வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமாயிருக்கிறது !
ஒரே நாளில் ஐந்து தடவை அழுகிறோம்; ஐந்து தடவை சிரிக்கிறோம்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 49-ம் பகுதி...
அவன் மட்டும் சம்மதித்தால் … !
வாழ்க்கையைப் பற்றிய புதிய அபிப்பிராயம் கொண்டிருப்பவள் நான் ஒருத்தி மட்டும்தான் என்பதல்ல அது மட்டும் தெளிவாகத் தெரிகிறது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 50-ம் பகுதி...
எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள்
எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள். அவர்கள் அந்தக் கரடுமுரடான மார்க்கத்தில் செல்லும்போது நாங்கள் அவர்களைப் புறக்கணித்ததற்காக, எங்களைச் சரியானபடி அவர்கள் தண்டிப்பார்கள்.
பணக்காரனுக்குச் சொர்க்கம் கூடப் பற்றாக்குறைதான்
வாழ்க்கையின் பெரும்பாகம் அவளது கண்முன்னாலேயே அவளது சம்பந்தத்துடனேயே உருவாக்கப்பட்டு வருவதை அவள் உணர்ந்தாள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 44-ம் பகுதி.
தாய் பாகம் 7 : பாஷா ! நீ ஒரு சோஷலிஸ்டா ?
நெருக்கடி நிறைந்த அந்தச் சின்னஞ்சிறு அறையிலே எல்லா உலகத் தொழிலாளர்களோடும் ஆத்மார்த்தமாகக் கொள்ளும் ஒட்டுறவு உணர்ச்சி பிறந்தது: அந்த உணர்ச்சி தாயையும் கூட அடிமைப்படுத்தியது.
நாங்கள் உடல் பூர்வமாய்த்தான் அடிமையானோம் ! நீங்களோ உள்ளபூர்வமாகவே அடிமையாகிவிட்டீர்கள் !
யாருடைய நலன்களைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் அனைவரும் ஏவலாளிகளாக இருக்கிறீர்களோ, அவர்களது சமுதாயத்தோடு எந்தவிதத்திலும் ஒத்துப்போகாத எதிரிகள் நாங்கள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 54-ம் பகுதி ... பாகம் 2...
கிறிஸ்துவுக்காக மக்கள் செத்திராவிட்டால் கிருஸ்துவே இருந்திருக்க மாட்டார்
ஏதோ ஒரு கரிய பறவை தனது அகன்ற சிறகுகளை விரித்து உயர்த்திப் பறப்பதற்குத் தயாராக நிற்பது போலிருந்தது அந்தக் கூட்டம். அந்தப் பறவையின் அலகைப்போல் நின்றிருந்தான் பாவெல்….
அவர்கள் பழத்தைப் பிழிந்து சாறு எடுப்பது போல் நம் ரத்தத்தைக் கசக்கிப் பிழிகிறார்கள்
பாவெல் தன் கையை உயர்த்திக் கொடியை ஆட்டினான். பல பேருடைய கைகள் அந்த வெண்மையான கொடிக்கம்பைப் பற்றிப் பிடித்தன. அவற்றில் தாயின் கரமும் பங்கெடுத்துக் கொண்டிருந்தது. மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் பகுதி 27
வாழ்வதிலுள்ள இன்பத்தோடு சாவதின் அவசியமும் சேர்ந்துதானே வருகிறது
அடுத்த உலகத்திலுள்ளவர்கள், இந்த உலகத்தில் உள்ளவர்களைப்போல் அவ்வளவு நல்லவர்களாயிருக்க முடியாது. அது மட்டும் நிச்சயம்.
அவன் என் இதயத்தில் எழுப்பிய உணர்ச்சி மறையவில்லை
அவன் என் இதயத்தில் எழுப்பிய உணர்ச்சி மறைந்ததா? நேர்மையும் துணிவும் கொண்ட மனிதன் என்று அவனை நான் உணர்ந்திருந்த என் அறிவு மறைந்ததா? இவையெல்லாம் செத்தா போயின?
தாய் பாகம் 3 : உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச் செல்கிறார்
உன் அப்பா உனக்கும் சேர்த்துக் குடித்துத் தீர்த்துவிட்டார். அவர் என்னைப் படாதபாடு படுத்தினார். உன் தாய் மீது கொஞ்சமாவது நீ பரிவு காட்டக் கூடாதா?
அவனது கண்கள் மட்டும் உணர்ச்சியோடும் உவகையோடும் ஒளிவீசிக் கொண்டிருந்தன !
என்னை மாதிரி மண்ணுப் பிறவியாக இருந்தால்…! நான் சிறிது நேரத்தில் எவனாவது ஒரு நீதிபதி முன்னால்தான் இழுத்துப் செல்லப்படுவேன் என்று நினைத்தேன்...
உங்களுக்குச் சாவுமணி அடிக்கும் நாள் நெருங்கி விட்டது
ஜனங்களே பார்த்தீர்களா? இந்த மிருகங்கள் நம் கைகளைக் கொண்டே நம் தொண்டையை நெரிப்பதை நன்றாகப் பாருங்கள்! சிந்தித்துப் பாருங்கள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 45-ம் பகுதி...
வருகிறேன் அம்மா ! போய் வருகிறேன் அன்பே !!
அந்தப் பாட்டு நின்றுவிட்டது. ஜனங்கள் நின்று விட்டார்கள், பாவெலைச் சுற்றி ஒரு மதில் போல நின்றார்கள். ஆனால் அவனோ இன்னும் முன்னேறினான். ஏதோ ஒரு மேகம் வானத்திலிருந்து தொப்பென்று விழுந்து அவர்களைக் கவிந்து சூழந்தது போல் திடீரென ஒரு சவ அமைதி நிலவியது.
இந்த மாதிரி ஜனங்களோடு வாழ்வதும் அவர்களது தோழர்களாயிருப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம்
அவர்கள் இருவரது இதயங்களும் ஒன்றையொன்று நெருங்கிப் பழகிக் கொண்டதால் ஏற்பட்ட ஆனந்த வெறி அவளது தலைக்குள் காரமான மதுவெறியைப்போல் மேலோங்கிக் கிறங்கியது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 43-ம் பகுதி.