தமிழகத்தில் போராடுகின்ற அமைப்பினர் மற்றும் மாணவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்டு பல்வேறு அடக்குமுறைகளை ஏவி விடுகிறது தமிழக அரசு. போராடத் தூண்டுபவர்கள் மீது அடக்குமுறை பாயும் என பாசிச ஜெயாவின் ஆவி புகுந்தவராக கொக்கரிக்கிறார் ஜெயாவின் அடிமை எடப்பாடி.
மெரினாவில் அஞ்சலி செலுத்தச் சென்ற திருமுருகன், கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடம் பிரச்சாரம் செய்த கோவை சட்டக்கல்லூரி மாணவர் வினோத், கதிராமங்கலம் – நெடுவாசல் பிரச்சினையயியொட்டி துண்டறிக்கை கொடுத்ததற்காக மாணவி வளர்மதி, முகநூலில் போராட்ட அழைப்புவிடுத்த சிதம்பரம் முனைவர் பட்ட மாணவர் குபேரன் எனத் தொடர்கிறது கைது பட்டியல். ஆனால் மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்த அதிமுக அமைச்சர்கள் சுதந்திரமாக சுற்றிவருகின்றனர்.
1991 ஜெயா ஆட்சியின் போது எதைப் பேசினாலும் தடா என தன் காட்டாட்சியை நடத்தினார். “அப்போது சிறைமதில்களைத் தாண்டி, அடக்குமுறைக் கொட்டடிகளைத் தாண்டி போராடுபவர்களின் குரலாக” மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இருண்டகானம் ஒலிப்பேழை ஒலித்தது.
இன்று ஜெயாவின் தொடர்ச்சியாக, அடிமைகளின் ஆட்சியாக நீளும் பாஜக பினாமி எடப்பாடி அரசை ஏளனம் செய்கிறது இப்பாடல். பாடலின் முன்னோட்டம் இன்று. முழுப் பாடல் நாளை வெளியாகும்.
_______________________
இந்த டீசர் வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா! அடக்குமுறைக்கு எதிரான ம.க.இ.க பாடல்களை இசைக்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
விவசாயத்துறை நெருக்கடியைப் பற்றிப் பேசும்போது, பேசுபவர்கள் அனைவருக்கும் அந்தப் பொருள் குறித்து கருத்தொற்றுமை நிலவுவதாக எண்ணிக் கொள்கிறோம். அது உண்மையல்ல. விவசாயத்துறை நெருக்கடியைத் தீர்ப்பதாக கூறிக்கொள்ளும் ஆளும் வர்க்க திட்டங்கள் அனைத்துமே விவசாயப் பிரச்சினை வேறு, அதில் ஈடுபடுகின்ற விவசாயிகளின் பிரச்சினை வேறு என்று இரண்டையும் பிரித்து விடுகின்றன.
எனவே, அவர்கள் முன்வைக்கின்ற தீர்வுகள், எதிர்காலத்தில் விவசாயத் துறையை விழுங்க இருப்பவர்களுடைய லாபத்தையும் உற்பத்தியையும் அதிகரிப்பது என்ற கண்ணோட்டத்திலேயே அமைந்திருக்கின்றன. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று மோடி கூறுவது இந்தப் பொருளில்தான். தற்போது விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் வாழ்க்கையையும் உற்பத்தித் திறனையும் உயர்த்துவது பற்றி மோடி பேசவில்லை.
உண்மையைச் சொல்வதென்றால், ஆட்சியாளர்கள் தாங்கள் கொண்டுவர விரும்பும் மாற்றத்துக்கு மிகப்பெரிய இடையூறே விவசாயிகள்தான் என்று கருதுகிறார்கள். விவசாயம் என்ற பெருங்கடலில், கொள்ளை லாபம் தரக்கூடிய சில தீவுகளை பன்னாட்டு மூலதனத்தின் பங்கேற்புடன் உருவாக்குவதுதான் அவர்கள் திட்டம். இதற்கு வெளியே இருக்கின்ற ஆகப் பெரும்பான்மையான இந்த நாட்டின் விவசாயிகள், வேலை தேடி நாடோடிகளாக அலைந்து மெல்ல மக்கி மடியட்டும் என்பதுதான் அவர்களது திட்டம். எனவேதான், ஆளும் வர்க்கத்தின் இந்த திட்டம் விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றது.
பஞ்சாபில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கக் கோரி, அம்மாநிலத்தின் பதிண்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
விவசாயிகளையோ, தொழிலாளர்களையோ ஆளும் வர்க்கம் எப்படிப் பார்க்கிறது? அரசாங்கமோ அல்லது சந்தையோ அளிக்கின்ற தூண்டுதலுக்கேற்ப உழைத்து, தங்களுக்கு லாபத்தை ஈட்டித் தருவதுதான் அவர்களது பிறவிக்கடன் என்று பார்க்கிறது. ஆனால் விவசாயிகள் ஜடங்கள் அல்ல, அவர்கள் சமூக மனிதர்கள். அவர்களுடைய அறிவும் அனுபவமும் அளப்பரியது. இருப்பினும் நடப்பில் உள்ள சமூக உறவுகள் அவர்களது முழு ஆற்றலையும் வெளிக்கொணர முடியாமல் தடுக்கிறது.
எனவே, விவசாயிகள் பிரச்சினை தொடர்பான கேள்விகளை பரிசீலிக்கும்போது, அவற்றை தற்போது நிலவும் சூழலை வைத்து மட்டும் பார்க்கக்கூடாது. அதனை ஒரு நிகழ்ச்சிப்போக்காக பார்ப்பதுடன், பொருளாதாரத்தின் மற்ற துறைகளுடன் இணைத்தும் அதனைப் பார்க்க வேண்டும். விவசாயிகளை எந்த ஜீபூம்பா வேலையாலும் பணக்காரர்களாக்க முடியாது. நாட்டின் மொத்தப் பொருளாதார வளர்ச்சியில் விவசாயிகளையும் ஊக்கமான பங்கேற்பாளர்களாக்குவதுதான் நமது நோக்கமாக இருக்க முடியும்.
2012−13ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அளிக்கும் புள்ளி விவரத்தின்படி, மொத்த வேலைவாய்ப்பில் விவசாய வேலைவாயப்பின் பங்கு 52%. தேசிய அளவில் தமது உழைப்பின் மூலம் ஒரு தொழிலாளி உருவாக்கும் சராசரி மதிப்பில் 29 விழுக்காட்டைத்தான் ஒரு விவசாயியின் உழைப்பு உருவாக்குகிறது. அதே நேரத்தில் நிதித்துறை, காப்பீடு, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் பணியாற்றுவோர் உருவாக்கும் சராசரி மதிப்பு, ஒரு விவசாயத் தொழிலாளி உருவாக்கும் மதிப்பைப்போல 25 மடங்கு அதிகம்.
அதே போல தொழிலாளர்களின் 85% அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாதவர்கள். இவர்கள் தமது உழைப்பின் மூலம் உருவாக்கும் மதிப்பு என்பது அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பில் 5.1% அதாவது விவசாயத்திலிருந்து வெளியேறி அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத தொழிலாளிகளாக மாறுபவர்களுடைய வாழ்க்கை எந்த விதத்திலும் மேம்படுவதில்லை என்பதையே மேற்கண்ட புள்ளிவிவரம் காட்டுகிறது. இன்னொரு முனையில், மிகவும் குறைவான பேர்களுக்கே வேலை வாய்ப்பளிக்கும் நிதித்துறை போன்ற ஒட்டுண்ணித் துறைகள், தேசிய வருமானத்தின் பெரும்பங்கை விழுங்குகின்றன.
வளர்ச்சி என்ற பெயரில் அழிவு
உற்பத்தியை அதிகப்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம். அல்லது ஒரு தொழிலாளியின் உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலமும் உற்பத்தியை அதிகரிக்கலாம். உற்பத்தியை அதிகரிக்க எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது என்ற பார்வையில் உள்ள வேறுபாடுதான், வளர்ச்சி பற்றிய இரண்டு முரண்பட்ட கண்ணோட்டங்களுக்கு காரணமாகிறது. ஒரு குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் யார் ஆதாயமடைகிறார்கள் என்பதுதான் எந்த வளர்ச்சிப் பாதை என்பதைத் தீர்மானிக்கிறது.
இந்திய ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டத்தின்படி விவசாயமும் அமைப்பு ரீதியில் இல்லாத தொழில்களும் உற்பத்தித் திறன் குறைந்த தொழில்கள். இவற்றின் உற்பத்திக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலேயே இவற்றில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். அவ்வாறு அவர்களை வெளியேற்றினால் மட்டும்தான், போடப்பட்டிருக்கும் முதலீட்டிற்கு கிடைக்கின்ற லாபத்தை அதிகரிக்க முடியும்.
முதலீட்டின் மீதான லாபத்தை அதிகரிப்பது என்பதன் பொருள், கார்ப்பரேட் திட்டங்களுக்காக நிலத்தை கட்டாயமாக கையகப்படுத்துதல், நிலத்தைக் குவித்து பண்ணைகளை உருவாக்குதல், விவசாயம் சார்ந்த வணிகங்களில் கார்ப்பரேட்டுகளை நுழைத்தல், சிறு தொழில்களை அழித்தல், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை நுழைத்தல் – என்பவைதான்.
தமிழகத்தில் உள்ள கதிராமங்கலம் கிராமத்திலிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேறக் கோரி நடந்துவரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக சிறுவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
விவசாயம் மற்றும் சிறு தொழில்களிலிருந்து வெளியேற்றப்படுவோருக்கு மற்ற துறைகளில் தானாகவே வேலை கிடைத்துவிடும் என்பதுதான் சுதந்திர சந்தையின் விதி என்பது தான் ஆளும் வர்க்க பொருளாதார வல்லுநர்களின் கருத்து. ஆனால் தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆன பின்னரும் இந்த விதி வேலை செய்யவில்லையே, ஏன் என்று கேட்டால், தொழிலாளர் நல சட்டங்கள், நில உச்ச வரம்பு சட்டம், சிறு தொழில்களுக்குப் பாதுகாப்பு என்பன போன்ற சுதந்திர சந்தைக் கோட்பாட்டுக்கு எதிரான சட்டங்களை அகற்றி விட்டால், முழு வேலைவாய்ப்பு உடனே பெருகும் என்கிறார்கள்.
‘‘ஒரு அளவுக்கு மேல் விவசாயத்தால் வேலைவாய்ப்பு வழங்க முடியாது. எனவே மக்கள்தொகையை விவசாயத்திலிருந்து வெளியேற்றி, விவசாயம் சாராத தொழில்களுக்கு அனுப்புவது மிகமிக அவசியம்’’ என்று கூறுகிறது நிதி ஆயோக்−இன் வல்லுநர் குழு அறிக்கை (மார்ச், 2016).
‘‘இந்தியாவில் எண்ணற்ற சிறு நிறுவனங்கள் தொடர்ந்து சிறு நிறுவனங்களாகவே நீடிக்கின்றன. அவை கவுரமாக செத்துப்போவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. சிறிய விவசாய நிலங்கள் போதிய வருவாய் தருவதில்லை. அவற்றை (கார்ப்பரேட் பண்ணைகளுக்கு) குத்தகைக்கு விடவும் (சட்டம்) அனுமதிப்பதில்லை. விவசாயத்துக்கு மென்மேலும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. நகரமயமாக்கத்தை தடுக்கும் பொருட்டு கிராமங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கிறது’’ என்று கூறும் மைய அரசின் 2012−13 பொருளாதார ஆய்வறிக்கை, இதற்கான மாற்றையும் முன்வைக்கிறது.
‘‘விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பெரும் பண்ணைகளை உருவாக்கி மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் புகுத்த வேண்டும். தோட்டத்தொழில், பால் பண்ணைகள், இறைச்சித் தொழில் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம்தான் விவசாயத்துறையை ஆரோக்கியமானதாக மாற்ற முடியும்’’ என்கிறது.
நிலச்சீர்திருத்தம் என்ற சொல்லின் பொருள், பெரு நிலக்கிழார்களின் நிலத்தை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு மறு பங்கீடு செய்வது என்பதுதான் வரலாறு.அப்படித்தான் நாம் அறிந்திருக்கிறோம். கார்ப்பரேட்டுகளுக்காக நிலம் கையகப்படுத்துவது, சிறு விவசாயிகள் தமது நிலத்தை கார்ப்பரேட் பண்ணைகளுக்கு குத்தகைக்குவிட வகைசெய்வது என்பன போன்ற தனது ஆலோசனைகளுக்கு நிலச்சீர்திருத்தம் என்று தலைப்பிட்டிருக்கிறது இந்த அறிக்கை.
விவசாயத்திலிருந்து வெளியேற்றப்படும் விவசாயிகளுக்கு தொழில்துறை வேலை வாய்ப்பளித்துவிடும் என்பதாக இந்த அறிக்கைகள் தீட்டும் சித்திரம் உண்மைக்குப் புறம்பானது. ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு இன்றைய கணக்கின்படி ஒரு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்றால், 1980−இல் இதே தொகைக்கு 4.5 வேலைவாய்ப்புகள் உருவானது என்பதே புள்ளிவிவரங்கள் காட்டும் உண்மை. தொழிலாளிகள் அதிகம் தேவைப்படுகின்ற ஆடைத்தயாரிப்பு, காலணி, சோப்பு தயாரிப்பு போன்ற தொழில்களிலும்கூட முன்னிலும் அதிகமாக எந்திரமயமாக்கம்தான் நிகழ்ந்திருக்கிறது.
அதனால்தான் மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் அமைப்புரீதியான உற்பத்தித் துறைகள் சார்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தே வருகிறது. தொழிலாளர் சட்டங்கள் ஆலை அதிபர்களுக்கு சாதகமான முறையில் தளர்த்தப்பட்ட பின்னரும், தொழிலாளர்களின் ஊதியம் குறைந்த பின்னரும், அவர்களை வெளியேற்றுவது எளிதாக்கப்பட்ட பின்னரும், ஆலை முதலாளிகள் தொழிலாளர்களைக் காட்டிலும் எந்திரங்களையே நாடுகின்றனர்.
ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி நகரை நிர்மாணிப்பதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
இதற்குப் பல காரணங்கள் உள்ளன என்ற போதிலும், இரண்டு காரணங்கள் முக்கியமானவை. தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்தை தொடர்ந்து எந்திரங்கள் போன்ற மூலதனப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டுவிட்டதால், அவை ஒப்பீட்டளவில் மலிவாகிவிட்டன. இரண்டாவதாக, தனியார்மய கொள்கைகளின் விளைவாக சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதால், வாங்கும் சக்தியுள்ள பிரிவினரே தொழில்துறையின் நுகர்வோராகின்றனர். அந்த மேட்டுக்குடி வர்க்கமோ மேற்குலக நுகர்பொருள் சந்தை எதை நாடுகிறதோ, அதையே பின்பற்றுகிறது.மேற்குலகில் செல்வாக்கு செலுத்தும் பிராண்டுகளையே வழிபடுகிறது.
எனவே, கிராமப்புறத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு தொழில்துறை வேலைவாய்ப்பளிக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில்துறைகளில் பரவத் தொடங்கியிருக்கும் தானியங்கிமயமாதல், இந்தியாவுக்கும் வரும் என்பதால் தொழில்துறை வேலைவாய்ப்பு நிலைமை மேலும் மோசமாவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.
மாற்று அணுகுமுறை
விவசாயிகள்பால் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் அணுகுமுறை என்பது, அவர்களை சடப்பொருளாக கருதுகிறது. எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று அவர்களை விவசாயத்திலிருந்து தூக்கி வீசுகிறது. மாறாக, நமது அணுகுமுறையோ விவசாயிகளை முன்முயற்சியுள்ள குடிமக்களாக, மாற்றத்தின் தூதர்களாகப் பார்க்கிறது. இந்த அணுகுமுறையின் அடிப்படைகள் இரண்டு. முதலாவதாக, அரசின் உதவியுடன் சிறு உற்பத்தியாளர்களாக இருக்கும் விவசாயிகளை ஒன்றுதிரட்டி அவர்களது உற்பத்தி திறனை உயர்த்த வேண்டும்.
சிறு விவசாயிகளை ஒரு ஒருங்கிணைந்த அரசியல் பொருளாதாரத் திட்டத்தின் கீழ் மெல்ல மெல்ல தொழில்துறை உற்பத்தியை நோக்கி கொண்டுவர வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று கூறிக்கொண்டு, தனியே திட்டம் போடும் ஆளும் வர்க்கத்தின் அணுகுமுறைக்கு மாறாக இந்த அணுகுமுறை உற்பத்தியையும் விநியோகத்தையும் ஒருங்கிணைந்த முறையில் அணுகுகிறது.
விவசாயத்தை முன்னேற்றுவதற்கு அதி நவீன எந்திரங்களும் முதலீடும் வெளியிலிருந்து வரும் என்று காத்திருப்பதற்கு பதிலாக, அரைகுறை வேலைவாய்ப்புடன் அவதிப்படும் கோடிக்கணக்கான மக்களை நீர் மேலாண்மை, பாசனம் போன்ற பணிகளில் ஈடுபடுத்தி விவசாயத்துறையை முன்னேற்ற முடியும்.
பயனற்றுக் கிடக்கும் மிகப்பெரிய அளவு உழைப்பாளர் சக்தி உண்மையில் அரைகுறை வேலைவாய்ப்பின் காரணமாக மிகப்பெரும் உழைப்பு சக்தி பயனற்று வீணாகிக் கொண்டிருக்கிறது.
இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள நாம் சில சொற்றொடர்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். முழுமையாக வேலைவாய்ப்பு பெற்றிருப்பவர்களை நாம் உழைப்பாளர்கள் (workforce) என்று குறிப்பிடுகிறோம். இவர்களுடைய எண்ணிக்கையுடன் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையையும் கூட்டினால் கிடைப்பது நாட்டின் மொத்த உழைப்பு சக்தி.
மரபீணி மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் திணிக்கப்படுவதை எதிர்த்தும், பன்னாட்டு விவசாய கம்பெனிகளை இந்தியாவிலிருந்து வெளியேறக் கோரியும் டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
வேலை கிடைக்காது என்பதால் வேலை தேடுவதைக் கைவிட்டவர்கள் ஏராளம். தனியார்மயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய 1991−2011 காலகட்டத்தில் 16.7 கோடிப்பேர் புதிதாக வேலைவாய்ப்பு சந்தைக்கு வந்திருக்கிறார்கள். இவர்களில் 9 கோடிப்பேருக்கு கிடைத்திருப்பது பகுதி நேர வேலைவாய்ப்பு. அதாவது, ஆண்டில் பாதி நாட்கள் வேலை இல்லாதவர்கள். இவர்களன்றி மிகமிக குறைந்த வருவாய்க்கு சின்னஞ்சிறு தொழில்களில் வேலை செய்வோர் உள்ளனர். இதனை போக்கிடமற்ற வேலைவாய்ப்பு என்று நாம் கூறலாம்.
மொத்தத்தில் கடல் போன்ற இந்த உழைப்பு சக்தியை விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில், மேம்பட்ட உற்பத்தித் திறன் கொண்ட உழைப்பில் ஈடுபடுத்த முடியும். இவர்களுக்கெல்லாம் பெரிய தொழில்நிறுவனங்கள் ஒருபோதும் வேலை தரப்போவதில்லை. இவர்களை விவசாயத்திலும், உள்நாட்டு சந்தைத் தேவைக்கு பொருள்களை உற்பத்தி செய்கின்ற கிராமப்புற சிறு தொழில் நிறுவனங்களிலும் ஈடுபடுத்த முடியும். இத்தகைய தொழில்களைத் தொடங்குவதற்கு அந்நிய மூலதனமோ, இறக்குமதி தொழில் நுட்பமோ தேவையில்லை.
உண்மையான தடை யார்?
மேலே கூறியிருப்பவையெல்லாம் புதிய கருத்துகள் அல்ல. ஐந்தாண்டு திட்டங்களின் தொடக்க காலத்தில் முன்வைக்கப்பட்டவைதான். அவை ஏன் நடக்கவில்லை என்றால், மேற்சொன்ன வளர்ச்சிப் பாதையை விவசாயத்திலும் தொழில்துறையிலும் தற்போது நிலவுகின்ற உடைமை உறவுகள் தடுக்கின்றன.
விவசாயத்திலிருந்து கிடைக்க வேண்டிய உபரியை பெரு நிலவுடைமையாளர்களும், கந்து வட்டி − கமிசன் மண்டிக்காரர்களும், அதிகாரவர்க்கமும், அரசியல்வாதிகளும் பல்வேறு வழிகளில் உறிஞ்சி எடுத்து உற்பத்தி சாராத ஊதாரித்தனங்களில் அழிக்கிறார்கள். அவர்களுடைய நலனுக்கு இந்த வளர்ச்சிப்பாதை எதிரானது என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல.
ஆளும் வர்க்கங்கள் முன்வைக்கும் வளர்ச்சிப் பாதையைப் பரிசீலித்துப் பார்ப்போம். இன்றைய புள்ளிவிவரப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வெறும் 17% மட்டுமே. (விவசாயத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றி கார்ப்பரேட் மயமாக்குவதன் மூலம் தங்களது லாபத்தை அதிகரித்துக் கொள்வதுதான் அவர்களது நோக்கமேயன்றி, மொ.உ.உற்பத்தியில் விவசாயத்தின் பங்கை அதிகரிப்பது அல்ல.) அவ்வாறு அதிகரிப்பது ஆளும் வர்க்கத்தின் திட்டத்திலேயே இல்லை.
உழைப்பு சக்தியை மையப்படுத்துகின்ற வேலைவாய்ப்பையும் உழைப்பின் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கின்ற நமது பார்வையிலிருந்து இதனைப் பார்க்கும்போது, வேறு முடிவுக்கு நாம் வருகிறோம். இந்தப் பார்வையின்படி நாட்டின் 50% உழைப்பாளர்களுக்கு வேலை கொடுக்கின்ற விவசாயம் நமக்கு முதன்மை முக்கியத்துவம் வாய்ந்த துறையாகிவிடுகிறது.
அதேபோல தொழில்துறையை எடுத்துக் கொண்டால், அதில் 85% வேலைவாய்ப்பை வழங்குகின்ற சிறு தொழில்கள் நம் பார்வையில் முக்கியத்துவம் பெறுகின்றன. உழைப்புச் சக்தியை இந்தத் துறைகளில் முழுமையாக ஈடுபடுத்துவதன் மூலம் கிடைக்கின்ற உபரியை, இவர்களை உறிஞ்சிக் கொழுக்கும் ஒட்டுண்ணி வர்க்கங்களுக்கு செல்லவிடாமல் தடுக்க வேண்டும்.
விவசாயிகள்பால் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் அணுகுமுறை என்பது, அவர்களைச் சடப்பொருளாக கருதுகிறது. எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று அவர்களை விவசாயத்திலிருந்து தூக்கி வீசுகிறது. மாறாக, நமது அணுகுமுறையோ விவசாயிகளை முன்முயற்சியுள்ள குடிமக்களாக, மாற்றத்தின் தூதர்களாகப் பார்க்கிறது.
ஆனால், சமூக பொருளாதார ஆதிக்கத்தில் இருக்கும் சுரண்டும் வர்க்கங்கள், ஏழை விவசாய வர்க்கத்தினரின் சுயேச்சையான கூட்டு முயற்சிகள் அனைத்தையும் நசுக்குவார்கள். எனவே இந்த ஒட்டுண்ணி வர்க்கங்களின் ஆதிக்கத்தைத் தூக்கியெறிய, பரந்துபட்ட விவசாயிகளின் ஒற்றுமையைக் கட்டியமைக்கும் பணியின் வழியாகத்தான், உற்பத்தி துறையில் விவசாயிகளிடையேயான கூட்டுறவையும் உருவாக்குவதும் சாத்தியம்.
தொழில்துறையைப் பொருத்தமட்டில், நிலவுகின்ற அரசமைப்பில் சிறு உற்பத்தியாளர்களுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லை. பெரும்பான்மை மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாததால், இவர்களுக்கு சந்தை இல்லை, விநியோக வலைப்பின்னல், வங்கிக்கடன் உள்ளிட்ட எதுவும் இல்லை. மேட்டுக்குடி வர்க்கத்தினரின் சந்தையை பெரு வணிக நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்கின்றன.
இவர்களுடன் போட்டி போடவேண்டுமானால், தமது தொழிலாளர்களை கசக்கிப் பிழிவதைத் தவிர சிறு தொழில்களுக்கு வேறு வழி இருப்பதில்லை. பலர் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் பணி செய்து கொடுத்தே காலம் தள்ளுகின்றனர். (வேறொரு வகையில் பார்த்தால், பெரும் தொழில் நிறுவனங்கள் தவிர்க்கமுடியாதவை அல்ல என்பதற்கு இது ஒரு சான்று.) தொழில் உற்பத்தி துறையில் 85% பேருக்கு வேலைவாய்ப்பளிப்பவை சிறு தொழில்கள்தான்.
ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்கோ வெறும் 22%. சிறு தொழில்கள் வளர வேண்டுமானால், அவற்றின் சந்தையான விவசாயப் பொருளாதாரம் மேம்படவேண்டும். அதற்கு விவசாய உற்பத்தி உறவுகளில் மாற்றம் வேண்டும். நிலப்பங்கீடு, இயற்கை வளங்களின் மீது மக்கள் அதிகாரம், கந்து வட்டி ரத்து, கமிசன் மண்டிகளுக்கு முற்றுப்புள்ளி போன்ற நடவடிக்கைகளின் விளைவாக விவசாயிகளின் வாங்கும் சக்தி சிறிதளவு அதிகரித்தால்கூட அது சிறு தொழில் வளர்ச்சியை பெருமளவுக்கு ஊக்குவிக்கும்.
சந்தையை விரிவுபடுத்துதல்
ஒரு எளிய எடுத்துக்காட்டை பார்ப்போம். புடவை, வேட்டி, துண்டு, லுங்கி, சட்டை, காற்சட்டை, சுடிதார், உள்ளாடை, காலுறை, கையுறை, கோட்டு, தொப்பி, போர்வை, தலையணை, கொசுவலை, மிதியடி போன்ற அனைத்துக்கும் சேர்த்து ஒரு கிராமப்புற குடிமகன் ஆண்டொன்றுக்கு செய்யும் செலவு சராசரியாக 964 ரூபாய் என்கிறது தேசிய மாதிரி சர்வே, 2011−12. இது கிராமப்புற பணக்காரர்களையும் உள்ளடக்கி கணக்கிடப்பட்ட சராசரி.
கிராமப்புற மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இந்த 964 ரூபாய் கூட செலவழிக்க சக்தியில்லாதவர்கள். (ஆனால் கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் வெறும் 25.7% என்கிறது அரசின் 2011−12 புள்ளிவிவரம்.)
இவ்வளவு மோசமான பொருளாதார நிலையிலிருந்து ஏழை விவசாயிகளின் வாழ்க்கை மேம்படுத்தப்பட்டால், அவர்கள் துணிமணி போன்றவற்றுக்கு கூடுதலாக செலவழிப்பார்கள். துணி, செருப்பு போன்ற எளிய நுகர்பொருட்களை உற்பத்தி செய்கின்ற சிறிய கிராமப்புற தொழிற்சாலைகள் பல இலட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளிக்க முடியும். உயர் தொழில்நுட்பமோ, எந்திரமோ, பெரும் மூலதனமோ இவற்றுக்குத் தேவையில்லை.
விவசாயத்துறையில் செய்யப்படும் சீர்திருத்தம் இத்தகைய கிராமப்புறத் தொழில்களை ஊக்குவிக்கும். விவசாய வேலை இல்லாத காலத்தில் இந்த கிராமப்புறத் தொழில்கள் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பளிக்கும். விவசாயத்தில் மேற்கொள்ளப்படும் கூட்டுறவு முறையிலான உற்பத்தியிலிருந்து கிடைக்கின்ற உபரி, இந்த சிறு தொழிற்சாலைகளுக்கான முதலீட்டை வழங்க முடியும். இவையெல்லாம் யாரும் அறியாத உண்மைகள் அல்ல. எனினும் இவை காலாவதியானவை என்று ஒதுக்கப்படுகின்றன.
ஏனென்றால், நாம் கூறுகின்ற புரட்சிகரமான விவசாய சீர்திருத்தம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதையும் வழங்காது. மாறாக, கிராமப்புற நிலச்சீர்திருத்தம் கார்ப்பரேட்டுகளின் சந்தையான கிராமப்புற பணக்கார வர்க்கத்தினரின் சந்தையை சுருக்கவே செய்யும்.
முக்கியமாக, புரட்சிகரமான விவசாய சீர்திருத்தம் என்பது இந்திய வரலாறு கண்டிராத ஒரு சமூக கொந்தளிப்பை தோற்றுவிக்கும். சட்டத்தால் புனிதப்படுத்தப்பட்டிருக்கும் சொத்துடைமையைக் கேள்விக்குள்ளாக்கும். மக்கள் தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான அமைப்புகளைத் தோற்றுவிக்கும். உழைப்புச் சுரண்டல், அரசு மானியங்கள், இயற்கை வளக்கொள்ளை ஆகியவற்றால் கொழுத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்துக்கு இது மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
ஆகையினால்தான், தொழில் வளர்ச்சி நீடிக்க வேண்டுமென்றால் நிலச்சீர்திருத்தமும் நில விநியோகமும் தேவை என்று முன்பெல்லாம் பேசிக்கொண்டிருந்த பொருளாதார வல்லுநர்கள், இப்போது அதுபற்றி மூச்சே விடுவதில்லை. விவசாய சீர்திருத்தம் என்பதே காலாவதியாகிப்போன விவகாரம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
என்ன விதமான தொழில் வளர்ச்சியை நாம் விழைகிறோம்? கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தை மேலும் கொழுக்க வைக்கின்ற வளர்ச்சியையா அல்லது மக்கள் மயப்படுத்தப்பட்ட தொழில் வளர்ச்சியையா என்ற கேள்விக்கு முரண்பட்ட இரண்டு பதில்கள் உண்டு. அவை நேர் எதிரான வர்க்கப் பார்வைகளிலிருந்து வருபவை. மக்கள் மயப்படுத்தப்பட்ட தொழில் வளர்ச்சியை வேறொரு புதிய சமூக அமைப்பின் கீழ்தான் நாம் சாதிக்க இயலும்.
விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
“- ஏய்! கருப்பா தள்ளிப்போ!” -“ஏய்!வெள்ளை!” -“ஏய்… என்ன வெள்ளை? உனது எஜமானைப் பார்த்து அப்படி சொல்ல மாட்டாய்.”
-“நான் வெள்ளை என்று மட்டுமே சொன்னேன்.”
“-வெள்ளை என்றால் ஜெர்மன் என்று அர்த்தம், நண்பா”
“-அப்படி என்றால் என்ன? விளங்கப்படுத்து.”
“எனது ….. “ (முதுகைத் திருப்பி வளைந்து பிட்டத்தைக் காட்டுகிறான்.)
நிலைமை மோசமடையும் போலத் தெரிகின்றது. சுற்றவிருக்கும் உதைப்பந்தாட்ட வெறியர்கள் குடித்து விட்டு சண்டைக்கு வருவார்கள் போல் தெரிகின்றது. அவர்களது சட்டையில் காணப்படும் ஹிட்லரையும், நாஜிகளையும் நினைவு கூறும் வாசகங்கள் வேறு பயமுறுத்துகின்றன.
ஜெர்மனியில் டிரெஸ்டென் நகர உதைப்பந்தாட்ட அரங்கத்திற்கு முன்னால் நடந்த சம்பவம். இருபது வயது மதிக்கத்தக்க வெள்ளையின உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு மத்தியில், தன்னந்தனியாக ஒரு கருப்பன் நின்றிருந்த பொழுது இடம்பெற்ற வாக்குவாதம் அது. அந்தக் கருப்பன் உண்மையில் ஒரு வெள்ளையின ஜெர்மானியர்! பிரபல எழுத்தாளர் Günter Wallraff. “உன்னதமான நாகரீகத்தைக் கொண்ட” ஜெர்மன் சமூகத்தின் இருண்ட மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருப்பவர். இம்முறை அவர் எடுத்துக் கொண்ட விஷயம் “நிறவாதம்”. சாமானியர்களான “அப்பாவி” ஜெர்மனியர்களின் மனதில் ஒளிந்திருக்கும் நிறவாதத்தை வெளிக்கொணர்ந்துள்ளார். இதற்காக தனது மேனியின் நிறத்தையே கருப்பாக மாற்றிக் கொண்டு, ஒரு ஆப்பிரிக்க கருப்பனாக வாழ்ந்து பார்த்திருக்கிறார்.
வெள்ளை நிறத்தோலை கறுப்பு நிறமாக்குவது நடைமுறைச் சாத்தியமல்ல. 1959 ம் ஆண்டு,John Howard Griffin என்ற எழுத்தாளர் அமெரிக்காவில் “ஒரு கருப்பனாக” பயணம் செய்து கறுப்பினத்தவர்களின் அவலங்களை Black Like Me என்ற நூலில் பதிவு செய்தார். தனது தோலை கறுக்க வைக்க அவர் பாவித்த மாத்திரைகள் இறுதியில் அவருக்கு எமனாக மாறின. குய்ந்தர் வல்ராப் அது போன்ற ஆபத்தான பரிசோதனையை செய்யவில்லை. பெண்களுக்கு மேக்கப் போடும் ஒரு நிபுணரை அணுகியுள்ளார். விசேஷ ஸ்ப்ரே மூலம் அவரது தோலை கறுக்க வைத்துள்ளார். தலையில் சுருட்டைமுடி விக் அணிந்து கொண்டார். பார்ப்பதற்கு அசல் ஆப்பிரிக்க கருப்பன் போல இருந்த அவரை யாரும் அடையாளம் காண முடியவில்லை.
வல்ராப் தன்னோடு சில நடிகர்களையும் அழைத்துச் சென்றுள்ளார். ஒரு கறுப்பனைப் பற்றி சாதாரண வெள்ளையர்கள் தமக்குள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என அறியும் ஒற்றர்கள். தேவைப்பட்டால் சம்பாஷணைகளை கமெராவில் அல்லது ஒலிவாங்கி மூலம் பதிவு செய்து கொண்டு வருவார்கள். வால்ராப் “கருப்பனாக” வாழ்ந்து பார்த்த அனுபவங்களை, “அற்புதமான புது உலகம்”(Aus der schönen neuen Welt)என்ற நூலில் எழுதியுள்ளார். அவற்றை இங்கே சுருக்கமாக தருகிறேன். வால்ராபின் பயணம் கிழக்கு ஜெர்மனியில் அரசர் காலத்து மாளிகைகளையும், பூந்தோட்டங்களையும் கொண்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற வெர்லிட்ஸ் எனுமிடத்தில் ஆரம்பிக்கின்றது.
சாமானியர்களான “அப்பாவி” ஜெர்மனியர்களின் மனதில் ஒளிந்திருக்கும் நிறவாதத்தை வெளிக்கொணர்ந்துள்ளார் பிரபல எழுத்தாளர் Günter Wallraff
ஜெர்மன் உல்லாசப்பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்தப் படகு ஆற்றில் மிதந்து சென்று கொண்டிருக்கிறது. வழிகாட்டி ஜெர்மன் சரித்திரக் கதைகளை சொல்லிக் கொண்டு வருகிறார். “….. அன்று இளவரசர் Franz விரும்பிய பெண்ணை மணம் முடிக்க, பிரசிய நாட்டு அரசனான அவரது தந்தை விடவில்லை. பிரன்ஸ் திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்தில் வாழ விரும்பினார். ஆனால் அரசன் தனது மருமகளை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இறுதியில் இளவரசர் மாமன் மகளை கலியாணம் செய்து கொண்டு ஜெர்மனியிலேயே தங்கிவிட்டார்.” கேட்டுக் கொண்டிருந்த வால்ராபினால் சும்மா இருக்க முடியவில்லை. “(முறைப் பெண்ணை மணம் முடிப்பது) தடை செய்யப்பட்டுள்ளது அல்லவா? இதையெல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்ட (பெற்றோர் நிச்சயித்த) திருமணங்கள் என்றல்லவா சொல்வார்கள்?”
ஜெர்மனியில் வாழும் இஸ்லாமிய, இந்து சமூகங்கள் மத்தியில் உறவுக்குள் திருமண ஒப்பந்தங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த “காட்டுமிராண்டி கால” வழக்கத்தை ஜெர்மன் அரசாங்கமும், ஊடகங்களும் கடுமையாக எதிர்க்கின்றன. “ஒழுங்குபடுத்தப்பட்ட திருமணங்கள்” பிற்போக்கு கலாச்சாரம் கொண்ட சமூகங்களில் மட்டுமே சாத்தியம் எனக் கூறி வருகின்றன. (தமிழ் வாசகர்களுக்கு ஜெர்மன் சமூக கண்ணோட்டத்தை அறிமுகப்படுத்தும் எனது சிறு விளக்கம். தமிழ்க் கலாச்சாரத்தில் “பெற்றோர் நிச்சயித்ததாக” கூறுவதை, அவர்கள் “நிறுவனமயப் படுத்தலாக” புரிந்து கொள்கின்றனர். நூலில் இல்லை.) இன்றைய ஜெர்மானியர்கள் கருதுவதைப்போல “ஆதி காலம் தொட்டு நாகரீகமடைந்த சமூகமாக” இருக்கவில்லை. ஜெர்மனிய சமூகமும் பல “பிற்போக்கு அம்சங்களை” கொண்டிருந்தது. இதைத் தான் அன்று அந்தப் படகுப் பயணத்தில், சக ஜெர்மானியர்களுக்கு வல்ராப் தெளிவுபடுத்தியுள்ளார்.
வல்ராபின் விமர்சனம் பலரை புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. படகுப் பயணம் முடிவடையும் தருணம் இவரருகில் வந்த ஜெர்மன்காரர் கேட்கிறார்:
– ” நீ எப்படி இவ்வளவு சரளமாக ஜெர்மன் பேசுகிறாய்? “ – ” தான்சானியாவில் கோதே (ஜெர்மன் மொழிக்) கல்லூரியில் கற்றேன்.”
ஒருவருக்கொருவர் தெரியாத மற்ற பயணிகள் “நீங்கள்” என்று பன்மை விகுதியில் அழைக்கின்றனர். இவர் மட்டும் “நீ” என்கிறார். பொதுவாகவே மேற்கு ஜெர்மானியர்களை விட கிழக்கு ஜெர்மானியர்கள் “நீங்கள்” பாவிப்பது குறிப்பிடத்தக்கது. -” வேலை செய்கிறாயா?” “- இல்லை” -“இங்கே படகு வலிக்கும் வேலை கிடைக்கலாம்” (சைகை செய்து காட்டுகிறார்.)
நான் ஒரு கருப்பன் என்பதால் கூலி வேலைக்கு தான் லாயக்கு என்று அவர் கருதுவது புரிகின்றது.
வேறு பல சந்தர்ப்பங்களிலும், தனக்கு ஜெர்மன் புரியாது என நினைத்துக் கொண்டு தன் முன்னிலையில் ஜெர்மன் மொழியில் பேசி சிரித்தவர்கள், பற்றி வல்ராப் பதிவு செய்துள்ளார். வெளிநாட்டவரை கேலிப்பொருளாக கருதுவது நவீன நிறவாதம். ஜெர்மனியில் மட்டுமல்ல, வேறு பல ஐரோப்பிய நாடுகளிலும் இது போன்ற சிறுமைப்படுத்தும் ஏளனப் பேச்சுகள் சகஜம். இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள் போல தோற்றமளிப்பவர்களிடம் எடுத்தவுடன் ஆங்கிலத்தில் பேசுவது கூட அதற்குள் அடக்கம்! (அதாவது உங்களுக்கு “ஆங்கிலம் போன்ற இலகுவான மொழிகளை” மட்டுமே கற்றுக் கொள்ளும் ஆற்றல் உண்டு.) மொழியறிவு குறைந்த வெள்ளையின ஐரோப்பியர்களுடன், அப்படி (ஆங்கிலத்தில் பேசுவது) நடந்து கொள்ள மாட்டார்கள்.
மேற்கு ஜெர்மனியில் கெல்ன் நகரத்தில், வல்ராப் பத்திரிகையில் வீடு வாடகைக்கு விளம்பரத்தை பார்த்து விட்டு தொலைபேசியில் அழைக்கிறார். வீட்டைப் பார்வையிட நேரம் கணித்து விட்டு அங்கே செல்கிறார். வீட்டை சுற்றிக் காட்டும் வயதான ஜெர்மன் மாது, “படிகளை சுத்தப்படுத்த மாதம் 26 யூரோ” மேலதிகமாக கேட்கிறார். வல்ராப் சென்று மறைய, அவர் அனுப்பிய நடிகர்கள் தோன்றுகிறார்கள். என்ன அதிசயம்! அவர்கள் 26 யூரோ கொடுப்பதற்கு பதிலாக, படிகளை தாமே சுத்தப்படுத்திக் கொள்வதாக கூற அதற்கு அந்த மூதாட்டி சம்மதிக்கிறார். மேலும் சற்று முன்னர் வந்து விட்டுப் போன கறுப்பனைப் பற்றி முறைப்பாடு செய்கிறார். “அவன் இங்கிருக்க வேண்டிய ஆள் இல்லை. வீடு வாடகைக்கு எடுக்க வந்தான். தொலைபேசியில் பேசிய பொழுது சரளமாக ஜெர்மன் பேசினான். வருபவன் கருப்பா, வெள்ளையா என்று தொலைபேசியில் மணந்து பார்க்க முடியுமா?”
காட்டில் வேட்டையாடும் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் வெள்ளை ஜெர்மானியர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள். வல்ராப் அதையும் ஒரு கை பார்த்து விடுவது என்று களத்தில் இறங்குகிறார். தென் ஜெர்மன் மாநிலமான Beieren இல், தனது ஆப்பிரிக்க நண்பனையும் சேர்த்துக் கொண்டு, “வேட்டை அனுமதிப் பத்திரம்” பெறுவதற்காக அரசாங்க அலுவலகம் செல்கிறார். அலுவலக வரவேற்பறையில் நின்றிருந்த பெண் “இரண்டு கறுப்பன்கள் வருவதைக் கண்டவுடன்” தனது மேலதிகாரியை கூப்பிடுகிறார். மேலதிகாரி இருவரையும் மேலும் கீழும் பார்த்து விட்டு:“இதற்கெல்லாம் அடையாள அட்டை வேண்டும்” என்கிறார். சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் அரச அலுவலகத்திற்கு நேரடியாக விஜயம் செய்வார்களா? என்ற யோசனையே இல்லாமல் பேசுகிறார். தாம் இருவரும் ஜெர்மன் பிரஜைகள் என்றும், விண்ணப்ப பத்திரத்தை கொடுக்குமாறும், எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று கூறுமாறும், வல்ராப் கேட்கிறார். உடனே பொறுமையிழந்த மேலதிகாரி சத்தம் போடுகின்றார்:“இடத்தைக் காலி பண்ணுங்கள். இல்லாவிட்டால் போலீசைக் கூப்பிடுவேன்.”
ஜெர்மனியில் வாழும் கருநிற மேனியர்கள் தினசரி அனுபவிக்கும் நிறவாதம் இது போன்றது. அவர்களின் தோலின் நிறத்திற்காக அரசாங்கம் அவர்களை சந்தேகிக்கின்றது. பொது இடங்களில் போலீஸ் அவர்களிடம் மட்டும் தான் அடையாள அட்டை கேட்கின்றது. Charles Friedek ஒரு பிரபலமான கறுப்பின ஜெர்மன்காரர். உலகக் கிண்ணத்தை கைப்பற்றி ஜெர்மனிக்கு பெருமை தேடித்தந்த தடகள விளையாட்டு வீரர். அவர் ஒரு முறை பத்திரிகை பேட்டியில் அரச நிறவாதம் குறித்து முறைப்பாடு செய்தார். “நான் தற்போது ஒரு வயதான நபர். அண்மையில் கூட விமான நிலையத்தில் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டார்கள். விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் பாஸ்போர்ட் சோதனை இன்றி செல்ல முடிந்தது. என்னை மட்டும் மறித்து வைத்திருந்தார்கள். ஏன்? நான் தான் ஒரேயொரு கருப்பன்!” (இந்த குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை. எனக்கும் வேறு பலருக்கும் சர்வதேச விமான நிலையங்களில் அத்தகைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன.)
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிரிந்திருந்த ஜெர்மன் ஜனநாயக குடியரசும் (கிழக்கு ஜெர்மனி), ஜெர்மன் சமஷ்டிக் குடியரசும் (மேற்கு ஜெர்மனி) “கருப்பர்களை” வெள்ளையின சமூகத்துடன் சேர விடாமல் தனிமைப்படுத்தி வைத்திருந்தன. கிழக்கு ஜெர்மனி ஆப்பிரிக்காவை சேர்ந்த சோஷலிச நாடுகளில் இருந்து மாணவர்களையும், தொழில் பயிலுனர்களையும் அழைத்து வைத்திருந்தது. ஆனால் விருந்தாளிகள் என்ற அந்தஸ்தில் ஜெர்மன் சமூகத்துடன் சேர விடாமல் முகாம்களில் வைத்திருந்தனர். மேற்கு ஜெர்மனி துருக்கியில் இருந்து தருவிக்கப்பட்ட தொழிலாளிகளை அவ்வாறு முகாம்களில் வைத்திருந்தது. பிற்காலத்தில் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிக்கவே கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது.
இன்று கிழக்கு ஜெர்மனியில் நிறவாதம் தன்னை வெளிப்படையாக காட்டிக் கொள்கின்றது. ஆனால் மேற்கு ஜெர்மனியில் அது மறைபொருளாக வேறு வழிகளில் காண்பிக்கப்படுகின்றது. அது இன்று நவீன நிறவாதமாக பரிணாம வளர்ச்சியைக் கண்டுள்ளது. “நான் அவர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் அவர்கள் இங்கே இருக்க வேண்டியவர்கள் அல்ல!” புராதன நிறவாதம் வெள்ளயினத்தவர்களின் நாட்டினுள் வாழத் துணியும் அந்நியர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. ஆனால் நவீன நிறவாதம் அப்படியல்ல. அந்நியர்களை மனிதர்களாக ஏற்றுக் கொள்ளும் அதே வேளை, அவர்களை எட்டத்தில் வைத்திருக்க விரும்புகிறது.
பெர்லினைச் சேர்ந்த “நிற வெறிக்கு எதிரான அமைப்பு” தொண்ணூறுகளின் பின்னர் இனவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதை ஆவணப்படுத்தியுள்ளது. 1993 இல் இருந்து 761 அகதிகள் தாக்கப்பட்டுள்ளனர். முகாம்களுக்கு நெருப்பு வைத்த அசம்பாவிதத்தில் அகப்பட்டு மரணமுற்றவர்கள் 67 பேர். தெருவில் அகப்பட்டு கும்பல் வன்முறைக்கு இலக்காகி 15 அகதிகள் இறந்துள்ளனர்.
“மொட்டைத் தலையர்கள்”(ஸ்கின் ஹெட்ஸ்), ஹிட்லரையும், நாஜிசத்தையும் ஆராதிக்கும் நிறவெறிக் காடையர்களே வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். சாதாரண உதைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி நடக்கும் இடங்களில் அவர்களைக் காணலாம். 88 அல்லது 18 போன்ற இலக்கங்களைக் கொண்ட சட்டை போட்டிருப்பார்கள். அந்த இலக்கத்தில் என்ன இருக்கிறது? “Heil Hitler” – இந்த ஜெர்மன் சொற்களில் வரும் முதல் எழுத்தான “H” அரிச்சுவடியில் எட்டாவது இடத்தில் வருகின்றது! அதே போன்றது தான் Adolf Hitler (18). அதற்கடுத்ததாக ஒரு பிரிட்டிஷ் பாஷன் கம்பெனி தயாரிக்கும் “Lonsdale” பிராண்ட் ஆடைகளும் நாஜி ஆதரவாளர்களிடையே பிரபலம். நாஜிக் கட்சியின் பெயரின் சுருக்கமான NSDAஅதற்குள் மறைந்துள்ளது! ஜெர்மனியில் மேற்குறிப்பிட்ட சொற்களை நேரடியாக பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனிக்குள் கருப்பனாக சுற்றிக் கொண்டிருந்த வல்ராப், ஒரே ஒரு இடத்தில் மட்டும் அடையாளம் காணப்பட்டார். கிழக்கு ஜெர்மனியில் மாக்டபூர்க் என்ற நகரில் ஒரு வாகன வர்த்தகர் இவரை சரியாக இனங்கண்டு கொண்டார். ஆயினும் கடைசி வரை காட்டிக் கொடுக்கவில்லை. இருந்தாலும் “பொதுவாகவே கிழக்கு ஜெர்மானியர்கள் நிறவெறியர்கள் என்பதைப் போல (மேற்கு) ஜெர்மன் ஊடகங்கள் ஒரு பக்க சார்பான கருத்துகளை பரப்பி வருவதாக” விசனமுற்றார். அதற்கு பதிலளித்த வல்ராப், தான் இரண்டு பக்க ஜெர்மனியிலும் நிலவும் நிறவாதம் பற்றியே ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். பின்னர் ஒரு நேரம் வல்ராபை நேர்காணல் செய்த மாக்டபூர்க் பத்திரிகையாளர், இதே போன்றதொரு கோரிக்கையை முன்வைத்தார். “உங்களது அரிய செயல், எமது நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை இல்லாதொழிப்பதில் பங்காற்றுமாகில், அதற்கு நான் துணை நிற்கிறேன்.” என்று வாழ்த்தி அனுப்பினார்.
LONDON - AUGUST 26: Vials containg pills for homeopathic remedies are displayed at Ainsworths Pharmacy on August 26, 2005 in London. British medical journal The Lancet has attacked the use of homeopathic treatments saying that doctors should be honest about homeopathy's lack of benefit. A joint UK/Swiss survey of 110 trials found no convincing evidence that homeopathy worked any better than a placebo. (Photo by Peter Macdiarmid/Getty Images)
அலோபதி மருத்துவத்தின் வர்த்தக வேட்டையில் சிக்கிக் கொண்ட மக்களுக்கு பரிச்சயப்பட்ட பெயர் “ஹோமியோபதி”. தமிழகத்தில் கூட முற்போக்கு வட்டாரத்தில் இம்மருத்துவ முறை அதிகம் பிரபலபமானது. இருப்பினும் அறிவியல் ரீதியாக ஹோமியோபதியை எப்படி வரையறுப்பது? அலோபதி மருத்துவம் கார்ப்பரேட் பிடியில் இருந்தாலும் அது முற்றிலும் அறிவியலால் வரையறுக்கப்பட்டது. இதர மருத்துவ முறைகளை அப்படிச் சொல்ல முடியுமா? அப்படி வரையறுக்க வேண்டுமென்றால் அதற்கு என்ன வழிமுறை?
ஹோமியோபதி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முன்னோடி மருத்துவ முறை. ஹோமியோபதி மருத்துவர்களும் நோயாளிகளும் அதற்கு குணப்படுத்தும் திறன் இருப்பதாக நம்புகின்றனர். இன்று ஜனாதிபதிகள், பிரபல பாப் பாடகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டு இலட்சக் கணக்கானோர் ஹோமியோ சிகிச்சையைப் பயன்படுத்துகின்றனர்.
இங்கிலாந்தின் ஓய்வுபெற்ற பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தனது கால் காயத்திலிருந்து குணமடைய ஹோமியோபதி உதவியதாக குறிப்பிட்டுள்ளார். விக்டோரியா மகாராணி காலத்திலிருந்து பிரிட்டனின் அரச குடும்பத்தினர் ஹோமியோபதியின் பயனர்களாக உள்ளனர்.
சாமுவேல் ஹானிமேன்
ஆனாலும், அறிவியல்ரீதியாக ஹோமியோபதி இன்னும் ஒரு புதிர் தான். பதினெட்டாம் நூற்றாண்டில் சாமுவேல் ஹானிமேன் (1755-1843) என்பவரால் உருவாக்கப்பட்ட அதன் அடிப்படை வழிகாட்டும் கோட்பாடுகளில் சில இன்றும் புதிராகவே உள்ளன. புதிர் என்பதன் பொருள் அதை அறிவியல் ரீதியாக விளக்குவது சாத்தியமில்லை.
ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படையாக இரண்டு கோட்பாடுகளை கூறுவார்கள். முதலாவது “ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும்”. ஒவ்வொரு நோயும் ஒருவித அறிகுறியை ஏற்படுத்துகின்றன எனபதை நாம் அறிவோம். குறிப்பிட்ட நோயின் அறிகுறிகளை ஒத்த அறிகுறிகளை ஏற்படுத்தும் மருந்துகள் அந்த நோயை குணப்படுத்தும். அதாவது, முள்ளை முள்ளால் எடுப்பதைப் போன்று. அதனால் ஹோமியோபதியில் நோய்குறிகளைக் கொண்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
உதாரணமாக, ஒவ்வாமை காய்ச்சலுக்கு (hay fever) அலியம் செபா (allium cepa) என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. இது வேறொன்றுமில்லை வெங்காயம் தான். அதிகப்படியாக வெங்காயத்தை உரிக்கும் போது ஏற்படும் விளைவுகள் நம் அனைவருக்குமே தெரியும். மூக்கிலும் கண்களிலும், நீர் வழிந்தோடும், கண் எரியும், தும்மல் ஏற்படும். அதனால், இந்த விளைவுகளை ஒத்த நோய்க்குறிகளைக் கொண்ட ஒவ்வாமை காய்ச்சலுக்கு இம்மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த கோட்பாடு ஆயிரக்கணக்கான வெவ்வேறு பொருட்களை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு வழிகோலுகிறது. அதாவது, இந்த பூமியிலுள்ள எதையும் ஹோமியோ மருந்தாக மாற்றலாம். அவற்றுள் சில மிக விநோதமானவை; உயிர்கொல்லி நச்சுத் தாவரங்கள், விலங்குகள், பாம்பின் விசம், கனிமங்கள் மற்றும் உலோகங்கள், காசநோயால் பாதிப்படைந்த மாட்டின் நிணநீர் சுரப்பி என்று எதையும் ஹோமியோ மருந்தாக மாற்றலாம். இவற்றில் பெரும்பாலானவை மிகக் கொடிய விசத் தன்மையுள்ளவை. அவற்றை நேரடியாக எடுத்துக் கொள்வது உடனடி மரணத்தை விளைவிக்கும்.
இந்த பிரச்சினை ஹோமியோபதியின் இரண்டாவது அடிப்படைக் கோட்பாட்டை அளிக்கிறது. “மருந்தை வீரியப்படுத்துதல் – மருந்தின் செறிவைக் குறைக்க குறைக்க (Dilute) வீரியம் (Potency) அதிகரிக்கும் – என்பது ஹோமியோ உலகில் பிரபலம். இதற்கு ஹோமியோ மருந்தாளர்கள் பயன்படுத்தும் முறை ‘தொடர் செறிவுக் குறைத்தல்’ (Serial Dilution) எனப்படுகிறது.
பாம்பின் விசமோ அல்லது கந்தக அமிலமோ, எந்த மூலப்பொருளாக இருப்பினும் அதன் ஒரு துளி, 99 துளி நீர் அல்லது ஆல்கஹாலுடன் சேர்க்கப்படும். பின்னர் இந்தக் கலவை தனிச்சிறப்பான முறையில் கடுமையாக குலுக்கப்படுகிறது. இதன் மூலம் இக்கலவை 100 மடங்கு செறிவுக் குறைதலுக்கு (Dilute) உள்ளாக்கப்படுகிறது. இது 1சி (1C) கரைசல் எனப்படுகிறது.
அடுத்தகட்டமாக, இந்த 1சி கரைசலின் ஒரு துளி, 99 துளி நீரில் கலந்து குலுக்கப்படுகிறது. இது 2சி, 10,000 மடங்கு செறிவு குறைத்தலாகும். இந்த செயல் தொடர்ந்து 6சி நிலைக்குச் செல்லும் போது ஒரு இலட்சம் கோடி மடங்கு செறிவு குறைத்தல் என்றாகிறது. அதாவது, ஆறு நீச்சல் குளத்தில் ஒரு சொட்டு மருந்து என்பதற்கு சமம். மருந்தின் செறிவைக் குறைக்க குறைக்க (Dilute) வீரியம் (Potency) அதிகரிக்கும் என்பதால், இந்த செயல்முறை இன்னும் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது.
மருந்தின் செறிவைக் குறைத்து வீரியம் அதிகப்படுத்துவாக சொல்லும் ஹோமியோபதி முறையை விளக்கும் படம்.
அடுத்த ஆறு தொடர் நிலைகளில் (12சி), வங்கக்கடலில் ஒரு துளி மருந்தை கலப்பதற்கு சமமான நிலையை எட்டிவிடும். ஆனால், பெரும்பாலான ஹோமியோபதி மருந்துகளுக்கு இது போதாது. பொதுவான அடிப்படை மருந்து 30சி செறிவுக் குறைத்தலில் இருக்கும். இது பூமியிலுள்ள மொத்த கடற்பரப்பில் ஒரு துளி மருந்தை கலப்பதற்கு சமம். இந்த முறையில் தீவிர செறிவு குறைக்கப்பட்ட கரைசலின் சில துளிகள் மட்டுமே சர்க்கரை உருண்டைகளின் (மாத்திரைகள்) மீது ஊற்றி மருந்தாகக் கொடுக்கப்படுகின்றன.
சில நோய்க்குறிகளுக்கு அலோபதி மருத்துவமும், ஹோமியோபதி மருத்துவமும் ஒரே மருந்தை தான் பரிந்துரைக்கின்றன. ஆனால், வீரியமிக்க மருந்த்து என்ற பெயரில் ஹோமியோபதி மீசெறிவுக் குறைத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதை மருந்தாக தருகிறது.
இங்குதான் ஹோமியோபதியின் அறிவியலுடனான முரண்பாடு துவங்குகிறது. எந்தப் பொருளையும், கலவையையும் செறிவுக் குறைப்பதற்கு ஒரு வரம்பு உள்ளது. கரைசலின் ஒரே ஒரு மூலக்கூறு மீதமிருக்கும் நிலைவரை நாம் அதை செறிவுக் குறைக்கலாம். அதற்கு மேல் சென்றால் அந்த ஒரு மூலக்கூறும் கூட இல்லாமல் போய் கரைசல் வெறும் நீர் ஆகிவிடும். ஒரு ஹோமியோ மருந்தில் மூலக்கரைசலின் மூலக்கூறுகள் எத்தனை உள்ளன என்று எண்ணிப் பார்க்க முடியும். இதற்கு அறிவியல் அளிக்கும் பதில் ‘முற்றிலும் இல்லை’ என்பது தான். நிகழ்தகவின் அடிப்படையில் கூட ஒரு மூலக்கூறு இருப்பதற்கான சாத்தியக்கூறு 100 கோடியில் ஒரு வாய்ப்புக்கும் குறைவு. அதாவது ஹோமியோபதி மருந்தில் உண்மையில் மருந்தில்லை.
ஒரு குப்பி மாத்திரைகளின் மூலம் மூலமருந்தின் ஒரு மூலக்கூறுகூட நமது உடலில் சேருவதில்லை. நவீன உடற்கூறியல் மற்றும் மருந்தியலின் படி மனித உடல் மற்றும் நுண்கிருமிகளுடன் வினையாற்ற ஒரு குறிப்பிட்ட மருந்தின் ஒரே ஒரு மூலக்கூறாவது உட்செல்ல வேண்டும். ஒரு மூலக்கூறை உடலில் சேர்ப்பதற்கே பல ஆயிரம் குப்பிகளை விழுங்க / சப்ப வேண்டும். அதுவே ஒரு துளி மூலமருந்தை உடலில் சேர்க்க இந்தப் புவியளவை விட அதிக மாத்திரைகளை சப்ப வேண்டியிருக்கும்.
மூலமருந்தின் வேதிஆற்றல் தனிச்சிறப்பான தொடர் செறிவுகுறைப்பு முறையின் மூலம் குணப்படுத்தும் ஆற்றலாக நீருக்கு மாற்றப்படுகிறது என்கின்றனர் ஹோமியோபதிகள். (இனி நாம் ஹோமியோ மருத்துவர்கள், ஆதரவாளர்களை “ஹோமியோபதிகள்” என்று அழைப்போம்.)
ஆனால், முதற்பார்வைக்கே இது வேதிஅறிவியலுடன் முரண்படுகிறது. ஒரு கரைசலின் செறிவு (concentration) அதிகமாக இருக்கும் போது தான் வினைத்திறன் அதிகம் என்பது வேதியியலின் அடிப்படை விதி. மேலும், மூலப்பொருட்கள் அதாவது அணுக்கள், மூலக்கூறுகள் நேரிடையாக ஆற்றலாக மாறுவதாகக் கொண்டாலும், அதற்கு அணுக்கரு பிளவு, பிணைப்பு போன்ற வினை நிகழ்ந்தாக வேண்டும். இந்த தொடர் செறிவுக்குறைப்பு முறையின் மூலம் பொருட்களை நேரிடையாக ஆற்றலாக மாற்றவும் முடியாது. ஏனெனில் ஒரு குடுவையைக் குலுக்குவதன் மூலம் அணுக்கரு பிளப்போ இல்லை பிணைப்போ நடக்காத ஒன்று.
ஹோமியோபதி மருத்துவர்கள் தங்கள் மருந்துக்கு குணப்படுத்தும் திறன் இருப்பதாக கூறுகின்றனர். மறுபுறம், அறிவியல் ஹோமியோ மருந்தில் தண்ணீரைத் தவிர எதுவுமில்லை என்கிறது.
பின்னர், ஹோமியோபதி சொல்வது முற்றிலும் சரி என்று கண்டறிந்து சொன்னார் பிரான்சைச் சேர்ந்த விஞ்ஞானி ஜாக்ஸ் பென்வெனிஸ்டே. அவர் அப்போது அறிவியல் துறையில் சூப்பர் ஸ்டாராக இருந்தார். நோபல் பரிசை வெல்வார் என்று கூடப் பலரும் எதிர்பார்த்தனர்.
ஜாக்ஸ் பென்வெனிஸ்டே
பென்வெனிஸ்டே ஒவ்வாமை துறையில் நிபுணர். 1988-ம் ஆண்டு, ஒவ்வாமையை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை மனித செல்களின் மீது ஆய்வு செய்து வந்தார். அப்போது, செறிவுக் குறைக்கப்பட்ட வேதிக் கரைசல் மனித செல்களில் ஒவ்வாமையை தூண்டியதை கண்டறிந்தார். இதையடுத்து அந்தக் கரைசலை ஹோமியோ மருந்து தயாரிப்பு முறையை ஒத்த செறிவுக் குறைத்தலுக்குள்ளாக்கி சோதித்ததில் அவை ஒவ்வாமையைத் தூண்டின.
இது நீர் அதிலிருந்த வேதிப்பொருட்களை நினைவில் வைத்திருந்ததை ஒத்திருந்தது. அதனால் இதை ‘நீரின் நினைவாற்றல்’ என பென்வெனிஸ்டே அழைத்தார். இப்போது ஹோமியோபதிக்கு அறிவியல் அடிப்படை கிடைத்துவிட்டது.
அறிவியல் சமூகம் ஒப்புக் கொள்ளும் வரையில் இது ஒரு ஆய்வுமுடிவே அல்ல. அது வரை அது குளியலறையில் பாடும் ஒரு ஓபரா பாடகரை ஒத்தது. அதனால், தனது ஆய்வு முடிவுகளை இயற்கை (Nature) என்ற மதிப்புமிக்க அறிவியல் ஆய்விதழில் வெளியிட அனுப்பி வைத்தார் பென்வெனிஸ்டே.
அப்போது அந்த ஆய்விதழின் ஆசிரியராக இருந்த சர் ஜான் மடோக்ஸ், நீரின் நினைவாற்றல் என்பது விஞ்ஞானத்தை பொறுத்தவரை ஒரு அபத்தம் என்றே அறிந்திருந்தார். அதே சமயம் பிரபலமான விஞ்ஞானியின் ஆய்வை மறுக்கவும் முடியவில்லை. அதனால், ஒரு நிபந்தனையுடன் பென்வெனிஸ்டேவின் ஆய்வறிக்கையை நேச்சர் இதழில் வெளியிட்டார் மடோக்ஸ். அதாவது, ஆய்வறிக்கையை வெளியிட வேண்டுமானால், தனது ஆய்வகத்தை நேச்சர் குழுவின் சோதனைக்குட்படுத்த பென்வெனிஸ்டே ஒப்புக்கொள்ள வேண்டும்.
சர் ஜான் மடோக்ஸ்
அதன் படி, தனது குழுவுடன் பென்வெனிஸ்டேயின் ஆய்வகத்திற்கு சென்றார் மடோக்ஸ். அறிவியலாளரும், மோசடிகளை அம்பலப்படுத்துபவருமான வால்டர் ஸ்டீவர்ட், மந்திர வித்தைக்காரரும், அமானுட நடவடிக்கைகளை அம்பலப்படுத்துபவருமான ஜேம்ஸ் ராண்டி ஆகிய இருவரும் மடோக்சின் குழுவில் இருந்தனர்.
இந்தச் சோதனையில் தொடர் செறிவுக் குறைத்தலுக்கு உட்படுத்தப்பட்ட ஹோமியோபதி நீர் (மருந்து) ஏற்படுத்தும் விளைவுகள் சாதாரண தண்ணீரில் இருந்து வேறுபட்டால், ஹோமியோபதி முற்றிலுமாக நிரூபிக்கப்பட்டுவிடும்.
***
மடோக்சின் குழு, பென்வெனிஸ்டேயின் குழுவுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டது. கட்டுப்படுத்தப்பட்ட மாதிரிகளுடன் (Controlled Samples) ஹோமியோ மருந்து ஒப்பிடப்பட்டது. இதற்காக வேதிப்பொருளின்றி வெறும் நீரை தொடர் செறிவுக் குறைத்தலுக்குள்ளாக்கி சில மாதிரிகளும், மூலவேதிப்பொருள் ஹோமியோ முறையில் தொடர் செறிவுக் குறைத்தலுக்குள்ளாக்கி சில மாதிரிகளும், மிக சுத்தமான சோதனைக் குழாய்களில் தயாரித்து எடுத்துக் கொள்ளப்பட்டன.
முதல் கட்ட ஆய்வில் ஹோமியோ முறையில் தொடர் செறிவுக்குறைத்தலுக்கு உட்பட்ட வேதிப்பொருள் கலவை சாதாரண நீர் ஏற்படுத்தும் விளைவுகளில் இருந்து மாறுபட்டிருந்தது.
இரண்டாம் கட்டமாக கடுமையான, கறாரான சோதனைகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது. எந்தக் குடுவை சாதாரண நீர், எது மருந்து என்பதற்கு மறைகுறியீடுகள் கொடுக்கப்பட்டு அவை யாரும் அறியாதிருக்க உரையிலிட்டு சோதனைச் சாலையின் மேற்கூரையில் ஒட்டப்பட்டது.
பின்னர், எந்தெந்த குடுவைகள் ஒவ்வாமையை தூண்டுகின்றன என்று சோதித்து குறித்துக் கொள்ளப்பட்டது. இறுதியாக, குறியீடுகள் நீக்கப்பட்டு குடுவைகளில் இருக்கும் தொடர்புடைய கரைசல்கள் குறித்துக் கொள்ளப்பட்டன. ஒவ்வாமையைத் தூண்டிய குடுவைகளில் பெரும்பாலானவை, மூலவேதிப்பொருள் ஹோமியோ முறையில் தொடர் செறிவுக் குறைத்தலுக்கு உள்ளாக்கப்பட்டவையாக இருந்தால் பென்வெனிஸ்டேயின் ‘நீரின் நினைவாற்றலுக்கு’ நிரூபணம் கிடைத்துவிடும்.
ஆனால், பென்வெனிஸ்டேயின் குழுவினருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக முடிவுகள் கிடைத்தது. மடோக்சின் குழு, நீரின் நினைவாற்றல் என்பது மாயை என்ற தமது ஆய்வறிக்கையை நேச்சர் இதழில் வெளியிட்டது. இது பென்வெனிஸ்டேக்கு அறிவியல் துறையில் இருந்த நற்பெயரை கெடுத்து போலி அறிவியலாளர் (Pseudo-scientist) என்ற பெயரை பெற்றுக் கொடுத்தது. ஹோமியோபதி மீண்டும் அறிவியலுடன் முரண்படும் நிலைக்கு சென்றது. ஆனால், இது ஹோமியோபதியின் செல்வாக்கைக் குறைக்கவில்லை, மாறாக அதிகரித்தது.
அறிவியல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நோய்களில் இருந்து ஹோமியோ மருந்துகள் தம்மைக் காப்பாற்றியதாக பலர் கூறுகின்றனர். அறிவியல் ரீதியாக ஹோமியோபதி ஒரு அபத்தம் என்றால், அதனால் பலர் எப்படி குணமடைகின்றனர்?
இயற்கையாக உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மற்றும் சுய குணமாக்கும் சக்திகளை (Self-Healing Power) தூண்டுவதன் மூலம் ஹோமியோதி குணப்படுத்துவதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இது பொய்மருந்து விளைவு (Placebo Effect) என்கிறது அறிவியல். அதாவது, மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு மருந்தற்ற சர்க்கரை மாத்திரைகள் கொடுக்கப்படும் போது அது நோயாளிகளிடம் உளவியல்ரீதியாக நம்பிக்கையை ஏற்படுத்தி குணப்படுத்தும்.
அலோபதி மருத்துவர்களில் கூட மக்களிடம் பெயர் எடுக்கம் மருத்துவர் என்னவாக அறியப்படுகிறார்? கை ராசி டாக்டர், அவரிடம் போனால்தான் நோய் குணமாகும் என்றே மக்கள் நம்புகிறார்கள். அந்த மருத்தவர் கொடுக்கும் அதே மருந்தை இன்னொரு மருத்துவர் கொடுத்தாலும் முன்னவர் போல பின்னவரிடம் குணம் கிடைக்காது என்றே மக்கள் கருதுகின்றனர்.
ஹோமியோபதிகள் தமது நோயாளிகளிடம் மற்ற எந்த மருத்துவ முறையைவிடவும் அதிகமாக உரையாடுகின்றனர். இது உளவியல்ரீதியாக நம்பிக்கையை ஏற்படுத்தி கச்சிதமான பிளாசிபோ விளைவால் குணப்படுத்துகின்றது.
ஆனால், பிளாசிபோ விளைவில் சிறியதை விட பெரிய மாத்திரைகள் அதிக பலனையும், வெள்ளையை விட வண்ண மாத்திரைகள் அதிக பலனையும் கொடுப்பதை அறிவியல் பதிவு செய்துள்ளது. மேலும், பிளாசிபோ விளைவு எனில், தாம் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறோம், மருந்தை உட்கொள்கிறோம் என்பதையே அறியாத குழந்தைகள் மற்றும் விலங்குகளில் ஹோமியோ மருந்து வேலை செய்யக்கூடாது. ஆனால், ஹோமியோ மருந்துகள் குழந்தைகள் மற்றும் விலங்குகளின் நோயையும் குணப்படுத்துகின்றன என்கின்றனர் அதன் ஆதரவாளர்கள். இதையெல்லாம் எப்படி நிரூபிப்பது?
ஹோமியோ மருந்தில் மூலக்கரைசலின் ஒரு மூலக்கூறுகூட இல்லை என்பதை ஹோமியோபதிகள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அதற்கு குணப்படுத்தும் சக்தி இருப்பதாக வாதிடுகின்றனர்.
ஸ்காட்லாந்தின், கிளாஸ்கோவைச் (Glasgow) சேர்ந்த மருத்துவர் டேவிட் ரெய்லி ஒவ்வாமை காய்ச்சல் நோயாளிகள் 35 பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களில் ஒரு பிரிவினருக்கு ஹோமியோ மருந்தையும், மற்றொரு பிரிவுக்கு மருந்தற்ற சர்க்கரை மாத்திரைகளையும் கொடுத்து சோதித்தார். அதில், ஹோமியோ மருந்து கொடுக்கப்பட்டவர்களிடம், சர்க்கரை மாத்திரை கொடுக்கப்பட்டவர்களை விட அதிக முன்னேற்றம் இருந்தது. இதே சோதனையை அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளிடம், வெவ்வேறு நோய்களுக்கு செய்து பார்த்தார். ஆனால், அறிவியல் உலகம் அவரது ஆய்வுகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏனெனில், ஹோமியோ மருந்துகள் குணப்படுத்துகின்றன என்ற முடிவுக்கு இதில் அறிவியல் விளக்கம் எதுவுமில்லை. அதாவது, சுத்தமான நீர் எப்படி குணப்படுத்துகிறது என்பதற்கு அறிவியல் விளக்கம் எதுவுமில்லை.
2000-01ம் ஆண்டுகளில் இங்கிலாந்தின் மேடலைன் எனிஸ் மற்றும் பெல்ஜியத்தின் ராபர்ஃபிராய்ட் உள்ளிட்ட ஆய்வாளர்கள் ஹோமியோ மருந்தைச் சோதித்து பார்ப்பது என்று முடிவெடுத்தனர். அவர்கள், பென்வெனிஸ்டே பின்பற்றிய அதே சோதனை முறைகளைப் பின்பற்றினர். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் பென்வெனிஸ்டே முன்வைத்த ‘நீரின் நினைவாற்றல்’ என்ற அதே முடிவை வந்தடைந்தனர். ஆனால், இம்முறையும் அறிவியல் உலகம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. நீருக்கு நினைவாற்றல் இருக்கிறதென்றால் அது எப்படி, எவ்வாறு இருக்கிறது என்பதை இது விளக்கவில்லை.
இந்நிலையில், பென்வெனிஸ்டேயின் ஆய்வகத்தை 1988-ல் சோதித்த நேச்சர் குழுவில் இடம் பெற்றிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த மந்திர வித்தைக்காரரும், அமானுட நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் ஜேம்ஸ் ராண்டி “நீரின் நினைவாற்றலை” அறிவியல்பூர்வமாக நிரூபிப்பவர்களுக்கு 1 மில்லியன் (10 இலட்சம்) அமெரிக்க டாலர்கள் பரிசளிப்பதாக தனது வலைத்தளத்தில் அறிவித்தார்.
2002-ம் ஆண்டு பிபிசி-யின் அறிவியல் ஆவணப்பட பிரிவான ஹரிசான் (Horizon) இந்த சவாலை ஏற்று 1 மில்லியனுக்கான போட்டியை நடத்த முன்வந்தது. இதற்காக அக்குழு முதன் முறையாக, அறிவியல் ஆய்வை சொந்தமுறையில் நடத்திப் பார்க்க முடிவு செய்தது. உலகின் மிகப் பெருமைமிக்க அறிவியல் நிறுவனமான பிரிட்டனின் ராயல் சொசைட்டியின் துணைத்தலைவர் சோதனையை மேற்பார்வையிட்டு நடத்திக் கொடுக்க ஒப்புக் கொண்டார். அதற்கு சாட்சியாக ராண்டி அமெரிக்காவிலிருந்து அழைக்கப்பட்டார்.
ஜேம்ஸ் ராண்டி
இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் பீட்டர் மோப்ஸ் கலவை மாதிரிகளையும், கட்டுப்படுத்தப்பட்ட மாதிரிகளையும் உருவாக்கித்தந்தார். இவை, மூடி மறைகுறியாக்கம் செய்யப்பட்டு, இலண்டன் கைஸ் மருத்துவமனை மற்றும், ராயல் மருத்துவமனைகளின் ஆய்வகங்களில் சோதிக்கப்பட்டன.
தொடர் செறிவுக்குறைத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட தூய நீருக்கும், தொடர் செறிவுக்குறைத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வேதிப்பொருளுக்கும் இடையிலான வேறுபாடுகளுக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அதாவது ஹோமியோ மருந்திற்கும், தண்ணீருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றன ஆய்வு முடிவுகள்.
ஒட்டுமொத்த ஹோமியோபதி – அறிவியல் முரண்பாடும், இந்த சோதனையும் ஆவணப் படமாக பதிவு செய்யப்பட்டு பி.பிசி-யில் ஒளிபரப்பப்பட்டது. ஜேம்ஸ் ராண்டி அறிவித்த அந்தப் பரிசுத் தொகை இன்றுவரை யாராலும் வெல்லப்படாமலேயே உள்ளது.
***
மீநுண் தொழில்நுட்பம் (Nano Technology) மற்றும் துகள் இயற்பியல் (Quantum Physics) மூலம் ஹோமியோபதிக்கு அறிவியல் விளக்கம் அளிக்க சிலர் முயன்று வருகின்றனர். ஹோமியோ மருந்தில் மூலவேதிப்பொருளின் மீநுண் துகள்கள் இருப்பதாகவும், அவையே குணப்படுத்தும் ஆற்றலை வழங்குவதாகவும் சில ஆய்வுகள் முன்வைக்கப்பட்டன. உதாரணமாக, 2010-ம் ஆண்டு பாம்பே ஐ.ஐ.டி-யின் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை மையத்தைச் (IRCC) சேர்ந்த ஒரு குழு உலோகம் சார்ந்த ஹோமியோ மருந்துகளில், மூல உலோகங்களின் மீநுண் துகள்கள் இருப்பதாக ஒரு ஆய்வை வெளியிட்டது.
ஆனால், அறிவியல் உலகம் இந்த ஆய்வை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. ஏனெனில், இந்தச் சோதனை கட்டுப்படுத்தப்படாத முறையில் நடத்தப்பட்டதோடு, கட்டுப்படுத்தப்பட்ட மாதிரிகள் சோதிக்கப்படவில்லை. அதாவது, ஹோமியோ மருந்துக்கடைகளில் இருந்து வாங்கப் பெற்ற மருந்துகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன, சொந்தமாக தயாரிக்கப்படவில்லை. அதோடு, மருந்தில்லாத தொடர் செறிவுக்குறைத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட தூய நீர் ஒப்பீட்டு சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
துகள் இயற்பியலில் அடிப்படை துகள்கள் ஆற்றல் தாங்கிகளாக (Carrier) இருக்கின்றன. அப்படிப்பட்ட அடிப்படை துகள்கள், மூல வேதிப்பொருளின் ஆற்றலை குணப்படுத்தும் சக்தியாகத் தாங்கி கடத்துகின்றன என்கின்றனர் சிலர். துகள் இயற்பியல் என்பது அணுவின் அடிப்படை துகள்களான குவார்க்குகள் (Quarks), லெப்டான்கள் (Leptons), போசான்கள் (Bosons) போன்ற மீநுண் அளவில் பொருட்களின் செயல்பாடுகளை விவரிக்கிறது. அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் ஆற்றலை இத்தகைய அடிப்படை துகள்கள் கடத்துவதில்லை என்பதால் அறிவியல் இதை முற்றிலுமாக நிராகரிக்கிறது.
இணையத்திலும், ஆய்விதழ்களிலும் நூற்றுக்கணக்கான ஆய்வுமுடிவுகள் ஹோமியோபதிக்கு அறிவியல் விளக்கம் அளிப்பதாக காணக் கிடைக்கின்றன. ஆனால், இதுவரை அறிவியல் விதிகளால் நிரூபிக்கப்படாத அசாதரண கூற்றுகளுக்கு, மிக மிக உறுதியான சான்றுகள் தேவை. அறிவியலில், அயராது திரும்பத் திரும்ப நடத்தப்படும் சோதனைகளில் முடிவுகள் மறு உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட மாதிரிகளில் திரும்பத் திரும்ப நடத்தப்படும் சோதனைகளிலும் சரி, வெவ்வேறு மாதிரிகளில் திரும்பத் திரும்ப நடத்தப்படும் சோதனைகளிலும் சரி முடிவுகள் மறுஉறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் நிறுவனங்களின் ஆய்வுக் குழுக்களின் முன் சோதனைகள் நடத்தப்பட்டு முடிவுகள் மறுஉறுதி செய்யப்பட வேண்டும். இவை தான் மரபுரீதியான அறிவியலால் நிரூபிக்கப்படாத அசாதரண கூற்றுகளை நிறுவுவதற்கு அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ளும் வழி. ஹோமியோபதிக்கு அப்படிப்பட்ட நிரூபணம் இன்றுவரை கிடைக்கவில்லை என்பது உண்மை.
இது குறித்து ஹோமியோபதி மருத்துவர்களிடம் விவாதித்தால் “ஹோமியோபதியை ஆய்வு செய்யும் உங்கள் கண் அல்லது அறிவியல் கருவி தவறானது” என்கிறார்கள். அதாவது வேறு ஒன்றை ஆய்வு செய்யும் முறையால் தங்களை ஆய்வு செய்வது நியாயமா என்கிறார்கள். இதை என்னவென்று சொல்வது? அறிவியல் ஆய்வைப் பொறுத்தவரை ஆள் பார்த்து செய்யப்படும் ஒன்றல்ல. அதன் அடிப்படை விதிகள் அனைத்திற்கும் பொதுவானவை. தண்ணீரில் மருந்தில்லை என அறிவியல் நிரூபித்துவிட்டது. மாறாக இருக்கிறது என்று நிரூபியுங்கள் கேட்டால் ஹோமியோபதிகள் இப்படி குதர்க்கமாக வாதிடுகிறார்கள்.
தங்களது கடவுளின் இருத்தலை நிரூபிக்கும் அளவுக்கு அறிவியல் இன்னும் வளரவில்லை என்று இதையே தான் மதவாதிகள் வேறு வார்த்தைகளில் சொல்லி வருகின்றனர். ஹோமியோபதி உள்ளிட்ட மாற்று மருத்தவ முறைகள் பலரிடமும் இப்படிப்பட்ட Cult போன்ற கடுங்கோட்பாட்டு மதப்பிரிவாகவே நம்பப்படுகிறது.
இந்தப் பிரச்சினையை இப்படியும் பார்க்கலாம். ஒரு விசயத்தை கோட்பாட்டால் புரிந்து கொள்வதும், அனுபவத்தால் புரிந்து கொள்வதும் ஒன்றல்ல. ஹோமியோ உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகள் பல முன்னோடிகளின் அனுபவத்தால் உருவாக்கப்பட்டவைதான். இது ஆரம்பகால அலோபதிக்கும் பொருந்தும். பிறகு அறிவியல் வளர வளர அலோபதி மருத்துவமும் சேர்ந்து வளர்ந்தது. மற்ற முறைகள் அப்படி அறிவியலுக்குள் செல்லவில்லை.
ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்கு பஞ்சர் போன்ற மருத்துவ முறைகள் அறிவியல் ரீதியாக புடம்போடப்படும் போதுதான் அவற்றின் பயன்கள் பெருமளவு அதிகரிக்கும். இன்று பல நாடுகள், மாற்று மருத்துவ முறைகளை அரசு ரீதியாகவே அங்கீகரிப்பதில்லை. இந்தியாவிலும் மாற்று மருத்துவ முறைகளை அங்கீகரிக்கக் கூடாது என்று சில அலோபதி மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அலோபதியினர் கூறுவது போல இதை இன்னொரு எதிர்த்தரப்பிற்கு கொண்டு போவதால் பாரம்பரிய அனுபவத்தின் நேர்மறை பலன்களை மறுப்பதாகிவிடும். மாறாக அதை அறிவியல் ரீதியாக வளர்ப்பதே சரியானது. கீழா நெல்லி இன்று அலோபதி மருத்துவர்களாலேயே பரிந்துரைக்கப்படுகிறது.
எனினும் ஹோமியோபதி மருந்துத் துறையினர் அறிவியல் சோதனையில் தேர்வு பெறுவது என்பது ஏதோ மற்றவர்கள் அங்கீகாரம் கொடுக்கும் பிரச்சினையல்ல. சரியாகச் சொன்னால் அறிவியலின் கேள்விகளுக்கு ஹோமியோபதி விடையளிக்கும் போது மட்டுமே ஹோமியோபதியை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.
இந்த மருத்துவ – அறிவியல் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்! உங்கள் ஆதரவு எங்களது முயற்சிகளுக்கு தோள் கொடுக்கும். நன்றி!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
கோடை வெயிலோடு சேர்ந்து கல்வி ஆண்டின் ஆரம்ப கட்ட துன்பங்கள் மக்களை வாட்டுகின்றன. பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் வந்த பிறகு எந்தக் கல்லூரியில் என்ன படிப்பு கிடைக்கும்? கட்டணம் எவ்வளவு, விடுதி இடம் கிடைக்குமா என்றெல்லாம் ஆரம்பித்து இறுதியில் பிடித்த படிப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஏதாவது ஒரு படிப்பு கிடைக்குமா என்று தவிக்கிறார்கள் மாணவர்கள்.
அன்றாடம் மதிய நேரத்தில் அனைத்து தொலைக்காட்சிகளும் எந்த படிப்பு படிக்கலாம் என்ற வண்ண மயமான கனவுகளையும், கல்லூரிகளையும் நிபுணர்கள் வாயிலாக ஆசை காட்டுகிறார்கள். சிலநேரம் அச்சுறுத்தவும் செய்கிறார்கள்.
ஒரளவு பிடித்த படிப்பும் கல்லூரியும் கிடைத்தவர்களுக்கும் எதிர்காலம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பொறியியல் படித்த மாணவர்கள் பலர் போலீசு வேலைக்குப் போட்டி போடுகிறார்கள். பொறியியல் இடம் கிடைக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவதற்கு பல தனியார் பள்ளிகள் தமது மாணவர்களை இறுதித் தேர்வில் காப்பி அடித்து எழுதக் கூட ஊக்குவிக்கின்றன. நாமக்கல் பிராயலர் பள்ளிகள் உருவாக்கும் மன அழுத்தம் ஆண்டுக்காண்டு காவு கொள்ளப்படும் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது.
மேட்டுக்குடியினர் படிக்கும் பள்ளிகளில் ஏழை மாணவருக்கு 25% இடம் ஒதுக்க வேண்டும் எனும் அரசு உத்திரவு கேலிக்குரிய முறையில் அலட்சியப்படுத்தப்படுகிறது. மல்லையா வகையறாக்களின் வராக்கடனை வசூலிக்க முடியாத அரசுகள், ரிலையன்ஸ் நிறுவனத்தை வைத்து மாணவர்களின் கல்விக் கடனை அடாவடி செய்து வசூலிக்கின்றன. மதுரை மாணவர் லெனின் இப்படித்தான் கொல்லப்பட்டார்.
ஒப்பீட்டளவில் கட்டணக் கொள்ளை இல்லாத அரசுப் பள்ளிகள் திட்டமிட்டே சாகடிக்கப்படுகின்றன. இந்நிலையில் “நீட் தேர்வு” ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் மருத்துவக் கல்லூரி படிப்பை நிரந்தரமாக புதைத்து விட்டது.
கேள்வி கேட்க கற்றுத்தர வேண்டிய கல்வி இன்று கேள்விக்கிடமின்றி மக்களை காயடிக்க பயன்படுகிறது. நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் தனியார் மயத்தின் கோரக்கரங்களை அழிக்காமல் நமது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல கல்வியையோ எதிர்காலத்தையோ வழங்கிவிட முடியாது!
தோழமையுடன் புதிய கலாச்சாரம்
_____________________
கல்வி உரிமையை மறுத்து விற்பனை சரக்காக்கி அதனை மக்கள் மத்தியில் எதார்த்தமாகிவிட்டது இந்த அரசு. இன்று விலை கொடுத்து வாங்கிப் படித்தாலும் அது வாழ்க்கையில் கவைக்குதவாத ஒன்றாக மாறிவிட்டது என்பதற்கு சாட்சிகள் தான் இன்று லட்சக் கணக்கான வேலையில்லா கூட்டம். கல்வியின் சாரத்தை சிதைப்பதோடன்றி இன்று அதில் காவியையும் கலக்குகிறது இந்துத்துவ கும்பல். இவற்றை அம்பலப்படுத்தும் இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்.
கேள்வி கேட்க வைப்பதுதான் கல்வி – கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்
மெட்ரிக் கொலைக்கூடங்கள்!
அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி: யார் குற்றவாளி?
கல்வியுரிமையைப் பறித்து… குலத் தொழிலைத் திணித்து…
பிட் அடித்து 100% ரிசல்ட் தனியார் பள்ளிகள் சாதனை!
ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?
தனியார் கல்வியில் கருகிய விட்டில் பூச்சிகள்!
கடன் வசூல் செய்ய வேண்டியது மாணவரிடமா ரிலையன்ஸிடமா ?
கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்!
நீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது!
காட்ஸ் ஒப்பந்தம் : அரசுக் கல்வியைத் தூக்கிலிடுகிறார் மோடி!
பதினோறு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு)
$27
Payumoney மூலம்(உள்நாடு)
ரூ.400
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் காவிரிப் பிரச்சினையின் போது நடத்திய போராட்டம் (கோப்புப் படம்)
கதறும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது குற்றமா ? சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 65 பேரை இடைநீக்கம்!
கதிராமங்கலம் விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த 17.07.2017 அன்று காலை 9:00 மணிக்கு சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சார்பாக போராட்டம் நடத்துவதாக முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அனைத்து பேருந்து தடங்களின் வழியாக வரும் மாணவர்களும் குறித்த நேரத்துக்கு கல்லூரிக்கு வர வேண்டும் என முடிவு செய்தனர்.
அனைத்து மாணவர்களும் கல்லூரி வளாகத்துக்குள் போராட ஆயத்தமாகினர். பாரிமுனை வழித்தடத்தில் இருந்து வரும் மாணவர்கள் கல்லூரிக்கு வர தாமதமானது. இருந்தாலும் திட்டமிட்டபடி போராடத் துவங்கினர் மாணவர்கள். உடனே பதறியடித்துக் கொண்டு ஓடிவந்த கல்லூரி முதல்வர் காளிராஜ், துறைத் தலைவர்கள் மற்றும் போலீசார் மாணவர்களை விரட்ட ஆரம்பித்தனர்.
கலைய மறுத்த மாணவர்களைத் தாக்கத் தொடங்கினர் போலீசும் – நிர்வாகமும். மேலும் அவர்களின் அடையாள அட்டைகளையும் பறித்துக் கொண்டார் காளிராஜ். இந்த களேபரங்களுக்கிடையில் கல்லூரிக்கு வந்த பாரிமுனை வழித்தட மாணவர்களையும் தாக்கத் தொடங்கியது போலீசு.
மாணவர்களை கல்லூரி முதல்வரும் போலீசும் சேர்ந்து நடைபாதையில் உட்காரவைத்து அவர்களை மிரட்டியுள்ளது. இதனை கண்டித்து பு.மா.இ.மு -வின் உறுப்பினர் தோழர் வாசு கண்டித்து கல்லூரி முதல்வரிடம் விவாதித்துள்ளார்.
கல்லூரி முதல்வரும் வேறு வழியின்றி மாணவர்களின் அடையாள அட்டையை தருவதாக ஒப்புக் கொண்டார். ஆனால் அங்கிருந்த G-7 காவல்துறை ஆய்வாளர் இவர்களை எல்லாம் சும்மா விடக்கூடாது… என முதல்வர் காளிராஜிக்கு கட்டளையிட்டார். மற்ற பேராசிரியர்களும் போலீசும் சேர்ந்து பு.மா.இ.மு தோழரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வகையில் அடித்து இழுத்துச் செல்ல ஆரம்பித்தனர்.
காவல்துறை வாகனத்தில் வைத்தும் கடுமையாக தாக்கியுள்ளது போலீசு. தோழர் வாசுவுடன் சேர்த்து 65 மாணவர்களை இடை நீக்கம் செய்ததாக அறிவித்தார் காளிராஜ். தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மாணவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் நுழையக்கூடாது என்றும் உத்திரவிட்டுள்ளது நிர்வாகம். மீறி கல்லூரிக்குள் நுழைந்தால் போலீசிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என மிரட்டுகிறார் காளிராஜ். போராடும் மாணவர்களின் மாற்றுச்சான்றிதழைத் தந்து அவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கப் போவதாகவும் மிரட்டுகிறது கல்லூரி நிர்வாகம்.
நிலமை இவ்வாறு இருக்க போராடுபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக போலீசின் குரலை எதிரொலிக்கிறார் கல்லூரி முதல்வர் காளிராஜ்.
தமிழகம் முழுக்க போராடும் மாணவர்களை இடைநீக்கம், குண்டர் சட்டம் என மிரட்டுகிறது பாஜக-வின் கைப்பாவையாக செயல்படும் எடப்பாடி அரசு. இந்த காட்டாட்சியை எதிர்த்து அனைத்து மாணவர்களும் களமிறங்குவோம்.
தகவல் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை. தொடர்புக்கு : 94451 12675.
_____________
மற்ற ஊடகங்களில் வர இயலாத போராட்டச் செய்திகளைத் தரும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் ஜூலை 5, 2017 அன்று விவசாயியை வாழவிடு! மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதற்கு அனுமதி கோரி கடந்த ஜூன் 26, 2017 அன்று காவல் துறையிடம் அனுமதிக் கடிதம் வழங்கினாலும் ஜூலை05, 2017 அன்று காலை 7:45 மணிக்குத்தான் அனுமதி வழங்கியது போலீசு.
இருப்பினும் குறைவான நேரத்தில் தோழர்கள் சுறுசுறுப்பாக தயாரிப்பு வேலைகள் செய்து முடிக்க பொதுக்கூட்டம் மாலை 6.45 மணிக்கு துவங்கியது.
கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தோழர் செழியன் தலைமை வகித்தார்.
மக்கள் அதிகாரத்தின் தோழர் ஓவியா பேசுகையில் “ ONGC நிர்வாகமும் அரசும் இணைந்து கதிராமங்கலம் மற்றும் அதன் சுற்று பகுதிகள், தஞ்சை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மீத்தேன் எடுக்கவும் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
எங்கயோ நடக்குது, யாரவது போராடுவாங்கன்னு. நாம சும்மா வேடிக்கை பார்த்தால் என்னாவது? நமது பகுதியில் உள்ள கொஞ்சம் நஞ்சம் இருக்குற நீர் வளத்தை காக்க விவசாயிகள், மாணவர்கள், வியாபாரிகள் ஒன்றிணைந்து விவசாயியை வாழவிடு! என்று ஒருமித்த குரலில் களம் இறங்குவோம்”. என போராட மக்களை அழைத்தார்.
அடுத்த கண்டன உரை ஆற்றிய குளகுடி தோழர் ரவி அவர்கள் பேசுகையில் “ நான் ஒரு எலுமிச்சை விவசாயி, விளைந்த பழத்தினை விற்றதன் வரவு 1600, பழத்தினை பாதுகாத்து பறித்ததுக்கான செலவு 1000, மீதம் 600 உழைப்புக்கான வருமானம் கைக்கு நிற்கவில்லை, இதுதான் இன்று ஒருவிவசாயியின் நிலைமை. தான் விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயிக்க அதிகாரம் இல்லை. ஒரு விவசாய கடன் வாங்கணும் என்றால் தாசில்தார் முதல் தலையாரி வரை லஞ்சம் தர வேண்டும். அப்படியே கடன் வாங்கினாலும் வட்டி 13.5% ஆனால் காருக்கு 0% வட்டி, இந்தனையும் தாங்கிக்கொண்டு விவசாயம் செய்தால் உரிய விலை இல்ல கொள்முதல் நிலையங்கள் திறப்பதில்லை. நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, இப்படியாக விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகிறது அரசு. எப்படி டாஸ்மாக்கு எதிராக நாம் போராடுகிறோமோ அதேபோல் நமது வாழ்வாதாரத்துக்கும் போராட வேண்டும்”. என போராட்டத்தின் அவசியத்தை விளக்கி பேசினார்.
அடுத்த கண்டன உரையாக பேசிய புள்ளம்பாடி பாசன வாய்கால் சங்க தலைவர் திரு நடராஜன் பேசுகையில் “புள்ளம்பாடி வாய்கால் பல உயிர் இழப்புகளை சந்தித்து உள்ளது. இந்த அரசு எதையும் கண்டுகொள்வதில்லை நாம் அனைவரும் மக்கள் அதிகாரமாய் ஒன்றுதிரண்டு நமக்கான உரிமைக்க போராட வேண்டும். அதற்கு நாங்கள் எல்லா வகையிலும் துணை நிற்போம்”. என்று விவசாயிகளுக்கு ஆதரவை தெரிவித்தார்.
அடுத்த கண்டன உரையாற்றிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் திரு எஸ்.ஆர். கண்ணன் பேசுகையில் “காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து வருடாந்திர நீர் வரத்தை உறுதிசெய்து தரவேண்டும், நாம் விதைத்த விளைச்சலுக்கான உரிய விலையை நிர்ணயம் செய்து தரவேண்டும் நாங்கள் டெல்லி போராட்டத்திற்கு சென்றபோது பஞ்சாப், ஹரியானா மக்கள் 3000 பேர் ஆதரவு கொடுத்தனர், நீங்கள் போராடுவது உங்களுக்காக மட்டும் இல்லை நாங்களும் இதே நிலையில்தான் உள்ளோம் என்று தங்களின் ஆதங்கத்தை வெளியிட்டனர் அந்த வகையில் தமிழகம் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் விடிவுக்கு ஆதாரமாக மாற்றப்பட வேண்டும் அத்தகைய போராட்டத்துக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்”. என்று கூறினார்.
அடுத்ததாக கொள்ளிடம் ஆற்று மணல் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக திரு அறிவழகன் அவர்கள் பேசுகையில் “எங்களுடன் அன்பில் பகுதியில் ஆற்று மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி போராடி வெற்றி கொண்டதையும், மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய டாஸ்மாக் கடையை மூடி காட்டியதிலும் மக்கள் அதிகாரம் அமைப்பின் பங்கை பெருமிதத்துடன் கூறினார்.
அடுத்ததாக சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் அவர்கள் பேசுகையில் விவசாயியை வாழவிடு எனும் தலைப்பு நாங்களாக தேர்வு செய்தது அல்ல ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் முழக்கக்கமாக உள்ளது.
“ஒவ்வொரு பகுதியிலும் விவசாயிகள் தனி தனியாக போராடுகிறார்கள் கதிராமங்கலம், நெடுவாசல், தஞ்சை இப்படி பல இடங்களில் போராட்டம் வலுக்கிறது வடமாநிலங்களில் கடந்த ஜூலை மாதம் 5 -ம் தேதி மிக பெரிய போராட்டம் நடந்தது. அதனை கலைக்க அரசு துப்பாக்கி சூடு நடத்தி விவசாயிகளை கொன்றது. இறந்தோர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் தருவதாக அறிவித்தது. ஆனால் விவசாயிகள் அதை பொருட்படுத்தவில்லை, நாங்கள் விளைவித்த பொருளுக்கு உரிய விலைகொடு என்கின்றனர். தங்கள் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாத பட்சத்தில் குறைந்த விலைக்கு பொருள்களை விற்கின்றனர். அதை வாங்க கூட மக்களுக்கு வழியில்லாமல் இருக்கிறது.
தமிழக விவசாய சங்கத்தினர் ஒன்றுசேர்ந்து மோடியின் தரிசனத்துக்காக காத்து கிடந்தனர் கடைசியாக ஒன்றும் பலனில்லாமல் வந்துவிட்டனர். நமது உரிமைக்காக ஏன் கெஞ்ச வேண்டும் நமது உரிமையை மீட்டெடுக்க களம் இறங்கி போராடினால் தான் வெற்றியடைய முடியும். அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்தியாவை சந்தையாக மாற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வருகிறது. மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்கிறது. ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தால் இந்திய பொருளாதாரம் வீழ்ந்துவிடும் என்கிறது. இது முதலாளிகளுக்கான அரசு என்பதை நிருபித்து கொண்டே இருக்கிறது.
இந்த விவசாய அழிவை தடுக்க நாம் ஒருகிணைய வேண்டிய சமயம் இது, அனைவரும் ஒன்றிணைய மக்கள் அதிகாரம் அழைக்கிறது ஆகஸ்ட் 5 தஞ்சையில் ‘விவசாயியை வாழவிடு!’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டிற்கு அனைவரும் வர வேண்டும்” என விளக்கி பேசினார்.
இறுதியாக மக்கள் கலை இலக்கிய கழகம் கலைக்குழு தோழர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது கலைநிகழ்ச்சியில் “மண்ணை பிளந்துடுறான் எங்கள் நெஞ்ச பிளந்துடுறான்” பாடல் “உரே காஞ்சிடுச்சி உயிர்மூச்சி ஒஞ்சிடுச்சி” “தலை வணங்கா தமிழ்நாடு இது எங்கள் விவசாயியை வாழவிடு” பாடல்கள் மக்களிடையே சிறந்த வரவேற்பு பெற்றது.
இறுதியாக மக்கள் அதிகாரத்தின் தோழர் மதி நன்றியுரை கூறினார்.
பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின்னர் அப்பகுதி மக்கள் கூறியவை:
புள்ளம்பாடி பகுதியைச் சேர்ந்த சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ஒருவர் “நாங்க உங்க கூட்டம்னு சொன்ன தும் எல்லா வேலையையும் தள்ளி வச்சுட்டு வந்துட்டோம். இங்க இருக்குற விவசாயிங்களுக்கு ஒரு நல்ல கருத்தை அருமையா சொல்லிருகீங்க. இப்படியே இந்த மணல் குவாரிக்கும் ஒரு முடிவ கட்டிட்டா நல்லா இருக்கும்”. என தனது ஆதரவையும் மணல் கொள்ளைக்கு எதிரான ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.
அப்பகுதி விவசாயி ஒருவர் “நெல்லு போட்டோம், கரும்பு போட்டோம் இன்னும் என்ன என்னவோ செஞ்சு ஒன்னும் புண்ணியம் இல்ல. இப்போ வயல காய போட்டுருக்கோம். வறட்சி மாவட்டம்னு அறிவிச்சி இன்னும் இந்த கவர்மெண்ட்டு ஒன்னும் செய்யல. ஆனா நீங்க சொல்லும் போதுதான் புரியுது இந்த அரசாங்கம் நாம நல்லதுக்கு எதையும் செய்யல. இதெல்லாம் முதலாளிகளுக்காக தான்னு எங்க வாழ்கையில ஒரு வெளிச்சம் காட்டுற மாதிரி இந்த கூட்டம் இருந்தது. கண்டிப்பா உங்க மாநாட்டுக்கு நாங்க வரோம்” என்றார்.
பொதுக்கூட்டம் முடிந்த மறுநாள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட லால்குடி காவல்துறை ஆய்வாளர், அருமையா பன்னிருக்கீங்க. நான் இங்க எவ்வளவோ கூட்டம் போட்டு பாத்துருக்கோம், உணர்வோட இவளோபேர் நின்னு பார்த்தது இல்ல. இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்தா நல்லா பன்னிருப்பிங்க. நல்லா கூட்டமும் வந்துருக்கும். உங்க கூட்டத்துக்கு பர்மிஷன் கொடுக்காம விட்டு இருந்தா அது எனக்கு பெரிய பாவமா ஆகிருக்கும். நானும் ஒரு விவசாய குடும்பத்த சேர்ந்தவன் தான் என்றார்.
கூட்டம் நடந்த பகுதியில் உள்ள வியாபாரி ஒருவர் “இங்க கூட்டம்னு சொன்னா எங்களுக்கு நல்லா வியாபாரம் இருக்கும், ஆனா உங்க கூட்டத்துக்கு வந்தவுங்க அப்பிடியே உக்காந்து இருந்தாங்க நீங்க விவசாயம் அழியுது அதுக்கு இந்த அரசாங்கம் தான் காரணம்னு சொன்னிங்களே அதுக்கு தைரியம் வேணும்.
இறுதியாக நடந்த ம.க.இ.க கலை குழு தோழர்களின் கலைநிகழ்ச்சி அனைவரையும் ஈர்த்தது. சில நண்பர்கள் நமது பாடலை குறிப்பாக தலை வணங்கா நாடு இது பாடலை மொபைலில் பதிவு செய்து மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டிருந்தனர்.
புதிதாக வந்த பகுதி இளைஞர்கள் எங்கள் பகுதிக்கும் வாங்க என்று மக்கள் அதிகாரத்தை அழைத்தார்கள்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம்,
திருச்சி.
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
மார்க்ஸ் பிறந்தார் – 10
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
வினவு குறிப்பு: ஐந்தாம் அத்தியாத்தின் முதல் பிரிவில் கலை – தத்துவஞானம் குறித்து பார்க்கிறோம். எதையும் சந்தேகிக்கும் மார்க்சின் தேடல் அவரை தத்துவஞானத் துறையில் கொண்டு நிறுத்துகிறது. துல்லியமான அறிவியல் விதிகளோடு சிந்திப்போர் அறவியலுக்கு மாறான மற்றும் எதிரான கருத்துக்களை ஏற்பதில்லை. அதுதான் அறிவியல். அந்த அறிவியல் நிலையை அடைய நீங்கள் அறிவியலின் பொதுவான விதிகள், வரலாறு தொடங்கி நீங்கள் கவனம் கொள்ளும் குறிப்பான துறை வரை ஆழ்ந்து படிப்பதும், அதை ஆய்வகச் சோதனைகளோடு புரிந்து கொள்வதும், நிரூபிப்பதும் அவசியம்.
அதே போன்று இந்த உலகம் – மனித சமூகம் – சிந்தனை மூன்றின் விதிகளை அறிந்து கொள்ளும் தத்துவஞானமும் இதே உலகு, சமூகம், சிந்தனையின் பொதுவான வரலாறு, செயல்பாட்டை, ஒன்றோடு ஒன்று இணைத்தும், பிரித்தும், மோதவிட்டும், மாற்றிச் சேர்த்தும் இறுதியில் தொகுப்பாக புரிந்து கொள்வது அவசியம். இதில் எங்கேயாவது நீங்கள் கருத்து முதல்வாத சாயலோடு அல்லது இயக்கமற்ற நிலையில் திரிந்து போனால் தத்துவஞானம் காட்டும் பாதையை விடுத்து தொலைந்து போவீர்கள்.
இத்தகைய கறாரான தத்துவஞான சிந்தனை முறையை கற்பிப்பதற்கு கலை உங்களை தயார் படுத்தும். உண்மையில் அழகுணர்ச்சியோடு பண்படுத்தும். சுதந்திரத்தையும், புதிய தேடலையும், அழகுணர்ச்சியையும் காட்டும் கலைதான் உங்களை தவிர்க்க வியலாமல் தத்துவஞானத் துறைக்குள் கொண்டு வந்து சேர்க்கும். கலையை வெறும் பயன்பாட்டு வாதத்தில் பார்த்தால் அழகை கற்றுக் கொள்ளவோ தரிசிக்கவோ முடியாது. அது போல தத்துவஞானத்தை வெறும் அனுபவாதத்தில் பார்த்தால் செக்கு மாடு போல ஒரே இடத்தில் சுற்றி வருவோமே தவிர மலை உச்சியைப் பார்க்க முடியாது.
இந்த உலகை புரிந்து கொள்ளும் பாதையை தத்துவஞானம் காட்டுமென்றால் அந்த பாதையின் அழகை கலை அடையாளம் காட்டும். நேர் மாறாக வறட்டுவாதமும், பயன்பாட்டுக் கலையும் தத்துவஞானத்திற்கு எதிரான புலமையை கொண்டிருப்பதாக பம்மாத்து காட்டும் அற்பவாதமே. அந்த அற்பவாதத்தை பல முனைகளில் கண்டு சீற்றமடைந்த கார்ல் மார்க்ஸ் பிறகு உண்மையை தரிசிக்க தத்துவஞானத்துறைக்கு வந்து சேர்கிறார். கலை – தத்துவம் குறித்த இந்த அழகான ஆழமான ஆரம்ப பாடத்தை நாம் கற்க ஆரம்பிக்கிறோம்.
5. அ) தத்துவஞானம் இல்லாமல்முன்னேற்றம் ஏற்பட முடியாது
தத்துவஞான ஆராய்ச்சிக்கு முதலில் அவசியமாக இருப்பது துணிவான, சுதந்திரமான அறிவே – கார்ல் மார்க்ஸ்(1)
மார்க்சின் டாக்டர் பட்ட ஆராய்ச்சியின் ஆரம்பக் குறிப்புகளில் அவருடைய இந்தக் கருத்து இடம் பெற்றிருக்கிறது. இதை இப்படியும் பொழித்துரைக்கலாம்: துணிவான, சுதந்திரமான அறிவுக்கு, அதாவது சுதந்திரமான தத்துவச் சிந்தனைக்கு தத்துவஞானப் பயிற்சி அதே அளவுக்கு அவசியமே. இதற்குச் சிறந்த உதாரணமாக மார்க்சையே குறிப்பிடலாம்.
நீதி இயல் துறையில் சுதந்திரமான தத்துவ ஆராய்ச்சிகளை மார்க்ஸ் தொடங்கிய பொழுது தத்துவஞான ரீதியில் தனக்குப் போதுமான பயிற்சி இல்லை என்பதை மார்க்ஸ் அறிந்தார் என்று நாம் ஏற்கெனவே குறிப்பிட்டோம். தத்துவச் சிந்தனை முன்னேற்றமடையக் கூடிய, வளர்ச்சி இருக்கும் ஒரு பொருளை அது சரியாக எடுத்துரைக்கக் கூடிய பொது வடிவங்களை நன்கு அறிந்து கொள்ளாமல் தத்துவத்தின் ஸ்தூலமான துறைக்குள் எவ்விதத்திலும் முன்னேறிச் செல்ல முடியாது என்பதை அவர் உணர்ந்தார்.
ஹெகல்
ஹெகலின் பிரபலமான உதாரணத்தை உபயோகிப்பதென்றால் அறிவு வேட்கையின் அடையாளச் சின்னமாகிய மினர்வாவின் ஆந்தை அந்தி நேரத்தில், எல்லாக் காரியங்களும் முடிக்கப்பட்ட பிறகு, வாழ்க்கையின் மாலைப் பொழுதில் பறந்து செல்கிறது; உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவின் உலகத்துக்கு மேலே, மிகவும் உயரத்திலிருக்கும் வானத்தில் தன் மெளனப் பயணத்தை நிறைவேற்றுவதற்காகச் சிந்தனை சுய உணர்வின் சிகரங்களை நோக்கிப் பாய்கிறது.
தத்துவஞானம் என்பது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் அறிவு பெற்ற முதியவர்களின் விவகாரம் என்றும் இந்த உருவகத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் அது சரியல்ல. இளைஞர்களுடைய மனங்களைப் பண்படுத்துகின்ற மனிதகுலக் கலாச்சாரம் என்ற மாபெரும் சோதனைச் சாலையில் இரண்டு துறைகள் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன என்று கூறலாம். அவை கலையும் தத்துவஞானமுமாகும்.
“நீங்கள் பெளதிகத்தைத் தெரிந்து கொள்ளாமல் கணிதத்தைக் கற்க முடியும் (எனினும் அது சிறந்த வழியல்ல); சடப் பொருட்களின் தன்மையைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் டாக்டராக இருக்க முடியும்; வானவியலைப் பற்றி எதுவுமே தெரியாமல் தொழில்நுட்பக் கருவிகளைத் தயாரிக்க முடியும். ஆனால் கலை மற்றும் தத்துவஞானத்தைத் தெரிந்து கொள்ளாமல் பண்பாடுடைய மனிதராக இருக்க முடியாது. நான் இதை இன்னும் திட்டவட்டமாகக் கூறுவேன்; அவை இல்லாமல் ஸ்தூலமான எந்த நடவடிக்கைத் துறையிலும் மெய்யாகப் படைப்பாற்றலைக் கொண்ட எந்தச் சாதனையையும் நீங்கள் செய்ய முடியாது.”
இக்கருத்து சற்று விசித்திரமாகத் தோன்றலாம். பூமியில் நாகரிகத்தை எடுத்துக் கொள்வோம். அது முன்னர் வாழ்ந்த தலைமுறைகளின், இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற தலைமுறையினரின் உழைப்பின் விளைவாகும். நகரங்கள்-அவை கட்டிடக் கலைஞர்கள் மற்றும் கட்டிட நிர்மாணிகளின் சாதனை; கால்வாய்கள், பாலங்கள், சாலைகள்-அவை தொழிலாளர்கள் மற்றும் பொறியியலாளர்களுடைய சாதனை; தொழிற்சாலைகள், இயந்திரங்கள், ஊதுலைகள், இயந்திரக் கருவிகள், கார்கள், லாரிகள், ஆகாய விமானங்கள், விண்வெளி ராக்கெட்டுகள்-அவை விஞ்ஞானிகள், வரைவாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் மற்றும் தொழிலாளிகளின் செய்திறன் மற்றும் கடும் உழைப்பின் சாதனை. வயல்களில் முதிர்ந்திருக்கும் பயிர்களை வேளாண்மை நிபுணர்களும் விவசாயிகளும் உருவாக்கினார்கள். இவை அனைத்தும் மனிதகுலத்துக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்றன. வாழ்க்கையின் மையம், கரு அதுவே. ஆனால் இவற்றில் தத்துவஞானிகளின் உழைப்பை நாம் எங்கே காண்கிறோம்?
தத்துவஞானத்தின் “செய்முறைப்” பயன் என்ன? அது உலகத்திற்குள் வெறுங்கைகளுடன் வரவில்லையா? துல்லியமான இயற்கை விஞ்ஞானங்களைப் போலன்றி அதன் விளைவுகள் புதிய இயந்திரங்களிலோ அல்லது முன்னைக் காட்டிலும் திறமையான தொழில்நுட்பவியல் நிகழ்வுப் போக்குகளிலோ காணப்படுவதில்லை; அது சக்தியின் புதிய ஆதாரங்களைக் கண்டுபிடிக்கவில்லை; கலப்புப் பொருள்களை அல்லது புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கவில்லை.
இயற்கை விஞ்ஞானங்களுக்கு உபயோகிக்கின்ற அளவைகளிலிருந்து வேறுபட்ட அளவைகளைத் தத்துவஞானத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது வெளிப்படை. கலைப் படைப்புகளின் சமூக முக்கியத்துவத்தை மதிப்பிடுவதற்குப் பயனெறிவாத அணுகுமுறையை உபயோகிக்க முடியாது; அதைப் போல இங்கும் அந்த அணுகுமுறை பொருந்தாது.
ஃபீடியசின் வீனஸ் சிலை, ரொதேனின் சிந்தனையாளர் சிலை, மோத்ஸார்தின் இரங்கற்பா, ஸ்கிரியாபினின் பரவசக் கவிதை ஆகியவற்றின் “செய்முறைப்” பயன் என்ன என்று கேட்பது பொருளற்றது.
கலை நாம் அழகைப் புரிந்து கொள்ளக் கற்பிக்கிறது என்றால் தத்துவஞானம் நாம் இயக்கவியல் நிலையில் சிந்திக்கக் கற்பிக்கிறது
கலை நம்மை உயர்த்துகிறது, பண்படுத்துகிறது, அழகு நுகர்ச்சி இன்பத்தை வழங்குகிறது, நேசிப்பதற்கும் வெறுப்பதற்கும் உலகத்தை வண்ணங்களாகவும் பிம்பங்களாகவும் பார்க்கவும் கற்பிக்கிறது. இது உண்மை. ஆனால் தத்துவஞானத்துடன் ஒரு ஒப்புவமையும் இருக்கிறது. கலை நம்முடைய உணர்ச்சிகளைப் பண்படுத்தி உலகத்தைப் பற்றி நம்முடைய அழகு நுகர்ச்சியை வளர்க்கிறது என்றால் தத்துவஞானம் அறிவைப் பண்படுத்துகிறது, தத்துவ ரீதியான சிந்தனைத் திறமையை வளர்க்கிறது (இவை தவிர வேறு முக்கியமான பணிகளும் உண்டு). கலை நாம் அழகைப் புரிந்து கொள்ளக் கற்பிக்கிறது என்றால் தத்துவஞானம் நாம் இயக்கவியல் நிலையில் சிந்திக்கக் கற்பிக்கிறது.
கலையைப் பயில்வதனால் சிந்தனையின் அழகியல் அம்சத்தை, புனைகதைகளை உருவாக்குவதற்கும் எதிர்பாராத இணைப்புக்களை கண்டுபிடிப்பதற்கும் அதன் திறமையை வளர்க்கிறது என்றால் தத்துவஞானப் பயிற்சி மிக உயர்ந்த பொதுமைப்படுத்தல்களைச் செய்யும் சிந்தனைத் திறனை, கருதுகோள்களை இயக்கவியல் நெகிழ்ச்சியுடன் புரிந்து கொள்ளும் திறமையை வளர்க்கிறது; ஒரு பொருளைத் தனித்துப் பார்க்காமல் தொடர்ச்சியாக மாற்றமடைந்து கொண்டிருக்கும் பன்முகப்பட்ட உறவுகளின் உலகத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கும்படி கற்பிக்கிறது.
அறிவுத்துறையில் முன்னர் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களின் விளைவுகளைக் கூட்டினைக்கின்ற மனிதனுடைய தத்துவ ரீதியான வளர்ச்சியின் சாரமே தத்துவஞானம்என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமாவது அது தனிமனிதனுடைய ஆன்மிக வளர்ச்சியில் அசாதாரணமான பாத்திரத்தை வகிக்கிறது.
அறிதல் என்ற கற்பாதைகளின் மீது களைப்புடன் நடந்து செல்கின்ற பிரயாணி தன் பயணத்தின் இறுதியில் வந்து சேர்கின்ற பணி மூடிய மலைச் சிகரங்கள் அல்ல தத்துவஞானம், அது “மலையின் மீது ஏறுவதற்குப் பயன்படுத்துகின்ற சாதனமுமாகும்”. அது துணிச்சலான கருதுகோள்கள் என்ற செங்குத்தான சரிவுகளில் காலூன்ற உதவுகிறது; ஒரு நிகழ்வை மற்றொன்றிலிருந்து பிரிக்கின்ற இடைவெளியை ஒப்புவமைகள் மற்றும் பொதுமைப்படுத்தல்களைக் கொண்டு பாலம் அமைக்க, இதுவரை யாருமே கண்டிராத மேற்பகுதிக்கு இட்டுச் செல்கின்ற பாறை முகட்டைப் பார்க்க உதவுகிறது. அனுபவவாதத்தைப் பின்பற்றினால் கீழ்ப்பகுதிகளில் சுற்றிக் கொண்டிருப்போம்; எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அந்தப் பாதையில் நாம் முன்னே போகலாமே தவிர மேலே போக முடியாது. எனவே அனுபவவாதம் என்ற கவர்ச்சிகரமான பாதை குறுகிய சாத்தியங்களை மட்டுமே கொண்டிருப்பதைப் புரிந்து கொள்வதற்கு அது உதவுகிறது.
வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் தத்துவஞானப் பயிற்சி அறிவை – அதன் இயக்கவியலில் பரிபூரணமடைந்த, செழுமையான வடிவத்தில்-திரட்டுவது மட்டுமின்றி அறிவைப் பண்படுத்துகிறது; தத்துவ ரீதியான சிந்தனைத் திறனைப் பயிற்றுவிப்பதற்கு இளமைப் பருவமே மிகவும் சிறந்த காலம். “இளைஞர் எவருமே தத்துவஞானப் பயிற்சி பெறுவதில் தாமதம் செய்ய வேண்டாம்”(2) என்று எபிகூரஸ் எழுதினார். டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையைத் தயார் செய்த பொழுது மார்க்ஸ் தன்னுடைய குறிப்புகளில் இந்த வாக்கியத்தை மேற்கோள் காட்டினார்.
சாக்ரடீஸ்
தத்துவஞானம் ஒரு வீண் வேலை என்று அற்பவாதியின் கொச்சையான மூளையே கருதுகிறது. உலகத்தின் “பிம்பமும் ஆசானுமான” (மார்க்ஸ்) சாக்ரடீசின் சிடுசிடுப்பான மனைவி க்ஸாந்திப்பா சாக்ரடீசிடம் நடந்து கொண்ட முறையை தத்துவஞானத்தைப் பற்றி அற்பவாதியின் அணுகுமுறைக்கு ஒப்பிட முடியும். சாக்ரடீஸ் வீட்டைக் கவனிப்பதில்லை, குடும்பத்தைப் பராமரிப்பதில்லை, “வெட்டிப் பேச்சில்” மூழ்கியிருக்கிறார் என்று அவள் சாக்ரடீசை எப்பொழுதும் திட்டிக் கொண்டேயிருந்தாள். தன் கணவனைக் காட்டிலும் குறைவான தகுதியும் அறிவும் உடைய மற்றவர்களுக்கு உயர்ந்த பதவிகளும் கெளரவமும் பணமும் கிடைக்கும் பொழுது சாக்ரடீஸ் ஒட்டுப் போட்ட உடையணிந்து காலணிகள் இல்லாமல் நடப்பதும் தன் மாணவர்கள் கொடுத்த குறைவான பணத்தைக் கூட அவர் பெற்றுக் கொள்ள மறுப்பதும் அவளுக்கு ஆவேசத்தை ஏற்படுத்தும்.”
மனிதர்களுக்கு இது ஒரு சிறப்பான அம்சமாகத் தோன்றுவதில்லை. அற்பவாதி இதை ஒரு குறையாகவே எடுத்துக் கொள்கிறான், ஏனென்றால் தத்துவ ரீதியான சிந்தனையினால் அவனுக்குப் பயனில்லை. அது ஒரு மனிதனை விசித்திரமானவனாக, “இந்த உலகத்துடன் சம்பந்தமில்லாதவனாக’’ ஆக்குகிறது என்று அற்பவாதி கருதுகிறான்.
மனித நிதான அறிவு “தன்னுடைய மிகவும் முட்டாள்தனமான அற்பக் கருத்துரைகளையும் சாதாரணச் செய்திகளையும் terra incognita (அறியப்படாத நிலமாக. -ப-ர்.) தத்துவஞானிகளுக்கு எதிர்நிலையில் நிறுத்துவதற்குத் தனக்கு உரிமை இருப்பதாக நம்புகிறது”(3) என்று மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைக்காகத் தயாரித்த ஆரம்பக் குறிப்புகளில் எழுதினார்.
தத்துவச் சிந்தனையைக் காட்டிலும் சுலபமானது வேறு எதுவும் இல்லை என்று அற்பவாதி நினைக்கிறார். அவரும் “அற்பமான இடங்களில் ஆழமான தத்துவஞானத்தைப்” பேசுகிறார். அதாவது நன்னெறிப் போதனைகளையும் உலகத்தில் எல்லாவற்றையும் பற்றி வாய்ப் பேச்சில் ஈடுபடுகிறார்.
தத்துவஞானம் குறித்த “நிதானமான” அணுகுமுறை என்பது வாடிக்கையாக சில தத்துவஞானக் கருதுகோள்களையும் விதிகளையும் வகையினங்களையும் உருப்போடுவதாகும்; பெளதிகத்தில் அல்லது கணிதத்தில் விதிகளையும் சூத்திரங்களையும் உருப்போடுவதைப் போன்றதே இதுவும். பெருக்கல் வாய்ப்பாடு தெரிந்திருப்பதனால் உயர் கணித ஆராய்ச்சியில் பயனில்லை. தத்துவஞானத் துறைக்கு இந்த “அறிவு” இன்னும் உபயோகமற்றதே.
துல்லியமான விஞ்ஞானங்கள் நிறுவப்பட்ட, மறுக்கப்பட முடியாத, அனுபவ முறையில் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் என்ற நிலையில் தொடங்குகின்றன. தத்துவஞானம் இறுதிநிலையில் முடிவான உண்மைகளை எட்டியவுடன் முடிவடைகிறது.
எந்த ஒரு தத்துவஞான அமைப்பின் முன்னரே தயாரிக்கப்பட்ட விளைவுகளையும் ஆராய்வதன் மூலம் தத்துவ ரீதியில் சிந்திக்கக் கற்று விட முடியாது. தத்துவஞானத்தின் மொத்த வரலாற்றையுமே சூக்குமமான வடிவங்களில் மனித சிந்தனையின் முன்னேற்றத்தின் வரலாறு என்ற அடிப்படையில் ஆராய்வது அவசியம்.
ஹெகல் எழுதிய தர்க்கவியல் முழுவதையும் நன்றாகப் படித்துப் புரிந்து கொள்ளாமல் மார்க்ஸ் எழுதிய மூலதனத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று லெனின் எழுதினார். அதைப் போலவே ஷேல்லிங், ஃபிஹ்டே, கான்ட், லேய்ப்னித்ஸ், ஸ்பினோஸா, அரிஸ்டாட்டில், பிளாட்டோ, சாக்ரடீஸ், டெமாக்கிரிடஸ், ஹெரக்லிடஸ் ஆகியோருடைய தத்துவஞானங்களை புரிந்து கொள்ளாமல் ஹெகலின் தர்க்கவியலைப் புரிந்து கொள்ள முடியாது.
தத்துவஞான மற்றும் சமூகச் சிந்தனையின் மொத்த வரலாற்றையும் தன்வயப்படுத்திக் கொள்ளாமல் ஹெகலின் தர்க்கவியலே வெல்ல முடியாது, ஹெகலைக் காட்டிலும் முன்னே போக முடியாது, ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தைப் படைக்க முடியாது என்ற உண்மை அதைக் காட்டிலும் முக்கியமானதாகும். 1830க்களில் இளம் ஹெகலியவாதிகள் ஹெகலிய அமைப்பின் சுற்றுவட்டத்திற்குள் ஊடாடிக் கொண்டு, அதன் ஆய்வுரைகளுக்கு விளக்கம் கூறி, அவருடைய போதனையில் முதலில் இந்த அம்சத்தையும் பிறகு அந்த அம்சத்தையும் பற்றிச் சிந்தித்தபடியால் அவர்கள் ஒரு நச்சுச் சுழலுக்குள் சிக்கியிருந்தார்கள்; அவர்கள் முக்கியமான முறையில் ஒரு காலடி கூட முன்னே வைக்க முடியவில்லை. ஹெகலியத் தத்துவஞானத்தில் உலக ஆன்மா தன்னுடைய இலக்காகிய சுய அறிவைப் பெற்ற பிறகு உலகத்தில் என்ன நடைபெறும் என்ற பிரச்சினையைப் பற்றி அவர்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
மார்க்ஸ் ஒருபோதும் மரபுவழிப்பட்ட ஹெகலியவாதி அல்ல. முதலில் ஹெகலின் போதனையைப் பற்றி அவருடைய அணுகுமுறை அவர் “வெறுத்த” ஒரு பொருளைப் பற்றிய அணுகுமுறையாகக் கூட இருந்தது என்பதை நாம் பார்த்தோம். ஆனால் அவர் தன்னாலியன்ற அளவுக்கு முழு அக்கறையுடனும் கவனத்துடனும் ஹெகலைப் படித்தார். ஒரு மாபெரும் சிந்தனையாளர் என்ற முறையில் ஹெகலுக்கு அவர் மரியாதை அளித்தார், ஆனால் அவரை வழிபடுகின்ற தெய்வமாக மாற்றவில்லை. அவர் ஏற்றுக் கொள்ள முடியாத அம்சங்கள் (ஹெகலின் தனிமுதலான உண்மை மற்றும் முழுமையான அமைப்பு) ஹெகலிடம் இருந்தன.
காரல்மார்க்ஸின் இளவயது தோற்றம்
இளம் மார்க்ஸ் டாக்டர் பட்டத்துக்கு எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை அவருடைய இந்தத் தத்துவஞான நிலையைப் பிரதிபலிக்கிறது; அவர் ஹெகலிடமிருந்து ஹெகல் மூலமாக ஹெகலை முறியடிப்பதற்கு முன்னேற்றமடைந்ததை இந்த நிலை எடுத்துக்காட்டுகிறது.
மார்க்சின் சந்தேகம் மற்றும் மறுப்புணர்ச்சி அவருடைய தேடலைத் தத்துவஞானச் சிந்தனையின் தோற்றுவாய்களுக்கு இட்டுச் சென்றது. அவர் சாக்ரடீஸ், பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டிலையும் படிக்கத் தொடங்கினார். டியோ கெனிஸ் லயெர்தியஸ், ப்ளுடார்க், சிம்ப்ளித்சியஸ், ஃபிலிஸ்டஸ், சிசிரோ, ஸ்டொபெயஸ், ஃபிலப்போனஸ், லுக்ரெத்சியஸ் காருஸ், ஸேக்ஸ் தியுஸ் எம்பீரிகுஸ் ஆகிய பண்டைக்கால ஆசிரியர்களின் எண்ணற்ற நூல்களையும் படித்தார்.
பண்டைக்காலத் தத்துவஞானத்தின் பல்வேறு போக்குகளிலும் கோட்பாடுகளிலும் மார்க்ஸ் டெமாக்கிரீடஸ் மற்றும் எபிகூரசின் மீது முழு கவனத்தைச் செலுத்தினார்; அவர்கள் பண்டைய கிரீசின் மாபெரும் பொருள்முதல்வாதிகள், பொருள்முதல்வாதிகளின் போதனைகளைப் பகுத்தாராய்கின்ற இந்த முயற்சியே ஹெகலுக்கும் அவருடைய மரபுவழிப்பட்ட சீடர்களுக்கும் சவாலாக இருந்தது. புதிய உலகக் கண்ணோட்டத்தைத் தேடுகின்ற முயற்சி எந்தத் திசையில் செல்கிறது என்பதை அது எடுத்துக்காட்டியது.
கருத்து முதல்வாதச் சுற்றுவட்டத்துக்குள் ஹெகலை வெல்ல முடியாது; கருத்துமுதல்வாதக் கோட்பாடுகளில் ஒன்றும் இதற்கு உதவவில்லை. இங்கே பொருள்முதல்வாதம் மட்டுமே பயனளிக்க முடியும்.
மார்க்ஸ் டாக்டர் பட்டத்துக்காக எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை அவர் பொருள்முதல்வாத நிலைக்கு மாறிவிட்டதை நிரூபிக்கவில்லை; ஆனால் கருத்துமுதல்வாதத்தின் மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டிருந்தது என்பதற்கு அக்கட்டுரை சான்றாக இருக்கிறது. கருத்துமுதல்வாதம் தத்துவஞானத்தை எதார்த்தத்திலிருந்து பிரித்து அதை ஊக முயற்சிகளுக்குள் செலுத்தியது. அதனால் தத்துவஞானத்துக்கும் “உலகத்துக்கும்” இடையில், சிந்தனைகளுக்கும் எதார்த்தத்துக்கும் இடையில் பள்ளம் ஏற்பட்டுவிட்டது. “உலகம்” தத்துவஞானத்துக்கு அந்நியமாகவும் தத்துவஞானம் “உலகத்துக்கு” அந்நியமாகவும் மாறின. தன்னை அடைய விரும்புகின்ற உந்துதலால் தூண்டப்படும் தத்துவஞானம் “அடுத்தவற்றை எதிர்த்து உலைவடைகிறது”.
அதே சமயத்தில் “உலகம்” தத்துவஞானத்தில் தோய்கின்ற பொழுது தத்துவஞானம் “உலகியல்” தன்மையை அடைய விரும்புகிறது. அப்படியானல் ஹெகலியத் தத்துவஞானத்தில் உள்ளுறையாக இருந்த “உள் சுய அமைதியும் முழுமையும்” அழிந்துவிட்டன என்று பொருளாகும்.
ஹெகலியத் தத்துவஞானம் ஹெகலியவாதிகளின் போதனைகளிலேயே சீர்குலையத் தொடங்குகிறது. “உலகத்தைப் பொறுத்தமட்டில் முதலில் தலைகீழான உறவாகவும் தத்துவஞானத்தின் தீங்கான போக்காகவும் தோன்றியது இரண்டாவது நிலையில் தனிப்பட்ட தத்துவஞான சுய உணர்வில் பிளவாகவும் மாறி முடிவில் தத்துவஞானத்தின் வெளிப்புறப் பிரிவினையாகவும் இருமை நிலையாகவும், எதிர்நிலையான இரண்டு தத்துவஞானப் போக்குகளாகவும் வெளிப்படுகிறது.”(4)
குறிப்புகள் :
(1)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 469, 41
(2) Ibid., p. 488. I 47
(3) Ibid., p. 444.
(4) Ibid., p. 86.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
தஞ்சையில் வருகின்ற ஆகஸ்ட் -5 விவசாயியை வாழவிடு என்கிற மாநாட்டின் விளக்க பொதுக்கூட்டம் கடந்த 16.07.17 அன்று உடுமலை வேங்கடகிருஷ்ணா ரோட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்டது .
இக்கூட்டத்திற்கு தோழர் சூர்யா தலைமை தாங்கினார். அவர் பேசும்போது “மக்கள் அதிகாரம் மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தை வைத்து மாநாடு நடத்தி குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே கடையை நாமே மூடுவோம் என்ற முழக்கம் இன்று மக்கள்முழக்கமாக மாறி மக்கள் கடையை மூடி கொண் டிருக்கிறார்கள் . மக்கள் அதிகாரத்தின் முழக்கம் மக்கள்முழக்கமாக மாறுவதுதான் இன்று ஆள்பவர்களுக்கு பிரச்சனையாக உள்ளது.
அதிலும் உடுமலை காவல்துறையின் விசுவாசம் அதிகம். அதனால் தான் யாருமே இல்லாத இடத்தில் இந்தப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது . அதுவும் போராடித்தான் பெறவேண்டியுள்ளது .ஒரு சந்தேகம் எல்லோருமே சோறு தான் உண்கிறோம் . இவருகளுக்கும் சேர்த்துதான் பேசுகிறோம் போராடுகிறோம் , இன்றைக்கு விவசாயி 300 பேருக்கு மேல் இறந்துள்ளனர் . ஆனால் அரசு 17 பேர் கணக்கு சொல்கிறது . போராடுவது பேஷன் என்கின்றன மத்திய மாநில அரசுகள்.
விவசாயின் நிலைமைகளை பற்றியெல்லாம் கவலை இல்லை. கார்ப்ரெட் முதலாளி பற்றித்தான் கவலை. இவர்களுக்கு கோடிக் கணக்கில் தள்ளுபடி. ஆனால் விவசாயி நடுத்தெருவில் , சரி இந்த தள்ளுபடி , மானியம் தீரவு ஆகுமா , ஆகாது .விவாசயி வாழ்வதற்கும் நம்முடைய விவசாயம் கார்ப்ரேட்டிடம் கொடுக்கவும்தான் நெடுவாசல் , கதிராமங்கலம் எல்லாம். எனவே ஆக-5 மாநாடு என்பது தீர்வுக்கான மாநாடு. நிதி கொடுப்பதோடு இல்லாமல் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.உங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.”என பேசினார்.
அதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள்கட்சியை சேர்ந்த தோழர் விடுதலை மணி பேசும்போது பாரம்பரியம் என்பது இன்றைக்கு அழிக்கப்பட்டு குளம் ஏரி வாய்க்கால் என எல்லாம் இந்த அரசால் சீர்குலைக்கப் பட்டுவிட்டது. இப்போது அரசு விவசாயியையும் அழித்து துரத்துகின்றது.” என பேசினார் .
அதன் பின் தோழர் மூர்த்தி (மக்கள் அதிகாரம், கோவை ) பேசும்போது இன்றைக்கு வறட்சி மழை இல்லை என்கிறான் .ஆனால் வட மாநிலங்களில் உற்பத்தி அதிகமாகி நட்டத்தில் உள்ள விவசயிகள் போராடினால் அரசு அவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தி விரட்டுகிறது பாஜக அரசு. ஆக இந்த அரசு யாருக்கான அரசு. அதனால் தான் இது நமக்கான அரசில்லை. உழவருக்கு அதிகாரம் வேண்டும் அதுதான் தீர்வு.தோற்றுப் போன அரசிடம் கெஞ்சி பயனில்லை.வாருங்கள் மாநட்டிட்டுக்கு”, எனஅறைகூவல் விடுத்தார் .
அவரைத் தொடர்ந்து தோழர் சின்னப்பாண்டி (மக்கள் அதிகாரம், திருப்பூர் ) பேசும்போது விவசாயின் அழிவு சமுகத்தின் அழிவு என்பது இன்றைக்கு திருப்பூரில் பார்க்கிறோம் விவசாயத்தை விட்டு வந்து நாடோடிகளாக வாழ்க்கை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். காட்சா பொருள் இல்லையென்றால் இந்த தொழிலும் செய்ய முடியாது . GST வரியின் மூலமாக திருப்பூரில் தொழிலார்கள் வேலையிழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு சொந்த ஊருக்கும் போகமுடியாமல் இங்கேயும் இருக்க முடியாமல் நிலைகுலைந்துள்ளனர். அதனாலதான் சொல்கிறோம் . விவசாயின் அழிவு சமுகத்தின் அழிவு”,என்று என பேசினார்.
அடுத்து தோழர் மாறன் (வி. வி .மு கம்பம்) சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது இந்த தோற்றுப்போன அரசிடம் விவசாயிகள் கெஞ்சியதுபோதும், “இந்தியா முழுவதும் விவசாயிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு வறட்சிதான் காரணம் என்கிறார்கள். 98% நீர் பாசனம் உள்ள பஞ்சாப்பில்ஆயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்வதில்லை, நாடு முழுவதும் வறட்சியினால் மட்டும் இறப்பதில்லை. கடன் தொல்லையாலும் உரிய விலையின்மையினாலும் தான் இறக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட்களுக்கு 11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். எனவே விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுவது அரசுதான். மூடு டாஸ்மாக் முழக்கத்தை போல விவசாயியை வாழவிடு இந்திய மக்கள் முழக்கமாக மாற வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும். விவசாயியை வாழவிடு முழக்கம் எதிரிகளின் நெஞ்சை பிளக்கும்”,என்று கூறினார். குறிப்பாக தென்னை விவசயிகளும் கூட ரோட்டுக்கு வந்தாக வேண்டும். அவர்களும் தயங்காமல் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்”. என அறைகூவல் விடுத்து பேசினார் .
இறுதியாக தோழர் மணிமாறன் நன்றியுரையாற்றினார்.
வந்திருந்த விவசயிகளும் பொதுமக்களும் மாநாட்டிற்றிக்கு கலந்து கொள்ளவேண்டும் என்கிற உணர்வோடு சென்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், கோவை மண்டலம்.
_____________
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
பஞ்சாயத்தை கலைக்கப் பாக்குறான் பன்னீரு……… சென்னை மெரினா கடற்கரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் தோழர் கோவன் பாடிய இந்த பாடல் மக்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று அவர்கள் கோரியதைத் தொடர்ந்து மூன்று முறை பாடப்பட்டது.
நாடே கழுவி கழுவி ஊத்துது மோடிய………. புதிய பாடல் இப்பாடலும் பெரும் வரவேற்பு பெற்று மூன்று முறை பாடப்பட்டது.
எங்கே இருக்குற கடவுளே……நாங்க ஏங்கி கிடக்குறோம் மெரினா கரையில…… தோழர் கோவன் பாடிய புது பாடல்.
குறுக்கு வழியிலே ஆட்சியப் புடிச்ச குலேபகாவலி சசிகலா! பாடலின் முன்னோட்டம். ஒரு வேளை முதலமைச்சராக சசிகலா ஆகியிருந்தால் முழுப் பாடலும் வெளியாகியிருக்கும்
மோடி பேச்சு எல்லாம் ஃபிராடு.. அவர் கார்ப்பரேட்டு ஆளு! கோவன் பாடல் “நாடு முன்னேற்றமுன்னு மோடி முழங்குறாரு” – மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடல்
தேசதுரோகி ஆகணுணா பெப்சிய குடி………மெரினா போராட்டத்தில் தோழர் கோவன் பாடல்
______________________
இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
“ஆழ்வார் பேட்டை ஆண்டவா, வேட்டியைப் போட்டுத் தாண்டவா” புகழ் உலக நாயகனை கலைஞானி என்று அழைப்பதே தமிழக மக்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இதில் அவரை அரசியல் ஞானி என்று அழைக்கும் காலத்தின் அரசியல் அஞ்ஞானத்தை கொஞ்சம் பார்ப்போம்.
கைப்பிள்ளை சண்டைக்கு கிளம்பினால் இன்று எத்தனை தலை உருளுகிறதோ என்ற வாசகத்தை கமலஹாசனுக்கும் அதிமுக அடிமை அமைச்சர்களுக்கும் நடக்கும் போரை வைத்தும் புரிந்து கொள்ளலாம்.
பிக்பாஸ் முன்னோட்டத்தில் பணம் வாங்கி ஓட்டுப் போடும் மக்களை விட நான் பெரிய நடிகனல்ல என்று அநியாயத்திற்கு நியாயம் பேசினார் கமல். பிறகு பிக்பாஸ் வார இறுதி தொகுப்புரையிலும் சரி டவிட்டரிலும் சரி அல்லது அவரது அறிக்கைகளிலும் சரி விஜய் டிவியில் இருந்து அவர் வாங்கும் பணத்தை எப்படி நியாயப்படுத்துகிறார்?
அவருக்கும் வீடு, சம்பாத்தியம், தொழில் இருப்பதால் அந்தப்பணம் தேவைப்படுகிறதாம். இதன்படி கமலின் தத்துவம் என்னவென்றால் பணம் வாங்கிக் கொண்டு நல்ல காரியங்களில் ஈடுபடலாம். அந்த நல்ல காரியங்கள் எவை என்று கலைஞானியே தீர்மானிப்பார்.
ஜெயா ஆண்ட போதும், மோடி இவரை “ஸ்வச்ச பாரத்” தூதராக நியமித்த போதும் கமலின் முதுகை மட்டுமே நாம் பார்த்தோம். தற்போது எடப்பாடி ஆட்சியில் அவரது வீரம் செறிந்த “பான் கேக்”முகத்தை பார்க்கிறோம். என்ன இருந்தாலும் எடப்பாடி வகையறாக்களோடு சண்டை போடுவதற்கு தனி வீரம் வேண்டுமல்லவா?
டவிட்டரில் இருக்கும் சினிமா பிரபலமான கமல், மெரினா எழுச்சிக்கு பிறகு கொஞ்சம் தைரியம் அடைந்து அரசியல் கீச்ச ஆரம்பித்தார். அந்த தைரியத் தருணங்களின் நல்வாய்ப்பாக புரட்சித் தலைவி அதே மெரினாவில் சமாதியானது தற்செயல் என்றாலும் கமல், ஓபிஎஸ்-ஐ ஆதரித்தார். மறு தேர்தல் வருமென்றார். தற்போது தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று பொத்தாம் பொதுவாக போட்டுப் பார்த்தார்.
அவர் டிவிட்டரில் பேசும் போதே அதிமுக அடிமை அமைச்சர்கள் கமலுக்கு தனி மரியாதை கொடுத்து பேசினார்கள். தமிழகத்தில் விவசாயி போராடுகிறார், மாணவர்கள் நீட் தேர்வை எதிர்த்துப் போராடுகிறார்கள், பெண்கள் டாஸ்மாக்குக்கு எதிராக போராடுகிறார்கள்… சொல்லப்போனால் இந்தியாவிலேயே அதிகம் போராட்டம் நடக்கும் மாநிலமாக தமிழகம் மாறிப்போனது.
அந்த போராட்டக் களத்தின் மக்களையோ இல்லை அவர்கள்து கேள்விகளுக்கோ பதில் சொல்லத் துப்பற்ற இந்த அஞ்சப்பர் பிரியாணி வாடிக்கையாளர்கள் கமலின் தும்மலுக்கு மட்டும் உடனே கைத்துண்டால் பிடித்து ஏந்தி மறு தும்மல் போட்டு காற்றில் பறக்க விட்டார்கள். ஊரெங்கும் இப்போது அஞ்ஞான சளி!
தமிழக அரசில் ஊழல் மலிந்திருந்தால் கமல் கோர்ட்டுக்கு போகவேண்டியது தானே என்கிறார் துணை சபாநாயகரும், இந்தியா முழுவதும் சுயநிதிக் கல்லூரிகளை நடத்தும் முதலாளியுமான தம்பித்துரை. என்ன இருந்தாலும் வாய்தா ராணியின் நீதிமன்ற போங்காட்டத்தை அணு அணுவாக செய்த கும்பலைச் சேர்ந்தவராயிற்றே!
தமிழக அரசை கமல் தொடர்ந்து குறை கூறிப் பேசினால் அவர் மீது அவதூறு வழக்கு போடுவோம், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நாங்களும் பேசுவோம் என்கிறார் அமைச்சர் வேலுமணி. என்ன இருந்தாலும் தமிழகத்திலேயே ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் மீது நூற்றுக்கணக்கான அவதூறு வழக்கு போட்டு சாதனை படைத்த தலைவியின் கட்சியைச் சேர்ந்தவராயிற்றே! இதில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருதரப்பும் பேசினால் அது தமிழக மக்களுக்கு பிக்பாஸையே விஞ்சும் ரியாலிட்டி தொடர் கிடைப்பது நிச்சயம்.
சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் இப்போது மூன்றாம் தர நடிகராக கமல் பேசிவருகிறார். தாழ்த்தப்பட்ட மக்களை இழவுபடுத்தியிருப்பதால் அவரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். உடுமலைப் பேட்டை சங்கர், தருமபுரி இளவரசன் ஆகியோரை மேலே அனுப்பிய ஆதிக்க சாதிவெறியின் கோட்டையான கொங்கு மண்டலத்தை கையில் வைத்திருக்கும் நாக்கு அப்படிப் பேசுகிறது. கமலும் தனது கவிதை கிடங்கிலிருந்து தலித் மக்களை சிலாகித்து வடித்த இரண்டு கவிதைகளை எடுத்து விட்டால் பிறகு அவரும் தலித் போராளிதான்.
கமலின் முதுகில் ஆயிரத்தெட்டு புளுகு மூட்டை உள்ளது. எங்களப் பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை. தைரியமிருந்தால் அரசியலுக்கு வந்து பேசட்டும் என்கிறார் கார் டயரை வளைந்து நெளிந்து கும்பிடும் அமைச்சர் ஜெயக்குமார். சரி அருகதை உள்ள நம்மைப் போன்றோர் பேசியதால் அவர் அதை காது கொடுத்து கேட்பாரா? இல்லை கோவனை கைது செய்தது போல, திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் போட்டது போல செய்வாரா? கமல் அரசியலுக்கு வந்து ஊர் ஊராக சுற்றி, பூத் கமிட்டி போட்டு இந்த கடுமுழைப்பு வேலைக்கெல்லாம் அவர் கனவிலும் வரமாட்டார் என்ற தைரியத்தை சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார். ஆனால் சினிமா சூப்பர் ஸ்டார்களுக்கு நாலு வரியில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டலே அதை சிலாகிக்க இங்கு ஒரு பெரும் கூட்டம் உள்ளது என்பது கமலுக்குத் தெரியாதா என்ன?
ஏதோ விளம்பரத்திற்காக இப்படிப் பேசுகிறார், பொத்தாம் பொதுவாக நான்காம் தரப் பேச்சாளர் போல கமல் பேசக்கூடாது என்று கடிகிறார் அமைச்சர் செல்லூர் ராஜு. இவர் நாகரிகமாக பேசியதைக் கேட்டு காதைப் பொத்திக் கொண்டு பால்கனியில் டாட்டா காட்டும் அம்மணி தீபாவே புதிய தலைமுறையில் இருந்து விவாதம் ஒன்றில் வெளியேறினார். பிறகு தெர்மாக் கோல் போன்ற குறிப்பான அறிவியல் கண்டுபிடிப்புகளின் நாயகனான செல்லூர் ராஜுவெல்லாம் கமலுக்கு உபதேசிப்பதைப் பார்த்தால் இனி அரசியல் நகைச்சுவைக்கு நாம் டி.ஆரை தேடக்கூடாது. கலைஞானி கையிலிருக்கும் போது ராஜேந்திரின் தாடி வெடியெல்லாம் வெறும் நமத்துப் போன பட்டாசுதான்.
கமல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இத்தோடு அவர் நிறுத்தா விட்டால் அரசு சார்பில் அவர் மீது வழக்குப் போடுவோம் என்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு. ஒரு வேளை புழலில் களி தின்ன வைத்தால் கலைப்புலி வளை எலியாகிவிடும் என்று நினைத்திருக்கலாம். என்ன இருந்தாலும் சசிகலா ஷாப்பிங் வசதிகளெல்லாம் கமலுக்கு கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
இப்படி ஆள் மாத்தி ஆள் கமலின் தும்மல், விம்மல், பொறுமல், அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்த்த கமல் நாமும் கொஞ்ச நாள் அரசியல் ஞானியாக நடிப்போமே என்று நினைத்து விட்டார் போலும். என்ன இருந்தாலும் நாலு சோப்ளாங்கி அடிமைகளோடு சண்டை போடும் போது பான் கேக்கால் தனது சோப்ளாங்கித்தனத்தை மறைக்கும் வித்தை தெரிந்த ஒரு நடிகருக்கு வீரம் வரலாம் அல்லவா?
மேலும் மற்ற எதிர்கட்சி தலைவர்கள் அவர்கள் மு.க ஸ்டாலினோ இல்லை கம்யூனிஸ்டு தலைவர்களோ அனைவரும் கலைஞானியின் பாதுகாப்பிற்காக வரிந்து கொண்டு வருகிறார்கள். மோடி அரசையும், எடப்பாடி அரசையம் விமரிசித்து ஒரு நோட்டிஸ் கொடுத்தார் என்பதற்காக மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் போட்டார்கள் அல்லவா! அதை கண்டித்தும் ஒரு அறிக்கை! கமலை ஆதரித்தும் ஒரு அறிக்கை! முடிந்தது ஜனநாயகக் கடமை!
இப்படி ஒன்றுமில்லாத தனது தும்மல்கள் ஆளும் அடிமைகளால் தலைப்புச் செய்திகளாக அன்றாடம் பத்து அணிவகுப்பதைப் பார்த்த கமல், ரஜனி ஃபார்முலாவில் இதோ, இந்தா, பாரேன் நானும் வாரேன் என்று ஒன்றை கொளுத்திப் போட்டார். காசா பணமா எல்லாம் டிவிட்டர் நறுக்குதானே?
இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை, தோற்றிருந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர், விரைவில் ஒரு விளி கேட்கும், புரியாதோர்க்கு நாளை வரும் சேதி என்று படையாப்பாவின் இரண்டாவது வெர்ஷனை எடுத்து விட்டார். அதற்கு அச்சு – மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் பொழிப்புரை, மர்ம விளக்குரை, மறைபொருள் உரை என்று மாறி மாறி ஒரே விசயத்தை விளக்கும் பொருட்டு அடித்துக் கொள்கிறார்கள்.
கமலுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற நடிகையான கஸ்தூரியெல்லாம் வந்து கம்பு சுற்றுகிறார். அதிலும் ஜெயா ஆட்சியின் போது இந்த அமைச்சர்களெல்லாம் முதுகெலும்பு இல்லாமல் இருந்தவர்கள் இப்போது கமலை கண்டிப்பது ஏன் என்றெல்லாம் பேசுகிறார். இதையே கமலுக்கும் பொருத்தலாம் என்பது கூட அந்த அம்மையாருக்குத் தெரியவில்லை. என்ன இருந்தாலும் கமல் முதுகு மட்டும் தங்க முதுகில்லையா?
இடையில் பந்தி முடிந்து விடும் என்று தமிழிசையும் எச்.ராஜாவும் இந்த சென்சேஷன் அல்ப விளம்பரத்தில் சுருட்டும் பொருட்டு கமலை செல்லமாக வைகிறார்கள். இதற்கு உடனே மோடிக்கு ஃபோன் போட்டால் நடப்பதே வேறு என்று கமலுக்குத் தெரியாதா என்ன? ரஜினியை ஒரு ஃபார்முக்கு கொண்டு வருவதற்குள் இந்த உத்தம வில்லன் வந்தால் உத்தம புத்திரர்களான பாஜக லோக்கல் தாதாக்களுக்கு கோபம் வராதா என்ன? என்ன கமலே பெரிய பாஜக தாதாக்களின் திண்ணையில் பேசக்கூடியவர் என்றாலும் லோக்கல் ஆட்டம் தனியில்லையா?
இந்தியாவில் பணமதிப்பிழப்பு, மாட்டு இறைச்சி தடை, ஜி.எஸ்.டி கொள்ளை, நீட் சதி என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் மக்கள் சிக்கி வதைபடுகிறார்கள். அதிலெல்லாம் அறச்சீற்றம் அடையாத கமல் தனது பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டுக்காக அதிமுக அமைச்சர்களோடு மகாபாரதயுத்தமே நடத்துகிறார்.
இதுதான் தமிழகத்தின் சாபக்கேடா?
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
“2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தைத் தமது அரசு இரட்டிப்பாக்கப் போவதாக” அறிவித்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. “இதற்காக ஏழு அம்சங்களைக் கொண்ட ஒரு திட்டத்தை மோடி அரசு செயல்படுத்தி வருவதாக”
மோடி அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் வடமாநில விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
விளக்கமளித்திருக்கிறார், சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்.
“விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை வேண்டுமென”க் கோரி வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக மகாராஷ்டிராவிலும், மத்தியப் பிரதேசத்திலும் விவசாயிகள் கலகத்தில் இறங்கிய சூழ்நிலையில், இப்படிப்பட்டதொரு தேன் தடவிய அறிவிப்பைத் திரும்பத்திரும்பக் கூறி வருகிறது, மோடி அரசு. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்த அறிவிப்பு நனவாகிவிடுமா, குறு, சிறு விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பால் பலன் கிட்டுமா என்பதையெல்லாம் கீறிப் பார்க்கும் முன்பாக, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் மோடி அரசின் யோக்கியதையை உரசிப் பார்த்துவிடுவோம்.
2014-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாய விளைபொருட்களின் உற்பத்திச் செலவைவிடக் கூடுதலாக 50 சதவீதத்தைச் சேர்த்து விலையை நிர்ணயிப்போம்” என வாக்குறுதி அளித்தது, அக்கட்சி. ஆனால், ஆட்சியைப் பிடித்த பிறகு, விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கில், “எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்துள்ள பரிந்துரையின்படி, விவசாயிகளுக்கு 50 சதவீத இலாபம் கிடைக்கும்படி விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது” என எழுதிக் கொடுத்தது, மோடி அரசு.
“விவசாய நிலங்களின் மீதான விவசாயிகள் உரிமையைப் பாதுகாக்கக் கூடிய தேசிய நிலக் கொள்கை வகுக்கப்படும்” என்பது பா.ஜ.க. அளித்திருந்த மற்றொரு வாக்குறுதி. ஆட்சியைப் பிடித்த பிறகோ, தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டியது, மோடி அரசு. முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருந்த புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கார்ப்பரேட் முதலாளிகள் விரும்பியபடி திருத்தி, நிலத்தின் மீதான விவசாயிகளின் உரிமையைப் பறிக்க முயன்றது, பா.ஜ.க. திருத்தப்பட்ட அச்சட்டம் நாடாளுமன்ற மேலவையில் பா.ஜ.க.விற்குப் பெரும்பான்மை பலம் இல்லாததன் காரணமாக நடைமுறைக்கு வரவில்லை.
“நூறு நாள் வேலைத் திட்டத்தை விவசாயப் பணிகளோடு இணைத்து, அத்திட்டத்தை ஆக்கபூர்வமானதாக மாற்றுவோம்” என்பது இன்னொரு வாக்குறுதி. ஆனால், மோடி பிரதமர் ஆன மறுநிமிடமே, “அத்திட்டம் இந்தியாவில் வறுமையை நிரந்தரமாக்கும் நினைவுச் சின்னம்” எனச் சாடினார். அதோடு, அத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, மொத்த வேலைநாட்கள் ஆகியவற்றையும் கணிசமாகக் குறைத்தது, அவரது அரசு.
காங்கிரசு கூட்டணி ஆட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 2009-10 ஆம் ஆண்டில் 2.8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. இவ்வேலைவாய்ப்பு 2013-14 ஆம் ஆண்டில் 2.2 கோடி பேராகச் சரிந்து, மோடியின் ஆட்சியில் (2014-15) 1.66 கோடி பேராகச் சுருங்கிவிட்டது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்படி, தொழிலாளர்களுக்குப் பதினைந்து நாட்களுக்குள் கூலியை வழங்கவேண்டும். ஆனால், மோடி ஆட்சியில் இந்தக் கூலி ஆறு மாதங்கள் முடிந்த பிறகும் வழங்கப்படாததால், “செய்த வேலைக்குக் கூலி கொடு” எனக் கோரி நாடெங்கும் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
நூறு நாள் வேலைத் திட்டக் கூலியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் காவேரிப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
காங்கிரசு கூட்டணி ஆட்சியில், விவசாயிகள், பழங்குடியின மக்களின் போராட்டங்கள் காரணமாகப் பல்வேறு தொழில் திட்டங்களுக்குச் சுற்றுப்புறச் சூழல் அனுமதி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மோடி பிரதமராகப் பதவியேற்றவுடனேயே, சுற்றுப்புறச் சூழல் விதிகளின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திட்டங்களுக்குத் தடையில்லாமல் அனுமதி கிடைக்கும்படிச் சட்டத் திருத்தங்களைச் செய்து, இதுவொரு பேரழிவுக்கான ஆட்சி என நாட்டு மக்களுக்குப் புரிய வைத்தார்.
கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஓட்டுப் பொறுக்குவதும், அதிகாரத்திற்கு வந்த பின்னர் அத்தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடுவதும் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் வேறுபாடின்றிக் கையாளும் தந்திரம் என்றபோதும், பா.ஜ.க.வும், மோடியும் இந்த நரித்தனத்தில் எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தவர்கள் என்பதை இதிலிருந்து யாரும் புரிந்துகொள்ள முடியும். மோடியின் வாக்குறுதி மோசடிகளுக்கு மேலும் ஆதாரம் வேண்டுமென்றால், “சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு ஏழை இந்தியனின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து இலட்ச ரூபாயைப் போடுவோம்” என மோடி அளித்த வாக்குறுதி என்னவாயிற்று என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில், “தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்; அதற்கான நிதியை மைய அரசு ஒதுக்கும்” என்று வாக்குறுதி அளித்தார் மோடி. கடன் தள்ளுபடி என்ற சொற்கள் மோடியின் வாயிலிருந்து வந்தபொழுது, அதனைக் கைதட்டி வரவேற்ற பா.ஜ.க.வும் அதிகார வர்க்கமும், அதே சொற்கள் சாதாரண விவசாயிகளிடமிருந்து போராட்ட முழக்கமாக வந்தபோது கண்டித்தார்கள், அவமானப்படுத்தினார்கள். “கடன் தள்ளுபடி கேட்பது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது” எனத் தனது சொத்தே பறிபோனது போல விவசாயிகளைக் கொச்சைப்படுத்தினார், வெங்கய்ய நாயுடு. “கடன் வாங்கினால், அதனைக் கட்ட வேண்டாம். தள்ளுபடி செய்துவிடுவார்கள் என்ற கலாச்சாரத்தை ஏற்படுத்துகிறார்கள்” என அறம் குறித்து உபதேசித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல். “கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காது” எனக் காரியம் முடிந்த பிறகு கையை விரித்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்த பரிந்துரையை நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்ல, விளைபொருட்களுக்கான ஆதார விலை சந்தையில் கிடைப்பதைக்கூட உத்தரவாதப்படுத்த மறுத்துவருகிறது, மோடி அரசு. நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்டு 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மைய அரசு நிர்ணயித்தபோதும், நெல்லையும், கோதுமையையும் தவிர மற்ற பயிர்களை அரசு நேரடியாகக் கொள்முதல் செய்வதில்லை. அந்த இரண்டு பயிர்களுக்கும்கூட வெளிச்சந்தையில் ஆதார விலை கிடைப்பதில்லை.
குறிப்பாக, இந்த ஆண்டில் ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ.1,625 ஆதார விலையாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெளிச்சந்தையில் ஒரு குவிண்டால் கோதுமையின் விலை ரூ.1,200-ஐத் தாண்டவில்லை. இந்தச் சரிவுக்கு விளைச்சல் அதிகரிப்பைக் காரணம் காட்டுகிறார்கள், பொருளாதார நிபுணர்கள். ஆனால், அது உண்மையல்ல. விவசாயிகளிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்யாமல், நொண்டிக் காரணங்களைக் கூறி, அவர்களை வெளிச்சந்தைக்குத் தள்ளிவிட்ட அரசின் கபடத்தனமும், கோதுமை இறக்குமதிக்குத் தரப்பட்ட சலுகையும்தான் இந்தச் சரிவின் பின்னுள்ள உண்மைகள்.
கோதுமைக்கு விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத இறக்குமதித் தீர்வையை மோடி அரசு முதலில் 10 சதவீதமாகக் குறைத்து, பின்னர் அதனை முற்றிலுமாக நீக்கியது. உள்நாட்டில் கோதுமை உற்பத்தி அதிகரித்த பின்னும் இத்தீர்வையை உடனடியாக உயர்த்தாமல் காலத்தைக் கடத்திவிட்டு, விவசாயிகளின் போராட்டம் வெடிக்கவிருந்த சூழ்நிலையில் 10 சதவீதமாக நிர்ணயித்தது. துவரம் பருப்பின் விலை வீழ்ச்சிக்கும் இறக்குமதி அளிக்கப்பட்ட அதீதமான சலுகை முக்கிய காரணமாகும். விவசாயிகளின் நலனைவிட, இறக்குமதியாளர்களின் இலாபம் சரிந்துவிடாமல் காப்பாற்றுவதில்தான் மோடி அரசு அக்கறை காட்டியது.
ஒவ்வொரு ஆண்டும் ஆதார விலை அதிகரிக்கப்பட்டாலும் (அந்த அதிகரிப்பு உற்பத்திச் செலவை ஈடுகட்டுகிறதா என்பது தனியொரு விவாதப் பொருள்) விவசாயிகளுக்குக் கிடைக்கும் வருமானம் சரிவதாகக் குறிப்பிடுகிறது, விவசாயத் துறை அமைச்சகத்தின் அறிக்கை. குறிப்பாக, நெல் விளையும் 18 மாநிலங்களில், ஏழு மாநிலங்களில் மட்டும்தான் நிகர வருமானம் சற்று அதிகரித்திருக்கிறது. நிகர வருமானம் ஆறு மாநிலங்களில் கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஐந்து மாநில விவசாயிகள் நெல் விளைச்சலில் நட்டமடைந்திருக்கிறார்கள்.
நாபார்டு வங்கியின் துணை அமைப்பான சிறு விவசாயிகள் விவசாய வர்த்தகக் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் பிரவேஷ் ஷர்மாவால் தொடங்கி வைக்கப்படும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளன் நிறுவனம்.
மேலும், கரும்பு, பருத்தி, உளுந்து, சோளம் ஆகிய பயிர்களிலிருந்து விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய சராசரி இலாபம் சரிவது மோடி ஆட்சியில் மிகவும் தீவிரமடைந்திருப்பதை விவசாய விளைபொருள் உற்பத்திச் செலவு மற்றும் விலை ஆணையத்தின் அறிக்கைகளிலிருந்து பெற முடியும்.
விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களின் விலைஏற்றம்தான் இந்த வருமானச் சரிவுக்கு அடிப்படை காரணம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் யூரியாவின் விலை 69 சதவீதமும், டி.ஏ.பி. உரத்தின் விலை 300 சதவீதமும், பொட்டாஷ் உரத்தின் விலை 600 சதவீதமும் அதிகரித்திருக்கின்றன. இவற்றுக்கு அளிக்கப்படும் மானியத்தை வெட்டுவதில் தீவிரமாக இயங்கும் மைய அரசு, அவற்றின் சந்தை விலையைக் கட்டுப்படுத்த ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடுவதில்லை. இதன் காரணமாக அதிகரிக்கும் உற்பத்திச் செலவுக்கு ஏற்ற ஆதார விலை நிர்ணயிக்கப்படுவதில்லை. நிர்ணயிக்கப்படும் குறைவான ஆதார விலையும் வெளிச்சந்தையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவதில்லை என்ற சூழலில் விவசாயிகளின் வருமானம் சரிந்து, கடன் அதிகரிப்பது தொடர்கதையாகிவிட்டது.
ஏழை விவசாயிகளுக்கு விவசாயத்திலிருந்து வரும் வருமானம் சரிந்துவரும் நிலையில், அவர்களுக்குக் கால்நடை வளர்ப்புதான் கைகொடுத்து வருகிறது. இந்த நிலையில் மாட்டைச் சந்தையில் விற்பதற்குத் தடை போட்டுவிட்டு, இன்னொருபுறத்தில் விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் இரட்டிப்பாக்கப் போவதாக மோடி அறிவித்திருப்பது மோசடியானது, குரூரமானது.
தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, கால் ஏக்கர் முதல் 1 ஏக்கர் வரையிலும் நிலம் வைத்திருக்கும் குறு விவசாயிகளின் வருமானத்தோடு ஒப்பிடும்பொழுது, 10 ஏக்கர் முதல் 25 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் பெரிய விவசாயிகளின் வருமானம் கடந்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இவர்களுள் எந்தப் பிரிவு, வர்க்கத்தைச் சேர்ந்த விவசாயிகளின் வருமானத்தை மோடி இரட்டிப்பாக்கப் போகிறார்? மேலும், இன்று விவசாய உற்பத்தியிலும், உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் தொழிலும் இறங்கியிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்கூட விவசாயிகளாக வகைப்படுத்தப்படும் நிலையில், மோடி கார்ப்பரேட் விவசாயிக்காகப் பேசுகிறாரா, கடன்பட்டு நிற்கும் விவசாயிக்காகப் பேசுகிறாரா என்பதை உடைத்துப் பார்க்க வேண்டும்.
விவசாயக் கடனை விரிவுபடுத்துவது, விவசாயக் காப்பீடு திட்டங்களைப் பரவலாக்குவது, விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவது என்ற ஏழு அம்சத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, மோடி அரசு. இவையெல்லாம் புதிய சரக்கல்ல. ஊசிப் போன இட்லியை உதிர்த்து உப்புமாவாக்கித் தரப் பார்க்கிறார், மோடி.
பொதுத்துறை வங்கிகள் விவசாயத்திற்கு வழங்கும் மொத்தக்கடனில், ரூ.25,000 வரையிலும் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு வழங்கும் கடனின் பங்கு 2005-ஆம் ஆண்டுகளில் 23 சதவீதமாக இருந்தது. இப்பங்கு 2013-ஆம் ஆண்டில் 4.3 சதவீதமாகச் சரிந்துவிட்டது. இன்னொருபுறத்திலோ, ஒரு கோடிக்கு மேல் வழங்கப்படும் கடன்களின் பங்கு 7.5 சதவீதத்திலிருந்து (2005-இல்) 10 சதவீதமாக (2013-இல்) அதிகரித்திருக்கிறது. எனவே, வங்கிக் கடனை விரிவுபடுத்துவது என்பது புதுப் பணக்கார விவசாயிகள் அல்லது விவசாயத் துறைக்குள் நுழைந்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிப் பணத்தை வாரி வழங்குவதாகவே முடியும்.
மன்மோகன் சிங் அரசு நடைமுறைப்படுத்திய பழைய பயிர்க் காப்பீடு திட்டமும் சரி, மோடி கொண்டுவந்திருக்கும் புதிய விரிவுபடுத்தப்பட்ட பயிர் காப்பீடு திட்டமும் சரி, இரண்டுமே தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு அரசின் நிதியை மானியமாக அள்ளிக் கொடுக்கும் சதி என்பதைப் பல்வேறு தரவுகளோடு நிறுவியிருக்கிறது, மும்பையிலிருந்து வெளிவரும் ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எக்கானமி இதழ். குறிப்பாக, பயிர்க் காப்பீடு என்பது அசாதாரணமான இயற்கைச் சீற்றங்களால் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு ஏற்படும் நட்டத்திலிருந்து, அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பை அரசு முற்றிலும் கைகழுவிவிட்டு, அவர்களின் தலையெழுத்தைத் தனியார் நிதி நிறுவனங்களிடம் தாரை வார்ப்பதாகும்.
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவது என்பது இந்திய விவசாயிகள் மீதான பன்னாட்டு விவசாய கம்பெனிகளின் பிடியை மென்மேலும் இறுக்குவது தவிர வேறில்லை.
விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, வருமானத்தை அதிகரிப்பது என்ற மோடியின் அறிவிப்பெல்லாம் சிறு, குறு விவசாயிகளின் நலனை நோக்கமாகக் கொண்டதல்ல. அது மட்டுமின்றி, இந்திய விவசாயத்தில் பல கோடி சிறு, குறு விவசாயிகள் இன்னும் நீடித்திருப்பதை அனுமதிக்கக் கூடாதென்று வெளிப்படையாகவே அறிவிக்கிறார்கள், மோடியின் ஏகாதிபத்திய எஜமானர்கள். இக்குறு, சிறு, நடுத்தர விவசாயிகளை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, விவசாயத்தை கார்ப்பரேட் பண்ணைமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்கள், அவர்கள். இதற்காகவே, குறைவான நிலம், அதிகமான விளைச்சல் (Less land, More crop) என்ற புதிய விவசாயக் கொள்கையை அறிவித்திருக்கிறார்கள்.
தமிழக விவசாயம் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டது குறித்து மைய அரசு அதிகாரிகள் நடத்திய கண்துடைப்பு ஆய்வு. (கோப்புப் படம்)
மேலும், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் (Farmers Producers Organisation) என்ற பெயரில் அமைப்புகளை ஏற்படுத்தி, அதில் குறு, சிறு விவசாயிகளை உறுப்பினர்களாக்கி, அதன் வழியாக அவர்களை விவசாய கம்பெனிகளுக்குக் குத்தகை விவசாயிகளாக மாற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசுசாரா நிறுவனங்கள் இந்தியாவெங்கும் இறக்கிவிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 40 விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டு, அவை திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திண்டுக்கல், நாகப்பட்டிணம் மாவட்டங்களில் செயல்பட்டும் வருகின்றன. தமிழகத்தில் 30 இலட்சம் விவசாயிகளை இச்சங்கங்களில் உறுப்பினராக்குவது எதிர்காலத் திட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உரம் மற்றும் உணவு மானியம் வெட்டு, உணவுப் பொருள் இறக்குமதிக்குத் தாராள அனுமதி, உணவுப் பொருள் கொள்முதல் சட்டத்தைத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகத் திருத்துவது, உணவுப் பதப்படுத்தும் தொழிலில் 100 சதவீத அந்நிய முதலீடை அனுமதிப்பது என ஏற்கெனவே விவசாயத் துறையில் திணிக்கப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள்தான், சிறு விவசாயிகளின் வாழ்க்கையைச் சூதாட்டமாக்கி, அவர்களைப் பெரும் கடன் சுமைக்குள்ளும், தற்கொலைச் சாவுக்குள்ளும் தள்ளிவிட்டிருக்கிறது. இப்பொழுது, அவர்களின் துயரத்தைப் போக்குவது, வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்ற போர்வையில் அவர்களை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது, மோடி அரசு.
இந்த நடவடிக்கை இந்திய விவசாயிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல. இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதன் வழியாக, இந்திய உணவுக் கழகத்தையும் உணவுப் பொருட்களை அரசு கொள்முதல் செய்வதையும் முற்றிலுமாக முடக்குவது, நிறுத்துவது; ரேஷன் கடைகளைக் காட்சிப் பொருளாக்குவது, வெளிச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலையைத் தாறுமாறாக ஏற்றுவது என்ற தொடர் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது. இக்கார்ப்பரேட்மயமாக்கம், இதுவரை இந்திய ஏழை மக்களுக்கு அரைகுறையான உணவுப் பாதுகாப்பையும் ரத்து செய்து, அவர்களைப் பட்டினிப் படுகுழிக்குள் தள்ளவல்லது.
நரேந்திர மோடியும், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் தமது இயல்பிலேயே விவசாயிகளுக்கு எதிரான வலதுசாரி பொருளாதராக் கொள்கையைக் கொண்டவர்கள் என்பதாலும், அக்கும்பலுக்கு நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதோடு, நீதிமன்றங்களும், கார்ப்பரேட் ஊடகங்களும் பக்கபலமாக இருப்பதால், இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகளைத் துரித கதியில் எடுக்க விழைகிறார்கள்.
விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றுவது என்பதுதான் இந்த நடவடிக்கையின் பொருள். பண மதிப்பழிப்பு, விலை வீழ்ச்சி, கடன் சுமை, மாடு விற்பனை தடை, மீதேன், நெடுவாசல் என்பன போன்றவை ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற தனித்தனி பிரச்சினைகள் அல்ல. இவை அனைத்தும் கிராமப்புறத்திலிருந்து விவசாயிகளை நெட்டித்தள்ளி வெளியேற்றுவதற்கான வாயில்கள்.
எனவே, விவசாயிகள் இந்த அரசிடம் நீதியோ நிவாரணமோ கோரிப்பயனில்லை. வெளியேற மறுக்கும் விவசாயிகள் இந்த அரசின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குவதைத் தவிர வேறு வழியில்லை. மோடி அரசின் நடவடிக்கைகள் இதைவிடக் குறைவானதொரு கோரிக்கையை வைக்க விவசாயிகளை அனுமதிக்கவில்லை.
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
“2020-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்” என்கிறார் மோடி! இது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்விக்கு “குறைந்தளவு நிலம், அதிக மகசூல்” (Less land, more crop) என்று ஒரே வரியில் பதில் சொல்கிறார் ‘தேசிய வேளாண்மை ஆணையத்தின் தலைவர்’ எம்.எஸ்.சுவாமிநாதன்!
நிலத்தடி நீர் வற்றிப்போனது, பருவமழைப் பொய்த்துப் போனது, பன்னாட்டு விதைக் கம்பெனிகளின் விதைகள் மட்டுமே சந்தையில் கிடைப்பது ஆகிய காரணங்களால் “குறைந்தளவு நிலம், அதிக மகசூல்” முறைக்கு இயல்பாகவே விவசாயிகள், மாற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
இத்தகைய நிர்பந்தத்திற்குப் பலியான விவசாயிகளில் ஒருவர்தான் கம்பம் பகுதியைச் சேர்ந்த முருகன். இவருக்கு சொந்தமாக நிலமெதுவும் இல்லை. அவரது அனுபவத்தைக் கேட்போம்.
“ஏற்கனவே தக்காளி, பீன்ஸ்னு அடுத்தடுத்து சாகுபடி செஞ்சதுல, போட்ட முதல் கூட கிடைக்கல. என்னடா பொழைப்புன்னு எனக்கு ஒரே வெறுப்பாகிப் போச்சுங்க! ஆனா, பக்கத்து தோட்டத்து விவசாயி ஒருத்தர் மிளகாய் பயிரிட்டு ஒரு வருசத்துல 20 லட்சம் ரூபாய் லாபம் எடுத்திருந்தார். நம்மால் மட்டும் ஏன் முடியாது? நாமும் அதே மாதிரி மிளகாய் போடுவோம். அவருக்கு கிடைத்த லாபத்துல பாதி கிடைச்சாலும் இருக்குற கடனை அடைத்து விடலாமே என்று யோசித்தேன்.
சைன்ஜெண்டா- HPH1048 வீரிய ரக மிளகாய் விதை போடப்பட்ட வயற்காடு. (உள்ளே )320 ரூபாய்க்கு விற்கப்படும் 10 கிராம் கொண்ட சின்ஜென்டா வீரிய ரக விதை பாக்கெட்.
வெயில், மழை ஆகியவற்றைத் தாங்கி பத்து மாதம் வரை மகசூல் தரும். காய்கள் பருமனாகவும், கலராகவும் இருப்பதால் சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது என்பதால் சக விவசாயிகள் எல்லாரும் “சைன்ஜெண்டாவின்-HPH1048” என்ற வீரியராக விதையை சிபாரிசு செய்தார்கள். 20 லட்சம் லாபமடைந்த விவசாயியும் இதே ரகத்தைத்தான் பயிரிட்டிருந்தார். எனவே நானும் சைன்ஜெண்டா விதையையே வாங்கினேன்.
ஒரு மருந்துக் கம்பெனியில கள அதிகாரியா வேலை செய்யும் நண்பரிடம் கலந்தாலோசித்தேன். “அவர் சொட்டுநீர் போட்டால் கிணற்றில் தண்ணீர் வற்றிப்போனாலும் குறைந்த நீரில் பாசனம் செய்யலாம். மேலும் உரங்களை சொட்டுநீரிலேயே கலந்துவிடலாம். கூலியாள் செலவு மிச்சமாகும்” என்று ஆலோசனை கூறினார். ஏற்கெனவே பருவமழையும் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டிவருவதால் நண்பரின் ஆலோசனையின்படி சொட்டுநீர் போட முடிவுசெய்தேன்.
அவங்க கேட்டதையெல்லாம் கொண்டுபோன பிறகு, “நாலு அடிக்கு ஒரு நாற்றுதான் நடனும். 16 எம்.எம். ஓஸ்-தான் தருவோம்” என்று கண்டிசன் போட்டார்கள்.
மூணு அடிக்கு ஒரு நாற்றுதானே சார் நடணும். எனக்கு தண்ணீர் குறைவாக இருப்பதால் 12 எம்.எம். ஓஸ் போதும் என்றேன்.
“உங்க சவுரியத்துக்கெல்லாம் கவர்மெண்டுல தரமாட்டாங்க. நாங்க சொல்றத செஞ்சாத்தான் 100 சதவீத மானியம் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டார்கள்.
விசாரித்துப் பார்த்ததில், வேளாண்மை அதிகாரிகள் – சொட்டுநீர் கம்பெனி – அரசியல்வாதிகள் அப்படின்னு ஒரு பெரிய களவாணிக் கூட்டமே இதுக்குப் பின்னால இருக்குனு தெரிஞ்சது! வேறு வழியில்லாமல் சொந்த செலவில் ஏக்கருக்கு 50,000 ரூபாய் செலவழித்து சொட்டுநீர் போட்டுட்டேன்.
10 கிராம் பாக்கட் சைன்ஜெண்டா விதை 320 ரூபாய்! ஒரு ஏக்கருக்கு 14 பாக்கட் வாங்கினேன். நடவு செய்ததிலிருந்து மூன்றுமுறை களையெடுப்பு, வாரத்திற்கு ஒருமுறை 3,000 ரூபாய்க்கு மருந்து, மற்றும் வளர்ச்சி டானிக், 15 நாளுக்கு ஒருமுறை உரம் வாங்க 2,000 ரூபாய், என்று 60 நாட்கள் பம்பரமாகச் சுற்றி செடியைக் கவனித்தேன். இந்த அறுபது நாள் செலவு மட்டும் 50,000 ரூபாய்! இதுவரை என் குடும்பத்திற்குகூட நான் இவ்வளவு செலவு செய்ததில்லை. இதுநாள் வரை வீட்டில் ரேசன் அரிசிதான் சாப்பிடுறோம். ஆனால் வளர்ந்த செடியில் பூவும் காயுமாக நிறைந்து நின்றதைப் பார்த்தபோது, இந்தக் கவலை எல்லாம் பறந்துவிட்டது! இந்த முறை கடனை எல்லாம் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கை மனதில் தோன்றியது!
மிளகாய் தோட்டம்
கம்பெனிக்காரன் சொன்னது போலவே 15 நாளுக்கு ஒரு முறை 50 மூடை (ஒரு மூடைக்கு சராசரியாக 80 கிலோ) அறுவடை செய்தேன். மொத்தமாகக் கொண்டு போனால் மார்க்கட்டில் விலை கிடைக்காது என்பதால் ஒரு நாளுக்கு 10 மூடை வீதம் காய் பறித்தோம். ஆனாலும் மார்க்கட்டில் கிலோ 10 ரூபாய்க்குத் தான் விலை போனது. கடந்த வருடம் இதே சீசனில் 40-60 வரை விலை இருந்தது. முதல் அறுவடையில் 400 கிலோவுக்கு வரவு 4,000 ரூபாய்! ஒருநாளுக்கு 10 பேர் வீதம், 5 நாளுக்கு 50 கூலியாள் சம்பளம் (150 ரூபாய் வீதம்) 7,500 ரூபாய்! மூடையை மார்க்கட்டுக்கு எடுத்துச் செல்லும் ஆட்டோ வாடகை 150 ரூபாய் வீதம் 5 நாளுக்கு 750 ரூபாய்! 100-க்கு 10 ரூபாய் கமிசன் வீதம் 4,000 ரூபாய்க்கு கமிசனாக 400 ரூபாய்! ஆக மொத்தம் செலவு 8,650 ரூபாய்! மொத்தத்தில் நட்டம் 4,650 ரூபாய்! இன்னும் 10 மாதம் இருக்கிறதே… ஒருமாதம் விலை கிடைத்தாலும் எல்லாவற்றையும் சரிக்கட்டி விடலாம் என்று, என்னை நானே தேற்றிக்கொண்டு, அசராமல் விவசாயத்தைத் தொடர்ந்தேன்.
விலை இல்லை என்பதற்காக உரம்- மருந்து செலவை சுருக்க முடியாது. தொடர்ந்து முறையாக விவசாயத்தைக் கவனித்தால்தான் அதிகவிலை இருக்கும்போது நல்ல மகசூலைப் பெறமுடியும்! ஒரு வழியாக, நண்பரின் சிபாரிசால் சின்னமனூரில் உள்ள ஒரு மருந்துக்கடையில் கடனுக்கு உரம்- மருந்து கிடைத்தது. சம்பளத்திற்கு ஆள் விடாமல் நானே மருந்தடித்தேன்.
உரக்கடை ரசீதுகளும் (இடது), வயலில் தெளித்துக் காலியான பயிர் மருந்து புட்டிகளும். உரம், பூச்சி மருந்து, வளர்ச்சி டானிக் என அறுபது நாளில் ஆன செலவு மட்டும் ரூ.50,000/-.
தொடர்ச்சியாக கூலியாட்களுக்கு வேலை தராவிட்டால், வேறு வேலைக்குப் போய்விடுவார்கள்… காய் பறிக்கும்போது நமக்கு ஆள் கிடைக்காமல் போய்விடும். ஒரு பெண் ஒரு மூடைதான் காய் பறிப்பார். எனவே 10 பெண்களுக்கு தினசரி வேலை கொடுத்தாக வேண்டும். இதற்காக மீதி ஒரு ஏக்கரில் கத்திரி பயிரிட்டேன். நான், என் அம்மா, மனைவி மூவரும் இலவச வேலையாட்கள்!
திடீரென்று ஒருநாள் வந்த எனது நண்பர், “மழை இல்லாததாலும், அதிக வெயிலாக இருப்பதாலும் மிளகாயில் வைரஸ் பரவுகிறது. அது வந்துவிட்டால், செடியைக் காப்பாற்றவே முடியாது. எனவே நான்கு நாளுக்கு ஒருமுறை தனியாக ஒரு மருந்து அடிக்கவேண்டும்” என்று சொன்னார். வாரத்திற்கு ஒரு மருந்து என்பதுபோய், நான்கு நாளுக்கு ஒரு மருந்து என்றாகிவிட்டது! மருந்துக்கடையில் கடன் ஏறிக்கொண்டே இருந்தது.
“சாதாரண சம்சாரிகள் எல்லாம் வைரசை சமாளித்து பயிரைக் காப்பாத்த முடியாது. அதனால் மகசூல் குறைந்து, மார்க்கெட்டுக்கு காய் வரத்துக் குறைந்து போகும். எனவே செலவைப் பார்க்காமல் பராமரிப்பவனுக்குத்தான் நல்ல விலை கிடைக்கும்” என்று சக விவசாயிகள் ஆலோசனை சொன்னார்கள்.
இதற்குப் பிறகு நான் மருந்து வாங்க டூவீலரில் போகும்போதெல்லாம் எத்தனை தோட்டத்தில் வைரஸால் மிளகாய் செடி காய்ந்து கிடக்கிறது என்று தேட ஆரம்பித்தேன்! பாதிக்கப்பட்ட தோட்டத்தைப் பார்க்கும்போது மார்க்கட்டில் மிளகாய் விலை எவ்வளவு அதிகரிக்கும் என்று மனம் கணக்குப் போடத் தொடங்கியது!
ஒரு கட்டத்தில், “ச்சே…அவனும் நம்மள மாதிரி கடன் வாங்கித்தானே வெள்ளாமை வச்ச்சிருப்பான்….அடுத்தவன் நட்டத்துல நாம லாபக் கணக்குப் பார்க்கிறோமே… எவ்வளவு சின்னப் புத்தி நமக்கு” என்று என் மீதே எனக்கு வெறுப்பு வந்து அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்.
7-வது மாதத்தில் தண்ணீர் சுத்தமாக வற்றி விட்டதால், அரை ஏக்கர் மிளகாயையும், அரை ஏக்கர் கத்திரியையும் உழுது அழித்துவிட்டேன். கத்திரியில் ஒரு காய்கூட பறிக்கவில்லை. வெறும் குச்சி மட்டும்தான் இப்போது இருக்கிறது!
சந்தையில் மிளகாயின் விலை அதளபாதாளத்திற்குச் சரிந்து போனதால், விளைந்த தமது மிளகாயை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் ஆந்திர மாநில விவசாயிகள்.
மொத்தக் கணக்குப் பார்த்ததில், பத்து மாதத்தில் 3 லட்சம் ரூபாய்க்கு வருமானம் எடுத்திருக்கிறேன். தினசரி வேலையாள் கூலி, எடுப்புக்கூலி, ஆட்டோ வாடகை, கமிசன் ஆகிய வகையில் மொத்த செலவு 3,45,000 ரூபாய்! உரம் – மருந்து செலவு மட்டும் 2,75,000 ரூபாய்! ஆக மொத்தம், செலவு 6,20,000 ரூபாய்! கடைசியில் 3,25,000 ரூபாய் புதிய கடன் பட்டதுதான் என் குடும்பத்தின் பத்து மாத உழைப்புக்கு கிடைத்த பலன்!
மருந்துக் கடையில் இன்னமும் 50,000 ரூபாய் கடன் நிற்கிறது! அதை அடுத்த விவசாயத்தில் தருகிறேன் என்று சொல்லிவிட்டு வரலாம் என்று கடைக்குப் போயிருந்தேன். அங்கு என்னைப் போலவே ஒரு விவசாயி தவணை சொல்ல வந்திருந்தார். “தம்பி நான் மூணு ஏக்கர்ல மிளகாய் போட்டேன். விலை மட்டும் கிடைத்திருந்தால் கணக்கே வேற! நமக்கு நேரம் சரியில்லையே” என்றவர், “இந்தக் கடைக்காரன் 15 வருசத்துக்கு முன்னால வேறு ஒரு கடையில் சம்பளத்துக்கு வேலை செய்துக்கிட்டு இருந்தான். இன்னைக்கு ஆறு குடோனில் உரம் – மருந்து வச்சு விக்குறான். அவன் காலில் மண் படாமல் பல கோடிக்கு அதிபதியா இருக்கான். நீயும் நானும் கடன்காரனா வந்து இங்க நிக்கிறோம்” என்று கூறிவிட்டு கடையின் படியேறினார். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பிக்பாக்கட்காரனிடம் பறிகொடுத்தவனைப் போல நான் துடித்துப் போனேன்!
முன்னெல்லாம் என் பொண்டாட்டி எப்பப் பாத்தாலும் கடன், கடன்னு வந்து நிக்குறீங்களே தோட்டத்து வருமானத்தை என்ன பண்ணுனீங்க? என்று கணக்கு கேட்டு சண்டை போட்டுக்கிட்டே இருப்பாள். இதுக்காகவே இந்த தடவை வரவு-செலவு பொறுப்பை பொண்டாட்டிகிட்ட கொடுத்துட்டேன். இப்போ வீட்டுல எல்லோரும் என்னை ஒரு நோயாளி மாதிரி பரிதாபமா பாக்குறாங்க! அவமானமா இருக்கு!” என்று முடித்துக் கொண்டார் முருகன்.
***
வீரிய ரகங்களும், நவீன தொழில்நுட்பமும் உற்பத்தியைப் பெருக்கலாம். விளைபொருளின் விலையை தீர்மானிப்பது யார்? உலக வர்த்தக கழக ஒப்பந்தப்படி, அரசு தலையிட்டு விலை நிர்ணயம் செய்வதும் கொள்முதல் செய்வதும் நியாயமற்ற வணிக நடவடிக்கைகள். விலை நிர்ணயம் செய்தால் அந்த விலைக்கு அரசுதான் கொள்முதல் செய்யவேண்டும். தானியக் கொள்முதலையே நிறுத்தி வரும் அரசு, மிளகாயையா கொள்முதல் செய்யும்? அல்லது அரசு நிர்ணயிக்கும் விலையில் மண்டிக்காரனோ, பன்னாட்டு நிறுவனமோ கொள்முதல் செய்யப் போகிறார்களா?
பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான சந்தை உலகளவில் அதிகரித்து வருவதையடுத்து நிறமூட்டியாகவும், கார மணத்திற்காகவும் உலகளவில் மிளகாயின் தேவை அதிகரித்து வருகிறது. மருத்துவத் துறையிலும் மிளகாய் பயன்பட்டு வருகிறது! இத்தேவையை ஈடுகட்டவே சைன்ஜெண்டா நிறுவனம் இந்தியாவின் சந்தையைக் கைப்பற்றி வருகிறது. சைன்ஜெண்டா போன்ற கார்ப்பரேட்டுகளின் வருமானம்தான் மோடி ஆட்சியில் இரட்டிப்பாகி வருகிறது.
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் காந்தியின் பேரனும் முன்னாள் மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும் ஆவார்.
ஆந்திராவின் நெல்லூரைச் சேர்ந்த 68 வயது வெங்கய்யா நாயுடு வட இந்திய சாயல் கொண்ட பா.ஜ.க-வன் தென்னிந்திய முகமாக நிறுத்தப்படுபவர். ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராக 80-களில் இருந்தவர். தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் மூலம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2002-ம் ஆண்டில் பா.ஜ.க-வின் தேசியத் தலைவராக பொறுப்பேற்றவர், 2004 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். வாஜ்பாய் காலத்தில் அமைச்சராக இருந்தவர் தற்போது மோடி அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக பதவியேற்று பிறகு தகவல் ஒளிபரப்பு, நகர்ப்புற வீட்டு வசதி, வறுமை ஒழிப்புத் துறை அமைச்சராக இருக்கிறார்.
ஊடகங்களிடமும், நாடாளுமன்ற உரைகளிலும் இவர் ஒரு பாஜக டி.ராஜேந்தர் எனலாம். எதுகை மோனை எஃபெக்டில் எளிமையான உடைந்த ஆங்கிலத்தில் ஏட்டிக்கு போட்டியாக பேசும் ‘வல்லமை’ படைத்தவர். ஜெயா மரணத்தின் போது பாஜக சார்பில் ஃபிளையிங் ஸ்குவாடாக வந்து பணியாற்றினார். மன்னார்குடி மற்றும் ஓபிஎஸ் முதலான அ.தி.மு.க அக்கப் போர்களை திறம்பட வேலை வாங்கி தமிழகத்தில் முக்கியமான பவர் சென்டராக ஆனவர்.
தமிழக தலைமைச் செயலகத்தில் இவர் நடத்திய ஆய்வு ஒன்றே இவரது பா.ஜ.க ஆண்டைத்தனத்திற்கு ஒரு சான்று. மேலும் இந்தியாவின் தேசிய மொழியான இந்தியைக் கற்காமல் இந்தியா முன்னேற முடியாது என்றவர். விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியை ஒரு ஃபேஷன் என்று கிண்டலடித்தவர். இவற்றையெல்லாம் எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
துணை குடியரசுத் தலைவரின் முக்கிய பணியான நாடாளுமன்ற மாநிலங்களவையை வழிநடத்தும் தலைவர் வேலைக்கு வெங்கைய்யா பொருத்தமானவர் என்று பா.ஜ.க கருதுகிறது. மேலவையில் பா.ஜ.கவிற்கு போதுமான ஆட்கள் இல்லை என்பதால் கத்தல் கூச்சல்கள் மறியல்களை திறம்பட சமாளிக்கும் ஒரு பெரிய ஸ்பீக்கர் தேவையாக இருக்கிறது. ஆகவே இவரை மோடி தெரிவு செய்திருக்கிறார்.
இனி உங்கள் கருத்து…………
வெங்கய்யா நாயுடு தெரிவானதற்கு காரணம் என்ன?
மோடியின் நம்பகமான அடிமை முகம்
இந்துத்துவத்தை பேசும் தென்னிந்திய முகம்
ஆதிக்கசாதிகளை அணிதிரட்டும் முகம்
மேலவைக்குத் தேவைப்படும் நாட்டாமை முகம்
இவை அனைத்தும் ஒருசேர உள்ள முகம்
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
கோதுமை, துவரம் பருப்பு, உருளைக்கிழங்கு, வெந்தயம், பூண்டு, மிளகாய் – என விளைந்த எந்தவொரு பயிருக்கும் அவற்றின் உற்பத்திச் செலவை ஈடுசெய்யும் விலைகூட சந்தையில் கிடைக்காததால், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, அசாம், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருத்த நட்டமடைந்து தெருவில் நிற்கிறார்கள்.
தமது பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காத அநியாயத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருக்கிறார்கள். தனது தந்தையால் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலைமையை எதிர்கொள்ள முடியாமல், ஒரு ஏழைக் குடியானவனின் மகன் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனான். இப்படி, இந்த விலை வீழ்ச்சி இன்னும் எத்துணை விவசாயக் குடிகளின் உயிரை மாய்க்கக் காத்திருக்கிறதோ, தெரியவில்லை.
மத்தியப் பிரதேச மாநிலம், மந்த்சௌரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான விவசாயிகள்.
நட்டமடைந்த விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்டுப் போராடி வருகிறார்கள். அவர்களது கோரிக்கையை உதாசீனப்படுத்தி, ஒடுக்கிவிட முயன்ற அரசுகள் தோற்றுப் போய், ஒன்றுக்குப் பின் ஒன்றாகக் கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளன. ஆனாலும், இக்கடன் தள்ளுபடியை, நிதி நெருக்கடிக்கு இடையே பெரிய மனதோடு பண்ணும் தர்மம் போலக் காட்டி வருகிறது, பா.ஜ.க. மேலும், இந்த விலை வீழ்ச்சிக்கும் தமது அரசிற்கும் சம்பந்தம் இல்லாதது போலவும், விவசாயிகள் புத்தியின்றியும் பேராசைப்பட்டும் அதிக அளவில் விளைவித்து மாட்டிக் கொண்டது போலவும் சித்தரிக்கிறது, அக்கட்சி.
கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வீணான சலுகை அல்ல. விவசாயிகளை நட்டத்திற்குள் தள்ளிவிட்ட மைய, மாநில அரசுகள், அவர்களுக்கு அளிக்க வேண்டிய நியாயமான நட்ட ஈடுதான் இந்தக் கடன் தள்ளுபடி. இரண்டாவதாக, விவசாயிகள் தமது சுயநலத்திற்காக அதிக விளைச்சலைச் சந்தைக்குக் கொண்டுவரவில்லை. சமூகத்தின் தேவையை நிறைவு செய்வதற்காகவே அவர்கள் தமது சொந்த உழைப்பையும் மூலதனத்தையும் கொண்டு உற்பத்தியை அதிகரித்திருக்கிறார்கள். குறிப்பாக, “உற்பத்தியை அதிகரியுங்கள், அதனை இலாபம் தரத்தக்க விலையில் நாங்கள் கொள்முதல் செய்துகொள்வோம்” என மோடி அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பி ஏமாந்து போனவர்கள் அவர்கள்.
மகாராஷ்டிரா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்கள் 2014 மற்றும் 2015 ஆகிய இரு ஆண்டுகளிலும் கடும் வறட்சியைச் சந்தித்தன. இதனால், தண்ணீர் அதிகம் தேவைப்படும் கரும்பு, பருத்தி ஆகிய பணப் பயிர்களுக்குப் பதிலாக, தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் மாற்றுப் பயிர்களுக்கு மாற வேண்டிய தேவை உருவானது. இச்சூழ்நிலையில்தான், “ஒவ்வொரு துளி நீருக்கும் அதிகப் பயிர்” (Per drop, More crop) என்ற முழக்கத்தை முன்வைத்த மத்திய மற்றும் மாநில அரசுகள், தண்ணீரும் இடுபொருட்களும் குறைவாகத் தேவைப்படும் பருப்பு உற்பத்திக்கு மாறும்படி விவசாயிகளை நெட்டித் தள்ளின. விளைந்த பருப்பை நான்கு மடங்கு விலையில் கொள்முதல் செய்வதாகவும் விவசாயிகளுக்கு ஆசை ஊட்டின.
இதன் காரணமாக, மகாராஷ்டிராவில் 12 இலட்சம் ஹெக்டேரில் நடந்துவந்த துவரம் பருப்பு சாகுபடி, 2016-17 ஆம் ஆண்டில் 15 இலட்சம் ஹெக்டேராக அதிகரித்தது. சாகுபடி பரப்பு மட்டுமின்றி, நல்ல மழைப் பொழிவின் காரணமாக துவரம் பருப்பு உற்பத்தியும் 4.44 இலட்சம் டன்னிலிருந்து 23.5 இலட்சம் டன்னாக அதிகரித்தது. மத்திய, மாநில பா.ஜ.க. அரசுகள் இந்த அதிகரித்த உற்பத்தியை உரிய விலை கொடுத்துக் கொள்முதல் செய்ய மறுத்து, விவசாயிகளுக்குத் துரோகமிழைத்தன.
வறட்சி நிலவிய 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில், ஒரு குவிண்டால் துவரம் பருப்பு 10,000 ரூபாய் அளவிற்கு விலை போனது. இந்த முறை விவசாயிகள் அந்தளவிற்கு விலை கோரவில்லை. “தமது உற்பத்திச் செலவையும் (ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,000) இலாபத்தையும் ஈடுகட்டக்கூடிய அளவில் 7,000 ரூபாய் ஆதார விலையாக நிர்ணயிக்க வேண்டும்; கொள்முதல் நிலையங்களை மே மாத இறுதிவரை நடத்த வேண்டுமென்றும்” கோரினார்கள். ஆனால், மைய அரசோ அதனை மறுத்து, இரண்டாயிரம் ரூபாய் குறைவாக ரூ.5,050-ஐ ஆதார விலையாக நிர்ணயித்தது. விவசாயிகள் திரும்பத்திரும்ப வேண்டுகோள் விடுத்ததையெல்லாம் அலட்சியப்படுத்தி, கொள்முதல் நிலையங்களை ஏப்ரல் மாத இறுதியிலேயே இழுத்து மூடியது.
விளைந்த மிளகாயை நட்டத்திற்கு விற்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா மாநில விவசாயிகள்.
இன்னொருபுறமோ, இந்தக் குறைந்த ஆதார விலையில்கூட விளைந்த துவரையைக் கொள்முதல் செய்ய அரசு நிறுவனங்கள் முன்வரவில்லை; மகாராஷ்டிராவில் 23.5 இலட்சம் டன் துவரம் பருப்பு விளைந்து சந்தைக்கு வந்த நிலையில், வெறும் 4 இலட்சம் டன் மட்டுமே அரசால் கொள்முதல் செய்யப்பட்டது. மீதமுள்ள பருப்பைத் தனியாரிடம்தான் விற்றாக வேண்டும் என்ற நிலையில், வெளிச்சந்தையில் ஆதார விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை. குறிப்பாக, மியான்மர், மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி தீர்வை எதுவுமின்றித் துவரம் பருப்பு இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்துவதையோ, இறக்குமதித் தீர்வையை அதிகரிப்பதையோ மத்திய பா.ஜ.க. அரசு விரும்பவேயில்லை. இந்தப் பாரதூரமான நிலையில், மகாராஷ்டிர மாநில விவசாயிகள் மட்டுமல்ல, மத்தியப் பிரதேச மாநில விவசாயிகளுக்கும் வந்த விலைக்குத் துவரம் பருப்பை விற்றுவிடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.
மைய அரசு கொள்முதல் நிலையங்களை மூடிவிட்ட நிலையில், ஒரு குவிண்டால் ரூ.3,000 என்ற விலையில் துவரம் பருப்பைத் தனியார் வர்த்தகச் சூதாடிகளிடம் விவசாயிகள் விற்கத் தொடங்கினர். இந்த நிலையில், விவசாயிகளிடமிருந்து துவரம் பருப்பை ஆதார விலையின் அடிப்படையில் கொள்முதல் செய்வதற்காக 1,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதாக மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. அரசு அறிவித்தது. விவசாயிகளுக்குச் சாதகமானது போலத் தெரியும் இந்த அறிவிப்பு, உண்மையில் தனியார் வர்த்தகச் சூதாடிகளுக்குத்தான் பயன்பட்டது. துவரம் பருப்பு இறக்குமதியாளர்களும், ரூ.3,000 என்ற விலையில் துவரம் பருப்பை வாங்கிய மண்டி வியாபாரிகளும் ரூ.5,050 என்ற விலையில் துவரம் பருப்பை அரசிடம் விற்று, இரட்டை இலாபம் அடைந்தனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாகப் பீற்றிவரும் பா.ஜ.க. அரசு, வர்த்தகச் சூதாடிகளின் இலாபத்தை இரட்டிப்பாக்கி, தானொரு பனியா அரசுதான் என்பதை உறுதிப்படுத்தியது.
மகாராஷ்டிராவில் துவரம் பருப்பு, மத்தியப் பிரதேசத்தில் வெங்காயம், ஆந்திரா-தெலுங்கானாவில் மிளகாய், அசாம், பஞ்சாப் மற்றும் அரியானாவில் உருளைக்கிழங்கு – விவசாயிகளைத் துயரத்திலும் நட்டத்திலும் தள்ளிவிட்ட பணப்பயிர் பட்டியல் இது.
ராஜஸ்தானிலுள்ள கோடா மாவட்டத்தை இந்தியாவின் பூண்டு களஞ்சியம் என்று குறிப்பிடலாம். கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் பூண்டு ரூ.8,000 என்று விலைபோன நிலையில், இந்த ஆண்டு ஒரு குவிண்டாலுக்கு ரூ.4,000 என விலை நிர்ணயம் செய்யக் கோரினார்கள், அம்மாநில விவசாயிகள். ஆனால், அரசோ ரூ.3,200-க்கு மேல் ஒரு தம்பிடிகூடக் கூட்டித்தர மறுத்துவிட்டது. 10 இலட்சம் டன் என்ற அளவில் பூண்டு அபரிதமாக விளைந்திருந்த நிலையில், அரசோ வெறும் 10,000 டன் மட்டுமே கொள்முதல் செய்தது. இதனால் அடிமாட்டு விலையில் சந்தையில் விற்க மனமின்றி, பூண்டை மூட்டை மூட்டையாகக் கட்டிப்போட்டுவிட்டு, விலை ஏறாதா எனக் காத்துக் கிடக்கிறார்கள், விவசாயிகள். பூண்டின் விலை ஏறுமோ, ஏறாதோ, விவசாயிகள் வாங்கிய கடனுக்கான வட்டி ஏறுவது நிற்கப் போவதில்லை.
கடந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயம் ரூ.60 எனச் சந்தையில் விற்ற நிலையில், இந்த ஆண்டு விவசாயிகளுக்குக் கிடைத்த விலை வெறும் மூன்று ரூபாய். வெங்காயத்தைப் பறித்து சந்தைக்குக் கொண்டுவரும் கூலிக்குக்கூட இந்த விலை கட்டுப்படியாகாத நிலையில், வெங்காயத்தைத் தெருவில் கொட்டினார்கள் விவசாயிகள். மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டம் வெடித்த பின்னணி இதுதான்.
வெங்காயம், சோயாபீன்ஸ், துவரம் பருப்பு ஆகிய பயிர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையை நிர்ணயிக்கக் கோரி ம.பி. மாநில விவசாயிகள் உள்ளூர் அளவில் போராடிக் கொண்டிருந்த வேளையில், அம்மாநில முதல்வர் சௌஹான், ஆர்.எஸ்.எஸ்.-இன் விவசாய அமைப்பான பாரதீய கிசான் சங்கத்தோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு, ஒரு கிலோ வெங்காயத்தை எட்டு ரூபாய் விலையில் கொள்முதல் செய்ய 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதாக அறிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலுக்கு அருகிலுள்ள பாண்டாவில் போலீசை கற்களை வீசித் தாக்கும் விவசாயிகள் (இடது). மந்த்சௌர் மாவட்டம், பிப்லியா சந்தை பகுதியில் போர்க்களமான நெடுஞ்சாலை.
இந்த விலை குறைவு என்பது ஒருபுறமிருக்க, இந்த விலையை அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, போராட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டதாக சௌஹான் அறிவித்தது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது. முதல்வர் சௌஹானின் இந்த சுயதம்பட்ட அறிவிப்பையடுத்துதான், மந்த்சௌர் நகரில் விவசாயிகள் கலகத்தில் இறங்கி, போலீசாரோடும் மண்டி வியாபாரிகளோடும் மோதி, துப்பாக்கிச் சூட்டிற்கு ஆறு விவசாயிகளைப் பறிகொடுத்தனர்.
ம.பி. மாநில விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அரியானா மாநில விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
எந்தவொரு உற்பத்தியாளனும் தனது உற்பத்திப் பொருளை நட்டத்தில் விற்க முன்வருவதில்லை. ஆனால், விவசாயிகள் தமது விளைபொருட்களை நட்டத்தில் விற்கும்படியான புதைகுழிக்குள் அரசாலேயே தள்ளிவிடப்படுகிறார்கள். விவசாயிகளைக் கொள்ளையடிப்பதன் வழியாகத்தான் உணவுப் பொருள் விலையை இந்த அரசு கட்டுக்குள் வைத்து வருகிறது. இன்னொருபுறத்திலோ, விவசாயிகளைக் கொள்ளையிடுவதன் வழியாக ஆலை முதலாளிகளையும் வர்த்தகச் சூதாடிகளையும் கொழுக்க வைக்கிறது.
இந்த உண்மையை விவசாயிகள் புரிந்துகொண்டுவிட்டனர். அதனால்தான் தமது விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை அவர்கள் கோருகிறார்கள். அந்த உரிமையைப் பெறுவதற்கும் செயல்படுத்துவதற்கும், கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் கைகளில் உள்ள அரசியல் அதிகாரத்தைப் பறிமுதல் செய்யும் புரட்சிகரப் போராட்டங்களைத் தொடங்குவதுதான் முதல்படியாகும்.
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி