மாநகராட்சி ஆணையரை பணிய வைத்த ஆட்டோ ஓட்டுனர் சங்கம் !
தொழிற்சங்க உரிமைகளை பெற வேண்டுமென்றால் புரட்சிகர தொழிற்சங்கத்தின் அணுகுமுறைதான் பலன் தரும் என்பதை மாற்று சங்க உறுப்பினர்களும் புரிந்து கொண்டார்கள்.
டாஸ்மாக் கடையை தடுத்து நிறுத்திய சுவரொட்டி !
இந்தப் போராட்டம், நெடுஞ்சாலை சாராயக் கடைகளை ஊருக்குள் கொண்டுவரும் முயற்சியை எதிர்த்து தமிழகமெங்கும் நடக்கும் மக்கள் போராட்ட பயணத்தில் ஒரு மைல் கல்லாய் தன் முத்திரையை பதித்துள்ளது.
ஏழைகளை கணக்கிடுவதில் நேர்மையின்மை – உத்சா பட்னாயக்
ஏழ்மையை அளவிடும் மட்டத்தை தொடர்ந்து தாழ்த்திக் கொண்டே போவதன் மூலம் திட்டக் கமிஷனின் சந்தேகத்திற்கிடமான வழிமுறை ஏழ்மையில் வீழ்ச்சியை காண்பிக்கிறது.
ஏழைகளை அம்பானிகளாக்கும் வறுமைக் கோடு !
பொது வினியோக முறையை ஒழித்துக் கட்டும் அரசின் திட்டங்கள் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கலால் துறை லஞ்சம் – ஒரு உண்மைக் கதை !
நாம் தான் இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்க்கிறோம். எந்த தவறும் இல்லாத பொழுது, ஏன் இவ்வளவு லஞ்சம் தர தயாராய் இருக்கிறார்? அதில் அவருக்கு வருத்தமே ஏன் இல்லை என மனதில் கேள்வி எழுந்தது.
இளவரசன் வழக்கறிஞர்களை விடுவிக்க மறுப்பு !
வழக்குரைஞர் ரஜனிகாந்த், செங்கொடி உள்ளிட்ட அனைவரும் சேலம் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.
கல்விக் கொள்ளையில் ராமகிருஷ்ண தபோவனம் ! HRPC நடவடிக்கை !!
நூற்றுக்கும் மேற்பட்டோர் நம்பிக்கையோடு மாணவர்களின் கல்வியுரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் உறுப்பினரானார்கள். நம் போராட்டத்தைத் தடுக்க வந்த பெல் செக்யூரிட்டிகளில் சிலரும் அச்சங்கத்தில் உறுப்பினரானார்கள்.
சரிதா நாயர் கும்பலின் 10,000 கோடி கேரள ஊழல் !
சூரியனையும், காற்றையும் வைத்தே சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை திரட்டி பட்டை நாமம் போட முடியுமென்றால் நிலம், கனிம வளம் போன்ற உடனடி பலன்களில் எவ்வளவு கொள்ளையடிப்பார்கள்!
ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் !
முதலாளிகள் வளைப்பதற்கும், அவர்களுக்காக வளைந்து கொள்வதும்தான் நமது 'ஜனநாயகத்தின்' அழகு. அந்த அழகுதான் இத்தகைய மோசடி சீமான்களையும் சீமாட்டிகளையும் பெற்றுப் போடுகிறது.
போலீஸ், கல்வித் துறை ஆதரவுடன் கல்விக் கொள்ளையர்கள் !
சிதம்பரம் வீனஸ் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. இலவசக் கல்வி நமது உரிமை என்ற கருத்து மக்களிடம் பரவி வருகிறது.
மின் விபத்து கடவுளின் செயலாம் !
அரசு அலுவலகங்களில் யாகம், பூஜை, மழை பெய்ய சிறப்பு யாகங்கள், வாஸ்து பார்த்து அதிகாரிகள் செயல்படுவது என்று ஏராளமான முறையில் மத நம்பிக்கைகள் புரையோடிப் போயிருக்கின்றன.
கல்வி: கருத்துக் கேட்பு கூட்டம் என்று ஏய்க்காதே !
அடிப்படை வசதிகள் ஏதுமற்ற தனியார் பள்ளிகள் பெட்டிக்கடைகள் போல் பெருகி விட்டன.அவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வக்கில்லாத அரசு கருத்துக் கேட்பு கூட்டம் என்ற பெயரில் மக்களை ஏய்க்கிறது.
65 நாள் முற்றுகையில் டாஸ்மாக்கை விரட்டியடித்த சூளகிரி மக்கள் !
டாஸ்மாக் மாவட்ட மேனேஜர், "இந்த இடத்தில வேணாம்னா வேற இடத்தைக் காட்டு" என்று கேட்டார். பொதுமக்களில் மற்றொருவரோ, "இந்தக் கண்ணுல குத்தாதே என்று சொன்னால், அந்தக் கண்ணக் காட்டு என்று கேட்கிறாயே" என்று சீறினார்.
வேதாரண்யம் டாஸ்மாக் கடையை மூடு ! முற்றுகை ! !
"எத்தனையோ முறை தாசில்தாரிடம் மனு கொடுக்க போன போது கண்டுக்காத அவர், ஒற்றுமையாக அமைப்பாக திரண்டு போராடுகின்ற போது, நம்மைத் தேடி வந்து எழுதி கொடுத்துச் செல்கிறார்"
தாலி பாக்யா
பெண்களுக்கு இந்து தர்மப்படி சரியான சாதியில், சரியான வர்க்கத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக கர்நாடகாவில் "தாலி பாக்யா" என்ற திட்டத்தை உருவாக்கியிருக்கின்றனர் மேட்டுக்குடி இந்துக்கள்.











