Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 492

பார்ப்பனர் சொல்வதுதான் ஆகமம் – அதை ஏற்கிறது நீதிமன்றம் ! உரை வீடியோ

1

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா? தீர்ப்பு கூறுவது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் 02.12.2017 அன்று சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்  ஆற்றிய தலைமை உரை:

னைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை திமுகவின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 6 அர்ச்சகர் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. அதில் படித்து பல மாணவர்கள் வேலை கிடைக்கும் எனக் காத்திருந்தனர். இந்நிலையில் மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலைச் சேர்ந்த சிவாச்சாரியர்கள் வழக்குப் போட்டு மாணவர்களை அர்ச்சகர் பணிக்கு எடுப்பதை நிறுத்தி வைத்தார்கள்.

இந்நிலையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களைச் சந்தித்து சங்கமாக ஒருங்கிணைந்து போராடினால் தான் தீர்வு கிடைக்கும் எனக் கூறி அவர்களை ஒருங்கிணைத்தனர்.

இந்த விவகாரத்தில் திமுக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணைக்குப் பதில் அதனை சட்டமாகக் கொண்டு வந்திருக்கவேண்டும். ஏனெனில் ஒரு அரசாணையை இன்னொரு அரசாணையைக் கொண்டு நிறுத்திவிடலாம்.

வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும், வழக்கில் தீர்ப்பு வந்த போதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. வழக்கை வெற்றிகரமாக கொண்டு செல்ல திமுக மற்றும் தி.க.-வை தொடர்பு கொண்ட போது அவர்கள் முன்வரவில்லை. வழக்கில் அர்ச்சகர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்த போதும் அவர்கள் யாரும் வாய்திறக்கவில்லை.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஒரு தேவையற்ற, குழப்பம் மிக்க தீர்ப்பு. இந்த வழக்கில் சிவாசாரியார்கள் முன்வைத்த வாதம், “இது காலங்காலமாக பின்பற்றப்படும் ஆகம விதிகளுக்கு எதிரானது” என்பதே. பல பிற்போக்கான வழக்கங்கள் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருபவைதான். ஆனால் அவை அனைத்தும் இன்று சட்டவிரோதமானவை, குழந்தைத் திருமணம், சாதிய தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல், பாலியல் வேறுபாடு பாராட்டுவது போன்றவை அதற்கு சில உதாரணங்கள்.

இந்த வழக்கைப் பொறுத்த வரையில், இந்த வழக்கில் சில பழைய  வழக்குகளில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை ஆதார அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பெழுதியுள்ளது. 1908-கமுதி, சங்காலிங்கம் வழக்கையும், அதன் பின்னர் நடைபெற்ற இளை வாணியர்கள் வழக்கையும் குறிப்பிட்டு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

கமுதி கோவிலிலே நுழைவதற்கு நாடார்கள் போராட்டம். 1908-ல் தீர்ப்பு – மனுதர்மத்தின் படி உள்ளே நுழையக் கூடாது. இளை வாணியர் – பனகுடி கிராமத்தில் இராமலிங்கர் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி கேட்டு வழக்கு போடுகிறார்கள். பிராமனர், முதலியார், மற்றும் பிள்ளைமார் சாதியினர் தடுக்கிறார்கள்.

மனுதர்ம வழக்கப்படி பிராமணர்கள் கர்ப்பகிரகத்திற்கு உள்ளே வரை செல்லலாம். சூத்திரர்கள், கொடிமரம் வரைக்கும் வரலாம். ஈன ஜாதியினர் கோபுர தரிசனம் தான் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு சொல்கிறது.

அந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்புகளும், இந்திய அரசியல் சாசன சட்டம் உருவாவதற்கு முன்னரே வழங்கப்பட்ட தீர்ப்புகள். அத்தீர்ப்பை மனுதர்மத்தின் அடிப்படையில் வழங்குவதாகவே அந்நீதிபதிகள் அன்று கூறியுள்ளனர். அதனை இன்று அரசியல் சாசன சட்டத்தின் படி செயல்படுகின்ற நீதிமன்றம் ஆதார அடிப்படையாக எடுத்துக் கொள்ளமுடியுமா?

அதே போல நீதிபதி மகாராஜன் குழு அறிக்கையில், “சேஷம்மாள் வழக்குத் தீர்ப்பிற்குப் பிறகும் வாரிசுகள் தான் அர்ச்சகராக இருக்கிறார்கள். 1,144 பேரில் 83 பேர் மட்டும் தான் கோர்ஸ் படித்தவர்கள். மற்றவர்கள், வாரிசுரிமையில் வந்திருக்கிறார்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது. எந்தக் கோவிலும் ஆகமத்தை பின்பற்றவில்லை.. ஆகமத்தில் சம்பளம் இல்லை. இன்று அர்ச்சகர்களுக்கு அரசு சம்பளம் கொடுக்கிறது . இது ஆகம மீறல் அல்லவா ?

அரசாங்கம் அர்ச்சகர் பக்கம் இல்லை. ஆனால் நீதிமன்றம் பார்ப்பனர்களின் கோட்டையாக இருக்கிறது. ஒரு அரசுப் பணியில் என் பங்காளிக்கு தான் வேலை கொடுக்கமுடியுமென்று கூற முடியுமா?. படித்து தகுதி வாய்ந்தவர்களை மட்டுமே போடவேண்டும். அர்ச்சகர் விவகாரமும் அப்படித்தான்.

தமிழகத்தில் அத்தகைய சட்டத்தைக் கொண்டுவரவேண்டும். அதற்கு சமூகத்தில் இருந்து அழுத்தம் வரவேண்டும்.

***

பத்திரிக்கையாளர் சுருதிசாகர் யமுனன் உரை – வீடியோ

தீர்ப்பு சொல்லவரும் விசயம் என்ன ?. அடுத்து என்ன செய்ய முடியும் ? இதற்கு மதம் சார்ந்த வரலாற்றைப் புரிந்துகொள்ளவேண்டும். கடவுளின் ரூபமாக அரசனை மக்கள் மத்தியில் நிலைநாட்ட, அதிகாரத்தை கட்டுப்படுத்த சமூகத்தில் பூசாரி என்ற ஒரு மதகுரு தான் தோற்றத்தின் அடிப்படை. அன்று பூசாரிக்கு இருந்தது அதிகாரம், இன்று அதிகாரமும் பணமும். காலங்காலமாக அவர்களுக்கு இருக்கும் அதிகாரம், அதனை அவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எகிப்து தொடங்கி இன்று வரை இது தான் நிலைமை.

பல்லவர்கள் காலத்தில் தான் கோவில்கள் அதிகமாக கட்ட ஆரம்பித்தனர். வேதங்களில் பலி கொடுக்கும் விசயம் தான் அதிகம். ஆடு, மாடு என அனைத்தையும் பலி கொடுத்த பிராமண மதத்திற்கு எதிராக புத்தமதமும், ஜைனமதமும் உருவாகிறது, புத்தருக்கு பிறகு பெரும் பகுதி மக்கள் புத்தரை பின்பற்ற ஆரம்பித்தனர், பின்னர் பார்ப்பனர்கள் பௌத்தர்களைப் பின்பற்றினர்.

அதனைப் பின்பற்றி தான் சிலை வழிபாடு, கோவில், ஆகமம் ஆகியவை எல்லாம் வந்தன. கோவில் குளம், கடவுள் சிலை, கோவில் கட்டிடம் குறித்த ஒழுங்குமுறையே ஆகமங்கள். அனைத்து ஆகமங்களும் யாருக்கும் முழுமையாகத் தெரியாது.  108 வைணவ ஆகமங்கள், 28 சைவ ஆகமங்கள். முழுமையாகப் படித்தவன் யாருமில்லை.

ஆகவே ஆகமம் என்பது யாருக்கும் முழுமையாகத் தெரியாத ஒரு விசயம். அதில் இது இருக்கிறது என பார்ப்பனர்கள் சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது தான் இன்றைய நிலையாக இருக்கிறது. ஆர்ட்டிகிள் 14-ன் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம்.  ஆர்டிக்கிள் 25,26 – மதம் சார்ந்த உரிமையைப் பாதுகாப்பது. ஆனால் ஹதியா வழக்கில் இச்சட்டங்கள் நட்டாற்றில் விடப்பட்டன.

இவ்வழக்கில் அவர்கள் வைக்கும் வாதம் என்ன? எல்லா பிராமணர்களாலும் கர்ப்பகிரகத்துக்குள் போக முடியாது. குறிப்பிட்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தான் போக முடியும். ஆகவே இது தீண்டாமைச் செயல் கிடையாது என எதிர்வாதம் வைக்கின்றனர்.

இந்திய அரசியல் சட்டமும் ஹிந்து தத்துவத்தைப் போலவே இருகிறது. ஹிந்துமதத்தின் அத்வைத தத்துவத்தின் படி அனைத்துக்கும் சமமான ஆத்மா. ஆனால் நடைமுறையில் அது வேறுபாடுகளுக்குள் இருக்கும். அதே போல தான் இந்திய அரசியல் சட்டமும். சட்டப்படி அனைவரும் சமம்தான். ஆனால் நடைமுறையில் அப்படி அல்ல.

பழைய ரிஷிகளின் வம்சத்தில் வந்தவர்கள், அந்தந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டில் பெரும்பான்மையினருக்கு தங்கள் கோத்திரம் என்னவென்று தெரியாது. இதனை அடிப்படையாக வைத்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது . யாராவது , தான் இந்த கோத்திரத்தின் வழியில் தான் இருக்கிறேன் என்று போய் சொன்னால், உடனே அந்த நியமனத்த்கை எதிர்த்து வழக்கு போடுவார்கள். பலபல வித்தைகள் செய்து பிராமணர்கள் அல்லாதவர் அர்ச்சகர் ஆக முடியாது என்று கூறுகின்றனர்.

இது போல தனித் தனியாக பல வழக்குகள் போட்டால், ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்துக்கும் எதிராக வழக்கு தொடர்ந்தால் போதும், பல ஆண்டுகளுக்கு வழக்கை இழுத்தடிக்கலாம். அடி வேரே அறுந்து கிடக்கிறது. இந்நிலையில் மேலே சிறிது பச்சை இருக்கிறது என்பதால் அது துளிர்க்கும் என்று நம்பக் கூடாது. ”ஆகமங்களில் இருக்கும் விசயங்கள் அரசியல் சட்டத்தை மீறாத வகையில் அர்ச்சகர்களை நியமிக்கலாம். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட கோத்திரத்தில் தான் பிறந்து இருக்க வேண்டும்” என்பதுதான் தீர்ப்பு.

அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?

திமுக 2006இல் வெறும் அரசாணைதான் கொண்டு வந்தது. அதனை எப்போது வேண்டுமானாலும் இன்னொரு அரசாணை கொண்டு மாற்றலாம். சட்டமாகக் கொண்டு வரவில்லை. இவ்வழக்கை எடுத்து வாதாடியவர், மூத்த வழக்கறிஞர் ராவ். கடைசி வாதங்களை முன்வைத்த பிறகு சென்னை வந்தவரிடம் பேசிய போது, தமிழக அரசு போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

ஒவ்வொரு செங்கலாக உருவினால் தான் பெரிய சுவரை உடைக்க முடியும். இடைநிலை சாதியினரிடம் பரந்துபட்ட மக்களிடம் இதனைக் கொண்டு செல்லவேண்டும். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இதனை மாற்ற வேண்டும். இதுதான் தீர்வு.

 

சென்னையில் அரங்கக் கூட்டம் : ஜனநாயகத்துக்கு பேராபத்து – எச்சரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் !

6

“ஜனநாயகத்துக்கு பேராபத்து” நாட்டு மக்களை எச்சரிக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் !

யாரால் ஆபத்து ? என்ன ஆபத்து ? வாங்க… பேசலாம்…

அரங்கக்கூட்டம்

நாள் : 21.01.2018, ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : மாலை 5:00 மணி.
இடம் : மெட்ராஸ் கேரள சமாஜம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை
(நேருபூங்கா சிக்னல் அருகில்) சென்னை.

அரங்கக்கூட்ட நிகழ்வு வினவு இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படும்…

தலைமை :

வழக்கறிஞர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

கருத்துரை :

  • திரு.து.அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
  • திரு என்.ஜி.ஆர்.பிரசாத், மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
  • திரு. எஸ்.பாலன், வழக்கறிஞர், பெங்களூரு,
  • பேராசிரியர் அ.கருணானந்தம், வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு), விவேகானந்தா கல்லூரி, சென்னை.

நன்றியுரை :

திரு. சி. வெற்றிவேல் செழியன், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

*****

அன்புடையீர், வணக்கம்.

ந்திய வரலாற்றிலும், நீதித்துறை வரலாற்றிலும், ஜனவரி 12 அன்று தலைமை நீதிபதிக்கு எதிராக, பணியிலிருக்கும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், மதன் பிலோகுர் ஆகியோர் டெல்லியில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு ஓர் அசாதாரண நிகழ்வு நீதித்துறையில் ஏற்பட்ட நிலநடுக்கம் என ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

பத்தரிக்கையாளர் சந்திப்பில், “உச்சநீதிமன்ற மரபுகள் மீறப்படுகின்றன, நிர்வாகம் சரிவர நடப்பதில்லை. முக்கிய வழக்குள் ஒதுக்கப்படுவதில் மூத்த நீதிபதிகள் புறக் கணிக்கப்படுகிறார்கள். விரும்பத்தகாத பல நிகழ்வுகள் சமீப காலங்களில் நடந்து விட்டன. சமரச முயற்சியில் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதை நாங்கள் மகிழ்ச்சியுடன் செய்யவில்லை. நீதிபதிகள் தங்கள் ஆன்மாவை விலை பேசிவிட்டார்கள், நீதித்துறையையும் இந்த நாட்டையும் பாதுகாக்கத் தவறிவிட்டார் கள் என்ற குற்றச்சாட்டுக்கு நாங்கள் ஆளாகக் கூடாது என்று கருதுகின்றோம். நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம், இனி நாடு முடிவு செய்யட்டும். இந்த நாட்டுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை இது. அதனை செய்து விட்டோம்” என்கிறார்கள்.

நீதித்துறையின் சுதந்திரத்தை, ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாட்டு மக்களை கோருகிறார்கள்.

  • இதன் மூலம் நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?
  • நீதித்துறை சுதந்திரம் நெருக்கடியான நிலையில் வழக்கறிஞர்கள் சமூகம் அமைதி காக்கலாமா?
  • ஜனநாயகத்திற்கு பேராபத்து என்றால் மீண்டும் நெருக்கடிநிலை திரும்புகிறதா? அல்லது அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை அமுலில் இருக்கிறதா?
  • மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும், கடைசி நம்பிக்கை,
    நீதித்துறை என கருதப்படுகிறது. மத்திய அரசின் கைப்பாவையாக நீதிபதிகள் மாறும் சூழலில் வழங்கப்படும் தீர்ப்புகளின் விளைவுகள் என்ன?
  • கொலை குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர் அமித்ஷா வழக்கை விசாரித்த சி.பி.ஐ நீதிபதி லோயா மரணம் மட்டும்தான் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு உடனடி காரணமா?
  • உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அவர்கள் கடமையை செய்து விட்டார்கள், மக்கள் செய்ய வேண்டியது என்ன?

தெரிந்து கொள்ள, விவாதிக்க, அனைவரும் வாரீர் !

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்
உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளைத் தெரியப்படுத்துங்கள் !
கைபேசி : 91768 01656,
E-mail: ppchennaimu@gmail.com

 

தேவதாசி முறை : நியாயப்படுத்தும் குற்றவாளிகள் !

0

பூரி ஜெகன்னாதர் கோவிலில் தேவதாசி முறையை நீட்டிக்க முயற்சிகள் நடந்த 1996-ம் ஆண்டில் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை இது.  தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். படியுங்கள், பகிருங்கள்.

  வினவு

ஜெகன்னாதபுரி, தீண்டாமையை ஆதரித்தும், பெண்கள் வேதம் படிக்கக் கூடாது என்றும், இன்று வரை குரலெழுப்பித் திரியும் பூரி சங்கராச்சாரியின் திருத்தலம். இவ்வூர்க் கோயிலின் தெய்வமான பூரிஜெகன்னாதருக்கு விமரிசையாக நடத்தப் படும் நாபகலிபார் என்ற திரு விழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் (1996) கொண்டாடப்பட இருக்கிறது.

இவ்விழாவில் ஜெகன்னாதருக்காகக் கதறி அழுது, 10 நாட்கள் விதவையாக வாழும் சடங்கு ஒன்றிற்கு தேவதாசிகள் தேவை. கோவிலின் கடைசி தேவதாசியான கோகிலபிரபா 1993 -ல் மறைந்த போது தனக்கென்று வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை. தற்போது உயிருடன் வாழும் பரஸ்மணி, சசி மணி என்ற முன்னாள் தேவதாசிகளும் வாரிசுகள் யாரையும் நியமிக்காமல், கோவில் சேவைகளிலிருந்தும் விலகி வாழ்கின்றனர்.

இப்படி தேவதாசிகள் இல்லாமல் போனால் நாபகலிபார் திருவிழாவை எப்படி நடத்துவது? பழி பாவத்துக்கு அஞ்சிய கோவில் நிர்வாகம் உடனடியாக வேலையில் இறங்கியது. பதிவேடுகளைப் புரட் டியது. 1988 -ஆம் ஆண்டில் கஜால் குமாரி ஜெனா என்ற பெண்ணும், அவரது சீடர்களான ஏனைய நான்கு பெண்களும் தேவதாசி சேவைக்கு விண்ணப்பித்திருந்தனர். தூசி தட் டிய விண்ணப்பங்களை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கையிலெடுத்த நிர்வாகம் ஐவரையும் நேர்காணலுக்கு வருமாறு அழைத்தது.

செப்டம்பர் 11 நேர்காணலுக்கு வந்த பெண்களும், கோவில் நிர்வாகமும் அங்கு குவிந்திருந்த பத்திரிகையாளர்களை எதிர்பார்க்கவில்லை. அவர்களது கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரு வார காலமாக பல்வேறு பெண்கள் அமைப்புகள், பத்திரிக்கைகள், சில அரசியல் கட்சிகள் என வெளி உலகின் கண்டனங்களை சந்திக்க நேர்ந்த பூரி கோவில் நிர்வாகம் வேறு வழியின்றி முடிவெதுவும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றது.

***

ந்த நூற்றாண்டின் (20-ம் நூற்றாண்டு) தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் இருந்ததாக தெரியவருகின்றது. பல நூறு ஆண்டுகள் வலுவாக நீடித்திருந்த தேவதாசி முறை தேவதாசி ஒழிப்புச் சட்டம் மூலம் ஏனைய கோவில்களில் ஒழிக்கப்பட் டாலும் பூரியில் மட்டும் இன்று வரை உயிருடன் உள்ளது ஏன்?

“ஏனென்றால் தமிழ்நாட்டி லும், ஆந்திராவிலும் தேவதாசி முறை விபச்சாரமாகப் பரிணமித்தது போல் பூரியில் நடக்கவில்லை. இங்கு மட்டும் தான் உண்மையாக உள்ளது” என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

முன்னாள் தேவதாசி பரஸ்மணி

எது உண்மை? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன கடைசி தேவதாசி கோகில பிரபா உண்மையில் தனது உறவுப் பெண்கள் இருவரை தத்தெடுத்து தேவதாசியாவதற்குரிய அனைத்துப் பயிற்சிகளையும் அளித்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்கள் இருவரும் தேவதாசியாவது அவமானகரமானது என்பதை உணர்ந்து இறுதியில் மறுத்து விட்டனர். மேலும் 1954 , 55 -ல் பூரி கோவில் நிர்வாகத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் போது 30 -க்கும் மேற்பட்ட தேவதாசிகள் கடவுளுக்கு சேவை செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் சமூக வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். தேவதாசிகளது ஆரம்பமும் முடிவும் வறுமையோடு பிணைந்திருக்கிறது என்பது ஆச்சரியமில்லா உண்மை.

ஒடிஸி நடனத்தைப் பயிலுவதற்காக பூரிக்கு வந்த பிரடரிக் ஏ. மார்க்லின் என்ற பெண் (மனிதவியல் ஆய்வாளர்) அறிஞர், “கடவுளரின் மனைவியர்” என்ற தமது புத்தகத்தில் தேவதாசிகளது வாழ்க்கையை விரிவாக ஆராய்ந்திருக்கிறார். பெற்றோர் தமது பெண்களை தேவதாசிகளாக அனுப்புவதற்குக் காரணம் அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைக்க இயலாத வறுமையே என்கிறார் மார்க்லின்.

“தேவதாசி சேவைக்காக பெண்களை நாங்கள் அழைத்ததாகக் கூறப்படுவது தவறு. இந்தப் பெண்கள் தாங்களாகவே சேவை செய்ய முன் வந்ததினால்தான் அதைப்பற்றி விவாதிக்க அவர்களை அழைத்தோம். தேவதாசிமுறை தலைமுறை தலைமுறையாக பூரி கோவிலில் இருந்து வரும் முறைதான்” என்கிறார் பூரியின் மாவட்டஆட்சித் தலைவரும், கோவில் நிர்வாக கமிட்டியின் உதவித் தலைவருமான கே.கே. பட்நாயக்.

“இந்து தர்மம்” காக்க பெண்களை ‘சமர்ப்பணம்’ செய்வது அல்லது பலியிடுவது என்பது புதிதல்ல. 1987 -ல் இராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற பெண்ணை உடன் கட்டை ஏற்றிக் கொன்ற இந்துத்துவ வெறியர்களின் செயலைக் கண்டு நாடே அதிர்ந்த போது, “சதி”யைப் நியாயப்படுத்தினார் பாரதீய ஜனதாவின் அகில இந்திய துணைத் தலைவர் விஜயராஜே சிந்தியா. பூரியின் ராஜகுடும்ப புரோகிதர் ரமேஷ் சந்ர ராஜகுரு, “நேர்காணலுக்கு வந்த பெண்களிடம் முன்பு ஆடச் சொன்னதாகக் கூறப்படுவது சிலரின் வளமான கற்பனை. 50 ஆண் டுகளுக்கு முன்பே நடனத்தை நிறுத்தி விட்டோம். எவ்வித காரண மும் இல்லாமல் தேவதாசி முறை என்றாலே உடனே விபச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று குமுறுகிறார்.

ராஜகுருவின் கோபத்தை பரிசீலிப்பதற்கு நாம் மன்னர்கள் காலத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாக, முன்னாள் தேவதாசியான                     பரஸ்மணியிடம் ஒரு கேள்வி – ஆண்டவன் முன் நடனம் ஆடுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்? “நான் ஜகன்னாதருக்கு மணமுடிக்கப்பட்டவள். தன் கணவனுடன் இரவு என்ன செய்தாள் என்பதை மணமான பெண் ஒருத்தி உலகத்திற்கு எப்படிக் கூற முடியும்?” என்று புன் சிரிப்புடன் மறுக்கிறார். இப்படி நடனம் ஆடுவது தொடருவது மட்டுமல்ல, ஒரு தேவதாசியின் வாழ்க்கை என்பது திறந்த புத்தகமல்ல.

தேவதாசிகளாவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் வேறெந்த ஆடவருடனும் உறவு வைத்திராத தூய்மை வாய்ந்தவளாக இருத்தல் வேண்டும். பின்னர் அவளுக்கு ஆடல், பாடல், அலங்காரம் உட்பட பல்வேறு கலைகளில் வளர்ப்புத் தாயாரால் (தேவதாசி) பயிற்சி அளிக்கப்படுகிறது. தக்க காலம் வந்த பிறகு அவள் ஜெகன்னாதருக்கு மணமுடிக்கப்படுகிறாள். மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு “பொட்டுக் கட்டுதல்” என்றழைக்கப் படும் இந்நிகழ்ச்சி தேவதாசியின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு. அவள் இறக்கும் போதும் மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டே எரியூட்டப்படுகிறாள். இப்படி ஏனைய இந்துப் பெண்களுக்குள்ள ‘விதவை அபாயம்’ தேவதாசிகளுக்கு இல்லையென்றாலும், ஏனைய இந்துப் பெண்களின் மண வாழ்க்கை தேவதாசிகளுக்குக் கிடையாது.

ஒடிஸி நடனக் கலைஞர் சஞ்ஜுக்தா பானிகிரஹி

சனாதனிகளின் பார்வையில் மன்னன் என்பவன் யார்? விஷ்ணுவின் அவதாரம், உயிருள்ள ஜெகன்னாதர்களான மன்னர்களுக்கு செய்யும் அந்தப்புரச் சேவை தேவதாசிகளின் கடமையாகும். ராசராச சோழன் காலத்து தேவதாசிகள் “அரசனின் திருமேனிப் பணியாளராக” அந்தப்புரத்தில் சேவை செய்து வந்தனர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.

தேவதாசிகளுக்கு பொட்டுக் கட்டும் சடங்கு முதல் அவளது கோவில் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற பண்டா என்றழைக்கப்படும் பார்ப்பன புரோகிதனுக்கு செய்யும் சேவை ஜெகன்னாதருக்குச் செய்யும் சேவையைப் போலவே முக்கியத்துவம் உடையது. இதையெல்லாம் சகித்துக் கொள்ளும் தேவதாசி, இவர்களுக்கு அப்பாற்பட்டு வெளி ஆடவருடன் தொடர்பு கொண் டால், மன்னனும், பண்டாவும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

மன்னர்கள், பார்ப்பனர்கள், பின்னாளில் ஜமீன்தார்கள் என்று உயர்ரக மேட்டுக் குடியினரோடு உறவு கொண்டாக வேண்டிய தேவதாசி அவர்களுடன் பகிரங்கமாக வாழ முடியாது. தேவதாசியின் வாழ்க்கை பட்டு சரிகையைப் போல மின்னினாலும் அதன் பின்னே உள்ள அவலமும், துயரமும், அழுகுரலும் – ஜெகன்னாதர் கோவிலில் நெடிதுயர்ந்து நிற்கும் கருங்கற்களுக்கு மட்டும் தான் தெரியும்.

“அரசாங்கம்; சாராயம், கள் இவைகளை எப்படி வருவாயாகக் கருதி நடத்த வேண்டுமோ அது போலவே பெரும் கோவில்களையும் உண்டாக்கி அரசு வருவாய்க்கு வழி தேட வேண்டும்.” என்று சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் வலியுறுத்துகின்றார்.

பூரியின் முன்னாள் ராஜா திவ்ய சிங் தேவ்

பெருமளவு மக்களின் வாழ்க்கையும், அரசின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்ற நிறுவனங்களாகவே கோவில்கள் இருந்தன. இன்றைய ஐந்து நட்சத்திர விடுதிகளின் சகல வசதிகளும் அன்றைய கோவில்களில் இருந்தன. இதில் ஆடல், பாடல் மூலம் மன்னனை மகிழ்விக்க பார்ப்பனர்களால் நியமிக்கப்பட்டவர்களே தேவதாசிகள்.

பண்டைய கதைகளை இங்கு கிசுகிசுக்க வேண்டாம், தேவதாசி சேவைக்கு நாங்கள் விண்ணப்பத்திருக்கும் காரணங்களை சற்றுக் கவனியுங்கள் எனும் கஜால் ஜெனா என்ன கூறுகின்றார்? “ஐந்து வயதிலேயே கண்ணன் என்னுள் வியாபித் திருப்பதை உணர்ந்தேன். 19 வயதில் தீட்சை பெற்றுக் கொண்டேன். நின்று போன தேவதாசி சேவையை உயிர்ப்பிப்பது கடமை என்று கருதி என் சிஷ்யைகளுடன் விவாதித்தேன். ஏதோ ஒரு வகையில் ஜெகன்னாதருக்கு சேவை செய்ய விரும்பும் எங்கள் பக்தி தனிப்பட்ட விசயம். இவ்வளவு இருந்தும் கடவுளின் முன்பு அநீதியான செய்கைகளைச் செய்வது போல எங்களை ஏன் கோரமாக மதிப்பிடுகிறீர்கள்?”

இல்லை புனிதமாகவே மதிப் பிட முயலுவோம். காலையில் திருப்பள்ளி எழுச்சி, இரவிலே பள்ளியறைப்பாட்டு, மாலையில் கால் வலிக்க நடனம் எதுவானாலும், திரைச்சீலையிட்ட ஜெகன்னாதரின் கருவறைக்கு வெளியே, வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தான் நடத்த முடியும், தேவதாசி ‘அபவித்ரா’ (தூய்மை இல்லாதவள்) வாகக் கரு தப்படுவதால், பூஜைகள் செய்யும் போது ‘பண்டா’ (பார்ப்பனப் புரோகிதன்) அவள் கையால் குடிநீர் கூடக் குடிக்க மாட்டான், தன்னைத் தொடவும் அனுமதிக்க மாட்டான். உள்ளம் உருக, பக்தி பெருக கீத கோவிந்தம் பாடும் தேவதாசிகளுடைய புனிதத்தின் கதி இதுதான்.

முன்னாள் ராஜாக்கள், ராணிகள், பாரதீய ஜனதாவில் உலாவரும் இந்நாளில் ஜெகன்னாதபூரியின் ராஜா திவ்ய சிங் தேவ் இந்து முன்னணிக் குரலில் ஒரு கேள்வி கேட்கிறார். “கடவுளின் சேவைக்காக வாழ்க்கையைத் துறந்து, தங்களது சொந்த முடிவில் பொருளியல் உலகை மறந்து, பெண்கள் துறவிகளாகவும், சகோதரிகளாகவும் மாறுவது அனைத்து மதங்களிலும் உள்ளதுதான். தேவதாசி முறையும் அத்தகையதுதான்”.

உண்மையில தேவதாசி முறை அத்தகையதல்ல. தேவதாசிகளாவதற்கு நீங்கள் வைத்திருக்கும் தகுதி என்ன? ஆடல், பாடல், அழகுக் கலை, அலங்காரம் இவைதானே? பிறமதத்துப் பெண்கள் துறவறத்தின் மூலம் சமூகத்தின் பாதுகாப்பையும், மதிப்பையும் பெறும்போது, தேவதாசியாக மாறும் பெண்ணோ – பாதுகாப்பின்மையையும், அவமதிப்பையும் பெறுகிறாளே அது ஏன்?

ஆக மன்னர்கள், பார்ப்பனர்கள், அதிகாரிகள் என அனைவரும் தேவதாசிகளுக்காக பேச முற்படும் போது “கலைஞர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா?

இன்று தமிழ்நாட்டு பார்ப்பனப் பெண்களால் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் பரதக் கலை தேவதாசிகளால் தான் வளர்த்து உருவாக்கப்பட் டது என்பதில் உவகை அடைகிறார் இந்தியா டுடே வாஸந்தி. ஒடிசி நட னக் கலைஞர் சன்ஜூக்தா பாணிக்கிரஹியும் இக்கருத்தை ஆதரித்து, தேவதாசி முறையில் எவ்விதத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், தானே பகுதி நேர தாசி சேவை செய்ய விரும்புவதாகவும் கூறுகிறார்.

அமெரிக்காவை பூலோக சொர்க்கமாக மாற்றியமைப்பதற்கு ஆப்ரிக்க கருப்பர்களைக் கடத்தி வந்த அடிமை முறை உதவி செய்திருக்கிறது என்பதாக நாகரீக உலகின் எந்த ஒரு மனிதனும் கொண்டாட மாட்டான். தேவதாசிகள் காற்சலங்கை கட்டிக் கொண்டு நடனம் ஆடும் போது பாதம்படுகின்ற இடங்களில் உறைந்திருக்கும் ரத்தம் நம்மை உலுக்குகிறது. அதே சமயம் பாதத்தின் பதத்தையும், ஆட்டத்தின் அபிநயத்தையும் மெய்சிலிர்த்து ரசிக்கிறார்கள் வாஸந்தியும், பாணிகிரஹியும்.

***

1930 -களில் தேவதாசி முறையை எதிர்த்துக் கிளம்பிய இயக்கத்தை அறியும்போது வாழையடி வாழையாக சனாதனிகளின் குரல் இன்றைக்கிருப்பது போல் ஒலிப்பதைக் கேட்க முடியும். பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கமும், காங்கிரசாரும் – இந்தியப் பெண்கள் சங்கத்தைச் சேர்ந்தவருமான                    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் தேவதாசி முறையை ஒழிக்க போராடி வந்தார்கள்.

1930 -ல் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டுவந்தபோது, இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார் என்பதை முத்துலட்சமி கூறுகிறார். காங்கிரசில் ராஜாஜிக்கு போட்டியான சத்திய மூர்த்தி அய்யர், “இன்றைக்கு தேவதாசி முறையை ஒழிக்கச் சொல்வீர்களானால் நாளைக்கு பார்ப்பனர்களை அர்ச்சகராக்குவதையும் எதிர்க்கலாம். தேவதாசிகளை ஒழித்துவிட்டால் பகவானின் புண்ணிய காரியங்களை யார் செய்வார்” என்று வாதிட்டார்.

“பகவானுடைய புண்ணியத்தை இதுவரை எங்கள் குலப் பெண்கள் பெற்றுவந்தனர். வேண்டுமானால் இனி அவரது (சத்திய மூர்த்தி அய்யர்) இனப்பெண்கள் அந்த புண்ணியத்தை ஏற்றுக்கொள் ளட்டுமே? அது என்ன எங்கள் குலத்திற்கே ஏகபோக காப்பிரைட்டா?” என்று திருப்பிக் கேட்டார் முத்துலட்சுமி ரெட்டி.

இந்துத்துவ முகங்களில் மிதவாதத்தை காங்கிரசும், தீவிரவாதத்தை பாரதீய ஜனதாவும் இன்றைக்கு பிரதிநித்துவம் செய்வது போன்று அன்றைக்கு ராஜாஜியும், சத்தியமூர்த்தியும் விளங்கினார்கள்.

இச்சூழலில்தான் 1883-இல் தாசி குலத்தில் பிறந்து, இளவயதிலேயே பொட்டுக் கட்டப்பட்டுவிட்ட இராமாமிர்தம் அம்மையார், தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு, தேவதாசி ஒழிப்பை வலி யுறுத்தி “தாசிகள் மோசவலை” எனும் நாவலை மிகுந்த சிரமத்துக்கிடையில் 1936 -இல் வெளியிட்டார்.

***

20 -ம் நூற்றாண்டிலும் இந்துத்துவம் தனது வருணாசிரம நெறியை இருத்திக் கொள்ள மூர்க்கமாக முயலுகிறது. பாபர் மசூதி இடிப்பு, பிள்ளையார் பால் குடித்த புரளி, என ஒவ்வொன்றிலும் “ஹிந்து எழுச்சி ஆரம்பித்து விட்டது” எனக் கும்மாளமிடும் இந்தக் கும்பல்தான் தேவதாசி முறையை நியாயப்படுத்தும் நபர்களின்-கருத்துக்களின் அடித்தளம்.

அந்த அடித்தளத்தை தகர்க்க 60 ஆண்டுகளுக்கு முன்பு “தாசிகள் மோசவலை” என்ற தனது நாவல் மூலம் வழி காட்டுகிறார் இராமமிர்தம் அம்மையார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு சுரணையூட்டும்.

நாவலில் இருந்து, “ஒரு குறிப்பிட்ட பெண் சமூகத்தை விபசாரத்துக்குத் தயார் செய்துவைத்திருப்பது இந்நாட்டு ஆண் சமூகத்தின் மிருக இச்சைக்குதக்க சான்றாக இருக்கிறது. பகுத்தறிவும் நாகரீகமும் வளர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தேவதாசி முறையை ஒழிப்பது சாஸ்திர விரோதம், சட்ட விரோதம், கலை விரோதம் என்று கூக்குரல் கிளப்பும் சாஸ்திரிகளும், தலைவர்களும் இருப்பது மானக்கேடாகும். தேவதாசி முறைக்கு அடிப்படையாக இருக்கும் கடவுள், மதம், ஸ்மிருதி, ஆகமம், புராணம் ஆகியவைகளை முதலில் ஒழிக்க வேண்டும். இவைகளை ஒழித்து விட்டால் தேவதாசிக் கூட்டம் இருப்பதற்கே நியாயமிருக்காது.”

-இளநம்பி

( புதிய கலாச்சாரம், பிப்ரவரி – 1996 )

 

மொறம் பூசும் பாப்பாத்தியின் பொங்கல் !

4

ந்த  பொங்கலுக்கு எதுவும் வாங்கப் போவதில்லை என்று சபதம். டிவியில் ஜொலிக்கும் விளம்பரங்களைப் பார்த்தால், வாங்காமல் விட்டால், நாம வாழறதே வேஸ்ட் என்ற ரேஞ்சுக்கு  ஒரே கூச்சல்……, புடவை ஒண்ணு வாங்கினா இரண்டு புடவை இலவசம், ஒரு சவரனுக்கு 1000 ரூபா….. தள்ளுபடியாம்!, வீட்டு உபயோக சாமான்களும் எல்லாத்துக்கும் ஆஃபர்….  நம்ம  கஷ்டத்த தீர்க்க முதலாளிங்க கங்கணம் கட்டிக்கிட்டு இருப்பது தெரிந்தது டிவியில்.

அப்போது தெருவுல ஒரு குரல், மொறம் பூசுறதே….. மொறம்……மொறம் பூசு… றதே… மொறம் ….

வெளிய எட்டிப் பார்க்கும் போது நினைச்சேன்… 50 வயதுக்குமேல இருப்பாங்கனு…. ஆனா, 25 வயசுக்குள்ள இளம் பெண். கூடையை  சுமந்து, இரண்டரை வயது மகனை இடுப்பில் அணைத்துக் கொண்டு வந்தார்.

மேல என்ன கேக்கிறதுனு எனக்கு தெரியல… எதாவது பேசியாகுனமேன்னு, கூலி, 10 ரூபா குறைக்கச்சிக்கோ என்றேன்.

பொங்கலு வேலைக்கா….., வருசத்துல 10 நாளைக்குத்தான்க்கா வேலை…. வேலையில குறை இருக்காதுக்கா சரி 60 ரூபாத்தான் கொடு  போ, மொறத்தை எடுத்துட்டு வா…. என்றார்.

பழைய மொறத்தைப் பார்த்ததும், வேலையில் இறங்கினார்.  குழந்தையை கீழே இறக்கிவிட்டுவிட்டு,  உடைந்த பகுதியை, மூங்கிலால் முடைந்துக் கொண்டே பேசத் துவங்கினார்….

உங்க பேரு என்னாக்கா ? இதே ஊரா ? நீங்க வேலைக்கி ஏதும் போறீங்களா ?  சிம்பிளா இருங்கீங்க ? என்றார்.

….நானும் ஆரம்பித்தேன்.

பேரு என்னம்மா? ”பாப்பாத்தி”
ஏன் இந்த பேரு வைச்சாங்க?
குழந்தையில நல்லா குண்டா, வெளுப்பா இருப்பேணாம். அதனால…. !
ஊரு?
விருத்தாசலத்திலிருந்து ஸ்ரீமுஷ்ணம் போற ரூட்டுல கிராமம்.

சொந்த வேலையே இதுதானா?

இல்லக்கா… இது எங்களுக்கு கைத்தொழில் மாதிரி தினமும் கூலிக்கு  எல்லா வேலையும் செய்வோம். கிராமத்துல விவசாயம்தான் முக்கியம், நெல்லு, கரும்பு, மெல்லாட்டை(வேர்கடலை)  போடுவாங்க. கழனி வேலைக்குப் போவோம். இப்ப கழனிக்காரங்களே வேல இல்லாம இருங்காங்க. எதையும் பயிர் வைக்கல….…… எங்களுக்கு  வேலை ஊர்ல இல்ல. அதான் ஆளுக்கு ஒரு மூலையா கூலி வேலை செய்துட்டு இருக்கோம்.

பத்து நாளைக்கி இந்த வேலை பிறகு இன்னா செய்வீங்க….

கிடைக்கற வேலைய செய்வோம்க்கா….. கொளுத்து வேல, கூட முடையறதுன்னு எதோ ஒண்ணு செய்தாகனுமே.

அக்கா, கொஞ்சம் போன் தர்றீங்களா, எம்புள்ள அவங்க அப்பாகிட்ட பேசுவான்…. காலையிலயே ஒருந்தவங்கக்கிட்ட கேட்டு போன் போட்டேன், அப்ப நைட்டெல்லாம் கண் முழிச்சி வேலை செய்துட்டு, இப்பத்தான் முடிவெட்ட கடைக்கி போய்கிறார்னு  சொன்னாரு என்றார்.

போன் நெம்பர் கேட்டு போட்டுக் கொடுத்ததும், அவரது குழந்தை சிவாவிடம் போனைக் கொடுத்து, பாட்டிலு, கீட்டிலு அடிக்காதனுச் சொல்லு என்றார் சிரித்துக்கொண்டே .

மழலை அப்பாவிடம் போனில், ” அம்மா ஊசிப் போட்டீச்சி, பொங்கலுக்கு வா, வண்டி வாங்கினு வா…. அண்ணா அழுவுது, சாப்பிட்டியா, பொங்கலுக்கு வா. வண்டி வாங்கினு வா….ன்னு பேசிக்கொண்டே அப்பா குரலைக் கேட்டு அழ ஆரம்பித்துவிட்டான்… அம்மாவை அடித்தான்.

….புரியாமல், ஏன் அடிக்கிறான்? என்றேன்.

அப்பாவை….. அவனிடமிருந்து பிரிச்சது நான்தான்னு கோவம் என்றார்.

போனை வாங்கிய பாப்பாத்தி,  போன்ல காசு இருக்கா நானும் கொஞ்ச நேரம் பேசிக்கிடவா  என்று கேட்டு பேசினார்.

குழந்தைக்கு சளிப் பிடிச்சிருக்கு, தண்ணி மாறுதுல்ல அதான் வர வழியில.  கவர்மெண்ட் ஆஸ்பத்திலியில காட்டி மருந்து, குழத்தைக்கு வாங்கினேன்…. ஊசி போட்டாங்க. அத சொல்லுறான் அவன். நாங்க வெள்ளிக்கிழமை இங்க கெளம்பிடுவோம்  நீயும் வந்துடு, பெரியவன் அங்க… அழறனாம்.  நாங்க சாப்பிட்டோம். வேலை செஞ்சவங்கக் கிட்டவே கேட்டு சாப்பிட்டேன். ரெண்டு இடத்துல  சேலையும் கேட்டு வாங்கிட்டேன். எனக்கு எதுவும் துணிமணி வேணாம். நீ நல்லா சாப்பிட்டுட்டு குழந்தைகளுக்கு மட்டும் துணி எடுத்துக்க. சின்னது சைக்கிள் வேணும்னு அழுவுது. எங்கனா செகண்டுல கிடைக்குமா பாரு…. இல்ல வேலை செய்யறவங்கக் கிட்ட கேளு…..  நாளைக்கு எங்கனா வேலை செய்யும்போது போன் கேட்டு பேசறேன். வைக்கிட்டுமா….என்றார். குழந்தை மறுபடியும் போனை பிடுங்கி சிரித்து, அழ தொடங்கினான்.

…. அப்பா மேல அவனுக்கு உசிரு….. எல்லா இடத்துக்கும் தூக்கிட்டுப்போய் ….. திங்க வாங்கிக் கொடுப்பாரு, பாசமா பாத்துக்குவாரு… குரல கேட்டால அழறான் என்ன பண்ணுறது.

அழுத  குழந்தைக்கு … பக்கத்துவீட்டு அம்மா, கரும்பு  துண்டு கொடுத்தார். குழந்தை சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டது.

பாப்பாத்தி, ”சிவா…., பொங்கல், உனக்கு வந்துடுச்சிடா” என்று கரும்பை தோலுரித்து அவனிடம் தந்தார்.

…..எங்க வீட்டுக்காரு மெட்றாசுல கொளுத்து வேலைக்கு போயி இருக்காரு…. வர்ற வருமானம்  சாப்பாட்டுக்குத்தான் சரியா இருக்கு…  பத்தாம… பிராந்தி குடிப்பாரு. கேட்டா… உடம்பு வலி, வீட்ட பிரிஞ்ச  துக்கம் னுவாரு. பெரியவன் கவர்மெண்டு ஸ்கூல்ல 2 வது படிக்கிறான். கவர்மெண்ட் சட்டை, சாப்பாடுதான்.  மாமியார் மாமனார் வயசானவங்க.  அலைஞ்சி வேல செய்ய முடியாது. வீட்டுல குழந்தைய பாத்துக்கிறாங்க. என்னயவாது எங்க வீட்டுல படிக்க வைச்சிருந்தா எதாவது கட கண்ணிக்குப் போயாவது வீட்டோட இருந்திருப்பேன், வெளியில இப்படி சுத்த வேண்டியதில்ல எல்லாம் என் தலையெழுத்து என்றார்.

எங்க தங்கறீங்க… நீங்களும் மெட்ராஸ் பக்காமாவே போய் வீட்டுக்காரரோட, இந்த வேலை பாக்கலாமே ஏன் பிரிஞ்சி வேலை செய்யணும் என்றேன்.

மெட்றாசுல….. எல்லாம் டீசன்டா இருப்பாங்க. அங்க, மொறம் பூசறது எல்லாம் கிடையாது. பிளாஸ்டிக் மொறம், சில்வர் மொறம்னு  வைச்சிருப்பாங்க.

அவங்கள மாதிரி டீசன்டா எல்லாம் எனக்கு இருக்க தெரியாது. இங்க காஞ்சிபுரத்துல கோயில் மடத்தாண்ட தங்கிக்குவேன். பக்கதுல கிராமங்கள்ள  மொறம் பூச தருவாங்க சோறுக் கேட்டாலும் போடுவாங்க, துணிமணி கேட்டாலும் கொடுப்பாங்க, நம்ம வீட்ல இருக்கற மாதிரி இருக்கும் என்றார்.

நான் அந்தப் பெண்ணிடம் பல விசயங்கள் பேசினேன். கடைசியாக, ரஜினி அரசியலுக்கு வர்றாரே தெரியுமா? என்றேன்.

நடிப்பாரு தெரியும்…. அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போறாரு? யாரு வந்தாலும் நான் கஷ்டப்பட்டாத்தான் என் புள்ளங்கள  காப்பத்த முடியும் என்று குழந்தையை இடுப்பில் அணைத்துக் கொண்டு கிளம்பினார்.

பக்கத்துல பஸ் ஸ்டாப்பு எங்க இருக்குக்கா? என்றார்.

இந்த தெரு கோடி  பஸ் ஸ்டாப்புத்தான். ஷேர் ஆட்டோவும் வரும். பொழுதோட போய்டலாம், என்றேன்.

அக்கா…மணி நால்ரைதான் ஆகுது. அடுத்த ஸ்டாப்புல போய் ஏறிக்கிறேன். அதுக்குள்ள யாரவது மொறம் பூச தருவாங்க  அதுக்கு அடுத்த ஸ்டாப்புக்கு வழி சொல்லு, என்றார்.  அடுத்த, பஸ் ஸ்டாப்புக்கு வழி சொன்னேன்.

…அந்தப் பெண் கிளம்பிவிட்டார்.  அவரது பையன் அப்பாவிடம் மழலையில் பேசிய பொங்கல் அழைப்பு வார்த்தைகள் நெடுநேரம் மனதைக் குழைந்தவாறு இருந்தது.

அனுபவம், படங்கள் : லட்சுமி

 

பாபர் மசூதி வழக்கு : மீண்டும் வீதிக்கு வருகிறான் ராமன் !

0

உச்ச நீதிமன்றத்தில் பாபர் மசூதி வழக்கு: மீண்டும் வீதிக்கு வருகிறான் ராமன்!

“இசுலாமியக் குடியரசான ஆப்கானிஸ்தானில், தலிபான் மதவெறியர்களால் இடிக்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகளை மீண்டும் எழுப்ப வேண்டும் என்று அங்குள்ள அரசு விரும்புகிறது. பொதுமக்களும் அவ்வாறே விரும்புகிறார்கள். ஆனால் மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் பாபர் மசூதியை மீண்டும் கட்டிக் கொடுக்கவேண்டும் என்ற கருத்து யாருடைய நிகழ்ச்சி நிரலிலும் இல்லை” என்று வயர்-இன் இணையதளத்தில் தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார் அதன் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன்.

உண்மைதான். இடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் இருந்த இடத்தில், இன்று அவற்றின் முழு உருவம் முப்பரிமாண ஒளியில் எழுப்பப்பட்டு அதனை ஆப்கன் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் திரள் திரளாக வந்து பார்க்கிறார்கள். தலிபான் ஆட்சிக்காலம் என்ற அந்த அருவெறுக்கத்தக்க வரலாற்றை இடிக்கப்பட்ட புத்தர் சிலைகளின் வழியாக வெறுப்புடன் நினைவு கூர்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகள் இருந்த இடத்தில் முப்பரிமாண வடிவில் ஒளிப்பரப்பப்படும் புத்தரின் திருஉருவம்.

இந்தியாவில் என்ன நடக்கிறது? இடிக்கப்பட்ட மசூதியின் கற்குவியல்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் ராமன் சிலைக்கு அயோத்தியில் வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது. மசூதி இடிப்பைத் தலைமை தாங்கி நடத்திய அத்வானி உள்ளிட்ட தலைவர்களை இக்குற்றத்திலிருந்தே அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுவிக்கிறது.

வழக்கிலிருந்து திட்டமிட்டே இவர்களைத் தப்பவிட்ட மத்திய உளவுத்துறையைக் கண்டித்ததுடன், அடுத்த இரண்டாண்டுகளுக்குள் இவ்வழக்குகளை விசாரித்து முடிக்கவேண்டுமென்று இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு 2017 ஏப்ரல் மாதம் சி.பி.ஐ க்கு உத்தரவிட்டது. அதன் பின்னரும், வழக்கு விசாரணையை இழுத்தடித்து வருகிறது சி.பி.ஐ.

உலகமே சாட்சியாகப் பார்த்து நிற்க, பகிரங்கமாக நிகழ்த்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு என்ற குற்றத்துக்கு விசாரணையே நடக்காத நிலையில், எவ்வித சாட்சியமோ ஆதாரமோ இல்லாத இராம ஜென்மபூமி விவகாரத்தில், பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்று இந்துக்கள் நம்புவதால், அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 இல் தீர்ப்பளிக்கிறது.

400 ஆண்டுகளாக முஸ்லிம்களின் வழிபாட்டிடமாக இருந்து வந்த மசூதி இடிக்கப்பட்ட குற்றத்தின் விசாரணையே இன்னும் முடியாதபோது, மசூதிக்கு கீழே இருக்கின்ற நிலம் யாருக்கு சொந்தம் என்ற சிவில் வழக்கின் மேல்முறையீடு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.

முஸ்லிம் மக்களின் காயத்தில் உப்பைத் தேய்ப்பது போல, இந்த வழக்கின் மேல்முறையீட்டை விசாரிப்பதற்கான தேதியாக, மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாளுக்கு முந்தைய நாளான டிசம்பர்-5 ஆம் தேதியை தீர்மானிக்கிறது  உச்ச நீதி மன்றம்.

வழக்கு விசாரணையை 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தனது அரசியல் ஆதாயத்துக்கு மோடி அரசு பயன்படுத்துமென்பதால், விசாரணையை 2019 ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைக்குமாறும், 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்குமாறும், ராஜீவ் தவான், துஷ்யந்த் தவே, கபில் சிபல் ஆகிய வழக்கறிஞர்கள் முன்வைத்த கோரிக்கையை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நிராகரிக்கிறார்.

அந்த வழக்கறிஞர்கள் கூறியது உண்மையென மறுநாளே நிரூபிக்கிறார் மோடி. கபில் சிபல் காங்கிரசு கட்சியை  சேர்ந்தவர் என்பதால், முஸ்லிம்கள் தரப்பில் அவர் வழக்கறிஞராக ஆஜராவதைக் காட்டி, காங்கிரசு கட்சி கோயிலை ஆதரிக்கிறதா, மசூதியை ஆதரிக்கிறதா என்று கேட்டு குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்துவெறியை பகிரங்கமாகத் தூண்டுகிறார்.

பாபர் மசூதி இடிப்புக்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, மீரட், மலியானா, ஹசிம்புரா முதல் மும்பை, குஜராத் வரை இந்தியா முழுவதும் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களுக்கும் நீதி கிடைக்கவில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் துயரமான நாள் என்று அத்வானியும் வாஜ்பாயியும் அன்று நடிப்புக்காகவேனும் பேசவேண்டியிருந்தது. இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குகின்ற தருணத்தில், நாட்டின் பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் மோடி, நீ மசூதியை ஆதரிக்கிறாயா, கோயிலை ஆதரிக்கிறாயா என்று எதிர்க்கட்சியை மிரட்டுகிறார். இந்த மிரட்டல், வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்துக்கும் உரியது என்பதை நீதிபதிகள் அறியமாட்டார்களா என்ன?

ஜனநாயகம், மதச்சார்பின்மை, சட்டத்தின் ஆட்சி என்பன போன்ற பீற்றல்களும், சொல்லிக்கொள்ளப்படும் இந்த உன்னதங்களைப் பாதுகாத்து நிற்கும் தூண்களான நாடாளுமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் போன்றவையும் உளுத்துப்போய் உதிர்ந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இந்தத் தூண்கள் மீது இந்துத்துவம் ஒரு சங்கேத மொழியாய் ஒளிந்திருக்கிறது.

பார்ப்பன பாசிசத்தின் அதிகாரத்தைக் காத்து நிற்கும் சக்திகளில் முதன்மையானவை இந்தத் தூண்களா, மக்களின் வாக்குகளா என்று கேட்டால், இந்தத் தூண்கள்தான் என்று தயக்கமின்றிச் சொல்லலாம். வாக்குகளைப் பற்றி மட்டும்தான் அவர்கள் கவலைப்பட வேண்டும்.

எல்லா முனைகளிலும் தோல்வியடைந்து மக்களின் வெறுப்பை ஈட்டியிருக்கிறது மோடி அரசு. இடிக்கப்பட்ட மசூதி, கொல்லப்பட்ட அக்லக்குகளைப் போலவே, பண மதிப்பழிப்பு, நீட், ஜி.எஸ்.டி உள்ளிட்ட அனைத்தையும் பழகிப்போன எதார்த்தங்களாக மக்கள் அங்கீகரிக்க வேண்டும். அல்லது அவை மக்கள் மனதிலிருந்து மறக்கடிக்கப்பட வேண்டும். இன்னொரு முறை இராமனைத் தெருவுக்கு இழுத்து வருவதொன்றுதான் மக்களை வீழ்த்துவதற்கு மோடியின் முன் உள்ள வழி.

1992-இல் பாபர் மசூதியை இடிப்பதற்குத் தோதாக டிசம்பர் 6 அன்று கரசேவைக்கு அனுமதியளித்தது உச்ச நீதிமன்றம். 25 ஆண்டுகளுக்குப் பின் இன்று இந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வருவதன் மூலம் மோடிக்கு உதவியிருக்கிறது.

விசாரணைக்கூண்டில் உச்சநீதிமன்றம் என்ற தலைப்பில் ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழில் பாபர் மசூதி வழக்கின் வரலாறு குறித்து விரிவான கட்டுரையொன்றை எழுதியிருக்கும் ஏ.ஜி.நூரானி, முன்னாள் அமெரிக்க நீதிபதி பெஞ்சமின் கார்டோசோவின் கீழ்க்கண்ட மேற்கோளுடன் தனது கட்டுரையை முடிக்கிறார். “நீதிபதி எத்தகையவர் என்பதற்கு மேல் நீதிக்கு வேறு உத்திரவாதம் ஏதுமில்லை”.

நீதி முட்டுச்சந்துக்கு வந்துவிட்டது. கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கலாம் என்று கருதுபவர்கள், 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் வெண்ணெய் உருகவில்லை என்ற உண்மையை இனிமேலாவது உணரவேண்டும். பார்ப்பன பாசிசத்தை நேருக்கு நேர் எதிர்கொண்டுதான் தீரவேண்டும்.

-சூரியன்

புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

ஆன்மிக அரசியல் என்பது தமிழ்நாட்டிற்குப் புதியதல்ல !

1

ன்மிக அரசியல் என்பது தமிழ்நாட்டிற்குப் புதியதல்ல. அது திராவிட இயக்கத்திற்கு எதிரானதும் அல்ல. ஆன்மிகத்தை எப்படி கையாளவேண்டும் என்பதை அரசியல் களத்தில் ஆயுதமாக ஏந்திய வரலாறு அதற்கு உண்டு. சரியாக சொல்லவேண்டும் என்றால், திராவிடத்தின் முதல் அரசியல் இயக்கமான நீதிக்கட்சி தோன்றியதே ஆன்மிக உரிமையினால் தான்.

100 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பவுன் தங்கம் 10 ரூபாய்க்கும் குறைவாக விற்ற காலத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் திருப்பணிக்கு 10ஆயிரம் ரூபாய் நிதியளித்தார் சென்னை மாநகராட்சித் தலைவராக (முதல் மேயர்) இருந்த பிட்டி. தியாகராயர். குடமுழுக்கு நாளில் பிராமணர்கள் பலர் கோபுரத்தின் மீது நின்றனர். ஆனால், 10ஆயிரம் கொடுத்த தியாகராயர் பிராமணரல்லர். ஒரு சூத்திரர் என்பதால் அவரை கோவில் கோபுரத்தின் மீது ஏற விடவில்லை. பிறப்பின் காரணமாக அவருக்கு அந்த உரிமையில்லை என்று தடுத்தவர், சென்னை (மா)நகராட்சியில் அவரிடம் வேலை பார்த்த பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு குமாஸ்தா. அந்த குமாஸ்தா பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.

நீதிக்கட்சி

திருப்பணிக்கு பணம் வாங்கும்போது பிறப்பில் பேதம் தெரியாத நிலையில், கோபுரத்தில் ஏறவும், கருவறையில் நுழையவும் பிறப்பின் அடிப்படையில் பேதம் காட்டப்படுவதால் விரக்தியும் கோபமும் அடைந்த தியாகராயர் அங்கிருந்து வெளியேறி, டி.எம்.நாயரையும் நடேசனாரையும் சந்தித்ததன் விளைவுதான், மூவரும் இணைந்து 1916 -ல் உருவாக்கிய நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். ஆன்மிக உரிமையின் காரணமாக தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் கல்வி – வேலை வாய்ப்பு என அனைத்து நிலையிலும் சமூக நீதியை நிலைநாட்டி, இந்தியாவுக்கே வழிகாட்டியானது.

1920 -ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நடைபெற்ற சென்னை மாகாணத்திற்கான தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சமூக நீதி அடிப்படையிலான அதன் செயல்பாடுகளில் ஆன்மிக உரிமையும் அடங்கியிருந்தது. அதன் விளைவுதான் 1925 -ல் பனகல் அரசர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்து அறநிலைய பாதுகாப்பு மசோதா. இதனைக் கொண்டு வருவதற்கு முன்பாக சங்கராச்சாரியார் உள்ளிட்ட “இந்துமத மேலோர்”களிடமும் “நூலோர்”களிடமும் ஆலோசனை பெற்று அதன் பின்னரே, 1925 -ல் சட்டமாக நிறைவேற்றினார் பனகல் அரசர் ராமராய நிங்கர். அதுபோலவே, குறிப்பிட்ட சமூகத்து பெண்களை கோவில் பணி என்னும் பெயரில் இழிவாக நடத்தும் தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டமும் நீதிக்கட்சி ஆட்சியில் 1929 -ல் நிறைவேற்றப்பட்டது.

அதனைப் பொறுக்க முடியாத காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி அய்யர் சட்டமன்றத்திலேயே, “தாசிகள் கோவில் பணிகளுக்கெனப் படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்பந்தமானது. அதை ஒழிப்பதென்பது கடவுள் கட்டளையை மீறும் அடாத செயலாகும்” என்றார். அதற்கு பதிலளித்த தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, “இது கடவுள் தொண்டு என்றால் அந்த தொண்டினை ஒரு குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்யவேண்டுமா? உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்கள் ஏன் செய்யக்கூடாது?” என்று சத்தியமூர்த்தியைப் பார்த்துக்கேட்டு “ஷட் அப்’ செய்தார்.

நாத்திகரான பெரியாரின் பங்கேற்புக்குப் பிறகு நீதிக்கட்சி வேகம் பெற்று, திராவிட இயக்கத்தின் அரசியல் புதிய பரிணாமத்தை அடைந்தபோதும், ஆன்மிக உரிமைகளில் சமூக நீதி என்பது மேலும் தீவிரமான போராட்டமாக மாறியது. பெரியாருடன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் உள்ளிட்ட சமய அறிஞர்கள் ஆரியத்திடமிருந்து தமிழை மீட்பதில் இணைந்திருந்தனர். தமிழகத்திலும் மலேயாவிலும் (மலேசியா-சிங்கப்பூர்) சுயமரியாதை பிரச்சாரத்தை பெரியார் மேற்கொண்டபோது, அவருக்கு போட்டியாக ஆன்மிக பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டவர்தான் குன்றக்குடி அடிகளார். பின்னர் இருவரும் சந்தித்தபோது, ஆரியத்தின் பிடியிலிருந்து ஆன்மிகத்தை விடுவித்து, சமூக நீதியை நிலைநாட்டுவதில் பெரியாருடன் இணைந்து செயல்பட்டார் குன்றக்குடி அடிகளார்.

ஆன்மிகத்திலும் “சமூகநீதி’ என்கிற அரசியல் ஆயுதத்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் உறுதியாகக் கையாண்டது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோவிலில் நாடார் சமூகத்தினர் உள்ளிட்ட பலரை அனுமதிக்க மறுத்ததை எதிர்த்து 1926 -ல் கோவில் நுழைவுக் கிளர்ச்சி நடந்தது. 1927 -ல் “திராவிடன்” இதழ் ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர் திருவண்ணாமலை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்ததற்காக அவர்களை கோவிலுக்குள்ளேயே வைத்துப் பூட்டிய கொடுமையும் நடந்தது. இது தொடர்பாக வழக்கும் போடப்பட்டு பின்னர் விடுதலையடைந்தனர்.

1927 -ல் திருச்சி – மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு சென்ற சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த இராமநாதனை தடுத்துத் தாக்கிய அடியாட்கள், கோவிலில் நுழைய முயன்றவர்களைப் படிக்கட்டுகளில் உருட்டிவிட்டார்கள். அதே ஆண்டில், மயிலாடுதுறை மயூரநாதசாமி கோவிலுக்குள் அனைத்துச் சாதியினரையும் அழைத்துச் செல்லும் போராட்டம் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் தலைமையில் நடந்தது.

1929 -ல் ஈரோடு – கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ஆதி திராவிடர் சமூகத்தினரை அழைத்துக் கொண்டு பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும் குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் போன்றோரும் நுழைந்தனர். அவர்களை உள்ளே வைத்துப் பூட்டிய கும்பல், இரண்டு நாட்களுக்கு கதவைத் திறக்கவில்லை. திராவிட இயக்கம் மேற்கொண்ட இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு, 1939 -ம் ஆண்டில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருடன் ஆலயப் பிரவேசம் செய்தார் காங்கிரஸ் தலைவர் வைத்தியநாத அய்யர். அந்தப் போராட்டத்திற்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உறுதுணையாக இருந்தார்.

கோவிலுக்குச் சென்று வழிபடுகிற உரிமை மட்டுமல்ல, கருவறையில் வழிபாட்டை நடத்துகின்ற உரிமையும் அனைத்து சமூகத்தினருக்கும் வழங்கவேண்டும் என்பதற்கான போராட்டக் களத்திற்குப் பெரியார் தயாரானார். இதனையடுத்து, 1970 -ல் தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் சட்டத்தை கலைஞர் அரசு கொண்டு வந்தது. அதற்கு நீதிமன்றம் மூலம் நடைமுறைத் தடைகளை ஏற்படுத்தியபோது, அந்த உரிமைப் பறிப்பை, “தன் நெஞ்சில் தைத்த முள்’ என்று பெரியார் குறிப்பிட்டார். 2006 -ல் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆகமப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்ற பல சமூகத்து அர்ச்சக மாணவர்களும் தங்கள் உரிமைக்கான சட்டப் போராட்டத்தை ஆரியச் சதியை எதிர்த்து இன்றளவும் நடத்தி வருகிறார்கள்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமிழகத்தின் தனிப்பட்ட ஆன்மிக முறையை ஆரியம் அழிக்க முற்படுவதும் அதனை எதிர்த்து தமிழகம் போராடி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் வள்ளுவர் காலத்திலிருந்து வள்ளலார் காலம்வரை தொடர்ந்து, தற்போதும் நீடிக்கிறது.

இந்து மதத்தை அமெரிக்காவரை பரப்பி புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தரிடமே, “நாங்கள் இந்துக்களல்ல, திராவிடர்கள். எங்கள் சமய நெறிமுறை மாறுபட்டது” என்று விளக்கம் சொன்ன மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை போன்ற திராவிட அரசியல் இயக்கத்துக்கு முற்பட்டவர்களும் உண்டு. சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிற்றம்பலத்தில் தமிழ் மந்திரமான தேவாரம் ஒலிப்பதற்கு தடை போட்ட ஆரியத்தை எதிர்த்து முழங்கிய ஓதுவார் ஆறுமுகசாமி பக்கம் நின்று போராடிய மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற திராவிட இயக்க அரசியலுக்குப் பின்னர் தோன்றிய முற்போக்கு அமைப்புகளும் உண்டு.

தமிழ்ப் பண்பாட்டின் மீதான படையெடுப்பை ஆரியம் நேரடியாகவும் மேற்கொள்ளும், தனது கைக்கூலிகள் வழியாகவும் கையாளும். தமிழையே ஆயுதமாக ஏந்தி ஆரியத்தின் பிடியிலிருந்து இம்மண்ணில் ஆன்மிகத்தைக் காத்த அரசர்களும் புலவர்களும் உண்டு. அதற்காக உயிர்நீத்தவர்களும் உண்டு. கொலை செய்யப்பட்டவர்கள் உண்டு. கழுவில் ஏற்றப்பட்டவர்கள் ஏராளம்.

வருணாசிரமக் கோட்பாட்டின் அடிப்படையில் பகவத்கீதையில் சொல்லப்படும் நான்கு வருணங்களைக் கொண்டு பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன் – தாழ்ந்தவன் எனப் பிரித்து வைக்கும் ஆன்மிக முறையைக் கையாள்கிறது ஆரியம்.

வள்ளுவர் வகுத்த ‘”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்கிற குறள் நெறியின் அடிப்படையில் அனைத்து மக்களுக்குமான ஆன்மிக சமத்துவத்தை வலியுறுத்துகிறது திராவிடம். இதனைத்தான் தமிழகத்தில் உள்ள இடதுசாரி இயக்கங்கள், சமூகநீதி சக்திகள், ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான அமைப்புகள் உள்ளிட்டவையும் முன்னிறுத்துகின்றன.

ஆன்மிக அரசியலை ஆதரிப்பவர்கள் சமஸ்கிருத பகவத் கீதை வழியைக் கையாளப் போகிறார்களா? தமிழ்மறையான திருக்குறள் பாதையில் நடக்கப் போகிறார்களா? தேர்ந்தெடுக்கும் முறையில் அடங்கியிருக்கிறது ஆன்மிக அரசியலின் உண்மை முகம்.

-மாவலி ( நன்றி : நக்கீரன்)

 

மோடியின் 2018 கரசேவை ! புதிய ஜனநாயகம் ஜனவரி 2018 மின்னூல்

0

 

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

1.ஆர்.கே நகர் தேர்தல் : அம்மா காட்டிய வழியில் !
“தேர்தலில் நிற்பவன் பதவியை டெண்டர் எடுக்கிறான்” என்பதுதான் இன்றைய எதார்த்தம். “பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டாலும் எம்.எல்.ஏ. வைத் தட்டிக் கேட்க முடியாது” என்பது மக்களுக்குத் தெரிகிறது.

2.அன்று பாபர் மசூதி இடிப்பு! இன்று பொதுத்துறை வங்கி அழிப்பு!! மோடியின் கரசேவை
பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. என்ற வரிசையில் சாமானிய மக்களின் கையிருப்பைத் திருடிக் கொள்ளும் திட்டத்தோடு நிதிமீட்பு மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது.

3.ஒக்கி புயல்: ‘’இயற்கையின் பெயரால் இனப்படுகொலை
குமரிக் கரையில் அரபிக் கடலோரத்தில் உள்ள வள்ளவிளை, சின்னத்துறை, தூத்தூர், நீரோடி உள்ளிட்ட எட்டு கிராமங்கள் பாரம்பரிய ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் பெயர்பெற்றவை. ஒக்கி புயலால் நூற்றுக்கணக்கான மீனவர்களை இழந்திருப்பதும் இந்த கிராமங்கள்தான்.

4. அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு: பல்லிளிக்கிறது பார்ப்பன சதி!
ஒரு சில உண்மைகளைத் தந்திரமாகத் திரித்து, அவற்றை இமாலய அளவுக்கு ஊதிப் பெருக்கி உருவாக்கப்பட்டதுதான் இந்த ஊழல் புகார் எனத் தீர்ப்பு அம்பலப்படுத்துகிறது.

5. குஜராத் தேர்தல் முடிவு : இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்தக்கூடியவர்கள் யார் ?
புலிக்குப் பயந்தவர்கள் என்மீது படுத்துக் கொள்ளுங்கள் என்று கூறும் நிலையில் இருக்கும் ஓட்டு கட்சிகளால் இந்துத்துவா பாசிசத்தை வீழ்த்த முடியாது.

6. இந்துத்துவ சதிகளும் சூழ்ச்சிகளும் நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு!
1949 டிசம்பர் 22-ஆம் தேதி நள்ளிரவில் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே ராமன் சிலை வைக்கப்பட்டதுதான் இந்த உரிமை மூல வழக்கின் தொடக்கம்.

7. பாபர் மசூதி இடிப்பு: என் பெயரைத் துறந்த நாள்!
– எஸ்.என்.எம். அப்தி, பத்திரிக்கையாளர்.

8. அலகாபாத் உயர்நீதி மன்றம் கடப்பாரையால் எழுதிய தீர்ப்பு!
பாபர் மசூதி விவகாரத்தில்,  வரலாறு, மதநம்பிக்கை, அரசியல், சட்டம் ஆகியவற்றை தனது நோக்கத்துக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கும் ஏற்ப ஒன்றை மற்றொன்றோடு சேர்த்துக் குழப்பும் வேலையை சங்க பரிவாரம் தொடக்கம் முதலே செய்து வருகிறது.

9. உச்ச நீதிமன்றத்தில் பாபர் மசூதி வழக்கு: மீண்டும் வீதிக்கு வருகிறான் ராமன்!
“இசுலாமியக் குடியரசான ஆப்கானிஸ்தானில், தலிபான் மதவெறியர்களால் இடிக்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகளை மீண்டும் எழுப்ப வேண்டும் என்று அங்குள்ள அரசு விரும்புகிறது. பொதுமக்களும் அவ்வாறே விரும்புகிறார்கள். ஆனால் மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் பாபர் மசூதியை மீண்டும் கட்டிக் கொடுக்கவேண்டும் என்ற கருத்து யாருடைய நிகழ்ச்சி நிரலிலும் இல்லை”

10.  பத்திரிக்கை செய்தி : திருடர்கள் பதவியில் ! பறிக்கொடுத்தவர்கள் தெருவில் !!

11. நெல் கொள்முதல் விலை: மீண்டும் வஞ்சனை!
விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ஆட்சியாளர்களிடமிருந்து விவசாயிகள் தம்மிடம் எடுத்துக்கொள்வதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart


 

நூலறிமுகம் : பன்றித் தீனி – பிக் பாஸ் – கொலைகார கோக் – செயற்கை நுண்ணறிவு

0

க்கள் உண்ணும் உணவு, உடை, பருகும் நீர் வரை அனைத்தையும் தீர்மானிக்கும் முதலாளித்துவம் அதன்வழி நமது சிந்தனையையும் கட்டுப்படுத்துகிறது.

இன்று நமது இளைய தலைமுறையை மட்டுமல்ல, பெரியவர்களையும் அடிமைப்படுத்தி விட்டது துரித உணவுப் பழக்கம். அறுசுவைகளின் அதீத பயன்பாடும் அது உருவாக்கும் சுவை வெறியும் நம்மை எப்படி உருவாக்கும்? பதிலளிக்கிறது “பன்றித்தீனி” புத்தகம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஓவியா இராணுவம் மட்டும் பிரச்சினையல்ல. சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் ஓவியாமயமாக்கம் எப்படி நடைபெறுகிறது என்பதை விரிவாகவும், ஆழமாகவும் முன்வைக்கும் நூல் – ஒரு பிக்பாஸ் – ஒரு கோடி அடிமைகள்

இரண்டு அமெரிக்க் குளிர்பானங்கள் முழு உலகிலும் நடத்திய வேட்டையின் வரலாறு இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது – கோக், பெப்சி- கொலைகார பானங்கள்.

சமூகவலைத்தளங்களில் கடிவாளம் உங்களிடமில்லை. நம்மை எந்திரங்கள் போல பயிற்றுவிக்கும் நவீன தொழில் நுட்பத்தின் ஆன்மா இந்த செயற்கை நுண்ணறிவில் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு – நவீன அடிமை யுகம்.

இருபது ரூபாய் விலையில் அழகிய கட்டமைப்பில் ஆழமான பொருளில் புதிய கலாச்சாரம் வெளியிடும் மாத நூல்களை வாங்கிப் படியுங்கள்.

***

41வது சென்னைப் புத்தகக் காட்சியில் நூல்கள் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று வெளியீட்டகம்
கடை எண் 297, 298

நாள் : 10.01.2018 முதல் 22.01.2018 வரை

நேரம் :வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 வரை.
விடுமுறை நாட்கள் : காலை 11 – இரவு 9 வரை.

இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம் 
                ( பச்சையப்பன் கல்லூரி எதிரில் ), சென்னை – 30

முகவரி :

கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367


 

பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களுக்கு எமது அஞ்சலி !

7

பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களுக்கு எமது அஞ்சலி !

டக உலகில் மூத்த பத்திரிக்கையாளரான, ஞாநி (சங்கரன்) மறைந்துவிட்டார். உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு, அவருடைய மரணம் வாயிலில் நின்ற நிலையிலும் வாழ்க்கையை அர்த்தமுள்ள வகையில் வாழ்ந்தவர். இறுதிநாட்கள் வரை தனது அரசியல் விமர்சனங்களைப் பேசியும் எழுதியும் வந்தவர்.

பத்திரிக்கையாளர் ஞாநி

தமிழ் ஊடகச் சூழலில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், ஜனநாயகப் பண்புடன் உரையாடக் கூடியவர்களும், ஊடக முதலாளித்துவத்தை எதிர்த்து நிற்கக் கூடியவர்களும் மிகக் குறைவு. அந்த வகையில் ஞாநியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு, சங்கராச்சாரியை அம்பலப்படுத்தியது, அரசின் அதிகார முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தது ஆகியவற்றில் ஒரு தொடர்ச்சியும், நேர்மையும் அவரிடம் இருந்தது. பெரியாரின் பாத்திரத்தை உயர்த்திப்பிடித்த அதே நேரத்தில் பாரதியையும் தனது ஆதர்சமாகக் கொண்டிருந்தார். அரசியல், திரையுலகம் தொடர்பான கருத்துக்களில் அவருடன், பல சந்தர்ப்பங்களில் வேறுபட்டு விவாதித்திருக்கிறோம் என்ற போதிலும், நட்புக்கோ, உரையாடலுக்கோ அது ஒரு தடையாக இருந்ததில்லை. அநேகமாக ஞாநியுடன் பழகி இருக்கக் கூடிய அனைவரது அனுபவமும் இத்தகையதாகவே இருக்கும் என்று கருதுகிறோம்.

தற்போது நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில் “வழக்கம் போல எனது கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு உண்டு” என ஞாநி குறிப்பிட்டிருந்தார், இந்தப் புத்தகக் காட்சியில் ஞாநி இல்லை. அவரது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

இவண்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

நெல் கொள்முதல் விலை : மீண்டும் வஞ்சனை !

0

ன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,590/-, மோட்டா ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,550/- என நிர்ணயித்து, 2017 – 18 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது, மைய அரசு. இந்த விலையோடு ஊக்கத் தொகையையும் சேர்த்து, சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,660/-, மோட்டா ரக நெல்லுக்கு ரூ.1,600/- என நிர்ணயித்து கொள்முதல் விலையை அறிவித்திருக்கிறது, தமிழக அரசு.

தமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மூன்று இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் டெல்லியில் அணிதிரண்டு கடந்த நவம்பரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே, இந்தியாவெங்கும் விவசாயிகள் தமது விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையை நிர்ணயிக்கக் கோரிப் போராடி வருகிறார்கள். அக்கோரிக்கையை அடைவதற்காகத் தடியடி தொடங்கி துப்பாக்கிச் சூடு வரை அரசின் கொடிய அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் மைய அரசும் தமிழக அரசும் அறிவித்திருக்கும் இந்த ஆதார விலைகள் நெல் உற்பத்திச் செலவை ஈடுகட்டுவதற்குக்கூடப் பயன்படப் போவதில்லை. ஆதார விலை, அதற்கும் மேலே ஊக்கத் தொகை என ஆட்சியாளர்கள் காட்டும் ஜிகினாவெல்லாம் விவசாயிகளை மீண்டும் ஏமாற்றி, அவர்களின் வயிற்றில் அடிக்கும் பொருளாதாரத் தாக்குதலாகவே உருவெடுத்து நிற்கின்றன.

தமிழக வேளாண் பல்கலைக்கழகம் 2014 -ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல்லை உற்பத்தி செய்வதற்கு ரூ.1,424 செலவாகும் எனக் கணக்கிட்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இடுபொருட்களின் விலையும் பிற வாழ்க்கைச் செலவுகளும் ஏறியிருப்பதைக் கணக்கில் கொண்டால், நெல் உற்பத்திச் செலவு இருநூறு, முன்னூறு என மேலும் அதிகரித்திருக்குமே தவிர, குறைந்திருக்க வாய்ப்பில்லை. பிற மாநிலங்களிலும் நெல் உற்பத்திச் செலவு தமிழகத்தைவிடப் பெருமளவு குறைவாக இருக்க வாய்ப்பேயில்லை.

காங்கிரசு கூட்டணி ஆட்சியின்போது எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட விவசாய கமிசன், உற்பத்திச் செலவோடு 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. சுவாமிநாதன் கமிசனின் பரிந்துரை விவசாயிகளின் அத்தியாவசியமான வாழ்க்கைச் செலவுகளைக் கணக்கில் கொள்ளவில்லை என்றபோதும், இந்தக் குறைந்தபட்ச, கட்டுப்படியாகக்கூடிய விலையைத் தருவதற்குக்கூட மைய அரசு தயாராக இல்லை.

சுவாமிநாதன் கமிசனின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டால், 2014 -ஆம் ஆண்டே நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,100 -க்கு மேல் நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட நெல் கொள்முதல் விலை உற்பத்திச் செலவைக்கூட ஈடு கட்டவில்லை. 2015 – 16 ஆம் ஆண்டில் மோட்டா ரகத்துக்கு ரூ.1,410, சன்ன ரகத்துக்கு ரூ.1,450; 2016 – 17 ஆம் ஆண்டில் ரூ.1,470 மற்றும் ரூ.1,510; 2017 – 18 ஆம் ஆண்டில் ரூ.1,550 மற்றும் ரூ.1,590.

ஒவ்வொரு ஆண்டும் அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகள் ஆயிரம், இரண்டாயிரம் என அதிகரித்துச் சென்று கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவை ஈடுகட்டும் விலை கொடுக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களிடமிருந்து, அவர்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய இலாபத் தொகையும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிவரும் வேளையில், அதனைவிட ஆயிரம் ரூபாய் குறைவாக நிர்ணயித்து, போராடிவரும் விவசாயிகளை எள்ளி நகையாடியிருக்கிறார்கள், மத்திய, மாநில ஆட்சியாளர்கள்.

எந்தவொரு உற்பத்தியாளராவது தனது உற்பத்திப் பொருளை, உற்பத்திச் செலவைவிடக் குறைவான விலைக்கு விற்பதற்குச் சம்மதிப்பானா? ஆனால், அரசோ, விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை விவசாயிகளிடமிருந்து பறித்துவிட்டு, கொள்முதல் விலை என்ற பெயரில் அவர்களின் அடிவயிற்றில் அடித்துவருகிறது. தமது உற்பத்திப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையைப் பெரு முதலாளிகளுக்கு அளித்திருப்பதோடு, அவர்களுக்கு மானியங்கள், கடன் தள்ளுபடி, வரித் தள்ளுபடி உள்ளிட்டுப் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வரும் அரசு, விவசாயிகளுக்கோ உர மானியம் வழங்குவதற்குக்கூட ஆதார் அட்டை கட்டாயம் என உத்தரவிடுகிறது.

டிராக்டரை வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படும் வாகனமாகப் பட்டியல் இடுகிறது. கடன் தள்ளுபடி கேட்டுப் போராடினால், போலீசை இறக்கிவிட்டு அடித்து அவமானப்படுத்துகிறது, துப்பாக்கிச் சூடு நடத்திக் கொலையும் செய்யத் துணிகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை, குறுவை அறுவடை தொடங்கும் வேளையில், அதாவது அக்டோபர் 1 -ஆம் தேதியே நெல் கொள்முதல் விலையை அறிவித்து, நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்திருக்க வேண்டும். ஆனால், பதவியைக் காப்பாற்றிக் கொள்வதிலும், ஊழல், கொள்ளையடிப்பதிலும் மட்டுமே அக்கறையும் கவனமும் கொண்டிருக்கும் எடப்பாடி அரசு, மிகச் சாவகாசமாக மூன்று மாதங்கள் கழித்து, சனவரி முதல் வாரத்தில்தான் கொள்முதல் விலையை அறிவிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக எவ்வளவு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்ததோ, அதில் ஒருபைசாகூட கூட்டி வழங்கப்படவில்லை.

இவ்வளவு அலட்சியமாக கொள்முதல் விலையைத் தாமதமாகவும் குறைவாகவும் அறிவித்து, கொள்முதல் நிலையங்களையும் இனிதான் திறக்க வேண்டும் என்ற நிலையில், குறுவை அறுவடை செய்த விவசாயிகள் தமது விளைச்சலைத் தனியாரிடம் வந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுவிட்டனர். விவசாயிகளின் இந்த இக்கட்டைப் பயன்படுத்திக் கொண்டுள்ள தனியார் கமிசன் மண்டி ஏஜெண்டுகள், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட கொள்முதல் விலைக்கும் கீழாக விவசாயிகளிடமிருந்து குறுவை நெல்லைக் கொள்முதல் செய்திருப்பதாகக் குற்றஞ்சுமத்துகிறார், பா.ம.க. நிறுவனர் ராமதாசு.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி, அதற்காக அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையும் காப்பீட்டுத் தொகையும் இன்னமும் பெருமளவு விவசாயிகளுக்குக் கிடைக்காத அவலம், இந்த ஆண்டு பருவ மழை பரவலாகப் பெய்தாலும், பெய்த மழை விளைச்சலுக்குப் போதாது என்ற இக்கட்டான நிலை – இப்படித் தமிழக விவசாயிகள் அடுத்தடுத்து இன்னல்களையும் துன்பங்களையும் எதிர்கொண்டுவரும் நிலையில், எரிகிற கொள்ளியில் எண்ணெயை எடுத்து ஊற்றியது போல, விவசாயிகள் கோரியதையும்விட ஆயிரம் ரூபாய் குறைவாக கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் வழியாக, ஒன்று விவசாயத்தை விட்டு வெளியேறு, இல்லையா, வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டு ஒழிந்து போ எனத் திமிராக அறிவித்திருக்கிறார்கள், மத்திய, மாநில ஆட்சியாளர்கள்.

விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலையைத் தர மறுக்கும் மோடி அரசுதான், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என சவுண்டுவிட்டு வருகிறது. நூறு ரூபாய்கூட ஊக்கத் தொகையாகத் தர மறுக்கும் எடப்பாடி அரசுதான், கால்வாய்களை, கண்மாய்களைத் தூர்வாரும் குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் 300 கோடி ரூபாய்க்கும் மேலாகக் கொள்ளையடித்திருக்கிறது.

பா.ஜ.க.வும், அதனின் அடியாள் படையான எடப்பாடியும் விவசாயிகளை ஏமாற்றிவரும் மோசடிப் பேர்வழிகள் மட்டுமல்ல. அவர்கள் விவசாயிகளின் எதிரிகள். அவர்களிடம் கெஞ்சிப் பயனில்லை என்பதைக் காலம் உணர்த்தி விட்டது. இனி, விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை அந்த எதிரிகளிடமிருந்து பிடுங்கிக்கொள்வதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.

-குப்பன்

-புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

 

ஆர்.கே நகர் தேர்தல் : அம்மா காட்டிய வழியில் !

2

ர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்றிருக்கும் வெற்றியைத் தொடர்ந்து தேர்தல் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்துப் பலரும் கவலைப்படுகின்றனர். முந்தைய இரு தேர்தல்களில் ஆர்.கே. நகரில் ஜெயலலிதா பெற்ற வெற்றியை ஒப்பிடும்போது, தினகரனின் வெற்றி இழிவானதென்று கருதுவோர், இரண்டு இழிவுகளுக்கும் இடையிலான வேறுபாடு எத்தனை ரூபாய் என்பதைச் சொல்லவேண்டும்.

குமாரசாமி தீர்ப்பைத் தொடர்ந்து 2015 -இல் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஏன் புறக்கணித்தன? போலி வாக்காளர்கள், ஓட்டுக்குப் பணம் என்று எல்லாவிதமான முறைகேடுகளும் அன்று தலைவிரித்தாடின. அ.தி.மு.க. மட்டும் பணம் விநியோகிக்கத் தோதாக 144 தடை உத்தரவு, இரவு பத்து மணிக்கு மேல் வீடு வீடாகப் பிரச்சாரம் செய்ய அனுமதி, தேர்தல் முடிவு அறிவிப்பிலேயே தில்லுமுல்லுகள் எனத் தேர்தல் ஆணையம் செய்த முறைகேடுகள்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றியைச் சாத்தியமாக்கின.

உண்மையைச் சொன்னால், ஜெயாவை ஒப்பிடும்போது தினகரனால் செய்ய முடிந்த தில்லுமுல்லுகள் குறைவானவையே. அரசு எந்திரத்தின் ஆதரவும் தினகரனுக்கு இல்லை. திகார் சிறை, ரெய்டுகளுக்குப் பின்னரும், தி.மு.க. அளித்த புகாரின் பேரில் சுமார் 45,000 போலி வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் நீக்கிய பின்னரும், சின்னம் இல்லாத நிலையிலும் மன்னார்குடி மாஃபியா, பார்ப்பன மாஃபியாவின் சூழ்ச்சிகளை வென்றுவிட்டது. இதன் விளைவுதான் குருமூர்த்தியிடமிருந்து வெடித்தெழுந்த வசவு.

தினகரனின் வெற்றிக்குப் பணத்தைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை என்ற மதிப்பீட்டை அ.தி.மு.க., தி.மு.க. வினரே ஏற்கமாட்டார்கள். அந்தத் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் மீது மக்கள் கொண்டிருக்கும் கட்டுக்கடங்காத வெறுப்பு, எண்ணெய்க் கப்பல் கசிவு தோற்றுவித்த பாதிப்பு, குடிதண்ணீர், பொது சுகாதாரம் தொடர்பாக நடந்த மக்கள் போராட்டங்களில் போலீசின் அடக்குமுறை போன்ற பல காரணிகள் அ.தி.மு.க.வுக்கு எதிரான மக்களின் கோபத்தைக் கூட்டியிருக்கின்றன.

“அம்மா இருந்தபோதும் இதுதான் நிலை” என்ற போதிலும், வாக்காளர்களின் அடிமை மனோபாவம் அம்மாவுக்கு வழங்கிய சலுகையை அடிமைகளுக்கு வழங்கத் தயாராக இல்லை. அ.தி.மு.க. வாக்குவங்கியின் இந்தக் கோபம், “அம்மா இறந்த பின் தறி கெட்டு ஆடும் இந்த திருடர்களை அடக்கத் தகுதியான திருடன் தினகரனே” என்று கருதியிருக்கின்றன. “ஒரு குட்டையில் ஊறிய மட்டை” என்று தினகரனை நிராகரிக்கவில்லை. இது நம் கவனத்துக்குரியது.

“ஓட்டுக்குப் பணம்” என்பது இன்று ஆர்.டி.ஓ. ஆபீஸ் இலஞ்சம் போல அங்கீகரிக்கப்பட்ட எதார்த்தம். இந்நிலையை உருவாக்கிய குற்றவாளிகளில் முதலிடத்தைப் பிடித்தவர் ஜெயலலிதா. “சுயமரியாதையும் கவுரவமும் இழந்த கையேந்திகளாகவும் அடிமைகளாகவும் தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிப்பது என்கிற பார்ப்பனப் பாசிசக் கும்பலின் கனவுத் திட்டத்தையே, தனது தனிப்பட்ட இலட்சியமாகக் கொண்டிருக்கும் சதிகாரி” என்று ஜெயா வைப்பற்றி முன்பு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

குன்ஹா தீர்ப்பைத் தொடர்ந்து ஜெ. சிறையில் அடைக்கப்பட்டபோது, “தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா” என்று சினிமா நட்சத்திர அசிங்கங்கள் போராட்டம் நடத்தினார்கள். குன்ஹாவை இழிவுபடுத்தி அ.தி.மு.க. காலிகள் நாடு முழுவதும் ரவுடித்தனம் செய்தபோது நவ துவாரங்களையும் மூடிக்கொண்டிருந்தார்கள் நீதிபதிகள்.

குற்றவாளி ஜெயா பிணையில் வெளிவந்தபோது தொலைக்காட்சிகள் அவர் வருகையை “லைவ் டெலிகாஸ்ட்” செய்தார்கள். இன்று அந்த கிரிமினலுக்கு மணி மண்டபம் கட்டுவதை ஆட்சேபிக்கக் கூட திராணியற்றவர்களாக இருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள். இவற்றையெல்லாம் மறந்துவிட்டு, இப்போது தினகரன் வெற்றியைப் பற்றி மட்டும் அதிர்ச்சி வெளியிடுவது பாசாங்கு.

“தேர்தலில் நிற்பவன் பதவியை டெண்டர் எடுக்கிறான்” என்பதுதான் இன்றைய எதார்த்தம். “பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டாலும் எம்.எல்.ஏ. வைத் தட்டிக் கேட்க முடியாது” என்பது மக்களுக்குத் தெரிகிறது. “காசை வாங்கிக்கொண்டு எனக்கு ஏன் ஓட்டுப்போடவில்லை” என்று வாக்காளர்களைக் கேட்க முடியாத நிலை உருவாகி வருவது வேட்பாளர்களுக்கும் புரிந்து வருகிறது. இதுதான் தேர்தல் ஜனநாயகம் கண்டிருக்கும் முன்னேற்றம்.

ஆர்.கே. நகர் வாக்காளர்களில் ஆகப்பெரும்பான்மையினர் நிச்சயமற்ற வருவாயில் வாழ்க்கையைத் தள்ளுகின்ற கூலித் தொழிலாளர்கள் மற்றும் சுய தொழில் செய்து வாழும் ஏழை மக்கள். இன்று மொத்த சமூகமும் அந்நிலையை நோக்கித் தள்ளப்பட்டு வருகிறது. “இன்று விவசாயி, நாளை செக்யூரிட்டி, மறுநாள் சிறு வியாபாரி..” எனப் புயலில் சிக்கிய சருகு போல அலைக்கழிக்கப்படும் உழைக்கும் வர்க்கங்களைப் பொருத்தவரை, “எதிர்காலம்” என்பது அடுத்த ஐந்தாண்டோ பத்து ஆண்டோ கூட இல்லை. “நாளைய சோறு, இன்றைய கடன்பாக்கி” – அவர்களின் சிந்தனையை ஆக்கிரமித்திருக்கும் “எதிர்காலம்” இதுதான்.

ஜெயலலிதாவின் இலவச அரிசிக்கும், அம்மா உணவகத்துக்கும், ஓட்டுக்குத் தரப்படும் பணத்துக்கும் இந்த வர்க்கத்தினர்தான் இலக்கு. இம்மக்களைப் பொருத்தவரை, கொள்கை, இலட்சியம் போன்றவற்றையெல்லாம் கண்ணுக்குத் தெரியாத தொலைவுக்குத் தள்ளிவிட்டது அவர்களது வாழ்க்கை. கொள்கைகளைக் காட்டிலும், தேர்தல் வாக்குறுதிகளைக் காட்டிலும் அவர்களுக்கு நம்பிக்கைக்குரியதாகத் தெரிவது தினகரனின் இருபது ரூபாய் நோட்டு.

“கொளுகை என்னான்னு மீடியாக்காரங்க கேட்டாங்க. எனக்குத் தலை சுத்திடுச்சி” என்று ரஜினி பேசுவதைக் கேட்டு அவரது ரசிகர்கள் வெட்கப்படவில்லை. ஆரவாரிக்கிறார்கள். இத்தகைய வர்க்கங்களை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் ரஜினியை முன்தள்ளுகிறது பா.ஜ.க. திராவிட இயக்கம், தமிழ் உணர்வு, கம்யூனிச அரசியல் ஆகியவற்றை வீழ்த்துவதற்கு வட இந்திய பாணியிலான இந்துத்துவ பொறுக்கித்தனம் உதவாது. பொறுக்கி அரசியல் என்ற இனிப்புக்குள்ளே இந்துத்துவத்தை மறைத்துத்தான் ஊட்ட வேண்டும் என்ற வழிமுறைக்கு ஜெயலலிதா கோடு போட்டிருக்கிறார். அதன் மீது ரோடு போடத்தான் ரஜினியை அழைத்து வருகிறார்கள்.

இம்மக்கள் ஒரு பகுதி தமிழ்நாடு – மென்மேலும் உதிரிகளாக மாற்றப்படும் தமிழ்நாடு. இன்னொன்று – ஜல்லிக்கட்டு, நீட் எதிர்ப்பு, கதிராமங்கலம், நெடுவாசல், செவிலியர், மீனவர், விவசாயிகள், அரசு ஊழியர், போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டங்கள் என்று தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடும் தமிழ்நாடு. முதற் பிரிவு மக்கள் மீது “ஓட்டுக்கு காசு வாங்கக்கூடாது” என்ற ஜனநாயக விழுமியத்தை தனியே நிலைநாட்ட முடியாது.

“பணம் வாங்காமல் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டு எம்.எல்.ஏ. -க்களுக்கு முறையாக அதிகாரத்தை வழங்குவது எப்படி” என்று மக்களைப் பயிற்றுவித்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது. ஏனென்றால், ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் நிறுவனங்கள் என்று கூறப்படுபவைதான் அதன் உண்மையான எதிரிகளாக இருக்கின்றன.

தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வது எப்படி என்று மக்களைப் பயிற்றுவித்துவிட்டால், இந்த நிறுவனங்களையும், தினகரனின் இருபது ரூபாய் நோட்டையும், “கொளுகை இல்லாத ரஜனியையும்” மக்கள் தாமே எதிர்கொள்வார்கள். செக்கு மீது ஏறி சிங்கப்பூர் போக முடியாது. தேர்தல் அரசியலின் வரம்பில் சிந்தித்து இதனைச் சாதிக்கவியலாது.

-புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

 

சென்னை புத்தகக் காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள் – தோழர் துரை சண்முகம்

0

டிப்பது என்ற ஆர்வம் நம்மில் பலருக்கு உருவாகியதும் எதைப் படிப்பது, எப்படிப் படிப்பது ? என்ற வினா எழுகிறது.

வாசிப்பு என்பது ஒரு கலை, நூல்களைக் காட்டிலும் நம்முடைய ஆயுள் குறைவுதான். ஆகவே நாம் படிப்பவற்றை தெரிவு செய்து தான் படிக்க வேண்டும். அந்த வகையில் சில நூல்களை அறிமுகம் செய்கிறது இந்த காணொளி. பாருங்கள்… பகிருங்கள்…

நூலறிமுகம் : நறுமணம், வேர்கள், முதல் மதிப்பென் எடுக்கவேண்டாம் மகளே !, மஞ்சள் பிசாசு.

எழுத்தாளர் இமையம் அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு ” நறுமணம்” க்ரியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அலெக்ஸ் ஹேலி எழுதிய “ரூட்ஸ்” என்ற ஆங்கில நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வேர்கள் என்ற தலைப்பில் எதிர் பதிப்பகத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்றைய கல்வி சூழலை விளக்கும் வகையில் நா. முத்து நிலவன் அவர்கள் எழுதிய நூல் முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே! என்ற நூல் இந்நூலை அன்னம் – அகரம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். தங்கம் எப்படி உலகை ஒரு பிசாசு போல ஆட்டிப்படைக்கிறது என்பதை விளக்குகிறது ருஷ்ய எழுத்தாளர் அ.வி. அனிக்கின் எழுதிய நூல் மஞ்சள் பிசாசு (அடையாளம் வெளியீடு).

***

நூலறிமுகம் : மூலதனம், ஹைட்ரோ கார்பன் அபாயம், நீதிமன்றங்களில் தந்தை பெரியார், புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள்

கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு இது. இக்காலத்தில் நாம் மூலதனம் நூலைப் பயில வேண்டியுள்ளது. தமிழில் மூன்று பாகங்களாகவும், ஐந்து நூல்களாகவும் கிடைக்கிறது. மேலும் இந்த வீடியோவில் ஹைட்ரோ கார்பன் அபாயம், நீதிமன்றங்களில் தந்தை பெரியார், புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள் ஆகிய நூல்களை தோழர் துரை சண்முகம் அறிமுகப்படுத்துகிறார்.

பல்வேறு பதிப்பங்களால் வெளியிடப்பட்ட  இந்த நூல்களைஒரே கூரையின் கீழ் திரட்டித் தருகிறது கீழைக்காற்று விற்பனையகம்…

 

***

41வது சென்னைப் புத்தகக் காட்சியில் முற்போக்கு நூல்கள் அனைத்தும் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்
கடை எண் 297, 298

நாள் : 10.01.2018 முதல் 22.01.2018 வரை

நேரம் :
வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 வரை.
விடுமுறை நாட்கள் : காலை 11 – இரவு 9 வரை.

இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம்
( பச்சையப்பன் கல்லூரி எதிரில் ), சென்னை – 30

முகவரி : கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367

 

41வது புத்தகக் காட்சி : அலைகள் – பாரதி புத்தகாலயம் – சிந்தன் புக்ஸ் – வீடியோ

1

புத்தகக் காட்சியின் பிரம்மாண்டத்துக்குள் நுழைந்து எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் பலருக்கும் வரலாம். அதிலும் கண்கவர் வண்ணங்களும், வழுவழு தாள்களும், கவர்ந்திழுக்கும் தலைப்புகளும் சூழ உள்ள அரங்கில் சில செறிவான புத்தகங்களைத் தெரிவு செய்ய உதவும் வகையில், சில பதிப்பகங்களையும் நூல்களையும் அறிமுகம் செய்கிறது இந்த காணொளி.

பாருங்கள்… பகிருங்கள்…

41வது புத்தகக் காட்சியில் அலைகள் வெளியீட்டகம் !

லைகள் வெளியீட்டகம் சார்பில் புத்தகக் காட்சியையொட்டி வெளிவந்துள்ளன நூல்களில் சில:

  • அறியப்படாத கலாச்சாரப் புரட்சி
  • அழிந்து வரும் கலாச்சாரம் ஓர் ஆய்வு
  • அழிந்துவரும் கலாச்சாரம் மேலும் ஓர் ஆய்வு
  • தமிழக மரபில் வேத கல்வி
  • தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்: கீழடிவரை…

மேலும் பல நூல்கள்… வங்கிப் படியுங்கள்…

பதிப்பக முகவரி :

அலைகள் வெளியீட்டகம்,
எண் : 5/1ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர்,
இராமாபுரம், சென்னை – 600089,
கைபேசி – 98417 75112.

***

41வது புத்தகக் காட்சியில் சிந்தன் புக்ஸ் – பாரதி புத்தகாலயம் !

ந்த ஆண்டு சிந்தன் புக்ஸ் சார்பில் வெளியான நூல்கள் :

  • சூரியனைத் தொடரும் காற்று
  • போர் தொடங்கியது
  • இந்தியா: காலத்தை எதிர்நோக்கி
  • அகிலங்களின் வரலாறு…

இந்த ஆண்டு பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நூல்களில் சில:

  • குழந்தைகளுக்கான நூல் : கண்டேன் புதையலை
  • வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்
  • சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்.

பதிப்பக முகவரி :

சிந்தன் புக்ஸ்
132/251, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 86.
கைபேசி – 94451 23164.

பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை – 18.

இந்த நூல்கள் கீழைக்காற்று விற்பனையகத்திலும் கிடைக்கும்.

***

41வது சென்னைப் புத்தகக் காட்சியில் முற்போக்கு நூல்கள் அனைத்தும் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்
கடை எண் 297, 298

நாள் : 10.01.2018 முதல் 22.01.2018 வரை

நேரம் :
வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 வரை.
விடுமுறை நாட்கள் : காலை 11 – இரவு 9 வரை.

இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம் 
                ( பச்சையப்பன் கல்லூரி எதிரில் ), சென்னை – 30

முகவரி : கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367

 

41வது புத்தகக் காட்சி | தமிழகத்தில் தேவதாசிகள் – அம்பேத்கர் இன்றும் என்றும் | வீடியோ

0

சென்னையின் அடையாளமாகிப் போன புத்தகக் காட்சியில் பல நூறு அரங்குகள், பல ஆயிரம் தலைப்புகளில் நூல்கள்… என்ன பிரமிப்பை ஏற்படுத்துகிறதா ?

நம்மில் பலரும் புத்தகங்களை படிக்க விரும்புகிறோம். ஆனால் நேரமில்லை, வாய்ப்பில்லை என தவிர்க்கிறோம். வாழ்க்கை போராட்டம் போல கற்பதையும் ஒரு போராட்டமாக இன்று செய்ய வேண்டியுள்ளது.

பல தலைப்புகள் இருந்தும் இன்றும் மக்கள் சமூக பிரச்சினைகள் சார்ந்த நூல்களை தேடி வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் சமூக அக்கறையுள்ள நூல்கள் மற்றும் நூல் வெளியீட்டாளர்களை அறிமுகம் செய்கிறது இந்த காணொளி. இதனை பாருங்கள்… பகிருங்கள்…

நூல்களை வாங்கிப் படியுங்கள்… பயன் பெறுங்கள்…

41வது புத்தகக் காட்சியில் புதிய கலாச்சாரம் வெளியீடுகள் ! | வீடியோ

தமிழகத்தில் தேவதாசிகள், அம்பேதகர் – இன்றும் என்றும் – நூல் அறிமுகம் | வீடியோ

சூடிக் கொடுத்த சுடரை தேவதாசி என சொன்னதற்காக வைரமுத்துவை வசைபாடுகிறது ஆர்.எஸ்.எஸ். கூட்டம். ஆண்டாளைச் சொன்னால் மட்டும் தான் உங்களுக்கு வலிக்கிறது. ஆண்டாண்டு காலமாய் கோவிலுக்கு நேர்ந்துவிட்டு அவர்களைச் சூறையாடியதை அந்த அவலத்தை அடக்கமாக விளக்குகிறது இந்த நூல்.

வரலாறு தெரியாதவன் வரலாற்றைப் படைக்க முடியாது ! என்றார் அம்பேத்கர் அவரின் வரலாற்றை, அவரது இன்றைய தேவையை விவரிக்கும் வகையில் இந்நூலை வெளியிட்டுள்ளது விடியல் பதிப்பகம்.

இந்த நூல்களை வாங்கிப் படியுங்கள்… பயன் பெறுங்கள்…

 ***

41வது சென்னைப் புத்தகக் காட்சியில் நூல்கள் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண் 297, 298

நாள் : 10.01.2018 முதல் 22.01.2018 வரை

நேரம் :
வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 வரை.
விடுமுறை நாட்கள் : காலை 11 – இரவு 9 வரை.

இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம் 
                ( பச்சையப்பன் கல்லூரி எதிரில் ), சென்னை – 30

முகவரி :

கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி

10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367

 

சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது ! பாசிச அபாயம் நெருங்குகிறது !

13

ந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கின்றனர். இந்திய நீதித்துறையின் வரலாற்றில் இது மிகப்பெரிய நெருக்கடி என்று கூறுகிறது “லைவ் லா” இணையதளம்.

தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் பேசியதன் சுருக்கம் கீழ் வருமாறு :

“இந்த நாட்டின் வரலாற்றிலும் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றிலும் இது ஒரு அசாதாரணமான நிகழ்வு. இப்படி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதில் எங்களுக்கு சிறிதும் மகிழ்ச்சியில்லை என்றபோதிலும் இதைத்தவிர இனி எங்களுக்கு வேறு வழியில்லை.”

“சமீப காலமாகவே உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் சரியாக இல்லை. கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நாட்டின் மூத்த நீதிபதிகள் என்ற முறையில் தலைமை நீதிபதியை சந்தித்து சில விசயங்கள் சரியாக இல்லை என்று நாங்கள் நால்வரும் சுட்டிக்காட்டினோம். ஆனால் பயனில்லை.”

“நாங்கள் நான்கு பேருமே சொல்கிறோம். நீதித்துறை என்ற இந்த நிறுவனத்தை பாதுகாக்கத் தவறினால் இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லாமல் போய்விடும்… இன்று காலை கூட ஒரு குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியை சந்தித்து நாங்கள் நான்கு பேரும் சில கருத்துகளைக் கூறினோம். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் அதனை ஏற்கவில்லை. எனவேதான் நீதித்துறையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று இந்த நாட்டு மக்களிடம் கூறுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.”

“ஏனென்றால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடமை தவறியது பற்றி இந்த நாட்டின் சான்றோர் பலர் முன்னர் விமரிசித்திருக்கிறார்கள். அதுபோல செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், மதன் லோகுர் ஆகிய நீதிபதிகள் தங்கள் ஆன்மாவை விலை பேசிவிட்டார்கள், நீதித்துறையையும் இந்த நாட்டையும் பாதுகாக்க தவறிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக கூடாது என்று கருதுகின்றோம். எனவேதான் இந்த நிலைமையை நாட்டுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.”

“என்ன வழக்கு தொடர்பான பிரச்சினை?” என்று நிருபர்கள் கேட்டதற்கு “இரண்டு மாதங்கள் முன் நாங்கள் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தின் நகலை உங்களுக்குத் தருகிறோம். அதில் விவரங்கள் உள்ளன” என்றார் ரஞ்சன் கோகோய்.

“நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு பற்றிய பிரச்சினையா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ஆம் என்று பதிலளித்தார் ரஞ்சன் கோகோய்.

“தலைமை நீதிபதிக்கு எதிராக இம்பீச்மென்ட் கொண்டு வரப்படவேண்டும் என்று விரும்புகிறீர்களா” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம். இனி நாடு முடிவு செய்யட்டும்” என்றார் செல்லமேஸ்வர்.

“இந்த நாட்டுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை இது. அதனை செய்து விட்டோம். அவ்வளவுதான்” என்றார் கோகோய்.

***

அன்பார்ந்த வாசகர்களே,

சோரப்தீன் கொலை வழக்கிலிருந்து அமித் ஷாவை விடுவிப்பதற்கு லஞ்சம் வாங்க மறுத்து நீதிபதி லோயோ மர்மமான முறையில் இறந்து போனது பற்றி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, அதில் உச்ச நீதிமன்றம் தலையிடுகிறது. மும்பை வழக்கறிஞர்களின் எதிர்ப்பை மீறி இது நடக்கிறது

பாபர் மசூதி வழக்கு மோடியின் அரசியல் நோக்கத்துக்கு பயன்படும் விதத்தில் தீபக் மிஸ்ராவால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

போலி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் லஞ்சக் குற்றச்சாட்டுக்கு இலக்கான தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அந்த வழக்கை மூத்த நீதிபதிகள் அமர்விலிருந்து மாற்றி, தனக்கு தோதான நீதிபதிகளை விசாரிக்க சொல்கிறார். இது தொடர்பாக வழக்கு தொடுத்து பிரசாந்த் பூஷணுக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறது உச்ச நீதிமன்றம். ( பார்க்க டிசம்பர் இதழ் பு.ஜ )

நீட் வழக்கில் மெயின் வழக்கு விசாரணை முடியாத போதே, தேர்வு திணிக்கப்படுகிறது. அந்த முறைகேட்டின் தொடர்ச்சிதான் மேற்படி போலி மருத்துவக் கல்லூரி வழக்கு.

இதற்கு முன் தற்கொலை செய்து கொண்ட அருணாசல பிரதேச முதல்வர் கலிகோ புல் தற்கொலைக் கடிதத்தில் முன்னாள் தலைமை நீதிபதி கேஹர் முதல் இந்நாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரையிலானோர் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டு இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களே அந்த வழக்கை விசாரித்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்.

– இப்படி எண்ணிலடங்கா முறைகேடுகள். நீதிபதிகள் நியமனத்திலிருந்து அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் வரையில் அனைத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மோடி பிரதமரானபின் நீதித்துறையை ஆர்.எஸ்.எஸ் கையாள்களைக் கொண்டு நிரப்பும் பணி நடந்து வருகிறது. இதனைக் கேள்விக்குள்ளாக்கிய காரணத்தினால்தான் தமிழக வழக்கறிஞர்கள் பழிவாங்கப்பட்டார்கள்.

பார்ப்பன பாசிசமும் ஊழலும் கைகோர்த்துக் கொண்டு உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்களில் கோலோச்சுகின்றன.

அக்லக் என்ற பரிதாபத்துக்குரிய முஸ்லிம், உனாவின் தலித்துகள், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர், கவுரி லங்கேஷ் ஆகியோர் மட்டுமல்ல, தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்காத நீதிபதிகளாக இருந்தாலும் அவர்களுக்கு மரணம்தான் என்று மிரட்டுகிறது பார்ப்பன பாசிசக்கும்பல்

தற்போது பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கும் நீதிபதிகள் புரட்சிக்காரர்கள் அல்ல. அவர்கள் பெரிதும் மதிக்கின்ற மரபுகளையெல்லாம் மீறி பிரச்சினையை சந்திக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் நிலைமையின் தீவிரம் என்ன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திராவின் ஆட்சிக்காலத்தில் அவரசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அதற்கு தலையாட்டிய நீதிபதிகளை நினைவு படுத்தி, அத்தகைய நிலைமை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று மறைமுகமாக எச்சரித்திருக்கிறார்கள் இந்த நான்கு நீதிபதிகளும்.

எல்லா முனைகளிலும் தோல்வியடைந்து, மக்களின் வெறுப்பை ஈட்டி வரும் மோடி தலைமையிலான பார்ப்பன பாசிசக் கும்பல், பெயரளவிலான ஜனநாயகத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்து ராஷ்டிரக் கொடுங்கோன்மை சமீபிக்கிறது. எச்சரிக்கை.. எச்சரிக்கை!