18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாளையக்காரர் ஆட்சியின் கீழ் தமிழகம் இருந்த நிலைமையை, இன்றைய சூழ்நிலை நினைவு படுத்துகிறது. பாரதிய ஜனதாக் கட்சிதான் நாம் எதிர் கொண்டிருக்கும் கிழக்கிந்தியக் கம்பெனி.
ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்களை நிறுத்தும் உத்தரவை அரசிதழில் வெளியிட்டுவிட்டு, வதந்திகளை நம்பாதீர்கள் எனத் துணிந்து புளுகியிருக்கிறார், உணவு அமைச்சர் காமராஜ்.
3. விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் : விவசாயியின் விரலைக் கொண்டே, அவன் கண்ணைக் குத்தும் சதி!
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகியஇரண்டும் இந்திய விவசாயிகளை ஒரேயடியில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கிடுக்கிப் பிடியில் சிக்க வைக்கின்றன.
4. தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா?
தஞ்சை விவசாயிகள் பஞ்சத்தில் வாடுகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, ஒரு மிகப்பெரும் சூழலியல் பேரழிவின் விளிம்பில் தமிழகம் நின்று கொண்டிருப்பதை இந்த கட்டுரை சுட்டிக்காடுகிறது.
5. சோறுடைத்த சோழநாடு அரைப்பட்டினியில் தவிக்கிறது!
தின்னச் சோறில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, கௌரவத்தோடு வாழ வேலையில்லை என்ற நிலைக்குத் த்ள்ளப்பட்டுள்ள காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதி கூலி, ஏழை விவசாயிகளின் வேதனைக் குரலைக் கேட்கவும் ஆளில்லையோ?
6. பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம்: கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம்!
தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம், அவர்களை இயற்க்கச் சீற்றம், விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளிலிருந்து காக்க வேண்டிய தனது கடமையைத் தட்டிக் கழிக்கிறது இந்திய அரசு.
கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தரப்படும் கடன் த்ள்ளுபடியைக் கைதட்டி வரவேற்கும் முதலாளித்துவ நிபுணர்கள், விவசாயக் கடன் தள்ளுபடியைப் பொருளாதாரச் சீர்கேடு என நரம்பின்றிச் சாடுகிறார்கள்.
8. உணவுப் பொருள் இறக்குமதி: ஆதயமடைவது யார்?
ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதியாகும் கோதுமை, இந்தியாவில் விளையும் கோதுமையை விட குறைவான விலைக்கு கிடைக்கும் போது அது நேரடியாக விவசாயிகளைப் பாதிக்கும் என்கிற சாதாரன பொருளாதார அறிவின் மூலமாகவே யாரும் புரிந்து கொள்ள முடியும்.
9. குத்தகை விவசாயி ஆகிறார் அம்பானி!
மோடி அரசு கொண்டுவரவிருக்கும் விவசாய நிலக் குத்தகை சட்டம், சிறு, நடுத்தர விவசாயிகளின் நிலங்களை அபகரித்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சமர்ப்பணம் செய்யும் சதித்தனங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
10. விவசாயி தீராத கடனாளியாவது ஏன்?
விவசாயிகள் கடன்பட்டு உற்பத்தியி செய்யும் விளைபொருளின் மதிப்பில் ஒரு பகுதியை உள்ளூர் மண்டி வியாபாரிகள் தொடங்கி பன்னாட்டு வேளாண் கழகங்கள் வரையிலான ஒட்டுண்ணிகள் சட்டபூர்வமாக்வே திருடிக் கொள்கின்றனர்.
11. பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம்: மற்றுமொரு பேரழிவு ஆயுதம்!
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
பிக்பாஸ் ஆரம்பித்து ஒன்றரை மாதமாகி விட்டது. நமது மக்கள் பல்வேறு கோணங்களில் சில பல ஆய்வுகளையே நடத்தி விட்டனர். யூ டியூப் சானல்கள் பல பிக்பாஸின் அன்றாட நடவடிக்கைகளை திடுக்கிடும் தலைப்புக்களால் போட்டு கம்பெனியை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட்டுகின்றனர். ஃபேஸ்புக்கிலோ முற்போக்கு, பிற்போக்கு, சமூகவியல், பெண்ணியம், உளவியல் என்று எல்லா பிரிவுகளிலும் ஆய்வுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
வாட்ஸ் அப்பில் ஓவியா படை போர் முரசு கொட்டுகிறது. வார நாட்களில் டிவிட்டரிலும், வார இறுதியில் விஜய் டிவியிலும் கமலஹாசன் பேசும் தத்துவங்கள் பல சமூகவலைத்தளங்கள் மட்டுமல்ல, ஊடகங்களாலும் ஆராயப்படுகின்றன. அசைவ உணவு உண்பவர்களை முரடர்களாக கருதுகிறார், சேரி பிகேவியர் வார்த்தைகளை அனுமதிக்கிறார், மனநலம் பாதிக்கப்பட்டோர் கேலி செய்யப்படுவதை ஏற்கிறார் என்றெல்லாம் தொலைக்காட்சி விவாதங்கள் தொடர்கின்றன. அனைத்தையும் கணக்கில் கொண்டு அடுத்த வாரம் பதிலளிக்கிறார் கமல். அந்தக் குற்றங்களுக்குத் தான் காரணமில்லை என்கிறார்.
நேரடியாக போட்டி நடத்துபவர்களையும், விஜய் டிவியையும் மெல்லிய தொனியில் விமர்சிக்கிறார். மக்களுக்கோ இது போட்டி என்பதால் பொழுது போக்காக எடுத்துக் கொள்ளவும், அதே நேரம் சில வாழ்வியல் பாடங்களை கற்கலாமெனவும் முடிந்த மட்டும் வகுப்பு நடத்துகிறார்.
தஞ்சையில் மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு அருகாமைப் பகுதியிலிருந்து வந்த கிராமப்புற தம்பதியினர் இரவு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென நினைவு வந்தவர்கள் போல “ஐயோ இன்று பிக்பாஸ் பார்க்க முடியாதே, ஓவியா காதல் என்னவாகும்” என்று பேசிக் கொண்டனர்.
ஒவ்வொரு நாளிலும் அந்த இளம் தம்பதியினர் இரவானதும் இரு குழந்தைகளை நல்லபடியாக தூங்க வைத்து விட்டு பிக்பாஸில் பயணிக்கின்றனர். நாள் முழுவதும் அந்தப் பெண் இரு குழந்தைகளை பராமரித்தும், வீட்டு வேலைகளில் மூழ்கியும் போகிறார். அந்தக் கணவரோ அன்றாட வணிக வேலைகளை வாடிக்கையாக செய்கிறார். இரவுதான் அவர்களுக்கு பிக்பாஸ் நினைவுக்கு வருகிறது. பிறகு அவர்களது உலகம் பிக்பாஸ் குடும்ப வீட்டில் நிலை கொள்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை மக்கள் ஏன் பார்க்கிறார்கள்?
சீரியல், சினிமா வகையறாக்களை மக்கள் பார்ப்பது கேள்விக்கப்பாற்பட்ட ஒன்றாக மாறிவிட்ட போது இந்தக் கேள்விக்கே இடமில்லை! ஆனால் சீரியல் – சினிமா இரண்டின் சாயல்களோடு, ‘புதுமை’களையும் கொண்டிருக்கும் பிக்பாஸ் ஒரு ரியாலிட்டி ஷோ என்பதால் இன்னும் கூடுதலாக வரவேற்கப்படுவதில் ஆச்சரியமில்லை. இந்தப் புதுமை என்பது அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு சூப்பர் சிங்கர், காமடி நிகழ்வுகள், பிரபலங்களின் மேடை போட்டிகள், நடனப் போட்டி போன்ற ரியாலிட்டி தொடர்களை அறிமுகப்படுத்திய விஜய் டிவியின் பிக்பாஸ் மற்றவற்றில் இருந்து கொஞ்சம் வேறுபடுகிறது.
மேற்கே அஸ்தமனமான ரியாலிட்டி ஷோக்கள் கிழக்கில் உதிக்கின்றன
அடுத்தவர் படுக்கை அறையை எட்டிப் பார்க்கும் மக்களின் பலவீனம்தான் பிக்பாஸ்-ன் பலம் என்று சிலர் இதை எளிமையாக முடித்து விடுகிறார்கள். “எனது படுக்கையறையை எட்டிப் பார்க்காதீர்கள், அது எனக்கானது” என்று கமலஹாசன் முன்பொரு முறை சொல்லியதை எடுத்துப் போட்டு இப்போது அவரே படுக்கையறையை காட்டுகின்றார் என்றும் விமர்சிக்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் தமது படுக்கையை மட்டுமல்ல, 24 மணி நேரமும் தமது நடவடிக்கைகள் வெளிச்சப்படுத்தப்படுபவதை ஏற்பதாகத்தான் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள் என்று கமல் பதில் சொன்னார். இது தனக்கு வந்தால் தக்காளி மாதிரியா?
உலகெங்கிலும் செலிபிரிட்டி எனப்படும் பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை ஊடகங்களின் முக்கியமான விற்பனைப் பொருள். மேலை நாடுகளில் இத்தகைய செலிபிரிட்டி கிசுகிசுக்கள் இருந்தாலும் மக்களிடையே முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் “தனிநபர்வாதமும்” கொஞ்சம் “ஜனநாயகமும்” இருப்பதால் நமது நாடுகளைப் போல் அங்கே இந்த கிசுகிசுக்களுக்கு பெரிய அசைபோடுதல் இல்லை.
இருப்பினும் ஊடகங்களின் “பேஜ் – 3” வகை நொறுக்குத் தீனி துணுக்குகளில் பிரபலங்களின் பரபரப்பான மசாலா ‘செய்தி’களே இன்றும் உலக அளவில் உத்திரவாதமான விற்பனை உத்தி. கிசுகிசுக்களை தடை செய்துவிட்டால், தமிழகத்தின் தினமலர் – குமுதமோ இங்கிலாந்தின் சன் நாளிதழோ முன்னறிவிப்பு இன்றி செத்துப் போவது உறுதி. யூ டியூபில் தமிழ் சினிமாவின் முக்கல் முனகல்களை பொறுக்கி எடுத்து கிசுகிசுவாக மாற்றி வாந்தி எடுக்கும் நூற்றுக்கணக்கான சானல்களின் வருமானம் சமீபத்திய சான்று.
கிசுகிசுக்கள் என்றால் அவை படுக்கையறையில்தான் ஜனித்தாக வேண்டும். கமலஹாசன் காலையில் இட்லி சாப்பிட்டார், மாலையில் போண்டா தின்னார், இரவில் குளித்தார் போன்றவையை விட அவரது படுக்கையறையை பகிர்பவர் யார் என்பதே ‘சேதி’ மதிப்புடையவை.
இன்றைய கால சினிமாக்களை விளம்பரப்படுத்த ரியாலிட்டி ஷோக்களின் சாயலில், படத்தின் நாயக – நாயகிகளது கிசுகிசுக்களையோ, இல்லை நயன்தாரா பீர்பாட்டில் வாங்குகிறார் போன்ற அதிர்ச்சி மதிப்பீடுகளையோ உண்மை போல வெளியிடுகின்றனர். அடுத்தவர் படுக்கையறையை காண்பித்துத்தான் ஒரு படம் ஓட வேண்டுமா என்று எவரும் இதற்கு பொங்குவதில்லை.
சிம்ரன் – கமல் தொடர்பான கிசுகிசுக்கள் பேசப்பட்ட காலத்தில் அதையே வைரமுத்து பாட்டெழுதி, “பஞ்ச தந்திரம்” படத்தில் ஊரே பார்ப்பதற்கு கமல் அனுமதித்தார். காரணம் என்ன? கிசுகிசுக்கப்படும் சேதிகளில் எந்த அளவுக்கு அடிபடுகிறார்களோ அந்த அளவுக்கு சினிமா மாந்தர்களின் சந்தை “டிஆர்பி” மதிப்பிடப்படுகிறது. அதில் படுக்கையறை, எனது வாழ்க்கை, பெண்ணுரிமை, அநாகரிகம் போன்ற வார்த்தைகளுக்கு மதிப்பேதுமில்லை.
எனினும் சினிமா நடிகர்களும் மனிதர்கள்தானே என்ற சமத்துவ உணர்வு அவர்களுக்கு எப்போதாவது தோன்றும். சந்தை இழந்த பிறகு கண்டிப்பாக தோன்றுவது, உச்சத்தில் இருக்கும் போது சலிப்பு காரணமாகவும் பிதுங்கும். அப்போதெல்லாம் என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்று செல்லமாக சீறுவார்கள்! கமலஹாசனைப் பொறுத்த வரை போத்தீஸ் விளம்பரம் போல பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்து போக முடியாது.
போத்தீஸ் துணிகளில் உண்மை, நியாயம், நம்பிக்கை இருப்பதாக அவர் சொல்வதை ஒதுக்கி வைத்து விட்டு, கமலின் நடிப்பு, செட், விளம்பர உத்தி குறித்தே மக்கள் அலசுகிறார்கள். பிக்பாசிலோ நாள் ஒவ்வொன்றின் வார்த்தைகளும், திருப்பங்களும், பிரச்சினைகளும், மக்களால் அலசப்படும் போது கமலும் விவாதப் பொருளாகிறார். முக்கியமாக மக்கள் பங்கேற்பை வைத்தே பிக்பாசின் வணிகம் கட்டமைக்கப்பட்டிருப்பதால் தனது இமேஜுக்காவும், டிஆர்பிக்காகவும் அவர் சில பல நியாயங்களை பேச வேண்டியிருக்கிறது.
சரி, மக்கள் பிக்பாஸை ஏன் பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலே இல்லையா?
அதற்கு நம்மைப் போன்ற ஏழை நாடுகளின் சமூகவியலைக் கொஞ்சம் புரட்டலாம். அதற்காக ‘பணக்கார’ நாடான அமெரிக்காவிற்கு பயணிப்போம்.
பில் கிளிண்டன்
பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகை பணியாளரான மோனிகா லிவின்ஸ்கியிடம் முறைகேடாக நடந்து கொண்டார். அந்தப் பெண்ணுக்கு சிறப்பான எதிர்காலத்தை தருவதாக ஆசை காட்டி முயன்றார். இது வெளியே தெரிய வந்து பிறகு பாராளுமன்ற உறுப்பினர்களின் விசாரணை வரை போனது. குட்டைப் பாவாடையில் விந்துக் கறை இருந்தது உள்ளிட்டு இந்த விசாரணை நுட்பமாக நடக்க நடக்க உலக ஊடகங்களின் உற்சாகம் பீறிட்டு வழிந்தது.
அமெரிக்கா போன்ற “பாலியல் சுதந்திரம்” உள்ள முன்னேறிய நாடுகளில் இதற்கெல்லாமா விசாரணை வைப்பார்கள்? நேரெதிராக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் அதற்கு பிறகும் தி.மு.க பெரிய கருப்பன், அ.தி.மு.க ரமணா சார்பான வீடியோக்கள் வெளிவந்தன. பெரிய கருப்பன் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக வாட்சப்பில் ஓடுவதாக அ.தி.மு.க-வினர் கேலியுடன் பிரச்சாரம் செய்தாலும் தேர்தலில் கருப்பன் பெரு வெற்றி பெற்றார். அதே போன்று ரமணாவின் அமைச்சர் பதவிக்கும் பெரிய ஆபத்தில்லை.
இதே போன்று கே.ஏ.செங்கோட்டையனின் இல்லத்தரசிகளது எண்ணிக்கை கூடும் பிரச்சினையை ஒட்டி ஜெயலலிதா அவர் மீது நடவடிக்கை எடுத்து ஒதுக்கினார். இன்று அவர் கல்வி அமைச்சராக வலம் வருகிறார். எவரும் அவரது பாலியல் உறவுகள் குறித்த விவாதங்களை எழுப்புவதில்லை. பா.ஜ.கவின் இளைய நட்சத்திரமும், மேனகா காந்தி பெற்றெடுத்த சீமந்த புத்திரனுமாகிய வருண் காந்தியின் வீடியோ வெளியானாலும், ஏக பத்தினி விரத ராமனை வைத்து சர்க்கஸ் நடத்தும் பாரதிய ஜனதாவோ, பிரம்மச்சாரி பிரச்சாரக் மோடியோ கண்டு கொள்ளவில்லை.
பாலியல் சுதந்திரம் இல்லாத இந்தியா போன்ற நாடுகளில் கிளிண்டனுக்கு நடந்த விசாரணை நடப்பதில்லை. அமெரிக்காவில் அதிபரின் ஒழுக்கம் தவறக் கூடாது என்பது இங்கே இல்லை. ஏனிந்த முரண்பாடு? தனிநபர் வாழ்வில் சுதந்திரம், பொது வாழ்வில் கட்டுப்பாடு எனும் அமெரிக்க விதி சொல்வது என்ன?
முதலாளித்துவ நாடுகளில் ‘விதிமுறை’ப்படி சமூக அரசியல் பொருளாதார அமைப்பு இயங்குவது முக்கியம். ராஜிவ் காலத்தில் துவங்கிய ஃபோபார்ஸ், ஃபேர்பாக்ஸ் முதல் வாஜ்பாய் காலத்தில் வந்த கார்கில் சவப்பெட்டி ஊழல் வரை என்ன பிரச்சினை? பன்னாட்டு ஆயுத தளவாட நிறுவனங்கள் இந்தியாவில் ஆர்டரைப் பிடிப்பதற்கு சில தரகர்களை அணுகி கழிவு கொடுத்தனர். இங்கே இத்தகைய தரகுச் சேவைகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. மேலை நாடுகளில் இத்தரகுகள் மட்டுமல்ல, சூதாட்டம், வரம்புக்குட்பட்ட அளவில் விபச்சாரம் வரை பல விசயங்கள் சட்டப்படியே அனுமதிக்கப்படுகின்றன.
அதாவது இந்தியாவில் லஞ்சம் சட்டப்படி தடை என்றால் அங்கே பல அளவுகளில் சட்டப்படியே கொடுக்கலாம். புஷ்ஷுக்கோ இல்லை ட்ரம்புக்கோ மருந்து, எண்ணைய், ஆயுத அதிபர்கள் பெரும் நன்கொடை அளித்து ஈராக் – ஆப்கான் மீட்புபணி ஒப்பந்தங்களை வளைப்பதற்கு தடை இல்லை. இத்தகைய முதலாளிகளுக்கு எதிர் வரிசை முதலாளிகள் ஜனநாயகக் கட்சி மூலம் சவுண்டு எழுப்பலாமே தவிர சட்டப்படி எதிர்க்க முடியாது.
ரஜத் குப்தா
பங்குச் சந்தையில் எப்படி வேண்டுமானாலும் சூதாடலாமே ஒழிய அதன் உள் வட்ட செய்திகளை எதிர்தரப்பில் கசிய விட்டால் அது குற்றம். அதன்படி இந்திய வமிசாவளியைச் சேர்ந்த (ரஜத் குப்தா திறம் வேறல்ல ! அறம் வேறல்ல !!) ரஜத் குப்தா தண்டிக்கப்பட்டார். வேறு வகையில் சொல்வதாக இருந்தால், ஒரு முதலாளித்துவ நாட்டில் சட்டப்படியே மக்களைக் கொள்ளையடிக்க ஆயிரம் வழிகள் இருக்கும் போது ‘சட்ட விரோதமாக’ சுருட்ட நினைப்பதை அந்த அமைப்பு அனுமதிக்காது. அதனால்தான் உள்வட்ட வர்த்தக மோசடி குற்றத்திற்காக ரஜத் குப்தாவை விசாரித்த நீதிபதியும், நடுவர்களும் அவருக்காக கிட்டத்தட்ட அழுது கொண்டேதான் தண்டித்தனர்.
அதனால்தான் பாலியல் சுதந்திரம் இருந்தாலும் அதிபர் ஒருவர் மணவாழ்க்கைக்கு வெளியே மண உறவு வைப்பது என்பது அங்கே இலக்கண மீறலாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிலோ சட்டவிரோதமாக கொள்ளையடிப்பதையே மறைமுகமாக சட்டங்கள் அனுமதிப்பதால் இங்கு அனைத்தும் தலைகீழாக இருக்கின்றது. இங்கே பிடிபடாமல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். அதில் சிகரம் தொட்ட அம்பானி இந்திய முதலாளிகளுக்கு ஒரு முன்மாதிரி என்றால் மிகையில்லை.
அமெரிக்காவில் லஞ்சம், ஊழல் சட்ட ரீதியாக்கப்பட்டிருக்கிறது. பொது வாழ்வில் ஒழுக்கம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் லஞ்சம் தடை செய்யப்பட்டிருக்கிறது. பொது வாழ்வில் ஒழுக்கம் வரையறுக்கப்படவில்லை.
நமது அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்படி இப்படி இருப்பதை மக்களும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை – சட்டங்களும் கூடத்தான். மேலும் ஒரு நிலவுடமை சமூகத்தில் இத்தகைய மேன்மக்களின் பாலியல் நடவடிக்கைகள் கேள்விக்கு அப்பாற்பட்டவை என்பதை கடவுளர்கள் துவங்கி வார்டு கவுன்சிலர்கள் வரை மக்கள் அங்கீகரிக்கிறார்கள். பத்தினி விரதன் என்பதற்காக இராமன் இந்தியாவில் போற்றப்படுகிறான் என்றால் இந்த நாட்டு மக்களின் மண ஒழுக்கத்தைப் பற்றி மற்ற நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள்? இப்படி இரண்டு விதங்களிலும் அதாவது மக்கள் தம்மை தாழ்வாக நினைப்பதிலும், மேன்மக்களின் சொந்த வாழ்க்கை மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதிலும் இங்கே கிளிண்டன் வகை பாலியல் முறைகேடுகள் பிரச்சினையாவதில்லை.
மேலும் இங்கே ஜனநாயகம் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஒரு சடங்காகவே கொண்டு செல்லப்படுவதால் தமது தனிப்பட்ட வாழ்வில் நீதி நேர்மை நியாயங்களை கடைபிடிக்கும் மக்கள் தேர்தல்களில் அதை புகுத்துவதில்லை. ஆதலால் ஊழல் ராணி ஜெயாவோ, பாலியல் ஊழல் தலைவர்களோ இங்கே நெருப்பாக புடம் போடப்படுவதில்லை.
எப்படிப் பார்த்தாலும் பிக்பாசில் என்னதான் இருக்கிறது? பிக்பாஸ் செட்டில் வாழும் அந்த ‘செயற்கையான’ குடும்பத்தின் சண்டை சச்சரவுகள், காதல் மோதல்கள், சாப்பாடு – வேலை குறித்த அக்கப்போர்கள், பொறாமை – கோள் மூட்டுதல், சகிப்பின்மை, ஆணவம் போன்ற தனிநபர் பிரச்சினைகள், வீட்டில் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க் எனப்படும் சோதனைகள் அதனால் வரும் சுவராசியங்கள் அல்லது வேதனைகள்….. இவ்வளவுதானே? இதை ஏன் மக்கள் ஒரு நாள் விடாமல் காத்திருந்து பார்க்க வேண்டும், பேச வேண்டும்?
பிக்பாஸ் தொடர் பெரு வெற்றி அடைந்த இங்கிலாந்தின் சானல் 4 -5 தொலைக்காட்சிகளில் தற்போது அந்த வெற்றி தொடரவில்லை என்கிறார்கள் விமர்சகர்கள். பல்தேசிய இனத்தோர் வாழும் ஐரோப்பாவில் பிக்பாஸ் தொடர் என்பது ஒரு பொழுதுபோக்கு வகையில் வரும் ரியாலிட்டி ஷோ மட்டுமே. சானல் 4 தொலைக்காட்சி பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்பாளர்கள் நிறைய ‘புரட்சிகள்’ செய்து விட்டார்கள். உடலுறவு கொள்வது, அதீத கெட்ட வார்த்தைகள் பேசுவது, நிறவெறி – பாலியல் குறித்த பிரச்சினைகள், ஒரு சீசனில் திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றது என எல்லாப் பரிசோசனைகளும் அங்கே முடிந்து விட்டன.
ஐரோப்பாவிலிருந்து மும்பையில் இறக்குமதியான பிக்பாஸ் நிகழ்வு சுதேசி மண்ணிற்குரிய பாலிவுட் மசாலாவை தூக்கலாக சேர்த்துக் கொண்டது. தொகுப்பாளர் முதல் பங்கேற்பாளர் வரை சினிமா மாந்தர்களை கோத்து விட்ட பிறகு அதன் வீச்சை வணிகமாக்குவதில் பிரச்சினை இல்லை.
பின் நவீனத்துவமாக இருந்தாலும் சரி பிக் பாஸாக இருந்தாலும் சரி மேற்கே அஸ்த்தமித்த பிறகே கிழக்கே உதிக்கின்றன. எப்போதும் அஸ்தமனம் அடக்கத்தோடும், உதயம் ஆர்ப்பாட்டமாகவும் இருக்கும் என்பதால் இங்கே பிக்பாஸ் குறித்துப் பேசுவது இருட்டுக் கடை அல்வாவை சிலாகிப்பது போல தேசிய ரசனையாகி விட்டது.
ஸ்ரீ-யின் மௌனம், கஞ்சா கருப்பின் ஏய், அனன்யாவின் ஓபனிங் சரியில்லை பரணியின் நியாயமான கோபம், ஆர்த்தியின் சடசட, நமீதாவின் சீமாட்டித்தனம், ஜூலியின் அழுகை, காயத்திரியின் குழாயடி, ஆரவ்-வின் அது வந்துட்டு, ரைசாவின் நாசுக்கு, ஓவியாவின் சுதந்திரம், சக்தியின் நான்தான், வையாபுரியின் வீட்டு நினைவு, கணேஷின் காரியவாதம், கடைசியாக பிந்து மாதவியின் ஒண்ணுமே இல்லை…..வரை மக்கள் அந்தந்த போட்டியாளர்களை அக்குமேல் ஆணிகளாக அலசுகிறார்கள்.
பிக்பாஸில் பதினான்கு பங்கேற்பாளர்கள் நூறு நாட்கள் தங்கி, உண்டு, கழித்து, பேசி, பஞ்சாயத்தாக்கும் சாதாரண நிகழ்வுகளோடு மக்கள் அசாதாரணமாக ஒன்றுபடுவது ஏன்?
மக்களிடம் எது இல்லையோ, எது மறுக்கப்பட்டதோ, எது சாத்தியமில்லையோ, எது கனவோ அவையெல்லாம் ஆழ்மனம் தொட்டு அன்றாட அசைபோடுதல் வரை அலைக்கழிக்கிறது.
பாலியல் தேவைகள் மறுக்கப்படும் போது கனவுப் புனைவுகள் அடக்கப்பட்ட வேகத்துடன் சீறுகின்றன. வாழ்வியல் தேவைகளுக்கு உழலும் போது உண்டு களிக்கும் ரோட்டரி கிளப் செல்வந்தர் வாழ்வு மீது ஏக்கம் எட்டிப் பார்க்கிறது. அநீதியை தட்டிக் கேட்க சக்தியில்லாத போது கானாப் பாடலாக லாவணிக்கிறது. ஜனநாயகம் ஏட்டில் மட்டும் இருக்கும் போது அடிமைத்தனம் இயல்பில் வேர்விட்டு விடுகிறது.
நேற்று யாம் அரசியல் பேசவில்லை என்பது மெய்யே, அஃது முதிரா மழலை, இப்போது முதிரும் பாதையில் இருப்பதால் அதிர்கிறேன், குத்திக் காட்டாதீர்கள் என்பதாக கமல் சொல்வது பொதுவில் அவர் மீது வரும் விமர்சனங்களுக்கான பதில் மட்டுமே. மக்களுக்கோ அந்த கேள்விகளே இல்லை. பெரிய இடத்துப் பிள்ளை தெருவில் கோலி ஆடுது பாரும்மா என்று இரக்கப்படுவார்கள். பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு வாக்கப்பட்டாலும் டயானாவை தமது பிரதிநிதியாக மக்கள் கருதியதால்தான் அவர் பிரபலமானார். ராயல் குடும்பத்தின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியின் ஒரு முகம் இது.
என்ன இருந்தாலும் ஜெயலலிதா ஒரு இரும்புப் பெண்மணி என்று அவர்கள் கருதுவது கூட தோலிலும் சூழலிலும் கருப்பே அண்டாத வெள்ளை வசதி கொண்ட ஒரு சீமாட்டி குறித்த அடிமைகளின் வியப்பு. தங்களது வாழ்வில் இல்லாத இன்பத்தையும், விடாத துன்பத்தையும் வாடிக்கையாக வரித்துக் கொண்டு ஓடும் மக்கள் ஜெயா – சசிகலாவை சிறையில் கடிக்கும் கூவத்து கொசு குறித்து வருந்துகிறார்கள். என்ன இருந்தாலும் அந்தக் கொசு அவர்களுக்குரியது அல்லவா!
இந்த உலகில் இன்னமும் நிலவுடமை சமூகத்தின் பாதிப்பில் இருக்கும் நம்மைப் போன்ற ஏழ்மை நாடுகளும் சரி, எந்தப் புரட்சியும் இன்றி தொழிற்துறை நாடாக மாறிய ஜப்பான் போன்ற நாடுகளும் சரி இன்னும் “சென்டிமெண்ட் இடியட்ஸ்” ஆகவே இருக்கின்றன. இது தமிழ் மக்களுக்கு மட்டுமே உரிய பண்பல்ல. சீமான் சொல்வது போல காதலும், வீரமும், விருந்தோம்பலும், நாட்டு வைத்தியமும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்களர்கள், சிங்கப்பூர் சீனர்கள், அனைவருக்கும் சொந்தமானதுதான். அது போல “அலைக்கழிக்கும் அற்பவாதிகள்” (சென்டிமெண்ட் இடியட்ஸ்) என்ற நிலையும் மூன்றாம் உலகிற்கு சொந்தமான பொது உணர்ச்சிதான். இங்கே பார்ப்பனியம் இருப்பதால் அந்த உணர்ச்சிகள் இன்னும் தூக்கலாக காட்டுகின்றன.
வளர்ச்சியடைந்த முதல் உலகின் உணர்ச்சியை பணம் எனப்படும் பொருளாதார நிலை தீர்மானிக்கும் போது மூன்றாம் உலகில் பணமே இருந்தாலும் பழைய சமூகத்தின் உணர்ச்சிகள் அவ்வளவு சீக்கிரம் மாறி விடுவதில்லை. மேற்கின் பன்னாட்டு நிறுவனங்கள் தமது நிர்வாகத்தை தொழிற்முறை நிர்வாகிகளைக் கொண்டு இயக்கும் போது இந்தியாவின் தரகு முதலாளிகளது நிறுவனங்களை குடும்ப உறுப்பினர்களே கட்டுப்படுத்துகின்றனர். மேற்குலகு பணத்தால் திறமையை வாங்கிக் கொள்கிறது. கிழக்கோ பணம் மட்டும் போதாது என்று சாதி, இனம், ரத்த உறவு போன்றவற்றையும் கணக்கில் கொள்கிறது.
ரஜினியின் “முத்து” “அண்ணாமலை” படங்களுக்கு கிடைத்த விசிலும், விசும்பலும் தமிழகத்தில் மட்டுமல்ல ஜப்பானிலும் எதிரொலித்தன. இந்திய ஊடகங்களால் நாய்க்கறி டிராகனாக சித்தரிக்கப்படும் சீனாவில், அமீர்கானின் “டங்கல்” படம் வெற்றியடைந்ததற்கு காரணமும் அதே அலைக்கழிக்கும் அற்பவாத அடிப்படையே.
எனவே இன்னமும் சமூகத்தின் அனைத்துத் துறையிலும் ஜனநாயகமயமாக்கம் பூர்த்தியடையாத இந்தியாவில், தமிழகத்தில் நாம் அழுவதும், சிரிப்பதும், இரங்குவதும், பேசுவதும் நம் கையில் இல்லை. அதை பிக்பாஸே தீர்மானிக்கிறார்.
ஒரு பெண்ணை வித விதமாகத் துரத்தும் கதைகள் தமிழ் சினிமாவில் இன்னும் நின்றபாடில்லை. இதை ஐரோப்பாவில் பார்க்கும் ஒரு நபர் “பிளடி இண்டியன்ஸ்” என்று வைது விட்டு பஃபேவுக்கு சென்று துக்கம் அனுசரிப்பார். ஆக காதலோ, அப்பா – அம்மா பாசமோ, அண்ணன் – தங்கச்சி நேசமோ, பணக்காரன் மகள் – ஏழை இளைஞர் கலகக் காதலோ, இங்கே அற்பவாத உணர்ச்சிகள் இடைவெளியில்லாமல் ஆதிக்கம் செய்கின்றன.
இதற்கு மேலாக சாதி, மதம், மொழி இன்னபிற பிரிவுகள் மக்களின் ஜனநாயக வெளியை முடிந்த மட்டும் அழுத்துகின்றன. ஐரோப்பிய நாடுகளில் ஒரு மாணவரோ இல்லை இளைஞரோ நம்மவர்கள் போல வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் மூழ்குவதில்லை. அவற்றில் அவர்களுக்கு கணக்கிருந்தாலும் அவைகளுக்கு மொத்த வாழ்வில் சிறுபகுதியையே ஒதுக்குகின்றனர். காரணம் அவர்களது ஏனைய வாழ்க்கையில் பொதுவெளிகளில் கலத்தலும், ஜனநாயக வெளிகளில் சண்டை போடுவதும் சகஜம். ஆகவே வாட்ஸ்அப்பில் வரும் ஒரு வைரல் செய்தியைக் கொண்டு மட்டும் அவர்கள் பொங்க வேண்டியதில்லை.
இங்கோ ஒரு துண்டுப் பிரசுரம் கொடுத்ததற்கே குண்டர் சட்டம் என்றால் நம்மவர்கள் மெய்நிகர் உலகை விட்டு ஏன் வெளியேற வேண்டும்? இதனால் தான் இங்கு அரசியலோ இல்லை சினிமாவோ இல்லை போராட்டமோ இல்லை பொதுத்தேர்தலோ அனைத்திலும் நாம் “அலைக்கழிக்கும் அற்பவாதிகளாகவே” இருக்கிறோம். இறுதியில் நம்மிடம் ஜனநாயகம் எனும் பெரிய கோடு இல்லாததால் புனைவுகளில் வரும் தம்மாத் துண்டு நானோ புள்ளிகளை வைத்து திருப்தி கொள்கிறோம்.
விளம்பரங்களின் நீட்சியாகவே திரைப்படமெடுக்கும் ராஜீவ் மேனனின் கதை ஒரு “மல்டி வாட்டர் கலர்” செட்டில் நடந்தால் அதுதான் பிக்பாஸ். வையாபுரியே வியக்குமளவு கணேஷுக்கு பத்து செட்டு ஷூக்கள், பதினைந்து பெட்டியில் ஆடைகள்… என்றால் ஓவியா – ரைசா – நமீதா-க்களது செட் பிராப்பர்டிகளை எடுத்துச் செல்ல ஒரு எய்ச்சர் லாரிதான் வரவேண்டும். பிறகு நுனிநாக்கு ஆங்கிலம். சினிமா மாந்தர்களின் “ஆழ்வார் பேட்டை ஆண்டவா” வகை எல்ஐசி பதினாலாவது மாடியிலிருந்து தெருவைப் பெருக்கும் தொழிலாளியை பார்க்கும் பேச்சுக்கள், தேய்வழக்கான போட்டிகள்…
இதில் சண்டை காதல் சச்சரவு இத்யாதிகள்………..
இத்துடன் முடிந்தால் கூட பிரச்சினை இல்லை. இன்னும் கொஞ்சம் உள்ளே போய் பார்ப்பனியம், மேட்டுக்குடி, திராவிடம், தமிழ், மெரினா எழுச்சி என்று ஏகப்பட்ட முன்னெடுப்புகள்….
கூட்டிக் கழித்துப் பார்த்தால் பிக்பாஸ் உருவாக்கியிருக்கும் புனைவெளியில் நமது மக்கள் அடைந்திருக்கும் குழப்ப உணர்ச்சி முன்னர் கண்ட “அற்பவாத அலைக்கழிப்புக்களையும்” விஞ்சுகிறது.
இந்தப் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா? வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி
கொல்லைப்புறத்தின்
குடக்கல்லில்
பாம்புச்சட்டையை
கண்டு பயந்து
குட்டி போட
எட்டிப்பார்த்த நாய்
ஓடிவிட்டது.
மக்கிப்போன புடைமுறத்தை
சுற்றிச் சுற்றி வந்து ஏமாந்து
சுறுசுறுப்பை இழந்து விட்டது எறும்பு.
சீண்ட ஆளின்றி
குப்பைமேனி
காய்ந்த சிரங்காகி கிடக்கிறது.
இற்றுப்போன கூரையின்மேல்
தத்தி வரும் அணில்
ஆள் புழங்கும் ஓசையற்ற
வீட்டின் தனிமை கண்டு
வெலவெலத்து ஓடுகிறது.
வெகுநாளாய்
குழம்பு கொதிக்கும் வாசமற்று
குழம்பிப்போன பூனைகள்
ஆதரிக்க குரல் தேடி
குழந்தைகளாய் அழுகிறது.
பூராணும், தேளும் கூட
புழங்க முடியாமல்
புழுங்கிக் கிடக்கும் சுவரில்
பழைய கருக்கரிவாள்
தழும்பாகத் தெரிகிறது.
ஊர் என்று சொல்ல
ஒரு காக்கை குருவி இல்லை
உறவென்று சொல்ல
ஒரு புழு, பூச்சி இல்லை
யார் என்று கேட்க
குரல் ஒன்றுமில்லை…
மூடிக் கிடக்கும்
வீட்டு வாசலின் முன் நின்று
விவரம் புரியாமல்
விடாது கத்துகிறது மாடு.
வழக்கமாக
தண்ணீர் வைப்பவளின்
குரலைக் கேட்காமல்
அது நகர மறுக்கிறது.
இந்த வீடு மட்டுமல்ல
கிராமத்தில்
பல வீடுகளில்
ஆளில்லை என்பதை
எப்படி புரிய வைப்பது
அந்த மாட்டிற்கு!
– துரை. சண்முகம்
_____________
இந்தக் கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் வினவு தளத்தை
ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
இங்கிலாந்தின் காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட 1947க்கு முன் பல்வேறு இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் 1942ம் ஆண்டு காந்தியின் தலைமையில் துவங்கியது வெள்ளையனே வெளியேறு இயக்கம். இவ்வியக்கத்தின் 75-ம் ஆண்டு நேற்று (ஆகஸ்டு 9-ம் தேதி புதன்கிழமை) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, 1942-ன் உணர்வை நாம் மீண்டும் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காலகட்டத்தில் வெள்ளையருக்கு எதிராக “செய் அல்லது செத்து மடி” என்கிற முழக்கத்தை காந்தி முன்வைத்திருந்தார்; அதைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து “செய்வோம், நிச்சயம் செய்வோம்” என முழங்கினார் மோடி.
எதைச் செய்வதாம்?
சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்த உணர்வு மெல்ல மெல்ல வடிந்து போனதால், மக்களிடையே கடமையின் முக்கியத்துவம் குறைந்து உரிமையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார் பிரதமர். போக்குவரத்து சிக்னல்களை மீறுவது, எச்சி துப்புவது என மக்கள் அடிப்படை விதிகளை கூட கடைபிடிப்பதில்லை என அங்கலாய்த்துள்ளார் பிரதமர். அதாவது இந்தியா முழுவதும் மக்கள் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். பா.ஜ.க அரசின் மீது கொலை வெறியில் இருக்கிறார்கள். அவர்களை எப்படித் தண்டிக்கலாம் என யோசித்துப் பார்த்த மோடி இறுதியில் அந்நியன் பட இயக்குநர் போல கருட புரணாத்தில் இறங்கி விட்டார் போலும்.
பொது இடங்களில் எச்சி துப்புவது இருக்கட்டும்; எந்த விதிகளின் அடிப்படையில் அதானிக்குக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் நிலங்களும் இன்னபிற அடிப்படை வசதிகளும் சல்லிக் காசுகளுக்கு வாரி வழங்கப்பட்டன என்பதை மாண்புமிகு பிரதமர் குறிப்பிடவில்லை. எந்த விதிகளின் அடிப்படையில் இந்திய வங்கிகளுக்கு பட்டை நாமம் சாத்திய மல்லையா தப்புவிக்கப்பட்டார் என்பதையும் பிரதமர் குறிப்பிடவில்லை. மேலும், எந்த விதிகளின் அடிப்படையில் வியாபம் கொலைகள் நடந்து வருகின்றன என்பதையோ, எந்த விதிகளின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு பொதுத்துறை வங்கிகள் பல்லாயிரம் கோடிக் கடன்களைக் கொடுத்து வருகின்றன என்பதையோ, எந்த விதிகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும் உத்தரவுகளையும் மீறி பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுகின்றது என்பதையோ பிரதமர் குறிப்பிடவில்லை.
மோடியின் இந்தியாவில், விதிகளை மீறி சாலையில் எச்சி துப்புவது குற்றம்; ஆனால் விதிகளின் மீதே எச்சி துப்புவதன் பெயர் “வளர்ச்சி”
போகட்டும்.
தனது பேச்சின் ஊடே 40-களில் நிலவிய தேச பக்த உணர்வை பலமுறை சுட்டிக் காட்டினார் பிரதமர். இன்றைய இந்தியாவில் ”தேசபக்தியின்” மொத்த குத்தகைதாரர்களாக பரிவாரங்களின் அவதாரங்களே இருப்பதால் இதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை – ஆனால், பழைய இந்தியாவிலோ காவிகள் “அந்த” விசயத்தில் கொஞ்சமல்ல நிறையவே ”வீக்” என்பதால் சமூக வலைத்தளங்களில் பலரும் கழுவி ஊற்றினர். குறிப்பாக ட்விட்டரில்.
ஆர்.எஸ்.எஸ் கும்பல் தேச விடுதலைக்கு ஆற்றிய பங்கைக் குறித்து ட்விட்டரில் வெளியான சில கருத்துக்களை கீழே தொகுத்திருக்கிறோம் : படியுங்கள், பரப்புங்கள்.
Dr. Sania
பக்தாள் : ஐயா, இங்கே “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு” என்கிற நூல் எங்கே இருக்கிறது?
நூலகர் : “காமிக்ஸ் பிரிவு” மேலே இருக்கிறது போங்கள்.
******
@RealHistoryPic
வரலாற்றாய்வாளர் ஒருவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் & ஹிந்து மகாசபாவின் பங்கு குறித்த ஆதாரங்களைத் தேடும் படம்.
******
@RealHistoryPic
லார்டு மவுண்ட்பேட்டனின் கொலையைத் திட்டமிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எடுத்த படம்.
******
@RealHistoryPic
”வெள்ளைக்காரனுக்கு மனிப்புக் கடிதம் எழுதிய என்னையெல்லாம் “வீரன்” என்று மக்கள் அழைப்பது ஒரே காமெடியாக இருக்கிறது” – வீர சாவர்கர் (1947)
******
@Trolacharya
கவனமா படியுங்கள் இது தான் ஆர்.எஸ்.எஸ் சுதந்திரப் போராட்டத்தில் களமாடியது குறித்த வரலாற்று நூல்.
******
@mihirssharma
மிஹிர் ஷர்மா என்பவர் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ”தேசபக்தி” குறித்து தொடர் கீச்சு எழுதியுள்ளார். அதில், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து அந்தக் காலத்தில் தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்துள்ளார். அந்த தொகுப்பில் இருந்து சில
விடுதலைப் போராட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவாரின் கருத்து என்ன?
சுதந்திரப் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வந்த காலங்களில் வெள்ளையர்களுக்கு எதிராக பல்வேறு இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அப்போது ஒருவர் டாக்டர்ஜியிடம் (ஹெட்கேவார்) வந்து தான் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறைக்கு செல்லத் தயாராக இருப்பதாக கூறினார். அதற்கு பதிலளித்த டாக்டர்ஜி “நிச்சயமாக (சிறைக்கு) போ. ஆனால் யார் உனது குடும்பத்தைக் காப்பாற்றுவார்?” எனக் கேட்கிறார். அதற்கு அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தனது குடும்பம் சிக்கலின்றி நடப்பதற்குத் தேவையான பொருளாதார வசதி இருப்பதாக பதிலளிக்கிறார். இப்போது டாக்டர்ஜி அவருக்கு அளிக்கும் ஆலோசனை: “அப்படியென்றால், நீ (போராட்டத்தில் ஈடுபடாமல்) அந்த இரண்டு வருடங்கள் சங்கத்திற்காக பணி செய்யலாமே” எனக் கேட்டுள்ளார். டாக்டர்ஜியின் “தேசபக்தியைக்” கண்டு மிரண்டு போன அந்த நபர் வீட்டுக்குப் போனதும் அப்படியே அடங்கி விட்டார் – (போராட்டத்தில் ஈடுபட்டு) ஜெயிலுக்கும் போகவில்லை சங்கத்துக்கும் (ஆர்.எஸ்.எஸ்) வரவில்லை.
விடுதலைப் போராட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ் இரண்டாம் தலைவர் கோல்வால்கரின் கருத்து என்ன?
“இந்தியாவில் இருந்து வெள்ளைக்காரர்களை வெளியேற்ற பலரும் உணர்வெழுச்சியோடு பாடுபட்டனர். ஆனால், சுதந்திரத்திற்குப் பின் அந்த உணர்வு படிப்படியாக குறைந்து போனது. சொல்லப் போனால் அந்தளவுக்கு உணர்வெழுச்சி கொண்டிருக்க வேண்டிய தேவையே இல்லை. மதத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதன் ஊடான தேச விடுதலை குறித்து நமது (ஆர்.எஸ்.எஸ்) உறுதிமொழியில் குறிப்பிடுகிறோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதில் வெள்ளைக்காரர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுவது குறித்து நாம் ஏதும் சொல்லவில்லை”
விடுதலைப் போராட்டம் குறித்து சாவர்கரின் கருத்து என்ன?
1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த போது காந்தி மக்களிடம் அரசுப் பணிகளைத் துறந்து விடுமாறு கேட்டார். அப்போது “ஹிந்து சங்கதானிகள் அனைவருக்கும் எனது தீர்மானமான உத்தரவு யாதெனில், நீங்கள் எல்லோரும் உங்களது அரசு பதவிகளை உறுதியாக பற்றிக் கொள்வதோடு உங்களது கடமைகளையும் முறையாகச் செய்ய வேண்டும்” என சாவர்கர் ஹிந்துக்களுக்கு உத்தரவிடுகிறார்.
இந்துத்துவ கும்பலுக்கு மக்களின் மறதியின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. எனவே தான் அந்தக் கால மைனர் குஞ்சுகளான தமது முன்னோடிகளை ஏக பத்தினி விரதர்களாக சித்தரித்துப் புளுகி வருகின்றனர்.
மக்களுக்கு நினைவூட்டத்தான் எம்மைப் போன்றவர்கள் இருக்கிறோமே? வரலாற்றை மக்களுக்கு நினைவூட்டுவோம்.
_______________________________
இந்தப் பதிவு பிடித்திருக்கிறதா?
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
பணமதிப்பழிப்பின் அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளும் முன்பே மாடு விற்கத் தடை! நாடெங்கும் கால்நடைச் சந்தைகள் முடங்கின. விளைபொருளுக்கு விலை, கடன் தள்ளுபடி கோரிப் போராடிய மத்தியப் பிரதேச விவசாயிகளை சுட்டுக் கொன்றது பா.ஜ.க அரசு.
இதற்கிடையில் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் தாக்குதலைத் துவங்கியது மோடி அரசு. குஜராத் மண்ணிலேயே இலட்சக்கணக்கான வணிகர்கள், சிறு முதலாளிகள் ஜ.எஸ்.டி வரிவிதிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். தமிழகத்திலோ தீப்பெட்டி,, ஜவுளி, திருப்பூர் வட்டாரம், வணிகர் சங்கங்கள் என மாநிலமெங்கும் வரியை எதிர்த்து போராட்டங்கள்!
ரயில்வே தனியார்மயத்தின் தொடக்கமாக ரயில் நிலையங்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன. லாபத்தில் இயங்கும் ஏர் இந்தியா தனியார்மயமாக்கப்படுகிறது. திறன் நகரங்களுக்கான திட்டப்படி நகராட்சிகளின் நடவடிக்கைகள் தனியார்மயமாக்கப்பட்டு பங்குச் சந்தையில் சேர்க்கப்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்ட 1925-ம் வருடத்தின் நூற்றாண்டுக்குள் இந்தியாவை ‘இந்து ராஷ்ட்டிரம்’ ஆக்க விரும்புகிறதாம் பார்ப்பன பாசிசக் கும்பல். ராஜஸ்தானில் மாடு வாங்கச் சென்ற தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள் இந்துமதவெறியர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பசுவின் பெயரால் கொலை செய்வதைக் கண்டிப்பதைப் போல மோடி நடித்து முடிப்பதற்குள் ஜார்க்கண்டில் மாட்டின் பெயரால் ஒரு கொலை நடக்கிறது.
இந்தித் திணிப்பு, பாடத்திட்டங்கள் இந்துமயமாக்கம், நீட் தேர்வு என கல்வித் துறையிலும் பா.ஜ.கவின் நிகழ்ச்சி நிரல்கள் அதிவேகமாக அமலாகின்றன. உ.பியில் யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கத்தில் தலித்துக்களும், முசுலீம்களும் அன்றாடம் தாக்கப்படுகின்றனர். மோடியின் குஜராத் டீக்கடை வரலாகிறது. தமிழகத்தின் கீழடி ஆய்வு குப்பைக் கூடைக்குள் எறியப்படுகிறது.
அனைத்தும் பார்ப்பனமயம், பன்னாட்டு நிறுவனமயம் என்று மாறி வரும் இந்த ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்துமாறு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது இந்த சிறு வெளியீடு.
தோழமையுடன் புதிய கலாச்சாரம்.
மோடி அரசின் தாக்குதல்கள் ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2017 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
சுற்றுலா வளர்ச்சி ; காதில் பூ சுற்றும் மோடி அரசு
யோகி ஆதித்யநாத் சொகுசுப் பேர்வழியின் எளிமை நாடகம்
ரஜினியின் காலா, பி.ஜே.பி.யின் வால்தான் – ஆதாரம்
ஸ்மார்ட் சிட்டி : பாஜக-வின் புது அக்கிரகாரங்கள்
மோடி அரசைக் கண்டிக்கும் ஓய்வுபெற்ற IAS – IPS அதிகாரிகள்
ஸ்டிக்கர் சாதனையில் லேடியை முறியடித்த மோடி!
பேயோட்டிகளுக்காக பேயாட்டம் போடும் குஜராத் அமைச்சர்
ஆதித்யநாத்திற்கு கருப்புக்கொடி காட்டியதுபயங்கரவாதமாம் – என்னடா நாடு இது?
துக்ளக் மோடி அரசால் பாதாளத்தில் பொருளாதாரம் -SBI அறிக்கை
தமிழக அதிகாரிகளை உதைத்த ராஜஸ்தான் RSS ரவுடிகள்
பாஜக ஆளும் மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம்!
மலம் கழிப்போரை “ஃபோட்டோ எடுக்கும் வக்கிரம் பிடித்த பாஜக அரசு
மகிழ்ச்சித் துறைக்கு ஒரு மந்திரியாம் ம.பி. – பா.ஜ.க. அரசின் கேலிக்கூத்து
ஜனாதிபதி வேட்பாளர் கோவிந்துவின் தலித் விரோதம் – ஆதாரங்கள்
எண்ணுர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும்மோடி அரசு
ஏழைகள் என்று வீட்டுச் சுவற்றில் எழுதுவது இராஜஸ்தானில் கட்டாயம்
பங்குச் சந்தையில் திறன் நகரங்கள் : நகராட்சிகளும் இனி தனியார்மயம்
பாஜக ஆட்சியில் கொலைகள் – குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?
சபர்மதியில் தெறித்த மோடியின் எச்சில் காயும் முன் ஜார்கண்டில் கொலை
மத்தியப் பிரதேசம் : பாகிஸ்தான் ஜிந்தாபாத்தின் உண்மைக் கதை
தில்லி முதல் குமரி வரை ஜி.எஸ்.டி வரியை எதிர்த்து தீவிரமாகும் போராட்டங்கள்
மோடி டீக்கடை வரலாறு என்றால் கீழடி ஆய்வு என்ன குப்பையா?
ஆதித்யநாத்தின் விவசாயக் கடன் தள்ளுபடி – ஒரு ஏமாற்றுத் தந்திரம்!
குஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின்
EPW ஊடகங்களை அச்சுறுத்தும் மோடி-அதானி கூட்டணி
கார்ப்பரேட் வாராக்கடன் விவரங்கள் வெளியிட முடியாது – ரிசர்வ் வங்கி
கேரளா : மருத்துவக் கல்லூரி கொள்ளைக்கு அணுகவேண்டிய தரகன் பாஜக
அமர்த்தியா சென் ஆவணப்படத்திற்கு தடைபோடும் மத்திய அரசு
கறி போடுவதால்தான் ஏர் இந்தியா நட்டத்தில் ஓடுகிறதா?
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு)
$27
Payumoney மூலம்(உள்நாடு)
ரூ.400
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
“விவசாயியை வாழவிடு !” மக்கள் அதிகாரம் சார்பில் ஆகஸ்ட் 5, 2017 அன்று நடைபெற்ற மாநாட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆற்றிய உரை.
இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான மக்கள், ”நீங்கள் மாநாடு நடத்துங்கள் நாங்கள் ஆதரவு தருகிறோம் , அடுத்தது என்ன செய்ய வேண்டுமெனக் கூறுங்கள், ” எனஆதரவளித்தனர். கடந்த மூன்று மாத காலமாக தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான பிரசுரங்களை விநியோகித்துள்ளோம். ஒரு பிரசுரம் கூட மக்களால் கீழே போடப்படவில்லை.
இந்தக் கூட்டத்திற்கு “விவசாயியை வாழ விடு” என நாம் அறைகூவல் விடுத்ததால் மக்கள் வரவில்லை. மாறாக, அரசு தான் ”விவசாயியை வாழவிட மாட்டோம்” என்று கூறி இந்த மக்கள் இங்கு திரள்வதற்குக் காரணமாக இருந்திருக்கிறது.
”குடிக்கத் தண்ணி இல்லன்னு போராடினதுக்காக பேராசிரியர் ஜெயராமன் மீது கேசு போடுகிறீர்களே, இது நியாயமா?” என்று மக்கள் கேட்கிறார்கள், எதிரிகளால் பதில் சொல்ல திராணி இல்லை. ஆகையால் போலிசை வைத்து மக்களை அச்சுறுத்தப் பார்க்கிறது அரசு. ஆனால் மக்கள் பயப்படுவதில்லை. போலீசும், மோடியும், எடப்பாடியும் பயப்படுகிறார்கள். அதனால் தான் ஒரு பிரசுரம் கொடுத்ததற்காக வளர்மதி என்ற மாணவி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறார்கள். அதே போல, இந்த மாநாடு நடைபெறக் கூடாது என்று பயப்படுகிறார்கள். நாம் இங்கு மாநாடு நடத்துகிறோம். போட்டிக்கு, போலீசு செந்தமிழன் சீமானை வைத்து கும்பகோணத்தில் உழவர் மாநாடு, கருத்தரங்கம், பேரணி நடத்துகிறது.
சீமான், கமல், தனுஷ் , விசால் என யார் வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் என்ன பேசுகிறார்கள்? எடப்பாடியிடம் கோரிக்கை, மோடியிடம் கோரிக்கை, கடைசியாக தன்னை முதல்வராக்க மக்களிடம் கோரிக்கை. இதே சிஸ்டத்திற்குள் இருந்து தான் தீர்வு காணக் கூறுகிறார்கள். இந்த சிஸ்டமே டயர் வெடித்த பேருந்து போல உபயோகமற்று நிற்கிறது. அதில் இனி யாரும் பயணம் செய்ய முடியாது. ”என்னை ஓட்டுனராக்குங்கள். நான் ஓட்டிக் காட்டுகிறேன்” என்கிறார்கள் இவர்கள்.
எங்களால் அப்படி வெறும் வாய்ச்சவடால் அடித்து விட்டுப் போய்விட முடியாது. யார் எதிரி யார் நண்பன், யாரிடம் கோரிக்கை வைக்க முடியும் என்பதை நாங்கள் மக்களுக்கு எடுத்துக் கூறுகிறோம். டாஸ்மாக் கடைகளை மூட மக்கள் எத்தனை வழக்குகள், தடியடிகளை சந்தித்தார்கள்? யார் தாலி அறுந்தாலும் டாஸ்மாக் நடத்தியே தீருவேன் என்று அரசு, நிற்கிறது. போலீசு அதன் அடியாளாகவே இருக்கிறது.
தொழிற்சாலையில் புதிய இயந்திரங்களை புகுத்தி, ஆட்குறைப்பு செய்கிறார்கள். அதே போல் விவசாயத்தில் தற்போதைய உற்பத்திக்கு, இவ்வளவு ஆட்கள் தேவை இல்லை எனக் கூறி, விவசாயிகளை வெளியேற்றுகிறான். 1990 -களில் காட் ஒப்பந்தம் போடப்படும் போதே 40 கோடி பேரை விவசாயத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என வெளிப்படையாகச் சொல்கிறது. இன்று விளை பொருளுக்கு உரிய விலை கிடையாது, கடன் சுமை என எல்லா வகையிலும் விவசாயியை நெருக்கி தள்ளுகிறது இந்த அரசு.
மோடி அரசு விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்கிறது. மோடி எதை சொன்னாலும் நாம் நம்பக்கூடாது. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதைப் போல மோடிப் புளுகு என்ற சொற்றொடரை இனி நாம் வைத்துக் கொள்ளலாம். மோடி, விவசாயிக்கு வேலை கொடுக்க வேண்டாம், விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டாம். ஆனால் நெடுவாசல், கதிராமங்கலம் திட்டத்தையாவது நிறுத்தலாமே.
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி என்று அடுத்தடுத்த தாக்குதலைகளை நம் மீது தொடுக்கிறது மோடி அரசு. எல்லாவற்றிற்கும் வரிக்கு மேல் வரி போட்டு மக்களைக் கொல்லுகிறார் மோடி. மக்கள் வாழ்வதற்கு வழி கிடையாது. ஆனால் அவர்களிடம் பிடுங்குவதற்கு மட்டும் இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?
எல்லாம் தனியார்மயம். கார்ப்பரேட்மயம் ஆன பிறகு நாம் தனித்தனியாக போராடுகிறோம். விசயங்களை நாம் இணைத்துப் பார்ப்பதில்லை. மோடியின் எடுபிடி எடப்பாடியிடம் போய் நாம் கோரிக்கை வைக்கலாமா? எத்தனை வகைப் போராட்டம் நடத்தினாலும் மக்கள் சாகட்டும் என அமைதி காக்கிறது அரசு. இவருக்கு நம்மை ஆள என்ன தகுதி இருக்கிறது?
தண்ணீர், பள்ளிக்கூடம், மருத்துவம், உணவு உள்ளிட்ட அனைத்தையும் தனியார்மயமாக்கி நம்மைக் கார்ப்பரேட்டுகளிடம் பணிய வைக்க நினைக்கிறது மோடி அரசு. நமது தண்ணீரை எடுத்து நமக்கே லிட்டர் 22 ரூபாய்க்கு கார்ப்பரேட் விற்கிறான். இவன் கையில் அரிசி சென்றால் நம் கதி என்ன? இவர்களால் ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய முடியுமா? மன்னனோ, அரசோ விவசாயத்தை உருவாக்கவில்லை. விவசாயம் மனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சி. அதனை அழிக்கப் பார்க்கிறது மோடி அரசு.
காலனியாட்சிக் காலத்தில் இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுயிக், தனது வீடு, வாசல், சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினார். இன்று, ஐந்து மாவட்ட விவசாயிகள் அந்த அணையால் பயன்பெறுகிறார்கள். நம்மிடம் வரி பிடுங்கும் இந்த அரசு விவசாயிகளுக்காக என்ன செய்துள்ளது?
கடந்த 5 வருடங்களாக காவிரி வரவில்லை. 20 ஆண்டுகாலமாக இவர்களால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியவில்லை. வருடா வருடம் விவசாயிகள் பிரச்சினையை சந்திக்கிறார்கள். வழக்கு நடைபெறுகிறது. இது என்ன கிரிமினல் வழக்கா? மேல்முறையீடு செய்து பின்னர் விசாரிப்பதற்கு? இது விவசாயிகளின் உரிமை சம்மந்தப்பட்ட பிரச்சனை. இதனை பற்றி யாரும் டீவியிலோ வேறெங்குமோ பேசுவதில்லை, விவாதிப்பதில்லை. மாறாக யார் முதல்வர், யார் பொதுச்செயலாளர் என்ற பிரச்னையை தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சியில் தினந்தோறும் இதே கூத்து தான் நடக்கிறது.
தனியார் மயம் வேலை வாய்ப்பைப் பெருக்கும் என்று கூறினார்கள், இன்று பி.எஹ்ச்டி. (முனைவர் பட்டம்) படித்தவன் டாஸ்மாக்கில் சரக்கு ஊற்றிக் கொடுக்கும் வேலையைச் செய்கிறான். இது தான் இவர்கள் உருவாக்கிய வேலை வாய்ப்பு.
மண்ணோடு உறவாடும் விவசாயி மண்ணாகவே இருக்கிறான். மழை, வெயில், விலை பொருளுக்கு விலை இல்லை என்று எதனால் நஷ்டமடைந்தாலும் அரசு ஏதாவது தராதா என்று எதிர்பார்த்து விட்டுப் போய் விடுகிறார்கள். விவசாயிகள் கொஞ்சம் முன்முயற்சி எடுக்க வேண்டும், எதிர்த்துப் போராட வேண்டும். நெடுவாசல், கதிராமங்கலம் மக்கள் முன்முயற்சி செய்தார்கள். இன்றைக்கு தமிழகமே அவர்களுக்கு அதரவு தருகிறது.
கடன் தள்ளுபடி செய்யச் சொல்லிப் போராடும் விவசாயிகளை சொந்தக் காலில் நிற்க சொல்கிறது இந்த அரசு. அதனை முதலாளிகளிடம் சொல்வது தானே? அரசு விவசாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை கைவிட்டு விட்டது. விவசாயத்தை முன்னேற்ற அதனிடம் எதாவது திட்டம் உள்ளதா? அரசைப் பொறுத்தவரையில் நாம் அனைவரும் குடிமக்கள் இல்லை. நுகர்வோர். எல்லாவற்றையும் வாங்கி அனுபவிக்கும் ஒரு நுகர்வோர். மொழி, உரிமை, பண்பாடு என எதுவும் பேசாதே என்பது தான் அரசின் கொள்கை.
ஒ.பி.எஸ். முதல் எடப்பாடி வரை அனைவரும் ஏரியா ரவுடி போல் அரசியலில் உருவாகி விட்டனர். இவர்களுக்குள் இருக்கும் போட்டியே பாஜக காலை நக்கிப் பிழைப்பதில் தான் இருக்கிறது. மக்களும் இவர்களுக்கு மாற்று, இன்னொரு மாற்று என தேடிக் கொண்டிருக்கிறார்கள். என்னை முதல்வராக்கினால் பிரச்னையை தீர்ப்பேன் என வாய்ச்சவடால் அடிக்கிறவன், எப்படித் தீர்ப்பேன் எனச் சொல்ல வேண்டுமல்லவா ? இந்தக் கார்ப்பரேட் கொள்ளையை எப்படி ஒழித்துக் கட்டப் போகிறார்கள் ?
சரி உடனடிப் பிரச்சினைக்கு வருவோம். கடன் தள்ளுபடி இப்போது அவசியம். கந்துவட்டி முதல், மைக்ரோ பைனான்ஸ் வரை எல்லாக் கடன்களையும் கட்ட மறுப்போம். தஞ்சாவூர் மாநாட்டில் சொல்லிவிட்டார்கள் என கடன்களை நாமே தள்ளுபடி செய்து கொள்ளுவோம். கட்ட முடியாது என்றால் என்ன செய்து விடுவான் என்று பார்ப்போம். கந்து வட்டிக்காரனோ, மைக்ரோ ஃபைனான்ஸ் காரனோ, வங்கிக் காரனோ யாராவது ஒருவர் வீட்டில் வந்து கடனைக் கேட்டு அவமானப்படுத்தினால் அனைவரும் ஒன்று கூடுங்கள்.
மக்கள் அதிகாரம் கூட்டம் நடத்துவதற்குப் போலீசு ஏன் பயப்படுகிறது? மக்கள் அதிகாரம் தமிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகளை உடைக்கவில்லை. ஆனால் மக்களுக்கு அறைகூவல் விட்டது,. “ குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே.. தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே .. மூடு கடையை.. எவன் வருவான் பார்ப்போம்.. “ என்றோம். மக்கள் அதன் பின்னர் ஒவ்வொரு போராட்டத்திலும் கையில் கடப்பாறைகளோடு புறப்பட்டனர். தமிழகமே போர்க்கோலம் பூண்டது.
நீதிமன்றத்தில் இந்த மாநாடு நடத்த விடாமல் தடுப்பதற்கு பல வித காரணங்களைச் சொன்னது போலீசு. நாம் தஞ்சையில் மாநாடு நடத்துவது அவர்களுக்குப் பயத்தை அளிக்கிறது. கதிராமங்கலத்தில் இருந்தும் நெடுவாசலில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து கலந்து கொள்வார்கள் என அஞ்சி நடுங்குகிறது. அதனால் தான் கும்பகோணத்தில் சீமானை வைத்து விவசாயிகள் மாநாடு ஒன்றை நடத்துகிறது. அதனால் தான் மாநாட்டிற்கு வரும் ஒவ்வொருவரையும் கண்காணிக்கிறது.
ஒரு நோட்டீசு கொடுத்ததற்கு கைது செய்கிறது. ஆர்.கே.நகரில் தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்த வழக்கில் ’ஏ1’ எடப்பாடி தான். அவரை ஏன் கைது செய்யவில்லை ? சட்டவிரோத குட்கா விற்பனை வழக்கில் மாட்டிய, மெத்தப்படித்த IPS உயரதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை ? சகாயம், ரஜினி, கமல், சீமான் என எல்லாரும் சொல்கிறார்கள் சிஸ்டம் சரியில்லை என்று. ஆனால் இவர்கள் தங்களை இந்த சிஸ்டத்திற்குள்ளேயே அங்கீகரிக்கச் சொல்லுகிறார்கள். சரியில்லாத இந்த சிஸ்டத்திற்குள்ளேயே எப்படித் தீர்வு காண முடியும் ?
சேலம் இரயிலில் 5 கோடி பணம் கொள்ளை போனதற்குப் போலீசின் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. SVS கல்லூரி மோசடிக்கு உடந்தையாக இருந்த துணைவேந்தர் சீதாலட்சுமிக்கு பி.சி.ராய் விருது வழங்கியிருக்கிறார்கள். புதுச்சேரியில் தெய்வசிகாமணி என்றொரு எஸ்.பி., கூலிப்படைகளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ள அவருக்கு ஜனாதிபதி விருது கொடுக்கிறான். கோவை ஹவாலா பணத்தைப் போலீசே கடத்தியது வரை எல்லாம் இந்த அதிகாரவர்க்க கும்பல் தான் செய்கிறது. இவர்களால் எப்படி மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தர முடியும்?
மறுகாலனியாக்கக் கொள்கைகளைக் கடைபிடிக்கும் அரசு, மக்களை வேட்டையாடுவதிலேயே குறியாக இருக்கிறது. ஊருக்குள் புகுந்த வெறிபிடித்த மிருகத்தை இடைவெளி கொடுக்காமல், சுற்றி வளைத்து நின்று அடிப்பது போல் இந்த வெறி பிடித்த அரசின், ஓ.என்.ஜி.சி, ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகிய பல்வேறு வடிவங்களில் வரும் கார்ப்பரேட் மயம் என்னும் மிருகத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடித்துக் கொல்ல வேண்டும்.
நாம் மக்கள் சக்தியை ஆக்கப் பூர்வமாக பார்க்கிறோம். விவசாயிகளை இச்சமூகத்தின் மூத்த குடிகளாகப் பார்க்கிறோம். ஆனால் அரசோ விவசாயிகளை ’செத்து ஒழி’ என்கிறது. விவசாயம் ஒழிந்தால், அதனைச் சார்ந்து உள்ள சிறு தொழில்களும் அதனை நம்பியுள்ள கோடிக்கணக்கான சிறு தொழில் வியாபாரிகளும் பாதிக்கப்படுவர். ஆக மாணவர்களும், சிறு வியாபாரிகளும், விவசாயிகளும் ஒன்றிணைந்து போராடும் போது தான் தீர்வு கிடைக்கும். இது ஒரு நாளில் தீரக்கூடிய பிரச்சினை அல்ல. அதனால் தான் “விவசாயியை வாழவிடு” என மக்கள் அதிகாரம் ஒரு நீண்டகாலப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கிறது. மக்களாகிய நீங்கள் தலைமை தாங்குங்கள். உங்கள் பின்னே நாங்கள் அணிதிரள்கிறோம்.
ஜெயராமனை சிறையில் அடைத்துப் பிணை வழங்காமல் இருக்கும் நீதிமன்றத்தின் முன் நின்று போராட வேண்டும். ’வாழவிடு’ என நீதிமன்றம் முதல் ஆட்சியாளர்களின் வீடு வாசல் வரை அவர்களைத் தூங்கவிடாமல் செய்ய வேண்டும். இனி அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. போராடித் தான் ஆக வேண்டும். ஏனெனில் அறிவிக்கப்படாத ஒரு உள்நாட்டுப் போரை நம் மீது பாஜக-கார்ப்பரேட் அரசு தொடுத்துள்ளது. இந்த மிருகத்தை நாம் அனைவரும் இணைந்து அடித்து விரட்ட வேண்டும் ! விரட்டுவோம் !!
மக்கள் அதிகாரம் தமிழகத்திற்கு ஒரு கலங்கரை விளக்காக மாறும். நெடுவாசல், கதிராமங்கலம் தொடங்கி வரவிருக்கும் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் வரை, ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க அரசை அனுமதிக்க முடியாது என அரணாக நாம் அனைவரும் நிற்கவேண்டும். மக்கள் அதிகாரம் என்ற இந்த அரசியல், இந்த அமைப்பு தமிழகத்தில் தலைமை தாங்கி ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும் . அதற்கான தொடக்கமாக இந்த மாநாடு அமையும் !!
– வினவு செய்தியாளர்கள்
_____________
விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி !
ஆதார் எண் இல்லாவிட்டால் எனக்குமரணசர்டிஃபிகேட்தரமுடியாது என்றுசொல்லிவிட்டார்கள்.
நான் சரியாக
இன்று மாலை ஆறு மணிக்கு
இறக்கவிருப்பதாக முடிவெடுத்து
அனைவருக்கும் சொல்லி அனுப்பி விட்டேன்.
கடைசி நேரத்தில் வழிமறித்து
ஒரு எண்ணைக் கேட்டு
நிர்பந்திக்கிறார்கள்.
என்னிடம் இறப்பதற்கு
போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன
சாதிச்சான்றிதழ் இருக்கிறது
மதச் சான்றிதழ் இருக்கிறது
ரேஷன் கார்டு இருக்கிறது
கல்விச் சான்றிதழ் இருக்கிறது
எல்லாவற்றுக்கும் மேலாக
பிறப்புச் சான்றிதழ் இருக்கிறது
நான் பிறந்திருப்பதாலேயே இறக்க நேர்கிறது
என்பதையாவது
அரசரே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனக்கு நேரமாகிக் கொண்டிருக்கிறது
நான் இன்று இறந்து விடுவேன் என்று
என் நண்பர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை
நான் நிறைவேற்றியே தீரவேண்டும்.
அரசரே
உங்கள் அக்கறை எனக்குப் புரிகிறது
நான் சொர்கத்திற்கு போவதாக இருந்தாலும் சரி
நரகத்திற்குப் போவதாக இருந்தாலும் சரி
அங்கே என் ஆதார் எண்ணைக் கேட்பார்கள்
என்பதற்காகத் தானே நீங்கள் அவசரப்படுகிறீர்கள்
நான் எங்கும் போகாமல்
இங்கேயே ஆவியாக சுற்றித் திரிந்தாலும்
ஆதார் எண் தேவை என்பதை
எனக்கு நீங்கள் புரிய வைக்கிறீர்கள்.
ஒரு மனிதன் இறந்து விடுகிறான்
அரசரே நீங்கள் அவனிடம் வருகிறீர்கள்
அவனது விழித்திரையை
திறந்து பார்க்கிறீர்கள்
அதை படம் எடுத்துக் கொள்கிறீர்கள்
பிறகு அந்த பிரேதத்தை படம் எடுக்கிறீர்கள்
பிறகு அந்தப் பிரேதத்தின் படத்தை ஒட்டிய
ஒரு ஆதார் அட்டையை
அதன் கையில் திணிக்கிறீர்கள்
இந்தக் காட்சி பயங்கரமாக இருக்கிறது
நீங்கள் பிணங்களிடமிருந்து திருடுகிறவர்களை போல
ஏன் நடந்து கொள்கிறீர்கள்?
அல்லது பிணங்களிடமிருந்து திருடும் பழக்கத்தை
ஏன் உங்களால் கைவிட முடியவில்லை?
அரசரே
ஆதார் எண் இல்லாமல்
என்னைச் சாக அனுமதியுங்கள்
சாவுக்கு பிறகு எனக்கு நிறைய
ரகசியத் திட்டங்கள் இருக்கின்றன
நான் ஒரு பூனைக்குட்டியாக பிறந்து
என் காதலிகளைத் தேடி செல்லவிருக்கிறேன்
ஒரு கழுகாக பிறந்து
உங்கள் தலைக்கு மேல் பறக்க விரும்புகிறேன்
கடவுள் எனக்கு இழைத்த அநீதிக்காக
அவரை வீடு தேடிச் சென்று பழி தீர்க்க திட்டமிட்டிருக்கிறேன்
நீங்கள் என்னை ஆதாரில் இணைத்துவிட்டால்
சாவுக்குப் பின் நான் செய்யக்கூடிய
அனைத்தும் கண்காணிக்கலாம் என்பது தானே
உங்கள் திட்டம்
அரசரே
சாவு என்பது அந்தரங்கமானது
சாவு என்பது அதிகாரத்திலிருந்து விடுபடுவது
சாவு என்பது தண்டனைகளை புறக்கணிப்பது
சாவு என்பது சட்டங்களுக்கு வெளியே இருப்பது
சாவு என்பது ஒழுங்குகளை கடைபிடிக்காதது
சாவு என்பது பூர்வீக நிலைகளுக்கு திரும்புவது
சாவு என்பது அரசர்கள் இல்லாத ஒரு தீவில் தனித்திருப்பது
அரசரே
நேற்று நீங்கள் என்னை
வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நிற்க வைத்தீர்கள்
இப்போது மயான வாசலில் நிற்க வைத்திருக்கிறீர்கள்
மனது வைய்யுங்கள்
எனக்கு இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கிறது
இந்திய அரசியலில் மக்களால் அதிகம் கேலி செய்யப்பட்ட வாக்குறுதி, திருவாளர் மோடியின்“உங்கள் வங்கிக் கணக்கில் கருப்புப் பணத்தை போடுவேன்” என்பதுதான். அதன் பிறகு இந்தா, அந்தா என பந்தாவாக மாதம் ஒரு அறிவிப்பு வரும். அதாவது கருப்புப்பணத்தை மீட்க ராணுவம் தயாராகி விட்டது, ஒப்பந்தம் ரெடி, மோடி சிண்டைப் பிடித்து விட்டார் என்று எதாவது ஒன்றை அடித்து விடுவார்கள்.
பனாமா லீக்ஸ் ஊழல் வந்த போது அதானி முதல் அமிதாப் வரை பலர் சிக்கினாலும் அனைவரும் இன்று வரை பாதுகாப்பாகவே உள்ளனர். ஜனநாயகம் முதிராத நாடு என்று இந்திய ஊடகங்களால் இகழப்படும் பாக்கிலேயே நவாஸ் ஷெரிஃப் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். இங்கோ மோடியின் பணமதிப்பழிப்பு காலத்திலேயே பண மழை பொழிந்து திருமணம் நடத்திய கர்நாடக ரெட்டி சகோதரர்கள் மீது ஒரு துரும்பு கூட படவில்லை.
இந்நிலையில் புதிய அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. ஜூன் மாதம் சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி இனிமேல் சட்டவிரோதமாக கருப்பு பணத்தை போடும் இந்தியர்கள் குறித்த தகவலை சுவிஸ் அரசு இந்திய அரசுக்கு தெரிவிக்குமாம்.
இந்தியா உள்ளிட்ட 40 நாடுகளுடன் சுவிஸ் அரசு இனிமேல் “தானியங்கி தகவல் பரிமாற்ற வசதியை” அறிவித்திருக்கிறதாம். இதன்படி இந்தியாவில் இருந்து ஒருவர் அங்கே பணம் முதலீடு செய்தால் நம் நாட்டிற்கு தானாகவே அந்த தகவல் வந்துவிடுமாம். இந்த புதிய வசதி 2018-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 2019 ம் ஆண்டில் முதல் தகவல் கிடைக்குமாம்.
ஏற்கனவே கருப்புபணம் என்பது சட்டபூர்வமாக பார்ட்சிபேட்ரி நோட்டாக உள்ளே வருகிறது. பனாமா போன்ற நாடுகளில் சட்டப் பூர்வ முதலீடாக உலகெங்கும் பறக்கிறது. இப்படி கொள்ளையே நவீனமாக மாறி வரும் நிலையில் இனி 2019 முதல் சுவிஸ் அரசின் தகவல் அளிப்பால் யாருக்கு பயன்?
இந்த அறிவிப்பு வந்த பிறகு எவன் அங்கே கருப்பாக போடுவான்? இருப்பினும் புதிய 2000 ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் கோடு இருப்பதால் கருப்பு எங்கே போகிறது என்று ரூட் போட்டு மோடி பிடிப்பார் என்று சில அறிஞர் பெருமக்கள் நம்பத்தான் செய்கிறார்கள். அவர்களுடைய ஜனநாயக உரிமையை மதித்து சுவிஸ் அரசு அறிவிப்பு குறித்து இன்றைய கருத்துக் கணிப்பு! வாக்களியுங்கள்!
சுவிஸ் அரசின் அறிவிப்பால் என்ன நடக்கும் ?
கருப்புப் பணத்தை மோடி மீட்பார்.
இந்திய மக்களுக்கு கருப்புப் பணம் கிடைக்காது.
கருப்பு பண மீட்பில் ஏதோ கொஞ்சம் முன்னேற்றம்.
________________
இந்தக் கருத்துக் கணிப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் அறிமுகப்படுத்திய காலந்தொட்டே ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்குக் கிடைத்து வரும் அரைகுறையான உணவுப் பாதுகாப்பையும் ஒழித்துக் கட்டுவதையே ஆட்சியாளர்கள் ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகின்றனர்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வெள்ளை நிற அட்டை, பச்சை நிற அட்டை என ரேசன் அட்டைகள் பிரிக்கப்பட்டு, அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் பெரும்பாலான மாநிலங்களில் படிப்படியாக ஒழித்துக்கட்டப்பட்டது. மானிய விலையில் அடிப்படை உணவுப் பொருட்களைப் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ”தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்” என்ற வஞ்சகமான சட்டத்தைக் கொண்டு வந்தது, மன்மோகன்சிங் அரசு.
இதற்காகவே, நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ. 29/- க்கு அதிகமாகவும், கிராமப்புறங்களில் ரூ.23/-க்கு அதிகமாகவும் வருமானம் உள்ள அனைவரும் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்வதாக வரையறுத்தது, திட்டக் கமிசன். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே பொது விநியோக முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தது அன்றைய மன்மோகன்சிங் அரசு.
இதன்படி நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ. 30/-க்கு அதிகமாக வருமானம் உள்ள ‘பெரும் பணக்காரர்களுக்கு’ ரேசன் மானியத்தை இரத்து செய்தது மன்மோகன் சிங் அரசு. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும் மானியத்தையும் படிப்படியாகக் குறைக்க, நேரடிப் பணப் பட்டுவாடாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையே கொஞ்சம் பெயரை மாற்றி கவர்சிகரமான முறையில், “உங்கள் பணம் உங்கள் கையில்” என்று அறிமுகப்படுத்தினார் மோடி.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கம் ரேஷன் கடைகளை இழுத்து மூடுவது தான் என்பதை இச்சட்டம் கொண்டு வரப்பட்ட நாளிலிருந்தே ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் கடுமையாக எதிர்த்தன. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியல்ரீதியில் ஆளும்கட்சி தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம் என்பதையும், ரேஷன் கடைகளை இழுத்து மூடினால், அடுத்த தேர்தலில் தமது கட்சிக்கு டெபாசிட் கூடக் கிடைக்காது என்பதையும் அன்றைய ஜெயலலிதா அரசு அறிந்திருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்” தமிழகத்தின் பொது விநியோக முறைக்கு எதிராக உள்ளதென குறிப்பிட்டு அதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மறுத்து வந்தது தமிழக அரசு. அதன் தொடர்ச்சியாக, மாதந்தோறும் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து வரும் அரிசி ஒதுக்கீட்டில் சுமார் 1.26 இலட்சம் டன் அரிசி, சந்தை விலையான ரூ.22.53-க்கு மட்டுமே இனி தரப்படும் எனக் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவித்தது மோடி அரசு. இதன் தொடர்ச்சியாகத் தமிழக அரசு வழங்கி வரும் விலையில்லா அரிசி வழங்குவதற்கான மானிய நிதிச்சுமை அதிகரித்தது.
தற்பொழுது தமிழகத்திலுள்ள இரண்டு கோடியே மூன்று இலட்சம் குடும்ப அட்டைகளுள் ஒரு கோடியே தொண்ணுத்தொரு இலட்சம் குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று, மானிய விலையில் சர்க்கரை, பாமாயில், கோதுமை, துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன. அதிலும் கூட பல்வேறு பொருட்கள் அறிவிக்கப்படாமலேயே இரத்து செய்யப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மலிவு விலையில் உளுந்தம் பருப்பு வழங்குவது முற்றிலும் இரத்து செய்யப்பட்டுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் முதல் வாரத்தில் மட்டுமே ரேஷன் கடைகளில் இருப்பு உள்ளது. 10ம் தேதிக்கு பிறகு ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்களுக்கு பெரும்பான்மையான பொருட்கள் கிடைக்காத நிலை தான் தற்போது உள்ளது. எனினும் பெயரளவிற்காவது இப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது தமிழக அரசு ”தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில்” சேர்ந்து விட்டதால், ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் குடும்பத் தலைவரின் மாத வருமானம் ரூ.8,334 -க்கு மேல் இருந்தால் ரேஷனில் அரிசி, சர்க்கரை உட்பட எந்த பொருட்களும் வழங்க முடியாது எனப் பெரும்பான்மை தமிழக மக்களின் தலையில் கல்லைத் தூக்கி போட்டுள்ளது எடப்பாடி அரசு.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, குடும்பத்தில் ஒருவர் வருமான வரி செலுத்தினால் ரேஷன் பொருட்கள் பெற முடியாது. தொழில்வரி செலுத்துபவர்களை கொண்ட குடும்பங்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள், மத்திய மற்றும் மாநில அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், மத்திய-மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள் மற்றும் கார், ஏசி, மூன்று அறைகள் அல்லது அதற்கு மேற்பட்ட அறைகள் கொண்ட வீடு உள்ளவர்கள், பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்றும். அவர்கள் புதிதாக ரேஷன் கார்டு பெற முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
இவ்வுத்தரவின் படி, ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் இனி ரேசன் பொருட்கள் கிடையாது. தமிழகத்தில் நன்செய், புன்செய் நிலம் என்ற அடிப்படையில் பயிரிடப்படுகிறது. புன்செய் நிலத்தில் மழை பெய்யும் போது செய்யப்டும்“மானாவரி” விதைப்பு தான் நடக்கும். இதற்காக வாங்கப்பட்ட கடன்களைக் கூட அடைக்க முடியாத அவலநிலையில் தான் விவசாயிகள் உள்ளனர். இதில் ஒரு விவசாயி எந்த அளவிற்கு நட்டமடைகிறார் என்று சமீபகாலமாக தற்கொலைக்குள்ளாகும் தமிழக விவசாயிகளே சாட்சி. இவர்களில் பெரும்பான்மையானோர் ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் தான். ஆக, வறட்சி உள்ள காலங்களில் இதுவரை விவசாயிகளுக்குக் கிடைத்து வந்த அரை வயிற்று ரேசன் அரிசிக் கஞ்சியையும் இந்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தடுத்து விடும்.
அதோடு, உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதும், இந்த தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் காரணமாக பாரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் பெரும்பான்மை விவசாயிகள் பாதிக்கப்படுவர். நாட்டில் 70% பேர் நாளொன்றுக்கு வெறும் 20 ரூபாயை மட்டும் கூலியாகப் பெறும் நிலையில் இத்திட்டம் பெரும்பான்மை உழைக்கும் மக்களை பட்டினிச் சாவை நோக்கியே தள்ளும்.
மாநிலத்தின் வரி வருவாய் மூலம், இதுவரை விலையில்லா அரிசியை வழங்கி வந்த தமிழக அரசு, தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் தனது சொந்த வரி வருவாயையும் இழந்துள்ளது. இச்சூழலில் தான் ”தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டாலும், அனைவருக்குமான பொது விநியோக முறையும், விலையில்லா அரிசித் திட்டமும் தொடரும்” என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வாய்க்கூசாமல் பேசுகிறார்.
அரசு உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதையும், அவற்றை மானிய விலையில் ரேஷன் கடைகளின் மூலம் விற்பதையும் சந்தையில் தலையீடு செய்யும் நடவடிக்கை எனக் கூறி இத்தகைய நடவடிக்கைகளை வளரும் நாடுகள் கைவிட வேண்டும் என உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நிதியாதிக்க நிறுவனங்கள் வற்புறுத்துகின்றன.
அதனை அட்சரம் பிசகாமல் நடைமுறைப்படுத்தி வருகிறார் மோடி! மோடியின் ஏகாதிபத்திய – கார்ப்பரேட் விருந்துக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறது அடிமைகளின் கூடாரமான எடப்பாடி அரசு!! இனியும் பொறுத்துக் கொள்ளப் போகிறோமா ? என்பதே நம் முன் உள்ள கேள்வி!!!
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
தமிழ் சினிமாவில் அடிப்படைத் தொழிலாளிகளுக்கான ஒரே அமைப்பு “தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்”. சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற “பில்லா பாண்டி” படப்பிடிப்பில் பயணப்படி கேட்டு தொழிலாளிகள் போராட்டம் நடத்தினார்கள். தயாரிப்பாளர் தரப்பில் பயணப்படியை உயர்த்துவதற்கு மறுத்து விட்டதால் பெப்சி தொழிலாளிகள் படப்பிடிப்பை நிறுத்தினார்கள்.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டம் நடிகர் விஷால் தலைமையில் நடந்தது. இதில் வேலை நிறுத்தம் செய்யும் பெப்சி தொழிலாளிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு வேறு தொழிலாளிகளை வைத்து படப்பிடிப்புகளை நடத்துவோம் எனத் தயாரிப்பாளர்கள் மிரட்டினார்கள்.
தொழிலாளர் சங்கமாக இருந்தாலும் இன்னமும் ஒரு தொழிலாளியின் சுயமரியாதையை வைத்திராத சங்கமாக இருக்கும் பெப்சி உடனே தயாரிப்பாளர் சங்க தீர்மானத்தால் பின்வாங்கியது. அதன்படி “பில்லா பாண்டி” படப்பிடிப்பை நிறுத்தியதற்காக வருத்தம் தெரிவித்தது. ஆனாலும் தயாரிப்பாளர் சங்கம் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச் செயலாளர் ஏ.சண்முகம், பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் தலைமையில் கூடிய பெப்சி தனது முடிவை அறிவித்தது. கடந்த 2, 3 மாதங்களாக இழுபறியில் இருக்கும் சம்பள பேச்சு வார்த்தைகளை பேசி முடித்து ஊதிய உயர்வு குறித்து பொது விதிகள் முடிவு செய்து புத்தகமாக அச்சிட வேண்டும் என பெப்சி தெரிவித்தது.
சமாதானமாக போக விரும்பினாலும் தயாராப்பாளர் சங்கம் அதை பொருட்படுத்தவில்லை என்பதால் ஜூலை 1, 2017 முதல் வேலை நிறுத்தம் செய்வோம், இதில் 25 ஆயிரம் தொழிலாளிகள் கலந்து கொள்வார்கள் என பெ பெப்சி அமைப்பு அறிவித்திருக்கிறது.
தற்போது ரஜினி, விஜய், விஷால் உள்ளிட்ட பலர் நடிக்கும் 35 படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெப்சி தொழிலாளிகள் பங்கேற்க மாட்டார்கள் என ஆர்.கே.செல்வமணி கூறினார்.
தயாரிப்பாளர் சங்கத் துணை தலைவரும் நடிகருமான பிரகாஷ் ராஜ் கூறும் போது, “பெப்சி தொழிலாளர்களுடன் மட்டும்தான் வேலை பார்ப்போம் என்பதை ஏற்க மாட்டோம். தொழிலாளிகளின் சம்பள உரிமையோடு எங்களது உரிமை குறித்துப் பேசவும் தகுதியுள்ளது” என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறும் போது, “எங்கள் படப்பிடிப்பிற்கு பெப்சி உறுப்பினர்கள் தடங்கல் ஏற்படுத்தினால் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
1995-ம் ஆண்டில் இதே போன்று பெப்சி தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்த போது அதை படைப்பாளிகளின் படைப்புரிமை என்று திசை திருப்பினார்கள். தற்போதும் அதே போன்றதொரு பார்வையில் பேசுகிறார்கள். விஷால், பிரகாஷ் ராஜ் போன்ற நடிகர்கள் தயாரிப்பாளர்களாவும் இருப்பதால் ஒரு முதலாளியின் குரலில் கொக்கரிக்கிறார்கள்.
வேலை நிறுத்தம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை எந்த தொழிலாளியும் பொழுது போக்கிற்காகவோ, அடிக்கடியோ பயன்படுத்துவதில்லை. நியாயமான ஊதியம் கிடைக்காத போதே அவர் அந்த ஆயுதத்தை எடுக்கிறார். இங்கே நியாயம் பேசும் விஷால் போன்ற சண்டியர்கள் கேரளாவில் போய் இப்படி எந்த தொழிலாளியை வைத்தாவது வேலை செய்வோம் எனக் கூறி முடியுமா? பேசினால் அங்கே வாய் இருக்காது. அந்த அளவுக்கு அங்கே தொழிலாளிகளின் உரிமையும், பாதுகாப்பும் இருக்கின்றது.
தமிழப் படங்களில் வரும் பண்ணையார்களைப் போலவே இந்த நடிகர்கள் – தயாரிப்பாளர்கள் தெனவெட்டாக பேசுகிறார்கள். தமிழ் சினிமாவில் ஈழம், தமிழுரிமை, முற்போக்கு, தலித், பெண்ணுரிமை எனக் குரல் கொடுக்கும் முற்போக்கு இயக்குநர்கள் யாரும் இத்தகைய தருணங்களில் தொழிலாளிகளுக்காக குரல் கொடுப்பதில்லை. இதுதான் இவர்களது உண்மை முகம்.
தற்போது அதிமுக ஊழலை எதிர்க்கும் கமலஹாசனோ, அரசியலுக்கு வருவேன் என்று பூச்சாண்டி காட்டும் ரஜினியோ, தொழிலாளிகளுக்கு பிரியாணி போட்ட புகழ் அஜித்தோ, அடுத்த முதல்வர் ஆசையில் இருக்கும் விஜய்யோ யாரும் தொழிலாளிகளுக்காக குரல் கொடுக்க மாட்டார்கள்.
பெப்சி சம்மேளனத்தில் இருக்கும் ஒளிப்பதிவாளர் சங்கம் போன்ற ஓரிரண்டு சங்கங்களை பிரித்து இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் செய்ய முயல்கிறார்கள். எனினும் லைட்மேன், சமையல் உதவியாளர் சங்கம் போன்ற அடிப்படைத் தொழிலாளிகள் இதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இதில் நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள்?
இந்தக் கருத்துக் கணிப்பு செய்திப் பதிவு உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
“இந்திய விவசாயிகள் போராடுகிறார்கள். அரசு தலையிட வேண்டுமென்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இந்த இடத்தில் எல்லோருக்கும் ஒரு விசயத்தை தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. இந்திய விவசாயிகள் போண்டியாகி அழியத்தான் வேண்டும். அதை தடுக்க முடியாது. ஏனென்றால், பொருளாதார வளர்ச்சி என்பதே இப்படித்தான் நடக்கும்.
அதிகமான உழைப்பாளிகள் தேவைப்படுகின்ற, மழையை நம்பி நடைபெறுகின்ற, உற்பத்தித் திறன் குறைந்த இந்த விவசாயத்தை தலைமுழுகிவிட்டு, விவசாயிகள் வெளியேறட்டும். தொழிற்சாலை வேலை அல்லது சேவைத்துறை வேலை என்பன போன்ற உருப்படியான வேலை ஏதாவது இருந்தால் அதைச் செய்யட்டும்.”
என்கிறது அமெரிக்காவிலிருந்து வெளிவரும் உலக முதலாளி வர்க்கத்தின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை.
இதையே வழிமொழிந்து ”நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு ஊரைத் தியாகம் செய்யலாம்” என்கிறார் தமிழக பாஜக -வின் முன்னாள் தலைவர் இல.கணேசன். ஒரு படி மேலே சென்று கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சினைகளைப் பேசினாலே வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது எடப்பாடியின் அடிமை அரசு.
இந்த நிலையில் ”விவசாயத்தை அழிக்கும் காவி பரிவாரமே வெளியேறு !” எனப் போர்க்குரலாக ஒலிக்கிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ”எங்க மண்ணு.. எங்க ஊரு.. மீத்தேன் எடுக்க நீ யாரு?” பாடல். பாருங்கள், பகிருங்கள்!
வீடியோவைப் பதிவிறக்கம் செய்ய
பாடல், இசை, தயாரிப்பு: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வீடியோ ஆக்கம் வினவு
_______________________
இந்தப் பாடல் வீடியோ உங்களுக்குப் பிடித்திருக்கிறதா! விவசாயிகளுக்கு ஆதரவான ம.க.இ.க பாடல்களை இசைக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
ஃபோர்ப்ஸ் – அமெரிக்காவிலிருந்து வெளிவரும் உலக முதலாளி வர்க்கத்தின் பத்திரிகை. சமீபத்தில் ம.பி., மகாராட்டிரா விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது, அந்தப் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம் இது.
இந்திய விவசாயிகள் போராடுகிறார்கள். அரசு தலையிட வேண்டுமென்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இந்த இடத்தில் எல்லோருக்கும் ஒரு விசயத்தை தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. இந்திய விவசாயிகள் போண்டியாகி அழியத்தான் வேண்டும். அதை தடுக்க முடியாது. ஏனென்றால், பொருளாதார வளர்ச்சி என்பதே இப்படித்தான் நடக்கும்.
அதிகமான உழைப்பாளிகள் தேவைப்படுகின்ற, மழையை நம்பி நடைபெறுகின்ற, உற்பத்தி திறன் குறைந்த இந்த விவசாயத்தை தலைமுழுகிவிட்டு, விவசாயிகள் வெளியேறட்டும். தொழிற்சாலை வேலை அல்லது சேவைத்துறை வேலை என்பன போன்ற உருப்படியான வேலை ஏதாவது இருந்தால் அதைச் செய்யட்டும்.
கோடிக்கணக்கான குறு, சிறு விவசாயிகளையும் அவர்களது உடலுழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு சிதறுண்ட அளவில் நடந்து வரும் இந்திய விவசாயம்.
இந்த மாற்றத்தை முடிந்த அளவுக்கு துன்பமில்லாமல் சாதிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், இந்த மாற்றத்தை தடுப்பதென்பது நம் எல்லோரையும் தேவையில்லாமல் வறுமையில் வைத்திருக்கிறது. ஒரு தொழிலை செய்து வாழ முடியவில்லை என்றால், வேறு தொழிலுக்கு மாறிக்கொள்ள வேண்டும். இது சொல்லிப் புரிய வைக்க வேண்டிய விசயமா என்ன? நீ காலாவதியாகிப்போன சாட்டைக்குச்சி உற்பத்தியில் ஈடுபட்டிருந்தாலும் சரி, விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும் சரி, இதுதான் நியதி.
மகாராட்டிர முதல்வர் 30,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி அறிவித்திருக்கிறார். ம.பி. முதல்வர் விளைபொருட்களின் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறார்.… இவையெல்லாம் விவசாயத்தை ஒரு நடவடிக்கை என்ற முறையில் காப்பாற்றும். ஆனால் அந்த நடவடிக்கை, உற்பத்தி திறன் குறைந்த, உழைப்பாளிகள் அதிகம் தேவைப்படுகின்ற நடவடிக்கையாகவே இருக்கும். அதுதான் நமக்குத் தேவையில்லை என்கிறோம். ஒவ்வொரு மணி நேர மனித உழைப்பின் உற்பத்தி திறனும் அதிகரிக்க அதிகரிக்கத்தான் நம்முடைய வாழ்க்கைத்தரம் உயரும். விசயம் மிகவும் எளிமையானது. அதிகமாக உற்பத்தி செய்தால்தான் அதிகமாக நுகர முடியும்.
உற்பத்தி திறன் அதிகரித்தால் பயனடைபவர்கள் யார்? உற்பத்தி செய்பவர்கள்தான். பால் குருக்மேன் கூறுவதைப் போல, உழைப்பின் உற்பத்தி திறன் அமெரிக்காவில் இருப்பதைப் போலவே உலகெங்கும் இருக்குமானால், ஒரு வேலைக்கு அமெரிக்காவில் கிடைக்கின்ற ஊதியம் அனைவருக்கும் கிடைக்கும். ம.பி. முதல்வரை சந்தித்திருக்கும் விவசாய சங்கத் தலைவர் தேவ் நாராயண் படேல், கடன் தள்ளுபடி கேட்டிருப்பதாகவும், குறைந்த பட்ச ஆதரவு விலை கேட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
கடன் என்பது விவசாயத்தின் உள்ளீடு பொருளுக்கான செலவுகளில் ஒன்று. விலை என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் மதிப்பு. உற்பத்திச் செலவுகளைக் காட்டிலும் பொருளின் விலை குறைவாக இருக்கிறது என்றால், அந்த வியாபாரம் நட்டத்தில் நடக்கிறது என்று பொருள். இந்த விசயத்தை இன்னும் ஒருபடி மேலே எடுத்துச் செல்லுங்கள். ஒரு பொருளாதாரத்தில் நட்டத்தை ஏற்படுத்துபவர்கள், மதிப்பை குறைக்கிறார்கள். அதன் மூலம் நம் அனைவரையும் அவர்கள் ஏழையாக்குகிறார்கள்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன தெரியுமா? அது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு அல்ல. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பிலிருந்து, உற்பத்திக்கான உள்ளீடு பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தி செலவுகளை கழித்தால் கிடைப்பதுதான் அது. அது மட்டும்தான் கூட்டப்பட்ட மதிப்பு. நட்டம் என்பது என்ன? நட்டம் என்பது குறைக்கப்பட்ட மதிப்பு. அது மொத்த உள்நாட்டு உற்பத்தியை குறைக்கிறது.
ஒரு பொருளாதாரத்தில் நாம் உற்பத்தி செய்யப்பட்ட மதிப்பைத்தான் நுகர்கிறோம். நட்டம் ஏற்படுத்துகின்ற (விவசாய) நடவடிக்கைகளினால் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு குறைகின்றது என்றால், நாம் குறைவான மதிப்பை நுகர்கிறோம் என்று பொருள். நாம் ஏழையாக்கப்படுகிறோம்.
ம.பி. முதல்வர் அமைதியை நிலைநாட்ட உண்ணாவிரதம் இருக்கிறாராம். காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.க. அரசின் விவசாயி விரோத கொள்கையை எதிர்த்து உண்ணாவிரதமாம். இதன் பின்னால் இருக்கும் அரசியல் காரணங்கள் நமக்குப் புரியாமல் இல்லை.
சுமார் 50% க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த விளங்காத உற்பத்தி திறன் குறைந்த விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஓட்டும் இருக்கிறது. அதனாலென்ன, பொருளாதார விதிகள் ஓட்டுக்கு கட்டுப்படுவதில்லை. அதனால்தான் சொல்கிறோம், விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள். உருப்படியான, உற்பத்தித் திறன் கூடிய வேறு ஏதாவது ஒரு தொழிலைச் செய்யுங்கள்.
நிலங்கள் சிதறிப் போகாமல் பரந்த அளவிலும், மிக நவீன முறையிலும் அமெரிக்காவில் நடந்துவரும் முதலாளித்துவ பண்ணைகள்.
விவசாயத்துறை வல்லுநர் தேவிந்தர் சர்மா கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டுவதை அரசு விரும்பவில்லை. ஏனென்றால், தனது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அது உகந்ததாக இல்லையென அரசு கருதுகிறது.” “கடந்த பல ஆண்டுகளாக விவசாயத் துறையை அரசு திட்டமிட்டே போண்டியாக்கியிருக்கிறது. நமது பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைக்கு குறைந்த கூலியில் ஆட்கள் வேண்டும் என்பதற்காக, விவசாயத்திலிருந்து மக்களை வெளியேற்றி நகர்ப்புறத்தை நோக்கித் துரத்துகிறார்கள். பண வீக்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, உணவுப் பொருட்களின் விலைகள் உயர விடாமல் வேண்டுமென்றே தடுக்கிறார்கள்.”
“தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையிலான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இந்திய விவசாயம் ஒத்துவரவில்லை. விவசாய வருமானம் அதிகரித்தால், விவசாயிகளின் பொருளாதார நிலை உயரந்து விடும். அப்படி நடக்கக் கூடாது என்பதுதான் அரசின் விருப்பம். மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பம்.”
பொருளாதாரத்தில் என்ன நடக்க வேண்டும் என்று நாமும் விரும்புகிறோமோ, அதை தேவிந்தர் சர்மா தெளிவாகச் சொல்லியிருக்கிறார் – இரண்டு சிறிய விசயங்களைத் தவிர.
முதலாவதாக, தற்போது நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் வெளியேற்றத்தை அவர் எதிர்க்கிறார். நாமோ இதுதான் நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
இரண்டாவதாக, தொழில்துறைக்கு குறைந்த கூலியில் தொழிலாளர்கள் வேண்டும் என்பதற்காக விவசாயிகளை விவசாயத்தை விட்டு நாம் வெளியேற்றுவதாக அவர் சொல்கிறார். அது தவறு. நாம் அவர்களுக்கு அதிக ஊதியம் அளிக்க விரும்புகிறோம். விவசாயத்தைக் காட்டிலும் உற்பத்தித் திறன் கூடிய பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அதை செய்ய விரும்புகிறோம். நமக்கு கொஞ்சம் விவசாயிகள் போதும் என்கிறோம். பெரும்பாலான மற்றவர்கள் வேறு காரியங்கள் செய்யலாம் என்கிறோம்.அதானால்தான் விவசாயத்தில் தொடர்ந்து நீடிக்கும்பொருட்டு விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பதை நாம் விரும்பவில்லை.
விளைபொருட்களுக்கு இலாபம் அளிக்கக்கூடிய விலையை நிர்ணயம் செய்யுமாறு அரசை வலியுறுத்தி கோபியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் முன்பாக அப்பகுதி சிறு விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
ஒரு நாட்டிடமோ, மக்களிடமோ செல்வம் கொழிக்கவேண்டும் என்று நாம் விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? அதிக உழைப்பாளிகள் தேவைப்படுகின்ற, உற்பத்தித் திறன் குறைந்த விவசாயத்திலிருந்து வெளியேறி, உற்பத்தி திறன் மிகுந்த வேறு தொழில்களுக்கு மாறிக்கொள்ள வேண்டும். பணக்கார நாடுகளான அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் முறையே 1%, 2% மக்கள்தான் விவசாயத்தில் இருக்கிறார்கள். அந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கும் 1%, 2% தான். அதனால்தான் பொருளாதாரத்தின் மற்ற துறைகளில் உள்ளவர்கள் சராசரியாக எந்த அளவு உற்பத்தித் திறன் வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அதே அளவுக்கு உற்பத்தித் திறன் வாய்ந்தவர்களாக அங்கே விவசாயிகளும் இருக்கிறார்கள். மொத்தமாக பார்க்கும்போது, அந்த நாடுகளின் பொருளாதாரங்களில், மதிப்பு எவ்வளவு கூட்டப்படுகிறதோ கிட்டத்தட்ட அதற்கு சமமான அளவுக்குத்தான் உழைப்பு பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவைப் பாருங்கள். இங்கே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 15% தான் விவசாயத்திலிருந்து வருகிறது. ஆனால் இதில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தொகையோ 50% க்கும் மேல். மற்ற பணக்கார நாடுகளைப் போல இந்தியாவும் பணக்கார நாடாக மாற வேண்டுமானால், உழைப்புக்கும் உற்பத்தி செய்யப்படும் மதிப்புக்கும் இடையிலான விகிதம் பணக்கார நாடுகளில் உள்ளதைப் போல மாற வேண்டும். செல்வச் செழிப்பு அடைவது என்பதன் பொருள் அதுதான். இந்திய மக்கள் தொகையின் பெரும்பான்மையினர், கழனிச் சேற்றில் நின்று கொண்டிருப்பதை விட்டு விட்டு, அதைக்காட்டிலும் உருப்படியான வேறு ஏதாவது தொழிலை செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்.
விவசாயம் செய்து பிழைக்க முடியவில்லையா? வேறு எதையாவது செய். இதை சொல்லித்தான் புரிந்து கொள்ள வேண்டுமா? இந்தியாவில் இந்த மாற்றம் சுமுகமாக நடந்தேறினால் நல்லது. ஆனால், அவர்கள் விவசாயியாக நீடிப்பதற்காக அவர்களுக்கு மானியம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.
(But India’s Farmers Should Go Bust, That’s How Economic Development Works, Tim Worstall, Forbes, 6.11.2017 கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்)
*****
இக்கட்டுரையைப் படித்த வாசகர்களில் பலர் ஆத்திரமடைந்திருக்கலாம். இந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பவையெல்லாம் இந்திய விவசாயம் பற்றிய அந்தக் கட்டுரையாளரின் கருத்துகள் மட்டுமல்ல, இதுதான் நேற்றைய மன்மோகன் அரசின் கருத்து, இன்றைய மோடி அரசின் கருத்து. நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில் காட் ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து உலக வங்கியும் உலக வர்த்தகக் கழகமும் இந்த திசையில்தான் இந்திய விவசாயத்தை இழுத்துச் சென்றுகொண்டிருக்கின்றன.
இந்தக் கட்டுரையை படித்து முடித்துவிட்டு, இதே இதழில் வெளியிடப்பட்டிருக்கும் “விவசாய நெருக்கடிக்குத் தீர்வு – எந்தப் பாதையில்?” என்ற கட்டுரையையும் சேர்த்துப் படித்துப் பாருங்கள். ஃபோர்ப்ஸ் இதழ் கூறும் கருத்தைத்தான் மோடி அரசு வரிக்கு வரி வழிமொழிகிறது என்பதை அந்தக் கட்டுரையில் நீங்கள் ஆதாரபூர்வமாகத் தெரிந்து கொள்ள முடியும்.
ஃபோர்ப்ஸ் கட்டுரை, இந்திய விவசாயத்தை எப்படி மாற்றியமைத்தால் அது முதலாளித்துவத்துக்கு இலாபம் தரும் என்ற கண்ணோட்டத்திலிருந்து பிரச்சினையைப் பரிசீலிக்கிறது. “விவசாய நெருக்கடிக்குத் தீர்வு – எந்தப் பாதையில்?” என்ற கட்டுரை, விவசாயத்திலும், தொழில்துறையிலும் என்னவிதமான மாற்றங்களைக் கொண்டுவந்தால், விவசாயிகளுக்கு நலம் பயக்கும் என்ற கண்ணோட்டத்திலிருந்து பிரச்சினையைப் பரிசீலிக்கிறது.இரண்டும் இரண்டு விதமான வர்க்கப் பார்வைகள்.
“இந்திய விவசாயி உற்பத்திப் பொருளின் மதிப்பைக் கூட்டவில்லை” என்று குற்றம் சாட்டுகிறார் கட்டுரையாளர். விவசாய விளைபொருளின் மதிப்பை வேண்டுமென்றே குறைத்து வைத்திருப்பதற்கு பொறுப்பு இந்த அரசு. இதனால் ஆதாயமடைபவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள், கமிசன் மண்டிக்காரர்கள். விளைபொருளின் “பரிவர்த்தனை மதிப்பு”க்கு, அதன் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத விவசாயியைப் பொறுப்பாக்குகின்ற இந்த அயோக்கியத்தனத்தின் பெயர்தான் முதலாளித்துவப் பொருளாதாரக் கோட்பாடு.
மைய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் உணவு மானியம் குறு, சிறு விவசாயிகளின் வாழ்க்கையில் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்திய மக்களின் பசியை ஆற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
முதலாளித்துவப் பொருளாதாரப் பார்வை தோற்று சந்தி சிரித்து விட்டது. கட்டுரையாளரின் கருத்துகள் அபத்தமானவை. இதைச் சொல்வதற்கு ஒருவர் பொருளாதார வல்லுநராக இருக்கத் தேவையில்லை. அதனை மக்கள் தமது சொந்த அனுபவத்திலேயே கூறிவிட முடியும்.
சுதந்திரமான சந்தை ஒன்று நிலவுவது போலவும், வேண்டல் – வழங்கல் அடிப்படையிலான பொருளாதார விதிகள் மட்டுமே சந்தையை இயக்குவது போலவும், அந்த விதிகளுக்குக் கட்டுப்பட விவசாயிகள் மறுப்பதைப் போலவும், சுதந்திரச் சந்தையின் விதிகளுக்குப் புறம்பாக அவர்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கிக் காப்பாற்றிக் கொண்டிருப்பதைப் போலவும் கட்டுரையாளர் படம் காட்டுகிறார்.
இவை அத்தனையும் வரிக்கு வரி பொய். அரசியல் அதிகாரத்தால் வளைக்கப்படாத “சுதந்திரச் சந்தை” என்று ஒன்று எங்கும் இல்லை. உலக வர்த்தகக் கழகத்தின் ஒருதலைப்பட்சமான விதிமுறைகளில் தொடங்கி டிரம்பின் “கொள்கை” வரை இதைப் புரிந்து கொள்ள நம்முன் ஆயிரம் சான்றுகள் இருக்கின்றன. உள்நாட்டில் மோடி அரசின் துணையுடன் இயற்கை வளங்களை, பொதுத்துறைகளை, வங்கி சேமிப்புகளைத் திருட முடியும், சட்டங்களை வளைக்க முடியும் என்பதற்கு அதானியும் அம்பானியும் சான்று கூறுகிறார்கள்.
இந்தியத் தரகு முதலாளிகளாகட்டும், பன்னாட்டு முதலாளிகளாகட்டும், இவர்கள் தொழில் தொடங்குவதற்கு சாலை, மின்சாரம், கடன் எல்லாம் கொடுத்து, இலாப உத்திரவாதமும் கொடுக்கிறது அரசு. இவை அனைத்தும் மக்களின் வரிப்பணத்திலிருந்து போடப்படும் பிச்சை. சப் பிரைம் நெருக்கடி என்ற திருட்டின் விளைவாக போண்டியாகிப்போன பன்னாட்டு வங்கிகளும் தொழில்களும் தத்தம் நாட்டு அரசாங்கங்களிடம் பிச்சை எடுத்துத்தான் பிழைத்துக் கொண்டன.
உலகத் தொழிலாளர்கள், விவசாயிகளின் மானியத்தில் (அல்லது திருட்டில்) வயிறு வளர்க்கும் முதலாளித்துவத்தின் பிரதிநிதியான ஃபோர்ப்ஸ் கட்டுரையாளராகட்டும், நம்மூர் வெங்கய்யா நாயுடுவாகட்டும், விவசாயிகள் சலுகை கோருவதாக இவர்கள் விமரிசிப்பது பின் வாயால் சிரிப்பதற்கு மட்டுமே தகுதியான நகைச்சுவை.
“அதிகமாக உற்பத்தி செய்தால்தான் அதிகமாக நுகர முடியும்” என்கிறார் கட்டுரையாளர். அதிகமாக உற்பத்தி செய்வதன் விளைவு – பட்டினி என்ற விசித்திரத்தைச் சாதித்திருப்பதே முதலாளித்துவம்தான் என்கின்ற பாலபாடம் கூடத் தெரியாமல் அவர் உளறுகிறார்.
வெங்காயம் முதல் தானியங்கள் வரை அனைத்தையும் விவசாயிகள் அதிகமாக உற்பத்தி செய்யவில்லையா? கிலோ 11 பைசா என்று வெங்காயத்தின் விலை வீழ்ந்ததற்கு யார் பொறுப்பு? இதற்கும் விவசாயிதான் பொறுப்பு என்கிறார் கட்டுரையாளர். சந்தை விலையைக் காட்டிலும் குறைவான செலவில் உற்பத்தி செய்யத் தவறியது விவசாயியின் பொறுப்பாம். இதனால் ஜி.டி.பி. வீழ்ந்து நாட்டு மக்கள் எல்லோரும் ஏழையாகி விட்டார்களாம்.
விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் கொத்துக்கொத்தாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கும்போது, ஜி.டி.பி. வீழ்ந்துவிட்டதாகப் பேசும் மனிதனை, பைத்தியம் என்றோ, இரக்கமற்ற கயவன் என்றோ நீங்கள் கருதலாம். எதுவாக இருந்தாலும், அது, அந்தக் கட்டுரையாளர் மட்டுமல்ல, மோடி அரசும்தான் அதன் பொருளாதார வல்லுநர்களும் கூடத்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
விவசாயத்தில் உற்பத்திச் செலவு அதிகமாவதற்குக் காரணம் சிறுவிகித உற்பத்தியாம். எல்லாவற்றையும் கார்ப்பரேட் பண்ணைகளாக மாற்றினால்தான் விவசாயம் இலாபகரமாக இருக்குமாம். அதாவது, “விவசாயிகளையெல்லாம் விவசாயத்தை விட்டு விரட்டினால்தான், விவசாயம் இலாபகரமாக இருக்கும்” என்பதே கட்டுரையாளர் கருத்து. மோடி அரசின் கருத்தும் அதுதான்.
நாடு முழுவதும் விவசாயிகள் விவசாயத்தை விட்டு துரத்தியடிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் வறட்சி மற்றும் அரசு புறக்கணிப்பு காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போகின்றனர். அரசோ அந்த மரணங்களை தனிப்பட்ட மரணம் என்று கணக்கு காட்டுகின்றது.
கால்நடைகள் கூட மேயப் பசுமையின்றி, பருக நீரின்றி மடிகின்றன. மழை தேவைப்படாத பனைமரங்களே பட்டுப் போகின்றன. இந்நிலையில் தமிழக விவசாயத்தை முற்றாக அழிக்கும் வண்ணம் காவிரி டெல்டாவின் களஞ்சியங்கள், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் கருக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து போராடும் மக்களை தேசத்துரோகிகள் என்கிறது காவிக் கும்பல்.
வளர்ச்சிக்காக ஒரு ஊரைத் தியாகம் செய்யுங்கள் என்கிறார் இல.கணேசன் நமது மண்ணை, நமது ஊரை ஏன் விட வேண்டும்? அந்த விவசாயிகளின் போர்க்குரலாய் ஒலிக்கிறது இப்பாடல். இப்பாடலின் முன்னோட்டம் இன்று… முழுப் பாடல் வரும் திங்கள் 31.07.2017 அன்று வெளியாகும்
பாடல், இசை, தயாரிப்பு: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வீடியோ ஆக்கம் வினவு
_______________________
இந்த பாடல் வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா! விவசாயிகளுக்கு ஆதரவாக ம.க.இ.க பாடல்களை இசைக்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
போராடுபவர்களையும், மாணவர்களையும் ஆள்தூக்கி குண்டர் சட்டத்தைக் கொண்டு ஒடுக்க நினைக்கிறது தமிழக அரசு. மணல் கொள்ளை, குட்கா ஊழல் மற்றும் வருமானவரிச் சோதனையில் சிக்கிய அதிகாரிகள், அமைச்சர்கள் திமிருடன் உலாவருகின்றனர். ஆளும் அண்ணா அதிமுகவின் குண்டர்கள் இன்று போராடும் மாணவர்களை ஒடுக்குகிறார்கள். போராடத் தூண்டினால் குண்டர் சட்டத்தில் கைது செய்வேன் என்று கொக்கரிக்கிறார்கள். இதற்கு தமிழக மாணவர்கள் அஞ்சமாட்டார்கள். தொடர்ந்து போராடுவார்கள். அவர்களின் போராட்டப் பாடலாக இந்த பாடல் மாற வேண்டும் என்பதற்காக “கரோக்கி – சேர்ந்து பாடலாம்” வடிவத்தை வெளியிடுகிறோம்.
இதில் பின்னணி இசையும் காட்சிகளும் வரும். பாடல் வரிகள் வரும் இடத்தில் குரல் இருக்காது, அதன் வரிகள் மட்டும் வரும். இதை பதிவிறக்கம் செய்து நீங்களும் பாடலாம்.
அடுத்து இந்தப் பாடலை சமூகவலைத்தளங்களில் விரிவாக கொண்டு செல்ல உங்கள் ஒத்துழைப்பு தேவை. இந்தப்பாடலை பதிவிறக்கம் செய்து ஆடத்தெரிந்த நண்பர்கள் ஆடலாம். நடனம் என்பது கானா, வெஸ்ட்ரன், செவ்வியில் என எந்த வடிவமாகவும் இருக்கலாம். அதை செல்பேசி அல்லது வீடியோ காமராவில் HD ஃபார்மெட்டில் தரமாக ஒளிப்பதிவு செய்து எங்களுக்கு அனுப்புங்கள். தெரிவு செய்யப்படும் வீடியோக்களை வெளியிடுகிறோம்.
பின்னணி இசையோடு பாடுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், சினிமா பாடகர்கள், மேடைப் பாடகர்கள், இயக்கப் பாடகர்கள் என அனைவரும் முன்வந்து பதிவு செய்து அனுப்புங்கள். தெரிவு செய்யப்படும் ஆடியோ – வீடியோக்கள் வினவு தளத்தில் வெளியிடப்படும். அதை உங்களது சமூகவலைத்தள கணக்குகளிலும் வெளியிடுங்கள். போராட்டப் பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவட்டும். வாழ்த்துக்கள்
ஆவலுடன் காத்திருக்கிறோம். நன்றி!
குண்டாஸ் குண்டாஸ்
ஸ்டுடண்டுக்கு குண்டாஸ்
ஊழல் பண்ணி தின்ன காசில
அமைச்சர் வயிறு அண்டாஸ்
ஆத்து மணலை ஆட்டையப்போட்ட
அமைச்சர் தலையில முண்டாசு
ஐ.டி ரெய்டில் சிக்கினவங்க
ஆக்கங்கெட்ட கூவாஸ்
கூவத்தூரு கும்மாளத்தில்
வேட்டிய தூக்கி பிரேக் டான்ஸு
குட்கா விற்க லஞ்சம் வாங்கின
ஐ.பி.எஸ் க்கு போனசு
கதிராமங்கலம் நெடுவாசல்
அக்கா குடுத்திச்சி நோட்டீசு – அரசை
ஆதரிச்சா எழுத முடியும்
மூளை கெட்ட முண்டாஸ்
குண்டாஸுக்கும் அண்டாஸுக்கும்
பந்தோபஸ்து போலீசு
ஓ.பி.எஸ் இ.பி.எஸ்
பி.ஜே.பி க்கு லெக் பீஸ்
ஆறு கேஸ் வாங்கினாக்கா
ஸ்டூடண்டுக்கே குண்டாஸ் – உங்க
ஆத்தா மேல நூறு கேஸ்
இன்னா…ங்கடா டமாஸ்
சின்னம்மாவை உள்ளே வச்சும்
ஊஹும் ஊஹும் நோ யூஸு
இந்த அக்யூஸ்டெல்லாம் ஒண்ணா சேந்து
நமக்கு போடுது குண்டாஸ்.
பாடல், இசை, தயாரிப்பு: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வீடியோ ஆக்கம் வினவு
_______________________
இந்த பாடல் வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா! அடக்குமுறைக்கு எதிரான ம.க.இ.க பாடல்களை இசைக்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
A woman spreads out fodder for rescued cattle at a "goushala", or a cow shelter, run by Bharatiya Gou Rakshan Parishad, an arm of Hindu nationalist group Vishwa Hindu Parishad (VHP), at Aangaon village in the western Indian state of Maharashtra February 20, 2015. Hindu nationalists in India have stepped up attacks on the country's beef industry, seizing trucks with cattle bound for abattoirs and blockading meat processing plants in a bid to halt the trade in the world's second-biggest exporter. Picture taken February 20. REUTERS/Shailesh Andrade (INDIA - Tags: RELIGION BUSINESS ANIMALS) - RTR4R0UD
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பாலில் பெரும்பகுதி சிறு உற்பத்தியாளர்களுடையது. ஐ.நா. உணவு மற்றும் விவசாயக் கழகத்தின் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் பால்மாடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டிருப்போரின் மொத்த எண்ணிக்கை 7.5 கோடி. இதில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் ஓரிரு பசு அல்லது எருமை மாடுகள் முதல், அதிகபட்சம் பத்து மாடுகள் வரை வைத்திருப்பவர்கள்.
உலகின் மற்ற நாடுகளில் இல்லாத ஒரு தனிச்சிறப்பு இந்திய பால் பண்ணைத் தொழிலுக்கு உண்டு. மற்ற பல நாடுகளில் சிறு உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள் என்ற போதிலும், அவர்கள் தமது பாலை கார்ப்பரேட் பண்ணைகளுக்குத்தான் விற்றாக வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்தியாவில்தான் பாலை வாங்கி நுகர்கின்ற மக்கள் கொடுக்கும் பணம் நேரடியாக பால்மாடு வளர்ப்போரின் கைக்குப் போகிறது.
இந்தியாவில் உற்பத்தியாகும் பாலில் சுமார் 40 விழுக்காட்டை மாடு வளர்ப்பவர்கள் தமது குடும்பத் தேவைக்கே பயன்படுத்தி விடுகின்றனர். மீதமுள்ள பால்தான் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. அவ்வாறு சந்தைக்கு வரும் பாலில் 30% தான் கூட்டுறவு பால் பண்ணைகளுக்கும் தனியார் பால் பண்ணைகளுக்கும் விற்கப்படுகின்றன. மீதமுள்ள 70% பாலை உற்பத்தியாளர்கள், அதாவது ‘‘பால்காரர்கள்’’ நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்கிறார்கள். இதுதான் இந்தியாவின் தனிச்சிறப்பான நிலைமை.
இத்தகைய சிறிய பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் குறித்து தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகம் (NDDB) ஒரு கணக்கீட்டை வெளியிட்டிருக்கிறது. மாட்டின் விலை, தீவனம், மருத்துவம், கறக்கும் பாலின் அளவு, கறவை நின்ற மாட்டை விற்றால் கிடைக்கும் வருவாய் ஆகிய அனைத்தையும் கணக்கிட்டு இந்த தொழிலில் கிடைக்கும் வருவாய் என்ன என்பதை அது கூறுகிறது.
அந்த கணக்கின்படி, பத்து பால்மாடுகளை வளர்க்கும் ஒருவர் 7 ஆண்டுகளில் பெறக்கூடிய நிகர லாபம் 11.6 லட்சம் ரூபாய். இந்த தொகையில் 5.5. இலட்சம் ரூபாய் கறவை வற்றிய மாடுகளை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை என்று அந்த கணக்கீடு கூறுவதை நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போது மோடி போட்டிருக்கும் சட்டத்தின்படி மாட்டை விற்கக் கூடாதென்றால், 11.6 லட்சத்தில் 5.5. இலட்சத்தை கழித்து விடவேண்டும். ஏழாண்டுகளுக்கான அவரது இலாபம் 6 இலட்சம் என்று குறைந்து விடும். அதாவது, பத்து மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்தால், அவருக்கு கிடைக்கும் தொகை ஆண்டுக்கு ரூ.85,000; அல்லது மாதத்துக்கு சுமார் 7,000 ரூபாய்). இது நமது கணக்கல்ல, தேசிய பால் உற்பத்தி கழகத்தின் கணக்கு.
கறவை வற்றிய மாடுகள் குறைந்தது 14 ஆண்டுகள் உயிர்வாழும். அவற்றைப் பராமரிக்க ஒரு மாட்டுக்கு நாளொன்றுக்கு 150 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் பத்து மாடுகளை 14 ஆண்டுகள் பராமரிப்பதற்கு 80 இலட்சம் ரூபாய் தேவை. கறவை வற்றிய மாடுகளை விற்கக் கூடாது என்றால், தொழிலை விட்டு ஓடுவது ஒன்றுதான் பால்மாடு வளர்ப்பவர்கள் முன் இருக்கும் வழி.
ஆனால் பால்மாடு வளர்ப்பவர்கள் அந்த தொழிலைக் கைவிட முடியுமா என்பதுதான் கேள்வி.
பால்மாடு வளர்ப்பது என்பது விவசாயப் பொருளாதாரத்தின் பிரிக்க முடியாத பகுதி. விவசாயப் பொருளாதாரம் மென்மேலும் வீழ்ச்சியடைந்த போதும் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை சார்ந்திருப்பதற்கு ஒரே காரணம், அவர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகள் இல்லை என்பதுதான். 2013 தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, மொத்த பயிரிடும் பரப்போ, 1971−72 இல் 11.9 கோடி ஹெக்டேராக இருந்து, 2003−இல் 10.7 கோடி ஹெக்டேராக குறைந்து, 2013−இல் 9.2 கோடி ஏக்கராகத் தேய்ந்து விட்டது. ஆனால் கிராமப்புறத்தில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை 2003−ஆம் ஆண்டில் 14.7 கோடி குடும்பங்கள். அது தற்போது 15.6 கோடி குடும்பங்கள் என உயர்ந்திருக்கிறது.
தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பின் வரையறைப்படி 215 சதுர அடி நிலம் கூட இல்லாதவர்கள்தான் நிலமற்றவர்கள் என்று கணக்கிடப்படுகிறார்கள். இந்த கணக்குப்படி நிலமற்றவர்கள் இந்திய மக்கள் தொகையில் 7.4% என்பது அரசு கணக்கு.
இதற்கு நேர் எதிராக 46.7% கிராமப்புற நிலங்கள், 7.4% குடும்பங்களிடம் உள்ளன. அதே நேரத்தில் 75.4% விவசாயிகளிடம் குறைந்த பட்சம் 215 சதுர அடி முதல் அதிக பட்சம் ஒரு ஹெக்டேர் (2.5 ஏக்கர்) வரை நிலம்தான் உள்ளது. இதுதான் கிராமப்புற நிலவுடைமை குறித்து அரசு புள்ளிவிவரங்கள் தரும் சித்திரம். இந்த 75% விவசாயிகள் நிலத்தை மட்டும் நம்பி வாழ முடியாது என்பது யாரும் புரிந்து கொள்ளக்கூடிய உண்மை.
சந்தையில் மாடுகள் விற்பதைச் சுற்றிவளைத்துத் தடை செய்திருக்கும் மோடி அரசின் ஆணையைக் கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
2013−ஆம் ஆண்டின் தேசிய மாதிரி சர்வே கணக்கெடுப்பின்படி, 75% கிராமப்புற சிறு விவசாய குடும்பங்களில், குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒருவராவது நகரத்தில் வேலை செய்யப் போய்விடுகின்றனர். குடும்பம் உயிரோடு இருக்க அவருடைய சம்பளம்தான் உதவுகிறது.
விவசாய வருமானம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்ற கடந்த 15 ஆண்டுகளில் சிறு விவசாயிகள் வாழ்வதற்கு கண்டுபிடித்திருக்கும் இன்னொரு முக்கியமான மாற்று வழி பால்மாடு வளர்ப்பு. கிராமப்புற கால்நடைகளில் சுமார் 90% சிறு, குறு விவசாயிகளிடம்தான் இருக்கிறது என்கிறது 2011−12க்கான தேசிய மாதிரி கணக்கெடுப்பு. வேறுவிதமாகச் சொன்னால் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோர்தான் மிகப்பெரும் அளவில் கால்நடை பொருளாதாரத்தை சார்ந்திருக்கின்றனர்.
இந்தியாவின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரத்தின் ஆண்டு மதிப்பு 5.7 லட்சம் கோடி ரூபாய். விவசாயப் பயிர் உற்பத்தியின் ஆண்டு மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாய். ஏறத்தாழ பயிர் உற்பத்தியில் பாதி அளவை எட்டிவிட்டது கால்நடை வளர்ப்புத் தொழில். 2015−16இல் விவசாயத்துறை 1.2% தான் வளர்ந்திருக்கிறது. கால்நடை வளர்ப்போ ஆண்டுக்கு 15% என்ற வேகத்தில் வளர்ந்து வருகிறது.
பால்மாடு வளர்ப்பும், கால்நடைப் பொருளாதாரமும்தான் கோடிக்கணக்கான விவசாயிகளை இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறது என்பதை நிரூபிக்கின்றன மேற்கண்ட புள்ளிவிவரங்கள். இருப்பினும் இந்தியாவைப் பொருத்தவரை, ஒரு மாடு தருகின்ற பாலின் அளவு உலக சராசரியோடு ஒப்பிடுகையில் ஏறத்தாழ பாதி அளவே உள்ளது. போதுமான தீவனமின்மை, மேய்ச்சல் நிலமின்மை, மருத்துவ வசதியின்மை உள்ளிட்ட பல குறைபாடுகள் இதற்கு காரணம்.
மாடுகளுக்கான பசுமைத் தீவனப் பற்றாக்குறை 63%, வைக்கோல் போன்ற உலர் தீவனங்களின் பற்றாக்குறை 24%, பருத்திக்கொட்டை − புண்ணாக்கு போன்ற மற்ற தீவனங்களின் பற்றாக்குறை 76%. பால்மாடு வளர்ப்புக்கான செலவில் 60 முதல் 70% தீவனங்களுக்கான செலவேயாகும். 2020−21இல் இந்தியாவின் பால் சந்தை 36% அதிகரிக்கும் என்றும், இதற்கேற்ப தீவனங்கள் உற்பத்தி செய்யப்படவில்லையென்றால், பால் சந்தையை பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றும் என்றும் கூறுகின்றது ஒரு ஆய்வு.
‘‘ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா’’ என்று பஞ்ச் டயலாக்குகளை அவிழ்த்துவிடும் அரசால் ஒரு வேலைவாய்ப்பைக் கூட உருவாக்க முடியவில்லை. அதே நேரத்தில் இந்த நாட்டின் பரம ஏழைகள் தங்களுடைய நிச்சயமற்ற வாழ்க்கை நிலையில், பலவிதமான எதிர்மறையான சூழல்களை எதிர்கொண்டு, எந்தவிதமான ஊக்கமோ ஆதரவோ கிடைக்காத நிலையிலும் சொந்த முயற்சியில் வாழக் கற்றிருக்கிறார்கள். முன்முயற்சியுடன் சவாலை எதிர்கொண்டு தொழில் நடத்தும் ஒருவரைத்தான் நாம் தொழில் முனைவர் என்று அழைக்கிறோம். நம் நாட்டில் சுய தொழில் செய்பவர்கள்தான் அத்தகைய தொழில் முனைவர்கள். ஏழைகளான இந்த தொழில் முனைவோரை வாழவைக்கத் துப்பில்லாத அரசு, அவர்களை மரணத்துக்குத் தள்ளுகிறது.
கறவை வற்றிய மாடுகளை விற்கக்கூடாது என்ற மோடி அரசின் உத்தரவை மேற்கூறிய பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போதுதான் இப்பிரச்சினையின் பரிமாணத்தை உணர்ந்து கொள்ள முடியும். இந்த உத்தரவு பால்மாடு வளர்ப்பை மட்டும் பாதிக்கின்ற உத்தரவு என்று சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது.
விவசாயம் பொய்த்துப் போனதால், கிராமப்புறங்களைவிட்டு வெளியேறிப் பிழைப்புக்காக சென்னை நகரில் குவியும் வட மற்றும் வடகிழக்கிந்திய மாநில இளைஞர்கள். (கோப்புப் படம்)
பால்மாடு வளர்ப்பு அளிக்கின்ற வருவாய் இல்லையானால், ஆகப் பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகள் கிராமத்திலேயே நீடிக்க முடியாது. இந்தியாவில் உள்ள விளைநிலங்களில் பாதி − அதாவது, சுமார் 12.5 கோடி ஏக்கர் நிலம் சிறு, குறு விவசாயிகளிடம் உள்ளது. பால்மாடு வளர்க்க முடியாது என்றால் இவர்கள் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பயன்படுத்தும் தேவையே இல்லாமல், போண்டியாகிப்போன விவசாயிகள் தானாக முன்வந்து நிலத்தை விற்றுவிட்டு வெளியேறும் சூழ்நிலையை மோடி அரசின் உத்தரவு உருவாக்கும். தேசிய அளவில் கார்ப்பரேட்டுகள் நடத்தவிருக்கின்ற அம்மணமான நிலப்பறி நடவடிக்கைதான் மோடி அரசு போட்டிருக்கும் இந்த உத்தரவின் நோக்கமா என்ற கேள்வி எழுகிறது.அவ்வாறு சொல்வது கொஞ்சம் மிகையோ என்று முதலில் தோன்றியது. ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விவரங்களிலிருந்து பார்க்கும்போது, ‘‘ஆம், இது ஒரு மாபெரும் நிலத் திருட்டுக்கான திட்டம்தான்’’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
பொருளாதாரத்துடன் தொடர்பற்ற வேறு நோக்கங்களால் உந்தப்பட்ட நடவடிக்கைகள் போல தோன்றுகின்ற நடவடிக்கைகளின் பின்புலத்தில், வெளியில் தெரியாத பொருளாதார நோக்கங்கள் இருக்கும் என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லித்தரும் பாடம்.
1991−இல் பாக்தாத் மீது குண்டு வீசிய அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்ஷிடம் அந்தப் போருக்கான நியாயம் பற்றிக் கேட்டபோது, குவைத் மக்கள் மீது இராக் படையினர் நடத்திய கொலைகளை விவரித்த அம்னெஸ்டி இன்டர்நேசனல் அறிக்கையை மேற்கோள் காட்டி, ‘‘இந்தப் போரின் தார்மீக நோக்கத்தை அந்த அறிக்கையைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்’’ என்றார்.
அப்போது குவைத்தின் எண்ணெய் வயல்களைப் பற்றி புஷ் பேசவில்லை. ‘‘குவைத்தில் எண்ணெய் வயல்களுக்கு பதிலாக காரட் விவசாயம் நடந்திருந்தால், நாம் எதற்காக அங்கே போரிடப் போகிறோம்?’’ என்று பின்னாளில் கூறினார் அமெரிக்காவின் துணை இராணுவ அமைச்சர் லாரன்சஸ் கோத்.
‘‘புனித பூமியை மீட்பது’’ என்ற பெயரில் ஐரோப்பா நடத்திய சிலுவைப்போரில் படை திரட்டப்பட்ட வெறி பிடித்த கிறித்தவர்கள், உண்மையில் யாருக்குப் பயன்பட்டனர்? திருச்சபையின் உலகயாத நலன்களுக்கும் இத்தாலிய வியாபாரிகளுக்கும் ஐரோப்பிய மன்னர்களுக்குமே அவர்கள் பயன்பட்டனர்.
பசுப் பாதுகாவலர்கள் நடத்திவரும் கொலைகளையும் இந்தக் கண்ணோட்டத்தில் பாருங்கள்.
இந்த கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா? விவசாயிகளின் தோழன் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி