மெட்ரிக் கொலைக்கூடங்கள்!
தனியார் கல்வி என்று கவுரவமாக அழைக்கப்படும் இந்தத் தொழில், மணற்கொள்ளை கிரானைட் கொள்ளையைப் போன்றதொரு கிரிமினல் தொழில். இலஞ்சம், ஊழல், போர்ஜரி, கள்ளக்கணக்கு, கொலை உள்ளிட்ட அனைத்தும் இத்தொழிலின் அங்க லட்சணங்கள்.
துரத்தப்பட்ட நோக்கியா தொழிலாளிகளுக்கு 25,000 கோடி கடன் மோசடி
விரட்டப்பட்ட கம்பெனியின் பெயரில் அவர்களை அழைப்பது ஒரு தந்திரம். செய்தியினுள்ளே பார்த்தால் அந்த சதித்திட்டம் ஒளிவுமறைவின்றி பல்லிளிக்கிறது.
எஸ்.ஆர்.எம் பச்சமுத்துவுக்கு மோடியின் தபால்துறை சீர்வரிசை
காங்கிரசு காலத்தில் தயாநிதி மாறன் பிஎஸ்என்எல்லை பயன்படுத்தியது போல பாஜக காலத்தில் பச்சமுத்து தபால் அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்கிறார்.
பட்ஜெட் பற்றாக்குறை : ஏழைகள் பணத்தில் முதலாளிகளுக்கு மானியம்
மைய அரசு தனது பற்றாக்குறையை ஈடுகட்ட உள்நாட்டில் வாங்கியிருக்கும் மொத்தக் கடனும், கடந்த எட்டு ஆண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மேட்டுக்குடி கும்பலுக்கும் அளிக்கப்பட்டுள்ள மொத்த வரிச்சலுகைகளும் ஏறத்தாழ சமமானவை.
கொரிய முதலாளிக்கு சுதந்திரம் – காஞ்சிபுரம் தொழிலாளிக்கு சிறை !
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆகஸ்டு 15 அன்று, உரிமைக்காக போராடிய 150 தொழிலாளர்களின் கை கால்களை உடைத்து கைது செய்து சிறையில் தள்ளியிருக்கிறது தமிழக காவல் துறை.
மரபணு பயிர் அனுமதி: விவசாயத்தைத் தூக்கிலேற்றும் மோடி !
இருபதுக்கும் மேற்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான கள ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்டு மேலும் 15 உணவுப் பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளித்திருக்கிறது, மோடி அரசு.
அனைத்திலும் அந்நிய முதலீடு ! சுதந்திர தினம் ஒரு கேடு !
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு... மக்களுக்கு! 5 இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை - பன்னாட்டு கம்பெனிகளுக்கு! - இதற்குப் பெயர் சமத்துவமாம்!
மீத்தேனை விரட்ட காவிரியே நீயும் போர்புரி !
விளைந்து கொடுத்த காவிரிப் படுகைமேல் வெட்டு விழுந்தால், வெளியேறப் போவது மீத்தேன் அல்ல - எங்கள் விவசாயி வர்க்கத்தின் நெருப்பு! உழவு நடந்தால் ஊரே வாழும் - மீத்தேன் இழவு நடந்தால் ஊரே சுடுகாடாகும்!
பட்ஜெட் : கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடியின் காணிக்கை
நாட்டின் செல்வங்களை "பி.பி.பி" திட்டங்களின் மூலம் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார், மோடி
ஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்
மாக்ஸ்முல்லர் பவனில் எட்டு மாதங்களில் கதேயின் புத்தகத்தை மூல மொழியில் படிக்குமளவுக்கு ஜெர்மன் மொழியை கற்றுத் தருகிறார்கள். இரண்டு கோடை விடுமுறைகளில், ஆக 120 மணி நேரத்தில் ஆங்கிலத்தை கற்றுத்தந்து விட முடியும்.
புதுச்சேரி வரலாற்றில் திருப்பம் – ரவுடிகளை வீழ்த்திய புஜதொமு
கான்டிராக்ட் தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்த 5-ம் தேதி புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய பேரணி, ரவுடிகளால் தாக்கப்பட்டது. தாக்கியவர்களுக்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது.
ஓ.என்.ஜி.சியை எதிர்த்து தஞ்சையில் விவிமு ஆர்ப்பாட்டம்
ஒருமித்த எதிர்ப்பு என்று கூட்ட குறிப்பில் பதிவு செய்துவிட்டு மறுபுறம் போலீசு பாதுகாப்புடன் துரப்பண பணிகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன.
கேள்வி கேட்க வைப்பதுதான் கல்வி !
குழந்தைகளுக்கு முதல் மொழியான தாய் மொழியை நன்றாக கற்ற பிறகுதான் இரண்டாம் மொழியை சொல்லித்தர வேண்டும் என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல்பூர்வமான நடைமுறை.
முதலாளி காதர்பாய், போலீசு கிருஷ்ணகுமாரை முறியடித்த தொழிலாளிகள்
காவல்நிலயத்திற்கு அழைத்து தாராளமாக அடிப்பார். கட்டப்பஞ்சாயத்து செய்து பச்சையாக ரவுடித்தனம் செய்வார். லஞ்ச லாவண்யங்களில் ஊறித்திளைத்து, மக்களின் பிரச்சினைகளை ஒட்டி சுவரொட்டி ஒட்டினால் கூட கூப்பிட்டு வைத்து மிரட்டுவார்.
உலகமயமாக்கம் – இந்துத்துவம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்
ஆரிய மாட்சிமையை மீட்டெடுப்பதாக ஹிட்லர் கூறியது போல, ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்தியாவில் வேதங்களின் மாட்சிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கியது.

















