்சாயத்திலுள்ள கோவிந்தபூர் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசு மற்றும் துணைராணுவப் படைகளை வெளியேற்றக் கோரியும், வெடிகுண்டுகளை வீசி போராளிகளைக் கொன்றொழித்த போஸ்கோவின் அடியாட்களைக் கைது செய்து தண்டிக்கக் கோரியும் மார்ச் 7-ஆம் நாளன்று எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தைக் கொடூரமாக ஒடுக்கிய போலீசு, பெண்களின் ஆடைகளைக் கிழித்து அரை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியது. ஆனாலும், தங்களது போராட்டத்தில் உறுதியாக நிற்கும் பெண்கள், போலீசும் அதன் அடியாட்களும் ஆடைகளைக் கிழித்து பெண்களை அவமானப்படுத்துவதால், இனி முழு நிர்வாணப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அறிவித்தனர். போலீசோ, ஆபாசத் தடைச் சட்டத்தின் கீழ் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியதாகப் பொய்க்குற்றம் சாட்டி போராடும் பெண்களைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது. குண்டுத் தயாரிப்பில் ஈடுபட்டார் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு போஸ்கோ எதிர்ப்புப் போராட்டக் குழுவின் தலைவரான அப சாகு, கடந்த மே 11 அன்று புவனேஸ்வர் விமான நிலையத்தில் கைது செயப்பட்டுள்ளார்.
கிரிமினல் குற்றவாளியாகச் சித்தரிக்கப்படும் அவருக்கு ஒடிசா உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.
இந்திய அரசு மக்களுக்கான அரசோ, ஜனநாயக அரசோ அல்ல; அது பன்னாட்டு மூலதனத்தைக் காப்பதற்காக சொந்த நாட்டு மக்களையே பலியிடும் கார்ப்பரேட் நலன்களுக்கான அரசுதான் என்பதையே ஒடிசாவில் தொடரும் மக்கள் போராட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது. நடந்து கொண்டிருப்பது தனியார்மய-தாராளமயத் தாக்குதல் எனும் மறுகாலனியாதிக்கப் போர். இக்கொடிய போரில் எதிரியை வீழ்த்துவது ஒன்றுதான் நாட்டு மக்களின் முன்னுள்ள ஒரே வழி. தனியார்மய- தாராளமயத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் அரசுக்கு எதிரான போராட்ட ஒற்றுமையைக் கட்டியமைப்பதுதான் இன்றைய அவசர அவசியத் தேவை.
_______________________________________________________________________________ புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
_______________________________________________________________________________
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காந்தி சாலையைச் சேர்ந்தவர் 30 வயது சீனிவாசன். அவருக்கும் பண்ருட்டி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த சந்திரசேகர் மகள் கல்பனாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. சீனிவாசன் சென்னையில் ஒரு மருந்துக் கடையில் வேலை செய்கிறார்.
சீனிவாசன், கல்பனா, தினேஷ் பாபு
திருமணம் முடிந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் முகமாக சீனிவாசன் மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கிறார். திருமண விழாவை கொண்டாடிய பிறகு அவர் மனைவியுடன் உள்ளூரில் உள்ள திருவதிகை என்கிற இடத்தில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது திடீரென்று வழிமறித்த ஒரு கும்பலால் கொலை செய்யப்படுகிறார். ஆனால் அந்த கும்பல் கல்பனாவை ஒன்றுமே செய்யவில்லை. ஏனெனில் அந்த கும்பலை கூலிக்கு அமர்த்தியதே கல்பனா தான்.
பள்ளி பருவத்திலிருந்தே கல்பனா அதே ஊரைச் சேர்ந்த தினேஷ் பாபுவை காதலித்து வந்திருக்கிறார். ஆனால் தினேஷ் பாபு வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் கல்பனா வீட்டில் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வீட்டாருடன் எவ்வளவு போராடியும் கல்பனாவின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையில் காதலுக்காக காத்திருக்க முடியாத தினேஷ் அவரது வீட்டார் ஏற்பாட்டில் முதலில் திருமணம் செய்துகொள்கிறார். தினேஷின் திருமணத்திற்கு பிறகும் இருவருக்குமிடையே தொடர்பும் பழக்கமும் தொடர்ந்து கொண்டு தான் இருந்திருக்கிறது. இதை தெரிந்துகொண்ட கல்பனாவின் பெற்றோர் உடனடியாக உறவுக்காரரான சீனிவாசனை கல்பனாவிற்கு திருமணம் செய்து வைக்கின்றனர். அந்த திருமணம் நடந்து தான் ஓராண்டாகிறது. சீனிவாசனை திருமணம் செய்து கொண்ட பிறகும் கல்பனா தினேஷ் உறவு தொடர்ந்தது.
காதலிக்க முடியாத சமூகத்தில் இருவரும் கள்ளக்காதல் மூலம் சேர முயன்ற போது இந்த விவகாரம் தெரிந்து சீனிவாசன் மனைவியைக் கண்டித்திருக்கிறார். அதன் பிறகே கல்பனாவும் தினேஷும் இணைந்து கொலைத் திட்டம் போடுகின்றனர். அதன்படி பைக்கில் சென்று கொண்டிருந்த சீனிவாசனை வழிமறித்து தினேஷும் அவரது நண்பரான முரளியுடன் இணைந்து அடித்துக் கொல்கிறார்.
ஆரம்பத்தில் நகை மற்றும் வழிப்பறிக்காக நடந்த கொலை என்று கல்பனா சொன்னதை வைத்து புலனாய்வு செய்த போலீசு பின்னர் உண்மையை கண்டுபிடித்தனர். அதன் பின்னர் நாங்கள் தான் குற்றவாளிகள் என்று இருவரும் போலீசில் ஒத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும் இந்த கொலைக்கு இவர்களை மட்டும் குற்றம் சாட்ட முடியுமா, இதற்கு இவர்கள் மட்டும் தான் காரணமா? காதல் திருமணங்களை எல்லாம் நாடகத் திருமணங்கள் என்று கூறிவரும் காடுவெட்டி குருவுக்கும், ராமதாசுக்கும் இதில் பங்கு இல்லையா?
ஏனெனில் இந்த பிரச்சினையில் எந்த தலித்தும் இல்லை. சீனிவாசனும் கல்பனாவும் செட்டியார் சாதி, தினேஷ் நாயுடு சாதி. மேலும் இங்கு நடந்திருப்பதும் ராமதாஸ் கும்பல் சொல்லுவது போல பணத்திற்காகவோ இல்லை சொத்துக்களை கைப்பற்றுவதற்காகவோ நடந்த ஏமாற்று வேலை அல்ல. நடந்திருப்பது ஒரு கொடூரமான கொலை. அதில் சீனிவாசன் எனும் அப்பாவி இளைஞர் இரக்கமின்றி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணங்கள் தான் பெண்களுக்கு நல்லது என்று பிரச்சாரம் செய்பவர்கள், காதல் திருமணங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? கல்பனாவுக்குக்கும் தினேசுக்கும் பெற்றோர் தான் திருமணம் செய்து வைத்தனர், ஆனால் ஏன் இவர்கள் கொலைகாரர்கள் ஆனார்கள்?
இது போன்ற குற்றங்கள் ஏன் நடக்கின்றன? கல்பனாவின் விருப்பப்படி தினேஷை திருமணம் செய்து வைத்திருந்தால் இந்தக் கொலை நடந்திருக்காது. கல்பனாவும் தினேசும் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்பது தான் ராமதாசின் கருத்து. இதன் மூலம் இது போன்ற கள்ளக்காதலையும், கொலைகளையும் ஊக்குவிப்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். தலித் இளைஞர்கள் வன்னியப் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று பா.ம.க சாதிவெறியர்கள் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். ஆனால் இங்கோ இவர்கள் நடத்தி வைத்த உண்மையான திருமணம் கொலையில் முடிந்திருக்கிறது. வன்னியர் ஏரியா என்று சொல்லப்படுகின்ற கடலூர் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
கல்பனா தனது வீட்டாரின் சாதி வெறியை எதிர்த்து போராடுவதற்கு பதில் இத்தகைய கிரிமினல் வேலையை ஏன் மேற்கொண்டாள்? அது போல தினேஷூம் தைரியம் சொல்லி கல்பனாவையே திருமணம் செய்து கொள்ளாமல் தனது வீட்டு திருப்திக்கு வேறு ஒரு அப்பாவிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு இப்போது கொலைகாரனாக மாறியது ஏன்?
ஏனென்னால் சமூகத்தில் இருக்கும் பார்ப்பனியத்தின் ஏற்றத் தாழ்வான சாதி எனும் வில்லனை எதிர்ப்பது சுலபமல்ல என்பது இவர்கள் கருத்து. அதை விட கொலை பிரச்சினை இல்லை என்று இவர்கள் கருதுமளவு சாதி மறுப்புத் திருமணம் என்பது கடினமானது. இப்படி சாதி மறுப்பு திருமணங்களையும் காதலையும் எதிர்த்து பிரச்சாரம் மற்றும் தண்டனைகளை கொடுத்து வரும் இந்த சமூக அமைப்புதான் இவர்களை கொலைகாரர்களாக்கியிருக்கிறது.
அந்த சமூக அமைப்பின் பாதுகாவலர்களாக வலம் வரும் ராமதாஸ், காடுவெட்டி குரு, பாமக,வன்னியர் சங்கம், இதர ஆதிக்க சாதி அமைப்புகள் அனைவரும்தான் இந்த கள்ளக்காதல் கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். அதன்படி வன்னியர் சங்கம் மற்றும் இதர ஆதிக்க சாதி சங்கங்களை உடன் தடை செய்வது அவசியம்.
இதை ஏதோ ஒரு கள்ளக்காதல் கிசு கிசு சம்பவமாக பார்க்காமல் ஒரு அப்பாவி இளைஞன் உயிர் பறிக்கப்பட்டு இருவர் சிறையில் காலம் தள்ளப் போகிறார்கள் என்ற உண்மையோடு சிந்தித்து பார்க்க வேண்டும். இவர்கள் எவரும் விடலை பருவ வயது கொண்டவர்கள் அல்ல. முப்பதுகளைத் தொடும் வயதும், கொலையே செய்யுமளவு முதிர்ச்சியும் கொண்டவர்கள். ஒருவேளை இவர்கள் அப்போதே திருமணம் செய்திருந்தால் கல்பனா வீட்டில் மற்றும் கொஞ்சம் வருத்தம் இருந்திருக்கும். பிறகு நாளடைவில் அதுவும் சரியாகியிருக்கும். ஆனால் அந்த காதலை தடை செய்ததால் இன்று இரண்டு குடும்பங்கள் நடுத்தெருவில் இருக்கின்றன. ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இருவர் சிறையில் நீண்ட காலம் வாழப்போகின்றனர்.
சாதிவெறியர்களே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ?
பின் குறிப்பு: இந்த செய்தி ஊடகங்களில் கிசுகிசு, கள்ளக்காதல் ரசனை முதலான மலிவான நோக்கில் விதவிதமாக ஊதிப்பெருக்கி எழுதப்படுகிறது. இதில் காதல், சாதி போன்றவற்றின் சமூக யதார்த்தத்தை மட்டும் மனதில் கொண்டு நாங்கள் எழுதியிருக்கிறோம்.
நத்தம் காலனியில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போலவே மரக்காணம் தாக்குதலும் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியிருக்கிறது. 2011-ஆம் ஆண்டில், மாமல்லபுரம் வன்னியர் விழாவுக்குச் சென்ற கும்பல் எந்த இடத்தில் தாக்குதல் நடத்த முயன்று அது முறியடிக்கப்பட்டதோ, அதே இடத்தில் இப்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவைப்பு, கொள்ளை உள்ளிட்ட அனைத்தும் நத்தம் காலனி தாக்குதலை அப்படியே ஒத்திருக்கின்றன.
கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து சுமார் நூறு மீட்டர் உள்ளே இருப்பதும், இடையில் இருக்கும் அடர்த்தியான தைலமரக் காட்டினால் முற்றிலுமாக மறைக்கப்பட்டிருப்பதுமான தாழ்த்தப்பட்டோர் காலனியின் மீது தாக்குதல் நடத்துவதற்கு உள்ளூர் பா.ம.க.வினர்தான் உடன் இருந்து திட்டமிட்டுக் கொடுத்துள்ளனர். இது தன்னெழுச்சியாகவோ, தற்செயலாகவோ நடந்த தாக்குதல் அல்ல. பிரச்சினைக்குரிய இடம் என்று தெரிந்தும் அந்த இடத்தில் மாமல்லபுரம் செல்லும் வண்டிகள் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டதும், அங்கே பெயருக்கு சில போலீசார் மட்டுமே நின்றிருந்ததும், இந்தத் தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற போலீசு ஒத்துழைத்துள்ளதையே காட்டுகிறது. இந்த விசயத்திலும் நத்தம் காலனி தாக்குதலின்போது போலீசு நடந்து கொண்டதற்கும், மரக்காணத்தில் நடந்துள்ளதற்கும் அதிக வேறுபாடு இல்லை.
மரக்காணத்திற்கு அருகிலுள்ள கட்டையன் தெரு என்ற ஊரில் வன்னிய சாதிவெறிக் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு.
மாமல்லபுரம் விழாவாகட்டும், மரக்காணம் தாக்குதலாகட்டும் இரண்டின் நோக்கமும் தாழ்த்தப்பட்டோர் எதிர்ப்பு ஆதிக்க சாதிவெறிதான். இருப்பினும் வன்கொடுமை குற்றம் என்ற அடிப்படையில் கையாள்வதற்குப் பதிலாக, பொதுச்சோத்துக்கு சேதம், வன்முறை என்ற சட்டம்-ஒழுங்கு கோணத்திலேயே பெரும்பாலான வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது ஜெ அரசு. நத்தம் காலனி தாக்குதலிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சாதிவெறியர்கள் ஈடுபட்டிருந்த போதிலும், முதல் சுற்றில் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்கினால் கைது செய்யப்பட்ட 141 பேருக்கு மேல் வேறு யாரும் அதன் பின்னர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை.
சாதி வெறியர்களாக இருக்கட்டும், இந்து மதவெறியர்களாக இருக்கட்டும் அவர்கள் மீது உரிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவதுமில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதுமில்லை. மாறாக, “தடையை மீறியது, உரிய நேரத்தில் கூட்டத்தை முடிக்காதது” போன்ற உப்புப் பெறாத விசயங்களுக்காக அப்போதைக்கு கைது செய்து சில நாட்கள் சிறை வைக்கப்படுகின்றனர். அந்த கைது நடவடிக்கையையே பெரும் சாதனை போல ஊடகங்கள் மூலம் காட்டப்படுகின்றன. அல்லது ஒரு சிலர் குண்டர் சட்டம் போன்ற தடுப்புக்காவல் சட்டங்களில் கைது செய்யப்பட்டு ஓரிரு மாதங்கள் சிறை வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்படுகின்றனர். தற்போது நடந்து வருவதும் அதுதான்.
மாமல்லபுரம் விழாவிலும் சரி, அதற்கு முன்னரும் சரி, ராமதாசின் தாக்குதல் கருணாநிதியையும் தலித் மக்களையும் நோக்கியே இருந்தது. “நாங்க என்ன சோப்பு போடுற சாதியா, நாங்க என்ன மோளம் அடிக்கிற சாதியா, அக்கினியில் பொறந்தவன் வன்னியன்” என்றும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தியும் தொடர்ந்து பேசிவருகின்றனர். இத்தகைய சாதிவெறிப் பேச்சுகள், நடவடிக்கைகளுக்காக ராமதாசு, காடுவெட்டி குரு ஆகியோர் மீது டஜன் கணக்கில் வன்கொடுமை வழக்குகள் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஜெ. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
“வன்னியனைத் தவிர வேறு யாரையும் ஜெயிக்க விடமாட்டோம், நாங்க கண்ணசைத்தா என்ன நடக்கும் தெரியுமா, நாங்க கலவரம் பண்ணா தமிழகம் தாங்காது”என்ற மாமல்லபுரம் பேச்சுகள் தலித் எதிர்ப்பு என்ற எல்லையைத் தாண்டி மொத்த சமூகத்துக்கும் சவால் விட்டன. வெறியூட்டும் பேச்சுகளால் முடுக்கி விடப்பட்ட வன்னிய குல சத்திரியக் கொழுந்துகள், தமிழகத்தை ஆளப்பிறந்த பல்லவ மன்னர் பரம்பரை என்ற தோரணையில், மாமல்லபுரம் தொல்லியல் சின்னங்களைத் தமது பிதுரார்ஜித சொத்தாகக் கருதி, அவற்றின் மீது உரிமையோடு மஞ்சள் கொடியேற்றி நடனமாட, இந்தச் சூழலால் போதை தலைக்கேறிய ராமதாசு, “முடிந்தால் வழக்குப் போடு” என்று ஒரு பேச்சுக்கு சவால் விட்டார். இதன் விளைவுதான் கத்திரி வெயிலில் திருச்சி சிறையே அன்றி, அது சாதிவெறி நடவடிக்கைக்கான வழக்கோ, தண்டனையோ அல்ல.
இருப்பினும், அந்தக் கைதுக்கும் பயன் இல்லாமல் இல்லை. கைது நடவடிக்கைகள் தொடங்கியவுடன் “தமது கண்ணசைவில் ஒரு மாவட்டத்துக்கே தீ வைக்கும் ஆற்றல் பெற்ற” ஆண்ட பரம்பரை சாதிச்சங்கத் தலைவர்கள் தெறித்து ஓடி ஒளிந்து, முறுக்கு மீசைகளின் “வீரத்தை”அம்பலப்படுத்திக் கொண்டனர். அதேநேரத்தில் ராமதாசு கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையின் மூலம், தாங்கள் தலித் மக்களுக்கு மட்டுமின்றி மொத்த சமூகத்துக்குமே எதிரிகள் என்பதை பா.ம.க. சாதி வெறியர்கள் தெளிவாக எடுத்துக் காட்டினர்.
ராமதாசு கைதுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன. மக்களின் உயிரைப் பற்றிக் கடுகளவும் கவலைப்படாமல் பா.ம.க. காலிகள் ஓடும் பேருந்தின் ஓட்டுநரைக் குறிவைத்து இரவு நேரத்தில் கல் வீசியிருக்கின்றனர். ஊத்தங்கரை அருகே இரவு நேரத்தில் அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கின்றனர். என்ன ஏதென்று தெரியாத பயணிகள் எகிறிக் குதித்து மயிரிழையில் உயிர் தப்பியிருக்கின்றனர். லாரிகளின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்திருக்கின்றனர். அரியானா மாநில ஓட்டுநர் ஒருவர் தீக்காயத்தால் இறந்திருக்கிறார். பாலங்கள், குடிதண்ணீர்க் குழாய்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. நியாய விலைக்கடைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன.
சாதிவெறியர்களின் இந்த “எதிர்ப்பு” நடவடிக்கைகள் அனைத்திலும் பொதுமக்களும் பொதுச்சொத்துக்களுமே இலக்காகியிருக்கின்றன. ஓடும் பேருந்தின் ஓட்டுநர் மீது கல்வீசிய அந்தக் கும்பல், பேருந்து தறிகெட்டு ஓடிக் கவிழ்ந்தால் உயிரிழக்க கூடிய மக்களைப் பற்றி கடுகளவும் கவலைப்படவில்லை. தீக்கிரையான ஓட்டுநரைப் பற்றிக் கவலைப்படவில்லை. சாதிவெறியர்களின் இந்த சமூக விரோதத் தன்மை, ஐயா “கைது” தோற்றுவித்த கோபத்தினால் ஏற்பட்ட பிறழ்வு அல்ல. ராமதாசின் வக்கீல்களான பின்நவீனத்துவ அறிஞர்கள் கூறும் “கொண்டாட்ட” மனோநிலையிலும் அவர்கள் சமூகவிரோதிகளாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள்.
ராமதாசுக் கைதைக் கண்டிப்பது என்ற பெயரில் பா.ம.க. ரவுடிகள் பேருந்து மீது நடத்திய கல்வீச்சில் கொல்லப்பட்ட சேலத்தைச் சேர்ந்த செல்வம்.
மரக்காணம் காலனியைத் தாக்குவதற்கு முன்னரே, பல இடங்களில் இருபுறமும் இருந்த கடைகளை களவாடிக் கொண்டும், சாப்பிட்டதற்குப் பணம் கேட்ட ஓட்டல்காரர்களைத் தாக்கிக் கொண்டும், கோட்டக்குப்பம் மதரசாவிலிருந்து வெளியில் வந்த இசுலாமியப் பெண்களை நோக்கி கைலியை அவிழ்த்துக் காட்டி நடனமாடிக்கொண்டும்தான், சத்திரிய குலக்கொழுந்துகள் மாமல்லபுரம் நோக்கி சென்றிருக்கிறார்கள். பிள்ளையார் குப்பம், கூனிமேடு, அனுமந்தை போன்ற பல ஊர்களில் இந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட வன்னியர்கள், மீனவர்கள், இசுலாமியர்கள் உள்ளிட்ட அனைத்துச் சமூகத்தினரும் சேர்ந்து இவர்களைத் திருப்பித் தாக்கியிருக்கிறார்கள்.
ராமதாசு தூண்டிவரும் வன்னிய சாதிவெறி என்பது தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும்தான் தாக்கும் என்று யாரேனும் எண்ணினால் அது தவறு. சாதி என்பது தன் இயல்பிலேயே ஒரு ஜனநாயக விரோத நிறுவனம். சாதித் திமிரும், லும்பன் கலாச்சாரமும், வெறியூட்டப்பட்ட கும்பல் மனோபாவமும் சமூக விரோத சக்தியாக மட்டுமே நடந்து கொள்ள முடியும். இந்த விசயத்தில் வன்னியர் சங்கம் மட்டுமல்ல, எல்லா சாதி சங்கங்களும் தங்கள் யோக்கியதையை நிரூபித்திருக்கின்றன.
முத்தரையர் சங்கத்தினர் சென்ற ஆண்டு திருச்சியில் ரவுடித்தனம் செய்து மக்களிடம் அடிவாங்கினர். தேவர் குருபூசை, மருது குருபூசை என்றால் அந்தக் கும்பல் போகும் பாதை முழுவதும் கடையடைக்கப்பட்டு ஊர்களெல்லாம் சுடுகாடுகளாகி விடுகின்றன. பயந்து ஓடுவது மொத்த சமூகமும்தான். சாதிச் சங்கங்கள் ஒட்டு மொத்த சமூகத்தையும் அச்சுறுத்தும் சமூகவிரோத சக்திகள். இவர்கள் துப்புரவாக ஒழிக்கப்படவேண்டும் என்பதற்கான நியாயம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு துலக்கமாகியிருக்கிறது.
– தொரட்டி
________________________________________________________________________________ புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________
மதவாத பாரதிய ஜனதாவுக்கு ஒரு மதச்சார்பற்ற முகமூடியை 17 ஆண்டுகளாக வலிந்து அளித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் தற்போது கூட்டணியை முறித்திருக்கிறது. இந்த முகமூடி உறவுக்கு மோடி பிரதமரானால் கேடு என்பது நிதீஷ் குமாரின் முடிவு.
நிதீஷ் குமார், சரத் யாதவ்
2005 மற்றும் 2010 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து வென்று இரண்டாவது முறையாக முதலமைச்சராக நீடிப்பவர் நிதீஷ். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு வருவதாக இருந்ததை தடை செய்து வெற்றி பெற்றவர் அவர். பீகாரில் முசுலீம்கள் வாக்கு பறிபோய்விடக்கூடாது என்பதற்கே இந்த மோடி தடை. அன்று பாஜகவும் இந்த தடையை சந்தர்ப்பவாதமாக ஏற்றுக் கொண்டது.
தற்போது அடுத்த ஆண்டில் வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தும் பாஜகவின் முடிவு அவருக்கு உவப்பானதில்லை. காரணம் கொள்கையல்ல, இசுலாமியர் வாக்குகள் பறிபோய்விடும் என்ற சுயநலத்திலிருந்து வரும் பிழைப்புவாத பயம்தான்.
கோவா கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக, அத்வானி ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் மீறி மோடியை நியமிக்கப்பட்டது துவக்கம் மட்டுமல்ல அவர்தான் பிரதமர் பதவிக்கான ஆள் என்பது நிதீஷ் குமாருக்கு உடன்பாடில்லை.
இதன் தொடர்ச்சியாக நேற்று கவர்னர் டி.ஒய் பாட்டிலை பார்த்து கூட்டணி முறிவை தெரிவித்து, 11 பாஜக அமைச்சர்களை நீக்குமாறு பரிந்துரைத்திருக்கிறார். மேலும் ஜூன் 19 அன்று சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்ட சபையில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்குரிய எண்ணான 122-ஐ அடைய இன்னும் 4 உறுப்பினர்கள் வேண்டும். அதை ஏதாவது சுயேச்சைகளைக் கொண்டு அடைந்து விடுவார்கள். அதேநேரம் 91 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக, 31 உறுப்பினர்களை குதிரை பேரத்தில் வாங்கினால் அவர்களே ஆட்சி அமைக்கலாம். ஆனாலும் இது நிறையவே சிரமம் என்பதால் நிதீஷ் குமார் ஆட்சியை தொடருவதில் அநேகமாக பிரச்சினை இல்லை.
ஆனாலும் பாஜக இந்த பிரிவை சும்மா விடவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெயரைச் சொல்லி முதலமைச்சரான நிதீஷ் குமார் மானமுள்ளவராக இருந்தால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அறம் பேசுகிறது பாஜக. நிதீஷ் அமைச்சரவையில் துணை முதல் அமைச்சராக இருந்த பாஜகவின் சுஷில் குமார் மோடி ஐக்கிய ஜனதா தளத்தின் முடிவை நம்பிக்கை துரோகம் என்றதோடு வரும் 18-ம் தேதி பீகார் பந்தையும் அறிவித்திருக்கிறார். கூட்டணி முறிவுக்கெல்லாம் நடத்தப்படும் வேலை நிறுத்தத்தை பார்க்குமளவு பீகார் மக்கள் ஏமாளிகளாக இருக்கிறார்கள்.
நிதீஷ் குமாரும், நரேந்திர மோடியும்
பீகாரில் இப்படி உறவு முடிந்திருப்பதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அமைப்பாளர் பதவியில் இருந்து சரத் யாதவும் ராஜினாமா செய்திருக்கிறார். “இந்த தருணம் கொள்கையா இல்லை சமரசமா என்று முடிவு செய்யும் நேரம், கொள்கைக்காக நாங்கள் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று முடிவெடுத்தோம், அதனால் எந்த விளைவையும் சந்திக்க தயாராக உள்ளோம்” என்றெல்லாம் முழங்கியிருக்கிறார் நிதீஷ் குமார்.
தேர்தலுக்கான சந்தர்ப்பவாதங்கள் கூட எப்படி கொள்கையாக திரிக்கப்படுகின்றன் பாருங்கள்! பாஜகவில் மோடி மட்டும்தான் இந்துத்துவ கேடியா, அத்வானி போன்றவர்களெல்லாம் சைவப்புலியா என்ன? இந்த 17 ஆண்டுகளில் எத்தனை எத்தனை கலவரங்கள், சம்பவங்களையெல்லாம் இந்து மதவெறியர்கள் நடத்தியிருக்கிறார்கள்? 2002 குஜராத் கலவரம் மோடி தலைமையில் நடக்கும் போது இதே நிதீஷ் குமார் ரயிலைவே அமைச்சராக வாஜ்பாயியின் தலைமையில் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் வராத மதச்சார்பற்ற உணர்வு இப்போது பீறீட்டெழுவது ஏன்? இத்தனை நாட்களாக எங்கே ஒளிந்து கொண்டிருந்தது அந்த உணர்வு?
பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்திற்குமான உறவே சந்தர்ப்பாவாதத்தின் அடிப்படையில் உருவான ஒன்றுதான். காங்கிரசையும், லல்லு பிரசாத் யாதவையும் முறியடிப்பதற்கு இரண்டு கட்சிகளும் ஒன்று சேர தேவை இருந்தது. அதற்காக சேர்ந்தார்கள். அதற்காக என்றே நிறைய சமரசங்கள் செய்து கொண்டார்கள். தற்போது இரண்டு முறை வெற்றி பெற்றிருப்பதால் இனி தனிக் கச்சேரியே நடத்தலாம், கூட்டணி ஆவர்த்தனம் தேவையில்லை என்று நிதீஷ் குமார் யோசிக்கிறார். மேலும் மைய அளவில் பாஜக மதவாதக் கட்சி என்றாலும் பீகாரில் மோடியைக் கூட அனுமதிக்கவில்லை எனுமளவு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம், தற்போது அந்த மோடியே பிரதமருக்கான வேட்பாளர் என்றால் முதலுக்கே மோசமில்லையா என்று அவர் பார்க்கிறார்.
பாஜகவோ அத்வானி போன்ற ஓய்வுபெறும் வயதுடைய ஜெனரல்களை கடாசி விட்டு முதலாளிகள், ஊடகங்கள், வட இந்திய இந்து நடுத்தர வர்க்க ஆதரவு பெற்ற மோடியை முன்னிறுத்தி ஏதும் பிழைக்க முடியாதா என்று முடிவெடுத்து விட்டது. அதன்படி நிதீஷ்குமாரின் பீகார் கணக்குகளும், பாஜகவின் இந்தியக் கணக்குகளும் இணக்கமாக சேராது என்பதாலேயே இந்த பிரிவு நடந்திருக்கிறது. இதற்கு மேல் இதை கொள்கையால் வகுத்து பார்ப்பது அந்த வார்த்தைக்கே அவமானம்.
பீகாரின் ‘ஜமீன்தார்’ நிதீஷ் குமார்
பீகாரின் நிலப்பிரபுத்துவ ‘மேல்’ சாதி மற்றும் இந்துத்துவ நடுத்தர வர்க்கத்தினை சமூக அடிப்படையாகக் கொண்ட பாஜகவை கூட்டாளியாக வைத்திருப்பதை விட நரேந்திர மோடி ஒன்றும் அதிகமில்லை. அதே போன்று எந்த ‘வளர்ச்சி’-க்கென்று மோடி போற்றப்படுகிறாரோ அதே ‘வளர்ச்சி’க்காக நிதீஷும் பாராட்டப்படுகிறார். இரண்டுமே டுபாக்கூர் வளர்ச்சி என்பதற்கு வினவிலேயே நிறைய கட்டுரைகள் ஆதாரங்களோடு இருக்கின்றன. தற்போது இந்த இரண்டு ‘வளர்ச்சி’ வாள்களும் ஒரு உறையில் முடங்க முடியாது என்பதுதான் இதன் கவித்துவ நீதி.
11.11.2011-ம் தேதியில் 11 மணி 11 நிமிடம் 11 விநாடியில் 11 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த நிதீஷ் குமார் இது போன்ற ‘வரலாற்று’ முக்கியத்துவம் வாய்ந்த தேதிகளில் முடிவெடுப்பதுதான் தனது வெற்றிக்கு காரணம் என்று முன்னர் சொல்லியிருந்தார். இந்த விசயத்தில் இவருக்கு போட்டியாளர் ராகுகாலம் – நல்ல நாள் – முகூர்த்தம் பார்த்து முதலமைச்சராவதற்கு நாட்கணக்கில் காத்திருந்த புதுவை ரங்கசாமி மட்டும்தான்.
அந்த வகையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருக்குள்ளும் ஒரு இந்துத்துவவாதி ஒளிந்திருக்கிறான். அதே நேரம் இசுலாமியர் வாக்கு வேண்டும், பாராளுமன்ற தேர்தலில் ஒரு முக்கிய சக்தியாக வருவதற்கு நிறைய தொகுதிகள் வேண்டும் என்று பல கணக்குகளோடு இந்துத்வவாதிகளின் குத்தகைதாரரான பாஜகவோடு மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.
இறுதியாக மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று பொறி பறக்க குதிக்கும் பாஜக, இந்த பிரிவுக்கு பிறகு சிவசேனா, அகாலிதளம் எனும் இரண்டு கட்சிகளோடு மட்டும் புலம்ப முடியும். அந்த வகையில் பார்த்தால் மோடிக்கேற்ற ஜாடி குஜராத்தை தாண்டி எங்கும் இல்லை என்பதே நிதர்சனம்.
அம்மா சாராயக் கடையை விரட்டியடிக்க
வி.வி.மு. தோழர்கள் தலைமையில சூளகிரி மக்களின் போராட்டம் வெற்றி!
சாராயக் கடையோட முதலாளி முதலமைச்சர் அம்மா ! அதை ஊருக்குள்ள கொண்டு போய் நடத்து என்பது நீதிபதி அய்யா !
சாலை விபத்துக்கள் அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன. அவற்றில் வாகன ஓட்டுனர்கள் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது ஒரு காரணம் என்பது பொது நிலைமை. ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் குடிப்பதால்தான் விபத்துக்கள் நடக்கின்றன என்கிற கண்டுப்பிடிப்பையும் அதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் சாராயக்கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்கிற தீர்ப்பும் உயர்நீதிமன்றத்தின் வாயிலிருந்து வெளிவந்தது. குடிப்பதற்கு காரணம் டாஸ்மாக் சாராயக் கடைகள் என்றும், டாஸ்மாக் சாராயக் கடைகளையே மூடவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால் அதன் நேர்மையை பாராட்டலாம். ஆனால், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற இடங்களில் மேட்டுக்குடிகளுடன் உட்கார்ந்து சாராயம் குடிக்கும் உயர்’குடிமகன்’களாக நீதிபதிகள் இருப்பதால் குடிமகன்களைவிட குடிகாரர்கள் மீது பாசத்துடன் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதுவும் ஒரு வர்க்க பாசம்தான்! ஏனென்றால், அரசு சாராயக்கடை நடத்தும்போது, அரசு ஊழியர்களிடம் இந்தவகை பாசத்தைத்தான் எதிர்ப்பாக்க முடியும்.
நீதிமன்றத்திற்கு தெரியும், இந்த உத்தரவின் அடுத்தக் கட்டமாக டாஸ்மாக் சாராயக்கடைகள் ஊருக்குள்ளே செல்லும் என்பது. இதனால், குடிகாரர்களுக்கு சாதகமான ஒரு தீர்ப்பைக் கொடுத்து பொதுமக்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருக்கின்ற டாஸ்மாக் சாராயக் கடைகளை அருகில் உள்ள ஊர்களுக்கு இடமாற்றம் செய்யும் வேலையில் தமிழக அரசு இறங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடியுள்ளனர். சில இடங்களில் போலீசு தடியடி நடத்தி மக்களை விரட்டியடித்துள்ளது. சில இடங்களில் மக்கள் போராடி வெற்றியும் பெற்றுள்ளனர். டாஸ்மாக் சாராயக் கடைகளை ஊருக்கு வரவிடாமல் தடுத்துமுள்ளனர்.
சூளகிரியில் டாஸ்மாக் சாராயக்கடை !
கிருஷ்ணகிரி-ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, ஒன்றியத் தலைநகரமான சூளகிரி ஒரு கிராம ஊராட்சி மட்டுமே! 2000 குடும்பங்கள் இருக்கும் இந்த ஊரில் 5 டாஸ்மாக் சாராயக் கடைகள் உள்ளன. இதில் ஒன்றுதான் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடை! நீதிமன்ற உத்தரவின் படி இந்த சாராயக் கடையை அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியான காமராஜர்நகரில் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனை ரகசியமாக வைத்து நிறைவேற்றிவிடலாம் என தமிழக அரசும் போலீசும் முடிவு செய்து வைத்துள்ளன. ஆனால், எப்படியும் கடை வாடகைக்குப் பிடிக்க வந்ததால் அது அப்பகுதி மக்களுக்குத் தெரிய வந்துவிட்டது.
கோவிந்தராஜ் வீட்டு முன் திரண்ட மக்கள்
ஏற்கனவே, சூளகிரி காமராஜர் நகரில் இருமுறை டாஸ்மாக் சாராயக் கடையை திறக்க முயற்சித்து அதனை அப்பகுதி வி.வி.மு. தோழர்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டது. இப்பொழுது மீண்டும் சாராயக் கடையை கொண்டுவர இருக்கிறார்கள் என்று தெரிந்த பின்னர் அப்பகுதி உழைக்கும் மக்களை வி.வி.மு. தோழர்கள் அணிதிரட்டினர்.
ஆ, சி(றி)யர்… எச்சரிக்கை!
ஓய்வு பெற்ற உடற்பயிற்சி ஆசியரான கோவிந்தராஜ் என்பவர் தனது கடையை டாஸ்மாக் சாரயக் கடை கொண்டுவருவதற்காக ஒப்புக்கொண்டிருந்தார். இவரும் இவரது துணைவியாரும் ஓய்வு பெற்ற உடற்பயிற்சி ஆசிரியர்கள். இவரது மகளும் ஆசிரியர். இவரது மருமகன் ஒரு அரசு ஊழியர். இவர்கள்தான் டாஸ்மாக் சாராயக்கடைக்கு அனுமதி கொடுத்துள்ளனர். ஆம், முன்னாள் சாராய வியாபாரிகள் இன்று ‘கல்விவள்ளல்’களாக வலம் வரும் போது, முன்னாள் ஆசிரியர்கள் மட்டும் சாராயக் கடை நடத்தக்கூடாதா என்ன? தனியார்மயம் தாராளமயம் வந்த பின்னர், கல்வி ஒரு சரக்காகிவிட்ட நிலையில், கல்வி சரக்கை விற்பவர்கள், சாராய சரக்கை விற்பதைப் பார்த்து நாம் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்! ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரை இரண்டும் சரக்குதான்!
உடற்பயிற்சி ஆசிரியர் கோவிந்தராஜ் வீடுமுன்பு திரண்டிருந்த மக்கள்
பொதுமக்கள் இவரது வீட்டிற்கு திரண்டு சென்று, “சாராயக் கடை வருவதற்கு அனுமதி கொடுத்துள்ளீர்களே, ஐயா” என்று மரியாதையுடன் கேட்டுள்ளனர். அவரது மனைவியோ, “உங்கள்ல யாருதான் குடிக்காதவங்க? நீங்கள் என்ன யோக்கியமா” என்று கேட்டுள்ளார். அப்பகுதி மக்களில் குடிப்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், அவர்கள் கூட சாராயக் கடை குடியிருக்கும் ஊருக்குள்ள வரக்கூடாது என்று கருதுகின்றனர். காரணம் சாராயம் குடிப்பது என்பது வேறு, கடை திறப்பது வேறு! ஏனென்றால், குடிப்பது என்பது அவர்களோடு முடிந்துவிடும். கடை திறப்பது என்பது ஒட்டுமொத்த சமூகத்தையே பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
இந்திய ஜனநாயகம் என்பது ‘மனு’ தர்மம் !
சாராயக் கடை திறப்பதை எதிர்த்து போலீசில் சென்று மனு கொடுத்தனர். இப்பகுதியில் இருக்கும் ஓட்டுக் கட்சி பிரமுகர்கள் அனைவரும் இந்த மனுவில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தனர். அவ்வாறு போடும் போது, “என்ன செஞ்சாலும் முருகேசா, ஒண்ணும் நடக்காது. நாங்க வண்டி வண்டியா ஆளுங்கள அலைச்சிக்கிட்டு போயி கலெக்டர்கிட்ட மனு கொடுத்துவிட்டு வந்தோம்” என்றனர். போலீசிடம் சென்று மனு கொடுக்கும் போதோ மிரட்டல் மட்டும்தான் மிஞ்சியது.
குடும்பத்துடன் கலந்துக்கொண்டு போராடும் மக்கள்
போலீசுகாரர் ஒருவர், “இங்க பாரு, போலீசு ஸ்டேசன் பக்கத்துல கடை வரக்கூடாதுன்னு நாங்களும்தான் பேசிப்பார்த்தோம், ஆனால், எங்களாலேயே தடுக்க முடியல” என்று கூறியுள்ளார். மக்கள் அடக்கமாக சிரித்துக்கொண்டனர். “நீங்கள் போராட்டம் என்று ஏதாவது செய்தால், உங்களை கைது செய்வோம்!” என்று மிரட்டியுள்ளார். “மனு கொடுப்பதாக இருந்தால் கலெக்டரிடம் சென்று கொடு” என்றார் போலீசுகாரர். “கலெக்டரிடம் மனு கொடுத்தாலும் பி.டி.வோ.விடம் மனு கொடுத்தாலும் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்கள் வருவதில்லை, போராட்டம் செய்யாதே என்று சொல்லி, நீங்கள் தானே வர்றீங்க, வந்து விரட்டுறீங்க. அதுதான் உங்களிடம் முதலில் தெரிவித்துவிட்டோம்” என்று பதிலளித்துள்ளனர்.
“என்ன ஐயாகிட்டயே எதுத்து பேசுறீயா?” என்று அதிகாரத்தைக் காட்டியுள்ளார் மற்றொரு போலீசுகாரர். மேலும், “கடையை காட்டுக்குள்ளவா தொறக்குமுடியும், ஊருக்குள்ள தொறந்தாதான் வியாபாரம் நடக்கும்” என்று தன் உண்மை முகத்தை காட்டியுள்ளார். “ஆமாம், முன்பெல்லாம் காட்டுல சாராயத்தை விற்றாலே கைது செய்யவீங்க, இப்ப ஊருக்குள்ள விற்காதே என்று நாங்க சொன்னா நீங்க கைது செய்வேன்னு மிரட்டுறீங்க” என்று பொதுமக்களில் ஒருவர் கேட்க பிரச்சனையின் திசையை மாற்றினார் போலீசுகாரர்.
தினகரன் செய்தி
ஏப்ரல் 1-ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம் என்பார்கள். ஆனால், சூளகிரி மக்கள் தங்களது முட்டாள்தனத்தை கைவிட்டதினமும் இந்த நாள்தான். ஏனென்றால், மனு கொடுத்துவிட்டு வந்த இரு நாட்களுக்குப் பின்னர், தாசில்தார் நேரில் விசாரணைக்கு வந்தார். கலெக்டரிடம் மனு கொடுத்தது யார் என்று அழைத்தார். தோழர்.முருகேசன் குடும்பத்துடன் சென்று தாசில்தார் முன்னால் நின்றார். உடனே அவரிடம் ஒரு மனுகொடுக்க சிலர் கூறியதால், கலெக்டரிடம் கொடுத்த மனுவின் நகலை அவரிடமும் கொடுத்தனர். தாசில்தார் விசாரணைக்கு வந்ததைப் பார்த்தவுடன், இதெல்லாம் மனுவின் பவர் என்று மக்களில் சிலர் பேசிக்கொண்டனர். தாசில்தாரோ, தனது திருவாயைத் திறந்து சொன்ன முதல் வார்த்தையே, “இந்த இடத்தில் ஒன்னும் பிரச்சனையில்லையே, டாஸ்மாக் திறக்கலாமே என்பதுதான்!” இதைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டனர் மக்கள். அரசின் அங்கமெல்லாம் டாஸ்மாக் மயமாகியிருப்பதாக உணர்ந்து கொண்டனர் போலும்.
இத்துடன் நின்றுவிடவில்லை. “ஸ்கூல் அங்கதானே இருக்கு, இங்க எங்க ஸ்கூல் இருக்கு என்று கேட்டார்” ஆர்.ஐ. “பள்ளிக்கூட பசங்க எல்லாம் பிளேன்ல பறந்தா போவாங்க” என்று திருப்பிக் கேட்கத் தொடங்கினர். உடனே டாஸ்மாக் மாவட்ட மேனேஜர், “இந்த இடத்தில வேணாம்னா வேற இடத்தைக் காட்டு” என்று கேட்டார். பொதுமக்களில் மற்றொருவரோ, “இந்தக் கண்ணுல குத்தாதே என்று சொன்னால், அந்தக் கண்ணக் காட்டு என்று கேட்கிறாயே” என்று சீறினார்.
இத்துடன் விவாதம் தொடர அரசு அதிகார வர்க்கம் இடத்தை காலிசெய்து கொண்டது. டாஸ்மாக் சாராயக் கடையை இந்த இடத்தில் கொண்டுவருவதில் அதிகாரிகள் உறுதியாக இருப்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர். இனி இவர்களிடம் பேசிப் பயனில்லை என்பது உணர்ந்து கொண்டனர்.
மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அரசிடம் சொல்வார்கள் ! அரசே பிரச்சனை என்றால், போராடித்தான் தீர்க்க முடியும் !
இரவெல்லாம் கடை முன்பே முகாமிட்டிருக்கும் மக்கள்
அதிகாரிகள் சென்றவுடன் மக்கள் அவர்களுக்குள் ஆவேசமாக பேசிக்கொண்டனர். இனி எவனையும் நம்பமுடியாது. எந்த அதிகாரியாவது கடையைத் திறக்க வந்தா அடிச்சே விரட்டனும் என்று குமுறலை வெளிப்படுத்தினர். அதிகாரிகள் பேசிவிட்டு சென்றதை பார்த்தவுடன் இனி எந்த நேரமும் இவர்கள் வந்து கடையைத் திறப்பார்கள் என்று புரிந்து கொண்டனர். இரவோடு இரவாக வந்து கடையை திறந்துவிடுவார்கள் என்பதை உணர்ந்து கொண்டனர். வி.வி.மு.வின் வழிகாட்டுதல் படி எல்லோரும் குடும்பத்துடன் டாஸ்மாக் கடை வரவிடாமல் தடுக்க அந்தக் கடையின் முன்பு முகாமிட்டனர். முதலில் இந்தப் போராட்டம், தினமும் இரவும் பகலும் நாள்முழுதும் வெயிலிலும் குளிரிலும் கடையின் முன்பு முகாமிட்டு தங்குவது என்று செயல்பட்டனர். அதன் பின்னர், அனுபவத்திலிருந்து ஷிப்ட் முறையைக் கொண்டுவந்தனர்.
மார்ச் 28-ம் தேதி முதல் தொடங்கிய இந்த போராட்டம் 65 நாட்கள் தொடர்ந்தது. வி.வி.மு. சார்பாக சுவரொட்டி இயக்கம் எடுக்கப்பட்டது. பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்த பின்னர் போராட்டத்திற்கான ஆதரவு அதிகரித்தது. உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்து முசுலீம் என்ற வேறுபாடின்றி, சாதி வேறுபாடின்றி அருகில் உள்ள எல்லா வீடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என பலரும் இந்தப் போராட்டத்தில் ஊக்கமாக பங்கேற்றனர். வி.வி.மு. தலையில் நடந்த இந்தப் போராட்டத்தை பிற ஓட்டுக் கட்சிகளில் இருக்கின்றவர்களும் எங்களால செய்ய முடியலைன்னாகூட நீங்க செய்வது சரிதான் என்று ஆதரித்தனர்.
தமிழ் முரசு செய்தி
இதன் பின்னர், தான் தமிழக அரசு டாஸ்மாக் திறக்கும் திட்டத்தை வாபஸ் பெற்றதாக அறிவித்தது. மக்களின் போராட்டங்களுக்கு புரட்சிகர அமைப்புகள்தான் உறுதியாகவும் நேர்மையாகவும் முன்னின்று செயல்படுவதாக அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர்.
மூன்றாவது முறையாக சூளகிரி-காமராஜர் நகரைச் சேர்ந்த மக்கள், டாஸ்மாக்கை வி.வி.மு.வின் தலைமையில் முறியடித்துள்ளனர். ஆனால், அரசு டாஸ்மாக் கடைகளை நடத்தும் வரை இந்த பிரச்சனை முடிவுக்கு வரப்போவதில்லை! மக்கள் போராட்டங்களும் இனி இந்த மாதிரி வடிவங்களுடன் நின்று விடப் போவதுமில்லை… டாஸ்மாக் கடைகளை மூடும் வரையில் வளர்ந்தே தீரும்! போராடிய சூளகிரி உழைக்கும் மக்களுக்கும், பொதுமக்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்!
விவசாயிகள் விடுதலை முன்னணி, கிருஷ்ணகிரி மாவட்டம். தொடர்புக்கு : தோழர்.முருகேசன், காமராஜர் நகர், சூளகிரி, ஒசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம்.
இந்தக் காற்று எங்கேயிருந்து உற்பத்தியாகி வருகிறது என்று தெரியவில்லை. எப்போதும் வீசிக் கொண்டேயிருப்பதன் நோக்கம் என்னவென்றும் தெரியவில்லை. எங்கிருந்தோ எப்படியோ எதற்காகவோ வருகிறது. மரங்களைப் பிடித்து உலுக்குகிறது, தலை மயிரைச் சிலுப்புகிறது. இந்த மரங்களைப் பாருங்கள்; நானும் இந்தப் பூங்காவை எனது சின்ன வயதில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், இவையும் சும்மாவே இருப்பதில்லை. இவற்றுக்கு அலுப்பே ஏற்படாதோ? இந்த மரங்களைச் சுற்றி ஓடியாடும் இந்தச் சிறுவர்களும் தான். இவர்களுக்கெல்லாம் அலுப்பே வராதா?
தம்பி, நீங்கள் கொஞ்சம் வசதியாக சாய்ந்து உட்காருங்கள். என்னுடைய கதை பெரிது. என்ன சொன்னேன்?ஆங்… சிறுவர்கள். பாருங்களேன், ஓவென்று கத்திக் கொண்டு இலக்கின்றி ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். எதற்கு ஓடுகிறார்களோ தெரியவில்லை. இவர்கள் மரங்களைக் கவனிக்கும் அளவுக்கும் கூட இங்கேயே அமர்ந்திருக்கும் என்னைக் கவனிப்பதில்லை. மரியாதை தெரியாதவர்கள். சரி, அவர்களை விடுங்கள்; நான் என்னைப் பற்றிச் சொல்கிறேன், கேளுங்கள்.
நான் அய்யம்பெருமாள். முன்பொரு காலத்தில் இந்தப் பெயரை உச்சரிக்க வாயே வராது ஊர்க்காரப் பயல்களுக்கு. எனக்கு இரண்டு பெண்டாட்டிகளும், பதிமூணு பிள்ளைகளும் உண்டு. அதில் எட்டு பையன்கள், அஞ்சு பெட்டைகள். என்ன முகத்தைச் சுளிக்கிறீர்கள்?எங்கப்பாருக்கு மூணு பெண்டாட்டிகளும், ரெண்டு கூத்தியாள்களும் உண்டு, தெரியுமா? நான் ரெண்டாம் தாரத்தின் நான்காவது மகன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பதினேழு வயது வித்தியாசம். அப்பாவிடம் அம்மப்பா காசு வாங்கியிருந்தார். திருப்ப முடியவில்லை; மகளைக் கொடுத்து விட்டார். அப்பா கடைசியாக சேர்த்துக்கொண்ட கூத்தியாளுக்கும் அப்பாவுக்கும் இருபத்தியெட்டு வயசு வித்தியாசம்.
அது போகட்டும். நான் என்னுடைய பத்தொன்பதாவது வயதில் பட்டாளத்தில் சேர வேண்டுமென்று ஆசைப்பட்டேன். வேலையும் கிடைத்தது. பங்காளி தான் சொன்னான், அங்கே மீசை மட்டும் தான் முறுக்காக வைத்துக்கொள்ள முடியுமாம். மற்றபடி அதிகாரிகளுக்கு குனிந்து கொடுத்தால் தான் பிழைப்பு ஓடுமாம். இந்த அய்யம்பெருமாளை யார் என்று நினைக்கிறீர்கள்? என் பூட்டனுக்குப் பூட்டன் ராஜா. என் ரத்தம் ஆண்ட ரத்தம். முடியாது என்று சொல்லி வந்து விட்டேன். நிறுத்துங்கள், நீங்கள் அப்படிச் சிரிக்கக் கூடாது.
அதன் பின் என்னுடைய இருபதாவது வயதில் போலீசில் சேர்ந்தேன். அன்றைக்கெல்லாம் கான்ஸ்டபிள் அய்யம்பெருமாள் என்றால் நடுங்குவார்கள். இப்போதைய தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள். தீட்டிய பீச்சுவாவை விட எனது பூட்சுகளின் பளபளப்பு கண்ணைப் பறிக்கும். அதைப் போட்டுக் கொண்டு நடக்கும் போது வரும் டக் டக் சத்தம் இருக்கிறதே… மலம் கட்டிக் கொண்டவனுக்குக் கூட அந்த சத்தத்தைக் கேட்டால் பேதி புடுங்கும். ராயக்கோட்டை ஸ்டேசனில் தான் எனக்கு போஸ்டிங் கிடைத்தது. அது போக்கிரிப் பயல்களுக்கு பேர் போன ஏரியா. அப்போது சீனிவாச அய்யங்கார் தான் அங்கே இன்ஸ்பெக்டராக இருந்தார். கெட்டிக்கார மனுஷன். எவனையும் கை நீட்டி அடித்து தீட்டுப்பட்டுக் கொள்ள மாட்டார். அந்த ஸ்டேசனில் இந்த அய்யம்பெருமாள் தான் எல்லாம்.
இருவத்திரெண்டு வருசம் அந்த ஸ்டேசன்ல தான் சர்வீசு. தப்பு செய்யாதவனைக் கூட ஒத்துக்கிட்டு கைநாட்டுப் போட வைக்கிறதுல நான் கில்லாடின்னு அய்யாவே சொல்லுவாரு. லாடம் கட்றதுன்னா என்னான்னு தெரியுமா தம்பி? துணிமணியெல்லாம் உரிஞ்சிட்டு மர டேபிள் மேலே குப்புறப் படுக்க வைக்கணும். சரியா முட்டாங்காலுக்குப் பின்னேயும் பொடனிலயும் லத்திக் கம்ப வச்சி அழுத்திப் பிடிச்சிக்கிடணும். லாடம் கட்றதுக்குன்னே தனி லத்தி வச்சிருந்தேன். தெனமும் காலைல விளக்கெண்ண போட்டு வெயில்ல வச்சிடுவேன். வெயில் சாய அது நல்லா முறுக்கேறி இருக்கும். சாதா லத்திக் கம்பை விட இது கொஞ்சம் மொத்தமாவும், நீளமாவும் இருக்கும்.
சாயங்காலம் ஆறு மணி தான் சரியான டைம். அஞ்சு நிமிசம் அடி; அஞ்சு நிமிசம் கேப்பு. நமக்கும் ரெஸ்டு வேணுமில்லையா? ரத்தம் வராது.பெருசா வீக்கம் தெரியாது. கோர்ட்டுல சொன்னாலும் எடுபடாது. ஆனா, உள்ளங்கால்ல இருக்கிற நரம்பு மொத்தமும் அப்டியே சிதைஞ்சி போயிரும். அப்பால அவனால வாழ்நாள் முழுக்க நேரா நிற்கவே முடியாது.சப்பாணி தான். இன்னிக்கும் ராயக்கோட்டைக்குப் போனீங்கன்னா வயசான கேசுங்க எதுனாச்சியும் குட்டிச் சுவத்தாண்ட தடுமாறிட்டே போவும். அது கிட்டே போயி அய்யம் பெருமாளுன்னு சொல்லிப் பாருங்க தம்பி.
லாடத்துக்கு ஒத்து வராத கேசுங்களுக்கு வேற வைத்தியம் வச்சிருந்தேன். அது குப்புறப் போட்டு லத்தியால புட்டத்தில அடிக்கிறது. உள்ளே தசையெல்லாம் கூழாகிடும். ஒக்கார முடியாது, மல்லாந்து படுக்கவும் முடியாது, நிண்டு கிட்டே தான் எல்லாம். சாவுற வரைக்கும் நிண்டு கிட்டே தான் பீ பேளணும். என்னோட இருவத்திரெண்டு வருச சர்வீசுல நான் கேட்டதுக்கு இல்லைன்னு எந்த அக்கீஸ்டும் சொன்னதில்லே.எவனைப் புடிச்சாந்தமோ அவந்தான் குத்தவாளி. நிஜத்துல தப்பு செஞ்சவன் மாட்டலைன்னா கூடப் பராவாயில்ல. மாட்டியவன் கதியைப் பாத்தாலே உறக்கத்துல கழியணும். அடுத்த முறை தப்புத் தண்டா செய்யும்போது அய்யம்பெருமாளோட மூஞ்சி கண்ணு முன்னாடி வரணும்.வரும்.
நீங்க படிச்சவரு தானே? ஏன் தப்பு நடக்குதுன்னு சொல்லுங்க பார்க்கலாம். பயம் இல்லாம போனது தான் தப்பு நடக்கக் காரணம்.போலீசோட வேலை தப்பைத் தடுக்கறதில்லை தம்பி. பயத்தை உண்டாக்கறது. பயம் வந்தாலே ஒழுக்கமும் வந்துடும்.பயம் வர வைக்கணும்னா எவனை வேணும்னாலும் அடிக்கலாம். அடிச்சே கொல்லலாம். நல்லவனோ கெட்டவனோ, போலீசுனா எவனா இருந்தாலும் நடுங்கணும். இதை நான் அப்பவும் நம்பினேன், இப்பவும் நம்பறேன், இனியும் நம்புவேன். இதுக்காகவே என்னோட போலீசு வேலையே போனிச்சி. வேலையில்லாதப்பவும் நான் போலீசாவே இருந்தேன். அந்த முறுக்கு தான் என்னை இங்கே கொண்டாந்து அநாதையா போட்டிருக்கு. இருந்தாலும் சொல்றேன், நாங்கெல்லாம் அடிக்கறதுக்காவே பிறப்பெடுத்தவங்க. போலீசு திமிரு எவனுக்கு ரத்தத்துல ஓடுதோ அவந்தான் போலீசாக முடியும்.
வேலை போச்சின்னு சொன்னேன்ல? இருங்க! அந்தக் கதைய சொல்றேன். ராயக்கோட்டைல அப்ப கொஞ்ச நாளா தொடர்ந்து களவு போயிட்டிருந்தது. இது புது ஆளுங்க, எவன்னு தெரியலை; ஸ்டேசனுக்கு ஒழுங்கா மாமூல் தந்திட்டு களவாங்கற பழக்கமான ஆளுங்க கிடையாது. தெரிஞ்ச பயன்னா அரெஸ்டு கணக்கு காட்டலாம், அடிச்சதுல கொஞ்சத்த மீட்டுக் கொடுக்கலாம். எவன்னு தெரியாம யாரைப் பிடிக்க முடியும்?அதான் தொடர்ந்து ராத்திரி ரவுண்ட்ஸ் போக ஆரம்பிச்சோம். ஒரு மாசம், பகல்லயும் டூட்டி பாத்துட்டு ராத்திரியும் ஊரைச் சுத்தி வந்திட்டு, சுத்தமா கண்ணுல தூக்கமில்லே. உடம்பே சூடேறிப் போனிச்சி. அது கூட பரவால்ல! மேலதிரிகாரிங்க கூப்பிட்டு கெட்ட வார்த்தைலயே திட்றான். பிடிச்சே ஆவனும், எவனையாச்சும் பிடிச்சி நிப்பாட்டியாகணும்.
எவனாச்சியும் ஆப்புடுவானான்னு கண்ணுல வெறியோட அலைஞ்சி திரிஞ்சோம். ஒருத்தனும் சிக்கலை. ஒரு மாசம் இப்படியே போச்சி. அப்ப ராயக்கோட்டைல வாரா வாரம் மாட்டுச்சந்தை நடக்கும். அந்த மைதானத்துக்குப் பக்கம் தான் எனக்கு டூட்டி.ஒ ரு நாள் ராத்திரி மாட்டுச் சந்தை மைதானத்துக் கொட்டகை பக்கத்துல ஒரு உருவம் சுருண்டு படுத்திருந்தது. எழுப்பி யாருன்னு கேட்டேன், பேந்தப் பேந்த முழிச்சான்.ஸ்டேசனுக்கு கொண்டாந்துட்டேன். ரெண்டு ரவுண்டு அடிய போட்டப்புறம் சூரமங்கலத்தான்னு சொன்னான். மாடு புடிக்க வந்தானாம், கெடைக்கலையாம். வெள்ளனைக்குத் தான் ஊருக்கு வண்டியாம், அதான் அங்கனயே படுத்திருந்தானாம்.
சரிடா! களவானிப் பயல்ல ஒருத்தன்னு ஒத்துக்கோ, கோர்ட்டுல மூணு மாசமோ ஆறு மாசமோ போடுவாங்க. பொறவு வந்து பாத்துக்கலாம்னு படிச்சிப் படிச்சி சொல்லிப் பாத்தேன், கேட்கலை. நீங்களே சொல்லுங்க தம்பி, ஒரு மாசம் தேடியும் ஒருத்தனும் ஆப்புடலைன்னா எவ்வளவு கேவலம். எவனாச்சியும் போலீசுக்கு பயப்படுவானா? இவன உள்ளே போட்டா ஒரிஜினல் களவாணி தைரியமா வெளியே தலைகாட்டுவானில்லே, பிடிக்கலாமில்லே? பக்குவமா சொல்லிப் பார்த்தோம், கேட்கலை. சோறு வாங்கிக் குடுத்து கெஞ்சிப் பார்த்தேன், கேட்கலை. அந்த ஆத்திரத்துல தான் லேசா பொடனில ஒரு தட்டு தட்டுனேன்.சுருண்டு விழுந்தவன் எந்திரிக்கவே இல்ல.
அவன் விதி அவ்வளவு தான்னு எழுதியிருக்கும் போல. நான் என்னா செய்ய முடியும்? போய்ச் சேர்ந்துட்டான். அப்புறம் அது பிரச்சினையாச்சி. தற்கொலைன்னு சொல்லிப் பார்த்தோம். ஜட்ஜைய்யா ஏத்துக்கிடலை.வேலை போச்சி, சம்பளமும் போச்சி.ஊருக்கு வந்திட்டேன். ஆனாலும் கூட வேலை பார்த்த எவனும் என்னை மறக்கல. வேலை போயி இத்தினி வருசமாகியும் மறக்காம மாசா மாசம் வசூலாகிற மாமூல்ல இருந்து ஒரு பங்கைக் கொண்டாந்து கொடுத்துட்டுப் போறாங்க. அன்னிக்கு ஒரு வார்த்தை நான் சொல்லியிருந்தா டிபார்ட்மெண்டு மானம் போயிருக்கும். ஆனா நான் சொல்லல; அந்த நன்றிய அவங்களும் மறக்கல.
அப்பாரு சம்பாதிச்ச சொத்து, மாசா மாசம் மாமூலு, எனக்கென்ன கவலை? எவன்கிட்டேயும் சாப்பாட்டுக்கு போயி நிக்க வேண்டிய நிலைல நான் இல்லை. போலீசா இருந்து ஊரையே ஆட்டி வச்சவன், கெவருமெண்டு சம்பளம் வாங்கினவன், நான் எதுக்கு இன்னொருத்தன் கிட்டே கைநீட்டி நிக்கணும்? அதான் வேற வேலைக்குப் போகல. அப்புறம் ஏன் இப்படி பிச்சைக்காரக் கோலத்துல மரத்தடில கிடக்கிறேன்னு தானே கேட்க வர்றீங்க? சொல்றேன்.
எனக்கு ரெண்டு பொண்டாட்டியும் பதிமூணு பிள்ளைகளும் இருக்காங்கன்னு சொன்னேனில்ல? நான் ஊர்க்கு வந்த பின்னே ஒவ்வொருத்தருக்கா கலியாணம் நடந்தது. எந்தக் கலியாணத்துக்கும் நான் ஏற்பாடு செய்யலை, கலியாண வேலைகளும் செய்யலை. நான் போலீஸ்காரன், எவங்கிட்டயும் தேவைன்னு போயி நிக்க முடியுமா? என் முன்னே நடுங்கிட்டு நின்ன இந்த ஊர்க்காரப் பயலுவ முன்னாடி நான் போய் நிக்கவா? முடியாதுன்னு சொல்லிட்டேன். எல்லாம் என் பெஞ்சாதிங்க தான் பாத்துக்கிட்டாங்க. கல்யாண நாளுக்கு பட்டை சந்தனமெல்லாம் பூசிக்கிட்டு மண்டப வாசல்லே சேர் போட்டு உக்காந்து கிட்டா போதாதா? இப்படியே ஒரு பத்துப் பதினஞ்சி வருசம் போச்சி.
இந்தப் பதினைஞ்சு வருசத்திலே ரெண்டு பெஞ்சாதிகளும் பூவும் பொட்டுமா போய்ச் சேந்துட்டாளுங்க. நமக்கும் வயசாகி நரம்பு தளர்ந்து ரத்தம் சுண்டிப்போக ஆரம்பிச்சது. அப்பத் தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது. என்னதான் முறுக்கு இருந்தாலும், கெவுருதி இருந்தாலும் வயசான காலத்துல நம்ம பாத்துக்கிட ஆளு வேணுமில்லே?கிடைல கெடந்துட்டா யாரு வந்து பீ மூத்திரம் வாரிப் போடுவா? அதான் ரெண்டாம் சம்சாரத்தோட கடேசி மவளை கூடமாட ஒத்தாசையா வச்சிக்கிடலாம்னு முடிவு பண்ணேன். அவளுக்கு தகைஞ்சு வந்த எந்த வரனும் அமைஞ்சிடாம பாத்துக்கிட்டேன். நான் தானே பெத்தேன், என்னை கவனிச்சிக்கிடறது தானே அவளுக்கு முக்கியம், இதுல எந்தத் தப்பும் இல்லைன்னு எனக்குத் தெரியும். ஆனா என் மவனுவளுக்குப் புரியலை.
இப்படித்தான் ஆறு மாசம் முன்னே அவளப் பார்த்திட்டுப் போன பையன் வீட்டுக்கு ஒரு மொட்டைக் கடுதாசி போட்டேன். இதே மாதிரி தான் அதுக்கு முன்னே நாலைஞ்சி வரனை நிப்பாட்டி இருக்கேன். ஆனா, இந்தப் பையன் வீட்டுக்காரவுங்க கடுதாசியோட வீட்டுக்கு வந்துட்டாங்க. மூத்த மவனுக்கு அதில இருக்கறது என்னோட கையெழுத்து தான்னு தெரிஞ்சி போச்சி. நான் பார்க்க வளந்த பய, அன்னிய வரைக்கும் என் முன்னே நேரா நிக்க பயந்த பய. ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசத் தெரியாதவனுக்கு எங்கேருந்து தான் அப்படி ஒரு கோவம் வந்திச்சின்னு தெரியலை. துருப்பிடிச்ச பழைய பம்பு ஸ்டவ்வ எடுத்தி அடிச்சிட்டான்.
நான் எத்தனையோ பேர அடிச்சிருக்கேன். எத்தனையோ பேர் என்கிட்டே கதறியிருக்காங்க. ஆனா வலின்னா என்னான்னு அன்னிக்குத் தான் தெரிஞ்சது. தோள் பட்டை நொறுங்கிடிச்சி; கால்ல கூட எலும்பு முறிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். வேற எங்கேயெல்லாம் அடி விழுந்திச்சின்னு எனக்கு சொல்லத் தெரியல. எல்லா இடத்திலேயும் வலிக்கிற மாதிரியும் இருக்கு, வலிக்காத மாதிரியும் இருக்கு. எழுந்து நிக்க முடியலை, நகர முடியலை, உடம்பை அசைக்கக் கூட முடியல. ஒரு மாசம் அப்படியே புழக்கடைலயே கிடந்தேன்.திங்கிறது, பேள்றது, மோள்றது எல்லாம் அங்கேயே தான். தரையோட தரையா கெடந்ததுல முதுகுல புண் விழுந்து புழு பூத்திருச்சி. அதுக்கு மேல என்னை வீட்ல வச்சிக்க முடியாதுன்னு இங்கே இழுத்துட்டு வந்து போட்டுட்டாங்க. அதிலேர்ந்து இப்ப அஞ்சி மாசமா இதோ இந்த மரத்தோட மேடை தான் நம்ம ஜாகை.
இன்னும் ஒரு வாரமோ பத்து நாளோ தெரியல. இந்தக் கட்டை சாய்ஞ்சா காரியம் பண்ண ஆளில்லே, பஞ்சாயத்துக்காரன் தான் வந்து அள்ளிட்டுப் போவணும். ஆனா இந்த நிலைமைக்காக நான் வருத்தப்படலை.கூனிக் குறுகிப்போக மாட்டேன். என் மீசைய பாத்தீங்கள்ல? அதான் நான். இந்த அய்யம் பெருமாள் மண்ணு பாக்க தலை வணங்க மாட்டான். இந்த தெருவே அதிர நடந்து போயிருக்கேன். என்னோட பூட்சு சத்தம் கேட்டு நடுங்கின பயலெல்லாம் இப்ப எச்சில் இலை மாதிரி அசிங்கமா பாக்கறான். அதான் அழுவையா வருது.
ஏதோ உங்கள்ட்ட சொல்லணும்னு தோணிச்சு, சொல்லிட்டேன். நான் செய்ததுல ஏதும் குத்தம் சொல்றா மாதிரி இருக்கா தம்பி?
அந்த மனிதர் சொல்லி முடித்து விட்டு என் முகத்தையே பார்த்தார். பின் மிக நீளமாக ஆயாசமான ஒரு பெருமூச்சை விட்டார். ஒரு இயலாத கோணத்தில் நூற்றாண்டுகளைக் கடந்த அந்த மரத்தினடியில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்டு மேடையில் கிடந்தார். கடந்த சில மாதங்களாகவே இதே இடத்தில் இதே கோணத்தில் இப்படியே தான் கிடக்கிறார். அந்தப் பூங்காவில் காலை நேர நடைப்பயிற்சிக்கு வரும் எவரும் அந்த இடத்தைக் கடக்கும்போது ஒரு கெட்ட வீச்சத்தை உணர்வார்கள். அது அவரிடமிருந்து தான் வந்து கொண்டிருந்தது. பேச்சில் அவரிடம் தொனித்த அந்தத் திமிரை அவரது தோற்றத்தில் காண முடியாது. கெச்சலாய், கசக்கிப் போட்ட கந்தல் துணி போல் கிடந்தது அவருக்கே கட்டுப்படாத அவரது உடல்.கடந்து செல்லும் எல்லோருடைய முகத்தையும் ஏதோ சொல்ல வருவது போல் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டேயிருப்பார்.
தொய்ந்து போயிருந்த அவரது உடலில் இருந்து வெள்ளை நிற புழுக்கள் நெளிந்து வெளியேறியவாறே இருந்தன. அந்த உடலுக்குள் இன்னும் இயங்கிக் கொண்டிருந்த அசிங்கம் பிடித்த மனதின் அழுக்குப் படிந்த எண்ணங்களின் நாற்றம் தாங்காமல் அவை தப்பியோட முயற்சிப்பதைப் போலவே இருந்தது. உடலை விட்டு வெளியேறும் புழுக்களெல்லாம் வெப்பம் தாளாமல் மரத்தின் வேர் அருகே சென்றடைந்ததும் தானாகச் செத்து வீழ்ந்து கொண்டிருந்தன. செத்த புழுக்கள் உரமாவதாலோ என்னவோ மரம் உற்சாகமாய் அசைவது போல் தோன்றியது. நடைப்பயிற்சிக்குப் பின் நான் அமர்ந்து ஓய்வெடுக்கும் வழக்கமான மேடை எதிர்புறத்தில் தான் இருக்கிறது; இன்றைக்கு ஏதோவொரு உந்துதலில் தான் இங்கே அமர்ந்தேன். கேட்க வேண்டிய தேவையேதும் இன்றி அவர் முகத்தைப் பார்த்ததும் தானாகவே சொல்லத் துவங்கி விட்டார்.
தன் வாழ்க்கையின் நியாயங்கள் என்று அவரே கருதியவற்றை லட்சக்கணக்கான முறை தனக்குள்ளேயே திரும்பத் திரும்ப சொல்லி ஒத்திகை பார்த்திருக்க வேண்டும். என்னிடம் இந்தக் கதைகளையெல்லாம் சொன்னது எனது ஒப்புதலை எதிர்பார்த்தல்ல, அது ஒரு அனிச்சை செயலாகத் இருக்கக் கூடும். அல்லது, என்னிடம் இருந்து வந்திருக்கக் கூடிய ஒரு சிறிய தலையசைப்பையாவது அவர் எதிர்பார்த்திருக்கலாம். அது அவருக்கு இந்தக் கட்டத்தில் ஓரு தேறுதலை வழங்கியிருக்கலாம். அப்படியொரு தேறுதல் கிடைக்காத ஏமாற்றம் அவரது முகத்தில் தொனித்தது. பேசி முடிந்த பின் நீண்ட நேரம் எனது முகத்தை இமை தட்டாமல் உறுத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். எதிர்பார்த்தது அதற்கு மேல் கிடைக்காது என்பது உறுதியான பின் வேறெங்கோ வெறித்துப் பார்க்கத் துவங்கினார்.
காலை மணி ஏழு. தினசரி அலுவல்களின் நீண்ட வரிசை மூளையில் ஒரு சிறு அணிவகுப்பு நடத்தத் துவங்கவே, அவரிடம் ஒன்றும் சொல்லாமல் எழுந்தேன். பூங்காவை விட்டு வெளியேறினேன்.
“”ஏய் கிழவி, ரோட்டுல கடை போடக் கூடாதுன்னு ஒனக்கு எத்தினி வாட்டி சொல்றது” பூங்காவின் வெளியே சாலையோற பூக்காரக் கிழவியிடம் வீரம் காட்டிக் கொண்டிருந்தார் யாரோ ஒரு அய்யம்பெருமாள். எண்ணெ ய் காணாத நரைத்த தலையை சங்கடமாய்ச் சொறிந்து கொண்டே கருத்துச் சுருங்கிய முகத்தில் எந்தச் சலனமும் காட்டாமல் ஒரு இருபது ரூபாய்த் தாளை மடக்கி நீட்டினாள் அந்தக் கிழவி.
பூங்காவிலிருந்த நூற்றாண்டுகளைக் கடந்த அந்த மரம் காற்றில் மெல்லச் சடசடத்துத் தலையசைக்கிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு அது காத்திருக்கும், நம்பிக்கையோடு.
-மாடசாமி.
________________________________________________________________________________ புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________
கவுன்சிலரோ, கல்லூரி மாணவரோ, இலக்கிய குருஜியோ டீக்கடை சந்து முதல் டிவிட்டர் சந்து வரை பிறந்த நாளுக்கு பிளக்ஸ் வைப்பதில் உலக சாதனை படைத்திருக்கும் தமிழ் நாட்டில் நடிகர் விஜய் மட்டும் ஏன் பிறந்தேன் எனும் சோகத்தில் இருக்கிறார்.
வரும் ஜூன் 22 அவரது 39-வது பிறந்த நாளாம். இதற்காக தமிழகம், இல்லையில்லை தென்னிந்திய அளவில் ரசிகர்களை திரட்டி ஜூன் 8-ம் தேதி சென்னை மீனம்பாக்கத்தில் இருக்கும் ஜெயின் கல்லூரியில் பிரம்மாண்டமாக பிறந்த நாள் கொண்டாட இருந்தார் விஜய். அந்த விழாவில் 3,900 பேருக்கு ஒரு கோடியில் நலத்திட்ட உதவி, 39,000 பேருக்கு பந்தல், விருந்து என்று ஏகப்பட்ட ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்.
‘சுற்றுச் சூழல் காவலர்’ விஜய்
இதில் ஏன் எல்லாம் 39 வருகிறது என்பதை தனியாக விளக்க வேண்டியதில்லை.அழகிரியோ இல்லை அம்மாவோ பிறந்த நாளன்று அவர்களது வயதுக்கேற்ற எண்ணிக்கையில்தான் ஏழைகளை தேர்ந்தெடுத்து உதவி செய்வார்கள். கூடுதலாக வருபவர்கள் அடுத்த ஆண்டு காத்திருக்க வேண்டும். தலைவர்கள், நட்சத்திரங்கள் கொண்டாடும் பிறந்த நாளில் பலனைடைவதற்கும் ஏழைகள் நட்சத்திர ஏழைகளாக இருக்க வேண்டும்.
அது கிடக்கட்டும். ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்க, ஜூன் 7-மாலை மளிகைச் சாமான்கள் முதல் தண்ணீர் பாட்டில்கள் வரை ஜெயின் கல்லூரியில் வந்து இறங்க, ஒரு செய்தி இடியென தாக்குகிறது. அது அடுத்த நாள் விழாவுக்கு போலிஸ் பாதுகாப்பு இல்லை, எனவே விழாவை ரத்து செய்யுங்கள் என்று ஜெயின் கல்லூரி நிர்வாகம் கறாராகக் கூறி விட்டது. போலீசிடம் கேட்டால் அன்றைய தினம் சிஎம் கலந்து கொள்ளும் அதிமுக பொதுக்குழு கூட்டம் இருக்கிறது, பாதுகாப்பு தரமுடியாது என்று கைவிரித்து விட்டது.
அம்மா ஆட்சியில் ஊர் கூட்டி பொது இடத்தில் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு அவரது அனுமதி இருந்தால் மட்டுமே சாத்தியம். அதனால்தான் கருணாநிதி கூட அறிவாலயத்தில் அடைந்து கொண்டுதான் கொண்டாடுகிறாரே அன்றி அண்ணா சாலையில் அல்ல. கூகிள் பிளஸ்ஸில் பிறந்த நாள் கொண்டாடும் அம்பிகள் அதையே கூவம் நதி சங்கமிக்கும் மெரினாக் கடற்கரையில் கொண்டாட முடியுமா என்ன?
அந்தபடிக்கு விஜய் பிறந்த நாள் ரத்து என்பது அம்மாவின் கண் அசைப்பில் மட்டுமே நடந்திருக்க முடியும். 3,900 ஏழைகளுக்கு தலா ரூ. 2564 மற்றும் பத்து காசு கொடுத்து, ஒட்டு மொத்தமாக ஒரு கோடி ரூபாய் நலத்திட்டம் வழங்கும் மாபெரும் தான நிகழ்ச்சிக்கு அம்மா ஏன் எரிச்சல் அடைய வேண்டும்?
கிராபிக்ஸ் மற்றும் டிடிஎஸ் உதவியுடன் வில்லன்களை பந்தாடும் நாயகர்கள் நிஜத்தில் அரசியல் குறித்தோ, மக்கள் குறித்தோ உளறினால் நமக்கும் பிடிக்காது, ஜெயலலிதாவுக்கும் பிடிக்காது. டாடா பை பை நடிப்பிற்கே பத்து டேக் வாங்கும் இந்த சிகாமணிகள் அரசியலில் வந்து அது செய்வேன், இது செய்வேன் என்று பீலா விடும் போது அவர்களை அற்பப் புழுக்கள் போல ஜெயா பார்க்கிறார். அதன் பலனைத்தான் இன்று விஜயகாந்த் அனுபவிக்கிறார்.
7 விக்கெட் அவுட்டாகி அடுத்த இன்னிங்சில் ஆல்அவுட்டாவதற்கு காத்திருக்கும் கேப்டன் எப்படியெல்லாம் முழங்கியிருக்கிறார்? உள்ளாட்சி தேர்தலில் கெட் அவுட் சொல்லப்பட்டு இன்று அரசியலை விட்டே ஒதுங்கலாமா, ஓடலாமா எனுமளவு துக்கத்தில் புரண்டு கொண்டிருக்கும் விஜயகாந்த் வாழும் நாட்டில் அடுத்த என்ட்ரியாக விஜய் வந்தால் அம்மா ஏன் பொங்கி எழ மாட்டார்?
ஏற்கனவே குருவி உள்ளிட்ட படங்களில் திமுகவிற்கு சலுகை காட்டியது, 2009-ம் ஆண்டு புதுதில்லியில் ராகுல் காந்தியை சந்தித்தது, அதே ஆண்டில் விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பித்தது, அந்த இயக்கம் ஆரம்பித்த கையோடு “தவறு எங்கு நடந்தாலும் இயக்கம் மூலம் தட்டிக் கேட்பேன்” என்று முண்டா தட்டியது, இதெல்லாம் அம்மா வெறுப்படைய போதுமானதில்லையா?
பிறகுதான் டாடி எஸ்.ஏ சந்திரசேகருக்கு பொறி தட்டி உடனே அதாவது சென்ற சட்டமன்ற தேர்தலின் போது திருச்சி ஓட்டலில் அம்மாவை சந்தித்து விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படும் என்று அறிவித்தார். ஆயினும் தம்பி விஜயை பிளாக் லிஸ்டிலிருந்து அம்மா எடுக்கவில்லை.
பலத்தைக் காட்ட விரும்பிய விஜய்
தற்போது இந்த 39-வது பிறந்தநாள் விழாவை வைத்து கூட்டம் கூட்டி தனது பலத்தை அதிமுக மற்றும் காங்கிரசிற்கு காட்டப்போகிறார் விஜய் என்று உளவு போலிசு அறிக்கை கொடுத்தும் அம்மா மனதறிந்து இடத்தைக் கொடுத்த ஜெயின் மடத்தைக் காலி செய் என்று விஜயை விரட்டி விட்டார். இவ்வளவிற்கும் இந்த கல்லூரி சேட்டுகளும், விஜய் நடித்த சில படங்களை தயாரித்த சேட்டுகளும் நண்பர்களாம். ஆளும் கட்சிகளை அண்டிப் பிழைக்கும் சேட்டுகளிடம் படம்தான் நடிக்கலாம், இடத்தை கேட்ககூடாது என்று இப்போது விஜய் & கோவிற்கு புரிந்திருக்கும்.
அம்மாவை மீறி கொண்டாட வேண்டுமென்றால் அதற்கு ஒரே பாதுகாப்பான இடம் அறிவாலயம்தான். ஆனால் அதிமுகவிலாவது அம்மாவிடம் மட்டும்தான் விழ வேண்டும், அறிவாலயம் என்றால் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, ஆதித்யன் என்று ஏகப்பட்ட மூலவர்கள் இருக்கிறார்கள். ஒரு வேளை அவர்களையெல்லாம் சமாளித்தாலும் பிறகு அம்மா நெற்றிக்கண் திறந்தால் இரண்டு ஆண்டுகள் நடிக்க முடியாமல் வீட்டில் அடைந்து கிடந்த வடிவேலு கதையாகிவிடும். ஆக அதுவும் முடியாது.
இந்த விழா ரத்தானது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விஜய், “இந்த நிகழ்ச்சி அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளம் போடும் கூட்டம்னு சிலர் கிளம்பிவிட்டுட்டாங்க. அதை உண்மைன்னு நம்பி கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துட்டாங்க. காவல் துறையும் அப்படி நினைச்சுதான் அனுமதியை மறுத்துட்டாங்க போல இருக்கு. என்னோட தொழில் நடிக்கிறது. ஒரு படம் முடிச்சிட்டு அடுத்த படத்துக்கு இடையில ரெஸ்ட் இல்லாம ஓடிட்டு இருக்கேன். இப்போ அரசியலைப் பத்திப் பேசக்கூட எனக்கு நேரம் இல்லைங்கண்ணா” என்கிறார்.
ஒரு வேளை இந்த விழா அனுமதிக்கப்பட்டிருந்தால் வருங்கால முதல்வர் விஜய் வாழ்க என்ற முழக்கத்தை மேடையில் இருந்து ரசித்திருப்பார். அனுமதி ரத்தானதும் அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்கிறார். நமது ஹீரோக்கள்தான் எவ்வளவு பெரிய வீரர்கள் பாருங்கள்! தவறுகளை தட்டிக் கேட்பேன் என்று சவால் விட்ட விஜய் கடந்த மூன்று ஆண்டுகளாக சிலபல படங்களில் நடித்திருக்கிறாரே அன்றி எந்த தவறுகளையும் தட்டிக் கேட்கவில்லை. நான்கு அயர்ன் பாக்ஸ், ரெண்டு மூன்று சக்கர சைக்கிளைக் கொடுத்து விட்டு தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை சல்லிசாக பெற்றுவிடலாம் என்று இவர்கள் நம்புமளவுக்கு தமிழர்கள் இடம் கொடுத்திருக்கிறார்களே, அதுதான் பிரச்சினை!
3,900 பேருக்கு 2500 ரூபாயை தானம் செய்து விட்டு வருங்கால முதல்வர் என்று கூச்சல் போடும் இந்த பிழைப்புவாதிகளுக்கு ஜெயலலிதா, கருணாநிதி எவ்வளவோ தேவலாம், இல்லையா?