Wednesday, October 28, 2020
முகப்பு உலகம் ஈழம் ஈழம்: FICCI அலுவலகம் முற்றுகை!

ஈழம்: FICCI அலுவலகம் முற்றுகை!

-

FICCIர்த்தகம் மற்றும் தொழில்துறைகளுக்கான இந்திய சங்கங்களின் கூட்டமைப்பின் (FICCI) ஒருங்கிணைப்பில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சவுகதா ராய், காங்கிரசைச் சேர்ந்த சந்தீப் தீக்ஷித், கவுத் யாஸ்கி, பா.ஜ.க.வைச் சேர்ந்த அனுராக் தாக்கூர், பிரகாஷ் ஜாவேத்கர், பி.எஸ்.பி. கட்சியைச் சேர்ந்த தனஞ்சய் சிங் ஆகிய எம்.பி.க்களை கொண்ட குழு இலங்கைக்கு செல்கிறது. ஏப்ரல் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த பயணத்தின் போது எம்.பி.க்கள் குழுவினர் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.எம்.பி.க்கள் குழுவினர் இலங்கை எம்.பி.க்களை சந்திப்பதோடு, மூத்த அமைச்சர்களையும் அரசியல் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈழத்தில் இனப்படுகொலை நடத்திய சிங்கள இனவெறி அரசுடன் தமது வர்த்தக விரிவாக்கத்துக்காக உறவாடும் இந்திய தரகு முதலாளிகளை அம்பலப்படுத்தி,

இந்திய அரசே! தரகு முதலாளிகள் சங்கத்தின் (FICCI) எடுபிடியாக ஈழத்தை (கொள்ளையிட) நோட்டமிட இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவின்பயணத்தை ரத்து செய்!

என்ற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகள் சென்னை சேத்துப்பட்டு விவேகானந்தர் சாலை, ஸ்ரீமிட்டாய் அருகில் உள்ள FICCI அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவுள்ளன.

நாள் : 09.04.2013
நேரம்
: காலை 11 மணி

அனைவரும் கலந்து கொண்டு இந்திய தரகு முதலாளிகள் சங்கத்தை முற்றுகையிடும் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய அழைக்கிறோம்!

தகவல் :
மக்கள் கலை இலக்கிய கழகம்
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. இன்று காங்கிரசின் ஜெயந்தி நடராஜனும் FICCI சார்பாக எம்.பி குழுக்கள் இலங்கை செல்லவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார், ஏன் இந்த நாடகம் என்று தெரியவில்லை!!!

  2. இந்த FICCI கும்பல் இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை ஆய்வு செய்து தரச் சான்றிதழ் வேறு தருகிறார்கள். அதற்காக பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் நேரடி ஆய்விற்குச் செல்கிறார்கள். அடுத்த வாரம் தமிழகத்தில் உள்ள சில தொழிற்சாலைகளுக்கு இந்தக் கும்பல் வருவதாகக் கேள்வி. அவ்வாறு அவர்கள் வரும்போது அங்கேயும் தொழிலாளர்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டங்களை நடத்தி எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்.

    போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க