புமாஇமு
விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் பள்ளி: தொடரும் தனியார்மயப் படுகொலைகள்!
பாளையங்கோட்டை அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் போதிய இடமில்லை என மாணவர் சேர்க்கை அங்கீகாரத்தை இரத்துச் செய்யத் துணிவிருக்கும் அரசுக்கு, இந்தத் தனியார் பள்ளிகள் மீது கைவைக்க துணிவு வருவதில்லையே ஏன்?
அரசுப் பள்ளிகள் தாரைவார்ப்பு: புதிய கல்விக் கொள்கையை அடியொற்றிச் செல்லும் திமுக அரசு!
நியாயமாகப் பார்த்தால் செய்தி வெளியிட்ட தினசரி இதழ்களைத் தான் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டன அறிக்கை விட்ட அனைவரையும் கண்டிக்கிறேன் என வன்மமாகப் பேசுகிறார்.
5, 8 ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி ரத்து: மோடி அரசின் பாசிசத் தாக்குதல்!
ஐந்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்த, 10 வயது மாணவர்களும் குலத்தொழிலில் ஈடுபடலாம் என்றால், இவர்கள் சொல்ல வருவது என்ன? குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டம் சொல்லும் 14 வயது என்னும் விதிமுறையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது தானே.
ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார்மயத்தை புகுத்தும் மோடி அரசு! | புமாஇமு
ஹீமோ டயாலிசிஸ் எனப்படும் இரத்தச் சுத்திகரிப்பை அரசு - தனியார் பங்களிப்புடன் செய்யலாம் என மோடி அரசு அறிவித்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதாக தமிழ்நாடு அதிகாரிகளும் முடிவெடுத்துள்ளனர். இதன் மூலம் பொது சுகாதாரக் கட்டமைப்பை கார்ப்பரேட் மயமாக்குவதில் மோடி அரசுடன் திமுக அரசும் கைகோர்த்துள்ளது.
பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெறு!
உண்மையில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. பின்புலம் கொண்ட பிற்போக்குவாதிகள் அதிகாரிகளாக வலம் வருவதும் ஆதிக்கம் செலுத்துவதும் என்று நகர்ந்து கொண்டிருக்கையில், இது போன்ற குழுக்களை அமைப்பது அவர்களுக்குச் சாதகமானதாகவே அமையும்.
ஏழை எளிய மாணவர்களை மேற்படிப்புக்கு செல்ல விடாமல் தடுக்கும் யு.ஜி.சி
எப்படி நீட் தேர்வு கொண்டு வந்த பிறகு உழைக்கும் மக்களின் மருத்துவ கனவு கானல் நீரானதோ அதேபோல் ஏழை எளிய மாணவர்கள் இனிமேல் உயர் கல்விக்கு போக வேண்டும் என்றாலே நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியுள்ளார்கள்.
சென்னை பல்கலைக்கழக மாணவிகளுக்கு மறுக்கப்படும் மகளிர் விடுதிகள்
சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற மாணவிகளுக்குத் தங்குவதற்கான இட வசதி மறுக்கப்பட்டுள்ளது; சென்னை பல்கலைக்கழகத்தின் நிலம் சமூக நலத்துறைக்குத் தாரைவார்க்கப்படுகின்றது.
அறநிலையத்துறை நடத்துவது பள்ளி, கல்லூரிகளா? பஜனை மடங்களா? | புமாஇமு கண்டனம்
தமிழ்நாட்டு மாணவ சமுதாயத்தின் மூளைகளில் காவிச் சாயம் பூசி, ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி மதவெறி கும்பலுக்குப் படையல் போடும் அயோக்கியத்தனமாகும்.
ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு
மாணவர்கள் தங்களுடைய திறனை வெளிப்படுத்துவதற்கான, படிப்பு வட்டங்கள், மன்றங்கள், விளையாட்டு மற்றும் கலைத்திறன் சார்ந்த நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகளும் அதற்கான கட்டமைப்புகளும் அரசு கல்லூரிகளில் பலவீனமான நிலையில் இருக்கின்றன.
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் போராட்டம் வெல்லட்டும்! | பு.மா.இ.மு
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் அக்டோபர் 1 ஆம் தேதியன்று துணைவேந்தர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று, அலுவலகத்தின் முன்பு காலவரையற்ற போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சங்கி சுதா சேஷய்யன் நியமனம் | புமாஇமு கண்டனம்
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்குத் துணைத்தலைவராக ஆன்மிகப் பேச்சாளரான சங்கி சுதாவை நியமித்து தமிழ் மொழியையும், தமிழறிஞர்களையும், தமிழ் ஆய்வாளர்களையும், தமிழ்ப்பற்றாளர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் இழிவுபடுத்திய பாசிச மோடி அரசை எமது புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசுப் பள்ளிகளில் ஊடுருவும் காவி கும்பல்: பரம்பொருள் பவுண்டேஷன் மகாவிஷ்ணு ஒருதுளி மட்டுமே! | பு.மா.இ.மு கண்டன அறிக்கை!
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்கள் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவவே வாய்ப்பிருக்கிறது என்று இத்திட்டம் அறிவிக்கப்படும் போதே எமது அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
நேற்று முருகன் மாநாடு, அடுத்து அம்மன் மாநாடு? – பு.மா.இ.மு கண்டன அறிக்கை!
பெயரளவிற்குக்கூட ஜனநாயகம் - முற்போக்கு சித்தாந்தம் என எதையும் பேச அனுமதிக்காத ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி காவி கும்பலிடம் அடிபணிவது என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான பார்ப்பனிய எதிர்ப்பு மரபிற்கும் செய்யும் துரோகம் ஆகும்.
ஜே.என்.யூ.வில் 13 நாட்களாகத் தொடர்ந்த மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!
ஆகஸ்ட் 23 அன்று பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கல்வித்துறை அமைச்சகத்தை நோக்கி பேரணியாக செல்லவிருந்த மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது டெல்லி போலீசு.
யு.பி.எஸ்.சி நியமனங்களில் ஆர்.எஸ்.எஸ் ஆட்களை நிரப்பத் துடிக்கும் ஒன்றிய பாஜக கும்பல்!
ஒவ்வொரு அரசுத்துறையின் தலைமைப் பொறுப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி - கார்ப்பரேட் கும்பல் யாரைத் தீர்மானிக்கின்றதோ அவர்களைப் பணியமர்த்துவதற்கான ஏற்பாடு இதுவாகும்