அடிப்படை வசதிகள் ஏதுமற்ற தனியார் பள்ளிகள் பெட்டிக்கடைகள் போல் பெருகி விட்டன.அவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வக்கில்லாத அரசு கருத்துக் கேட்பு கூட்டம் என்ற பெயரில் மக்களை ஏய்க்கிறது.
கோடிக்கணக்கான உழைக்கும் தலித்/பழங்குடி மக்களின் உழைப்பையும், பழங்குடி மக்களின் நிலங்களையும் கைப்பற்றி பெருநிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்கான டிரோஜன் குதிரைதான் இந்த தலித் தொழில் முனைவு நிதியம்.
தனது சாதி புனிதமானது, வேறு சாதி ரத்தம் கலக்காதது என்று நம்பிக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இத்தகைய சோதனையை மேற்கொண்டால் நிறைய கலவரங்கள் பிறப்பது உறுதி.
காலிக் குடங்களுடன் மறியல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது டெம்போக்களில் கேன் தண்ணீர் தலை நிமிர்ந்து சென்று கொண்டிருக்கிறது, தண்ணி கம்பெனிகாரனுக்கு வற்றாத நீருற்று அரசு கிணறு மட்டும் வறண்டது எப்படி?
சமூக அமைப்பின் பாதுகாவலர்களாக வலம் வரும் ராமதாஸ், காடுவெட்டி குரு, பாமக,வன்னியர் சங்கம், இதர ஆதிக்க சாதி அமைப்புகள் அனைவரும்தான் இந்த கள்ளக்காதல் கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும்.
பா.ம.க ரவுடிகள் நடத்திய வன்முறை, அச்சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எதிரானது எனக் காட்டி விட்டது.
நான் எத்தனையோ பேர அடிச்சிருக்கேன். எத்தனையோ பேர் என்கிட்டே கதறியிருக்காங்க. ஆனா வலின்னா என்னான்னு அன்னிக்குத் தான் தெரிஞ்சது.
ஒரு வேளை இந்த விழா அனுமதிக்கப்பட்டிருந்தால் வருங்கால முதல்வர் விஜய் வாழ்க என்ற முழக்கத்தை மேடையில் இருந்து ரசித்திருப்பார். அனுமதி ரத்தானதும் அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்கிறார்.
"எத்தனையோ முறை தாசில்தாரிடம் மனு கொடுக்க போன போது கண்டுக்காத அவர், ஒற்றுமையாக அமைப்பாக திரண்டு போராடுகின்ற போது, நம்மைத் தேடி வந்து எழுதி கொடுத்துச் செல்கிறார்"
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட சட்ட விரோதமாக பள்ளி நிர்வாகம் கேட்ட கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி 23 மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்.
தனியார் நிறுவனங்களுடனான ரயில்வே வாரியத்தின் உடன்படிக்கையின்படி 1500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை தனியார் முதலாளிகளுக்கு இலவசமாக வாரி வழங்கவுள்ளது.
அரசை எதிர்ப்பவரை சிறையன்றி வேறு எந்த விதத்தில் ஒடுக்க முடியும் என்றொரு கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். அதற்குப் பதில் உங்களது சமூக பொருளாதார வாழ்க்கையை முடக்குவது என்பதே.
மரக்காணத்தில் நடைபெற்ற சாதிவெறித் தாக்குதல் பற்றி மகஇக மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் நேரில் சென்று திரட்டிய அறிக்கை. தாமதமான போதிலும் பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி இதனை வெளியிடுகிறோம்.
அரசு கட்டணத்தை மட்டும் வாங்குகிறோம் என பள்ளி தாளாளர் உதவி ஆட்சியரிடம் உத்திரவாதம் அளித்து விட்டு இன்று அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்.
அமெரிக்க அரசின் அதிரகசிய உளவுத் துறையில் வேலை செய்த ஸ்னோடன், தன் சொந்த வாழ்க்கை சுகங்களை தியாகம் செய்து உலக மக்களுக்கான தன் கடமையைச் செய்ய முன் வந்தார்.













