மோடியின் தில்லிதான் குற்றங்களில் நம்பர் ஒன் !
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தில்லியில் மட்டும் 13,803 எண்ணிக்கையில் நடந்திருக்கின்றன. அதாவது தினசரி 38 குற்றங்கள் நடக்கின்றன. தில்லிக்கு அடுத்த படியாக மும்பையில் 5,128 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்திருக்கின்றன.
உயர் நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம் : செவிலியர் போராட்டத்திற்கு தடை !
போராட்டத்தை கைவிட்டால் தான் உங்கள் தரப்பு வாதங்களை கேட்க முடியும் என்றும், “ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விட்டுச் செல்லாம். ஆனால் போராட்டம் நடத்தக் கூடாது” என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.
சபரிமலை பெயரில் மக்கள் அதிகாரத்தின் கூட்டத்தை மறுக்கும் விருதை போலீசு !
ம.க.இ.க கோவன் வருகிறார் என கியூ பிரிவு போலீசார் சொல்கிறார்கள் எனவே அனுமதி தர முடியாது என மாவட்ட காவல் துறை வெளிப்படையாகவே மறுக்கிறது.
போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடும் ஒப்பந்த செவிலியர்கள் !
நோயாளிகளுக்கு முறையான மருத்துவம் செய்ய முடியவில்லை என்பதே எங்களுக்கு மன வேதனையளிக்கிறது. 16 மணி நேரம் சில சமயங்களில் 24 மணி நேரம் கூட உழைக்கின்றோம். “மக்களுக்காக உழைப்பதில் எங்களுக்கு பெருமை தான். ஆனால் எங்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த அரசாங்கம் உணரவில்லை”
கடனைக் கட்டாதே ! கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டு ! கரூர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ஒரு குடும்பமே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான அரசை கண்டித்து போஸ்டர் ஒட்டியதற்காக கரூர் பகுதி தோழர் பாக்கியராஜ் மீது வழக்கு போட்டு சிறையில் தள்ளியது போலீசு.
திரிபுரா : இராணுவ ஊழலை அம்பலப்படுத்தினால் சுட்டுக் கொல்வார்கள் !
திரிபுராவில் கடந்த 3 மாதங்களுக்குள் நடைபெறும் இரண்டாவது பத்திரிகையாளர் படுகொலைச் சம்பவம் இது.
ரஃபேல் விமானம் : மூட்டைப் பூச்சி மிசின் தயாரிக்க அம்பானிக்கு அள்ளிக் கொடுக்கும் மோடி
ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இவ்வாறு குற்றம் சாட்டுவது தேசத்தின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குவது என்று எச்சரித்துள்ளார்.
மதயானையை வீழ்த்திய சிற்றெறும்பு !
அவர்கள் முன்பு இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று, தமது வயல்களை, தோட்டங்களை போஸ்கோவிடம் பறிகொடுத்துவிட்டு, அகதிகளாக வெளியேறுவது. இல்லையென்றால், உயிருக்குத் துணிந்து போஸ்கோவை எதிர்த்து நிற்பது. அவர்கள் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார்கள்.
நெடுஞ்சாலைகளை பெயர் மாற்றி மீண்டும் வருகிறது டாஸ்மாக்
தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றியமைத்து டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்கிறது உச்சநீதிமன்றம்.
கார்ட்டூனிஸ்ட் பாலாவை விசாரணை செய்ய போலீசுக்கு தடை !
பாலா கைது செய்யப்பட்டதும், அவர் மீது போடப்பட்ட வழக்குப் பிரிவுகளும் சட்டவிரோதமானவை என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வாதங்களை முன் வைத்தார்.
குற்றவாளிகளே நீதிபதிகளாக! உளுத்துப் போன நீதித்துறை !
சுருக்கமாகச் சொன்னால் விசாரணைக் கூண்டில் நிற்க வேண்டியவர்களே தீர்ப்பளிக்கும் இடத்திலும் இருக்கிறார்கள். நீதித்துறையில் “தனது வழக்கிற்கு தானே நீதிபதியாக இருக்க கூடாது” என்பதே பொதுவாக பின்பற்றப்படும் மரபாகும்.
நீரில் மூழ்கிய பள்ளிக்கரணை: தூங்கி வழியும் மாநகராட்சி – களத்தில் இறங்கிய மக்கள் அதிகாரம் !
நீர் வழிதடங்கள் அனைத்தும். முதலாளிகள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வெளியேற வாய்ப்பு இல்லாமல் மக்கள் தத்தளித்துவருகின்றனர். இது பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில் மட்டுமல்ல, சென்னையின் பல இடங்களிலும் பார்த்தாலே தெரியும் உண்மையாகும்.
கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்ததைக் கண்டித்து தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!
கந்துவட்டி கொடுமைக்கு இசக்கிமுத்துவை பலி வாங்கிய இந்த அரசை கண்டித்து கார்ட்டூன் வரைந்த பாலா அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 06.11.2017 (இன்று) தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கார்ட்டூன் மேல் வந்த கோபம் கந்துவட்டி மேல் வரவில்லையே ?
ஒரு கேலிச்சித்திரத்தை முடிக்கும் முன்பே அடுத்த கேலிக்குரியதை படைத்துவிடுகிறது அரசு. நாட்டில் நீங்கள் நடத்தும் ஆபாசத்தை கோட்டில் வரையும் அளவுக்கு கூசாத இதயம் எங்களுக்கு இல்லை.
கார்ட்டூனிஸ்ட் பாலா விடுதலை ! மீண்டும் கைது செய்ய போலீசு ஆத்திரம் !
விரிவான விவரங்களை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வினவு செய்தியாளரிடம் தொலைபேசியில் அளித்த நேர்காணல் வீடியோவை இணைத்திருக்கிறோம். பாருங்கள், பகிருங்கள்!
























