தோழர் கோபட் காந்தியை சிறைப்படுத்திக் கொல்லாதே ! விடுதலை செய்!
தற்போது கைது செய்யப்பட்டுள்ளது குறித்து அவர் தனது கைப்பட ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தன்னை விசாரணைக் கைதியாக நிரந்தரமாகவே சிறையில் வைத்து, சட்டப்படியே கொலை செய்கின்ற நோக்கத்துடன்தான் தற்போது கைது செய்திருக்கிறது என்று அக்கடிதத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார் கோபாட் காந்தி.
அன்று சென்னை, கடலூர் ! இன்று குமரி ! மக்களைக் காப்பாற்ற வக்கற்ற அரசு !
கார்ப்பரேட் கப்பல்கள் தங்கு தடையின்றி மீன் பிடிக்க வேண்டும் என்பதும், மீனவர்களை கடலிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதும் தான் அரசின் கொள்கை. அதை சத்தமில்லாமல் செய்து வருகின்றன மத்திய மாநில அரசுகள்.
குமரியில் எழவு விசாரிக்க வந்த மோடி – கருத்துப் படங்கள் !
உளவு விமானத்த அனுப்பி ஒத்த உசுர காப்பாத்த வக்கில்ல... எழவு விசாரிக்க வர்ராரு இத்தன நாள் கழிச்சு ...
மீனவர்கள் படுகொலை ! சாக சொல்லும் அரசு வாழவிடுமா ? திருச்சி ஆர்ப்பாட்டம்
சுனாமியால் மீனவர்களைக் கடற்கறையை விட்டு வெளியேற்றினார்கள். விவசாயிகளை விளை நிலங்களில் இருந்து விரட்டி அடிக்கிறார்கள். இது தானே அரசின் கொள்கை.
காஷ்மீர் : ஆவணப்படம் எடுத்த பிரெஞ்சு பத்திரிக்கையாளர் கைது !
எட்வர்டின் கைது நடவடிக்கையை உலகம் முழுதும் பத்திரிக்கையாளர்கள் கண்டித்துள்ளனர். சர்வதேச பத்திரிக்கையாளர் கூட்டமைப்பும் இந்தியப் பத்திரிக்கையாளர் சங்கமும் கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன.
ஒக்கி : குஜராத்தில் தெருத்தெருவாக சுற்றிய மோடி மீனவ கிராமத்திற்கு வர மாட்டாராம் !
சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் மாநில தேர்தலுக்காக வார்டு கவுன்சிலரைப் போல் குஜராத்தில் தெருத்தெருவாக அலைந்த மோடியால் மீனவர்கள் கிராமங்களுக்குக் கூட வர முடியாதாம்.
கடலில் இருந்து மீனவர்கள் மீட்கப் பட்டார்கள் ! குமரி மீனவர்கள் சாதனை !
நேற்று கொச்சியிலிருந்து தோராயமாக 200 கடல் மைலுக்கு அப்பால் நடுக்கடலில் புயலில் சிக்கி எஞ்சின் சேதமடைந்த படகைக் கண்டுள்ளனர். அப்படகில் இருந்த வல்லவிளை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களை உயிருடன் மீட்டுள்ளனர்.
ஈரோட்டில் கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு !
தமிழக மாணவர்களும் எதற்கும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தகவல் தொழில்நுட்பத்திலும் உயர்கல்வியிலும் சிறந்து விளங்கிட அரசுப்பள்ளியில் கணினி பாடத்தை உருவாக்கிட வாரீர்!!!
செவிலியர்களின் போராட்ட உரிமையைப் பறித்த நீதிமன்ற பயங்கரவாதம் !
மாதம் ரூ. 2 இலட்சம் ஊதியம், குடியிருப்பு, கார், போன், உதவியாளர் என சகலமும் குடும்பத்துடன் அனுபவிக்கும் மாட்சிமை பொருந்திய மாண்புமிகு நீதியரசர்கள், செவிலியர்கள் போராட்டம் பொதுமக்களைப் பாதிப்பதாகவும் ரூ.7,700/-சம்பளம் கட்டுப்படியானால் வேலையை செய் அல்லது வேலைவிட்டுப்போ என தடை விதித்தனர்.
மீனவர்களுக்கு நீதி வேண்டும் – புதுவை, கடலூர், வேதாரண்யம், திருச்சி ஆர்ப்பாட்டங்கள் !
முன் அறிவிப்பு தரவில்லை என்பது மட்டுமல்ல காப்பாற்றவும் துப்பில்லை. மக்களுக்கு நேர்மையாகவும் இருக்க வக்கில்லை. கடலில் செத்து மிதக்கும் மீனவனின் மரணத்தின் குற்றவாளிகள் இந்த அரசும் ஆட்சியாளர்ககளும் தான்.
மீனவர்கள் துயரத்திற்கு நீதி வேண்டும் ! தர்மபுரி, விழுப்புரம், கோவை ஆர்ப்பாட்டங்கள்
இனி தனித்தனி போராட்டங்கள் தீர்வல்ல என்பதை மக்கள் உணர்ந்து மக்கள் அதிகாரத்தில் இணைத்து போராட்ட வாருங்கள் , மீனவர்களை மீட்க அணிதிரளுக்கள் !
கார்ப்பரேட் கொள்ளையரின் பயிர் இன்சூரன்ஸ் ! தஞ்சை ஆர்ப்பாட்டப் படங்கள்
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பயிர் இன்ஸ்சூரன்ஸ் விவசாயிகளை பாதுகாக்க அல்ல... கார்ப்பரேட் கொள்ளைக்கே...! என்ற முழக்கத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
குஜராத் தேர்தல் : தோல்வி பயத்தில் பாக் பீதி கிளப்பும் மோடி !
ஓட்டரசியலின் வெற்றிகளுக்காக அரசியல் கட்சிகள் கேடுகெட்ட நிலைகளுக்கெல்லாம் தாழ்ந்து செல்லத் தயங்காது என்பதை கடந்த கால வரலாறுகளில் இருந்து நாம் அறிவோம்; எனினும், பா.ஜ.க-வின் அளவுக்கு தரம் தாழ்ந்து செல்லக் கூடிய கட்சி சமகால வரலாற்றில் வேறெதுவும் இல்லை.
சந்தி சிரிக்கும் குஜராத் மாடல் வளர்ச்சி !
ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக வளர்ச்சி குன்றியுள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கடந்த பத்தாண்டுகளில் 40 விழுக்காடாக குஜராத்தில் அதிகரித்துள்ளது. தனி நபர் வருமானத்தில் ஏழை மாநிலங்களான ஓடிசாவையும், அசாமையும் விட குஜராத்தில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மீனவர் துயரத்துக்கு நீதி வேண்டும் ! சென்னை, மதுரை, ஓசூர், விருதை ஆர்ப்பாட்டம் – படங்கள் செய்திகள்
கட்டுமரம் செலுத்தும் கரங்கள் கடற்படையை நடத்தட்டும் ! துடுப்பு பிடித்த கரங்கள் துப்பாக்கிகள் ஏந்தட்டும் ! வள்ளம் தள்ளிய கரங்கள் இந்த அரசமைப்புக்கு எதிராக போர்வாளை ஏந்தட்டும் !

























