மணிப்பூர்: உண்மை கண்டறியும் குழுவினர் மீது பாசிச ஒடுக்குமுறை!
தனது பிம்பம் உடைபட நேரிடும்போது அதற்குக் காரணமானவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது; ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. உண்மை கண்டறியும் குழுவினரும் இதற்கு விதிவிலக்கல்ல.
பீகார்: ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் மீண்டும் ஒர் படுகொலை!
பீகார் விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1955, பசுக்கள் மற்றும் கன்றுகளை கெல்வதைத் தடை செய்கிறது. இது போன்ற பசுவதை தடைச் சட்டங்கள் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்த ஏதுவாக இருக்கின்றன.
இந்து ராஷ்டிரமாக உருவெடுத்து வருகிறது உத்தரகாண்ட்!
உத்தரகாண்ட் ஒரு ‘தேவபூமி’ என்ற கருத்தாக்கத்தின் மூலம் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்துத்துவ சாமியார் சுவாமி ஆதி யோகி கூறுவது போல், 2024-இல் இந்து ராஷ்டிரம் அமைக்கும் பணி உத்தரகாண்டில் இருந்து துவங்கும் நிலைதான் அங்கு நிலவுகிறது.
முஸ்லீம்கள் மீது தொடர் வெறுப்பைக் கக்கும் ஹைதராபாத் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜாசிங்!
‘இந்து ராஷ்டிர நீதி’யின்படி பாசிஸ்டுகளுக்கு மட்டுமே ஜனநாயக உரிமைகள் வழங்கப்படும்.
ஒடிசா ரயில் விபத்து – பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடும் காவி வானரப் படைகள்!
காலங்காலமாக பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் முஸ்லிம் மக்களை எதிரிகளாகக் காட்டுவதையும், திட்டமிட்டு கலவரங்களை தூண்டுவதையும் ஒரு வழிமுறையாக கையாண்டு வருகின்றனர், காவி பாசிஸ்டுகள்.
மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவு ஏற்படும்: பரகல பிரபாகர்
“2024-இல் மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் அது பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்துள்ளார் பரகல பிரபாகர்
எங்கும் இந்துராஷ்டிர பிரச்சாரம் எதிலும் இஸ்லாமிய மதவெறி பிரச்சாரம்
ஆஷிபா முதல் பில்கிஸ்பானு வரை இந்துமதவெறி காவிக் கும்பலால் பாலியல் பலாத்காரம், சித்திரவதை செய்ததை கைகட்டி வாய்பொத்தி மௌனம் காக்க வேண்டும் அவர்கள்தான் சகிப்புதன்மையுடைய இஸ்லாமியர்கள்.
நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்: காவிமயமாக்கல் தடைப்பட போவதில்லை!
ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த பட்கரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமித்து மேற்கொள்ளப்பட்ட காவிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு மனித முகம் கொடுப்பதற்காகவே தற்போது பனகரியா வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புல்வாமா தாக்குதல்: தேர்தல் வெற்றிக்காக 40 பேரை கொன்ற பாசிச கும்பல்!
2019 தேர்தலை ஒட்டி புல்வாமா தாக்குதலை கையில் எடுத்ததைப்போல வருகின்ற 2024 தேர்தலுக்காகவும் எதை வேண்டுமானாலும் கையில் எடுக்கும் இந்த பாசிச கும்பல். அது சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடந்த ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலாக இருக்கலாம், ஜி-20 மாநாடாக இருக்கலாம், ராமர் கோவில் திறப்பாகவும் இருக்கலாம்.
மகாராஷ்டிரா: தலைவிரித்தாடும் காவி பாசிசம்!
கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இந்துத்துவ கும்பல்களால் 50 பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. இப்பேரணிகள் அனைத்திற்கும் பொதுவானது இஸ்லாமிய வெறுப்பு ஒன்று தான்.
ஆட்சியை பிடிக்க கலவரம் செய்வோம்: காவிக் கும்பல்களின் பார்முலா!
கலவரங்களை அரங்கேற்றும் காவி பாசிச கும்பலே கலவரங்களை தடுக்கும் காவலனாக பேசிவருவது அயோக்கியத்தனமானது. இதன்மூலம் பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள்.
திரிபுரா : அதிகாரத் திமிரில் விவசாயிகளை தாக்கும் காவி பாசிஸ்டுகள்!
விவசாயிகள் இடது முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது, அப்படி ஆதரவு தெரிவித்தால் இதுதான் கதி என்று பா.ஜ.க குண்டர்கள் மிரட்டி வருகின்றனர்.
‘பசு பாதுகாப்பு’ எனும் ஆயுதத்தை சுழற்றும் பாசிஸ்டுகள்!
பசுவதை தடைச் சட்டத்தின் அச்சாணி இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் உள்ளது. அரசியலமைப்பின் பகுதி IV-ஆக உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) சரத்து 48 பசுவதையை (மாட்டிறைச்சியை) தடை செய்ய அரசுக்கு அதிகாரத்தை அளிக்கிறது.
ஜே.என்.யூ மாணவர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி குண்டர்கள்
முற்போக்கு ஜனநாயக சக்திகளையும், இடதுசாரி சிந்தனையாளர்களையும் தொடர்ந்து தாக்கியும் மிரட்டியும் வரும் காவி பாசிச ஏ.பி.வி.பி ரவுடி கும்பலை அனைத்து கல்லூரி – பல்கலைக்கழகளிலும் தடைசெய்ய வேண்டும்.
ஏ.பி.வி.பி குண்டர்களால் அச்சுறுத்தப்படும் பல்கலைக்கழகங்கள்!
மாணவர்கள் அரசு கொண்டுவரும் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் குறித்து விவாதங்களை முன்னெடுத்தாலோ அல்லது கருத்தரங்குகளை நடத்தினாலோ அதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதைமீறி மாணவர்கள் நிகழ்வுகளை நடத்தினால் ஆர்.எஸ்.எஸ் - ஏ.பி.வி.பி போன்ற கலவரக்காரர்களால் தாக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது.