Sunday, May 4, 2025
துப்பாக்கி சூட்டை, நீங்கள் தாங்கிக்கொள்ள வேண்டும், ஒரு கேள்வியின் சூட்டை, கூட என்னால் தாங்க முடியாது, செத்தால் கூட வராத கோபம், போராடினால் வருகிறது - நான்தாம்பா ரஜினிகாந்த்!
எங்களுக்கு எதிரான சிந்தனை, உங்களிடம் சென்டிமீட்டர் கணக்கில், இருந்தால் கூட....அந்த மூளையை, லட்சம் துண்டுகளாய் சிதைத்துவிடுவோம் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ஓவியர் முகிலன் கவிதை.
ஒரு சாவு எவ்வளவு பிரபலமடைகிறதோ, அதற்கேற்ப காசு கொடுக்க வேண்டும், இதற்கெனெ ஒரு தனி அமைச்சரவை, விரைவில் உருவாக்கபோகிறோம். - தூத்துக்குடி படுகொலை குறித்த மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை.
நடத்தப்படும் அரசாட்சியில் நிலைமை கட்டுக்குள். இந்த நிலைமை மீறினால் சுட்டுக் கொல்! இது ஜனநாயகமல்ல சவ நாயகம்! - தூத்துக்குடி படுகொலை குறித்து தோழர் துரை. சண்முகத்தின் கவிதை!
"நேற்று எவ்வளவு அற்புதமான நாளாக இருந்தது .. நான் ஒருவன் மட்டும் எட்டுபேரை சுட்டுக்கொன்றேன் .. ஒரு புல்லட்கூட வீணாகவில்லை என் மேலதிகாரிகள் என்னை இறுக அணைத்துக்கொண்டார்கள் - மனுஷ்யபுத்ரன் கவிதைகள்!
ஒரு பதினேழு வயது சிறுமி ஒரு அறுபட்ட புறாவைபோல ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள் இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள் எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கின்றன.
காவிரியை அவர்கள் தடுத்து நிறுத்த முடியுமா? தோழர் துரை.சண்முகத்தின் கவிதை!
ஆண்டாளுக்கு உறுமுனது ஜீயர் வயிறை தாண்டவில்லை பெரியாரை பேசுனது தமிழகமே தாங்கவில்லை நீ, பிள்ளையார் சுழி போட்டால் அது பெரியார் சுழியாய் மாறுது வேற யாரும் தேவை இல்லை, வெளங்கிடும் உன் வாயாலே பி.ஜே.பி நாறுது!
தோழர் லெனினும், தந்தை பெரியாரும் சிலைகளல்ல, மாபெரும் சிந்தனைகளை செயலாய் சமூகத்தில் வித்திட்ட மாமனிதர்கள் என்கிறார் தோழர் துரை சண்முகம்.
ரஜினியின் பித்துவம் அஞ்சேன் கமலின் தத்துவம் அஞ்சேன் போலீசின் தடியடி அஞ்சேன் பொறுக்கியின் அடிதடி அஞ்சேன் நாயர் கடை சோடா அஞ்சேன் நந்துலால் பீடா அஞ்சேன் ஜீயரின் சோடா கோலம் அம்ம நாம்! அஞ்சு மாறே!
ஜெயலலிதா இருந்தவரை வயிறு சரியில்லை செத்த பிறகு சிஷ்டம் சரியில்லை இஷ்ட்டத்துக்கு சுருட்டிக்கொள்ள அப்பப்போ... தமிழன் கறிவேப்பிலை! ரஜினி ஸ்டைலில் காவியை நுழைத்தால் தமிழகம் பெரியார் ஸ்டைலில் பிச்சி உதறும்!
மாட்டுக்கொட்டகை முழுவதையும் மணக்க செய்து விடுவாள். சாம்பிராணி புகையுடன் வலம் வரும் அம்மா. அப்படி இருந்தும் மாட்டுக் கொட்டகை குறித்துபால் எடுக்க வரும் பாண்டித்துரை உதிர்க்கும் வார்த்தைகள் அவ்வளவு பண்பானதாய் இருப்பதில்லை.
நீ ஏன் உன்னை டீவிற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய்? ஒவ்வொரு விஷயத்திலும் ஏன் நாடகமாடுகிறாய்? டீவிற்பவர்களின் பெயரை ஏன் கெடுக்கிறாய் நீ? தெளிவாகச் சொல்லிவிடு, யாருடைய டீயை நீ விற்கிறாய்
சங்கரின் மீதான காதல் சமூகத்தின் மீதான காதலாக விரிவதைப் பார்த்து ஆணாதிக்கத்தின் வக்கிரங்கள் வசவுகளில் வாழ்கிறது. உண்மையில் வாழா வெட்டியானது கவுசல்யா அல்ல, வக்கிரம் பிடித்த சாதிவெறி. கெட்ட வார்த்தை சாதிக்காரர்களே தாங்கள் கெட்டழிவது திண்னம்!
இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. எங்கள் மீது கட்டவிழ்த்துவிடும் உங்களின் மாட்டரசியலை.. நாங்கள் வகுப்பெடுத்தால் - நீங்கள் உங்கள் இரண்டு செவிப்பறைகளையும் இழக்க நேரிடும்..

அண்மை பதிவுகள்