privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்நித்திக்காக வெட்கப்படும் 'இந்துக்களை' காப்பாற்ற வருகிறார் ஜெயமோகன்! பாகம் 3

நித்திக்காக வெட்கப்படும் ‘இந்துக்களை’ காப்பாற்ற வருகிறார் ஜெயமோகன்! பாகம் 3

-

சங்கர மடத்தின் பார்ப்புக்கு ஒரு நீதி! மனு தர்மத்தின் நியதி!

பார்ப்பனியத்தின் தலைமை பீடமாக திகழ்ந்த சங்கர மடத்தை அவாள்களும் சரி, அவாள்களின் அரசியல் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸூம் சரி என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தற்போது நித்தியானந்தா ஆதீனமாக மலர்ந்திருக்கும் நிலையில் யாரும் ஜெயேந்திரன் விவகாரத்தை எழுப்பி விடக்கூடாது என்பதில் தினமணி வைத்தி மாமா மிகவும் கவலைப்ப்படுவது அதற்கோர் சான்று. அதாவது ஜெயேந்திரன் மடாதிபதியாக இருக்கும் போதுதான் குற்றம் சாட்டப்பட்டாராம். அது நீதிமன்றத்தால் நிரூபணமாகாத நிலையில் அவர் பதவி விலக தேவையில்லையாம். ஆனால் நித்தியானந்தா பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் புதிதாக மடத்தின் தலைவராக வருவது சரியில்லை என்று புலம்புகிறது தினமணி. எனில் அவர் நித்தியானந்தா தியான பீடத்தின் தலையாக வலம் வருவதில் வைத்திக்கு உடன்பாடுதான். புதிய பதவிதான் பிரச்சினையாம்.

நெஞ்சு நிமிர்த்தி ” நீதான் குற்றவாளி” என்று சொல்ல முடியாத துர்பாக்கிய நிலைதான், “நித்தியானந்தா ஆதினத்திற்கு பொருத்தமானவர் அல்ல, மரபுகள் தேவைப்படாத சித்த மரபைச் சேர்ந்தவர்”, என்றெல்லாம் செத்துப்போகும் பாயிண்டுகளை வைத்து பேசுகிறார் வைத்தி மாமா. என்னதான் கவனமாக இருந்தாலும் மல்லாக்க படுத்து துப்பும் போது எச்சில் கீழேதானே விழவேண்டும்?

நித்திக்காக வெட்கப்படும் ‘இந்துக்களை’ காப்பாற்ற வருகிறார் ஜெயமோகன்!

ஜெயமோகன்
நோ, நோ! திஸ் நான்சென்ஸ் இஸ் நாட் ஒரிஜினல் ஆன்மீகம் என்கிறார் ஜெயமோகன்

கொலையே செய்தாலும் ஒரு பார்ப்பனருக்கு மரண தண்டனை இல்லை எனும் மனு தர்ம விதி ஜெயேந்திரன் விசயத்திலும் அப்பட்டமாக பின்பற்றப்படுகிறது. பார்ப்பனரல்லாத சாமியார்களின் லீலைகளை கண்டிக்கும் எவரும் சங்கர மடத்திற்கு மட்டும் அனிச்சை செயலாய் விலக்கு கொடுத்து விடுகிறார்கள். நித்தியானந்தாவின் படுக்கையறை ஆட்டம் நாறிய போது தனது இந்து பக்தர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக ஆன்மீகம் – போலி ஆன்மீகம் தொடரை ஜெயமோகன் எழுதியிருந்தார்.

ஆனால் செத்துப் போன சீனியர் சங்கராச்சாரியின் சாதித் திமிர், மொழித் திமிர், ஆணாதிக்க திமிர் எல்லாவற்றையும் கடந்து அவர் ஒரு கலாச்சாரக் காவலர் என்று கொண்டாடும் ஜெயமோகன் அந்தக் காவலர் நியமித்த ஜெயேந்திரனது குற்றங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இவர் வேறு, அவர் வேறு என்று ஒற்றை வரியில் கடந்து செல்ல முடியாது. பெருசின் உள்ளொளிதானே சிறுசின் ஞானத்தை கண்டுபிடித்து அரியணையில் ஏற்றியிருக்கிறது. பெருசு உயிரோடு இருக்கும் போது மட்டும் சிறிசு நல்லாத்தான் இருந்தார் என்ற வாதமெல்லாம் பூமாரம் போல திருப்பித் தாக்கும்.

நமது கேள்வி எளிமையானது. அதிகார, அரசியல் தரகு மையமாக மாறியதால் மட்டும் ஜெயேந்திரன் தவறு செய்து விடவில்லை. இந்த வாதத்தை நீட்டித்தால் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருமுன்னர் ஆர்.எஸ்.எஸ் கூட ஒழுக்கமாகத்தான் இருந்தது என்றும் சொல்லலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அரசியல் அதிகாரத்தை சுவைப்பதற்காக நெடுங்காலம் போராடிய இந்துமதவெறியர்கள் குறிப்பிட்ட காலத்தில் அதை பறித்தெடுக்கிறார்கள்.

ஒழுக்கத்தை வெறுமனே பாலியல் சார்ந்த தனிப்பட்ட ஒழுக்கமாக மட்டும் குறுக்குவதால் சமூகம் சார்ந்த பேரொழுக்கங்கள் மறைந்து கொள்கின்றன. கூடவே தனது ஆதிக்க பாசிசக் கொள்கையை நியாயப்படுத்தவும் செய்கின்றன. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டத்தை மதத்தால் சாதியால் மொழியால் ஒடுக்கும் கும்பல் பெண்ணாசை துறப்பு அல்லது தொடுப்பின் மூலம் தனது சமூக ஒழுக்கக் கேட்டை ஒழுக்கமாக சித்தரிக்கிறது.

ஜெயமோகன் போன்றோர் விழும் இடம் துல்லியமாக இதுதான். அந்த வகையில் பெரிய சங்கராச்சாரி மற்றும் ஆட்சிக்கு முந்தைய ஆர்.எஸ்.எஸ் கூட்டம் தன்னளவிலேயே உழைக்கும் மக்களுக்கு எதிரான பார்ப்பன பாசிசத்தை கொள்கையாகவும், மதமாகவும், சடங்காகவும் கொண்டிருந்ததார்கள். இந்த ஒடுக்குமுறை அரசியலை விடவா ஜெயேந்திரனது பாலியல் ஒழுக்கம் கீழானது? இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்கிறோம். ஒன்றின் வெளிப்பாடு மற்றதை இல்லை என்றோ உயர்ந்தது என்றோ ஆக்கிவிடாது. ஆயினும் இந்த எளிய உண்மையை ஜெயமோகன்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

மக்களுக்கான ஜனநாயகத்தை மறுப்பதால்தான் ஞானிகள், மடங்கள், அற்பவாத இலக்கியவாதிகளின் இருப்பு கருத்தாலும், நடைமுறையாலும் தனது வம்படியான மேல் இருப்பை தக்க வைத்துக் கொள்கிறது. அப்படித்தான் இவர்களது அகங்காரமே நீதிமன்றமாகவும், தன்னிலையே கேள்விக்கு அப்பாற்பட்டும், கருத்தே எதிர்க்கப்படக்கூடாததாகவும் தொழிற்படுகின்றன. அதனால் சமூகத்தின் பரந்துபட்ட செயல் துடிப்பில் வைத்து இவர்கள் எப்போதும் தங்களை விமரிசனம் செய்து கொள்ள மாட்டார்கள். ஆகவேதான் இத்தகைய ஞானிகளை நாம் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டுமே அன்றி நம்மை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பாமரத்தனம் என்று ஜெயமோகன் நீண்ட காலமாக ஓதுகிறார். பார்ப்பனியத் திமிரின் இலக்கிய சாட்சியாக அவர் நீடித்திருப்பதன் தத்துவம் இதுதான்.

சைவ ஆதீனங்கள் – பார்ப்பனியத்தின் பங்காளிகள்!

ஆக நித்தியானந்தாவை மட்டம் தட்டும் போக்கில் ஜெயேந்திரனை கண்டு கொள்ளாமல் விடுவதில் பார்ப்பனிய ஆதிக்கமும், அடிமைத்தனமும் நிச்சயமாக இருக்கிறது என்கிறோம். இதனால் சைவ ஆதீனங்கள் அனைத்தும் பார்ப்பனியத்தை எதிர்க்கிறது என்பதல்ல. சொல்லப் போனால் இவர்களும் பார்ப்பனியத்தின் பிரச்சார பீரங்கிகிகள்தான். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்க்கும் பார்ப்பன சிவாச்சாரியர்களுக்கு சைவ ஆதீனங்கள்தான் தோள் கொடுத்தார்கள். கருவறையில் தமிழ் மொழி கூடாது என்பதையும் இவர்கள்தான் முன்னின்று பேசினார்கள். அந்த வகையில் இவர்களது பார்ப்பனிய கிரைம் ரிகார்டு நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. இவர்களது கோவில்களில் கூட பார்ப்பனர்கள்தான் புரோகிதர்களாக உள்ளனர்.

பார்ப்பனியத்தின் சமூக அடக்குமுறைக்கு மாற்றாக வந்த சமண புத்த மதங்களை இரத்தத்தால் அழித்த வரலாற்றில் ஆதீனங்களுக்கும் இடமுண்டு. சமண துறவிகளை கழுவிலேற்றிக் கொன்ற திருஞான சம்பந்தர்தான் மதுரை ஆதீனத்தின் ஸ்தாபகராம். எனில் கொலைகார சம்பந்தரை விட குஷால் பேர்வழி நித்தியானந்தா எவ்வளவோ மேலில்லையா? அல்லது அந்த கொலைக்கும் இந்த மன்மதக் கலைக்கும் தொடர்பில்லையா? பெண்ணாசையை விட ஒரு முழு சமூகத்தையே ஆட்டிப்படைக்கும் ஆசை பேராசை இல்லையா?

ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு தேவைப்படும் உதவிகளையும் இந்த ஆதினங்கள் கண்ணும் கருத்துமாக செய்துதான் வருகின்றனர். குன்னக்குடி போன்ற ஒரிரு விதிவிலக்குகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பார்ப்பன ஆதிக்கத்தின் தளகர்த்தர்களாகத்தான் அனைத்து ஆதீனங்களும் இருக்கின்றனர். இங்கும் கூட சைவ வேளாளர் சாதிகளைச் சேர்ந்தோர் மட்டும்தான் தம்பிரான்களாகவும், ஆதீனமாகவும் வர முடியும். தற்போது நித்தியானந்தா விவகாரத்தில் மரபு என்ற பெயரில் இதைத்தான் எழுப்புகிறார்கள்.

நித்தியானந்தா-மதுரை ஆதீனம் மீட்புக் குழு
ஆதீனம்! தீர்ப்ப மாத்திச் சொல்லு! இப்படிக்கு, நெல்லைக்கண்ணன், அர்ஜூன் சம்பத், முருகன்ஜி , மதுரை ஆதீனம் மீட்புக் குழு!

சைவப் பிள்ளைதான் ஆதீனமென்றால், மற்றவர்கள் வேசி மக்களா?

அதாவது சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ செட்டியார் சாதிகளைச் சேர்ந்தோர்தான் ஆதினமாக வரமுடியுமாம். நித்தியானந்தா ஆற்காடு முதலியார் என்பதால் தகுதியில்லை என்கிறார்கள். அர்ஜூன் சம்பத் கும்பலோடு இணைந்திருக்கும் நெல்லைக் கண்ணன் போன்றோர் இதை ஒரு பெரிய நல்லொழுக்க விசயமாக திரும்பத் திரும்ப ஓதுகின்றனர். ஆனாலும் நித்தியானந்தா தொண்டை மண்டல முதலியார்தான், தகுதியுள்ளவர்தான் என்று எக்சிஸ்டிங் மதுரை ஆதினம் ஓதியபடியே வாதாடுகிறார்.

சங்கர மடத்திற்கு பார்ப்பனர்கள், சைவ ஆதீனங்களுக்கு சைவ வேளாளர்கள் என்பதெல்லாம் மரபோ மண்ணாங்கட்டியாகவோ இருக்கட்டும். இவையெல்லாம் மற்ற ‘இந்து’க்களை இழிவு படுத்துகிறது என்று எவருக்குமே தோன்றவில்லை ஏன்? பூணூல் பார்ப்பானும், விபூதி சைவப் பிள்ளையும்தான் ‘இந்து’க்களுக்கு மத குருக்களாக வர முடியும் என்றால் அங்கே மானமுள்ள ‘இந்து’வுக்கு என்ன வேலை? இந்து முன்னணியின் பார்ப்பனிய ஆதிக்கத்திற்காக பிரிந்து சென்றதாக கூறிக் கொள்ளும் இந்து மக்கள் கட்சி தற்போது அந்த ஆதிக்கத்தை சைவப் பிள்ளைக்கு மாற்றித் தரத் துடிப்பது ஏன்?

சக்கலியரும் சங்கராச்சாரியாகலாம், பறையரும் ஆதீனமாகலாம் என்று கேட்க வேண்டிய காலத்தில் மரபின் பெயரால் உழைக்கும் மக்களை இவர்கள் ஆதிக்கம் செய்யவே துடிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு துலக்கமான சான்று. நித்தியானந்தாவும் இந்த மரபை மீற விரும்பவில்லை. தானும் சைவ வேளாளர் பிரிவைச் சேர்ந்தவர்தான் என்று உறவினர்களை நிறுத்தியே கேட்கிறார். ஒரு வேளை அவர் சைவ வேளாளர் பிரிவுக்குள் வரவில்லை என்றாலும் மற்ற ஆதினங்கள் என்ன செய்ய முடியும்? சாதி குறித்த நிரூபிக்குமாறு ஒரு சிவில் வழக்கு போட்டால் அது கீழிருந்து சுப்ரீம் கோர்ட்டு போய் பைசல் ஆவதற்குள் நித்தியானந்தாவின் பேரனே ஆதீனமாகலாம். அல்லது நித்தியும் அவரது உறவினர்களும் சைவ வேளாளர்தான் என்று ஒரு சான்றிதழை பெறமுடியாதா என்ன?

இத்தகைய குற்றச்சாட்டுகளையெல்லாம் நித்தியானந்தா விரும்பவே செய்கிறார். பாலியல் தவிர்த்த மற்ற விவகாரங்களை பெரிது படுத்தப்படுமானால் அது அவருக்கு உதவியாகத்தான் இருக்குமென்பது தெரியும். நித்தியானந்தா மதுரை ஆதீனமாக நிலை பெற்று கார்ப்பரேட் நிறுவன உத்தியால் பிரபலமாக்கி விட்டார் என்றால் ஏனைய வவ்வால் புகழ் ஆதீனங்கள் கீர்த்தியை இழந்து விடுமென்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. இதை நித்தியானந்தாவே குறிப்பிடுவது சுவாரசியமான ஒன்று. இவர்களது குழாயடிச் சண்டைக்கு இப்படியும் ஒரு கோணமிருக்கிறது.

இந்நிலையில்தான் நித்தியை எதிர்க்கும் ஆதீனங்களும், அர்ஜூன் சம்பத் கும்பலும் மயிறுப் பிரச்சினையை மரபுப் பிரச்சினையாக மாற்றி சண்டமாருதம் செய்கிறார்கள். உண்மையில் இந்த மரபின் அடிப்படை என்ன?

– தொடரும்

_____________________________________________________

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. ட்ரைலர் பார்த்து மிகுந்த ஆர்வமாக இருந்தேன்
  செறிவு இல்லாமல் , தொங்கல் அஜித் படம் போல
  சலிப்புடன் சென்று கொண்டிருக்கிறது கட்டுரை பாகங்கள்

  நோக்கியா உதிரி பாகங்கள் ஆலையில் தொழிலாளிக்கு விபத்து ஏற்படல், டுபான்ட் எதிர்ப்பு போராட்டம் கிண்டி, ஈக்காடு தாங்கல் நிகழ்வு
  போன்ற கட்டுரைகள் எழுதிய நண்பர்கள் இப்போது வினவு குழுமத்தில் இல்லையா

  • ராம்ஜி, நேற்று உங்கள் பின்னூட்ட ட்ரைலர் பார்த்தது முதல் ஆர்வமாக இருந்தோம், இப்படி ஏமாற்றி விட்டீர்களே?
   ஆறு பாகத்தை படித்து விட்டு கிழிப்பீர்கள் என்று பார்த்தால்……………?

 2. // பெருசின் உள்ளொளிதானே சிறுசின் ஞானத்தை கண்டுபிடித்து அரியணையில் ஏற்றியிருக்கிறது. பெருசு உயிரோடு இருக்கும் போது மட்டும் சிறிசு நல்லாத்தான் இருந்தார் என்ற வாதமெல்லாம் பூமாரம் போல திருப்பித் தாக்கும். //

  சிறுசு மடத்தை விட்டு ஓடிய போதே விஜயேந்திராவை வாரிசாக பெரியவர் நியமித்தார். சிறுசு மீண்டும் வந்து சின்னஞ்சிறுசையும் மாற்றிவிட்டது. தவறு செய்தால் தெய்வமாக இருந்தாலும் தண்டனை அடைந்த புராணக்கதைகள் உள்ள இந்து மதத்தில் சிறுசின் தவறுகளுக்கு பெருசைத் தண்டிக்கமுடியாது..

  // எனில் கொலைகார சம்பந்தரை விட குஷால் பேர்வழி நித்தியானந்தா எவ்வளவோ மேலில்லையா? அல்லது அந்த கொலைக்கும் இந்த மன்மதக் கலைக்கும் தொடர்பில்லையா? பெண்ணாசையை விட ஒரு முழு சமூகத்தையே ஆட்டிப்படைக்கும் ஆசை பேராசை இல்லையா? //

  கொலையை போராட்ட வழிமுறையாக ஏற்றுக் கொண்ட மாவோயிஸ்ட்டுகள் நித்தி போன்ற களவொழுக்கம் உள்ள ஆசாமிகளை அவர்கள் மார்க்சீயம் பேசுகிறார்கள் என்பதற்காக, அதனால் என்ன கொலையே பண்ணும் போது இதெல்லாம் ஜுஜுபி என்று சேர்த்துக் கொண்டு, தலைவர்களாக்கி மகிழ்வார்களா என்பது சந்தேகமே..

  • அம்பி, தெளிவில்லாத உங்கள் பின்னூட்டத்தின் உட்பொருளை குத்துமதிப்பாக புரிந்து கொண்டு பதிலளிக்கிறோம். மாவோயிஸ்ட்டுகள் இந்த அரசு அமைப்பை தூக்கி எறிய வேண்டும் என்பதற்காக இரத்தம் சிந்தும் புரட்சியை பாதையாக மேற்கொண்டிருக்கிறார்கள். அதனால் போலீசு, இராணுவத்தை தற்காப்பு கருதி கொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் திருஞான சம்பந்தர் இறைவனை பாடுபவர், பக்திமான், சமயக் குரவர் தன்னையொத்த சமணர்களை ஏன் கொல்ல வேண்டும்?

   அடுத்து பெரிய சங்கராச்சாரி ஆணாதிக்கம், பெண்ண்டிமைத்தனம், தீண்டாமை, மொழித்துவேஷம் என்று அனைத்தையும் வெளிப்படையா ஆதரித்ததோடு பின்பற்றவும் செய்தார். அத்தகைய சமூக அமைப்பு நீடித்திருக்க வேண்டுமெனவும் விரும்பினார். இந்த கிரைம் ரிக்கார்டை விட ஜெயேந்திரன் கிரைம் ரிக்கார்டு அதிகம் என்று சொல்வதைத்தான் கட்டுரை விமரிசிக்கிறது. இருவரும் கிரிமினல்கள் என்கிறோம்.

   • திருஞான சம்பந்தரைவிட அதிக அகிம்சையை கடைபிடிக்க வேண்டிய சமணர்கள் அவரை தீயிட்டு கொல்ல முயன்றதாகவும், தோற்றவர்கள் கழுவேறவேண்டும் என்ற நிபந்தனையை சமணர்களே சின்னப்பயலைப் பார்த்து ஆணவத்துடன் விதித்ததாகவும் கூறப்படுகிறது. (இந்த கழுவேற்றம் பற்றி வேறொரு பதிவில் கூறியிருந்தேன்.. தேடிப்பார்க்கிறேன்..)

    சைவம் வன்முறையை அறவே தவிர்க்கவில்லை. ஆனால் அகிம்சை மார்க்கமான சமணம் வன்முறையை தவிர்க்கத் தவறியது. ஒழுக்கக்கேட்டையும், திணிக்கப் படும் வன்முறையையும் நீங்கள் மாவோயிஸ்டுக்கள் விடயத்தில் ஒப்பிடமுடியாதது போல் எனக்கும் நித்தி திருஞான சம்பந்தரைவிட பரவாயில்லை என்று கூறுவதை ஏற்கமுடியவில்லை.

    பெரிய சங்கராச்சாரியார் சமூக சீர்திருத்தவாதி இல்லை, மாறாக அவருடைய காலகட்டத்தின் சமூகநிலைக் கைதியாக இருந்தார், என்றாலும் தன்னை சுற்றியிருந்த கூட்டத்துக்கு நேர்மையாகவே ஆன்மீக வழி காட்டமுயன்றார் என்ற அளவில்தான் நோக்கமுடிகிறது.

    • சமணம், சைவம் அல்லது பார்ப்பனியத்திற்கும் நடந்த மோதலை வெறும் கருத்து, விவாதமாக பார்க்கிறீர்கள். சமணம் பார்ப்பனியத்தின் சமூக அமைப்புமுறையை, ஏற்றத்தாழ்வை ஏற்கவில்லை. இரண்டு மதங்களுக்கும் நடந்த மோதல் என்பது மக்களை ஆதிக்கம் செய்யும் பொருளியல், அரசியல் சமூக அமைப்போடு தொடர்புடையது. புத்த மதமும், சமண மதமும் பார்ப்பனியத்தால் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் அவை புராதான இனக்குழுவின் ஜனநாயகத்தை ஆதரித்தன. இந்திய வரலாறுநெடுகிலும் பார்ப்பனியத்தின் சட்டதிட்டங்களே மதமாகவும், சட்டமாகவும், புரணாமாகவும், கலையாகவும் இருந்தன.இதை நாம் விவாதிப்பது போன்ற அறிவு சார்ந்த விசயமாக மட்டும் பார்ப்பது பிழை.

     பெரிய சங்கராச்சாரியின் வாக்குமூலங்கள் பலவற்றிலும் பெண்களை இழிவுபடுத்துவது, தமிழை இழிவுபடுத்துவது, சூத்திரர்களை இழிவு படுத்துவது என்று ஏராளமிருக்கின்றன. இதை நியாயப்படுத்துவதைத்தான் அவர் ஆன்மீகம் என்ற பெயரில் செய்தார். அதை ஆதரிப்பது நாம் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். ஒருவேளை அவர் பெண்ணாசையை துறந்து வாழ்ந்தார் என்பதற்க்காக போற்றலாம் என்று கருதினால் அதுவும் பிழை. ஏனெனில் பெண்ணாசையை துறப்பது என்பது மனித சமூகத்தில் பேர்பாதியாக இருக்கும் பெண்களையும் இறுதியில் முழு மனித குலத்தையும் இழிவுபடுத்தும் ஆதிக்க கருத்தாகும்.

     • Adutha mokkai badhil,

      Samananmum Boudhamum Indiavula maarayaveilla, Athan kotpaadugalum vaazhkai neriyayum makkal etru kondargal,vegetarianism Indiavula thalayeduthathukke Samananmum Boudhamum periya kaaranam.

      Avarrin veezhchikku,athanudaya kuraipaadugale kaaranam.Anbe Sivam endra bodhanai nalladhu dhaan,aanal adhu ellam thangai vettaikku vantha arabu kudiraigal moolaikku ettavillai.

      Pesi theerka vendiya prachanayay, Theerthu pesa ninaithathal Jainism/Buddhism katam katam ho gaya.

      • பக்தா ஏன் நான் உருவாக்காத ஒரு மொழியில் எழுதிக்கொண்டிருக்கிறாய்? ஏற்கனவே தமிழை நீச பாஷை என சொல்லியதால் என்னை ஓடஓட விரட்டுகிறார்கள், நீ வேற ஏம்பா என்னைக் கொல்லுகிறாய். தொழில்நுட்பம் வளர்ந்த காலத்திலும் இப்படி அடம்பிடிப்பது அறிவீனம். மற்றிக்கொள் பக்தா!

     • // சமணம் பார்ப்பனியத்தின் சமூக அமைப்புமுறையை, ஏற்றத்தாழ்வை ஏற்கவில்லை. //

      நீங்கள் ஆசாரக் கோவையை படித்திருப்பீர்கள். சமணம் பார்ப்பனர்களை எதிர்த்திருக்கலாம். பார்ப்பனீயத்தை எதிர்த்ததா அல்லது வைதீக, சைவ, வைணவ சமயங்களுடன் போட்டியிட்டதா என்றும் ஆய்வு செய்யவேண்டும்.

      // இரண்டு மதங்களுக்கும் நடந்த மோதல் என்பது மக்களை ஆதிக்கம் செய்யும் பொருளியல், அரசியல் சமூக அமைப்போடு தொடர்புடையது. புத்த மதமும், சமண மதமும் பார்ப்பனியத்தால் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் அவை புராதான இனக்குழுவின் ஜனநாயகத்தை ஆதரித்தன. //

      ஆனால் பௌத்தமும், சமணமும், பேரரசர்கள், அரசர்கள், வியாபாரிகளின் ஆதரவுடன்தான் வளர்ந்து பரவ முடிந்தது என்பதையும் நோக்கினால் ஒரு காலகட்டத்தில் அம்மதங்களின் சனநாயக சார்பும் சமரசம் செய்யப்பட்டிருக்கிறதல்லவா.?!

      • சமண, புத்த மதங்களின் எழுச்சியும், பின்னர் அவற்றின் தோல்வி குறித்தும் விரிவாக எழுதுகிறோம். பார்ப்பனியம் என்பது அன்றைய இந்து மதங்களின் பிரிவுகளை உள்ளடக்கித்தான் பயன்படுத்துகிறோம்.

      • ஆசாரக்கோவையோ அல்லது மணிமேகலையோ எதை எடுத்தாலும் சமணம் போன்ற அவைதீக மரபுகள் அனைத்துமே அன்றைய வைதீக மரபுடன் நின்று வாதாடிதான் நிலைநிறுத்தின• அம்மதங்களில் சமணத்தை அன்றை வியாபாரிகள் ஆதரித்தனர். முகிழ்ந்துவந்த வணிக வர்க்கத்துக்கு எதிராக இருந்த நிலப்பிரபுத்துவ சமூகத்தின் ஆணிவேராக இருந்த வைதீக மரபுகளை சமணம் எதிர்த்து போர் புரிந்த்து. பௌத்த மதம் தன்னை இரண்டாக பிரித்துக் கொண்டது. மக்களுக்கான பௌத்தம் என்பது புதிதாக வந்த அரசுகளையும் சில காலங்களில் உலுக்கியது. அரசு சார் பௌத்தம் என்பது வேறு வடிவம் எடுத்த்து. அதற்கு காரணம் பௌத்தம் நிறுவனமயமாக்கப்பட்டதுதான்.

   • Thirugnanasambandar, Rendu kayyayum thooki kittu samana rowdigalal saavanum,athukkau appuram avarukku oru tyagi pattam kuduthuruvaanga.

    Appadi avaru senjirundha inaikki avara pathina historya ellam kuzhi thondi pothachu iruppanga,aal address,history all out.

   • வினவு சும்மா அள்ளி தெளிக்காத! தில்லை தீக்ஷித பிரிவினர்களை ‘தில்லை மூவாயிரவர்’ என்றே தமிழ் இலக்கியங்கள் அழைகின்றன! அதற்காக தீட்சிதர்கள் மூவாயிரம் பேர்களா இருக்கிறார்கள்? அதை போன்றே நீ கரித்து கொட்டும் பார்ப்பனர்களில் ஸ்மார்த்த மரபினர்களில் ( ஸ்ரீ காஞ்சி மடம் இந்த பிரிவினரை சேர்ந்தது) அஷ்டசஹச்ரம் என்ற பிரிவினர் உண்டு! இவர்களை பழந்தமிழ் நூல்கள் ‘எண்ணாயிரவர்’ என்று அழைக்கின்றன! அனால் இவர்கள் எண்ணூறு பேர் கூட கிடையாது! இந்த எண்ணாயிரம் என்பது இவர்கள் அனுஷ்டித வேத சாகையின் மந்திர தொகுப்பாகும்! இதை போலவே சமணர்களில் ‘அருவாயிறவர்’ என்பது அருகனை தொழும் குலத்தார் ஆனோர், இவர்களே திருஞானசம்பந்த பெருமானிடம் தோற்ற காலத்தே, இவர்களில் சிலர் ( 6 அல்லது 7 ) நானிட்டு கொண்டதாய் வரலாறு! (சிலர் கழுவேற்றம் கொண்டனர் என்றும் கூறுவர்). இது தவிர்த்து ஆறாயிரம் பேரை அண்ணல் கொன்றார் என்று கூறுவது அறிவிலித்தனம்! இதற்கான பாடலையும் கீழே வழங்கி உள்ளேன் ( http://www.shaivam.org/nachamb6.html பாடல் ‘அங்கது கேட்டும்…’! ஆறாயிரம் பேரை கொல்வது அன்பே உரு கொண்ட சைவ சமயத்தின் கனவிலும் நடக்க ஒவ்வாதது! என்ன செய்ய 7 கோடி மக்களை கொன்று மதம் பரப்பிய பாவடைக்குள்ளும் தினம் தினம் கோடி கணக்கில் அழிவில் ஈடு படும் தாடிக்குள்ளும் ஒளிந்து கொண்டு விஷம் கக்கும் வினாவுக்கு இது புரியாதது ஆச்சர்யமில்லை!

    • @சத்யன்..

     அரசன் தண்டனை கொடுப்பதற்கும், KGB வைத்து தீர்த்து கட்டுவதற்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரிய போவதில்லை.. சமணர்கள், திருஞானசம்பந்தரை தீர்த்து கட்ட முயன்ற சதிச்செயல்கள் பற்றியும் வினவு வாய் திறக்க போவதில்லை.

   • காஞ்சி மஹா சுவாமிகள் ஒரு தெய்வ பிறவி! என்ன செய்ய பன்றிகள் பசுவும் கூட மலம் திங்கும் என்று நினைத்து விடுகின்றன! வினவு அகத்தின் அழகு உன் முகத்தில் தெரிகிறது!

 3. இக்கட்டுரை தொடர் சிறப்பாக உள்ளது. ஊடகங்கள் நித்தியானந்தா குறித்து சொல்வதை தாண்டி வேறென்ன இப்பிரச்சினையில் கவனிக்க உள்ளது எனப் பலரும் கடந்து போகின்றனர். ‘புதிய தலைமுறை’, ‘விஜய் டி.வி’ கோபிநாத் போன்றோரால் கவனம் பெற்று அறிவுஜீவிகள் ஆன சிலரும் நித்தியை பற்றி மட்டுமே மலைத்து பேசுகின்றனர். இந்துத்துவம், இந்து மதம் குறித்து பேச மறுக்கின்றனர். ஸ்ரீ இராமனின் பாலியல் ஒழுக்கத்தை விதந்தோடும் ஒரு பக்தன் கண்ணனின் லீலைகளையும் ரசிக்கிறான். இது முரண் போன்று தெரியும் ஒத்திசைவு. குஜராத்தில் இசுலாமிய பெண்களின் கற்பை சூறையாடவும், அதனை வெட்கமின்றி நியாயப்படுத்தவும் தயார்படுத்தும் ஆன்மீக பலம் இந்த முரணின் ஒத்திசைவு தான். அசலான துறவிகளின் பண்பு கொண்டோர் இங்கு யாருமில்லை. சமண, பவுத்த துறவிகள் நெடும் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார்கள். அவர்கள் செல்லும் போது வழியில் ஓய்வெடுக்க குகைகளில் [பின்பு கோயில்களாக மாற்றம் பெற்றது] தங்கினர். அனால் நம் காலத்தின் துறவிகள் மக்களை தமது இருப்பிடம் நோக்கி அழைக்கிறார்கள். மக்களை சென்று சந்திப்பதில்லை. இது பெரும் ஊழல் முறைகேடுகளுக்கு வழி வகுக்கிறது. இக்கட்டுரை இன்னும் ஆழமாக ஒரு ஆய்வெழுத்தின் தரத்துடன் இப்பிரச்சினையிநூடாக இந்து மத்தத்தின் உள்ளக்கிடக்கையை விசாரித்து சென்றால் சிறப்பாக இருக்கும்.

 4. “சைசவப்” பிள்ளைதான் ஆதீனமென்றால், மற்றவர்கள் வேசி மக்களா?

  “சைசவப்” என்று எழுதியிருக்கிறீர்கள்! தவறா? இல்லை வேண்டுமென்றே planted one-ஆ
  இப்படி மாற்றி விடுங்கள்…சை! – சவப் பிள்ளை என்று!

 5. செத்துப்போன சூப்பர் சீனியர் வாழை இலையில் கக்கா
  போனதன் மூலம் இந்த உலகிற்கு ஒரு விஷயத்தை
  தெளிவுபடுத்தினார்.நீ சாப்பிடுற இடம் நான் பேளுற
  இடத்துக்கு சமம்.
  பாப்பானுங்க யாரும் நாங்களும் வாழை
  இலையில்தான் சாப்பிடுறோம்னு கூவாதீங்க.
  பெரியவாளோட கக்காவ கூட நீங்க சாப்பிடுவீங்கன்னு
  எங்களுக்கு தெரியும்.

 6. What becomes clear is that the only mutts to survive after all this modern era is only the Shringeri mutt of South India.

  Saiva Siddhandham is dead,Kanchi Kama Koti is dead but Advaita Vedantam is still around and strong as ever.

  Tamizh people should drop all these confusing ideologies and join shringeri mutt.

  • சிருங்கேரி பக்தர்களான பா.ஜ.க எம்.எல்.ஏக்கள்தான் சட்டசபையில் பிட்டு படம் பார்த்தார்கள். சிருங்கேரி பக்தரான எடியூரப்பதான் ஊழல் செய்து சிறை சென்றார். சிருங்கேரி பக்தர்களான ரெட்டி சகோதரர்கள்தான் கனிம வளத்தை ஆட்டையைப் போட்டு நாட்டுச் சொத்தை திருடினார்கள். இது போக சிருங்கேரி மடத்திற்கு சொந்தமான நிலங்களில் உழைத்து அதன் வருமானத்திற்கு காரணமாக இருப்பவர்கள் சூத்திர பஞ்சம விவசாயிகள். அவர்களது உழைப்பைத் திருடியதால்தான் சிருங்கேரி சங்கராச்சாரி மூன்று வேளையும் மொக்கிவிட்டு அத்வதைத்தை பினாத்துகிறார். இப்போது சொல்லுங்கள், நீங்கள் சிருங்கேரி பக்தர் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறீர்களா?

   • Appadiya,

    Appadi Paatha thappu panravungaa ellarodaya nambikkayayum ozhikkanume?

    Franceula socialist leader Dominique Strauss Kahn roomservice ponna kayya pudichu izhukkuraru,Stalin Caucuss Statesa ellam pottu thallitaru, Che Guevara marandhu poi edho oru appavi Cuban officera suttutaru,Brezhnev Aghanistana pottal kaada maathitarru,

    Yen naama ellam Communisma kuzhi thondi puthaichidalame?

    Bhaktannu sollikiravan aayiram thappu pannuvan,Athu Bhaktanin veeizhchiye thavira Siddhandhathin tholvi kedayathu.

    Idhu maadhiri sodhava badhil sollama,unmayya othukkunga.

  • //Subramanian
   personally,i or my family have no allegiance to kanchi mutt at all.we are aligned to shringeri,always.which i think is pretty good and much more powerful than kanchi.//
   இது சுப்ரமணியாக இருக்கும்போது போட்ட பின்னுட்டம்.

   //harikumar
   What becomes clear is that the only mutts to survive after all this modern era is only the Shringeri mutt of South India.

   Saiva Siddhandham is dead,Kanchi Kama Koti is dead but Advaita Vedantam is still around and strong as ever.

   Tamizh people should drop all these confusing ideologies and join shringeri mutt.//
   இது கரிகுமாராக மாறிய பின் போட்ட பின்னுட்டம்.
   பரவாஇல்லை பேரு மாறினாலும் மடத்தை மாற்றாமல் இருப்பதுக்கு பாராட்டுகள்

   • Aduthu enna,avanukkum kai irukku,ivanukkum kai irukku.Avanukkum keyboard irukku,mouse irukku,ivan kittayum irukku,adhu sivaramakrishnan maadhiri illada sivaramakrishnanane thaan.

    • அய்யோ சுப்பு உன் ரோதனை தாங்க முடியல. உனக்கு தமிழ்ல டைப் அடிக்க முடியாதுன்னு சொல்றதுலாம் சும்மா உவ்வே. நீ எழுதுறத ப்லரும் படிக்கக் கூடாதுன்னுதான் இப்படி எழுதுறே. ஆங்கில எழுத்து amma அப்புடின்னு அடிச்சா அம்மான்னு தமிழல வரப்போகுது. இதுக்கூட தெரியாமலா நீ இருப்ப. ஏற்கனவே வினவ படிச்சு படிச்சே கண் வலிக்குது நீவேற தமிலிங்கீஸ்ல அடிச்சு கொல்றியே

 7. “சக்கலியரும் சங்கராச்சாரியாகலாம், பறையரும் ஆதீனமாகலாம் என்று கேட்க வேண்டிய காலத்தில் மரபின் பெயரால் உழைக்கும் மக்களை இவர்கள் ஆதிக்கம் செய்யவே துடிக்கிறார்கள் ”

  உழைக்கும் மக்களை இழிவு படுத்துவதற்காக பார்ப்பீணியம் பயன்படுத்திய சொற்களை வினவும் பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது.

  • சக்கிலியர், பறையர் போன்ற சொற்களை பார்ப்பனீயம் உருவாக்கவில்லை.. அந்தச் சொற்கள் பார்ப்பனீயத்தால் இழிவாக பயன்படுத்தப் பட்டதாலேயே அவைகள் இழிவானவை என்று கூறிவிடமுடியுமா..?

   ஐரோப்பியர் வருகைக்கு முன் தோல்வினைப் பொருட்கள் செய்வதில் திறமிக்கவர்களாக சக்கிலியர் இருந்து வந்திருக்கின்றனர். போட்டி காரணமாக பின்னர் அவர்கள் அடைந்த தாழ்வுக்கு சமூக,பொருளாதர சூழலும் ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கிறது.

   பறையர்கள் தமிழகத்தின் தொல்குடிகள். துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை என்ற மாங்குடி மருதனாரின் புறநானூற்றுச் செய்யுளும், வலங்கைச் சாதிகளில் அரசு அதிகாரச் சாதிகளான பார்ப்பன,வேளாளச் சாதிகளுடன் பறையர்களும் இணந்து இருந்து வரி வசூல், நில ஆவண முறைப்படுத்தல் போன்றவற்றில் ஈடுபடும் அளவுக்கு கல்வியறிவுள்ளவர்களாகவும், மருத்துவம், வானியல் போன்ற துறைகளில் ஞானமிக்கவர்களாகவும் இருந்து வந்துள்ளதை பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சமீப 2,3 நூற்றாண்டுகளாகவே அவர்களின் தாழ்ச்சி ஏற்பட்டிருக்கக் கூடும்.

   அதைப் போலவே தேவேந்திர குல மக்களுக்கு பள்ளர்கள் என்ற பெயரே சில நூற்றாண்டுகாலத்திற்கு முன்புதான் திடீரெனத் தோன்றியது என்றும் ஆய்வாளர்கள் எழுதுகின்றனர்.

   தமிழக வரலாறு மீளாய்வு, மேலாய்வுகளுக்கு உட்படுத்தப் பட்டால் பல விவரங்கள் தெளிவாகும்.

 8. நித்திய சைதன்யாவின் மடம் பற்றி ‘தன்னிலை’ விளக்கம் அளித்து விட்டார் ஜெயமோகன். ஆதாரத்துக்கு விக்கிபீடியாவை படித்திருக்க வேண்டும் என்றும் பரிந்துரை அளித்திருக்கிறார்.

  ஜெயமோகன் சமீப காலமாக நிறைய பல்ப் வாங்கி வருகிறார்.

  முதலில் காந்தியை ஓஷோ கேவலமாக பேசியிருப்பதை முன்னிட்டு வைத்து ஓஷோவை விமர்சித்து எழுதப் போக அதற்கு நிறைய எதிர்ப்புக் கடிதங்கள். தொடர்ந்து நீண்ட தன்னிலை விளக்கக் கட்டுரைத் தொடர்கள்.

  அடுத்ததாக இந்திய ராணுவம் இலங்கையில் செய்த குற்றங்களை பூசி மெழுக முயற்சித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதங்கள்.

  இந்த இரண்டுக்கும் முன்பே காந்தி மடாதிபதி யாரையும் சந்திக்கவில்லை என்று எழுதி தொடர்ந்து பலவிதமான மடாதிபதிகளை காந்தி சந்தித்தது பற்றிய ஆதாரங்கள், அவற்றுக்கான சமாதானங்கள்.

  இவற்றில் மட்டையடியாக தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க முடியாததற்கு காரணம் ஓஷோ பக்தர்களும் வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்களும் பார்ப்பனீய தமிழர்களும் ஜெயமோகனின் புத்தகங்களுக்கு முக்கிய வாசகர்களாக இருக்கும் போது அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்பதாக இருக்குமோ?

  எப்படியிருந்தாலும் இந்து ஞானமரபின் உள்ளொளியில் எழுதிக் குவிக்கும் ‘கட்டு’ரைகள் நிதர்சன உலகின் ஆதாரங்களின் முன்பு அடிபட்டு போவது உடனடியாகவோ கொஞ்சம் தாமதமாகவோ நடக்க வேண்டியதுதான். பேசாமல் கதை புக்கு எழுத்தாளராகவே இருந்து விட்டு போவதுதான் அவருக்கு பாதுகாப்பானது.

  • He never got any bulb. He encourages open discussion and never sidesteps any of the confrontational questions.There is a lot you guys can learn from him.

   He has given proper evidences about Gandhiji meeting Chandrasekarar and made proepr clarifications.

   He takes his independent point of view rather than siding with the majority.

 9. தன் வீட்டுப் பெண்ணே மடத்தில் மல்லாந்தாலும், வெளியில் தெரிந்தால் மடாதிபதிக்கும், மடத்திற்கும் பெயர் கெட்டுவிடும் என்று வெளியில் சொல்லாமல் மறைக்கக் கூடிய மனப்பாங்கு தான் இந்த பின்னூட்டங்களைப் படிக்கும் போது தெரிகிறது. இவர்களை க்ழுவில் ஏற்றினாலும், இவர்கள் தறி கெட்ட மதத்திற்காககவே சாவார்களேயொழிய உண்மையை மட்டும் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.

  நித்தி, நீ பெயருக்கேற்றவாறே நித்தம் நித்தம் ஆனந்தமாகவே இரு. உனக்கு சப்போர்ட் செய்வதற்கு இந்து மதம் என்ற ஒரே காரணத்திற்காக இங்கு ஆட்கள் காத்திருக்கிறார்கள்.

 10. சமணர்கள் அறிவியல் ரீதியாக வாதம் புரிந்தார்கள். மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்கள். அவர்கள் போய் அனல்வாதம், புனல்வாதம் என்று அதாவது ஓலைச் சுவடுகளை நெருப்பில் இட்டும் (அனல்வாதம்), ஓலைச்சுவடுகளை ஓடும் தண்ணீரில் இட்டும் (புனல்வாதம்) போன்ற அறிவியலுக்கு ஒப்பாத வாதங்களை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள் என்று கரடி விடுகிறார்கள் பார்ப்புகள். மேலும் திருஞானசம்பந்தர் கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்கரசியைக் காமுகித்து அதன் மூலம் மன்னுக்கு விடம் வைத்து கொடுத்து, அதனை சமண முனிவர்களின் சித்த வைத்தியத்தால் நீக்க முடியுமா வென்று சவால்விட்டார்கள். நேர்மையான சமணர்கள் மன்னருக்கு கொடுக்கப்பட்டது விடம் என்று சொல்லியும், திருட்டு சம்பந்தன் தந்த திருநீறில் வைக்கப்பட்ட முறிவு மருந்தைக் கொண்ட

  • ஆதவா பாவம் சேக்கிழார், அவர விட்ரு! உன் காம நெடி அடிக்கும் கற்பனையை அப்படியே கொஞ்சம் மேற்குக்கு திருப்பு! நிறைய காம ரசம் சொட்டும் கதைகளை புனிதமாக காணலாம்! சைவம் பாவம் அன்பு ஒன்றையே அடிப்படையை கொண்டது!

 11. (இரண்டாம் பாகம்) கொண்டு மன்னன் மதியை மயக்கி, 8000 சமணர்களை ஆயிரக்கணக்கான சமணர்களை (குழந்தைகள் பெண்கள் என கழுவிலேற்றினாமன். சமணப் பெண்களை கற்பழிக்கும் திருவுள்ளம் வேண்டும் சிவனிடமே வயாக்ரா கேட்டு சம்பந்தன் இதனைப் பதிவு செய்துள்ளான். அதற்கு பதிலடியாக சமணர்கள் சம்பந்தரை ஒரு 13 வயது சிறுமியோடு திருமணம் செய்யப்போண போது, மண்டபத்தோடு கொளுத்தினார்கள். ஆனால் மீசையில் மண் ஒட்டாத பார்ப்பான், ஜோதியில் ஐக்கியம் என்று கரடி விடுகின்றார்கள். அருணன் எழுதிய நூலில் இது விரிவாக ஆதாரங்களோடு விளக்கப்பட்டுள்ளது.

  • 16 வயதுப் பையனை கொளுத்தும் அளவுக்கு சமணர்கள் அகிம்சையைப் பின்பற்றினார்களா என்று கூறமுடியாவிட்டாலும், ”பாண்டியராணியுடன் தொடுப்பு வைத்த சிறுவன்” போன்ற கதை வசனங்களை எழுதியாவது சைவத்தை அசிங்கப்படுத்தி அழிக்க நினைக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது புரிகிறது..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க