வீட்டுக்கே வராத அப்பாவுக்காக நீ எதுக்குமா தாலிய சுமந்துட்டு இருக்குறன்னு எங்க அம்மாட்ட பல தடவ கேட்ருக்கேன். நீ படிச்ச திமிர்ல பேசுற.. இதுதான் கௌரவம்னுச்சு..அம்மா! நெஞ்சை அறுக்கும் ஒரு உண்மைக் கதை!
மக்களுக்கு பரிசுத்த ஆவியை அடைய வழி சொல்லுமிடமாக கூறப்படும் திருச்சபைகள், பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமாக வேகமெடுத்து வளர்கின்றன.
இந்த அரசின் மெத்தனத்தால், சொந்த வீடு, நிலம் அனைத்தையும் இழந்து பீகாரிலிருந்து கிளம்பி தில்லி வீதிகளில் தங்கியிருக்கும் இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்.
சாதியத்தின் மனிதாபிமானமற்ற குரூரத்தையும் அதை தனது நிதனர்சனமாக உள்வாங்கியுள்ள தீண்டத்தகாத சமூகத்தின் கையறு நிலையையும் வெளிக்கொணர்கிறது, இந்நூல்.
காஷ்மீர் மக்கள் கல்லெறிவதற்கான காரணம் என்ன? மோடிக்கு நிகரான காஷ்மீர் மன்னர்களின் கதையிலிருந்து பார்த்தால்தான் அதன் காரணம் புரியும் !
உடற்பயிற்சியானது புதிய செல்களை உருவாக்குவதனாலோ அல்லது மூளையில் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துவதனாலோ மூளையை புத்தாக்கம் செய்கிறது. முடிவில் இது நேர்மறையான சிந்தனைக்கு பங்களிக்கிறது.
வியாசர்பாடி முல்லைநகர் கால்பந்தாட்டக் குழுவினர், எதிரணிகளுக்கு எதிராக பந்து விரட்டுவதோடு மட்டுமல்ல, தமக்கு முட்டுக்கட்டையிடும் மேட்டுக்குடி ஆதிக்கத்துக்கு எதிராகவும் வாழ்க்கையை விரட்டுகின்றனர்.
வாழ்க்கையே போராட்டமாகிப் போன வடசென்னையில் விளையாட்டும் போர்க்குணமாகத்தான் இருக்கும். வாருங்கள் கருப்பர் நகரத்தின் கால்பந்து சிங்கங்களை சந்திப்போம்.
சமூகத்தில் நாம் பொதுக்கருத்தாக கொண்டிருக்கும் பலவற்றையும் நம் சொந்த அனுபவங்கள் முறியடித்து விடுகின்றன. ஒரு பயணத்தில் உடன் வந்த இரு வேறு ஓலா ஓட்டுனர்களின் வாழ்க்கைப் பின்னணியை விவரிக்கிறது இந்த அனுபவப் பதிவு
காலாவின் வசூல் தோல்வி, லதா ரஜினி - ராஜ் தாக்கரே சந்திப்பு, வெண்ணிற ஆடை மூர்த்தி 80, என்.டி.ராமாராவ் வரலாறு, கமலின் விஜய் அரசியல், கிளாமர்-ஆபாசம், சோனாலியின் கேன்சர்……..வினவு சினிமா ஒரு வரிச் செய்திகள்!
ரெண்டு வருசத்துக்கு முன்ன வெள்ளம் வந்துது பாரு, அப்ப செத்துருக்க வேண்டியது நானு. திடீர்னு தண்ணி வந்து வீட்டு சாமானெல்லாம் அடிச்சுகினு போவுது. வா பக்கத்தூட்டு மாடி மேல போயிர்லான்னு இழுக்குறான் எம்புள்ள. மனுசாளப் போலதானே ஆடு, அதுகள விட்டுட்டு வரமாட்டேனுட்டேன்.
லைக்கா நிறுவனம் ஐரோப்பாவிலுள்ள புலம்பெயர் அகதிகளை சுரண்டி மோசடி செய்த பணத்தில்தான் இங்கு தமிழ் படங்களை தயாரித்து வெளியிடுகிறது. லைக்காவின் மோசடி பணத்தில் பயன் பெறுபவர்கள் தான் கமல்- ரஜினி – ஷங்கர் - ஜெயமோகன் போன்றோர்.
குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற நெருக்கடியில் உள்ள ஏழைப் பெண்கள் கருமுட்டைக் கொடையாளிகளாக தமது உடலை அழிக்குமாறு ஆக்கப்படுகின்றனர். இது அவர்களின் கதை!
"வெயில்ல அவங்க கேட்ட உணவை அரைமணி நேரத்தில கொடுப்போம், குடிக்க தண்ணி கூட வேணுமான்னு கேட்கமாட்டாங்க" - ஸ்விக்கி இளைஞர்களின் வாழ்க்கையை விளக்குகிறது இப்படத்தொகுப்பு.
ராம ராஜ்யம் என்பது வெறும் ஆன்மீகப் பரப்புரை அன்று, அது ஓர் அரசியல் முழக்கம். சங் பரிவாரத்தின் முதன்மையான நோக்கமே, ‘பாரத வர்ஷத்தில் ராம ராஜ்யத்தை’ அமைப்பதுதான். இந்நூலைப் படியுங்கள் ராமராஜ்யம் எப்படிப் பட்டதென்று எல்லோருக்கும் புரியும்.

























