போஸ்டர் ஒட்டினால் கைது அடி உதை – மக்கள் அதிகாரம் மீது போலீஸ் தாக்குதல்கள்
மதவெறியர்கள் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வெறியாட்டம் போட்ட போதும் அவர்களுக்கு அனுமதி அளித்து பாதுகாப்பு கொடுத்த போலீசு, அதைக் தட்டிக்கேட்ட மக்கள் அதிகாரம் தோழர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது.
கார்ப்பரேட் சாமியார்கள் : இந்துத்துவத்தின் புரோக்கர்கள் !
ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர், ராம்தேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் சாமியார்களின் சட்ட விதிமீறல்களை விட ஆபத்தானது அக்கும்பலின் இந்துத்துவ விஷம் கலந்த உபதேசங்கள்
இந்து முன்னணி காலிகளைக் கண்டித்து சென்னை ஆர்ப்பாட்டம்
கோவையில் வெறியாட்டம் நடத்திய இந்து முன்னணி காலிகளைக் கண்டித்து தி.க, த.பெ.தி.க, தி.வி.க, வி.சி.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு கண்டன ஆர்ப்பாட்டம் - ஒருங்கிணைப்பு மக்கள் அதிகாரம். இடம் வள்ளுவர் கோட்டம். நாள் 01.10.2016 காலை 10.30. அனைவரும் வருக!
வல்லரசுக் கனவும் இந்தியப் பெண்களின் நிலையும்
உண்மையான நாட்டுப்பற்று என்பது இரத்தமும் சதையுமான சரிபாதி இந்தியப்பெண்களின் அவலநிலையை ஒழிக்கப்பாடுபடுவது தான்.
மாடுகளைக் கொல்லும் ஆர்.எஸ்.எஸ் – சிறப்புக் கட்டுரை
இந்தக் கூற்று உங்களுக்கு ஒருபுறம் அதிர்ச்சியாகவும் இன்னொருபுறம் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றலாம். ஆனால், உச்சநீதி மன்றம் 2005-ல் அளித்த மிர்சாபூர் தீர்ப்பு இவ்வாறான முட்டாள்தனமான, மோசடியான வாதங்களை முன்வைத்துதான் பசு வதையையும், மாட்டுக்கறி உணவையும் தடை செய்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
விஸ்வ இந்து ரவுடி பரிஷத்
போலீசும், ஊடகங்களும், ஃபேஸ்புக்கிலிருக்கும் இந்துத்துவ ஆட்களும் இந்தக் கொலையைச் செய்த ஜிகாதி யார் என்று தேடிக் கொண்டிருந்தார்கள். என்ன செய்ய, கொலை செய்தவர்களை விஸ்வ ஹிந்து பரிஷத்தே அனுப்பியிருக்கிறது.
திருச்சி கூட்டம் – மணப்பாறை டாஸ்மாக் முற்றுகை – களச் செய்திகள்
இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள மெக்காலே கல்விமுறையானது மாணவர்களை முதலாளிகளுக்கு கொத்தடிமை வேலை செய்யும் எந்திரங்களாக மாற்றிக்கொண்டு வரும் சூழலில், கல்வியை தனியார் மயமாக்கியதன் விளைவு பல ஏழை மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கி வருகிறது.
கோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்
கட்டப்பஞ்சாயத்து ரவுடி, ரியல் எஸ்டேட் புரோக்கர் சசிக்குமார் கொலைக்காக முசுலீம் கடைகள் சூறையாடல்! அரசு வாகனங்கள் உடைப்பு – எரிப்பு! குஜராத் மாடலில் வன்முறையைத் தூண்டி உள்ளாட்சி பதவிகளை தமிழகத்தில் கைப்பற்றவே காவி படைகளின் வெறியாட்டம்!
நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் !
கர்நாடகாவில் உள்ள அப்பாவி விவசாயிகளை யாரும் தமிழர்களை தாக்கவில்லை. பேருந்துகளை கொளுத்தவில்லை. இனவெறி பிடித்த கலவரத்தை தூண்டியே ஆட்சியைப் பிடிக்கும் கொள்கை கொண்ட பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ் கருங்காலிகள்தான் கூலிக்கு ஆள்பிடித்து வந்து இந்த இனவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
கோவை : போலீசு துணையுடன் இந்து மதவெறியர்கள் வெறியாட்டம் !
இந்துமத வெறியர்களுக்கு நிதி கொடுத்து வளர்த்த வியாபாரிகள், மக்கள் மீதே வளர்த்த கிடா மார்பில் பாயுது! திருட்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் காவல்துறை கலவரத்தை ஒடுக்கி மக்களை பாதுகாக்காது! மதவெறி, இனவெறி, சாதிவெறி - ஆட்டம் எங்கு நடந்தாலும் இனம் கண்டு தண்டிப்போம்!
காவிரி பிரச்சினை மோடி அரசே முதன்மை குற்றவாளி !
காவிரி பிரச்சினையால் தமிழக கன்னட மக்களிடையே உள்ள பகை அனைந்துவிடாமல் நெருப்பை ஊதிவிடுவதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. எனவே, தேசிய இனங்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ளும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.
காவிரி : தேசிய ஒருமைப் ‘பாட்டை’ நிறுத்து !
மத்திய அரசும் உச்சநீதி மன்றமும் தமிழகத்தின் மீது செலுத்திவரும் ஒருதலைப்பட்சமான அதிகாரத்துக்குத் தமிழகம் கட்டுப்பட மறுக்க வேண்டிய தேவையும் அவசியமும் எழுந்து விட்டதை காவிரி விவகாரம் உணர்த்துகிறது.
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !
கண்முன்னே நடந்து வரும் ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் கம்பீரத்தை, அடிபணிய மறுக்கும் அம்மக்களின் வீரத்தைபுரிந்து கொள்ளும் அறிவோ, அங்கீகரிக்கும் பக்குவமோ, குற்றவுணர்வு கொள்ளும் இதயமோ இல்லாமல், இந்த அநீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய மக்கள்.
காவியைக் கரைக்கும் காவிரி !
கோமாதாவுக்கு ஒன்றெனில் குதித்துவரும் காவிகளே... உங்கள் கர்நாடகா ஆவிகளுடன் கலந்து பேசி, காவிரியைத் திறந்துவிடத் தடுப்பது பாக்கிஸ்தான் சதியா? பார்ப்பனிய சதியா?
தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்பு – செய்தி – படங்கள்
மத்திய பி.ஜே.பி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக சட்டமன்றத்தில் தமிழக அரசு பேசியது ஒரு நாடகம்தான். ஜெயலலிதா அரசு பெருவாரியான ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் புதிய மனுநீதியான புதிய கல்விக் கொள்கை விசயத்திலும் பி.ஜே.பி க்கு ஆதரவாக நிற்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம்.
























