privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!

ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!

-

ரூபாய் வீழ்ச்சி : வல்லரசுக் கனவுக்குச் சங்கு !

பாதாளத்தை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது ரூபாயின் மதிப்பு. வளர்ச்சி, வல்லரசு என்ற வெற்று ஜம்பங்களையும், முறுக்கேற்றிவிடப்பட்ட முட்டாள்தனங்களையும் நிலை தடுமாற வைத்திருக்கிறது இந்த வீழ்ச்சி. டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கடந்த 7 மாதங்களில் மட்டுமே 25% வீழ்ச்சியடைந்து, 56க்கும் 57க்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கிரீஸின் நிலைகுலைவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடியும்தான் ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணமென்றும், ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி ஜப்பானும் நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னேறினால்தான், இந்தியாவும் மீளமுடியும் என்றும் கூறியிருக்கிறார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.  இந்தியாவின் எதிர்காலம் குறித்து இதைவிட நம்பகமானதொரு விளக்கத்தை நாம் கிளி ஜோசியக்காரனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளமுடியும்.

சர்வதேச நிதிமூலதனம் ஐரோப்பிய நெருக்கடியின் காரணமாக  டாலரைத் தஞ்சமடைகிறது. இதன் காரணமாக டாலருக்கான தேவை அதிகரித்து உலகளவில் அதன் மதிப்பு உயர்வதென்பது, ரூபாயின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று. ஆனால், அது மட்டுமே காரணமல்ல. இருந்த போதிலும், பஞ்சத்தைப் பயன்படுத்தி மக்களைச் சூறையாடும் வணிகனைப் போல, இந்தியாவைச் சூறையாடுவதற்கான இன்னொரு வாய்ப்பாக இந்த சர்வதேச நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் ஏகாதிபத்திய முதலாளிகள்.

“நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைத்து டாலர் கையிருப்பை அதிகமாக்கு, வரி வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைக்க மானியங்களை வெட்டு, வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பொருளாதார சீர்திருத்தங்களை முடுக்கி விடு  இல்லையேல் இந்தியப் பொருளாதாரம் குறித்த எமது மதிப்பீட்டை (Sovereign Credit Rating) கீழிறக்க வேண்டியிருக்கும்” என்று சர்வதேச தரநிர்ணய நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்டு புவர் இந்திய அரசை எச்சரித்திருக்கிறது.

இந்த எச்சரிக்கையின் விளைவுதான் தற்போதைய பெட்ரோல் விலையேற்றம். பிற துறைகளிலான மானிய வெட்டுகள் இனித் தொடங்கும். தனியார்மய-தாராளமய நடவடிக்கைகளைப் பொருத்தவரை, “வங்கி, காப்பீடு மற்றும் பென்சன் நிதி தனியார்மயம் தொடர்பான நிதிச் சீர்திருத்த மசோதாக்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விடும்” என்று அமெரிக்க நிதித்துறை செயலருக்கு வாக்களித்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, டீசல்,எரிவாயு மானியங்களை முற்றாக வெட்டுவது போன்றவற்றை ஆறு மாதங்களில் முடித்து விடுவதாகக் கூறியிருக்கிறார் நிதித்துறை ஆலோசகர் கௌசிக் பாசு. அந்நிய முதலீட்டாளர்களுக்கான சலுகைகளை அதிகரிப்பது, மக்கள் எதிர்ப்பால் தாமதப்படுத்தப்படும் சுரங்கங்கள், தொழிற்சாலைகள் போன்ற திட்டங்களை அதிரடியாக முடுக்கிவிடுவது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் டாலர் முதலீட்டைக் கவர்ந்திழுக்கச் சொல்கிறார்கள் இந்தியத் தரகு முதலாளிகள். சர்வதேச நிதி நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் டாலர் முதலீட்டைக் கவர்ந்து, அதன் மூலம் ரூபாயின் மதிப்பை உயர்த்திக் கொள்வதுதான் இந்த அரசின் நோக்கமேயொழிய, இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெறுவது அல்ல.  இப்பொருளாதாரக் கொள்கையின் அரசியல் மொழிபெயர்ப்புதான் அமெரிக்காவின் காலை நக்கி வல்லரசாவது என்ற கனவு.

பெட்ரோல், மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி சராசரி இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தினால்தான், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுதான் ஏகாதிபத்திய மூலதனம் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கை. அதன் ஆலோசனைப்படி கிரீஸ் அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் அந்நாட்டைப் படுகுழியில் வீழ்த்தின. இந்தியாவும் அதே படுகுழியை நோக்கித்தான் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்த உண்மை சராசரி ஐ.பி.எல். இந்தியர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, என்.ஆர்.ஐ இந்தியர்களுக்குப் புரிந்திருக்கிறது. அவர்கள் இந்திய வங்கிகளில் போட்டிருக்கும் டாலர் முதலீடுகளுக்குக் கூடுதல் வட்டி தருவதாக  அரசு ஆசை காட்டியும் மயங்காமல், தமது முதலீடுகளை அமெரிக்காவுக்கு கொண்டு செல்கிறார்கள் இந்த இந்தியர்கள். நாட்டை நெருங்கிவரும் அபாயத்தினை அறிவிக்கின்ற எச்சரிக்கைச் சங்காக இதை எடுத்துக் கொள்ளலாம். ‘வல்லரசுக் கனவுக்கு சங்கு’ என்றும் இதனை விளங்கிக் கொள்ளலாம்.

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. ஒரு மேள சவுண்டையும் சேத்து விட்டிருந்தீங்கன்னா ரொம்ப நல்லா இருந்திருக்கும்.

  2. NRIs இந்தியாவுல முதலீடு செய்யலன்னு யாரு சொன்ன. க்ரீசஐக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். அகலக்கால் வெச்ச underwearu கிழிஞ்சிரும்.

    அதான் கிரீசுக்கு நடந்த உண்மை. வெளிய கடன் வாங்கி நாற்காலிய சூடுகுரவுங்கக்கு எல்லாம் அதிக சம்பளம்,ஊக்க தொகை, லொட்டு லொசுக்கு எல்லாம் குட்ததுனால தான் இந்த பிரச்சினையே.

    இந்தியாவுலயும் மானியத்த எல்லாம் கொறச்சு நாலா ஒழுங்கு படுதுன சரியாய் வரும். கடன திருப்பி குடுக்கலன கடன்காரன் வீடு வாசல்ல நிக்க தான் செய்வான்,அப்புறம் குத்துது கொடயுதுன்ன என்ன செய்ய.

    பெட்ரோல் வேலைய எதுனா வெட்டி பந்தாவுக்காக கார்,பைக் வாங்குற ஆளு கொரைவான். ஒரே பிரச்சனை food inflation , அதா மட்டும் solve பண்ணியசுன்ன மதப்படி வெட்டி செலவு செய்றவன் எல்லாம் கோரஞ்சிருவான்.

    வேலையே செய்யாம govta மொட்டை அடிக்கிற அதிகாரி, வேலை செய்யாம OB அடிக்கிற தொழிலாளி, ரேஷன் அரிசிய பதுக்கி கடத்துற கிரௌபு இவுங்க எல்லாரும் தான் இத பத்தி கவலை படனும்.

    • மான்யத்த கொறச்சா உருப்படுமா இல்ல ஊழல கொறச்ச உருப்படுமான்னு பூவா தலையா போட்டு சொல்லு.

    • Mr Hari kumar

      if government takes loan for the welfare of common people like u AND ME we can support govt is taking loan for protecting big industrialist likr relliance/tata etc and they are running government

      just if today govt make some law against corporates then they will go
      so understand the problem

      vinavu is expalaining about 95% problem creatures and root cause of all this issue

      u r telling abt only 5% issue

      please undestand

      • There is nothing wrong if Industralists like Tata,Birla or Reliance get significant power and benefit in decisions,the idea should be not to let them rule everything.

        Ultimately someone needs to have the power to make decisions and it is important that the responsible and right person get the power.

        Otherwise we cannot live in this world taking everyone else out,how ever right one might be the odd person never survives.This is the law of the world.

        So,one needs to do tactical survival in the short run,The idea again is the poorest man in the society should atleast have his stomach full and mind reassured that his health and life will be decent.

        We just need to achieve that,no use of all this worker’s fight and all.

  3. Hi Vinavu,

    I don’t know if u have already done this, Below is a famous malayalam communist song if possible please translate and publish..

    chora veena mannil ninnuyarnnu vanna poomaram
    chethanayil nooru nooru pookkalaai polikkave
    nokkuvin saghaakkale nammal vanna veedhiyil
    aayirangal chora kondezhuthi vaccha vaakkukal

    moorchayulloru aayudhangalalla porin aashrayam
    cherchayulla maanasangal thanneyaan athorkkanam
    ormakal marichidathe kaakkanam karuthinaai
    kaarirumbile thurumbu maaikkanam vyayathinaai

    nattu kannu nattu naam valarthiya vilakale
    konnu koythu kondu poya janmikal charithramaai
    swantha jeevitham bali koduthu poyi maanushar
    poradichu kodipidichu nediyathu ee mochanam

    smaarakam thurannu varum veeru konda vaakkukal
    chodhyamaayi vannalachu ningal kaalidaariyo
    raktha saakshikalkku janmamekiya manassukal
    kannu neerin chilludanja kaazhchayaai thakarnnuvo

    pokuvaan namukku ere dhooramundu athorkkuvin
    vazhipizhachu poyidathe mizhi thelichu nokkuvin
    neru neridaan karuthu nedanam niraashayil
    veenidaathe nerinaai poruthuvaan kuthikkanam

    naleyennathilla nammal innu thanne nedanam
    naal vazhiyilennum amara gathakal pirakkanam
    samathvam ennoru aashayam marikkukilla bhoomiyil
    namukku swapnamonnu thanne annum innu mennume
    samathvam ennoru aashayam marikkukilla bhoomiyil
    namukku swapnamonnu thanne
    annum innu mennume

  4. வழக்கம் போல அரை வேக்காட்டுதனமான கட்டுரை.

    //பெட்ரோல், மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி சராசரி இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தினால்தான், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுதான் ஏகாதிபத்திய மூலதனம் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கை.///

    சிரிக்கதான் முடிகிறது. 30 வருடங்களுக்கு முன்பும் இதே டைலாக்கை தான் மார்க்சியர்கள் பேசினார்கள். இந்த ‘ஏகாதிபத்திய மூலதனம்’ அன்று இந்தியாவிற்க்குள் நுழைய பெரும் தடை. ஆனால் அன்று இருந்த சராசரி இந்தியனின் வாழ்க்கை தரத்தை இன்று உள்ள நிலையோடு தரவுகளுடன் ஒப்பிட்டாலே உண்மை விளங்கும். பெட்ரோல், மின் கட்டனங்களை அவ்வப்போது உயர்த்த அந்நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் இருந்திருந்தால், படிப்படியாக விலை உயர்வு அல்லது குறைப்பு நிகழ்ந்து இத்தனை கடுமையான உயர்வு இன்று தேவைபட்டிருக்காது. காய்கறி விலைகள் ஏறி இறங்குவதற்க்கு மக்கள் பழகிவிட்டது போல், இதற்க்கும் பழகியிருப்பார்கள். முன்பு, அதாவது 1982 வரை சிமண்ட் விலை இப்படிதான் கடுமையன கட்டுபாட்டில் இருந்தால், கடுமையான தட்டுபாடு, கள்ள சந்தை மற்றும் பற்றாகுறை மற்றும் கடும் விலை உயர்வ்கள். இன்று அவை பற்றி யாருக்கும் தெரியாது. சொன்னாலும் புரியாது.

    1991 இல் இதை விட படு மோசமான, திவால் நிலையில் இருந்தோம். ஏகாதிபத்திய முதலீடுகளின் ஆலோசனைகளை கேட்டு தான் மீண்டு வந்தோம். அன்று உங்க கையில ஆட்சியை கொடுத்து சமாளிக்க சொல்லியிருக்க வேண்டும். அப்ப தெரிந்திருக்கும் விளைவுகள்..

    /// அதன் ஆலோசனைப்படி கிரீஸ் அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் அந்நாட்டைப் படுகுழியில் வீழ்த்தின. ///

    :))) என்னே உங்க புரிதல். மிக எளிமையாக விளக்க முயல்கிறேன். வரவுக்கு மேல் செலவு செய்தால் திவால் தான் விளைவு. இது தனி நபர்கள், கம்பெனிகள், நாடுகள் என்று அனைவருக்கும் பொருந்தும் அடிப்படை பொருளாதார விதி. அய்ரோப்பிய நாடுகள் பலவும் (ஜெர்மனி விதிவிலக்கு) பல ஆண்டுகளுகாக இப்படி இஸ்டத்துக்கு செலவு செய்து பழகியதன் நிகர விளைவு இது. மேலும் யூரோ என்ற பொது கரன்சியை உருவாக்கியதும் பெரும் மடத்தனம். Normally a free floating exchange rate mechanism acts as balance and buffer between different nations with different economic strengths and interest rates. அதை செயற்கையாக ஒழித்தால், விளைவு இதுதான். கிரிஸை விட இன்னும் பெரிய நாடுகளாக ஸ்பெயின், இடாலி போன்றவை இன்னும் அபாயகரமான நிலையில் உள்ளதால், எதிர்காலத்தில் இன்னும் பெரிய சிக்கல்கள் உருவாகப்போகிறது. இது ‘முதலாளித்துவ’ சிக்கல் அல்ல. மாற்றாக, உண்மையான சந்தை பொருளாதார முதலாளித்துவ பாணியை அமலாக்காதால் வந்த வினை.

    இந்தியாவை வல்லரசாக்க கனவு காணும் அதிகாரவர்கத்தினரின் முட்டாள் தனங்களின் விளைவுகளில் ஒன்று தான் பெரும் ராணுவ செலவு. மேலும் நிர்வாக செலவு தான் தோன்றித்தனமாக வரவை விட அதிகமாக இருந்தால், பற்றாகுறை பட்ஜெட்டுகளால், ரூபாயின் மதிப்பு வீழத்தான் செய்யும்.

    சரி, இதெல்லாம் இருக்கட்டும். கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைபற்றினால் சரியான தீர்வை நடைமுறைபடுத்த முடியுமா என்ன ? சோவியத் சாம்ராஜ்ஜியம் வீழந்தது எகாதிபத்திய முறையினால் மட்டும் அல்ல. இதே பற்றாகுறை பட்ஜெட்டுகளின் நிகர விளைவுகளினாலும் தான். அடிப்படை பொருளாதார விதிகளை யாரும் மீறவே முடியாது என்பது தான் வரலாறு தரும் பாடம்.

    • // உண்மையான சந்தை பொருளாதார முதலாளித்துவ பாணி//

      இதைப் பற்றிய விளக்கவுரை இன்னும் தாங்களால் வழங்கப்படவே இல்லை. உண்மையான சந்தை பொருளாதார முதலாளித்துவ பாணியைப் பற்றி விளக்குங்கள்

      • க்ரீசுக்கு நேர்ந்த கதி ஏன் அமெரிக்காவுக்கு ஏற்படவில்லை அதியமான். ஒருவேளை உங்களது மொழியில் அது தூய்மையற்ற முதலாளித்துவமாக இருக்கலாம். வரவுக்கு தக்க செலவு செய்யாமல் அடித்து வைத்திருக்கும் சிவகாசி டாலரை சந்தையில் இறக்கி நன்றாக உலக மக்களின் உழைப்பை தின்று கொழிக்கும் அமெரிக்க நுகர்வு அடிமைகள் இன்னமும் வல்லரசாகத்தான் தொடர்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம் உருவான காலம்தொட்டு அதன் மேற்கை எடுக்க இயன்ற நாடுகளான ஜெர்மன் போன்றவற்றோடு போட்டி போட முடியாமல் க்ரீசு மாத்திரமல்ல பால்க்டிக் நாடுகளும் திணறின• உலகம் ஒரே அலகாக மாறினால் அதாவது நாடுகளின் எல்லைகளை உடைத்து நீங்கள் விரும்புவது போல உலக சந்தையை ஸ்தாபிதம் பண்ணினால் ஐரோப்பிய யூனியனில் க்ரீசுக்கு நிகழ்ந்த்து தான் உலக அளவில் ஏழை நாடுகள் அனைத்துக்கும் நிகழும். உலகமயமாதலின் ஒரு மினியேச்சர்தான் ஐரோப்பிய ஒன்றியம். ஆனாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் புரிந்துணர்வுகளை உலகமயமாக்கலில் எதிர்பார்க்க முடியாது. காட்டுமிராண்டி காலத்திற்கு பிராயணிப்போம் எனக் கருதுகிறேன்.
        இன்னொன்று அரசுத்துறைக்கு நிர்வாகச் செலவு அதாவது அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்துதான் ரூபாயின் மதிப்பு குறைவதாக சொல்வதை நினைத்தால் ஜெயலலிதா வே பரவாயில்லை போலத் தோன்றுகிறது. அடுத்து பற்றாக்குறை பட்ஜெட் போட்டுதான் சோவியத் யூனியன் வீழ்ந்த்தாக புதிய கதை ஒன்றை போகிற போக்கில் சொல்லி விட்டீர்கள். அதற்கு ஆதாரம் விக்கி வழியாகவாவது தருவீர்கள் என்று நம்புகிறேன். (ஒரு நேர்மையான மனிதர் என்ற முறையில்தான்)

        • ஐரோப்பியன் உணின் என்பது ஒரு மொநேடரி உணின். அதாவது ஒரே கிர்றேன்ச்ய உஸ் பண்ணிக்கிட்டு ஆனா ஒரு கோட்பாட்டுக்கு உள்ள வேற வேற போச்கல் பாலிசி அதாவது அரசாங்கத்தின் வரவு செலவு கணக்கு.

          ஒரு நாடு கடன் வாங்குவது செலவு செய்யவும்,முதலீடு செய்யவும் தான். அது செய்யுற முதலீட்டின் லாபத்தை பொருத்து தான் மோதல் திரும்புச்ச இல்ல முதலுக்கு மோசமாக போச்சான்னு தெரியும்.

          ஜெர்மனி,பிரான்ஸ் மற்றும் பல நாடுகள் தொழில் வளம் நிரம்பிய நாடுகள், பல பொருட்கள் தயார் செய்யபடுகின்றன.

          ஆனால் க்ரீசே, போர்துகேசம் போன்ற பல நாடுகள் பெரியதாக ஒன்றையும் தயாரிப்பதில்லை. அவர்களுக்கு வரும் அந்நிய செலவாணியே ஊரை சுத்தி பாக்க வரும் தௌரிச்ட்களை vechu தான். இப்படி nilavaram இருக்கும்போது, அங்கு உள்ள makkalin vaazhkai tharam enna vendru யோசியுங்கள்.

          அங்கு பொய் பார்த்திருக்கும் எவரும் கூறுவார் அங்கு உள்ள அளவுக்கு அதிகமான சலுகைகளும்,சம்பளமும்,குறைவான பனி நேரமும்.

          சோவித் யூனியனின் வீழ்ச்சிக்கு காரணம் ஆப்க்ஜ்அனிஸ்டன் மீதஉ போர் தொடுத்தது தான். உடனே முடியபோகும் போர் என்று நினைத்தால்அது பத்து ஆண்டுகளாக நீண்டு விட்டது.

          இந்த நேரத்தில், ரஷ்யாவி தவிர்த்து மற்ற மாகணங்களில் எல்லாம் பயங்கர அரசியல் பிரச்சனைகள் துரத்த ஆரம்பித்து விட்டன.

          அதன் முடிவு தான் சோவியத் யூனியன் உடைந்தது.

        • இது தான் கிரீசுக்கு நடந்த சோகம். உலக பொருளாதாரம் மந்தம் அடைந்து vitta நிலையில், ஊர் சுத்தி பாக்க வரும் veli நாடு பயணிகளும் குறைந்து விட அதே குறைந்த வட்டியில் பணம் தர யாரும் தயாராக இல்லை.

          அனால் இந்தியாவிலோ, வெளியில் உள்ளவர்கள் யாரும் கடன் தருவது இல்லை. நம் கடன் எல்லாம் நமக்கு இடையில் தான். பாங்கு திவாலான நட்டம் நம் மக்களுக்கு தான், அதனால் தான் பல பங்குகள் அரசுடமையாக உள்ளன.

          இங்கு தொழில் தொடங்க மட்டும் தான் அந்நிய செலவாணி அனுமதிக்க பட்டு உள்ளது.

          றோவின் வீழ்ச்சிக்கு காரணம் நாம் உபயோக படுத்தும் கச்சா எண்ணெய், எவளவு எண்ணெய் எதற்கு செலவு செய்யபடுகிறது என கணக்கு எடுத்தல் உண்மை விவரம் புரியும்.

    • வாழ்க்கைத் தரம் 30 ஆண்டுகளில் முன்னேறி உள்ளது என்பதற்கு அவர்களது உழைப்பில் எவ்வளவு மணி நேரத்தை உணவு, மற்றும் உடை, இருப்பிடச் செலவு விழுங்குகிறது என்பதிலிருந்து அளவிடலாமா அதியமான் ? அப்படி அளவிட்ட பிறகும் பணம் அதாவது உழைப்பின் மணி நேரம் மிச்சமாகி இருக்கிறது என்கிறீர்களா ? அப்படித்தான் இருக்கிறது என்பதற்கு சிறு உதாரணம் அல்லது புள்ளிவிபரங்களை முன்வைக்கலாமே. முன்னமே திறந்து விட்டிருந்தால் மக்கள் படிப்படியாக விலைவாசி உயர்வுக்கு பழக்கப்பட்டிருப்பார்கள் என்பது ஏதோ நல்லது செய்வது போன்றதாக பேசுவது வக்கிரமில்லையா ? படிப்படியாக உணவைக் குறைத்தால் மக்கள் சாக மாட்டார்களா என்ன ? சந்தையில் கட்டுப்பாடு இருக்கும்பட்சத்தில் யாருக்கு பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கும். விற்பவனுக்கு மாத்திரமல்ல வாங்குபவனுக்கும் இருக்கும் என்று வாதிடலாம். ஆனாலும் விற்பவனது விலை நிர்ணயத்தில் அரசு தலையிடுவதுதான் விற்பவனது கொள்ளையடிக்க முடியாத கையறு நிலை. அதற்காக கள்ளச்சந்தையை உருவாக்க தட்டுப்பாட்டை உருவாக்குகிறான் முதலாளி. இதெல்லாம் தெரிந்தும் 91 இல் ஏன் திவாலாக இருந்தோம் என்பதை விளக்க முன்வருவதுதானே சரியான பார்வை அதியமான்.

      • நீங்க சொல்றது எல்லாம் ஓகே.

        லாப கணக்கு இல்லன வியாபாரி கானம் போயிடுவான்.

        அரசு விலை நிர்ணயம் பண்ணுனா வியாபாரி சந்தையில் பொருட்களை பதுக்கி வைத்தோ குறைந்த சுப்ப்லி மைந்தின் செய்தோ பற்றாகுறை ஏற்படுத்துவான்.

        அஆனல் அதற்கு காரணம் நஷ்டம் தான். நஷ்ட விலையில் வியாபாரம் செய்ய அவனால் எப்படி முடியும்.

        இந்த லோகிக்கும் ஓகே.

        ஆனா கச்சா எண்ணெய் , ஏவுகணைகள் வாங்க நாம் என்ன செய்ய வேண்டும?

        அந்நிய செலவாணி இல்லாமல் நம்மால் எப்படி இருக்க முடியும்?

        இந்திய மக்களின் வாழ்கை தரம் உயர்தந்தற்கு காரணம் பணம் இல்லை,அந்த பணத்தால் நமக்கு கிடைக்கும் டெக்னாலஜி.

        முன்பு ஒரு ஸ்கூட்டர்,டெலிபோன் வாங்க ௫ வருஷம் லைனில் நிற்க வேண்டிய கட்டாயம் இப்பொழுது இல்லை.

        இன்டர்நெட் இருக்கிறது, கம்ப்யூட்டர் இருக்கிறது. இன்னைக்கு நாம் விவாதம் செய்து கொண்டிருக்கும் இந்த தளமும்,களமும் 1991 இல் நடந்த முடிவினால் உண்டானது தான்.

        இந்திய மக்களின் பணம், அரசியல் வாதிகளின், அதிகாரிகளின் சட்டை பையில் இருக்கிறது, அமெரிகவிலோ வ்யபாரிகளிடமோ இல்லை.

      • அருமை மணி.. கருணாநிதி படி படியாக விலை வாசியை உயர்த்தியிருந்தால் பால் , பஸ், மின்சாரம் உள்ளிட்ட விலையை உயர்த்தும் துர்பாக்கிய நிலை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்காது என்று சில மடையர்கள் கூறும்போது
        அவர்களுக்கு விளக்கம் சொல்லியே ஓய்ந்து போய் இருக்கிறேன்.
        //படிப்படியாக உணவைக் குறைத்தால் மக்கள் சாக மாட்டார்களா என்ன ?// – உங்கள் விளக்கம் எளிமை அருமை…

  5. உரங்கள், டீஸல், எரிவாய்வு, கெரசின் போன்றவைகளுக்கு இந்திய அரசு பெரும் தொகையாக வருடந்தோரும் மான்யம் அளிக்கிறது. மானியத்தை குறை என்றால் எல்லா மானியங்களையும் குறை என்று அர்த்தமல்ல. உதாரணமாக சமையல் எரிவாய்வு மீது ஏறக்குறைய சிலிண்டருக்கு 400 ரூபாய் மானியம் உள்ளது. அயோக்கியத்தனமான விசியம் இது. பரம் ஏழைகளுக்கு மானியம் தரலாம். மாற்றுகருத்துக்கள் இல்லை. ஆனால் நடுத்தர, உயர் நடுத்தர மற்றும் பணக்காரர்கள் தான் இந்த மானியத்தை ஏறக்குறைய முழுமையாக அனுபவிக்கின்றனர். கெரசின் தான் ஏழைகள் அதிகம் பயன்படுத்தும் எரிபொருள். அதற்க்கு அளிக்கலாம். ஆனால் சமையல் கேஸ்க்கு 100 சதம் அளவு மானியம் அநியாயம். மாதம் சுமார் 350 அல்லது 400 ரூபாய் அதிகம் செலவு செய்ய முடிந்தவர்கள் தான் 90 சதம் இந்த மானியத்தை அனுபவிக்கின்றனர். இதை ஒழிப்பதே சரி.

    டீஸல் மீது மான்யம் : பொது போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து துறைக்காக மான்யம் சரி. ஆனால் பெரும் பணக்காரர்கள் இன்று டீஸல் கார்களை, சொகுசு கார்களை மிக அதிகம் உபயோக்கித்து, இந்த மான்யத்தில் ஒரு கணிசமான பகுதியை அனுபவிப்பது கொடுமை. மொத்த டீஸல் கொள்முதலில் சுமார் 10 முதல் 15 சதம் வரை இந்த டீசல் கார்கள் மற்றும் Sport Utility Vehicles and luxury cars segment உள்ளன் என்று ஒரு சர்வே சொல்கிறது. இந்த ‘மான்யம்’ தேவையா ?

    உர மானியம் சமமாக இருக்க வெண்டும். யூரியாவிற்கு மிக அதிக மானியம், ஆனால் பொட்டாசிய உரங்களுக்கு குறைவு. அதான்ன் யூரியா உபயோகம் கண்முடித்தனமாக, அபயாகரமாக அதிகமாக, நிலத்தின் தன்மையையே கெடுக்கிறது. இதை பற்றி விரிவான ஆய்வுகள் உள்ளன…

    • அண்ணன் என்ன சொல்றாருன்னா எல்லா ஏழைகளும் மான்ய விலையில கெரசின வாங்கி குடிச்சி செத்து போவட்டும்னு சொல்றாரு.

  6. “இப்பொருளாதாரக் கொள்கையின் அரசியல் மொழிபெயர்ப்புதான் அமெரிக்காவின் காலை நக்கி வல்லரசாவது என்ற கனவு.
    பெட்ரோல், மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி சராசரி இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தினால்தான், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுதான் ஏகாதிபத்திய மூலதனம் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கை”
    வினவின் குறிப்பான விமர்சனம் பற்றி விவாதம் இல்லாமல் ஏன் குட்டையை குழப்புகிறீர்கள்

  7. அதியமான்,

    உண்மையான சந்தைப் பொருளாதாரம் என்றால் என்னவென்கிற விளக்கத்தையும், அது உலகத்தில் எந்த நாட்டில் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது என்கிற உதாரணத்தையும் நீங்கள் தருவீர்கள் என்றால் அது பற்றிய ஒரு விவாதத்தை நாம் நடத்தலாம்.

    இல்லை எங்குமே அமுல்படுத்தப்படாத சுத்தசுயம்பிரகாசமான கொள்கையது என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், அது எப்படி இருக்கும் என்றாவது விளக்குங்கள்.

    பிகு – தயவு செய்து சுட்டிகளை பேஸ்ட் செய்யாதீர்கள்.

    • இங்கு விசியமே அதைப் பற்றி அண்ணனுக்கே தெரியாது என்பதுதான். சோசலிசத்துக்கு மாற்றா எவனோ ஒருவன் அடிச்சு விட்ட புருடாவ இவரும் இங்க அடிச்சு விடுறாரு. முதலாளித்துவ பாணி உற்பத்திமுறை என்றாலே அதன் ஆன்மா எப்படிப்பட்டது என்பது தெரியவில்லை.

      • அதே போல உலகத்துல எந்த நாட்டில் கம்முநிசம் வெற்றிகரமாக இருக்கு சொல்லுங்க ? அப்பறம் கம்முநிசம் தான் தீர்வுன்னு எப்படி சொல்றீங்க ?

        • திருவாளர் ங்கொய்யா, இப்போது முதலாளித்துவ வீழ்ச்சியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த விவாதத்திலிருந்து வெளியே எதையாவது பேச வேண்டுமென்றால்

          ஒன்று, ஆமாம் முதலாளித்துவம் தோல்வி தான். சந்தைப் பொருளாதாரம் சொதப்பல் தான் என்று ஒப்புக் கொண்ட பின் ‘வேறு எது தீர்வு’ என்பதற்குள் நீங்கள் நுழையலாம்.

          அல்லது, முதலாளித்துவம் சரியானது தான் என்பதை நிலைநாட்டி விட்டு மற்றவைகளைக் குற்றம் சொல்லலாம்.

          ‘அவ மட்டும் பத்தினியா’ என்கிற கருணாநிதி பாணி எஸ்கேப்பிசத்துக்கு இடமில்லை.

          முதலில் முதலாளித்துவக் கோவனத்துக்கு ஒட்டுப் போடமுடியுமா என்று முயற்சி செய்து பாருங்களேன்.

        • இன்று உலகத்தில் எங்கும் கம்யூனிசம் இல்லைதான் ஒத்துக்கொள்கிறேன். அதனாலேயே அது தவறு என்று சொல்லிவிட முடியுமா? நீங்கள் ஒரு கணக்கை போடுகிறீர்கள் என்றால் அதில் அதற்குரிய சரியான சூத்திரங்களை பயன்படுத்தினால்தான் சரியான தீர்வு கிடைக்கும். அதுபோன்றதுதான் சமூகத்தில் அனைத்து மக்களுக்குமான உருப்படியான தீர்வு கம்யூனிசத்தில்தான் இருக்கிறது முதலாளித்துவத்தில் இல்லை. உற்பத்திக்கான இயந்திரங்களை ஒரு தனிப்பட்ட ஒருவன் கட்டுக்குள் வைத்திருந்து உற்பத்தியில் பலநூறு பேர் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் பலனை அந்த தனிப்பட்ட ஒருவன் மட்டுமே ஏகபோகமாக்கிக் கொள்ளும் முறையில் எப்படி தீர்வு கிடைக்கும். இதுதான் முதலாளித்துவத்தின் உற்பத்திமுறை. இதுதான் முதலாளித்துவத்தின் ஆன்மா. இந்த ஆன்மா இயங்குவதற்கு சில சில்லரை சீர்திருத்தங்களை மட்டுமே போதும், அதனால்தான் பெரும்பான்மையினரை இது கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

          கம்யூனிசத்தை எதிர்க்கும் பலரும் கலிலியோவை தண்டித்த திருச்சபை பாதிரிகளின் மனோநிலையில்தான் இருக்கிறார்கள்.

    • உண்மையான கம்முநிசம் என்றால் என்னவென்கிற விளக்கத்தையும், அது உலகத்தில் எந்த நாட்டில் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது என்கிற உதாரணத்தையும் நீங்கள் தருவீர்கள் என்றால் அது பற்றிய ஒரு விவாதத்தை நாம் நடத்தலாம்.

      இல்லை எங்குமே அமுல்படுத்தப்படாத சுத்தசுயம்பிரகாசமான கொள்கையது என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், அது எப்படி இருக்கும் என்றாவது விளக்குங்கள்.

      பிகு – தயவு செய்து சுட்டிகளை பேஸ்ட் செய்யாதீர்கள்.

      • சால்ரா, செல்ப் எடுக்கவில்லை.

        கட்டுரையின் விவாதப் பொருளில் நின்று விவாதிக்க முடியுமென்றால் விவாதிக்கலாம். கட்டுரை தர்க்கப்பூர்வமாக நிலைநிறுத்தும் வாதங்களுக்கு எதிர்வாதங்கள் வைக்க துப்பில்லை என்பதால் அதற்கு வெளியே தப்பித்துச் செல்லும் உங்கள் வேட்கையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

        உங்களின் தப்பித்தலை முதலாளித்துவ கோவனத்தின் ஓட்டைக்கு ஒட்டுப் போடமுடியவில்லை என்கிற ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாமா என்று விளக்கி விட்டீர்களென்றால் முதலாளித்துவத்திற்கான மாற்று எது என்பது குறித்து பேசலாம். தயாரா?

        • நான் ஏற்கனவே கட்டுரையில் உள்ள தவறுகளையும் எதிர் வாதத்தையும் முன்னால் வைத்திருக்கிறேன், நீங்க அதுக்கு பதில் ஸொல்லிதூ பிறகு ஜால்ரா கூட சண்டை போடலாம்.

          • ஓஹோ… நீங்கள் வைத்துள்ளதற்குப் பெயர் தான் எதிர் வாதமா? சரி சரி. வூட்டாண்ட வளந்த பசங்க யாருமே இல்லையா?

            • வெட்டியா மொக்கை போடாம தர்க்கம பதில் மட்டும் சொல்லுங்க.

              உங்களுக்கு அது புரிஞ்சிதன்னே எனக்கு பெரிய சந்தேகம்,ஆனாலும் உங்க புரிதலா பாக்க கேக்க எனக்கு ஆசையா இருக்கு.

  8. Adhiyaman,

    This is a political website. The people here are as bad as the corrupt folks there and is just that these guys are frustrated that they are not getting a piece of the cake.Dont waste your time debating economic theories and all with these bunch of morons,choose your stage better.Dont stoop down to this level and waste your time.

    • மனுசனை மதிக்க தெரியாத உங்களை இந்த பின்னூட்த்தின் மூலம் நான் சிறுமைப்படுத்தியாக நினைத்துக்கொள்ளவும்.
      முடிந்தால் மூன்றுமாதமாக நீங்கள் வினவில் போட்டுக்கொண்டிருக்கும் கூடாரத்தை காலி செய்துவிட்டு கிளம்பவும்

    • திரு ஹரிகுமார் அவர்களே…

      தாங்கள் கூறியது போன்ற ஒரு வாசகத்தை, சுப்புனி என்பவரும் சொன்னார்.(quota fuckers என்று). assuming that you both are on a same platform, there is nothing to say to you as you are a well educated and from a reputed family who has taught you how you speak etc.. etc..

      • கோயுமுத்தூர் தம்பியண்ணே, இந்த கரிகுமார்தான் அந்த சூப்பிரமணி. ஒரே ஆளு ரெண்டு பேரு

      • அந்த சுப்ரமணியன் சொன்னதும் நான் இங்க சொன்னதும் ஒண்ணா?

        அது போன்ரன்ன என்ன அர்த்தம் ?

        தெளிவா நான் சொன்னது என்ன அந்தாளு சொன்னது என்னன்னு இங்க இருக்கு ?

        இதுக்கு மனுஷன மதிக்காது ஆளு அது இதுன்னு என்னலாமா சொல்றாங்க இங்க ?

        இங்க இருக்கிறவுங்க விவாதத்துக்கு தயாரா இல்ல, பல பேருக்கு பொருளாதார அறிவு இல்லன்னு நான் சொன்ன அது தப்ப ?

        மெயின் அர்டிகிலேலையே வினவு இந்தியாவையும்,கிரீசையும் ஒரே தட்டுல வெச்சு பிரச்சாரம் பண்றாங்க,

        இந்த அளவுக்கு தப்பான பொய்யான தகவல்கள வெச்சிருந்த தப்புன்னு ஏன் சொல்ல கூடாது ?

        இது எங்க இருக்கு quota எங்க இருக்கு ?

        • மிஸ்டர் ஹரிகுமார் நீங்கள் பொருளாதாரம் பற்றி விவாதம் செய்யுங்கள்,
          மற்றவர்களை கேனையங்கள் என்று ஏன் கூறுகிறீர்?

          அடுத்தவர்களை சிறுமைபடுத்துவதில், கேவலப்படுத்துவதில்…

          சுப்புனி = ஹரிகுமார்..

        • ஆயிரந்தான் சொல்லு ஆரம்பத்தில் தமிங்கிலிஷ்ல டைப் பண்ணபோதே எனக்கு கன்பர்ம் ஆயிடுச்சு இது குப்புரமணிதான்னு.

  9. பொறுப்புன்னஆ என்னன்னு தெரியாத புள்ள குட்டி எல்லாம் வாயிக்கு வந்த பேச்ச எல்லாம் பேசும்.
    அதனால தான் நான் இன்னும் ஹரிகுமார இருக்கேன் பொறவு நீங்க புதுசு புதுசா பேரு வெச்சு மறுமொழி சொல்றீங்க.

  10. […] ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச…  பெட்ரோல், மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி சராசரி இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தினால்தான், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுதான் மூலதனம் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கை. Like this:LikeBe the first to like this. […]

Leave a Reply to harikumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க