‘குடியரசு’ அல்ல; கொலை அரசு!
நீதிபதியின் மனதில் மறைந்திருக்கும் அரசியல் கருத்துக்கள், ஒருதலைப்பட்சமான அவரின் சோந்த விருப்பு-வெறுப்புகள், கேள்வி கேட்கமுடியாத அவரது சிறப்பு அதிகாரம் ஆகியவையும் குற்றவாளியைத் தீர்மானிப்பதில் பங்கு வகிக்கின்றன.
சன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்!
பத்திரிகை முதலாளியை வசனகர்த்தாவாகவும், பத்திரிகையாளனாகிய தன்னை வாயசைக்கும் நடிகனாகவும் கருதிக்கொள்வதற்கு சம்மதிக்கும் மனோபாவம் எந்த அளவுக்கு பத்திரிகை உலகில் பண்பாட்டில் ஊடுறுவியிருக்கின்றதோ அந்த அளவுக்கு புள்ளி ராஜாக்களும் ஊடுறுவுவார்கள்.
ஸ்ரீரங்கம்: பார்ப்பனியத் தீண்டாமைக்கு இடைக்காலத் தடை!
இப்படி அதிமுக்கியமான அணுஆயுத பணிகளுக்குத்தான் 'இந்து பிராமண அய்யங்கார் மட்டும் விண்ணப்பிக்கவும்' என அறமே இல்லாத அறநிலையத்துறை விளம்பரம் கொடுத்திருந்தது.
கோவில்பட்டி சிலை உடைப்பு: தேவர் சாதிவெறி ரவுடித்தனம்!
தமிழகமெங்கும் ஈழ மக்களுக்காக எழுச்சியும் போராட்டங்களும் நடந்துவரும் இவ்வேளையில் மக்கள் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பும் வண்ணம் இராமேஸ்வரம், கோவில்பட்டி என திட்டமிட்டு கலவரச் சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சாஸ்திரி பவன் முற்றுகை – படங்கள்!
ஈழ இனப்படுகொலையை நடத்திய இந்திய அரசை எதிர்த்து ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்திய மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரிபவனை முற்றுகையிடும் போராட்டம்.
பகத்சிங் பாதை உன்னைத் தேடுது!
போராளிகள் ரத்தத்தால் கஞ்சிபோட்டு சலவை செய்த காங்கிரஸ் பொய்கள் … இன்னும் ‘ அரசை ’ நம்ப வைத்து கழுத்தறுக்கும் பல வண்ண காந்திகள் … இத்தனைக்கும் மத்தியில் , ஈழத்திற்காக உறுதியுடன் போராடும் மாணவர்களிடம் பகத்சிங்கின் பிடிவாதம் இலக்கு தேடி நீள்கிறது ….
நோக்கியாவின் பலே திருட்டு!
நோக்கியா பல்லாயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளையும் பெற்றுக் கொண்டு 18,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்த்திருப்பது மட்டுமல்ல; ஆறே ஆண்டுகளில் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு அதிரடி இலாபம் அடைந்து அதை பின்லாந்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
மாணவர் எழுச்சி: போராடும் பண்பு வளரட்டும்!
நடைபெற்று வரும் இந்த மாணவர் போராட்டத்திலிருந்து, மக்கள் விடுதலையை நோக்கமாகக் கொண்ட, போராட்ட குணம் கொண்ட ஒரு புதிய தலைமுறை உருவாகவேண்டும். உருவாக்குவோம்.
சாஸ்திரி பவன் முற்றுகை: மாணவர் முன்னணி அறிவிப்பு!
தமிழகத்தில் மாணவர் போராட்டம் வீழாது என்பதை நிறுவும் முகமாக எமது மாணவர் முன்னணி தொடர்ந்து போராடும் என்பதையும் உறுதியோடு அறிவித்துக் கொள்கிறோம்.
பச்சையப்பன் கல்லூரி: தொடங்கியது போலீஸ் அடக்குமுறை!
இந்தியாவின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியும் மாணவர்கள் முழக்கமெழுப்பிக் கொண்டிருந்த போது, எந்த வித முகாந்திரமும் இன்றி மாணவர்கள் மீது தடியடி நடத்த தொடங்கியது போலீசு.
திமுக விலகல்: நடிப்பது கருணாநிதி மட்டுமா?
கருணாநிதியை கிடைத்த சந்துகளில் எல்லாம் போட்டுத் தாக்குபவர்கள், அம்மா கழற்றி அடித்தாலும், இளிக்கிறார்கள். ஐ.நா. தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரும் தேதியே முடிவடைந்துவிட்ட பிறகு “அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்” என பூட்டிய வீட்டுன் முன்பு சவுண்ட் விடுகிறார் ஜெயலலிதா.
திமுக விலகியதா, தப்பித்ததா?
லாவணி தொடங்க இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் பாடகர்களைப் பற்றிப் புரிந்து கொள்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் கச்சேரியை நாமே முடித்து வைக்க முடியும்.
சத்தியமூர்த்தி பவன் முற்றுகை: மாணவர்களைத் தாக்கிய காங்கிரசு கயவாளிகள்!
ஈழப்போரை முன்னின்று நடத்திய, பல்லாயிரக்கணக்கான மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த போர்க்குற்றவாளி இராஜபக்சேவின் கூட்டாளியாக செயல்படுகின்ற காங்கிரசு கட்சிக்கு, மாணவர் போராட்டத்தை விமர்சிக்கவோ எதிர்க்கவோ அருகதையில்லை.
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் போராட்டம்!
ஐஐடி யில் தமிழீழ இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை தமிழக மாணவர்களோடு பிற மாநில மாணவர்களும் கலந்து கொண்டது இலங்கைப் பிரச்சனையை இனியும் தமிழர்களுடையது மட்டுமாக சுருக்கிப்பார்க்க முடியாது என்பதை நிறுவியது.
“மாணவர்களுக்கு அரசியல் கூடாது” – தினமணியின் நரிக் கவலை!
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து போராடும் மாணவர்களை பார்த்து முதலைக்கண்ணீர் வடிக்கிறது தினமணி.










