Friday, January 2, 2026
மாணவி அனிதாவின் மரணத்துக்கு காரணமான மோடி மற்றும் எடப்பாடி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடத்துவங்கியுள்ளனர். தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. தமிழகம் மீண்டும் ஒரு டெல்லிக்கட்டை நடத்திவருகிறது!
அண்ணாமலை பல்கலையில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்த போராட்டத்தின் முன்னணியாளர்கள் 6 பேரைக் கைது செய்து போராட்டத்தைக் கலைக்க முயல்கிறது போலீசு. தர்மபுரியில் புமாஇமு தோழர்களான மலர்கொடி மற்றும் அன்பு ஆகியோரைக் கல்லூரி வாயிலில் பிரச்சாரம் செய்ததற்காகக் கைது செய்தது.
உச்சீநீதிமன்றத்தின் ‘தரம்’, மருத்துவக் கவுன்சிலின் ‘தரம்’, பாஜகவின் மூன்றாண்டு ஆட்சியின் ‘தரம்’ என இந்த தரங்கெட்டவர்களின் இரட்டை நாக்குகளை, சதிகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகின்றது இந்த உரை!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் மாணவர்கள் இன்று காலை தொடங்கி நடத்தி வரும் போராட்டத்தைக் கலைக்க போலீசு புல்டோசரைக் கொண்டு வந்து மிரட்டியது. மாணவர்களின் உறுதியான எதிர்ப்புக் காரணமாகப் பின்வாங்கியது.
விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள், போலீசு மிரட்டலுக்கு அடிபணியாமல் கல்லூரி வளாகத்தில் இன்று (04-09-2017) காலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி அரசு பாலிடெக்னிக் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்துசெய்ய கோரியும், அனிதாவின் படுகொலையை கண்டித்தும் 04/08/2017 இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் ,அனிதா படுகொலையை கண்டித்தும் திருச்சியில் உள்ள ஈ.வே.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம்
இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தைக் கிளர்ந்தெழச் செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் , மீண்டும் ஓர் மாணவர் எழுச்சியின் துவக்கப் புள்ளி.
மாணவி அனிதா படுகொலையைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்களைத் திரட்டி மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்டம்
நீட்டை ரத்து செய்யக் கோரியும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் விழுப்புரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் விழுப்புரம் அறிஞர் அண்ணா கல்லூரியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு.
அனிதா ’படுகொலையைக்’ கண்டித்தும், நீட் தேர்வுக்கு எதிராகவும் திருச்சி அனைத்துக் கல்லூரி மாணவர்கள் இன்று (04-09-2017) போராட்டம்
மாணவி அனிதா படுகொலைக்கு நீதி வேண்டும், பாஜக-அதிமுக கொலைகார அரசுகள் நீடிக்க அனுமதிக்ககூடாது என முழக்கங்கள் வைத்து மக்கள் அதிகாரம் மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது.
அனிதா படுகொலைக்கு மோடி அரசும், எடப்பாடி அரசும் தான் காரணம், தொடர்ச்சியாக நடக்கும் மோடி அரசின் ஜனநாயக விரோத - தமிழர் விரோதப் போக்கை - கண்டித்தும், NEET தேர்வில் இருந்து முற்றிலுமாக விலக்கு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக இப்போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும்.
இன்று தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கூட உயர்கல்வி படிக்கும் அளவிற்கு கல்விஉரிமை உள்ளதென்றால் அது அரசு கொடுத்த சலுகை அல்ல. பெரியார் போன்றவர்களும் இன்னும் பலர் போராடி பெற்ற உரிமைதான் இது.
நீட், காவோி மறுப்பு போன்றவற்றில் தமிழக்தை நம்ப வைத்து கழுத்தறுத்திருக்கிறது மோடி அரசு !

அண்மை பதிவுகள்