நகர விரிவாக்கம்: அழிக்கப்படும் கிராமங்கள் – கிளர்ந்தெழும் மக்கள்
தோழர் சாந்தகுமார்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 07 | 1986 பிப்ரவரி 16 – 28 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில், அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 235 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. அங்கம் வகிக்கும் மகாயுதி கூட்டணி அபார வெற்றிபெற்றுள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில் பாசிச பா.ஜ.க. கும்பல்தான் வெற்றிபெறும் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான் எனினும் இத்துணை பிரம்மாண்டமான வெற்றியை யாரும் எதிர்பார்க்கவில்லை.
இன்னொருபுறத்தில், இந்தியா கூட்டணி கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியானது 49 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று இத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பல தொகுதிகளை எதிர்க்கட்சிகளிடம் பறிக்கொடுத்திருந்த பா.ஜ.க., ஆறு மாதங்களுக்குள்ளாக சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றியை சாத்தியப்படுத்தியிருப்பது பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
மேலும், அம்மாநிலத்தின் பிராந்தியக் கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் குதிரை பேரத்தின் மூலமும் தன்னுடைய ஏவல்படையான அமலாக்கத்துறையின் மூலமும் இரண்டாக உடைத்து ஒரு பிரிவை பா.ஜ.க. தன்னுடன் கூட்டணியில் இணைத்துக்கொண்டது. எனவே, இத்தேர்தல் இவ்விருகட்சிகளுக்கான வாழ்வா சாவா போராட்டமாக பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவின் மூலமாக எது உண்மையான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சிகள் இருந்தன.
இவையன்றி, வருகின்ற 2025-ஆம் ஆண்டில் பாசிச பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-இன் நூற்றாண்டு வருவதால் அதன் நாக்பூர் தலைமையகம் அமைந்துள்ள மகாராஷ்டிராவில் பா.ஜ.க. வெற்றிபெறுவது ஆர்.எஸ்.எஸ்-க்கு அவசியமானதாகும். மேலும், இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக விளங்கும் மும்பை நகரம் உள்ள மகாராஷ்டிரா மாநில வெற்றியை அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதியது. இவ்வாறு பல்வேறு காரணங்களால் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவு பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், மகாராஷ்டிர தேர்தல் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. கவர்ச்சிவாதம், சாதி, மதம் போன்றவற்றை பயன்படுத்தி பா.ஜ.க. கும்பலை வீழ்த்த முடியாது; பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு பாசிச சித்தாந்தத்திற்கு எதிரான மாற்று சித்தாந்தமும் மாற்றுத் திட்டமும் இன்றியமையாதது என்பதை இம்முடிவு உறுதியாக எடுத்துரைத்துள்ளது.
மக்களின் பா.ஜ.க. எதிர்ப்புணர்வும்
பாசிசக் கும்பலின் சதித்தனங்களும்
மகாராஷ்டிராவானது உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதியையும் உலகில் அதிகளவில் கோடீஸ்வரர்கள் வாழும் நகரத்தையும் ஒருங்கே பெற்றுள்ள மாநிலமாகும். இந்தியாவின் பணக்கார மாநிலம் என சொல்லப்படுகின்ற மகாராஷ்டிராவில் 17.4 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் எளிமையாக கூற வேண்டுமெனில், அம்பானி தன் மகனுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவில் உல்லாச திருமணம் செய்வதும் ஆண்டுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அக்கம்பக்கமாக நடக்கும் அளவிற்கு அம்மாநிலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு உச்சத்தில் உள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிராவின் முதுகெலும்பு என்று சொல்லப்படுகின்ற விவசாயம் கார்ப்பரேட்மயமாக்கத்தால் நெருக்கடியை எதிர்க்கொண்டிருப்பதால், உணவு, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத் தேவைகளுக்கு விவசாயத்தையே நம்பியுள்ள பெரும்பான்மை மக்களின் வாழ்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, வெங்காய ஏற்றுமதிக்கு பா.ஜ.க. அரசு தடை விதித்தது; வெங்காய ஏற்றுமதிக்கான வரியை பல மடங்கு உயர்த்தியது; சோயாபீன், சோளம் போன்ற விளைப்பொருட்கள் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவான விலையில் சந்தையில் கொள்முதல் செய்யப்படுவது போன்றவை விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இன்னொருபுறம், மகாராஷ்டிராவில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு 10.8 சதவிகிதம் வரை அதிகரித்து இளைஞர்களை வதைக்கிறது. சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை 31 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவிற்கான பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை பாசிச மோடி கும்பல் குஜராத்திற்கு திசைதிருப்பிவிடும் செய்தி சமீபத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இவையன்றி, இந்துமதவெறித் தாக்குதல்களுக்கு எதிரான இஸ்லாமிய மக்களின் எதிர்ப்புணர்வு, விலையேற்றம், வாழ்வாதார நசிவிற்கெதிரான பெரும்பான்மை மக்களின் மனநிலை, வேலையின்மை, நுழைவுத்தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான மாணவர்கள்-இளைஞர்களின் தொடர் போராட்டங்கள்; ஓ.பி.சி. இடஒதுக்கீடுக் கோரும் மராத்தா சாதியினர் போராட்டம் என அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பா.ஜ.க. எதிர்ப்புணர்வு உள்ளது.
விவசாயிகளின் எதிர்ப்புக்கு அஞ்சி நாடாளுமன்றத் தேர்தல் சமயத்திலேயே வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கிய பாசிசக் கும்பல், வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரியையும் குறைத்தது. செப்டம்பர் மாதத்தில் விவசாயிகளின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்காக கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி மற்றும் சுங்க வரியை உயர்த்தியது.
கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான உதவித்தொகை ரூ.12,000-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்படும்; பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும்; 7.5 குதிரைத்திறன் கொண்ட விவசாயப் பம்புகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்; பாவந்தர் யோஜனா திட்டத்தின் மூலம் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் சந்தை விலைக்கும் இடையிலான வித்தியாசத் தொகை விவசாயிகளுக்கு செலுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிவாத வாக்குறுதிகளை பா.ஜ.க. அள்ளிவிட்டது.
அதேபோல், பெண் வாக்காளர்களை குறிவைத்து 18 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் “லட்கி பெஹ்னா யோஜனா” திட்டத்தை அமல்படுத்தியது. 2.25 கோடி பெண்களின் (மொத்த பெண்களில் 55 சதவிகிதம்) வங்கிக் கணக்குகளில் இந்த ஐந்து மாத காலத்தில் ரூ.7,500 வரை பணம் செலுத்தியது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் இத்தொகை ரூ.2,100-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தது. “அக்ஷய் அன்ன யோஜனா” திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் சமையலறை ரேஷன்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்தது. இவை கிராமப்புற பெண் வாக்காளர்கள் மத்தியில் தாக்கம் செலுத்தியதன் விளைவாக மகாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்தனர்.
அதேபோல், பத்து லட்சம் இளைஞர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்; 25 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்படும்; மகாராஷ்டிராவில் தொழில்துறை தேவைகளை பூர்த்திசெய்ய திறன் கணக்கெடுப்பு நடத்தப்படும் உள்ளிட்டு இளைஞர்களை மையப்படுத்திய கவர்ச்சிவாத வாக்குறுதிகளையும் அளித்தது.
இன்னொருபுறம், கவர்ச்சிவாதத் திட்டங்களின் மூலம் மக்களின் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்தும் இந்த அபாயமிக்க போக்கை மக்கள் மத்தியில் கொண்டுசென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய எதிர்க்கட்சிகள், பா.ஜ.க-வுடன் போட்டிபோட்டுக்கொண்டு தாங்களும் கவர்ச்சிவாத வாக்குறுதிகளை வாரியிறைத்தன. சொந்தத் திட்டம் இல்லாமல் திணறிய எதிர்க்கட்சிகள், பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட ஒவ்வொரு வாக்குறுதியிலும் பா.ஜ.க. அறிவித்ததை விட கூடுதல் பணம் தருவதாக அறிவித்து பா.ஜ.க-வின் திட்டத்திலேயே பீடு நடைப்போட்டன.
இந்துத்துவப் பிரச்சாரமும்
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. முரண்பாடும்
மகாராஷ்டிராவில் 47 சட்டமன்றத் தொகுதிகளில் இஸ்லாமிய மக்கள் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் அளவிற்கு அடர்த்தியாக வசித்து வருகின்றனர். இம்மக்கள் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்தது இத்தொகுதிகளில் பா.ஜ.க-வின் தோல்வியை தீர்மானித்தது. தற்போதைய சட்டமன்றத் தேர்தலின் போது இந்த வாக்குவங்கியின் மீது கல்லெறிய முடிவெடுத்த காவிக் கும்பல், இத்தேர்தலில் அப்பட்டமான இந்துமதவெறி-இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் இறங்கியது.
இத்தொகுதிகளில் உள்ள இஸ்லாமிய மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை தோற்கடிப்பதற்காக “வாக்கு ஜிகாத்”-இல் ஈடுபட்டதாகவும், தந்திரமாக வாக்களித்து எதிர்க்கட்சிகளை எட்டு மக்களவை தொகுதிகளில் வெற்றிபெற வைத்ததாகவும் அபாண்டமாக பிரச்சாரம் செய்தது. இதனால் இந்துக்களின் வாக்கு பா.ஜ.க-வை நோக்கி ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க. தலைவரும் மகாராஷ்டிரா துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் மேடைகள்தோறும் வெறுப்பை கக்கினார்.
மகாராஷ்டிரத் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னணியில் திகழ்ந்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆர்.எஸ்.எஸ். வகுத்துக்கொடுத்த “படேங்கே தோ கேடேங்கே” (நாம் பிரிக்கப்பட்டால் படுகொலை செய்யப்படுவோம்) என்ற இஸ்லாமிய வெறுப்பு முழக்கத்தை கையிலெடுத்தார். இந்த அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பு முழக்கத்தை மோடி உட்பட பா.ஜ.க-வினர் பலரும் பயன்படுத்தினர். ஆனால், ஒரு கட்டத்தில் இம்முழக்கம் பாசிசக் கும்பலுக்கே நெருக்கடியாக மாறியது. இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளில், இம்முழக்கங்கள் தங்களுக்கு எதிராக திரும்பும் என்பதையுணர்ந்த பா.ஜ.க. தலைவர்களும் கூட்டணி கட்சியினரும் பொதுவெளியிலேயே எதிர்ப்பு தெரிவித்தனர்.

பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் “ஃபிரண்ட்லைன்” இதழுக்கு அளித்த நேர்காணலில், மகாராஷ்டிரா ஒரு முற்போக்கான மாநிலம், இதுபோன்ற விசயங்கள் அங்கு வேலை செய்யாது என்று தெரிவித்திருந்தார். “இந்தக் கதையை வட இந்தியாவில் இருந்து மகாராஷ்டிராவுக்குக் கொண்டு வரத் தேவையில்லை” என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். முன்னாள் பா.ஜ.க. முதல்வரும் தற்போதைய மகாராஷ்டிர சட்டமன்ற மேலவை உறுப்பினருமான பங்கஜா முண்டே, சமீபத்தில் காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த ராஜ்யசபா எம்.பி. அசோக் சவான் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பா.ஜ.க. முகாமிற்குள்ளயே எதிர்ப்பு தீவிரமடைவதை உணர்ந்த பாசிசக் கும்பல் உடனடியாக முழக்கத்தை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதனையடுத்து, தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருக்கும்போதே “ஏக் ஹை தோ சேஃப் ஹை” (நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்) என முழக்கத்தை மாற்றினார், மோடி. மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், தேர்தல் உரைகள் மூலம் புதிய முழக்கத்தைப் பதிய வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்னொருபுறத்தில், ஆர்.எஸ்.எஸ்-இன் கள அணித்திரட்டலும் சத்தமின்றி நடந்துகொண்டிருந்தது. இத்தேர்தலில் ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் இறக்கிவிடப்பட்டு 65-க்கும் அதிகமான நிழல் அமைப்புகள் மூலம் 70,000 கூட்டங்கள் வரை நடத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஷாக்கா கூட்டங்கள், தனிப்பட்ட கலந்துரையாடல், வீடு வீடாக பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் கிராமங்களிலும் நகரங்களிலும் அணித்திரட்டல் நடந்தது. தேர்தல் பணிக்காக செயல்திறனை அதிகரிக்கும் வகையில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் மேம்படுத்தப்பட்டதாகவும் நூறு ஆண்டுகால வரலாற்றில் தேர்தலுக்காக இவ்வளவு அயராது உழைப்பது இதுவே முதன்முறை என்றும் திலீப் தியோதர் என்ற ஆர்.எஸ்.எஸ்-காரர் கருத்து தெரிவித்தார்.
இருப்பினும் ஆர்.எஸ்.எஸ்-இன் இப்பிரச்சாரம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிசக் கும்பலுக்குள்ளான முரண்பாட்டையும் பளிச்சென வெளிக்காட்டியது. நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் மோடி-அமித்ஷா கும்பல் ஆர்.எஸ்.எஸ்-ஐ ஓரங்கட்டிய நிலையில், அத்தேர்தலில் மோடி-அமித்ஷாவால் தனிபெரும்பான்மையைக் கூட பெற முடியாததையடுத்து ஆர்.எஸ்.எஸ்-இன் கை மேலோங்கியது. அதன் தொடர்ச்சியாக மோடியை புறக்கணித்து ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வெற்றியை ஆர்.எஸ்.எஸ். சாத்தியப்படுத்திய நிலையில், இது மோடி அல்லாத பா.ஜ.க-வின் வெற்றி என்றும் ஆர்.எஸ்.எஸ். வகைப்பட்ட தேர்தல் என்றும் பிரச்சாரம் செய்தது.
மகாராஷ்டிரா தேர்தலையும் ஆர்.எஸ்.எஸ். வகைப்பட்ட தேர்தலாகவே நடத்த எத்தனித்த ஆர்.எஸ்.எஸ்., அதன் குண்டர்களைக் கொண்டு தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய வைத்தது. யோகி ஆதித்யநாத்-தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மோடி – அமித்ஷா தரப்புகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதிலும் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்ததிலும் இம்முரண்பாட்டை காண முடிந்தது.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், மகாராஷ்டிரா வெற்றிக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ். என்றும் ஜார்க்கண்ட் தோல்விக்கு காரணம் மோடியை முன்னிறுத்தியது என்றும் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் பத்திரிகைகளில் எழுதினர். மொத்தத்தில், மோடியின் முகத்தை காட்டுவதன் மூலம் இனியும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதை நாடாளுமன்றத் தேர்தலின்போதே மக்கள் உணர்த்திவிட்ட நிலையில், இனி தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி தேவையில்லை, ஆர்.எஸ்.எஸ்-தான் வெற்றியை பெற்றுதரும் என்ற மனநிலையை பாசிச முகாமிற்குள் உருவாக்க ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக முயற்சிக்கிறது.
ஆனால், பாசிசக் கும்பலின் இந்த அப்பட்டமான இந்துமுனைவாக்க அணித்திரட்டலுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் மாற்று சித்தாந்தத்தின் அடிப்படையில் மக்களை அணித்திரட்டவில்லை. குறைந்தபட்சம் இஸ்லாமிய மக்களை கூட அணித்திரட்டவோ அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவோ எதிர்க்கட்சிகள் முயலவில்லை. இத்தேர்தலில் மக்களின் வாக்குப்பதிவு அதிகரித்துள்ள நிலையில், இஸ்லாமிய மக்களின் வாக்குப்பதிவு பெரியளவில் குறைந்திருப்பது இதனை நிரூபிக்கிறது. சொல்லப்போனால், “தலித், ஓ.பி.சி. மக்களின் இடஒதுக்கீட்டை பறித்து அதனை இஸ்லாமிய மக்களுக்கு கொடுக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது” என பாசிசக் கும்பல் பொய் பிரச்சாரம் செய்ததையடுத்து, அதற்கு பலியாகி தங்களிடம் அப்படியொரு திட்டமில்லை என தன்னிலை விளக்கம் கொடுக்கும் அளவிற்கு எதிர்க்கட்சிகள் தற்காப்பு நிலையில் இருந்தன.
2023-ஆம் ஆண்டு இறுதியில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முதலாக எதிர்க்கட்சிகளின் சாதிவாரிக் கணக்கெடுப்பு கோரும் பிரச்சாரமானது தேர்தல் களத்தில் பாசிசக் கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் தலித் மற்றும் ஓ.பி.சி. மக்களின் வாக்குகள் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அறுவடையாக காரணமாக இருந்தது. இதனை உணர்ந்துக்கொண்ட பாசிசக் கும்பல் இத்தேர்தலில் அப்பிரச்சாரத்திற்கு வேட்டு வைத்ததோடு, சாதிமுனைவாக்கத்தில் கைத்தேர்ந்தவர்கள் பாசிஸ்டுகளே என்பதை நிரூபித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மகாராஷ்டிராவில் அடிவாங்கியதற்கு மராத்தா மக்கள் போராட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. அதாவது, தங்களை கும்பி சாதியில் இணைத்து பிற பிற்படுத்தப்பட்ட பிரிவின்கீழ் (Other Backward Classes) இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனப் போராடிவரும் மராத்தா மக்களின் கோரிக்கைக்கு பா.ஜ.க. செவிசாய்க்காதது அம்மக்களை ஆத்திரமூட்டியது. இது நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலித்த நிலையில் தற்போதைய சட்டமன்றத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மராத்தா மக்களின் போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் மனோஜ் பாட்டீல் அறிவித்தார்.
இதனையடுத்து, மொத்த மக்கள்தொகையில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள மராத்தா மக்களுக்கு எதிராக 38 சதவிகிதமாக உள்ள ஓ.பி.சி. மக்களை அணித்திரட்ட பா.ஜ.க. முடிவெடுத்தது. ஏற்கெனவே பா.ஜ.க-வின் அடித்தளமாக இருந்துவரும் இம்மக்கள், மராத்தா சாதியினருக்கு ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்ப்பது பாசிசக் கும்பலுக்கு மேலும் சாதகமாக அமைந்தது.
பல்வேறு ஓ.பி.சி. பிரிவினருடன் பா.ஜ.க. தலைவர்கள் 330-க்கும் அதிகமான சந்திப்புகளை நடத்தினர். கிரீமிலேயர் அல்லாத ஓ.பி.சி. மக்களின் வருமான வரம்பை ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக அறிவிக்கும்படி ஒன்றிய அரசிடம் கேட்டுக்கொள்வதாக மாநில பா.ஜ.க. அரசு அறிவித்தது. மகாராஷ்டிரா மாநிலப் பட்டியலில் ஓ.பி.சி-க்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஏழு சாதியினரை மத்திய ஓ.பி.சி. பட்டியலில் இணைக்குமாறும் ஓ.பி.சி. கமிஷனுக்கு பரிந்துரைத்தது. இதன்மூலம் இச்சாதியினர் ஒன்றிய அரசின் திட்டங்களிலும் நியமனங்களிலும் பயன்பெறுவர் என ஊதிப்பெருக்கி ஓ.பி.சி. மக்களின் வாக்குகளை அறுவடை செய்தது. 1980-களில் மகாராஷ்டிராவில் காலூன்றுவதற்காக ஆர்.எஸ்.எஸ். கையிலெடுத்த மாலி, தங்கர் மற்றும் வஞ்சரி (Mali – Dhangar – Vanjari) பிரிவு ஓ.பி.சி. மக்களை மையப்படுத்தி வேலைசெய்யும் “மாதவ்” (MADHAV) பார்முலாவை இத்தேர்தலில் பயன்படுத்தியது.
மறுபுறம், பாசிசக் கும்பல் சாதிமுனைவாக்கம் செய்து மக்களை பிளவுப்படுத்துவதை முறியடிக்காமல் வேடிக்கை பார்த்த எதிர்க்கட்சிகள், தங்கள் பங்கிற்கு மராத்தா மக்களை மையப்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தன. இது வழக்கம்போல எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் பாசிசக் கும்பலுக்கு ஆதரவாகவுமே சென்று முடிந்தது.
மேலும், “நாம் பிரிந்தால் அழிக்கப்படுவோம்” என ஓ.பி.சி. மக்கள் மத்தியில் மதவெறிப் பிரச்சாரம் செய்த காவிக் கும்பல் “மக்களை பிளவுப்படுத்தத்தான் காங்கிரஸ் சாதிவாரிக் கணக்கெடுப்பை கோருகிறது” என்ற வெறுப்பு பிரச்சாரத்தையும் அதனுடன் இணைத்தது. இதனால் எதிர்க்கட்சிகள் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், “நாங்கள் மக்களை பிளவுப்படுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு” கோரவில்லை என விளக்கமளிக்கத் தொடங்கினார் மல்லிகார்ஜுன கார்கே. சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல்-பொருளாதார முக்கியத்துவத்தை உணர்த்தி அதனை மக்கள் கோரிக்கையாக மாற்றுவதற்கு பதிலாக, ராகுல் காந்தியும் காங்கிரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பை வெறும் தேர்தல் வியூகமாக பயன்படுத்திவந்த நிலையில் பாசிசக் கும்பல் இத்தேர்தலில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதேபோல், “400 இடங்களில் வெற்றிபெற்றால் பா.ஜ.க. அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிடும், இடஒதுக்கீட்டை பறித்துவிடும்” என நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் முன்னெடுத்த பிரச்சாரம் இந்தியா கூட்டணிக்கு தலித் மக்களின் வாக்குகளைப் பெற்றுத்தந்தது. இதன்மூலம் தலித் மக்களின் வாக்குவங்கி சரிவதை உணர்ந்துகொண்ட பாசிசக் கும்பல், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தலித் மக்களுக்கு உள்-இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது.
தேர்தல் முடிவில் பட்டியல் சாதி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 29 தொகுதிகளில் 21 தொகுதிகளிலும், பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 24 தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் பா.ஜ.க-வின் மகாயுதி கூட்டணி வெற்றிபெற்றிருப்பது பா.ஜ.க-வின் நரித்தனங்களுக்கு தலித் மக்கள், பழங்குடி மக்கள் பலியாகிருப்பதையே காட்டுகிறது.
தேர்தல் மோசடிகளே காரணம், எதார்த்தத்தைக் காண மறுக்கும் எதிர்க்கட்சிகள்
வழக்கம்போல் இத்தேர்தலிலும் பாசிசக் கும்பல் பல்வேறு தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து நவம்பர் 29 அன்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி அளித்த புகாரில் பல்வேறு விசயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடைப்பட்ட ஜூலை 2024 முதல் நவம்பர் 2024 வரையிலான காலத்தில் 47 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்; சராசரியாக 50,000 வாக்காளர்கள் அதிகரித்த 50 சட்டமன்றத் தொகுதிகளில் 47 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அதேபோல், தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, மகாராஷ்டிரத் தேர்தல் நாளன்று மாலை 5:00 மணியளவில் 58.22 சதவிகிதம் வாக்குப்பதிவாகியிருந்த நிலையில் இரவு 11:30 மணிக்கு 65.02 சதவிகித வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. அதாவது 5:00 மணிக்கு பிறகு 76 லட்சம் மக்கள் வரை வாக்கு செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, வாக்கு எண்ணிக்கை நாளன்று வாக்குப்பதிவு விகிதம் 66.05 சதவிகிதம் என மீண்டும் உயர்த்தி தெரிவிக்கப்பட்டதன்படி, இந்த எண்ணிக்கையில் மேலும் 10 லட்சம் வாக்காளர்கள் இணைகின்றனர். ஒரு நபர் வாக்களிக்க இரண்டு நிமிடங்கள் என எடுத்துக்கொண்டாலும் 5 மணிக்குப் பிறகு 86 லட்சம் மக்கள் வாக்களிக்க சாத்தியமில்லை.
ஆக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிரா மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பாசிசக் கும்பல், தேர்தல் தில்லுமுல்லுகள், கவர்ச்சிவாத வாக்குறுதிகள், சாதி-மத முனைவாக்கம் மூலம் தற்போது மீண்டும் வெற்றிபெற்று அம்மாநிலத்தில் தனது பாசிசப் பேயாட்சியை தக்கவைத்துள்ளது.
ஆனால், எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்ததற்கான காரணங்களைப் பரிசீலிக்காமல் தேர்தல் மோசடிகள் மட்டும்தான் பா.ஜ.க. வெற்றிபெறக் காரணம் என்பது போல் எதிர்க்கட்சியினரும் இந்தியா கூட்டணி ஆதாரவாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தங்கள் தோல்விக்கு தேர்தல் மோசடிகள் மட்டும்தான் காரணம் என எதிர்க்கட்சிகள் கடந்துசெல்வதும் தொடர்கதையாகி வருகிறது. எதார்த்தத்தைக் காண மறுக்கும் இந்த அகநிலைவாதப் போக்கானது எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் தோல்வியை சந்திக்கவே வழிவகுக்கிறது. இங்குதான் எதிர்க்கட்சிகளிடம் பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கான மாற்றுக்கொள்கையும் உறுதியான மாற்றுத் திட்டமும் இல்லாததன் பலவீனம் வெளிப்படுகிறது.
இத்தேர்தலில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களைப் பெற்றுள்ள நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில் சரத் பவார் தலைமையிலான கட்சி பத்து இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
இதனையடுத்து இத்தேர்தல் முடிவு தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்பதை காட்டியுள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். ஊடகங்களும் பல அரசியல் விமர்சகர்களும் இதே கருத்தை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் சொல்லும் பொருண்மையில் இல்லை எனினும் சித்தாந்த அடிப்படையில் பார்க்கையில், ஏக்நாத் ஷிண்டே சொல்வதில் உண்மை இருக்கிறது.
உத்தவ் தாக்கரேவின் தந்தை பால்தாக்கரேவால் 1966-இல் மராத்திய இனவெறி பாசிசக் கட்சியாக தொடங்கப்பட்டதே சிவசேனா. மராத்திய மன்னன் சிவாஜியின் படையாக அறிவித்துக் கொண்ட இக்கட்சி, ‘வந்தேறி’கள் எனக் கூறி குஜராத்தியர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் மீதும் அவர்களது கடைகள், உணவகங்கள் மீதும் தாக்குதலை நடத்தியது. 1969-இல் மும்பையில் குடியேறிய கர்நாடகத்தவர் மீது கொடியத் தாக்குதல் நடத்தி 59 பேரைக் கொன்று 274 பேரைப் படுகாயப்படுத்தியது. அக்காலத்தில் மும்பையில் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தைக் கண்டு அரசும் பெருமுதலாளிகளும் அஞ்சிய நிலையில் அவர்களுக்கு ஆதரவாக, போராடும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் புற்றுநோயைப் போன்றவர்கள், அவர்களை அழிக்கும்வரை போராட்டம் ஓயாது என மதவெறியைத் தூண்டுவது; தாழ்த்தப்பட்ட மக்கள் மீது குண்டர்களை ஏவித் தாக்குவது; காதலர் தினத்தில் காதலர்களைத் தாக்குவது; கலவரங்களை கட்டவிழ்த்து விடுவது என மராட்டிய ஆர்.எஸ்.எஸ். போலத்தான் சிவசேனா செயல்பட்டுவந்தது.
தன்னுடன் சித்தாந்த ஒற்றுமை கொண்ட பா.ஜ.க-வுடன் ஆண்டாண்டு காலமாக கூட்டணி வைத்து ஆட்சி நடத்திய சிவசேனா, 2019 நாடாளுமன்றத் தேர்தலையும் பா.ஜ.க. கூட்டணியுடனே சந்தித்தது. அத்தேர்தலில் அக்கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற நிலையில், முதல்வர் பதவிக்கான லாவணியில் உடன்பாடு ஏற்படாததால் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, அதுவரையிலும் கடுமையாக விமர்சித்துவந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைத்தது.
இந்நிலையில்தான், பா.ஜ.க. பின்புலத்தில் தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட பிரிவினர், உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா பால்தாக்கரேவின் பாதையிலிருந்து விலகிவிட்டது என்று கூறி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சியை உடைத்துவிட்டு வெளியேறினர். தற்போதுவரை இப்பிரிவு தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றே கூறிவருகிறது. பெரும்பான்மை அடிப்படையிலும் வெற்றிபெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையிலும் அவர்கள் சொல்வது ஒருபுறமிருந்தாலும், சித்தாந்த அடிப்படையில் சிவசேனாவின் வழியை பின்பற்றுபவர்கள் ஷிண்டே பிரிவினரே.
இந்நிலையில், தேர்தல் முடிவைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள், அரசியல் விமர்சகர்கள் பலரும் உத்தவ் சிவசேனா இனிமேல் நீடிக்குமா? என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், இன்றைய பாசிசச் சூழலில், மறுகாலனியாக்கக் கொள்கைகளையும் தீவிரமாக அமல்படுத்திவரும் பாசிசக் கும்பலுக்கு மாற்றாக அதே மறுகாலனியாக்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும், மாற்றுச் சித்தாந்தம் இல்லாத கட்சிகளால் நீடிக்க முடியாது. இந்த பின்னணியிலிருந்துதான் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இது சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும்.
இன்னொருபுறம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஒழித்துக்கட்டுவதற்காகவே உருவாக்கப்பட்ட ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட ‘கடமை’ நிறைவடைந்துவிட்ட நிலையில், அக்கட்சிகளின் வாழ்வும் நெடுநாட்களுக்கு இல்லை.
ஏனெனில், இத்தேர்தலில் பா.ஜ.க. மட்டும் தனியாக 132 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது என்பது மிகவும் முக்கியமானது. மகாராஷ்டிராவில் தனிப்பெரும்பான்மை பெற 145 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், பா.ஜ.க. மட்டும் 132 தொகுதிகளில் வெற்றிபெற்றிருப்பது அம்மாநிலத்தில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வளர்ந்திருப்பதையே காட்டுகிறது.
தனிப்பெரும்பான்மையை பெறுவதற்கு பா.ஜ.க-விற்கு இன்னும் 13 இடங்களே தேவைப்படும் நிலையில், ஆட்சியமைக்க ஏதேனும் ஒரு கட்சியின் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலைக்கு பா.ஜ.க. வந்துள்ளது. அந்தவகையில், பாசிச பா.ஜ.க-விற்கு அடிபணிந்து அதன் தொங்குசதையாக இருப்பதற்கு இக்கட்சிகள் உடன்படும்வரைதான் இக்கட்சிகளையும் பா.ஜ.க. அனுமதிக்கும் என்பதை தனியாக விளக்க வேண்டியதில்லை. மொத்தத்தில், குஜராத்தைப் போல மகாராஷ்டிராவில் ஒரு கட்சி சர்வாதிகாரம் என்ற நிலையை நோக்கி பாசிசக் கும்பல் நகர்ந்துள்ளது.
பாசிச சக்திகளுடன்
சமாதான-சகவாழ்வு சாத்தியமற்றது
‘ஏக் பாரத், பி.ஜே.பி. பாரத்’ (ஒரு இந்தியா, பா.ஜ.க-வின் இந்தியா) என்ற முழக்கத்தின் கீழ் ஒரு கட்சி சர்வாதிகாரம் என்ற இலக்கில் பிற கட்சிகளை பாசிசக் கும்பல் ஒழித்துக்கட்டுவது இந்தியா முழுவதுமே நடந்துக் கொண்டிருக்கிறது. இது காவி-கார்ப்பரேட் ஆகிய இரண்டு அம்சங்களிலும் நடந்து வருகிறது. குறிப்பாக, இந்துராஷ்டிரம், அகண்ட பாரதம் என்ற நெடுங்கால இலக்குடன் இந்துத்துவ சித்தாந்தத்தின் அடிப்படையில் பயணித்துக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் பிற இந்துத்துவ, மிதவாத இந்துத்துவ, பிற தாராளவாத சித்தாந்தக் கட்சிகள் அனைத்தையும் ஒழித்துக்கட்டுகிறது.
அதேபோல், கட்சிகளை ஒழித்துக்கட்டுவது என்ற பெயரில், அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட்டுகளின் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக, மற்ற கார்ப்பரேட்டுகளையும் ஒழித்துக்கட்டுவதே அதன் நோக்கம்.

இத்தேர்தல் சமயத்தில், மகாராஷ்டிராவில் 2019 தேர்தல் முடிவிற்கு பிறகு யார் ஆட்சியமைப்பது என்பது தொடர்பாக அமித்ஷா, தேவேந்திர பட்னாவிஸ், சரத்பவார், அஜித் பவார் ஆகியோர் இடையிலான பேச்சுவார்த்தை அதானியின் வீட்டில்தான் நடந்தது என்ற அதிர்ச்சிகரமான உண்மையை “தி நியூஸ் மினிட்” யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் அஜித் பவாரும் சரத் பவாரும் தெரிவித்தனர். அச்சமயத்தில் ஆட்சியைப் பிடிக்க பாசிசக் கும்பல் பல்வேறு சதித்தனங்களில் ஈடுபட்ட நிலையில், அஜித் பவாரின் நேர்காணலின் மூலம் ஒரு மாநிலத்தில் கட்சிகளை உடைத்து ஆட்சியை கலைக்கும் சதித்தனத்தில் கார்ப்பரேட் முதலாளியான அதானி நேரடியாக ஈடுபட்டிருப்பது அம்பலமானது.
எனவே, ஆர்.எஸ்.எஸ். கும்பலுடனான கள்ளக்கூட்டு, அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலுடனான ரகசிய உறவு போன்றவற்றை பின்பற்றிக்கொண்டே, அதாவது பாசிசக் கும்பலுடன் சமாதான சக வாழ்வு வாழ்ந்துகொண்டே பாசிச எதிர்ப்பு என்பது எதார்த்தத்திற்கு புறம்பானது. உண்மையில் இவ்வாறு பக்கவாட்டில் எதிர்ப்பது அக்கட்சிகளின் பிளவுகளுக்கே வழிவகுக்கும் என்பதையே அனுபவங்கள் உணர்த்துகின்றன. இந்துத்துவத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் மராட்டிய வெர்ஷனாக இருந்த சிவசேனாவிற்கும் அதானியுடன் நெருக்கமான உறவை கடைபிடித்துவரும் சரத் பவாருக்குமே இந்த நிலை என்றால் இந்தியாவின் பிற கட்சிகளின் நிலையை விளக்க வேண்டியதில்லை.
எனவே, பாசிச எதிர்ப்பு சித்தாந்தம் மற்றும் மாற்றுத் திட்டத்தை முன்வைத்து மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுகின்ற மக்களுடன் இணைந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் ஒரே வழி. அவ்வாறு முன்வைக்காமல் பாசிசக் கும்பலை வீழ்த்துவது மட்டுமல்ல, குறைந்தபட்சம் தங்களது கட்சியை தக்கவைப்பது கூட சாத்தியமற்றது என்பதையே மகாராஷ்டிரா தேர்தல் முடிவு உணர்த்துகிறது.
![]()
துலிபா
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

அண்ணா பல்கலைக்கழக மாணவி, பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியாகி மாணவி குறித்த தகவல்கள் கசியவிடப்பட்டது அனைவரையும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட மாணவிகள் இனி புகாரளிக்க முன்வராத வகையில் தடுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலாகவே இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்துள்ளன.
கேட்கும்போதே கோபமூட்டும் இச்செய்திகளுடன் தி.மு.க. அரசு, தமிழ்நாடு போலீசு, தி.மு.க. ஐ.டி. ஊடகங்களின் அணுகுமுறைகள் மேலும் மேலும் ஆத்திரங்கொள்ளச் செய்கின்றன.
மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே வெளியாள் ஒருவனால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட இச்சம்பவத்தை, “ஒரு மாணவியின் தனிப்பட்ட பிரச்சினை, அதனை ஏன் அரசியலாக்குகிறீர்கள்” என்றார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன். “பல்கலைக்கழகத்தில் இருக்கும் முட்புதர்களை அகற்றப் போகிறோம்” என்று திமிரடியாகப் பேசி பிரச்சினையை திசைத்திருப்ப முயற்சித்தார். தி.மு.க-வின் ஐ.டி. அணியும் இதை அப்படியே வாந்தியெடுத்துப் பிரச்சாரம் செய்தது.
காவல்துறை ஆணையர் அருணோ, அமைச்சரைவிட இன்னும் ஒருபடி மேலே சென்று, ‘தொழில்நுட்பக் கோளாறு’ காரணமாகவே முதல் தகவல் அறிக்கை வெளியானது என்று அதிகாரத் திமிரில் பேசினார்.
பல்கலைக்கழக நிர்வாகமோ இச்சம்பவம் குறித்து தற்போதுவரை வாய்திறக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் இருக்கும் 80 சதவிகித சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்படவில்லை என்ற செய்தி, இந்த அரசுக் கட்டமைப்பு எந்த அளவிற்கு செயலிழந்து போயுள்ளது என்பதைக் காட்டுகின்றது.
மற்றொருபுறம், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஞானசேகரன், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினுடனும் தி.மு.க-வின் முக்கிய அமைச்சர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்து நாறியது. அதன்பிறகு அந்த குற்றவாளி ஞானசேகரனுக்கும் தி.மு.க-விற்கும் தொடர்பில்லை என்ற மழுப்பலான பதிலே தி.மு.க. தரப்பிலிருந்து அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், பிரபலமான அண்ணா பல்கலைக்கழகத்தில் இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அனைத்து ஊடகங்களும் இங்கு உள்ளது. எனவே பிரச்சினை பெரிதாகிறது, வேறு வழியின்றி சென்னை உயர்நீதிமன்றமும் இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
தலைநகரில் மாணவி தாமாக முன்வந்து பதிவுசெய்த வழக்கிலேயே தி.மு.க. அரசின் அணுகுமுறை இதுதான் என்றால், கிராமப்புறங்களில் ஆதிக்கச் சக்திகளுடன் நெருக்கமாக இருக்கும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
சான்றாக, விருத்தாச்சலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் மனவளம் குன்றிய பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி 130 நாட்கள் கழித்து கடும் போராட்டங்களுக்குப் பிறகுதான் கைது செய்யப்பட்டான். பாதிக்கப்பட்டப் பெண்ணை 130 நாட்கள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாமலும் பாலியல் வன்புணர்வு பிரிவுகளை முதல் தகவல் அறிக்கையில் பதியாமலும் இருந்த காவல் ஆய்வாளர் முருகேசன், தலைமைக் காவலர் வேல்முருகன் மீது இப்போதுவரை தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இது தொடர்பாக, தமிழ்நாடு எஸ்.சி.-எஸ்.டி. ஆணையம், மாற்றுத்திறனாளிகள் ஆணையம், மகளிர் ஆணையம் என எத்தனை ஆணையங்களுக்கு அறிக்கை அனுப்பினாலும், குற்றவாளிக்கு துணைபோன போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசும் போலீசும் தயாராக இல்லை.
பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்குகளில் தமிழ்நாடு அரசின் இந்த அலட்சியமான அணுகுமுறையும் குற்றவாளிகளை பாதுகாக்கும் போக்கும்தான் இதுபோன்ற குற்றங்கள் அதிகரிப்பதற்கு முதன்மைக் காரணங்களாகும்.
ஆனால், பாலியல் வன்முறைக் குற்றவாளிகளின் கூடாரமான பா.ஜ.க – அண்ணாமலை கும்பலானது இப்பிரச்சினையில் இருந்து மக்களை திசைத்திருப்பும் வகையிலும் உண்மையான காரணங்களை மறைக்கும் வகையிலும் “சாட்டையால் அடித்துக்கொள்ளும்” கேலிக்கூத்துகளை அரங்கேற்றி வருகிறது. அடிமை அ.தி.மு.க-வும் பினாமி விஜயும் இப்பிரச்சினையைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிகழ்வானது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்புணர்வு, கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஒத்ததாக உள்ளது. இதில் தமிழ்நாட்டின் தி.மு.க. அரசும் மேற்கு வங்கத்தின் மம்தா அரசும் ஒரே மாதிரியான அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கின்றன. இயன்றவரை குற்றத்தின் முழுப் பரிமாணத்தையும் மறைப்பது, பிரச்சினையை திசைத்திருப்ப முயற்சிப்பது போன்றவை அனைத்தும் ஒரே வகையில்தான் அமைந்துள்ளன.
இரண்டு சம்பவங்களிலுமே மக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்புக் குரல்கள் மட்டுமே ஓரளவிற்கேனும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் காரணமாக அமைந்துள்ளது. இப்போராட்டங்களை வளர்த்தெடுப்பதும் பெண்களுக்கான அனைத்து வகையிலான பாதுகாப்புகளையும் உறுதி செய்வதும் ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் அனைவரது கடமையாகும்.
![]()
தலையங்கம்
(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 06 | 1986 பிப்ரவரி 01 – 15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


09.01.2025
மதுரை வேதாந்தா டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கெதிரான மக்கள் போராட்டம் வெல்க!
தமிழ்நாடு அரசே!
மக்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெறு!
பத்திரிகை செய்தி
மதுரை மாவட்டம் மேலூர் நாயக்கர்பட்டியில் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் (Tungsten) சுரங்கம் அமைப்பதற்கு வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு பாசிச மோடி அரசு அனுமதி வழங்கியதைக் கண்டித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபெற்ற பேரணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கார்ப்பரேட்டுக்கு எதிரான மிகப்பெரிய முதல் போராட்டத்தை துவங்கி இருக்கிறது மதுரை. ஜல்லிக்கட்டு முதல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வரையில் பாசிச பாஜகவுக்கு எதிராக ஒருமுகமாக இருந்த தமிழ்நாடு, மீண்டும் எழுந்து நின்று இருக்கிறது.
டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்திற்கு இதுவரை அனுமதி இல்லை என்ற அறிவிப்பை பாசிச பாஜக அரசு கொடுக்கவில்லை. மாறாக அதன் வழித்தடத்தை மாற்றுகிறோம் என்று நாடகமாடி வருகிறது.
டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறும் தமிழ்நாடு அரசு, டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக போராடிய பொதுமக்கள் 5000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
பாசிச பாஜக-வின் திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதன் மூலமாக தான் பாசிச பாஜகவுக்கு எதிரான தடையரணாகத் தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.
அதனை மழுங்கடிக்கும் வகையிலேயே தமிழ்நாடு போலீஸ் செயல்பட்டுள்ளது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் போராடிய மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

டங்ஸ்டன் சுரங்க ஏலத் திட்டத்தை எதிர்த்து மதுரையை உலுக்கிய
பல்லாயிரக்கணக்கான மக்களின் பேரணி!
டங்ஸ்டன் ஏலத்திட்டத்திற்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு கட்டங்களாகக் கண்டன போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் ஜனவரி 7 காலை மேலூர் நரசிங்கப்பட்டியில் இருந்து மதுரை தமுக்கம் வரைக்கும் பொதுமக்கள் அனைவரும் பேரணியாகச் செல்வதாகத் திட்டமிட்டு மேலூர் போலீஸிடம் அனுமதி கேட்கப்பட்டது.
கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று போராட்டத்தில் ஈடுபடாதவாறு மக்களை மிரட்டுவதும் முன்னணியாவார்களுக்கு சம்மன் அனுப்புவதுமான போக்கை போலீசு கடைப்பிடித்தது. இதையும் மீறி ஒவ்வொரு ஊர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுவந்தனர்.
சிட்டம்பட்டி அருகே உள்ள டோல்கேட்டில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். டோல்கேட்டில் இருந்து மதுரை செல்லும் வழியில் 200க்கும் மேற்பட்ட மக்கள் பேரணியுடன் இணைந்து செல்வதற்குக் காத்திருந்தனர். அப்போது டோல்கேட் அருகே பேரணி வருவதை அறிந்த போலீஸ் அவர்களைத் தடுக்கும் விதமாக அவர்களது வாகனங்களைக் குறுக்கே நிறுத்தினர்.
இதனைக் கண்டு பேரணியுடன் இணையக் காத்திருந்த மக்கள் போலீஸை முற்றுகையிட்டு, “நீங்கள் யார் எங்களைத் தடுப்பதற்கு, எங்கள் வாழ்வை அழிக்க வருபவனுக்கு நீங்கள் பாதுகாப்பா? நாங்கள் அமைதியான வழியில் போராடுகிறோம். எங்களைத் தவறான வழிக்குத் தூண்டாதீர்கள்” என ஆவேசத்துடன் கேள்வி கேட்டனர். முற்றுகையிட்ட 200 பேரில் 150 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபக்கம் பேரணி அணிவகுப்பு நெருங்கிவருவது; இன்னொருபக்கம் முற்றுகை. இதனைச் சமாளிக்க முடியாமல் போலீஸ் தங்களுடைய வாகனங்களை அகற்ற ஆரம்பித்தனர். டோல்கேட் நுழைவாயிலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரை சாரையாக நடைப்பயணமாகவும் வாகனத்திலும் டங்ஸ்டன் சுரங்க ஏலத் திட்டத்திற்கு எதிராகவும், பாசிச பாஜக-வை எச்சரிக்கும் விதமாகவும் முழக்கமிட்டுக் கொண்டே சென்றனர்.
வழிநெடுகிலும் உணவுப்பொட்டலம், குடிதண்ணீர் வண்டி, ஆயிரக்கணக்கான குளிர்பானம் என சகல ஏற்பாடுகளுடன் செல்வதைப் பார்க்கும் போது டெல்லி விவசாயிகள் பேரணியை நினைவுபடுத்தியது.18 கிலோமீட்டர் பயணம் செய்து இறுதியில் மதுரை தமுக்கத்திற்கு வந்தடைந்தபோது தமுக்கத்தை சுற்றியுள்ள தெருக்களிலும் தமிழன்னை சிலை அருகே உள்ள ஆர்ச் பக்கத்திலும் தடையரணை வைத்து ஆயிரக்கணக்கான மக்களை போலீசு தடுத்தது. அதாவது ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று இப்போராட்டம் உருவாகிடக் கூடாது என்பதில் போலீஸார் மிக எச்சரிக்கையாக இருந்தனர்.
இதனால் போலீசுக்கும் மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இறுதியில் தடையரணை தூக்கியெறிந்துவிட்டு மக்கள் ஒன்றுகூடினர். தமுக்கமே அதிரும் வண்ணம், பாசிச பாஜக-வை எச்சரித்து மக்கள் முழக்கமிட்டனர். தங்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அரசின் மீது நம்பிக்கை இழக்கும்போது மக்கள் தங்களுடைய வாழ்வை மீட்டெடுப்பதற்காக எப்பேர்ப்பட்ட தடைகளையும் தகர்த்தெறிவார்கள் என்பதை அங்கே காணமுடிந்தது.
தென்மண்டல ஐ.ஜி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, “நாங்கள் தற்போது தற்காலிகமாக எங்களது போராட்டத்தை நிறுத்தி கலைந்து செல்கிறோம். ஆனால் டங்ஸ்டன் சுரங்க ஏல திட்டம் கைவிடவில்லை என்றால் “ஜனவரி 26 குடியரசு தினத்தன்று கருப்புக்கொடி ஏற்றுவது மட்டுமல்ல மீண்டும் எங்கள் போராட்டத்தைத் துவங்குவோம்” என மத்திய அரசை எச்சரித்துச் சென்றனர்.
பாசிச பாஜக டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்கிற அடிப்படையில் மீண்டும் கள ஆய்வு, பரிசீலனை என அணுகுவதற்கு எதிராக மக்கள் பல்வேறு போராட்டங்களைக் கட்டியமைக்கின்றனர். இத்திட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் திமுக அரசு தீர்மானம் இயற்றினாலும் மக்கள் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்காததும் போராடக்கூடியவர்களை போலீசைக் கொண்டு மிரட்டுவதும் அதன் சந்தர்ப்பவாதத்தை அம்பலப்படுத்துகிறது.
நாங்கள் காலம் காலமா வாழ்ந்த எங்கள் நிலம், வீடு, குளம், கண்மாய், மலை தெய்வங்கள், பல்லுயிர் நிறைந்த இயற்கை வளங்களை விட்டு எங்கே செல்வோம். எங்களுடைய பிள்ளைகளுக்காகவும் பேரக்குழந்தைக்காகவும் நாங்கள் எங்களுடைய உயிரைக் கொடுத்தாவது கொலைகார வேதாந்தா நிறுவனத்தை விரட்டியடிப்போம் என உறுதியாக இருக்கிறார்கள். நான் உயிரோடு இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் தமிழ்நாட்டுக்கு வராது என்று கூறிய தமிழக முதலமைச்சர் இதனைப் பரிசீலனை செய்ய வேண்டும்.
களச்செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தொடக்கநிலை வாசகர்களை மனதில்கொண்டு தோழர். கே.என்.சிவராமனால் எழுதப்பட்ட “சிவந்த மண்” என்ற நூல், மார்க்சியம் மீதும் வாசிப்பின் மீதும் காதலை ஏற்படுத்தி அவர்களின் தேடலை அதிகரிக்கச் செய்கிறது.
மகத்தான ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டையொட்டி “தினகரன் வசந்தம்” இணைப்பிதழில் தொடராக வெளிவந்து ஆயிரக்கணக்கான வாசகர்களை சென்றடைந்தது. பின்னாளில் சூரியன் பதிப்பகத்தால் நூலாக பதிப்பிக்கப்பட்டு இன்னும் பலரை சென்று சேர்ந்துகொண்டிருக்கிறது.
சிவந்த மண் நூலானது தமிழில் மார்க்சியத்திற்கான அறிமுக நூலாக அமைகிறது. கம்யூனிசத்தை நேசிக்கும் சக்திகள், குறிப்பாக இளைஞர்கள், இந்நூலை கட்டாயம் வாங்கிப் படித்து தமது நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். தற்போது நடந்துகொண்டிருக்கும் 48-வது சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்குவதற்கு இந்நூல் சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்நூல் குறித்து வாசகர்கள் மேலும் அறிந்துகொள்ளும் பொருட்டு, இந்நூலின் ஆசிரியர் கே.என்.சிவராமனால் எழுதப்பட்ட நூல் அறிமுகத்தை இங்கே பதிவிடுகிறோம்.
நிலமென்னும் நல்லாள்
ஆம், கம்யூனிச சித்தாந்தம் தோற்றுவிட்டதாக ‘கருத்து’ பரவியிருக்கும் நேரத்தில்தான் இத்தொடர் எழுதப்பட்டது.
இன்று நிலவும் அனைத்து அரசியல் கருத்துகளுக்கும், அரசு உருவாக்கத்துக்கும், அரசாங்க நடைமுறைக்கும் குறைந்தது இரண்டாயிரமாண்டு வரலாறுகள் இருக்கின்றன.
எண்ணற்ற தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன; நிகழ்த்தப்பட்டும் வருகின்றன. என்றாலும் ‘வெளியில் தெரியும்’ தவறுகளை சரி செய்தபடியே தன்னை இக்கருத்துகளும், அரசும், அரசமைப்பும், அரசாங்கமும் புனரமைத்துக் கொண்டே இருக்கின்றன. கோமா நிலையில் இருந்தாலும் வாழ்கின்றன.
மறுக்கவில்லை. அன்றைய அரசு இன்றில்லை. ஆனால், அப்போதைய அரசின் வளர்ச்சிதான் இப்போதைய சூழல், அளவு மாற்றம் பண்பு மாற்றமாகி இருக்கிறது.
இதனுடன் ஒப்பிடுகையில் சோஷலிச அரசு சர்வநிச்சயமாக பச்சக் குழந்தைதான். ஜனித்து வெறும் நூறாண்டுதான் ஆகிறது. தங்களுக்கு முன்னோடி என யாரும் இல்லாத நிலையில் தத்தித்தத்திதான் நடைபயின்றது. ஆகவே இப்போது சோஷலிசம் வீழ்ந்துவிட்டது என்று சொல்வதை விட மீண்டும் எழுந்து நின்று விழாமல் இருக்க முயற்சி செய்யும் என கருதுவதே சரியாக இருக்கும்.
இதற்கு வலுசேர்த்தது, உலகிலேயே முதன்முதலாக ஒடுக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டு புரட்சி செய்து தங்களுக்கான அரசைத் தாங்களே 1917ம் ஆண்டு ரஷ்யாவில் உருவாக்கிக் கொண்டார்கள் என்ற உண்மை; இதனை தொடர்ந்து சீனாவில் விவசாயிகளும் தொழிலாளர்களும் கைகோர்த்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள் என்ற நிஜம்.
இவ்விரு நாடுகளும் பரப்பளவில் பெரியவை. மன்னராட்சி முறைக்கு பெயர் போனவை. வேர்க்கால்களில் கொடுங்கோன்மை ஊறியவை.
அப்படியிருக்க எப்படி இந்தப் புரட்சிகள் சாத்தியமாயின? எந்த நம்பிக்கையில் விவசாயிகளும் தொழிலாளர்களும் சோஷலிச சித்தாந்தத்தின் பக்கம் அணிதிரண்டார்கள்?
இக்கேள்விகளுக்கான விடைதான் இந்தப் புத்தகம்.
அடிப்படையில் இதை எழுதியவர் மார்க்சியவாதி அல்ல. அப்படிச் சொல்வது உண்மையிலேயே மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை அவமதிப்பதற்கு சமம். எனவே தன்னை பிழைப்புவாதி – நுகர்வோன் – நுனிப்புல் மேய்பவன் என்று அழைத்துக் கொள்ளவே நூலாசிரியர் விரும்புகிறார்.
அதனாலேயே இது முழுமையான நூல் அல்ல என உரக்கச் சொல்கிறார்.
ஏராளமான பிழைகளுடனேயே ரஷ்ய, சீனப் புரட்சிகளின் வரலாறு இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. போலவே ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெற்றிருக்கும் மார்க்சிய கோட்பாடுகள் குறித்த அறிமுகமும் மேலோட்டமானவையே.
இதற்கு காரணம் எழுதியவரின் போதாமைதான்.
இதையும் மீறி ஓரளவாவது இப்புத்தகத்தில் ‘நேர்மை’ தென்பட்டால் அதற்குக் காரணம், இருவர்.
ஒருவர், ‘வினவு’ தோழர்கள். அடுத்தவர் ‘தமிழ்த் தேசக் குடியரசுக் கட்சி’யை சேர்ந்த தோழர் பாஸ்கர். எப்போதும் போல் இப்போதும் இத்தோழர்களுக்கு நன்றி. புரட்சிகர வாழ்த்துகள்.
‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழில் இத்தொடர் வெளிவர முழுக்க முழுக்க எங்கள் எம்டி திரு ஆர்.எம்.ஆர்.ரமேஷ் அவர்கள்தான் காரணம். 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் எதேச்சையாக அவருடன் பேசும்போது, ‘ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு வருகிறது. இதையொட்டி அப்புரட்சியின் வரலாற்றை எழுதட்டுமா?’ என்று கேட்டபோது எவ்வித மறுப்பும் சொல்லாமல் உடனடியாக சம்மதித்து மறுவாரமே தொடரை ஆரம்பிக்கச் சொன்னார்.
மட்டுமல்ல, எழுதுவதற்கு முழு சுதந்திரமும் அளித்தார். ‘எதை எழுத வேண்டும்’ என்றோ, ‘எதையெல்லாம் எழுதக்கூடாது’ என்றோ அவர் கட்டளையிடவே இல்லை. தொடர் முடிந்ததுமே ‘உடனே ‘சூரியன் பதிப்பகம்’ வழியா நூலா கொண்டு வாங்க…’ என துரிதப்படுத்தினார். அவர் இல்லையென்றால் இந்நூல் சாத்தியமாகி இருக்காது.
என் வாழ்க்கையின் அனைத்து ஏற்றங்களுக்கும் காரணமாகவும் உந்து சக்தியாகவும் இருக்கும் எங்கள் எம்டியை எல்லா தருணங்களையும்போல் இந்த நிமிடமும் நினைத்துக் கொள்கிறேன். நன்றி சார்.
போலவே நண்பர் யுவகிருஷ்ணாவுக்கும். ஏனெனில் இத்தொடர் வெளியாகும்போது ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழின் ஆசிரியராக அவர்தான் இருந்தார்; இருக்கிறார். எந்த சூழலிலும் ‘ஹெவி சப்ஜெக்ட்… யார் படிப்பாங்கனு தெரியலை…’ என்றோ ‘எப்போது முடிப்பீர்கள்’ என்றோ அவர் கேட்டதேயில்லை. 24 பக்கங்களில் முழுமையாக மூன்று பக்கங்களை இத்தொடருக்காக வாரம்தோறும் ஒதுக்கிய அவருக்கு நன்றி.
ஒருவகையில் இத்தொடர், தொகுப்புதான். தமிழில் பல தோழர்கள் உதிரி உதிரியாக ஆங்காங்கே எழுதியவற்றை எல்லாம் தொகுத்திருக்கிறேன்.
தோழர்கள் இரா.ஜவஹர், அருணன், மருதன், புதிய ஜீவா, அ.கா. ஈஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கும்; ‘கீழைக்காற்று’, ‘பாரதி புத்தகாலயம்’, ‘நியூ சென்சுரி புக் ஹவுஸ்’, ‘அலைகள்’, ‘விடியல்’, ‘சென்னை புக்ஸ்’, ‘சிந்தன் புக்ஸ்’ பதிப்பகங்களுக்கும்; ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’, “புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி’, ‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ மற்றும் வெகுஜன மக்கள் திரளை நம்பி இயங்கும் அனைத்து மார்க்சிய லெனினிய குழுக்களுக்கும்; இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கும் நன்றி. இவர்கள் அனைவரது படைப்புகளும், வலைப்பதிவுகளும், நூல்களும், பிரசுரங்களும் இந்நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
நூலாக்கத்துக்கு துணைபுரிந்த பக்க வடிவமைப்பாளர்கள், பிழை திருத்துபவர்கள், அச்சகத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியும் அன்பும்.
ஆரம்பகட்ட வாசகர்களை மனதில் வைத்து இத்தொடர் எழுதப்பட்டிருக்கிறது. நூலும் அப்படியே உருவாகி இருக்கிறது. எனவே இப்புத்தகத்தை படிப்பவர்கள் இதை தொடக்க நிலையாக மட்டுமே கொள்ளவும்.
தோழமையுடன்
கே.என்.சிவராமன்
sivaraman71@gmail.com
9840907375
நூலின் பெயர்: சிவந்த மண்
ஆசிரியர்: கே.என். சிவராமன்
பக்கங்கள்: 680
விலை: ரூ400
வெளியீடு: சூரியன் பதிப்பகம்
தொலைபேசி: 044 42209191
மின்னஞ்சல்: webads@dinakaran.com
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மக்கள் கல்விக் கூட்டியக்கம் அறிக்கை
08-01-2025
தேசியக் கல்விக் கொள்கையினை ஒட்டிப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம் மற்றும் துணை வேந்தர் நியமனத்தில் யுஜிசி முக்கிய மாற்றங்கள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதற்கானப் புதிய விதிமுறைகளுக்கான வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது. இதற்கானக் கருத்துக் கேட்பும் நடத்துகின்றது.
வரைவு அறிக்கையின்படி, துணை வேந்தராகத் தேர்வு செய்யப்படும் நபர் பேராசிரியராகத்தான் பணி செய்திருக்க வேண்டும் என்பதல்ல. ஆராய்ச்சி அல்லது அகாடமி கல்வி நிர்வாக அமைப்புகளில் பதவியில் இருப்பவர்களாகவும் இருக்கலாம், தொழில், பொது நிர்வாகம், பொதுக் கொள்கை அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அதாவது தொழில் அதிபராகவும் இருக்கலாம், அதிகாரிகளாகவும் இருக்கலாம் என்று தகுதி விரிவாக்கம் செய்யப்படுகின்றது. இது கல்விப் பரப்பில் மிகவும் ஆபத்தானது. கல்வி நிறுவனங்களில் அதுவும் பல்கலைக்கழகங்களில் அனுபவம் பெறாதவர்களைத் துணை வேந்தர்களாக நியமிப்பது கல்வி மற்று நிர்வாக பரப்பிலும் பல குழப்பங்களை உண்டாக்கும்.
மத்திய அரசின் மூலம் நியமிக்கப்பட்ட ஆளுநர், தான் விரும்பும் எந்தக் கல்வியாளர் அல்லாத நபரையும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக ஆக்கும் ஆபத்து உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பல்கலைக்கழகங்களை மறைமுகமாக தாரை வார்க்க வழி வகுக்கும் திட்டமே இது. பணப் பற்றாக்குறையில் பல்கலைக் கழகங்கள் தடுமாறும் வேளையில், கார்பரேட் நிர்வாகிகள் மிக எளிதாக பல்கலைக் கழகங்களைக் கைப்பற்றி, அவற்றைப் பணம் கொழிக்க வைக்கும் வணிக நிறுவனங்களாக மாற்றுகிறோம் என்ற பெயரில் எளியவர்களுக்களுக்கு உயர்கல்வியை எட்டாக் கனி ஆக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மக்கள் கூட்டியக்கம் கருதுகின்றது.
மேலும் துணை வேந்தருக்கானத் தேடுதல் குழுவில் இது வரை பல்கலைக் கழக செனட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பிரதிநிதியும், ஆட்சிக் குழு எனப்படும் சிண்டிகேட்டிலிருந்து தேர்வு செய்யப்படும் பிரதிநிதி ஒருவரும், மேலும் ஆளுநர் சார்பாக ஒரு பிரதிநிதியும் இருந்தனர். ஆனால் தற்போது செனட் மற்றும் சிண்டிகேட்டில் ஏதேனும் ஒன்றிலிருந்து மட்டும் ஒரு பிரதிநிதி தேர்வு செய்யப்படலாம் என்று மாற்றப்பட உள்ளது. இது ஆசிரியர் பிரதிநிதிகள் செனட்டில் பங்கேற்று தேடுதல் குழுவிற்கான பிரதிநிதியைத் தேர்வு செய்யும் வாய்ப்பை தட்டிப்பறிக்கும். கூடுதலாக யு.ஜி.சியின் பிரதிநிதி ஒருவர் தேடுதல் குழுவில் இடம்பெறுவார் என்பது தொடர்ந்து தமிழ் நாடு அரசும் பல கல்வியாளர்களும் எதிர்த்து வரும் விஷயமாகும். தமிழ் நாட்டில் தகுதி வாய்ந்த ஒரு கல்வியாளரை தீர்மானிப்பதில் யு.ஜி.சி பிரதிநிதியும் இருப்பார், இது தவிர ஆளுநர் பிரதிநிதி ஒருவரும் இருப்பார், எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுநர் யார் துணைவேந்தராவது என்பதைத் தீர்மானிப்பார் என்பது துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கோ, ஆசிரியர்களுக்கோ எந்த வகையிலும் பங்காற்ற அதிகாரம் இல்லை என்றாக்குகின்றது. கல்விப் பரப்பில் தங்கள் அரசியல் செல்வாக்கை நிலைநாட்ட நடுவண் அரசு இப்படிப்பட்ட ஜனநாயக விரோதத் திட்டங்களைக் கொண்டுவருவதை மக்கள் கல்விக் கூட்டியக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
உதவி பேராசிரியர் நியமனத்தில், இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் எந்தப் படிப்புகளில் படித்திருந்தாலும், நெட் தேர்ச்சி அல்லது முனைவர் பட்டத்தை பெறும் பாடத்தில் ஆசிரியராக நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுகலை ஒரு பாடத்திட்டத்தில் படிக்காமலேயே அப்பாடங்களில் நெட் தேர்வு எழுதலாம், முனைவர் ஆராய்ச்சியும் மேற்கொள்ளலாம் என்பதை மறைமுகமாக இது சுட்டுகின்றது. இளங்கலை, முதுகலையில் தான் கற்பிக்கப்போகும் பாடங்களைப் பயிலாதவர் எப்படி அந்தப் பாடங்களை மாணவர்களுக்கு அடிப்படைகளுடன் நடத்த இயலும்? மேலும் முனைவர் பட்டம் என்பது கல்லூரிகளில் பாடம் நடத்துவதற்கு அவசியமானதே அல்ல. அது ஒரு சிறப்பு அம்சம் அவ்வளவுதான். யு.ஜி.சி. கற்பித்தலின் அடிப்படையையே தகர்க்கின்றது. இன்று முனைவர் பட்டம் என்பது ஒரு துறையில் பதிந்து அதை பல துறைகளில் இன்டெர் டிசிபிளினரியாக செய்கின்றனர். அது ஆய்வுக்குத்தான் சரிவரும். பாடங்களை நடத்த அல்ல. எனவே இந்த முன்வைப்பை யு.ஜி.சி. கண்டிப்பாகத் திரும்பப் பெற வேண்டும் என வேண்டுகின்றோம்.
கல்லூரி மற்றும் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் பல வித பிரிவுகளை யு.ஜி.சி. அறிமுகப்படுத்துகின்றது. உதவிப் பேராசிரியர் பணிக்கு பலவித நிலைகளை குறிப்பிடுகின்றது. அப்படியாயின் ஊதிய நிர்ணயத்திலும் இது பல வேறுபாடுகளைக் குறிக்கும். இது ஆசிரியர்கள் நலனுக்கு விரோதமானது. ஆசிரியர்களைப் பழி வாங்க நிர்வாகங்களுக்கு வழங்கப்படும் சக்தி வாய்ந்த ஆயுதம் இது. ஏற்கனவே உள்ள மூன்று நிலைகளில் பணி உயர்வு வழங்கப் படாமல் இழுத்தடிக்கப்படும் ஆசிரியர்களின் மன உளைச்சல்கள் ஏராளம். இதில் கூடுதலான பல பிரிவுகளை உண்டாக்குவது அவற்றில் ஆசிரியர்களுக்கு பணி உயர்வு கிட்டுமா என்பது சந்தேகமே! இவை பற்றி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புகளுடன் உரையாடல் நடத்தி அவர்களின் வழி காட்டுதல்களைப் பெறுவது அவசியம்.
காலிப்பணியிடங்களை ஒரு காலக் கெடுக்குள் தகுதியானவர்களை கொண்டு நிரப்பியே ஆகவேண்டும் என்பதில் யு.ஜிசி அக்கறையும் காட்டவில்லை என்பதும் வருத்தமளிக்கின்றது.
இந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள பல அம்சங்கள் பற்றிய விரிவான கருத்துக்களை, ஆலோசனைகளை மக்கள் கல்விக் கூட்டியக்கம் பல்கலைக் கழக மானியக் குழுவிற்கு அனுப்பி வைக்கும்
பேரா. இரா.முரளி,
பேரா. வீ அரசு,
பேரா.ப.சிவகுமார்,
கல்வியாளர் கண குறிஞ்சி,
ஒருங்கிணைப்பாளர்கள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 05 | 1986 ஜனவரி 16 – 31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 04 | 1986 ஜனவரி 01 – 15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

வரலாற்றில் அளப்பரிய பங்களிப்பு செலுத்திய சில தலைவர்களின் பிறந்த நாளோ நினைவுநாளோ தெரியாமல் போவது, அவர்களை சரியாக நினைவுகூருவதற்கான வாய்ப்புகளைக் குறைத்துவிடுகிறது. அந்தத் தலைவர்கள் அவர்களது உண்மையான மக்கள் தொண்டு, நாட்டுப்பற்றுக்கான அரும் பணிகளால், தியாகங்களால் மட்டுமே நினைவுகூரப்படுகின்றனர். அந்தவகையில், தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு பெண் போராளி என்றால், அவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆவார்.
அவருக்கு முன்பு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த, பெண்களின் உரிமைக்காகப் போராடிய, சாவித்திரிபாய் பூலேயின் பிறந்த நாளை நம்மால் நினைவுகூர முடிகிறது. ஆனால், ஒடுக்கப்பட்டு கீழ் நிலையிலிருந்த ராமாமிர்தம் அம்மையாரின் சமூகப் பின்னணி காரணமாக, அவரது பிறந்த நாளும் இறந்த நாளும் பொதுவெளியில் பெரிதும் அறியப்படாமல் உள்ளது.
தி.மு.க. ஆட்சியின் போது அவரது பெயரை நினைவுகூரும் வகையில் பெண் கல்விக்கான திட்டங்களுக்கு அவரது பெயர் இரண்டு முறை சூட்டப்பட்டுள்ளது. 1989-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு குறைந்தது எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூ.5,000 திருமண நிதி உதவித்திட்டத்திற்கு அவரது பெயரைச் சூட்டியது.
தற்போதைய தி.மு.க. அரசு, கருணாநிதி அரசு கொண்டுவந்த, திருமண உதவித் திட்டத்தை உயர்கல்வித் திட்டமாக மாற்றியமைத்து, அதனை, 2022 செப்டம்பரில் தொடங்கி வைத்தது. அதாவது, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை கிடைக்க வழி ஏற்படுத்தித் தந்துள்ள அத்திட்டத்திற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று பெயரிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்கவிழாவிற்கு அன்றைய டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவாலை அழைத்ததும், முக்கியமான அம்சமாகும்.
இவற்றிற்கப்பால், மார்ச் 8 பெண்கள் தினத்தன்று திராவிட இயக்கத்தின் தோழர்கள் யாராவது இராமாமிர்தம் அம்மையாரை நினைவுகூர்ந்தால் உண்டு என்ற அளவிற்குத்தான் இவர் தமிழ்நாட்டில் நினைவுகூரப்படுகிறார். இவரது வரலாற்றுப் பங்களிப்பு குறித்து திராவிடர் கழகம் சார்பாக சில நூல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றைத் தாண்டி தமிழ்நாட்டின் பெண் உரிமைப் போராளிகளில் ஒருவராக இவரது பங்களிப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் நோக்கத்தில், இந்தக் கட்டுரையை வினவு இணைய தளத்தில் பதிவிடுகிறோம்.
“மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் வாழ்க்கையும், தேவதாசி முறை ஒழிப்பும்” என்ற தலைப்பில், முனைவர் தி.பாலசுப்ரமணியன், முனைவர் என்.தனலட்சுமி, முனைவர் ஏ.ஆர்.சரவணகுமார் ஆகிய காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக பேராசிரியர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வுக்கட்டுரையைத்தான் இங்கு கொடுத்துள்ளோம்.
***
மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும் வாழ்க்கையும்,
தேவதாசி முறை ஒழிப்பும்
முனைவர் தி. பாலசுப்பிரமணியன் கௌரவ விரிவுரையாளர்,
வரலாற்றுத்துறை,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி, தமிழ்நாடு, இந்தியா
Dr. N. DHANALAKSHMI,
Associate Professor,
School of History and Tourism Studies,
Tamilnadu Open University,
577, Annavalai, Saidapet, Chorusai.
Dr. AR. SARAVANAKUMAR,
Head i/c, Department of History,
Alagappa University, Karaikudi.
முன்னுரை:
1883 ஆம் வருடம் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் என்ற கிராமத்தில் கிருஷ்ணசாமி, சின்னம்மாள் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார், ராமாமிர்தம். பின் நாட்களில் மூவலூர் மூதாட்டி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் என்றும் அன்புடன் அழைக்கப்பட்டவர். இவர்களது குடும்பம் இசைவேளாளர் குடும்பம் ஆகும்.
தேவதாசிமுறை நடைமுறையில் இருந்த காலகட்டம் அது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மிகச் சிறு வயதிலேயே கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்கிற பெயரில், கோயில்களுக்கு நேர்ந்து விட்டுவிடுவார்கள் அவர்களுக்கு சிறு வயதிலேயே நாட்டியம் பாட்டு போன்றவைகள் கற்றுத்தரப்படும். அவர்கள் நாட்டியமும் இசையும் மட்டுமல்லாது இலக்கியம் கவிதை போனறவற்றில் சிறந்தவர்களாகவும் பயிற்றுவிக்கப்படுவர். சகலவிதத்திலும் தேர்ந்து தங்களது அழகாலும் அறிவாலும் மற்றவர் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் பயிற்றுவிக்கப்படுவார்கள்.
தேவதாசி என்பவர்கள் பெரும் கோயில்களில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் சிறுவயதில் நேர்த்து விடப்பட்ட பெண்கள் ஆவர். பிற்காலச் சோழர்களின் காலத்தில் தான் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களுக்கு “பொட்டுக்கட்டி” விட்டு, ஆலயங்களில் சதிராட வைத்தனர். அப்பெண்டிர்க்குத் திருமண வாழ்க்கையை மறுக்கும் வழக்கமும் ரச நியதியாக மாறியது. சோழப்பேரரசின் கோயில்கள் அனைத்துமே சனாதன பிராமணர்களின் வேத ஆகம ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களுக்குத் “தேவதானம்” என்ற பெயரில் வழங்கப்பட்ட ஏராளமான ‘இனாம்’ நிலங்களுக்கு அவர்கள் நில உடைமையாளர்களார்கள் (குட்டி ஜமீன்தார்கள்).
பெயர்க் காரணம்
இச்சொல் தேவன் (இறைவன்) தாசி (அடிமை) இறைவயின் அடிமை என்ற பொருள்படும்.
மூவலூர் ராமாமிர்தம் இளமை காலம்
பின்னாளில், தன்னை மனமார விரும்பியவரும், ஆடல் பாடல்களைக் கற்றுத் தத்தவரும், சங்கீத ஆசிரியருமான சுயம்புப் பிள்ளையைக் கணவராக ஏற்றுக்கொண்டார்.
தன்னை வளர்த்து ஆளாக்கிய வளர்ப்புத் தாய் ஆச்சிக்கண்ணு ஒரு தேவதாசிப் பெண்ணாக இருந்தபோதும் நன்றி மறவாமல் “ஆ” என்னும் தலைப்பெழுத்துடன் தனது பெயரை “ஆ” இராமாமிர்தம் என்றே வைத்துக்கொண்டார்.
பிற்காலச் சோழர்களின் காலத்தில் தான் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களுக்கு “பொட்டுக்கட்டி” விட்டு ஆயங்களில் சதிராட வைத்தனர். அப்பெண்டிர்க்குத் திருமண வாழ்க்கையை மறுக்கும் வழக்கமும் ரச நியதியாக மாறியது. சோழப்பேரரசின் கோயில்கள் அனைத்துமே சனாதன பிராமணர்களின் வேத ஆகம ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களுக்குத் ”தேவதானம்” என்ற பெயரில் வழங்கப்பட்ட ஏராளமான ‘இனாம்’ நிலங்களுக்கு அவர்கள் நில உடைமையாளர்கணர்கள் (குட்டி ஜமீந்தார்கள்).
தேவதாசி முறை நடைமுறையில் இருந்த காலகட்டம் அது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மிகச் சிறு வயதிலேயே கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்கிற பெயரில் கோயில்களுக்கு நேர்ந்து வீட்டுவிடுவார்கள். அவர்களுக்கு சிறு வயதிலேயே நாட்டியம், பாட்டு போன்றவைகள் கற்றுத் தரப்படும். அவர்கள் நாட்டியமும் இசையும் மட்டுமல்லாது இலக்கியம் போன்றவற்றில் சிறந்தவர்களாகவும் பயிற்றுவிக்கப்படுவர். சகலவிதத்திலும் தேர்ந்து தங்களது அழகாலும் அறிவாலும் மற்றவர் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் பயிற்றுவிக்கப்படுவார்கள்.
பருவ வயது வந்ததும் அவர்களை ஊர்ப் பெரிய மனிதர்களின் ஆசை நாயகிகளாகவும், ஊராரை மகிழ்விக்கும் நடனப் பெண்மணிகளாகவும் ஆக்கியிருந்தது சமூகம். அவர்கள் ‘பொட்டு கட்டப்பட்டவர்களாகவும்’ ‘தேவரடியார்களாகவும்’ இழிவாகப் பேசப்படும் பிரிவினராகவும் வைக்கப்பட்டிருந்தார்கள். அச்சமூகத்தில் பிறந்திருந்தாலும் தங்களது மகளை அவ்வாறு சிறுமைப்படுத்த விரும்பவில்லை ராமாமிர்தத்தின் பெற்றோர்கள். அதனால் தன் மகளை நாட்டியம் இசை போன்றவற்றை கற்றுக் கொடுக்காமல் வளர்க்க ஆசைப்பட்டனர். மற்றவர்கள் எவ்வளவோ சொல்லியும் தன் முடிவிலிருந்து மாறாமல் இருந்தனர். அதனால் ஊரின் பகைமையை சம்பாத்தித்துக் கொண்டனர். அவர்களை அவர்கள் சமூகமும் விலக்கி வைத்துவிட்டது.
வருமானத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் மிகுந்த பிரச்சனை ஏற்பட்டது. ஓரளவுக்கு மேல் சமாளிக்க இயலாத கிருஷ்ணசாமி வெறுப்பு மேலிட தன் குடும்பத்தை விட்டு விலகி எங்கோ போய்விட்டார். கணவனும் இன்றி உதவியும் இல்லாமல் தனியொரு பெண்ணாக ஐந்து வயது பெண் குழந்தையையும் வைத்துக் கொண்டு வாழ்க்கையுடன் போராடினார் சின்னம்மாள். ஓரளவுக்கு மேல் அவரால் சமூகத்துடன் போராட முடியவில்லை. வேறு வழியின்றி தன் ஐந்து வயது மகளை ஒரு தேவதாசியிடம் பத்து ரூபாய் பணத்துக்கும் ஒரு பழம் புடவைக்கும் விற்றுவிட்டார்.
அந்த தேவதாசியிடம்தான் வளர்ந்தார் ராமாமிர்தம். அவர்களின் குல வழக்கமாக ஆடல் பாடல் இசை என இளவயது முதல் கற்றுத் தேர்ந்தாலும் அவரின் மனதில் தாய் தந்தைக்கு இருந்த எண்ண ஓட்டமே இருந்தது. என்ன நடந்தாலும் தான் இந்த தேவதாசி முறைக்கு அடிமையாகக் கூடாது என்பதில் மிகுந்த மன உறுதியோடு இருந்தார். குழந்தை குமரி ஆனதும் ஆரம்பித்தது வாழ்க்கையில் போராட்டம். தேவதாசி முறைக்கு ஒத்துழைக்க மாட்டேன் என அடம்பிடித்த ராமாமிர்தத்தை பெரும் பணத்திற்காக 80 வயது முதியவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டாள் அவரை வளர்த்த தாசி.
அங்கே ஆரம்பித்தது ராமாமிர்தத்தின் போராட்டம். உயிரே போனாலும் தாசியாகவும் மாட்டேன் பாட்டன் வயதில் இருக்கும் கிழவனையும் மணக்க மாட்டேன் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறினார். தனக்கு இசையும் நாட்டியமும் சொல்லிக் கொடுத்த இளம் வயதினரான சுயம்பு பிள்ளையுடன் தன் வாழ்வை இணைத்துக் கொண்டார். அப்படியும் சமூகம் அவரை நிம்மதியாக வாழவிடவில்லை. அவரின் மேல் கொலைப்பழி சுமத்தியது. ஒரு இளம் பெண்ணை ராமாமிர்தம் கொலை செய்துவிட்டதாகச் சொல்லி ராமாமிர்தத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. ராமாமிர்தம் எதற்கும் கலங்கலில்லை. கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட அதே பெண்ணை, உயிருடன் அரும்பாடுபட்டுக் கண்டு பிடித்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். யாரெல்லாம் அந்தச் சதிக்கு உடந்தை என்பதை அம்பலப்படுத்தி, அவர்களுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்.
தேவதாசி முறை ஒழிப்பு
நீதிக்கட்சியின் ஆட்சியில் பெரியாரின் ஆலோசனையின் பேரில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் முத்துலட்சுமி தேவதாசி தடுப்புச் சட்டத்தை முன்மொழிந்தார். அவரது சட்டமன்ற உரையில் தேவதாசி முறை ஒழிப்பு குறித்து பேசிய போது “தேவதாசிகள் புனிதமானவர்கள். அவர்கள் கடவுளுக்குச் சேவை செய்யப் பிறந்தவர்கள். அவர்கள் அடுத்த பிறப்பில் சொர்க்கத்தில் பிறப்பார்கள்” என்று சத்தியமூர்த்தி பேசினார். அதற்குப் பதிலளித்த முத்துலட்சுமி, “தேவதாசிகள் சொர்க்கத்திற்குச் செல்வதாக இருந்தால் இனிமேல் சத்தியமூர்த்தி அவர்கள் தங்களது வீட்டுப்பெண்களைத் தேவதாசிகள் ஆக்கி அவர்கள் அடுத்த பிறவியில் சொர்க்கத்தில் பிறக்கலாமே” என்று பதிலுரை கூறியிருந்தார்.
தேவதாசி முறை 1930களுக்கு முன்பு வழமையாக இருந்தது. இந்த முறை கோயில் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலும், பின்னாட்களில் அவர்கள் கோயில்களை நிர்வகித்த அரசர், செல்வந்தர், நிலக்கிழார் உள்ளிட்ட மேல் வர்க்கத்தினர் முன்பு நடனமாட வைக்கப்பட்டதுடன் அவர்களுடைய பாலியல் இச்சைகளுக்கு அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக இவ்வழக்கத்துக்கு 1920 முதல் இந்தியாவில் கடும் எதிர்ப்பு நிலவியது. இதன் காரணமாக 1947 ஆம் ஆண்டில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
விடுதலை போராட்டமும் தேவதாசி முறையும்
அதன்பின் கணவரின் துணையுடன் தேவதாசி முறையை ஒழிக்க போராட்டங்களில் ஈடுபட்டார். 1917-ல் மயிலாடுதுறையில் தனது முதல் போராட்டத்தைத் துவங்கினார். தேவதாசி குலப்பெண்களை அழைத்து பேசி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனால் பலரையும் பகைத்துக் கொண்டார். ஊர் பெரிய மனிதர்களில் இருந்து பணக்காரர், ரவுடிகள் அரசியல்வாதிகள் வரை பலரும் அவருக்கு ஏதிரியாகினர். பல இன்னல்களும் துன்பங்களும் அம்மையாருக்கு ஏற்பட்டன. அவர் கூந்தலைப் பிடித்து இழுத்து அறுந்து விட்டனர். ஒரு பெண்ணை எந்த விதத்தில் எல்லாம் அவமானம் செய்ய முடியுமோ அத்தனை விதத்திலும் செய்தனர். இருப்பினும் அவர் கலங்கி நின்று விடவில்லை. எதிர்ப்புகள் வளர வளர அவரது நிடமும் வளர்ந்து மேலும் உத்வேகம் பெற்றது.
காந்தியத்தின் மீது மிகவும் பற்று கொண்டவர் அம்மையார். விடுதலை போராட்டங்களின் போது ஆங்கிலேயர் மேடையில் யாரும் பேசக் கூடாது கூட்டம் நடத்தக் கூடாது என்றெல்லாம் கடும் சட்டம் போட்டிருந்தனர். அப்படியா சரி உன் சட்டத்தை நான் மதிக்கிறேன் என்ற பாவணையில் அம்மையார் மேடையில் பேசாமல் தான் சொல்ல வந்த கருத்துக்களை எல்லாம் கரும்பலகையில் எழுதி மக்களைப் படிக்கச் செய்தார். மகாத்மாவை கைது செய்த போது அதை எதிர்த்து மூவர்ணக் கொடியையே ஆடையாக அணிந்து போராடினார்.
1925-ஆம் ஆண்டு காங்கிரஸ்ஸில் இருந்த பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பெண்களின் மீதான அடக்குமுறைக்கும், கைம்மை நோன்பு, பால்ய விவாகம், தேவதாசி முறை, தீண்டாமை ஆகிய பல கொடுமைகளுக்கு எதிராக ராமாமிர்த அம்மையார் போராடினார். காங்கிரஸில் இருந்த சிலர் தேவதாசி முறைக்கு ஆதரவாக இருந்ததால் அக்கட்சியில் இருந்து பெரியார் வெளியேறிய போது தானும் அவருடன் வெளியேறினார்.
தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்காக சட்டமன்றத்தில் வாதாடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும் நல்ல நட்பு இருந்தது. தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட தீர்மானத்தை காங்கிரசில் இருந்த மூத்த தலைவர்கள் சிலர் கடுமையாக எதிர்த்தனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அந்த சட்டத்தைக் கொண்டு வரத் தீர்மானம் இயற்றியபோது, ‘தேவதாசி முறை தொடர்ந்து நடக்க வேண்டும். இல்லாவிட்டால் பாரம்பரியம் மிக்க இந்தியக் கலாசாரம் சீரழிந்து விடும்’ என்று ஆவேசப்பட்டனர். அப்போது ராமாமிர்த அம்மையார் இவ்வாறு கூறும் படி முத்துலட்சுமியிடம் கூறினார். ‘அவர்கள் தேவதாசி முறை தொடர வேண்டும் என விரும்பினால், இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்தியப் பண்பாட்டைக் காக்க, இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும்’ என்றார். அதைக் கேட்ட தலைவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர். பல போராட்டங்களுக்குப் பிறகு, 1947-ம் வருடம், உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானமாய் விளங்கிய தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.
கலை உலகில் இராமாமிர்தம்
இவரது போராட்ட காலங்களில் இவர் மீது கொலைக் குற்றங்களும் அபவாதங்களும் சுமத்தப்பட்டன. விஷம் கொடுத்து கொல்லும் வரை கூட எதிரிகள் போயினர். ஆனால் தன் உயிரையும் துச்சமாக நினைத்து தாய் நினைத்ததை சாதிக்க போராடினார் அம்மையார். 1936ல் தன்னுடைய சுயசரிதை நூலான ‘தாசிகளின் மோசவலை (அ) மதிபெற்ற மைனர்” என்ற புதினத்தை எழுதி சிவகிரி ஜமீந்தாரிணி வெள்ளத்துரை நாச்சியார் அவர்களின் உதவியுடன் தாமே வெளியிட்டார். மீண்டும் 65 ஆண்டுகள் கழித்துநான் அந்த நாவல் மறுபதிப்புக் கண்டது. அதில் தாசிகளின் பரிதாபமான வாழ்க்கை முறையும் தன் சொந்த அனுபவங்களையும் முன்னிருத்தி எழுதியிருந்தார். இது பற்றி ‘புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்தது இந்நாவல்”, என்று கூறினார்.
மேலும் ‘தாசிகளுக்குப் பத்திசாலித்தனமாக ஆராய்ந்து அறியும் திறன் கிடையாது. பொருள் தேடும் ஆராய்ச்சியும் தாசிகளுக்குக் கிடையாது. பொருள் தேடும் பேராசையால் யார் எப்படிச் சொன்னாலும், அப்படியே நடப்பார்கள். ஆனால், எவ்வளவு சாமர்த்தியமாக அவர்கள் பொருள் தேடினாலும் கடைசி காலத்தில் இளிச்சவாய்த்தனமாய் யாரிடத்திலாவது கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுவார்கள். எந்தத் தாசியாவது கடைசி காலத்தில் சுகமாயிருக்கிறாளா’ என்று தனது நாவலில் ஓரிடத்தில் வேதனையோடு சொல்கிறார் ராமாமிர்தம் அவர்கள்.
சுயமரியாதை இயக்க முன்னோடிகளில் ஒருவர். தேவதாசி சமூகத்திலே பிறந்து, அதனால் பாதிப்படைந்து, அந்தத் தளைகளை அறுத்து எறிந்து, அந்தக் கேடுகெட்டப் பழக்கத்தையே ஒழித்துக் கட்டும் வரை ஓயாமல் உழைத்தவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பெண்கள் வீட்டைவிட்டு கூட வெளியே வர முடியாதிருந்த காலத்தில் வாழ்ந்திருந்தாலும் தன் தைரியத்தாலும், சமூகத்துக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தாலும் ஆண்களுக்கு இணையாகப் பிரச்சாரம் போராட்டம் என நிகழ்த்தி வெற்றியடைந்து காட்டியவர் மூவலூர் முதாட்டி.
அம்மையாரைப் பற்றி சுருக்கமாக சில குறிப்புகள்:
முதல் பெண் விடுதலைப் போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
ஆணாதிக்கத்தின் அடிமைகளாய், பிள்ளை பெறும் இயந்திரங்களாய், அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்ணினத்தைத் தட்டி எழுப்பியவர்! ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்று ஆர்ப்பித்தவர்! ஆணும், பெண்ணும் சமம் என்ற விழிப்புணர்வை ஊட்டியவர்!
“தேவதாசிகள் முறை என்னும் அரிய வழக்கை அடியோடு ஒழித்திட நீதிக்கட்சியின் ஆட்சியில் சட்டம் இயற்றப் போராடியவர். அவரே முதல் பெண் போராளியான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்”
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் “தேவதாசிகள்” என்ற சமூக இழிவு தமிழகத்தில் பரவியிருந்தது. இந்தியப் பண்பாட்டிற்கும், நாகரிகத்திற்கும் விடுத்த ஒரு சவாலாக, பெண்களுக்குப் பொட்டுக்கட்டும் “புன்மை” கொடிகட்டிப் பறந்தது. பாவையாரைத் “தேவரடியார்”களாக்கும் கொடுமை கோலோச்சியது. மாதர் தம்மை இழிவுபடுத்தும் இந்த முறையை ஆழிப்பதற்கான போராட்டம் இங்கு 1920 களில் தீவிரமடைந்தது.
சமுதாயத் தளைகளிலிருந்து விடுவிக்கப்படுவதோடு இணைந்தது பெண் விடுதலை என்பதை உணர்ந்தார் அம்மையார். ஆடம்பரத் திருமணங்களை ஆவேசத்தோடு எதிர்த்தார். வரதட்சணைக் கொடுமைகளை ஒழிக்க மேடைதோறும் முழங்கினார். சுயமரியாதைத் திருமணங்களை, சாதி மறுப்பு திருமணம் மற்றும் விதவை மறுமணங்களை ஆதரித்துச் செயல்பட்டார். மத மூட நம்பிக்கைகளே பெண்களின் இழிநிலைக்கும், அடிமைத்தனத்திற்கும் மூல காரணம் என்பதை பகிரங்கமாக மகளிர் மத்தியில் பிரச்சாரம் செய்தார்! சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்துமத சனாதனத்தை எதிர்த்து எதிர்த்து தெருக்களில் முழங்கிய முதல் பெண் விடுதலைப் பேராளியானார். இதனால், சனாதனக் கும்பல் ஆத்திரமடைந்தது. அவர் பேசிக் கொண்டிருந்த மேடையில் ஏறி அவரது கூந்தலை அறுத்த அவலமும் அரங்கேறியது. ஆத்திரக்காரர்கள் தங்கள் வெறியைத் தீர்த்து கொண்டாலும் அம்மையாரின் சுயமரியாதை இயக்கப் பரப்புரை சூறாவளியாக எழுச்சி கொண்டது! ஆம்.
இந்நிலையில் ‘இசைவேளாளர்’ என்னும் பிரிவைச் சேர்ந்த பெண்கள் ‘பொட்டுக்கட்டி’ விடப்பட்னர். பெண், பருவம் அடையும் முன்பே. தேவதாசியாக்குவதற்குரிய சடங்கு கோயில் பிராமணர்களால் நடத்தி வைக்கப்பட்டது. அப்பொழுது கடவுளின் சார்பாக கோயியில் பூசை செய்யும் பிராமணக்குருக்கள் தேவதாசிப் பெண்ணுக்குத் தாலி கட்டுவார். பெரிய ஜமீன்தார்களுக்கும் இந்த “குட்டி” ஜமீன்தார்களும் பொட்டுக்கட்டியோர்க்கு “புரவலர்கள்” ஆனார்கள்.
தேவதாசிக்கும், அவரது புரவலருக்கும் இடையே இருக்கும் பாலியல் உறவு எந்த வகையிலும் அப்பெண்ணுக்கு மனைவி என்ற உரிமையைத்தராது கோயில் மூலம் வழங்கப்பட்ட பொருளாதாரப் பலன்களைப் பெற வேண்டுமானால், தேவதாசிப் பெண்கள் கோயில் அடிமைகளாக இருந்தால் மட்டும் போதாது நில உடைமையாளர்களின் ஆசை நாயகிகளாகப் பரம்பரை பரம்பரையாக வாழவேண்டும்.
பிறப்பின் அடிப்படையில் தேவதாசிகளாக பெண்களை ஆக்குகிற சாதி இழிவிலிருந்து மீள்வதற்கென, இசை வேளாளரின் முதல் மாநாட்டை 1925 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் முன்னின்று நடத்தினார். அம்மாநாட்டில், “நம்மை நாமே இழிவு செய்துகொள்ளும் பொட்டு கட்டும் பழக்கத்திலிருந்து நமது சாதி வெளியே வர வேண்டும்” என்பதை வலியுறுத்தினார். அந்த மாநாட்டில் தமிழ்த் தென்றல் திரு.வி.க, தந்தை பெரியார், எஸ். ராமநாதன் ஆகியோர் உரையாற்றினார்கள். தேவதாசிகளுக்காக ‘யுவதி சரணாலயம்’ என்ற அமைப்பை நடத்தி வந்த யமுனா பூரண திலகம்மா என்ற தெலுங்குப் பெண், மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.
இந்த மாநாட்டுக்குப் பின், மூவலூர் ராமாமர்தம் அம்மையார் பல ஊர்களில் பொட்டறுப்பு சங்கங்களைத் தொடங்கினார். மேடையில் தேவதாசிப் பெண்கள் வந்து, தாங்கள் கோயிலுக்குக் கட்டிய பொட்டு எனப்படும் தாலியை அறுத்து எறிந்த நிகழ்ச்சிகளை துணிச்சலுடன் நடத்தினார். கொலை மிரட்டல்கள், கூட்ட மேடை ஏரிப்புகள், கூட்டத்தில் கலவரங்கள் போன்ற எதிர்ப்புகளுக்கெல்லாம் அஞ்சாமல் செயற்பட்டார்.
பெண்களின் விடிவெள்ளி
மூவலூர் இராமாமிர்தம் தேவதாசிப் பெண்களின் அடிமை நிலையை ஒழிக்கப்புறப்பட்ட விடிவெள்ளியாக விளங்கினார்.
ஊர்தோறும், தெருக்கள் தோறும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து பெண்களை விழிப்படையைச் செய்தார்.
இதனால் சமூக ரீதியான ஒதுக்குதல்களையும். அதிகமான மிரட்டல்களையும் எதிர்கொண்டார். இம்முறையை ஒழிப்பதற்குத் தேவதாசி சமூகத்திலிருந்தே கூடப் பலமான எதிர்ப்புக் கிளம்பியது. பெரிய நிலப்பரப்புக்கள், ஜமீன்தார்கள், சாஸ்திரிகள் எனப் பலரும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கொதிப்படைந்தனர். இச்சமூக விரோதிகள் அனைவரையும் எதிர்கொண்டு, தனது போராட்டத்தை மேலும் ஆவேசத்துடன் தொடர்ந்தார் மூவலூர் அம்மையார். அவர் தேவதாசிகள் வீட்டுக்கே சென்றார். அங்கு, பொட்டுக்கட்டி விடப்பட்ட இளம்பெண்களை இரகசியமாகச் சந்தித்தார். இந்தக் கொடிய வழக்கத்திலிருந்து விலகும்படி எடுத்தரைத்தார். அவ்வாறு விலகி வெளியேறிய பல பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். ‘தேவதாசி’ முறையிலிருந்து வெளியேறிய பெண்களைக் கொண்டு, ‘நாகபாசத்தர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினார்.
தேவதாசி முறைக்கு எதிராக பெரியாரின் பிரச்சாரம்
தமிழக காங்கிரஸ் கட்சியில் தந்தை பெரியார், திருவிக போன்ற தலைவர்கள் தேவதாசி முறைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தனர். இதனால் ஈர்க்கப்பட்டு, தமது இலட்சியத்துக்கு ஆதரவு திரட்ட மூவலூர் அம்மையார் காங்கிரஸ் பேரியக்கத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டார். தேவதாசி முறையை ஒழிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பாடுபட்டதை அறிந்து காந்தியடிகள் மூவலூர் அம்மையாருக்கு பாராட்டுக்கடிதம் எழுதினார்.
அந்தக்காலத்தில் பெண் இதுபோன்ற சமூக மறுமலர்ச்சிக்கானப் பிரச்சாரத்தில் நேரடியாக ஈடுபடுவது மிகவும் அபூர்வமாகும். அதிலும், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்ணே தமது சமூகத்தின் இழி நிலையை எதிர்த்துப் போராட முன்வந்தது காந்தியடிகளைக் கவர்ந்தது.
“தேவதாசி”களை மணக்க, ஆடவர்க்கு அஞ்சாநெஞ்சம் வேண்டும். இப்பெண்களை ஏற்று மணப்பது சமூகச் சீர்திருத்தக்காரர்களின் கடமையாகும் என்பதை அம்மையார் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராக விளங்கிய பெரியாரின் வேண்டுகோளை ஏற்று, கதராடையைச் சுமந்து தெருத்தெருவாக விற்பனை செய்தார். தேவதாசிப் பெண்களையும் கதராடை அணியச்செய்தார்.
காக்கிநாடாவில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் கொடி பிடித்துச்செல்லக்கூடாது எனத் தடுத்தனர் பிரிட்டிஷார். “கொடி பிடித்தால் தானே தடை செய்வாய், நான் கொடியையே புடவையாக உடுத்திக்கொள்கிறேன் பார்” எனக்கொடியைப் புடவையாக அணிந்து கொண்டார்.
மற்றொரு முறை காங்கிரஸ் மேடையில் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டது. அப்போதும், அம்மையார் தன் பாணியில் மேடையில் ஒரு கரும்பலகையை வைத்து, அதில் தான் பேச வேண்டியவைகளை எழுதிக்காட்டியே பிரச்சாரம் செய்து காவல் துறையினருக்குத் தலைவலியை உண்டாக்கினார்.
பண்ணை அடிமை முறை ஒழிப்பு
மூவலூர் அம்மையார் தான் சுயமரியதை இயக்கத்தின் முதல் பெண் பேச்சாளராகத் தமிழகம் முழுவதும் வலம் வந்தார். காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தில் தீவிரமாகப் பங்குகொண்டார். அந்தக் காலத்தில் தலித் ஆண்கள் இடுப்பில் வேட்டி கட்ட அனுமதியில்லை. கோவணம் மட்டுமே கட்ட வேண்டும் என்பது நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை. தலித் ஆண்களுக்கு ஆடை கொடுத்து, இடுப்பு வேட்டியோடு நடமாடச் செய்து பண்ணையடிமை முறைக்கு முதல் சாவு மணி அடித்தவர் அம்மையார்.
காங்கிரஸ் கட்சியில் சனாதனவாதிகள் இருந்து கொண்டு உண்மையாகப் போராடியவர்களை இருட்டடிப்புச் செய்தனர்.
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கோரி தந்தை பெரியார் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் முறியடிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து தந்தை பெரியார் வெளியேறினார். அவருடன் சேர்ந்து மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் வெளியேறினார்.
தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை மக்களிடம் பரப்புரை செய்த முதல் பெண் மூவலூர் அம்மையார்தான்.
தமிழகத்தில் சுயமரியதைத் திருமணங்கள் அதிக அளவில் நடைபெற அரும்பாடுபட்டார்.
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் தேவதாசிமுறை ஒழிப்பு சட்டமும்
தேவதாசிமுறை ஒழிப்புச்சட்டத்தை நிறைவேற்றிட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், காங்கிரஸ் சனாதனவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தீரர் சத்தியமூர்த்தி சட்ட மன்றத்தில் தேவதாசி முறையை ஆதரித்தார். “இந்த முறை தொடர்ந்து நீடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாரம்பரியம் மிக்க இந்தியப் பண்பாடு சீரழிந்துவிடும்” என்று பேசினார். “இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்தியப் பண்பாட்டைக் காக்க இனிமேல், உங்கள் வீட்டுப் பெண்களைச் சிறிது காலம் தேவதாசிகளாக இருக்கச் செய்யுங்கள்” என்று அவருக்குப் பதில் சொல்லும்படி டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டிக்கு அம்மையார் ஆலோசனை அளித்தார். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியும் அவ்வாறு சட்டமன்றத்தில் பேசிய பிறகே காங்கிரஸ் சனாதனவாதிகளின் வாய் அடைக்கப்பட்டது. நீதிக்கட்சியினரும், சுயமரியாதை இயக்கத்தினரும் தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம் அக்டேபர் 9ல் 1947ம் ஆண்டு நிறைவேற முக்கியய் பங்காற்றினர்.
தேவதாசி முறை குறித்து ‘தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்ற நாவலை 1936 ஆம் ஆண்டும் அம்மையார் எழுதினார். அந்த நாவல் தேவதாசிகள் விழிப்புணர்விற்காக எழுதப்பட்டது. 1938 இல் தமிழகத்தில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டார். திருச்சி உறையூர் முதல் சென்னை வரை 42 நாட்கள் நடைபெற்ற பேரணியில் அம்மையார் நடந்தே சென்று பிரச்சாரம் செய்தார். சென்னையில் 13.12.1938 ஆம் நாள் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்பு மறியல் போரில் கலந்துகொண்டு கைதானார். ஆறு மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
1949 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. அண்ணாவுடன் தி.க.விலிருந்து வெளியேறித் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக 70 வயதிலும் சுறுசுறுப்பாய் செயல்பட்டார்.
தேவதாசி முறை, தீண்டாமை, குழந்தைத் திருமணம் போன்ற சமூக இழிவுகளை எதிர்த்துப் போராடிய மூவலூர் அம்மையார் 27.06.1962 ல் காலமானார். மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் 50 ஆண்டு பொதுவாழ்க்கைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் 1956 ஆம் ஆண்டு தி.மு.க சார்பில் அறிஞர் அண்ணாவால் விருது வழங்கப்பட்டது. மூவலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்’ பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவரது பெயரில் தமிழக அரசால் ‘ஏழைப்பெண்கள் திருமண உதவித் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.
முதல் பெண் விடுதலைப் போராளியான, ‘சமூகச்சீர்திருத்தச்சுடர்’ ராமாமிர்தம் அம்மையார் மூவலூரில் வாழ்ந்த வீட்டை அரசு ஏற்று, அங்கு அவருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும். இது தமிழக மக்களின் பெருவிருப்பமாகும்!
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறை, தீண்டாமை, குழந்தை திருமணம், போன்ற அடிமைத்தனத்திலிருந்து பெண்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க தன்னை அற்பணித்த முதல் பெண் விடுதலை போராளி ஆவார்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் நினைவுதினத்தை கருதி ஏழை பெண்களுக்கு திருமண உதவி நிதி திட்டம் அரசால் வகுக்கப்பட்டு வருகிறது. தேவதாசி முறையை ஒழித்து காட்டி இன்றைய சமுதாயத்தில் பெண்கள் வாழ வழி செய்தவர் ஆவார்.
முடிவுரை
சுதந்திரப் போராட்டம், பெண்கள் விடுதலைக்காவும் சக விடுதலைக்காகவும் போராடியவர், ராமாமிர்தம் அம்மையார் ஆவார். பெண்களின் நலனுக்காக போராடியவர் ஆவார். இதனால் பல சித்தரவதைக்கும் ஆளானார். ஆனால் உயிரை ஒரு பொருட்டாக கருதாமல் அனைத்து சதிவலைகளையும் முறியடித்தால்தான் இன்றைய சமுகத்தில் அனைத்து பெண்களும் சமமாக வாழ வழி செய்தவர் அம்மையார் ஆவார். இன்றயை காலத்தில் பெண்கள் மதிப்பும் மரியாதையுமாக வாழ வழி செய்தவர் ஆவர். பெண்களை கண்ணியமாக பார்க்க வேண்டும் என்று முன்மொழிந்தவர். இவரது சேவைகளையும், தியாகங்களையும் கவுரவிக்கும் விதமாகதான் தமிழக முதல்வர் கருணாநிதி தான் அறிவித்த ஏழை பெண்கள் திருமண உதவித்திட்டத்துக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டம் என சூட்டியுள்ளார். இத்திட்டம் இன்றைய ஏழை பெண்களுக்கு மிகவும் உதவியாகவும் அவர்கள் வாழ்க்கையின் ஒளி விளக்காக திகழ்கிறது.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 03 | 1985 டிசம்பர் 16 – 31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
