டெல்டா மக்களின் துயர் நீக்க வக்கற்ற மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான 4 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கக்கோரியும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் எமது மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்த திருச்சி காவல் துறையிடம் அனுமதி கோரிய கடிதம் கொடுக்கப்பட்டது.

ஜனநாயக சக்திகள், விவசாய சங்க பிரதி நிதிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான போஸ்டர்கள், துண்டறிக்கைகள் அச்சடித்து வெளியிடப்பட்டு ஆர்ப்பாட்டத்திற்கான அனைத்து வேலைகளும் நிறைவு பெற்ற நிலையில் திடீர் என இன்று (13.12.2018) நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது திருச்சி காவல்துறை!

டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறிய மத்திய பாஜக அரசும் அவர்களின் அடிவருடியாக ஆட்சி செய்யும் தமிழக எடப்பாடி அரசும் போலீசும் பெயரளவிலான ஜனநாயக உரிமைகளை கூட மதிப்பதில்லை என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.

படிக்க:
கஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு !! மக்கள் அதிகாரம்
கஜா புயல் நிவாரணம் : மோடியிடம் பிச்சை எடுக்காதே ! தமிழகத்தின் உரிமையைக் கேள் !!

தமிழக போலீசு ஜனநாயக விரோதமாக எமது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தாலும் டெல்டா மக்களுக்கான எமது ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி 13.12.2018 காலை 11.00 மணிக்கு மரக்கடை இராமகிருஷ்ணா பாலம் அருகில் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமையில் நடைபெறும். எனவே ஜனநாயக சக்திகள், சமூக அக்கறை கொண்ட நண்பர்கள், செய்தி ஊடக நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவளிக்கவும் செய்திகளை வெளியிட்டு உதவும் படியும் கேட்டுக் கொள்கிறாம்.


தோழமையுடன்
மக்கள் அதிகாரம், திருச்சி .
செய்தி தொடர்புக்கு:
9245281852

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க