திரிபுரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 21 அன்று பத்திரிகையாளர் ஒருவர் திரிபுரா மாநில ரைபிள் படையின் அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். திரிபுராவில் கடந்த 3 மாதங்களுக்குள் நடைபெறும் இரண்டாவது பத்திரிகையாளர் படுகொலைச் சம்பவம் இது.
திரிபுரா மாநிலத்தில் ‘ஸ்யந்தன் பத்திரிகா’ எனும் நாளேடு வெளிவருகிறது. இந்நாளேட்டின் ஆசிரியர் சுபல் டேய். இங்கு நான்காண்டுகளுக்கு முன்னர் செய்தியாளராக சேர்ந்தவர் சுதீப் தத்தா பௌமிக். புலனாய்வுக் கட்டுரைகள் மற்றும் அம்பலப்படுத்தல்கள் போன்றவற்றில் திறன் மிக்கவர் சுதீப் தத்தா.
சுதீப் தத்தா மூன்று மாதங்களுக்கு முன்பு, திரிபுரா மாநில ரைபிள் படையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புலனாய்வு செய்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய நபரான கமாண்டர் தப்பான் டெபர்மாவை அம்பலப்படுத்தி எழுதியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் சுதீப் தத்தா
இந்நிலையில் பொய்க்கணக்கு எழுதி சுமார் ரூ.10 கோடிக்கும் மேலாக முறைகேடு செய்திருந்த கமாண்டர் தப்பான் டெபர்மாவின் புதிய ஊழலை அம்பலப்படுத்தி கடந்த நவம்பர் 2 -ம் தேதியன்று ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார் சுதீப் தத்தா.
இதனையடுத்து கடந்த நவம்பர் 21 -ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் சுதீப் தத்தாவை தொலைபேசியில் அழைத்து, வெளியான கட்டுரை குறித்து தனது விளக்கத்தைக் கேட்க தன்னை நேரில் வந்து சந்திக்கும் படி கூறியுள்ளார் தப்பான் டெபர்மா. சுதீப் தத்தா, ஸ்யந்தன் பத்திரிகாவின் ஆசிரியரான சுபல் டே-க்கு அலைபேசியில் தகவலைத் தெரிவித்திருக்கிறார். சுபல் டே, ஒலிப்பதிவு செய்யும் கருவியை எடுத்துச் செல்லுமாறு சுதீப் தத்தாவிடம் கூறியுள்ளார்.
அகர்த்தலாவின் புறநகர்ப் பகுதியான ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள திரிபுரா மாநில ரைபிள் படையின் இரண்டாவது படையின் கமாண்டர் அலுவலகத்திற்கு காலை 10.30 மணிக்குச் சென்றுள்ளார் சுதீப் தத்தா. இதனை அங்கிருந்த பார்வையாளர் பதிவேடு உறுதி செய்திருக்கிறது.
பின்னர் 11 மணியளவில் பத்திரிக்கை ஆசிரியரின் அலைபேசிக்கு வந்த அழைப்பில் சுதீப் தத்தா சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது . உடனடியாக சுதீப் தத்தாவின் உதவி நிருபரான திப்பு சுல்தானை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார் சுபல் டே.
அங்கு சென்ற திப்பு சுல்தானிடம் அப்படி யாரும் இங்கு வரவில்லை என வாயிற்காப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சுதீப் தத்தாவின் வண்டி உள்ளே நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார் திப்பு. இதனைத் தொடர்ந்து மற்ற பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் பரவ சுமார் 60 -க்கும் மேற்பட்டவர்கள் கமாண்டர் அலுவலகத்தின் முன்னர் திரண்டுள்ளனர்.
சுதீப் தத்தாவின் நிலை பற்றி அதிகாரப் பூர்வமாக யாருக்கும் எவ்வித தகவலும் தரப்படவில்லை. மதியம் 2.30 மணிக்கு அதிகாரப் பூர்வமாக சுதீப் தத்தா சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியிடப்பட்டது.
சுதீப் தத்தா தனது அலுவலகத்தில் இருந்து கிளம்புகையில் சில ஆவணங்களைத் திருடிச் செல்ல முயன்றதாகவும், உடலைப் பரிசோதனை செய்ய வந்த காப்பாளர் நந்தா ரியங்-க்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறில் நந்தா ரியங், சுதீப் தத்தாவை சுட்டுக் கொன்றதாகவும் தப்பான் டெபர்மா போலீசிடம் தெரிவித்திருக்கிறார்.
பத்திரிக்கையாளர் சாந்தனு படுகொலையைக் கண்டித்து கடந்த 20.10.2017 அன்று நடந்த போராட்டம்
போலீசும் பாதுகாவலருடன் ஏற்பட்ட தகராறில் சுதீப் தத்தா சுட்டுக் கொல்லப்பட்டார் என்றே செய்தியாளர்களிடம் தெரிவித்தது. நந்தா ரீயங் உடனடியாக கைது செய்யப்பட்டு 10 நாள் போலீசு விசாரணைக் காவலில் அடைக்கப்பட்டார். இத்தோடு வழக்கை ஊற்றி மூட எத்தனித்தது போலீசு.
இந்நிலையில் ‘ஸ்யந்தன் பத்திரிகா’ நாளேட்டின் ஆசிரியரான சுபல் டே, கமாண்டர் தப்பான் டெபர்மாவின் ஊழலை வெளிக் கொண்டு வந்ததற்காக, டெபர்மாவால் வரவழைக்கப்பட்ட சூழலில் கொல்லப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, இது ஒரு திட்டமிட்ட கொலை என்பதை அம்பலப்படுத்தினார்.
பத்திரிக்கையாளர் சங்கங்கள் போராடத் தொடங்கின. இச்சூழல் ஏற்படுத்திய நெருக்குதலின் காரணமாக படுகொலை நடத்தப்பட்ட மறுநாள் (நவம்பர் 22) தப்பான் டெபர்மா கைது செய்யப்பட்டு 10 நாள் போலீசு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுதீப் தத்தாவின் அலைபேசி மற்றும் அவரது சட்டையில் இருந்த பொருட்களும் சம்பவ இடத்திலோ போலீசு வசமோ இல்லை. அவையும் கமாண்டர் தப்பான் டெபர்மாவால் எடுத்து மறைக்கப்பட்டிருக்கலாம் எனத் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றனர் சுபல் டே-யும் சுதீப் தத்தாவின் சக பத்திரிக்கை நண்பர்களும்.
பாசிச பாஜக ஆட்சியில் இந்தியா முழுவதும் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டு வருவது நாடறிந்த விசயமே. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்தில் கொல்லப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ்.
தமக்கு எதிரான கருத்துக்களை அதிகாரவர்க்கம் எப்போதுமே விரும்புவதில்லை. அதுவும் தங்களுக்கு ஆதரவாக மத்தியில் ஒரு பாசிஸ்டின் ஆட்சியும், மாநிலத்தில் அதே பாசிசக் கட்சியின் ஆட்சி நீடிக்கும் போது, இது போன்ற இராணுவ ‘தப்பான் டெபர்மாக்கள்’ கொலை செய்வதற்கும் கவலைப்படுவதில்லை.
பாஜக-வையும், இராணுவத்தையும் எதிர்த்து எழுதினால் இதுதான் நிலைமை என்று அவர்கள் பகிரங்கமாக தெரிவிக்கிறார்கள். மக்களும் – மக்கள் நலன் சார்ந்து செயல்படும் பத்திரிகையாளர்களும் என்ன செய்யப் போகின்றோம்?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
எந்தப் பிரச்சினையையும் ஆய்வு செய்து விடை தேடுவோம் என்று போராடுகிறது மார்க்சியம் !
எல்லாப் பிரச்சினைகளுக்கும் புனித நூல்களில் ஆறுதல் இருப்பதாக முடக்குகிறது மத நம்பிக்கை !
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
ராகமோனிகா விடுதியில் தூக்கில் தொங்கிய போதும், மருத்துவமனையிலும் "நான் ராகமோனிகாவின் தம்பி என்று போட்டோ, வீடியோ ஆதாரங்களை காட்டி பார்க்க அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டபோதும் போலீசார் அனுமதிக்கவில்லை.
சத்தியபாமா பல்கலைக் கழகத்தில் மாணவி ராகமோனிகா படுகொலை ! தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிராக மாணவர்கள் மூட்டிய தீ பரவட்டும் !
தெலுங்கானாவில் இருந்து சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க வந்த ராகமோனிகா என்ற மாணவி, நிர்வாகத்தினரில் உளவியல் சித்திரவதை செய்யப்பட்டு பிறகு தூக்கிடடு தற்கொலை செய்திருக்கிறார். மறைந்த சாராய ரவுடி ஜேப்பியாருக்கு சொந்தமான பல்கலைக்கழகம் உள்ளிட்ட இதர கல்வி நிறுவனங்களிலும் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 30 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர்.
22.11.2017 அன்று பல்கலைகழகத்தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வில் ராகமோனிகா சக மாணவியின் பேப்பரை பார்த்து எழுதியதாக கூறி (பிட் அடித்ததாக) ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் கேவலாமன வார்த்தைகளால் திட்டிக்கொண்டே அறைவாசலுக்கு அழைத்து வந்துள்ளார். அந்த மாணவி தன்னை மன்னித்துவிடுமாறு கெஞ்சியிருக்கிறார்.
இதை காதில் வாங்காத அந்த ஆசிரியர் தேர்வை மேற்பார்வை பார்த்த மற்றொரு ஆசிரியரான விமல் என்பவரையும் அழைத்துக்கொண்டு “உன்னுடைய டிரஸ் மொத்தத்தையும் கழட்டி சோதன போட்டாத்தான் பிட் வைத்திருப்பதை கண்டுபிடிக்க முடியும்’’ என்று வக்கிரமாக மிரட்டியிருக்கின்றனர்.
மாணவி ராகமோனிகா
மீண்டும் தன்னை மன்னித்து விடுமாறு அந்த மாணவி கெஞ்சியிருக்கிறார். ஆசிரியர்கள் போர்வையில் திரியும் அந்த ரவுடிகள் உன்னை எந்த தேர்வையும் எழுதவிட முடியாது, உன் அப்பா, அம்மாவை வரவழைக்கிறோம், நீ போதை மருந்துக்கு அடிமையாகிவிட்டாய், நீ கர்ப்பமாக இருக்கிறாய் என்று சொல்லப்போகிறோம் என்று ஆபாசமாகவும், இழிவாகவும் பேசி சித்திரவதை செய்திருக்கிறார்கள்.
இறுதிவரை தேர்வு எழுத அனுமதிக்கவே இல்லை. தேர்வு முடிந்ததும் அதே கல்லூரியில் படிக்கும் ராகமோனிகாவின் தம்பி அக்காவை அடுத்தடுத்த தேர்வு எழுதவிட வேண்டும் என்று கூறி நிர்வாகத்தினரின் காலில் விழுந்து கெஞ்சியிருக்கிறார். எதுவும் ஏற்கப்படவில்லை. பிட் அடித்ததை ஒரு குற்றமாக்கி அந்த குற்றத்திற்காக விபச்சாரப்பட்டமும் கட்டிவிட்டதால், அவமானம் தாங்க முடியாத மோனிகா பரீட்சை நேரம் முடிந்த பின்னர் காலை 11.45 -க்கு தனது அறையில் தூக்கில் தொங்கிவிட்டார். இது தற்கொலையல்ல, பல்கலைக் கழக ஆசிரியர்கள் மீனாட்சிசுந்தரம், விமல் மற்றும் நிர்வாகத்தினர் சேர்ந்து செய்த படுகொலை.
ராகமோனிகா விடுதியில் தூக்கில் தொங்கிய போதும், மருத்துவமனையிலும் “நான் ராகமோனிகாவின் தம்பி என்று போட்டோ, வீடியோ ஆதாரங்களை காட்டி பார்க்க அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டபோதும் போலீசார் அனுமதிக்கவில்லை.
மாலையில் விசயம் தெரிந்து மாணவர்கள் பதறியடித்து நிர்வாகத்திடம் சொல்லியிருக்கிறார்கள். நிர்வாகத்தினரோ ராகமோனிகாவை பல்கலைகழகத்திலேயே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அந்த மாணவி இறந்துவிட்டது உறுதிசெய்யப்படுகிறது. ஆனால், பல்கலைக்கழக சேர்மன் மரிய ஜான்சன் உத்தரவின் பேரில் உண்மை மறைக்கப்பட்டு, உயிர் இருப்பதாகவும் மேல்சிகிச்சைக்கு குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என்று கூறி அங்கு கொண்டு சென்று இறந்ததை மீண்டும் ஒரு சம்பிரதாயத்திற்காக உறுதிசெய்துவிட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ள பிணவறையில் கொண்டு போய் போட்டுவிட்டார்கள்.
மாணவி ராகமோனிகா இறந்த தகவலை பல்கலைக் கழக நிர்வாகம் அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கவே இல்லை. தம்பியைக்கூட பார்க்க அனுமதிக்கவில்லை. போலீசை வைத்து விரட்டியிருக்கிறார்கள். ராகமோனிகா விடுதியில் தூக்கில் தொங்கிய போதும், மருத்துவமனையிலும் “நான் ராகமோனிகாவின் தம்பி என்று போட்டோ, வீடியோ ஆதாரங்களை காட்டி பார்க்க அனுமதிக்க வேண்டும்” என்று அவர் கேட்டபோதும் போலீசார் அனுமதிக்கவில்லை.
மாணவி ராக மோனிகாவின் தந்தை
இதற்கிடையே ஊடகங்களிடம் அப்பெண் கருவுற்றிருந்தார் என்றும் போதைப்பழக்கம் உடையவர் என்றும் அவதூறுளை கிளப்பி வாங்கிய காசுக்கு வேலைபார்க்க ஆரம்பித்தனர் ஜேப்பியார் கல்விக்குழுமங்களின் சட்டப்பூர்வ ரவுடிகளாக செயல்பட்டு வரும் செம்மஞ்சேரி போலீசார். இந்த அநீதிகளையெல்லாம் பார்த்த மாணவர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். அந்த கொந்தளிப்பில் பற்றி எரிந்தது கல்லூரி வளாகம். பீதியான பல்கலைக்கழக நிர்வாகம் போலீசை குவித்தது, எதற்கும் அஞ்சாத மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடி கல்லூரி வளாகங்களை அடித்து நொறுக்கினார்கள்.
சுமார் 300 -க்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து மாணவர்களை அடித்து விரட்டினார்கள். அந்த இடமே போர்க்களம் போல் இருந்தது.
தேர்வில் பிட் அடித்தால் அந்தத் தவறை சுட்டிக்காட்டி அனுப்பி இருக்க வேண்டும், அவ்வளவுதான். அதை விடுத்து மாணவி கல்லூரியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இரவு 3 மணிக்கு பேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். தன்னுடன் படித்த மாணவியைக்கொன்ற நிர்வாகத்தை என்ன செய்வதென்று தெரியாமல் கோபத்துடன் அதிகாலை 4 மணிவரை சாலையில் அலைந்து கொண்டிருந்தார்கள் மாணவர்கள். அவர்களில் பெரும்பாலோர் தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ராஜீவ் காந்தி சாலை முழுவதும் போலீசால் நிரப்பப்பட்டு இருந்தது. கொல்லப்பட்ட மாணவியின் பெற்றோரை வரவைத்து மிரட்டி நிர்வாகம் ராகமோனிகாவின் பிணத்தை வாங்க வைத்துவிட்டது.
மாணவர்களின் கொந்தளிப்பில் பற்றி எரியும் விடுதி.
ஊரைஅடித்து உலையில் போட்ட கிரிமினல் ஜேப்பியாருக்கு தண்டனையாக கல்வித்தந்தைபட்டம் கிடைத்தது. பிட் அடித்தற்காக ராக மோனிகாவுக்கு மரணம் தண்டனையாக கிடைத்திருக்கிறது.
எனில் பொது நிலங்களை ஆக்கிரமித்து, மக்களிடம் கட்டாய நன்கொடை கொள்ளை நடத்தி ஆட்டும் போடும் ஜேப்பியார் கல்லூரி முதலாளிகளுக்கு என்ன தண்டனை?
சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் ராகமோனிகா படுகொலை!
மாணவியை இழிவுபடுத்தி, சித்திரவதை செய்ததே மரணத்திற்கு காரணம்!
கொலைகூடாரமான சத்தியபாமா தலைவர் மரிய ஜான்சன்
பேராசிரியர் போர்வையில் திரியும் பொறுக்கிகள்
மீனாட்சிசுந்தரம், விமல் ஆகியோரை கைது செய்!
மாணவர்கள் மூட்டிய போராட்டத் தீ பரவட்டும்! தனியார் கல்விக் கொள்ளையர்களின் அட்டூழியம் ஒழியட்டும்!
தகவல் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சென்னை. 9445112675
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலையில் கூவம் கரையோரம் அமைந்திருக்கும் குடிசைப்பகுதி திடீர் நகர். இப்பகுதி கூவம் கரையின் ஆக்கிரமிப்பு எனவும், இங்கு வாழும் மக்களுக்கு நிரந்தர வீட்டு வசதியை ஏற்படுத்துவதாக கூறியும், 21.11.2017 இரவு எட்டு மணியளவில் திடீர் நகரை தரைமட்டமாக்கும் வேலையை தொடங்கியது தமிழக அரசு.
திடீர் நகரில் கிட்டத்தட்ட 2,500 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றன. இங்கே சுமார் 70 வருடங்களுக்கு மேலாக வசிப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர். 2001 தி.மு.க ஆட்சியில் 800 காங்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அடுத்து வந்த அதே தி.மு.க. ஆட்சியில் தான் சிங்கார சென்னை என்ற பெயரில் இம்மக்களை காலி செய்யத் திட்டமிடப்பட்டதாகவும், போராட்டம் மறியல் என மக்கள் எதிர்ப்பு குரல் எழுப்பவும் காலிசெய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என பேதம் இல்லாமல் உழைக்கும் வர்க்கமாக சேர்ந்து வாழ்கின்றனர் இப்பகுதி மக்கள். திடீர் நகரை சேர்ந்த பெண்கள் அருகாமையில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் வீட்டு வேலை செய்வதற்கும், ஆண்கள் துப்புரவு, பெயிண்டிங், கம்பி கட்டுவது, ஆட்டோ ஓட்டுவது போன்ற வேலைகளையும் செய்து வருகின்றனர். பள்ளிப் படிப்பை முடித்த சில இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இவர்களது குழந்தைகள் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர்.
இப்பகுதியை சுற்றியே இவர்கள் வாழ்க்கை தேவைகளுக்கான வேலைகளை அமைத்துக் கொண்டுள்ளனர். இந்த பகுதிக்கு என அங்கன்வாடியும் திருச்சபையும் கோவிலும் இருக்கிறது. நகரின் மையப்பகுதியில் இருப்பதால் பள்ளி, போக்குவரத்து, மருத்துவமனை, வேலை என அனைத்து அத்தியாவசிய தேவைகளும் இம்மக்களுக்கு இங்கே கிடைக்கிறது. இப்பகுதியில் வாழ்ந்ததற்கு சாட்சியாக அரசு ஆதாரம் அனைத்தும் வைத்துள்ள மக்களை அகதிகளைப் போல் அடித்து துரத்துகிறது அ.தி.மு.க அரசு.
( வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து காலி செய்யும் மக்கள் – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
கிரீம்ஸ் சாலையில் பத்தடிக்கு ஒரு போலீசு நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் போராட்டம் மறியல் என போய்விட கூடாது என பயம் காட்டும் தோரணையில் கைது செய்து ஏற்ற வண்டிகளையும் ஆங்காங்கே நிறுத்தியிருந்தனர். உடைமைகளை எடுக்கக் கூட அவகாசம் கொடுக்காமல் அவர்களை துரத்துகிறது போலீசு. போலீசே உடைமைகளை தூக்குகின்றனர். மறுபக்கம் ஜே.சி.பி-யை வைத்து வீடுகளை தரைமட்டமாக்குகின்றனர்.
பெரும்பாக்கம் நகராட்சியை சேர்ந்த அரசு அதிகாரிகள் ஒரு பக்கம் பந்தல் போட்டு அமர்ந்துள்ளனர். திடிர் நகரில் துரத்தப்படும் மக்கள் பெரும்பாக்கம் பகுதியில் கட்டிக் கொடுத்துள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குதான் அனுப்படுகிறார்கள். மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகூட சரிவர செய்யப்படாத அப்பகுதிக்கு துரத்தப்படுகிறோம் என வேதனையில் மக்கள் கண்கலங்குகிறார்கள்.
மக்களே அவரவர் உடைமைகளை கிடைக்கும் கோணிப்பையில் வாரி எடுப்பதும், இங்கும் அங்கும் குழந்தைகள் ஓடுவதும், பொருளை எடுத்துக் கொண்டு ஆசையாக வளர்த்த நம்மை விட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் ஆடுகள் உரிமையாளர்கள் அருகாமையிலேயே இருப்பதும், அப்படியே ஒரு போர்க்களம் போல் இருந்தது அந்த காட்சி. மக்களுக்கு இருக்கும் நெருக்கடியும் அவசரமும் நம்மை யாரிடமும் நெருங்கிப் பேச தயக்கம் கொள்ள செய்தது.
கிரீம்ஸ் சாலை முழுவதையுமே அப்பல்லோ மருத்துவமனை ஆக்கிரமித்து வருகிறது. தற்போது இந்த திடீர் நகரைக் காலி செய்து பிரம்மாண்டமான கார் நிறுத்தம் உருவாக்குவதே அவர்களது நோக்கம் என மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறுகிறார்கள்.
மங்கலெட்சுமி
“அப்பல்லோ ஆஸ்பத்திரிக்காக அரசாங்கம் எங்கள அடிச்சு தொரத்துறாங்க. நான் சொன்னத அப்படியே டிவில போடுங்க. நாலு நாளைக்கி முன்ன வந்து எல்லா குடும்பத்துக்கும் பெரும்பாக்கத்துல வீடு இருக்கு. தேவைக்கி அதிகமாவே கட்டிருக்கு அரசாங்கம். அங்கப் போயி சந்தோசமா இருக்கலாம் அப்படின்னானுங்க. இப்ப மூணு குடும்பம் இருக்குற வீட்டுக்கு ஒருத்தருக்கு மட்டும் வீடுன்னு அடாவடியா காலி பன்றானுக. குருவி கூடுபோல இருந்தாலும் இந்த குடிசக்குள்ள தாயா பிள்ளையா ஒன்னா இருந்ததுங்க, வீடு டோக்கன் யாரு பேருக்குன்னு இப்ப அடிச்சுகினு சாவுதுங்க.”
ஆரோக்கிய ராஜ்
“நான் ஹாக்கி விளையாட்டு நடுவர். ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். வசதி வாய்ப்போடு வாழும் அளவு சம்பளம் இருந்தும் பொறந்து வழந்த எடத்த விட்டு போக மனசில்லாம 9 அக்கா தங்கச்சி அண்ணங்களோட இங்கனக்குள்ளேயே வாழ்ந்துட்டேன். இன்னைக்கி போகச்சொன்னா கண்ணுல தண்ணி அடங்க மாட்டேங்குதேம்மா”
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்துலேயே இதெல்லாம் நடந்துருக்கும் ஓட்டுக்காக விட்டு வச்சானுங்க. இப்ப ஒட்டு மொத்தமா சோலிய முடிச்சுப்புட்டானுங்க. ஏழைங்களுக்கு நாலனா செஞ்சுட்டு அதுல எட்டனா லாபம் பாக்குற ஆளு ஜெயலலிதா. அந்தம்மா போன வருசமே ஆக்கிரமிப்ப அகற்றப் போறேன்னு ஆரம்பிச்சது. ஆனா நோயி வந்து இங்கேயே படுத்துப் போச்சு.”
மாற்றுத் திறனாளி (பார்வையற்றவர்)
“எனக்கு ஆப்ரேசன் பண்ணிருக்கு பார்வை தெரியலங்கம்மா எம்பொண்ணு வீடு டோக்கனு தாராங்கன்னு காலையிலேயே போச்சு இன்னும் வரலைங்க. ஆபீசருங்க வந்து மூட்டைய தூக்குங்க மூட்டைய தூக்குங்கன்னு சத்தம் போடறாங்க. எங்கனக்குள்ள டோக்கனு தாராங்கன்னு பாத்து எம்பொண்ண கொஞ்சம் வீட்டுக்கு வரச்சொல்லுங்க.”
பெயர் குறிப்பிடாதவர்
“இன்னாமா பேரு பேருனுகிற. ஓட்டு அட்ட ஆதார் அட்ட எல்லாம் வச்சுகினுகிறே என்னோட சீரிலு நம்பரு வர்லே வீடு இல்லேன்றானுங்க. பேற வச்சுகினு இன்னா பன்ன சொல்றே. எம்பொட்டாட்டிக்கி ரெண்டு காலும் ஆப்ரேசன் பன்னி ஒரு மாசம் கூட ஆவுல. இங்கனக்குள்ள இருந்தா யாராச்சும் பாத்துப்பாங்க. பத்தாவது மாடியில வீடு குடுத்தா மேல வந்து பாத்துப்பாங்களா. இந்த ஒங்க கண்ணு முன்னாலேயே கிஸ்னாயல ஊத்திகினு கொழுத்திகினு போப்பறேன் பாரு.” என்று அருகில் மண்ணெண்ணெயுடன் சென்றவரிடம் மற்றொருவர் கேனை புடுங்க முற்பட்டார். மக்கள் சமாதானம் செய்தனர்.
ஜான்சி என்ற குழந்தை
“புது வீட்டுக்குதான் போறோம் ஆனா எனக்கு புது வீடு பிடிக்கல. இங்கதான் புடிச்சுருக்கு. ஏன்னு சொல்ல தெரியல.”
நாகம்மா பாட்டி
“நா இந்த எடத்துக்கு வந்து 66 ஆறு வருசமாகுது. தாயா புள்ளையா பழகிகினு இங்குனக்குள்ளேயே பொழப்பு பாத்துகினு இருந்தோம். எங்கள இட்டுனு போயி எங்கேயோ காட்டுல விடப்போறான்றானுங்க. எப்படிம்மே வாழ்றது. ஆமாம்மாம்மா கெவுருமெண்டுக்கு கொல்ல நோயி வந்துட்டு அதா எங்கள இப்புடி வாரிகினு போறானுங்க. இப்ப இருக்கவனுங்கள்ளாம் கூட்டிக்குடுத்த பயலுகம்மா. அவனுக்கு என்ன ஆதாயம்னு மட்டுத்தான் பாக்குறான். அப்பல்லோ ஆஸ்பத்திரி காரனுங்க காரு நிறுத்தத்தான் இந்தன சனத்தையும் தெரத்துறானுங்க.”
பவானி
“பைத்தியம் புடிச்சாப்போல இருக்கு. வீடு ரெடியாருக்கு எல்லா தட்டுமுட்டு சாமனையும் ஏத்துறாங்க. போயி பாத்தாத்தானே தெரியும் யாருக்கு வீடு, எப்புடி வீடுன்னெல்லாம். புருசன் விட்டுட்டு ஓடிட்டான் ரெண்டு வயசு பையன வச்சுட்டு தெருவுல நிக்கிறேன்.
ஒரு தகவலு சொல்லனும். நோட்டிசு கொடுக்கனும் ஒன்னுமே இல்லாது கைய புடிச்சு இழுத்து தெருவுல தூக்கிப் போட்டா எங்கம்மா போவாம் நாங்க. வீடு குடுத்தா மட்டும் போதுமா பொழப்புக்கு இன்னா செய்வ. அங்க பெரிய பெரிய ஆபீஸுங்க இருக்கு கடை போடலாம், வீடுங்களுக்கு வேலைக்கி போலாம் எல்லாம் இருக்குன்றானுங்க இவனுங்கள நம்ப முடியாது.”
ஜெபாஸ்டின்
“நான் பள்ளி படிப்ப முடிச்சுட்டு இங்க 4 கி.மீட்டருக்குள்ள வேலை பாக்குறேன். என்னப்போலதான் இங்க உள்ள அத்தன பேரும் வேலைக்கி போய் வாரோம். எங்கள கூட்டிப்போயி 30, 40 மைலுக்கு அப்பால விட்டா வண்டி கூட கிடையாது. எப்படிங்க சரியான நேத்துக்கு வர முடியும்.”
கன்னிகா (குழந்தை)
“வீட்ட காலிபன்றாங்க. எனக்கு பரிச்ச நடந்துட்டு இருக்கு ஸ்கூலுக்கு எப்படி போறதுன்னு தெரியல. எங்க அம்மா எம் பொம்மையெல்லாம் எடுக்க மாட்டேங்குது அதுநால நான் எடுத்துகிட்டேன்.”
மேரி
“இங்கன இருக்குற ஆறு ஏழு வீடு மட்டும் கோயிலு எடம். (அறநிலைத் துறை) அதனால எங்கள மட்டும் காலிப்பன்னல. ஊரையே காலிபன்னி அகதிகளாட்டம் ஏத்துறாங்க. நாங்க இங்க அனாதையா இருக்கோம்.”
“எங்க ஆயா காலத்துல பர்மாவுலேருந்து வந்தவங்கதான் இந்த குப்பத்து மக்கள். நான் பொறந்து வளந்தது எல்லாமே இங்கதான். எனக்கு இந்த எடத்த விட்டு போக புடிக்கலங்க.”
கன்னியம்மா
“நான் வாடகைக்கி வந்து 22 வருசமாச்சு. எங்களுக்கு வீடு இருக்குன்னு டோக்கனு கொடுத்தாங்க. சொந்த வீடு கெடைச்சது சந்தோசந்தேன். ஆனா என்னால அம்மாம்பெரிய கட்டடத்துல ஏரி ஏறங்க முடியுமா? மிசுனு இருக்குன்றாக ஆனா எத்தன நாளைக்கி ஓடும்.”
அரவிந்த்
“எங்ககிட்ட சாமான கட்றதுக்கு கோணி இல்லைங்க. எல்லாம் அப்படியே அள்ளிப்போட்டதுல பல பொருளு ஒடஞ்சுப்போச்சு. பாத்து ஏத்துங்கன்னு அம்மா சொன்னதால தனி வண்டி புடிச்சு போங்கன்னு திட்றாங்க.”
இரக்கமற்ற வாழ்வில் கரை சேர வழியின்றி நீந்திக் கொண்டிருக்கும் எளிய மக்களைக் கூட, ஒரு மேட்டுக்குடி குழந்தையின் மூலம் இரங்க வைத்தார் “அஞ்சலி” திரைப்பட இயக்குநர் மணிரத்தினம். புதிய கலாச்சாரத்தில் அந்தப் படம் குறித்த விமரிசனத்தை படித்த போது, தமிழ் சினிமாவில் இதற்கு நேரெதிரான கதைக்கருவில் ஒரு படம் வருமென்று கற்பனை கூட செய்திருக்க முடியாது.
அந்தக் கனவை நனவாக்கியிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். வாழ்த்துக்கள் கோபி! நிச்சயம் “இது வேற தமிழ்நாடு”!
இரவுப் படுக்கையில் கதை கேட்கும் குழந்தையிடம் போட்டி போட்டுக் கொண்டு அம்மாவும், அப்பாவும் கதை சொல்வதில்லை. முழு உலகின் விசித்திரங்களை கற்கும் வாயிலைத் திறப்பதற்கு கதை ஒரு திறவு கோல் என்றாலும், பெற்றோருக்கு அந்தப் பொறுமையும் அருமையும் ஆற்றலும் இருப்பதில்லை.
ஆனால் அதே பெற்றோருக்கு ஒரு மழலையின் மூலம் வாழ்க்கை குறித்த கதை சொல்லும் போது அனேகமாக நிபந்தனைகள் ஏதுமின்றி ஒன்றிவிடுகிறார்கள். கதை என்று அல்ல, களத்திலும் இந்த விதி அதற்குரிய விளைவுகளை தோற்றுவிக்கவே செய்கிறது.
நெல்லை தீக்குளிப்பில் கையில் தின்பண்டத்தோடு தீயில் வேகும் அந்தக் குழந்தையின் மங்கலான உருவம் தமிழ் சமூகத்தின் ஆத்திரத்தையும், கையறு நிலையையும் தெளிவாகக் கிளப்பி விட்டது.
மத்திய தரைக்கடலில் குப்புற விழுந்து கிடக்கும் அய்லான் குர்தி எனும் ஒரு மழலையின் சடலம் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த வரிசையில் ஆழ்துளைக் குழியில் விழுந்து தவிக்கும் தன்ஷிகா மூலம் பார்ப்போரை பதற வைப்பதில் இயக்குநர் கோபி நயினார் வெற்றி பெற்றிருக்கிறார்.
அந்தப் பதற்றத்தை அதற்குரிய சமூக பின்னணி, இயக்கத்தோடு காட்டியிருப்பதே கோபியின் தனித்துவம். இதை வெறும் சென்டிமெண்டு சரடுகளால் பின்னியிருந்தால் அது மணிரத்தினத்தின் கிராமப்புற அஞ்சலி படமாக சரிந்திருக்கும்.
அரசு, அதிகார வர்க்கம், மக்கள் குறித்து கோபிக்கு ஒரு தெளிவான பார்வை இருக்கிறது. தமிழ் சினிமாவின் புதிய இயக்குநர்கள் பலரிடம் கதையில் நின்று கொண்டு பேசும் அரசியல் புரிதல் மட்டுமே இருப்பதால் கதைக்கு வெளியே பேசும் போது அந்த அரசியல் தெளிவின்றி திகைக்கிறது. கோபியோ இந்தப் படம் குறித்து வெளியே நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எளிமையாகவும், உறுதியாகவும், பெருமளவு சரியாகவும் பதிலளிக்கிறார். இப்படி அரசியலும், கலையும் சங்கமிக்கும் கலைஞர்கள் அபூர்வம்.
இயக்குநர் கோபி நயினார்.
ஏழைகளுக்கு இந்த அரசமைப்பில் இடமில்லை என்பது ஆரம்ப காட்சியான ராக்கெட் பறப்பதிலிருந்து, கடைசி காட்சியான நயன்தாரா பதவி விலகும் காட்சி வரை கதையிலும், காட்சி அமைப்பிலும், குறியீடுகளிலும், உரையாடல்களிலும் நச்சென்றும், நளினமாகவும் வருகின்றது.
ராக்கெட் பறப்பதற்கு மகிழும் ஏழைகள், காசு இல்லாமல் காது டாக்டரை தவிர்த்து விட்டு மருந்துக்கடைக்கு போவது, 650 ரூபாய் கேக்குக்கு பதில் 250 ரூபாய் கேக்கை தெரிவு செய்வது, கபடி – நீச்சல் திறமைகளின் யதார்த்த நிலை, குடிநீரின் ஏற்றத்தாழ்வுகள், சோம்பிக் கிடக்கும் அதிகார வர்க்கம், கயிற்றைத் தவிர வேறு ஏதுமின்றி மீட்புப் பணிக்கு வரும் படைகள், சோகத்தை பணத்தால் பஞ்சாயத்து பண்ண விரும்பும் சுயநல அரசியல்வாதிகள், கலெக்டரை விசாரிக்கும் மேலதிகாரியின் விசாரணைக் காட்சிகள்…….
இந்தக் கதையை பலரிடம் சொன்னாலும் யாரும் இதை தயாரிக்க முன்வரவில்லை என்று கோபி கூறியிருக்கிறார். இது ஒரு முழு முற்றான சோகம் மற்றும் ஆவணப்படக் கதையாக அந்த தயாரிப்பாளர்களுக்கு தோன்றியிருப்பதில் அதிசயமில்லை. சினிமாவின் மசாலா மட்டுமல்ல, கதை என்ற வஸ்துவில் இடம் பெறக்கூடிய வேகம், முடிச்சு, நகைச்சுவை, துள்ள வைக்கும் பாடல், திருப்பம் போன்றவை கூட இல்லையென அவர்கள் நினைத்திருக்கலாம்.
ஆனால் இந்த ஐயம் நயன்தாராவுக்கு ஏன் தோன்றவில்லை என்பது மற்றொரு அதிசயம். வாழ்த்துக்கள் நயன்தாரா! நம்மைப் பொறுத்த வரை இந்தப்படத்தில் நயன்தாரா சிறப்பாக நடித்திருப்பதாகத் தோன்றவில்லை. இந்தப் படத்தில் அவர் நடிக்க முன் வந்ததே சிறப்பு! எனினும் இந்த மாதிரி படங்களில் நடிக்க கூடாது என திரைத்துறை மேட்டுக்குடி வர்க்கமும், பாரதிய ஜனதாவும் நயன்தாராவை வற்புறுத்தப் போவது உறுதி.
இந்தப் படம் சமூகக் கருத்துக்களை பேசினாலும் ஒரு பிரச்சாரப் படம் போல இல்லாமல் கலை நேர்த்தியோடு இருப்பதாக கூறுகிறார் நியூஸ் 18 தமிழ் குணசேகரன். பிரச்சாரமற்ற கலை ஏதுமில்லை என பலமுறை எழுதினாலும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.
உப்பரிகையில் நின்று கொண்டு மேட்டுக்குடி வாழ்வின் மனிதாபிமானப் பார்வை வழி, தூரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இலட்சிய மாந்தர்களை தேடிக் ‘கண்டுபிடித்து’, அவர்களுக்கு ஒளிவட்டம் போட்டுவிட்டு பிறகு அருகாமையில் இருக்கும் எளிய மாந்தர்களை சராசரியாக இறக்கிவிட்டு தூற்றச் சொல்லும் ஜெயமோகனின் அறம் வரிசைக் கதைகளோ, தூரத்தில் இருக்கும் மனிதர்களின் எளிய வாழ்க்கையை அருகாமையில் உணர்த்தி எவரையும் எளிய மக்களின் வாழ்வியலையோ அழகியலையோ ரசிக்க வைக்கும் கோபியின் அறம் திரைப்படமோ அனைத்தும் பிரச்சாரங்கள்தான்.
ஏற்றத்தாழ்வுகளால் பிரிந்திருக்கும் இச்சமூக்தில் நாம் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பதன்றி பிரச்சாரமின்றி ஒரு பக்கமோ, இலக்கியமோ இல்லை.
இந்தப் படத்தில் பிரச்சாரம் இல்லையென கூறினால் இயக்குநர் கோபியே சிரிப்பார். ஒரு கதையோ கலையோ சொல்ல வந்த பொருளை பேராற்றலுடன் கூறுவதே அதன் வெற்றியே அன்றி மேற்கண்ட பிரச்சாரம் இருக்கிறதா என்ற தவறான ஆய்வு அல்ல. சமூக அக்கறை கொண்ட கதைகளை வெற்றி பெற வைக்க தேவை ஆழமான அரசியல், தத்துவ, கலைப் பார்வையே தவிர பிரச்சாரம் தேவையல்ல என்ற நாசுக்கு அல்ல.
அனேகமாக வெறும் கலையின் பால் நின்று கொண்டு பிரச்சார வாடை அடிக்கிறது என்று தமிழின் சிறுபத்திரிக்கை மரபு செய்த பிரச்சாரத்திற்கு குணசேகரன் போன்றோர் பலியாகக் கூடாது.
நியூஸ் 18 விவாதத்தில் கலந்து கொண்ட இயக்குநர் வசந்தபாலன் இந்தப்படம் திருவள்ளூர் மாவட்ட மக்களின் வாழ்வியல், கலாச்சாரத்தை காட்டுவதாகவும், இத்தகைய எண்ணிறந்த தமிழ் வாழ்க்கையை காட்டும் படங்கள் வரவேண்டும் என அங்காடித் தெருவை சான்று கூறினார். இல்லை, இப்படத்திற்கு சப்டைட்டில் போட்டு உலகமெங்கும் போட்டுக் காட்டினால் கூட சிலியில் இருக்கும் மக்களோ, இல்லை ஈரானில் இருக்கும் மாணவர்களோ அனைவரும் திரைப்படத்தோடு ஒன்ற முடியும். அதாவது தங்களது வாழ்வை திரையில் காணமுடியும்.
இந்தப் படம் உணர்த்தும் ஏழ்மை X அதிகார வர்க்கம் – மேட்டுக்குடி எனும் முரண்பாடு உலகெங்கும் எளிதில் ஒன்றக் கூடிய கரு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் பரவி நிற்கும் யதார்த்தமும் கூட.
தன்ஷிகா எனும் அந்தச் சிறுமி கறுப்பாகவோ, சாமுத்ரிகா இலட்சணங்கள் இல்லாதவாளகவோ அழகுப் போட்டிகளை ஆராதிக்கும் பியூட்டி பார்லர் கலைஞர்கள் மதிப்பிடக் கூடும். தன்ஷிகா எனும் குழந்தையை மணிரத்தினம் வகைப்படங்களில் வரும் ஹார்லிக்ஸ், அமுல் பேபி குழந்தைகளுக்கு நேரெதிராக படைத்திருப்பதை வெறுமனே அடையாள அரசியலில் காலம் போக்கும் சில ஓய்வு நேர அரசியல் போராளிகள் பாராட்டியிருக்க கூடும். இரண்டுமே தவறு.
ஆழ்துளையின் கும்மிருட்டில் ஒடுங்கிக் கொண்டு, ஜட்டியோடு சிறுநீர் கழித்தால் அம்மா திட்டும் என்று சொல்வதாகட்டும், அப்பா பயமாயிருக்கு, சீக்கிரம் கூட்டிட்டு போ என்று சொல்வதாகட்டும், இத்தகைய காட்சிகள் மூலம் தன்ஷிகா பார்வையாளர்களை கொள்ளை கொள்கிறாள்.
வேறு வகையில் சொன்னால் ஏழைகளின் வேகமான வாழ்க்கை ஓட்டமும், சோகமோ, காதலோ, வறுமையோ அவற்றில் பல்வேறு உணர்ச்சிகள், உடல் மொழிகள், வழக்குகள் ஏராளம் உண்டு. அவற்றை இன்னும் சினிமா கைப்பற்றவில்லை. சத்யம் சினிமா வளாகத்தில் வரும் மேன்மக்களின் உடல்மொழிகள், பேசும் பாணிகள் அனைத்தையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அரசுப் பள்ளி ஒன்றின் மாணவர்களிடம் நீங்கள் நூற்றுக்கணக்கான உடல்மொழிகள், வசனங்கள், சேட்டைகளை காணலாம்.
காலம் கடந்தும் எம்.ஆர்.ராதா இன்றும் ஒரு ஹீரோ!
அதனால்தான் சார்லி சாப்ளின், எம்.ஆர்.ராதா போன்றோர் காலம் கடந்தும் இன்றும் ஒரு ஹீரோவாக அறியப்படுகின்றனர். ரஜினியையே எடுத்துக் கொள்ளுங்கள். அவரது கண்டக்டர் வாழ்வின் வேகமான உடல் மொழியே அவரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்துகின்றன. பாட்சா படத்தில் நாற்காலியைத் திருப்பிக் கொண்டு அவர் ஏய்… ஏய்… என்று வில்லனை விசாரிக்கும் “ஸ்டைலை” உலக நாயகனால் ஒரு போதும் செய்ய முடியாது. ஜிகர்தண்டாவில் வரும் அந்த நடிப்பு மாஸ்டரைக் கொண்டு நூறு நாட்கள் பயிற்சி கொடுத்தாலும் கமலால் அப்படி நடிக்கவே முடியாது. காரணம் அவரது மேட்டுக்குடி தந்தையின் வழக்கறிஞர் குடும்பப் பின்னணி!
சிறுமி தன்ஷிகா, அவளது அம்மா, அப்பா, அண்ணன், காட்டூர், காட்டூர் மக்கள் அனைவரும் அச்சு அசலாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் கலெக்டர் என்று வரும் போது நயன்தாரா எனும் வெற்றியடைந்த ஒரு ‘அழகான’ நடிகை தேவைப்படுகிறது. ஒரு அறிமுக இயக்குநருக்கு இத்தகைய முகம் அதுவும் மசாலா அல்லாத ஒரு யதார்த்த பாணி படத்திற்கு தேவை என்றே வைப்போம். அது பிரச்சினை அல்ல.
படம் முழுக்க நயன்தாரா அதிகார வர்க்கத்தின் அலட்சியம், மெத்தனம், மக்கள் விரோத தன்மை அனைத்தையும் பார்க்கிறார், பேசுகிறார் என்றாலும் அவர் ஆரம்பத்திலிருந்தே ஒரு நல்ல கலெக்டர் என்பதாக சித்தரிக்கப்படுகிறார். பாம்புகளில் நல்ல பாம்பு, கெட்ட பாம்பு இல்லை என்பது போல கலெக்டர்களிலும் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடுக்கு அடிப்படையே இல்லை. காரணம் அரசியல் அமைப்புச் சட்டப்படி அவர் அரசு, அரசாங்கங்களின் முடிவுகளை அமல்படுத்தும் நிர்வாகியாகவும், அதற்கான அதிகாரங்களையுமே கொண்டிருக்கிறார்.
ஒரு கலெக்டர் ஊழல் செய்ய மாட்டார், ஏதோ சில ஏழைகளுக்கு சான்றிதழ் வாங்கித் தருவார், சில பல புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பார் என்பதைத் தாண்டி அவர் அரசின் கொள்கைகளையே அமல்படுத்துகிறார். சான்றாக ரேசன் கடைகளில் இனி பருப்பு வகைகள் இல்லை என அரசு உத்திரவிடும் போது, காட்டூர் மக்கள், அம்மா எங்க பிள்ளைகளுக்கு பருப்பு போடுங்கமா என்று கேட்டால் நயன்தாரா தனது ஊதியத்திலிருந்து சில பல கிலோக்களை வாங்கித் தரலாமே அன்றி அதிகாரியாக உத்தரவு போட முடியாது.
எனினும் நயன்தாரா இறுதியில் மக்களுக்கு சேவை செய்ய வழியற்ற இந்த அமைப்பில் இருந்து ராஜினாமா செய்கிறார். ஆனால் அவரது பாத்திரப் படைப்பு ஆரம்பத்தில் இருந்தே இந்த முடிவை நோக்கி பயணிப்பதால் கலெக்டர் எனும் பாத்திரத்தின் சட்டப்பூர்வ பரிமாணங்கள் இக்கதையில் பதிவு செய்யப்படவில்லை. அல்லது ஐ.ஏ.எஸ். பயிற்சி முடித்த ஒரு கலெக்டர் கறாரான வகையில் அரசு கொள்கைகளை அமல்படுத்தும் போக்கில் பிறகு அவர் இந்த அமைப்பே மக்களுக்கு பணியாற்றும் வகையில் இல்லை என்று பட்டுத் தெளிவதோ இல்லை சமரசப்படுத்திக் கொள்வதோ வந்தால் மக்கள் மாவட்ட ஆட்சியரின் இலக்கணத்தை புரிந்து கொள்வார்கள்.
இந்த அரசு செயல்படவில்லை, மக்களுக்கு எதிரானது என்று அதிகாரி வட்டத்தில் ஒரு ஸ்டேட்மெண்ட் தேவைப்பட்டதால்தான் கலெக்டர் பாத்திரத்தை வைத்தேன் என்று இயக்குநர் கூறினாலும், அந்த ஸ்டேட்மெண்ட் நடுநிலையாகவும், யதார்த்தமாகவும் வரவில்லை.
தகழியின் “ஏணிப்படிகள்” நாவலில் நல்லவனாக சேரும் அரசு குமாஸ்தா இறுதியில் தலைமைச் செயலளாராக மாறும் போது பெரும் காரியவாதியாக உருவெடுத்திருப்பான். உண்மையில் அரசு ஊழியர்களின் பரிணாம வளர்ச்சி இப்படித்தான இருக்கின்றது. ஒரு நேர்மையான கலெக்டர் நேரடியாக காசு வாங்க வில்லை என்றாலும் வரும் அரசு அதிகாரிகள் – அமைச்சரின் உண்டு விடுதி செலவுகளுக்காக துறைசார்ந்து மாவட்ட அதிகாரிகள் வசூலிப்பதையோ இல்லை மந்திரி வீட்டு மகளின் திருமணத்திற்கு அளிக்கப்படும் மாவட்ட மொய் தொகையையோ நிறுத்த முடியாது. சகாயமே ஆனாலும் கூடங்குளத்தில் அணு உலையை ஆரம்பிக்க இடிந்த கரை மக்களை ஒடுக்கவே செய்ய வேண்டும்.
அதே போன்று ஊடக விவாதம் படத்தின் சோகக் காட்சிகளிலிருந்து அவ்வப்போது மக்களை விடுவித்து கருத்துக்களை அசை போடும் நல்ல உத்திதான். என்றாலும் அங்கேயும் கலெக்டர் போன்று அனைவரும் மக்கள் சார்பில் நின்று அதுவும் கொஞ்சம் செயற்கையாக விவாதிக்கின்றனர். இதுதான் கொஞ்சம் ‘பிரச்சார’ தொனியில் இருக்கிறது என்பது அண்ணன் குணசேகரனுக்கு தெரியவில்லை.
உண்மையில் இந்த ஊடக விவாதம் பாண்டே தலைமையில், பானு கோம்ஸ், டாக்டர் சுமந்த் சி ராமன், ராமசுப்ரமணியன் போன்ற பாஜக சமூக ஆர்வலர்களோடு நடந்திருந்தால் அதுவும் மக்களுக்கு சார்பாக பேசும் பாணியில் நைச்சியமாக அதிகார வர்க்கத்தை ஆதரித்தும், மக்களின் அறியாமையை விமர்சித்துப் பேசுவதாக இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். கீழே களத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள், தலைமையில் இருக்கும் எடிட்டோரியில் கொள்கையோடு முரண்படாமல் கள நிலவரத்தை சொல்லத் திணறும் பட்சத்தில் அந்த யதார்த்தம் படத்திற்கு வலு சேர்த்திருக்கும்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் இப்படிச் சொல்லலாம். இந்தப் படத்தில் அதிகார வர்க்கம், அரசு நிர்வாகம், ஊடக முதலாளிகளுக்கான ‘நியாயம்’ பொருத்தமாக வைக்கப்பட்டிருந்தால், நயன்தாராவின் நல்ல கலெக்டர் பரிமாணம் இன்னும் பல முரண்பாடுகளோடு வெளியே வந்திருக்கும்.
இதனால் இந்தப் படம் தனது பேசுபொருளில் பலவீனமாய் இருப்பதாக பொருளில்லை. அதே நேரம் பலமாக இருப்பதாகவும் தோன்றவில்லை. அடுத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அரசை செயல்படவைக்க வேண்டும் என்பதைத்தாண்டி ஒரு சிறுவனை குழியில் இறக்குவதை ஒரு கையறு நிலை என்று குறிப்பிடலாமே அன்றி அதை மக்கள் தமது அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள் என்று பொருளாகாது.
ஏனெனில் அதே சிறுமிக்கு வெறிநாய்க் கடியோ இல்லை, பாம்புக் கடியோ நடந்து ஒரு அரசு மருத்துவமனையில் கதை நடப்பதாக வைப்போம். மருத்துவமனையில் மருந்தில்லை, பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை என்றால் மக்கள், கலெக்டர் தலைமையில் நாட்டு வைத்தியம் செய்வது சாத்தியமில்லையே?
கல்வி, சுகாதாரம், வேலை, விலைவாசி உயர்வு அனைத்திலும் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் கோலொச்சும் நாட்களில் நாம் அரசை தட்டிக் கேட்டால்தான் மேற்கண்ட மூன்று மயங்களில் இருந்து நாட்டை மீட்கும் போராட்டத்தை கண்டுபிடித்துக் கட்டியமைக்க முடியும்.
இல்லையேல் நாமே சாலை போடுவது, பள்ளி நடத்துவது, மருத்துவமனை நடத்துவது என்று என்.ஜி.வோ. டைப்பில் அப்துல் கலாம், சகாயம் பாணியில் அரசியலற்ற முறையில் மக்களை காயடிப்பதாக இருக்கும். இந்தப் படம் அப்படி சொல்லவில்லை என்றாலும், இயக்குநர் கோபிக்கும் இந்த அரசியல் தெரியுமென்றாலும் படத்தின் கதையில் அது வலுவாக வரவில்லை என்பதே நமது தோழமையான விமர்சனம். இந்தக் குறைபாடுகளோடு சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முடியாதா எனும் பரபரப்பும் மனிதாபிமானமும் சேர்ந்து பார்வையாளர்களை கட்டிப் போடவைக்கிறது. அந்த பரபரப்பு அரசு குறித்த விமர்சனங்களில் எளிமைப்படுத்தப்பட்ட நல்லவன் – கெட்டவனாக மட்டுமே விஞ்சுகிறது.
இருப்பினும் ஒரு சிறுகதை போல ஒரு கிராமத்தின் பார்வையில் இந்த அரசு அமைப்பை இப்படம் சிறப்பாகவே அம்பலப்படுத்துகிறது. இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்!
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
நடிகர் சசிக்குமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். தனது மரணக் குறிப்பில் மதுரை அன்புச் செழியன் எனும் கந்து வட்டி மாஃபியாவின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த கந்து வட்டி ரவுடி தொடர்பாகவே இயக்குநர் மணிரத்தினத்தின் சகோதரர் ஜி.வெங்கடேஸ்வரன் 2003 -ம் ஆண்டு தற்கொலை செய்தார்.
தற்கொலை செய்து கொண்ட அசோக் குமார்
அதன் பிறகு ரம்பா, தேவயானியை மிரட்டினார், அஜித்தை ஒரு அறையில் பூட்டி வைத்தார் என்று நிறைய தகவல்கள் வந்தாலும் அன்புச் செழியனை அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அ.தி.மு.க அமைச்சர்கள், சாதி பலம், போலீசு, நீதித்துறை, ஊடக முதலாளிகளுக்கு இறைக்கப்படும் பணம் ஆகியவற்றால் அன்புச்செழியன் செல்வாக்கோடு இருக்கிறார்.
சினிமாத்துறையில் இருக்கும் நெறிமுறையற்ற முறையில் பணம் சம்பாதிக்கும் நிலையும் இதற்கு காரணம். சந்தையில் வெற்றிகரமாக இருக்கும் நட்சத்திரங்களுக்கு அதிக பணம் கொடுத்து அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்கள் அந்த அதிகப் பணத்தை இத்தகைய கந்து வட்டிக்காரர்களிடமே வாங்குகிறார்கள். சினிமா திரையரங்குகளில் அதிக விலையில் டிக்கெட் விற்கப்படுவதற்கும் இதுவே காரணம்.
இந்நிலையில் கந்து வட்டி தடைச் சட்டமே இந்த அன்புவின் அடாவடியை அடுத்து கொண்டு வரப்பட்டாலும் அடாவடிகள் தொடர்கின்றன.
மதுரை அன்புச்செழியனை சிறையில் அடைக்க தடுப்பது யார்?
அ.தி.மு.க அமைச்சர்கள்
பெரும் ஊதியத்தை வாங்கும் நட்சத்திர நடிகர்கள்
ஊழல் போலீசு, நீதிமன்றம்
நட்சத்திர நடிகருக்கு கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்கள்
அன்புச் செழியனை வெளிப்படையாக கண்டிக்க முன்வராத சினிமா பிரபலங்கள்
(பதில்களில் மூன்றைத் தேர்ந்தெடுக்கலாம்)
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
பத்மாவதி – சஞ்செய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்திப் படம். ரஜபுத்ர ராணி பத்மினி அல்லது பத்மாவதியின் கதையை ஒரு இலக்கியத்தின் அடிப்படையில் கூறும் இந்த மசாலா படத்தை பல்வேறு இந்துமத இயக்கங்கள் எதிர்க்கின்றன. ஒருவேளை இந்த எதிர்ப்பு கூட விளம்பரத்திற்கான செட்டப்பாகவும் இருக்கலாம். ஏனெனில் தயாரிப்பாளர்களில் ஒருவர் அந்த சந்தேகத்தை எழுப்புகிறார். இது போக ஒரு புகழ்பெற்ற இந்து ராணியை படத்தில் கேவலப்படுத்தி விட்டார்கள் என்பதே இந்து மதவெறியர்களின் குற்றச்சாட்டு. இனி வினாடி வினாவில் பதிலளிப்பதன் மூலம் இதன் வரலாற்றுப் பின்னணியை நீங்களும் அறியலாம்.
பத்மாவதி திரைப்படத்தின் கதையை தீர்மானிக்கும் பத்மாவத் நெடுங்கவிதையை கி.பி 1540-ம் ஆண்டில் எழுதியவர் யார்?மாலிக் முகமது ஜெயஷி
ராணா பிரதாப் சிங்
காளிதாசர்
துளசிதாசர்
ராஜ்புத் வார்த்தையின் மூலமான சம்ஸ்கிருத வார்த்தையின் பொருள் என்ன?மன்னனின் மகன்
ஆண்ட பரம்பரை
அரசர்களின் அரசன்
சக்கரவர்த்தி
ராஜபுத்திரர்கள் எனப்படும் குழு அல்லது சாதி என்ன தொழிலை அடிப்படையாக கொண்டிருந்தது?போர் தொழில் முதல் விவசாயம் வரை
போர் வீரர்கள்
புரோகிதர் வேலை
கிராம தலைவர்கள்
பத்மாவதி திரைப்படத்தை பன்சாலியுடன் தயாரித்திருக்கும் Viacom 18 நிறுவனம் யாருடையது?முகேஷ் அம்பானி
கோயங்கா
அமிதாப் பச்சன்
அதானி
ராணி பத்மினியின் கதையைக் கூறும் பத்மாவத் நெடுங்கவிதை எந்த மொழியில் எழுதப்பட்டது?அவாதி
சம்ஸ்கிருதம்
இந்தி
உருது
பத்மாவத் காப்பியத்தின்படி ராணி பத்மினி பிறந்த பகுதியாக கூறப்படும் சிம்கலவிபா எந்த இடத்தில் உள்ளது?இலங்கை
பாகிஸ்தான்
ராஜஸ்தான்
குஜராத்
ராணி பத்மினியின் நாடான சித்தூர் மீது படையெடுத்துச் சென்ற அலாவுதீன் கில்ஜியின் காலம் என்ன?கி.பி 1296 – 1316
கி.பி 1415 – 1466
கி.பி 1695 – 1712
கி.பி 1332 – 1378
அலாவுதீன் கில்ஜியோடு சென்ற இந்த அரசவைக் கவிஞர், தனது மன்னன் பத்மாவதிக்காக படையெடுத்தார் என்று குறிப்பிடவில்லை. அவர் யார்?அமீர் குஸ்ரோ
அல்பரூணி
மாலிக் கபூர்
சையத் அஸ்ரப்
ராணி பத்மினியின் கணவரான ரத்தன்சென்னின் பெயரில் 16 -ம் நூற்றாண்டில் ஒரு மன்னன் சித்தூரை ஆண்டான். அவனது ஆட்சிக் காலத்தில் குஜராத்தின் பகதூர் ஷா படையெடுத்த போது உயர்குடி ரஜபுத்ர பெண்கள் தீக்குளித்தனர். இந்த சம்பவமே இதற்கு முந்தைய பத்மினியின் காலத்தில் கடத்தப்பட்டு காவியமாக்கப்பட்டிருக்கலாம். இதைக் கூறும் வரலாற்றறிஞர் யார்?ரம்யா ஸ்ரீனிவாசன்
ரொமிலா தாப்பார்
டிடி கோசாம்பி
எம் சீனிவாசன்
டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி, சித்தூர் மீது படையெடுத்த ஆண்டு எது?கி.பி 1303
கி.பி 1374
கி.பி 1456
கி.பி 1572
பத்மாவத் புராணப் பாடல் படி அலாவுதீன் கில்ஜி, சித்தூர் மீது படையெடுக்க முதன்மையான காரணம் என்ன?பத்மினியின் கணவன் ரத்தன்சென்னால் வெளியேற்றப்பட்ட பார்ப்பனர்
அலாவுதீன் கில்ஜியின் பெண்ணாசை
அலாவுதீன் கில்ஜியின் போர் வெறி
ரத்தன்சென்னின் போட்டி ரஜபுத் அரசர்கள்
வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் அலாவுதீன் கில்ஜி யார்?ராஜதந்திரம் மற்றும் சிறப்பான நிர்வாகத்துடன் ஆண்ட மன்னன்
சுகபோகி
படையெடுப்பில் ஆர்வம் கொண்டவர்
கலை இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர்
அலாவுதீன் கில்ஜி, சித்தூரை வென்றிருந்தாலும், வரலாற்றில் பத்மாவதி என்ற பாத்திரத்திற்கு ஆதரமோ தடயமோ இல்லை என்று வரலாற்றறிஞர்கள் கூறுவது உண்மையா?உண்மை
இல்லை
அப்படி அறுதியிட்டு கூறவில்லை
பன்சாலியின் திரைப்படம் சித்தரிப்பது போன்று அலாவுதீன் கில்ஜி ஒரு காட்டுமிராண்டி என்பதை வரலாற்றறிஞர்கள் ஒத்துக் கொள்கிறார்களா?நிச்சயம் இல்லை
ஓரளவுக்கு ஏற்கிறார்கள்
முழுமையாக ஏற்கிறார்கள்
ஒரு ஸ்டிங் ஆபரேசனின் படி பத்மாவதி திரைப்படத்தை எதிர்க்கும் ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா எனும் ராஜபுத்திர சாதி சங்கத்தின் நோக்கம் என்ன?தயாரிப்பாளரிடம் பணம் பறிக்கும் திட்டம்
சாதிப் பெருமை
வரலாற்று அறியாமை
படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்து விட்டு இந்தப் படம் ரஜபுத்திரர்களின் குலப்பெருமையை நிலைநாட்டுகிறது என்று கூறிய புகழ்பெற்ற ஊடகவியலாளர் யார்?அர்னாப் கோஸ்வாமி
ராஜ்தீப் சர்தேசாய்
பர்காதத்
இந்தப் படமும், பத்மாவத் நெடுங்கவிதையும் கூறும் பத்மாவதியின் பாத்திரப் படைப்பு என்ன?அழகான பெண் கற்புக்காக தீக்குளிக்கும் பெண்ண்டிமைத்தனம்
படையெடுக்கும் மன்னனின் கைகளில் சிக்காமல் மாண்ட வீரம்
அழகான பெண்ணை அடைய விரும்பும் ஆணாதிக்கம்
இந்தப் படம் ரஜபுத்த்திர மக்களின் உணர்வை புண்படுத்துகிறது என்று கூறிய கட்சிகள் யார்? (இரண்டு தெரிவுகள் செய்ய வேண்டும்)காங்கிரஸ்
பாஜக
கம்யூனிஸ்டு
திரிணாமூல் காங்கிரஸ்
பன்சாலி மற்றும் தீபிகா படுகோனே தலைகளைக் கொண்டு வருவோருக்கு ஹரியாணா பாஜக ஊடக தலைவர் நிர்ணயித்த தொகை எவ்வளவு?பத்து கோடி ரூபாய்
ஐந்து கோடி ரூபாய்
பதினைந்து கோடி ரூபாய்
இரண்டு கோடி ரூபாய்
இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் – ஒரு ராஜபுத்திர ராணி கூன்காட் இல்லாமல் எப்படி நடனமாட முடியும் என்று பாஜக தலைவர் ராஜ் கே புரோகித் கூறியிருக்கிறார். கூன்காட் என்றால் என்ன?முகத்தை மறைக்கும் தடுப்புத் துணி
முழு உடலையும் மறைக்கும் புர்கா
நெற்றியில் பெரிதாக வைக்கப்பட்டிருக்கும் பொட்டு
“கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!” சிறப்புக் கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் அரங்கில் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்றது.
அக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் “இந்த வருடம் மார்க்சின் மூலதனம் நூலின் 150 -வது ஆண்டு மற்றும் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு மட்டுமல்ல சீனத்தின் கலாச்சாரப் புரட்சிக்கும், இந்தியாவில் நடைபெற்ற நக்சல்பாரி எழுச்சிக்கும் 50 -வது ஆண்டு”
” ரசியப் புரட்சி என்பது வெறுமனே ஒரு நாட்டில் ஏற்பட்ட புரட்சி அல்ல. அதன் தாக்கம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் எதிரொலித்தது. சோவியத் ரசியா என்பது மக்களுக்கான அரசாக இருந்தது. உழைக்கும் மக்கள் அரசாளும் ஒரு மக்கள் அரசாக இருந்தது. முதலாளித்துவம் தான் இறுதி சமூகம் என கொக்கரித்துக் கொண்டிருந்த முதலாளித்துவவாதிகள் இன்று சிஸ்டம் சரியில்லை எனப் புலம்புகிறார்கள். ரசியப் புரட்சியை இந்தியாவில் கொண்டு வரவேண்டும். 1917ஐ மீண்டும் படைப்போம்” என்பதை தனது உரையில் பேசினார்.
அவரது உரையை பாருங்கள்… பகிருங்கள்…
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
சென்னை நவம்பர் 19, 2017 அன்று நந்தனம் – ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நடைபெற்ற “கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு ! நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு !!” சிறப்புக் கூட்டத்தில் மூலதனம் தமிழ்பதிப்பின் மொழிபெயர்ப்பாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் மூலதனம் நூலைப் பற்றி மிகவும் சிறப்பாகவும், செறிவாகவும் விளக்கிப் பேசினார். “மூலதனம் நூலை மார்க்ஸ் படைத்தளித்த வரலாற்றுச் சூழலைப் பற்றியும் அவருக்கு உறுதுணையாக இருந்த தோழர் எங்கெல்ஸ் அவர்களின் பங்களிப்பையும்” பதிவு செய்தார். மேலும் “மூலதனம் நூல் தமிழில் பெற்ற வரவேற்ப்பையும் அதனை மொழிபெயர்த்த அனுபவத்தையும். தனது மொழிபெயர்ப்பு இன்னமும் நிறைவடையவில்லை. அதனை மேலும் செழுமைப்படுத்த வேண்டும்” என்ற அவரது அவாவையும் வெளிப்படுத்தினார்.
பாருங்கள்… பகிருங்கள்…
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
‘உத்தமர்’ மோடியின் மற்றுமொரு ஊழல் நம் கண்ணெதிரே நடத்தப்பட்டு வருகின்றது. பிரெஞ்சு நாட்டு விமான நிறுவனமான “தஸ்ஸால்டிடம்” (Dassault) இருந்து 36 ரஃபேல் வகைப் போர் விமானங்களை வாங்க சுமார் 57 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை மோடி உறுதி செய்துள்ளார்.
2015 -ம் ஆண்டு பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த மோடி, தஸ்ஸால்ட் நிறுவனத்திடம் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்திருந்தார்; எனினும், அப்போது அந்த ஒப்பந்த அடிப்படையில் விமானங்களின் உண்மையான விலை வெளியிடப்படாமல் இருந்தது.
2015 ஃப்ரான்ஸ் நாட்டு பயணத்தின் போது மோடியின் தலைமையில் கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள்
2015 -ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட போதே ரஃபேல் விமானங்கள் தகுதி குறைவானது என்பதையும், தஸ்ஸால்ட் நிறுவனம் ஏறத்தாழ போண்டியாக வேண்டிய நிலையில் இருந்ததையும், இந்த ஒப்பந்தம் பிரான்சுக்கு சேவை செய்யும் நோக்கம் கொண்டதாக இருப்பதையும் சுட்டிக்காட்டி வினவில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். (பவர் ஸ்டார் மோடி பாரிசில் வாங்கிய மூட்டை பூச்சி மிஷின்).
தற்போது மேற்படி ஒப்பந்தத்தின் மதிப்பு வெளியாகி இருப்பதோடு மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக வெளியாகி உள்ள தகவல்களின் படி, மோடி செய்து கொண்ட ஒப்பந்தம் ஏகாதிபத்திய பிரான்சுக்கு மட்டுமல்ல உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் வைக்கப்படும் கறி விருந்து என்பது அம்பலமாகியுள்ளது.
மேற்கொண்டு விவரங்களுக்குள் செல்வதற்கு முன் சில அடிப்படைத் தகவல்களைப் பார்த்து விடுவோம்.
இந்திய விமானப்படையில் செயல்பட்டு வந்த மிக் ரக விமானங்கள் தொடர்ந்து பயிற்சியின் போது விபத்துக்குள்ளாவது, ரசிய இந்திய கூட்டுத் தயாரிப்பான சுகோய் ரக விமானங்களும் வயதாகிக் கொண்டிருப்பது போன்ற காரணங்களால், சுமார் 200 மத்திய ரக பல்நோக்குப் போர் விமானங்கள் (MMRCA – Medium Multi-Role Combat Aircraft) தேவைப்படுவதாக 2001 -ம் ஆண்டு இராணுவம் அரசுக்குத் தெரிவித்தது. 2007 -ம் ஆண்டு இராணுவத்தின் இந்தக் கோரிக்கையை அங்கீகரித்த மத்திய அரசு, விமானங்களைக் கொள்முதல் செய்ய டென்டர் அறிவித்தது.
பலநாடுகளைச் சேர்ந்த விமானக் கம்பெனிகள் கலந்து கொண்ட டென்டரின் இறுதியில் சர்வதேச அளவில் நடந்த பல்வேறு போர் பயிற்சிகளில் தொடர்ந்து மோசமாக செயல்பட்ட தகுதி குறைவான ரஃபேல் விமானங்கள் தெரிவு செய்யப்பட்டன. எனினும் அப்போது செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் படி, மொத்தம் 126 விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அதன் மொத்த மதிப்பு 10.2 பில்லியன் டாலராக இருக்கும் எனவும், ஒரு விமானத்தின் விலை 81 மில்லியன் டாலர்களாக இருக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், இந்தியாவின் பொதுத்துறை இராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு தொழில்நுட்பங்களை மாற்றித் தருவது, 108 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது, இந்த ஒப்பந்தத்தின் மூலம் தஸ்ஸாட் நிறுவனத்திற்கு கிடைக்கும் மொத்த வருவாயில் 50 சதவீதத்தை இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்பன போன்ற விதிகளுக்கு ரஃபேல் நிறுவனம் ஒப்புக் கொண்டிருந்தது. அன்றைய நிலையில் பிற நாட்டு இராணுவங்கள் ரஃபேல் விமானங்களை வாங்கத் தயாராக இல்லாத காரணத்தால் ஏறத்தாழ திவாலாகும் நிலையில் இருந்த தஸ்ஸாட் நிறுவனம், பேரத்தின் போது இந்தியா விதித்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பின் ரஃபேல் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. கடந்த 2015 ஏப்ரல் 13 -ம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிகர், 126 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு 90 ஆயிரம் கோடி ஆகும் (14 பில்லியன் டாலர்) என தெரிவித்தார். 2012 -ம் ஆண்டு 10.2 பில்லியன் டாலராக இருந்தது, முன்றே ஆண்டுகளில் 14 பில்லியன் டாலராக எதன் அடிப்படையில் அதிகரித்தது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.
சரியாக ஒரே மாதம் கழித்து 2015, மே 31 -ம் தேதி பத்திரிகையாளர்களிடம் பேசிய பாரிகர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஃபேல் விமானங்களை வாங்குவதால் நாட்டுக்கு 1.3 லட்சம் கோடி செலவாகும் என தெரிவித்தார். ஒரே மாதத்தில் 40 ஆயிரம் கோடி விலை அதிகரித்த இந்த அதிசயம் எதன் அடிப்படையில் நடந்தது என்பதற்கும் விளக்கமில்லை. இதற்கிடையே ஒப்பந்தம் குறித்தும் விலை குறித்தும் கருத்து தெரிவித்த தஸ்ஸாட் நிறுவனம், தாம் டெண்டருக்கான ஆரம்ப முன்மொழிதல் ஆவணங்களில் (RFP – Request for Proposal) உள்ள விலைகளை உயர்த்தவில்லை என குறிப்பிட்டது.
முன்னால் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர்
இதற்கிடையே 2015 -ம் ஆண்டு பிரான்ஸ் சென்ற மோடி, 36 விமானங்கள் மட்டும் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டார். பாதுகாப்புத் துறை சம்பந்தமான ஒரு முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தான இந்த வைபவத்தின் போது அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிகர் உடனிருக்கவில்லை; மோடியே முன்னின்று ஒப்பந்தத்தை நிறைவேற்றினார். பிரான்சில் ஒப்பந்தம் கையெழுத்தாகிக் கொண்டிருந்த போது, கோவாவில் நடமாடும் மீன் கடையைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர். அப்போதே விமானங்களின் விலை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. அதற்கும் ஓராண்டு கழித்து சத்தமின்றி தனியே அறிவித்துக் கொண்டார்கள்.
மனோகர் பாரிகர் ஆரம்பத்தில் சொன்படி 90 ஆயிரம் கோடி என்று வைத்துக் கொண்டாலும் கூட, ஒரு விமானத்தின் விலை 71.414 கோடியாக இருந்திருக்க வேண்டும் – ஆனால், மோடியின் ஒப்பந்தப்படி ஒரு விமானத்தின் விலை 1666.66 கோடி. அதாவது வெறும் 36 விமானங்களுக்கு 60 ஆயிரம் கோடி தண்டம் கட்டப் போகிறது இந்திய அரசு. மேலும், முந்தைய ஒப்பந்தம் போல் தொழில்நுட்பங்களையும் ரஃபேல் நிறுவனம் இந்தியாவுக்கு மாற்றித் தரப் போவதில்லை.
இந்த இமாலய விலையேற்றத்துக்கு என்ன காரணம்? இடையில் நடந்தது என்ன?
2012 -ம் ஆண்டு தஸ்ஸாட் நிறுவனம் டெண்டரை வென்ற இரண்டே வாரத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தோடும் பின்னர் சில மாதங்கள் கழித்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தோடும் கூட்டுத் தயாரிப்புக்கான (JV) ஒப்பந்தங்களைச் செய்து கொள்கின்றது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தஸ்ஸால்ட்டுக்கு உதிரிபாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் இசுரேல் நிறுவனம் ஒன்றுடனும் கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியாவில் விமான இரக்கை மற்றும் அதன் இன்ஜினின் பாகங்களைத் தயாரிப்பதற்கு முகேஷ் அம்பானி நிறுவனத்துடனும், பிற உதிரிபாகங்களைத் தயாரிக்க அனில் அம்பானியின் நிறுவனத்தோடும் தனித்தனியே ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது தஸ்ஸால்ட்.
இதன் பின் நடந்த பேச்சுவார்த்தைகளில் தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தொனி மாறத் துவங்குகின்றது. அதற்கு முன் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்சுடன் இணைந்து 108 விமானங்களைத் தயாரிக்கவும், அந்நிறுவனத்துக்கு தொழில்நுட்பங்களை மாற்றிக் கொடுக்கவும் இசைந்திருந்த தஸ்ஸால்ட், அதன்பின் ஏராளமான நிபந்தனைகளை விதிக்கத் துவங்கியது.
குறிப்பாக, சில நவீன ஆயுதங்களை விமானத்தோடு இணைப்பதற்கு கூடுதல் செலவாகும் என ஆரம்பித்த தஸ்ஸால்ட், 126 விமானங்களுக்கான விலையை 14 பில்லியன்களாக்கியது. மேலும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தயாரிக்கும் விமானங்களுக்கான உத்திரவாதத்தை தரமுடியாதெனவும், தொழில்நுட்பத்தை கையளிக்க முடியாதெனவும் பின்வாங்கியது – இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டே அதே சமயத்தில் தான் “மேக் இன் இந்தியா” திட்டத்திற்காக பலூன்களைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார் மோடி.
தற்போது இந்த ஊழலை முட்டுக் கொடுக்க கையால் கரணம் போட்டுக் கொண்டிருக்கும் மோடி பக்தர்கள் சில வாதங்களை வைக்கிறார்கள். அதில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் கடந்த காலங்களில் (குறிப்பாக தேஜஸ் விமானத் தயாரிப்பில்) சிறப்பாக செயல்படவில்லை என்று புதிதாக கண்டுபிடித்துள்ளனர். ஆனால், விமானத் தயாரிப்பில் எந்த முன் அனுபவமும் இல்லாத அம்பானி சகோதரர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று வினோதமான தர்க்கத்தை வைக்கிறார்கள்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
அடுத்து, மன்மோகன் சிங் காலத்தில் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் படி நமக்கு கிடைக்கவிருந்த விமானங்கள் அடிப்படை மாடல்கள் எனவும், தற்போது கிடைக்கவிருப்பது கூடுதல் ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் விலை அதிகம் என்கிறார்கள். துப்பாக்கியை விட தோட்டாக்களுக்கு அதிக விலை என்கிற முட்டாள்தனமான தர்க்கத்துக்கு ஒரே உதாரணத்தை மட்டும் பார்க்கலாம்.
விமானத்தில் பொருத்தப்படவுள்ள மெட்டியார் ரக ஏவுகணையின் சந்தை விலையே 2.1 மில்லியன் டாலர் தான். அதே போல் HDMS எனப்படும் ஹெல்மெட்டில் பொருத்தப்படும் வழிகாட்டும் அமைப்பின் விலை 0.4 மில்லியன் டாலர். இவ்வாறு தனித்தனியே விமானத்தில் பொருத்தப்பட உள்ளதாக சொல்லப்படும் ஆயுதங்களின் சந்தை விலையைக் கூட்டினால் ஒரு விமானத்திற்கு 10 மில்லியன் டாலர் அதிகரிக்கலாம். ஆனால், தற்போது ஊதிப் பெறுக்கப்பட்டுள்ள விலையோ 100 சதவீதத்துக்கும் அதிகம்.
ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இவ்வாறு குற்றம் சாட்டுவது வெட்கக்கேடானது என்றும் தேசத்தின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குவதாகும் என்றும் எச்சரித்துள்ளார். இதே தர்க்கம் காங்கிரசின் போஃபர்ஸ் ஊழலுக்கும் பொருந்துமா என்பதைப் பற்றி நிர்மலா சீதாராமன் தெரிவிக்கவில்லை.
சுருக்கமாகச் சொல்வதானால் – இது பச்சையான ஊழல். அதுவும் தனியார் முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை எடுத்து கறி விருந்து வைக்கிறார் மோடி. தனது ஊழலைக் கேள்விக்குள்ளாக்குபவர்களை ஒரேயடியாக தேசதுரோகிகளாக சித்தரிக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா ஈடுபட்டுள்ளது.
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
வினவு தளத்தில் அன்றாடம் கருத்துக் கணிப்பு போடுவதில்லையே ஏன்?
இது ஒரு வாசகரின் கேள்வி. என்ன கருத்துக் கணிப்பு நடத்துவது? திணறி வருகிறோம். அ.தி.மு.க காமெடி அக்கப்போர்கள் ஓ.பி.எஸ். தியானத்தில் இருந்த போது ஆரம்பித்தது… இன்றும் நிற்கவில்லை. வளைத்து வளைத்து ஒரே விசயத்தை பேசுவதோடு, காதுகளே நாணப்படும் அளவுக்கு ஃபோன் ஒயர் அந்து போன வார்த்தைகளை சலிக்காமல் வீசுகிறார்கள்.
மோடி அரசின் பொருளாதார ஒடுக்குமுறையும், அதனோடு கூட சேர்ந்து வரும் பார்ப்பனிய அடக்குமுறையும் அன்றாடம் நடக்கின்றன. இடங்களும் காலமும் மாறினாலும் இந்த ஒடுக்குமுறையின் கரு ஒன்றுதான். பிறகு ஊடகங்கள் பாஜக -விற்கு சொம்படிக்கின்றன. சமூகவலைத்தளங்களில் அந்த வார சினிமா செய்திகள் பேசப்படுகின்றன.
இந்நிலையில் கருத்துக் கணிப்பிற்கு நீங்கள்தான் ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும்.
ஆகவே இன்றைய கருத்துக் கணிப்பு :
இன்றைய செய்திகளில் சிரிக்கத் தக்கவை எவை?
என்னை ‘டுமிலிசை’ என்று அழைப்பதில் கவலை இல்லை – தமிழிசை சௌந்தர்ராஜன்
சூர்யாவுக்கு கார்த்தி கடும் போட்டியாக இருக்கிறார் – சென்னை மாநகர காவல் துணை ஆணையர் பாராட்டு
உலகின் மிகமிக சுவையான உணவு கருவாடுதான் – இயக்குநர் மிஷ்கின்
‘தமிழகத்தில் மக்களாட்சியை உருவாக்க திமுக, அதிமுக அல்லாத கட்சிகள் பாமக தலைமையை ஏற்க வேண்டும்’ – டாக்டர் ராமதாஸ்
யூனிசெஃப்பின்குழந்தைகள் உரிமை தூதராக த்ரிஷா நியமனம்
கமல் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது – அமைச்சர் ஜெயக்குமார்
( பதில்களில் ஏதேனும் இரண்டைத் தெரிவு செய்யலாம் )
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா சிறப்புக் கூட்டம் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்றது.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி செல்லும் பாதை நெடுகிலும் செங்கொடிகள் பறக்க, ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி அரங்க வளாகம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது.
( மக்கள் வெள்ளத்தில் ஒய்.எம்.சி.ஏ. அரங்கம் – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
( அரங்கத்திற்கு வெளியே – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மாலை 3.30 மணிக்கு கருத்துப்படக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. முதலாளித்துவத்தின் முரண்பாடுகளையும், அதன் ஈவிரக்கமற்ற கொடுமைகளையும், அது தனக்குத் தானே சமாதி கட்டிக் கொண்டிருப்பதையும் விளக்கும் விதமான படங்களும், கேலிச்சித்திரங்களும் கருத்துப்படக் காட்சியை சிறப்பித்தன.
( தப்பாட்டம் – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மேலும் இரசியப் புரட்சி பற்றியும், அது உலகத்திற்கு வழங்கிய கொடையைப் பற்றியும் கருத்துப்படக் காட்சியில் படங்கள் இடம்பெற்றன. அரங்கத்திற்கு வெளியே திரையிடப்பட்ட கருத்துப்படக் காட்சியை மக்கள் பார்த்து இரசித்தனர்
கூட்டம் தொடங்குவதற்கு முன்பே ஒய்.எம்.சி.ஏ. அரங்கம் நிரம்பி வழிந்தது. உட்காருவதற்கு இடமில்லாத காரணத்தால், அரங்கத்திற்கு வெளியே 1200 -க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தனர், அவர்களுக்கு தொலைக்காட்சி திரையில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
மாலை 3.45 மணியளவில் தப்பாட்டம் தொடங்கியது. பறையிசையின் உணர்ச்சிப் பெருக்கோடு, கூட்டம் தொடங்கியது.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்தினார். முதலில் பாட்டாளிவர்க்க சர்வர்தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பங்கேற்றோர் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
தோழர் முகுந்தன்
அதன் தொடர்ச்சியாக, “ரிசர்ச் யூனிட் ஃபார் பொலிட்டிகல் எக்கானமி” (RUPE) என்ற அரசியல் பொருளாதார பத்திரிக்கையின் ஆசிரியர் ரஜனி எக்ஸ் தேசாய் , இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கத்தை தோழர் மருதையன் கூட்டத்தினர் முன் வாசித்தார்.
வழக்கறிஞர் பாலன்
அதன் பின்னர், பெங்களூரு வழக்கறிஞர் பாலன், சிறப்புரையாற்றினார். “இரசியப் புரட்சிதான் நாம் இன்று அனுபவிக்கும் அனைத்து மக்கள் நலத் திட்டங்களுக்கும் காரணம் என்பதையும், தொழிலாளி வர்க்கம் எவ்வாறு போராடிப் பெற்ற தனது உரிமைகளை இன்று இழந்து நிற்கிறது என்பதையும் விளக்கிப் பேசினார்.”
அடுத்தபடியாக, வினவு வழங்கிய “புரட்சியின் தருணங்கள்” இசைச்சித்திரம் ஒளிபரப்பட்டது. மேடையின் பின்னணியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான திரையில் இசைச்சித்திரம் ஒளிபரப்பப்பட்டது. இரசியப் புரட்சியின் காலகட்டத்தையும், உலகின் முதல் சோசலிச அரசின் சாதனைகளையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் விதமான காட்சிகளோடு 35 நிமிட இசைச்சித்திரம் ஒளிபரப்பப் பட்டது.
அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர். லெனின் படம்
இரசிய சோசலிசப் புரட்சியின் தாக்கத்தினால் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏற்பட்ட விடுதலை இயக்க எழுச்சி, சோசலிசக் குடியரசுகளின் தோற்றம் மற்றும் உலகெங்கும் நடைபெற்ற நவம்பர் புரட்சி நூற்றாண்டு கொண்டாட்டங்களையும் கண்முன்னே காட்டியது “புரட்சியின் தருணங்கள்’ இசைச் சித்திரம்.இசைச் சித்திரத்தின் பல்வேறு காட்சிகளுக்கு மக்கள் ஆரவாரமாக கைதட்டினர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற தப்பாட்டம், பார்வையாளர்களுக்கு உணர்ச்சிப் பூர்வமான எழுச்சியைக் கொடுத்தது என்றால், “புரட்சியின் தருணங்கள்” இசைச்சித்திரம் உணர்வுப்பூர்வமான எழுச்சியை பார்வையாளர்களின் மத்தியில் ஏற்படுத்தியது.
தோழர் தியாகு
அதனைத் தொடர்ந்து மூலதனம் நூலின் தமிழ் பதிப்பின் மொழி பெயர்ப்பாளரும், தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவருமான தோழர் தியாகு உரையாற்றினார்.
“கார்ல் மார்க்சின் மூலதனம் நூலை மொழிபெயர்க்கும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், மார்க்சின் மூலதனம் நூலைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.”
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
ஒவ்வொரு உரைகளுக்கும் இடையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தோழர்களின் பாடல்கள் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
தோழர் மருதையன்
அதன் பின்னர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றினார். “முதலாளித்துவம் இன்று அதற்கான சவக்குழியை தானே தோண்டிக் கொண்டுள்ளது. அதனை சவக்குழிக்கு அனுப்ப வேண்டிய வேலையை பாட்டாளி வர்க்கம் செய்து முடிக்க வேண்டும்” எனக் கூறினார்.
அவரின் உரையைத் தொடர்ந்து வினவு வழங்கிய “மார்க்ஸ் எனும் அரக்கன்” இசைச் சித்திரம் திரையிடப்பட்டது. மார்க்ஸின் சமகால அரசியல் சூழல்குறித்தும், முதலாளித்துவவாதிகளால் கூட தவிர்க்கப்பட முடியாதவராக இன்று மார்க்ஸ் அவசியப்படுவதையும் எடுத்துக்காட்டியது இசைச்சித்திரம்
தோழர் கணேசன்
நிகழ்ச்சியின் இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் நன்றியுரையாற்றினார்.
-வினவு செய்தியாளர்.
குறிப்பு: –
முழுக் கூட்டத்தையும் வினவு இணையதளத்தில் நேரலை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. தொழில் நுட்பச் சிக்கல் மற்றும் அனுபவக் குறைவு காரணமாக அது கடைசி நிமிடத்தில் இரத்து செய்யப்பட்டது. எதிர்பார்த்துக் காத்திருந்த நண்பர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு வருந்துகிறோம். இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறோம். அதேநேரத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளை தவறே இல்லாமல் தொழில் நுட்ப நேர்த்தியுடன் நேரலையாக காட்டும் சோதனையில் வெற்றி பெற்றிருக்கிறோம். அடுத்து வரும் நேரலைகள் பிரச்சினையின்றி இருக்குமென நம்புகிறோம். நவம்பர் கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் வீடியோக்களாக ஓரிரு தினங்களில் வெளியிடப்படும்.
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
– கார்ல் மார்க்ஸ், மூலதனம், முதல் பாகம், முதல் புத்தகம், பக்.1025
தென் கொரியாவைச் சேர்ந்த, உலகின் மிகப் பெரிய இரும்பாலை நிறுவனமான போஸ்கோ, ஒடிசா மாநிலத்தில் ஒருங்கிணைந்த இரும்பு எஃகு ஆலை அமைக்கும் தனது திட்டத்தைக் கைவிட்டு வெளியேறிவிட்டது.
தமிழகத்திற்கு நோக்கியா, குஜராத்திற்கு டாடாவின் நானோ கார் ஆலை என்பது போல, ஒடிசாவில் 52,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையத் திட்டமிடப்பட்டிருந்த போஸ்கோ இரும்பாலை, தனியார்மயம் – தாராளமயத்தின் மிகப் பெரிய வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. அப்படிச் சிலாகிக்கப்பட்ட திட்டம், பிறவி ஊனமாகி, ஆலைக்கு அஸ்திவாரம் தோண்டுவதற்கு முன்பே இந்தியாவிலிருந்து வெளியேறிப் போனதற்குக் காரணம், ஒடிசா மாநிலத்தின் ஜகத்சிங்பூர் மாவட்டத்திலுள்ள திங்கியா, கோவிந்தபூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், மீனவர்களும், பழங்குடியின மக்களும் நடத்திய பத்தாண்டு கால விடாப்பிடியான போராட்டம்.
2005 -ஆம் ஆண்டு போஸ்கோ நிர்வாகத்திற்கும் ஒடிசா மாநில அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2015, மார்ச்சில் போஸ்கோ தனது கனவுத் திட்டத்தைக் கைடுவிடுவதாக அறிவித்தது. இடைப்பட்ட இந்தப் பத்தாண்டுகள் முழுவதும் போஸ்கோவிற்கு எதிரான போராட்டம், “போஸ்கோ பிரதிரோத் சங்க்ராம் சமிதி” (போஸ்கோவிற்கு எதிரான போராட்டக் கழகம்) என்ற ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் நடந்தது.
யானை பெரிய உருவம் கொண்ட விலங்குதான். ஆனால், அதன் காதுக்குள் ஒரு சிற்றெறும்பு புகுந்துவிட்டால், அப்பெரிய விலங்கிற்கு என்ன நேருமோ, அந்தக் கதிதான், எஃகு உற்பத்தியில் உலகின் நான்காவது இடத்திலுள்ள போஸ்கோவிற்கு ஏற்பட்டிருக்கிறது, எளிய விவசாயிகளின் போராட்டம் காரணமாக.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வளர்ச்சி என்ற பெயரில் பெட்ரோ கெமிக்கல் திட்டங்கள் திணிக்கப்பட்டு வருவதைப் போலவே, போஸ்கோவும் வளர்ச்சியின் பெயரால்தான் ஒடிசா-ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் மீது திணிக்கப்பட்டது. 52,000 கோடி ரூபாய் முதலீடு, இரும்புச் சுரங்கம், எஃகு ஆலை, இரும்பு ஏற்றுமதிக்கான துறைமுகம், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு எனத் தேன் தடவிய வாதங்கள் அவிழ்த்துவிடப்பட்டன.
ஆனால், இந்த ஜிகினா வார்த்தைகளுக்கெல்லாம் அம்மாவட்ட விவசாயிகளும், மீனவர்களும் மயங்கிவிடவில்லை. தமது நெல் வயல்கள், வெற்றிலைக்கொடி தோட்டங்கள், மீன்பிடித் தொழில் ஆகியவற்றின் அழிவில்தான் பீற்றிக் கொள்ளப்படும் இந்த வளர்ச்சி எழுந்து நிற்கப் போகிறது என்பதைப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட நாளிலேயே அவர்கள் உணர்ந்துகொண்டனர்.
அவர்கள் முன்பு இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று, தமது வயல்களை, தோட்டங்களை போஸ்கோவிடம் பறிகொடுத்துவிட்டு, அகதிகளாக வெளியேறுவது. இல்லையென்றால், உயிருக்குத் துணிந்து போஸ்கோவை எதிர்த்து நிற்பது. அவர்கள் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார்கள். இழப்புகள், அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் அதில் உறுதியுடன் இருந்தார்கள். அதனால் போஸ்கோ வெளியேற நேர்ந்தது.
அரசின் ஆசை வார்த்தைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் பணிந்து போயிருந்தால், என்ன நடந்திருக்கும்? அதற்கு இரத்த சாட்சியாக உள்ளது, போஸ்கோவிற்கு நிலங்களை “விற்ற” நுவாகாவ் கிராமம்.”அக்கிராமத்தைச் சேர்ந்த பாதிப்பேர் இப்பொழுது வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். போஸ்கோவிடம் நிலத்தை இழந்து, விவசாயிகள் பெற்ற ஈட்டுப் பணமெல்லாம் கரைந்து போய்விட்டது.
போஸ்கோ வருவதற்கு முன்பாக வெற்றிலை தோட்டங்களில் கிடைத்துவந்த வேலையெல்லாம் மறைந்துபோய், இப்பொழுது அக்கிராமத்தைச் சேர்ந்த “முன்னாள்” நடுத்தர விவசாயிகள்கூட கூலிவேலை தேடி, போஸ்கோவை எதிர்த்து நின்ற பக்கத்து கிராமமான திங்கியாவிலுள்ள தோட்டங்களுக்குச் செல்கிறார்கள். அக்கிராமத்தைச் சுற்றியிருந்த வனப்பகுதியிலுள்ள பெரும்பாலான மரங்கள் ஆலைக்காக வெட்டப்பட்டுவிட்டதால், விறகிற்குக்கூட அக்கிராமத்தில் வழியில்லை என அந்த சோகத்தைப் பதிவு செய்கிறது, எக்கானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி ஏடு.
***
எந்தவொரு முதலாளியும் தமது சொந்தக் கைக்காசைப் போட்டு தொழில் சாம்ராஜ்ஜியங்களை நிறுவி, இலாபத்தைக் குவிப்பதில்லை. மாறாக, விவசாயிகளின் நிலத்தை அபகரித்துக் கொள்வதன் மூலமும், கைத்தொழில் உள்ளிட்ட சிறு தொழில்களை அழித்து நிர்மூலமாக்குவதன் மூலமும், இயற்கை வளங்களைச் சூறையாடுவதன் மூலமும்தான் முதலாளித்துவம் தனது வளர்ச்சியைச் சாதித்துக் கொண்டது என்பதை வரலாற்று வழியில் நிரூபித்திருக்கிறது, மார்க்ஸின் மூலதனம் நூல். போஸ்கோ, அந்த நிரூபணத்தின் சமீபத்திய எடுத்துக்காட்டு.
இரும்பு எஃகு ஆலை அமைப்பதற்கு 4,004 ஏக்கர் நிலம், ஆலை தொடர்பான அடிக்கட்டுமான வசதிகள் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களின் குடியிருப்பு நகரியத்தை உருவாக்குவதற்கு 2,000 ஏக்கர் நிலம், இரும்புச் சுரங்கத்தை அமைப்பதற்கு 6,177 ஏக்கர் வனப்பகுதி என 12,000 ஏக்கர் நிலத்தை, ஒடிசா மாநில அரசின் துணையோடு அபகரித்துக்கொள்ளத் திட்டமிட்டிருந்தது, போஸ்கோ. மேலும், ஜடாதாரி என்ற ஆற்றின் முகத்துவாரத்தில் இரும்பை ஏற்றுமதி செய்வதற்கு துறைமுகம் அமைத்துக் கொள்வதற்கும் போஸ்கோவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
போஸ்கோ கண் வைத்திருந்த நிலப்பகுதி வானம் பார்த்த வறண்ட பூமியல்ல. நெல்லும், வெற்றிலையும், முந்திரியும், பலவிதமான காய்கறிகளும் விளைகின்ற வளமான பூமி. மகாநதி, கதாஜோடி, தேவி, ஜடாதாரி உள்ளிட்ட ஆறுகளும், பல பத்துக்கணக்கான காட்டாறுகளும், நீரோடைகளும், அருவிகளும் கொண்ட நீர்வளமும் இலட்சக்கணக்கான மரங்களைக் கொண்ட காட்டு வளமும் நிறைந்த பகுதி.
போஸ்கோவின் திட்டம் நிறைவேறியிருந்தால், ஆலை அமையவிருந்த ஏழு கிராமங்களைச் சேர்ந்த 22,000 விவசாயக் குடும்பங்களும்; துறைமுகம் அமையவிருந்த பகுதியைச் சேர்ந்த 20,000 மீனவக் குடும்பங்களும், இரும்புச் சுரங்கம் அமையவிருந்த சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த கந்ததர் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பழங்குடியினக் குடும்பங்களும் தமது வாழ்வாதாரங்களை இழந்து, அகதிகளாக வெளியேற வேண்டியிருந்திருக்கும்.
ஏறத்தாழ 50,000 குடும்பங்கள் போஸ்கோ திட்டத்தால் பாதிக்கப்படும் நிலையில், அந்நிறுவனம் 6,000 பேருக்கு வேலை தரப்போவதாக அளித்த வாக்குறுதியைக் குரூரமான நகைச்சுவை என்றுதான் குறிப்பிடமுடியும்.
ஏனென்றால், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் வளர்ச்சியும் வருமானமும் இன்றிக் கஞ்சிக்குச் செத்துக் கொண்டிருக்கவுமில்லை. போஸ்கோ வந்துதான் அவர்களைக் காத்து இரட்சிக்க வேண்டும் என்ற நிலையிலும் அவர்கள் வாழ்ந்து வரவில்லை. “கூலி உள்ளிட்ட அனைத்துச் செலவுகளும் போக, மாதமொன்றுக்கு எனக்கு 50,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது” என்கிறார், சிறீதர் சுவைன் என்ற வெற்றிலைத் தோட்ட விவசாயி.
இதற்கு அப்பால், “ஒவ்வொரு பருவத்தின் போதும் முந்திரி விளைச்சல் மூலம் 40,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்” எனக் கூறும் அவர், “நான் பள்ளிக்கல்விகூட முடிக்காதவன். போஸ்கோவோ அல்லது வேறு நிறுவனமோ எனக்கு இந்த வருமானத்தைத் தருமா?” எனக் கேட்கிறார்.
அவரது வருமானம், இந்தப் பகுதி வெற்றிலை மற்றும் முந்திரி விவசாயிகளின் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் குறுக்குவெட்டுத் தோற்றம். மேலும், ஒடிசாவிலேயே இந்தப் பகுதியில்தான் விவசாயக் கூலிகளின் வருமானமும் அதிகம் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
போஸ்கோ ஆலை அமையவிருந்த கிராமங்களான திங்கியா, கோவிந்தபூர், கடகுஜங்கா, நுவாகாவ் உள்ளிட்ட ஏழு கிராமங்களில் விளையும் வெற்றிலையின் மூலம் மட்டும் ஆண்டிற்கு 50 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பகுதியில் வெற்றிலை விவசாயம் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. அவ்விவசாயம் மேலும் பல நூறு ஆண்டுகள் நடப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், போஸ்கோவின் ஆயுட்காலமோ வெறும் முப்பது ஆண்டுகள்தான் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆலையைத் தொடங்குவதற்கு முன்பே போஸ்கோ நிறுவனம் ஏறத்தாழ இரண்டு இலட்சம் காட்டு மரங்களை வெட்டியிருக்கிறது.
இதனால், இனிமேலும் காட்டு மரங்களை வெட்டுவதற்கு அந்நிறுவனத்திற்குத் தடைவிதித்தது, தேசியப் பசுமைத் தீர்ப்பாயம். ஆலையைத் தொடங்குவதற்கு முன்பே இத்துணை அழிவென்றால், போஸ்கோ வெளியேற்றப்படாமல் போயிருந்தால், எதிர்வரும் முப்பது ஆண்டுகளில், அந்நிறுவனம் இந்தப் பகுதியையே சுடுகாடாக்கியிருக்கும்.
ஆனால், ஆளுங்கட்சிகளுக்கும், மத்திய மற்றும் ஒடிசா மாநில அரசுகளுக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின், மீனவர்களின் வாழ்க்கை அழிவது குறித்தோ, இயற்கையும் சுற்றுப்புறச் சூழலும் நாசமாவது குறித்தோ சிறிதும் கவலையில்லை. அவர்களது அக்கறையெல்லாம் போஸ்கோவின் வளர்ச்சியை, அப்பன்னாட்டு நிறுவனத்திற்கு அசாதாரணமான இலாபம் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவது மட்டும்தான். அதற்காக அவர்கள் எந்த எல்லை வரையும் செல்லத் தயாராக இருந்தார்கள்.
இரும்புச் சுரங்கத்தையும், ஆலையையும் அமைத்துக்கொள்ள போஸ்கோவிற்கு அனுமதி அளித்ததில் வன உரிமைச் சட்டத்தைக் கடாசியெறிந்தார்கள். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டங்களைக் காலில் போட்டு மிதித்தார்கள். மேலும், ஒரிசா மாநிலத்தில் தோண்டியெடுக்கப்படும் இரும்புத் தாதுவில் 30 சதவீதத்தைச் சர்வதேச சந்தை மதிப்பில் முப்பது ஆண்டுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ள போஸ்கோவிற்குத் தாராள சலுகையும் வழங்கினார்கள்.
***
“மூலதனத்திற்கு 100 சதவீதம் இலாபம் கிடைக்குமென்றால், எல்லா மனித நியதிகளையும் துவம்சம் செய்யத் தயாராகிவிடும். 300 சதவீதம் கிடைக்குமென்றால் குறுகுறுப்பே இல்லாமல் எந்தக் குற்றமும் செய்யும்” எனத் தனது மூலதனம் நூலில் கார்ல் மார்க்ஸ் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
மூலதனத்தின் நியதியே இதுதான் எனும்போது, 600 சதவீதத்திற்கும் மேலான இலாபம் எனும் உணர்ச்சியால் தூண்டப்பட்டிருந்த போஸ்கோ இதற்கு விதிவிலக்காக இருந்துவிடுமா? அந்நிறுவனம், தன்னை எதிர்த்து நின்ற விவசாயிகள், மீனவர்கள் மீது அருவருக்கத்தக்க ஊழியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டது.
போஸ்கோவிற்கு எதிரான பத்தாண்டு காலப் போராட்டத்தில் விவசாயிகளும் மீனவர்களும் பொருளாதார இழப்புகளை மட்டும் சந்திக்கவில்லை. போராட்டத்தில் முன்னணியில் நின்ற நான்கு தோழர்களைக் குண்டுவீச்சுக்குப் பலி கொடுத்தார்கள். சிறுவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் கல்வியை இழந்தார்கள்.
போராட்டத்தில் உறுதியாக நின்ற கிராமங்கள் போலீசாரால் சட்டவிரோதமாக முற்றுகையிடப்பட்டதால், கிராமத்தைவிட்டு வெளியே செல்ல முடியாமல் முடக்கப்பட்டார்கள். போலீசாலோ அல்லது போஸ்கோ ஆதரவாளர்கள் என்ற பெயரில் கிராமங்களுக்குள் நுழைந்த குண்டர்களாலோ எந்நேரமும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் உறையவைக்கப்பட்டார்கள்.
“கொலை, கொலைமுயற்சி, பாலியல் வன்முறை, ஆள்கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுக்களின் கீழ் இக்கிராம மக்கள் மீது ஏறத்தாழ 3,000 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாகவும், இவற்றுள் 70 சதவீதமான வழக்குகள் போஸ்கோவுக்கு எதிராகப் போராடும் யாரையும் கைதுசெய்யும் வண்ணம் அடையாளம் தெரியாத நபர்கள் என்றபடி தயாரிக்கப்பட்டிருப்பதாகவும்” கூறுகிறார், இக்கிராம மக்களுக்காக வாதாடிவரும் வழக்குரைஞர்.
ஆனால், இந்த அச்சுறுத்தல்களெல்லாம் அவர்களின் மன உறுதியைக் கொஞ்சம்கூட அசைத்துவிடவில்லை. 2008 -ஆம் ஆண்டில் போஸ்கோ எதிர்ப்பாளர்கள் மீது ரவுடிப் பட்டாளம் நடத்திய குண்டுவீச்சில் துலா மண்டல் மாண்டுபோனார். 2013 -ஆம் ஆண்டில் நடந்த மற்றொரு குண்டுவீச்சில் அவரது சகோதரர் தருண் மண்டல் மாண்டுபோனார். அச்சகோதரர்களின் வயதான தந்தை ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பை, “இராணுவமயமான அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தில் தனது மகன்கள் தியாகியானதாக”ப் பெருமிதம் கொண்டாரே தவிர, துவண்டு விடவில்லை.
இந்த மனவுறுதியும் போஸ்கோவின் அடியாளாகச் செயல்பட்ட அரசுப் படைகளின் அடக்குமுறைகள், சூழ்ச்சிகளுக்கு எதிராக அவர்கள் கைக்கொண்ட போராட்ட உத்திகளும்தான் போஸ்கோவைத் துரத்தியடித்தன.
***
போஸ்கோவைத் தோற்கடித்ததன் மூலம் விவசாயிகள் தமது வாழ்வாதாரமான நிலம் அபகரிக்கப்படுவதை மட்டும் தடுத்துவிடவில்லை. விலை மதிப்பற்ற இரும்புத் தாது அடிமாட்டு விலைக்குக் கொள்ளையடிக்கப்படுவதையும், மிக முக்கியமாக அந்தப் பகுதியின் சுற்றுப்புறச் சூழலும் காட்டு வளமும் நீர் வளமும் அழிந்துபடும் அபாயத்தையும் தடுத்து நிறுத்தி, நாட்டு நலன், மக்களின் நலனைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
போஸ்கோ வெளியேறிவிட்டபோதும், விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக அபகரித்துக்கொண்ட 2,700 ஏக்கர் நிலத்தைத் திருப்பி அளிக்க மறுத்துவருகிறது, ஒடிசா அரசு. அந்நிலத்தை உள்நாட்டு இரும்பாலை முதலாளிகளுக்குக் கொடுத்து, போஸ்கோ கைவிட்ட திட்டத்திற்கு உயிர் கொடுக்க முயலுகிறது. ஒடிசா அரசின் இந்த துரோகத்திற்கு எதிராகத் தமது போராட்டம் தொடரும் என அறிவித்திருக்கிறது, போஸ்கோ பிரதிரோத் சங்கர்ஷ் சமிதி.
போஸ்கோவிற்கு எதிரான வெற்றியைப் பெற அம்மாநில விவசாயிகள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது உண்மைதான். இத்துணை இழப்புகளுக்குப் பின்னர் இந்தப் போராட்டம் தோல்வியடைந்திருந்தால்கூட, இப்போராட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைதான் முக்கியமானதாகும்.
இப்போராட்டம் சட்டம், நீதிமன்றம், எதிர்க்கட்சிகளின் தயவை நம்பி நடைபெறவில்லை. உள்ளூர் பகுதி மக்களின் சொந்த பலத்தையும், போராட்டக் களத்துக்கு வெளியே இருந்த ஜனநாயக சக்திகளின் ஆதரவை மட்டுமே அச்சாணியாகக் கொண்டு நடைபெற்றது.
இதற்கு மாறாக, வழமையான, குறுகிய சட்டவாத போராட்ட வரம்புக்குள் இப்போராட்டம் நின்றிருந்தால், எதிரிகள், அதாவது ஆளுங்கட்சிகளும் அதிகாரவர்க்கமும் இப்போராட்டத்தை என்றோ ஒழித்துக்கட்டியிருப்பார்கள்.
தமிழகத்தின் நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளும், தொழிலாளர்களும், சிறு உற்பத்தியாளர்களும் தமது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக்கொள்ள அரசை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இத்தகைய போராட்டங்கள் அரசின் போலி வாக்குறுதிகளுக்கு மயங்கி விடக்கூடாது என்பது மட்டுமல்ல, நீதிக்காக நீதிமன்றப் படியேறக்கூடாது என்பதும் போஸ்கோ எதிர்ப்பு போராட்டம் தரும் படிப்பினையாகும்.
இந்த அரசும், ஆளுங்கட்சிகளும், அதிகாரவர்க்கமும் எதிரிகளின் கையாள் என்பதை மனதிற்கொண்டு போராட வேண்டும். வளர்ச்சி, சீர்திருத்தம் என்ற பெயரில் அவர்களால் திணிக்கப்படும் திட்டங்களை மட்டுமல்ல, அந்தக் கருத்தாக்கத்தையே கேள்விக்குள்ளாக்க வேண்டும். அவர்களின் கருணையை நிராகரிப்பதோடு, மக்கள் மீதான இந்த அரசின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும். அதற்கு மாற்றாக மக்கள் அதிகாரத்தை நிறுவும் வகையில் போராட்டத் திட்டங்களையும், வழிமுறைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய மாற்றை உருவாக்கி வளர்த்துச் செல்வதுதான் தற்போதைய தேவையாகும். போஸ்கோ எதிர்ப்புப் போராட்டம் இத்திசைவழியில் முதல் அடியை எடுத்துவைத்திருக்கிறது என்பதுதான் அப்போராட்டத்தின் சிறப்பாகும்.
கடந்த 2012 -ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூடக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தவிட்டது நினைவிருக்கலாம். இந்த உத்தரவுக்குத் தடை கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசூட், “நாடு முழுவதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் சாராயக் கடைகளை அகற்ற வேண்டும்” என கடந்த 2016 டிசம்பர் 15 -ம் தேதி தீர்ப்பளித்தார். இந்த உத்தரவை வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்று ஊடகங்கள் – கட்சிகள் கொண்டாடின.
இதையடுத்து, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவைத் தாண்டியே கடைகள் இருக்க வேண்டும் என்பதை 100 மீட்டராக மாற்றியமைக்க வேண்டும். காலக்கெடுவை நவம்பர் 28 வரை நீட்டிக்க வேண்டும். இந்தத் தடையால் எங்களுக்குப் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும். எனவே தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று தமிழக அரசு மனு செய்திருந்தது.
அதேபோல், நட்சத்திர விடுதிகள், ’பார்’ போன்ற இடங்களிலும் மது விற்பனை செய்யப்படுகிறது. இவையும் 500 மீட்டர் தூரம் என்ற அளவீட்டில் அடங்குமா? என கேட்டு பல மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, ‘ஏப்ரல் 1 -ம் தேதி முதல் நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் செயல்படக்கூடாது’ என்றும் ‘எல்லா வகையான மது விற்பனை நிலையங்கள், கடைகள், உணவகங்களுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும்’ என்றும் உத்தரவிட்டது.
அதேசமயம், தீர்ப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, 500 மீட்டர் என்பது பெரிய நகரங்களுக்குப் பொருந்தும். அதுவே, 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சிறிய நகர்ப்புறமாக இருந்தால், அங்கு 220 மீட்டர் தூரத்துக்குக் கடைகள் இருக்கக் கூடாது என்ற விலக்கும் அளிக்கப்பட்டு தமிழக அரசுக்கு ஆறுதல் தந்தது.
தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்கள், தங்கள் பஞ்சாயத்துக் கூட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் எனத் தீர்மானம் நிறைவேற்றி, தங்களது கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடினர். கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இந்த அரசியல் சாசனச் சட்டம் வழங்கியிருக்கும் அந்த எழுத்தளவிலான உரிமையையும் சென்னை உயர்நீதிமன்றம் பறித்தது. கடந்த ஜூன் மாதம், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்பு டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக ஏற்கெனவே வழங்கிய எல்லா தீர்ப்புகளையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டது.
அதாவது, “சில்லறை மதுபானக்கடைகளை அமைப்பதற்கான விதிகளின் கீழ் டாஸ்மாக் நிர்வாகம் எங்கு வேண்டுமானாலும் மதுக்கடை களை அமைத்துக் கொள்ளலாம் என்றும், கிராம சபைகளுடைய தீர்மானங்கள் கடைகள் அமைப்பதைக் கட்டுப்படுத்த முடியாது” என்றும் தீர்ப்பளித்து தனது உண்மையான முகத்தை காட்டியது. இந்திய நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கையைக் கட்டிக்காக்க முயலும் முன்னாள் நீதிபதி சந்துரு உள்ளிட்ட பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“மக்கள் நீதிமன்றங்களை வெகுவாக நம்பியிருக்கிறார்கள். அந்த நிலை மாறிவிடுமோ என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனி பூரண மது விலக்கு வேண்டுமென்றால் நீதிமன்றங்களை நம்ப முடியாது” என்றார் சந்துரு.
அதனை உறுதிபடுத்தும் வகையில் தற்போது உச்ச நீதிமன்றம் புதிய விளக்கம் ஒன்றை அளிததுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, அளித்த அந்தப் புதிய விளக்கத்தின்படி இனி நகராட்சிகள் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகள் எனப் பெயர் மாற்றம் செய்து மாநில அரசு சாராயக் கடைகளை திறந்து கொள்ள அனுமதிக்கலாம்.
ஏற்கனவே சத்தீஷ்கார் அரசு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் வழியாக செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக பெயர் மாற்றம் செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “சாலைகளின் பெயர்களை வகை மாற்றம் செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது” என தீர்ப்பை அப்போது வழங்கியது உச்சநீதிமன்றம்.
இதைதொடர்ந்து தமிழகத்திலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றும் வகையில் அரசு ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்ற தடை விதித்தது.
இந்த தடையை நீக்கும் பொருட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவில் சில விளக்கம் கேட்டு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை கடந்த செப்டம்பர் மாதம் தாக்கல் செய்தது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த வாரத்தில் கோரிக்கை விடுத்தார் தமிழக அரசு வழக்கறிஞர்.
அதை ஏற்றுக்கொண்டு, உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அதில், “தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றியமைத்து டாஸ்மாக் கடைகளை திறக்கலாம். இந்த விவகாரத்தை பொறுத்த வரை சட்டிஸ்கர் மாநிலத்திற்கு உள்ள சட்ட விதிகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்” என்று உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
இந்த உத்தரவின் மூலம் சாராயக்கடைகளை அரசு விரும்பும் இடத்தில் தடையின்றி நடத்திக் கொள்ள வழி ஏற்படுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம். மேலும், சட்டம் மக்களுக்கானதல்ல, என்பதை இத்தீர்ப்பு மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு சட்டரீதியான தீர்வு இருப்பதாகக் கூறி வந்த கனவான்கள் காண்பித்த ஒரே வழியையும் ஒங்கி அறைந்து மூடியிருக்கிறது.
இனி டாஸ்மாக் கடைகளை மூட நமக்கு விட்டுச் செல்லப்பட்டிருக்கும் ஒரே வழி போர்க்குணமிக்க போராட்டங்களே!இதைத்தான் இந்தத் தீர்ப்பு நமக்கு உறுதிபடக் கூறியிருக்கிறது!
திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டத்திலுள்ள பூவாளூர், பின்னவாசல், காட்டூர், கொத்தமங்கலம், மேட்டுப்பட்டி, கோமாகுடி, தின்னியம், செம்பரை, முள்ளால், கல்விக்குடி, ஆழங்குடிமகாஜனம் ஆகிய 10 -க்கும் மேற்ப்பட்ட கிராமங்களின் பாசனத்திற்கான உயிராதாரமாக கீழ்பங்குனி வாய்க்கால் உள்ளது. சுமார் 5,000 ஏக்கர் பாசன பரப்பை கொண்ட இவ்வாய்காலின் தலைமதகு திருமங்கலம் கலிங்கியிலிருந்து பிரிந்து நீராதாரம் பெறுகிறது.
2016 – 2017 தவிர எந்த காலத்திலும் இந்த வாய்காலில் தண்ணீர் தட்டுப்பாடோ, நிலத்தடி நீர் குறைந்ததோ கிடையாது. ஆனால் 2017 அக்டோபர் 2 -ல் மேட்டூர் அணை தண்ணீர் திறந்து ஒரு மாத காலமாகியும் இவ்வாய்காலுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. பலமுறை இலால்குடி கோட்டம், ஆற்று நீர் பாசன வாய்கால் உதவி செயற்பொறியாளரிடமும் மதகு திறப்பணையாளரிடமும் நேரில் சந்தித்தும் தொலைபேசி மூலமும் வாய்க்காலை தூர்வாரி தண்ணீரை திறந்துவிட முறையிட்டும் எந்த பலனும் இல்லை. 12 ஊர் விவசாயிகளும் ஒன்று சேர்ந்து இனி அரசை நம்பி பலனில்லை “நம்ம ஊர் வாய்காலை நாமே சீர்செய்துக்கொள்ளலாம்” என முடிவு செய்தனர்.
தூர்வாருவதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல் கடந்த 07.11.2017 அன்று தண்ணீரை திறந்துவிட்டார்கள் அதிகாரிகள். தண்ணீர் திறந்து 6 நாட்கள் ஆகியும் 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செம்பரையைக் கூட தாண்டவில்லை. பங்குனி வாய்காலின் எந்த கிளை வாய்காலுக்கும் இதுவரை முழுமையாக தண்ணீர் போய் சேரவில்லை. இந்நிலையில் மக்கள் அதிகாரத்தின் உதவியை நாடினால் நம்முடைய பிரச்சனை தீரும் என விவசாயிகள் முடிவு செய்தனர்.
இம்முடிவை ஏற்று திருச்சி மக்கள் அதிகாரம்,
“நீரின்றி அமையாது உலகு”
பங்குனி வாய்காலை தூர்வார துப்பில்லை!
தோற்றுப்போன அரசை நம்பி பலனில்லை!
மக்களே அதிகாரத்தை கையிலெடுப்போம்!
வாய்காலை சீர்செய்வோம் வாரீர்!
என்ற முழக்கத்தை முன்வைத்து சுற்றுவட்டார கிராமங்கள் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். மக்களிடையே துண்டுபிரசுரங்கள் விநியோகித்தனர். 13.11.2017 அன்று விவசாயிகளும், மக்கள் அதிகாரம் தோழர்களும் இணைந்து ஆகாயத்தாமரையாலும், குப்பைகளாலும், சாராய பாட்டில்களாலும், புதர் மண்டிக் கிடந்த வாய்க்காலை சீர் செய்யும் பணியில் பணியில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
“நாத்துபறி, உழவு, நடவு என விவசாயிகளுக்கு தலைக்கு மேல் வேலைகள் இருந்தாலும் மழைகாலத்தில் தண்ணீரை சேமிக்காவிட்டால் இன்று உழவுக்கு நீர் இல்லாமல் போகும். நாளை குடிக்கவே தண்ணீர் கிடைக்காது. என்ற அபாயத்தை உணர்ந்து சீர் செய்ய வந்ததாக ஒரு விவசாயி கூறினார்.
வேலை நடந்து கொண்டிருந்த போது ஒரு விவசாயிக்கு போன் அழைப்பு வந்து கொண்டே இருந்தது அவர் எடுக்காமல் வேலையில் மும்முரமாக இருந்தார். மக்கள் அதிகார தோழர் ஒருவர் ஐயா போன் வந்துகிட்டே இருக்கு எடுத்து பேசுங்க என சொன்னார். அதற்கு அவரோ “போனை எடுத்தா வீட்டுக்கு வான்னு கூப்பிடுவா… நான் போயிட்டா…? இந்த வேலையை யார் பாக்குறது ? நீங்க மட்டும் தனியா எவ்வளவு நேரம் செய்வீங்க? அதனாலதான் போனை எடுக்கவில்லை” என்று அக்கறையுடன் பேசினார்.
மற்றொரு விவசாயி “என் நிலத்தில் பயிர் நடவு வேலை நடக்கின்றது. நேரம் முடியபோகுது, ஆட்களுக்கு கூலி கொடுக்கனும். அதுக்குதான் மனைவி போன் பண்றாங்க. இருந்தாலும் ஊர் நல்லதுக்காக சீர்செய்யும் வேலையை முடித்துவிட்டுதான் செல்வேன்” என வைராக்கியத்துடன் கூறிக்கொண்டு ஆகாய தாமரை செடியை வாய்க்காலில் அகற்றி கொண்டிருந்தார்.
இன்னொரு விவசாயி ” காந்தி போன்ற நபர்கள் அரசியலில் கூட்டம் காண்பிப்பதற்காக விவசாயிகளை பயன்படுத்திக் கொண்டார்கள். அதன் பின் விவசாயிகளை கைவிட்டார்கள். ஆனால் மக்கள் அதிகாரம் மட்டும்தான் விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக வழிகாட்டுதல் கொடுப்பது மட்டுமல்லாமல் உடனிருந்து உதவியும் செய்கின்றனர்” என்றார்.
நீராதாரத்தை பேணி பாதுகாப்பதில் விவசாயிகளுக்குதான் அக்கறை உள்ளது. ஆனால் அதிகாரிகள் அரசியல்வாதிகள் இருப்பதை அழிக்கின்ற வேலையிலும் மணல் கொள்ளையிலும் ஈடுபடுகின்றனர். வாய்க்காலை தூர்வார பலநூறு கோடி ரூபாய் ஒதுக்கியும் எதுவும் செய்யாமல் எடப்பாடி அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது. மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் இந்த அரசு கட்டமைப்பு முழுவதும் தோற்றுப்போய் மக்களுக்கு எதிராக மாறிவிட்டது
மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய நீரை பெற்றுத் தராமல் தமிழகத்தை வஞ்சித்தது. இங்குள்ள எடப்பாடி அரசு விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியது. இப்போது தண்ணீர் வந்தும் அதை முறையாக தூர்வாரி திறந்துவிட மறுக்கிறது தமிழக அரசு. விவசாயிகளோ தனக்கு எதிரியாகிப் போன இந்த அரசமைப்பை பற்றி புரிந்து கொள்ளாமல் ஆண்டவன் விட்ட வழி என வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
மக்கள் அதிகாரத்தின் தலைமையின் கீழ் விவசாயிகளும் இணைந்து அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவோம் என அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி. தொடர்புக்கு : 9445475157