நடைபெற்று வரும் இந்த மாணவர் போராட்டத்திலிருந்து, மக்கள் விடுதலையை நோக்கமாகக் கொண்ட, போராட்ட குணம் கொண்ட ஒரு புதிய தலைமுறை உருவாகவேண்டும். உருவாக்குவோம்.
தமிழகத்தில் மாணவர் போராட்டம் வீழாது என்பதை நிறுவும் முகமாக எமது மாணவர் முன்னணி தொடர்ந்து போராடும் என்பதையும் உறுதியோடு அறிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியும் மாணவர்கள் முழக்கமெழுப்பிக் கொண்டிருந்த போது, எந்த வித முகாந்திரமும் இன்றி மாணவர்கள் மீது தடியடி நடத்த தொடங்கியது போலீசு.
ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி 21.03.2013 அன்று சென்னையில் நடத்தவிருக்கும் சாலைமறியல் போராட்டங்களைப் பற்றிய விபரங்கள்.
இராஜபக்சேவை இரண்டாம் உலகப் போர்க்குற்றவாளிகளைத் தண்டித்த நூரம்பர்க் விசாரணை போன்ற சுதந்திரமான பொதுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் எழுப்பிய முழக்கங்கள் இந்திய இராணுவ மையத்தை பீரங்கிக் குண்டுகளாய் துளைத்தெடுத்தன.
அதிகாரிகளையும், பேராசிரியர்களையும் எதிர் கொண்டு மனம் தளராமல் 4 நாள் உண்ணாநிலை போராட்டத்தோடு திருப்தி அடையாமல் அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி ஆலோசிக்கும் ஆற்றல் அனைவரையும் உற்சாகப் படுத்துவதாக அமைந்தது.
ஈழப்போரை முன்னின்று நடத்திய, பல்லாயிரக்கணக்கான மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த போர்க்குற்றவாளி இராஜபக்சேவின் கூட்டாளியாக செயல்படுகின்ற காங்கிரசு கட்சிக்கு, மாணவர் போராட்டத்தை விமர்சிக்கவோ எதிர்க்கவோ அருகதையில்லை.
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் தொடர் நடவடிக்கையாக, ஏ.எம்.ஜெயின் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து, 20.03.2013 புதன்கிழமையன்று காலை 11.00 மணியளவில், பரங்கிமலையில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கவுள்ளது.
மாணவர்களின் போராட்டம் என்ற அளவில் சுருங்கிவிடாமல், பகுதி மக்கள், இளைஞர்களையும் இணைக்கும் வகையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர், எழும்பூர் சந்தோஷ்நகர் பகுதி மக்களை அணிதிரட்டி தாசப்பிரகாஷ் சிக்னல் அருகில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஐஐடி யில் தமிழீழ இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை தமிழக மாணவர்களோடு பிற மாநில மாணவர்களும் கலந்து கொண்டது இலங்கைப் பிரச்சனையை இனியும் தமிழர்களுடையது மட்டுமாக சுருக்கிப்பார்க்க முடியாது என்பதை நிறுவியது.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து போராடும் மாணவர்களை பார்த்து முதலைக்கண்ணீர் வடிக்கிறது தினமணி.
மாணவர்கள் மட்டுமே போராட்டக் களத்தில் இருந்ததை மாற்றி தொழிலாளர்களையும் போராட்டத்தில் இணைத்துள்ளது பு.ஜ.தொ.மு.
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி சார்பில் நடந்த விமான முற்றுகை போராட்டத்தின் படத் தொகுப்பு!
இந்தப் போராட்டத்தில் சென்னையின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்களும் மாணவிகளும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் போராட்ட அறிவிப்பு! சென்னையிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லும் விமானங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.











