கலிபோர்னியா கனமழை வெள்ளம் | புகைப்படக் கட்டுரை
கலிபோர்னியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். அரிசோனா மாகாணம் முழுவதும் கிட்டத்தட்ட 3.8 கோடி மக்கள் வெள்ள எச்சரிக்கையின் கீழ் உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
சிலியில் பேரழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத் தீ | புகைப்படக் கட்டுரை
தென் அமெரிக்க நாடான சிலியில் பிப்ரவரி 2 அன்று தொடங்கிய காட்டுத் தீயினால் 123 போ் உயிரிழந்துள்ளனர் (பிப்ரவரி 5 நிலவரப்படி). நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பல ஆயிரம் வீடுகள் அழிந்து போயுள்ளன.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
உலகக் கோப்பை: தேசவெறிக்கு நாங்கள் பலியாக மாட்டோம்!
சங்கிகளே! உங்களுடைய 'மதவெறிக்கும் தேசவெறிக்கும் ஒருபோதும் பலியாக மாட்டோம்' என்பதை உணர்த்தும் விதமாக, அதை மெய்ப்பித்தும் காட்டியுள்ளனர்.
காசாவில் தொடரும் மரண ஓலங்கள்! | புகைப்படக் கட்டுரை
இராணுவம் சூழ்ந்து வந்தாலும் மற்றவர்களுடன் சேர்ந்து உயிரை விடுவோமே தவிர, ஒருபோது நோயாளிகளை தனியே தவிக்கவிட்டு செல்லமாட்டோம்” என்று மனிதநேயத்துடன் கூறுகிறார் மருத்துவர் ஒருவர்.
பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்து – லண்டனில் 3,00,000 மக்கள் பேரணி
பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்து நவம்பர் 11 அன்று லண்டனில் நடத்தப்பட்ட பேரணியில் 3,00,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 120-க்கும் மேற்பட்டோரை போலீசு கைது செய்தது.
உலகம் முழுவதும் பாலஸ்தீனத்திற்காக மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
பேரணியின் புகைப்படங்கள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
வங்கதேசத்தில் ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம்!
தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையோ மாதம் 23,000 டாக்கா (17,400 இந்திய ரூபாய்) வழங்கப்பட வேண்டும் என்று. ஆனால் ஷேக் ஹசீனா அரசாங்கமோ 12,500 டாக்கா (9,450 இந்திய ரூபாய்) என்ற சொற்பமான மாதாந்திர ஊதியத்தை வழங்குவதற்கான பரிந்துரையை நவம்பர் 7 அன்று முன்வைத்தது.
காசா: இஸ்ரேலின் குண்டு வீச்சால் சிதைந்து போன ரஃபா நகரம்
இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சால் அடையாளம் தெரியாமல் சிதைந்து போன ரஃபா நகரம் (Rafah)
இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து உலகளவில் தீவிரமடையும் மக்கள் போராட்டங்கள்!
காசா மீது கொடூரமான வான்வழித் தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம் அக்டோபர் 26 இரவு முதல் தரைவழித் தாக்குதலையும் தொடங்கி பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதைத் தீவிரப்படுத்தியுள்ளது.
தீவிரமடைந்திருக்கும் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்தும், இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலைக்கு முற்று முழு ஆதரவளிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் உலக அளவில் மக்களின் எழுச்சிமிகு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அக்டோபர் 27 அன்று அமெரிக்காவின் நியூ...
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல் | காணொளி
இதுவரை இஸ்ரேலின் தாக்குதலால் 2,360 குழந்தைகள் உட்பட குறைந்தது 5,791 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் அக்டோபர் 24 அன்று அறிவித்துள்ளது.
காசா மருத்துவமனை மீதான தாக்குதல்: இஸ்ரேலின் இனப்படுகொலை!
நேற்று (17.10.2023) காசா பகுதியில் உள்ள அல்-அஹ்லி அல்-அரபி (al-Ahli al-Arabi) மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளிதாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது யூத இனவெறி பயங்கரவாத இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனியர்கள் மீது நடத்தியுள்ள படுகொலையாகும்.
https://twitter.com/AJEnglish/status/1714490709036650698?s=20
https://twitter.com/ajplus/status/1714478155036053954?s=20/
இத்தாக்குதலை எதிர்த்து சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.
https://twitter.com/AJEnglish/status/1714427433951297657?s=20/
சமூக வலைத்தளங்களில்...
ஆப்கானை உருக்குலைத்த நிலநடுக்கம் | படக்கட்டுரை
கடந்த அக்டோபர் 7 சனிக்கிழமையன்று, மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், சிகிச்சை அளிப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தொடர் நிலநடுக்கங்களால் 10,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும்...
காசா மீதான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்: படக்கட்டுரை
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழுவினர் 5000 ராக்கெட்டுகளை ஏவினர். அதனையடுத்து, இஸ்ரேல் காசா மீது மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் அரசின் இந்த கொடூர தாக்குதல்களுக்கு மோடி அரசும் மேற்குலக நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல்களில், காசாவில் பல குழந்தைகள் உட்பட 1,354 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 6,049 பேர் காயமடைந்துள்ளனர். பல பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை...
உலகையே உலுக்கும் மொராக்கோ நிலநடுக்கம் | படக்கட்டுரை
ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத நிலநடுக்கத்தை இந்த துயரக்காட்சிகள் நமக்கு காட்டுகின்றன.
டெல்லியை ‘அழகுபடுத்த’ அப்புறப்படுத்தப்படும் உழைக்கும் மக்கள்! | படக்கட்டுரை
டெல்லியில் நடக்கவிருக்கும் ஜி-20 மாநாட்டிற்காக டெல்லியை ‘புத்தம் பொலிவுடன்’ வைத்திருக்க, டெல்லி வளர்ச்சி ஆணையம் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் தலைநகரை அழகுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறதாம்.
ஒடிசா ரயில் விபத்து: உருக்குலைந்த உடல்கள் – மீளமுடியாத துயரம் | படக்கட்டுரை
தனது அன்பிற்குரியவர்களைப் பறிகொடுத்த பிள்ளைகளும் பெற்றோர்களுக்கும் தேடி அழையும் துயரக் காட்சிகள் நமது நெஞ்சை கனக்க வைக்கிறது.

























