“ஒரு கலைஞன் அடிமையாக இருப்பதையோ, விடுதலைக்காகப் போராடுவதையோ கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் இரண்டாவதைத் தெரிவு செய்தேன்” என்றார் பால் ராப்சன்.
கன்டெயினர்களே மாயமாக மறைந்து போகும் அம்மாவின் அண்ட சாசர அரசியல் காலத்தில், கவுன்சிலர் கடிகளைப் போட்டு நமத்துப்போன வெத்துவேட்டாய் வந்திருக்கிறது இந்தக் கொடி!
நம்மூரில் கும்பகோணம் டிகிரி காஃபியின் பிரபலத்தைப் போன்று ஐரோப்பாவிலும் இத்தகைய பாலுறவு காஃபி கிளப் பிரபலமடையலாம்.
தீபாவளி முடிந்த பிறகுதான் இரண்டு மாதங்கள் ஓய்வு கிடைக்கும் என்கிறார். காரணம் அப்போது மழைக்காலம் என்பதாலும் உற்பத்தியை நிறுத்தி வைப்பார்கள். மீதி பத்து மாதங்களில் அதிக வெயில் இருக்குமென்பதால் உற்பத்தியும் அசுரவேகத்தில் இருக்கும்.
ஆரிய, பார்ப்பன ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட வரலாற்றை எப்படிப் போலி மார்க்சிஸ்டுகள் திரித்துப் புரட்டுகிறார்கள் அதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுடன் எப்படி ஒன்றுபடுகிறார்கள் என்பதை இந்தப்பகுதியில் பார்ப்போம்.
முதுமையின் காரணமாய் சமூக புறக்கணிப்பு, முதுமைக்கும் இளமைக்கும் உள்ள முரண்பாட்டால் கட்சித் தோழர்களிடம் புறக்கணிப்பு, பொதுஉடைமை இயக்கத் தொடர்பால் குடும்ப புறக்கணிப்பு என்ற நிலையிலும் கலங்காத திடமான மனதைக் கொண்டிருந்தார்.
நுகர்வுக் கலாச்சாரம் குறித்து ஆழமான கட்டுரைகள் அடங்கிய நூல்! புதிய கலாச்சாரம் நவம்பர் 2016 வெளியீடு!
முத்துராமலிங்க ‘தேவர்’ சாதி அடையாளமாக மாற்றி நிறுத்தப்பட்டிருப்பது பெரிய அவமானம் - சீமான்
நம்ப ஊர் ஆத்துல ஒருவன் மணலைத் திருடுகிறான் எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன், படிக்குற உன் பள்ளிக் கூடத்தை ஒருவன் மூடுகிறான் எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன்.
குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே 10 ஆண்டுகளை உத்திரப்பிரதேசப் பெண்கள் செலவிடுகின்றனர். உத்திரபிரதேச மக்களின் சராசரி ஆயுட்காலமான 60 ஆண்டுகளில் ஆறில் ஒரு பங்கு இப்படியாக வீணாகிறது.
உரிமையைக் கேட்டால் போய் கடல்நீரை குடிநீராக்கு - என்பது சு. சாமியின் திமிர்வாதம், கேட்பதற்கே தமிழினத்திற்கு தகுதியில்லை - என்பது சமஸ் திமிரின் பிடிவாதம்.
வேட்டையாடும் ஆண்களும், வேட்டையாடப்படும் பெண்களும் உருவாக்கி வைத்திருக்கும் சமரசங்கள், காரியவாதங்கள், ஆசைகள் மற்றும் கலகங்களை மிகவும் நேர்த்தியான திரைக்கதையால் செறிவான உணர்ச்சியோட்டத்துடன் சித்தரிக்கிறது, ஒரு நாள் கூத்து திரைப்படம்.
உயிர் ஆதாரமாக விளங்கும் நீரை சேமிப்பதற்கு நீர் நீலைகளை பாதுகாக்காமல் பச்சமுத்து, ஜேப்பியார் போன்ற கல்வி கொள்ளையர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காகவும் நீர் நிலைகள் தாரைவார்க்கப்படுவது சரியா?
ஐக்கிய நாடு சபையின் வருடாந்திர அறிக்கையின் படி 2014-15 ம் ஆண்டில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பட்டினியில் வாடும் மக்களைக் கொண்டிருக்கும் நாடு இந்தியாதான்.
தேவாலயத்துக்கு நன்கொடை தருவாங்க. நமக்கு தரமாட்டாங்க. நமக்கு யாரும் சும்மா கொடுக்க வேண்டாங்க. ஒழைச்சதுக்கு கொடுத்தா போதும். உள்ளது ஒட்டுனா போதும்.

























