பகத்சிங் பாதை உன்னைத் தேடுது!
போராளிகள் ரத்தத்தால் கஞ்சிபோட்டு சலவை செய்த காங்கிரஸ் பொய்கள் … இன்னும் ‘ அரசை ’ நம்ப வைத்து கழுத்தறுக்கும் பல வண்ண காந்திகள் … இத்தனைக்கும் மத்தியில் , ஈழத்திற்காக உறுதியுடன் போராடும் மாணவர்களிடம் பகத்சிங்கின் பிடிவாதம் இலக்கு தேடி நீள்கிறது ….
மாணவர் எழுச்சி: போராடும் பண்பு வளரட்டும்!
நடைபெற்று வரும் இந்த மாணவர் போராட்டத்திலிருந்து, மக்கள் விடுதலையை நோக்கமாகக் கொண்ட, போராட்ட குணம் கொண்ட ஒரு புதிய தலைமுறை உருவாகவேண்டும். உருவாக்குவோம்.
சாஸ்திரி பவன் முற்றுகை: மாணவர் முன்னணி அறிவிப்பு!
தமிழகத்தில் மாணவர் போராட்டம் வீழாது என்பதை நிறுவும் முகமாக எமது மாணவர் முன்னணி தொடர்ந்து போராடும் என்பதையும் உறுதியோடு அறிவித்துக் கொள்கிறோம்.
ஈழம்: தமிழ்நாடு முழுவதும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்!
ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.
பச்சையப்பன் கல்லூரி போலீஸ் தாக்குதல் – படங்கள்!
எவ்வளவு தான் அடக்குமுறை செலுத்தினாலும் எங்களது கோரிக்கை நிறவேறும் வரை போராரடுவோம்! எந்த ஒரு போராட்டமும் அடக்குமுறைகளினால் அடக்க முடியாது, என வரலாறு கூறுவதை நாங்கள் அறைந்து சொல்கிறோம்!
பச்சையப்பன் கல்லூரி: தொடங்கியது போலீஸ் அடக்குமுறை!
இந்தியாவின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியும் மாணவர்கள் முழக்கமெழுப்பிக் கொண்டிருந்த போது, எந்த வித முகாந்திரமும் இன்றி மாணவர்கள் மீது தடியடி நடத்த தொடங்கியது போலீசு.
கவர்னர் மாளிகை முற்றுகை! வழக்கறிஞர்கள் போராட்டம்!
ஈழத்தமிழனின் விடுதலைக்கு மக்கள் கிளர்ந்து போராடாமல் குறுக்குவழி எதுவுமில்லை! இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் 65 தமிழகத்தை மீண்டும் இங்கே உருவாக்குவோம்!
தமிழகமெங்கும் பற்றி பரவட்டும் மாணவர் போராட்டத்தீ!
ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி 21.03.2013 அன்று சென்னையில் நடத்தவிருக்கும் சாலைமறியல் போராட்டங்களைப் பற்றிய விபரங்கள்.
ஈழம் : திருச்சியில் புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!
தமிழ் மக்கள் மற்றும் மாணவர்களின் உணர்வோடு விளையாடும் இத்தகைய போக்குகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென எச்சரித்து ம.க.இ.க., பு.மா.இ.மு மற்றும் தோழமை அமைப்பினர் அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
இராணுவ அலுவலகம் முற்றுகை : 200 மாணவர் கைது!
இராஜபக்சேவை இரண்டாம் உலகப் போர்க்குற்றவாளிகளைத் தண்டித்த நூரம்பர்க் விசாரணை போன்ற சுதந்திரமான பொதுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் எழுப்பிய முழக்கங்கள் இந்திய இராணுவ மையத்தை பீரங்கிக் குண்டுகளாய் துளைத்தெடுத்தன.
திமுக விலகல்: நடிப்பது கருணாநிதி மட்டுமா?
கருணாநிதியை கிடைத்த சந்துகளில் எல்லாம் போட்டுத் தாக்குபவர்கள், அம்மா கழற்றி அடித்தாலும், இளிக்கிறார்கள். ஐ.நா. தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரும் தேதியே முடிவடைந்துவிட்ட பிறகு “அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்” என பூட்டிய வீட்டுன் முன்பு சவுண்ட் விடுகிறார் ஜெயலலிதா.
திமுக விலகியதா, தப்பித்ததா?
லாவணி தொடங்க இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் பாடகர்களைப் பற்றிப் புரிந்து கொள்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் கச்சேரியை நாமே முடித்து வைக்க முடியும்.
விருத்தாச்சலம் அரசுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
அதிகாரிகளையும், பேராசிரியர்களையும் எதிர் கொண்டு மனம் தளராமல் 4 நாள் உண்ணாநிலை போராட்டத்தோடு திருப்தி அடையாமல் அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி ஆலோசிக்கும் ஆற்றல் அனைவரையும் உற்சாகப் படுத்துவதாக அமைந்தது.
சுங்க இல்லம் முற்றுகை! வழக்கறிஞர்கள் போராட்டம்!
இனப்படுகொலை கூட்டாளி - இராஜபக்சேவின் பாதுகாவலாளி இந்திய அரசின் அலுவலை முடக்க சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் (MHAA) நடத்திய பேரணி மற்றும் கஸ்டம்ஸ் அலுவலகம் முற்றுகை - புகைப்படத் தொகுப்பு.
சத்தியமூர்த்தி பவன் முற்றுகை: மாணவர்களைத் தாக்கிய காங்கிரசு கயவாளிகள்!
ஈழப்போரை முன்னின்று நடத்திய, பல்லாயிரக்கணக்கான மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த போர்க்குற்றவாளி இராஜபக்சேவின் கூட்டாளியாக செயல்படுகின்ற காங்கிரசு கட்சிக்கு, மாணவர் போராட்டத்தை விமர்சிக்கவோ எதிர்க்கவோ அருகதையில்லை.








