Tuesday, October 3, 2023
முகப்புமக்கள் மீதான போருக்கு எதிராக ம.க.இ.க பொதுக்கூட்டம் – புகைப்படங்கள்!
Array

மக்கள் மீதான போருக்கு எதிராக ம.க.இ.க பொதுக்கூட்டம் – புகைப்படங்கள்!

-

vote-012காட்டு வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீதான போரைத் தொடுத்திருக்கும் இந்திய அரசை எதிர்த்து சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். பதிவுலகைச் சேர்ந்த பதிவர்களும், வாசகர்களும் கூட நிறையப் பேர் வந்திருந்தனர்.

முதலில் இந்தக் கூட்டத்திற்கு போலீசு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தது. பிறகு உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்த பிறகே கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு ஆட்சேபணையில்லை என்று நீதிமன்றத்தில் கூறி அனுமதி வழங்கியது. தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு தோள் கொடுக்கும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாகவும் திட்டமிட்ட முறையில் மாநிலமெங்கும் வீச்சாக பிரச்சாரம் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் இயக்கம் இதுதான். இந்தக்கூட்டத்திற்கு வந்திருந்த மக்களிடம் வசூல் செய்த தொகை ரூ.17,000 என்று தோழர்கள் மேடையில் அறிவித்தனர். இதுவே இந்தக்கூட்டத்தின் உணர்வுப்பூர்வமான எழுச்சிக்கு சான்று. இங்கே கூட்டத்தின் நிகழ்வுகளைக் குறிக்கும் சில புகைப்படங்களை வெளியிடுகிறோம்.

சிறப்புரைகள்

தலைமை தாங்கிய தோழர் முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.


சிறப்புரை ஆற்றிய தோழர் பாலன், உயர்நீதிமன்ற வழக்குறைஞர், பெங்களூரு.

சிறப்புரை ஆற்றிய தோழர் வரவரராவ், புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரா.

தோழர் வரவரராவின் ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்க்கும் தோழர் மருதையன்

சிறப்புரை ஆற்றிய தோழர் மருதையன், ம.க.இ.க, தமிழ்நாடு.


கலை நிகழ்ச்சிகள்


மக்கள் திரள்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. 1000 பேர் கூட வராத ஓட்டுக் கட்சி கூட்டத்திற்கு நல்ல உயரமான மேடை போடுவார்கள். பல ஆயிரம் பேர் வருகை தந்த கூட்டத்திற்கு சிறிய மேடை. கொஞ்சம் பெரிதாக போட்டிருக்கலாம். பின்னாடி இருந்த மக்களுக்கு மேடையே கண்ணில் படவில்லை. ஆடியோ மட்டும் தான் கேட்டது.

      • //வீடியோ ஸ்கீரனை கட்டிய இடமும் தவறு அவ்வளவு முன்னால் கட்டி யாருக்கு பயன்//அங்கு அமர்ந்திருந்த எம்மை போன்ற தோழர்களுக்கு நல்ல பயனாக இருந்தது.ஒலி அமைப்பு சிறப்பனதாக இருந்தது , என்னை பொறுத்தவரை சிறப்பான ஏற்பாடே மேடையும் அதன் பின்னணில் இருந்த ஓவியமும்தான் மாபெரும் கூட்டத்தை சிக்கனமாகவும் சிறப்பாகவும் செய்வது என்பதை நம் மகஇக தோழர்களிடம்தான் கற்கவேண்டும். குறை என்று பார்த்தால் எதாவது ஒன்று தென்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.

  2. மிகப் பெரிய அளவில் மக்களிடம் பிரச்சாரம் செய்து நடத்தப்பட்ட முதல் பொதுக்கூட்டம் என்ற அளவில், இந்தியாவிலேயே நமது பொதுக்கூட்டம்தான் முதன்மையானது என்பது சரிதான். ஆனால், “தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு தோள் கொடுக்கும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாகவும் இந்தியாவில் நடந்த முதல் நிகழ்ச்சி இதுவே.” என்பது மிகைப்படுத்தப்பட்டதும், தவறான கருத்துமாகும். டெல்லியிலும், சண்டிகரிலும், கல்கத்தாவிலும் நமது பொதுக்கூட்டத்திற்கு இத்தகைய நிகழ்வுகள் முன்பாகவே நடைபெற்று வந்திருக்கின்றன என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    • தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி தோழர் போராட்டம். திருத்திவிட்டோம்

  3. தோழர்களே ! தமிழகத்தை பொதுவுடைமை ஆக்கினால் இந்தியாவையே ஆக்குன மாத்ரி ,இந்தியாவை மாத்தினால் உலகத்தையே மாத்துன மாத்ரி
    முதலாளிகளை ஒழிப்போம் .பொதுவுடைமை காப்போம் !
    வாழ்த்துக்கள் ம க இ க ! 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க