ஆசிரியர் இல்லாமல் செயல்படும் அதிசயப் பள்ளிகள் !
ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் செயல்படாமல் முடக்கப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளால் சுமார் 80,000திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி அறிவை பெற முடியாமல் இருக்கின்றனர்.
கல்வி என்பது சேவையே ! தமிழ் என்றால் தன்மானம் !
அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்து! அனைவருக்கும் உயர்கல்வி வரை தமிழ்வழியில் இலவசமாக , கட்டாயமாக கல்வி வழங்கு! தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம்!
கல்வி உரிமை கோரி உசிலையில் ஆர்ப்பாட்டம் !
காற்றில் பறக்குது கல்வி உரிமை, ஆசிரியர் பற்றாக்குறையால் தள்ளாடுது அரசு பள்ளிகள், ஆட்டிப் படைக்கிறது ஆங்கில மோகம் கொள்ளையடிக்கிறான் கல்வி வியாபாரி, அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்து ! தனியார் கொள்ளையைத் தடுத்து நிறுத்து !.
‘சுதந்திர’ தினத்திற்கு கொடி ஏற்றத் திணறும் அரசுப் பள்ளிகள் !
இலவசப் பொருட்கள் கொடுப்பதாக மக்களிடம் ஓட்டு வாங்க வரும் ஆட்சியாளர்கள், பள்ளி நடத்துவதற்கான சாக்பீஸ், பதிவேடுகள் கூட தர மறுக்கின்றனர்.
நமது எம்ஜிஆரோடு போட்டிபோடும் தினமணி !
ஜெயலலிதாவுக்கு இப்படி ஒளிந்து மறைந்து சொம்படிப்பதற்கு பதிலாக வைத்தி அவர்கள் தினமணி ஆசிரியர் வேலையை விட்டு விட்டு நமது எம்.ஜி.ஆரில் வேலைக்கு சேர்ந்துவிடலாம்.
விருத்தாசலத்தில் கல்வி உரிமைக்காக போர்க்குரல் !
தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை, கல்வி கற்பது மாணவன் உரிமை. கல்வி என்பது சேவையடா, அதை விற்பதற்கு அனுமதியோம்.
கல்வி உரிமைக்காக விருத்தாசலத்தில் பேரணி, மறியல்
கல்வி என்பது சேவையாக அரசு பார்க்க தவறுகிறது. அது வணிகம் அல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வியில் தனியார்மயத்தை அனுமதிக்க கூடாது.
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் பயங்கரவாதம் !
கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராடி வெற்றி பெற்று பாருங்கள். அதன் தாக்கம் விலை வாசி உயர்வுக்கு எதிராக, தண்ணீர் வியாபாரத்துக்கு எதிராக, மின்கட்டண உயர்வுக்கு எதிராக எதிராக போராடச்சொல்லும்.
அரசுப் பள்ளிகளை பாதுகாக்க HRPC போராட்டம் !
அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் முழுமையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க பெற்றோர்களாகிய நமக்கு உரிமை உண்டு. வாத்தியார் இல்லா வகுப்பறை! மரத்தடியில் மாணவர்கள்!! அழியும் அரசுப் பள்ளிகள் !!!
கல்வி கொள்ளைக்கு எதிராக கோவை, திருவண்ணாமலையில் அரங்க கூட்டம் !
பள்ளி என்பது பொதுச் சொத்து, அதன் கேட்டிலிருந்து ஒவ்வொரு பகுதியும் நமக்கு சொந்தமானது எனும் உணர்வோடு எந்த கொள்ளையையும் எதிர்கொள்வோம்.
திருவெண்ணைநல்லூர் : மாணவர்களும் தோழர்களும் உறுதியான போராட்டம் !
மாணவர்கள் போர்க்குணமாக முழக்கமிட்டதை பார்த்த போலீசு திகைத்துப்போய் உடனடியாக மாணவர்களை பிரிக்க சூழ்ச்சி செய்தனர். அதற்கு மாவட்ட உதவி கல்வி அதிகாரியை உடனடியாக வரவழைத்தனர்.
கல்விக் கொள்ளையில் ராமகிருஷ்ண தபோவனம் ! HRPC நடவடிக்கை !!
நூற்றுக்கும் மேற்பட்டோர் நம்பிக்கையோடு மாணவர்களின் கல்வியுரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் உறுப்பினரானார்கள். நம் போராட்டத்தைத் தடுக்க வந்த பெல் செக்யூரிட்டிகளில் சிலரும் அச்சங்கத்தில் உறுப்பினரானார்கள்.
தனியார் பள்ளியை பணிய வைத்த பெற்றோர்கள் !
பெற்றோர்களின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அரசு நிர்ணயித்த நியாயமான கட்டணத்தை வாங்கும்படி சேத்தியாதோப்பு தனியார் பள்ளி நிர்வாகம் பணிய வைக்கப்பட்டது.
கடலூர்: அடக்குமுறைக்கு அஞ்சாத மாணவர் போராட்டம் !
ஒரு மாணவி, "வீட்டில் இருந்தால் டி.வி பார்த்துக் கொண்டு வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பேன். உங்கள் கூடவே இருக்க வேண்டும் போல உள்ளது" என்று பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றார்.
போலீஸ், கல்வித் துறை ஆதரவுடன் கல்விக் கொள்ளையர்கள் !
சிதம்பரம் வீனஸ் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. இலவசக் கல்வி நமது உரிமை என்ற கருத்து மக்களிடம் பரவி வருகிறது.










