privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! - ம.க.இ.கவின் மே தினப் பேரணி...

ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! – ம.க.இ.கவின் மே தினப் பேரணி – புகைப்படங்கள் !

-

ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! தேர்தலைப் புறக்கணிப்போம்! என்ற தலைப்பில் மே 01 அன்று தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியவை இணைந்து மேதினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை வீச்சாக நடத்தின.

தஞ்சை திருவள்ளுவர் திடலில் காலை எட்டு மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ.முகுந்தன் அவர்களால் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு 9 மணிக்கு ஓவியக் கண்காட்சியை தோழர் துரை. சண்முகம் துவங்கி வைத்தார். தோழர் முகிலன் வரைந்த அந்த ஓவியங்களில் ஈழம் பற்றிய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதமும், தேர்தல் கூட்டணி என்பதற்கு கொள்கை ஒற்றுமை கிடையாது என்பதை நிறுவும் அப்போலி ஜனநாயக தாசர்களின் வாக்குமூலமும் ஓவியங்களில் சிறப்பாக வெளிப்பட்டு இருந்தது.

பேருந்துகள் மற்றும் புகைவண்டிகளின் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து தோழர்கள் வந்த வண்ணமிருந்தனர். மாலை 4 மணிக்கு சரியாக புகைவண்டி நிலையத்திலிருந்து கூட்டம் நடக்கவிருந்த திருவள்ளுவர் திடல் வரை ஒரு மாபெரும் பேரணி நடைபெற்றது. கம்பம் பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் மோகன் தலைமையில் நடந்த இப்பேரணியில் ஈழப்பிரச்சினையில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றோர் போடும் வேடங்களை அம்பலப்படுத்தியும், ஈழத்திற்கு எதிராக சிங்கள இனவெறி அரசை மேலாதிக்க நலனுக்காக ஆதரிக்கும் இந்திய தரகு முதலாளிகளை முறியடிக்க அறைகூவல் விடுத்தும், பணநாயகத்தை விடுத்து மானத்தோடு இருக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டவாறு பேரணி நடைபெற்றது.

ஓட்டுப் பொறுக்கிகளின் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலை அதன் கூச்சத்தைக் கேட்டுச் சலித்த தஞ்சையின் வீதிகளில் எதிரொலித்த புரட்சிகர அரசியலின் நம்பிக்கையூட்டும் எழுச்சியான முழங்கங்களை மக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர். சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட இப்பேரணியில் குழந்தைகளும், பெண்களும் குறிப்பிடத்தக்க அளவில் கலந்து கொண்டனர்.

ஈழத்தின் அவலநிலையை எடுத்துக்காட்டும் காட்சிப்படிமத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் சிறப்பாக ஊர்வலத்தில் நடத்திச் சென்றது பார்வையாளர்களைக் கவர்ந்தது. தேர்தல் புறக்கணிப்பு, ஈழப்போரில் இந்திய அரசின் தலையீட்டை எதிர்ப்பது, தனியார்மய தாராளமய உலகமயமாக்கல் எதிர்ப்பு போன்ற முழக்கங்களுடன் கூடிய பதாகைகளையும், அனைத்து தோழமை அமைப்புகளும் தத்தமது கொடிகளுடன் ஊர்வலத்தில் வந்தது பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் இருந்தது.

ஊர்வலம் மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் திடலை வந்தடைந்தவுடன் பொதுக்கூட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தம் தலைமையில் தியாகிகளுக்கான வீரவணக்கத்துடன் துவங்கியது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் சுப. தங்கராசு சிறப்புரை ஆற்றினார். ஈழப்பிரச்சினைக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் ஜனநாயகம் என்பது எப்படி பெரும்பான்மை மக்களை ஒடுக்கும் போலி ஜனநாயகமாக இருக்கின்றது, தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தை இயற்றும் அதிகாரத்தைத் தவிர அமல்படுத்தும் அதிகாரமில்லை, உண்மையான அதிகாரம் கொண்ட மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டி புரட்சிகர அதிகாரத்தை மக்கள் கைப்பற்றுவதுதான் இதற்கு தீர்வு, நக்சல்பாரிகளின் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டுமெனவும் தோழர் தனது உரையில் குறிப்பிட்டார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் சிறப்புரை ஆற்றினார். இந்திய அரசும், இந்திய ஆளும் வர்க்கங்களும் ஈழத்திற்கு எப்போதும் எதிரிதான் என்பதை ஈழத்தின் போராளிக் குழுக்களும், தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவு இயக்கங்களும் புரிந்து கொள்ளாமல், இந்தியாவை நண்பனென்று ஆதரிப்பதையும் அதன் விளைவே இன்றைக்கு நடைபெறும் இனப்படுகொலை உச்சத்தை அடைந்திருப்பதாகவும் தோழர் குறிப்பிட்டார். இந்திய தரகு முதலாளிகளுக்கு ஒன்றுபட்ட இலங்கையின் சந்தை தேவைப்படுவதால் அவர்களின் நலனைக் காப்பதற்காக இந்திய அரசு நேற்றும், இன்றும், நாளையும் சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்பதையும் விளக்கினார்.

அடுத்து இன்றைய ஈழத்தின் மீதான இனப்படுகொலைக்கு நேரடியாக உதவும் காங்கிரசு அரசிற்கு பாடம் கற்பிப்பதற்காக ஈழ ஆதரவுக் குழுக்கள் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவை ஆதரிப்பதன் அபாயத்தை தோழர் புரியவைத்தார். கருணாநிதி நாளைக்கே ஈழம் கிடைக்குமென்றால் தனது பாரளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் அது இல்லாத பட்சத்தில் ராஜினாமா செய்வதால் பலனில்லை எனவும் கூறுகிறார். ஜெயலலிதாவோ தனக்கு தமழிக மக்கள் நாற்பது தொகுதிகளையும் தந்தால் புதிய மத்திய அரசின் மூலமாக ஈழத்தை வாங்கித் தருவாதக கூறுகிறார். இதிலிருந்து இருவரும் தமது பதவி ஆதாயத்திற்காக ஈழத்தின் பிணங்களை வைத்து நாடகமாடுவதை தோழர் உணர்த்தினார்.

தோழர் காளியப்பனின் உரைக்குப் பிறகு ம.க.இ.கவின் மையக் கலைக்குழு உணர்ச்சிகரமாக நடத்திய கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஈழத்தின் அவலத்தை துல்லியமாக எடுத்தியம்பும் இசைச்சித்திரம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

பெண்கள் விடுதலை முன்னணியின் தோழர் நிர்மலா நன்றியுரை நிகழ்த்தினார். பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் இரவு 10 மணிக்கு நிறைவு பெற்றது. மிச்சமிருக்கும் நாட்களில் தமிழகம் முழுவதும் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை இன்னும் வீச்சாக கொண்டு செல்லும் உறுதியுடன் தோழர்களும், ஆதரவாளர்களும் கலைந்து செல்ல மே தின நிகழ்ச்சிகள் தஞ்சையில் முடிவடைந்தது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மேல் சொடுக்கவும்

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

சில  தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக மே 1 முதல் 8 தேதி வரை இந்த இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் அழிந்துவிட்டன. கூடிய விரைவில் அவற்றை மீட்க முயல்கிறோம். இனிமேல் வரும் பின்னூட்டங்களுக்கு பிரச்சினையில்லை. சிரமத்திற்கு வருந்துகிறோம்.


  1. அகிம்சை வழியில் போரடுபவர்கள் மிதவாதிகள்.

    மிதவாதம் தோற்கும் போது ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் தீவிரவாதிகள்.

    தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஒன்றாக குழப்பி கொள்கிறோம்

    பிரபாகரன் தீவிரவாதி ஆனால் பயங்கிரவாதி அல்ல.

    விடுதலை போராட்டம் இரண்டு வகை ஒன்று மிதவாதம் மற்றொன்று தீவிரவாதம்,

    நம் நாடு காந்தியின் தலைமையில் மிதவாத பாதையில் சுதந்திரம் அடைந்தது.அதற்கு காரணம் மிதவாத போராட்டத்தை மதித்து ,நம்க்கு விடுதலை கொடுத்தார்கள் பிரிட்டிஷ் காரர்கள்.

    ஆனால்,இலங்கையில் மிதவாதம் தோற்றுவிட்டது,அகிம்சை வழியில் போராடியவர்களை அடிக்கினார்கள்.அவர்களை கொன்றார்கள்.

    இன படுகொலையில் ஈடுபட்டார்கள்.ஆனவே அங்கு மிதவாதம் தோற்று தீவிரவாதம் உருவானது.

    இரண்டும் போராடும் முறை தான்.ஆனால் தீர்வு கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

    தீர்வு ,ஆதிக்க சக்திகள் நம் போராட்டத்தின் நியாயத்தை புரிந்து கொண்டு தீர்வு வழங்கினால்,பிரச்சனை தீரும்

    மிதவாத போராட்டமோ அல்லது தீவிரவாத போராட்டமோ இல்லாமல் போகும்.

    ஆக்வே,பிரபாகரன் பயங்கிரவாதி அல்ல அவன் போராளி அல்லது தீவிரவாதி என்றூ சொல்லலாம்.

    சுபாஷ்சந்திரபோஸ்ம் ஒரு ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய தீவிரவாதி தான்.

    ராஜிவ் காந்தியின் மரணம் எனக்கும் வேதனை அளித்தது.ஆனால் அந்த ஒரு கொலைக்காக ,ஈழத்தில் ஆயிரகணக்கான குழந்தைகள்,முதியவர்கள் ,பெண்கள் கொல்லபட வேண்டுமா.

    ஈழதமிழ் மக்கள் அகதிகளாக காடுகளிலும் ,சமவெளிகளிலும் விலங்குகள் போல் எந்த வசதியும் இன்றி உண்ண உணவு இன்றி வாழ வேண்டுமா?

    ஆயிரகணக்கான தமிழர்களை கொன்றால் தான் சோனியா குடும்பத்தின் கொலை வெறி அடங்குமா?

    புலிகளை கொல்கிறேன் என்று சொல்லி இலங்கையில் சிங்கள இராணுவ இன படுகொலை செய்து கொண்டிருக்கிறது,

    வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்று உபதேசம் செய்வது மற்றவர்க்கு தானா?

    ராஜிவ் காந்தி அனுப்பிய அமைதிபடை அங்கு சென்றதும் இலங்கை அரசின் கூலி படையானது.அவர்கள் எத்தனை ஆயிரம் தமிழ் பெண்களை கற்பழித்தார்கள்,எத்தனை ஆயிரம் ஆண்களை கொன்றார்கள்.

    அப்போது அவர்கள் ஈழதமிழர்கள் எப்படி கொதித்திருப்பார்கள்.

    சோனியாகாந்தியே நீ கணவரை இழந்ததற்காக இன்னும் எத்தனை ஆயிரம் தமிழ் பெண்களின் தாலியை அறுக்க போகிறாய்.இன்னும் எத்தனை ஆயிரம் குழந்தைகளிம் இரத்தம் குடிக்க போகிறாய்.

    ஈழதமிழர்களின் உரிமை போராட்டத்தையும் அல்லவா அழித்து விட்டாய்.

    புலிகள் ,தீவிரவாதிகள் அல்ல அவர்கள் போராளிகள்.அவர்களை ஒடுக்கிட முடியாது.

    ஒரு பிரபாகரன் போனால் ,ஓராயிரம் பிரபாகரன் தோன்றுவார்கள்.

    ஈழதமிழர்களுக்கு உரிமை பெற்று தருவார்கள்.

    அவர்களின் சுதந்திர தாகத்தை அணைக்க முடியாது.

    சோனியாகாந்தியும் அவர்களுது குடும்பமும் இந்திய அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும்.

    இனி எல்லா மாநிலத்திலும் மாநிலகட்சிகளே வெல்ல வேண்டும்.

    அப்போது தான் வரும் காலத்தில் மாநிலத்திற்கு சனநாயக முறையில் நாம் மாநில ச்யாட்சி பெற முடியும்.

    நம்மிடம் இருப்பது வாக்கு.அதை தமிழர்களே சரியாக் பயன்படுத்துங்கள் .

    காங்கிரஸை அணைத்து இடங்களிலும் தோற்கடியுங்கள்.

    வெல்க ஈழம்.வாழ்க ஈழதமிழர்.

    இந்தியாவில் சனநாயகம் என்ற போர்வையில் ,மன்னர் ஆட்சி நடக்கிறது.

    நேரு குடும்பத்தில் பிற்ந்த ஒரு தகுதி போதும் இந்தியாவை ஆள்.

    பிறகு நம்க்கு எதற்கு ஓட்டு உரிமை.

    ராகுல் காந்தியின் பேச்சு கண்டிக்கதக்கது.

    பழி வாங்கும் தனி மனிதனுக்கு வேண்டும் என்றால் ,சரியாக இருக்கலாம்.

    ஆனால் ஆனால் ஒரு நாடாக சிந்திக்கும் போது,அது கூடாது.

    ராஜிவ் மரணத்தை வைத்து ஈழதமிழரின் சுதந்திர போராட்டத்தை கொச்சைபடுத்த கூடாது.

    இந்தியாவில் பல மொழிகள் உள்ளன.இங்கும் இந்தியை மட்டும் அர்சு மொழியாக முன் வைக்கப்பட்டு அணைத்து மாநிலங்களிலும் திணிக்கதான் செய்கிறார்கள்.

    ஆனால் இந்த அளவுக்கு வன்முறை கிடையாது.

    தமிழர்கள் இதை ஏற்க வில்லை.இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் இரு மொழி கொள்கை.ஆங்கிலம்,மற்றும் தாய் மொழி மட்டும் படிக்கலாம்,.

    சரியாக புரிந்து கொள்ளவும் ,தாய் மொழி என்று சொன்னேன் தவிர தமிழ் என்று சொல்லவில்லை.

    தெலுங்கை தாய் மொழியாக கொண்டவன் ,ஆங்கிலம் ,மற்றும் தெலுங்கு படித்தால் போதும்.தமிழ்நாட்டில் கூட தமிழை பிற மொழியினர் மீது திணிக்க வில்லை.

    ஆனால்,இலங்கையில் இரண்டு மொழி தான் ,தமிழ்ர்க்கு அவர்கள் வாழும்பகுதியில் தமிழை பயன்படுத்தி கொள்வதில் என்ன நஷ்டம்.

    ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்.ஒன்றும் புரியவில்லை.

    மலேசியாவில்,சிங்கபூரில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.ஆனால் அங்கு எல்லாம் இப்படி இன படு கொலை நடப்பதில்லை.

    மொழி பற்று இருக்கலாம் ஆனால் அது வெறியாக மாறகூடாது.அது நம் மனித தன்மையை இல்லாமல் ஆக்க கூடாது.ஆனால் ,சிங்களவர்கள் அதுவும் அனபை,கொல்லாமையை போதித்த பொள்த்தர்கள் இப்படி ஈழதமிழர்களை கொன்று இன படுகொலையில் ஈடுபடுவது வேதனை

  2. ஆடு,மாடு,மற்ற விலங்குகள் ,செடி ,கொடி,நச்சு பாம்புகள் வாழலாம் ஒரு நாட்டில் ஆனால் அங்கு ஒரு குறிப்பிட்ட மனித இனம் சுதந்திரமாக வாழகூடாதா?

    விலங்குகள் வாழ் ,காடுகளை அழிக்காமல் காத்து வருகிறது உலக நாடுகள்.

    ஆனால் ,ஈழ தமிழன் வாழ் இடம் இல்லை.

    இங்கு மட்டுமலல ,அது பாலஸ்தீனம் என்றாலும் உலகில் வேறு பகுதியாக இருந்தாலும் சிறுபாண்மை இனம் எனப்தற்காக அவர்களை அழிக்க நினைப்பது தவறு.

    எல்லா மொழியின்ரும் எல்லா மதத்தினரும் கலந்து தத்தம் உரிமையுடன் சுதந்திரமாக் வாழும் போது தான் உலகமே அழகாக இருக்கும்.

  3. காங்கிரஸ் இனி தமிழகத்தில் இருக்க கூடாது.தொண்டன் என்று யாரும் இருக்க கூடாது.காங்கிரஸ் தோற்கடிக்க பட வேண்டும்.

    இன்று இலங்கையில் சொந்த நாட்டிலேயே அகதியாக திரிகிறான் ஈழ தமிழன்,.காரணம் சிங்கள பெரும்பாண்மை மக்கள் இலங்கை தங்களுக்கே சொந்த்ம் என்று எண்ணுவதால்.ஈழதமிழர்களை அங்கிருந்து விரட்டி அகதிகளாக்கி துரத்துகிறான்.

    நாளை இதே நிலை நமக்கும் வரலாம்.இந்தியா,இந்தி பேசும் வட மாநிலங்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்று இங்கு ஆளும் வட மாநில அரசியல் வாதிகள் எண்ணூகிறார்கள்,

    இலங்கையில் தமிழனுக்கு ஏற்பட்ட நிலை ,நாளை இந்தியாவில் உள்ள தமிழனுக்கும் நாளை ஏற்படலாம்.

    நாம் அணைவரும் இந்தியர் என்றாலும்,நாம் வாழும் நிலபரப்பு நம்முடையது.நாம் தமிழர்கள் ஏதோ வட இந்தியர்களின் தயவில் அவர்கள் இடத்தில் வாழவில்லை.

    இதை அவர்கள் உணர்ந்தால்,நாம் இந்தியராக ஒன்றாக வாழ்வதில் வருத்தம் இல்லை.

    ஆனால்,சிங்களவர்கள் போல் எண்ணினால் ,.அது ஒற்றுமையை பாதிக்கும்.

    ஈழ தமிழன் கேட்பது,அவன் வாழும் நிலபரப்பில் அவன் கலாச்சாரத்தை ,பண்பாட்டை,வாழ்க்கைமுறையை ,மொழியை பின்பற்றி வாழும் உரிமையை தான்.

    அதை சிங்கள அரசு எப்படி மறுக்க முடியும்.

    சிங்கள வன்முறையாளர்களுக்கு ஆதரவு தரும் சோனியாகாந்தி,தமிழகத்திற்கு வந்தால் எதிர்ப்போம்.காங்கிரஸை தோற்க்டிப்போம்.

    தமிழன் மானம் காப்போம்.நாம் இந்தியர் என்றாலும்,தமிழர்.அதை வட இந்தியனுக்கு புரியவைப்போம்.

    ஈழதமிழர்கள் சிங்கள இராணுவ தீவிரவாதிகளால் கொல்லபடுகிறார்கள் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தான் கூறுகிறேன்.

  4. //தேர்தல் புறக்கணிப்பு, ஈழப்போரில் இந்திய அரசின் தலையீட்டை எதிர்ப்பது, தனியார்மய தாராளமய உலகமயமாக்கல் எதிர்ப்பு//

    தேர்தல் புறக்கணிப்பு எந்த அளவுக்கு ஈழத்தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், மற்ற இரு விடயங்களிலும் உங்களோடு நான் உடன்ப‌டுகிறேன். அதற்கு வாழ்த்துக்கள்.

    ஈழத்தமிழனின் அவலச்சாவைச் சித்தரிக்கிறீர்கள். ஈழத்தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை உற்பத்தி செய்வதையும் அதனை பொதுமக்களின் புத்தியில் திணித்து க‌ருத்தாதிக்கம் செய்வதையும் அரசியல் மற்றும் முதலாளி வர்க்கங்களின் ஊடகங்கள் செய்கிறவேளையில், யதார்த்தமாக எங்கள் இனத்தின் அவலச்சாவை எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள்.

  5. திரிகோணமலையில் சீனா ராணுவத் தளம் அமைக்க அனுமதி வாங்கி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும். தற்போது இந்தியாவை இலங்கை அரசு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க