சிறப்புக் கட்டுரை : சேலம் உருக்காலையை விழுங்கும் ஜிண்டால் !
ஒரு பொதுத்துறை நிறுவனம்; ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விளைநிலத்தில் நிற்கும் நிறுவனம்; மக்களின் வரிப்பணத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம்; ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வியர்வையில் உயர்ந்த நிறுவனம்.
நாளை ஜனநாயக உரிமைகளும் செல்லாக்காசாகும் !
கோடிக்கணக்கான மக்களின் பொதுக்கருத்தைத் தன் விருப்பத்துக்கேற்ப ஒரு பாசிஸ்டால் வளைக்க முடிவது, ரூபாய் நோட்டைச் செல்லாது என்று அறிவிக்கும் பிரச்சினை அல்ல, மக்களின் ஒப்புதலுடன் “ஜனநாயக உரிமைகள் இனி செல்லத்தக்கவை அல்ல” என்று அறிவிக்கப்படுவது தொடர்பான பிரச்சினை.
கேரளாவின் மோடியா பினரயி விஜயன் ?
மலையாள எழுத்தாளரும் நாடக செயற்பாட்டளருமான கமல்ஸி பிராணா (18.12.2016) ஞாயிறு அன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். செய்த குற்றம் என்ன ? ஃபேஸ்புக் மறுமொழி ஒன்றில் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டார் என்று குற்றம் சாட்டியிருக்கும் கேரள போலீசு, அவர் மீது 124 ஏ தேசத்துரோக வழக்கு போட்டுள்ளது.
செத்தும் கொடுத்தார் சீதக்காதி – செத்தும் கெடுக்கிறார் ஜெயா !
விரைவிலேயே துதி பாடலின் முதன்மை இடம் சின்னம்மாவிற்கு சென்று விடும் என்றாலும், சின்னம்மா வரும் வரைக்கும் முதலமைச்சர் பணியே அம்மாவின் நினைவை பரப்புவது என்றாகிவிட்டது.
பேசப் பயப்படும் மோடி – கேலிச்சித்திரம்
பாராளுமன்றத்தில் என்னை பேச அனுமதிப்பத்தில்லை - மோடி
அமளியே உங்கள பேச வைக்கத்தான் நடக்குது... வாயை தொறங்க பாஸ்!
சில்லறை வணிகத்தை கொல்லத் துடிக்கும் ரிலையன்ஸ் ஜியோ !
சில்லறை வர்த்தகத்தை ஒழித்துக் கட்டும் ரிலையன்சின் முந்தைய ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற முயற்சிகளை விடவும் தற்போதைய திட்டம் முழு வெற்றியடையும் என்பது அம்பானியின் எதிர்பார்ப்பு.
மோடியின் ராஜகுரு சோ ராமசாமி : சில குறிப்புகள்
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை அவர் எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் ஆதரித்தற்கும், திராவிட இயக்கம் – தி.மு.கவை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து விமரிசித்தத்ற்கும் பார்ப்பனியத்தால் ஊறிப்போன திமிரெடுத்த கொழுப்புதானே காரணமன்றி வேறு அறமோ குறமோ எதுவுமல்ல.
அம்பேத்கர் தினத்தில் ஆர்.எஸ்.எஸ்-க்கு என்ன வேலை ? களச்செய்திகள்
தற்போது ‘டிசம்பர் ஆறு வெற்றித்திருநாள்’ என்று சுவரெழுத்து மயிலாடுதுறை நகரில் முளைத்திருக்கின்றன. இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் பகுதியைத் தேர்ந்தெடுத்து பார்ப்பன இந்து மதவெறியர்கள் குறிவைக்கிறார்கள்.
விதியே என்று வாழ்பவர்களே ! வீதிக்கு வாருங்கள் !! அழைக்கிறார் மோடி !!!
உண்மையில் இது கருப்புப்பணத்தை,கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையா? இல்லவே இல்லை. யாரெல்லாம் கருப்புப்பணத்தின் ஊற்றுக்கண்களாக இருக்கிறார்களோ அவர்களுக்காக மோடி அரசு மக்கள் மீது நடத்தும் மாபெரும் தாக்குதல் தான் இந்தச் செல்லா நோட்டு நடவடிக்கை.
அண்ணலும் நோக்கினான் அதானியும் நோக்கினான்
சீதை சுவிஸ் வங்கியில், அனுமன் கையில் பார்ட்டிசிபேட்டரி கணையாழி, ராமன் அம்பை விடுவதோ பாரத வங்கியில்!
என்னடா இது இராமாயணம்?
டாஸ்மாக் பாரில் தேசிய கீதம் – காளமேகம் அண்ணாச்சி
ரேசன் கடையில தேசிய கீதத்த பாடிக் காமிச்சாத்தான் இலவச அரசின்னு ஒரு அறிவிப்பு போட்டீங்கன்னா அடடே மானியத்த வெட்டுறுதக்கு இப்புடி ஒரு ரோசனையான்னு உலக வங்கிக்காரனே ஒரு ஆச்சரியக்குரியோட வாயப் பொளப்பானுகல்லா!
நல்ல நோட்டு அடிக்க முடியாதவன் கள்ள நோட்ட எப்படி பிடிப்பான் ?
ரிசர்வ் வங்கி சொந்தமாக இரண்டு அச்சகங்களை அங்கே தொடங்கி 2000 ரூபாய் பணத்தாள்களை அச்சடிக்கிறது. ஆனால் அச்சில் தரம் இல்லை. பணத்தாள் காய்வதற்குக் கூட எங்களுக்கு அவர்கள் நேரம் கொடுக்கவில்லை.
மோடியின் தாக்குதலால் பிணத்தை அடக்கம் செய்ய முடியவில்லை
“எங்கள் சொந்த பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு அதை திரும்ப கேட்கும்போது எங்களால் எடுக்க முடியவில்லை. நாங்கள் சண்டையிட்டால் வங்கி அதிகாரிகள் அதை எங்களுக்கு எதிராக திருப்பி விடுவார்கள். எங்களுக்கு பயமாக இருந்தது அதனால் எதுவும் செய்ய முடியவில்லை”
பெண் கல்வி : பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா !
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்விக்கென பெண்கடவுளையும் சரஸ்வதி பூஜையையும் இருப்பதாக மேச்சிக்கொள்ளும் பார்ப்பனியத்தின் கள்ளப் பரப்புரைகளை இந்த புள்ளிவிவரம் கேலிக்குள்ளாக்குகிறது.
என்.டி.சி ஆலைகளை மூட சதி – பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம் !
மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித் துள்ளது. எவையெல்லாம் விற்பனைக்கு வரும் என்பதை ஏலத்திற்கு வரும் போது தெரிந்து கொள்ளலாம் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பீதி கிளப்பி உள்ளார்.























