மொரிசியஸ் போயாச்சு, பாரிஸ் போக வேண்டாமா என்று ஐரோப்பாவுக்கு விளம்பரச் சுற்றுலா சென்று வந்த பவர் ஸ்டார் மோடி, பல்லாயிம் கோடி ரூபாய் செலவில் 36 நவீன மூட்டைப் பூச்சி நசுக்கும் எந்திரங்களை வாங்க முடிவு செய்தார். இதற்காக பிரான்ஸ் அரசாங்கத்தோடு கையெழுத்திட்டுள்ளார். தஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவின் தலையில் கட்டவுள்ள 36 ரஃபேல் போர் விமானங்கள் தாம் அந்த ‘நவீன’ மூட்டைப் பூச்சி எந்திரங்கள்.
“ரஃபேல் போர் விமானங்களில் மைலேஜ் கம்மி என்பதால் அதை வாங்கக் கூடாது” என இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கொதித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. இந்தியா தனது இராணுவத்துக்கு தீனி போட பில்லியன் கணக்கான டாலர்களை அழுது வருவதால், அதில் அமெரிக்க மற்றும் இசுரேலின் பங்கிற்காக அந்நாடுகளின் ‘தூதர்’ சுப்பிரமணியன் சுவாமி கொதிப்பது வெறும் பங்காளிச் சண்டைதான்.
இன்னொருபுறம் ‘பறக்கத் தயார்” நிலையில் உள்ள போர் விமானங்களை பிரதமர் கோரியிருப்பதால், அவரது “மேக் இன் இந்தியா” கொள்கைக்கு முரணாக உள்ளதே என்று சில ஆங்கில நாளேடுகள் கவலையை வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆனால், மேக் இன் இந்தியா என்பதே பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு மோடி போடும் கறி விருந்து தான் என்பதை மூடப்பட்ட நோக்கியா ஆலையும் நாடெங்கும் பரவிக் கிடக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன.
மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களும், சில இராணுவ போர்தந்திர ஆய்வு பத்திரிகைகளும், “அதிக செலவு வைக்கும் ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு பதில், குறைந்த செலவில் அதிக செயல் திறனோடு இயங்கும் சுகோய் 35 வகைப்பட்ட விமானங்களை வாங்கியிருக்கலாம்” என்று எழுதுகின்றன. ஒருவேளை சுகோய் ரக விமானங்ளை வாங்கா விட்டாலும் ரஃபேல் விமானங்களை வாங்காமல் இருத்தல் நலம்.
இரட்டை என்ஜின்களைக் கொண்ட ரஃபேல் விமானங்கள் பல சந்தர்ப்பங்களில் கூட்டுப் பயிற்சிகளின் போது விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. இதன் என்ஜின்கள் திடீரென்று செயலிழந்து விடக்கூடிய தன்மை கொண்டதாக இராணுவத் துறை ஆய்வுப் பத்திரிகைகள் எழுதுகின்றன. இராணுவ விமானக் கண்காட்சிகளிலும் ரஃபேல் விமானங்கள் மிக மோசமான முறையில் தோல்வி கண்டுள்ளன. செயல் திறன் குறைவு என்பதோடு இதன் வகையில் உள்ள பிற போர் விமானங்களை ஒப்பிடும் போது அதிக விலை கொண்டதாகவும் ரஃபேல் விமானங்கள் உள்ளன.
உலகிலேயே பிரம்மாண்டமான தின்னி மடக் கூட்டமான இந்திய இராணுவத்திற்கு செய்யும் செலவும், ஓட்டை வாளியில் நீர் அள்ள முயற்சிப்பதும் ஒன்று தான் என்பது ஒருபுறமிருக்க, அப்படிச் செய்யப்படும் செலவு என்பது மக்கள் பணம் என்பதே நமது கவலைக்குரியது. மக்களுடைய வரிப்பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவு செய்வதை கடுமையாக எதிர்க்கும் முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள், பவர் ஸ்டார் மோடி, பை நிறைய காசைக் கொடுத்து கை நிறைய கழுதை விட்டைகளை அள்ளி வந்திருப்பதை அங்கீகரிக்கிறார்கள்.
ரஃபேல் விமானம் செயல் திறனற்றது என்கிற தொழில்நுட்ப பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, விமான பேரம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் இரத்த வெள்ளத்தின் மேல் நடந்திருக்கிறது.
1983-ம் ஆண்டு பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து ஐரோப்பாவின் எதிர்கால போர் விமானம் ஒன்றைத் தயாரிக்க முன்வந்தன. என்பதுகளின் இறுதியில் கூட்டு விமானத் தயாரிப்பிலிருந்து பிரான்ஸ் விலகி பின் சொந்த முறையில் தஸ்ஸால்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்ததுதான் ரஃபேல் விமானங்கள். மற்ற கூட்டு நாடுகள் இணைந்து “யூரோ பைட்டர்” என்ற போர் விமானத்தை தயாரித்து வருகின்றன.
இவ்விரு விமானங்களும் பனிப் போரால் உலக நாடுகளிடையே தீவிரமடைந்திருந்த முறுகல் நிலையையே தமக்கான சந்தைகளாக குறிவைத்திருந்தன. 1990-களின் துவக்கத்தில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் போர் விமானங்களுக்கான சந்தைத் தேவை திடீரென்று குறுகிப் போனது. பனிப்போரின் முடிவுக்குப் பின் வந்த இரண்டு பத்தாண்டுகளில் சர்வதேச இராணுவ தளவாட சந்தையை அமெரிக்கா, இரசியா பிரதானமாகவும் இசுரேல் குறிப்பிட்ட அளவும் கட்டுப்படுத்தின.
பனிப்போருக்குப் பின் நடந்த முதலாம் வளைகுடா அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தமும், பின்னர் ஈராக், ஆப்கான் ஆக்கிரமிப்பு போர்களும் அமெரிக்காவின் நவீன ஆயுதங்களுக்கான பரிசோதனைக் கூடங்களாக விளங்கின. இந்த நிலையில் சரியான ‘பரிசோதனைக்’ கூடங்கள் கிடைக்காமல் அல்லாடி வந்த ஐரோப்பிய நாடுகளுக்கு லிபியாவும், சிரியாவும் நல்வாய்ப்பை வழங்கின.
ஈராக், ஆப்கான் போரில் போட்ட காசை முழுமையாக எடுக்க அமெரிக்கா சிரமப்பட்டு வந்த நிலையில், லிபிய படையெடுப்பு மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒடுக்குவது என்ற பெயரில் சிரியா மற்றும் ஈராக்கில் தான் செய்த தலையீட்டிற்கான செலவுகளை மற்ற நேட்டோ நாடுகளின் தலையில் சுமத்தியது.
அதாவது, போர்ச் செலவுகளை நேட்டோ நாடுகள் பகிர்ந்து கொண்ட அதே வேளையில் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளை போர் தந்திர ரீதியில் கட்டுப்படுத்துவது மற்றும் போரினால் சீரழிக்கப்பட்ட அந்நாடுகளின் மறுகட்டுமான பணிகளில் கொள்ளையடிப்பதை அமெரிக்கா தனது பங்காக பிரித்து எடுத்துக் கொண்டது. இந்த ஏற்பாட்டில் இராணுவ ரீதியில் எதிர்த்து நிற்கும் திராணியற்ற இந்நாடுகளின் மேல் தங்களது ஆயுதங்களை பரிசோதித்துக் கொள்ளும் பொன்னான வாய்ப்பு பிரான்சுக்கும், பிரிட்டனுக்கும் கிடைத்தது.
லிபியாவின் வான்பரப்பில் சீறிப்பாய்ந்த “டைஃபூன்” மற்றும் “ரஃபேல்” விமானங்கள் எந்தத் தடையுமின்றி தமது ‘திறமையை’ பறைசாற்றிக் கொண்டன. இதில் ஏற்கனவே லிபியா, பிரான்சிடம் வாங்கி வைத்திருந்த மிராஜ் வகை போர் விமானங்களை அழித்தொழித்து தனது சாதனையை ரஃபேல் விமானங்கள் நிலைநாட்டியது ஒரு முரண்நகை.
விற்பனைக்குத் தயாராகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த நாட்டாலும் சீந்தப்படாமல் மூலையில் கிடந்த ரஃபேல் விமானங்கள் லிபிய ஆக்கிரமிப்புப் போருக்குப் பின் தான் உலகின் கவனத்திற்கு வந்தது. திருப்பித் தாக்கும் வலுவற்ற நாடு ஒன்றின் மேல் தனது வலிமையைப் பறைசாற்றிக் கொண்ட பெருமையோடு பல்வேறு நாடுகளின் இராணுவத்தை அணுகியது பிரான்ஸ்.
எனினும், பிரேசில், கனடா, அல்ஜீரியா, கிரீஸ், மொராக்கோ, ஓமன், நெதர்லாந்து, நார்வே, சிங்கப்பூர், தென்கொரியா மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகள் ரஃபேல் விமானங்களின் செயல் திறன் குறைவை காரணம் காட்டி அவற்றை கொள்முதல் செய்ய மறுத்தன. வாடிக்கையாளர்கள் இன்றி தவித்து வந்த நிலையில் தஸ்ஸாட் நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை ஏர்பஸ் நிறுவனம் விற்க முடிவு செய்தது நெருக்கடியை மேலும் கூட்டியது.
ஏறக்குறைய கடையை மூடும் நிலைக்குச் சென்று விட்ட தஸ்ஸாட் நிறுவனத்தை மோடி தான் காப்பாற்றி இருக்கிறார். உத்தராஞ்சல் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட 15,000 குஜராத்தியர்களை என்பது இன்னோவா கார்களின் மூலம் இரண்டே நாளில் காப்பாறியதற்குப் பின் மோடி செய்திருக்கும் பிரமாண்டமான சாகசம் இது தான். ஆனால், இந்த முறை சாகசத்தின் விலையை மக்கள் அழ வேண்டியிருக்கிறது.
எல்லாவற்றிலும் முதலாவதாக வரும் மோடி இந்த விசயத்தைப் பொருத்தவரை இரண்டாவதாகத்தான் வருகிறார். எகிப்து இந்தியாவை ஏற்கனவே முந்தி விட்டது. ஆளே இல்லாத டீக்கடையில் தன்னந்தனியாக நின்று தவித்துக் கொண்டிருந்த பிரான்சிடமிருந்து எகிப்து 5.9 பில்லியன் டாலர் மதிப்பில் 24 ரஃபேல் விமானங்களைக் கொள்முதல் செய்ய பிரான்சுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.
வண்ணப்புரட்சிக்குப் பின் மேற்கத்திய நாடுகளின் பொம்மைகளைக் கொண்டு ஆளப்படும் எகிப்து பிரான்சின் பொம்மை விமானத்தை வாங்கியதைப் புரிந்து கொள்ள முடிகிறது; ஆனால், ஆர்.எஸ்.எஸின் சுதேசித் தயாரிப்பான 56 இன்சு மார்பு கொண்ட சுதேசி வீரரான மோடி பிரான்சு தயாரித்துள்ள மூட்டைப்பூச்சியைக் கொல்லும் நவீன இயந்திரத்தை ஏன் வாங்க வேண்டும்?
இந்தியா கொள்முதல் செய்யவுள்ள 36 விமானங்களுக்கான விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளிவரவில்லை. என்றாலும், பிரேசிலைச் சேர்ந்த இராணுவ ஆய்வுப் பத்திரிகைகள் இந்த வணிகத்தின் மதிப்பை 1200 கோடி டாலர்களாக (சுமார் ரூ 72,000 கோடி) இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளன.
ஒப்பந்தத்தின் மதிப்பு எவ்வளவாக இருந்தாலும் அது ஏழை இந்தியர்கள் செலுத்திய வரிப்பணம். இந்திய மக்களை கசக்கிப் பிழிந்து திரட்டிய நிதியைக் கொண்டு பல்லாயிரம் லிபியர்களையும் சிரிய மக்களையும் கொன்று குவித்து தனது திறனைப் பரிசோதித்துக் காட்டிய போர்க்கருவியை வாங்கியுள்ளார் மோடி.
தமது போர்தந்திர நோக்கங்களைக் கடந்து பொருளாதார காரணங்களும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களைச் செலுத்தும் மிக முக்கியமான காரணி. அந்த வகையில், தமது இராணுவத் தளவாடங்களை சந்தைப்படுத்துவதற்கு முன் அவை எதார்த்த நிலைமைகளில் சோதித்தறியப்பட்டவை (Tested and prooven under practical conditions) என்று வாடிக்கையாளர்களுக்கு நிரூபிக்கும் வாய்ப்பாகவும் போர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
எனவே, இந்தியாவின் இராணுவக் கொள்முதலை வீண் பொருளாதாரச் சுமை என்பதைத் தாண்டி தார்மீக அறத்தின் பாற்பட்டும் நாம் எதிர்த்தாக வேண்டும்.
– தமிழரசன்.
இது தொடர்பான செய்திகள்
டூர் போனா,எதினாச்சும் வாங்குனுமா,வேண்டாமா?
நல்ல டிஸ்கவுண்ட் கொடுக்குறான்….
உங்க வீட்டுல பொடிசுக விளையாட விளையாட்டு சாமான்
வேண்டுமென்றால்….மோடிகிட்ட சொன்னால் வாங்கி தருவார்..
கட்டின பொண்டாட்டிய கை கழிவினவன், நமக்கு
புத்தி சொல்றான் பாருங்க..
…அம்பி…தூக்கம் கலையிலையா?
எல்லாம் சரி, ஆனால் ஒட்டுமொத்த இராணுவத்தை திண்ணிமடம் என்று அநியாயமாக பழிபோடுவதை தவிர்த்திருக்கலாம். இராணுவ வீரர்கள் வெயிலிலும் பணியிலும் மலைகளில் காத்து நிற்பதை இவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்திருக்க கூடாது.
இந்திய இராணுவ துனைபடைகளும், அவற்றின் இஸ்ரேல் பயிற்சி பெற்ற அடியாட்களும் , இந்திய விமானப்படை துணைகொண்டு இந்தியாவின் தண்டகாருண்யா மாவட்ட தாலுக்காகளில் தொல்குடி மக்கள் மீது நடத்துகின்ற தாக்குதல்களுக்கு இந்த கற்றதுகள் அங்கிகாரம் கொடுக்கும் அழகில் கற்றதுவிடம் இருந்து 4ஆவது மக்கள் விரோத மனவக்கிர பூனைகுட்டி வெளியே வருகின்றதே. ஆடு திருடி ,கோழி திருடி அம்மக்களின் பெண்களின் உடலையும் திருடி ருசிக்கும் இந்திய இராணுவ துனைபடைகளுக்கு கற்றது அவர்கள் அவர் வீட்டில் வலிய அத்தகைய “விருந்துகளை” [ஆ ,கோ , பெ ] கொடுப்பதில் எமக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. மக்கள் விரோத அரசு படைகளை இந்த அடிவருடிகள் இந்தளவுக்கு ஆராதிக்காவிட்டால் அப்புறம் எப்படி ?
Dassault will transfer the technology along with Rafale jets.
And more jets will be made in India.
Sukoi? every one knows killer performance of russian MiGs 🙂
இராணுவத்தில் உள்ள சிலரின் நடவடிக்கைகளை கரணம் காட்டி ஒட்டு மொத்த இராணுவ வீரர்களை பழிப்பது சரியல்ல. போரில் மட்டுமல்ல, இயற்கை பேரழிவு காலங்களிலும் நாம் இராணுவ வீரர்களின் சேவையை நாடுகிறோம். தங்களது எண்ண ஓட்டம் தவறானது.
நீங்கள் சுதந்திரமாக இங்கு கணினியில் பதிவிடுவதால் மனைவி, குழந்தைகளை பிரிந்து வெயிலிலும், மழையிலும், பணியிலும் உயர்ந்த மலைகளிலும் நாட்டை பாதுகாக்க நிற்கும் உள்ளங்களின் உணர்வுகள் உங்களுக்கு புரியவில்லை.
இராணுவ வீரர்களில் சில கேடுகெட்ட மனிதர்கள் இருப்பதால் ஒட்டு மொத்த இராணுவமும் அப்படி தான் என்று கூறுவது சரியல்ல. ஒரு தமிழர் ஒரு கொலை செய்தாரென்றால் ஒட்டு மொத்த தமிழர்களும் கொலைகாரர்கள் என்று கூறுவீர்களா? அப்பாவி மக்களை கொடுமைபடுத்துவது பெரும் தவறு. அந்த தவறிழைத்த இராணுவ வீரர்களையும் அந்த இராணுவ குழுவையும் சட்டப்படி தண்டிக்க வேண்டும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. (குறுக்கு சால் ஒட்ட வேண்டாம்).
இது போன்ற தங்களுடைய பின்னூட்டங்களை பார்க்கும்போது தாங்கள் தவறான பாதையை நோக்கி செல்வதை போல உள்ளது. பார்க்கும் எல்லோரும் கெட்டவர்கள், தாங்கள் மட்டும் உத்தமர் என்று நினைத்தால் அது தங்களது பயத்தை தான் காட்டுகிறது. You are Insecure.
ஐயா,
இந்த வினவு நாதாரிங்க கிட்ட போய் நம்ம இராணுவத்த மதிக்க சொல்லறீங்களே. தேச விரோத கூட்டமல்லவா இந்த ஒரு மயித்துக்கும் ஒதவாத கம்முநிஸ்ட் பொறம்போக்குகள்.
முந்தா நாள் தந்தி டிவில பாண்டே இவுனுகள்ள ஒருத்தன முழி பிதுங்க வைத்தாரே.
கற்றது கையளவு தனியார்மயத்தை ஆதரிப்பவரா என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ஏன் கேட்கிறேன் என்றால் இராணுவத்தில் ஒன்னு ரெண்டு பேர்தான் தவறிழைப்பதாகவும் அதற்கு ஏன் எல்லோரையும் குறை கூறுகிறீர்கள் என குதிக்கிறார் சாரி கேட்கிறார். அதே உதாரணம் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் அல்லவா! பெரும்பாலான நடுத்தர கோயிந்துகள் அரசு அதிகாரிகள் லஞ்ச லாவண்யங்களில் ஈடுபடுவதினால் அரசுத்துறை கெட்டுவிட்டது என்ற காரனத்தை சொல்லித்தான் தனியார்மயத்தை வலியுறுத்துகின்றனர். அப்படி தவறு செய்யும் சிலரை மட்டும் தண்டிக்க சொல்லலாமே.
ferouce,
தவறு செய்யும் இராணுவ வீரர்களை எக்காலத்திலும் நான் ஆதரிக்கவில்லை. தவறு செய்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். இராணுவ வீரர்களாக இருந்தாலும் சரி, அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி. இதில் இருவேறு கருத்துக்கள் இல்லை.
ஒட்டுமொத்தமாக அரசு துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை விட அரசு துறைகளை ஊழல் இல்லாமல் சீரமைக்க வழி என்ன என்று யோசிக்கலாம் என்பதே என் கருத்து.
க கை,
//அரசு துறைகளை ஊழல் இல்லாமல் சீரமைக்க வழி என்ன என்று யோசிக்கலாம் என்பதே என் கருத்து.//
கம்யூனிஸ்டுகள், இனி இந்த அமைப்பிற்குள்ளேயே இந்த அரசுத் துறையை சீரமைக்க இயலாது என்ற கருத்துடையவர்கள் என்பதை வினவின் பல கட்டுரைகள் வாயிலாகவும், பலரின் பின்னூட்டங்களின் வாயிலாகவும் அறிந்திருப்பீர்கள். எங்களுக்கு இந்த அமைப்பு முறை பெரும்பான்மையான மக்களுக்கு எதிரானது என்ற நம்பிக்கையுடையவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்த அமைப்பு முறையை நம்பும் உங்களைப் போன்றோர்கள்தான் எப்படி சீரமைப்பது என்பதை தெளிவாக்கவேண்டும்.
உங்களை போன்ற மக்கள் நலனில் அக்கறை உள்ளோர் அரசியலில் இறங்கி மக்கள் ஆதரவை பெற்றால் சீரமைப்பை ஜனநாயக வழியிலேயே செய்ய முடியும். ஆயுதம் இல்லாமலும் புரட்சியை ஜனநாயகத்தின் துணை கொண்டு நிறைவேற்ற முடியும் பெரோஸ்.
கீழ்க்கண்ட இந்த பதில் இராணுவம் ஆயுதம் ஏந்த வேண்டியதன் அவசியத்தை கற்றது கையளவு வலியுறுத்தி எழுதிய வாசகம் இது “எதிரில் நிற்பவர்கள் எல்லோரும் காந்தியவாதிகள் அல்ல, நிராயுதபாணிகள் அல்ல என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.” (சங்கருக்கு எழுதிய மறுமொழி)
ஆனால் இங்கு ஆயுதம் இல்லாமலும் புரட்சியை சனநாயகத்தின் துணை கொண்டு நிறைவேற்ற முடியும் என்று இரட்டை வேடம் போடுகிறார் இவர். மகா மோசடிக்காரர் கற்றது கையளவு!
க கை,
// தவறிழைத்த இராணுவ வீரர்களையும் அந்த இராணுவ குழுவையும் சட்டப்படி தண்டிக்க வேண்டும்.//
காஷ்மீரில் மணிப்பூரில் ரானுவத்திற்கு சிறப்பு அதிகாரம் கொடுக்கும் சட்டத்தைப் பற்றி கேள்விபட்டிருக்கிறீரகளா. இந்த சட்டத்தைப்பற்றி உங்கள் கருத்து என்ன.
ஐரோம் சர்மிளா பற்றி கேள்விபட்டிருக்கிறீரகளா
இந்தியாவின் தெலுங்கான[1950களில்] ,வடகிழக்கு மாநிலங்களில் [தற்போது ], ஜம்மு காஷ்மீரில் [நிரந்தரமாக ] ,ஈழத்தில்[அமைதி படை என்ற பெயரில்} இந்தியாவின் அரசு படை அடியாட்கள் நடத்தும் ,நடத்திய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு என்ன சமாதானம் சொல்லபோகின்றிர்கள் கற்றது. ஏன் இந்தியாவின் அரசு படை அடியாட்களால் பாதிக்க பட்ட அப்பெண்கள் எல்லாம் நமக்கு மானுட சமுகம் என்ற முறையில் எந்த உறவும் இல்லையா ?வர்க்க பேதங்களை விட்டு தள்ளுங்கள் ,அனைவருமே மானுட வர்கம் என்னும் போது , நாம் அனைவருமே ஆப்பிரிக்க தாயின் சந்ததிகள் என்னும் போது ,இந்தியாவின் அரசு படை அடியாட்களால் பாதிப்பு அடைந்த பெண்கள் நம் உறவினர்கள் தானே ? அப்படி இருக்கையில் எதற்கு மக்கள் விரோத அரசு படைகளுக்கு ஆதரவான இந்த வெட்டி பேச்சு ,வக்கிரபேச்சு வருகின்றது உங்களிடம் இருந்து ? இதற்காக தான் உங்களை அவர்களின் அடிவருடிகள் என்கின்றேன். மீண்டும் கூறிகிறேன் உங்களின் அடிவருடி தனத்துடன் அவர்களுக்கு , மக்கள் விரோத அரசு படைகளுக்கு எத்தகைய ” விருந்தை ” வேண்டுமானாலும் கொடுத்துகொள்ளுங்கள் எனக்கு ஒன்றும் துன்பம் இல்லை. அடிவருடிகள் அதனை தானே செய்வார்கள் .
மொதல்ல என்ன எழுதி இருக்குனு படிங்க தல. அப்புறம் குதிங்க. KK //அப்பாவி மக்களை கொடுமைபடுத்துவது பெரும் தவறு. அந்த தவறிழைத்த இராணுவ வீரர்களையும் அந்த இராணுவ குழுவையும் சட்டப்படி தண்டிக்க வேண்டும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. (குறுக்கு சால் ஒட்ட வேண்டாம்).// என்கிறார். அவர் நடந்த தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதாக தெரியவில்லையே. சில தவறுகளுக்காக ஏன் எல்லாரையும் குறை கூறுகிறீர் என்கிறார். நியாயம் தானே? ஏதோ ஒரு பத்து சதவீதம் அரசாங்க ஊழியர் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கினார் என்பதால் எல்லா ஊழியரும் சோம்பேறிகள், அரசு ஊழியர் நலன் பற்றி பேசுபவர் எல்லாம் அரசாங்க அடிவருடி என்றால் எவ்வளவு கேலி கூத்தாக இருக்கிறது? தவறுகள் நடக்காத இடம் அல்லது சமூகம் உலகத்தில் ஏது? (பொய், அவதூறு எடிட்_________________________________________)
கனேஷ் மற்றும் கற்றது,
“””அப்பாவி மக்களை கொடுமைபடுத்துவது பெரும் தவறு. அந்த தவறிழைத்த இராணுவ வீரர்களையும் அந்த இராணுவ குழுவையும் சட்டப்படி தண்டிக்க வேண்டும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை”” என்று கூறும் கோவிந்துகள் கீழ் உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லனும் அல்லவா ?
@எல்லையை பாதுகாக்க வேண்டிய இந்திய ராணுவத்துக்கு தெலுங்கானாவில் [1950களில் ] என்ன வேலை ? தெலுங்கான மக்கள் ஹைதராபாத் நிசாம் மன்னனுக்கும் ,நிலபிரபுக்களுக்கும் எதிராக போராடி சோசியலிச கட்டமைப்பை உருவாக்குகின்றார்கள். இந்திய ராணுவம் ஏன் தெலுங்க்கானவிற்கு சென்று அம்மக்களை சிதைத்து ,பெண்களை சீரழித்து அவர்கள் உருவாகிய சோசியலிச கட்டமைப்பை அடித்து நொறுக்கியது ?
@ எல்லையை பாதுகாக்க வேண்டிய இந்திய ராணுவத்துக்கு ஜம்மு காஷ்மீரிலன் மாநிலத்துக்குள் என்ன வேலை ? எதற்காக நிரந்தரமாக அந்த மாநில மக்கள் மீது போர்தொடுத்துகொண்டு உள்ளது ? ஏன் பெண்கள் மீது கைவைகின்றது ?
@ வடகிழக்கு மாநிலங்கள் இந்திய ராணுவத்தால் அதன் அரசு பயங்கர வாதத்தால் அடைந்து உள்ள சீரழிவுகளுக்கு கோவிந்துகளின் பதில் என்ன ? ஏன் பெண்கள் மீது கைவைகின்றது ?
@ எல்லையை காக்க வேண்டிய இந்திய ராணுவம் எதற்காக அமைதிபடை என்ற பெயரில் ஈழம் சென்று தமிழ் பெண்களை பாலியல் வ்ன்ன்முறைக்கு உட்படுத்தி மக்களை கொன்று குவித்தது ?
இந்திய அரசின் அடியால் ரானுவத்தை ஆராதனை செய்யும் கோவிந்துகள் கனேஷ் மற்றும் கற்றதுகள் பதில் சொல்லுவார்களா ?
எப்பா தெய்வமே! மொதல்ல ராணுவத்தோட பணி என்னனு முழுசா தெரிஞ்சுட்டு வா அப்புறம் பேசலாம். ராணுவத்துக்கும், எல்லை பாதுகப்பு படைக்கும் வித்யாசம் தெரிஞ்சுகிட்டு பேசுங்க.
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். பெண்கள் மீது கை வைபதர்க்கோ, வட கிழக்கு மாநிலங்களில் நடந்த/நடக்கும் தவறுகளுக்கோ யாரும் காரணம் கற்பிக்கவில்லை. அவர்கள் செய்தது நியாயம் என்று வாதாடவும் இல்லை. எந்த இடத்திலும் பெண்களை அழிக்க வேண்டும், மக்களை கொள்ள வேண்டும் என்று யாரும் செல்வது இல்லை. உலகில் எல்லா ராணுவமும் சந்திக்கும் பிரச்சனை இது. எதிர்ப்பவன் எங்கே என்று தெரிந்தால் நேரடியாக நின்று மோதலாம். இந்த இடத்தில இருக்கிறான் என்றால் நேரடியாக மோதிவிடலாம். இன்று மக்களோடு மக்களாக கலந்து நடத்தப்படும் guerilla மற்றும் insurgency போன்ற யுத்த முறைகளை சமாளிக்க அவர்களுக்கு பயிற்சி தரபடுவது இல்லை. அவர்கள் இங்கே வரும் போது எல்லாரையும் எதிரியாக பாவிக்க அவர்கள் பயிற்சி அவர்களுக்கு சொல்கிறது. அவர்கள் இருப்பது யுத்த களம். சுற்றி இருக்கும் தெரியாத மக்கள் அனைவரும் எதிரிகள் என்று பாவிக்கும் படி தான் அவர்கள் பயிற்றுவிக்க படுகிறார்கள்.
ராணுவம் எல்லாம் செய்கிறது என்றால் மக்களை அந்த இடத்தில பகடை காயாக பயன்படுத்தும் ‘போராளிகள்’ மீதும் இதே குற்றச்சாட்டு பொருந்தும். மக்களுக்காக போராடுவதை குறை கூறவில்லை. மக்களுடன் மக்களாக இருந்து போராடுகிறோம் என்று மார் தட்டும் போது அந்த மக்களை உங்கள் போராட்டத்துக்கு நடுவில் நீங்கள் இழுகிறீர்கள் என்பதையும் நினைவில் வெய்து கொள்ளவும். ஏதோ ISIS தீவிரவாதியால், பக்கத்து வீட்டு முஸ்லிம் ஆளை சந்தேக கண் கொண்டு பார்பதற்கும் இதற்கும் வித்யாசம் இல்லை.
அட லூசு கணேசா ,
கேள்வியே உமக்கு இன்னும் புரியவில்லையே ! எல்லையை காக்கவேண்டிய இராணுவம் எதற்காக தன் சொந்த நாட்டு மக்களையே வதைக்க தண்டகாருண்யா, வடகிழக்கு மாநிலங்கள் ,ஈழம் , தெலுங்கான என்று சென்றது ? அப்படி சொந்த மக்களை கொன்று குவிக்கும் இராணுவத்துக்கு பெயர் தான் இந்திய இராணுவமா ? அதனை ஆதரிப்பது தான் தேசபக்தியா ?
Ganesh,
//மக்களை அந்த இடத்தில பகடை காயாக பயன்படுத்தும் ‘போராளிகள்’ மீதும் இதே குற்றச்சாட்டு பொருந்தும். //
பகடை காயாக யார் பயன்படுத்துவது. பழங்குடி மக்களின் தங்கள் மலை மற்றும் காடுகளில் உள்ள கிராமங்களில் வாழ்கிறார்கள். இவர்கள் தங்கள் சூழலை பாதுகாக்க வேறு எதிர்ப்புகள் பயனில்லாமல் போனதால் ஆயுதம் எடுத்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பெண்களை எங்கேனும் நகரத்தில் ஒளித்து வைத்து விட்டு வந்து போராட்டம் நடத்த முடியுமா. போராளிகள் காடுகளிலும் பெண்கள் மற்றும் போராடடத்தில் பங்கெடுக்காத மற்றவர்களும் கிராமங்களிலும் இருக்கிறார்கள். இங்கே பெண்களை ஏன் தாக்கவேண்டும்.
மணிப்பூரின் தாய்மார்கள் நிர்வாணமாக போராட்டம் செய்தார்களே கேள்வி பட்டிருக்கிறீர்களா. வாச்சாத்தி என்ற பழங்குடிகளின் கிராமத்தின் இளம்பெண்கள் எல்லோருமே போலிஸ் மற்றும் அதிகாரிகளால் கும்பல் வண்புனர்ச்சி செய்யப்பட்டதுகேள்வி பட்டிருக்கிறீர்களா. வீரப்பன் வேட்டையின் போது நடந்த மலைவாழ் பெண்களின் மீது நடந்த அத்து மீறல்களைக் கேள்வி பட்டிருக்கிறீர்களா. இவை யெல்லாம் பெண்களை பகடை காயாக பயன்படுத்தியதால் வந்த விளைவா. யோசித்து பதில் சொல்லுங்கள்.
கனேஷ் மற்றும் கற்றது,
எல்லையை பாதுகாக்க வேண்டிய இந்திய ராணுவம் எதற்காக இந்தியாவின் தண்டகாருண்யாவிற்கு சென்று மக்களை வேட்டையாடுகின்றது ? எதற்கு அங்கு வாழும் இந்திய பூர்வகுடி மக்களின் ஆடு ,மாடு ,தானியங்கள் போன்ற அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்து ,பெண்களிடம் பாலியல் வன்முறையை செலுத்துகின்றது ? இது போன்ற பாலியல் வன்முறையை செய்யும் இந்திய ராணுவத்தை ஆராதனை செய்யும் கோவிந்துகள் கற்றது , .கணேஷ் போன்றவர்கள் தங்கள் வீட்டு பெண்களிடம் இந்திய ராணுவம் ________ ஏற்பார்கலோ ?
கொய்யல என்னமோ வேலை வெட்டி இல்லாம ராணுவம் பொழுது போகாம தண்டகாருன்ய காட்டுக்கு ராணுவம் வந்த மாதிரி ஏன் பில்ட் உப குடுக்கற? போலிசை எல்லாம் கொல்லும்போது, வெடிகுண்டு வெயக்கும்போது தோணலையா? நம்மள நம்பி இந்த மக்கள் அடைக்கலம் தராங்களே, அவர்கள் வருமானத்திலும் ஒரு பங்கு வாங்கி கொள்கிறோமே, இங்கே ராணுவமோ இல்லை போலீஸ் படையோ வந்தால் நம் சண்டையில் இவர்கள் இடையில் மாட்டுவார்களே என்று உனக்கு ஏன் தோன்றவில்லை? இதல்லாம் தெரிந்தும் தானே, இதலாம் நடக்கும் என்று முழுதும் அறிந்து தானே அங்க போனீங்க? இதல்லாம் நடந்தா நமக்கு இன்னும் ஆதரவு கூடும் என்ற கணக்கு போட்டு தானே போனீங்க? ஒன்னுமே தெரியாம போய், இப்போ ஏதோ எதிர்பார்க்காம நடந்த மாதிரி சீன் ஏன்? இஸ்லாதுக்காக, இஸ்லாமிய மக்களுக்காக போராட்றதா ISIS சொல்றதுக்கும், நீங்க சொல்ற போராளிகள் பண்றதுக்கும் ஒரு வித்யாசமும் இல்லை.
என்ன கேட்டீங்க? தங்கள் வீட்டு பெண்ணிடம் இது போல ராணுவம் நடந்தால் ஏற்பார்கள் என்று தானே? வேறு வழி இல்லை, ராணுவம் போலீஸ் எல்லாம் வரும், இது எல்லாம் நடக்கும் என்று தெரிந்து நான் ஆயுதம் எடுத்தால் இது போல வரும் எந்த விளைவையும் நான் ஏற்று கொள்வேன். நான் பத்து ராணுவ வீரனை கொன்றால் எனக்கு இது போல ஏதாவது நடக்கும் என்று தெரிந்து தானே நான் ஆயுதம் எடுத்தேன்? ஆனால் என்னமோ அவர்கள் என் வீட்டு பெண்களை கெடுக்கும் நோக்கில் இங்கு வந்ததாக கனவிலும் என்ன மாட்டேன். அவர்கள் பின்னால் ஒளிந்து கொள்வது நான், என் குடும்ப பெண்கள் எடுத்த முடிவு. அவர்களுக்கு நேரும் எந்த துன்பத்துக்கும் நான், அவர்கள் பின்னால் ஒளிந்து இருக்கும் என் சுயநலம்தான் காரணம். அவர்களை யுத்தத்தில், எங்களுக்கு நடுவில் நிறுத்தியது நான். ஒருவருக்கு பின்னால் ஒளிந்துகொண்டு நான் கொலைகள் செய்தால் (என் காரணம் மிக சரி என்றாலும்கூட) என் முன் நிற்பவருக்கு ஏற்படும் தீங்குக்கு நானே பொறுப்பு. அவர்கள் செத்தாலும் அந்த ரத்தம் என் கையின் மீதும் இருக்கும். அவ்வளவு அக்கறை இருக்கிறவன் அவர்கள் பின்னாடி ஒளிந்து கொள்ள கூடாது.
உங்களது அறத்தை ஏன் ஆளும் வர்க்கத்திற்கு பொருத்திப் பார்க்கக்கூடாது? இராணுவ வீரனை பங்களா நாய் போல் ஏவிவிட்டு தன் சொந்த மக்களைச் சூறையாடுகிற பொழுது நாய்க்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? அப்பொழுது ஏன் எந்த இராணுவ வீரனும் நீங்கள் கேட்டுக்கொள்வதைப்போல என் முன் நிற்பவருக்கு ஏற்படும் தீங்குக்கு நானே பொறுப்பு என்று ஏன் சொல்வதில்லை?
அறமிருக்கும் மனிதன் இதைச் சொல்வான். சான்றாக இதே அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுக்கும் போரைக் காணச் சகியாத கிம்பெர்லி ரிவேரா இராவணுத்திலிருந்து இனி ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்று சொல்கிற விழுமியம் திண்ணி மடத்திற்கு ஏன் இல்லை?
மேலும் படியுங்கள்
கிம்பெர்லி ரெவேரா : ஆதிக்கத்திற்கு துணை போகாத வீரம் !
https://www.vinavu.com/2013/05/24/kimberly-rivera/
இந்த இந்திய இராணுவத்திலும் ஒரு எட்வர்ட் ஸ்னோடன், அல்லது பிராட்லி மைனிங் இருந்திருந்தால் அவர்களும் திண்ணி மடம் என்று தான் எழுதுவார்கள்.
அதைவிடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் பார்த்து விசிலடிக்கும் தேசபக்தி குஞ்சு குளுவான்கள் போல் ஏன் ஊளைச் சவுண்டு கொடுக்கிறீர்கள்?
அட லூசு கணேசா ,
முதலில் தெளிவா பேசவும் ,பயம் இல்லாம பேசவும் கத்துக்க ! போலிசை கொன்றது யாரு ? யார் வருமானத்தில் யார் பங்கு வாங்கினார்கள் ? யார் யாருக்கு அடைகலம் கொடுத்தார்கள் ?இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்து யார் எங்கு போனார்கள் ? இதை எல்லாம் பேசுவதற்கு கூட துணிச்சல் இல்லாத உமக்கு என்னத்துக்கு விவாதம் செய்ய ஆசை வந்து உள்ளது ?
ஆமாம் நீயி ஆயுதம் எடுத்து போராடினா அதுக்கு எதுக்கு தண்டகாருண்யா மக்கள் பதிக்கபடனும் ? ஒன்று தெளிவா பயம் இல்லாம பேசு ! இல்லையென்றால் விவாதத்தை விட்டு ஓடிபோயிடு கணேசா !
கணேசா இதையும் படி.
http://inioru.com/46095/policeman-surrenders-before-maoists/
COMMUNIST PARTY OF INDIA (MAOIST)
CENTRAL COMMITTEE
Press Release
March 25, 2014
“Tongpal Ambush is the Consequence of White Terrorism of the Indian state
In the name of Operation Green Hunt – ‘War on the People’ ”
On March 11,2014 in a valiant attack by our People’s Liberation Guerilla Army (PLGA) commanders and red fighters on the joint forces of paramilitary and district police on the Jagdalpur-Konta NH-221 near Tongpal of Sukma district in Chhattisgarh, 11 CRPF jawans belonging to the 80th Battalion and four district policemen died. Our guerillas seized 19 weapons (six AK-47s, two SLRs, seven Insas rifles, three grenade launchers, one LMG),ammunitions and other military equipment. The Tongpal ambush is part of the tactical counter-offensives carried on by the PLGA all over the country under the leadership of our party in self-defence against the white terrorism of the Indian state in the name of Operation Green Hunt (OGH)– The War on People.
(Abhay)
Spokesperson,
Central Committee, CPI (Maoist)
தமிழ்,
Shivappu அவர்களுக்கு பின்னூட்டம் 8.2.1.3.1 இல் அளித்த பதிலில் உங்களுக்கான பதிலும் அடங்கியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள ராணுவம் அத்தனையுமே அடக்குமுறைக் கருவிகளாகவே இருக்கின்றன. ராணுவம் என்பது மக்களால் அர்ப்பணிப்போடு கட்டப்படவேண்டும். இப்போது அது வெறும் சம்பளம் பெறும் உத்தியோகமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் மக்கள் மத்தியிலோஅது போலி நாட்டுப்பற்று கூறி வளர்க்கப்படுகிறது. அதற்கான செலவுகள் நியாயப்படுத்தப்படுகிறது.
ராணுவச் செலவுகள் பெருமளவில் குறைக்கபட வாய்ப்பு நிறைய இருக்கிறது. ஆனால் அதில் ஈடுபட்டிருக்கும் தனியார் கம்பெனிகளால் அவை இன்னும் ஊதிப் பெருக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இப்போதைய ராணுவத்தை நாட்டுப்பற்று, தேசபாதுகாப்பு என்கிற பெயரில் ஆதரிப்பது ஆபத்தானது. அதனால் தான் தமிழ் இப்படிச் சொல்கிறார்.
I have posted the following around 5 years, it is highly relevant to the thread and hence, like to share the same here;
தாண்டேகாரநியத்தில் நடப்பவைகளை கவனிக்கும் பொது எனக்கு அவதார் படம் மட்டுமே ஞாபகத்திற்கு வருகிறது. மாவோயிஸ்ட்களை படை கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கூறும் அரசியல் மற்றும் இதர பிரிவினர் தம் குடும்ப்பத்தினரை CRPF பலியாடுகளுடன் சேர்ந்து களத்தில் இறங்கி சண்டை போடஅனுப்புவார்களா?
அங்கே களத்தில் இருக்கும் அரச படை வீரனுக்கும் காசுக்கு கொலை செய்பனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இது எனது பார்வை மட்டும் இல்லை டெல்லியில் இருந்து கட்டளை போடும் அரசியல்வாதியும் அதே எண்ணத்துடன் தான் இருப்பான் என்பது படை வீரர்களை அவர்கள் பலி கொடுக்கும் முறையில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
பெரு முதலாளிகளுக்கு நிலத்தை தாரை வார்ப்பதற்காக, அந்த நிலத்தின் மைந்தர்களை மாவோயிஸ்ட்கள் என்ற பெயரில் கொன்றும், படை வீரர்களை பலி கொடுத்துக்கொண்டும் இருக்கிறது இந்த கங்காணி அரசாங்கம்.
உனக்கு ஒரு பொருள் வேண்டுமாயின் அதற்கான மிகச்சரியான விலையை கொடுத்தால் மாட்டேன் என்று யாரேனும் கூறுவார்களா?
இங்கே விலை என்ன?
வனத்தில் இருப்பவர்களுக்கு சரியான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது தான்.
ஆனால் இந்த குறுக்கு புத்தி அரசாங்கம் எல்லோரையம் கொன்றுவிட்டால் விலை கேட்பார் இல்லாத நிலை உருவாகி விடும் என தப்பு கணக்கு போடுகிறது.
அப்படி ஒரு நிலை வந்தால் “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்”.
நண்பர் மாதவ் ,
மாவோயிஸ்டுகளை விட்டு தள்ளுங்கள் மாதவ். தண்டகாருன்யாவின் புதல்வர்களான பூர்வகுடிமக்கள் என்ன கிரிமினல்களா ? அவர்களை அவர்கள் வாழ்விடத்தில் இருந்து அப்புறபடுத்த இந்திய நாசாகார அரசு தம் அரசு படை அடியாட்கள் மூலம் 20 ஆண்டுகளாக நடத்துகின்ற பூர்வகுடிமக்கள் மீதான படை எடுப்புகளுக்கு இந்த கோயிந்துகள் கனேஷ் , கற்றது போன்றவர்கள் என்ன விளக்கம் கொடுக்க போகின்றார்கள். தண்டகாருன்யாவின் பூர்வகுடிமக்களின் குறைந்த பட்ச அடிப்படை வசதிகளான கல்வி ,ஆரம்ப சுகாதாரம் ஆகியவற்றையே இவர்கள் ஆமாம் இந்திய அரசு தடைசெய்து உள்ளது.அரசு செய்யவேண்டிய அடிப்படை வசதிகளை மாவோயிஸ்டுகள் தமது சிவில் நிர்வாகம் மூலம் பகுதி அளவிற்கு பூர்த்தி செய்து கொண்டு உள்ளார்கள். அம்மக்களின் மிக பெரிய பிரச்சனையான இரத்த சோகை நோயிக்கு தேவையான அயன் டானிக்க்குகளை கூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடை செய்து கொண்டு உள்ளது இந்திய அரசு .
தண்டகாருன்யாவின் புதல்வர்களான பூர்வகுடிமக்கள் வாழ்விடங்கள் மீது இந்திய அரசு துனைராணுவ படை நிகழ்த்தும் தாக்குதல்களை அம் மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் ? இதில் வேறு இஸ்ரேல் பயிற்சி பெற்ற அடியாட்களை கொண்டும் ,விமானப்படை வழிகாட்டுதலில் கொடுர தாக்குதல்களை நிகழ்த்தி கொண்டு இருக்கின்றது இந்த நாசகார இந்திய அரசு . இதற்கு எல்லாம் காரணம் என்ன ? பொருளாதாரம் சார்ந்த காரணங்கள் ஏதாவது இருக்கிறதா ? விவாதிப்போம் ……
இந்திய அரசு அழிவு படைகளை ஆராதிக்கும் கோவிந்துகள் பதில் கூறுவார்களா ?
தண்டகாரண்யா பிரச்சினை மிக ஆழமானது. அரசியல்வாதிகள் அப்பிரச்சினையை தீர்க்க ஒரு சரியான வழியை யோசிக்காமல் மேலும் குட்டையை குழப்பி விட்டார்கள்.
மாதவ் கூறியது போல வனத்தில் இருப்பவர்களுக்கு சரியான கல்வி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து விட்டு பின் அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்க வேண்டும். அவர்களும் இந்நாட்டு குடிமகன்கள் தான். நமக்கு கிடைக்கும் அத்தனை வசதிகளும் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.
அதே சமயம், உலகம் முழுக்க உள்ள ஆயுதம் ஏந்திய கொரில்லா வகை குழுக்களின் ஆரம்பம் வேறு வேறாக இருந்தாலும் அவர்களின் முடிவு ஒன்று தான். மரணம்.
நமது ஈழ பிரச்சினையிலே பாருங்கள், திரு.பிரபாகரன் அவர்களது குறிக்கோள் எத்துணை உயர்ந்ததாக இருந்தாலும், ஆயுதம் என்று ஒன்றை ஏந்தி விட்டால் அது நிச்சயம் மரணத்தை நோக்கி தான் நம்மை பயணிக்க வைக்கும்.
இந்த பிரச்சினையை தீர்க்க ஆயுதம் என்தாமலேயே மக்களின் ஆதரவோடு போராடி இருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்க வாய்ப்புண்டு.
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கேவோடு விடுதலை புலிகள் பேச்சுவார்த்தை என்ற அளவில் ஈடுபட்டிருக்கும்போது அப்படியே தொடர்ந்து இருக்கலாம். ஆனால் அந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து பின்னர் தமிழர்களை தேர்தலில் வாக்களிக்காமல் தடுத்து, மறைமுகமாக இராஜபக்சே ஆட்சியமைக்க விடுதலை புலிகளே அவர்களை அறியாமல் காரணம் ஆகிவிட்டார்கள். இராஜபக்சே விடுதலை புலிகளுக்கு எதிராக ஆயுதபோராட்டம் நடத்த வேண்டும் என்று சொல்லியே வாக்கு சேகரித்தார் என்ற போது விடுதலை புலிகள் எப்பாடுபட்டாலும் இராஜபக்சே ஆட்சிக்கு வராமல் செய்திருக்க முயன்றிருக்க வேண்டும். அசட்டு துணிச்சல் அவர்களுக்கு ஆபத்தாக முடிந்தது.
அதனால் தான் சொல்கிறேன். ஆயுதம் ஏந்திய புரட்சி என்பது நிலைக்காது. மக்கள் ஆதரவுடன் எழும் எழுச்சியே தொடர்ந்து நின்று ஜெயிக்கும்.
தமிழ் அவர்கள் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடும் இராணுவத்தினர் பற்றி கூறினார். இதை உளவியல் ரீதியாக பார்த்தால் பிரச்சினையின் ஆரம்பம் எங்கு என்று தெரியும். இப்போது மட்டுமல்ல, மன்னர் காலத்திலும் போர் வீரர்கள் எதிரி நாட்டு அப்பாவி பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி அவர்களது ஆசைகளை தீர்த்து கொள்வதை பார்த்து வருகிறோம். தனிப்பட்ட முறையில் இதற்கு நமது அரசாங்கமே காரணம் என்று நான் கூறுவேன். இராணுவத்தில் சேரும் ஒரு நபர் தன உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற நிலையில் மனைவி, குழந்தைகள் அனைவரையும் பிரிந்து வாழ்கின்ற நிலையில் மனைவியுடன் உறவு இல்லை என்ற நிலையில் நாட்கள், மாதங்கள் என்று பிரிந்திருக்கிற நிலையில் இவர்களின் மனதுக்குள் காம ஆசை வெறியாகி அவர்களை மிருகமாக்கி விடுகிறது. இராணுவத்தில் சேருபவர்களுக்கு சரியான கவுன்சலிங் செய்த பின்னரே அவர்களை களத்துக்கு அனுப்ப வேண்டும். அதே போல அவர்களை நீண்ட நாட்கள் களப்பணியில் ஈடுபடுத்தாமல் அவர்களது குடும்பத்தினரோடு அதிக நேரம் இருக்க வழி என்ன என்று பார்க்க வேண்டும். அத்து மீறும் இராணுவ வீரர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அத்தகைய தண்டனைகளுக்கு இராணுவ அமைப்பு தடையாக செயல்பட கூடாது. யார் செய்தாலும் தவறு தவறு தான்.
தீவிரவாதம் என்பதற்கான ஊற்று இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல், வாய்ப்புகள் கொடுக்கப்படாததால் தான். அவர்களுக்கு தகுந்த வாய்ப்பு வசதிகள் செய்ய அரசு முதலில் முயன்றால் தீவிரவாதத்திற்கான தேவையே இருக்காது.
தண்டகாருண்யா மக்களின் அவலங்களுக்கு இந்திய ஆளும் அதிகார வர்க்கம் தான் காரணம் என்றால் அதனையும் அதன் கட்டுமானங்களையும் இந்தியமக்கள் அடித்து நொறுக்குவது தானே சரியான தீர்வாக இருக்க முடியும். மேலும் இந்திய ஆளும் வர்கம் தன் அடியாள் அரசுபடைகளை ஏவி பெருமுதலாளிகளுக்கும் , பன்னான்ட்டு முதலாளிகளுக்கும் ஆதரவாக தண்டகாருண்யாவின் பல இலச்சம் கோடி மதிப்புள்ள கனிம வளங்களை கொள்ளையடிக்க முயலும் போது யார் இதில் குற்றவாளி ? இந்திய ஆளும் வர்கமும் ,அதன் ஏவல் நாய்களான அரசு அடியாள் படைகளுமே இரண்டுமே தானே கூட்டு கயவாளிகள் . ஆளும் வர்கத்தின் நலன்களை காக்கவும் ,மக்களை வதைக்கவும் கட்டமைக்க பட்ட ஏவல் நாய்களான அரசு அடியாள் படைகளுக்கு கற்றது இன்னும் போலியான தெசபத்தியுடன் குரல் கொடுப்பது ஏன் ?
பதில் இன்னும் வரவில்லை கற்றது ! வர வர நீங்களும் அதியமான் போன்று விவாதத்தில் இருந்து பயந்து ஓடுகின்ரீர் என்று எண்ண தோன்றுகின்றது
தமிழ்,
இரண்டு வருட இடைவெளிக்கு பின் நீங்கள் இப்போது தான் தென்காசிக்கு போய் ஆசிரியர் வேலை செய்ய போகிறீர்கள். உங்களுக்கு இருக்கும் நேரம் எல்லோருக்கும் இருப்பதில்லை. நாங்கள் நாள் முழுதும் உழைத்து விட்டு தான் இங்கு வந்து பதிவிட வேண்டியுள்ளது. வேலை நேரத்தில் வினவில் பின்னூட்டம் எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. பார்க்கலாம், நீங்கள் தென்காசி போன பின்பு இப்படி நிமிடத்திற்கு நிமிடம் பின்னூட்டம் அளிக்க முடிகிறதா என்று பார்ப்போம்.
அனைவரின் கேள்விகளுக்கும் நிச்சயம் பதில் அளிக்கிறேன். கவலை கொள்ள வேண்டாம். ஓடி விட மாட்டேன்.
கற்றது கையளவு என்ன சொல்கின்றார் என்றால் , இந்த ஆளும் அதிகார வர்கமும் அதன் படைகளும் இப்படி தான் நாட்டின் மக்களுக்க்கு எதிரானதாக ,நாட்டின் இயற்கை வளங்களை கார்பரேட் முதலைகளுக்கு கொள்ளையடிக்க சட்டங்களை இயற்றி கொண்டு தான் இருக்கும் ஆனாலும் அதற்கு எதிராக மக்கள் போராட கூடாது .போராடினா மரணம் நிச்சயம் என்று முன்னால் உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் போன்று பேசுறாரு. சரி கார்பரேட் முதலைகளின் கொள்ளைக்கு ஆதரவான இந்திய ஆளும் அதிகார வர்கத்தின் பேச்சையும் ,ஆணையையும் கேட்டு தானே ,அதற்கு பணித்து தானே இந்திய அரசு படைகள் தண்டகாருண்யா மக்கள் மீது போர் தொடுத்து உள்ளது ? அப்படி இருக்கும் இருக்கும் போது இந்திய அரசு படைகளும் குற்றவாளிகள் தானே ? அப்புறம் ஏன் கற்றது கையளவு போலியாக இந்திய அரசு படைகளுக்கு ஆதரவாக பேசிக்கொண்டு உள்ளார் ?
உப்புமா,
போராடினால் மரணம் என்று சொல்லவில்லை, ஆயுதம் ஏந்தினால் மரணம் என்று சொன்னேன். நீங்களே உலக வரலாறு முழுதும் பாருங்கள், ஆயுதம் ஏந்தியவர்கள் அந்த ஆயுதத்தாலேயே மரணம் அடைகிறார்கள். போராட்டம் விரைவில் நீர்த்து போகிறது. போராடுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் மக்கள் சக்தியை கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்றி பெரும் சக்தியாக்கி போராடுங்கள் என்று தான் சொல்கிறேன்.
எனது பின்னூட்டம் 8 ஐ முழுவதுமாக படியுங்கள். அரைகுறையாக ஓரிரு வரியை படித்து விட்டு பின்னூட்டம் எழுதாதீர்கள். இராணுவ படைகள் அட்டூழியம் இழைத்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று தான் கூறினேன்.
அதே சமயம், ஒட்டுமொத்த இராணுவத்தையும் நீங்கள் இழிவுபடுத்துவது சரியல்ல. நீங்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக வெயில், மழை, பணி, மலை, பாலைவனங்களில், மனைவி, குழந்தைகளை பிரிந்து, எப்போது சாவு வரும் என்று தெரியாமல் காத்திருப்பவர்கள் பற்றி யோசியுங்கள். உங்கள் பாதுகாப்புக்காக எல்லையில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்கிறார்கள். இவ்வளவு பேசும் நீங்கள் எல்லையில் காவல் காக்க தயாரா? மேலும் இராணுவம் போரில் மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை இயற்கை பேரழிவு காலங்களிலும் அவர்களது உதவி நமக்கு தேவைப்படுகிறது.
அட்டூழியம் செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. அதே சமயம் நமக்காக உயிரை துச்சமென மதித்து, உயிரை மறித்து தியாகம் செய்து காவல் காக்கும் எல்லைச்சாமிகளை தூற்றாதீர்கள். நான் சொல்லும் விளக்கத்தை முழுக்க படிக்காமல் அரைகுறையாக படித்து விட்டு பின்னூட்டம் எழுதினால் உப்புமா இப்படி தான் வெந்தும் வேகாமலும் இருக்கும்.
கற்றது கையளவு,
அப்போ காந்தி தான் இன்டியாவுக்கு விடுதலை வாங்கி கொடுத்தாரா?
அப்புறம் அவர்களுக்கு தன்டணை பெற்றுத் தருவது எப்படி?
Shivappu,
இராணுவத்தினர் என்னென்ன தவறுகள் இழைத்தனர் என்பதற்கு தகுந்த ஆதாரங்களை திரட்டி, பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து நீதிமன்றத்தில் அவர்கள் சார்பில் சட்டப்படி முறையிட வேண்டும்.
ஆயுதம் ஏந்தினால் அரசுக்கு வேலை எளிதாகி விடுகிறது. இவர்கள் தீவிரவாதிகள் என்று ஒரேயடியாக அடித்து விடுவார்கள். ஆயுதம் ஏந்தி போராடுபவர்களை நீதிமன்றம் அனுமதிக்காது. வன்முறை என்பது இருமுனை கத்தி. அது எப்போது வேண்டுமானாலும் அதை பயன்படுத்துபவனையே குத்தி கிழிக்கும். புரிந்தால் சரி.
எல்லா பிரச்சினைகளுக்கும் பலவகைகளில் தீர்வுகள் காண முடியும். ஆயுதம் ஏந்திய தீர்வு என்பது நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது முறை தோல்வியில் தான் முடியும். மக்கள் சக்தியை திரட்டி, அவர்கள் ஆதரவுடன் நீதிமன்றங்களில் முறையிட்டால் அட்டூழியம் செய்த கயவர்களுக்கு தண்டனை வாங்கித்தர முடியும்.
சும்மா உளறிகிட்டு இருகாதிங்க கற்றது . எதற்காக எல்லையை காக்கவேண்டிய இராணுவம் த்ண்டகாருன்யாவுக்கு செல்லவேண்டும் ? யார் ஆணையிடதன் பேரில் சென்றார்கள் . அப்படி சென்றது எப்படி சரியாக இருக்கும் ?
Shankar,
நீங்கள் எய்தவனை விட்டு விட்டு அம்பை மட்டும் குறை சொல்கிறீர்கள்.
இராணுவ வீரர்களுக்கு அவர்களது மேலிடம் என்ன கட்டளை இட்டாலும் அவர்கள் செய்து முடிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு நிர்பந்திக்கப்பட்ட விதி. விதியை மீறி, மேலிடத்தின் கட்டளையை மீறி வீரர்கள் செயல்பட முடியாது.
எதிரி நாட்டோடு நடப்பது இரு நாடுகளுக்கு இடையேயான போர். நக்டளைட்டுகளுடன் நடப்பது உள்நாட்டு போர். இராணுவ வீரர்களை பொறுத்தவரை நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், ஆயுதம் தாங்கி போராட்டம் நடத்துபவர்கள். அவர்களிடம் கொஞ்சி விளையாடுவார்களா?
எதிரில் நிற்பவர்கள் எல்லோரும் காந்தியவாதிகள் அல்ல, நிராயுதபாணிகள் அல்ல என்பதையும் நீங்கள் உணர வேண்டும். எத்தனை காவல் துறையினர், எத்தனை இராணுவத்தினர் நக்சலைட்டுகளுடனான போரில் இறந்துள்ளார்கள்? ஆயுதம் ஏந்திய நக்சலைட்டுகளால் பொதுமக்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்று தங்களால் சொல்ல முடியுமா? நக்சலைட்டுகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு தங்களின் பதில் என்ன?
அதே சமயம், அப்பாவி பொதுமக்களை துன்புறுத்துவதும், பெண்களை பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்துவதுமான ஈன செயல்களை செய்யும் மிருகங்கள் மேலிடத்து பேச்சை கேட்டு அவ்வாறு செய்வதில்லை. அந்த மிருகங்களின் வெறி, பசிக்கு அப்பாவிகள் பலியாகின்றனர். இத்தகைய மிருகங்களுக்கு சட்டப்படி மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
யாராக இருந்தாலும் சரி – அது இராணுவ வீரர்களாக இருந்தாலும் சரி, நக்சலைட்டுகளாக இருந்தாலும் சரி, பொதுமக்களை துன்புறுத்தினால் அது நிச்சயம் தவறே. அதே சமயம் ஆயுதம் ஏந்திய நக்சலைட்டுகள் எதிரில் வந்தால் இராணுவ வீரர்கள் அவர்களை சும்மா விட்டுவிடுவார்களா? இதற்கு தான் சொல்கிறேன். ஆயுதம் ஏந்தாமல் மக்களை திரட்டி போராடுங்கள். ஆயுதம் ஏந்தினால் அது அனைவரையும் பாதிக்கிறது. புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி.
சும்மா நக்சளைட்டுகள் என்று பஜனை படாதிர்கள் கற்றது. நேரடியாக பதில் கூறுங்கள்.என்னுடைய கேள்வி :
அது சரி எல்லையை காக்கவேண்டிய ரானுவத்துக்கு தண்டகாருன்யாவில் என்ன வேலை கற்றது ? ஒவ்வொரு முறை இந்திய துனை இராணுவம் தண்டகாருன்யா மலை கிராமங்களுக்குள் படைஎடுக்கும் போதும் 1000, 2000 என்று அந்த மக்களை வழித்து எடுத்துக்கொண்டு வந்து போலிஸ் கேம்ப்களில் அம்மக்களை வைத்து சித்திரவதை செய்கிறார்கள். அந்த கிராமத்து இளைஞர்களை வலுகட்டயமாக சல்வா ஜூடும் என்ற கொலை படையில் சேர்த்து தன் சொந்த மக்களுக்கு எதிராகவே தாகுதல்களை நடத்த சொல்கிறார்கள். இத்தனிக்கும் சல்வா ஜூடும் என்ற கொலை படையை உச்ச நீதிமன்றம் தடைசெய்து உள்ளது. இந்திய துனை இராணுவம் தண்டகாருன்யா மலை கிராமங்களுக்கு சென்று அம்மக்களை அவர்கள் வாழ்விடங்களில் இருந்து அப்புறபடுத்தி கேம்ப் களில் அடைக்க வேண்டிய காரணம் என்ன ? இதில் வேறு ஒவொரு முறை தண்டகாருன்யா மலை கிராமங்கள் மீது படைஎடுக்கும் போதும் அம்மக்களின் பெண்களை பாலியல் வன்முரைக்கு உட்படுத்துகிறது. அவர்கள் மறு விதைப்புக்கான உணவு தானியங்களை அழிக்கின்றது. இத்தகைய இராணுவ தாகுதல்களில் நக்சலைட்டுகள் எவருமே கைது செய்யபட்டதாக தகவல் இல்லையே ! ந்க்க்சளைடுகளை அழிக்க தான் இந்த தாக்குதல் என்றால் நிராயுத பாணியான மக்கள் தானே வதைக்க பட்டார்கள் ! உண்மையில் அம்மக்களை அவர்கள் வாழ்விடங்களில் இருந்து அப்புரப்டுத்தும் அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் என்ன கற்றது ? சும்மா நக்சலைட்டு ,திவிரவாதம் ,ஆயுதம் என்று பஜனை பாடாமல் உண்மையை கூறுங்கள் கற்றது கையளவு .
இந்த விடயத்தில் அரசு தவறே செய்யவில்லை என்று எப்போது நான் சொன்னேன். நான் அரசுக்கு ஆதரவாக பேசவில்லை. ஆயுதத்தை ஏந்தி போராடினால் அரசுக்கு நக்சலைட்டுகளை சட்டப்படி கட்டம் கட்டுவது எளிது என்று தான் சொன்னேன்.
உப்புமாவுக்கு நான் அளித்த பின்னூட்டம் 8.2.1.4.1.1.1 இல் இதனை தெளிவாகவே கூறியுள்ளேன். நான் அளிக்கும் பதில்களை முழுவதுமாக படிப்பதே இல்லை. ஓரிரு வரிகளை மட்டும் பார்த்தால் அதன் அர்த்தம் வேறாக தோன்றும். முழுமையாக படித்தால் சரியான அர்த்தம் விளங்கும்.
தாங்கள் ஆத்திரப்படுகிறீர்கள், அவசரப்படுகிறீர்கள். பொறுமையாக படித்தால் உண்மை விளங்கும்.
அரசு தான் தவறு செய்கின்றது என்றால் ,அரசின் தவறுக்கு இந்திய இராணுவமும் ஏவல் நாய் என்றால் பின்பு எப்படி அந்த ஏவல் நாய்களை ஆதரிக்கின்றிர்கள் கற்றது கையளவு ? அகதிகளாக ,அடிமைகளாக போலிஸ் ,இராணுவ கேம்ப்களில் அடைத்து வைக்கபட்ட தண்டகாருண்யா மக்களுக்கு தீர்வு தான் என்ன ?
நீங்கள் அரசுக்கு ஆதரவாக பேசவில்லை என்பது உண்மையாயினும் ,தண்டகாருண்யா மக்களுக்கு எதிராக குற்றம் புரியும் அரசின் ஆணைகளுக்கு தலையசைத்து அரசின் குற்றங்களை நிறைவேற்றிக்கொண்டு இருக்கும் அரசின் அடியாள் ஏவல் நாய்களான இந்திய இராணுவத்துக்கு ஆதரவாக பேசிக்கொண்டு இருப்பதை எப்படி அவ்வப்போது மறந்து விடுகின்றிர்கள் ? அரசின் செயல் தண்டகாருண்யா காடுகளில் இருந்து மக்களை அகற்ற ஆணையிட்டது .அந்த ஆணையை வன்முறை கொண்டு நிறைவேற்றிய ஏவல் நாய்கள் இந்திய இராணுவம் . எனவே இருவருமே மக்களுக்கு எதிரான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தானே ? பின்பு ஏன் இந்திய இராணுவத்தை ஆதரிகின்றிர்கள் கற்றது ?
தமிழ்,
எனது பின்னூட்டம் 8.2.1.3.1 ஐ முழுவதுமாக படிக்கவும். அரைகுறையாக படித்தால் இப்படித்தான் தவறாக புரிந்து கொள்வீர்கள்.
உங்க பின்னுட்டத்தை முழுவதும் படித்த பின்பு தான் பதிலே எழுதி இருக்கேன். மழுப்பல் இல்லாம பதில் கூறவும் :
கனிம வளங்களை பெருமுதாலைகள் கொள்ளை அடிப்பதற்கு சாதகமாக ,இந்தியாவின் தொல்குடி மக்களை தண்டகாருண்யாவில் இருந்து அடித்து நொறுக்கி ,கொன்று குவித்து வெளியேற்ற நினைக்கும் இந்திய அரசையும் ,அதன் கொலை வெறி ஆனையை நிறைவேற்றும் இந்திய இராணுவத்தையும் இன்னுமா நீங்கள் ஆராதனை செய்கின்றிர்கள் ?
தண்டகருன்யாவிற்குல் இந்திய துனை இராணுவம் நுழைய காரணம் நக்சலைட்டுகள் தான் என்றால் பின்பு ஏன் அம்மக்கள் இராணுவத்தால் தன் கிராமங்களில் இருந்து அப்புறபடுத்தபட்டு இராணுவ கட்டுபாட்டில் அகதிகளாக கூடாரங்களில் வைக்க படுகிறார்கள் ? அப்புறம் ஏன் மலை கிராமங்களில் 60அடி அகல ரோடுகள் போடபடுகின்றன ? கவனிக்கவும் 60அடி அகல ரோடுகள்! பஸ் போக்கு வரத்து கூட இல்லாத தண்டகருன்யாவில் 60 அடி ரோடுகள் போட்டு அங்கிருந்து மக்களை அப்புரப்டுத்தும் இந்திய அரசாங்கம் என்ன பைத்தியமா கற்றது ?
மக்களை அப்புரப்டுத்திய பின்பும் யாருக்கா ரோடுகள் NH போன்று போடப்படுகின்றது கற்றது ?
தமிழ்,
அப்பாவிகளை கொல்லும் இராணுவ வீரர்களையா நான் ஆராதித்தேன்?
ஒட்டுமொத்த இராணுவத்தையும் நீங்கள் திண்ணிமடம் என்று சொன்னபோது எல்லையில் உங்களுக்காக உயிரை பணயம் வைத்து காவல் காப்பவர்களையும், உங்கள் பாதுகாப்பிற்காக தங்கள் இன்னுயிரையும் ஈந்தவர்களையும் சேர்த்து திங்கள் திண்ணிமடம் என்று சொல்கிறீர்களே என்று தானே கேட்டேன்?
கனிம வளங்களை பெருமுதாலைகள் கொள்ளை அடிப்பதற்கு சாதகமாக ,இந்தியாவின் தொல்குடி மக்களை தண்டகாருண்யாவில் இருந்து அடித்து நொறுக்கி ,கொன்று குவித்து வெளியேற்ற நினைக்கும் இந்திய அரசையும் ,அதன் கொலை வெறி ஆனையை நிறைவேற்றும் இந்திய இராணுவத்தையும் இன்னுமா நீங்கள் ஆராதனை செய்கின்றிர்கள் ?
தமிழ்,
நீங்களும் நானும் கணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்த நேரத்தில் உத்தாராகான்ட், இமாச்சல் பிரதேசம் போன்ற இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றது நீங்கள் சொன்ன திண்ணிமட மனிதர்கள் தான். நேபாளில் இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு உதவ சென்றதும் நீங்கள் சொன்ன தின்னிமட மனிதர்கள் தான். எமெனில் மாட்டிக்கொண்ட இந்தியர்களை போரின் தீவிரமான நேரத்திலும் கப்பலில் கூட்டி வந்து பாதுகாத்தது அந்த தின்னிமட மனிதர்கள் தான்.
ஒட்டுமொத்தமாக எல்லோரையும் ஒரேயடியாக திண்ணிமடம் என்று சொல்லிவிட்டீர்களே? இது நியாயமா?
உங்களுக்கு ஒரு முறை இல்லை இரு முறை அல்ல, நூறு முறை சொல்கிறேன். தவறு செய்த இராணுவ வீரர்களையும், தவறான கட்டளையிட்ட அரசையும் நான் ஆதரிக்கவில்லை, ஆராதிக்கவில்லை, ஆமோதிக்கவில்லை. புரிகிறதா, இல்லை மீண்டும் வேதாளம் முருங்கை மரம் மேல் ஏறுவதை போல தெரிந்தும் தெரியாதது போல அவதூறு பரப்புவீர்களா?
ஒன்றும் தெரியாத அசட்டு அப்பாவி போன்று பேசாதிங்க நண்பர் கற்றது கையளவு. உங்கள் பின்னுட்டம் ஹய் இந்திய இராணுவம் எனக்கு முட்டாய் கொடுத்துது என்று சிறுவர்கள் மகிழ்ந்து கூச்சல் போடுவது போன்று உள்ளது. முதலில் இந்திய இராணுவம் எதற்காக இந்திய அரசின் கார்பரேட்டுகளுக்கு ஆதரவான ஆணையை நிறைவேற்றுவதன் மூலம் மக்களை கொன்று குவிகின்றது ? இதற்கு பதில் சொல்லுங்கள் !
கற்றது கையளவு,
விவாதத்தை கற்றது கையள்விற்காக எளிமை படுத்துவதன் நோக்கத்துடன் ஒரு இராணுவத்தின் வேலை என்பது
[1] எல்லைகளை எதிரி நாடுகளிடம் இருந்து பாதுகாப்பது
[2] இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போதும் பொது மக்களை காப்பது
[3] உள் நாட்டு தீவிரவாதிகளிடம் இருந்து சொந்த மக்களை காப்பது
என்று வைத்துகொள்வோம். முதல் இரண்டு வேலைகளை முறையாக செய்வதால் மட்டுமே அது மக்களின் தொழனாகமுடியாது. இந்திய இராணுவம் இந்திய அரசின் கர்பரேட்டுகளுக்கு ஆதரவான ஆணைக்கு இணங்கி தன் சொந்த மக்களை கொன்று குவிக்கும் போது அதன் முகம் கோரமுகமாக ,மக்கள் விரோத முகாமாக மாறுகிறதே ! அப்படி பட்ட இராணுவத்தை கற்றது போன்றவர்கள் ஆதரிக்கும் போது , அரசு ஆணைக்கு இணங்க[தண்டகாருண்யாவில் நாட்டின் பிற பகுதிகளில்]இராணுவத்தால் மீறபடும் போது , சிவில் சமுகத்தின் கடமையான மனித உரிமைளுக்கு ஆதரவான குரல் வரவேண்டும் அல்லவா ? ஆனால் தனாடகருன்யா கொடுரங்களை இந்திய அரசு ஆணையுடன் நிறைவேற்றும் இந்திய இராணுவத்துக்கு எதிராக கற்றதுவிடம் இருந்து குரல் வரவில்லையே ! ஏன் ? இங்கிலாந்து ,பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் அதன் சிவில்சமுகம் அவர்களின் இராணுவம் ஈராக் மீது போர்தொடுத்த போது பெருத்த எதிர்ப்பு குரல் கொடுத்ததே ! இவை எல்லாம் கற்றதுவிற்கு மறந்து போனது என் ? பெருந்திறல் மக்கள் [சிவில் சமுகம் ]குரல் கொடுத்தால் தான் அரசும் ,அதிகாரவர்க்கமும் அதன் அடியாள் படையான இராணுவமும் கொங்சமாவது தளர்ந்து கொடுக்கும் ,மனித உரிமைகளை மதிக்கும் என்கின்ற போது இந்திய அரசுக்கு எதிராகவும் ,அதன் கொலைகார இராணுவத்துக்கு எதிராகவும் கண்டன குரல் இதுவரையில் கற்றதுவிடம் இருந்து வரவில்லையே ஏன் ? ஒருவேலை கற்றது இந்திய அடியாள் படையான இராணுவ சமுகத்தை சேர்ந்தவரோ ?
கற்றது கையளவு,
இந்திய இராணுவத்துக்கு இந்திய அரசு இட்ட ஆணை மகா *குற்றமுடையது என்னும் போது , அதற்கு கட்டுபடவேண்டிய தேவை இந்திய இராணுவத்துக்கு இல்லை. தம் சொந்த நாட்டு மக்களையே தண்டகாருனியாவில் இருந்து அப்புறபடுத்த சொல்லும் இந்திய அரசின் ஆணைக்கு ஏன் இந்திய இராணுவம் கட்டுபடவேண்டும் ? அரசின் பாசிச அடக்கு முறையை வன்முறை கொண்டு அமுல் படுத்தும் இந்திய இராணுவம் எல்லையை காக்கும் எல்லை சாமியா அல்லது மக்களை கொல்லும் அடியாள் படையா ?
உலகில் இது போன்ற கொடுரமான அடக்கு முறையை அரசுகள் இராணுவத்தின் மூலம் செயல்படுத்த விரும்பும் போது தன் சொந்த மக்கள் மீது வன்முறையை செலுத்தமாட்டேன் என்று கூறிய இராணுவத்தின் வரலாறு உங்களுக்கு தெரியவில்லை என்று நினைகின்றேன்.கூறுகிறேன் கேளுங்கள் :
USSR ல் கோர்பசேவ் பதவி இழந்த போது 4 பேர் கொண்ட கூட்டணி ஆட்சியை கைபற்ற முனைந்தது.எல்சின் அத்தகைய நிகழ்வுகளுக்கு எதிராக ரஷ்ய பிரதமர் என்ற முறையில் மக்களை அணிதிரட்டி போராடிக்கொண்டு இருந்தார். ஆட்சியை கைபற்றிய 4 பேர் கொண்ட கூட்டணி எல்சின் போராட்டத்தை ஒடுக்க USSR இராணுவத்தின் உதவியை நாடியது. ஆனால் ரஷ்ய மக்களுக்கு எதிராக தன் துப்பாகிகளை நீட்ட USSR இராணுவ மறுத்துவிட்டது.
//நீங்கள் எய்தவனை விட்டு விட்டு அம்பை மட்டும் குறை சொல்கிறீர்கள்.
இராணுவ வீரர்களுக்கு அவர்களது மேலிடம் என்ன கட்டளை இட்டாலும் அவர்கள் செய்து முடிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு நிர்பந்திக்கப்பட்ட விதி. விதியை மீறி, மேலிடத்தின் கட்டளையை மீறி வீரர்கள் செயல்பட முடியாது. //
அதே ரசிய அரசு அவர்களது இராணுவத்தை கிரிமியாவிற்கு அனுப்பியதை அதே ரசிய இராணுவம் மறுத்ததா? உலகெங்கும் உள்ள இராணுவ அமைப்புகள் இப்படித்தான். அது சீனாவாக இருந்தாலும் சரி, ரசியாவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி. இராணுவ விதிகளில் முதலாவது வருவது மேலிடம் கூறும் கட்டளைகளை மறுபேச்சு பேசாமல் ஏற்று நடப்பது. இதில் இந்திய இராணுவம் மட்டும் விதிவிலக்கல்ல. உலகில் எல்லா இராணுவ அமைப்புகளிலும் இதே நிலை தான்.
நீங்கள் சொல்வது படி பார்த்தால் உலகில் உள்ள அத்தனை நாடுகளும் அவர்களது இராணுவ படைகளை அடியோடு ஒழித்து விட வேண்டும். இது எப்போது சாத்தியம்? உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இனி ஒருவருக்கு ஒருவர் போரிட போவதில்லை என்றும் எல்லைகள் இல்லாத உலகம் ஒன்று உருவாக வேண்டும். அது நிச்சயம் நடைமுறையில் சாத்தியம் அல்ல (குறைந்தது ஒரு 5௦௦ வருடங்களுக்கு).
______________________
இராணுவம் செய்யும் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டுகிறீர்கள். ஆனால் அவர்கள் உங்களுக்காக எல்லையில் வெயிலிலும், மழையிலும், உறைபனியிலும், மலைகளிலும் மக்களாகிய உங்களை எதிரி நாட்டினரிடம் இருந்து பாதுகாப்பதற்காக மனைவி, குழந்தைகளை பிரிந்து நிற்கும் அவர்களும் மனிதர்கள் தானே. நீங்கள் ஒட்டுமொத்த இராணுவத்தை குறை கூறும்போது அதில் உள்ள நல்லவர்களையும், உங்களுக்காக, உங்கள் பாதுகாப்புக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களையும் சேர்த்து தான் நீங்கள் நா கூசாமல் திண்ணிமடம் என்கிறீர்கள்.
உங்கள் பாதுகாப்பிற்காக அவர்கள் ஏன் ஐயா உயிர் தியாகம் செய்ய வேண்டும்?
அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொண்டு நீங்கள் கணினியில் எளிதாக தட்டச்சு செய்து விடுகிறீர்கள். ஆனால் எல்லையில், எப்போது உயிர் போகும் என்பது தெரியாமல் உயிரை பணயம் வைத்து நிற்பவர்களை நீங்கள் திண்ணிமடம் என்று கூறுகிறீர்கள்.
எல்லா குழுக்களிலும், எல்லா அமைப்புகளிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஒரேயடியாக இந்திய இராணுவம் முழுதும் திண்ணிமடம் என்று கூறுவதன் மூலம் நீங்கள் உங்களுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களையும் சேர்த்தே அவமானப்படுத்துகிறீர்கள்.
நீங்கள் ஒரு ஆசிரியர். ஒரு மாணவன் உங்கள் வகுப்பில் தவறு செய்தால், ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் சேர்த்து தண்டனை கொடுப்பீர்களா, சொல்லுங்கள்?
ஒட்டுமொத்தமாக திண்ணிமடம் சொல்வது தவறு. உங்களை எல்லாம் பாகிஸ்தான் எல்லைக்கு காவல் காக்க அனுப்ப வேண்டும். மைனஸ் பதினைந்து, மைனஸ் இருபது டிகிரி குளிரில் ரேஷன் செய்து தரப்பட்ட குறைந்த அளவு உணவு, தண்ணீரை வைத்து கொண்டு மாதக்கணக்கில், இருக்க முடியுமா உங்களால்? உழைப்புக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லும் சோஷலிச வாதியான நீங்களே, உங்களுக்காக எல்லையில் காவல் காக்கும் வீரர்களை திண்ணிமடம் என்று சொலல்லாமா? அப்படி மூன்று வேளை உணவுக்காக அவர்கள் எல்லையில் நிற்கிறார்கள் என்று சொல்வீர்களானால் உங்களுக்கு மூன்று வேலை உணவிட்டால் நீங்கள் எல்லைக்கு போய் நிற்க தயாரா?
தனிப்பட்ட இராணுவ வீரர்களின் அத்துமீறல்களையோ அல்லது அரசின் செயல்பாட்டையோ நான் ஆதரிக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்த இராணுவத்தினரையும் நீங்கள் திண்ணிமடம் என்று கருதுவது தவறு.
மார்சிய லெனிய ஆசான்கள் என்ன சொல்கின்றார்கள் என்றால் வர்க்க எதிரிக்கள் எந்த ஆய்தத்தை எடுக்கின்றார்களோ அதே ஆயுதத்தை எடுத்து தான் நாமும் போராடனும் என்று சொல்கின்றார்கள்.வர்க்க எதிரிக்களின் தாக்குதல் பிரசார வடிவில் இருந்தால் நாமும் பிரசார வடிவில் தான் எதிர்கொள்ளணும்.வர்க்க எதிரிக்களின் தாக்குதல் ஆயத வடிவில் இருந்தால் என்ன செய்வது கற்றது ? எப்படி எதிர்கொள்வது ?
அது சரி எல்லையை காக்கவேண்டிய ரானுவத்துக்கு தண்டகாருன்யாவில் என்ன வேலை கற்றது ?
உப்புமா,
உங்கள் குறிக்கோள் என்பது பத்து இருபது பேரை கொல்லுவதா அல்லது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டுமா? கொல்வது மட்டும் தான் குறிக்கோள் என்றால் தாராளமாக ஆயுதத்தை பயன்படுத்தங்கள். தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு மக்களை சந்தியுங்கள். அவர்களிடம் பிரச்சினை என்ன என்று விளக்கி, அவர்களின் பேராதரவை பெறுங்கள். மக்களின் பேராதரவு கிடைக்குமானால் அரசு மக்களின் எழுச்சிக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
உங்கள் இரண்டாவது கேள்விக்கு ஷங்கருக்கு அளித்த பின்னோட்டம் 8.2.1.3.1 ஐ காணுங்கள்.
பத்து ,இருபது பேரை கொலை செய்வதிலேயே முனைப்பாக இருக்கும் கற்றது , நான் கேட்ட கேள்வி என்ன ? அரசாங்கம் மக்களை கொல்ல ஆயுதத்தை கையில் எடுக்கும் போது மக்கள் நிராயுத பாணியாக நின்று கொண்டுஜாலியான் வாலபாக் போன்று வீழ்ந்து சாவனுமா அல்லது கிடைத்த கற்களையாவது கொண்டு தக்கணுமா ? எது சரி ? வழக்கமான temple குழப்ப பதிலை கூறமால் தீர்க்கமான பதிலை கூறவும்
உப்புமா,
காவலர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது, போலீஸ் நிலையத்தை சூரையாடி அங்கிருந்த ஆயுதங்களை எல்லாம் கொள்ளையடித்து சென்றது காவலர்களை கொன்றது ஆகிய செயல்களை செய்தவர்கள் எல்லாம் அகிம்சை வாதிகள் என்று எப்படி கருத்தில் கொள்ள முடியும். அத்தகைய செயல்களை செய்தவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா?
இந்த பிரச்சினையில் தவறு இருபக்கமும் உள்ளது. அரசு, நக்சலைட்டுகள், இருவருமே தவறு செய்துள்ளார்கள். (இதில் அப்பாவி மக்கள் தவறிழைத்ததாக நான் சொன்னதாக தவறாக குறுக்கு சால் ஒட்டாதீர்கள், நீங்கள் மற்றும் நண்பர் தமிழ் எப்போதும் நான் சொல்லாததை சொன்னதாக கற்பனையாக கருதி அவதூறாக பேசுகிறீர்கள்).
ஆயுதம் ஏந்தி போராடியதால் அரசுக்கு நக்சலைட்டுகளை சட்டப்படி கட்டம் கட்டுவது மிக எளிதாக போனது. மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஆயுதம் ஏந்திய போராட்டம் ஒரு தீர்வே அல்ல. அது பிரச்சினையை மேலும் மேலும் தீவிரமாக்கி விடும். பழைய வரலாறுகள் எல்லாவற்றிலும் இதற்கு ஆதாரங்கள் இருந்தும் தீவிரவாதத்தை கையிலெடுப்பது முட்டாள்தனம்.
பிரச்சினை இந்திய இராணுவத்துக்கும் , நக்சலைட்டுகளுக்கும் இடையில் என்றால் அப்பாவி தண்டகாருண்யா மக்கள் ஏன் பாதிக்கபடவேண்டும். அவர்கள் எதற்காக அவர்களின் வாழ்விடங்களில் இருந்து இந்திய இராணுவத்தால் அப்புறபடுத்த படவேண்டும். எதற்காக மக்களை அப்புறபடுத்தி அதன் பின்பு நவீன சாலை வசதிகள் தண்டகாருண்யா காடுகளில் கட்டமைக்க படவேண்டும். யாருக்கான வசதிகள் இவை ? மக்களை தண்டகாருண்யா காடுகளில் இருந்து அகற்றிய பின்பும் அமைக்க படும் சாலைகள் யாருக்கானது கற்றது ? என்ன உள்நோக்கம் அல்லது வெளிப்டையான நோக்கம் இதில் உள்ளது ?
கற்றது கையளவு,
கார்பரேட் முதலைகளின் கொள்ளைக்கு ஆதரவான இந்திய ஆளும் அதிகார வர்கத்தின் பேச்சையும் ,ஆணையையும் கேட்டு தானே ,அதற்கு பணித்து தானே இந்திய அரசு படைகள் தண்டகாருண்யா மக்கள் மீது போர் தொடுத்து உள்ளது ? அப்படி இருக்கும் இருக்கும் போது இந்திய அரசு படைகளும் குற்றவாளிகள் தானே ? அப்புறம் ஏன் கற்றது கையளவு போலியாக இந்திய அரசு படைகளுக்கு ஆதரவாக பேசிக்கொண்டு உள்ளார் ?
//அட்டூழியம் செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. அதே சமயம் நமக்காக உயிரை துச்சமென மதித்து, உயிரை மறித்து தியாகம் செய்து காவல் காக்கும் எல்லைச்சாமிகளை தூற்றாதீர்கள். நான் சொல்லும் விளக்கத்தை முழுக்க படிக்காமல் அரைகுறையாக படித்து விட்டு பின்னூட்டம் எழுதினால் உப்புமா இப்படி தான் வெந்தும் வேகாமலும் இருக்கும்.//
கற்றது கையளவு,
தாங்களே சொல்வது போல தீவிரவாததிற்கு இந்த அரசு தான் காரணம் என்றாகிறது. அதாவது இந்த மக்களுக்கு எந்த வசதி வாய்ப்பும் செய்து கொடுக்காததால் தான் தீவிரவாதம் வருகிறது என்று. தன சொந்த மக்களுக்கு வசதி வாய்ப்பு என்று எதையும் கொடுக்காமல் கார்பொரெட்டு நிறுவனங்களுக்காக தனது சொந்த மக்கள் மீதே போர் தொடுக்கிறதே இது எந்த வகை நீதி.
அப்புறம் அரசியல்வாதிகளே குழப்பத்திக்கு காரணம் என்று கூறுகிறீர்கள், ஒரு வாதத்திற்கு அதை சரியென்றே வைத்து கொண்டாலும், அவர்களின் ஆணையின் பேரில் தானே இராணுவம் அம்மக்களை படுகொலை செய்கிறது.
சொந்த புத்தி கூட இல்லாமல் இந்த அரசின் ஆணையின் பேரில் சொந்த மக்களை கொள்ளும் இந்த இராணுவத்தை ஏவல் நாய் என்று கூறாமல் நாட்டை காக்கும் எல்லை சாமி என்றா கூறுவார்கள்.
அன்னியர்கள் ஆண்டபோது அவர்களின் அடக்குமுறை அரசியலுக்கு ஆயுதப்படைகள் உருவாக்கப்பட்டன! இரண்டாம் உலகபோர் வரை, உள்னாட்டு புரட்சிபடைகளை ஒடுக்கவே அவை பயன்பட்டன! உலகபோருக்கு பின், மக்கள் புரட்சி ஏற்படாமல் தடுக்கவே, ஏகாதிபத்திய சக்திகளும். அவற்றின் ஏவல் சக்திகளும், ‘சுதந்திர’ கூப்பாட்டை தாஙகளும் கூவி (சோஸியலிச சர்க்கரையும் தடவி) சுரண்டல்காரர்களின் சுதந்திரத்தை கைமாற்றாக பெற்றதுடன், இது மக்களின் சுதந்திரம் என பொய்ப்பிரச்சாரமும் செய்து வருகின்றனர்! இந்தியாவின் எந்தப்பகுதியிலும் உள்ளுர் ஆட்சியாளர்களால் மக்கள்நல அரசுகள் ஏற்படுவதில்லை! காட்டிகொடுத்த, மக்கள் விரொத சக்திகளுடன் சமரசம் செய்துகொண்ட கங்காணிகளின் அடாவடி அரசியலேநடைபெறுகிறது!நீதி மன்றங்களோ உள்ளூர் கட்டை பன்சாயத்தை மின்சி சந்தி சிரிக்கிறது! இதில் ராணுவம் மட்டும் தனி கல்சரில் எப்படி இயங்க முடியும்?
அப்பாவி மக்களின் மீது இரக்கமற்று தாக்குதல் நடத்தும் இந்திய இராணுவத்தின் உண்மையான முகத்தை அறிவிக்கும் பல சான்றுகளில் ஒன்றாக 08 செப்டம்பர் 2009 அன்று கீற்று தளத்தில் வெளியான இந்த கட்டுரையிலிருந்து சில வரிகள்.
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=416:2009-09-08-16-55-35&catid=901:2009-08-16-09-44-24&Itemid=60
தமிழக மக்கள் மத்தியில் ஈழ மக்களின் உயிர்களை காக்க ஒட்டு மொத்தமான சனநாயகக் குரல்கள் எழுப்பப்பட்டன. இதன் தாக்கத்தால் தான் தமிழக அரசு தனது சட்டமன்றத்தில் இரண்டுமுறை இந்திய அரசு இலங்கைக்கு ஆயுத உதவிகளை செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியது. இந்திய அரசோ தொடர்ந்து இராணுவ தொழில்நுட்ப உதவிகளை இலங்கை அரசுக்கு செய்து வந்தது. ஈரோடு, கோவை வழியாக இராணுவ டாங்கிகள் கொச்சிக்கு அனுப்பப்பட்டு கடல் வழியாக இலங்கைக்குச் செல்வதாக புகைப்படத்துடன் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதனை தமிழக அரசோ, மத்திய அரசோ மறுக்கவில்லை. மேலும், இன்றுவரை இந்திய அரசு இராணுவ உதவி செய்ததை இலங்கை நன்றியுடன் நினைவு கூர்கின்றது. நமது நாட்டு இராணுவ அமைச்சரும் இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தக் கால கட்டத்தில் தான் 02.05.2009-ம் தேதி சேலம், கோவை வழியாக இந்திய இராணுவ வாகனங்கள் கொச்சிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் கிடைத்தபோது, தன்னெழுச்சியாக இந்திய அரசின் தமிழர் விரோத மனப்பான்மையினை எதிர்க்கும் ஒரு அடையாள சனநாயகப்போராட்டமாக – அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் செய்யவே கோவை நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே குடும்பம், குடும்பமாக பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு சிலர் இராணுவ வாகனத்திலிருந்த சில பெட்டிகளை சாலையில் தூக்கி வீசி எறிந்தனர். வாகன முகப்புக் கண்ணாடி மற்றும் விளக்கு உடைக்கப்பட்டது. ஒரு இராணுவ வாகனத்திலிருந்த கட்டில் மற்றும் மரச்சாமான் எரிக்கப்பட்டது. இது உடனடியாக அங்கிருந்த அமைப்பாளர்களான கு.ராமகிருஷ்ணன் போன்றோர்களால் தடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்குப் பின் கூட்டம் கலைந்து போய்விட்டது.
ஆனால், அதன் பின்பு, வெகுநேரம் கழித்து இராணுவ வீரர்கள் ஒரு வாகனத்தில் இரும்பு பைப்களுடன் வந்தார்கள். சம்பவ இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களைத் தாக்கினர். ஒரு பத்திரிக்கையாளருக்கு கை எலும்பு முறிந்து போனது. காவல்துறை தலையிட்டு பொது மக்களின் மீதான தாக்குதலைத் தடுத்தது.
அடி வாங்கிய மக்களில் ஒருவராக கற்றதுவும் இருந்து இருந்தால் இந்திய இராணுவத்தை பார்த்து எல்லை சாமி என்று கூறியிருக்க மாட்டாரு . கொலை சாமி என்று கூறி இருப்பாரு. கற்றது கையளவு ,இந்தியஅமைதி எதற்காக ஈழம் சென்று எம்மக்களை கொன்று குவித்தது ? தமிழச்சிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியது ? அப்படிபட்ட இந்திய இராணுவத்தை நீர் எல்லை சாமி என்று கூறுவது வெட்கமாக இல்லை ,உமக்கு ?
என்ன கற்றது ராஜதந்திரத்துடன் பேசுவதாக நினைப்பா? “சரியான கல்வி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து விட்டு பின் அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்க வேண்டும்.” என்று நீங்கள் கூறுவது இங்கு யாருக்கும் புரியாமல் இல்லை . அடுத்த கட்டம் என்பது ,தண்டகாருன்யாவின் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் ,கல்வி என்ற பெயரில் எலும்பு துண்டுகளை தூக்கி எறிந்த பின் அங்கு உள்ள பல லச்சம் கோடி மதிப்பு உள்ள கனிம வளங்களை பெரு முதலாளிகள் ,பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிக்கவைப்பது தானே உங்கள் எண்ணம் ? எதற்க்கு இந்த களவாணித்தனம் கற்றது ? பல லச்சம் கோடி மதிப்பு உள்ள கனிம வளங்கள் இந்தியாவின் சொத்து என்கின்றபோது ,ஏன் இந்த திருட்டு புத்தி ? ஆமாம் உங்கள் பாணியிலேயே கேட்பது என்றால் எலையை காக்கவேண்டிய எல்லைசாமி இந்திய இராணுவத்துக்கு தண்டகாருன்யாவில் என்ன வேலை?
//கல்வி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து விட்டு பின் அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்க வேண்டும்.//
தமிழ் அவர்களே,
நான் மாதவ் அவர்கள் கூறிய கருத்துக்கு கூறிய பதிலை நீங்கள் அந்த கேள்வியோடு ஒட்டி பார்த்திருந்தால் உங்களுக்கு புரிந்திருக்கும்.
மாதவ் அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பினர்:
//உனக்கு ஒரு பொருள் வேண்டுமாயின் அதற்கான மிகச்சரியான விலையை கொடுத்தால் மாட்டேன் என்று யாரேனும் கூறுவார்களா?
இங்கே விலை என்ன?
வனத்தில் இருப்பவர்களுக்கு சரியான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது தான்.
ஆனால் இந்த குறுக்கு புத்தி அரசாங்கம் எல்லோரையம் கொன்றுவிட்டால் விலை கேட்பார் இல்லாத நிலை உருவாகி விடும் என தப்பு கணக்கு போடுகிறது.
//
இதற்கு நான் அளித்த பதில்:
// மாதவ் கூறியது போல வனத்தில் இருப்பவர்களுக்கு சரியான கல்வி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து விட்டு பின் அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்க வேண்டும். அவர்களும் இந்நாட்டு குடிமகன்கள் தான். நமக்கு கிடைக்கும் அத்தனை வசதிகளும் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.//
இதில் நான் மாதவ் அவர்கள் கூறிய கருத்துக்கு அளித்த பதிலை முழவதுமாக படித்திருந்தால் உங்களுக்கு புரிந்திருக்கும். ஆனால் அரை குறையாக படித்து விட்டு மாதவ் அவர்களும் நானும் செய்த உரையாடலை வேறு விதமாக திசை திருப்பியது நீங்கள் தான்.
என்ன விதமான திசை திருப்பல் என்று உழைக்கும் வர்க எதிரியான நீர் தான் விளக்க வேண்டும்.“சரியான கல்வி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து விட்டு பின் அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்க வேண்டும்.” என்று கூறியது நீர் தானே ? ஆமாம் இந்த அரசாங்கம் அடுத்த கட்டமாக கனிம வளங்களை பெருமுத்லாளிகளுக்கு,பன்னாட்டு நிறுவனங்களுக்கு ,கார்பரேட்களுக்கு கூறுபோட்டு விற்பனை செய்கின்றது. அது தானே நீர் கூற விழையும் அடுத்த கட்டம் ?
ஜம்மு காஷ்மீரில் மட்டும் இது வரை இந்திய நாசகார அரசின் அடியாள் படையான இந்திய இராணுவத்தால் 80 ஆயிரம் மக்கள், பெண்கள் ,குழந்தகள் ,சிறுவர்கள் , இளைஞர்கள் என்று கொன்று குவிக்க பட்டு உள்ளார்கள். என்ன அவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்த தீவிரவாதிகளா ? எல்லை காக்க வேண்டிய இந்திய இராணுவ எல்லை சாமிகள் காஷ்மீரி என்ற தேசிய இன மக்களை, நமது சொந்த மக்களையே கொடுரமாக கொன்று குவிப்பதை பார்த்துக்கொண்டே எப்படீ அவர்களுக்கு ஆராதனை செய்கின்றிர்கள் கற்றது கையளவு ?
கற்றது கையளவு கன்னாபூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு உள்ளார்.தண்டகாருண்யா மக்கள் மீது தாக்குதலை தொடுத்து அங்கிருந்து வெளியேற இந்திய இராணுவத்துக்கு ஆணையிடுகின்றது இந்திய அரசு ! அந்த ஆனையை நிறைவேற்றும் இந்திய இராணுவம் அவர்களை வன்முறை கொண்டு வெளியேற்றுகின்றது. மக்கள் உள்நாட்டிலேயே அகதியாகபட்டு இராணுவ ,போலிஸ் கேம்ப்புகளில் அடைக்க படுகின்றார்கள்.அதன் பின்பு தண்டகாருண்யா காடுகளில் டாடா போன்ற பெருநிறுவனங்கள் கனிமங்களை வெட்டியெடுக்க சாலை வசதிகள் செய்யப்டுகிறன.
இதில் குற்றவாளிகள் யார் என்றால் இந்திய அரசு ,இந்திய இராணுவம் ,கார்புறேடுகள் என்னும் போது இந்திய இராணுவத்தை மட்டும் தலையில் வைத்து துதி பாடுவது கற்றதுவுக்கு வேண்டாதா வேலை.
————–The End————–
ஆதவன்,
என் பதிலை முழுவதுமாக படித்து விட்டுமா இன்னும் உங்களுக்கு சந்தேகம்.
அரசாக இருந்தாலும், இராணுவத்தினராக இருந்தாலும், காற்பறேட்டுகலாக இருந்தாலும், நக்சலைட்டுகளாக இருந்தாலும், யாராக இருந்தாலும், குற்றம் இழைத்தவர்களுக்கு நான் ஆதரவு அளிக்கவில்லை. குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கூடாது என்று வாதிடவில்லை. உங்கள் போராட்டம் அறவழியில் இருக்க வேண்டும், ஆயுத வழியில் வேண்டாம் என்று தான் கூறுகிறேன். அரைகுறையாக படித்து விட்டு புரிந்து கொள்ளாமல், பதிலை முழுவதுமாக படித்து விட்டு பின்னூட்டமிட்டால் நன்றாக இருக்கும்.
அட போங்க பாஸ் கற்றது கையளவு ஒன்னுமே தெரியாதது போன்று நடிகின்றிர்கள் !
இந்திய அரசாங்கம் டாடா ,ஸ்ட்ர்லைட் போன்ற உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் ,வெளிநாட்டை சேர்ந்த பன்னாட்டு முதலாளியான வேதாந்தா போன்றவர்களுக்கும் கனிம வளங்களை தாரைவார்பதற்காக அங்கு உள்ள மலைவாழ் மக்களை (தண்டகருன்யா மாவட்டம் மட்டும் அல்ல ஒடிசா மாநிலத்திலும் தான் ) வெளியேற்ற திட்டம் போட்டது. அதற்காக பசுமை வேட்டை என்ற பெயரில் அந்த பழங்குடி மக்கள் மீது போர் தொடுக்க திட்டம் போட்டது மன்மோகன் ,சோனியா ,மற்றும் சிதம்பரம் உள்ளடங்கிய அதிகாரவர்க்க ,ஆளும் வர்க கும்பல். அந்த திட்டத்தை நிறைவேற்ற அரசு துணை படைகள் 5 இலச்சம் அளவில் முற்றுகையை அம் மக்கள் மீது நிகழ்த்தியது. மலைவாழ் கிராமம் ,கிராமமாக அந்த மக்கள் வலுகட்டாயமாக வெளியேற்ற பட்டு அரசு படைகளின் கண்காணிப்பில் சமவெளி பகுதிகளில் வைக்க பட்டனர்.
இந்த மணித உரிமை மீறல்களை நடத்தியதில் பசுமை வேட்டை போர் திட்டம் , கொள்கை வகுத்த அதிகாரவர்க்கமும் ,அதனை நடைமுறை படுத்திய இந்திய இராணுவமும் தான் காரணம் என்னும் போது , ஒட்டு மொத்த இராணுவமே குற்றவாளி தானே ! நீங்கள் கூறுவது போன்று ஓரு சில இராணுவ வீரர்கள் மட்டும் குற்றம் இழைத்து உள்ளார்கள் என்ற கருத்து அறிவற்று நிற்கின்றது. ஒட்டு மொத்த இராணுவமே குற்றவாளி அல்லவா ? அப்படி இருக்கும் போது அந்த கொலை கார இராணுவத்தை நீங்கள் ஏன் ஆதரிகின்றிர்கள் கற்றது கையளவு ?
கற்றது கையளவு,
உள்நாட்டில் கனிம வளங்களை கொள்ளையடிக்கவும் , அங்கு வாழும் பழங்குடி மக்களை மிரட்டி அவர்கள் வாழ்விடங்களில் இருந்து வன்முறை கொண்டு வெளியேற்றவும் ,அவர்களை அழிக்கவும் என்று 5 இலச்சம் படைவிரர்களை கொண்ட மாபெரும் தீனி படையை முந்தைய காங்கிரஸ் அரசு [உள்துறை அமைச்சர் சிதம்பரம் ] ஓரு டிரிலியன் ரூபாய் செலவு செய்து உருவாகியுள்ளது. இவர்கள்,அந்த படை கனிம வளங்கள் நிரப்பிய 9 மாநிலங்களில் [சத்தீஸ்கர் ,ஓடிஸா உட்பட] உள்ளகனிம வளம் உள்ள மலை பகுதிகளுக்கு அனுப்பி [deployment] வைக்க பட்டு உள்ளது . இப்படி பட்ட இந்திய அரசின் “ஒட்டுமொத்த” கொலைகார தீனி படையை தான் இன்னும் நீங்கள் ஆதரித்து கொண்டு உள்ளீர்களா கற்றது ? அந்த ஒட்டுமொத்த படையின் நோக்கம் கனிம வளம் நிரம்பிய இந்திய மலை பகுதிகளில் இருந்து அனைத்து பூர்வ குடி மக்களையும் வெளியேற்றி அவர்களை உள்நாட்டிலேயே அகதிகளாக மாற்றுவது தான் என்னும் போது ஒட்டு மொத்த இராணுவமும் தானே குற்றவாளி ? அவர்களை எப்படி நீங்கள் இன்னும் ஆதரித்து கொண்டு இருகின்றிர்கள் கற்றது ?
கற்றது கையளவு,
[I am requesting the reviews for this feedback from my Communist ideological friends like PK, Thendrel and Arul ,Red , manudan and so on]
நான் குறிப்பிடும் USSR இராணுவம் என்பது சோவியத் கம்யுனிஸ்டு செம்படைகளை படைகளை பற்றி. அது தன் சோவியத் குடியரசுகள் கம்யுனிச கட்டமைப்பில் இருந்து விடுபட்டு வெளியேறி செல்லும் நிலையில் கூட அது மக்கள் போராட்டத்தை கட்டு படுத்த எந்த விதமான வன்முறை அல்லது அடக்கு முறையை மக்கள் மீது செலுத்தவில்லை என்ற உண்மையை காண தவறுகின்றிர்கள். அதற்கு காரணம் என்ன ? ஏன் அது அதிகாரத்தை கட்டுபடுத்திய 4 பேர் கொண்ட கூட்டணியின் எல்சின் தலைமையிலான போராடும்மக்களை அடக்க சொன்ன ஆணையை நிறைவேற்றவில்லை என்பதை உங்களால் சிந்திக்க முடிந்ததா ? ஏன் என்றால் அது கம்யுனிச செம்படை. மக்களோடு மக்களாக வாழ்ந்த படைவீரர்கள் அவர்கள். சோவியத் படை தன் உழைக்கும் வர்கத்தின் அதிகாரத்தை முதலாளித்துவம் ஜனநாயக முறையில் [கம்யுனிச எதிர்பாளர் எல்சின் ரஷ்யாவின் பிரதமாராக தேர்வு செய்யபடுகிறார் , அதன் மூலம் ஒட்டுமொத்த சோவித் குடியரசு நாடுகளின் தலைவர் கோர்பசவ் அதிகாரத்தை இழகின்ரார்] கைபற்றிய பின்பு அது மக்களின் பெரும்பான்மை குரலுக்கு செவி மடுத்து எவ்வித வன்முறை அடக்கு முறையிலும் இறங்காதது உலகத்துக்கே ஒரு உன்னதமான முன் உதாரனம். செம்படை வீரர்கள் இந்தகைய ஜனநாயக மாண்புகளை எங்கிருந்து கற்றுக்கொண்டார்கள். அது எம் ஆசான் ,தோழன் லெனின் அவர்கள் அவர் பாட்டாளி மக்களுக்கு சொல்லிகொடுத்த ஜனநாயக பண்பு. உலகத்தில் எந்த நாட்டிலாவது இந்தகைய அதிசயம் நடந்தது உண்டா ? கம்யுனிசம் என்றால் அது சர்வதிகாரம் என்று மூச்சுக்கு 3000 முறை முழக்கம் இட்டு அவதூறு செய்யும் கற்றது போன்றவர்கள் கண்டு உணரவேண்டிய வரலாறு இது.
அது மட்டும் அன்று ஜார் மன்னனின் அதிகாரத்துக்கு கீழ் இருந்த நாடுகளை ரஷ்யா புரட்சிக்கு பின் லெனின் அவர்கள் சுதந்திர நாடுகளாக விடுவித்து அறிவித்தார். ஆனாலும் அந்த நாடுகள் லெனின் தலைமையிலான சோவியத் கூட்டமைப்பின் கீழ் ஒன்று பட்டு இருக்க விரும்பி USSR [Union of Soviet Socialist Republics] என்ற கூட்டமைப்பை உருவாகினார்கள். USSRல் இருந்த ஒவொரு குடியரசுக்கும் ஒரு தனி பிரதமர் இருந்ததை நாம் உணரவேண்டும். ஒட்டுமொத்த USSR க்கும் ஒரு தலைவர் என்ற முறையில் பல்வேறு குடியரசுகளை சேர்ந்தவர்களும் பதவி ஏற்றார்கள் [லெனின் ருசிய பிரஜை , ஸ்டாலின் ஜார்ஜியா பிரஜை ]
USSR ல் கம்யுனிசம் வீழ்த்தப்ட்ட 1990களில் அவர்கள் ஒருவருடன் ஒருவர் அடித்துகொள்ளவில்லை. லெனின் வடிவமைத்து இருந்த சட்டத்தின் ஒரு பிரிவான பிரிந்து போகும் தன் உரிமையை காட்டி அவர்கள் தனிதனி நாடுகளாக பிரிந்து போனார்கள். 1990களில் கம்யுனிசம் எல்சின் தலைமையிலான மக்கள் போராட்டத்தால் USSR வீழ்த்த பட்டபோது கூட நான் பெரிதும் கவலை கொள்ளவில்லை. ஏன் என்றால் அது ஸ்டாலினுக்கு பின் போலியான கம்யுனிச குடியரசுகளாக தான் இருந்து. போலியான கம்யுனிசத்தை ஏற்பதை விட அதனை அடித்து நொறுக்கி விட்டு அதன் மக்கள் முதலாளித்துவத்தை நோக்கி செல்கிறார்கள் என்றால் அது வரவேர்ருபுக்கு உரியதே. ஏன் என்றால் முதலாளித்துவம் மீண்டும் பாட்டாளி வர்க புரட்சிக்கு வழியமைத்து கொடுக்கும் அல்லவா ? இதில் இருந்து கற்றதுகள் அவதூரு செய்யும் கம்யுனிசம் என்றால் அது சர்வதிகாரம் என்ற பொய் முறியடிக்க படுகின்றது அல்லவா ?
இப்போது கிரிமியா பிரதேச பிரச்சனைக்கு வருவோம். USSR இருந்த வரை கிரிமியா ரஷ்ய குடியரசின் ஒரு பகுதியாக தான் இருந்தது. அதன் பெரும்பான்மை இஸ்லாமிய மக்கள் ரஷ்ய மக்களுடன் இணக்கமாகவே வாழ்ந்தார்கள். 1990களுக்கு பின் USSR சிதைந்த பின் ரஷ்யா என்ற ஒரு முதலாளித்துவ நாட்டின் ஒரு பிரதேசமாக கிரிமியா மாறியது. எண்ணை வளம் மிக்க கிரிமியாவுக்கு ரஷ்ய முதாளித்துவ அரசாங்கம் விடுதலை கொடுக்குமா ? ரஷ்ய முதாளித்துவ அரசாங்கத்தின் ஆணைக்கு இணங்க[எல்சின் மற்றும் புட்டின் ] ருஷ்ய முதாளித்துவ இராணுவம் கிரிமியா மக்கள் மீது போர் தொடுத்தது. பிரச்சனையும் இன்னும் தொடர்கின்றது.
இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த வர்கம் அதிகாரத்தில் உள்ளதோ அதன் பண்புகள் அதன் இராணுவத்திலும் பிரதிபலிக்கும்.
//அதே ரசிய அரசு அவர்களது இராணுவத்தை கிரிமியாவிற்கு அனுப்பியதை அதே ரசிய இராணுவம் மறுத்ததா? உலகெங்கும் உள்ள இராணுவ அமைப்புகள் இப்படித்தான். அது சீனாவாக இருந்தாலும் சரி, ரசியாவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி.//
தமிழ்,
இராணுவத்தில் உள்ள அத்தனை பெரும் அயோக்கியர்கள் என்று கூறுவீர்களா?
இராணுவத்தில் ஒருவர் கூட நல்லவர் இல்லை என்று கூறுவீர்களா?
உங்கள் குடும்பத்திலிருந்து, உங்கள் நண்பர்கள் வீட்டினில் இருந்து இராணுவத்திற்கு ஒருவரேனும் போய் இருப்பார்கள் அல்லவா. அவர்கள் அனைவருமே கொடூர புத்தி உடையவர்களா?
இதைத்தான் நான் கேட்கிறேன். ஒட்டுமொத்த இராணுவத்தையும் திண்ணிமடம் என்று கூறுவது தவறு தான்.
சோவியத் ரசியாவின் இராணுவத்தை குறித்து சொன்னீர்கள். அதே சோவியத் யூனியனின் இராணுவமும் இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தபட்டது. உலகில் அப்போது 7 கோடி மக்கள் உயிரிழந்தார்கள். அந்த 7 கோடி மக்களில் எத்தனை பேர் அப்பாவி மக்களாக இருந்திருப்பார்கள்? போர் என்று வந்தபோது அப்பாவி மக்கள் இறப்பார்கள் என்று கூறி ரசிய ராணுவப்படை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடாமல் நின்றார்களா?
உள்நாட்டு கொரில்லா போர் என்பது மிகவும் கடினமானது. மக்களோடு மக்களாக தீவிரவாதிகள் ஊடுருவிய பின் நக்சலைட்டு யார், பொதுமக்கள் யார் என்று வேறு ஒரு இடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட இராணுவத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களை பொறுத்தவரை அரசாங்கம் இட்ட கட்டளை அங்கு நக்சலைட்டுகள் இருக்கிறார்கள், நக்சலைட்டுகளை அழிக்கும் பொறுப்பு அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அதை தான் அவர்கள் செய்தார்கள்.
அதே சமயம், ஒரு போர் என்று வந்த பின் மனிதன் மிருகமாக மாறுகிறான்.அப்படி மாறிய சில மிருகங்கள் அப்பாவி மக்களை பாதித்தால் அந்த பொறுக்கிகளை சட்டப்படி தண்டிக்க வழி செய்ய வேண்டும்.
நீங்கள் போராடுவதை நான் தவறென்று சொல்லவில்லை. ஆயுதம் எடுத்து போராடாதீர்கள் என்று தான் சொல்கிறேன்.
லூசுதனமான உளறலின் உச்சகட்டம் இது. சோவியத் யூனியனின் இராணுவம் தம் நாட்டின் எல்லைகளை காக்க மட்டுமே முதாலாளித்துவம் தொடங்கி வைத்த இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டது.ஜெர்மனிய இராணுவம் அசுர தனத்துடன் USSR ன் 1/2 பங்கு நிலபரப்பை பிடித்து கொண்டார்கள்.ரஷயாவின் மேற்கு பகுதியில் இருந்த தலைநகரான மாஸ்கோவையும் அந்த நாட்டு மக்கள், சோவியத் யூனியனின் இராணுவம் கைவிட்டு கிழக்கு பகுதிகளுக்கு சென்றார்கள். .
உள் நுழைந்த ஜெர்மானிய இராணுவத்துக்கு உண்ண உணவு USSR ன் கோதுமை வயல்களில் இருந்து கிடைக்க வில்லை. ஏன் என்றால் அனைத்து கோதுமை வயல்களையும் USSR மக்கள் தீயிட்டு அழித்து விட்டு சென்ரறு விடார்கள். மேலும் மாஸ்கோ போன்ற பகுதிகளில் உள்நுழைந்த ஆக்கிரிமிப்பு ஜெர்மானிய இராணுவ வீரர்கள் கடும் குளிரில் செத்து அழிந்தார்கள்.
இத்தகைய நிலைகளில் லெனின் கிராண்டுக்கு சென்ற ஒட்டுமொத்த மாஸ்கோ பகுதி மக்களும் பிற USSR மக்களின் துணையுடன் இராணுவ கட்டமைப்புகளை உருவாகினார்கள். AK 47 என்ற அதிநவீன துப்பாக்கியை செம்ப்டைகளுக்காக வடிவமைத்து கொடுத்தான் எம் USSR நாட்டை சேர்ந்த பாட்டாளி.
நிலைமை தலைகீழாக மாறியது !இன்று மே 9-ம் தேதி, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த 70-வது ஆண்டு. பாசிசத்தை தோற்கடித்த சோவியத் யூனியன் பெர்லினில் உள்ள ஜெர்மன் நாடாளுமன்றத்தில் சோவியத் செங்கொடி ஏற்றப்பட்டது. 1945-ம் ஆண்டு மே 8-ம் தேதிதான் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள ஜெர்மன் நாடாளுமன்றத்தில் சோவியத் செங்கொடி ஏற்றப்பட்டது. நாஜிக்களின் பாசிச படைகள் இறுதித் தோல்வியை தழுவின.
இந்தப் போரில் 7 கோடி மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சோவியத் குடிமக்கள். சோவியத் யூனியனின் 1,710 நகரங்கள், 70,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள், 32,000-த்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள், 65,000 கிலோமீட்டர் நீளமான ரயில்வே பாதை ஜெர்மன் படைகளால் அழிக்கப்பட்டன. மனித வரலாற்றிலேயே எந்த ஒரு நாடும் எந்த ஒரு போரிலும் சந்தித்திராத இந்த பேரிழப்பின் பொருளாதார மதிப்பு 2,600 பில்லியன் ரூபிள்.
இந்த தற்காப்பு போரில் USSRன் செம்படை வீரர்கள் எத்தகைய மனித உரிமை மீறல்களை செய்தார்கள் என்று தரவுகளுடன் கூறுங்கள் பாப்போம். ஏன் இந்த வீண் அவதூரு கற்றது !
//சோவியத் ரசியாவின் இராணுவத்தை குறித்து சொன்னீர்கள். அதே சோவியத் யூனியனின் இராணுவமும் இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தபட்டது. உலகில் அப்போது 7 கோடி மக்கள் உயிரிழந்தார்கள். அந்த 7 கோடி மக்களில் எத்தனை பேர் அப்பாவி மக்களாக இருந்திருப்பார்கள்?//
What was USSR doing in Afghanistan ? Providing security to innocent people?
சரி தமிழ், காத்திருக்கிறேன். என் வாழ்நாள் முடியும் வரை தான் என்னால் காத்திருக்க முடியும். அதற்குள் புரட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள். காத்திருக்கிறேன்.
ஆதவன்,
நீங்கள் வேண்டுமென்றே என் கருத்தை திசை திருப்புகிறீர்கள்.
ஆயிரம் முறை சொல்கிறேன், குற்றம் செய்யும் இராணுவத்தினருக்காக நான் வக்காலத்து வாங்கவில்லை. அதே போல அரசாங்கத்துக்கும் இந்த விடயத்தில் நான் வக்காலத்து வாங்கவில்லை. ஒட்டுமொத்த இராணுவத்தினரையும் திண்ணிமடம் என்று அழைத்ததை தான் தவறு என்றேன். தமிழ் அவர்களுக்கு பின்னூட்டம் 17 இல் அளித்த பதில் உங்களுக்கும் பொருந்தும். தயவு செய்து அதனை முழுமையாக படியுங்கள். உங்களுக்கே விளங்கும்.
ஆதவனின் பின்னூட்டம் 2௦ க்கு அளித்த பதில் பின்னூட்டம் 17 இல் மாறி தட்டச்சு ஆகி விட்டது.
என்னமோ பின்னுட்டம் 17,மற்றும் 20 என்று நிலை குலைந்து பேசிக்கொண்டு இருகின்றிர்கள் நண்பர் கற்றது கையளவு.பின்னுடம் 17 எனக்கு நீங்கள் அளிப்பது ,பின்னுடம் 20 தமிழ் உடையது.சரி விடுங்கள் விசயத்துக்கு வருவோம்.
என்ன ஒரு கார்பரேட் முதலாளியின் மழுப்பல் தனம் உங்கள் பின்னுட்டங்களில் !வியக்கின்றேன். இது போன்று தான் பிரச்சனையுடன் வரும் உங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களை திசை திருப்புவிர்க்லா ? என் கேள்வி என்ன ?
தண்டகாருண்யாவில் இந்த மணித உரிமை மீறல்களை நடத்தியதில் பசுமை வேட்டை போர் திட்டம் வகுத்த அதிகாரவர்க்கமும் ,அதனை நடைமுறை படுத்திய இந்திய இராணுவமும் தான் காரணம் என்னும் போது , ஒட்டு மொத்த இராணுவமே குற்றவாளி தானே ????
பதில் அளிக்க முயற்சி செய்யுங்கள் கற்றது கையளவு !
கார்பரேட்டுகளுக்கு ஆதரவான இந்திய அரசின் பசுமை வேட்டை என்ற மக்களுக்கு எதிரான போர் திட்டமே குற்ற தன்மை உடையது என்னும் போது ,அந்த போரை நடைமுறை படுத்தி மக்களை இந்திய இராணுவம் கொன்று குவித்த போது அரசு மற்றும் இராணுவம் இரண்டுமே குற்றவாளிகள் தான் கற்றது. புரியாதது போன்று நடிக்காதிர்கள் கற்றது கையளவு .
கட்டுரை மீதான விவாதம் ஒரே பொருளை சுற்றி நடப்பதால் மறுமொழி பெட்டி மூடப்படுகிறது.நன்றி