Saturday, January 10, 2026

கல்லாங்காடு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் தி.மு.க. அரசு | தோழர் ரவி

கல்லாங்காடு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கும் தி.மு.க. அரசு | தோழர் ரவி https://youtu.be/QSB46Hti-bk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்!

“பதிவுகள் இல்லாததைப் பயன்படுத்தி வக்ஃப் சொத்துகளை அரசாங்கம் எளிதாக உரிமை கோரும் என்று நாங்கள் கருதுவதால், இந்த மசோதாவிற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தினோம். இது வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கும்”

வழக்கறிஞர்கள் சட்டத்திருத்த மசோதா 2025: தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ள பாசிச கும்பல்

ஒட்டுமொத்தமாக, நீதித்துறையைப் அதானி, அம்பானி, அகர்வால் கும்பல்கள் மற்றும் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு எந்தவித பங்கமும் வராத வகையில் வடிவமைப்பது; பார்ப்பனிய மனுதர்ம சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைப்பது; இதற்கெதிரான குரல்கள் நீதித்துறைக் கட்டமைப்பில் எங்கும் எழாத வண்ணம் பார்த்துக் கொள்வது என்பதே இதன் நோக்கம்.

தூத்துக்குடியில் சி.ஐ.டி.யூ. தோழர்கள் மீது பா.ஜ.க. குண்டர்கள் தாக்குதல்

தூத்துக்குடி துறைமுகத்தை அதானி கைப்பற்றியிருக்கும் சூழலில், அம்மாவட்டத்தில் ஜனநாயக சக்திகள் மீது இதுபோன்ற தாக்குதலை திட்டமிட்டு நடத்துகிறது பாசிசக் கும்பல். இந்த தாக்குதல் செயல் உத்தியை பாசிச கும்பல் வளர்த்தெடுக்கவே செய்யும். ஜனநாயக சக்திகள் ஒன்றிணையாமல் இதனை தடுத்து நிறுத்த முடியாது.

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு முழக்கம்!

மேடை மீது ஏறி நின்று ”அரிட்டாப்பட்டியை பாதுகாப்போம்” என வலியுறுத்தும் வகையில் “Save Aritrapati” என எழுதப்பட்டிருந்த பதாகையை ஏந்தியவாறு மக்கள் முழக்கம் எழுப்பினர்.

நான்கு தொழிலாளர் சட்டங்கள் – அகில இந்திய வேலைநிறுத்தம் | மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு

நான்கு தொழிலாளர் சட்டங்கள் - அகில இந்திய வேலைநிறுத்தம் மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு https://youtu.be/B_Q4K-hS9_g காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பணி நிரந்தரம் கோரி செவிலியர் போராட்டம் || Live Blog

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் “தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்” சார்பாக டிசம்பர் 18 முதல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில்...

காரைக்கால் மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்!

இலங்கை அரசைக் கண்டித்தும், காயமடைந்த மீனவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டியும், இலங்கை சிறையில் உள்ள பிற மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் மீனவர்கள் போராடி வருகின்றனர்.

போராடும் பொட்டலூரணி மக்களைச் சந்தித்த பு.மா.இ.மு தோழர்கள்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடவேண்டும் என்று அக்கிராம மக்கள் 2021 ஆம் ஆண்டிலிருந்து போராடி வருகிறார்கள். ஆனால் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தட்டிக்கழித்து வருகிறது...

10-வது நாளில் விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு அறிவிப்பு கிடைத்ததும் பொங்கல் பண்டிகையொட்டி நடக்கும் வேலைகளில் உற்சாகமாக ஈடுபட காத்திருந்த நெசவாளர்கள் தற்போது பத்து நாட்களாகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னையை உலுக்கிய உரிமைக் குரல்!

தூய்மைப் பணியாளர்களின் இத்துணை ஆண்டுகால உழைப்பை உறிஞ்சிவிட்டு, தற்போது குறைந்தக் கூலிக்கு இராம்கி கார்ப்பரேட் நிறுவனத்திடம் காண்ட்ராக்ட் முறையின் கீழ் கொத்தடிமையாக்கப் பார்க்கிறது தி.மு.க. அரசு.

மேற்குவங்கம்: பெண் தொழிலாளர்களின் முன்னுதாரணமிக்க போராட்டம்

போராட்டப் பந்தலில் பல வகையான கலைத்திறன்களை வெளிப்படுத்தி புதுவகை பாடல்களை அங்கேயே உருவாக்கினர். கலந்துரையாடி போராட்ட உணர்வுகளை உயர்த்திக் கொண்டனர். இந்த 25 நாட்களிலும் நிர்வாகம் அவர்களைப் பயமுறுத்திப் பணிய வைத்துவிட முடியவில்லை.

திருவாரூர்: நகராட்சியுடன் இணைக்கப்படுவதை கண்டித்து மக்கள் போராட்டம்

மாவட்ட நிர்வாகமானது தங்களது கோரிக்கையை ஏற்று தேவர் கண்ட நல்லூர் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிடாவிட்டால் அடுத்தடுத்து காத்திருப்பு போராட்டம் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என்று மக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

மோடி-அகர்வால் அழிக்கத்துடிக்கும் அரிட்டாபட்டி குறித்து சீனி வேங்கடசாமியின் குறிப்புகள்

அரிட்டாபட்டியிலுள்ள மலைகள் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள், சமணர் படுக்கைகள் என தமிழர் பண்பாட்டை தாங்கிநிற்கும் தொட்டிலாக விளங்குகின்றன. அப்படியிருந்தும் தமிழ்நாடு அரசிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் மோடி அரசு திமிர்த்தனமாக ஏலத்தை நடத்தியுள்ளது.

கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டத்தை ஆதரிப்போம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளே கௌரவ விரிவுரையாளர்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், நிரந்தரப் பேராசிரியர்களின் சம்பளத்தில் கால்பங்கு அளவுகூட இவர்களுக்குக் கொடுப்பதில்லை.

அண்மை பதிவுகள்