நோபல் பரிசு: கொலைகாரனுக்கு சமாதானப்புறா பட்டம்!
அம்மாவுக்கு ஈழத்தாய் பட்டம், அண்ணா ஹசாரேவுக்கு ஊழல் ஒழிப்பு போராளி பட்டம், தா. பாண்டியனுக்கு கம்யூனிஸ்ட் பட்டம் போன்றவைகளை விட தேர்ந்த நகைச்சுவை தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு என்பது.
வைரல் மார்க்கெட்டிங் – சமூக வலைத்தளங்களின் கருத்துச் சுதந்திரம் !
இந்த வைரல் மார்கெட்டிங்கில் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது விடயம் பரபரப்பாக பேசவைக்கப்படும். அந்த பரபரப்பில் அந்த விடயம் உலகெங்கும் பல லட்சக்கணகானோரின் பொதுக் கருத்தாக்கப்படும்.
அமெரிக்காவின் நீதி : இஸ்ரேலுக்கு வக்காலத்து ! ஈரானுக்கு மிரட்டல் !
அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தை நிராகரிக்கும் இஸ்ரேலை பாதுகாத்து ஒப்பந்தத்துக்கு எதிராக செயல்படும் அமெரிக்கா மறுபுறம் ஈரான் மீது அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றம் சாட்டி பன்னாட்டு பொருளாதார தடைகளை சுமத்தியிருக்கிறது.
அவுட்சோர்சிங் துறையில் ஆட்குறைப்பு!
உலகளாவிய பொருளாதார சூதாட்டக் குமிழியின் போது ஆயிரக் கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுத்த நிறுவனங்கள், குழிழி உடைந்த பிறகு தமது லாபத்தை தக்க வைத்துக் கொள்ள அவர்களை நடுத்தெருவில் விட ஆரம்பித்திருக்கின்றன.
Salt of the Earth (1954) – மண்ணின் உப்பு! அமெரிக்க அரசின் வெறுப்பு!!
கருத்துச் சுதந்திரத்தின் சொர்க்கம் என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் அமெரிக்கா, இந்தப் படத்தை தடை செய்யக் காரணம் என்ன? அமெரிக்க அரசு பயந்து, தொடை நடுங்கும் அளவுக்கு இந்தப் படத்தில் என்ன இருந்தது?
ஐ.டி துறை ஊழியர்களின் வேலைச்சுமைக்கு காரணம் என்ன?
ஐ-கேட் நிறுவனத்தின் "சதித்திட்டம் அம்பலம்" என்ற தொடர் அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கும் ஐடி சேவைகளை வழங்கும் அதன் போட்டி நிறுவனங்களுக்கும் கடுப்பேற்றியிருக்கிறது.
என்டிடிவி-ஏ.சி நீல்சன்: கல்லாப் பெட்டிச் சண்டை!
தனது வீழ்ச்சிக்கும், நஷ்டத்திற்கும் காரணம் மதிப்பிடும் டிஆர்பி கணக்கீட்டில் நடந்த மோசடிகள் தான் என்று பன்னாட்டு நிறுவனமான ஏ சி நீல்சன் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்கள் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது என்.டி.டி.வி.
வால்மார்ட்டால் கொல்லப்ப்பட்ட பங்களாதேஷ் தொழிலாளிகள்!
வால்மார்ட்டின் வணிக முறை பங்களாதேஷில் உயிரைப் பறிக்கும் தொழிலாளர் விரோத சூழலை உருவாக்கியிருக்கிறது, சென்ற வார தீவிபத்து அதன் நேரடி விளைவு !
காட்டுமிராண்டி இசுரேல்: 138 பாலஸ்தீனர்கள் படுகொலை!
சுதந்திரத்தை விரும்பும் பாலஸ்தீன மக்கள் கடைசி நபர் உயிரோடு இருக்கும் வரை ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து போரிடுவார்கள். அவர்களுக்கு ஆதரவாகப் போராடுவது உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் கடமை.
ஆப்பிள் – சாம்சங்: தொடரும் ஏகபோகச் சண்டை!
லாப வேட்டையில் போட்டி நிறுவனத்தை ஒழித்துக் கட்டி ஏகபோகத்தை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதுதான் இன்றைய முதலாளித்துவத்தில் நிலவும் 'போட்டி'.
பாலஸ்தீனில் தொடரும் இஸ்ரேலிய பயங்கரவாதம்!
பயங்கரவாத நாடான இஸ்ரேல், உலக தாதாவான அமெரிக்காவின் நிழலில் நின்று கொண்டு இப்போது இன்னும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
ஹாலிவுட்: பிரம்மாண்டமான பொய்! கவர்ச்சிகரமான ஆக்கிரமிப்பு!!
ரத, கஜ, துரக பதாதிகளுடன் வருகிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்புக்கு முப்படை; சதிக்கு சி.ஐ.ஏ.; துரோகத்திற்குத் தன்னார்வக் குழுக்கள்; பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு ஆறாவது படையாக- ஹாலிவுட்.
மைனர் குஞ்சுகளின் இந்தியாவுக்கு வருகிறது பிளேபாய்!
உங்களில் யார் பிளேபாய் ஆக விரும்புவீர்கள் என்ற சதவீத கணிப்பை கொண்டு இரத்தின கம்பளத்தை விரித்திருக்கின்றனர். அதன் சமூக விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைப் படப் போவதில்லை.
Mad City (1997) பேனைப் பெருமாளாக்கும் செய்தி ஊடகங்கள்!
ஊடகங்களின் வணிக வெறி எப்படி ஒரு அப்பாவியை அலைக்கழித்து அவனது இயல்பான பிரச்சினையை தேசியப் பிரச்சினையாக மாற்றி மக்களை முட்டாளாக்கியது என்பதை அழுத்தமாகப் பேசுகிறது கோஸ்டா கவ்ராசின் மேட் சிட்டி
அமெரிக்க அதிபர்: பில்லியன் டாலர் பதவி! பி.சாய்நாத்
இந்தப் போட்டியில் வெல்வது ஒபாமாவா ராம்னியா என்பதல்ல விசயம், பில்லியன் டாலர்கள் இல்லாத யாரும் போட்டி போடுவதைப் பற்றி கனவு கூட காண முடியாது என்பதுதான் விஷயம்.