Wednesday, September 28, 2022
முகப்பு சமூகம் சாதி – மதம் போலி சாமியார்-நல்ல சாமியார் பிழையான வழக்கு! (இறுதிப்) பாகம் 6

போலி சாமியார்-நல்ல சாமியார் பிழையான வழக்கு! (இறுதிப்) பாகம் 6

-

நித்தியானந்தா-கார்டூன்-8

போலி சாமியார் – நல்ல சாமியார் பிழையான வழக்கு!

பார்ப்பனிய இந்து மதத்தைப் பொறுத்த வரை நல்ல சாமியார், போலி சாமியார் என்ற வேறுபாடுகள் இல்லை. பார்ப்பனியத்தின் அநீதியான சமூக அமைப்பு – சடங்குகளை எதிர்த்து வந்ததால்தான் புத்த, சமண, சாருவாகன, சித்தர்களை பார்ப்பனிய எதிர் மரபு என்று போற்றுகிறோம். அவர்களெல்லாம் பார்ப்பனியத்தை அவரவர் கால வரம்புகளோடு எதிர்த்துக் கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டவர்கள் மன்னர்களின் ஆயுத பலத்தால் ஒழிக்கப்பட்டார்கள். அவர்களது இலக்கியங்களும் அழிக்கப்பட்டன. அந்தக் கேள்விகளின் இருப்பு பார்ப்பனியத்தால் கரைக்கப்பட்ட பிறகு உலகோடு ஒட்ட ஒழுகலே இங்கு விதியாகிப் போனது. இன்றைக்கு நாம் காணும் சாமியார்களும், அதற்கு முந்தைய வரலாற்றில் உள்ள சாமியார்களும் பார்ப்பனியத்தின் ஏற்றத்தாழ்வான வருண சாதி அமைப்பை ஏற்றுக் கொண்டவர்கள். சே குவேரா போன்று ‘இந்துக்களால்’ இமேஜ் கவர்ச்சியுடன் போற்றப்படும் விவேகானந்தரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இந்தப் பின்னணியில் பார்ப்பனியம் முன்வைக்கும் துறவறம் என்பது இத்தகைய சமூக அநீதியை ஏற்று வாழும் மக்கள் வியந்தோதுவதற்காக முன்வைக்கப்பட்ட ‘தியாகம்’ போன்றது. ஆனால் சிற்றின்பங்களை துறப்பதால் மட்டும்தான் அந்த தியாகம் தனது மேலாண்மையைக் கோருகிறது. சமூக துன்பங்களை மதம், சடங்கு, மரபு என்று ஏற்று வாழும் மக்கள்தான் உண்மையில் தியாகம் செய்பவர்கள். அந்த தியாகத்தை விதியென கற்பித்து சிவனே என்று வாழ்வதைத்தான் பார்ப்பனியத் துறவிகள் பேசி வந்தனர். மீறுபவர்களை அரசு உதவியுடன் தண்டித்தும் வந்தனர்.

சங்கர மடத்தையோ, சைவ ஆதீனங்களையோ இத்தகைய பின்னணியில் பொருத்திப் பார்த்தால் அவற்றின் வரலாற்றுப் பாத்திரத்தை புரிந்து கொள்ளலாம். துறவிகள் மக்கள் நலனுக்காக தமது இன்பங்களை துறக்கவில்லை. மக்களை ஆதிக்கம் செய்யும் பார்ப்பனியத்தின் மேலாண்மையை நிறுவும் பொருட்டே குடும்ப வாழ்க்கையைத் துறந்தார்கள். மன்னர்களுக்கும் பார்ப்பனியத்தின் இதர ஆளும் வர்க்கங்களுக்கும் தேவைப்படும் சித்தாந்த தலைமையை துறவிகள் அளித்ததனர். பதிலுக்கு அவர்களுக்கு தரப்படும் மரியாதை மன்னர்களின் ஆயுத வலிமை கொண்டு தீர்மானிக்கப்பட்டது. ஒரு வேளை அத்தகைய ஆயுத வலிமை தேவையில்லாத நிலை என்றால் அதைக்கூட பார்ப்பனியத்தின் சமூக அமைப்புதான் தோற்றுவித்திருந்தது.

சாமியார்களைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாது, சந்தேகப்படக் கூடாது, கேலி செய்யக்கூடாது போன்றவையெல்லாம் இயல்பான சட்டதிட்டங்களாக உருவாகி அமையப் பெற்றன. பார்ப்பனிய சமூக அமைப்பை கேள்வி கேட்க முடியாது என்பதும், பார்ப்பனியத்தின் துறவிகளை கேள்வி கேட்கக் கூடாது என்பதும் வேறு வேறு அல்ல. எனவேதான் மடங்கள் நிறுவனங்களாக நிலை பெற்ற பிறகுதான் மடத்தலைவர்கள் கெட்டுப் போனார்கள் என்ற வாதம் தவறு என்கிறோம். அவையெல்லாம் துணை விளைவுகள் மட்டுமே. மடங்களின் தார்மீக பலம் பார்ப்பனிய சமூகத்தின் பலத்தில் குடி கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே மடத்தலைவர்களின் புனிதமும், அரச மனோபாவமும், கேளிக்கை நாட்டமும் வருகின்றனது. ஒன்று இல்லை என்பதால் மற்றது மகத்தானது அல்ல.

நித்தியானந்தா-9
பணமும் பொருளும்தான் பரம்பொருள், இது புரியாம நீ பாட்டுக்கு ஜீப்புல ஏறுனா எப்படி?

சிற்றின்ப நாட்டம் இல்லாமல் வாழ்ந்த செத்துப் போன சீனியர் சங்கராச்சாரி, ரமணர் போன்றவர்களை நடப்பு கார்ப்பரேட் சாமியார்களுக்கு மாற்றாக சிலர் கூறுகின்றார்கள். இத்தகைய ‘ஒழுக்க’ சாமியார்களெல்லாம் பார்ப்பனியத்தின் அநீதியான சமூக ஒழுக்கத்தை பின்பற்றுவதைத்தான் தங்களது துறவறத்தின் ஆன்மாவாகக் கொண்டிருந்தார்கள். ஆன்மாவிலேயே இத்தகைய அழுக்கு இருக்கும் போது அவர்களது ஆண்குறிகள் அடங்கியிருந்தால் என்ன, ஆடினால்தான் என்ன? அதனால்தான் நித்தியானந்தாவும், ஜெயேந்திரனும் சரி, சந்திரசேகர சங்கராச்சாரி, ரமணரும் சரி இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்கிறோம்.

சமூகத்தை முற்று முழுதாகத் துறந்து வாழ்தல் ‘கடவுளு’க்கும் கூட சாத்தியமில்லை. துறவிகளின் ஆடம்பர மடங்களுக்குப் பின்னால் உழைக்கும் மக்களின் சமாதியாகிப்போன வாழ்வே அஸ்திவாரம். ஜெயமோகனது குருவான நித்ய சைதன்ய யதி கூட ஊட்டியில் முக்கியமான இடத்தில் ஒரு வசதியான குருகுலத்தை கட்டியிருக்கிறார். அவர் ஏன் நாங்குநேரி பாலைவனத்தில் கட்டவில்லை, காஸ்ட்லியான சுற்றுலா மண்ணில் ஏன் கட்டினார், காசு ஏது, மடத்தின் புரவலர்கள் யார், அவர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால் அங்கே இருப்பது துறவறமா இல்லை சுரண்டல் அறமா என்பதை உள்ளுணர்வு இன்றியே தெளியலாம்.

சமூகத்தில் இருக்கும் அநீதிகளை மாய்ப்பதற்க்காக தனது வாழ்க்கை இன்பங்களை துறப்பதோடு அதை தான் மட்டும் செய்ய முடியாது, ஒரு மக்கள் கூட்டத்தால் மட்டுமே செய்ய முடியுமென ஒருவன் முனைந்தால் அவனை துறவி என்று அழைக்கலாம். அல்லது போராளிகள் என்றும் அழைக்காலம். பார்ப்பனியத்தின் வரலாற்றில் இந்தப்போராளிகள் இருந்த இடம் தெரியாமல் ஒழிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த ஒழிப்பின் மரபைத்தான் ஆதீனமாகவும், மடங்களாகவும் நாம் பார்க்கிறோம். இதற்கும் மேல் ஒத்துக்கொள்ள தயங்குபவர்கள் உண்மையான துறவிகளைப் பார்க்க வேண்டுமென்றால் பழனி படிக்கட்டில் பிச்சை எடுக்கும் சாமியார்களை போற்றுங்கள், பிரச்சினை இல்லை.

எனவே இத்தகைய பின்னணியில் புரிந்து கொள்வதால்தான் நாம் நித்தியானந்தா ஆதீனமாகக் கூடாது என்ற பிழையான கோரிக்கையை வைக்கவில்லை. அப்படி வைத்தால் நல்ல ஆதீனம், நல்ல சாமியார் என்ற முறையில் பார்ப்பனியத்தின் அநீதிக்கு துணை போன தவறினைச் செய்தவர் ஆவோம்.

சாரமாக இந்தப்பிரச்சினையில் நாம் வைக்கும் மையமான கோரிக்கை என்ன? ஆதீனங்கள், மடங்களது சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும். மரபு என்ற பெயரில் இருக்கும் பார்ப்பனிய அடிமைத்தனங்கள் ஒழிக்கப்பட வேண்டும். மதம் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். துறவிகள், சாமியார்கள் என ஆக விரும்பும் எவரும் பழனி படிக்கட்டில் அமர்ந்து மட்டுமே பிச்சை எடுக்க வேண்டும்.

இத்தகைய கோரிக்கைகள் நிறைவேறப் போராடும் சூழ்நிலைக்கு நித்தியானந்தா ஆதீனமாவது உரம் சேர்க்கும். பிடிபட்ட பொறுக்கிக்கும் பிடிபடாத பொறுக்கிகளுக்கும் நடக்கும் இந்த சண்டையை நாம் பார்ப்பனியத்திற்கு பாடை கட்டும் நோக்கத்திற்கு பயன்படுத்துவோம். தோற்கடிக்கப்பட்ட பார்ப்பனிய எதிர் மரபின் இறுதி வெற்றியை நிலைநாட்டுவோம்.

•முற்றும்

_____________________________________________________

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. // இத்தகைய கோரிக்கைகள் நிறைவேறப் போராடும் சூழ்நிலைக்கு நித்தியானந்தா ஆதீனமாவது உரம் சேர்க்கும். //

  நித்தியின் ஆதீனப் பாதுகாப்புகுழுவில் சேர உங்கள் இயக்கத்துக்கு அழைப்பு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா ? மறுப்பீர்களா ?

  மதுரைக் கோவிலை அறநிலையத்துறையிடமிருந்து மீட்டு, கல்லூரிகள் கட்டி,உலகம் முழுதும் ஆதினத்துக்கு கிளைகள் திறந்து, ஆயிரக்கணக்கில் அன்றாடம் அன்னதானம் செய்வேங்கிறார் நித்தி. இதையெல்லாம் பாத்து, உங்க புரட்சிகாரர்கள் நித்தியின் சீடர்களாயிடப் போறாங்க ஓய்…

  • ஆனாலும் உங்களுக்கு குசும்புங்க• சிபிஎம் காரன் மாதிரியே யோசிக்கிறீங்க• பின்ன நித்தியோட பாலியல் வறட்சிக்கு பல்லக்கு தூக்குனவங்க இல்லியா

   • இந்த டுபாக்கூர் நித்தி ஆதீனமாவது உங்கள் போராட்டத்துக்கு உரம் சேர்க்கும் என்று சொல்வது கொஞ்சம் ஓவரா தெரியவில்லையா..?!! உங்களைப் போன்ற லட்சியவாதிகள் ஆன்மீகத்துக்கு வந்து அதைத் திருத்தினால் சந்தோசம்தான்.. இப்ப என்னை ஆர்.எஸ்.எஸ்.காரன்னு சொல்லிடுவீங்களே..!!

    • அம்பி, என்னத்த படிச்சீங்க?

     இப்படியில்ல எழுதியிருக்கு

     …….. இத்தகைய கோரிக்கைகள் நிறைவேறப் போராடும் சூழ்நிலைக்கு நித்தியானந்தா ஆதீனமாவது உரம் சேர்க்கும்.

     பிடிபட்ட பொறுக்கிக்கும் பிடிபடாத பொறுக்கிகளுக்கும் நடக்கும் இந்த சண்டையை நாம் பார்ப்பனியத்திற்கு பாடை கட்டும் நோக்கத்திற்கு பயன்படுத்துவோம்………

     இதை எப்படி புரிஞ்சுக்கணும்னா,

     இந்த இரண்டு பொறுக்கிகளுக்கள சண்டை நடக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கும் நித்தி ஆதினம் ஆன பிரச்சனையை பயன்படுத்தி நாம் இவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதை.

     சிவனடியார் ஆறுமுக சாமி தில்லையில் தமிழில் பாடுவதை ஆதரித்து தீட்சிதர்களை அம்பலப்படுத்தி கோயிலை தீட்சிதர் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் முயற்ச்சியல் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள் என்பதை நினைவுகூர்க

     • எம்பி,

      இந்த கேலிக்கூத்து இப்போதே நாறிக்கொண்டுதானே இருக்கிறது.. உங்கள் நித்தி ஆதீனமாக ஆதரவு என்ற நிலைப்பாடு எந்தவகையில் மேலும் அம்பலப்படுத்தும், உங்கள் போராட்டத்தை வலுப்படுத்தும்..?!

      • நித்தி ஆதினமாகக்கூடாது என்று தவறாக முடிவெடுக்கக்கூடாது என்பதை நித்திக்கு ஆதரவு என்று இதை யூனி டைமென்சனலாக புரிந்து கொள்ளக்கூடாது.

       இது இந்த சூழலை (நித்தி ஆதினமாக தொடர்ந்தாலும் அல்லது நீக்கப்பட்டாலும்)பயன்படுத்திக்கொண்டு இந்த மடங்களை மக்களிடம் அம்பலப்படுத்துவதைப் பற்றியது.

       நீங்கள் சொல்வதைப்போல தற்போது இவை நாறிக்கொண்டெல்லாம் இல்லை. வினவு எழுதிய கண்ணோட்டத்தில் ஊடகங்களில் இப்பிரச்சனை பேசப்படவேயில்லை. வெறும் ஒழுக்கம்-மரபு சார்ந்த ஒன்றாகத்தான் இன்று வரை இரண்டு தரப்பினாலும் பிரச்சாரப்படுத்தப்பஃடுகிறது. அந்த குண்டுசட்டியில் சிக்கினால் மீள வழியில்லை,

       எனவே இந்த சூழ்நிலையை எப்படி பரிசீத்து நாம் என்ன முடிவெடுக்கவேண்டும் – மடங்களை அரசுடைமையாக்குவது தான் தீர்வு- என்று வினவு வழிகாட்டியிருக்கிறது. முற்போக்காளர்களும், இயக்கங்களும் இந்த முழக்கத்தையே முன்வைக்க வேண்டும் என்பது என் அவா.

       • உங்கள் போராட்ட நலனுக்காக நித்தி ஆதினமாவதை எதிர்க்காமல் இருக்கவேண்டும் / எதிர்பார்க்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாமா..?

        இதன் மூலம், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சீடப்பிள்ளையை (நித்தியின் பினாமி) ஆதீனமாக்கிவிட்டு இவர்கள் தங்கள் பஞ்சாயத்தை முடித்துக் கொண்டு சேஃபாக செட்டில் ஆவதை நீங்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டியிருக்குமே..?! இந்த ஆண்ட்டி-கிளைமாக்ஸ் நடக்காது என்கிறீர்களா..?!!

        • நித்திக்கும் ஒரு ஓ.பி. கிடைக்கலாம். அது கிளைமாக்ஸே கிடையாது. எல்லா நித்தி பக்தர்களும் ஏற்கும் ஒருவர் ஏன் வைஷ்ணவி கூட அடுத்த ஆதீனமாகலாம். கிளைமாக்சுல நித்திக்கு ஆதரவா ஆதீனமும், ஆதீனத்துக்கு ஆதரவா நெல்லை கண்ணனும், அவருக்கு ஆதரவா புரட்சித்தலைவியும் நிக்குற டிரையாங்குலர் கதைய யோசிச்சுப் பாருங்க• ஆறு விதமா கதை எழுதலாம். ஆனா எல்லா கதைலயும் ஆதீனத்தோட டிரவுசர் சாரி கௌபீணம் கழட்டப்படும்

         • மணி,
          எல்லாம் செட்டில் ஆன பிறகு எதைக் கழட்டினாலும் கவலைப் படவா போகிறார்கள்.

    • சே சே ஆன்மீகத்த திருத்த ஆர்எஸ்எஸ் காரனா இருக்கணுமா என்ன?!

    • அம்பி, நித்தியானந்தா ஆதீனமானால் பார்ப்பனிய இந்து மதம் தனது புனிதம், கவுரவம், பெருமை, மரபு அத்தனையையும் நொடியில் இழந்து விடும். சாமியார்கள், ஆதீனங்கள் அனைவரும் கேலிப்பொருளாக மாறி விடுவார்கள். நித்தியை பார்த்த மாத்திரத்திலேயே மக்கள் விசமத்தனத்துடன் சிரிப்பார்கள். பிறகு நாம் நித்தியையும், ஏனைய சாமியார்களையும் பழனி படிக்கட்டில் பிச்சை எடுக்க வைப்பது சுலபமல்லவா?

     • வினவு,

      உங்கள் விபரீத ஆசை பழனியாண்டவனுக்கு தலைவலியைக் கொடுக்குமா என்பது தெரியவில்லை.. சாமியார்களை குறைவாக எடைபோடுகிறீர்களோ என்று தோன்றுகிறது.. ஆண்ட்டி-கிளைமாக்ஸ் நடந்தாலும் நடக்கலாம் ..!!!

      • அம்பி, இது ஓ கேவா பாருங்கள்! நித்திக்கு பழனி மலை, ஜெயேந்திரனுக்கு மருத மலை, விஜயேந்திரனுக்கு சுவாமி மலை, திருவாவாடுதுறை ஆதீனத்திற்கு சபரி மலை, மதுரை ஆதீனம் அருணகிரிக்கு திருப்பதி மலை என்று ஆளுக்கொரு மலைப் படிக்கட்டில் பிச்சை எடுக்க வைப்போம். இதனால் பழனியாண்டவனுக்கு தலைவலி வராமல் பார்த்துக் கொள்வோம். நாட்டில் மலைக்கோவில்களுக்கா பஞ்சம்?

       • இன்னும் பிரசவமே ஆகவில்லை அதற்குள் பாகம் பிரிக்கிறீர்கள்.. நான் அடிக்கடி பழனிக்குப் போவதால் நித்தியை வேறு எங்காவது ட்ரான்ஸ்ஃபர் பண்ணுங்க..

  • அம்பி இவ்வளவு அப்பாவியா நீங்கள்? வஞ்சப் புகழ்ச்சி அணி தெரியும்தானே? நித்தியானந்தாவும், ஏனைய ஆதீனங்களும், சங்கர் சாரிகளும், கார்ப்பரேட் சாமியார்களும் பழனி மலைப் படிக்கட்டில் பிச்சை எடுக்க வேண்டுமென்பதும், மடங்கள், ஆதீனங்களின் சொத்துக்களை அரசுடைமை ஆக்க வேண்டும் என்றுதான் கட்டுரை கூறுகிறது.

   • சரியாகச்சொன்னீர்கள் போங்கள்!
    ‘துறவி’ என்று சொல்லிக்கொண்டு பென்ஸ் காரில் செல்லும் சாமியார்கள் எதையும் துறக்கவில்லை என்பதை மக்கள் ஏன் உணர மாட்டேன் என்கிறார்களோ புரியவில்லை…
    மடங்கள் மற்றும் பிற மத இயக்கங்களால் முடக்கப்படும் பணம் / வளம் பொது மக்கள் வசம் வந்தால் நன்று…(இத்தகைய ‘நிறுவனங்களால்’ தங்கமாக புழக்கத்திலுள்ள பணம் முடக்கப்படுகிறது)

    வினவு: மக்கள் உணரும் வரை இவ்வாறு சவுக்கடி கொடுத்துக்கொண்டே இருங்கள்…

    • //‘துறவி’ என்று சொல்லிக்கொண்டு பென்ஸ் காரில் செல்லும் சாமியார்கள் எதையும் துறக்கவில்லை என்பதை மக்கள் ஏன் உணர மாட்டேன் என்கிறார்களோ புரியவில்லை…//

     மற்றொரு ப்ளாக்கில் நித்திக்கு ராஜ சன்யாஸி என்று ஒருவர் பட்டம் சூட்டி இதெல்லாம் சரிதான்னு சொல்லி வாதாடியிருக்கிறார். இப்போ எல்லாரும் ராஜ சன்யாசிகளாகவே திரிகிறார்கள் போலிருக்கு! மக்கள்தான் பரதேசிகளாக ஆகிறார்கள்..!!

  • வினவு, தகரம் கண்டு பிடிக்கறதுக்கு முன்னாலேயே உண்டியல் கண்டு பிடிச்சு ஊர் ஊரா குலுக்கி கிட்டு திரியற நீ, சாமியார்கள பிச்சை எடுக்க வெக்கறத பத்தி பேசறியா! என்னவோ போ! வர வர நீ ரொம்ப தான் காமெடி பீஸ் ஆயிட்டு வர!

 2. தெளிவான பதிவு. இந்த ஆறு பாகங்களையும் தொகுத்து ஒரு பிரசுரம் ஆக கொண்டு வந்தால் பலருக்கும் உதவும். இது, தோழமையுடன் கூடிய கோரிக்கை.

  • எந்த இசமும் தோற்பதும், வெற்றி பெறுவதும் அது மக்களுக்க்காக இருக்கிறதா, மக்களை ஒழிப்பதற்காக இருக்கிறதா என்பதைப் பொறுத்து. அந்த வகையில் மக்கள் சக்திதான் இசங்களின் வெற்றியை தீர்மானிக்கிறது. எனில் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு அல்லது உழைக்கும் ‘இந்துக்களுக்கு’ எதிராக இருக்கும் இந்துயிசம், அல்லது பார்ப்பனியம் சவக்குழிக்கு போவது உறுதி. என்ன சொல்கிறீர்கள்?

   • நீர் இப்படிச் சொல்லி கொண்டிருக்க… சீனமக்களும் ரசிய மக்களும் வேற இசத்தை அனுப்பி வச்சுட்டாங்களே… இந்துயிசம் இன்னும் குண்டுயிசமாகத்தான் இருக்கு….

  • \\you cant defeat hinduism , as it is more powerfull than you……
   \\ நித்தி, சுப்பிரமணி [அதான் ஜெயேந்திரன்], தேவநாதன் இவனுங்க எல்லாம் இந்து மதத்தின் பிரதிநிதிகளா? ஐயோ….ஐயோ……….

    • நித்தி நடிகையுடன் கல்யாணம் செய்யாமல் புருஷன் பெண்டாட்டி மாதிரி “எல்லாம்” செய்தவன். சுப்புணி, மடத்தில் சாமியாராகச் சேர்ந்து பின்னர் எவளோ ஒருத்தியுடன் ஓடிப் போய்விட்டு திரும்ப வந்து மடத்துக்குள்ளேயே உட்கார்ந்துகொண்டு ஓடிப் போனபோது செய்ததையே திரும்பச் செய்துகொண்டிருப்பவன், கோவில் கணக்கரைப் போட்டுத் தள்ளியதற்கு முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப் பட்ட ஒரு அக்கியூசுடு, தேவநாதன் கோவிலுக்குள்ளேயே குடும்பப் பெண்களை பாலியல் ரீதியாக இன்பம் அனுபவித்து அதை சி.டி. யாகப் போட்டு காஞ்சிபுரம் முச்சூடும் விற்று காசு பார்த்தவன். இன்னம் வேறு என்ன ஐயா தகவல் வேண்டும்?

     • அய்யா நான் கேட்டது இந்து மதத்தின் பிரதிநிதிகளாக தாங்கள் விரும்பியவர், விரும்புபவர், விரும்பிக்கொண்டிருப்பவர், விரும்பப்போகிறவர் யாரோ?

      • \\அய்யா நான் கேட்டது இந்து மதத்தின் பிரதிநிதிகளாக தாங்கள் விரும்பியவர், விரும்புபவர், விரும்பிக்கொண்டிருப்பவர், விரும்பப்போகிறவர் யாரோ?\\ இந்து மதம் என்று சொல்லிவிட்டு, அதன் பிரதிநிதி என்று வரும் போது, அந்த மதத்தின் கோட்பாடுகள் என்ன, அதை யார் பின்பற்றுகிறார்கள் என்று பார்க்காமல், ஒரு தனி மனிதனைப் பார்த்து நீ யாரை பிரதிநிதியாகக விரும்புகிறாய் என்று கேட்கிறீர்களே………இங்குதான் பெரும்பாலும் எல்லோருமே தவறு இழைக்கிறோம். இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த ஒரு இயக்கத்திற்கும் அதன் கொள்கைகள் என்னவோ அதை 100 % பின்பற்றுபவரே அதன் பிரதிநிதியாக இருக்கும் தகுதியைப் பெறுவார். பெரியார் அவர்களின் தொண்டன் நான் என்று சொல்லிவிட்டு, ஊர் பூராவும் சாராயக் கடையைத் திறந்து விட்டு கமிஷன் பார்க்கும் ஒருத்தரை பெரியாரின் பிரதியாக ஏற்றுக் கொள்ள முடியாது. பெரியார் பெயரைச் சொல்லி ஓட்டு வாங்குபவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். இந்து மதம் என்று சொன்னால் அதற்கென அடிப்படை நூல்கள் உள்ளன, கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக என்ற வள்ளுவனின் வாக்குப் படி இந்த நூல்களை யார் கசடறக் கற்று அதன் படி வாழ்கிறார்களோ அவர்களே இந்து மதத்தின் பிரதிநிதிகள். அந்த லிஸ்டில் மேற்சொன்ன மூவரும் இல்லை.

 3. பவருன்னு நீங்க சொல்றது நித்தி ஜெயேந்திரன் போன்ற அதிகார மையங்கள் தான?

 4. இந்த ஆறு பதிவுகளையும் பார்த்தால் ஒன்று விளங்குகிறது. நித்தி பார்ப்பனன் இல்லை, அதனால் அவன் ரஞ்சிக் கோட்டையில் கொடி ஏற்றி கும்மாளம் போட்டிருந்தாலும், மதுரை ஆதீனம் மடாதிபதியாக வந்தால் தப்பில்லை, அவ்வாறு வருவதை யாரவது எதிர்த்தால் ஜெயேந்திரன், தேவநாதன் போன்றவர்களை முன்னுதாரனமாக காட்டி நியாயம் கற்ப்பிக்கப் போகிறீர்கள்!! நல்லாத்தான் இருக்கு, ஆனா எங்கேயோ இடிக்குதே………….

  • ஜெயதேவ தாஸ், வினவு இங்க கடவுளையும், ஆன்மீகத்தையும், செல்ப் அப்பாயிண்டட் அத்தாரிட்டியான இந்த கயவர்களின் கையிலிருந்து பிடுங்க வழி சொல்லியிருக்காங்க. நீங்க நியாயப்படி மொத ஆளா இதை ஆதரிச்சிருக்கனும். எதுக்கும் இன்னுமொருக்கா பர்ஸ்ட்லேருந்து படிச்சு பாருங்க

   – லார்ட் லபக்குதாஸ்

   • ஆன்மிகம் கடவுள் நம்பிக்கை இதெல்லாம் சமூகச் சீர்கேடுகள் என்று இவர்கள் பதிவுகளில் கூக்குரலிட்டது உண்மை என்றால், நித்தியும் வேண்டாம், சுப்புணியும் வேண்டாம் என்றல்லாவா சொல்ல வேண்டும்? அதை விட்டு விட்டு, பிராமணன் அயோக்கியனாக இருக்கும் போது நித்தி அயோக்யனாக இருந்தால் என்ன என்று நியாயம் கற்ப்பிப்பது தகுமா? அவனே அயோக்கியன் என்றாகி விட்டது, இதில் பிரமான அயோக்கியத் தனம், பிராமணன் அல்லாத அயோக்கியத் தனம் என்றெல்லாம் தரம் பிரித்தா பார்ப்பது? எல்லா மடங்களையும் சாமியார்களையும் ஒழிக்கணும்னு வினவு இந்த ஆறு பதிவுகளில் எங்கும் சொல்லியதாகத் தெரியவில்லை, அவ்வாறு இருந்தால் மேற்கோள் காட்டவும். சாப்பாட்டை லபக்கு லபக்கு என்று முழுங்குவது போல பதிவுகளைப் படிக்கக் கூடாது, கொஞ்சம் நிதானமாக படிக்கவும், அப்புறம் முதிரிக் கொட்டை மாதிரி கருத்துக்களை உதிர்த்து கருத்து கந்தசாமி என்று காண்பித்துக் கொள்ள எத்தனப் படக் கூடாது. இப்படிக்கு- பாடு குபுக்கு தாஸ்.

    • //பாடு குபுக்கு தாஸ்.//

     ஏற்கனவே இருக்குற பேரு நல்லாத்தானே இருக்கு.

     • \\ லார்ட் லபக்குதாஸ்\\ இதுக்கு எதுகை மோனையாக இருக்குதேன்னு போட்டேன். [அதுசரி, இந்த மாதிரி வம்புக்கிழுக்கும் டிக்கட்டுகளை நான் எப்படித்தான் டேக்கில் செய்வது, நீங்களே சொல்லுங்களேன்!!]

 5. By the by, தற்போதைய மதுரை ஆதீனம் அருணகிரி, ஊருக்கு மூணு வச்சிருக்கிறார் என்ற நாட்டுக்குத் தேவையான முக்கியமான விஷயத்தைச் சொல்லி, அவர் ஏன் நித்தியைத் தேர்ந்தெடுத்தார் என்ற சந்தேகத்துக்கு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.

 6. பழனி மலை, மருத மலை, சபரி மலை படிகளில் இந்து சாமியார்கள், ஆதீனங்கள் எல்லோரையும் பிச்சை எடுக்க உக்காத்தி வெச்சுடலாம். மலைக்கு மேல இருக்கிற கோவிலுக்குள்ள இருக்கிற பாப்பார பூஜாரிங்கள எல்லாம் துரத்திடலாம், அப்புறம் அப்படியே கர்பகிருகத்துக்குள்ளாற இருக்குற சிவன், பெருமாள் எல்லாரையும் துரத்திட்டு கார்ல் மார்க்ஸ், ஸ்டாலின், மாவோ,இவங்களை உக்காத்தி வெச்சுடலாம். நாட்டுல இருக்கிற எல்லா பிரச்சனையும் தீந்துடும்.

 7. ஆறு பகுதிகளில் அடித்து துவைத்து காயப் போட்டு விட்டீர்கள். ஆறையும் சேர்த்து படிக்கும் போது ஆதீனங்கள், மடங்கள் பற்றிய ஒரு குறுக்கு வெட்டு கிடைத்து விட்டது.

  1. மதுரையில் பாஜகவின் தாமரை சங்கமத்தை மங்கிப் போக வைத்த நித்தியானந்தாவின் முடிசூட்டல்
  2. இந்துத்துவா அமைப்புகள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிப்பது
  3. வரலாற்றில் ஆதீனங்கள், மடங்கள் – சொத்தை பராமரிக்கும் மையங்களாக உருவானது – பார்ப்பனீயம் சமணர்களிடமிருந்து திருடியது
  4. நவீன காலத்தில் மடங்களில் நடக்கும் கொலைகள் சொத்துச் சண்டைகள்

  5. நித்தி மட்டுமில்லை, எல்லா சாமியார்களும் அயோக்கியர்கள்தான் என்ற விபரங்கள்
  6. அருணகிரியின் பூர்வாசிரம, ஆதீன லீலைகள்
  7. நித்தியை பயன்படுத்திக் கொண்டு தன்னை பெரிய மனிதனாகக் காட்டிக் கொள்ள ஜெயேந்திரனின் சூழ்ச்சி
  8. ஆர்எஸ்எஸ், பாஜகவின் செக்ஸ் லீலைகள்

  9. ஜெயேந்திரனின் குற்றங்கள்
  10. தினமணி வைத்தியநாதனின் நாட்டாமை
  11. பெரிய சங்கராச்சாரியின் சமூக விரோத கோட்பாடுகள்

  12. சைவ ஆதீனங்களின் பார்ப்பனீய தொண்டு
  13. சைவப் பிள்ளை சாதி வெறி

  14. கண்டு கொள்ளாமல் விடப்படும் பார்ப்பனீய குற்றங்கள்
  15. பார்ப்பனீயத்தின் வசதிக்கு ஏற்ப மட்டும் கடைப்பிடிக்கப்படும் மரபுகள்
  16. சரியான தீர்வு அரசுடமைதான்

  17. நித்தியானந்தா எப்படி அருணகிரியை மயக்கினார்
  18. நித்தியானந்தாவும் பின்நவீனத்துவமும்
  19. நித்தி திருநங்கையா?
  20. சாமியார்கள் எல்லோரும் அயோக்கியர்களே – பார்ப்பனீயத்தை கடைப்பிடிப்பவர்களே

  என்று விறுவிறுப்பாக போனது. பிற்போக்கு இந்துமத வெறியர்கள் யாரும் தலை நிமிர்ந்து பதில் சொல்ல முடியாத அளவிற்கு ஆணித்தரமான வாதங்கள்.

 8. ///அம்பி May 18, 2012 at 8:28 pm Permalink
  இந்த ஆண்ட்டி-கிளைமாக்ஸ் நடக்காது என்கிறீர்களா..?!!///

  ஏன் அங்கு வரும் ஆண்டிகளுடன் (இது இங்கிலிஷ் Aunty!) தினமும், முக்காலமும் கிளைமாக்ஸ்(!) நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

  நித்தி இல்லை எந்த தத்தி ஆதீனமாக வந்தாலும் இதற்கு ஓய்வில்லை!

  அடுத்த ஆதீனமாக வைஷ்ணவியை நான் வரவிடமாட்டேன்! ஏனென்றால், நான் ஒரு பெண் ஆதீனத்தை ரெடி பண்ணி வைத்திருக்கிறேன்..அந்த நடமாடும் தெய்வத்தைப் பார்க்க இங்கு செல்க…

  http://www.nambalki.com/2012/05/blog-post_18.html

  ஆனால், தற்சமயம் குந்திக் கொண்டு இருக்கிறார்கள்!

   • சந்தேகம் இல்லாம பட்டை தான்; இதிலென்ன சந்தேகம்?
    ஆனால், மடம்/ஆதீனம் இதற்கு தலிவர் ஆனா பிறகு அவர்கள் வாழும் கலையை கற்றுக்கொண்டு அப்புறம் என்ன? ஸ்காட்ச் தான்; குறைந்த பட்சம்
    Johnnie Walker Blue Label!

    • பட்டையா..?! அரசு மருத்துவமனையில் கொடுக்கும் கொய்னா மருந்து போல இருக்கே…

  • //ஏன் அங்கு வரும் ஆண்டிகளுடன் (இது இங்கிலிஷ் Aunty!) தினமும், முக்காலமும் கிளைமாக்ஸ்(!) நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்!//

   Mass!! Class!!!

 9. மாங்கு மாங்கென்று எழுதிக் கொண்டிருக்கலாம்.ஒன்றும் ஆகாது.பிரச்சினையை சாமியார்கள் சுமுகமாக தீர்த்துக் கொள்வார்கள் அல்லது ஒருத்தரை ஒருத்தர் விமர்சிக்கக் கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.அரசு தலையிட்டு மடத்தினை தன்வ்சம் எடுத்துக்கொண்டால் நல்லது.ஆனால் அரசு அதை செய்யத் தயங்கும் ஏனென்றால் அதை யாரும் வலியுறுத்தவில்லை.அதை செய்தாலும் ஆயிரம் சட்டப் பிரச்சினைகள் வரும்.
  ம.க.இ.கவினர் புத்தகம் போட்டு விற்கலாம்.நித்தியானந்தா,ஜக்கி வாசுதேவ்,ரவிஷங்கர் போன்ற பல வகை ஆன்மிகவாதிகள் அவர்கள் செய்வதை செய்து கொண்டிருப்பார்கள்.இங்கே எல்லாரும் பிழைக்கமுடியும்- நித்தியானந்தா,ஜாகிர் நாயக், தினகரன்/மோகன் லாசரஸ் என்று அவரவர் தொழிலில் கருமமே கண்ணாக இருப்பார்கள்.
  வீணாக ஒருத்தரை ஒருத்தர் பகைத்துக்கொள்ளாமல் தொழில் செய்வார்கள். எப்போது அனைத்து போலி ஆன்மிகவாதிகள்,அவர்களின் அமைப்புகளை எதிர்த்து மக்கள் திரள்கிறார்களோ அப்போதுதான் விடிவு வரும்.ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை.
  இந்து மத அமைப்புகளை திட்டுபவர்கள் இஸ்லாம்,கிறித்துவ அமைப்புகள் என்றால் அடக்கி வாசிப்பார்கள்.இது வினவிற்கும் பொருந்தும்,வீரமணிக்கும் பொருந்தும்.இடதுசாரி,பெரியாரிய அமைப்புகளின் குறி இந்து மத அமைப்புகள் என்பதால்
  போலி சாமியார்களை வெறுக்கும் இந்துக்கள் கூட இவர்களை நம்பமாட்டார்கள்.

 10. சரியான நேரத்தில்தான் 6 பதிவையும் போட்டிருக்கிறார்கள். நான் முன்னே சொன்ன மாதிரி மதங்களுக்குள் கடவுளைத் தேடினால் இப்படித்தான் நாறவேண்டியிருக்கும். சங்கர் சாரியாம், நித்தமும் ரஞ்சிதாவாம். இவனுகளுக்களாம் _______ அறுக்கனும். _______ அறுத்தாதான் சாமியாரா வரமுடியும்னு ஒரு சட்டம் போடுங்கப்பா. haa haa haaa கடவுளே உம்மை வைத்து பிழைப்பு நடத்துவோரையும் அவர்கள் பின் செல்வோரின் நிலைமையையும் பார்த்தாயா! அவர்களுக்குள்ளாகவே காறித்துப்பிக்கொள்கிறார்கள். hahaa haaa haahaaa.

  • உங்கள ஒருத்தர் அங்கன தேடிக்கிட்டு இருக்காரு, இங்கன இப்டி கடவுளோட பேசிக்கிட்டு சிரிச்சிக்கிட்டுருகீகளே..

   • எங்கே எங்கே யாரென்னை தேடுவது.

    அறிவார்ந்த படைப்பு, அற்புதப் படைப்பு, அழகியல் படைப்பு, நேர்த்தியான படைப்பு அப்புடி இப்படின்னு சொல்லி சொல்லியே அத்தனையையும் நாசமாக்கிட்டீங்களப்பா. கடவுளை ஸ்திரி லோலன் ரேஞ்சிக்கு இறக்கிட்டீங்களே! நாத்திகனாவது கடவுளை ஒரு மூலையில் உட்கார வச்சிட்டு அவன்பாட்டுக்கு அவன் வேலைய பார்த்துகிட்டு இருந்திருப்பான். கடவுள் இருக்காருன்னு சொல்ற பயபுள்ளவ ரோதனை தாங்கமுடியலடா சாமி.

    • Repeattuuuu….
     “”கடவுளை ஸ்திரி லோலன் ரேஞ்சிக்கு இறக்கிட்டீங்களே! நாத்திகனாவது கடவுளை ஒரு மூலையில் உட்கார வச்சிட்டு அவன்பாட்டுக்கு அவன் வேலைய பார்த்துகிட்டு இருந்திருப்பான். கடவுள் இருக்காருன்னு சொல்ற பயபுள்ளவ ரோதனை தாங்கமுடியலடா சாமி.””

 11. ஜெயமோகன் எழுதியுள்ள நாராயணகுரு குலமும் வசவு இணையதளமும் என்கின்ற கட்டுரையை படித்துப் பார்த்தேன். அதில் நாராயணகுரு குருகுலத்தின் வரலாறாக அதன் மக்கள் நல செயல்களை பட்டியலிட்டு கூறியிருந்தார் இதைப் பற்றி தங்களுடைய கருத்தை தெரிந்து கொள்வது உதவியாக இருக்கும் என நினக்கிறேன்.

 12. ஜெயமோகன் எழுதியுள்ள நாராயணகுரு குலமும் வசவு இணையதளமும் என்கின்ற கட்டுரையை படித்துப் பார்த்தேன். அதில் நாராயணகுரு குருகுலத்தின் வரலாறாக அதன் மக்கள் நல செயல்களை பட்டியலிட்டு கூறியிருந்தார் இதைப் பற்றி தங்களுடைய கருத்தை தெரிந்து கொள்வது உதவியாக இருக்கும் என நினக்கிறேன்

  • நாராயணகுரு பெயரில் நடக்கும் ஊட்டி குருகுலத்தில் முக்கியமானவர்கள் இடைக்கிடையே அமெரிக்கா, ஆஸ்திரேலியா சென்று பணிபுரிந்தவர்களென்று தெரிகிறது. ஏன் தொடர்ந்து குருகுலத்திலேயே தங்கி மாடு மேய்த்து வாழ முயலவில்லை என்று தெரியவில்லை. இருந்தாலும் அண்ணா ஹசாரேயின் ராலேகான் சித்திக்கு சென்று அவரது ‘புரட்சியை’ தரிசித்தது போல இந்த குருகுலம் இருக்கும் கிராமத்திற்கு நேரில் சென்று மக்களை சந்தித்துவிட்டு எழுதுகிறோம்.

   • அய்யா வினவு எதுக்கு இந்தக் கருமாந்திரத்துக்கு எல்லாம் டைம வேஸ்ட் பண்ணுறீங்க. உள்ளூர்ல ஷோக் பண்றதுக்கு கோயில் பூசாரியா இருக்கானுவ,. வெளிநாட்டுல ஷோக் பண்றதுக்கு குருகுலம் ஆரம்பிச்சிக்கிறானுவ இதான் மேட்டரு. இதுக்கு ஒரு நேர்காணலா?

 13. Hi
  It is a great article with lot of informations!!! Still i was expecting that you should have included “MelMaruvathur Adhiparasakthi adigalar” and there is one more person who is doing very similar stuffs near Vellore in name of amma developed a Goldan temple. I heard that he was a assitant and took some training from Sankarachariyar. I went to visit that place to see what exactly happening there. They ask people to surrender all their mobile phones, camara, hand bags everythining you cant take any photographs or you cant know what is going on there. Most of the visiters are from Andra, i dont know how people are stupid enough to beleive these kind of people??
  I would suggest you or strongly recommend you to write a another article about these two corparate guys who are cheating people around and developing lot of educational institutes to further cheat people.
  I would appreciate if VINAVU spends some time to investigate what is going on inside golden temple near vellore and how he got somuch money to develop such a temple.
  Murugan

 14. நாராயணகுரு பெயரில் நடக்கும் ஊட்டி குருகுலத்தில் முக்கியமானவர்கள் இடைக்கிடையே அமெரிக்கா, ஆஸ்திரேலியா சென்று பணிபுரிந்தவர்களென்று தெரிகிறது. ஏன் தொடர்ந்து குருகுலத்திலேயே தங்கி மாடு மேய்த்து வாழ முயலவில்லை என்று தெரியவில்லை. இருந்தாலும் அண்ணா ஹசாரேயின் ராலேகான் சித்திக்கு சென்று அவரது ‘புரட்சியை’ தரிசித்தது போல இந்த குருகுலம் இருக்கும் கிராமத்திற்கு நேரில் சென்று மக்களை சந்தித்துவிட்டு எழுதுகிறோம்.

  அப்போ ஒண்ணுமே தெரியாம தான் கட்டுரை எழுதினியா? சொல்றதெலாம் பொய்யும் புரட்டும் தான் … நீ அடுச்சி விடு ராசா… ஜால்ரா தட்ட ஆள் இருக்கில்ல

  • Sampath you better read this below article. But may wonder about every informative parts in that.

   மயிலுக்கு தோகையில் கண் போன்ற அமைப்பு வந்தது எப்படி?????

   மயில் தோகை விரித்தாடும் அழகைப் பார்க்கவே பரவசமாக இருக்கும். நம் வீட்டிற்கு முன் நின்று கரையும் காகங்களுக்கு உணவளித்தால் நம் முன்னோர்களுக்கு அன்னமளிப்பதற்குச் சமம். புராணங்களில் அன்னப்பறவையின் அறிவு மிகவும் போற்றப்படுகின்றது. ஓணான், சாதாரணமாகத் தங்க நிறத்தில் தோன்றும். ஸ்ரீவால்மீகி ராமாயணம் உத்தரகாண்டத்தில் மேற்கூறிய இப்பிராணிகளுக்கு எவ்வாறு தனித்தன்மை வாய்த்தது என்பதற்கான விளக்கம் உள்ளது.

   மருத்தன் என்ற அரசர் உசிரபீஜம் என்ற இடத்தில் ஒரு யாகம் நடத்தினார். தேவகுரு பிருகஸ்பதியின் சகோதரர் சம்வர்த்தர் யாகத்தை நடத்த உதவினார். அப்போது ராவணன் அங்கே வந்தான். அவனது அபரிமிதமான பலத்தாலும், பிரம்மாவினால் வழங்கப்பட்ட வரங்களாலும் அவனைக் கண்டு பயந்த தேவர்கள் தங்கள் சொந்த உருவங்களை மறைத்துக் கொண்டு வேறு உருவங்களை எடுத்தனர். இந்திரன் மயில் ஆனான்; யமன் காகம் ஆனான்; குபேரன் ஓணான் ஆனான்; வருணன் அன்னம் ஆனான். அப்போது ராவணன் ஓர் அசுத்தமான நாய் போல யாகம் நடந்த பஞ்சவடிக்குள் நுழைந்தான். ராவண: ப்ராவிசத் யக்ஞம் ஸாரமேய இவா சுசி: என்றார் வால்மீகி. மருத்தனிடம் ராவணன் சென்று அவரைத் தன்னுடன் போரிட அழைத்தான். மருத்தன் அவனை யார் என்று கேட்டார். ராவணன் திமிராக, உன் அறியாமையைக் கண்டு வியப்பாக உள்ளது. அரசே, நான் குபேரனின் சகோதரன். அவனை வென்று நான் இந்தப் புஷ்பக விமானத்தைக் கைப்பற்றினேன் என்றான். அரசனோ, ஓ! மூத்த சகோதரனையே போரில் வென்றவனா நீ? இதுவரை நான் உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. ஏ கொடுமதியானே! எனது அம்புகளால் உன்னை யமனிடம் அனுப்புகிறேன், பார் என்றார். மிகுந்த கோபத்துடன் வில்லேந்தி ராவணனை எதிர்க்கக் கிளம்பினார் மருத்தன். உடனே சம்வர்த்தர் சொன்னார்: அரசே! நான் கூறுவதைக் கேள். மகேஸ்வரனைக் குறித்துச் செய்யப்படும் இந்த யாகத்தை அரைகுறையாக விட்டால் உனது வம்சமே அழிந்துவிடும். யாக தீட்சை எடுத்துக் கொண்டவர் போர் புரிவது தகாது. கோபம் கொள்வதும் தகாது. போரில் வெற்றியடைவதும் நிச்சயமல்ல. மேலும் ராவணனைப் போரில் வெல்வது மிகவும் சிரமமானது. மருத்தன் அந்த அறிவுரையை ஏற்று, யாகம் செய்வதில் முனைந்தார். உடனே ராவணனின் மந்திரி சுகன், ராவணன் வென்றான் என்று கொக்கரிக்க, ராவணனும் அங்கிருந்து அகன்றான்.

   அவன் சென்ற பிறகு இந்திராதி தேவர்கள் தங்கள் சுய உருவங்களை அடைந்தார்கள். அப்போது இந்திரன் மயிலிடம், உனக்குப் பாம்புகளால் பயம் ஏற்படாது. உன் நீல நிறத்தோகையில் என் ஆயிரம் கண்கள் போன்றதொரு தோற்றம் ஏற்படும். மேகமூட்டத்தின்போது நீ தோகையை விரித்து அழகாக ஆடுவாய் என வரம் தந்தார். வரத்தைப் பெற்ற மயில் கூட்டங்கள் மகிழ்ந்தன. அங்கிருந்த காகத்திடம் யமன், காகமே! நீ எனக்கு மிகவும் திருப்தி தந்துள்ளாய். பிற உயிர்களைப் பாதிக்கும் நோய்கள் உன்னை வருத்தாது. உன்னை மக்களும் கொல்லமாட்டார்கள். நீ மாந்தர்களால் அளிக்கப்படும் உணவைச் சாப்பிட்டால், அதன் விளைவாக பித்ரு லோகத்திலுள்ள பித்ருக்கள் பசிப்பிணி நீங்குவார்கள் என்றார். அடுத்து, வருண பகவான் அன்னத்திடம், அன்னமே! இனி பூரண சந்திரனை ஒத்ததாக உனது மேனி விளங்கும். உன்னைக் காணும் மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கும். நல்ல வெண்மையான நுரையைப் போல தனித்தன்மையுடன் நீ விளங்குவாய். எனது சரீரமான நீருடன் நீ இணையும் போது உன் மகிழ்ச்சி ஈடு இணையற்றதாகும் என வரமளித்தார். (இந்த வரம் கிடைப்பதற்கு முன்பு அன்னப்பட்சிகள் வெள்ளை நிறமாக இல்லை. அவற்றின் இறக்கைகளின் நுனி கருமையாகவும், அவற்றின் மார்புப் புறம் கருமை கலந்த பழுப்பு நிறமாகவும் இருந்ததாம்.) ஒரு பாறையின் மேலிருந்த ஓணானிடம் குபேரன், ஓணானே, இனி உன் உனது கருமை நிறம் மாறிப் பொன் நிறமாகவும் மாறும் என்றார். இவ்வாறு தேவர்கள் வரம் அருளியதால் இப்பிராணிகளுக்கு தனித்தன்மை வாய்த்ததாக புராணங்கள் கூறுகின்றன.

   http://temple.dinamalar.com/news_detail.php?id=10813

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க