Friday, June 14, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூடங்குளம்: இடிந்தகரை கடலில் மனிதச் சங்கிலி போராட்டம் !!

கூடங்குளம்: இடிந்தகரை கடலில் மனிதச் சங்கிலி போராட்டம் !!

-

மிழகமெங்கும் கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், அரசு அடக்குமுறைக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ள சூழலில், இடிந்தகரையில் நேற்று முன் தினம் தொடங்கிய இரண்டு நாள் உண்ணாநிலைப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. தமிழகமெங்கும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ள இந்த சூழலில், தங்களது அடுத்த கட்ட போராட்டத்தை இடிந்தகரை மக்கள் அறிவித்திருக்கிறார்கள்.

கூடங்குளம் அணுஉலையில் யுரேனியத்தை நிரப்பக்கூடாது, பொய்வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, காலை பத்து மணி முதல் மாலை 4 மணி வரையில், நாளை முதல் கடலுக்குள் கை கோர்த்து நின்று மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக போராட்டக்குழு சற்று நேரத்துக்கு முன் அறிவித்திருக்கிறது. யுரேனியத்தை நிரப்பமாட்டோம் என்று அரசு அறிவிக்கும் வரையில் இந்தப் போராட்டம் அன்றாடம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த இரு நாட்களாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறையினால் மக்கள் அஞ்சிப் பின்வாங்கிவிடுவர், அல்லது சிதறி ஓடி ஒளிந்து விடுவர் என்று ஜெ அரசும், போலீசும் எண்ணியிருக்கக் கூடும். அந்த எண்ணத்தில் மண்ணை எறிந்திருக்கிறார்கள் மக்கள்.

போராடும் மக்களை மீண்டும் ஒன்று திரட்டி நிறுத்தும் முயற்சி இது. அடக்குமுறைக்கு பணியமாட்டோம் என்ற பிரகடனம் இது.

மக்களின் மன உறுதி வெல்லட்டும். போராட்டம் வெல்லட்டும். போராட்டம் பற்றிப் பரவட்டும்.

_______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  • .. ..நண்பா உங்களோடு எங்கள் கையும் இணையும் தமிழகம் முழுவதற்குமான கட்டுமானம் தேவை . . .
   மாணவபருவதில் இருந்து போராடுவதும் வேன்றிடுவதும் முக்கியம்.
   முதல் நீங்கள் செய்ய வேண்டிய பணி வகுப்பை புறக்கணித்து போராடுங்கள் அதுவே சரி . . . கடலுக்குள் மக்களும் வகுப்புகள் நீங்களும் வரலாற்றுப் பிழையாகி விடாதீர்கள் . . .. .. மக்களோடு நாமும் இணைய வேண்டும் . . .அது நம்முடைய போராட்டம் . . கடலுக்குள் மக்களிருக்க ஸ்ரீரங்கத்தில் பாப்பாத்தி ஜெயாவின் நலத்திட்டம் வழங்கும் விழா. . வீழ்த்துவோம் பார்ப்பனியத்தை வெல்லுவோம் மனிதத்தை . . இனிமேல் இந்தியா என்றோ பாரதம் என்றோ சொல்லாதீர்கள் ……இந்த தேசங்களின் ஒன்றியத்துக்கான புதிய பெயரை ஆலோசிப்பம் …..

 1. அடிமைச் சங்கிலிகளை அறுத்தெறிய மனிதச் சங்கிலி கோர்ப்போம் – கூடங்குளம்,மற்றும்

  தமிழகமெங்கும்.அணு உலைகளுக்கு எதிராக அகிலமெங்கும் கை கோர்ப்போம்.

 2. கூடம்குலம் மக்களுக்கு ஆதராவாக மாணவர்களும், தொழிலாளர்களும், அரசு ஊழியர்களும், விவசாயிகளும் இணைந்து போராட வேண்டும், கூடங்கலத்தைத் திறந்தாள் மின் வெட்டு நின்றுவிடும் என்ற அப்பட்டமான பொய்யை மக்கள் இனியும் நம்புவது அறிவுக்குச் சிறிதும் பொருத்தமற்றது. இந்த பொது புத்தி ஒழிய வேண்டும். மக்களே!! உங்கள் tv பெட்டிக்கு அப்பாலும் ஒரு உலகம் உண்டு, அதுதான் உண்மையான உலகம். அது போராடும் அந்த உழைக்கும் மக்களின் உலகம். நச்சுப் பிரச்சாரங்களில் இருந்து விலகி நின்று அறிவோடும் மனசாச்சியோடும் சிந்தியுங்கள்!

  • கூடங்குளம் என்பது மின்சாரம் தயாரிப்புக்கு மட்டும் என்பது புரட்டு புளுட்டோநியததுக்காக என்பதே உண்மை …. அது அணு மின்சார உலையல்ல…அணு ஆயுத உலை என்பதே உண்மை…….

 3. இடிந்தகரை-கூடங்குளம் மக்களுக்கு ஆதராவாக சென்னையில் அணு எதிரப்பு மாணவர்கள் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே வ‌ருகிற‌ ஞயிறு(16-09-2012) காலை 9:30 ம‌ணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் இதில் க‌லந்து கொள்ள‌ அன்புட‌ன் அழைக்கிறோம்
  இடிந்தகரை-கூடங்குளத்தில் அரசு அடக்குமுறை நிறுத்தப்படவேண்டுமெனில் தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் கூடங்குளம் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து அவர்களை ஆதரித்து வீதியில் இறங்க வேண்டும். இறங்குவோம் !

 4. ஆம் , நமது அன்றாட பொழுதுபோக்குகளுக்கு தேவைப்படும் மின்சாரத்துக்காக அப்பாவி மக்கள் எதற்காக சாக வேண்டும்.
  நம் சிந்தனை அதையும் தாண்டி செல்ல வேண்டும். போராடும் மக்களுக்கு தோள் கொடுக்க வேண்டும்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க